GG writers
Moderator
கண்களால் விடைபெற்று சென்ற லக்ஷ்மனுக்கு எதையோ விட்டு செல்வது போல் நெஞ்சில் ஒரு வலி ஏற்பட்டது.
அவனைப் பார்த்து நின்ற பிரகதீஸ்வரிக்கும் அதே நிலைதான்.
"போகாதீங்க" என்று தடுக்கும் வார்த்தை வாய்வரை வந்துவிட்டது. எனினும் அண்ணனைக் கண்டவள் தன்னை அடக்கிக் கொள்ள.. நொடியில் தங்கையின் கண்களின் மாற்றத்தைப் புரிந்திருந்தான் அந்த பாசமுள்ள அண்ணன்.
"ஏன் கண்ணுகுட்டி நீ வெளியே போன? அவர் யாரு?" என்று அவன் முதலில் இருந்து ஆரம்பிக்க என்னவென்று சொல்லுவாள் "இறந்துவிடலாம் என்று சென்றேன் காதலை வாங்கி வந்தேன் என்றா?" ஒன்றும் சொல்வதற்கில்லை.
கண்கள் நர்த்தனம் ஆடின. அவளது திருட்டு விழியைக் கண்டவன் யோசிக்கலானான்.
"இல்ல அண்ணே வீட்டுக்குள்ளே அடஞ்சி இருக்க ஒரு மாதிரி இருந்தது. அதனாலதான் சரி வெளியில போயிட்டு வரலாம் கொஞ்சம் நேச்சர ரசிச்சிட்டு வரலாம்னு கிளம்புனேன். ஆனா பாரு பாதி வழியிலேயே கீழ விழுந்து சரியா வாங்கி கட்டிகிட்டேன்" என்று கூற...
"இல்லையே... நீ அப்படி எல்லாம் போகக்கூடிய ஆள் இல்லையே?!" என்றான் சந்தேகமாக. அவளிடம் இதுவரை இருந்த ஏதோ ஒன்று மிஸ் ஆவது போல் தோன்றியது அவனுக்கு.
ஏனெனில் சாதாரணமாக அவள் வீட்டிற்குள் தடுக்கி கீழே விழுந்து விட்டால் அடிப்படவில்லை என்றாலும் அழுது ஊரைக் கூட்டி நான் "இருப்பதால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்" என்று ஒப்பாரி வைத்து.. மற்றவர்களையும் கதற விடுபவள் இவ்வளவு நேரமான பின்னும் அழவும் இல்லை; புலம்பவும் இல்லை என்பதே அவனுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.
"நெஜமாதான் சொல்றேன்ப்பா. நம்பு" என்று சொல்ல
"சரிடாம்மா. இனிமே இப்படி தனியாக போக கூடாது. எங்கேயா இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் அண்ணனைக் கூப்பிடு" என்றவன் பார்வை மட்டும் யோசனையோடு அவர் மேல் பதிந்தது.
"சரிண்ணே. நான் செடிக்கு தண்ணி ஊத்த போறேன்" என்றவள் வெளியே செல்ல ...
"சரிம்மா.. இந்த ஆளை எங்கேயோ பாத்தது போலவே இருக்கு. உனக்கு ஏற்கனவே தெரிஞ்சவராம்மா?" என்று அடுத்த கேள்வியைக் கிளப்பினான் அண்ணன்.
"ஐயோ அண்ணா! அப்படிலாம் இல்ல. ஹாஸ்பிடல்ல கண் முழுச்சப்பத்தான் நான் ஃபர்ஸ்ட் டைம் அவரை மீட் பண்ணேன்" என்று அவள் அவசரமாய் தன்னை அண்ணன் தவறாக எண்ணிக் கொள்ள கூடாது என்ற தவிப்போடு கூற...
"ஓகேம்மா.. நைஸ் ஹை. தெரியாதவங்களுக்கு கூட வீடு தேடி வந்து ஹெல்ப் பண்றாரு. எந்த திமிரும் இல்ல" என்று அவன் கூற..
