UYIR 16
கிருஷ்ணாவிற்கு தன் நண்பர்கள் மீது கோபம் இருந்தாலும் அவர்களை உயிரோடு குழியில் தள்ளியது மனதை உறுத்த பாதி வழியில் காரை நிறுத்த சொல்லி மீண்டும் அவர்களை புதைத்த இடத்திற்கு போக சொன்னான்.....
ராஜசேகரனுக்கும் ராஜேந்திரனுக்கும் அதில் விருப்பம் இல்லை என்றாலும் தனது மாமன் மகனுக்காக காரை திருப்ப சொன்னான்....
கார் மீண்டும் காட்டுப் பாதையில் செல்ல செல்ல மன உளைச்சல் அதிகமாகி போன கிருஷ்ணா பதற்றத்துடனும் பயத்துடனும் "சீக்கிரம் போ.... சீக்கிரம் போ....* என்று காரோட்டியிடம் சொல்லிக் கொண்டே இருந்தான்.......
கிருஷ்ணாவின் பதற்றம் ராஜசேகரனையும் ராஜேந்திரனையும் எரிச்சல் படுத்த "கொஞ்ச நேரம் பொறுமையா வா மாப்ள....." என்று இருவரும் கூறினார்கள்.......
"இல்ல மாமா..... ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி மனசு படபடங்குது.... நித்யா எங்க இருக்கா மாமா..... பாவம் பயந்து போயிருப்பா இல்ல.... என் நண்பர்களும் ரொம்ப நல்லவங்க தான் மாமா.,..... ரெண்டு பேரும் இப்படி நம்ம நித்யாவை.... எப்படி...... நம்ம நித்யா பின்னாடி சுத்தி லவ் பண்ண சொல்லி அவளை மிரட்டி இருப்பாங்கன்னு இன்னும் என்னால் நம்பவே முடியலை மாமா..... சித்து என்னோட பெஸ்ட் ப்ரண்ட்..... தீராவும் ரொம்ப நல்லவன் தான்.... இப்படிப்பட்ட தப்பு பண்ணி இருக்க மாட்டாங்கன்னு மனசு சொல்லுது மாமா.... ஸ்கூல் படிக்கும் போது இருந்து அவனுங்க ரெண்டு பேரும் எனக்கு பழக்கம் மாமா.,... ரொம்ப ரொம்ப நல்லவனா தான் இதுவரை இருந்தான் சித்து..... அவனுக்கு பணம் காசு இதெல்லாம் பெருசே கிடையாது..... ஆனா அவன் நீங்க சொன்ன மாதிரி பணத்துக்காக இதெல்லாம் பண்ணி இருப்பான்னு என்னால இப்போ கூட நம்ப முடியலை மாமா...... நீங்க ரெண்டு பேரும் சொன்னீங்கன்றதுக்காக தான் அவனை அடுச்சேன்..... ஆனால் நித்யா அங்கே அழுதுகிட்டே நின்னதை பார்க்கவும் தான் இதெல்லாம் பண்ண நான் ஒத்துக்கிட்டேன்.... ஆனால் நித்யா ஏன் அழுதுட்டே இருந்தாள்.... அவளை தான் சித்துகிட்ட இருந்து நாம காப்பாத்திட்டோமே.... ஒருவேளை நித்யா மட்டும் அவனை தான் புடுச்சி இருக்குன்னு சொல்லி இருந்தால் சித்துவுக்கே அவளை கல்யாணம் பண்ணி வச்சிருந்திருப்பேன்..... ஆனா நித்யாவை சித்து போர்ஸ் லவ் பண்ண சொல்லி கட்டாயப்படுத்தியதா நீங்க சொல்லவும் தாங்க முடியாமல் தான் சித்துவை தலையில் அடுச்சேன் மாமா.... நித்யா என் அத்தை பொண்ணு...... அவளை இந்த மாதிரி நிலையில் கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு பிரச்சனை இல்லை மாமா.... ஆனால் அதுக்கு முன்னாடி என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நான் பண்ண தப்புக்கு பிராய்சித்தம் தேடணும்....." என்று புலம்பிக் கொண்டே வந்த கிருஷ்ணாவை பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ராஜேந்திரனும் ராஜசேகரன் முகத்தை சுளித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார்கள் ........
ஒரு வழியாக நண்பர்களை புதைத்த இடத்தை கண்டுபிடித்து அவசர அவசரமாக அந்த இடத்தை தோண்ட சொன்ன கிருஷ்ணா அடியாட்களின் உதவியுடன் குழியை தோண்டி பார்த்தான்...... அப்போது தான் ஸ்ரீயும் சித்துவுடன் குழிக்குள் இருப்பதை கண்டு அதிர்ந்து போய் அவளுக்கு மூச்சு கொஞ்சம் கொஞ்சம் வருவதை வைத்து அவள் நெஞ்சில் அழுத்தி மூச்சு வர வைக்க முயற்சி செய்தான் கிருஷ்ணா......
ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் மூச்சு இருந்ததால் அவன் நெஞ்சில் அழுத்தம் கொடுக்கவும் நன்றாக மூச்சு விட ஆரம்பித்தாள் ஸ்ரீ......
ஸ்ரீ மூச்சுவிட ஆரம்பித்ததும் அவள் கண்களை திறக்க வைக்க "நித்யா நித்யா என்னை பாரும்மா.... நீ எப்படிம்மா குழிக்குள் விழுந்த.... உன்னை சித்துகிட்ட இருந்து காப்பாத்த தானே...." என்று ஸ்ரீயின் தலையை தன் மடியில் வைத்து கன்னத்தில் தட்டியவாறு பேசியவனை விட்டு விலக முயன்ற ஸ்ரீ தன்னவனின் முகத்தை இருட்டில் வருடி விட்டு கொண்டு "மா....மா.... எ...ன..க்..கு.. து...ரோ...க..ம் ப...ண்..ணி.ட்..ட... ஏ..ன் மா..மா.... இ.ப்..ப..டி... ப...ண்..ண.... சா...கு.ம்.... போ..து..ம்... எ...ன்..னை... நி..ம்..ம..தி..யா சா..க வி.டா..மா..ட்...டி..யா.. நா..ன்.. எ..ன்.. ர..ஞ்..ச..ன்.. கூ..ட..வே.. போ..றே..ன்... எ...ன்..னை... வி...ட்..ரு.. மா..மா... நா..ன்.... அ...வ....ரோ...ட.." என்று அழுது கொண்டே திக்கி திணறியபடி பிணமாக கிடந்த தன்னவனை கண்டு கண்களில் கண்ணீர் வழிய கிருஷ்ணாவை பார்த்தாள்.....
ஸ்ரீயின் குற்றம் சாட்டும் பார்வையில் தலைகுனிந்தவனை பார்த்த ஸ்ரீ சித்துவை காட்டி "இ..ங்..கே பா...ரு மா....மா.... உ...ன் து...ரோ...க...த்...தோ...ட உ...ச்...ச...க..ட்..ட...த்..தை... எ..ன் வீ...ட்..டு..க்..கா...ர..ர் எ..ன் பு...ரு..ஷ..ன் மா..மா இ..வ..ர்.... நே..த்..து தா..ன் க..ல்..யா..ண...ம் ப..ண்..ணி..க்..கி..ட்..டோ....ம் இ..ன்...னை..க்..கு அ..வ..ரை கொ..ன்..னு..ட்..டீ..யே.. எ..ங்க..ளை.. கொ..ன்..னு.ட்..டு.. நீ.. ம..ட்..டு..ம்.. ந...ல்..லா.. இ...ரு..ப்..பி..யா... எ..ன்...ன... நா...ச..மா.. போ...ய்..டு..வ... உ...ன்..னை.. ந...ம்...பி..னா..ரே. மா..மா நீ... ஒ...ரு ந...ல்...ல பி...ர..ண்...டா இ..ரு..ப்...ப...ன்..னு நி..னை..ச்..சா..ரு... உ...ன்...கிட்ட எ..ங்க க..ல்யா..ணத்தை ப..த்தி சொ..ல்ல...ணும்னு ரொ...ம்ப ஆ...சை..யா இ..ரு...ந்தாரு....ஆனா.... நீ இப்படி கொன்னுட்டியே... மாமா.... ஏன்.... ஏன்.... இப்படி பண்ண.... எனக்காகவா..... என்னை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்க.... நானும் சாகப் போறேன்.... என்னை எதுக்காக காப்பாத்தின... நானும் சாகப் போறேன்.... நான் என் புருஷன்ட்ட போறேன்.... நான் அவரோட போறேன்...." என்று திடீரென வெறி கொண்டவள் போல கத்த ஆரம்பித்தவளை அதிர்ந்து போய் பார்த்து கொண்டு இருந்தான் கிருஷ்ணா......
"நித்யா நீ என்ன சொல்ற.... நீயும் அவனை லவ் பண்ணியா.... ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா....." என்று கேட்டான்.....
"ஆமா மாமா நான் தான் அவரை லவ் பண்ணுனேன்.... அதுவும் ஸ்கூல் படிக்கும் போது இருந்தே லவ் பண்றேன்.... நான் உன் வீட்டுக்கு வந்து உன்கிட்ட பேச ஆரம்பிச்சதே அவருக்காக தான்.... அவரை பத்தி தெரிஞ்சுக்க தான் நான் உன் வீட்டுக்கே வந்தேன்..... உன்னை ஒரு நல்ல நண்பனா தான் பார்த்தேன்.... ஆனா நீ எனக்கும் துரோகம் பண்ணிட்ட.... அவருக்கும் துரோகம் பண்ணிட்ட... இதுக்கு எல்லாம் உனக்கு மன்னிப்பே கிடையாது.... என் வாழ்க்கையை அழிச்சிட்டு நீ மட்டும் சந்தோசமா என்கூட வாழ்ந்துடலாம்னு நினைச்சியா? ஒருவேளை இந்த தாலியை கழற்றி விட்டு என்னை திரும்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ முடியும்னு நினைச்சியா..... அப்படி வாழ்ந்தால் நீ ஒவ்வொரு நாள் என் கூட வாழும் போதும் என்னை தொடும் போதும் நான் இவரோட நினைப்பில் தான் வாழ்வேன்.... இவர் தான் என் வீட்டுக்காரர்.... மரியாதையா என்னை இந்த குழியில் விட்டுட்டு நீ போய்டு..... நான் அவர் கூடவே செத்துப் போறேன்.... அதுதான் உனக்கும் நல்லது.... இதோ நிக்கிறானுங்களே இவனுங்களுக்கும் நல்லது..... அதை விட்டுட்டு இவனுங்க பேச்சை கேட்டு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனால் நீங்க மூணு பேரும் தான் என் சாவுக்கு காரணம் லெட்டர் எழுதி போலீஸ்க்கு அனுப்பிட்டு அப்புறம் செத்து போயிடுவேன்..... இல்லை உங்க மூணு பேருக்கும் சோத்தில் விஷம் வச்சுடுவேன்..... என் புருஷனை கொன்னதுக்கு நான் தர தண்டனை அது தான்.....* என்று கோபத்தில் கொந்தளித்தவளை கண்டு அமைதியாக நின்றிருந்தான் கிருஷ்ணா......
கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரைக்கும் மூவரையும் திட்டி தீர்த்தவள் மீண்டும் குழிக்குள் தன்னவனை அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.......
ஸ்ரீயின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரனும் ராஜசேகரனும் அவள் குழிக்குள் படுத்துக் கொள்ளவும் மண்ணைத் தள்ளி குழியை மூடச் சொல்லி அடியாட்களுக்கு கட்டளையிட்டார்கள்......
அண்ணன் தம்பி இருவரும் ஸ்ரீயை குழிக்குள் உயிரோடு புதைக்க சொல்லவும் அவர்களை தடுத்தான் கிருஷ்ணா...
"வேணா மச்சான்... இதுவரைக்கும் நீங்க பண்ண தப்பே போதும்.... என்கிட்ட என்னென்னமோ சொன்னீங்க.... ஆனா இங்க நடக்கிறதை எல்லாம் பார்த்தால் நீங்க சொன்னது எல்லாமே பொய்ன்னு தெரியுது.... எதுக்காக இப்படி ஒரு துரோகத்தை என்னை வச்சு சித்துவுக்கு பண்ணீங்க.... என் நண்பன் ரொம்ப நல்லவனா தான் இருந்திருக்கான்... ஆனா அவனை பத்தி தப்பானவனா சொல்லி பொம்பளை பொறுக்கி நம்ம நித்யா பின்னாடி சுத்துறான் அப்படி இப்படின்னு சொன்னீங்க.... ஆனா உண்மையிலேயே நித்யா தான் அவன் பின்னாடி சுத்தி இருக்கா... உங்க தப்பான ஆலோசனையால் ரெண்டு நல்ல நண்பர்களை கொன்னுட்டேன் மாமா... இதோ இந்த கையாலயே கொன்னுட்டேன்.... துரோகம் பண்ணிட்டேன் மாமா... துரோகம் பண்ணிட்டேன்.... ஆனா இனி ஒரு தப்பு நடக்க நான் விடமாட்டேன்.... நித்யாவை காப்பாத்துவேன்..... என் நண்பனோட பொண்டாட்டியை காப்பாற்றி அவனுக்கு நான் செஞ்ச துரோகத்திற்கு பரிகாரம் பண்ண போறேன்.... கடைசி வரைக்கும் நித்யா என் நண்பனோட நினைப்புல வாழ்வா... அவளுக்கு பாதுகாப்பா நான் இருப்பேன்...." என்று பேசிக் கொண்டிருந்தவன் "ஆஆஆஆஆ..." என்று கீழே சரிந்தான்.....
ராஜேந்திரன் கிருஷ்ணாவின் பேச்சைக் கேட்டு எரிச்சலாகி அங்கிருந்த கடப்பாரையை எடுத்து அவன் தலையில் அடித்து விட்டான்.....
தலையில் ஓங்கி அடித்ததால் கிருஷ்ணாவின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்து விட ஸ்ரீயும் சித்துவும் இருந்த அதே குழிக்குள் அவனையும் தள்ளி மூவரையும் ஒரே குழிக்குள் வைத்து புதைத்து விட்டு திரும்பி கூட பார்க்காமல் சென்றார்கள் ராஜேந்திரனும் ராஜசேகரனும்.......
அதுவரை நடந்ததை சொல்லிக் கொண்டிருந்த விஷ்ணுவின் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருக்க அதை பார்த்து பதறிப் போய் அவன் அருகில் சென்ற டாக்டர் பார்வதி "ரிலாக்ஸ் ரிலாக்ஸ்..... ரிலாக்ஸ்.... மிஸ்டர்.விஷ்ணு..... யூ டோன்ட்.... ஒர்ரி.... உங்களுக்கு ஒன்னும் இல்ல.... கண்ணை திறந்து பாருங்க...." என்று அவனை விழிக்கச் செய்ய முயற்சி செய்தார்..... ஆனால் விஷ்ணுவோ அந்த பழைய நினைவுகளில் இருந்து வெளிவர முடியாமல் போராடிக் கொண்டிருந்தான்......
கிட்டத்தட்ட கோமா நிலைக்குச் செல்ல இயுத்தவனை நான்கு அறை அறைந்து சுயநினைவுக்கு கொண்டு வந்தான் பிரியரஞ்சன்.....
பார்வதியும் விஷ்ணுவும் பேசிக் கொண்டிருந்த போது ரஞ்சன் இருந்த மன உளைச்சலில் அவர்கள் பேசியதில் பாதியை கேட்காமல் அதாவது காதில் வாங்காமல் இருந்ததால் விஷ்ணுவுக்கு இருந்த ஹெல்த் பிராப்ளம் பற்றி ரஞ்சனுக்கு தெரியாமல் இருந்தது...... ஆனால் அவன் மூக்கில் இருந்து ரத்தம் வருவதை பார்த்த ப்ரியனுக்கு விஷ்ணுவிற்கு ஏதோ பெரிய பிராப்ளம் என்று புரிய வர அதை ஊர்ஜிதம் ஆக்கும் பொருட்டு டாக்டர் பார்வதி பதறிப்போய் விஷ்ணுவை எழுப்ப போராடிக் கொண்டிருந்தார்......
விஷ்ணு சுய நினைவுக்கு வந்தால் மட்டுமே அந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று நினைத்து அவனை அறைந்து சுய நினைவுக்கு கொண்டு வந்தான் பிரியரஞ்சன்......
விஷ்ணு நினைவுக்கு வந்ததும் மெல்ல கண்களை திறந்து பார்க்க அவனுக்கு எதிரே பிரிய ரஞ்சன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றான்......
பிரியரஞ்சனின் குற்றச்சாட்டு பார்வையை தாங்க முடியாத விஷ்ணு தலை குனிந்து நிற்க "எல்லாத்துலயும் அவசரப்பட்டு அவசரப்பட்டு..... கடைசியில் எங்க உயிர் போறதுக்கும் காரணமா இருந்துட்ட.... அட்லீஸ்ட் இப்பவாவது எனக்கு உதவி பண்ண முயற்சி பண்ணு.... கிருஷ்ணா.... என் ஸ்ரீ எங்க இருக்கான்னு உனக்கு நல்லா தெரியும்..... தெரியாதுன்னு பொய் சொல்லாத..... நிச்சயமா உனக்கு ஏதோ ஒரு ரிலேஷனா தான் அவ இப்பவும் இருக்கணும்..... சொல்லு..... அவ எங்கே இருக்கா.... நான் அவளை தேடி போகணும்...." என்று கேட்டான் ப்ரியரஞ்சன்....
விஷ்ணு தொண்டையை கனைத்து திரும்பி நின்று கொண்டு தன்னை நிலைப்படுத்தியவன் தெளிவான முகத்துடன் ப்ரியனின் அருகில் வந்து "ஸ்ரீ அதாவது உன் நித்யா இப்போ என் தங்கச்சி..." என்றான்.....
"வாட்...." என்று அதிர்ந்து போய் விஷ்ணுவை பார்த்தான் பிரியரஞ்சன்....
"ஆமா ரஞ்சா.... இப்போ நான் நித்யாவை என் தங்கச்சியா தான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன்.... நித்யா இப்பவும் எனக்கு ஒரு வகையில மாமா பொண்ணா தான் இருக்கா..... அவளுக்கு அம்மா அப்பா கிடையாது.... இன்னும் சொல்லப்போனால் உனக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தர் தான் அவளோட அம்மா அப்பா..... அவளை வளர்த்தது அவளை படிக்க வச்சது எல்லாமே சித்தி சித்தப்பா தான்.... அந்த சித்தி சித்தப்பா வேற யாரும் இல்ல ராஜேந்திரனும் அவன் பொண்டாட்டி புனிதாவும் தான்..... நம்ம மூணு பேரும் இறந்ததுக்கு அப்புறம் ராஜசேகரனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை..... ஆனா ராஜசேகரன் தன்னோட சொத்துக்கள் மொத்தத்தையும் ஸ்ரீயோட பேர்ல மாத்தி எழுதி இருக்காருன்னு ராஜேந்திரனுக்கு தெருஞ்சுருக்கு..... அதனால் ராஜேந்திரன் அவன் அண்ணன் அண்ணி ரெண்டு பேரையும் ஆக்சிடென்ட் பண்ணி கொன்னதா ஒரு தாட் இருந்துட்டு இருக்கு..... உண்மையோ பொய்யோ எனக்கும் தெரியாது.... ராஜேந்திரனுக்கும் புனிதாவுக்கும் ஒரு பையன் இருக்கான்..... அது மட்டும் தெரியும்.... மத்தபடி புனிதாவும் ராஜேந்திரனும் யாரோ ஒரு ரஞ்சன் என்ற பையனுக்கு நித்யாவை கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்லிட்டு இருந்தாங்க..... அனேகமா கூடிய சீக்கிரம் கல்யாணம் வைப்பாங்கன்னு நினைக்கிறேன்.... ஆனா....."
