வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நல்லுயிர் நீயெனக்கு.. நாடியடி நானுனக்கு... டீசர்

Status
Not open for further replies.
டீசர் : 1


எங்கும் இருட்டை தவிர வேறு எதுவும் தெரியாத நடுநிசி நேரம்... அருகில் இருக்கும் ஆட்களை கூட பார்க்க முடியாத கருமையே எங்கும் தென்பட அந்த இருளை மதிக்காமல் அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்தான் அவன்.... மெல்ல மெல்ல உள்ளே சென்றவன் பைப் வழியாக மாடிக்கு சென்று அங்கிருந்த பால்கனியில் குதித்தான்... பால்கனி கதவு பூட்டபட்டு இருக்க அவன் பலத்தை காட்டி முரட்டுத்தனமாக தள்ளவும் கதவு திறந்து கொண்டது... கதவு திறந்த சத்தத்தைக் கேட்டு விழித்து பார்த்தாள் அவள்... இருட்டில் தெரிந்த உருவத்தை பார்த்து கத்த போனவளின் வாயை அடைத்தவன் "ஷ்.. கத்தாதே... மீறி கத்தினால் உன்னை தேடி வருவது யாராக இருந்தாலும் உயிரோடு இந்த அறையை விட்டு வெளியே போக மாட்டாங்க... இப்போ கையை எடுக்க போறேன்... சொன்னது நியாபகம் இருக்கு தானே.... " என்றதும் ஆமாம் என்பதை போல தலையாட்டியவளின் வாயில் இருந்து கையை எடுத்தான் அவன்....
அவள் அமைதியாக இருக்கவும் "குட்.... இதே மாதிரி நான் சொல்றதை கேட்டால் நீயும் சேப்... உன் வீட்டு ஆளுங்களும் சேப்... அண்டர்ஸ்டேண்ட்..." என்றதும் அவன் கர்ஜனை குரலுக்கு கட்டுபட்டு சரி என்பதாக தவையாட்டினாள் அவள்.....
 
டீசர் : 2

"ரஞ்சன் நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு.....""இதுவரைக்கும் நான் பண்ணது தாண்டி தப்பு.... இனிமே பண்ண போறத தான் கரெக்ட்....""விருப்பமில்லாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டால் கம்பி என்ன வேண்டி வரும் ரஞ்சன்.....""ஹா.. ஹா... ஹா.... கம்பி என்ன போறது நானா.... உன் சித்தப்பாவான்னு பாக்கலாம்டி....""என் சித்தப்பாவை பத்தியோ என் குடும்பத்தை பத்தியே பேச உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு....""கரெக்டு தான்..... அவனுங்களை பத்தி நான் பேசுற அளவுக்கு அவனுங்களுக்கு என்ன தகுதி இருக்கு...." என்று ரஞ்சன் பேசி கொண்டிருக்க அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே கைகளில் கிடைத்த இரும்பு கம்பியால் அவனை தாக்க முயன்றால் சாதனா.....
"கேடி.... அந்த குடும்பத்தில் கொஞ்ச நாள் இருந்ததுக்கு அவங்களோட ப்ராடுதனத்தை தெருஞ்சுகிட்ட போல...." என்றவன் அவள் கையில் இருந்த இரும்பு கம்பியை பிடுங்கி கீழே போட்டு விட்டு ஒரு அறை விட அவன் விட்ட அறையில் மயங்கி சரிந்தாள் சாதனா.....
 
டீசர் : 3

மணப்பெண் கோலத்தில் கழுத்தில் மணமாலையோடு புது மஞ்சள் கயிறு மின்ன தன் எதிரில் நின்றிருந்த ரஞ்சனை பார்த்தபடி அழுது கொண்டிருந்தாள் சாதனா..... அவள் அழுகை சத்தத்தை கேட்டு காதை குடைந்து கொண்டே வந்த ரஞ்சன் "அழுதுகிட்டே இருக்காதடி.... காது அடைக்குது....." என்றான்...."நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட ரஞ்சன்.....""தேங்க்யூ ... ஐ வாண்ட் மோர் மோர் எமோசன்ஸ் பேபி.... ""எதுக்குடா என் கழுத்துல தாலியை கட்டின... ஐ ஹேட் யூ... "என்று கத்தியவளை பார்த்த ரஞ்சனுக்கு ஸ்ரீ தன்னிடம் ஐ லவ் யூ என்று சொன்ன நாள் நினைவுக்கு வந்தது..... தலையை குலுக்கி அந்த நினைவை அகற்றியவன் "எல்லாரும் எதுக்கு தாலி கட்டுவாங்க.... அதுக்காக தான்..." என்று கண்களை சிமிட்டு உதட்டை குவித்து முத்தமிட்டான் ரஞ்சன்......"சீச்சீ... உன்னை பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணுக்கு தாலி கட்டி இருக்கியே உனக்கு எல்லாம் வெக்கமா இல்லை.....""வெக்கம் மானம் சூடு சொரனை எல்லாம் பார்த்தால் லவ் பண்ண முடியுமா பேபி....""நீ பண்றதுக்கு பேரு லவ் கிடையாது...."
"ஓஹோ அப்போ இதுக்கு பேரு என்ன பேபி..... '
"லஸ்ட் ஜஸ்ட் லஸ்ட்.... & என் உடம்பு மேல் இருக்கும் ஆசையில் தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்க ரஞ்சன்..... நீ ஒரு சைக்கோ..... என்னை டார்ச்சர் பண்ற......"

" லவ் டார்ச்சர் தானே பேபி.... இருந்துட்டு போகட்டும் பேபி... & எல்லாரும் கல்யாணம் பண்றதே அதுக்காக தானே....." என்றவனை கண்டு அருவறுப்பில் முகம் சுழித்தாள் சாதனா....
 
Status
Not open for further replies.
Top