"ஆமாண்ணா. என்கிட்ட கூட ரொம்ப நல்லா நடந்துகிட்டார். நல்ல ஜெனியூன் பெர்சன். அதான் நானும் பேசிக்கிட்டே இருந்தேன்" என்று தங்கை வந்தவனுக்கு நற்சான்றிதழ் வழங்கிய வேளை அவள் முகத்தில் வந்து செல்லும் பாவனைகளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
ஆனால் அவனைப் பற்றி பேசுகையில் எழும் உணர்வுகளை அவள் தன்னுள் மறைக்க முயன்றாலும்... அவள் முகம் வெட்கத்தின் சாயலைப் பூசிக்கொள்ள... இத்தனை நாள் தங்கையின் முகத்தில் இல்லாத பொலிவைப் புதிதாய் பார்த்தவனுக்கு வித்தியாசம் தெரியாதா... என்ன?
அங்கு இவர்களின் பேச்சைக் கேட்டபடி நின்று கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரரிடம் தனது ஜீன்ஸ் பேண்டில் ஒன்றையும், டி-ஷர்டில் ஒன்றையும், புதிய சோப்பு ஒன்றையும் எடுத்துக் கொடுத்தவன் பாத்ரூமைக் காண்பித்து "போய் குளிச்சிட்டு வாங்க தாத்தா" என்றான்.
அவர் மறுபேச்சு பேசாமல் பாத்ரூமிற்கு குளிக்க செல்ல..
"சரிடா நான் பார்க்குக்கு கிளம்புறேன். வரியா நீயும்? சேர்ந்து போயிட்டு வருவோம்" என்று கேட்க.. "சரிண்ணே போவோம்" என்றாள் பெண் கொடியாள்.
அவள் எண்ணம் முழுவதும் அவனது எண்ண அலைகளே ஆக்கிரமித்திருக்க.. ஒருவேளை அங்கு அவனைப் பார்க்க முடிந்தால் என்ற எண்ணமே அவளை வெளியில் செல்ல வைத்தது.
அவன் உறங்கி முழித்து அப்படியே ஓடியிருக்க "பிரஷ் ஆயிட்டு வந்துடுறேன்" என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றான்.
அவர்கள் சென்றதும் லக்ஷ்மன் சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்திருந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள் பிரகதீஸ்வரி.
மதியம் அண்ணன் கையால் சாப்பிட்ட போது இருந்த சுவையை விட இப்பொழுது அதிகமாய் சுவைத்தது போல் இருந்தது அவளுக்கு.
அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே தாத்தா குளித்துவிட்டு வெளியில் வந்துவிட.. தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ஏதாவது எண்ணி விடுவாரோ என்று நினைத்தவள்... "வாவ் தாத்தா.. சூப்பரா இருக்கீங்க" என்றாள்.
இப்பொழுது முதலில் இருந்த அழுக்கான பிச்சைக்கார தோற்றம் ஓரளவுக்கு மறைந்திருந்தது.
தட்டில் இருந்த கடைசி வாய் உணவையும் அள்ளி வாயில் வைத்தவள் "தாத்தா சாப்பிடுறீங்களா? சாப்பாடு இருக்கு எடுத்துட்டு வரேன்" என்று அவள் கேட்க..
"இல்ல பாப்பா. இப்ப எதுவும் வேண்டாம். நான் மதியம் உங்கள பாக்குறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சாப்பிட்டேன். ஏதோ ஒரு மகராசன் பிள்ளைக்கு பிறந்த நாளுன்னு சோறு கொண்டு தந்தாங்க. இனி ராத்திரிக்கு எங்குனையாவது பார்த்தா போதும்" என்று அவர் கூற...
