வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பட்டு குட்டீஸ்க்கு டீ பார்சல்

தீண்டாயோ தீஞ்சுவையே


டீ 1

"என்னைக்கு இருந்தாலும் என்னுடைய மக அமுதவாணன் மருமகளாக இந்த ஊருக்குள்ள திரும்பவும் காலை எடுத்து வைப்பா. அப்படி ஒன்னும் நடக்கல நாங்க திரும்பவும் இந்த ஊருக்குள்ள வர மாட்டோம்." என்று தனது அன்னை தன் பதிமூன்றாவது வயதில் ஊரார் முன் செய்த சபதத்திலேயே வந்து நின்றது.

அன்று தாய் செய்த சபதம் சரி என்று இன்றளவும் அவராள் எண்ண முடியவில்லை. யாரோ ஒருவரின் பேச்சுக்காக தனது வாழ்க்கையை தன்னை விரும்பாத ஒருவனுடன் இணைக்க நினைக்கும் தாயை நினைத்து அவளுக்கு கோபம் மட்டுமே வந்து நின்றது.

"நோ... நெவர்... இந்த அமுதரசி என்னைக்கும் அவ்வளவு தரம் தாழ்ந்து போக மாட்டா... கல்யாணம்னு ஒன்னு என்னுடைய வாழ்க்கையில இல்லாமல் போனா கூட எனக்கு கவலை இல்லை.
ஆனால் நான் என்னைக்கும் அமுதவாணன் மருமகளாக மாட்டேன்." என்று வழக்கம் போல அவள் மனதுக்குள் அவளாக ஒரு சபதத்தை ஏற்றுக்கொண்டாள்.


______________________________________________


டீ 2


சகோதரர்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருக்கும் போது அவர்கள் மேசைக்கு அருகில் ஒரு குடும்பம் சிறு குழந்தையுடன் உணவருந்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை வாயில் வைத்திருந்த உணவை கீழே துப்பிவிட, அதன் தாய்

"அம்மு இப்படி சாப்பாட துப்ப கூடாதுன்னு எத்தன தடவ சொல்றது." என்று கண்டிக்க, அதன் பிறகு அந்த குழந்தை சமத்தாக உணவை உண்ண ஆரம்பித்தது.

அம்மு என்று அழைப்பில் தங்கள் உணவிலிருந்து கவனம் சிதறிய அண்ணன் தம்பி இருவரும் அந்த குழந்தையை பார்த்த பின் தங்கள் அம்மு என்ற அழைப்பிற்கு சொந்தக்காரியான அமுதரசியின் நினைப்பில் ஆழ்ந்தன.

________________________________________


டீ 3


ஏனோ அவள் பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே சக்கரவர்த்தி, சாகித்யன் இருவரையும் அத்தான் என்று அழைத்ததில்லை. வீட்டில் மற்றவர்கள் அனைவரும் அவர்களை செல்ல பெயருடனும் உறவு முறை சொல்லியும் அழைத்தாலும் அமுதரசிக்கு மட்டும் அவர்கள் சக்தி தான்.

மற்றவர்கள் எவ்வளவோ எடுத்து கூறினாலும் அவள் அழைக்கும் விதத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யாராவது கட்டாயப்படுத்தினால்

"நாம கூப்பிட்ட யார கூப்பிட்டோமோ அவங்க திரும்பி பாக்கனும். நான் சக்தின்னு பெயர் சொல்லிக் கூப்பிட நீ திரும்பி பாக்கிற தான. அப்போ நான் உன்ன சக்தின்னு தான் கூப்பிடுவேன்.
என்னல எல்லாம் மாத்திக்க முடியாது." என்று இருவரிடமும் கூறிச்செல்லும் அவள் சிறு பிள்ளை தனத்தை எண்ணி சிரித்தவன்

"இப்ப என்ன உனக்கு நான் எப்பவும் இதே மாதிரி ஊஞ்சல் ஆட்டி விடுடனுமா... சொல்லு..." என்று சக்கரவர்த்தி கேட்க, சில நிமிடம் யோசித்த அமுதரசி

"சக்தி நீ எப்பவும் இதே மாதிரி ஆட்டி விட வேண்டாம். கொஞ்சம் வேற மாதிரியும் ஆட்டிவிடு. அப்புறம் நான் கொஞ்சம் பெரிய பொண்ணா வளர்ந்து தனியா ஊஞ்சலில ஏறி உட்கார்ந்து எப்போ தனியா ஆட முடியுதோ அதுவரைக்கும் நீ ஆட்டிவிட்டா போதும்." என்று கூறியவளின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்தவன்

