வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 11

GG writers

Moderator
பார்க்குக்கு வந்த இத்தனை நாட்களில் இன்றுதான் தன்னைச் சுற்றி இருப்பவர்களைக் கண் திறந்து பார்த்திருந்தான் பிரதீஷ்குமார்.

இல்லை என்றால் அவன் கொண்டு வரும் அந்த ஒற்றைப் புத்தகமே அவன் உலகமாகி போகும்.

பார்க்கில் வலம் வந்து கொண்டிருந்த இளசுகளையும், கேலி பேசி ஊர் கதை அளந்து கொண்டிருந்த முதியவர்களையும், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் பார்த்தபடியே நடந்தவர்கள் ஓரிடத்தில் புல் தரையில் இயற்கையை ரசித்த வண்ணம் அமர்ந்துவிட்டனர்.

"அண்ணா... நானும் கீழ உட்காரட்டுமா?" என்று பிரகதீஸ்வரி கேட்க அவளைத் தூக்கி புல்லில் அமர்த்தினான் பிரதீஷ்.

அவர்களைச் சுற்றிலும் பலர் அங்கும் இங்குமாய் சென்று கொண்டு இருந்தாலும் சில இளம்பெண்கள் பேசி சிரித்தபடி மீண்டும் மீண்டும் அங்கும் இங்கும் தங்களைச் சுற்றியே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்த தங்கை
"அண்ணா... இங்க உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க போலயே? ஒரே சுத்தா சுத்தி சுத்தி வராங்க" என்று கண்களைச் சிமிட்டியபடி கேட்க...

"தெரியலையேம்மா.. நீ சொல்லித்தான் எனக்கே தெரியுது " என்று தோள்களைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினான் அவன்.

"ஏய் படவா... உண்மைய சொல்லு. எனக்கு என்னவோ சரியா படலையே. டெய்லி ஆன் டைம்க்கு நீ வர்றத பாத்தா.. ஏதோ ஒரு அண்ணிய ஆல்ரெடி செட் பண்ணி வச்சுட்டு பாக்க வார்ர மாதிரியே இருக்கே" என்ற அவளது குறுகிய விழிப்பார்வையுடன் கூடிய கேள்வியில்... மிரண்டவன்..

"அய்யய்யோ... அப்படி எல்லாம் இல்ல கண்ணு குட்டி. நிஜமா டெய்லி நான் வந்தா அதோ பாரு தெரியுது. அந்த பெஞ்சுல வந்து உக்கார்ரவன்தான். புக் எடுத்து படிச்சிக்கிட்டே இருப்பேன். அதுக்கப்புறம் நான் கிளம்பும் போதுதான் நிமிர்ந்து பாக்குறதே. அதுக்கு முன்னாடி என்ன நடந்தாலும் எனக்கே தெரியாது. இவ்வளவு ஏன்? என்னை யாராச்சும் கொன்னு போட்டா கூட யாரு கொன்னான்னு எனக்கு தெரியாது" என்று கூற...

"வாய மூடு தேவையில்லாதது எல்லாம் பேசக்கூடாது. சரி.. சரி... அதான் அடுத்த ரவுண்டு வந்துட்டாங்களே. திரும்பி பாருண்ணா" என்று பிரகதீஸ்வரி அண்ணனை உசுப்ப... திரும்பி குறுகுறுவென்று இவர்களைப் பார்த்தபடி நடக்கத் தெரியாதது போல் நடந்து சென்ற.. அந்த பூக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

இங்கு நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ லதாவிற்கோ வயிறு பற்றி எரிந்தது.


உலையில் இட்ட அரிசி போல் மனம் நிலையில்லாமல் தவிக்க...
"என்ன இவன் இவளுங்கள கூட பாக்குறான். அப்ப நம்மள மட்டும்தான் பாக்கமாட்றானா? ஒருவேளை நம்ம அழகா தெரியலையாே அவன் கண்ணுக்கு?" என்று எண்ணியவள் தோழிக்கு கால் செய்தாள் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டுவதற்காக.


