அத்தியாயம் 2:
காரை செலுத்துவதில் கவனமாக இருந்த கார்த்திகேயன் மறந்தும் பின்பக்கத்தில் அமர்ந்து மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த நிவேதாவை திரும்பி பார்க்கவில்லை.
அவளுக்கோ ஒரு கட்டத்தில் அழுது அழுது கண்ணீரும் ஓய்ந்து போனது.
அவள் அழுக அழுக அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் சேர்த்து அழுததோ என்னவோ அவள் வயிற்றில் எட்டி ஒரு உதை உதைக்க, அப்பொழுதுதான் அவளுக்கு காலையில் இருந்து தானும சாப்பிடாமல் குழந்தையையும் பட்டினி போட்டது நினைவிற்கு வந்தது.
மேடிட்ட வயிற்றை தன் கைகளால் அழுத்தமாக பிடித்துக் கொண்டவள் ' சாரி பாப்பா வர வர எனக்கு இருக்க பிரச்சினையில் உன்னை கவனிக்க முடியாமல் போகுது.. மாமா எனக்கு விட்டுட்டு போன கடைசி நினைவுகள் நீ மட்டும் தான் பாப்பா.. உன்னை பட்டினி போட்டதுக்கு அம்மாவை மன்னிச்சிடுங்க..' என்று மனதோடு வயிற்றில் இருக்கும் குழந்தையோடு பேசியவளுக்கு இன்னும் பசி அதிகமாக ஆரம்பித்தது.
அவள் பேசியதை எல்லாம் கேட்க விரும்பாத அவள் மழலைச் செல்வம் பசியில் அவள் வயிற்றை இன்னும் வேகமாக எட்டி உதைக்க ஆரம்பித்தது.
கைகளால் வயிற்றை அழுத்தமாக பிடித்துக் கொண்டே நிவேதா சிரமப்பட்டு வந்த கண்ணீரை இதழ் கடித்து அடக்கிக் கொண்டாள்.
தனக்கு பிடிக்காத ஒருவனிடம் இப்படி கையேந்தும் சூழ்நிலைக்கு தன்னை தள்ளிய அந்த கடவுளை மனமார அந்த நேரம் சபித்துக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய பசி என்றால் கூட பொறுத்துக் கொண்டிருப்பாளோ என்னவோ?
குழந்தையின் பசி என்று வரும் பொழுது அவளது பிடிவாதம் கூட பின்னுக்குச் சென்றது.
இவனிடம் அவசியம் கேட்டு தான் ஆக வேண்டுமா? என்று சில நிமிடங்கள் வரை தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டவள் அதன் பிறகு தன் தயக்கத்தை முழுவதுமாக விட்டு ஒளித்துவிட்டு அவனிடம் பசிக்கிறது என்று சொல்வதற்காக வாயை திறக்க, அதற்கு இடமளிக்காமல், அவனே காரில் வைத்திருந்த ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பின்புறமாக நீட்டினான்.
" உன் முகத்தை கண்ணாடி வழியா பார்த்தாலே நல்லா தெரியுது உனக்கு இப்ப பசிக்குதுன்னு.. உன்னோட ஒவ்வொரு சின்ன அசைவுகளும் எதுக்காகன்னு எனக்கு நல்லாவே தெரியும்! இப்ப இந்த பிஸ்கட் பாக்கெட் உன்னோட பசியை தீக்கறதுக்கு இல்லை உன்னோட வயித்துல இருக்க குழந்தையோட பசிக்காக மட்டும் தான்.. அதுவும் அந்த குழந்தை மேல இருக்க பாசம்னு தப்பா எடுத்துக்காத! ஒரு கர்ப்பிணியை பட்டினி போட்ட பாவம் எனக்கு வேண்டாம்.. ஏற்கனவே நான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறது பத்தாதா!" என்றவன், காரை ஓரமாக நிறுத்தி அவளை திரும்பி பார்க்க, அவன் சொன்ன கடைசி வரிகளில் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தலை தானாக குனிந்து கொண்டது.
அவன் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை வேதனைகளுக்கும் காரணம் அவள் மட்டும் தான் அல்லவா?
" எவ்வளவு நேரம் இப்படியே நான் இதை வச்சுக்கிட்டு இருக்குது சட்டுபுட்டுன்னு புடி.. " என்றவன் குரலில் அவள் தேகம் தூக்கி வாரி போட, கைகள் தானாக பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டது.
அவனும் தான் இங்கிருந்தால் அவள் சாப்பிடுவதற்கு சங்கடப்படுவாள் என்று அவளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டவனாக காரை விட்டு இறங்கியவன் புகைபிடிப்பதற்காக சற்று தூரம் தள்ளி சென்றான்.
