வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"நிசப்தமே ரீங்காரமாக!!"கதை திரி

Status
Not open for further replies.
முதலில் அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வெளியில் வந்த கனகம் மகள் இருந்த கோலத்தை பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டார்.



அவள் இருந்த நிலைமையே சொல்லியது அவள் அந்த வீட்டில் வாழும் லட்சணத்தை.



"என்னங்க இவர் இப்படி சொல்லிட்டு போறாரு இப்ப என்ன பண்றது?"என்று கலங்கிய குரலில் சீதா கணவனிடம் கேட்க, அவருக்கு என்ன பதில் சொல்ல முடியும் அவரால்?



"நம்ம நிலைமை என்னன்னு உனக்கே நல்லா தெரியும் சீதா..எப்படா நம்ம கீழ விழுவோம் நம்மள பார்த்து கைகொட்டி சிரிக்கலாம் என்று காத்துகிட்டு இருக்க கூட்டம் ஒரு பக்கம்..இவளை இப்ப நம்ம கூடவே கூட்டிட்டு போனா இவளுக்கு அடுத்து இருக்க இன்னொரு பொண்ணு பையன் அவங்க நிலைமை என்ன யோசிச்சு பாரு? எல்லாத்துக்கும் மேல எத்தனை காலத்துக்கு நம்மளால இவளை வச்சு பார்க்க முடியும்.. நீயும் பார்த்துகிட்டு தானே இருந்த வயசுல பெரியவங்க அப்படி இப்படி இருக்க தான் செய்வாங்க உன் பொண்ணு வாயை மூடிக்கிட்டு தான் இருக்கணும்.."



"நமக்கே நல்லா தெரியுதுங்க நம்ம பொண்ணு இப்படி பேசுற ஆள் கிடையாது இப்படி எல்லாம் பேசுற அளவுக்கு அவளை அவங்க டார்ச்சர் பண்ணி இருக்காங்க.."



"என்ன பண்றது சீதா பொம்பளையா பொறந்த எல்லாரோட தலையெழுத்தும் இதுதானே.. பொறுமையா போனால் தானே வாழ்க்கையில் எதையா இருந்தாலும் சாதிக்க முடியும்.. கொஞ்ச நாளைக்கு பொறுமையா இருந்து தான் ஆகணும் எத்தனை காலத்துக்கு நம்மளால இப்படியே இந்த பொண்ணை வச்சு பார்க்க முடியும் கல்யாணம் பண்ணி ஒரு மாசம் தான் முழுசா முடிஞ்சு இருக்கு அதுக்குள்ள இவ்வளவு பெரிய பிரச்சனை.. அவங்க எவ்வளவு கொடுமை பண்ணாலும் இப்ப அது எதுவும் பேச்சு வருதா? நம்ம பொண்ணு அவங்களை பேசுனது மட்டும்தான் தப்பு யாரு கிட்ட போய் சொன்னாலும் இதை தான் சொல்லுவாங்க.."



"அதுக்காக நம்ம பொண்ணை இப்படியே விட்டுட்டு போக முடியுமா? இதுக்காகத்தான் இவளை இவ்வளவு கஷ்டப்பட்டு கடன் வாங்கி கல்யாணம் பண்ணி கொடுத்தோமா!அந்த சங்கீதா எங்க அண்ணனுக்கு தாராளமா என்னை நம்பி கல்யாணம் பண்ணி குடுங்க எந்த பிரச்சனையும் வராது என்று உறுதி கொடுத்ததால் தானே நம்ம இவ்வளவு தூரம் இறங்கி எதையும் விசாரிக்காமல் கல்யாணம் பண்ணி கொடுத்தோம்.."என்று இருவரும் தவிப்புடன் தங்கள் பெண்ணின் வருங்காலம் என்ன ஆகுமோ என்று கலக்கமான குரலில் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க,இந்த உண்மை எல்லாம் இவர்களுக்கு தெரிய வந்தால் இப்படித்தான் பேசுவார்கள் இவர்கள் மனது காயப்படும் என்று இத்தனை நாட்களாக சிந்தியா மறைத்து வைத்திருந்த உண்மைகள் அவர்களுக்கு தெரிந்ததும் அவள் எதிர்பார்த்தது போலவே அவர்கள் மனவேதனையுடன் பேசியதை கேட்டு அவள் மனம் வலித்தது.



தன் வலியும் வேதனையும் தன்னோடே போகட்டும் என்று இத்தனை நாட்கள் பொருத்து இருந்தது அத்தனையும் இலவு காத்த கிளி கதையாக வீணாகப் போனது.



"அப்பா அம்மா ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க..இது என்னோட வாழ்க்கை இதுல எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கிற அளவுக்கு என்கிட்ட தைரியம் இருக்கு..இப்படி எல்லாம் உங்க கிட்ட சொல்றதுக்கு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ஆனா எனக்கு இங்க இருக்கவே புடிக்கல என்னையும் உங்க கூட கூட்டிட்டு போயிருங்க நீங்க இருக்கும் போதே இப்படி எல்லாம் பேசுறாங்க நீங்க என்னை விட்டுட்டு போனா என் நிலைமை அம்புட்டு தான் உங்க ரெண்டு பேரையும் கெஞ்சி கேட்கிறேன்.."என்றவள் பெற்றோர்களின் பாதங்களில் சாஸ்தானமாக விழுந்து விட, அவள் இப்படி சொன்ன பிறகு அவர்களால் என்ன செய்ய முடியும்?



கணவனும் மனைவியும் கண்ணீர் வழிந்த முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் மகளை தூக்கி விட்டார்கள்.



"இப்படி எல்லாம் பேசாத சிந்தியா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உனக்கு அடுத்து இருக்கிற உன் தம்பி தங்கச்சி இரண்டு பேரையும் கொஞ்சம் யோசிச்சு பாரு.. நீ மட்டும் இப்ப எங்க கூட வந்துட்டா இவங்களுக்கு அது தொக்கா போயிடும். நீ எங்க கூட வரணும்னு தான் அவங்க இவ்வளவு பிரச்சினையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அதுக்கு நீயே இவங்களுக்கு இடம் கொடுக்காத"என்ற கனகம் மகள் தலையில் கை வைத்தார்.



"இல்லப்பா நிஜமாகவே எனக்கு இங்க இருக்க புடிக்கல ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பொழைக்கிறது மாதிரி இருக்குது எத்தனை நாளைக்கு இப்படியே நான் காலம் தள்ள முடியும்!"என்றவள் தலையில் வைத்த அவரது கையை தன் கைகளுக்குள் பிடித்தப்படி சிறு குழந்தை போல் அழுக, தங்கள் செல்ல மகள் கண்ணீரை கண்டதும் தாங்க முடியுமா? அந்த பெற்றோர்களுக்கு.



கனகம் மகளிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று தன் நிலையில் அவள் விடாப்பிடியாக நின்று கொண்டிருக்க, கனகம் மனைவியை உதவிக்கு பார்த்தார்.



சீதா மகளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றவர் முதலில் அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினார்.



கனகம் மகள் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர் வண்டியை நிறுத்திய இடத்தில் கலங்கிய கண்களோடு வந்து நின்றார்.



மகள் இருந்த அறையை நன்றாக பார்த்தார் சீதா.



அந்த அறை முழுவதும் அவளுக்கு அவர் வாங்கி கொடுத்த பொருள்கள் மட்டும் தான் இருந்தது.



சிறுபிள்ளை போல் அழுது கொண்டிருந்த சிந்தியா மனதில் இருந்த பாரங்கள் அனைத்தையும் பெற்றோர்களிடத்தில் இறக்கி வைத்ததால் என்னவோ இப்பொழுது ஓரளவுக்கு அவளால் தெளிவாக சிந்திக்க முடிந்தது.



"ஏம்மா நின்னுகிட்டு இருக்கீங்க பக்கத்துல உக்காருங்க.."என்று அவளது தாயின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர வைத்துக் கொள்ள,அவள் சொன்னது போலவே பக்கத்தில் அமர்ந்து கொண்டு சீதா அவள் தலையை தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.



மகளது தலையை சுகமாக வருடி கொடுக்க, நெடு நாட்களுக்கு பிறகு தாயின் அந்த வருடலில் அவளது மனம் இலவம் பஞ்சாக லேசாகி போனது.




சிறிது நேரம் வரை சீதா எதுவும் பேசவில்லை.



சிறிது நேரம் மகள் நிம்மதியாக இருக்கட்டும் என்று அமைதியாக இருந்தவர் கணவன் வெளியில் நின்று கொண்டிருக்க, பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் இருவரும் வீட்டிற்கு வந்து விடுவார்கள் என்று மகளிடம் பேச வேண்டியதை பேச வேண்டிய கட்டாயத்தில் பேச ஆரம்பித்தார்.



"இதே மாதிரி எத்தனை நாளைக்கு உன் பக்கத்துல நான் இருக்க முடியும் சிந்து.. நீ சின்ன பிள்ளை கிடையாதுடா வளர்ந்து பெரிய பிள்ளை ஆயிட்ட கல்யாணம் ஆயிடுச்சு கல்யாண வாழ்க்கையில சந்தோசம் மட்டும் இருக்காது.. இப்படி கஷ்டங்கள் எல்லாம் வந்து போகும் இது எல்லாத்தையும் பார்த்து நீ துவண்டு போகக்கூடாது.."என்று மகளது மனம் புண்படாமல் எடுத்துச் சொல்ல, நிமிர்ந்து அமர்ந்த சிந்தியா தாயின் கண்களைப் பார்த்தாள்.



அவரது கண்களில் தன் எதிர்காலத்துக்குரிய பயம் தெரிய,கலங்கிய கண்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவள் தாயை ஒரு சின்ன புன்னகையோடு பார்த்தாள்.




"இவங்க என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க அதனாலதான் இன்னைக்கு பேசிட்டேன் அம்மா..என்னை எது சொன்னாலும் பொறுத்துக்கிட்டு அமைதியா போயிடுவேன் ஆனா உங்களையும் அப்பாவையும் தேவையில்லாமல் பேசவும் தான் எனக்கு கோபம் வந்துச்சு சங்கீதாவுக்கு மட்டும் அவங்க அம்மாவே சொல்லும் போது அப்படி கோபம் வரும் அவங்க மட்டும் அவங்க அம்மாவையும் அப்பாவ அவங்க கூட கூட்டிட்டு போகணும்னு ஆசைப்படுவாங்க நான் மட்டும் என் வீட்டுக்கு எங்க அப்பா அம்மா முதல் முதல்ல வரும்போது அவங்க அம்மா இப்படி உங்களை கேவலமாக பேசுவதை பார்த்துகிட்டு அமைதியாக இருக்கணுமா?"



"கொஞ்சம் பொறுமையா இரு சிந்து இதுதான் உன்கிட்ட அம்மா சொல்லிக்கிட்டு இருந்தேன்.. பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தா மாப்பிள்ளை வீட்ல இந்த மாதிரி நடக்கிறது எல்லாம் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை வம்சா வழியா வந்துகிட்டு இருக்க விஷயம் தான்..நீ இந்த வீட்ல சந்தோசமா வாழ்ந்தால் தான் நானும் உங்க அப்பாவும் அந்த வீட்ல சந்தோசமா இருக்க முடியும்..உன்னை கட்டாயப்படுத்தி இந்த வீட்டில நீ இருந்து தான் ஆகணும்னு நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் எனக்கு நீ ரொம்ப முக்கியம்..படிச்ச புள்ளை நீ உனக்கு நல்லது கெட்டது எதுவும் நான் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.. உன்னோட வாழ்க்கை இது முடிவெடுக்க வேண்டியது உன்னுடைய விருப்பம் தான்.."என்ற சீதா அதற்கு மேல் மகளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் அமைதியாகி போனார்.



