GG writers
Moderator
லக்ஷ்மன் தீபக்கிடம் பிரகதீஸ்வரியைச் சந்தித்த கதையைக் கூறுகையில் வீல்சேர் என்று கூறாமல் வண்டி என்று கூறியதால் அவன் ஸ்கூட்டியாக இருக்கும் என்றே நினைத்திருந்தான்.
ஆனால் பிரகதீஸ்வரியை வீல் செயரில் பார்க்கவும் பேயடித்தது போல் முகம் இருண்டு விட்டது தீபக்கிற்கு.
"டேய் புரிஞ்சுதான் பேசுறியா? உன் ஸ்டேட்டஸ் என்ன? அவளோட நிலைமை என்ன? நீ.. கண் அசைச்சாலே ஆயிரம் பொண்ணுங்க கீயூவ்ல நிப்பாளுங்கடா மச்சி. ஆனா இந்த பொண்ணால நடக்கவே முடியலடா. அப்புறம் எப்படி மற்றதெல்லாம்? இப்ப வேணா காதல் மயக்கத்துல அது ஒன்னும் பெருசா தெரியாம இருக்கலாம். ஆனா.. நாளைக்கே குழந்தை குட்டிண்ணு நம்ம யோசிக்கும் போதுதான்டா பிரச்சனையே வரும். அவங்களால நார்மல் ரிலேஷன்ஷிப்ல கூட இருக்க முடியாதுடா. புரிஞ்சுக்கடா... இது வேண்டாம் உனக்கு" என்று நண்பனுக்காக அவன் பரிந்து பேச...
"சாரிடா மச்சான். சொல்லி கேட்கிற நிலைமைய நான் எப்பவோ தாண்டிட்டேன். இந்த அரை மணி நேரம் அவளைக் காணாம நான் தவிச்ச தவிப்பிலேயே அவ எனக்கு எவ்வளவு முக்கியம்னு நான் புரிஞ்சுகிட்டேன். மச்சான் ஆயிரம் பேரு கியூல நின்னாலும் நமக்கு மனசுக்கு பிடிச்சவங்க ஒருத்தர் நம்மளோட இருக்குறதுக்கு ஈடாகாதுடா. இதுக்கு மேல யாரு என்ன சொன்னாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப் படுற நிலைமையில நான் இல்லை. எனக்கு அவ வேணும். அவ மட்டும்தான் வேணும். வேற யாரையும் என்னால நினைச்சு கூட பாக்க முடியாது மச்சி. மனசு இருந்தா எல்லாமே நல்லதாவே நடக்கும்டா. அவளுக்கு அந்த நல்ல மனசு இருக்கு. எனக்கு அவளதான் புடிச்சிருக்கு.." என்று சிலாகித்தபடி கூறியவன் தனது மனதை நண்பனுக்கு புரிய வைக்க முயல...
"இவள கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா... நான் உன் கல்யாணத்துக்கே வரமாட்டேன்டா" என்றான் நண்பன் கோபமாக.
அப்படியாவது நட்பின் பெயரைச் சொல்லியாவது அவனை நிறுத்தி விடலாம் என்று முயன்றான் தீபக்.
"டேய்... டேய்... ஏன்டா? எனக்கு புடிச்ச வாழ்க்கையே வாழனும்னு ஆசைப்படுறேன். ஏன் நீ குறுக்க வர்ர? ஒருவேளை நல்லா இருக்குற பொண்ண கல்யாணம் பண்ணியும் எனக்கு குழந்தை பிறக்காட்டி நீ என்ன செய்வ? ஒருவேளை பாதியிலே அவ என்ன விட்டுட்டு போயிட்டா? இல்ல அவளுக்கு கல்யாணத்துக்கு பிறகு ஆக்சிடென்ட் ஆகி இதே மாதிரி ஆயிட்டா? பேசாம இரு மச்சான். அதைவிட எனக்கு பிடிச்ச வாழ்க்கையை அவளோட சந்தோஷமா வாழ்ந்துட்டு போறேன். எல்லாம் நல்லதாகவே நடக்கும். திங்க் பாசிட்டிவ் மச்சி" என்க.. பைத்தியத்தைப் பார்ப்பது போல் விழி விரித்து பார்த்தான் தீபக்.