"தாத்தா ... இனி நீங்க பிச்சை எடுக்க எல்லாம் எங்கேயும் போகத் தேவையில்லை. நம்ம வீட்டிலேயே இருங்க. நேரம் போகலண்ணா நம்ம தோட்ட வேலையையும் பாத்துட்டு, தங்கச்சிக்கு உதவியா இருங்க. நைட் ஆனா அம்மாவும் தங்கச்சியும் தனியா இருப்பாங்க. நீங்க துணையா இருங்க. நாங்க என்ன சாப்பாடு சாப்பிடுறோமோ? அதுல ஒரு பங்கு உங்களுக்கும் தாரோம். அவ்வளவுதான்" என்று கூறியபடி ஈரத் தலையைத் துவட்டிக் கொண்டே வந்தான் பிரதீஷ்.
"என்னய்யா சொல்றீங்க?" என்று கேட்டவர் முகத்தில் அத்தனை அதிர்ச்சி.
சற்று நேரத்தில் தெளிந்தவர் சிரித்தபடி "நீங்க கேட்டதே எனக்கு மனசு நிறைவா இருக்குய்யா. ஆனா வீட்ல உள்ள பெரியவங்கட்ட கேட்டுல்ல எதையும் முடிவு பண்ணனும்?" என்று தாத்தா தயங்கி படியே கேட்க..
"என் கண்ணு குட்டிக்காக இந்த வீட்டையே எழுதி குடுப்போம் தாத்தா. எங்க உயிரையே கேட்டா கூட தந்துருவாேம். நீங்க என் தங்கச்சியோட உயிரையே காப்பாத்தி இருக்கீங்க. உங்களுக்கு வயிறார சாப்பாடு தர மாட்டாேமா நாங்க?" என்று தங்கையின் தலையைக் கலைத்தபடி கேட்டான் அண்ணன்.
அப்பொழுதுதான் அவள் சாப்பிட்டு வைத்திருந்த தட்டைப் பார்த்தவனுக்கு யோசனையில் புருவங்கள் முடிச்சிட்டன.
ஆனால் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாதவர் தாத்தாவை மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்துவிட்டு
"எங் மேன் மாதிரியே ஆயிட்டீங்களே தாத்தா. என்ன ஒரு குறை. இந்த அடர்ந்து போய் கிடக்கிற தாடி மீசை எல்லாம் மழிக்கணும். கொஞ்சம் ஹேர் கட் பண்ணனும். வாங்க... நாங்க பார்க் போறோம். போயிட்டு வர்ற வழியிலேயே வேலைய முடிச்சிட்டு வந்துடலாம்" என்று கூற சம்மதம் தெரிவித்தார் பிச்சைக்காரர்.
தாத்தா உங்க பேர் என்ன? என்றாள் பிரியதர்ஷினி.
"என் பேரு மருதைய்யா பாப்பா" என்றார் அவர்.
"பேர் நல்லா இருக்கே... மருதைய்யா பாப்பா?!" என்று அவள் குறும்போடு கூற சிரித்தார் அவர்.
சற்று நேரத்தில் இருவரும் தயாராகி விட அவர்களுடன் சேர்ந்து நடந்தார் மருது தாத்தா.
என்றும் போல் அல்லாமல் இன்று மூவருக்குமே புதுமையாய் இருந்தது இந்தப் பயணம்.
"இத்தனை நாளாய் தங்கையை அழைக்காமல் வந்தது தவறு" என்ற எண்ணம் தோன்றிய அதே வேளை "இத்தனை நாள் இல்லாமல் தங்கைக்கு வெளியே செல்ல வேண்டும்? தங்கச்சி நம்மகிட்ட எதையாவது மறைக்கிறாளோ?" என்ற எண்ணம் வந்தது.
"ஊசி போட்டு இருப்பாங்க. எப்படியும் டயர்டாக இருப்பா. சீக்கிரம் வீட்டிற்கு போயிடனும்." "ஐயையோ தாத்தாவை வேறு கூட்டிட்டு வந்திருக்கிறோமே?" என்று பிரதீஷ் பலவறாக யோசித்துக் கொண்டிருக்க...