ரிங் சென்று அழைப்பை அவள் ஏற்பதற்குள் தன் கைகளில் இருந்த நகங்களை டென்ஷனோடு கடித்துத் துப்ப ஆரம்பித்து இருந்தாள் இவள்.

"தோழிகளை அவன் கண்களில் இருந்து மாயமாய் மறைய வைக்க ஏதேனும் வழி உண்டா?" என்று கூட யோசிக்க தொடங்கி விட்டாள் அந்த சிறு இடைவெளியில்.

"ஏய்... அவன் எங்களைத் திரும்பிப் பார்த்தான்டி" என்று ஆளுக்கு முன்பாய் அழைப்பை ஏற்ற திவ்யா கூற...
பல்லை நரநரவென்று கடித்தாள் இவள்.

"ஏய்... இங்க வாங்கடி. என்னையும் கூட்டிட்டு போங்க. நான்தான் நம்ம டீம்க்கு ஹெட்டா இருக்கணும்" என்றாள் இவள்.

"எப்பவுமே நீதானே டார்லிங் ஹெட்" என்றபடி வந்த தோழிகள் அவள் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருப்பதை அறியாது.. அவளை அழைத்துச் செல்ல... இப்பொழுது ஏன் என்று கூட சீண்டவில்லை அவன்.

வேண்டும் என்றே அருகில் அமர்ந்து சத்தமிட்டு சிரித்தும், பேசியும் கூட அவன் பார்வை அவர்கள் புறம் திரும்பவில்லை.

"நான் வந்தால் மட்டும் ஏன்டி அவன் பாக்க மாட்டேங்கிறான்" என்று அவள் உச்சஸ்த்தாயியில் கத்த... கத்தாத லட்டு... அவனுக்கே கேட்டுர போவுது."
"முதல்ல யாரு போறான்னு பார்த்திருப்பானா இருக்கும்."
"இந்த முறை இதுங்கதானே அப்படின்னு விட்டுட்டானா இருக்கும்"
"நீ வேணா தனியா நடந்து பாரேன்" என்று யோசனை கூற... அங்கும் இங்கும் மாறி மாறி நடந்தவர்களை நோட் செய்து கொண்டிருந்த தங்கை "அண்ணா... நெஜமாலுமே உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. இவ்ளோ அழகான பொண்ணுங்க எல்லாம் உன்ன சுத்தி வருதுங்க. இதுல ஏதாச்சும் ஒண்ண கூட நீ செலக்ட் பண்ணிக்க. அதோ தனியா வராங்க பாரு. அந்த பொண்ணு செமையா இருக்கு" என்று இமைகளை விரித்தபடி தங்கை கூற கண்காட்டிய திசையில் திரும்பி பார்த்தான் பிரதீஷ்.

இளம் மஞ்சள் நிற சல்வார் அணிந்து, அதற்கு மேட்சாக தோடு முதல் சிறு கிளிப் வரை பார்த்து பார்த்து அணிந்து, பவுண்டேசன், ஐ சேடோ, பேஸ் கிரீம், ஹைலைட்டர் ஒன்று விடாமல் அப்ளே செய்து, கண்களில் இட்ட காஜலும், மஸ்காராவும் அழியாத வண்ணம் போட்டு இருந்த வாட்டர் ப்ரூஃப் மேக்கப்பில் ஸ்ரீலதா அமலாவிற்கு முன் துள்ளும் நடையில் வந்து கொண்டிருந்தாள்.

தேவையில்லாத அவளது மேக்கப்பும், நடையும் அவனுக்கு எரிச்சலைதான் ஏற்படுத்தியது.

ஒரு மாதிரியாக முகத்தைச் சுழித்தவன் பின்னால் அதற்கு நேர்மாறாய் சிறு பொட்டு மட்டும் நெற்றியில் ஒட்டி சாதாரண அணிகல்களோடு எளிமையாய் வந்த அமலாவைப் பார்த்தான்.

