வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்.! - 1

GG writers

Moderator
"பனி விழும் மலர் வனம்..
உன் பார்வை ஒருவரம்..." என்ற பாடல் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.

இந்த பாடல் வரிகள் எனக்கு தான் சிட்டுவேஷன் சாங் என்று ஒவ்வொருவரும் கூறுவதுபோல் பல இளசுகளும், "வயது சென்றுவிட்டால் என்ன? நாங்களும் இளசுகள்தான்" என்று டையடித்துக் கொண்டும்... இல்லாத முடியை இருப்பதாக காட்டி விக் வைத்துக் கொண்டும், பியூட்டி பார்லர் உபயத்தில் வெள்ளை அடித்துக் கொண்டும் வந்திருந்த ஒரு சில முதிர் வாலிபர்களும் கூட "புத்தகத்துக்குள் கண்களைப் பதித்திருந்த பெண் அவள் பார்வை தங்கள் மீது படாதா?" என்ற ஏக்கம் கொண்டு ஒரே பூவை மொய்க்கும் பல தேனீக்கள் போல் புத்தகம் படிப்பதாய் பாவலா காட்டிக் கொண்டு அவளை அப்பட்டமாய் சைட் அடித்துக் கொண்டிருந்தனர்.

உதகை என்றும் உதகமண்டலம் என்றும் அழைக்கப்படும் ஊட்டியில் அமைந்திருந்த சிறிய பார்க் அது. பாடலுக்கு ஏற்ப பனி விழும் மலர் வனமாய்தான் அமைந்திருந்தது அவ்விடம்.

நவம்பர் மாதம் ஆகையால் இளமாலைப் பொழுதிலேயே மெல்லிய பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தது.

மலர்ந்திருந்த மலர்கள் பள்ளி விட்டு செல்லும் சிறுவர்கள் போல் மறுமலர்ச்சியோடு மாலையில் டாட்டா... பை... பை.. சொல்லுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தன.

"உன்னைப் பார்க்க இனியும் எனக்கு நேரமில்லை" என்பது போல் சூரியன் எப்பொழுதோ அவ்விடத்தை விட்டு விலகி சென்றிருக்க... குளிர் வேறு உடலை மெதுவாய் துளைத்தெடுக்க ஆரம்பித்திருந்தது.

அந்த குளிரிலும் சிறுவர்கள் சிலர் சிறு கூட்டங்கூட்டமாய் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். கடுங்குளிர் கூட அவர்களுக்கு ஒன்றுமில்லை என்பது போல் ஏற்கனவே பழகி விட்டிருந்தது.

அவர்களை அழைத்து வந்த பெரியவர்கள் ஆங்காங்கு வட்டமேசை மாநாடு நடத்திக் கொண்டிருக்க... சிலர் அந்த இயற்கையைத் தன்னை மறந்து ரசித்து கொண்டிருந்தனர்.

சில இளசுகள் அந்த இயற்கை எழிலைப் போலவே தங்களது உடல் எழிற்கட்டை வனப்பாக்க முயன்று ஓடி களைத்துக் கொண்டிருந்தனர்.

பெண் அவள் அலைபேசி சத்தமாய் பாடியது.
"மேனிக்குள் காற்று வந்து...
மெல்லத்தான் ஆடக் கண்டேன்!
மங்கைக்குள் காதல் வெள்ளம்...
கங்கை போல் ஓடக் கண்டேன்!
இன்பத்தின்.... எல்லையோ
இல்லையே.. இல்லையே!
அந்தியும்.... வந்ததால்
தொல்லையே தொல்லையே!
காலம் தோறும்
ம்ம்..!" என்கையில் அழைப்பு முடிவுற்று மீண்டும் பாடியது.

இரு முறை பாடி அணைந்த அலைபேசியின் மூன்றாவது அழைப்பில் மெதுவாய் கண்களை அலைபேசிக்கு திருப்பினாள் அவள்.

அவள் அசைந்ததும் மேலதிகாரியைக் கண்ட இன்டர்வியூக்கு காத்திருக்கும் வாலிபன் போல் தங்களது உடையை நீட்டாக எடுத்துவிட்டு கொண்டு நிமிர்ந்து ஆவலுடன் தலையை கோதியபடியும், சிரித்தபடியும் கண்கள் மின்ன அமர்ந்தனர் ஆங்காங்கே அமர்ந்து அவளைச் சைட் அடித்துக் கொண்டிருந்த அந்த ஆண்கள்.

ஏதோ தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் போல இருந்தது அவர்கள் கண்களில் மின்னிய ஆவல்.