"அவன் இங்கே வருவானா? நாம் மட்டும் நினைத்தது போல் எந்தத் தடையும் இன்றி சென்று செத்திருந்தால் அவனைச் சந்தித்திருக்கவே மாட்டோமே... அதற்காகவே இந்த விபத்து நமக்கு நடந்ததோ?" என்று தங்கை யோசித்துக் கொண்டிருக்க...
அடுத்த வேளை உணவுக்காக யாரிடமாவது கையேந்தி பிச்சை கேட்க... அலவலாதியாய், தன் மகன் செய்த கொடுமையை யோசித்து யோசித்து நிம்மதியிழந்து; வாழ்க்கையே வெறுத்து போய் சில நாட்களில் ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் தன்னந்தனியே நடக்கும் இதே இடத்தில் பேரன், பேத்தி போன்ற இருவருடன் செல்வது ஏதோ நிம்மதியைப் பரிசளித்திருந்தது முதியவருக்கு.
என்றும் போல் புத்தகத்தை விரித்துக் கொண்டு அமராமல் தங்கையை வீல் சேரில் வைத்து தள்ளியபடி பார்க்கைச் சுற்றி வந்தான் பிரதீஷ்.
இதுவரை அனைவரும் பாவமாகவும் ஏளனமாகவும் பார்ப்பது போல் தோன்றும் பார்வை இன்று ஏனோ வித்தியாசமாக தெரிந்தது பிரகதீஸ்வரிக்கு.
என்றும் போல் இன்றும் அவனுக்காக காத்திருந்தாள் ஸ்ரீலதா. அவளைச் சுற்றிலும் அவள் பின் அலையும் சிலர் அப்பட்டமாய் சைட் அடித்துக் கொண்டு இருக்க... நேரம் சென்று கொண்டிருந்தது.
பிரதீஷ் ஏதோ ஒரு பெண்ணுடன் சிரித்து பேசியபடி வரவும்.. வயிறு பற்றி எரிந்தது அவளுக்கு.
தோழிகளுக்கு கால் செய்தவள் "இவன் என்னடி யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு போறான்? யாரு அவ? எதுக்காக அவரோட வந்து இருக்கா? அவளுக்கு எதுக்கு இவ்வளவு இம்பார்ட்டண்ட்? என்ன எதுன்னு தகவல் கேட்டு சொல்லுங்கடி" என்று பரபரக்க தகவல்களைச் சேகரித்து வருவதாக கூறி தோழிகள்தான் அவளைச் சமாதானப்படுத்தினர்.
ஆங்காங்கு நின்று விளையாடுவது போலவும், பேசிக் கொண்டிருப்பது போலவும், வாக்கிங் செல்வது போலவும் அவர்கள் ஏதாவது பேசுகிறார்களா என்று ஒட்டு கேட்க துவங்கினர் தோழிகள்.
அவள் சென்று கொண்டிருக்கும் அவர்களையே மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க... அவள் அருகில் வந்து நின்றான் ஒருவன்.
அவள் கண்களை முழுதாய் ஒருவன் குத்தகைக்கு எடுத்திருக்க தன் வந்ததைக் கனைப்பின் மூலம் அறிவுறுத்தினான் அவன்.
கனைப்பு சத்தம் கேட்டு திரும்பியவள் வாழ்க்கையில் ரோஜா பூ , சாக்லேட்டும், கிரீட்டிங் கார்டு சகிதமாய் நின்றவனைப் பார்த்து "என்ன?" என்றாள் கண்களைக் கோபமாக விரித்துக் கொண்டு.
அவள் கறாலான கேள்வியிலும் கோபமான பார்வையிலும் இதுவரை தைரியமாய் வந்தவனுக்கு தைரியம் எங்கேயோ ஜகா வாங்கிக்கொண்டு ஓடிப் போய்விட "ஒன்னும் இல்ல. தண்ணி இருக்கான்னு கேக்குறதுக்கு" என்று அவன் தட்டு தடுமாறி கூற.. அதற்குள் அவன் அந்தக் குளிரிலும் தொப்பலாய் வேர்த்திருந்தான்.
