வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 13

GG writers

Moderator
விஏஓ அலுவலகத்தில் பசுமதி இல்லாமல் போக... வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது அந்த தொழிலதிபர் மகேஸ்வரன்.

"பலர் என் அப்பாயின்மெண்டுக்காக காத்திருக்க... சாதாரண விஏஓ இவ அப்பாயின்மென்ட்டுக்காக நான் காத்திருக்க வேண்டி வந்துடுச்சே?" என்று தனக்கு வந்த சோதனையை எண்ணி கொதித்துக் கொண்டிருந்தார் அவர்.

எனினும் மகளுக்காக மலையையே புரட்ட வேண்டும் என்றாலும் செய்யத் துணிந்த தந்தையல்லவா? பல்லைக் கடித்துப் பிடித்துக் கொண்டு பொறுமையுடன் அமர்ந்திருந்தார்.

அவர் முகத்தில் எழும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. பொறுமையை வெகு நேரம் சோதித்து விட்டு மூன்று மணி அளவில் மீட்டிங் முடிந்து அலுவலகம் வந்து சேர்ந்தார் பசுமதி.

தனக்காக காத்திருந்த அண்ணனையும், மகேஸ்வரனையும், மேலும் சிலரையும் பார்த்தும் கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் சென்றவர் லஞ்சை முடித்து விட்டு ஒவ்வொருவராய் உள்ளே அழைத்தார்.

தன்னைத் தவிர மற்ற அனைவரையும் அழைப்பதைப் பார்த்து கோபம் எரிமலையாய் பொங்கியது மகேஸ்வரனுக்கு.

சற்று நேரத்தில் பீஏ வந்து "மேடம் உள்ள கூப்பிடுறாங்க" என்று அழைக்க... உள்ளே சென்றனர் இருவரும்.

"என்ன விஷயமா என்னைப் பாக்க வந்து இருக்கீங்க?" என்று பசுமதி கம்பீரமாக அமர்ந்தபடி கேட்க...
"என்னோட பொண்ணுக்கு உங்க பையனதான் பிடிச்சிருக்கு.
அதனால அவன்தான் எனக்கு மருமக பிள்ளையா வரணும்" என்று கூற...

"சாரி சார். இது பர்சனல் விஷயம் பேசுறதுக்கான இடம் இல்ல. அபிசியல்லா ஏதாவது பேசணும்னா சொல்லுங்க" என்றார் பசுமதி.

"இங்க பாருங்க. வேலை வெட்டி இல்லாம நீங்க சும்மாதான் இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். மரியாதையா எனக்கு பதில் சொல்லுங்க. என் பொண்ணுக்கு உங்க பையன கண்டிப்பா நான் வாங்கி கொடுத்தே ஆகுவேன். அவனுக்கு என்ன விலை வேணும்னு சொல்லுங்க. எத்தனை கோடி வேணாலும் கொட்டி கொடுக்கிறேன். பங்களா, காரு, ஹோட்டல், ஃபேக்டரி, எஸ்டேட் என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோங்க" என்று மகேஸ்வரன் பிசினஸ் பேசினார்.

"என் பையன் ஒன்னும் கடையில விக்கிற பொருள் இல்ல. கண்டதும் வாங்கி கேட்கிறதுக்கும். விலை பேசி வாங்கி கொடுக்கிறதுக்கும். அவனைக் கட்டிக்கிறதுக்கு ஒரு தகுதி வேணும். அது உன் பொண்ணுகிட்ட கண்டிப்பா இருக்காது" என்று பசுபதி இதழை வளைத்தபடி கூற...

"என்ன? வலிய வந்து பேசுறேன்னு ரொம்ப ஓவரா போறீங்களா? உங்க முடிவை மாத்திக்க முடியுமா? முடியாதா?" என்று மகேஸ்வரன் கண்களை உருட்டியபடி கோபமாக கேட்க..