சிந்தியாவிற்கோ இத்தனை பிரச்சனைகள் தன்னால் நடந்த பிறகும் இந்த வீட்டில் எப்படி இனிமேல் இருக்க முடியும் என்ற தயக்கம் பெரிதாக இருந்தது.



எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருந்த போது தான் அனைத்து பிரச்சினைகளையும் செய்தோம் என்று தன்னை வாட்டி எடுத்து விட்டார்கள்.



இப்பொழுது அவள் நடந்து கொண்டு விதத்தில் நிச்சயம் அவளை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று அவளுக்கே நன்றாக தெரிந்தது.



கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள் எதிரில் இருந்த தாயைப் பார்க்க, அவளுக்கோ தன்னையும் மீறி அனைத்தையும் சமாளித்து விடும் ஒரு வேகம்.



'கமான் சிந்து..உன்னோட தைரியம் எல்லாம் எங்க போச்சு போயும் போயும் இவங்களை பார்த்து பயந்து எப்படி கரப்பான் பூச்சி மாதிரி ஒளிஞ்சு ஒளிஞ்சு எத்தனை காலத்துக்கு நீ வாழ முடியும்? எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் இப்ப எனக்கு வேற வழி இல்லை..'என்று தன் மனதோடு சொல்லிக் கொண்டவள் எழுந்தாள்.



"நீங்க கவலைப்படாதீங்கம்மா உங்களுக்கும் அப்பாவுக்கும் கெட்ட பேர் வாங்குற மாதிரி நான் எந்த காரியமும் எப்பவும் செய்ய மாட்டேன்.. நீங்க சொன்ன மாதிரி இனிமே அவங்க என்ன செஞ்சாலும் நான் கண்டுக்கல என்னவோ பண்ணிட்டு போகட்டும்.."என்றாள் விரக்தியாக.


அவள் இப்படி எல்லாம் பேசுவதை கேட்ட பிறகும் சீதாவால் எப்படி மகளை இங்கு விட்டுவிட்டு நிம்மதியாக புறப்பட முடியும்?
 
அத்தியாயம் 11:



"இல்லை சிந்தியா நீ இப்பவே கிளம்பு நம்ம புறப்படலாம்.. இதே மாதிரி நீ இருக்கிறதுக்கு உன்னை நாங்க கல்யாணம் பண்ணி கொடுக்கல எங்க புள்ள எங்க கூட சந்தோசமா உயிரோடு இருந்தா போதும்.. உன்னை இப்ப நாங்க இங்க விட்டுட்டு போனதுக்கு அப்புறம் இவங்க இன்னும் இன்னும் உன்கிட்ட பிரச்சனை அதிகமா பண்ணுவாங்க.. உன்னால ஒரு கட்டத்துல எதையும் சமாளிக்க முடியாமல் போனால் எங்களை விட்டுட்டு போறதுக்கு கூட நீ தயங்க மாட்டேன்னு உன் பேச்சை வச்சு எனக்கு புரியுது.. எனக்கு இவங்க முக்கியம் கிடையாது எனக்கு என் பிள்ளை மட்டும் தான் முக்கியம்.."என்று விசும்பலாக சொன்ன தாயை கண்கள் பனிக்க பார்த்த சிந்தியா "இல்லம்மா கண்டிப்பா நான் அப்படி எதுவும் செய்ய மாட்டேன் என்ன நம்புங்க.. எல்லா பாவமும் பண்ண இவங்க நல்லா உயிரோட இருக்கும்போது நான் எதுக்காக தற்கொலை பண்ணிக்க போறேன்.."என்றவள் மேலும் மேலும் தாயின் மனதை முடிந்தவரை சமாதானப்படுத்தி ஓரளவு அவளும் தன்னை தானே அப்படி சமாதானப்படுத்திக் கொண்டாள்.



"கண்டிப்பா எல்லாம் ஒரு நாள் முழுசா மாறி போகும் எனக்கு நம்பிக்கை இருக்குதும்மா நீங்க கவலைப்படாம அப்பாவை கூட்டிட்டு கிளம்புங்க அப்பா பாவம் என்னை பார்த்ததுமே அவங்க மனசு ஒரு மாதிரி ஆயிடுச்சு.. எனக்கு நீங்களும் அப்பாவும் சந்தோஷமா இருக்கிறது ரொம்ப முக்கியம்.. முத முதலா என்னைப் பார்க்க என் பெத்தவங்க வரும்போது அவங்களுக்கு ஒரு வேளை சோறு கூட இல்லை ஒரு டம்ளர் தண்ணி கூட மோண்டு கொடுக்க வக்கில்லை எனக்கு.."



"இப்படி எல்லாம் பேசாத சிந்து எனக்கு உன்னோட சந்தோசம் மட்டும் தான் முக்கியம்.. நீ இங்க சந்தோசமா இருந்தா தான் நான் உங்க அப்பா ரெண்டு பேரும் அங்க சந்தோசமா இருக்க முடியும்.. எங்களை பத்தி எல்லாம் கவலைப்படாம சந்தோஷமா வாழ்வதற்கான வழியை பாரு.."என்றவர் இதற்கு மேலும் அங்கேயே இருந்தால் அவள் மனம் மாறி தங்களுடனே மீண்டும் வந்து விடுவேன் என்று சொல்லிவிடுவாளோ என பயம் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.



அவரை பின்தொடர்ந்து சிந்தியாவும் வெளியில் வந்தாள்.



இருவரும் அவளது தந்தை வெளியில் நிற்கும் இடத்திற்கு வர, மகளது எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயத்துடன் நின்று கொண்டிருந்த கனகம் ஒருவேளை மகள் இந்த வீட்டில் இருக்க முடியாது தங்களுடனேயே வந்து விடுகிறேன் என்று உறுதியாக சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.



மகளுக்கு காலம் முழுக்க அவரால் சோறு போட முடியும் தான்.



தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொடுக்க முடியும் தான்.



இப்பொழுது கோபத்தில் அவள் தங்களுடன் வந்து விட்டாலும் இன்னும் சிறிது நாட்கள் சென்ற பிறகு, மற்றவர்களைப் போல் குழந்தை குட்டி என்று வாழ ஆசைப்பட்டு ஏங்கி போய் நிற்கும் பொழுது அவர்களால் என்ன செய்ய முடியும்?



இப்படி அவர் தனக்குள்ளேயே எதையெதையோ சிந்தித்து கொண்டு இருக்க அதை எல்லாம் தடை செய்யும் விதமாக அவரை அப்பா என்று அழைத்தாள் சிந்து.



மகளது அழைப்பில் சிந்தனைகள் தடைபட்டு அவளை மனம் கனக்க வேதனையுடன் பார்த்தார் கனகம்.



"நீங்க எதை நினைச்சாலும் கவலைப்படாம அம்மாவை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்புங்க..இன்னும் கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் நானும் வீட்டுக்கு வந்து ஒரு பத்து நாள் இருந்துட்டு வரேன்.."என கனகம் சீதாவை பார்த்தார்.



சீதா கண்களை மூடி திறக்க, அப்போதுதான் மனிதருக்கு உயிரே வந்தது.



"சரிம்மா மாப்பிள்ளை உன் மாமியார் சங்கீதா எல்லாரையும் வர சொல்லு நாங்க சொல்லிட்டு போறோம் இல்லாட்டி அதுக்கு ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்க.."எனவும் சிந்தியாவிற்கு
அவர்கள் நிற்கும் இடத்திற்கு செல்வதற்கு சிறிதும் பிடிக்கவில்லை என்றாலும் தாய் தந்தை இருவருக்காகவும் தன் மனதில் உள்ள வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் இருந்த இடத்திற்கு சென்றாள்.



அங்கு அவளது மாமியார் பரிமளம் கோபமாக மகளிடம் கத்திக் கொண்டிருந்தார்.



"என்னடி இவ சரியான அடங்காப்பிடாரி மாதிரி இருக்கிறா..என் பையனுக்கு அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேச தெரியாது எப்படி இவ கூட இருந்து அவன் காலம் தள்ளப் போகிறான்.."என்றவர் மகனுக்கு ஆதரவாக பேச, சுரேஷ் அவர் தனக்காக பேசுவதை கண்டு அவரை ஒன்றும் சொல்லாமல் அமைதியாக விட்டு விட்டான்.



சிறிது நேரத்திற்கு முன்பு வரை சிந்தியா தான் போன் செய்து பிரச்சனை செய்ய அவர்களை வரச் சொல்லி இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது தாய்தான் அவர்களை வரச் சொல்லி இருக்கிறார் என்பதை தெரிந்த பிறகும் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தான்.



பரிமளம் சொல்லியதை கேட்டு சங்கீதா பதில் பேசுவதற்காக வாயை திறக்கும் முன்பாக "என்னங்க எங்க அம்மா அப்பா கிளம்புறாங்க உங்ககிட்ட சொல்லிட்டு போகணும்னு சொல்றாங்க கொஞ்சம் கீழே வாங்க.."என்றவள் கணவனை மட்டும் அழைத்துவிட்டு மற்றவர்களை கண்டும் காணாதது போல் வந்த வேலை முடிந்தது என்பது போல் கீழே விறுவிறுவென இறங்கி சென்று விட்டாள்.



"பாத்தியா டா உன் பொண்டாட்டி நாங்க இருக்கிறதை கொஞ்சம் கூட மதிக்காம உன்னை மட்டும் கூப்பிட்டு போறத! அவங்க ஆத்தா காரி வந்துருக்கால்ல அவ தான் சொல்லி கொடுத்துட்டு போயிருப்பா.. போய் நல்லபடியா உன் மாமனார் மாமியார் ரெண்டு பேரையும் வழி அனுப்பி வையி.."என்ற பரிமளம் முகத்தை தன் தோள்பட்டையில் இடித்துக் கொண்டார்.



அவரை ஒரு பார்வை பார்த்தவன் மாப்பிள்ளையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே இறங்கி வந்தான்.



மகளது தலையில் கை வைத்தபடி பரிமளம் அவளை நேரத்துக்கு சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க, அதை எல்லாம் தன் காதுகளில் வாங்கிய படி வந்தான் சுரேஷ்.



அவன் வருவதை முதலில் பார்த்த கனகம் சீதா கையை பிடிக்க, அவரை சீதா பார்க்க கண்களால் மருமகன் வருவதை ஜாடை காட்டிய கனகம் மனைவியை பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்தார்.



அவர் செயலில் மகளிடம் எதுவும் பேசாமல் அமைதியாகி போன சீதா
எதுவும் பேசாமல் மருமகனை பார்த்து புன்னகை செய்தார்.



