வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நல்லுயிர் நீயெனக்கு...நாடியடி நானுனக்கு- கருத்து திரி

#நான் 2-3 வாரங்கள் கழித்து இன்று தான் வந்தேன்... ##₹

மீதமுள்ள எபிசோட் எல்லாம் ரீட் பண்ணிட்டேன்...

காதல் ததும்பும் எபிசோட்... தீரன் பிருந்தா காதல் அழகு...

கணேசன் சூப்பர்😍 பிருந்தா பண்ணது தப்பு... என்ன தான் சாரி கேட்டு அவர் மன்னிச்சு பேசி எல்லாம் பண்ணாலும் அவள் பண்ணது எனக்கு கடுப்பு தான்... சொல்றதை கூட அவளோட காதலில் ஆரம்பிச்சு சொல்லிட்டு இருந்தா போதும்... ரஞ்சன் இவகிட்ட பேசிறதை அவ அப்பாகிட்ட பேசணும் இல்ல time குடுக்கணும் .. அதை விட்டு இப்படி உடனே எப்படி அவ பேசி புரிய வைப்பா😡 லூசு பையன்...

தீரன் சூப்பர் டா நீ😍 மாமனாரை செம்மையா கவர் பண்ணி வச்சு இருக்க.. நல்லா உதவுது தேவையான நேரம்😍

ஶ்ரீ மனக்குறை எல்லாம் தீர்ந்து போச்சா சூப்பர்... முன் ஜென்மத்தில் வாழாமலே போன காதல், உணர்ந்து, உரைத்த அரைநாளில் கரைந்து, மண்ணோடு மண்ணாய் போன காதல் ரெண்டும் திகட்ட வாழட்டும் இப்பிறவியில்🥰🥰

ராஜேந்திரன், புனிதா... கேடு நினைப்பவன் கெடுவான்... தன் வினை தன்னையே சுடும்😡

-------

எனக்கு சில டவுட் ஆல்ரெடி கேட்டது தான் சில...

ஶ்ரீ எப்படி சித்தி/சித்தப்பா அவன் உன் காதலன் சொன்னா நம்ப முடியும்🤔 அவ காதலிச்சு இருந்தா தானே ஏற்க முடியும்🤔 அவங்க சொன்னா எப்படி, இது எனக்கு புரியவே இல்ல..... அவளுக்கு வேற எதுவும் மறதி போல எங்கேயும் இல்ல, சோ எப்படி...?


பிருந்தா அவளை ரஞ்சனுக்கு ஏன் முதல்ல தெரியலை? விஷ்ணு சொல்வான் அப்படியே இருக்கு உன் முகஜாடை அப்படினு... பட் ரஞ்சன் லேட் ஆ தான் கண்டுபிடிப்பான்..விஷ்ணு கிட்ட கண்டுபிடிக்கணும் சொல்லிட்டு, அப்பறம் அவ தான் சொல்வான்... அது கொஞ்சம் சிங்க் ஆகலை... விஷ்ணுவை தெரியும் போதே அவளையும் தெரிஞ்சு இருக்கணும் ல...

முன் ஜென்மத்தில் எழுதின உயில் அதை எப்படி இப்போ use பண்ண முடியும்.... அப்போ எல்லாம் மறுபடி அதே குடும்பத்தில் பிறந்து இருக்கணும் தானே🤔🤔 ஆனால் அப்படினா கூட அதுவும் இல்லாம தலைமுறைகள் தான்டி அது valid ஆ இருக்குமா🤔🤔 பெயர்கள் எல்லாமே கூட வேறயா இருக்கு... சொத்து எல்லாம் இவன் அம்மா பேர்ல இருந்துச்சு... எப்படி??

முன்னாடி இவங்க இறந்த பின் அப்படியே விட்டு இருப்பாங்களா அந்த வனஜா அண்ட் கோ... அவ்வளவு பேராசை பிடிச்சவங்க🙄🙄 பிளஸ் எல்லாம் இறந்துட்டா, அவங்களுக்கு ஈஸி தானே சொத்தை மாத்துறது🤔🤔 செய்யாம இருந்து இருப்பாங்க சொல்ல முடியாது அவ்வளவு நல்லவங்க இல்லை அவங்க...
 
LOGIC ILLA KATHAI THAN NALLUIR NEE YENAKKU STORY SIS... STORY AARAMBAM MUTHAL IRUTHI VARAI NIRAI KURAIKALAI SOLLI VANTHA THOLI RUBYKKU MANAMARTHA NANRIGAL SIS..
 
LOGIC ILLA KATHAI THAN NALLUIR NEE YENAKKU STORY SIS... STORY AARAMBAM MUTHAL IRUTHI VARAI NIRAI KURAIKALAI SOLLI VANTHA THOLI RUBYKKU MANAMARTHA NANRIGAL SIS..
Ohhh அப்போ ஓகே... ஜென்மங்கள கடந்து கதைகள் எழுதும் போது சில pure கற்பனையா தான் இருக்கும் .. புரிஞ்சுது... இருந்தும் விளக்கங்கள இருந்தால் கேட்டு கொள்ளலாம் என கேட்டேன்
 
ம்2023
#அஸ்திரம்13
#நல்லுயிர்நீயெனக்குநாடியடிநானுனக்கு
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. சாதனா ஸ்ரீ தன் சித்தப்பா சித்தியுடன் வாழ்ந்து வருகிறாள்... இவளின் திருமணத்தன்று அதிரடியாக இவளுக்கு தாலி கட்டி கையோடு தன் மாளிகைக்கு கொண்டு செல்கிறான் ப்ரியரஞ்சன்.. தனக்கு பிடிக்காது இந்த திருமணத்திலிருந்து விலக நினைக்கும் சாதனா... தான் ரஞ்சன் என்பவனை விரும்புவதாக கூறும் போது அவளிடம் கோபப்படும் ப்ரியரஞ்சன் உண்மையாகவே அவள் நேசிக்கும் அந்த ரஞ்சன் யார் என்பதே அவளுக்கு தெரியவில்லை என புரிய வைக்க முயற்சி செய்கிறான் இதற்கிடையில் அவள் அழும் போது அவளை ஸ்ரீ என்று அழைத்து அவளின் நலனின் மேல் அக்கறை காட்டுகிறான்... கோபமும் காதலும் ஆக இரு வேறு மனநிலையில் இருக்கும் இவனின் மனதில் இருப்பது தான் என்ன ஏன் பிடிக்காத பெண்ணை திருமணம் முடித்தான். என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்... சித்தரஞ்சன் நித்யஸ்ரீ காதல் அவ்வளவு அழகு 🥰 தன்னவனின் காதலை பெற நித்யஸ்ரீ எடுக்கும் முயற்சிகளும் பயந்து கொண்டே ஆனாலும் தன் காதலை தெரிவிக்கும் இடங்களும் அருமை.. தீரன்.. அருமையான நண்பன் 👏 பிருந்தா உடனான இவனின் காதலும் அழகு 🥰
ஆணவக் கொலைகள் எந்த காலத்திலும் மனதை பதைப்பதைக்க செய்கிறது 😔😔
எனக்கு ஒரு சந்தேகம் ரைட்டர்ஜி சாதனா ஏன் ரஞ்சன் என்பவனை காதலிப்பதாக கூறினாள் அவளுக்கும் ஏதேனும் ஞாபகங்கள் இருந்ததா.அதற்கான விடை எனக்கு தெரியவில்லை.. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏💐
 
Top