அவள் கேட்காமலேயே தண்ணீர் பாட்டிலையும் இன்னும் சில தின்பண்டங்களையும் அருகில் வைத்து விட்டு தான் சென்றான்.
நிவேதா இருந்த பசிக்கு அனைத்து தின்பண்டங்களையும் தீர்த்து முடித்தவள் தண்ணீரையும் குடித்து முடிக்க அப்பொழுதுதான் அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் தன் ஆட்டத்தை சற்று நிறுத்தியது.
' அப்படியே நீ உங்க அப்பா மாதிரி..' என்று மனதோடு சொல்லிக் கொண்டவளுக்கு எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது.
சிறிது நேரம் வரை அவளுக்கு தனிமை கொடுத்த கார்த்திகேயன் மீண்டும் காரில் வந்தமர்ந்தவன் " போற வழியில ஹோட்டல் எதுவும் இல்லை இப்போதைக்கு இந்த ஸ்னாக்ஸ் மட்டும் தான் உனக்கு.. சீக்கிரம் வீட்டுக்கு போனதும் உனக்கு சாப்பாடு வாங்கி தரேன்.. " என்றதோடு காரை கிளப்ப, அவளும் அவனை சிறிதும் கவனிக்காமல் சற்று சாப்பிட்டதால் ஆசுவாசமாக இருக்க அப்படியே காரில் சாய்ந்து உறங்க ஆரம்பித்திருந்தாள்.
காரை நிறுத்தி திரும்பி பார்த்தவன் சிறுவயதில் உறங்குவது போலவே இப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை ஒரே ஒரு நொடி வேதனையுடன் பார்த்தவன் அடுத்த நொடியே அது பொய்யோ எனும் விதமாக தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.
அவளது தூக்கத்தை கலைக்க மனம் வராதவனாக, கார் கதவை சத்தம் இல்லாமல் திறந்து அவளை சிறு பிள்ளை போல அழுங்காமல் குலுங்காமல் கைகளில் தூக்கிக் கொள்ள, தூக்கத்தில் கனவில் இருந்த நிவேதாவோ எப்போதும் போல் தன் கணவன் தான் ( அவளை பொறுத்தவரை இந்த நிமிடம் வரை அவளது கணவன் என்பது அவளுடைய இறந்து போன விஜய் தான்) தன்னை கைகளில் தூக்கிக் கொள்கிறான் என்று நினைத்துக் கொண்டவள் இதழ்கள் தானாக புன்னகையை சிந்தியது.
" மாமா எப்ப பாத்தாலும் தூங்கும்போது இதே வேலையை பார்த்துகிட்டு இருக்கீங்க.. மாமா அங்க தொடாதீங்க கூசுது.. ஐயோ மாமா கால விடுங்க கால் கூசுது.. மாமா வயித்துல பாப்பா இருக்குது அதாவது உங்களுக்கு நினைவு இருக்கா இல்லையா? இப்படி என்னை சின்ன புள்ள மாதிரி தூக்கி வச்சுக்கிட்டு நீங்க பண்றது எல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லப்பா.. " என்று செல்லமாக சலித்துக் கொண்டாலும் அவள் முகமோ அதற்கு மாறாக புன்னகையை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
கணவன் தான் எப்போதும் போல் தன்னை தூக்கிக் கொள்கிறான் என்று நினைத்து அவனிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தவளுக்கு அடுக்கடுக்காக விஷயங்களில் நொடியில் ஞாபகம் வந்து போக, தூக்கத்திலேயே கணவன் இறந்ததும் அதற்காக தான் துடிதுடித்து போனதும் நினைவு வந்து போக, அந்த அதிர்ச்சியிலேயே அவள் கண்கள் தானாக திறந்து கொண்டது.
அவளை கைகளில் தூக்கியது முதல் அவள் பேசியதை கேட்டுப்படியே நடந்து கொண்டிருந்த கார்த்திகேயன் முகம் முதலில் புன்னகையில் ஆரம்பித்து இறுதியில் புன்னகையை தொலைத்து இறுகி போயிருந்தது.
அவன் கைகளில் தான் இருப்பதை கண்டதுமே தேகம் தூக்கி வாரி போட அதிர்ந்து போன நிவேதா அவன் கைகளில் இருந்து இறங்குவதற்கு போராட, அதற்கெல்லாம் வாய்ப்பை கொடுக்கவில்லை அவன்.
தன் கைகளில் துள்ளிக் கொண்டிருந்தவளை ஒரு நிமிடம் தன் நடையை நிறுத்தி அழுத்தமான ஒரு பார்வை பார்க்க, அதில் நிவேதா தன் முயற்சியை கைவிட்டு வேண்டா வெறுப்பாக கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.