"அவள் கடைக்கண் பார்வை தன்மேல் பட்டு விடாதா?" என்று பரபரத்தது ஒவ்வொருவரின் நாடி நரம்புகளும்.

அவர்களின் கண்களிலோ? கன்னி அவளின் கணவனாகும் துடிப்பு.


ஸ்கிரீனில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் காதில் இருந்த ப்ளூ-டூத்தை ஆன் செய்து
"ஏய்... இன்னைக்காவது பாத்தானாடி?" என்று நேரடியாய் தன் விசாரணையைத் தோழியிடம் துவங்கினாள் ஸ்ரீலதா.

"பாத்தாங்க.. பாத்தாங்க.. ஆனா என்னைக்கும் போலவே. அவன தவிர மற்ற எல்லாரும் உன்ன பாத்தாங்க மச்சி.." என்றாள் அவள் தோழி திவ்யா.

"அடியேய்... வந்தேண்ணா? உன்ன வாயிலே மிதிச்சி சாவடிச்சிடுவேன். நான் அவன் என்னைப் பார்த்தானான்னு மட்டும்தான் கேட்டேன்" என்று கேள்வி கேட்க...
"அதான் இல்லங்குறேன்ல" என்றாள் அவள்.

"ஒரு பேச்சுக்காவது பாத்தான்னு சொல்லக்கூடாது? நீ எல்லாம் ஒரு பிரெண்ட். வைடி போண" என்றவள் முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல் அழைப்பைத் துண்டித்தாள்.

"மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்..!
மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்!
சொல்லத் தான்.. எண்ணியும்
இல்லையே பாஷைகள்!" என்று மீண்டும் அவளை அலைபேசி பாடலைத் தெறிக்க விட அழைப்பை ஏற்றவள்
"அம்மும்மா... நீயாவது கரெக்டா சொல்லு. அவன் என்னைப் பாத்தானா இல்லையா?" என்றாள்.

"நீ இருக்குற சைட பாத்து லைட்டா திரும்பினான் டார்லு. நான் என்னவோ உன்னைச் சைட் ஆங்கிள்ல பாத்துருப்பான்னுதான் நினைக்கிறேன். ஆனா உன்ன பார்த்தானா? இல்ல இந்த ரிங்டோன் அவனுக்கு பிடிச்சு போய் அதுக்காக திரும்பி பார்த்தானா? இல்ல புக்குல பேஜ் திருப்புறதுக்காக சைடுல பார்த்தானா? இல்ல பாக்கவே இல்லையானு கொஞ்சம் டவுட்டாதான் இருக்கு மச்சி" என்று குழப்பினாள் அமலா.

"அடியேய்... வந்தேன்னா உங்களையெல்லாம் என்ன செய்வேன்னே தெரியாது. மூடிட்டு போன வை" என்றாள் கோபமாக. அவளிடம் ஏமாற்றத்தில் சாயல் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

"எதுக்கு டார்லு இவ்வளவு பீல் பண்ற? இது என்ன நமக்கு புதுசா? எண்ணைக்கும் நடக்குறதுதானே? விடு... விடு... டேக் இட் ஈசி டார்லு. பசிக்குது.. வயிறு குய்யோ முய்யோன்னு சத்தம் போடுது. கிளம்புவோமா? நாங்க வரட்டுமா" என்றாள் அமலா. அவள் கஷ்டம் அவளுக்கு.

"டேக் இட் ஈசி டார்லு. மூடிட்டு போன வை. அவன் போற வரைக்கும் எவளாவது பக்கத்துல வந்தீங்க அவ்ளோதான். எவளும் உங்க பொசிஷன்ல இருந்து அங்க இங்க நகரக் கூடாது" என்று பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் அவள்.

மீண்டும் அவள் புத்தகத்தில் பார்வையைப் பதிக்க அவள் அருகில் தயங்கித் தயங்கி எழுந்து வந்தான் ஒரு இளம் வாலிபன்.

அவள் நிமிர்ந்து கோபமாய் அவன் திசை மாறி சென்றுவிட... "அப்பாடா" என்றிருந்தது அவளுக்கு.

"இவனுங்களோட தொல்ல வேற. எவன் எவன் எல்லாமோ வந்து லவ்வ சொல்றான். சொல்ல வரான். இந்த கிறுக்கு பயன் எண்ணைக்குதான் நம்மட்ட வந்து லவ்வ சொல்லுவானோ? எங்க சொல்றது? நம்மளத்தான் நிமிந்து கூட பாக்க மாட்டேங்கிறானே. இப்படி ஒருத்தி இருக்குறதாவது அவனுக்கு தெரியுமா? தெரியாதா?" என்று கடுப்பில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரீலதா.