"ஆனான்ற பேச்சுக்கு இடமே இல்ல.... கல்யாண நாள் அன்னைக்கு ஸ்ரீ காலத்துல நான் தான் தாலி கட்டணும்..... அவள் ...."
"நித்யா உனக்கானவள் சித்து... நிச்சயம் உன் கூட வந்து சேருவா...." என்று விஷ்ணு தலை நிமிர்ந்து பதில் சொன்னான்.....
"இல்லை கிருஷ்ணா.... அந்த சித்து.... சூழ்ச்சியை முறியடிக்க தெரியாதவன்... அதனால் துரோகத்தால் இறந்தான்.... ஆனால் இந்த ப்ரியரஞ்சன் தொழில் எதிரியை கூட விட்டு வைக்காதவன்... என் உயிரை பறித்து என் ஸ்ரீயை உயிரோடு புதைச்சவங்களை சும்மாவா விடுவேன்.... அவங்க நாட்களை எண்ணட்டும்.... என் காதலை பறித்த அதே இடத்தில் அதே நேரத்தில் அவர்களை கொல்வேன்....." என்று ஆவேசமாக கூறியவன் விஷ்ணுவை பார்த்து "விஷ்ணு அவங்க எவ்வளவோ பொய் சொல்லி இருக்கட்டும்... ஒரு நிமிஷம் ஒரே ஒரு செகண்ட் கூட நம்ம பிரண்ட் இதை பண்ணி இருப்பானான்னு உனக்கு நினைக்க தோணலை இல்ல... அவங்க சொன்ன உடனே நம்பிட்ட.... இதுதான் நீ பிரெண்ட்ஷிப்பை மதிக்கிற லட்சணமாடா...." என்று ரஞ்சன் கேட்கவும் "அந்த காலகட்டத்தை பத்தி உனக்கே தெரியும் ரஞ்சன்.... பொண்ணுங்களோட மரியாதை தான் அந்த குடும்பத்தோட மரியாதையா பார்க்கப்பட்டது.... நான் ஜாதிக்காக பாக்கல.... நீ அவ பின்னாடி சுத்தி அவளுடைய பெயர் கெட்டுப் போயிடக் கூடாதுன்னு தான் உன்னை வார்ன் பண்ண தான் நினைச்சேன்...... ஆனா அவங்க எல்லாரும் சேர்ந்து நீ தான் இதுக்கு எல்லாம் காரணம்..... ஸ்ரீயை கூட நீதான் வலுக்கட்டாயமா இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணிக்க போற.... அப்படின்னு சொல்லி அம்மாவும் சேர்ந்து என்னென்னமோ சொல்லி என்னை குழப்பிட்டாங்க மச்சான்.... அந்த குழப்பத்தில் என்னையும் அறியாமல் நான் தப்பு பண்ணிட்டேன்.... என்னை மன்னிச்சுடுடா...." என்று போன ஜென்மத்தில் தான் செய்த தவறுக்கு இந்த ஜென்மத்தில் மன்னிப்பை வேண்டினான் விஷ்ணு என்ற கிருஷ்ணா......
"சாரி கேட்கணும்னு அவசியம் இல்லை விஷ்ணு....'
" சித்து இல்ல இல்ல ரஞ்சா... தீராவை நீ மீட் பண்ணிட்டியா....."
"ம்..ம்.. தீராவை நான் மீட் பண்ணிட்டேன்.... பட் அப்போ அவனை பத்தி தெரியலை.... பட் அவனை பார்த்த போது ஏதோ ஒரு பீல் வந்துச்சு.... அப்போ அதை நான் பெருசா மைண்ட் பண்ணிக்கலை.... அவன் இப்போ அசிஸ்டட் கமிஷனர் ஆப் போலீஸ்.... இங்கே தான் இருக்கான்.... போஸ்டிங் போடும் போதே அவன் இங்க தான் வேணும்னு சொல்லி கேட்டு வாங்கி இருக்கேன்....."
"நீ என்ன போலீஸ் டிபார்ட்மென்ட்டிலா வொர்க் பண்றா.... ஒரு ஐபிஎஸ் ஆபிசரை நம்ம ஊரில் போஸ்டிங் போட முடியும் சொல்லி கேட்டு வாங்கி இருக்கேன்னு சொல்ற...."
"டேய் விஷ்ணு.... இப்போ எல்லாம் பிசினஸ் மேன் சொல்றதைதான்டா மொத்த டிபார்ட்மெண்ட்டும் கேக்குது.... ஒரு எம்பியை புடுச்சேன்... சில கோடியை அடிச்சேன்..... நான் கேட்ட மாதிரி தீரா இங்கே வந்துட்டான்....."
"தீராவா..... அவனோட முழு பேர் என்ன....."
'மிஸ்டர் தீரன் சிரஞ்சீவி ஐபிஎஸ்...." என்று கம்பீரமான குரலில் சொன்ன ப்ரியனுக்கு தன் காதலுக்காக தன் உயிரை கொடுத்த தீரனையும் வள்ளியையும் இந்த ஜென்மத்தில் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது....
தீரனை கண்டுபிடிக்க முடிந்த ப்ரியனால் வள்ளியை கண்டுபிடிக்க முடியவில்லை....
தீரன் ப்ரியனுடன் ஒன்றாக படித்ததாலும் ப்ரியன் வீட்டிற்கு அருகில் தீரனுடைய வீடு இருந்ததாலாம் பழைய நினைவுகளில் தீரனை அடையாளம் கண்டு கொண்டான்.....
போன ஜென்மத்திலும் இந்த ஜென்மத்திலும் ப்ரியனின் நண்பனாகவே இருந்ததால் தீரனுக்கு பழைய நினைவுகள் பற்றி தெரியவில்லையோ என்னவோ....
ஒருவேளை வள்ளியை சந்தித்தால் தீரனுக்கு பழைய நினைவுகள் வரலாம் அல்லது பழைய காதல் ஒரே நாளில் தொடங்கி அன்றே முடிந்தும் போனதால் நினைவு வராமலும் போகலாம்.. .. விதியை கணிப்பவர் யார்..... (விதின்னு சொல்லி தப்பிக்க பாக்குறியா ரைட்டரேன்னு நீங்க திட்டுறது எனக்கு கேட்குது மக்களே.... ஆனாலும் வள்ளி வருவாளா... வரமாட்டாளான்னு ரெண்டு மூணு நாள் யோசிச்சு வைங்க.....)
"சரி தீரனை பற்றி பேசியது போதும்... என் ஸ்ரீ பத்தி சொல்லு விஷ்ணு..... எப்படி இருக்கா....."
"அதான் சொன்னேனே ரஞ்சா... அவளுக்கும்...." என்று முடிப்பதற்குள் "ப்ச்..." என்று உச்சு கொட்டி விஷ்ணு பேச்சை தடை செய்தவன் "என்னிக்கு மேரேஜ்னு தெருஞ்சுகிட்டு கால் பண்ணு..." என்றவன் அந்த ரூமை விட்டு வெளியேற கதவை வரை சென்றவன் மீண்டும் திரும்பி விஷ்ணுவை பார்த்து "உனக்கு என்ன ஹெல்த் இஷ்ஷூ இருந்தாலும் அதை சரி பண்ணி இந்த ஜென்மத்தில் எனக்கு மச்சானா கடைசி வரை என் கூட வரனும்... அண்டர்ஸ்டேண்ட்...." என்று அழுத்தமான குரலில் கேட்டான்.....
ரஞ்சனின் அந்த குரலுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்று தலையாட்டி வைத்தான் விஷ்ணு.....
"குட்... டேக் கேர் ஆப் யுவர் ஹெல்த்...." என்றவன் விடுவிடுவென வெளியேறினான்....
விஷ்ணு தனது ஹெல்த்தை பார்த்து கொண்டு மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டு நாட்களை கடத்த ஒருநாள் விஷ்ணுவின் அம்மா கால் செய்து ஸ்ரீயின் திருமண விஷயத்தை கூற அதிர்ந்து போனான் விஷ்ணு....
விஷயம் கேள்விபட்ட உடன் ப்ரியனை தொடர்பு கொள்ள முனைய ஆனால் அவனது மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக வந்தது....
பிஸ்னஸ் விஷயமாக ஸ்பெயின் சென்றிருந்த ப்ரியன் தனது இந்திய எண்ணை பயன்படுத்தாமல் அந்த நாட்டு சிம்மை பயன்படுத்தியதால் விஷ்ணுவால் ப்ரியரஞ்சனை தொடர்பு கொள்ள இயலவில்லை...
விஷ்ணுவோ சோர்ந்து போகாமல் மீண்டும் மீண்டும் ப்ரியனின் மொபைலுக்கு அழைத்த வண்ணம் இருக்க விஷ்ணு இருந்த பதற்றத்தில் தனது மற்ற நண்பர்களிடம் கேட்க தோன்றாமல் ஏன் ப்ரியனின் ஆபிஸில் ப ப்ரியனின் மொபைல் எண் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் நாட்களை கடத்தி விட்டான்.....
விடிந்தால் திருமணம் என்ற நிலையில் இனியும் ப்ரியனுக்கு காத்திராமல் தானே திருமணத்தை நிறுத்தும் எண்ணத்தில் ஊருக்கு சென்ற விஷ்ணு ராஜேந்திரன் மற்றும் புனிதாவிடம் மீண்டும் பிறப்பெடுத்து இருக்கும் சித்துவை பற்றி கூறி திருமணத்தை நிறுத்த சொன்னான்....
ராஜேந்திரனோ பல வருடங்களுக்கு முன் தன்னை அடித்த சித்தரஞ்சனை பழி வாங்கவும் ஸ்ரீ பெயரில் இருக்கும் ராஜசேகரனின் சொத்துக்களை தனக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக இந்த திருமணத்தை நடத்த எண்ணினான்....
விஷ்ணுவோ அந்த ஜென்மத்தில் செய்த தவறை இந்த ஜென்மத்திலும் தொடர்பவனாக நியாயம் பேசி கொண்டு இருக்க பல வருடங்களுக்கு முன் செய்தது போலவே அவன் தலையில் அங்கிருந்த ஒரு கனமான பொருள் கொண்டு அடித்தான் ராஜேந்திரன்.....
"மாமா நீ மாறவே இல்லை.... அப்பவும் இப்படி தான் பண்ண... ஆனால் இந்த முறை நீ ஜெயிக்க முடியாது... ரஞ்சன் இப்போ ரொம்ப பலசாலி.... பணபலம் அரசியல் பலம் அதிகாரபலம் எல்லாம் அவன் கையில்.... உங்களை விடமா.... " என்று பேசி முடிப்பதற்குள் மயங்கி சரிந்தான் விஷ்ணு.....
விஷ்ணு எதற்கும் இருக்கட்டும் என்று ப்ரியனின் மெயிலுக்கு ஸ்ரீ திருமணத்தை பற்றி தெளிவாக ஒரு வீடியோ அனுப்பி இருந்தான்....
இந்தியா திரும்ப வேண்டிய நாளில் எதேச்சையாக வெரி வெரி அர்ஜண்ட் என்று இருந்த விஷ்ணுவின் மெயிலை படித்த ப்ரியரஞ்சன் ஸ்ரீயின் திருமண விஷயத்தை கேட்டு கோபத்தில் கொந்தளித்தான்....
விஷ்ணு இந்த முறையும் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக நினைத்து கொண்டான்.....
நாளை கிளம்புவதாக இருந்த பயணத்தை இன்றாக மாற்றி சாட்டர்டு ப்ளைட்டில் இந்தியா வந்தவன் ஏர்போர்ட்டில் காத்திருந்த தனது பிஎம்டபிள்யூவில் ஏறி ஸ்ரீ திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.....
ப்ளைட் பயணம் கார் பயணம் என்று மாறி மாறி வந்து இருந்தாலும் சற்றும் களைப்பு தெரியாத பளிச்சென்ற ரஞ்சனின் முகம் மண்டபத்தில் இருந்த அனைத்து பெண்களையும் கவர ஆனால் ப்ரியனோ யாரையும் கண்டு கொள்ளாமல் உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்காக தன்னவளின் வருகைக்காக முதல் வரிசையில் காத்திருந்தான்.....
ப்ளைட் ஏறுவதற்கு முன் ஸ்ரீக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி ஒரு டிடக்டிவ்விடம் விசாரிக்க சொல்லி இருந்தான் ரஞ்சன்.....
மண்டப வாசலில் காலடி வைத்த நேரம் ரஞ்சன் பற்றிய அனைத்து தகவல்களும் மொபைலில் வந்து சேர படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ரஞ்சன் ஒரு பெண் பித்தன்.... பணத்திற்காக எதையும் செய்பவன் என்று புரிந்து கொண்டான் ரஞ்சன்.....
தனது தொழில் எதிரிகளை வீழ்த்த என்றே ஒரு தனி கூலிப்படையை சடத்திற்கு புறம்பாக மறைமுகமாக வைத்திருக்கும் ப்ரியன் அவர்களிடம் ஸ்ரீயை திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை ரஞ்சனை கடத்தி ஒரு தனி இடத்தில் அடைத்து வைக்க சொல்லி கட்டளை இட்டான்....
அவர்களும் மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளையை சத்தமில்லாமல் கடத்தி சென்று இருக்க கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்ரீ கழுத்தில் தாலி கட்டி தன்னவளாக்கி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் ஸ்ரீயின் ரஞ்சன்.....
ஸ்ரீ மீது இருந்த முன் ஜென்ம காதல் இப்போதும் அப்படியே இருந்தாலும் அவள் எப்படி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம் என்ற கோபம் இருந்ததால் அவளிடம் கடுமையை காட்டினான் ரஞ்சன்....
ஒவ்வொரு முறை ஸ்ரீ கோபமாக பேசும் போதெல்லாம் முன் ஜென்மத்தில் தன் கையை பிடித்து கொண்டு காதலோடு கதை பேசிய அந்த ஒருநாள் நினைவுக்கு வந்து அந்த ஸ்ரீ அதே காதலுடன் வேண்டும் என ரஞ்சனின் மனது அடம் பிடிக்க ஆரம்பித்தது.....
அதே நேரம் தன்னை பற்றி எந்த நினைவும் இல்லாமல் அவளுக்கு பார்த்து இருந்த அந்த ப்ராடு ரஞ்சனுக்காக ஸ்ரீ வருத்தப்பட அதை கண்டு பொறாமையில் வெந்து போனான் ரஞ்சன்..
அந்த நேரத்தில் தான் தெரியாமல் எதார்த்தமாக அவளை விலக்கி விட்டு போகும் போது தலையில் அடிபட்டு பிருந்தா கட்டு போட வந்தது...
வேறு யாரையாவது அழைத்து இருந்து கூட ரஞ்சன் அமைதியாக இருந்திருப்பான்... ஆனால் லஷ்மி அக்காவோ போன ஜென்மத்தில் வள்ளியாக இருந்து இந்த ஜென்மத்தில் டாக்டர்.பிருந்தாவாக இருப்பவளை மருத்துவம் பார்க்க அழைக்கவும் எங்கே ஸ்ரீக்கு பிருந்தாவை பார்த்ததும் முன்ஜென்ம நினைவு வந்து விடுமோ... என்று பயந்தான்....
தன் காதல் மூலமே ஸ்ரீக்கு பழைய நினைவுகளை கொண்டு வர நினைத்தான் ரஞ்சன்...
ஒருவேளை முன்ஜென்மத்தை பற்றி கூறி ஸ்ரீ கடமைக்காக காதல் இல்லாமல் தன்னோடு வாழ நினைப்பாளோ என்று தான் அவளுக்கு பழைய நினைவுகளை கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டான்....
அன்று தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக எங்கே ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்காமல் தன்னுடன் சென்னை வந்தவளின் காதல் இந்த ஜென்மத்திலும் வேண்டும் என்று பேராசை கொண்டான் ரஞ்சன்....
அதனால் தான் பிருந்தா வீட்டிற்கு வந்த அன்று கோபப்பட்டது... வள்ளியின் நட்பை போன ஜென்மத்தில் கண்டு வியந்தவன் அல்லவா.... உயிர் போகும் நேரத்தில் கூட தப்பித்து செல்ல நினைக்காமல் தோழியுடன் உயிரை விட்டவள் அல்லவா....
அந்த நட்பில் ஸ்ரீ வள்ளியை அதாவது பிருந்தாவை அடையாளம் கண்டு கொள்வாளோ என்று பயந்தவனுக்கு ஸ்ரீ பழைய மாதிரி இருக்கவும் நிம்மதி அடைந்தான்.....
மெல்ல மெல்ல தன் காதலை அவளுக்கு புரிய வைக்க நினைத்தான் ரஞ்சன்...
ஆனால் காதலை காட்டுவதற்கு முன் தனக்கு தடையாக இருக்கும் ப்ராட் ரஞ்சன் ராஜேந்திரன் புனிதா என்று அனைவரையும் தன் வழியை விட்டு விலக்கி வைக்கவும் தன் அன்னையும் தங்கள் நான்கு பேரையும் துடிக்க துடிக்க கொன்றவனையும் துடிக்க வைக்க நினைத்தான்....
எதிர்பாராத விதமாக ரஞ்சன் அடியாட்களிடம் இருந்து தப்பித்த ப்ராட் ரஞ்சன் நடு இரவில் சாலையில் ஓட எங்கே அவன் ரோந்து போலீஸாரிடம் மாட்டி கொண்டு தங்களை காட்டி கொடுத்து விடுவானோ என்று நினைத்து சைலன்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கியால் அவனை சுட்டு அங்கு இருந்த பாதாள சாக்கடையில் போட்ட ரஞ்சனின் அடியாள் கம் மேனேஜர் குகன் ரஞ்சனுக்கு கால் செய்து இங்கு நடந்ததை கூறினான்....
"போறான் விடு குகன்... என் கையால் சாக வேண்டியவன்... உன் கையால் போய் சேந்துட்டான்... நீ போய் அடுத்த வேலையை பார்.... " என்று கூறியவன் ராஜேந்திரனுக்காக திட்டத்தை தீட்டி காத்திருந்தான்....
எந்த சொத்துக்காக இவ்வளவு பாவங்கள் செய்தானோ அந்த சொத்தை பறித்து கொண்டு நடு தெருவில் நிறுத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளை பார்த்து விட்டு வரும் போது தான் ரஞ்சனுக்கு ஆக்சிடண்ட் நடந்து பஜையதை மட்டும் நினைவில் கொண்டு புதியதை மறந்து இருந்தான் ப்ரிரஞ்சனாகிய சித்தரஞ்சன்.....
தனக்கு தெரிந்த வரை அனைத்து விஷயங்களையும் கூறிய விஷ்ணு "இப்போ ரஞ்சன் பேசுறதை பார்த்தால் அவன் முன் ஜென்ம நினைவுகளுக்கு சென்று விட்டான் போல...." என்று கூறினான்.....
"ஏண்டா இவ்வளவு நடந்து இருக்கு... ஆனால் நீயும் உள்ளே படுத்து கிடக்கும் பன்னாடையும் எங்ககிட்ட ஒரு மண்ணும் சொல்லாமல் மறைச்சு இருக்கீங்க..... உன்னை என்ன பண்ணலாம்...." என்று கேட்டபடி கையில் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பை கொண்டு விஷ்ணுவை அடித்தாள் பிருந்தா.....
மற்ற இரு நண்பர்களும் கூட தங்கள் பங்கிற்கு ரெண்டு அணி வைக்க "வேணாம் பிருந்தா..... அடிக்கிறதை நிறுத்திட்டு மரியாதையா இவனுங்ககிட்ட இருந்து என்னை காப்பாத்தி விடு.... என்னை அடுச்சா உனக்கு தான் சேதாரம் ஜாஸ்தி..... அதையும் பாத்துக்க....." என்று அடிகளை வாங்கி கொண்டு மிரட்டினான்....