அவனும் கடமையாக இவரை பார்த்து சிரித்து விட்டு மனைவி பக்கத்தில் சாங்கியதற்காக நிற்க "அப்ப சரிங்க மாப்பிள்ளை எங்க பிள்ளையை நல்லபடியா பார்த்துக்கோங்க கூடவோ கொறச்சோ இனிமே அவளுக்கு எல்லாமே நீங்க தான்..உங்களைவிட சின்ன புள்ளைதான் கல்யாணம் பண்ணும் போதே உங்ககிட்ட சொல்லி தான் நாங்க கல்யாணம் பண்ணி கொடுத்தோம் நீங்க தான் அனுசரிச்சு அந்த பிள்ளைக்கு ஆதரவா பேசணும் உங்களை விட்டால் இந்த வீட்டில் அவளுக்கு யாரு இருக்கா?? தெரியாம ஒன்னு ரெண்டு வார்த்தை பேசி இருந்தால் மன்னிச்சுக்கோங்க.. சின்ன பிள்ளை நாங்க புள்ளையை பெரியவங்களை எதிர்த்து பேசுற அளவுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து வழக்கலை.. கொஞ்சம் பார்த்து தயவு பண்ணுங்க அந்த பிள்ளை இங்க வாழ்வதுதான் உங்களுக்கும் சந்தோஷம் எங்களுக்கும் பெருமை..வெளிநாட்டில் சம்பாதிச்சவர் உங்க தங்கச்சி ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி கொடுத்தது நீங்க தான் உங்களுக்கு நாங்க சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது பார்த்துக்கோங்க.. அம்மா தங்கச்சி எல்லாம் எங்க மாப்பிள்ளை? அவங்க கிட்டயும் சொல்லிட்டு கிளம்பனும்.."எனவும் சுரேஷ் அவர்கள் சொன்னதற்கெல்லாம் எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தவன் மீண்டும் தன் தாயை கீழே அழைத்தால் தேவையில்லாத ஒரு பூகம்பம் வெடிக்கக் கூடும் என்று பயந்தவன் "வேண்டாம் அத்தை நானே அவங்க கிட்ட சொல்லிக்கிறேன் நீங்க கிளம்புங்க.."என ஒரு வார்த்தைக்காக கூட இருந்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராமல் போனதை கண்டு சீதா கனகம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் வேறு வழி இல்லாமல்
அதை முகத்தில் காண்பித்துக் கொள்ளாமல் மகளிடமும் சொல்லிவிட்டு கணவனும் மனைவியும் மனதே இல்லாமல் மகளை விட்டுவிட்டு செல்ல, அவர்கள் இருந்தவரை சிந்துவுக்கு இருந்த மன தைரியம் அவர்களை அங்கிருந்து சென்றதும் முற்றிலுமாக காணாமல் போக இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை தலைதூக்க கண்களில் கண்ணீர் கோடாக வழிந்தது.



சிந்தியாவின் செயல் ஒவ்வொன்றும் சுரேஷுக்கு ஒவ்வொரு விதமான மனநிலையை கொடுத்தது.



என்ன செய்து இனி என்ன ஆகப்போகிறது?



"ஏய் உள்ள வா.."என்று மனைவியை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றவன் எதுவும் பேசாமல் மீண்டும் மாடிக்கு சென்று விட்டான்.



உள்ளே வந்த சிந்தியா தாய் முன்பாக அழுகக் கூடாது என்பதற்காக அடக்கி வைத்திருந்த கண்ணீரை மொத்தமாக சிந்தினாள்.



சும்மாவே சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் பரிமளம் தான் செய்த செயலுக்கு இனி என்னென்ன பிரச்சனைகள் செய்து தன் நிம்மதியை கெடுக்கப் போகிறாரோ? என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் கணவன் இதற்கெல்லாம் சேர்த்து வைத்து தனக்கு என்ன தண்டனை தர போகிறானோ! என்ற பயம் மற்றொரு பக்கம் தலை விரித்து ஆடியது.



'என் வாழ்க்கையில் கொஞ்சம் கூட நிம்மதியே இல்லை கடவுளே நீங்கதான் எனக்கு கருணை காட்டணும்.. உங்களால் முடிஞ்சா எனக்கு நிம்மதியா இருக்க உதவி பண்ணுங்க இல்லைன்னா மொத்தமா நான் போய் சேந்துடுவேன்.. இவங்க கிட்ட இருந்து மாரடிக்க என்னால இனி முடியாது..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் பாத்திரம் எல்லாம் விளக்காமல் இருக்க அதை அள்ளிப்போட்டு துலக்க ஆரம்பித்தாள்.



மாடிக்குச் சென்றவர்கள் அரை மணி நேரத்திற்கு பிறகு கீழே இறங்கி வர,பாத்திரத்தை விளக்கி முடித்துவிட்டு பின்னால் இருந்த கட்டையில் முழங்காலில் முகத்தை புதைத்த படி இனி என்ன நடக்கப் போகிறதோ? என்ற பயத்துடன் சிந்தியா அமர்ந்திருக்க, முதலில் வந்தது என்னவோ சங்கீதா தான்.


அவளை கண்டதும் சிந்தியா பயத்தில் எழுந்து நிற்க, அவளை முறைத்து பார்த்த சங்கீதா பின் வேண்டா வெறுப்பாக அவளிடம் பேச ஆரம்பித்தாள்.



"இங்க உனக்கு என்னதான் பிரச்சினை என்கிட்ட தெளிவா சொல்லிடு சிந்தியா..எங்க அம்மா வயசானவங்க எங்களை வளர்க்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டாங்க எனக்கு எங்க அம்மா ரொம்ப முக்கியம் அவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன்..உனக்கு எங்க அம்மா இந்த வீட்ல இருக்கது பிடிக்கலைன்னா சொல்லிடு நான் கூட்டிட்டு போறேன்.."



"இல்ல இதுவரைக்கும் நான் உங்ககிட்ட அப்படி சொல்லி இருக்கேனா?அவங்க தான் என்கிட்ட தேவை இல்லாம நிறைய பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க இல்லாத பொல்லாத விஷயங்களை எல்லாம் சொல்லி என்னையும் உங்க அண்ணனையும் வாழ விடாமல் பண்ணிக்கிட்டு இருக்காங்க..எனக்கு இந்த வீட்ல உங்க அம்மா இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்ல முதல்ல அவங்கள கேளுங்க நான் இந்த வீட்டில் இருக்கிறது உங்க அம்மாவுக்கு தான் பிடிக்கலை அதனால் தான் இவ்வளவு பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்காங்க.."



"பாத்தியா சங்கீதா நான்தான் சொன்னேன்ல இவ வாயெல்லாம் அடக்கவே முடியாது குடும்ப பொம்பளை மாதிரி பேசுற பொண்ணா இது?"எனவும், சிந்தியா மீண்டும் தன்னால் ஒரு பிரச்சினையை வேண்டாம் என்று அமைதியாகப் போய்விட்டாள்.




"கொஞ்ச நேரம் அமைதியா இருங்க நான் தான் பேசிகிட்டு இருக்கேன்ல.."என்றவள் சிந்தியாவுக்கு அறிவுரை சொல்லிவிட்டு தாய் தந்தை இருவரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்ப அவளை விடவில்லை பரிமளம்.



"எங்க போற நீ இப்ப? வீட்டுக்கு வர்றது எப்பவாவது ஒரு நாள் தான் வந்த உடனே கிளம்ப வேண்டியது.. இங்கே இரு நான் அண்ணனை போய் ஏதாவது வாங்கிட்டு வர சொல்றேன் சாப்டுட்டு சாயந்திரம் போலாம்.."என்று மகள் மருமகன் இருவரையும் செல்ல விடாமல் தடுத்து, சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லிவிட இருவரும் அவரது பேச்சை மீற முடியாமல் இருந்து விட்டார்கள்.



சிந்தியா அவர்களுக்கு பரிமளம் பார்த்து பார்த்து சமைக்கும் பொழுது அவள் அடி மனதில் புகைந்தது.



தன் தாயும் தந்தையும் இவர்களோடு வந்தவர்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல் போயிட்டு வருகிறேன் என்று சொன்னபோது கூட வழி அனுப்ப வராதவர்கள் தங்கள் போக்கில் இருந்து விட்டு இப்பொழுது அவரது மகளுக்கு மட்டும் அவர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய எதுவும் சொல்ல முடியாமல் அவர் சொன்ன வேலைகளை செய்தபடி அமைதியாக இருந்தாள்.



"சரிம்மா நீங்க ஆசைப்பட்டது மாதிரி உங்க கையால ரொம்ப நாளைக்கு அப்புறம் திருப்தியா இன்னைக்கு நானும் என் புருஷனும் சாப்பிட்டாச்சு.. வீட்டுக்கு உன் பேர புள்ளைங்க வந்துடுவாங்க வீட்ல அவசரத்துல யார்கிட்டயும் சொல்லல பக்கத்துல போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துருவோம் பிள்ளைகளை பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு வந்தாச்சு.. இதுக்கு மேல வீட்டுக்கு போகாம இருந்தா இவர்கிட்ட தான் தேவை இல்லாமல் கேள்வி கேட்பாங்க..இங்க நடந்த விஷயம் எதுவும் அங்க தெரிய வேண்டாம் தெரிஞ்சா எனக்கு தான் பெரிய அசிங்கம்.."என்றவள் கணவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.


கணவன் மனைவி இருவரும் செல்லும் பொழுது சுரேஷிடமும் பரிமளத்திடமும் மட்டும் சொல்லிவிட்டு சென்றவர்கள் சிந்தியா நின்றதை சிறிதும் சட்டை செய்யவில்லை.



ஒவ்வொரு முறையும் அவர்கள் தன்னை அவமானப்படுத்துவதை கண்டு சிந்து ரத்தம் கொதித்தது.



அடுத்து வந்த நாட்கள் சிந்தியா எதிர்பார்த்தது போலவே பரிமளம் அவளை விதவிதமாக டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார்.



வேண்டுமென்றே தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு வருபவர் இவள் கண்முன்னே வைத்து அவர் மட்டும் தின்றுவிட்டு மீதத்தை கொண்டு போய் வைத்து பீரோவில் பூட்டினார்.




கரி மீன் என்று வாங்கும்பொழுது அனைத்தையும் எண்ணி எண்ணி வைத்தவர் (இப்படி எல்லாம் செய்ய முடியுமான்னு தயவு செஞ்சு கேட்காதீங்க இதெல்லாம் உண்மையான ஒரு சம்பவம் தான்) மகனுக்கு சோறு போடும் பொழுது நன்றாக அனைத்தையும் எடுத்து வைத்தவர் மருமகளுக்கு சோறு போட்டு கொடுக்கும் பொழுது அனைத்திலும் ஒன்று இரண்டு என்று நாய்க்கு போடுவது போல் கொடுக்க, சிந்தியா பொறுமை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லையை கடக்க ஆரம்பித்தது.



திருமணமான சில நாட்களிலேயே தன் வீட்டிற்கு சென்று விட்டால் அது பெற்றோருக்கு பெரிய அவமானத்தை தேடி தரும் என்று முடிந்த வரை அனைத்தையும் கடந்து செல்ல பழகி கொண்டாள்.



அனைத்து வேலைகளையும் இவர்கள் முடித்துவிட்டு வரும்பொழுது சுரேஷ் அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான்.



திருமணமானது முதல் இப்பொழுது வரை 24 மணி நேரமும் அவன் கைகளில் ஊசலாடிக் கொண்டிருப்பது அவனுடைய மொபைல் போன் மட்டும் தான்.



எத்தனையோ முறை அவனிடம் அதற்காக சண்டை போட்டும் பலன் இல்லாமல் போக அத்தோடு அவன் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை விட்டு விட்டாள்.


இவள் அருகில் வந்ததும் எப்போதும் போல் செல்போனை நோண்டிவிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு இவள் பக்கத்தில் வர, கடமைக்காக அவனோடு எதுவும் செய்யாமல் இசைந்து கொடுத்தாள்.



எப்படியாவது ஒரு குழந்தை வந்து விட்டால் தன் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை அனைத்தும் தீர்ந்துவிடும் என்று குழந்தைக்காக ஏங்க ஆரம்பித்தாள்.




அவளது அந்த ஏக்கம் கானல் நீராகவே மாறி போக மீண்டும் தலைக்கு ஊற்றி விட்டாள்.



வழக்கம்போலாகவே அவளை திட்டி தீர்த்து விட்டான் சுரேஷ்.பரிமளம் தன் பங்குக்கு இன்னும் ஏற்றி விட,எங்கே தனக்கு குழந்தை பிறக்காமல் போய்விடுமோ! என்று மிகவும் பயம் கொண்ட சுரேஷ் மனைவியை வைத்து பார்க்காமல் மனதில் உள்ள காழ்ப்புணர்ச்சி தீரும் வரை திட்டி தீர்த்தான்.