"ஆமா... ஓவராத்தான் போவேன். என் முடிவு எப்பவும் மாறாது. உன் பொண்ணு என் பையனுக்கு என்னைக்குமே செட் ஆக மாட்டா. அவன் மனசுல ஆல்ரெடி ஒருத்தி இருக்கா. அவளதான் அவன் என்னக்கா இருந்தாலும் கட்டிக்குவான். நீ உன் பிள்ளையை உன்னைப் போலவே திமிரு புடிச்ச எவனாவது பணக்காரன் இருப்பான் அவனுக்க தலையில் கட்டி வை. என் பிள்ளையை நீ அசைச்சு பாக்க நினைக்காத. அவன் நீ நினைக்கிற மாதிரி ஆள் இல்ல. வேற மாரி.. உறவுக்காக உசுர கொடுக்கிற அதேவேளை உசுர எடுக்கவும் தயங்க மாட்டான்" என்று பசுமதி கூற...
வாய்விட்டு சிரித்தார் மகேஸ்வரன்.

"உங்க மகனே கல்யாணத்துக்கு சம்மதிச்சாச்சி. உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று நக்கலாக கேட்க

"என் பையனா? வாய்ப்பே இல்லை" என்று இதழ் வளைத்தார் பசுமதி.

இதுவரை பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்த பரசுராமன்
"ஆமா தங்கச்சி. புள்ள சொன்னான் பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கிறதுண்ணா கல்யாணத்துக்கு சம்மதம்னு" என்று கூற...

அதிர்ந்த பசுமதி "பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குறதா?" என்று கூறியவர் "மரியாதையாக போயிடு. எங்களுக்கு உன் வீட்டு சம்பந்தமே வேண்டாம். என் வீட்டுல நீ கால் எடுத்து வச்சதே பாவம்னு நினைக்கிறேன். இத்தோட எல்லாத்தையும் நிப்பாட்டிக்கோ. மரியாதை இங்க இருந்து போ" என்று கத்த...

"வர்ற ஞாயிற்றுக்கிழமை என் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளுக்கும் நிச்சயதார்த்தம். புதன்கிழமை கல்யாணம். மூணு நாள் இடையில இருக்கு. அதுக்குள்ள உங்க மனச தயார் படுத்திக்கோங்க விஏஓ மேடம்" என்று விட்டு சென்றா மகேஸ்வரன்.

தலையைப் பிடித்துக் கொண்டு. அமர்ந்திருந்தார் பசுமதி.

"என்ன உளறிட்டு போறானுங்க இவனுங்க?
இந்த பையன் செய்ற வேலையை பாத்தால்... போற போக்குல தங்கச்சிக்காக மானம் மரியாதை எல்லாம் விட்டுட்டு போட்டிருக்க டிரஸ்ச கூட அவுத்து குடுத்துடுவான் போல இருக்கு" என்று பல்லைக் கடித்தவர் மகனுக்கு கால் செய்ய ... மறுமுனையில் எடுத்து பேசினான் பிரதீஷ் .

எடுத்து எடுப்பிலேயே "அம்மா... நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்க...
"எனக்கும் முக்கியமான விஷயம் பேசணும்" என்று பல்லைக் கடித்தார் தாய்.

"என்னம்மா ரொம்ப அர்ஜெண்டா " என்று அவன் கேட்க
"ஆமா.. பின்ன? உன் மனசுல நீ என்ன தாண்டா நினைச்சுகிட்டு இருக்க? உன் தங்கச்சிக்காக எத்தனை காலம் வாழுவ? உனக்கெல்லாம் அறிவே கிடையாதா? அந்த மகேஸ்வரனுக்க மகளுக்க கூட கல்யாணத்துக்கு நீ ஏன்டா ஓகே சொன்ன?" என்று ஆதங்கத்தோடு கேட்க...

"அம்மா... அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. கண்ணு குட்டிக்குப் புடிச்சதான் கல்யாணம்ணு சொன்னேன். இனி தங்கச்சிக்கு பிடிக்க வாய்ப்பே இல்ல" என்று கூற..

"என்ன உளர்ற?" என்றார் பசுபதி குழப்பமாக.

"அம்மா... நம்ம கண்ணு குட்டிக்குப் இன்னொருத்தரைப் புடிச்சிருக்கு.." என்று தொடங்கியவன் இன்று கதை அனைத்தையும் கூறி.. " அவர்தான் நம்ம கண்ணு குட்டிக்கு மாப்பிள்ளைன்னு முடிவே பண்ணி இருக்கேன்ம்மா. என்ன செலவு பண்ணினாலும் அவரை கண்டிப்பா என் கண்ணு குட்டிக்கு கட்டி வச்சுருவேன்" என்று கூறினான் பிரதீஷ்.

