GG writers
Moderator

வணக்கம் நண்பர்களே, நான் தான் உங்கள் நித்திய கன்னிகை ஆசிரியர் பேசுகிறேன்.
கதையோட பேரைப் பார்த்தாலே கொஞ்சம் கெஸ் பண்ணியிருப்பீங்க. ஆமா, இது நீங்க கணிச்ச மாதிரி ஒரு ஹாரர் திரில்லர் வகை கதைக்களம்.
அய்யயோ ஹாரரா, பேய்னா எனக்கு ரொம்ம்ம்ம்ப பயம், நான் படிக்கமாட்டேன்னு ஜெர்க் ஆகாதீங்க. படிக்கற உங்களுக்கு 10% பயம்னா எழுதற எனக்கு 90% பய பயம் தான். ஸோ, தைரியமா படிங்க. ரொம்ப ஹாரரா, பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கதையா இருக்காது. படிக்கற அளவு தான் இருக்கும்.
ஒரு வித்தியாசமான கதைக்களமா இருக்கட்டுமேன்னு இதைத் தேர்ந்தெடுத்தேன்.
கதையின் உள்ளே ஒரு மெல்லிசான காதல் களமும் உண்டு. சின்ன சிரிப்பலை ஏற்படுத்த நண்பர், உறவினர்கள் கூட்டமும் உண்டு.
கதையைப் பத்தின முன்னோடம் சொல்லிட்டேன். என்னைப் பத்தின முன்னோடம் சொல்லற அளவு பெருசா எதுவும் இல்லை. கதையோட போக்கில் என் கூட பயணிங்க. என்னை நீங்க தெரிஞ்சுக்கலாம்.
பை பை லவ்லி பீபிள்.