"உன்னை அடுச்சா எனக்கு ஏன்டா சேதாரம் ஆகப்போகுது...."
"உன்னை பத்தி சால சீக்ரெட்ஸ் நான் சொல்லுவேன்... அதனால தான்...."
"என்னை பத்தி அப்படி என்ன சீக்ரட்ஸ் உனக்கு தெரியும்... மாங்கா மடையா..."
"ஹா ஹா.... இதுவரை நான் சொன்ன கதைல வரும் வள்ளி நீ தான் பிருந்தா...."
"அடிங்க யாரை பார்த்து வள்ளின்னு சொல்ற..." என்று மீண்டும் விஷ்ணுவை அடிக்க போனாள்.....
அவனோ அவளிடம் இருந்து தப்பித்து "உன்னை பார்த்து தான் சொல்றேன்..... உன்னை குழிக்குள புதைத்த எனக்கு தெரியாதா..... நீ தான் அந்த வள்ளி.... முகம் கூட மாறவே இல்லை.... அப்படியே இருக்க..... என்ன அப்ப கொஞ்சம் மாநிறமா இருந்த.... இப்போ கொஞ்சம் வெளுத்து போய் இருக்க..... அவ்வளவு தான் வித்தியாசம்.... ஆனா 200℅ ஷ்யர்.... நீ தான் வள்ளி.... அது மட்டும் கன்ஃபார்மா எனக்கு தெரியும்.... இன்னொரு விஷயம்..... உன்னை காதலிச்சு உன் கூடவே உயிரை விட்ட தீரனும் ரஞ்சனோட பிரண்டு தான்..... கூடிய சீக்கிரம் உன்னை தேடி வருவான் பாரு...." என்று கூறிய விஷ்ணுவை கொலை வெறியோடு பார்த்த பிருந்தா "போடா தடிமாடு.... எனக்கு இந்த ஹாஸ்பிடல் லைன்ல நிறைய சாதிக்கணும்னு ஆசை இருக்கு..... அதுக்கு இந்த கல்யாணம் காதல் இதெல்லாம் செட்டாகாது.... அதனால் தான் நான் காலேஜ் படிக்கும் போது கூட காதலிக்கவே இல்லை..... கல்யாணமும் பண்ணிக்க போறது இல்லை...." என்று கெத்தாக கூறியவளை நமட்டு சிரிப்போடு பார்த்து வைத்தான் விஷ்ணு..... அவனது சிரிப்பை கண்டு கொண்ட பிருந்தா "என்னடா கேலியா சிரிக்கிற...." என்று கேட்க சுற்றி இருந்த மற்றவர்களும் பிருந்தாவை பார்த்து சிரித்து வைக்க ஸ்ரீ மட்டும் தன்னவன் இருந்த அறையை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்......
எவ்வளவு காதல் தன் மீது வைத்திருந்தால் போன ஜென்மத்தில் உயிரை விட்டது மட்டும் இல்லாமல் தனக்காக மீண்டும் பிறந்து வந்தவனது காதலை எண்ணும் போதே பிரமிப்பாக இருந்தது..... அப்படிப்பட்ட காதல் தனக்கு கிடைக்க தான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவ கணவன் விழிப்பதற்காக காத்திருந்தாள்......
நேற்றுவரை கண்ணில் வெறுப்பை மட்டும் தேக்கி பார்த்த ஸ்ரீ இன்று முதல் முறையாக தன் மீது அக்கறை கொண்டு பேச அவளை சந்தேகத்தோடு பார்த்து வைத்தான் ரஞ்சன்......
ரஞ்சனின் சந்தேக பார்வையை தயங்காமல் எதிர்கொண்ட ஸ்ரீயின் பார்வையை கண்ட ரஞ்சன் பெரிய பெரிய தொழில் சாம்ராஜ்ய எதிரிகளே என் பார்வையில் நடுங்கும் போது இவள் இவ்வளவு துணிச்சலா எதிர் பார்வை பார்க்கிறாளே என்று நினைத்தவன் அவளுக்குள் தனது பழைய ஸ்ரீயை தேடினான்...
எப்போதும் பயந்து நடுங்கும் ஸ்ரீ இன்று தைரியமாக தன்னை பார்ப்பதை நம்ப முடியாமலும் ராஜேந்திரன் மற்றும் புனிதா மீது உள்ள கோபத்தில் அவர்களது பேச்சைக் கேட்டு தன்னிடம் அக்கறை இருப்பது போல நடிக்கிறாளோ என்று சந்தேகமும் கொண்டான்.......
ரஞ்சனுக்கு தன் மீது நம்பிக்கை வராது என்று ஸ்ரீக்கு தெரிந்து இருந்தாலும் அவனுடைய காதல் மனது தன்னை ஒருநாள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும் என்று திடமாக நம்பினாள்.... எனவே தான் அவனது பார்வையை தயங்காமல் எதிர்கொண்டாள்......
தீரன் மருத்துவரிடம் ரஞ்சன் டிஸ்சார்ஜ் பண்ணுவதை பற்றி பேச சென்றான்.....
மருத்துவரின் அறையில் பிருந்தா அமர்ந்து ரஞ்சனின் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்......
எப்படியும் ரஞ்சன் மருத்துவமனையில் இருக்க ஒத்துக் கொள்ள மாட்டான் என்று நினைத்து அவன் கிளம்புவதற்குள் அவனது உடலை முழுவதுமாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று நினைத்து அவனது ரிப்போர்ட்ஸை பொறுமையாக கவனமாக படித்து பார்த்துக் கொண்டிருந்தாள......
கதவை தட்டி அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்ற தீரன் அங்கு அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்து புருவத்தை சற்று உயர்த்தி விட்டு அங்கிருந்து இருக்கையில் அமர்ந்தான்......
"டாக்டர் என் ப்ரண்டை டிஸ்சார்ஜ் பண்ணுங்க...."
"என்ன விளையாடுறீங்களா மிஸ்டர். .. ரஞ்சனோட கண்டிஷன் என்ன.... எப்படி இருக்குன்னு பாத்துட்டு அதுக்கு ட்ரீட்மென்ட் பண்ணிட்டு அப்புறம் தான் டிஸ்சார்ஜ் பண்ண முடியும்....."
'நீங்க அவனை டிஸ்சார்ஜ் பண்ணலைனா அடுத்த அரை மணி நேரத்தில் அவன் ஹாஸ்பிடலை விட்டு எஸ்கேப் ஆயிடுவான்.... நீங்க நினைச்சாலும் அவனை தடுத்து நிறுத்த முடியாது..... அதனால் தான் சொல்றேன்.... பிரிஸ்கிரிநீங்களேஎழுதி கொடுத்து நீங்களே அவனை டிஸ்டார்ஜ் பண்ணிடுங்க...." என்று கூறியதும் பிருந்தாவின் முகத்தில் ஒரு சின்ன அதிர்ச்சி தோன்றி மறைந்தது......
அவள் எதை நினைத்து ரிப்போர்ட்டை படித்துக் கொண்டிருந்தாளோ அதையே தீரனும் பேச தனது நண்பனின் குணத்தை தன்னை போல அவனும் தெரிந்து வைத்திருப்பதை நினைத்து மனதுக்குள் சந்தோஷம் கொண்டாலும் திமிரு புடிச்சவன் என்று வெளியில் முணுமுணுத்து விட்டு அமைதியாக தீரனை ஏறிட்டு "ஓஹோ..... இங்கே நான் தான் டாக்டர்.. உங்களுக்கு ரஞ்சனை பத்தி என்ன தெரியும்... நான் சொல்லாமல் அவன் ஹாஸ்டலை விட்டு போக மாட்டான்..." என்று கிண்டலாக சொன்னாள்.....
"உங்களுக்கு அவனை பத்தி எந்த அளவுக்கு தெரியுமோ.... அதைவிட அதிகமாக எனக்கு அவனை நல்லா தெரியும்.... அவன் பார்வையில் ஏகப்பட்ட அர்த்தங்கள் இருக்கும்.... ரஞ்சனோட வாய் பேசுறதை விட அவன் கண்களும் கையும் தான் அதிகமாக பேசி இருக்கு..... ஒரு பிரண்டா உங்களுக்கு வேணா அவனோட மறுபக்கம் தெரியாமல் இருக்கலாம்..... ஆனால் எனக்கு அவனுடைய எல்லா பக்கமும் நல்லா தெரியும்..... அதனால் தான் சொல்றேன்..... டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க...." என்று முடித்தான் தீரன்......
பிருந்தாவோ இப்போது தான் ஒரு அதிர்ச்சியை தாங்கி இருக்க.... அதற்குள் ரஞ்சன் மறுபக்கம் என்று தீரன் கூறியதை கேட்டதும் "அப்படி என்ன மறுபக்கம்..." என்று மனதுக்குள் ஓடி "இன்னும் எவ்வளவு ரகசியம் தாண்டா உனக்குள்ள ஒளிச்சு வச்சிருக்க...." என்று மனதுக்குள் நண்பனை திட்டியவள் தான் பார்த்து கொண்டு இருந்த ரிப்போர்ட்ஸை தீரனிடம் தூக்கி காட்டி விட்டு "இப்போ தான் படிக்க ஆரம்பித்து இருக்கேன்.... இன்னும் இருபது நிமிடத்தில் ரிப்போர்ட்ஸ் பாத்துட்டு டேப்லட்ஸ் எழுதிக் கொடுக்கிறேன்..... வாங்கிக்கிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க....." என்றாள்......
"ஓகே தேங்க் யூ.... மிஸ்...." என்று அவன் இழுக்க "பிருந்தா..... டாக்டர் பிருந்தா....." என்று முடித்து வைத்தாள்....
ஆனால் தீரனோ "பிருந்தா நைஸ் நேம்..." என்று கூறி விட்டு பிருந்தாவின் கண்ணில் தெரிந்த மின்னலை ஒரு சிறு புன்னகையுடன் கண்டு விட்டு அறையை விட்டு வெளியே வந்தான்......
பிருந்தா அறைக்கு வெளியே இருந்த இருக்கையில் பரத்தும் விஷ்ணுவும் அமர்ந்திருந்தார்கள்..,..
பரத் புன்னகையுடன் வெளியே வந்த தீரனை ஆராய்ச்சியாக பார்த்தான் என்றால் விஷ்ணுவோ கண்ணில் சிறு வலியுடன் பார்த்து விட்டு தீரன் பார்ப்பதற்குள் தனது கண்ணில் இருந்த வலியை மறைத்துக் கொண்டு தீரனை பார்த்து புன்னகை புரிந்தான்......
தீரனோ சிறு நொடிப்பொழுது
அவனது கண்ணில் தோன்றி மறைந்த வலியை எதற்காக என்று சிறு புருவ சுழிப்புடன் யோசித்தவன் பிறகு தனது யோசனையை கைவிட்டு ஆராய்ச்சி பார்வை பார்க்கும் பரத்தை ஏறிட்டான்......
"இவன் ஒருத்தன்.... எப்போ பாத்தாலும் என்னவோ இவன் தங்கச்சியை கட்டிக் கொடுக்க போற மாப்பிள்ளையை ஆராய்ச்சி செய்றவனாட்டம் என்னை பார்த்து வைப்பான்....." என்று மனதுக்குள் திட்டியவன் வெளியே விஷ்ணுவை பார்த்து சிரித்து வைத்தான்......
அவன் சிரிப்பை ஒரு கடுப்போடு பார்த்த பரத்
'டேய் மரியாதையா பிருந்தாவை கல்யாணம் பண்ணி செட்டிலாகிடு.... பிருந்தாவை நீயும் லவ் பண்ற தானே.... உன்னை விடவா அவன் நல்லவன்.... அவன் போலீஸ்... அவன் பிருந்தாவுக்கு வேண்டாம்..... அவனுக்கு தான் பழசு எதுவும் தெரியாதே.., அதனால் உனக்கு தான் பிருந்தா..." என்று விஷ்ணுவின் காதுக்குள் முணுமுணுத்தான் பரத்.....
பரத்தின் பேச்சை கேட்டு மௌனமாக சிரித்துக் கொண்ட விஷ்ணு "நிச்சயமா பிருந்தா எனக்கு கிடையாது பரத்.... பிருந்தா தீரனுக்கு உரியவள்..., அவள் என்னிக்குமே என்னை ஒரு நல்ல பிரண்டா தான் பார்ப்பாள்.... அதுக்கு மேல் அவளுக்கு என் மேல் எந்த ரிலேஷன்ஷிப்பும் இருக்காது.... இருக்கவும் கூடாது... அது தான் எனக்கும் அவளுக்கும் நல்லது..... அவள் நல்லபடியா வாழணும்னா அதுக்கு தீரன் தான் கரெக்ட்...." என்றவன் கண்களில் காதலில் தோற்ற வலி அப்பட்டமாக தெரிய பரத் அவன் தோளை தட்டிக் கொடுத்தான்.....
"ஐ அம் ஓகே பரத்... ரஞ்சன் சரியானதும் நான் என்னோட ஹெல்த் பிராப்ளம் சரி பண்ண அமெரிக்கா போறேன்...... அங்கே எனக்கு ஒரு வெள்ளைக்காரி கூட வைப்பா வரலாம் இல்லையா..." என்று கண் சிமிட்டியவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டான் பரத்......
"முன்னாடி ரஞ்சன் கண் விழித்ததும் கிருஷ்ணானு கூப்பிட்டான்.... இப்போ கண் முழிக்கும் போது அந்த மாதிரி எதுவும் நினைவு இருக்குற மாதிரி எனக்கு தெரியலை..... அவன் பைத்தியமாகிட்டானா... இல்லை நம்மளை பைத்தியமாக்க பாக்குறானா விஷ்ணு...." என்று புலம்பிய பரத்தை கண்டு சிரித்து வைத்தான் விஷ்ணு அவனுக்கு சிறு விளக்கம் கொடுத்தான்......
"ரஞ்சன் ஒன்னும் பைத்தியமாகலை பரத்.... அதே சமயம் நம்மையும் அவன் பைத்தியமாக்கலை.... அவனுக்கு ஆக்சிடண்ட் நடந்த அதிர்ச்சியில் அடிமனதில் இருந்த முன்ஜென்ம நினைவுகள் மேலெழும்பி நினைவுக்கு வந்து என்னை கிருஷ்ணான்னு கூப்பிட்டான்.... அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து அவன் ஓரளவுக்கு நார்மலுக்கு வந்ததும் மறுபடியும் அந்த பழைய நினைவுகளை பின்னுக்கு தள்ளி நம்ம ரஞ்சன் வெளியே வந்துட்டான்.. அவன் எவ்வளவு தைரியமானவன்... பிடிவாதக்காரன்... அழுத்தகாரன்... அதோடு அவனுக்கு வில்பவர் ஜாஸ்தி... அதனால் தான் அவனுக்கு நடந்த கொடுமை எல்லாம் நினைவு வந்தும் அதுக்கு காரணமா இருந்தவர்களை பழி வாங்க ஏதோ ஒரு முடிவை யோசித்து வைத்து சரியான நேரத்திற்காக காத்திருக்கான்.... ஆனால் இவன் கொடுக்கும் தண்டனையை அவங்களால தாங்க முடியுமான்னு தான் தெரியலை..." என்று நீண்ட விளக்கம் கொடுத்தவனை கன்னத்தில் கை வைத்து கண் சிமிட்டாமல் பார்த்து வைத்தான் பரத்....
பரத்தின் பார்வையில் குழம்பி போன விஷ்ணு "ஏண்டா இப்படி எட்டாவது அதிசயத்தை பார்ப்பது போல பார்த்து வைக்கிற...." என்று கேட்டான் விஷ்ணு....
"அதிசயமா தான்டா தெரியுற.... ஏன்டா நீ லவ் பண்ற பொண்ணை வேற ஒருத்தனுக்கு சொந்தம்னு சொல்லிட்டு அந்த ஃபீலிங்ஸ் கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி லெக்சர் குடுத்துட்டு இருக்க..... அவன் அவன் லவ் ஃபெயிலியர்னு தண்ணி அடிப்பான் ஸ்மோக் பண்ணுவான்..... ஆனா நீ என்னடான்னா அந்த பீலிங்கே இல்லாமல் இருக்க...." என்று கேட்டவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்த விஷ்ணு "நான் ஸ்மோக் பண்ணினாலும் ட்ரிங் பண்ணிணாலும் அடுத்த நாள் என் உயிர் போயிடும்.... என் கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு...." என்றான்....
"அப்படி என்னடா உன் கண்டிஷன்...."
"அத பத்தி உனக்கு தெரியாமல் இருப்பது நல்லது...." என்றவன் டாக்டர் பார்வதியை தேடி சென்றான்.......
பரத் ஐசியூவுக்கு வெளியே அமர்ந்து இருந்த தீரனை நொடிக்கு ஒரு முறை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்.....
போலீஸ்காரன் கண்கள் அனைத்து புறமும் இருக்க வேண்டும் என்பதைப் போல தன்னை கண்காணித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் பரத்தை கூர்ந்து பார்த்தான் தீரன்......
தீரன் தன்னை பார்ப்பதை உணர்ந்த பரத் தனது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.... சற்று நேரம் கழித்து தீரன் இருந்த பக்கம் திரும்பி பார்த்த பரத் அந்த இடம் காலியாக இருக்கவும் அவனை சுற்றிலும் பார்வையில் தேட தனது பக்கத்து இருக்கையில் அரவம் உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே தீரன் அமர்ந்திருந்தான் அதுவும் பரத்தையே பார்த்தவாறு....
பரத்திற்கு கொஞ்சம் நர்வஸாக இருக்க தீரனை பார்ப்பதை தவிர்த்து சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தான்.....
"ஃபர்ஸ்ட் டைம் ஹாஸ்பிடல் வந்து இருக்கியா என்ன...." என்று தீரன் கேட்டதும் புரியாமல் முழித்த பரத் "இல்லை சார்..... நான் நிறைய தடவை இந்த ஹாஸ்பிடல் வந்து இருக்கேன்.... ஏன் கேக்குறீங்க...." என்று கேட்டான்.....
"இல்ல ஃபர்ஸ்ட் டைம் வந்த மாதிரி ஹாஸ்பிடலை சுத்தி சுத்தி பாக்குறியே.... அதான் கேட்டேன்...." என்று சொன்னதும் தீரனை திரும்பி பார்த்த பரத் "நான் ஒன்றும் ஹாஸ்பிடலை சுற்றி பார்க்கவில்லை...." என்றான்.....
"அப்புறம் எதுக்காக என்ன சைட் அடிச்சிட்டு இருந்த..."
"என்னது.... சைட் அடிச்சேனா..."
"ஆமா நிமிஷத்துக்கு ஒரு தடவை இங்கே இருந்து என்னை பாத்துட்டு இருந்தது நீ தானே....."
"அது வந்து.... சும்மா தான் பார்த்தேன்...." என்ற பரத்தின் குரல் உள்ளே செல்ல "நீ.... சும்மா பார்த்தியோ ஆடிக்கிட்டு பாத்தியோ அது எனக்கு தேவையில்லை... எதுக்காக பார்த்தனு மட்டும் சொல்லு..." என்று தீரன் விடாமல் கேள்வி கேட்டவுடன் வார்த்தை வராது நிமிர்ந்து பார்த்த பரத் "உங்களோட கேரக்டர் எப்படி இருக்கும்னு ஜட்ஜ் பண்ண நினைச்சேன்.... நீங்க நல்லவரா கெட்டவரா அப்படின்னு பாக்க நினைச்சேன்.... மேக்ஸிமம் எல்லா போலீசும் கெட்டவராக தான் இருப்பாங்க...." என்று கூறியவனை பார்த்து புன்னகைத்த தீரன் "அது எப்படி எல்லா போலீசும் கெட்டவங்களா இருப்பாங்கன்னு நீயா ஒரு முடிவுக்கு வரலாம்...." என்று கேட்டான் தீரன்.....