அவளுக்கு நேர் எதிரே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து புத்தகத்தைப் படித்த படி அமர்ந்திருந்தான் அவன். எப்படியும் ஐந்து அடிக்கு மேல் உயரம் இருப்பான். அதிகபட்சம் இருபத்தேழு வயதிற்குள் இருக்கும். கடின உழைப்பாளி என்று அவன் உரமேறிய உடற்கட்டு கூறியது. குளிருக்கு ஏற்றார் போல் ஆடை அணிந்திருந்தான். எனினும் தலைமுடிகளுக்கு விடுமுறை விட்டிருக்க... மாநிற தேகமும், கருகருவென்ற தலைமுடியும், கம்பீரமான மீசையும், அவன் எதையோ ரசித்து படிக்கையில் அவன் இதழில் வளைந்தோடிய குறுஞ்சிரிப்பும் அவனை ஆணழகானாகவே அவள் கண்களுக்குக் காட்டியது.

பெருமூச்சை இழுத்து விட்டவள் தன்னை மறந்து அவனை ரசித்துக் கொண்டிருக்க... பெண்ணவள் பார்வையை உணர்ந்த தோழிகள் உடனே கால் செய்து விட்டனர்.

மீண்டும் பாடியது அவளது அலைபேசி "மன்னவன் பேரை சொல்லி...." என்பதிலிருந்து. அவளுக்கு தன் சிட்டுவேஷன் சாங் போல் காதில் ஒலித்தது அது.

தன்னை மட்டும் இந்த நிமிடம் அவன் திரும்பிப் பார்த்து விட்டால் "இந்த பாடலை உனக்காகத்தான் நான் ஒலிக்க விட்டு இருக்கிறேன் என்று கூறி விடுவேனே" என்பது போல் இருந்தது அவள் பார்வை.

மீண்டும் அழைக்கவும் ஏற்றவள் "சொல்லு" என்க
"அடியேய்.... நீ எதுக்கு இப்ப அவன பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த மாதிரி பாக்குற? அவன உன்னப் பாக்க வச்சி, உன் பின்னாடி இவனுங்கள போல அலைய வைக்கிறதுதான் டாஸ்க்" என்று திவ்யா ஞாபகப்படுத்த...
"அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியும். முதல்ல ஏற்கனவே அலைய விட்டவனுகள எப்படியாவது தொறத்தி விடுங்கடி. ஒரு மாதிரி இரிட்டேஷனா இருக்கு" என்க..

"அப்ப நாங்க உன் பக்கத்துல வந்தாதான் உண்டு" என்றாள் அமலா.

"நீங்க வந்தாலே அவன் எந்திருச்சு போயிடுறான்டி" என்று அவள் கடுகடுக்க "நாங்க தொந்தரவு பண்ணாம வரோம் மச்சி" என்றவள் அழைப்பைத் துண்டிக்க செல்ல...

"அம்மும்மா... அவன் ஏன்டி என்னைப் பாக்கவே மாட்டேங்குறான்? நான் பார்த்தாலாவது திரும்பி பாப்பான்ல்ல?" என்று அவள் கேட்க...

"இரண்டாயிரம் முறையா கேட்டுட்ட இதே கேள்விய. அவன் பாப்பானோ? பார்க்க மாட்டானோ? அது அவன் இஷ்டம். எப்படியோ பார்க்க வை. இல்ல தோல்வியை ஒத்துக்கோ" என்றவர்கள் உள்ளுக்குள் "கடவுளே... அவன் இவள திரும்பி கூட பாத்துரக்கூடாது. அப்பதான் நாங்க நிம்மதியா சாப்பிட முடியும்" என்று வேண்டுதல் வைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தனர்.

தினந்தோறும் மாலை நான்கு மணியானால் இந்த பார்க்கில் அந்த பெஞ்சையே அவனுக்கே எழுதிக் கொடுத்தது போல் வந்து அமர்ந்து விடுவான். கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு குனிபவன்தான். அதன்பின் அந்த புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை வாசித்து முடித்த பின்பு அவனை எதிர்பார்த்தால் போதும். அதுவரை அக்கம் பக்கம் இருப்பவர்கள் அனைவரையும் மறந்து விடுவான் போலும். அருகில் எவனையும் கொன்று போட்டு விட்டு சென்றால் கூட அவனுக்கு தெரியாது. அப்படி அதில் என்னதான் இருக்கிறதோ? என்று பல நாள் நொந்து கொள்வாள் ஸ்ரீலதா.