அவன் பார்வை தன்மீது ரசனையுடன் படிவதை உணர்ந்த மறுநொடி பம்மினாள் அமலா. இல்லையென்றால் ஸ்ரீலதாவிற்கு யார் பதில் சொல்வது?

"டார்லிங் நம்ம ஃபிரண்ட்ஸ்ஸ கூட்டிட்டு வருவோமா? அதுதான் பெட்டரா இருக்கும்ன்னு தோணுது" என்று அவள் லதாவிடம் கூற..

"ஏய்.. இப்பதான் அவன் என்னைப் பார்க்கவே செய்யிறான். அதையும் கெடுத்து விட்றாத பேசாம வா..." எனக் கூறியவள் அவனை நெருங்கி செல்கையில்தான் அவன் பார்வை அமலாவிடம் இருப்பதை உணர்ந்தவள் அவர்களைத் தாண்டிச் சென்றாள்.

சற்று தள்ளி சென்றதும் அமலாவிடம் "அவன் ஏண்டி உன்ன பாக்குறான்?" என்று கேட்க...
"எனக்கு என்னடி தெரியும்? நானே இன்னைக்குதான் அவன குளோசப்ல பாத்துருக்கேன். இத்தனை நாள் அவன் பக்கத்திலேயே நான் நெருங்கியது இல்லை" எனக் கூறியபடி புரியாமல் விழித்தாள்.

"எனக்கு நல்லா தெரியும்டி. அவன் லேசுல எவளையும் திரும்பி பாக்குற ஆளே கிடையாது. ஆனா உன்னை மட்டும் திரும்பி பாக்குறான்னா என்ன அர்த்தம்? அவன வேற எங்கேயோ மீட் பண்ணி நீ பிராக்கெட் போட்டுருக்கேன்னு அர்த்தம். என்கூடவே இருந்துட்டு எனக்கே குழி பறிக்கிறியா?" என்று கேள்வி கேட்க அமலாவின் முகம் சூம்பி போனது.

கண்களில் விசுக் என்று கண்ணீர் எட்டிப் பார்க்க... தலையைக் குனிந்து கொண்டாள்.



"லதா.. நான் உன் கூட பிரண்டா இருக்கணும்னு நினைச்சது உண்மைதான். ஆனால் அதுக்காக உன் வாழ்க்கைய பறிக்கணும்னு நான் என்னைக்குமே நெனச்சதில்ல. அவன் உனக்கு வேணா பேரழகனா இருக்கலாம். ஆனால் எனக்கு அவன் மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்ல" என்ற போது கண்ணீர் கன்னத்தைத் தொட்டிருந்தது.

"எதுக்கெடுத்தாலும் ஓவரா அழுது சீன் போடாத. கையும் களவுமா பிடிச்ச உடனே கண்ட கண்ட காரணத்த சொல்லாத. அவன் எப்படி இருக்கான்னு எனக்கு தெரியாம இல்ல..." என்ற லதா கோபத்தோடு செல்ல... அவன் பார்வையோ? இப்பொழுதும் அழுது கொண்டிருக்கும் அமலாவின் மீதே பதிந்து இருந்தது.

அமலாவின் முகத்தை அவன் பார்க்கக் கூடாது என்பதற்காக இருவருக்கும் இடையில் குறுக்கே நின்றாள் லதா.


"இப்பவும் அவன் உன்னைத்தான் பார்க்கிறான். ஏன்?" என்று கேள்வி எழுப்ப.. என்னவென்று சொல்லுவாள்?

"உனக்கு ஹெல்ப் பண்ண வந்த எனக்கு இது தேவைதான்" என்பதுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டா அமலா பார்க்கை விட்டே வெளியேற துவங்கினாள்.

நடந்ததைப் பார்த்து சத்தமிட்டு சிரித்தார் தாத்தா.

"ஏன் தாத்தா இப்படி சிரிக்கிறீங்க?" என்று கேட்க..
"இல்லய்யா. இப்ப நீங்க ஒரு காரியம் பண்ணி வச்சீங்களே? அதை பாத்ததும் எனக்கு மனசே நிறைஞ்சு போச்சு. ஆனாலும் கொஞ்சம் வருத்தமாவும் இருக்குய்யா" என்று கூற..
"புரியல தாத்தா" என்றான் பிரதீஷ் குமார்.