"என்னடா சொல்ற? அப்போ உனக்கு? நீ சொன்ன கதை எல்லாம் என்ன அவுறது?" என்று தலையில் கை வைத்தார் பசுமதி.

அவரால் அவன் கூறியதை நம்பவே முடியவில்லை. ஏனெனில் தாழ்வு மனப்பான்மையில் அகப்பட்டு வீட்டை விட்டு வெளியில் இறங்க கூட தயங்குபவள் தன்மகள் என்று தெரியாதவரா அந்த தாய்?
இத்தனை வருஷத்துக்கு பிறகு வெளியில் வந்தாள் என்பதே அவருக்கு அதிசயமாய் இருக்க.. இதில் ஒருவனைப் பார்த்து பார்த்த கணமே விரும்புகிறாள் என்றால் நம்பவா முடியும்? நெஞ்சு வலி வராத அவருக்கு.

"டேய்... கண்ணா... விளையாட்டுக்கு எங்கிட்ட பேசாதடா. இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு கூட இல்லையே. பொய் சொல்றியா கண்ணா?" என்று தாய் பதட்டத்தோடு கேட்க...

"அம்மா... உங்ககிட்ட போய் நான் பொய் சொல்லுவேனா? இப்ப நாங்க பார்க்குக்கு கிளம்பிட்டு இருக்கோம். எனக்கு தெரிஞ்சு மேடம் என்னமோ அவரை தேடிதான் வராங்கன்னு தோணுது. அம்மா இப்போ அவ முகத்தை பார்க்கணுமே நீங்க? தவுசன் . பல்பு கூட தோத்துப் போயிரும். அவ்வளவு வெளிச்சம் நம்ம கண்ணு குட்டிய இப்படி பார்த்தே பல வருஷம் ஆச்சும்மா. ஹேப்பியா இருக்காம்மா. அது போதும் எனக்கு" என்று கூற நெடுமூச்சை இழுத்துவிட்டார் பசுமதி.

"எப்படியோ அவ நல்லா இருந்தா சரிதான். அந்த பையன் யாரு என்னன்னு டீடைல் கலெக்ட் பண்ணு" என்று கூற "சரிம்மா. என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

இந்த திமிர் பிடித்தவனுக்கு மருமகன் ஆவப்போவதில்லை என்று சந்தோஷப்படுவதா? இல்லை யார் என்னவென்று கூட தெரியாதவனுக்கு திருமணம் செய்து வைக்க தயாராகும் மகனை எண்ணி வருத்தப்படுவதா?". என்று புரியாமல் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பசுமதி.
........
"லக்ஷ்மன் . டெய்லி இங்க வருவீங்களா? உங்க வீட்டுக்கு தேடி போயிருந்தேன்" என்று கூறியதும் உள்ளுக்குள் குதூகலமாய் உணர்ந்தாள் பிரகதீஸ்வரி.

அவள் கண்ணில் ஆயிரம் மின்மினி பூச்சிகள் மினுங்கிய பாவனை.

"ஓ.. சரி.. நான் ஜஸ்ட் சும்மா வந்தேன். அண்ணன் இங்க டெய்லி வருவான். நான் இன்னைக்குதான் முதல் முறை வந்தேன்" என்று கண்களைச் சிமிட்டியபடி கூறினாள் அவள்.

"ஓ.. சரி... ரொம்ப நல்ல விஷயம். ஓகே.. பார்த்ததுல சந்தோஷம். உடம்பு சரி ஆயிடுச்சில்ல? ஒன்னும் பிரச்சனை இல்லையே? ஏங்க கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுத்திருக்க கூடாதா?" என்று கேட்டபடி பெண்ணவள் காயங்களை ஆராய்ச்சி பார்வை பார்க்க...

"என்ன விஷயமா வீட்டுக்கு போயிருந்தீங்க" என்றான் பிரதீஷ்.