ஸ்ரீலதா. பருவமங்கை. கண்ணுக்கு குளிர்ச்சியாக வயதிற்கு ஏற்ற வளர்ச்சியோடு வலம் வரும் அவளுக்கு எந்த குறையும் இல்லை எனும் அளவிற்கு அவள் தந்தை அவள் கண்கள் பார்த்த பொருளை கை நீட்டும் முன்பே வாங்கி அவள் காலடியில் சேர்ப்பார். அதற்காக அவர் ஒன்றும் பரம்பரை பணக்காரர் கிடையாது. பிழைப்பிற்காக ஊர் விட்டு ஊர் வந்தவர்தான்.

அங்குள்ள டீக்கடையில் மூன்று வருடமாக சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் எதைச்சையாக தரையில் கிடந்ததாக கூறி ஒரு ஒற்றை ரூபாயைக் கொண்டு தந்தையின் கையில் கொடுத்தாள் மகள்.

அதை சந்தோஷமாக பெற்றுக் கொண்டவர் முதலாளியோடு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வழியில் ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அந்த ஒற்றை ரூபாய் லட்ச ரூபாயாய் திரும்பி வந்தது அவருக்கு.

"சொல்லொண்ணா மகிழ்ச்சி அவருக்கு. ஊரே மூக்கின் மேல் விரலை வைத்து அவரை பார்க்காமல் இல்லை. மகிழ்ச்சியில் கூத்தாடியவர் வீட்டிற்கு வந்து தகவலைத் தெரிவித்தார்.

அத்தோடு நில்லாமல் தனக்கு அந்த ஒற்றை ரூபாயைத் தந்த மகளுக்கு பத்து ரூபாயைப் பரிசாக அளித்தார்.

ஆனால் மறுநாள் காலையில் மகள் மீண்டும் பத்து ரூபாவைத் திருப்பிக் கொடுக்க மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்.

இதுவரை வேலைக்காரராய் இருந்த டீக்கடையை விற்றுவிட்டு ஊருக்கே செல்வதாக கூறிக் கொண்டிருந்த முதலாளியிடம் சென்று "ஐயா...! தப்பா நினைக்காட்டி இந்த கடையை நானே வாங்கிக்கட்டுங்களா?" என்றார்.

"பிறரிடம் ஒப்படைப்பதை விட தன்னிடம் வேலை செய்த ஒருவனுக்கு கொடுப்பது ஒன்றும் முதலாளிக்கும் வருத்தமாக இல்லை.

"சரி" என்று குறிப்பிட்ட தொகையை சில நாட்களில் வாங்கிவிட்டு கடையை எழுதிக் கொடுத்தார் முதலாளி.

அதைத்தொடர்ந்து ஸ்ரீலதாவின் கையில் காசு கொடுப்பதும் அவள் மனம் உவந்து கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்வதும் தந்தையின் பணியாயிற்று.

பெண்ணவள் வளரத் துவங்க அதற்கு ஏற்றார் போல் அவர்களது செல்வமும் வளரத் துவங்கியது.

பெண்ணவள் கண்ணில் கண்டவை அனைத்தும் கையில் கிடைத்தது.

மனைவியவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. இதுவரை மதிக்காத மனைவி தன்னையும் ஒரு ஆளாக மதித்து செயல்பட கணவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

மகளைத் தன் பொக்கிஷமாக கருதினார் தந்தை.
ஒரு டீக்கு அல்லாயாடியவர் பல டீ எஸ்டேட்டுகளுக்கு இன்று அதிபதி. அதனாலேயே மகளை மிகவும் செல்லமாய் வளர்த்து வந்தார் தந்தை மகேஸ்வரன்.

ஆனால் அவளோ தோழிகளிடம் பெட் வைத்து மற்றவர்களின் மனதை யோசிக்காமல் ஜெயிப்பது ஒன்றையே தன் குறிக்கோளாய் கொண்டிருந்தாள்.
 
இதெல்லாம் ஒரு செயலா லதா?????

நா கூட உண்மையா நேசிக்கர அப்படினு ஆரம்பத்தில் நினைச்சிட்டென்🤦🤦🤦🤦
 
இதெல்லாம் ஒரு செயலா லதா?????

நா கூட உண்மையா நேசிக்கர அப்படினு ஆரம்பத்தில் நினைச்சிட்டென்🤦🤦
 
இப்படியும் சில ஜீவன்கள்... மிக்க நன்றி சகி
 
Top