"என் கணிப்பு சரியா இருந்தா... அந்த போறாளே... மஞ்சள் உடுப்பு போட்டுட்டு ஒரு மேனா மினுக்கி?அவ என் பேத்தியாதான் இருப்பா. பெரிய பணக்காரனோட பொண்ணு. ஊர்ல கஷ்டப்பட்டுட்டு இருந்த காலத்துல அப்பன் தேவைப்பட்டேன். ஆனா அவன் பணக்காரன் ஆனதும் என் நிலைமை பாத்தியாய்யா?" என்று கேட்க அதிர்ந்து விழித்தான் பிரதீஷ்.

"என்னதாத்தா சொல்றீங்க?" என்று இருவரும் ஒரே குரலில் கேட்க "ஆமாப்பா. இவ திமிருக்கு நீ நல்லா செஞ்ச. பொட்ட புள்ளைய நீ இப்படி அவுத்து அடிச்சி விட்டு இருக்கியே? ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா என்ன பண்றது? பொட்ட புள்ளைய வீட்டுக்குள்ள வச்சி வளக்குற வழியை பாரு. அப்படின்னு ஒரு நாளு அவ அப்பாங்கிட்ட சொல்லிட்டேன். அது இவ காதுல விழவும் வீட்டை விட்டு இந்த கிழவனை வெளியே போக சொல்லுங்க அப்பான்னு சொல்லிட்டா. அவ்வளவுதான். அவன் ஏன் எதுக்கு? இத்தனை காலம் நம்ம வாழ்ந்த வாழ்க்கை என்னணு கூட யோசிக்கல, மறுத்து எதுவும் கேக்கல. ஏற்கனவே முடிவு செஞ்சிதான் வச்சிருப்பான் போல. கொஞ்சம் பணத்தையும் தந்து ஒரு பத்திரத்தையும் தந்து என்னை .வெளியே துரத்திட்டான்பா. எனக்கு எதுக்கு உன்னோட பணம் பத்திரம் நீ அவன் முகத்திலேயே விட்டு எறிஞ்சுட்டு வெறும் கையோட இறங்கி வந்துட்டேன்.


அவன்கிட்ட என்னைக்குமே கையேந்தி நிக்க கூடாதுன்னு நெனச்சிதான் ஊரு ஊரா எங்கேயெல்லாமோ தட்டு ஏந்திக்கிட்டு நடந்தேன். அதையே இவ அப்பன பெத்ததுக்கு தண்டனையா ஏத்துக்கிட்டேன்" என்று சிரிப்புடன் தொடங்கியவர் அழுகையுடன் முடிக்க ஸ்ரீ லதாவைப் பார்த்தாலே பிடிக்கவில்லை பிரதீஷ்க்கு.

"ஆமா தம்பி. உங்களுக்கு போன புள்ளைய பிடிச்சிருந்தா பேசி கட்டிக்க வேண்டியதுதானே?" என்று கேட்க..

"நீங்க வேற தாத்தா. அதெல்லாம் ஏற்கனவே முடிவு பண்ணிதான் வச்சிருக்கேன். அப்படி நடந்தால் மட்டும்தான் நல்லா இருக்கும். முதல்ல என் கண்ணு குட்டிக்கு அவ விருப்பப்பட்ட மாதிரி, அவளுக்கு மனசுக்கு ஏத்த புருஷனாேட கல்யாணம் நடக்கணும். அதுக்கு பிறகுதான் மற்றதெல்லாம்" என்று கூறவும்... அந்த "என் கண்ணுகுட்டிக்கு" என்ற வார்த்தை மட்டும் கிராஸ் செய்து சென்ற ஸ்ரீலதாவின் காதில் விழ... இப்பொழுது மனம் எரிமலையாய் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது.