"போடி இனி உனக்கு ஊஞ்சல் ஆட்டி விட நான் வரமாட்டேன்...." என்று கோபித்துக் கொண்டு செல்ல, ஊஞ்சலில் இருந்து குதித்து இறங்கிய அமுதரசி

"போடா டேய் மாங்கா மண்டையா... நீயா இல்லாட்டி என்ன அதான் இன்னோரு தேங்கா மண்டை இருக்கானே அவன ஆட்ட சொல்லுவேன்.
அவன் வராட்டி நான் எங்க அப்பாவை ஆட்டி விட சொல்லிக்கிறேன்." என்று வேகமாக ஓட,

"கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு நான் தான் ஊஞ்சல் ஆட்டனும். அப்போ உங்க அப்பா எல்லாம் வர மாட்டாங்க." என்று சிரித்த முகமாக கூற, அவனை பார்த்து திரும்பிய அமுதரசி அழகு காட்டி

"நான் தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேனே. அதுக்கு தான் என் தேங்கா மண்டை சக்தி இருக்கானே." என்று விவரம் புரியாத வயதில் தான் பேசிய வார்த்தையும் அர்த்தம் அறியாது அமுதரசி கூறி விட்டு சக்கரவர்த்தி முகத்தை பார்க்காமல் சிட்டாகப் பறந்தாள்.

ஓடி வந்தவள் சாகித்யன் மீது மேதி அதே வேகத்தில் கீழே விழ, சாகித்யனும் அவளுடன் கீழே விழுந்திருந்தான்.

அமுதரசியை தூக்கி நிறுத்தி உடையில் இருந்த மண்ணை தட்டி விட்டவன் தன்னையும் சரி செய்து கொண்டான்.

"பாத்து வர மாட்டியா... எங்கயாச்சும் அடி பட்டுருக்கா." என்று அமுதரசியை ஆராய்ந்தபடி சாகித்யன் கேட்க,

"நீ எனக்கு ஊஞ்சல் ஆட்டி விடுவியா சக்தி." என்று சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்டவள் முகத்தை பார்க்க அதில் எனக்கு பதில் வேண்டும் என்ற பாவமே இருந்தது.

"சரி வா ஆட்டி விடுறேன்." என்று சாகித்யன் அழைக்க, அவனுடன் செல்லாமல் அதே இடத்தில் நின்ற அமுதரசி

"எப்பவும் எனக்கு மட்டும் ஊஞ்சல் ஆட்டுவியா." என்று அடுத்த கேள்வி கேட்க,

"வாழ்க முழுக்க ஆட்டுறேன் போதுமா." என்று சிரித்துக் கொண்டே சாகித்யன் கூற, அவன் உயரத்திற்கு எம்பி கண்ணத்தில் முத்தம் பதித்த அமுதரசி

"அப்போ நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று கூறிவிட்டு ஓடிவிடட்டாள்.


_______________________________________

டீ 4


"பயப்படாத நானும் இந்த வாழ்க்கைய எத்ததுக்கனும்னு தான் நினைக்கிறேன். ஆனா என்னால உன்ன உடனே ஏத்துக்க முடியுமான்னு தெரியல.

படத்தில கதையிலல்லாம் குடிச்சிட்டு சுய நிலைவில்லாம பொண்டாட்டி கூட சேர்ந்திருவாங்களாம். அப்படி தான் காட்டுறாங்க.

ஆனா பாரு நான் முழுசா ரெண்டு பாட்டில் குடிச்சாலும் எனக்கு நிதார்னம் போகல. போதையில கூட நீ என் கண்ணுக்கு பிடிச்ச மாதிரி இல்ல போல. என்ன செய்ய..." என்று கணவனின் நக்கல் குரலில் உயிருடன் மறித்துப்போனாள் பாவையவள்.


பட்டூஸ் கருத்து திரி கீழ இருக்கு பாருங்க...

 

Attachments

  • inbound1887830657689350076.jpg
    inbound1887830657689350076.jpg
    563.4 KB · Views: 0
Last edited:
வேற லெவல் டீ ஸ் எல்லாமே, சக்கரா & சாகி ஓட அமுதவாணன் பிள்ளைகள.....

அம்மு ஏன் இப்படி சொல்றா.....

லாஸ்ட் டீ ல இருக்கறது சக்கரா தானா....

சூப்பர் சூப்பர், சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுங்க sis
 
சக்ரவர்த்தி,சாகித்யன் சூப்பர் 😍😍😍வாழ்த்துக்கள் 🥰🥰🥰
 
Top