"எனக்கு தெரிஞ்சு எல்லா போலீசும் அப்படித்தான் இருந்திருக்காங்க.... பிருந்தாவை மேரேஜ் பண்ண பிறகு நீங்க வேணா இந்த வேலையை விட்டுடுங்களேன்?...." என்று குழந்தை போல் கேட்டவனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த தீரன் "யாரால் எந்த போலீஸால் உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துச்சுன்னு சொல்லுங்க.... அந்த போலீஸ்காரனை தூக்கிடலாம்... ஆனால் எல்லா போலீஸ்க்கும் கெட்டவன் கிடையாது பரத்...." என்றான்......
" என் சின்ன வயசுல நடந்த விஷயத்துக்கு எந்த போலீஸ்காரனை போய் பழி வாங்க முடியும் சார்..."
"அப்படி என்ன உங்க சின்ன வயசுல நடந்தது பரத்...."என்று கேட்டதும் பரத்தின் முகம் கூம்பி போனது....
"என்னாச்சு பரத்.... என்னனு சொன்னால் தானே என்னால் ஹெல்ப் பண்ண முடியும்....." என்றதும் தனது கடந்த காலத்தை கூற ஆரம்பித்தான் பரத்...
நான் சின்ன வயசா இருக்கும் போது அதாவது ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும் போது என் அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டாரு..... அதுக்கு அப்புறம் எங்க அம்மா தான் வேலைக்கு போய் என்னையும் என் அக்காவையும் படிக்க வைத்து குடும்பத்தை பார்த்துகிட்டாங்க..... அப்போ நான் ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தேன்.... அக்கா காலேஜ் படிச்சிட்டு இருந்தாங்க..... அப்பதான்...." என்று சொல்லி கொண்டு இருந்தவன் கண்களில் இருந்து கண்ணீர் விழ ஆரம்பிக்க அதை பார்த்த தீரன் தன் அருகில் இருந்த தண்ணீரை ஒரு டம்ளர் பிடித்து பரத்திடம் கொடுத்து குடித்து விட்டு சொல்ல சொன்னான்.....
பரத்தும் தண்ணீரை குடித்துவிட்டு தனது கடந்த காலத்தையும் கூற ஆரம்பித்தான்......
என் அக்கா ரொம்ப அழகா இருப்பாங்க..... ஆனால் அந்த அழகே அவங்களுக்கு ஆபத்தா போயிடுச்சு.... அவங்க படிச்சுகிட்டு இருந்த காலேஜ்ல தான் எம்பி பையனும் படிச்சுகிட்டு இருந்தான்.... என் அக்காவோட அழகில் மயங்கி அவங்களை லவ் பண்ண ஆரம்பிச்சான்..... ஆனா என் அக்காவுக்கு அவனை பிடிக்கலை..... அதனால் அவன் கிட்ட இருந்து விலகி விலகி தான் போய்ட்டு இருந்தாங்க..... மேக்சிமம் அவன் கண்ணில் படாமல் காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தாங்க.... இப்படி இருந்தப்போ ஒரு நாள் என் வீட்டுக்கு போலீஸ்காரங்க நிறைய பேர் வந்தாங்க.... என் அக்காவை வைத்து என் அம்மா ஏதோ வியாபாரம் பண்றதா சொன்னாங்க..... என் அக்காவையும் அம்மாவையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.... என் அம்மா கூடவே நானும் போக ட்ரை பண்ணேன்... என்னை தள்ளி விட்டுட்டு அவங்களை கூட்டிட்டு போய்ட்டாங்க... மறுநாள் இரண்டு பேரும் பொணமா தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க.... அங்கே என்ன நடந்துச்சு.... எது நடந்ததுன்னு தெரியலை.... ஆனா என் அம்மாவும் அக்காவும் செத்து போனதுக்கு காரணம் போலீஸ்காரங்க மட்டும் தான்.... அப்போ அவங்களை என்ன வியாபாரம் பண்ணறதா சொல்லி கூட்டிட்டு போனாங்கன்னு எனக்கு தெரியலை..... ஆனால் இப்போ எனக்கு புரியுது.... அவங்களை என்ன சொல்லி கூட்டிட்டு போய் இருக்காங்கன்னு.... சார் பிருந்தாவுக்கு இந்த நிலைமை வரக்கூடாது.... நீங்க எங்க பிருந்தாவை கல்யாணம் பண்ணிக்கிற நிலைமை வந்தால் போலீஸ் வேலையை விட்ருவீங்கன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணி குடுங்க..." என்று கையை நீட்டிய பரத்தை பரிதாபமாக பார்த்து வைத்தான் தீரன்.....
பரத் சிறு வயதில் அனுபவித்த கஷ்டங்களை நினைத்து பரிதாபப்பட்டான் தீரன்....
ஆனால் அதே நேரத்தில் அனைத்து காவலர்களையும் அவன் தவறாக நினைத்துக் கொண்டு இருப்பதையும் தனது வேலையை விட சொல்லவும் அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் பரத்தை பார்த்து வைத்தான்.....
பரத் வேலையை விட சொல்லி சத்தியம் கேட்டதை மட்டுமே காதில் வாங்கியவன் பிருந்தாவை திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசியதை சரியாக காதில் வாங்காமல் போய் விட்டான் அந்த காவல்காரன்.....
ரஞ்சனின் நண்பனாக தான் இருப்பதால் தான் தன்னை பரத் வேலையை விட சொல்வதாக தீரன் அவனாக ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டு பரத்திற்கு தான் இந்த காக்கி சட்டையை எவ்வளவு விரும்புகிறான் என்பதை எப்படி புரிய வைப்பது என்று யோசித்தான் தீரன்......
பரத்தோ எங்கே தனது தோழியை இந்த போலீஸ்காரன் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு ஏதாவது தீரனால் ஆபத்து வந்து விடுமோ என்று நினைத்து பயந்தான்....
இப்படி இருவரும் ஒவ்வொரு நினைவில் யோசித்தபடி அமர்ந்து இருக்க ரஞ்சன் ஐசியூவிலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தான்....
ரஞ்சன் நடந்து வரவும் அவனிடம் சென்ற தீரன் "ஏண்டா இவ்வளவு வேகமாக நடந்து வர்ற.. இப்போ தான் ஆக்சிடண்ட்டாகி இருக்கு.... காயம் இன்னும் சரியாகலை... நேத்து தான் ஸ்டிச்சஸ் போட்டு இருக்கு.... அதான் டாக்டர் பிருந்தா சொன்னாங்களே.... அப்புறமா போலாம் அப்படின்னு.... இன்னும் ஒரு ரெண்டு மணி நேரமாவது இருந்துட்டு போலாம் இல்ல.... அதுவும் இல்லாமல் இன்னும் பிரிஸ்கிரிப்ஷன் வேற வரலை...." என்ற தீரனை முறைத்து பார்த்த ரஞ்சன் "ஐ வாண்ட் டு கோ நவ்..." என்று கூறிவிட்டு ஸ்ரீயை தனது கையுடன் அழைத்துக் கொண்டு தனது கார் இருக்கும் திசை நோக்கி சென்றான்.....
மருத்துவமனை வாசலில் கார் ஓட்டுனர் காருடன் காத்திருக்க அதில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவன் ஸ்ரீயை தனது பார்வையால் அருகில் அமரச் சொன்னான்......
ஸ்ரீயோ ரஞ்சனையே பிரமிப்பாக பார்த்தபடி அவன் அருகில் ஏறி அமர்ந்தாள்.....
ஸ்ரீயின் இமைக்காத பார்வையை கண்டு புருவத்தை ஏற்றி இறக்கிய ரஞ்சன் "என்ன பொண்டாட்டி... காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்த சொல்லி உன் சித்தப்பனும் சித்தியும் சொன்னாங்களா.... பர்பாமன்ஸ் ரொம்ப ஓவரா இருக்கு.... ஆனால் பாரு.... உன் நடிப்பை நம்பும் அளவுக்கு நான் இன்னும் முட்டாள் ஆகலை... சோ உன் பர்பாமன்ஸை நிறுத்திட்டு வேலையை பார்.... " என்று ஸ்ரீயின் காதின் அருகே முணுமுணுத்து வைத்தான்....
ஸ்ரீயோ அவன் முணுமுணுத்ததை கண்டு கொள்ளாமல் அவன் முகத்தை நோக்கி தனது முகத்தை திருப்ப காதில் பட்டும் படாமல் உரசிய அவன் இதழ்கள் அவள் ரஞ்சனை நோக்கி திரும்பியதும் அழுத்தமாக அவள் தாடையில் பதிந்தது.... அடுத்த நிமிடம் பதறி விலக போனவனின் சட்டை காலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்த ஸ்ரீ அவன் நிலைதடுமாறி தன் மீது வந்து மோதுவதற்குள் "ஐ லவ் யூ ரஞ்சன்....." என்றிருந்தாள்......
ஸ்ரீ ரஞ்சனை இழுத்த இழுவையில் அவன் இதழ்கள் அவள் இதழில் சற்று அழுத்தமாக பதிந்து அவள் ஐ லவ் யூவை அவன் இதழ்கள் ஏற்று கொண்டது போல முத்தமிட்டு இருந்தது.....
காரோட்டிக்கு கேட்க கூடாது என்று ஸ்ரீயை நெருங்கி பேசிய ரஞ்சனின் மூச்சுக்காற்று அவள் ஆடையை தாண்டி தோளை தழுவி நின்றது.. .
முதல் முறையாக ஒரு ஆணின் மூச்சு காற்றை உணர்ந்த ஸ்ரீயின் உடலில் மெல்லிய நடுக்கம் உண்டாக பயததிலும் வெட்கத்திலும் சிலிர்த்து போன பெண்ணவள் உதட்டை கடித்து தன்னை நிலைபடுத்த முயன்றாள்.....
ஆனால் அடுத்தடுத்து ரஞ்சன் முணுமுணுத்தபடி அவள் காதுக்கு அருகேயே பேசி கொண்டு இருக்க கோபத்தில் இருந்த ஆணவனுக்கு அவள் அருகாமை சாதரணமாக இருக்க ரஞ்சனின் முன்ஜென்ம காதலை கேட்டதில் இருந்து அவன் மீது ஸ்ரீக்கு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்க அது தற்போது காதலாக மாறியது....
ரஞ்சனை இதுவரை இவ்வளவு அருகில் சந்தித்திருக்காத ஸ்ரீக்கு அவன் அருகாமை முதலில் பதற்றத்தையும் நடுக்கத்தையும் கொடுக்க அடுத்த சில நிமிடங்களில் மயக்கத்தை கொடுத்தது....
கணவன் மீது தனக்கு இருக்கும் காதலை அந்த நிமிடம் உணர்ந்தாள் ஸ்ரீ....
தான் உணர்ந்த காதலை அடுத்த நிமிடம் ரஞ்சனிடமும் கூறி இருந்தாள்....
ரஞ்சன் தனது விருப்பம் இல்லாமல் தாலி கட்டி அழைத்து வந்து அடைத்து வைத்த போது கோபமும் அவனை தடுக்க இயலாமல் கோபமும் கொண்டு அவனை வெறுத்தவள் அவன் தோழி பிருந்தா வந்து ப்ரியரஞ்சன் என்று முழு பெயரை கூறிய போது ரஞ்சன் என்ற பெயரில் சிறு ஈர்ப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை தான்... ஆனால் அது தனது காதலன் என்று ராஜேந்திரன் மற்றும் புனிதாவால் சித்தரிக்கப்பட்டவனுக்கு தான் செய்யும் துரோகம் என்று நினைத்தாள்....
ரஞ்சன் தான் தனது வருங்கால கணவன் என்று சொன்ன போதும் சரி அவனை நேரில் பார்க்கும் போதும் சரி ஸ்ரீயின் மனதில் பயமும் கலக்கமும் தோன்றுமே தவிர காதலோ ஆவலோ கொண்டு ஒருநாளும் ரஞ்சனிடம் பேசியதில்லை.....
ஆனால் கட்டாய தாலி கட்டி அழைத்து வந்த போதும் ரஞ்சனை வெறுப்பதாக நினைந்து அனுதினமும் ஒவ்வொரு நிமிடமும் அவன் நினைவில் நாட்களை கடத்தினாள் ஸ்ரீ.....
இப்படி ஸ்ரீ அவளை அறியாமல் வெறுப்பது போல ரஞ்சனை காதலித்து கொண்டு இருப்பதை ரஞ்சனின் அருகாமை தான் ஸ்ரீக்கு புரிய வைத்தது....
மணமகனான அந்த ப்ராடு ரஞ்சனை தன் நிழலை தொட கூட அனுமதிக்காத ஸ்ரீ ரஞ்சனோடு ஒரே வீட்டில் ஒரு சில நேரத்தில் ஒரே அறையில் கூட தங்கும் சூழல் உருவாகி இருக்க அப்போது எல்லாம் ரஞ்சனின் பார்வை ஸ்ரீயின் கண்களையும் முகத்தையும் தாண்டி வேறு திசைக்கு சென்றதே இல்லை....
இப்படி சில நல்ல குணங்களால் ரஞ்சனின் பால் தனது மனது சாய்ந்து இருக்கும் போல யோசித்து யோசித்து தனக்கு ரஞ்சன் மீது எவ்வாறு காதல் உண்டானது என்று அலசி ஆராய்ந்து கொண்டு அமர்ந்து இருந்தவளின் தோளை பற்றி உலுக்கிய ரஞ்சன் "இறங்கி வீட்டிற்கு செல்லும் எண்ணம் வரவில்லையோ மகாராணிக்கு...." என்று கிண்டலாக கேட்டான்....
ரஞ்சன் தன்னை உலுக்கியதில் தனது யோசனை கலைந்த ஸ்ரீ இது தன் வீடு என்ற ஒரு புதிய உணர்வோடு அந்த வீட்டை பார்த்தாள்....
அன்று திருமணம் முடிந்து அழைத்து வந்த போது கண்ணீரும் கம்பலையுமாக வந்த ஸ்ரீ இன்று மருத்துவமனையில் இருந்து வரும் போது புன்னகையுடன் தன்னவன் என்ற எண்ணத்துடன் ரஞ்சனின் கையை பிடித்து கொண்டு உள்ளே செல்ல ஆசை கொண்டது மனது....
மனதின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு "மகாராணிக்கு மகாராஜா கார் கதவை திறந்து விட்டால் தானே இறங்க முடியும்... ம்ம்... சீக்கிரம் வந்து கதவை திறங்க..." என்று கெத்தாக முகத்தை வைத்து கொண்டு கூறினாள்....
ஸ்ரீ பேசிய உரிமை பேச்சிலும் உண்மையில் மகாராணி போல அவள் காரில் அமர்ந்து இருந்த தோரணையிலும் மனம் மயங்கி போக இதுவரை யார் பேச்சுக்கும் கட்டுபட்டிராத அந்த இளம் பிஸினஸ் மேன் தன்னவளின் பேச்சை கேட்டு காரை விட்டு இறங்கி காரோட்டி கதவை திறக்க வருவதற்குள் தானே தன்னவளுக்காக கதவை திறந்தவன் மேல்நாட்டு பாணியில் சற்று குனிந்து கைகளை விரித்து "வெல்கம் அவர் பேலஸ் பிரின்ஸஸ்..." என்றான்....
காரோட்டி தனது முதலாளியின் நடவடிக்கையில் அதிர்ந்து போய் பே என பார்த்து வைக்க அதை கண்டு கொள்ளாமல் தன்னவளுடன் கைகளை கோர்த்து கொண்டு வீட்டிற்குள் நுழைய போக வாசல்படியில் நின்று கொண்டு ரஞ்சனின் கையை பிடித்து நிற்க வைத்த ஸ்ரீ "கொஞ்ச நேரம் அமைதியா இருங்க..." என்று கூறினாள்.....
தாமரை உள்ளே இருந்து ஆரத்தி தட்டை எடுத்து வந்து இருவருக்கும் திருஷ்டி கழித்து வெளியே கொட்டி விட்டு உள்ளே வந்தார்....
ஸ்ரீ தன் கணவனின் கையை பற்றியபடி உள்ளே செல்வதை பார்த்த தாமரை முதல் முறை இந்த வீட்டிற்கு அவள் வந்ததை நினைத்து பார்த்தவாறு உள்ளே சென்றார்....
ஹால் ஷோபாவில் அமர்ந்த ரஞ்சனின் அருகில் சென்று ஸ்ரீயும் அமர போக அவளை அழைத்த தாமரை பூஜை அறையில் இருக்கும் விளக்கை ஏற்றச் சொன்னார்......
அவளும் சந்தோஷமாக விளக்கை ஏற்ற செல்வதற்குள் "ஹாஸ்பிட்டலில் இருந்து வந்துட்டு அப்படியே போய் விளக்கை ஏத்துவியா..... போ போய் முதல்ல குளிச்சிட்டு வந்து விளக்கை ஏற்று..." என்று கூறிவிட்டு விடுவிடுவென மேலே சென்று விட்டான் ரஞ்சன்.....
கணவன் கூறிய வேலையை சிரமேற்கொண்டு செய்பவளாக அறைக்கு சென்று குளித்து விட்டு கீழே வந்து பூஜை அறையில் தாங்கள் இருவரும் இனியாவது நல்லபடியாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அங்கிருந்த விளக்குகளை ஏற்றி வைத்தாள்.....
ரஞ்சனின் இந்த ஜென்மத்து பெற்றோர்களின் புகைப்படங்கள் பூஜை அறையில் இருப்பதை பார்த்துவிட்டு 'அப்பவும் சரி.. இப்பவும் சரி... இவருக்கு ஆதரவா யாருமே இல்ல போல.... இனியாவது அவருக்கு எல்லாமாக நான் இருப்பேன்.... முருகா நீ தான் எனக்கு துணையாய் இருக்கணும்...." என்று முருகனிடம் வேண்டுதல் வைத்தவள் கண்களை திறந்து பார்க்க அவளையே கூர்ந்து கவனித்தவாறு பூஜை அறை வாசலில் ரஞ்சன் நின்றிருந்தான்.....
கணவனை பூஜை அறையில் கண்டதும் ஒரு புன்னகையோடு அவனை நோக்கி செல்ல அவனும் தனது பார்வையால் அங்கிருந்த தெய்வங்களை ஒரு முறை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் வெளியே சென்று விட்டான்.....
கணவன் ஆரத்தியை தொட்டு கண்களில் ஒற்றி எடுத்துக் கொள்வான் என்று நினைத்திருந்த ஸ்ரீயோ சிறு ஏமாற்றத்துடன் கையில் இருந்த திருநீறு தட்டை எடுத்து கொண்டு ஹாலில் அமர்ந்து இருந்த ரஞ்சனை தேடிச் சென்றாள்....
மனைவி தன்னை தேடி வருவதை பார்த்துவிட்டு அவளை கண்டு கொள்ளாமல் டிவியையே பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்....
முன்பென்றால் அவன் இருக்கும் திசை பக்கம் கூட ஸ்ரீ சென்றிருக்க மாட்டாள்... ஆனால் அவனது முன் ஜென்ம காதலைத் தெரிந்து கொண்டதில் இருந்து அவன் காதலை புரிந்து கொண்டதோடு தனது காதலையும் அறிந்து கொண்டவள் அவனை விட்டு விலகி இருக்காமல் அவனை நெருங்க முற்பட்டால்....
அதற்கு முதல் படியாக அவனிடம் காரில் வைத்து காதலை சொன்னவள் தற்போது ஒரு மனைவியாக அவனை நெருங்கி அவனது நெற்றியில் திருநீரை பூசி தனது கையால் அவனது கண்களை மூடி திருநீரை ஊதி விட்டாள்.....