சிந்தியா வழக்கம் போல் கண்ணீர் வடித்தவள் எதுவும் பேசவில்லை.



பேசவில்லை என்பதை காட்டிலும் பேச மனம் இல்லை.



இந்த ஜென்மங்களிடம் பேசி வீணாக தன் சக்தியை குறைத்துக் கொள்வதற்கு பதிலாக அனைத்தையும் கடந்து செல்லலாம் என்ற மனநிலைக்/கு வந்து சேர்ந்து விட்டாள்.



"நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்.."என்று சுரேஷிடம் சிந்து கேட்க, அவளை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தவன் "போய் உங்க அம்மா வீட்டிலேயே உட்கார்ந்துக்க.."என்று கோபமாக சொன்னவன் அவளோடு பேசுவதை அத்தோடு நிறுத்தி விட்டான்.



"அத்தை நாளைக்கு நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்.."



"இதெல்லாம் வந்து எதுக்கு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க போய் உன் புருஷன் கிட்ட சொல்றதோட முடிச்சுக்கோ அவ்வளவுதான்…"
 
"நாளைக்கு உங்ககிட்ட சொல்லலைன்னு நீங்க பிரச்சினை பண்ணக்கூடாது சொல்ல வேண்டிய கடமைக்கு சொல்லிட்டேன் இதுக்கு மேல உங்க விருப்பம் அம்புட்டுத்தேன்.."என்றவள் அவரை கோபப்படுத்திவிட்டு தனது அறைக்கு வர, பரிமளம் பேசிய பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அவளை பின்தொடர்ந்து வந்தது.



"கழுதையை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் இந்த பையன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு தெரியவில்லை..முகரையும் மூஞ்சியையும் பாரு மருமகள்கிற பேர்ல ஒரு தேவாங்கு வீட்டுக்கு வந்து இருக்கு.."என்று அவள் காதில் விழும்படி சத்தமாக திட்ட, அவளுக்கு பக்கத்தில் தான் சுரேஷும் அமர்ந்து கொண்டிருந்தான்.



அவன் அம்மா அவளை அத்தனை தரை குறைவாக திட்ட எதற்கும் வாயை திறக்காமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல் இருக்க,சிந்தியா கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள் முடிவாக ஒரு முடிவை எடுத்துவிட்டு அந்த வீட்டை விட்டு மறுநாள் தனது தந்தையோடு புறப்பட்டாள்.



செல்லும் வழியில் கனகம் மகளிடம் வீட்டில் நடந்த சூழ்நிலைகளை விசாரிக்க,"இல்லப்பா இனிமேலும் அந்த குரங்கு கூட்டத்தில் வாழ என்னால முடியாது..அவங்க அம்மா என்னை ரொம்ப கேவலமா பேசுறாங்க இந்த ஆள் என்கிட்ட பேசுவதே கிடையாது அந்த ஆளுக்கு குழந்தை பெத்து கொடுக்க நான் ஒன்னும் மிஷின் கிடையாது..அவங்க அம்மாவுக்கு சேவை செய்ய நான் ஒன்னும் வேலைக்காரியும் கிடையாது முறைப்படி அந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் போயிருக்கேன் இவங்க என்னை இவ்வளவு கேவலமாக நடத்தும்போது இனிமேல் அந்த வீட்டுக்கு நான் போகவே மாட்டேன்.."என்று சொல்லிவிட, கனகத்திற்கு இங்கு நடக்கும் பிரச்சனைகளை வைத்து மகள் இந்த மாதிரியான முடிவை தான் எடுப்பாள் என்று யோசித்து வைத்திருந்தார்.



இது மகளது வாழ்க்கை.



அவர்களால் முடிந்தவரை அறிவுரையை மட்டும் தான் சொல்ல முடியும் எதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமாகிப் போனால் அவர்களாலும் என்ன செய்ய முடியும்?



அவள் வீட்டிற்கு சென்ற பிறகு தாயிடமும் சகோதர சகோதரிகளிடமும் இதை சொல்லிவிட, திருமணமாகிய சில நாட்களில் அவள் இத்தனை கொடுமைகளை அனுபவித்ததை கேட்டு அனைவரும் கண்ணீர் சிந்தினார்கள்.



ஒரு வாரத்திற்கு பிறகு சீதா சங்கீதாவின் மாமியார் ராணியிடம் அவள் புகுந்த வீட்டில் நடக்கும் கொடுமைகள் அத்தனையும் சொல்லி முடித்தவர் "இதுக்கு நீங்க தான் ஏதாவது ஒரு தீர்வு சொல்லனும் அக்கா என்னால சுத்தமா முடியவில்லை.. பாவம் என் பிள்ளை வாழ முடியாதுன்னு சொல்ற அளவுக்கு அவளை ரொம்ப கொடுமை பண்ணி வச்சிருக்காங்க..என் பிள்ளை வாழ வேண்டிய பிள்ளை வாழ வேண்டிய வயசுல அதை வாழ விடாமல் இவங்க எல்லாரும் பண்ணிடுவாங்க போல இருக்கு.."என்றவர் முகத்தை மூடிக்கொண்டு அழுக,அவர் அழுகையை கண்டதும் ராணிக்கு மனதுக்கு வருத்தமாகி போனது.



"நீ கவலைப்படாத சீதா என்கிட்ட வந்துட்டல்ல இனிமே எதுவாயிருந்தாலும் நான் பாத்துக்குறேன்.. இந்த வீணா போனவனுங்க முதல்ல ஒரு கல்யாணம் பண்ணா போதும் என்று நினைப்பார்கள்..கல்யாணம் முடிஞ்சதும் அவனும் அவன் குடும்பமும் என்னென்ன செய்யணும்னு நினைக்கிறாங்களோ அத்தனையும் செஞ்சு முடிச்சிடுவாங்க.. நீ கவலைப்படாத உன் பிள்ளையை வாழ வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.."என்றவர் சீதா வீட்டுக்கு சென்று, புகுந்த வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று சொன்ன சிந்தியாவிடம் எடுத்து சொல்லி அவளையும் அவள் அப்பாவையும் இவர் அழைத்துக் கொண்டு பரிமளம் வீட்டிற்கு வர, அவர்கள் மூவரும் வருவதை சங்கீதா இவர்களுக்கு தகவலாக சொல்லிவிட இருவரும் இவளை திட்டி தீர்த்தார்கள்.



சொன்னது போலவே ராணி இருவரையும் ஒரு பிடி பிடித்து விட்டார்.



தங்கையின் மாமியாரிடம் இருவரும் வாலாட்ட முடியாதே!



அவர் சொன்ன அனைத்திற்கும் தாயும் மகனும் ஒன்றும் சொல்லாமல் சரி சரி என தலையை ஆட்டியவர்கள் "அவளுக்கு இனிமேல் இந்த வீட்ல எந்த பிரச்சனையும் வராது நாங்க பாத்துக்குறோம்.."என்ற வார்த்தைகள் அவர்கள் வாயிலிருந்து வந்த பிறகு அமைதியாகி போனார் ராணி.



அத்தோடு சிந்தியாவிடமும் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அறிவுரை சொல்லிவிட்டு கனகத்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப, என்னதான் தந்தையோடு வரும்பொழுது தைரியமாக இருந்தாலும் வழக்கம் போல் அந்த வீட்டில் அவர் கிளம்பும்போது அந்த தைரியம் அவளுக்கு காணாமல் போயிருந்தது.



என்ன செய்து என்ன செய்ய?



அவர் அந்த பக்கம் கிளம்பியதும் இருவரும் இவளிடம் பேசவில்லை.


எப்பொழுது போல் வந்த மாமனார் இவள் செய்ததற்காக "உன் படிச்ச திமிர் என் மகன் கிட்ட காட்டுறியா உன்ன மாதிரி ஒரு திமிர் புடிச்ச கழுதையை என் மகனுக்கு கட்டி வச்சி என் புள்ள வாழ்க்கையை சீரழிச்சாச்சு.."என்றவர் அவளை பார்க்க கூட பிடிக்காமல் எழுந்து சென்று விட்டார்.



ஒருவேளை தான் மட்டும் அமைதியாக இருந்திருந்தால் இவர்கள் தன்னிடம் இப்படி பாராமுகம் காட்டாமல் இருந்திருப்பார்களோ என்று அதற்கும் கலக்கம் கொண்டாள்.



"என்னங்க சாரிங்க ஏதோ ஒரு கோவத்துல தெரியாம போய் எங்க வீட்ல சொல்லிட்டேன் இப்படி என்கிட்ட பேசாம இருக்காதீங்க என்னால தாங்க முடியல எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.."என்று கணவனிடம் கெஞ்ச,இவள் ஒவ்வொரு முறையும் அவனிடம் கெஞ்சும் போது மிஞ்ச ஆரம்பித்தான்.



ஒரு கட்டத்தில் தாயும் மகனும் அவளைப் பிடிப்பிடியென பிடித்து விட்டு அதற்கு பிறகு வழக்கம் போல் அவளிடம் பேச ஆரம்பித்து இருந்தார்கள்.



"உங்க அம்மா அப்பா கிட்ட எல்லாம் இனிமேல் போன் பேசக்கூடாது அவங்க வீட்டுக்கு போக கூடாது வீட்ல டிவி எல்லாம் பாக்க கூடாது வீட்டு வேலை மட்டும் தான் செய்யணும் அக்கம்பக்கத்துல பேசுற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது எல்லாத்துக்கும் மேல எங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதை மட்டும் தான் நீ கேக்கணும்.."என்றவன் வரிசையாக கண்டிஷன் போட, முட்டாள் பெண்ணவள் ஒரு பக்கமாக இல்லாமல் கணவனின் அன்பு தனது கிடைக்காமல் போய்விடுமோ என்று தராசு போல் இரு பக்கமும் தடுமாற ஆரம்பித்தாள்.




வழக்கம்போல அடுத்த முறையும் குழந்தை தங்காமல் தலைக்கு குளித்து விட "உனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதான்னு எனக்கு சந்தேகமா இருக்குது போய் டாக்டர் கிட்ட உங்க அம்மா வீட்டில் இருந்து பார்த்து கிட்டு வா.."என்றவன் இவளை வழக்கம்போல் அவளது அப்பாவை வர சொல்லி அழைத்துக் கொண்டு செல்ல சொல்லி விட்டான்.



சீதா கனகம் இருவருக்கும் இவர்களது செயலைக் கண்டு முழுமையாக வெறுத்து போனது.



ஏற்கனவே கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்கள் இவள் பிரச்சனை என்று வரவும் இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாகி போனார்கள்.



இவளைப் பார்த்து திருமணம் செய்து வைத்த சங்கீதா கண்ணன் முழுமையாக ஒதுங்கி விட சீதா கனகம் அவர்கள் தரப்பிலிருந்து ஒரு பத்து பேரை அழைத்துக் கொண்டு இவர்கள் வீட்டிற்கு பஞ்சாயத்திற்கு செல்ல, சிந்தியா தனக்கு நடந்த அத்தனை கொடுமைகளையும் அவர்களுக்கு முன்பாக சொல்ல அது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் பஞ்சாயத்துக்கு வந்த ஆட்கள் சுரேஷின் தாய் வீட்டை விட்டு பிடித்து தள்ளியது வீட்டில் வேலை பார்க்காமல் அவள் இஷ்டத்திற்கு இருக்கிறாள் என்று தன் வாய்க்கு வந்ததை அள்ளி விட, அவர் சொல்வதை மட்டுமே கேட்ட அனைவரும் இவளுக்கு புத்தி சொல்லிவிட்டு வந்தார்கள்.



பஞ்சாயத்துக்கு வந்த ஆட்கள் அனைவரும் தனக்கு சாதகமாக பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த சிந்தியா ரத்தத்தில் ஊறிப்போன புத்தியுடன் அவர்கள் இவளுக்கு புத்தி சொல்லிவிட்டு செல்ல நொந்து போய்விட்டாள்.