பிரகதீஸ்வரியை எரிப்பது போல் பார்த்தவள் நெஞ்சம் வஞ்சத்தில் வீழ்ந்திருந்தது.
......
தபால் அலுவலகத்தைப் பூட்டிக் கொண்டு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் தபால் அலுவலர்.

அவரை கடைசி நிமிடத்தில் சந்தித்து தனக்கு வந்த கடிதத்தைத் தருமாறு கூற அவரும் நாளை வருமாறு கூறினார்.

"அண்ணே ப்ளீஸ் ... எனக்காக இந்த ஒரு ஹெல்ப்பும் பண்ணுங்களேன். ரொம்ப அர்ஜென்ட். ப்ளீஸ் ... குடுத்துருங்க. நாளைக்கு வேணா நீங்க என்ட்ரி போட்டுக்கோங்க" என்று பேசி பேசியே அவரைக் கதவை அடைக்க விடாமல் கன்வின்ஸ் செய்து கையெழுத்திட்டு கடிதத்தைப் பெற்றுக் கொண்டான் லக்ஷ்மன்.

அதை பிரித்து பார்த்தவனுக்கு பறப்பது போல் தோன்றியது. பல நாள்கள் முயற்சி செய்து காத்திருந்த விஷயம் கை கூடிய வரும் வேளை அந்த இன்பத்தை சொல்லவும் வேண்டுமோ?

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவள் முகம் கண் முன் வந்து தன்னால் நின்றது.

"அவளைக் கண்ட நேரம் தன் வாழ்வில் நல்ல நேரம் வந்துவிட்டது போல" என்று நினைத்துக் கொண்டவன் சந்தோஷமாக வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

"அம்மா" என்று கத்தியபடியே வீட்டிற்குள் ஓடியவன் எதிரில் வந்த ராஜேஸ்வரியைத் தூக்கி சுற்ற "என்னடா? என்ன ஆச்சி? தல சுத்துது இறக்கி விடுடா" என்று பதட்டத்தோடு கூறியபடி அவன் தோளில் செல்லமாய் இரண்டு அடி கொடுத்தார்.

"அம்மா எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சிருச்சி" என்று கத்தினான் அவன்.

"என்னடா சொல்ற?" என்று ஆச்சரியமாய் தாய் கேட்க... "ஆமாம்மா. கருவூலத்துல வேலை. முப்பத்தேழாயிரத்து சொச்சம் ரூபா ஸ்டார்ட்டிங் சேலரின்னு போட்டு இருக்காங்க நெக்ஸ்ட் வீக் பொய் ஜாயின் பண்ணனும்" என்று கூற... மகனுக்கு திருஷ்டி கழித்தாள் ராஜேஸ்வரி.

தாய்க்கும் மிகுந்த சந்தோஷம்தான். இத்தனை நாட்களாக எவன் எழுதிய தேர்வுகளின் பலனாய் கிடைத்திருந்தது அரசு கருவூலத்தில் கணக்கர் பணி. அதுவும் அருகில் உள்ள நிலகிரியில் கிடைத்திருக்க மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது அவர்களுக்கு.

"அம்மா இனிமே நம்ம வீட்டுக்கு தினமும் வர தேவையில்லை. வாரத்திற்கு ஒரு நாளோ? இல்ல தேவைப் படுறப்போ வந்து போவோம். நாளைக்கு கிளம்புறோம். நீங்களும் ரெடியா இருங்க" என்றவன்

"டேய்... நான் எப்படா உன் கூட வரேன்னு சொன்னேன்?" என்று அதிர்ந்து கேட்ட தாயிடம்...
"நீங்க வந்தே ஆகணும்மா. அதுல அப்பீலுக்கோ கார்த்திகேலுக்கோ இடமே இல்லை. நான் என் பிரண்ட போய் பாத்துட்டு வரேன்" என்று விட்டு தாயின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினான்.

"பிரண்டைப் பார்க்க செல்கிறேன்" என்று கிளம்பியவன் நேரே சென்றது என்னவோ பிரகதீஸ்வியின் வீட்டுக்குத்தான்.
 
Last edited:
Top