திருநீறு அவன் கண்களில் விழக்கூடாது என்பதற்காக அவள் செய்த சிறு செய்கை ரஞ்சனுக்கு அவனது அன்னையை ஞாபகப்படுத்த அவனது சிறுவயதில் அவனது அன்னை இப்படித்தான் திருநெறி பூசி விட்டு அதை தனது கண்களில் படக்கூடாது என்று ஊதிவிட்டு செலவு செய்வார் அதைப்போல ஸ்ரீ செய்யவும் மனம் தடுமாறினான் ரஞ்சன்.....
ஸ்ரீயை நம்பச்சொல்லி ரஞ்சனின் காதல் மனது சொல்ல நம்ப வேண்டாம் என்று அறிவுக் கூற மனதுக்கும் அறிவுக்கும் இடையே போராடி நின்றான் அந்த இளம் தொழிலதிபன்...
ஸ்ரீயோ மனைவியாக தனது கடமையை சரியாக செய்வதாக நினைத்துக் கொண்டு ரஞ்சனுக்கு தேவையானதை செய்து கொடுக்க ரஞ்சனோ தன்னிடம் ஏதோ காரியம் ஆக வேண்டும் என்று ஸ்ரீ நடிப்பதாக நினைத்துக் கொண்டான்....
ஒரே நாளில் எப்படி அவளால் என் மேல் உள்ள வெறுப்பை மறந்து மாற முடியும் என்று நினைத்தவன் ராஜேந்திரன் மற்றும் புனிதாவின் ஆலோசனையின் பேரில் தன்னிடம் நடிப்பதாக நினைத்துக் கொண்டான்....
ஸ்ரீ சற்று நேரத்தில் குளித்து விட்டு வந்து ரஞ்சனுக்கு எதிரே புடவை கட்ட ஆரம்பித்தாள்.....
ரஞ்சனோ விழிகள் தெறித்து விழும் அளவுக்கு அவளை பார்த்து விட்டு முகத்தை திருப்ப அதை கண்ணாடியின் வழியே கணவன் முகம் திருப்புவதை கண்டு சோர்ந்து போனாலும் கணவனின் காதலை அடைய இதைக்கூட செய்ய முடியாதா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் "இப்ப எதுக்கு முகத்தை திருப்புறீங்க... பாத்ரூம் ஃபுல்லா ஈரமா இருக்கு.... அதனால் தான் வெளிய வந்து புடவை கட்டுறேன்.... இல்லைனா நான் ஏன் இங்கே வந்து ட்ரஸ் மாத்த போறேன்... என்னவோ நான் வேணும்னே வந்து உங்க முன்னாடி புடவை கட்டுற மாதிரி முகத்தை திருப்புறீங்க... என்னைக்கு இருந்தாலும் இதெல்லாம் நீங்க பாக்க போறது தானே..." என்று கூறியவள் பிளவுஸை அட்ஜஸ்ட் செய்வதாக பேர் பண்ணிக்கொண்டு மேலே இழுத்து விட அதுவோ இன்னும் சற்று கீழே இறங்கி அவளது முன்னழகை வடிவாக காட்ட ரஞ்சன் அதிர்ந்து போய் ஸ்ரீயை பார்த்தான்.....
எப்பொழுதும் தன்னை கண்டு பயந்து நடுங்கும் ஒருத்தி தன்னை வெறுப்பாகவே பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தி திடீரென காதல் மேவிட பேசுபவளைப் போல பேசியதை கேட்டு "என்னைக்கு இருந்தாலும் நான் தான் பார்க்க போறேனா..." என்று மனதுக்குள் கூறிக் கொண்டவனின் கண்கள் அலைபாய மூச்சுக்காற்று சூடேற ஆரம்பித்திருந்தது....
ஸ்ரீயிடம் கோபமாக இருப்பதை போலவும் வெறுப்பதை போலவும் நடித்துக் கொண்டு இருந்த ரஞ்சனுக்கு ஸ்ரீயின் இந்த அதிரடி நடவடிக்கையால் உள்ளிருந்த காதல் மனம் தற்போது வெளியே எட்டிப் பார்ப்பது போல அவளது வார்த்தைகள் அமைய புடவை கட்டிக் கொண்டிருந்தவளை நெருங்கி நின்ற ரஞ்சன் அவளது கையை பிடித்து தன்னை நோக்கி திருப்பி கட்டிக் கொண்டிருந்த புடவையை பிடுங்கி தூர எறிந்தவன் வெட்கத்தில் முகம் சிவந்து நின்றவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பினான்....
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன..."
"என்ன சொன்னேன்.... நான் எதுவும் சொல்லலையே..."
"இல்ல நீ சொன்ன...."
"சரி சொன்னதாகவே இருக்கட்டும்... நான் சொன்னது உண்மை தானே..."
"எது உண்மை..."
"என்னைக்கு இருந்தாலும் இதெல்லாம் உங்களுக்கு சொந்தம் தானே..." என்று கூறியவளின் வார்த்தைகள் முடிவடைந்தது என்னவோ அவனது இதழில் தான்....
திடீரென தன்னை தீண்டிய தன்னவனின் இதழனைப்பு சிறு நடுக்கத்தை கொடுத்தாலும் அவளுக்குள் இருந்த காதல் சில நொடிகளில் அதை ரசிக்க வைக்க தன்னை மறந்து அவனது இதழ்களில் மூழ்க ஆரம்பித்தாள் ஸ்ரீ.....
எவ்வளவு நேரமோ நிமிடங்களோ கழித்து அவளது இதழை விடுவித்தவன் கழுத்தில் முகம் புதைக்க கைகளோ அவள் உடலின் பல இடங்களில் பயணித்து அவளது மேடு பள்ளங்களை ஆராய்ந்து இருக்க ஸ்ரீ வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.....
ரஞ்சனும் தன் மனதில் உள்ள குழப்பங்களை ஒத்திவைத்தவன் அவளுக்குள் மூழ்கிக் கொண்டிருக்க தாமரை வெளியே கதவைத் தட்டி அவர்களை பிரித்தார்....
" தம்பி உங்களை பார்க்க பிருந்தா பாப்பா வந்திருக்கு... கீழே வரீங்களா...." என்று சத்தம் வைத்தவர் சென்று விட தனது உணர்வுகள் அனைத்தையும் அடக்கி கட்டுக்குள் கொண்டு வர முயன்ற ரஞ்சன் ஸ்ரீயை விட்டு விலகி நின்றான்....
ஸ்ரீயோ அவ்வளவு எளிதில் தனது உணர்வுகளில் இருந்து விடுபட முடியாமல் அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டாள்.....
ரஞ்சன் தனது தலையை கோதிக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் அங்கும் இங்கும் பார்த்து வைத்து விட்டு தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் பாத்ரூமுக்கு சென்று சிறு குளியலை முடித்துக் கொண்டு வெளியே வந்து இன்னும் உடை மாற்றாமல் அமர்ந்திருந்த ஸ்ரீயை ஒரு பார்வை பார்த்து விட்டு வேறு உடை அணிந்து கொண்டு கீழே சென்றான்.....
ரஞ்சன் கீழே சென்ற பிறகும் கூட ஸ்ரீ இருந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்....
கீழே சென்ற ரஞ்சன் பிருந்தா தன்னை திட்டுவதை கேட்டுக் கொண்டு சற்று நேரம் அமர்ந்திருந்தான்....
"ரெண்டு நாள் ஹாஸ்டல்ல இருந்தால் குறைஞ்சு போய்டுவியா என்ன... காயம் இன்னும் சரியாகலை... டேப்ளட்ஸ் கூட வாங்காமல் வந்துட்ட... அப்படி இங்கே வந்து என்ன தான் பண்ண... உன்னை கூட்டிட்டு வந்தானே அந்த போலீஸ்காரன் எங்கே..." என்ற தீரனையும் சேர்த்து திட்ட ஆரம்பித்தாள்...
" இப்படி திட்ட தான் ஹாஸ்பிடலில் இருந்து இவ்வளவு அவசரமா இங்கே வந்து சேந்தியா.... நான் கூட எனா ரிப்போர்ட்ஸை பாத்துட்டு ஏதாவது அட்வைஸ் கொடுப்பன்னு நினைச்சேன்... ஒருவேளை நீ தீரனை தேடி தான் இங்கே வந்தியோ.... சோ சாரி ப்ரண்ட்.. அவனை அங்கேயே கட் பண்ணிட்டேன்..." என்று கூறியவன் அவள் கோபமாக பார்ப்பதை கண்டு கொள்ளாமல் "நீ இங்கே உட்கார்ந்து திட்டிட்டு இரு.... எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்..." என்று செல்ல போக அவனிடம் தான் கொண்டு வந்திருந்த டேப்ளட்ஸை கொடுத்து விட்டு "எப்படியோ போய் தொலை..." என்று கூறி வெளியேறினாள் பிருந்தா....
அவள் கோபமாக செல்வதை பார்த்துவிட்டு தனது அறை நோக்கி சென்றவன் அங்கு ஸ்ரீ அப்போதும் கண்களை மூடிக்கொண்டு வெறும் பிளவுஸ் மற்றும் உள்பாவாடையுடன் அமர்ந்திருப்பதை கண்டு "என்ன என்னை மயக்க பாக்குறியா.." என்று கேட்டான்......
கணவனின் கேள்வியில் தனது மாயலோகத்தை விட்டு பூமிக்கு வந்த ஸ்ரீ "என் புருஷனை நான் மயக்கறது தப்பில்லையே..." என்று கூறி விட்டு கட்டாமல் தூக்கி எறிந்து இருந்த புடவையை எடுத்து கட்ட ஆரம்பித்தாள்....
ரஞ்சனோ மனைவியின் நடவடிக்கையில் குழம்பியபடி சுற்றிக் கொண்டிருந்தான்.....
ஸ்ரீ தன் கணவனின் தேவைகளை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாள்.... ரஞ்சன் அவளை கண்டு கொள்ளாத போதும் அவனுக்கு வேண்டியதை கடமை தவறாது செய்யும் மனைவியாக அவனுக்கு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தாள்....
காலையில் குளிக்கப் போகும் ரஞ்னுக்கு உடை எடுத்து வைப்பது முதல் குளித்து விட்டு வருபவனுக்கு தலையை துடைப்பது காலை டிபன் பரிமாறுவது மதிய உணவை ஆபிஸிற்கு எடுத்து செல்வது சில நேரங்களில் அவன் பைல்களில் பிஸியாக இருந்தால் உணவை ஊட்டி விடுவது இரவு உணவை சமைத்து பரிமாறி விட்டு உறங்க வருபவனுக்கு ஒரு டம்ளர் பால் எடுத்து வந்து கொடுத்து விட்டு இரவு உடையை எடுத்து கொடுப்பது வரை அனைத்தையும் அவளது வேலையாக வைத்துக் கொண்டு பிஸியாக சுற்றினாள். ...
எந்நேரமும் ரஞ்சனை சுற்றி சுற்றி வந்த ஸ்ரீ அவன் அலுவலகம் செல்லும் நேரம் கூட மதிய உணவை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாள்...
ரஞ்சன் மதிய நேரத்தில் மீட்டிங் என்று எங்காவது சிக்கிக் கொண்டால் அவன் வரும் வரை அலுவலகத்தில் அவனது அறையில் அமர்ந்து கொண்டு அவன் வந்தவுடன் சாப்பாடு பரிமாறி விட்டு அவனை சாப்பிட வைத்து விட்டு வீட்டிற்கு வந்து சேர்வாள்....
இரவு உணவையும் அவனுக்காக அவளே சமைத்து வைப்பாள்.... இப்படி அவனுக்கு பார்த்து பார்த்து மனைவியாக தனது கடமையை செய்து கொண்டிருந்தவளை ஒரு சிறு பார்வையுடன் கடந்து சென்றான் ரஞ்சன்..... அவனுக்கென அவனது நண்பர்களை தவிர யாரும் இல்லாத நேரத்தில் இப்படி தனக்காக பார்த்து பார்த்து செய்யும் மனைவியின் பக்கம் மனம் சாய்ந்தாலும் எங்கே ராஜேந்திரன் மற்றும் புனிதாவின் மீது இருக்கும் கோபத்தை இவள் மேல் காட்டி விடுவோமோ என்ற பயம் ஒரு புறம் என்றால் அவர்கள் பேச்சைக் கேட்டு இவள் நடிக்கிறாளோ என்ற பயம் இன்னொரு புறம் என அவளை விட்டு விலகியே இருந்தான் ரஞ்சனா.....
ஸ்ரீயோ அவனை தன்னுடன் கட்டி போடும் வேலையை பார்க்க ஆரம்பிக்க அவனோ அவளிடம் இருந்து விலகி ஓடும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தான்..
பிருந்தா அவ்வப்போது வந்து ரஞ்சனின் உடல்நிலை பரிசோதித்துக் கொண்டிருந்தாள்...
பிருந்தா ரஞ்சன் வீட்டிற்கு வரும் வேளைகளில் எல்லாம் தீரனும் ரஞ்சனின் வீட்டிற்கு வர ஆரம்பித்தான்....
ரஞ்சனின் வீட்டிற்கு வரும் தீரன் அவனை பரிசோதிக்கும் பிருந்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது சில நேரங்களில் ஸ்ரீயும் கண்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வாள்.....
எல்லாம் காதல் படுத்தும் பாடு என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு தனது நிலையை விட மோசம் இல்ல.... நம்மளும் தான் லவ் பண்றோம்.... நம்மளும் இப்படி தான் இருக்கோம் போல.... என்றும் நினைத்துக் கொள்வாள்.....
பிருந்தாவிற்கு தீரன் தன்னை பின் தொடர்வதும் தான் எங்கு சென்றாலும் அங்கு இருப்பது போல பார்த்துக் கொள்வதும் என தன் பின்னே சுற்றி வரும் தீரனை அவள் மனதுக்கு பிடித்தாலும் விஷ்ணு தன்னிடம் காதலை கூறியிருந்த காரணத்தால் நண்பனை வருத்தப்பட வைத்து விட்டு தீரனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தனது மனதுடன் போராடிக் கொண்டிருந்தாள்.. எனவே தீரனை கண்டு கொள்ளாமல் செல்ல பழகி இருந்தாள்... அதே நேரம் தீரனின் காதல் பார்வைகளை மனதுக்குள் பொக்கிஷமாக சேர்த்து வைத்தாள்.....
தீரன் பார்க்காத நேரம் அவனை பார்த்து ரசிக்கும் பிருந்தா தீரன் இவள் இருக்கும் பக்கம் திரும்பி விட்டால் எங்கோ பார்ப்பது போல முகத்தை திருப்பிக் கொள்வாள்....
தீரனுக்கு அவளுடன் விளையாடும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு பிடித்திருப்பதால் அவனும் அவளிடம் காதலைச் சொல்லாமல் ஆட்டம் காட்டி கொண்டிருந்தான்....
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க ரஞ்சன் தனது உடல்நிலை முழுவதுமாக சரியானதும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தான்....
முதலில் ராஜேந்திரன் மற்றும் புனிதாவின் வங்கி கணக்கை முடக்க செய்தவன் தன்னிடம் இருந்த அதாவது பழைய ரஞ்சனிடம் அதாவது முன் ஜென்ம சித்தரஞ்சனாக இருந்த போது மறைத்து வைத்த சொத்து பத்திரங்களை தற்போது எடுத்து வந்து சொத்துக்கள் அனைத்தும் சகுந்தலாவிற்கும் அவரது மகனுக்கும் தான் சொந்தம் என்று தனது வக்கீல் மூலம் நிரூபித்தவன் அந்த சொத்துக்களை அரசாங்க அதிகாரிகளை பயன்படுத்தி பறிமுதல் செய்தான்.... இதனால் நடுத்தெருவுக்கு வந்திருந்தனர் ராஜேந்திரன் மற்றும் புனிதா தம்பதியினர்.....
எந்த மகனுக்காக இவ்வளவு சொத்துக்களையும் பராமரித்து வந்தார்களோ அந்த மகனோ தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு இவர்களை அனாதையாக நடு ரோட்டில் விட்டு விட்டு செல்ல அப்போதுதான் தங்களின் நிலை உணர்ந்து கண்ணீர் வடித்தனர் ராஜேந்திரனும் புனிதாவும். ...
யார் வீட்டிற்கு சென்று எந்த உதவி கேட்டாலும் அவர்களை அடித்து துரத்தாத குறையாக வெளியேற்றினார்கள் ராஜேந்திரனின் சொந்தக்காரர்கள்......
பணம் சொத்து இருக்கும் வரை தங்களை மதித்தவர்கள் தற்போது பணம் இல்லாது போனதால் தங்களது நிலை இறங்கி போனதை நினைத்து வருத்தத்துடன் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தனர்.... அவர்களை ஏசி காரில் அமர்ந்து வேடிக்கை பார்த்தான் ரஞ்சன்....
அவர்களுக்காக அவன் ஏற்பாடு செய்திருந்த தண்டனை இது மட்டுமல்லவே.... அதனால் அவர்கள் நடுத்தெருவில் நடந்து செல்வதை ஒரு அலட்சிய பார்வை பார்த்து விட்டு வீட்டை நோக்கி சென்றான்.....
வீட்டிற்குச் சென்ற ரஞ்சன் தனது மனைவியின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளவும் ராஜேந்திரன் மற்றும் புனிதாவை பழிவாங்கவும் ஏற்கனவே தான் போட்டு வைத்திருந்த திட்டத்தை மாற்றி தற்போது ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினான்....
அதன்படி ராஜேந்திரன் மற்றும் புனிதாவை தனது கால் அடியில் நிறுத்தி பழி வாங்குவதோடு ஸ்ரீ தன்னிடம் பழக முயற்சி செய்வது உண்மையில் தன்னை பிடித்து இருப்பதாலா அல்லது அவர்கள் சொன்னபடி கேட்டு நடிக்கிறாளா என்பதை தெரிந்து கொள்ள இதை சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான்..... அதனால் வீட்டிற்குச் வந்த உடன் ஸ்ரீயை அறைக்கு அழைத்தான்.... இவ்வளவு நாட்களில் தன்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சுற்றியவன் முதல் முறையாக தன்னை அறைக்கு அழைக்கவும் பலவித கனவுகளோடு உள்ளே நுழைந்தவளிடம் ராஜேந்திரன் மற்றும் புனிதாவை பற்றி பேசிய ரஞ்சன் "நீ வேணா உன் சித்தி சித்தப்பாவை கூட்டிட்டு வந்து இங்கே தங்க வச்சுக்கோ.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல... பாவம் நடுரோட்டில் நடந்து போயிட்டு இருந்தாங்க...." என்று கூறிவிட்டு ஸ்ரீயின் முகத்தை உற்று கவனித்தான்..
ஸ்ரீயும் தன் கணவனின் முகத்தை கூர்ந்து கவனித்து விட்டு "நீங்க சொல்லி நான் செய்யாமவ் இருப்பேனா.... எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க.... நான் போய் கூட்டிட்டு வரேன்...." என்று கூறினாள்....
ஸ்ரீயின் பதிலில் ஆத்திரம் அடைந்த ரஞ்சன் பல்லை கடித்துக் கொண்டு அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த இடத்தை பற்றி கூறினான்....
கைமுட்டி இறுகி முகம் சிவந்து தனது கோபத்தை வெளி காட்ட முடியாமல் ரஞ்சன் போராட அதை கண்டு கொள்ளாமல் டிரைவரிடம் கரை எடுக்கச் சொல்லி ராஜேந்திரன் மற்றும் புனித இருக்கும் இடம் சென்று சேர்ந்தால் ஸ்ரீ..... அவர்களிடம் என்ன பேசினாலோ அவர்களை கையோடு அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்தாள்....
வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் வீட்டிற்கு அருகில் மோட்டார் ரூம் போல் இருந்த ஒரு சிறு அறையில் அவர்களை தங்க வைத்தவள் புனிதாவிற்கு தோட்ட வேலையும் ராஜேந்திரனுக்கு அங்கிருந்த விலங்குகளை பார்த்துக் கொள்ளும் வேலையும் கொடுத்தாள்.....
மூன்று வேளை சாப்பாடு மட்டுமே போடுவதாக கூறி கூட்டி வந்ததால் சம்பளத்தை பற்றி எதுவும் கூறாமல் உங்களுக்கு சம்பளமே கிடையாது என்பதைப் போல கூறி இருந்தாள்...
தினமும் விலங்குகளை பராமரிப்பதும் தோட்டத்தை பார்த்துக் கொள்வதும் இருவருக்கமான வேலைகள் என்று கூறியவள் அவர்களை கீழே இருக்க சொல்லிவிட்டு மேலே செல்ல போக அவளை நிறுத்திய இருவரும் பசிக்கிறது என்று சொல்ல அதை கண்டுகொள்ளாதவள் போல மேலே செல்ல நினைத்த ஸ்ரீ மனம் கேட்காததால் வீட்டில் இருந்த பழைய சாதத்தை அவர்களுக்கு கொடுக்க சொல்லி தாமரையிடம் கூறிவிட்டு தனது அறை நோக்கி சென்றாள்.....
உயிர் : 22.
தனது அறைக்கு சென்ற ஸ்ரீயை வரவேற்றது என்னவோ ரஞ்சனின் கோப விழிகளை சுமந்த முகமும் இறுகிய தோற்றமும் தான்.....
பால்கனி கம்பியை பற்றியபடி ரஞ்சன் நின்ற கோலத்திலேயே அவனது கோபத்தை புரிந்து கொண்ட ஸ்ரீ இப்போது தான் எது சொன்னாலும் பேசினாலும் தவறாக தான் அவனுக்கு தெரியும் என்று எதுவும் சொல்லாமல் வந்து கட்டிலில் அமர்ந்தாள்.....
ஸ்ரீ அறைக்குள் ரஞ்சனும் பால்கனி கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து "சோ எல்லாமே நடிப்பு தான் இல்ல..." என்று இறுகிய குரலில் ஸ்ரீயிடம் கேட்டான் ரஞ்சன்....
கணவனின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவனையே கூர்ந்து கவனித்து அவன் விழிகளோடு தனது விழிகளை கலக்க விட்ட ஸ்ரீ "என் கண்ணோ முகமோ நடிக்கிற மாதிரி உங்களுக்கு தெரிஞ்சா... நீங்க என்ன முடிவுக்கு வரீங்களோ... வாங்க... நான் என்னைக்குமே உங்ககிட்ட நடிச்சது இல்லை ரஞ்சன்.... கோபமா இருந்தாலும் வருத்தமா இருந்தாலும் ஏன் அருவருப்பா இருந்தாலும் கூட என் கண்களும் முகமாக உங்களுக்கு காட்டிக் கொடுத்துரும்... இப்போ என் கண்களிலும் முகத்திலும் உங்களுக்கான காதல் தெரியலை.. அப்படின்னா ஒன்னு நீங்க மனசையும் கண்ணையும் மூடிகிட்டு என்னை பாக்கணும்... இல்ல உங்களோட பழி வெறி என் காதலை உங்க கண்ணில் காட்டாமல் மறைச்சு இருக்கணும்..." என்று அமைதியாக பதிலளித்தவள் பெட்டில் படுத்துக் கொண்டாள்....
தான் இங்கு அமைதி இல்லாமல் இருக்க ஸ்ரீயோ அமைதியாக கட்டிலில் படுத்து கண்களை மூடவும் அதை பார்த்து அவள் அருகில் சென்று படுத்தவனு அவளை இறுக்கமாக அணைத்து "இத்தனை நாளா பொண்டாட்டிக்கான எல்லா கடமையையும் சரியா செஞ்ச ... ஆனா கட்டிலில் பொண்டாட்டி செய்யும் முக்கியமான கடமையை இதுவரைக்கும் நீ செய்யலை.. இன்னைக்கு அந்த கடமையை செய்...." என்று ஒருவித ஏளனம் கலந்த குரலில் கூறினான் ரஞ்சன்.....
மனம் முழுக்க காதலை வைத்துக் கொண்டு வீம்புக்காக தன்னிடம் பேசிய கணவனை ஒதுக்க மனம் வராமல் அவனுக்கு தற்போது தான் தேவை என்பதை புரிந்து கொண்டு அவனை பார்த்து மெல்ல புன்னகை புரிந்தவள் "காதலாக அணைச்சாலும் கணவனாக அணைச்சாலும் ஏன் கடமைக்காக அணைத்தாலும் இப்படி எதுவாக இருந்தாலும் நான் உங்களுக்கு தான் சொந்தம்.... நீங்க வேணா கடமையா என்கூட இருங்க... நான் காதலோடு உங்க கூட இருப்பேன்..." என்று கூறியவள் அவன் முதுகில் தனது கையை படர விட்டாள்....
ஸ்ரீ தன்னை அணைத்துக் கொள்ளவும் ஒரு நொடி தடுமாறிய ரஞ்சன் பிறகு முன்பை விட இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான்..... போகப்போக அவன் அணைப்பு இன்னும் இறுகவும் ஸ்ரீக்கு வலி எடுக்க ஆரம்பித்தது.... அவளோ வலியை பொறுத்துக் கொண்டு அவன் அணைப்பை தாங்கினாள்......
சில நொடிகளில் தன்
அணைப்பில் இருந்து அவளை விளக்கியவன் அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பி தனது முகத்தை பார்க்க வைத்து அவள் இதழில் தன் இதழை பதித்தான்....
முன்பு மென்மையாக இருந்த இதழ் முத்தம் இன்று வன்மையாகி அவள் இதழில் காயம் ஏற்படும் அளவுக்கு நீண்டது... ஸ்ரீயின் இதழை மென்று தின்று தீர்க்க முடிவெடுத்தவன் போல மீண்டும் மீண்டும் அவள் இதழை நாடினான்.....
மூச்சுக்காக மட்டும் சில நொடிகள் அவள் இதழை விடுவிப்பவன் மீண்டும் மீண்டும் அவள் இதழை நாடி இதழில் அவள் ரத்தத்தின் சுவையை அறிந்த பின்னரே கழுத்தில் முகத்தை புதைத்தான்....
கழுத்தில் இருக்கும் முந்தானை அவனது செயல்களுக்கு தடையாக இருக்க கோபத்தில் முந்தாணையை உருவ போக அந்தோ பரிதாபம் அவளது ப்ளவுஸூம் சேர்ந்து அவன் கைகளில் சிக்க தான் இழுத்தும் வராத முந்தானையை சற்று பலமாக இழுக்க பிளவுஸ் கிழிந்து முந்தானையோடு ரஞ்சனின் கைகளுக்கு சென்று விட்டது....
கைகளில் இருந்த ஆடையை கீழே போட்டவன் உள்ளாடையுடன் படுத்து இருந்தவளிடம் மோகம் கொண்டு அவள் மார்பில் முகம் புதைத்தான்....
ஸ்ரீயோ தன்னவனின் தீண்டிலில் கரைந்தாலும் முதல் முறை என்பதால் சற்று பயத்துடனும் லைட் எரிவதால் வெட்கத்துடன் கண்களை மூடி கொண்டாளே தவிர மறந்தும் ரஞ்சனை விலக்கவில்லை.
யார் மீதோ இருக்கும் கோபத்தை மனைவியின் மீது காட்டுகிறோம் என்று புரியாமல் புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ரஞ்சன் இல்லாததால் காதலோடு நடத்த வேண்டிய தாம்பத்திய பாடத்தை கோபத்தோடு தன்னவளுக்கு பயிற்றுவிக்க ஆரம்பித்தான்....
ஸ்ரீயோ தன்னவனின் கோபத்திற்கு வடிகாலாக தனது உடலை கொடுத்து விட்டு அவனது கோபத்தை குறைக்க முற்பட்டாள்..... ஆனாலும் சில இடங்களில் அவளால் நிலை கொள்ள முடியாமல் வலி எடுத்து விட ஆஆ... என்று அலறி விட்டாள்.... சன்னமாக அவள் அலறிய சத்தம் ரஞ்சனின் காதுகளில் விழ அதன் பிறகு வன்மையை விடுத்து சற்று மென்மையாக அவளை கையாண்டவன் தன்னை முழுதாக அவளுக்குள் செலுத்தி ஸ்ரீயின் ரஞ்சனாக மாறினான்......
ஈருடலை ஓருடலாக இணைத்த ரஞ்சன் கூடல் முடிந்ததும் அவளை விட்டு விலகியவன் படுக்கையை விட்டு எழ மனம் இல்லாமல் ஸ்ரீயை விலக்கவும் மனம் இல்லாமல் தன் கை வளைவில் அவளை கொண்டு வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு "உன் சித்தி சித்தப்பனுக்கு சோறு போடுறதுக்கு இது கூட நீ செய்யலன்னா எப்படி...." என்று கேட்டு சற்று முன் நடந்த கூடலை உன் சித்தி சித்தப்பாக்கு சாப்பாடு போடுவதால் உன் உடலை எடுத்து கொண்டேன் என்று சொல்லாமல் சொன்னவனை கண்களில் நீருடன் பார்த்த ஸ்ரீ "யார் மேலயோ இருக்கும் கோவத்தை என் மேல் ஏன் காட்டுற ரஞ்சா.... அவங்க கெட்டவங்க தான்... இல்லன்னு சொல்லல.. ஆனா அவங்களுக்கான தண்டனை வெறும் சொத்த பிடுங்கயதா மட்டும் இருக்கக் கூடாது... அதுக்காக தான் அவங்களை இங்கே கூட்டிட்டு வந்தேன்..... இனி அவங்களோட ஒவ்வொரு வேளை சாப்பாடும் வெயில்லயும் வெட்ட வெளியிலும் வேலை பார்த்தால் தான்... அந்த மூணு வேளை சோறும் கிடைக்கும்.... இப்ப கூட அவங்களுக்கு பழைய சோறை போட சொல்லிட்டு தான் வந்தேன்... உங்களுக்காக பழிவாங்க தான் நான் இப்படி எல்லாம் பண்ணினேன்.... இன்னும் சொல்லப் போனால் நீங்க வெளியில் போகும் போதும் வரும் போதும் அவங்க படும் கஷ்டத்தை நீங்க பாக்கணும்... அப்போ தான் உங்க மனசு காயம் கொஞ்சமாவது ஆறும் அப்படின்னு நினைச்சு நான் பண்ணதுக்கு இந்த உடம்பை கூழியா பேசிட்டு இருக்கீங்க... பரவால்ல ரஞ்சன்... உங்களுக்கு சொந்தமானவ நான்..... அவங்க இருக்கிற வரைக்கும் அவங்களோட மூணு வேலை சாப்பாட்டுக்காக நான் இந்த உடம்ப விக்க மாட்டேன்... இனி நமக்குள்ள இப்படி நடக்கணும் னா நீங்க எனக்கு காசு கொடுத்துடுங்க... நான் என் புருஷனுக்கு வேசியாவே இருந்துட்டு போறேன்.... ஆனா அது உங்களுக்காக மட்டும் தான்... நீங்க குடுக்குற காசுல நான் என்ன வேணா பண்ணுவேன்... ஆனா அவங்களுக்கு சாப்பாடு போட மாட்டேன்..." என்று கூறியவள் உடைகளை பொறுக்கிக் கொண்டு குளியலறை நோக்கி செல்லப் போனவள் திரும்பி வந்து கையை நீட்டினாள்.....
புருவத்தை நீவியபடி என்னவென்று கண்களால் கேட்டவனிடம் "காசு கொடுங்க...' என்று கேட்டாள்....
தான் சொல்லும் போது ஈசியாக தெரிந்த ஒரு விஷயம் அவள் காசு கேட்கும் போது மிகவும் தவறாக தெரிந்தது.....
கட்டிய கணவனிடம் மனைவி கூடலுக்கான விலையை கேட்பது நினைத்து பார்க்கவே கொடுமையாக தெரிய அதுவே தனது வாழ்வில் நடக்கிறதே... என்று நினைத்து மனதுக்குள் வருந்தியவன் யாரையோ பழிவாங்க தன்னவளை வருத்தி விட்டதை நினைத்து வேதனையுடன் ஸ்ரீயை பார்த்தான்....
ஸ்ரீயோ கண்களில் எந்த உணர்வையும் காட்டாமல் நிர்மலான முகத்துடன் கையை நீட்டியபடி நின்றிருந்தாள்...
கணவனின் முகத்தில் வேதனையை கண்டதும் கையை மடக்கியவள் "இது தாங்க நீங்க. .. நான் வருத்தப்பட்டால் உங்களால் அதை தாங்க முடியாது.... உங்களோட காதல நீங்க உணர்ந்தாலும் எங்கிட்ட காட்டமாட்டீங்க... ஆனால் நீங்க சொல்லாமலே உங்க காதலை நான் உணர்ந்துட்டேன்.... உங்க மனசில் நான் இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும்... ஆனா அவங்க மேல இருக்கிற கோபம் உங்க கண்ணை மறைச்சு என்னை பழி வாங்குது... அவங்களை பழி வாங்குவதா நினைச்சு என்னையும் கஷ்டப்படுத்துறீங்க... அவங்களை நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கங்க.. இங்கே தான் இருப்பாங்க.... உங்க கண்ணு முன்னாடி கஷ்டப்படுவாங்க. .. ஆனா என்ன கஷ்டப்படுத்துறதை நினைச்சு நீங்க வேதனை படாதீங்க..." என்று கூறி விட்டு செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டவன் "சாரிடி..." என்றான்....
" கேட்கலை...."
"சாரி டி...."
"கேட்கலை.."
"ஐ லவ் யூடி.."
"ம்.. மீ டூ ரஞ்சா...."
"இது மட்டும் கேட்குதா..'
"ஆமா... எனக்கு தேவையான வேர்ட்ஸ் மட்டும் தான் கேட்கும்.... தேவை இல்லாத குப்பை எல்லாம் கேட்காது.." என்றவள் கையில் இருந்த உடைகளுடன் குளியலறைக்கு செல்ல போக தன் அணைப்பை இறுக்கி "என்ன அவசரம் அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம்..." என்றவன் கண்களில் காலும் மோகமும் தாபமும் அப்பட்டமாக தெரிய வெட்கத்தில் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் ப்ரியரஞ்சனின் சாதனாஸ்ரீ அலைஸ் சித்தரஞ்சனின் நித்யஸ்ரீ....
அன்று முழுவதும் ஸ்ரீயை விட்டு விலகாமல் படுக்கையில் அவளை மீண்டும் மீண்டும் நாடியவன் விடியும் தருவாயில் ஸ்ரீயிடம் களைப்பையும் சோர்வையும் உணர்ந்து தன் மார்பில் அவளை சாய்த்து கொண்டு நிம்மதியாக கண்களை மூடினான்....
ஸ்ரீ அறையில் நன்றாக உறங்கி கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் விடாமல் கேட்கவும் உறக்கம் கலைந்தவள் "ப்ச்... ரஞ்சா யாருன்னு பாருங்க.." என்று கண்களை மூடி கொண்டே கூறினாள்....
ரஞ்சன் பதில் ஏதும் கூறாமல் இருக்க கதவு தட்டும் சத்தம் வேறு ஸ்ரீயின் உறக்கத்திற்கு தொந்தரவாக இருக்கவும் 'ப்ச்.." என்று உச் கொட்டியபடி கதவை திறந்தவளை பார்க்க முடியாமல் தாமரை முகத்தை வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டு "பாப்பா இது சாப்பாடு... குளித்து சாப்பிட்டு விட்டு தூங்க சொல்லி ரஞ்சன் தம்பி சொல்லுச்சு..." என்று கூறியவர் ஒரு படி மட்டும் இறங்கி விட்டு ஏதோ நினைவு வந்தவராக அவளை திரும்பியும் பார்க்காமல் "குளிக்கலைன்னாலும் பரவாயில்லை... பிரஸ் பண்ணிட்டு சாப்பிட்டு தூங்க சொல்லி தம்பி சொல்லுச்சு பாப்பா.. ஒருவேளை உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் பிருந்தா பாப்பாவை வர சொல்லி ஊசி போட்டுக்க சொன்னார்... நீ என்ன பாப்பா சொல்ற... டாக்டர் பாப்பாவை வர சொல்லவா..." என்று கேட்டார்....
ஸ்ரீயோ அவர் என்ன கேட்டார்... என்ன பேசினார்... என்று புரியாமல் தூக்க கலக்கத்தில் "ம்..." கொட்டி வைத்தாள்...
"இந்த காலத்து புள்ளைங்களுக்கு எல்லாத்துலயும் அவசரமும் ஆவேசமும் தான்... காயம் படுற அளவுக்கு இப்புடி பாப்பாவை படுத்தி இருக்கே இந்த ரஞ்சன் தம்பி... முகம் முழுக்க சிவந்து போய் கிடக்கு... பாவம் ட்ரஸ் கூட போட முடியாமல் தம்பி பனியனை போட்டு இருக்கு பாப்பா... நிதானமா பிள்ளையை நடத்தாமல் எப்போ பார்த்தாலும் அடுச்சு திட்டி வைக்க வேண்டியது... இப்போ நகத்தில் வேற பிராண்டி வச்சு இருக்காரு... என்ன பிள்ளையோ..." என்று திட்டியபடி நடந்தவர் ஹாலில் நடந்து வந்த ரஞ்சனை கண்டதும் தலையை குனிந்து கொண்டு "தம்பி உங்க கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கோங்க... சாதனா பாப்பா முகம் முழுக்க அழுதழுது சிவந்து போய் இருக்கு... நீங்க சொன்ன மாதிரி டாக்டர் பாப்பாவை வர சொல்லவான்னு கேட்டதுக்கு அரை மயக்கத்தில் ம்ம்னு சொல்லிட்டு உள்ளே போய்டுச்சு... ட்ரஸ் கூட போட முடியாத அளவுக்கு பொண்டாட்டியை அடிக்கிறது ரொம்ப தப்பு தம்பி... அதிகமா பேசுறேன்னு உங்களுக்கு தோணினால் என்னை மன்னிச்சுடுங்க தம்பி..." என்ற தாமரை கிச்சனுக்குள் சென்று விட ரஞ்சனோ அடக்க முடியாத சிரிப்பில் வயிறு குலுங்க சிரித்து கொண்டிருந்தான்....
தான் பிருந்தாவை வர சொல்லியதையும் ஸ்ரீ அரைகுறை ஆடையுடன் வந்து கதவு திறந்து இருப்பாள் போல என்று புரிந்து கொண்ட ரஞ்சன் அதையும் இணைத்து போனமுறை நடந்ததை போல அவளுக்கு ரஞ்சனால் ஏதோ ஹெல்த் ப்ராப்ளம் என்று நினைத்து சரியாக தவறாக புரிந்து கொண்டு பேசி விட்டு செல்லும் தாமரையை பார்த்து தான் ப்ரியரஞ்சன் அப்படி வாய் விட்டு சிரித்தான்...
வயிறு வலிக்கும் அளவு சிரிக்கும் ரஞ்சனை வாஞ்சையாக பார்த்த தாமரை கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டார்....
நினைவு தெரிந்த நாளில் இருந்து சுயம்புவாக தன்னை தானே மெருகேற்றி வளர்ந்த ரஞ்சன் நாளடைவில் சிரிப்பை மறந்து முற்றிலும் இறுகி போனான்....