சீதா மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுக, சிந்தியா மனநிலை சொல்லவும் தேவையில்லை அப்படியே அவர்களுடைய வீட்டுக்கு போய்விட முடியுமா அவளால்?



அப்படியே இவள் சென்றாலும் கூட வந்தவர்கள் விட்டுவிடுவார்களா என்ன?



எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தவள் இறுதியில் எதை எதை எதையோ நினைத்து "நீங்க கவலைப்படாதீங்க அம்மா இனிமே இது என்னோட வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க.."என்றவள் மனமே இல்லாமல் பெற்றோர்களை அனுப்பி வைத்தாள்.




"நம்ம என்ன நெனச்சி இவர்களை கூட்டிட்டு வந்தோம் எல்லாரும் இப்படி நம்ம கழுத்தை அறுக்கிறது மாதிரி அவங்களுக்கு சாதகமா பேசுவாங்கன்னு யாருமே எதிர்பார்க்கலை.. பார்த்து நடந்துக்க சிந்தியா என்ன தப்பு பண்ணினாலும் அவங்களுக்கு சாதகமா பேசுற ஆள்கள் தான் இங்கு நிறைய பேர் இருக்காங்க.. உனக்குன்னு நானும் உங்க அப்பாவும் மட்டும்தான் இருக்கோம்..இப்ப மட்டும் உன்னை கூட்டிகிட்டு போனா நாங்க தான் உன்னை வாழ விடாமல் கூட்டிகிட்டு வந்துட்டோம்னு பெரிய பிரச்சினை பண்ணி இல்லாத பொல்லாத வார்த்தைகளை எல்லாம் நம்ம தலையில் கட்டிடுவாங்க கொஞ்சம் பொறுத்து போ சாமி.."என்ற கனகம் வழக்கம் போல் மகளை மனமே இல்லாமல் மற்றவர்கள் சொன்னதற்காக அங்கு விட்டு விட்டு சென்றார்கள்.




வீட்டிற்கு சென்ற சீதா கனகம் மனமும் சுத்தமாக தாங்க இயலவில்லை.



கூட வந்தவர்களிடம் தங்களுக்கு சாதகமாக பேசவில்லையே என்று சண்டை கூட போட முடியவில்லை அவர்களால்.



சமூகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நமது இஷ்டத்திற்கு ஒருவரை பேசுவது என்பது இயலாத காரியம்தானே!!




இதற்கு மேல் கடவுள் விட்ட வழி என்று கணவன் மனைவி அவரது பிள்ளைகள் என்று அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள்.



"ஏண்டி பஞ்சாயத்துக்கு வந்த ஆளுங்க எல்லாரும் எனக்கு சாதகமா பேசிட்டு போனாங்க பாத்தியா இல்லையா? இனிமே நீ போய் அங்க என்ன சொன்னாலும் உன் பருப்பு வேகாது வாழனும்னு நினைச்சா இனி நீ வாயையே தொறக்க கூடாது.. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை.. போடுற சோற தின்னுட்டு இந்த வீட்ல நாய் மாதிரி ஒரு ஓரத்துல கெட.. அதுவும் எனக்கு ரெண்டு தங்கச்சிங்க கூட பிறந்த ஒரே காரணத்துக்காக.. உனக்கு நான் பண்ற பாவம் அவங்களை போய் சேரக்கூடாது அந்த ஒரே ஒரு காரணத்துக்காக.. எல்லாரும் சேர்ந்து என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாங்க.."என்ற சுரேஷ் குழந்தை பிறக்கும் வரை இங்கேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு அந்த மாதத்திலேயே ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சிங்கப்பூர் செல்வதற்காக டிக்கெட் பதிவு செய்து விட்டான்.



பரிமளம் அவரது பங்கிற்கு "என் மகன் ஆம்பலடி அவன் ஆயிரம் பேர் கிட்ட கூட போயிட்டு வருவான் உன்னால அந்த மாதிரி போயிட்டு வர முடியுமா நீ பொம்பள பொத்திகிட்டு வீட்ல தான் இருக்கணும்..என் மகன் போயிட்டு வர்ற மாதிரி முடிஞ்சா நீயும் போயிட்டு வா பார்ப்போம்..இனிமேல் நீ எவன் கிட்ட போய் பஞ்சாயத்து சொன்னாலும் உன் மூஞ்சில தான் காரி துப்புவாங்க போடி நாசமா போனவளே.."என்றவர் அவளது முகத்தை பார்க்க கூட பிடிக்காமல் வெளியேறினார்.



அவன் சொல்வதை எல்லாம் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்த சிந்தியா இனி இதுதான் தன் வாழ்க்கை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.



தொலைக்காட்சிகளில் நாவல்களில் படிப்பது போல் எல்லாம் வாழ்க்கை இனிமையாக இருக்காது என்ற நிதர்சனம் அவளுக்கு தெளிவாக விளங்க, தன் வாழ்க்கையை எப்படி வாழ போகிறோம் என்ற பயம் அவளை பெரிதாக ஆட்கொண்டது.


 
அத்தியாயம் 12:



இரண்டு வருடங்களுக்குப் பிறகு,


"என்னங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க இன்னும் சீக்கிரம் கிளம்புங்க புள்ளை இன்னைக்கு தான் ஊருக்கு வரான்.. அவனைப் பார்த்து ரெண்டு வருஷத்துக்கு மேல முடிஞ்சிடுச்சு.. என் மகனை பார்க்கணும் சீக்கிரம் கிளம்புங்க 10 மணிக்கு எல்லாம் திருச்சி வந்துடுவேன்னு சொல்லிட்டான் இப்பவே மணி ஏழு ஆயிடுச்சு. நம்ம இப்ப கிளம்பினால் தானே ஏர்போர்ட் போக நேரம் இருக்கும்.."என்ற பரிமளம் போன மாதம் அவன் அனுப்பி இருந்த பணத்தில் புதிதாக வாங்கியிருந்த பட்டுப் புடவையில் நகைகள் பளபளக்க தயாராகி நின்று கொண்டிருந்தார்.



அவருக்கு இணையாக அவரது கணவர் பழனியும் வெள்ளை வேட்டி சட்டையில் தலையில் கருப்பு நிற டை அடித்து பர்பெக்ட்டாக கிளம்பி இருந்தார்.



கிளம்பிக் கொண்டிருந்த தாய் தந்தை இருவரிடமும் தன் பிள்ளைகளை கொடுத்த பிரியா அவளது தாய் அவளுக்கு புதிதாக வாங்கி கொடுத்திருந்த பட்டுப்புடவையை கட்டிக்கொண்டு அவளும் கிளம்பி கொண்டிருக்க, அவளது கணவன் ஜம்பமாக அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான்.



"சங்கீதா உன்கிட்ட மறுபடியும் கேட்கிறேன் கோச்சுக்காம சொல்லுடி.. என்னதான் இருந்தாலும் அவ அவனோட பொண்டாட்டி அவகிட்ட அவ புருஷன் வர செய்தியை சொல்லாமல் இருக்கிறது அவ்வளவு நல்லாவா இருக்கு?"



"நீங்க உங்க வேலைய பாருங்கம்மா அண்ணன் இங்க இருக்கும் போது அவனை எவ்வளவு பாடு படுத்துச்சு அந்த புள்ள.. அப்பன் வீட்டுக்கு போய் ரெண்டு வருஷம் வாழவெட்டியா இருந்து கூட கொஞ்சமும் அடங்காம அதே மாதிரி ஈசி கிட்டு திரியுது.. அண்ணன் வந்ததுக்கு அப்புறம் அது என்ன முடிவு சொல்லுதோ அதுவே இருக்கட்டும் நம்ம இதுல அவசரப்பட ஒன்னும் இல்லை.."என்ற சங்கீதா புடவை மடிப்பை சரி பார்த்துக் கொண்டிருக்க, மகள் சொன்னதற்கு மறுபேச்சு ஏதும் சொல்லாமல் அமைதியாகி போனார் பரிமளம்.


"இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது எனக்கு நம்ம குடும்பத்துல இப்படி எல்லாரும் ஒண்ணா இருந்து எத்தனை வருஷம் ஆயிடுச்சு.. ஆள் ஆளுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் ஒவ்வொரு பக்கம் போயிட்டீங்க..நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் வயசான காலத்துல தனியா இருந்தோம் வீட்டுக்கு வந்த மருமக குலசாமியா இருக்க வேண்டிய இடத்துல போய் அப்பன் வீட்ல உட்கார்ந்து இருக்கு..இவளை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு எங்களோட சந்தோசம் போனது மட்டும்தான் மிச்சம்..அதனால மாப்பிள்ளைங்க என் பொண்ணுங்க என்னோட செல்ல பேரன் பேத்திகள் எல்லாரும் இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் தான் போகணும் அதுவரைக்கும் யாரையும் நான் போக விட மாட்டேன்.."என்றார் உறுதியாக பழனி.



அவர் சொன்னதைக் கேட்டு யாவரும் புன்னகைக்க, நல்லபடியாக அனைவரும் சுரேசை வரவேற்பதற்காக விமான நிலையம் கிளம்பி சென்றார்கள்.



இங்கு சீதா வீட்டில் எப்போது போல் ஒரு மூலையில் இரு முழங்கால்களையும் கட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் சிந்தியா.



இரண்டு வருடங்களில் முழுமையாக ஒருவர் உயிரோடு மரணிக்க முடியும் என்பதை நிரூபித்து இருந்தாள்.



அவளின் நிலைமையை அப்படி மோசமாக மாற்றி இருந்தார்கள் அங்கிருந்தவர்கள்.



சுரேஷ் சொன்னது போலவே இவளை இங்கே இருந்தாலும் சரி உன் வீட்டில் இருந்தாலும் சரி அது உன் விருப்பம் என்றவன் அடுத்த மாதமே சிங்கப்பூர் கிளம்பி சென்று விட்டான்.



கணவன் கிளம்பி விட்டான் இனிமேல் தான் தன் வீட்டில் தன் விருப்பத்திற்கு இருக்கலாம்.


தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சந்தோசத்தோடு தன் தந்தையுடன் தன் வீட்டை நோக்கி பறந்து கொண்டிருந்தது அந்த பறவை.



ஆரம்ப 10 நாட்களில் ஒன்றும் தெரியவில்லை தான்.



நாளாக ஆக அவள் அங்கேயே இருக்கவும் அதுவும் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவள் தன் பிறந்த வீட்டில் முழுமையாக தங்க, அனைவரும் கண் காது மூக்குவாய் என்று அனைத்தையும் வைத்து பேச ஆரம்பித்தார்கள்.



முதலில் அவர்கள் பேசுவதை எல்லாம் சாதாரணமாக கடக்க நினைத்தவள் நாள் ஆக ஆக அந்த பேச்சின் வீரியங்கள் தாங்க முடியாமல் அவள் மனம் ரணப்பட ஆரம்பித்தது.



அவளோடு சேர்த்து அவளது பெற்றோர்கள் தங்கை தம்பி என்று அனைவரிடமும் இவளை பற்றி அனைவரும் விசாரித்தவர்கள் இரண்டு மாதங்கள் கடந்து சென்ற நிலையில் இவளுக்கு வாழாவெட்டி என்ற பட்டம் கொடுத்தவர்கள் இவளை வெளியில் பார்த்தால் ஏதோ பார்க்க கூடாத ஒன்றை பார்த்தது போல் செல்ல, அந்த நிமிடம் சிந்தியா தான் பெண்ணாக பிறந்ததை எண்ணி முழுமையாக வெறுத்துப் போனாள்.