"என் பேபி ஸ்வீட் வங்கி கேட்டு இருக்கா. போய் ஸ்வீட் குடுத்து மீட் பண்ணிட்டு வரேன். வரட்டா?" என்று வடிவேல் ஸ்டைலில் கேட்டபடி நண்பனின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி விட்டு கிளம்பினான் அவன்.
காரில் அமர்ந்து ஸ்டைலாய் வண்டியைக் கிளப்பியவனின் தலைமறைந்த பிறகும் காலில் ஆணி அடித்தார் போல் அவ்விடத்திலேயே நின்றான் தீபக்.
"இவனை இப்படியே விட்டா சரி ஆகாது" என்று எண்ணியவன் மூளை அவசர அலசலில் அலைபேசியிலிருந்த லக்ஷ்மனின் தாய் ராஜேஸ்வரியின் எண்ணைத் தேடி எடுத்தது.
ராஜேஸ்வரி அழைப்பை ஏற்கவும் நடந்தவற்றை மூச்சு முட்டும் அளவுக்கு விடாது கூறினான் தீபக்.
பேசியதில் மேல் மூச்சு கீழ் மூச்சு வேறு வாங்கியது.
நடந்ததைக் கூறியதோடு மட்டுமல்லாமல் "இதெல்லாம் உங்ககிட்ட ஏன் சொல்றேண்ணா.. நாளைக்கு எண்ணைக்காவது ஒரு நாள் நீங்களும்தானே கூட இருந்தீங்க? அவனுக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்லத் தெரியாதா? நீங்கல்லாம் பிரண்சாண்ணு என்னைப் பாத்து கேக்க கூடாதுல்ல ஆண்டி. அதுக்காகத்தான்" என்று கூற... சாவு மேளம் காதில் கேட்க ஆரம்பித்துவிட்டது ராஜேஸ்வரிக்கு.
ஏசி அறைக்குள்ளும் சட்டென்று வேர்த்துக் கொட்ட ஆரம்பிக்க... சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு
"சரிப்பா... விடு. எதனாலும் அவன் வந்த பிறகு நான் பேசிக்கிறேன். நீ டென்ஷன் ஆகாத. என்கிட்ட சொன்னதுக்கு தேங்க்ஸ். இதே மாதிரி அவங்க அப்பாகிட்ட தயவு செஞ்சு சொல்லிடாத. நானே பாத்து பேசிக்கிறேன்" என்று அமைதியாக மறு பதிலளிக்க...
"பையன் இந்த மாதிரி முடிவெடுத்திருக்கான்னு சொல்றேன். இவங்க என்ன இவ்ளோ கூலா பேசுறாங்க?" என்று அசந்து விட்டான் தீபக்.
ஏனெனில் இதுவே அவன் தாய் என்றால் விஷயம் கேள்விப்பட்டதும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு லபோ திபோ என்று குடியே மூழ்கியது போல் கத்தி ஒப்பாரி வைத்திருப்பாள். அக்கம் பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் ஐந்து நிமிடங்களில் விஷயம் தெரிந்திருக்கும். அனைவரும் இதற்குள் குசலம் விசாரிக்க வேறு வந்துவிடுவரே.
ராஜேஸ்வரியின் பதட்டம் எப்படி அவனுக்கு தெரியும்? இன்றுதான் மகனிடம் யாரோ ஒருத்தியை திருமணம் செய்து கொள்ளக் கூறி கேட்குமாறு மகேஸ்வரன் கேட்டிருந்தார்.
அதற்குள் அவன் வேறு யாரையோ பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டு வந்திருக்கிறான்.
மகேஸ்வரனுக்காக விட்டுக் கொடுக்கும் ரகம் இல்லை மகன்.
மகன் கூறுவதை ஏற்கும் ரகம் இல்லை தந்தை.
எப்படியும் வீட்டில் இருவரில் ஒருவர் வீட்டை விட்டு செல்வது உறுதி. வீட்டைவிட்டு செல்வதோடு நின்று விட்டால் கூட பரவாயில்லை.
போவதானால் லஷ்மன்தான் அவன் கூறியது போல் அவனுக்கு வேலை கிடைத்துள்ள இடத்திற்கு சென்று விடுவான் என்று வைத்துக் கொண்டாலும் அவனை அங்குத் தங்கி ஒழுங்காக வேலை பார்க்க விடமாட்டார் மகேஸ்வரன்.