தன் வீட்டு செல்ல பிராணிகளிடம் பழகும் போது மட்டுமே இயல்பாக புன்னகை புரிபவன் அதுவும் அவன் மனதில் இருந்து வந்த உள்ளார்ந்த புன்னகையாக இல்லாமல் உதட்டளவில் மட்டுமே இருக்கும்... அப்படிப்பட்ட ரஞ்சன் பல வருடங்களுக்கு பிறகு கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரிப்பதை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார் தாமரை..
தாமரை அழுவதை கண்டு தன் சிரிப்பை நிறுத்திய ரஞ்சன் "ஐயோ அக்கா... இது நீங்க நினைக்கிற மாதிரி ப்ராப்ளம் இல்ல...அது வந்து..." என்று இழுத்தவன் அவரை பார்க்காமல் சுவற்றின் பக்கம் திரும்பி "வீ ஹேவ் லவ் மேக்கிங் அக்கா.." என்றான்....
"தம்பி ஆயிரம் காரணம் இருந்தாலும் பொண்டாட்டியை அடிக்கிறது தப்பு தம்பி... அது என்ன லவ்ல அடிக்கிறது... லவ்னா
காதல் தானே... காதல் இருந்தால் பாசமா ஆசையா பேசுவாங்க... நீங்க இப்படி அடுச்சு வச்சு இருக்கீங்க...' என்றார் தாமரை...
"அக்கா அது லவ் மேக்கிங்.."
"அப்படின்னா ஏதாவது நோயா தம்பி.."
"சுத்தம்... உங்களுக்கு இங்கிலீஸ் தெரியாதா அக்கா..."
"தெரியுமே.. யார் சொன்னால் தெரியாதுன்னு... அந்த தோட்டக்காரி சொன்னாளா தம்பி... அது உண்மை இல்ல.. எனக்கும் இங்குலீஸ் தெரியும்..."
"சரிக்கா.. அதை அப்புறம் பேசலாம்... நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..." என்றவன் தாமரையை பார்க்க முடியாமல் சுவரை பார்த்தபடி தலையை கோதி கொண்டவன் முகம் வெட்கத்தை சுமந்து இருந்தது....
ஆண்களின் வெட்கம் கூட அழகு தானோ..
தலையை கோதி கொண்டு முகம் சிவந்து நின்ற ரஞ்சனை கண்டு ஆஆஆ என்று வாய் பிளந்து நின்றாள் வீட்டுக்குள் வந்த பிருந்தா....
தாமரை பிருந்தாவுக்கு கால் செய்து ஸ்ரீக்கு உடல் நலமில்லை என்று கூறி வர சொன்னார்...
பிருந்தாவும் ரஞ்சனை திட்டியபடி "இந்த தடவை என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலையே.. அடிச்சு வச்சுட்டானா... இல்ல... போனமுறை கீழே தள்ளி விட்டு மண்டையை உடைச்ச மாதிரி இந்த தடவை கீழே தள்ளி கை காலை உடைச்சுட்டானான்னு தெரியலையே...." என்று வரும் வழி எல்லாம் அவனை திட்டிக் கொண்டே ரஞ்சன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்..
வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் உள்ளே நுழையும் போது கண்டது என்னவோ வெட்கத்தில் முகம் சிவந்து சுவற்றை பார்த்தபடி பேச தடுமாறி கொண்டு இருந்த ரஞ்சனை தான்....
தன் நண்பனின் வெட்க முகம் கண்டு அதிர்ந்து நின்றிருந்த பிருந்தா அவன் பேச தடுமாறி அடுத்தடுத்து கூறிய வார்த்தைகளில் தர்ம சங்கடத்தோடு தான் நின்று இருந்தாள்....
ஏனோ ரஞ்சன் கூறியதை கேட்டவளின் மனதில் தீரனின் முகம் தோன்றி மறைய தனக்குள் ஏற்பட்டது சிறு சலனம் அல்ல தீரன் மீதான காதல் என்பதை சந்தேமின்றி உணர்ந்து கொண்டவளின் முகம் 1000வாட்ஸ் வெளிச்சத்தை சிந்தியது...
"அது வந்து அக்கா..." என்று இழுத்தவன் தலையை கோதிக் கொண்டு சுவற்றைப் பார்த்தபடி "நேற்று அவளுக்கும்... எனக்கும்... எனக்கும்... அவளுக்கும்... எல்லாம்.... க்கும்.. அவளை நான்... என் பொண்டாட்டியாக்கிகிட்டேன்.... அதனால தான் கொஞ்சம் சோர்ந்து பொய் இருக்கா..." என்று தட்டு தடுமாறி கூறியவன் அடுத்த நிமிடம் தனது அறை நோக்கி சென்று விட்டான்....
"ஐயோ இவளால் தாமரை அக்காகிட்ட என் மானம் போச்சு.... இனி அவங்க எங்கிட்ட பேசக்கூட யோசிப்பாங்க..." என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் அறைக்குள் நுழைந்து கதவை தள்ளிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தவளை நோக்கி நடந்தான்.....
ஸ்ரீயோ விடிய விடிய தன்னவனுடன் கூடி இருந்த களப்பில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்... அவளுக்காக தாமரைக் கொண்டு வந்து தந்த சாப்பாடு ஆறிக் கொண்டிருக்க இவளோ இன்னும் பல்லை கூட துலக்காமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.. ..
மதியம் மூன்று மணி ஆகியும் இன்னும் விழிக்காமல் உறங்குபவளின் அருகில் அமர்ந்து தன் மனைவியை ரசித்தவன் அவள் முகத்தில் விழுந்த கூந்தல் சுருளை எடுத்து காதின் ஓரம் சொருகி விட்டு நெற்றியில் மெல்லிய முத்தம் பதித்து "லவ் யூடி... என் செல்ல பூனைக்குட்டி..." என்றான்....
ஸ்ரீயோ அவன் செய்கைகளை உணராமல் அவன் கூறிய வார்த்தைகளை காதில் வாங்கி கொண்டு தூக்கத்தில் அனிச்சை செயலாக "மீ டூ என் செல்ல ராட்சச ரஞ்சா...." என்றிருந்தாள் ...
தூங்கி கொண்டிருந்தவளின் பதிலில் புன்னகையோடு ஸ்ரீயின் முகத்தை பார்க்க அவளோ இன்னும் தூங்கி கொண்டு தான் இருந்தாள்...
இவ்வளவு தூக்கத்திலும் என் பேச்சை உணர்ந்து பதில் சொல்றியே யூ ஆர் சோ ஸ்வீட் ஸ்ரீ... உனக்காக இந்த பிறவி மட்டும் இல்ல.. இன்னும் எத்தனை பிறவி வேணாலும் எடுப்பேன்... என்றவன் ஸ்ரீ தூக்கத்தில் திரும்பி படுக்கவும் அவளை போர்த்தி இருந்த பெட்ஷீட் சற்று விலக அவள் கழுத்தில் இருந்த காயமும் அவள் அணிந்திருந்த டிசர்ட் நன்றாக இறங்கி அவளின் முன்னழகை வெளிச்சம் போட்டு காட்ட அங்கு தனது பற்தடங்களையும் சிறு சிறு காயங்களையும் கண்டவன் "சாரிடி.. ஏதோ கோபத்தில் கொஞ்சம் மோசமா நடந்துகிட்டேன்... இனி உன்னை கஷ்டபடுத்துற மாதிரி எதுவும் பண்ண மாட்டேன்..." என்றவன் மேலும் சற்று நேரம் தன்னவளின் அருகில் அமர்ந்து அவள் மேனி எங்கும் வருடி கொடுத்தான்...
ஸ்ரீக்கு இருந்த உடல் வலிக்கு ரஞ்சனின் வருடல் சுகமாக இருக்க இன்னும் வாகாக திரும்பி படுத்து ரஞ்சனை இடுப்போடு கட்டி கொண்டாள்.....
"ச்ச. . நைட் ரொம்ப படுத்திட்டேன் போல... அதான் இவ்வளவு சோர்ந்து போய்ட்டா..." என்றவனை பார்த்த அவனது மனசாட்சி "இவ்வளவு அழகா இந்த புள்ளை இருந்தால் யாரால் தான் தள்ளி வச்சு ரசிக்க முடியும் ரஞ்சா..." என்றது...
"அதுவும் சரிதான்... தேவதை மாதிரி இருப்பவளை இத்தனை நாளா கண்டுக்காமல் இருந்ததே பெருசு... இனி இவளை விடும் எண்ணம் எனக்கு இல்லை...." என்று அவள் முகவடிவை அளந்தவன்
சற்று நேரத்தில் அவள் காலையில் இருந்து சாப்பிடாமல் இருப்பதை நினைத்தவன் அவள் பசி உணர்ந்து தூங்கி கொண்டு இருந்தவளை தூக்கி தன் கைகளில் ஏந்தி கொண்டவன் பாத்ரூமை நோக்கி சென்றான்.....
பாத்ரூமிலும் தூங்கி வழிந்தவளை கண்டு ஒரு குறும்பு சிரிப்புடன் ஷவரை திருகியவன் அவள் முகத்தில் தண்ணீர் விழவும் சிறு சிரிப்புடன் அவளை பார்க்க ஸ்ரீயோ "மழை மழை... வீட்டுக்குள்ள மழை பெய்யுது.. ரஞ்சன் வாங்க வெளியே போகலாம்..." என்று ரஞ்சனின் கையில் இருந்தபடி துள்ளிவிழ பார்க்க இந்த திடீர் அசைவில் மேனேஜ் பண்ண முடியாமல் ரஞ்சனும் அவளுடன் சேர்ந்து கீழே விழ போக கடைசி நொடியில் நிதானித்தவன் அவளுடன் அங்கு இருந்த பாத் டப்பில் விழுந்தான்...
பாத்டப்பில் இருந்த நீரானது இவர்கள் இருவரும் விழுந்த வேகத்தில் பாதி வெளியேறி இருக்க மீதி இருந்த நீரில் இருவரும் மூழ்க ரஞ்சன் உடனே மேலே வந்து விட்டான்... ஆனால் ஸ்ரீயோ உள்ளுக்குள் மூழ்கியபடி இருக்க "இவளை.." என்று அவளை மேலே இழுத்தவன் "சுனாமி சுனாமி ரஞ்சன் சுனாமி காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..." என்று கத்தியவளின் ஈர இதழ்கள் அவனை வா... என்று அழைப்பு விடுக்க அடுத்த நொடி அவள் இதழை முழுவதுமாக தன் இதழுக்குள் புதைத்து கொண்டான் ரஞ்சன்...
சற்று நேரம் கழித்து ஸ்ரீக்கு மூச்செடுக்க அவள் இதழை விடுவித்தவன் "ஐயோ நான் சாக போறேன் போலவே... ரஞ்சா.. ரஞ்சா... ஐ லவ் யூடா... ஐ லவ் யூடா.." என்று கண்ணை மூடியபடி கத்தியவளை கண்டு சிரிப்பு வர "அடியே கண்ணை திறந்து பாருடி... இங்கே சுனாமியும் இல்ல.. இது கடலும் இல்ல... நாம இப்போ பாத்ரூமில் தான் இருக்கோம்... முதல்ல கண்ணை திறந்து பாரு..." என்றான்.... "பாத்ரூமா..." என்ற படி கண்ணை திறந்தவள் சுற்றி முற்றி பார்த்து விட்டு "ஆமா பாத்ரூம்..." என்றவள் அருகில் நின்றிருந்த ரஞ்சனை கண்டு அசடு வழிந்தாள்.....
உயிர் : 24
ஸ்ரீயின் அசடு வழிந்த முகத்தை கண்டு அதற்கு மேல் அவளை விட்டு விலகி இருக்க முடியாமல் தன் கை வளைவில் கொண்டு வந்தவன் அவள் முகம் முழுவதும் முத்தங்களால் நிறைத்து விட்டு தன் நெஞ்சில் அவள் முகத்தை புதைத்து கொண்டான்...
அப்போது தான் நினைவு வந்தவனாக "அச்சோ சாரிடி... மறந்துட்டேன்.... உனக்கு ரொம்ப பசிக்கும்னு தான் குளிக்க வைக்க தூக்கிட்டு வந்தேன்... கடைசியில் அதை மறந்துட்டு என்னென்னவோ பண்ணிட்டு இருக்கேன் பாரு... சரி சரி வா குளிக்கலாம்..." என்று பாத்டப்பை விட்டு எழுந்தவன் அவளை தூக்கி மீண்டும் ஷவர் அடியில் நிறுத்தினான்...
"ப்ச்... என்ன பண்ற ரஞ்சா... முதல்ல நீ வெளியே போ.. நான் குளிச்சிட்டு வர்றேன்..." என்றவளை கண்டு கொள்ளாமல் உடைகளை கழற்ற ஆரம்பித்தான்...
சிறு டவல் ஒன்றை மட்டும் இடுப்பில் விட்டு வைத்தவன் ஸ்ரீயை பார்க்க அவளோ வாயை பிளந்து கொண்டு ரஞ்சனை பார்த்திருந்தாள்...
"ச்சீ... போ ரஞ்சா.. எனக்கு வெட்கமா இருக்கு.... நீ முதல்ல குளிச்சிட்டு கிளம்பு... நான் அப்புறம் குளிச்சிட்டு வர்றேன்..." என்றவளை கண்டு கொள்ளாமல் அவள் ஆடையில் கை வைத்தவனை விட்டு விலக முயன்ற ஸ்ரீ சுவற்றில் முட்டி கொண்டாள்....
ஸ்ரீயை அந்த சுவற்றில் சாய்த்து கொண்டே அவள் ஆடைகளை களைந்தவன் அவளை சீண்டி தீண்டி இருவரும் குளித்து வெளியே வர மேலும் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.....
ஸ்ரீயோ ஒரு பூந்துவாளையை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்து தனது வாட்ரூப்பில் புடவையைத் தேடிக் கொண்டிருந்தாள்..
தன் மனைவியின் மேல் ஒரு பார்வையை வைத்துக்கொண்டு தனக்கான உடையை எடுத்து அணிந்தவன் அவளை நோக்கி சென்றான்...
கணவனை அருகில் கண்டதும் ஒரு வெட்க சிரிப்புடன் அவனை பார்த்து விட்டு மீண்டும் வார்ட் ரோப்பில் தலையை விட பார்க்க அவள் தலையை தன்னை நோக்கி ஒரு கையால் திருப்பி அவன் மறு கையில் இருந்த உடையை அவளிடம் கொடுத்து "இதை கட்டிட்டு வா..." என்றான் ரஞ்சன்....
தன்னவன் கொடுத்த உடையை எடுத்து பிரித்துப் பார்த்தவள் அந்த உடையையும் ரஞ்சனையும் மாறி மாறி பார்த்தாள்...
ஸ்ரீக்கு பாவாடை தாவணியை போன மாதம் வாங்கி வைத்தவன் அதுவும் அவனுக்கு பிடித்த மாம்பழ வண்ணத்தில் அரக்கு பார்டரில் வாங்கி வைத்தவன் தன்னவள் மீதான கோபத்தில் அவளிடம் கொடுக்காமல் இருந்தான்...
ரஞ்சனுக்கு போன ஜென்ம நினைவுகள் வந்த பிறகு தன்னவளுக்காக முதல் முறை ரஞ்சன் வாங்கிய உடை தான் இந்த பாவாடை தாவணி...
மாலில் இந்த உடையை பார்த்த போது கல்லூரிக்கு ஸ்ரீ இதே வண்ணத்தில் பாவாடை தாவணி கட்டி வந்ததும் அவள் பார்க்காத போது அவளை ரசித்ததும் அவள் தன்னை நெருங்கிய போது அவளை கண்டு கொள்ளாமல் சீண்டி விளையாடியதும் நினைவு வந்தது....
இருவரும் இணைந்த பிறகு தன்னவளை இந்த உடை அணிய சொல்லி ரசிக்க வேண்டும் என்று நினைத்தவன் இன்று ஸ்ரீ உடையை தேடுவதை பார்த்ததும் இதை எடுத்து கொடுத்து அணிந்து வர சொன்னான்....
ஸ்ரீ பாவாடை தாவணியுடன் உடை மாற்றும் அறைக்குள் செல்ல அவள் வரும் வழியையே பார்த்த ரஞ்சன் தன்னவளின் வருகைக்காக காத்திருந்தான்....
சற்று நேரத்தில் பாவாடை தாவணியில் தேவதை என வந்தவளை விழி சிமிட்டாமல் பார்த்து வைத்தான் பிரியரஞ்சன்.....
தன்னவனின் காதல் பார்வையில் திருப்தியடைந்த ஸ்ரீ தானும் அவனுக்கு நிகரான காதல் பார்வையுடன் கண்ணாடி அருகே சென்று சிறு ஒப்பனைகளை செய்து கொள்ள ஆரம்பித்தாள்....
ஸ்ரீயின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டிருந்த ரஞ்சன் அருகில் இருந்த சாப்பாட்டை பார்த்து ஒரு பெருமூச்சுடன் அதை எடுத்து ஸ்ரீயிடம் கொடுக்க போனவன் சாப்பாடு ஆறி போய் இருக்கவும் "ஸ்ரீ வா கீழே போய் சாப்பிடலாம்...." என்றான்.....
"ஏன் இந்த சாப்பாட்டுக்கு என்ன ஆச்சு..."
"இது ஆறி போய் இருக்கு... நல்லாவே இல்ல...."
" பரவால்ல விடுங்க.... நான் சாப்பிடுவேன்.... எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல... இதையே சாப்பிட்டுக்கிறேன்...."
" ஒன்னும் தேவையில்லை... வா கீழ போலாம்...." என்று பிடிவாதமாக அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு கீழே சென்றான் ரஞ்சன்.....
தாமரை கிச்சனில் எதையோ செய்து கொண்டிருக்க அவரை அழைத்த ரஞ்சன் ஸ்ரீக்கு சாப்பாடு வைக்க சொன்னான்...... விதவிதமான சாப்பாடு சமைத்து இருந்த தாமரையும் கணவன் மனைவி இருவருக்குமே சாப்பாடு பரிமாற முதலில் எனக்கு வேண்டாம் என்று மறுத்த ரஞ்சன் ஸ்ரீயின் கோப பார்வையில் தானும் அவள் அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். ..
ரஞ்சன் சாப்பிட ஆரம்பித்த போது அங்கே ஸ்ரீயின் சித்தப்பா ராஜேந்திரன் "சாதனாம்மா..." என்று அழைத்து கொண்டே வந்து நின்றான்....
முன்னர் இதே சித்தப்பாவின் மீது கண்மூடித்தனமான அன்பை வைத்து இருந்த ஸ்ரீக்கு தேனாக இனித்த அழைப்பு தற்போது நாராசமாக ஒலித்தது....
ரஞ்சனோ யாரை கண்டால் கொலைவெறி கொள்வானோ அவனே தன் எதிரில் வந்து நின்றும் அவனை ஒன்றும் செய்ய முடியாத தன் நிலையை வெறுத்தவன் சாப்பிட ஆரம்பித்த தட்டில் கையை கழுவ போனான்...
இவ்வளவு சொத்து சுகம் இருந்த போதும் ஒருவேளை உணவை சாப்பிட முடியாமல் கை கழுவ போன ரஞ்சனின் செய்கையில் கோபம் எழ "கார்ட்ஸ்..." என்று கத்தி தன்னவனின் பாடிகார்ட்ஸை அழைத்தாள்....
எப்போதும் ஸ்ரீயின் பயந்த மென்மையான குரலை மட்டுமே கேட்டு பழக்கப்பட்ட ரஞ்சனும் அந்த வீட்டின் வேலைக்காரர்களும் ஸ்ரீயின் பெண்சிங்க கர்ஜனையில் அதிர்ந்து போய் செய்த வேலைகளை நிறுத்தி விட்டு ஸ்ரீயை பார்த்தனர்...