எத்தனையோ படிப்புகள் படித்திருந்தாலும் இது போல் ஒரு சம்பவம் வரும் பொழுது எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் நொந்து தான் போவார்கள்.



அவள் கஷ்டம் அவள் பெற்றோரில் இருக்க பார்த்துக் கொள்வது பெற்றோருடைய பொறுப்பாக இருக்க இருவருக்குமே இதில் சிரமம் இல்லாமல் இருக்க மற்ற அனைவருக்கும் ஏதோ அவள் தன் வீட்டில் வந்து இருந்து கொண்டு ஓசியில் சாப்பிட்டு விட்டு தங்குவது போல் அனைவரும் சலித்துக் கொண்டார்கள்.



ஒரு கட்டத்திற்கு மேல் இவள் ஆண்களிடம் பேசினால் கூட தப்பாக பேச ஆரம்பித்தார்கள்.



அவர்கள் அப்படி பேசுவதை கண்டு வெளியிலேயே வருவதை விட்டுவிட்ட சித்தியா முழுமையாக தன் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தாள்.


வெளிநாட்டிற்கு சென்றவன் பெற்றோர்கள் கூட பிறந்தவர்களுக்கு தினமும் பேசியவன் தான் தொட்டு தாலி கட்டிய மனைவி ஒருத்தி இருப்பதை சுத்தமாக மறந்து போனான்.



ஆறு மாதங்கள் கடந்து செல்வதற்குள்ளாக சிந்தியா மொத்தமாக நொடிந்து போய்விட்டாள்.



அவளோடு சேர்ந்து அவள் பெற்றோர்களும் படும் இன்னல்களை பார்த்தவள் தன்னால் அவர்களுக்கு பிரச்சனை வேண்டாம் என்று விருப்பமே இல்லை என்றாலும் மறுபடியும் புகுந்தகம் கிளம்பி வந்தாள்.



இவளைக் கண்ட மாமனார் மாமியார் இருவரும் வா என்றும் சொல்லவில்லை போ என்றும் சொல்லவில்லை.



அவர்கள் பாட்டுக்கு அவர்கள் இருந்தார்கள்.



சிந்தியா தந்தை தான் அவர்களிடம் மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, பரிமளம் குத்தலாக "ஆறு மாசமும் உங்க மகள நீங்க நல்லபடியா பாத்துக்கிட்டது மாதிரி அவன் வர வரைக்கும் கூட்டிப் போய் வச்சு நீங்களே பாத்துக்க வேண்டியது தானே எதுக்கு இங்க கொண்டு வந்து விட்டீங்க?"என்றார்.



அவரது பேச்சுக்கு பதில் கொடுக்க முடியாமல் தலை குனிந்த படி கனகம் அந்த வீட்டில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.



தினமும் மூன்று வேளையும் பழைய சாதம் வாடிக்கையாக்கிப் போக ஏதோ வயிற்றுக்கு தின்றுவிட்டு அங்கேயே ஒரு வேலைக்காரி போல் தன் வாழ்க்கையை வாழ தொடங்கினாள்.



சுரேஷ் அன்று போன் செய்யும் பொழுது பரிமளம் இவள் வந்த விஷயத்தை அவனிடம் மூச்சு கூட விடாமல் இருப்பதை கண்ட சிந்தியா, தான் இங்கு இருப்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக பரிமளத்திடம் வேண்டுமென்றே ஒரு பொருளை கேட்க,தான் போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தொந்தரவு செய்வது போல் அவள் வந்து பேசியதும் கோபமாக அவளை பார்த்த பரிமளம் முறைத்து பார்த்துவிட்டு மகனிடம் பேச்சை தொடர்ந்தார்.



அவளது குரலை சுரேஷ் கேட்டாலும் சிறிதும் அவளைப் பற்றி விசாரிக்காமல் தாய் தந்தையிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.



ஆறு மாத காலமாக அவனிடம் பேச வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த சிந்தியா இன்று அவனாக பேசவும்,தானும் அவனோடு பேச வேண்டும் என்று ஆசை கொண்டவள் வேண்டுமென்றே பரிமளத்திடம் பேச,இறுதிவரை இவளிடம் பேசாமல் அவன் அழைப்பை துண்டிக்கவும் அவள் மனதில் இருந்த ஆசைகளும் துண்டித்து போயின.



அவன் பணம் சம்பாதிக்கிறானா? இல்லையா? இருக்கிறானா? இல்லையா? என்று தெரியாத அளவிற்கு அந்த வீட்டில் ஒடுக்கப்பட்டாள் சிந்தியா.



ஒரு கட்டத்திற்கு மேல் இனிமேலும் வாயை மூடி அமைதியாக இருப்பது பலனளிக்காது என்று வாயை திறந்தாள்.



"ஏத்தை என் வீட்டுக்காரர் போய் ஆறு மாசம் ஆச்சு.. இதுவரைக்கும் சம்பளம் போடாம இருக்காரா என்ன? எனக்கு ஏதாவது பணம் கொடுக்க சொல்லி உங்க மகன் கிட்ட சொல்லுங்க நீங்க தானே உங்க மகன் கிட்ட ஒரு நாளைக்கு 50 வாட்டி பேசுறீங்க..கட்டின பொண்டாட்டி நான் குத்துக்கல் மாதிரி இருக்க உங்க மகன் கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது சரி போயிட்டு போது எனக்கு அதெல்லாம் தேவையில்லை எனக்கு செலவுக்கு பணம் தேவைப்படுது குடுங்க.."எனவும் அவளை வெட்டும் பார்வை பார்த்தார் பரிமளம்.



"என்னம்மோ உங்க அப்பன் வீட்ல அப்படியே தங்கமும் வைரமும் வாங்கி மாட்டிக்கிட்டது மாதிரி இங்க வந்து காசு கேட்கிற?உனக்கு எதுக்கு காசு உனக்கு என்ன செலவு இருக்கு அதெல்லாம் கொடுக்க முடியாது அப்படி வேணும்னா உன் புருஷன் கிட்ட நீயே பேசிக்க நான் எல்லாம் பேச முடியாது.." என்றார்.



சிந்தியா மனமோ அந்த நிமிடம் முழுவதும் மாற ஆரம்பித்தது.



நன்றாக இருந்த பெண்ணின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக சிதைய அவளது மனதில் இருந்த நல்ல எண்ணங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கெட்ட எண்ணங்கள் வளர ஆரம்பித்தது.




கணவன் அவன் தாயிடம் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் பேசுவதை கண்டு அவரை எள்ளலாக பார்க்க ஆரம்பித்தாள்.



'இவனுக்கு நான் பொண்டாட்டியா இல்ல அவங்க அம்மா பொண்டாட்டியா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் அந்த நொடியே தான் அப்படி கேவலமாக நினைத்ததை எண்ணி தலையில் தட்டிக் கொண்டாள்.



அது ஆரம்பமாக இருக்க போகப்போக இன்னும் மோசமான எண்ணங்கள் அவள் மனதில் தோன்ற ஆரம்பித்தது.



அதேபோல் பரிமளமும் இரு மகள்களிடமும் சிந்தியா மனம் நொந்து போக வேண்டும் என்பதற்காகவே தினமும் உங்கள் அண்ணன் என்ன சொன்னான் என்னிடம் இதை சொன்னான் என்று இதைப்பற்றி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக, அவர்களது மகள்களிடம் பேசிக் கொண்டிருக்க, அதையெல்லாம் கேட்டு கேட்டு சிந்தியா மனதில் தவறான எண்ணங்கள் எல்லாம் அலை அலையாய் உலா வர ஆரம்பித்தன.




ஒரு கட்டத்திற்கு மேல் அவளது வாழ்க்கையே அவளுக்கு முழுமையாக வெறுத்து போனது.



எத்தனை நாட்கள் பழைய சாதத்தை மட்டுமே தின்று கொண்டு இருப்பது.



வீட்டில் மாமனார் மாமியார் இருவரிடமும் சண்டை போட்டு விட்டு தன் வீட்டிற்கு கிளம்பி சென்றவள் தனக்கு பார்த்து திருமணம் செய்து வைத்த சங்கீதாவை அவள் குடும்பத்தாரின் முன்னிலையில் "என் புருஷன் கிட்ட போன் போட்டு தினமும் நீயும் உங்க அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கீங்களே!அப்போ கட்டின பொண்டாட்டி நான் உயிரோட இருக்குறது உங்க அண்ணன் கண்ணுக்கு தெரியலையா இல்ல அவிஞ்சு போச்சா.."என்றவள் தன் மனதில் உள்ள கோபங்கள் அனைத்தையும் கொட்டி விட்டு அவர்கள் யாரையும் திரும்பி கூட பார்க்காமல் தன் வீட்டிற்கு சென்றாள்.



தன் குடும்பத்தாரின் முன்னிலையில் அதுவும் மூத்த மருமகளாக இத்தனை நாட்களாக இந்த வீட்டில் தனக்கு இருந்த மரியாதை அத்தனையையும் சிந்தியா நாசமாக்குவது போல் பேசியதை கேட்டு அழுது கொண்டிருந்த,சங்கீதா அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அண்ணன் அம்மா இருவரிடமும் சொல்லி விட இருவரும் சிந்தியாவை கேவலமாக திட்டி தீர்த்தார்கள்.



"இவ நம்ம கிட்டயே இவ்வளவு வாய் பேசும் போது கட்டின புருஷன் கிட்ட மட்டும் அமைதியா இருந்து இருப்பாளா என்ன? அவனை என்னென்ன கொடுமை பண்ணி வச்சாளோ அவன் வெளிநாட்டுக்கு போயிட்டான்.."என்று அவளைப் பற்றி தப்பும் தவறுமாக அனைவரும் பேச ஆரம்பிக்க, மற்றவர்கள் தங்கள் மகளைப் பற்றி தவறாக பேசுவதை கண்ட சீதா தன் கோபம் மொத்தத்தையும் மகள் மீதுதான் காட்டினார்.



"ஏண்டி எடுபட்ட சிறுக்கி உன்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் கல்யாணம் பண்ணிக்கிட்டு போன இடத்துல கூடவும் இருக்கும் குறைச்சும் இருக்கும் லாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும் எல்லாத்தையும் சமாளித்து அதில் நீந்தி வருவதற்கு பெயர் தான் கல்யாண வாழ்க்கை..எத்தனையோ தடவை உன்கிட்ட படிச்சு படிச்சு சொல்லியும் கேட்காம இப்ப எங்க வந்து விட்டு இருக்க பாரு? உன்னால என் புருஷனுக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு இப்படியே போனா என்ன ஆகப்போகுதுன்னு தெரியல ஐயோ கடவுளே.."என்று சீதா தலையில் அடித்துக் கொண்டு அழுக, கனகம் மனைவியை திட்டி விட்டு மகளது தலையை வருடி கொடுத்தார்.



"சும்மா இரு சீதா நமக்கு நம்ம பொண்ணு உயிரோட இருந்தா போதும்..அதெல்லாம் ஒரு குடும்பமா திங்கிறதுக்கு ஒரு வேள சோறு கூட போடலைன்னா இவனுங்க எல்லாம் எப்படி இவளை காலம் பூரா வச்சு குடும்பம் பண்ணுவானுங்க எதுவா இருந்தாலும் நம்ம பொண்ணு நம்ம கண்ணு முன்னாடி உயிரோட இருக்கட்டும். அது மட்டும் போதும்..அவன் வந்ததும் பொண்டாட்டி வேணும்னா வந்து கூட்டிட்டு போகட்டும் இல்லையா வேணாம்னு சொன்னா அறுத்துவிட்டு போகட்டும்.."என்றவர் அத்தோடு இந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.



இப்படியாக அடுத்த ஒரு வருடங்களும் கடந்து சென்ற நிலையில், சிரிப்பு என்ற ஒன்றை மறந்து எந்த நேரமும் வெறித்த பார்வையுடன் அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தாள்.