"அது... ஒண்ணும் இல்லங்க. பல நாளா நான் ஆசைப்பட்டு காத்துக்கிட்டு இருந்த கவர்மெண்ட் ஜாப் ... எனக்கு கிடைச்சிருக்கு. உங்க தங்கச்சியைப் பாத்ததுமே . & லைஃப்ல நல்ல விஷயம் நடந்திருக்கு. அதான் இந்த லக்கி கேர்ல பாத்து ஷேர் பண்ணனும்னு தோணுச்சி" என்று கூற இதுவரை பெண் அவள் கண்ணில் இருந்த மின்மினி பூச்சிகளின் ஒளிர்வு உடல் முழுவதும் படபடவென சிறகடித்து பறப்பது போல் தோன்றியது.

அவனுக்கு வேலை கிடைத்தது என்பதை விட அவளைப் பார்த்து "லக்கி கேர்ல்" என்று அவன் கூறியது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

"ஹைய்யோ... சூப்பருங்க. என்னங்க? குட் நியூஸ் சொல்ல இப்படி வெறும் கையோட வந்து இருக்கீங்க? ஒரு சாக்லேட் கூட கிடையாதா?" என்று கேட்க தலையில் கை வைத்தான் அவன்.

"சாரிங்க. உங்களை இங்க பாப்பேன்னு நான் எக்ஸ்பெர்ட் பண்ணவே இல்ல" என்று அவன் கூற...
"ஒன்னும் பிரச்சனை இல்ல. ஸ்வீட் வாங்கிட்டு வீட்டுக்கு வாங்க" என்று அழைப்பு விடுத்தாள் பிரகதீஸ்வரி.

அவள் பிரதிஷை நிமிர்ந்து பார்க்க "வீட்டுக்கு வாங்க ... பேசுவோம்" என்றான் அவன்.

அப்பொழுதுதான் சம்பந்தமே இல்லாமல் ஒருவர் அங்கே நிற்பதை பார்த்தவன் "இவரு? " என்று யோசனையோடு கையை நீட்ட... "அவரேதான். இப்ப அவரும் எங்க ஃபேமிலில ஒருத்தர். எங்க தாத்தா" என்றாள் பிரகதீஸ்வரி.

"ஓ.. சூப்பருங்க. ரொம்ப நல்ல மனசு உங்களது. இந்த மாதிரி யாருக்கும் இருக்காது" என்றான் அவன்.
 .
"என் தங்கச்சிக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் லக்ஷ்மன்" என்றான் பிரதீஷ்.

"உங்க தங்கச்சிக்கு நீங்க அண்ணனா கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்" என்று அவன் கூற... ஆம் என்பது போல் தலையசைத்தாள் பிரகதீஸ்வரி.

"இல்லங்க என் தங்கச்சி கிடைச்சதுதான் எங்களுக்கு பெரிய குடுப்பனையே" என்றான் பிரதீஷ்.

ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசியதைப் பார்த்து சிரித்தவன் "சரிங்க வீட்டுக்கு வாங்க . நாங்க முன்ன போறோம்" என்று பிரதீஷ் கூற சிரித்தபடி விடைக் கொடுத்தான் லக்ஷ்மன்.

கண்ணால் விடை பெற்று சென்றாள் அவள்.

அவன் தலைமறையும் வரை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

அவனது நண்பன் நின்ற இடம் வரை அவர்களுடனே நடந்து வந்தவன்... நண்பனையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அவனும் பேருக்கு அறிமுகம் செய்து கொண்டான் தன்னை.

அவர்கள் கிளம்பி விட அதுவரை பார்த்துக் கொண்டு நின்றவன் "சரிடா மச்சான்.. அப்ப நான் கிளம்புறேன். பிரெண்ட்ஸ் கிட்ட பேசிகிட்டு பார்ட்டி அரேஞ்ச் பண்ணுவோம்" என்று சிரித்த முகத்தோடு நண்பனிடம் விடை பெற...

"டேய் நில்லு. நீ வண்டி வண்டின்னு சொன்னியே அது இந்த வண்டியையா?" அது வீல்செயரைக் காண்பித்து அதிர்வாேடு கேட்டான் தீபக்.

"ஆமாடா" என்று கூற.. டேய்... கேண்டிகேப்ட்டுடா அந்த பொண்ணு" என்க..
"அதனால என்னடா மச்சான்" என்றான் லக்ஷ்மன்.
 
Top