அதை அவன் காதலை சொல்லாம செஞ்சு இருக்கலாம்... தெரியாமல் சொல்லி இருந்தால் ஓகே... தெரிந்த பின்னும் சொல்வது சொன்ன போல இவன் தோழி இவனின் வலி அவளுக்கு வலி தான்.. அப்போ ஏன் சொல்லி வலியை தரணும் அவன் காதலின் உண்மை அவளுக்கு தெரிய வந்தால் பாவம் இல்லையா....சிலருடைய சிரிப்புக்கு பின்னால் இருக்குற வலியை எவ்வளவு உற்று கவனித்தாலும் நம் கண்களுக்கு தெரியாது சகோ... விஷ்ணு தன்னுடைய தோழியிடம் தன் ஒரு தலை காதலை முதலில் கூறினான்... ஆனால் இறுதியாக முடிக்கும் போது அங்கே பார்த்தது அவனது தோழியோ காதலியோ அல்ல... ஆணவக் கொலையால் அநியாயமாக உயிரை விட்ட வள்ளியை தான்... அந்த காலத்தில் ஒரே அறையில் ஆணும் பெண்ணும் அதுவும் திருமணம் ஆகாத இருவர் ஒரே அறையில் தங்கினால் இப்போது போல சோசியலாக பார்க்க மாட்டாங்க சிஸ்... தீரனுடன் ஒரே அறையில் வள்ளி தங்கியதும் அவனோடு உயிரை விட்டதையும் ரஞ்சனின் வாய் மொழியாக கேட்ட போதே தனது காதலுக்கு ஆயுள் முடிந்ததை விஷ்ணு உணர்ந்து கொண்டான்.. ஆனாலும் அவனது காதலை பிருந்தாவிடம் கூறி விட்டு தனது வலியை அவளிடம் காட்டாமல் மறைக்க நினைத்தான்... பிருந்தா விஷ்ணுவின் தோழி.. அவனது வலி அவளுக்கும் வலிக்கும் தானே... முன் ஜென்ம பாவத்திற்கு பரிகாரம் தேடனும்.. அவன் உடல்நிலையை வேறு பார்க்க வேண்டுமே.. அனைத்தையும் யோசித்து தான் பிருந்தாவை தீரனுக்காக விட்டு கொடுத்தான் விஷ்ணு... விட்டு கொடுத்தான் என்பதை விட தீரனுக்கு உரியதை அவனிடம் கொடுத்தான் என்பதே சரியாக இருக்கும்..