தன்னால் பெற்றோர்களும் கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவிப்பதை கண்டு அவள் மனதில் திடமான ஒரு முடிவு வந்தமர்ந்தது.



சுரேஷ் வரும் தகவல் சங்கீதா குடும்பத்தின் வாயிலாக அவளுக்கு கிடைக்க, இதற்காகவே காத்திருந்தார் போன்று இரண்டு நாட்களுக்குப் பிறகு அவனது வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.



கணவனை கண்டதும் அவள் சந்தோஷமாக செல்ல இவளை பார்த்தும் பார்க்காதது போல் தனது அலைபேசியை எப்போது போல் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் "அம்மா யாரோ வீட்டுக்கு வந்து இருக்காங்க பிச்சை வேணும்னா போட்டு அனுப்புங்க.. இப்பல்லாம் வரவர பிச்சைக்காரங்க வீட்டுக்குள்ள வர அளவுக்கு வந்துட்டாங்க கருமம்..இதுக்கு தான் கதவை சாத்தி வைக்கணும் உங்க இஷ்டத்துக்கு தொறந்து போட்டுட்டு வாங்க.."என்று தாயை திட்டியவன் அவனது அறைக்குச் சென்று விட்டான்.


பரிமளம் அவளை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் சட்டமாக இருக்கையில்
அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, கண்களில் வழிந்த கண்ணீரை சுண்டி எறிந்த சிந்தியா எடுத்த திடமான முடிவுடன் தனது அறைக்கு சென்றாள்.



அங்கு சுரேஷ் இவள் உள்ளே வருவதை கண்டதும் அருவருப்பாக முகத்தை சுழித்துக் கொண்டு திரும்பி படுத்தவன் போனில் இன்னும் ஆழ்ந்து போனான்.



அவனது செய்கை அவளது மனதிற்கு இன்னும் வேதனைகளை அள்ளித்தர, கண்களை மூடி திறந்தவள் இதழ்களோ வன்மமாக ஒரு புன்னகையை சிந்தியது.



அதன் பிறகு அவளை சாப்பிடும் பொழுதும் சரி, மற்ற வேலைகளை பார்க்கும் பொழுதும் சரி, அவளை ஒரு பொருட்டாக கருதாமல் அவரவர் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.




அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பத்து நாட்களை பல்லை கடித்துக் கொண்டு ஓட்டிய சிந்தியா இவளை பத்து நாட்களாக விலக்கி வைத்த படி தனியாக கீழே படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவனை ஒரு நிமிடம் அவன் மீது இருந்த அன்பில் பார்த்தவள் அதன் பிறகு வன்மமாக புன்னகைத்தபடி கையில் மறைத்து வைத்திருந்த தூக்க மாத்திரையை எடுத்தாள்.




அதற்கு முன்பாக சுரேஷ் வைத்திருந்த செல்போனை திருடன் போல் மிகவும் சிரமப்பட்டு திருடி கொண்டவள் குளியலறைக்கு சென்று செல்லில் வீடியோவை ஆன் செய்தவள் என்ன பேச வேண்டும் என்பதை மனதில் ஒரு நிமிடம் ஓட்டி பார்த்துக் கொண்டு மனதில் நினைத்ததை அப்படியே பேச ஆரம்பித்தாள்.



"வணக்கம் என்னோட பெயர் சிந்தியா எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு..கல்யாணமான ரெண்டு வருஷத்துல என்கிட்ட நிறைய வரதட்சணையை கேட்டு என்னை ரொம்பவே கஷ்டப்படுத்தினாங்க என்னோட ஹஸ்பண்ட் எனக்கு சப்போர்ட்டா இல்லாம என்னை விட்டுட்டு ஃபாரின் போயிட்டு வந்தவர் இப்ப வரைக்கும் என்னை விலக்கி வச்சிருக்கார்.. என்னோட மாமியார் இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லிக் கொடுத்து என் புருஷனோட மனசை கலைச்சு என் கூட சேர்ந்து வாழ முடியாத அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க..",



"மூணு வேளையும் எனக்கு சாப்பிடறதுக்கு பழைய சோறு மட்டும்தான் தருகிறார்கள் வேறு எதுவுமே இங்கே கிடையாது ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன் என்னால என்னோட அப்பா அம்மாவுக்கும் ரொம்ப கஷ்டம் என்னால இனிமே யாருக்கும் கஷ்டம் வேண்டாம்.. என்னோட சாவுக்கு காரணம் என்னோட புருஷன் மாமியார் மாமனார் நாத்தனார் இவங்க எல்லாரும் தான் இவங்க எல்லாரும் கூட்டம் போட்டு தான் என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாங்க.. ஒரு ரூம்லயே போட்டு அடைத்து வைத்து கொஞ்சம் கூட என்னை யோசிக்க விடாமல் நிம்மதியா இருக்க விடாம என்ன என்ன பண்ண முடியுமோ அத்தனையும் இந்த குடும்பத்துல இருக்க எல்லாம் பண்ணி முடிச்சுட்டாங்க இதுக்கு மேல என்கிட்ட இழப்பதற்கு எதுவும் இல்லை.. கடைசியா ஒன்னே ஒன்னு இந்த வீடியோ பாக்குற எல்லாரும் நீங்கதான் எனக்கான நியாயத்தை வாங்கி தரணும்.. வரதட்சனை கேட்டு கடைசியா போற உயிர் என்னோட உயிரா மட்டும் இருக்கட்டும்.. கல்யாணம் ஆகாத ஆண்களே உங்களோட அம்மா உங்களுக்கு ரொம்ப முக்கியம் தான் அதே நேரம் உங்களை கல்யாணம் பண்ணி வர்ற பொண்டாட்டியும் உங்களுக்கு முக்கியம் தானே உங்களை நம்பி தானே எல்லாத்தையும் நாங்க விட்டுட்டு வர்றோம்..அப்படி இருக்கும் போது நீங்கதானே புகுந்து வீட்டில் எங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் எங்களுக்கு ஆதரவா இருந்து பேசணும்..உங்களால் அப்படி எல்லாம் முடியாது எங்க அம்மா சொல்ற பேச்சை கேட்டு அவங்களுக்கு கீழ்ப்படிந்து தான் நடக்கணும்னு நினைக்கிறவங்க தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்காதீங்க.. ஒரே ஒரு நிமிஷம் நீங்க எல்லாரும் யோசிச்சு பாருங்க நீங்க மட்டும் தனியா இருக்கும்போது உங்க உறவுக்காரங்க எல்லாரும் சந்தோஷமா பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கும்போது உங்க மனநிலையை எப்படி இருக்கும்.. ரொம்பவே நொந்து போய் இப்ப தற்கொலை முடிவு எடுக்கிறேன் இந்த வீடியோ பார்க்கிற எல்லாரும் தயவு செஞ்சு என்ன போல கல்யாண வாழ்க்கையில் நுழைந்து அதில் இருந்து வெளியே வர முடியாமல் கஷ்டப்படுற அத்தனை பேருக்கும் என்னுடைய முடிவு ஒரு சமர்ப்பணமா இருக்கட்டும்.."என்று முடிந்தவரை சத்தம் வராமல் பேசி முடித்தவள் அதை போலீஸ் நம்பருக்கும் தனது பெற்றோர் நண்பர்களுக்கும் அவளுக்கு தெரிந்த நம்பர் அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் ஃபார்வேர்ட் செய்தவள் அப்படியே அதை முகநூலிலும் வேக வேகமாக பதிவேற்றம் செய்துவிட்டு அலைபேசியை அணைத்துவிட்டு படுக்கைக்கு வர,அவளது நல்ல நேரம் சுரேஸ் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தான்.



அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு வேதனை தாங்க முடியவில்லை.



எத்தனையோ ஆசைகள் கொண்டு திருமணம் செய்து கொண்டு வந்தவள் தன் ஆசைகள் அனைத்தும் கானல் நீராக மறைந்து போனதை எண்ணி மனம் நொந்து இனிமேலும் இந்த உலகத்தில் வாழ கூடாது என்ற முடிவுடன் கையில் வைத்திருந்த விஷத்தை அருந்தி படுத்தவள் மனக்கண்ணில் இறுதியாக ஒரு முறை அழுதபடி இருந்த பெற்றோர்கள் நினைவு வர, அவர்களை நினைத்து அழுதாள்.
 
'தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க அப்பா அம்மா நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச காலத்துக்கு அழுதுட்டு அதுக்கப்புறம் என்னை மறந்து வாழ்க்கையில் முன்னேறி போயிடுவீங்க உயிரோட இருந்து காலம் முழுக்க உங்களுக்கு வலியையும் வேதனையும் கொடுக்கிறதுக்கு பதிலா நான் பாதியோட போறேன்..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் சொருக ஆரம்பிக்க உயிர் அவள் உடலில் இருந்து வெளியேற ஆரம்பித்தது.



மறுநாள் காலையில் நேரமே இவள் எழுந்து கொள்ளாமல் 9 மணி வரை படுத்திருப்பதை கண்டு பரிமளம் எப்போதும் போல் திட்ட, சுரேஷ் அவளை வந்து கோபமாக எழுப்பினான்.



அவனும் எட்டு மணிக்கு தான் எழுந்திருந்தான். அலைபேசியில் சார்ஜ் இல்லாத காரணத்தினால் அலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தவன் பரிமளம் மனைவியை திட்டவும் அவனும் கோபமாக அவளை வந்து எழுப்பினான்.



அவன் என்ன எழுப்பியும் சிறிதும் பதில் இல்லாமல் படுத்திருந்த மனைவியை கண்டு அவன் மனதில் கிலி பிடித்தது.



தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தும் எந்தவிதமான அசைவும் இல்லாமல் அவள் படுத்து இருப்பதை கண்டு பயம் கொண்டவன் வேகமாக வெளியில் வந்து தாயிடம் விஷயத்தை சொல்ல, பரிமளமும் சர்வ சாதாரணமாக அவள் நாடகம் போடுகிறாள் என்று நினைத்துக் கொண்டு மகனிடம் அவளைப் பற்றி தப்பு தப்பாக பேச சரியாக உள்ளே வந்தார்கள் சீதா கனகம் இருவரும்.



அவர்களோடு சேர்ந்து இன்னும் பிற சொந்தங்களும் வந்திருக்க, அவர்களை திடீரென்று அங்கு பார்த்த சுரேஷ் பரிமளம் இருவரும் திகைத்துப் போனார்கள்.



"ஐயோ என் சாமி என் கூட விளக்கே என்னை பெத்த ராசாத்தி என்னை விட்டு போயிட்டியே.."என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுக,கனகம் வாயில் துண்டை வைத்து அழுத்தியபடி அழுக அவளோடு வந்திருந்த இன்னும் சிலர் பிணமாக கிடந்த சிந்தியாவை பார்த்து தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுக,அவர்கள் எதற்காக அழுகிறார்கள் என்று அப்பொழுதும் புரியாமல் நின்று கொண்டிருந்தார்கள் பரிமளம் சுரேஷ் இருவரும்.



"ஏண்டா பாவி எங்க பொண்ணை உனக்கு சந்தோசமா இருக்குறதுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா இப்படி அநியாயமா எங்க பொண்ணு உயிரை எடுத்துட்டியே!வாழை குருத்து மாதிரியே வாழ வேண்டிய பொண்ணு வாழ வேண்டிய வயசுல தூக்கி கொடுத்துட்டோமே!"என்றவர் சுரேஷ் கன்னத்தில் அடிக்க,சுரேஷ் அவர் எதற்காக தன்னை அடிக்கிறார் என்று புரியாவிட்டாலும் தன் மீது கை வைத்தவர் மீது அவனுக்கு கோபம் வர அவனும் பதிலுக்கு அடிக்க அந்த இடமே கைகலப்பானது.