இதற்கு மேலும் தான் இப்படி அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் அவன் ஒரு அடி கூட நகர மாட்டான் என்பது அவளுக்கு நன்றாக தெரியுமே அல்லவா??
"குட்" என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்தவன் அவளை தனது அறையில் கொண்டு வந்து இறக்கி விட, அவன் இறக்கியதுதான் தாமதம் அவன் கைகளில் இருந்து பட்டாம்பூச்சி போல் பறந்து அப்பாற்பக்கம் சென்றவளை கோபமாக முறைத்து பார்த்தான்.
" இங்க பாருங்க உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணிட்டு இப்படி என்னை தொட்டு தூக்குற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க.. உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை என்னை தூக்குறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என்னை தொட முதல்ல நீங்க யாருங்க?" என்று கோபத்தில் படபடக்க, அவளை இறக்கி விட்டதும் அங்கிருந்து செல்லலாம் என்று திரும்பிய கார்த்திகேயன் அவள் பேசிய வார்த்தைகளில் அந்த இடத்திலேயே அழுத்தமாக நின்றான்.
வார்த்தையை விட்டு விட்ட நிவேதாவிற்கு யாரும் இல்லாத சூழலில் அவனிடம் தனியாக சிக்கிக் கொண்டதை நினைத்து எல்லாம் சிறிதும் கவலையில்லை.
வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை பார்த்துவிட்டவளுக்கு இதெல்லாம் ஒரு விஷயமாக தெரியவில்லை..
" ஹவ் டேர் ஆர் யூ?" என்று கோபமாக கத்தியவன் அவள் பக்கத்தில் வந்து நிதானமாக கழுத்துக்கருகில் கையை கொண்டு செல்ல,எது நடந்தாலும் எனக்கு சிறிதும் பயம் இல்லை என்பது போல் அழுத்தமாக நின்று கொண்டிருந்த நிவேதா கண்களில் பயம் என்பது சிறிதும் இல்லை.
அவள் கண்களை உற்றுப் பார்த்தபடியே அவள் கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்துக்காட்டிய கார்த்திகேயன் " உன்னை தொட எனக்கு எல்லா விதமான உரிமையும் இருக்குடி என் பொண்டாட்டி.. என்னைத் தவிர வேற யாருக்கு அந்த உரிமை இருக்கு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேற ஒருத்தனை பத்தி என்கிட்ட பேசிக்கிட்டு இருந்த.. தூக்கத்துல நீ பேசிகிட்டு இருந்ததால உன்னை சும்மா விடுறேன்.. இனிமே நான் தான் உன்னோட புருஷன் இத உன் மனசுல நல்லா பதிய வச்சுக்கோ.. என் இஷ்டத்துக்கு தான் நீ இருக்கணும் உன் இஷ்டப்படி இருக்கணும்னு நெனச்ச நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்.. " என்று மிரட்டலாக சொல்ல, அவன் கைகளில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை விடுவித்த நிவேதா அவனை அழுத்தமாக பார்த்தாள்.
" உனக்கே நல்லா தெரியும் கார்த்திக் உன்னோட மிரட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது.. இந்த மஞ்சள் கயிற என் கழுத்துல நீ கட்டுனதும் என் புருஷன் ஆயிடுவியா? இல்லை என் புருஷனதான் நான உன்னை ஏத்துக்குவேன்னு நினைச்சியா?நெவர் நான் உயிரோடு இருக்க வரைக்கும் அது நடக்காது.. என்ன பொறுத்த வரைக்கும் இந்த ஜென்மத்துக்கு விஜய் மட்டும் தான் என்னோட புருஷன்.. என்னோட குழந்தைக்கு அப்பா விஜய் மட்டும் தான்.. இதை தாண்டி நீயும் வராத நானும் வரமாட்டேன் பொண்டாட்டின்னு உரிமை எடுத்துட்டு பக்கத்துல வந்த அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.." என்றவள் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு அவளாக மாறி இருந்தாள்.