குடைச்சல் கொடுத்து கிடைத்த வேலையை நிம்மதியாக பார்க்க விடமாட்டார். முடிந்தால் கிடைத்த வேலையைக் கெடுத்து விடுவதற்கு ஆவன செய்துவிட்டு மகனின் கோபத்துக்கு ஆளாகி கம்பீரமாக நிற்கும் தந்தை ஆயிற்றே அவர்.
ஆனால் தனக்கு தான் ஆசைப்பட்ட ஒன்று கிடைக்கவில்லை என்றால் வீட்டையே ரெண்டு செய்து விடுவான் அவன். இதுவரை ராஜேஸ்வரியின் முகத்திற்காகவே ஒவ்வொரு முறையும் விட்டுக் கொடுத்து வருகிறான். அதற்காக தன் வாழ்க்கையையும் எவ்வாறு விட்டுக் கொடுப்பான்?
அப்பன் எட்டடி பாய்ந்தால் மகன் பதினெட்டடி பாயும் குணம் கொண்டவன் அல்லவா?"
இதுவரை நடந்த சண்டைகளில் இடையில் புகுந்து தடுத்தாகி விட்டது. ஆனால் அதற்காக இப்பொழுது வாழ்க்கை பிரச்சனை என்று வருகையிலும் தான் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார் ராஜேஸ்வரி. மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
இன்று எப்படியும் தந்தைக்கும் மகனுக்கும் சண்டை வந்து விடுமே?! என்ன செய்வது?
மகன் தன்னுடன் அழைப்பான். தந்தை நீ போய் விடுவாயா? என்று கர்ஜிப்பார் மொத்தத்தில் பிரச்சனை நமக்குதான். நம் தலை என்று உருள போவது உறுதி என்று நினைக்கையிலேயே உதறல் எடுத்தது ராஜேஸ்வரிக்கு.
ராஜேஸ்வரியின் மனநிலை புரியாது... இதற்கு மேல் தன்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்று தவித்து போனான் நண்பன் அவன்.
எனினும் நண்பனின் நல்வாழ்வை எண்ணியவன் "இக்காதல் கை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று மனதில் முடிவு செய்து கொண்டான்.
......
ஒரு கிலோ மில்க் ஸ்வீட்டுடன் பிரகதீஸ்வியின் வீட்டிற்கு விஜயம் புரிந்தான் லக்ஷ்மன்.
பிரதீஷ் மாலையில் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருக்க.. பிரகதீஸ்வரி அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
தாத்தா தோட்டத்தைப் பராமரிப்பதில் மும்முரமாகி விட.. காதலர்களுக்கு தனிமை வரம் ஆகியது. கண்களால் காதல் வளர்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
திடீரென்று உள்ளே வந்த பசுமதி "யார் இந்த பையன்? நம்ம வீட்டுக்குள்ளே வந்து நடுக்கூடத்துல உக்காந்து நம்ம புள்ளைய உத்து உத்து பாக்குறான். இந்த பிரதீஷ் எங்க போய் தொலைஞ்சான்? இதுங்க என்ன வேற ஏதோ ஒரு உலகத்துல இருக்குதுங்க போலையே?" என்பது போல் பார்த்தவர் தொண்டையை கனைத்து தன் வரவை தெரிவிக்க...
சட்டென்று கண்ணில் வளர்த்த காதல் பட்டம் அறுந்துவிழ... "அம்மா.. இவரு லக்ஷ்மன். இன்னைக்கு வெளியில போனப்ப எனக்கு ஆக்சிடென்ட் ஆகிற்று. இவர்தான் எனக்கு ஹெல்ப் பண்ணி காப்பாத்துனாரு" என்று ஆளுக்கு முன்பாக பிரகதீஸ்வரி எடுத்து கூறியதோடு.. "அம்மா" என்று அறிமுகப்படுத்தினாள் அவனுக்கு.
"ஓ.. வருங்கால மருமகனா? நம்ம பையன் சொன்னது சரிதான் போல? நடு வீட்டுக்குள்ள ஆளு வந்து நின்னும் சலனமே இல்லாம ஒருத்தர ஒருத்தர் ஈ மொய்க்கிற மாதிரி பாத்துட்டு இருக்குதுங்களே" என்று மனதில் எண்ணிக் கொண்டவர்..
"வாங்க தம்பி. டீ சாப்பிடுறீங்களா?" என்று கேட்க..