அடித்து பிடித்து அவசரமாக உள்ளே வந்த பாடிகார்ட்ஸை கோபமாக பார்த்த ஸ்ரீ "தோட்டக்காரனை எல்லாம் யாரை கேட்டு டைனிங் ஹால் வரைக்கும் வர விட்டீங்க... உங்களில் யாரு ஹெட்..." என்று கேட்டாள்....
"மேடம்... இவர் உங்க ரிலேடிவ்னு..."
"யூ இடியட்... ஒரு தோட்டக்காரன் என் ரிலேடிவா... அப்போ வாட்ச்மேன் மெய்ட்... இப்படி எல்லாரும் என் ரிலேடிவ்னு சொன்னால் உள்ளே விட்ருவியா.. இவனால என் ஹஸ்பண்ட் உயிருக்கு ஆபத்து இருக்கு... தெரியுமா.... தப்பி தவறி இன்னொரு முறை இந்தாள் கால் வீட்டுக்குள்ள வந்தால் அந்தாள் காலோடு சேர்த்து உன் காலையும்...." என்று கூறியவள் டைனிங் டேபிலில் இருந்த கத்தியால் பழத்தை வெட்டி காட்டி அதே கத்தியை அவனை நோக்கி வெட்டிடுவேன் என்று செய்கையில் கூறினாள்...
ப்ரியரஞ்சன் தன்னவளின் புதிய பரிமாணத்தில் கை கழுவ எடுத்த தண்ணீர் கையிலேயே இருக்க அதிர்ந்து போய் ஸ்ரீயை பார்த்து கொண்டிருந்தான்....
தன்னவனின் பார்வையை கண்ட ஸ்ரீ "என்ன இங்கே பார்வை... சாப்பிடுங்க..." என்று கோபமாக கூறினாள்...
தன்னவளின் உரிமையான பேச்சில் தனக்காக சித்தப்பனை அவமானப்படுத்திய ஸ்ரீக்கு மறுமொழி கூற முடியாமல் அனைத்து பக்கமும் தலையை ஆட்டி வைத்த ரஞ்சன் அவளை பார்வையால் சாப்பிட்டு கொண்டே சாப்பாட்டை எடுத்து வாய் வரை கொண்டு சென்றான்....
மெதுவாக அவன் சாப்பிட ஆரம்பிக்கவும் அவன் அருகில் இருந்த சாப்பாட்டு பிளேட்டை கையில் எடுத்த ஸ்ரீ தான் எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.....
தாமரை பார்க்க வீட்டில் வேலை செய்யும் அனைவரின் பார்வையும் இங்கே இருக்க ஸ்ரீ தனக்கு ஊட்டி விடுவதை கண்டு ரஞ்சனுக்கு சிறிது வெட்கம் ஏற்பட்டாலும் தன்னவளின் செய்கையில் தாயை கண்டவன் முழுவாயையும் திறந்து சாப்பாட்டை வாங்கிக் கொண்டான்...
தன்னவள் பசி அறிந்து தானும் அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான் ரஞ்சன்.... இவ்வாறு ஒருவருக்கொருவர் ஊட்டிக் விட்டு கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் தீரனும் பிருந்தாவும் உள்ளே வந்தார்கள்....
எப்போதும் தனித்தனியாக வரும் இருவரும் இன்று சேர்ந்து வருவதை பார்த்து புருவத்தை உயர்த்தி பார்த்த ரஞ்சன் இருவரையும் வரவேற்று அங்கிருந்த சோபாவில் அமர சொன்னான் ....
ரஞ்சனுக்கு கடைசி வாய் சாப்பாட்டை ஸ்ரீ ஊட்ட அதை பார்த்து விட்டு தீரன் பிருந்தாவை திரும்பி பார்த்தான்..
தீரனின் காதல் பார்வைகளை உணர்ந்திருந்தவளுக்கு இந்த ஏக்க பார்வை புதிதாக இருந்தது....
தீரனின் ஏக்க பார்வை பிருந்தாவை ஏதோ செய்ய அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் சுற்றிலும் வேடிக்கை பார்ப்பது போல பார்வையை திருப்பியவளுக்கு அங்கு சுவரில் இருந்த தாய் சேய் மாடர்ன் ஆர்ட் தீரனின் ஏக்கத்தை பிருந்தாவிற்கு புரிய வைத்தது....
அந்த மாடர்ன் ஆர்டில் குழந்தைக்கு தாய் உணவூட்டும் காட்சி தத்ரூபமாக வரைந்து வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.... கண்களில் பாசமிக தன் குழந்தையை பார்க்கும் தாயின் முகமும் தாயிடம் உரிமை கலந்த சலுகை கொஞ்சும் குழந்தையின் முகமும் உயிரோட்டத்துடன் காட்சி அளித்தனர்...
அந்த குழந்தையின் முகத்தில் பிருந்தாவிற்கு தீரன் முகம் மின்னி மறைந்தது.....
சட்டென்று தீரனை திரும்பி பார்த்த பிருந்தா. அவனின் ஏக்கப்பார்வையை இன்னும் மாற்றாமல் தன்னை பார்ப்பதை உணர்ந்து அவன் அருகில் சென்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றாள்....
தீரனை டைனிங் டேபிள் சேரில் அமர வைத்தவள் ஒரு பிளேட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து அவனிடம் கொடுத்தாள்.....
தீரன் ஒன்றும் சொல்லாமல் பிருந்தாவை பார்க்க "என்ன பாக்குற... ஊட்டி விடனுமா...." என்றாள்.....
"ம்ம்.." என்று மெல்ல தலையசைத்தான் தீரன்..
"கொஞ்ச நேரத்துக்கு மூன்னாடி ஸ்ரீ எவ்வளவு அழகா ரஞ்சனுக்கு ஊட்டி விட்டா... அது மாதிரி நான் உனக்கு ஊட்டி விடனும்னா நீ என் கழுத்தில் தாலி கட்டி இருக்கனும்டா இம்சை படிச்சவனே... அவங்க புருஷன் பொண்டாட்டி... அதனால அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டாங்க... ஆனால் நாம.... நீ யாரோ நான் யாரோ.... அப்படி இருக்கும் போது நான் எதுக்காக உனக்கு ஊட்டி விடனும்... நீ என்ன எனக்கு தாலி கட்டிய புருஷனா... இல்ல கூட பிறந்த அண்ணனா... இல்ல...." என்று கோபமாக கேட்டவளை முறைத்து பார்த்து தீரன் "தாலி கட்டி கூட வாழ போறவள்... என் வருங்கால பொண்டாட்டி.. இப்போ ஊட்டி விட முயுமா...."
"முடியாது போடா..."
"அப்போ ஊட்டி விட மாட்டியா டாக்டர்..." என்று ஏக்கத்தை தன் குரலில் தேக்கி கேட்டவனுக்கு மறுக்க முடியாத பிருந்தா "ஒரு டாக்டரா உனக்கு ஊட்டி விடுறேன்..." என்றாள்...
"எந்த ஊர்ல டாக்டர் பேஷண்டுக்கு சாப்பாடு எல்லாம் ஊட்டி விடுவாங்க..." என்று நக்கலாக கேட்ட தீரன் "சரி பரவாயில்லை இந்த டாக்டர் இந்த பேஷண்டுக்கு மட்டும் தான் ஊட்டி விடுவாங்கன்னா தாராளமா நானும் ஊட்டிப்பேன்..." கூறிவிட்டு "ஆ...." என வாயை பிளந்தான்...
அங்கிருந்த வேற ஒரு பிளேட்டில் கையை கழுவிட்டு தீரனுக்கு சாப்பாட்டை ஊட்ட ஆரம்பித்தாள் பிருந்தா...
ஒவ்வொரு முறை தீரனுக்கு சாப்பாட்டை ஊட்டும் போதும் அவனிதழ்கள் பிருந்தாவின் விரலை தீண்ட சிலிர்த்துப் போனாள் பெண்ணவள்.....
பிருந்தாவின் சிலிர்ப்பை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாதவனாக அவள் ஊட்ட வரும் போது வேண்டுமென்றே அவள் விரல்களை சப்பி தீண்டி விளையாட ஆரம்பித்தான்....
பிருந்தாவோ சாப்பாடு ஊட்டும் போது வாயின் அருகே செல்லும் கை சற்று மேலே இருக்கும் அவனது மீசையை தீண்டும் ஆசையை கொடுக்க என்ன செய்வது என்று புரியாமல் வேக வேகமாக சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தாள்...
"கொஞ்சம் கொஞ்சமா கொடுடி..."
"மெதுவா கொடுடி ..."
"முழுங்க முடியலை..." என்று ஒவ்வொரு வாய் சாப்பாட்டுக்கும் எதையாவது சொல்லிக் கொண்டிருந்தவன் தலையில் சாப்பாட்டுத்தட்டை போடலாமா என்னும் அளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான் தீரன்....
ஒரு வழியாக சாப்பாட்டை ஊட்டி முடித்து விட்டு அவனை விட்டு விலகப் போனவளின் இடையில் பதிந்த தீரனின் சூடான கரம் அவளை நகர விடாமல் அங்கேயே நிறுத்தி வைத்தது.....
இடுப்பில் பதிந்திருந்த தீரனின் கரத்தை பிருந்தா விலக்க பார்க்க அவனோ அவளது முயற்சியை கண்டு கொள்ளாதவனாக "நிஜமாவே உன் மனசுல நான் இல்லையா டாக்டர்..." என்று கேட்டான்.....
ஏற்கனவே தன்னவனின் இதழ்கள் தன் விரல் தீண்டியதில் கிளர்ச்சி அடைந்திருந்த பெண்ணவள் இடையில் பதிந்த அவன் கரத்தில் மெய் மறந்து கண்களை மூடி நின்றிருந்தாள்....
தன்னவள் கண்கள் மூடி நின்றிருந்த நிலை தீரனுக்கு சாதகமாகி போக சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன் அவள் இடையில் பதித்து இருந்த கரத்தை விலக்காமல் அவளை அப்படியே தன் மடியில் அமர வைத்தவன் மூடி இருந்த பிருந்தாவின் இமைகளின் மீது தன் இதழ்களை மென்மையாக பதித்து அவள் விழிகளை திறக்கச் செய்தான்.....
பிருந்தா மூடி இருந்த கண்களை திறந்ததும் தனக்கு மிக அருகில் தெரிந்த தீரனின் காதல் ததும்பிய கண்களின் வீச்சை தாங்க முடியாமல் மீண்டும் விழிகளை மூட முயற்சி செய்ய இடையில் இருந்த கரத்தில் அழுத்தம் கொடுத்து விழிகளை மூட விடாமல் செய்தான் தீரன்...
பிருந்தா மிக அருகில் தெரிந்த தீரனின் கண்களில் வழிந்த காதலில் தன்னை தொலைத்தவள் அதுவரை தன்னை தொல்லை செய்த அவன் மீசையை செல்லமாக முறைத்தாள்.....
பிருந்தாவின் முறைப்பை கண்ட தீரன் "என்னடி முறைக்கிற.... இது என்ன பண்ணுச்சு உன்னை..." என்று மீசையை திருகியபடி கேட்டவனின் கண்களைப் பார்த்தவள் அதில் தெரிந்த காதலில் "டூ யூ லவ் மீ.." என்று கேட்டு இருந்தாள்.....
"ம்.. நான் எங்கே உன்னை லவ் பண்றேன்... இங்கே சமையல் செய்றாங்களே தாமரை அக்கா அவங்களை இல்ல லவ் பண்றேன்... ஆனா அவங்களுக்கு என்னை விட வயசு அதிகமாம்... அதனால் என்னை விப வயசு கம்மியா இருக்கிற உன்னை லவ் பண்ண சொன்னாங்க... அதான் உன்னை சுத்தி சுத்தி வரேன்...." என்று கிண்டலடித்தவனை முறைத்து பார்த்த பிருந்தா "ஏன் இதுவரை எங்கிட்ட நீயா சொல்லல... நான் கேட்டதும் சொல்ற....."
"நான் உனக்கு என் லவ்வை சொல்லும் போது நீ ஓகே சொல்லணும்... அதை விட்டுட்டு விஷ்ணு என் ப்ரண்ட்... அவனை நோகடிக்க முடியாது... அப்படி இப்படின்னு எந்த ரீசனும் சொல்லாமல் நீ என்னை அக்சப்ட் பண்ணனும்.. அதுக்காக தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணினேன்... இப்போ நான் கேட்டால் நீ ஓகே சொல்லுவ.... இதே நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேட்டு இருந்தால் ஓகே சொல்லி இருப்பியா என்ன.... போடா லூசுன்னு சொல்லிட்டு போயிட்டே இருந்திருப்ப...."
"அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லி இருக்க மாட்டேனா.... ஆனா..."
ஆனா என்றவளை பேச விடாமல் அவள் இடையில் பதித்து இருந்த கரத்தில் இனும் சற்று அழுத்தம் கொடுத்தான் தீரன்..... அவன் செய்கையில் மீண்டும் தன்னவளின் கண்களை மூட வைத்தவன் இந்த முறை கண்களில் முத்தம் தராமல் அவள் இதழ்களை நோக்கி போனான்....
இருவரின் இதழுக்கும் நூலிழை இடைவெளி இருக்க "தீரா...." என்ற பிரியரஞ்சனின் குரலில் அவசரமாக அவன் மடியில் இருந்து எழுந்து நின்றாள் பிருந்தா.....
தீரனும் எழுந்து தன்னவளின் அருகில் நின்றவன் தன்னை நெருங்கி வந்த பிரியரஞ்சனை கொலைவெறியோடு முறைத்து பார்த்து வைத்தான்....
"ஏண்டா என்னை ரொமான்ஸ் பண்ண விட மாட்டியாடா...."
"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.... முதல்ல பிருந்தா வீட்ல போய் பொண்ணு கேட்கலாம்...."
"அதெல்லாம் பொண்ணு கேட்க நான் ரெடி.... நீயும் ஸ்ரீயும் வர வெள்ளிக்கிழமை கிளம்பி வாங்க... பிருந்தா வீட்ல பொண்ணு கேட்டு நிச்சயம் பண்ணிட்டு வந்துடலாம்..."
"ஓஹோ அப்போ ஏற்கனவே எல்லாம் ப்ளான் பண்ணிட்டு தான் வந்து இருக்க ரைட்..." என்று பிஸ்னஸ் மேன் ப்ரியரஞ்சனாக ஆழ்ந்த குரலில் கேட்டான் ரஞ்சன்...
"ராசா.... நான் அப்படி எந்த ப்ளானிலும் இங்கே வரலை... இவளை பார்த்ததும் தான் இப்படி எண்ணமே வந்தது... ஏதாவது ப்ளான் பண்ணி என் குடும்பத்தில் கும்மி அடுச்சுராத ராசா... மீ பாவம்..." என்று விளையாட்டு குரலில் கூறியவன் சற்று இடைவெளி விட்டு "இவளை பார்த்தால் விட்டுட்டு வீட்டுக்கு போக மனசே வரலைடா... எப்பவும் என் கூடவே வச்சுக்கணும் போல இருக்கு... உனக்கு என்னை பத்தி நல்லா தெரியுமே ரஞ்சா... என் வேலையை நேரம் காலம் பார்க்காமல் செய்வேன்... அப்படிப்பட்டவன் ஒரு முக்கியமான கேஸை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்... என்னை நம்பி கமிஷ்னர் கொடுத்த கேஸை வேற ஒரு ஏசிபிகிட்ட கொடுக்க சொல்லிட்டேன்..." என்றான்....
"ஏண்டா... உனக்கு தான் சவாலான கேஸஸ் டீல் பண்றதுனா ரொம்ப பிடிக்குமே..."
"பட் இந்த கேஸுக்காக நான் டெல்லி போகனும்.. கிட்டத்தட்ட 2வருஷம் அங்கேயே தங்கி இன்வஸ்டிகேட் பண்ணனும்... அவ்வளவு நாள் என் டாக்டரை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுடா... ஒரு போலீஸ்காரனா நான் பண்றது தப்பு தான்... பட் என்னால பிருந்தாவை விட்டுட்டு போக முடியலைடா..." என்றவனை கட்டி அணைத்து விடுவித்த ரஞ்சன் "வர்ற ப்ரைடே உனக்கும் பிருந்தாவுக்கும் என்கேஜ்மெண்ட்... அடுத்த 5-ம் நாள் அதாவதூ வெட்னஸ்டே மேரேஜ்..." என்றான்...
"எப்படிடா இன்னும் ஒரு வாரம் கூட இல்லை... அதுக்குள்ள எல்லா ஏற்பாடும்..."
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.. நீ கல்யாண மாப்பிள்ளை... சோ பிருந்தா கூட கடலை போடுறது . .. ப்யூட்டி பார்லர் போறது.... எனக்கு பேச்சுலர் பார்ட்டி குடுக்குறது இதெல்லாம் தான் உன் வேலை... என் மேரேஜில் தான் என்னால என்ஜாய் பண்ண முடியலை... அவசர அவசரமா தாலியை கட்டி மேரேஜ் பண்ணேன்... நீயாவது நல்லா என்ஜாய் பண்ணி மேரேஜ் பண்ணு..." என்றவன் உள்ளே செல்ல திரும்ப அங்கே கோபத்தோடு நின்றிருந்தாள் அவனது தர்மபத்தினி ஸ்ரீ....
"அச்சோ இவளை மறந்துட்டு அவன்கிட்ட பேசி வச்சுட்டேனே... பாவி என் பின்னாடி இவள் நிக்கிறதை ஏண்டா சொல்லலை... துரோகி...." என்று தீரனிடம் ரஞ்சன் முணுமுணுப்பாக கேட்க தீரனோ பதிலேதும் சொல்லாமல் கனவு உலகத்தில் பிருந்தாவோடு டூயட் பாடி கொண்டு இருந்தான்....
"எருமை எருமை... இங்கே பத்திகிட்டு எரியுது ... உனக்கு ட்ரீம் ஒரு கேடு..." என்று திட்டியவன் அவன் காலில் தன் ஷீ காலால் மிதித்து விட்டான்...
"ஆஆஆஆஆ.." என்று ஏதோ எறும்பு கடித்தவுடன் தடவி விடுவதை போல காலில் தடவி கொடுத்த தீரனோ இன்னும் பிருந்தாவை தான் சைட் அடித்து கொண்டிருந்தான் ....
தீரன் மற்றும் ரஞ்சனின் செய்கையில் பெண்கள் இருவரும் சிரிக்க ஆரம்பிக்க தீரனோ தன் 32 பல்லையும் காட்டியபடி இருக்க ரஞ்சனோ தன்னவளையும் தீரனையும் முறைத்து வைத்தான்...
"பிருந்தா உன் அப்பாகிட்ட சொல்லி வை... ப்ரைடே என்கேஜ்மெண்ட் அப்படின்னு...." என்று கூறியதும் பிருந்தா மறுப்பாக தலையசைத்தாள்.....
"என்ன.."
"இன்னும் கொஞ்ச நாள்..."
"நோ..." என்று அலறியது தீரன் அல்ல... ரஞ்சனே...
"நோ பிருந்தா... இதுவே ரொம்ப லேட்... இன்னிக்கே கூட உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வைக்க நான் ரெடி... பட் உன் அப்பாவுக்கு தன் பொண்ணோட கல்யாணத்தை பாக்கணும்னு ஆசை இருக்கும்... அதுக்காக தான் இந்த 5நாள் கேப்..."
"அதுக்கு இல்ல ரஞ்சா... விஷ்ணு...." என்று இழுத்தவளை முறைத்தான் ரஞ்சன்....
"இவர் ஒருத்தர் ஊருக்குள்ள இருக்கும் அத்தனை பேரையும் முறைச்சுட்டே இருப்பார்..." என்று முணுமுணுத்தாள் ஸ்ரீ...