அவள் பேசியதை கேட்டு கார்த்திக் கோபம் அதிகமாக பக்கத்தில் இருந்த பூஜாடியை தூக்கி போட்டு உடைத்தவன் " இன்னொருத்தனை மனசுல நினைச்சுகிட்டு என் பக்கத்துல இருக்க நீ எனக்கு வேண்டாம்.. நான் கட்டுன தாலியை கழட்டி கொடுத்துட்டு உன் இஷ்டத்துக்கு நீ எங்க வேணும்னாலும் போகலாம்.. உன்னை கூட்டிட்டு வந்த பாவத்துக்கு உனக்கு விடுதலை தருகிறேன் உன்னை உன்னோட சொந்தக்காரங்க யாரும் தொந்தரவு பண்ணாம நான் பார்த்துக்கிறேன்.. உன் இஷ்டப்படி உன் வாழ்க்கையை வாழு ஆனால் அது நீயா இருக்கிற வரைக்கும் தான் என் பொண்டாட்டியா இருந்தா நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும் முடிவு உன் கையில தாலிய என் கையில் கழட்டி வச்சிட்டு உன் இஷ்டத்துக்கு எங்க வேணாலும் போ.. " என்றவன் அவளுக்கு முன்பாக கையை நீட்ட, அவனை ஒரு கணம் ஆக்ரோஷமாக பார்த்த நிவேதா கைகள் தாலியை கழட்டுவதற்காக கழுத்துக்கு அருகே செல்ல அவன் உயிரோடு இருக்கும்பொழுது தாலியை கழட்டினால் அதற்கு அர்த்தம் என்ன என்று ஏற்கனவே தெரியும் என்பதால் ஒரு முறை அதை நன்றாக அனுபவித்தவளுக்கு மறுமுறையும் அதை அனுபவிக்கும் தைரியம் இல்லாமல் போக, கைகள் தாலியை இறுக்கமாக பற்றிக் கொள்ள அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள்.
' கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிற! உனக்கு கொஞ்சம் கூட கருணை என்பதே கிடையாது.. எனக்கு இப்படி தண்டனைக்கு மேல தண்டனை கொடுத்துக்கிட்டு இருக்கீங்க அப்படி என்னதான் பாவம் செஞ்சு தொலச்சேன்..' என்று கடவுளிடம் சண்டை போட்டவள் அவன் கட்டிய தாலியை கழுத்தில் சுமக்கவும் முடியாமல் கழட்டி அவனிடம் கொடுக்கவும் முடியாமல் பாரமாகி போக, அழுத்தங்கள் பல ஒன்று சேர அப்படியே மயங்கி சரிந்தாள்.
சிறிது நேரம் அவளை பார்த்தபடி நின்ற கார்த்திக் அவள் மயங்கி விழுகவும் கைகளில் பிடித்துக் கொண்டவன் கட்டிலில் கிடத்த, உணர்வுகளை தொலைத்து மயக்கத்திலிருந்த நிவேதாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன் பெருமூச்சு விட்டான்.
"ப்ளடி.. Xx" என்று சில கெட்ட வார்த்தைகளை சொல்லி வாய்விட்டு திட்டிக் கொண்டவன் எரிச்சலோடு மருத்துவருக்கு அழைத்தான்.
" பிரக்னண்டா இருக்கிறதால அழுத்தம் தாங்க முடியாமல் மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாங்க.. ரொம்ப ரொம்ப பிரஷர் அதிகமாக இருக்கு இந்த நேரத்துல ரொம்ப சந்தோஷமா இருக்கணும் கார்த்திகேயன் உங்க வைஃப் ரொம்ப பலவீனமா இருக்காங்க.. உங்களுக்கு கல்யாணமான விஷயம் யாருக்கும் சொல்லாமல் வச்சிருக்கீங்க போல இருக்கு.. " என்ற மருத்துவர் அவனை நன்கு தெரிந்தவர் என்பதால் நட்பு ரீதியில் கேட்க, அவரை கோபமாக முறைத்து பார்த்தவன் " எந்த வேலைக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாத்துட்டு கிளம்புங்க தேவை இல்லாமல் என் விஷயத்தில் மூக்கை நுழைச்சுக்கிட்டு இருக்காதீங்க எனக்கு அது சுத்தமா பிடிக்காது.. " என்று முகத்தில் அடித்தது போல் சொன்னவன் சிகிச்சை பார்த்ததற்கான பணத்தையும் அவர் கைகளில் திணிக்க, அவனை பற்றி நன்கு தெரிந்ததால் மருத்துவர் மயக்கத்தில் இருந்த நிவேதாவை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.
" எல்லாம் உன்னால தான் டி ஒவ்வொரு தடவையும் நா அசிங்கப்பட்டு நிற்பதற்கு காரணம் நீ மட்டும் தான்.. உன்னால் தான் இப்ப எவன் எவனோ என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு போறான்.. உன்னை சொல்லி என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணுமே தெரியல. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு..", என்றவன் கோபமாக அவள் கழுத்தை பிடிக்க போக, அவனை தடை செய்யும் விதமாக அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை எட்டி உதைக்க புடவையினுடே தெரிந்த இடையில் குழந்தையின் அசைவு நன்றாக தெரிய, அதை கண்டு தன் கோபத்தை குறைத்துக் கொண்டான்.
அங்கேயே நின்றால் தன்னையும் மீறி ஏதாவது செய்து விடுவோமோ என்கிற பயத்தில் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.