"டேய் எங்க வீட்டு ஆளு மேல நீங்க எப்படி கை வைக்கலாம்?"என்று அங்கு ஒரு உயிர் பலியானதை கூட கணக்கில் கொள்ளாமல் நீ பெரிதா! நான் பெரிதா! என்று போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்க, அவர்களை தடுத்து நிறுத்துவது போல் வந்தார்கள் போலீஸ்.



போலீஸ் வருவதை கண்டதும் அதுவரை சத்தம் கொடுத்துக் கொண்டிருந்த அனைவரும் செம்மறி ஆட்டு கூட்டம் போல் அமைதியாக ஒதுங்கிப் போனார்கள்.



பிணமாக இருந்த சிந்தியாவை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தவர்கள் அதற்கு காரணமாக இருந்த சுரேஷ் அவன் தாய் என இருவரையும் கைது செய்து கொண்டு அத்தோடு அவரது தந்தை பழனியையும் அவர் இருக்கும் இடத்தில் சென்று கைது செய்து அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள்.


"சார் எதுக்கு தேவையில்லாமல் என்னையும் எங்க அம்மாவையும் அரெஸ்ட் பண்ணீங்க..அங்கே என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல போல இருக்கு அவங்க அம்மா குடும்பம் எல்லாரும் வந்திருக்காங்க நான் போய் என் மனைவியை பார்க்கணும் என்னை விடுங்க.."என்றவன் கன்னத்தில் ஒரு அறை விட்டார் அந்த லேடி இன்ஸ்பெக்டர்.


அவர் விட்ட அறையில் அவனுக்கு பொரி கலங்கி போனது.



அவனுக்கு விழுந்த அறையில் பரிமளம் வாய் தன்னால் பயத்தில் இறுக்கமாக மூடிக்கொண்டது.



"ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர்றது அதுக்கப்புறம் எங்க அம்மா பேச்சைக் கேளு ஆட்டுக்குட்டி பேச்சைக் கேளுன்னு வீட்டுக்கு வர்ற பொன்னை டார்ச்சர் செஞ்சு அவளை இப்படி சாகுற அளவுக்கு கொண்டு போறீங்களே நீங்க எல்லாம் மனுஷ பிறவிகள் தானே?ஏம்மா நீயும் ஒரு பொண்ணு தானே எப்படி ஒரு பொண்ணா இருந்துகிட்டு உன்னால வீட்டுக்கு வந்த உன் மருமகளை இப்படியெல்லாம் கேவலமா கொடுமை பண்ண முடிஞ்சது.. நீங்க பண்ண அத்தனை தப்புக்கும் ரெண்டு பேருக்கும் ஸ்டேஷன்ல இருக்கு வாங்க.."இருவரையும் காட்டமாக பார்த்துவிட்டு முன்னால் திரும்பி கொண்டார்.



இவர் சொன்னதை கேட்ட பிறகுதான் சுரேஷுக்கு தன் மனைவி தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்ட விஷயமே தெரிந்தது.



அதிலும் அவள் கூடவே இரவும் முழுவதும் உறங்கி காலையில் அவள் எழுந்து கொள்ளவில்லை என்று அதற்கு தானும் தன் தாயும் வசை பாடியது எல்லாம் அவனுக்கு நினைவு வந்து போக தலையை அப்படியே பிடித்துக் கொண்டான்.



அவளோடு வாழ்ந்த வாழ்க்கையில் அவளுக்கு செய்த அத்தனை கொடுமைகளும் அவனுக்கு கண் முன்னால் வந்து போக, என்ன முயன்றும் அவனால் தன்னால் ஒரு உயிர் போனதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


பரிமளம் மணமோ 'செத்தது தான் செத்து ஒழிந்தால் சாகும்போது கூட எங்களை நிம்மதியாக இருக்க விடாமல் இப்படி போலீஸ்ல மாட்டி விட்டுட்டு போய் சேர்ந்துட்டா இவளுக்கெல்லாம் நரகம் தான் கிடைக்கும்..' என்று அப்பொழுதும் ஒரு உயிர் போனதை நினைத்து கவலைப்படாமல் அவளை மனமார சபித்தார்.





உயிரற்ற சடலமாக இருந்த தன் மகளை பார்த்த சீதா சிந்து அவர் வயிற்றில் உதித்தது முதல் பிறந்த நொடி கையில் வாங்கியது முதன்முதலாக அவளுக்கு மொட்டை போட்டது காது குத்தியது பெரிய பெண்ணாக வந்த போது விசேஷம் செய்தது என அத்தனையும் நினைவு வந்து போக, இறுதியாக அவளுக்கு திருமணம் செய்யும் பொழுது பிரியும் தருணங்கள் கண்ணீர் வடித்து தருணங்கள் எல்லாம் நினைவு வந்து போக அவரது உணர்வுகளும் உணர்ச்சிகளையும் தன்னோடு எடுத்துக் கொண்டு சென்றிருந்தாள் சிந்தியா.




கனகத்தின் நிலைமை சொல்லவும் தேவையில்லை.



தன் உயிருக்கு உயிரான தன் முதல் குழந்தை வாழ வேண்டிய வயதில் இப்படி தன்னை விட்டுப் போனதை தாங்கிக் கொள்ள முடியாமல் வாயிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதார்.



அவளைப் பற்றி தப்பு தப்பாக பேசிய சொந்தங்கள் யாவும் இப்பொழுது அவள் உயிர் பிரிந்ததும் அவளை பெரிய தியாகி போல் பேச ஆரம்பித்தார்கள்.



அவளை அப்படியே சடலமாக எடுத்துக் கொண்டு தங்கள் ஊரை நோக்கி புறப்பட்டு சென்றார்கள்.



இந்த முறை வரும்போது தன் மகள் நல்ல செய்தியோடு அவள் கணவனை அழைத்துக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவளது சொந்தங்கள் இப்படி சடலமாக வருவதை கண்டு தாங்க முடியாமல் துடிதுடித்து அழுது கொண்டிருந்தார்கள்.




இந்த விஷயம் சங்கீதாவின் மாமியாருக்கும் தெரிய அவரும் அழுதவர் இதற்கெல்லாம் காரணமான தன் மூத்த மருமகளை வீட்டை விட்டு போக சொன்னார்.



சங்கீதாவுக்கும் சிந்தியா இறந்து போன விஷயம் அதிர்ச்சியாக தான் இருந்தது.



குழந்தைகளையும் அவள் தன்னோடு அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற,கண்ணன் தான் குழந்தைகளை பிரிந்து இருக்க முடியாது என்று அவன் தாயிடம் எடுத்து சொல்லி சங்கீதாவை அவனை விட்டும் அவன் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் ஒரு மூலையில் அவளை ஒதுங்கி இருந்து வாழ சொன்னார்கள்..



கிட்டத்தட்ட இப்படி சிந்தியா சங்கீதாவின் பெற்றோர் வீட்டில் இப்படி ஒதுங்கி வாழும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாளோ அதே வாழ்க்கை இன்று சங்கீதாவுக்கு வந்தது.



அவளை எரிக்க வேண்டும் என்று சொன்னதும் சீதா "ஐயோ நான் பெத்த தங்கமே நான் பெத்த ஓவியமே நானே உன் உயிரை எடுத்துட்டேனே!அங்க போகலை போகலைன்னு எத்தனையோ தடவை சொன்ன போது உன்னை கொண்டு போயி இந்த சொந்த பந்தம் எல்லாம் அசிங்கமா பேசுவாங்கன்னு விட்டதுக்கு நம்மளால அப்பா அம்மா எப்பவுமே கஷ்டப்பட வேண்டாம் என்று மொத்தமாக போயிட்டியா ராசாத்தி.. இதுக்கா உன்னை இத்தனை வருஷம் பெத்து வளர்த்து கட்டிக் கொடுத்தேன் வாழ வேண்டிய வயசுல என் பிள்ளை உயிரை விட்டுடுச்சு.. டீ சூடா இருக்கும் போது குடிக்க முடியாதுன்னு அந்த சூட்டை கூட தாங்காமல் ஆறவைத்து குடிக்கிற என் மகராசி மேல இப்ப நெருப்ப வச்சு எரிக்க போறேன்னு சொல்றீங்களே இத எப்படி என் பிள்ளை தாங்கும்.."என்றவர் வைத்தவர் ஒப்பாரியில் அழுது கொண்டிருந்தவர்கள் நெஞ்சம் முழுவதும் துடித்து அடங்கியது.



அதன் பிறகு சிந்துவுடல் நல்லபடியாக தகனம் செய்யப்பட்டது.




இந்த பூமியில் இருக்கும் பொழுது கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருந்தவள் இப்பொழுது பூமிக்கு அடியில் சென்றதும் மீளாத் துயிலில் அவளது கவலைகள் யாவையும் மறந்து மொத்தமாக தூங்கி போனாள்.



சீதாவும் கனகமும் ஓய்ந்து போயிருக்க, அவர்களிடம் போலீஸ் வந்து விசாரணை செய்ய அவர்களுக்கு பதில் சொல்வதற்கு கூட இருவராலும் முடியவில்லை.



மகள் உயிரோடு இருந்த பொழுது அவளுக்கு நியாயம் கேட்க வராத சொந்தங்கள் அனைத்தும் அவள் மொத்தமாக சென்ற பிறகு அவளுக்கான நியாயத்தை அவர்கள் வாங்கி கொடுத்தார்கள்.



பரிமளத்திற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காமல் தண்டனையும் சுரேஷுக்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. (இதைப் பற்றி இன்னும் எழுதினால் கதையின் அழுத்தம் குறைந்துவிடும் என்பதால் இத்தோடு இவர்களை முடித்துக் கொள்வோம்)



சிந்தியாவின் வீட்டில் போன வாரம் இந்த நேரம் உயிரோடு இருந்தவள் இப்பொழுது உயிர் இல்லாத ஜீவனாக போட்டோவில் புன்னகைத்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்து சத்தமாக அழுது கொண்டிருந்த அவளது தாய் தந்தை சகோதர சகோதரிகள் சத்தம் நிசப்தமாக இருந்த அந்த வீட்டில் அழுகை குரல் ரீங்காரமாக(ஓசை) கேட்டது.



அவள் இப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம் என்று மொத்தமாக முடிவெடுத்து ஒரு நொடியில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்.



உண்மையில் தண்டனை கிடைத்தது சுரேஷ் பரிமளம் இருவருக்கும் கிடையாது.



சிந்துவின் மொத்த குடும்பத்திற்கும் மட்டும்தான் எந்த காலத்திலும் அவர்களால் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.



உயிரோடு இருக்கும் வரை அவர்கள் நெஞ்சை வாள் கொண்டு எப்பொழுதுமே இது அறுத்துக் கொண்டிருக்கும்.



இப்படி புகுந்த வீட்டில் எத்தனையோ காலங்கள் மாறினாலும் இன்றும் மாமியார் கொடுமையை அனுபவித்துக் கொண்டு அதை தாங்க முடியாமல் உயிரை விட்ட அனைத்து பெண்களுக்கும் இந்த கதை ஒரு சமர்ப்பணம்.



உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.



புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு உயிரற்ற பிணமாக வாழும் பெண்கள் அனைவரும் அதில் இருந்து வெளியேறி சுயமாக முன்னேறி உங்களுக்கு என ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.



இனி சிந்தியா வீட்டில் நிசப்தமாக கழிந்த இரவுகள் யாவும் இனிமேல் ரீங்காரமாக அவளது பெற்றோரின் அழுகுரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.



எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் பெண்களுக்கு நடக்கும் இந்த நிலை மாறவே மாறாது என்பதுதான் இங்கு இருக்கும் யாரும் மறுக்க முடியாத உண்மை.
 
Status
Not open for further replies.
Top