அவன் சட்டையைக் கொத்தாக பிடித்தவள் "ஏண்டா உனக்கு தண்ணி கேக்க நான்தான் கிடைச்சேனா? வேற எவ கிட்டயாவது போய் கேக்க வேண்டியதுதானே? என்னைப் பாத்தா என்ன இளிச்சவாய் மாதிரி இருக்கா? தண்ணி கேக்குறதுக்கு சார் ரோஜா பூ கொண்டுதான் போவீங்களோ? இனி எவனாவது என் பக்கத்துல வாங்க. ஈவ்டீசிங்ணு கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தூக்கி வச்சிடுறேன்" என்று பொரிந்து தள்ளிவிட்டாள் அவள்.
அவனோ? தன் காலரை அவளிடம் இருந்து உருவிக்கொண்டு "விட்டால் போதும்" என்று ஓடியே விட்டான்.
அதுவரை அவளைச் சுற்றி மின்மினி கூட்டம் போல் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்த பலஜோடி கண்கள் ஒவ்வொன்றாய் கழண்டு செல்ல ஆரம்பித்தன அவளது இந்த உண்மை முகத்தைப் பார்த்த பின்.
....
உணவு சாப்பிடக் கூறிய தாயிடம் "இல்லம்மா நான் வெளிய சாப்பிட்டேன்" என்று பதில் அளித்த மகனை ஆச்சரியமாய் பார்த்தாள் ராஜேஸ்வரி.
"என்னடா சொல்ற? வீட்ல சாப்பிடும் போதே ஹைஜீனுக்கா இல்ல.. அது இதுன்னு ஆயிரம் லொட்டு லொசுக்கு பேசுவ. இன்னைக்கு என்ன மஹாராஜா வெளியில எல்லாம் போய் சாப்பிட்டு இருக்கீங்க? அப்படி என்ன விசேஷம்" என்று கேட்டபடி மகனைக் குறுகுறுவென்று பார்க்க..
"போங்கம்மா" என்று வெட்கப்பட்டான் அவன்.
"என்னடா.. புதுசா ஏதோ பண்ணுற... ஒன்னும் சரியா படலையே?! எனக்கு ஏதாவது மருமகள எதுவும் பார்த்துட்டியோ?" என்று தாய் சந்தேக கண்ணோடே கேட்க...
"அப்படில்லாம் ஒன்னும் இல்லமா. ஃபிரண்ட் வீட்டுக்கு போனேன். அவன் வீட்ல சாப்பிட்டேன். இது ஒரு குத்தமா?" என்றான் லக்ஷ்மன்.
"அதெல்லாம் சரிதான். ஆனா உன் முகத்துல ஏதோ ஒளிவட்டம் தெரியுதே?" என்று தாய் விளக்கம் கேட்க...
"அம்மா... கொஞ்சம் சும்மா இருங்க. நேரம் வரும்போது நானே சொல்றேன்" என்றவன் முகத்தில் இருந்த பொலிவு தாய்க்குப் புதிதுதான்.
"அப்ப ஏதோ இருக்கு? சரி.. உனக்கு எப்ப சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு. சரி.. உன்ன போஸ்ட்மேன் வந்து தேடிட்டு போனாரு. என்ன எதுன்னு கேட்டு வந்துரு" என்று கூற...
''என்னம்மா சொல்ற?" என்று கேட்க... "ஏதோ லெட்டர் கொண்டு வந்தாரு. நான் என்கிட்ட குடுங்கன்னு சொன்னதுக்கு.. உங்ககிட்ட எல்லாம் தர முடியாது. இது ரொம்ப அஃபீஸியல், கான்ஃபிடன்ஷியல்ன்னு சொல்லிட்டு உன்கிட்டதான் தருவேன்னுட்டு அடம் பிடிச்சிட்டு போயிட்டாரு" என்று கூற..
"சரிம்மா.. அப்ப நான் போய் வாங்கிட்டு வரேன்" என்றவன் குடுகுடுவென்று கிளம்பினான் ஆவலோடு.