"இல்ல ஆட்டி. இப்பதான் குடிச்சேன். ஸ்வீட் எடுத்துக்கோங்க" என்று கூறி தனக்கு வேலை கிடைத்த தகவலையும் கூறியவன்..
"ஆண்டி...இதுக்கு முன்னாடி நாம எங்கேயாவது மீட் பண்ணி இருக்கோமா?" என்றான்.
"ஒருவேளை இருக்கலாம்பா. எங்களோட பூர்வீகம் இங்கதான் வேலை கிடைச்ச பிறகுதான் வெளியூர் போனோம். இப்ப திரும்ப வந்து இருக்கோம்" என்று கூற...
"ஓ.. ஓகே ஆன்ட்டி. அந்த தாத்தா, நீங்க உங்க எல்லாரையுமே எங்கேயோ பாத்து பழகின மாதிரியே இருக்கு. அதனாலதான் கேட்டேன்" என்று சந்தோஷமாக கூறினான் அவன்.
"அது சரி நல்லாத்தான் பேசுறான். இதுல தான் பிரகதி விழுந்துட்டாளோ? அவளுக்காக இம்புட்டு பெரிய பொய் எல்லாம் தேவையில்லை" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பசுமதி சந்தோஷமாக வாழ்த்துக்கள் கூறினார்.
"உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் தம்பி. சரி பேசிட்டு இருங்க" என்றவர் உள்ளே சென்றுவிட...
வேலைக்கு தயாராகி வந்த பிரதீஷ் "ஓகே.. லக்ஷ்மன் ரொம்ப தேங்க்ஸ். நீங்க செஞ்ச ஹெல்ப்புக்கு என்ன பிரதிபலன் செய்ய போறேன்னு தெரியல. எனி வே .. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் கேளுங்க. என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்வேன்" என்றவன்...
"அப்போ கிளம்புவோமா?" என்று லக்ஷ்மனிடம் கேட்க..
வேறு வழியில்லை "சென்றுதான் ஆக வேண்டும்" என்று உணர்ந்தவனும்
"ஓகே... அப்ப நான் அப்புறமா வரேன்" என்று அவளிடம் கூறிவிட்டு கிளம்ப... வாசல் வரை வந்து வழி அனுப்பினாள் பிரகதிஸ்வரி.
பார்க்கில் இருந்து கடும் கோபத்தோடு வீட்டிற்கு சென்றாள் ஸ்ரீலதா.
அவள் இடித்த வேகத்தில் கேட் நொறுங்கி விழுந்திருக்க... காரைப் பார்க் செய்த இடத்தில் சுவரில் முட்டி பேனட் திறந்து கொண்டு நின்றது.
தந்தை அப்பொழுதுதான் மதிய உணவிலேயே கையை வைத்திருக்க... தகப்பனின் முன் சென்று கோபத்தோடு நின்றவள்
"அப்பா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அவன் வீட்ல பேசினீங்களா இல்லையா?" என்று கேட்க..
உணவை ஒதுக்கி வைத்தவர் கையை கழுவியப்படியே "ஏன் இவ்வளவு டென்ஷன் என் பட்டுகுட்டிக்கு? நீ கேட்டு இல்லாததாம்மா?" என்று கேட்க..
"பொய் சொல்லாதீங்க. நீங்க பேசவே இல்ல. இன்னைக்கு எவளோ ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து... அவ கூட கண்ணுகுட்டி பொன்னு குட்டிணு கொஞ்சீட்டு இருக்கான். எனக்கு அப்படியே பத்திகிட்டு வருது. பத்தாததுக்கு என் பிரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கிறான். என்னைத் திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறான். என்னை ரொம்ப இரிடேட் பண்றான் டேடி. இது எல்லாத்துக்கும் சேத்து நான் அவனைப் பழிவாங்கியே ஆகணும். என்ன பண்ணுவீங்களாே? ஏது பண்ணுவீங்களோ? எனக்கு தெரியாது. எனக்கு அவனைக் கல்யாணம் பண்ணி வச்சே ஆகணும். இல்ல நான் உயிரோடவே இருக்க மாட்டேன்" என்று கூறி அழத்துவங்க...
"அம்மாடி.. நீ எதுக்கு தேவையில்லாததுக்கு எல்லாம் டென்ஷன் ஆகுற? இவ்வளவு பெரிய வார்த்தை பேசுற அளவுக்கு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. உனக்கு நான் தந்த வாக்குல எந்த மாற்றமும் இல்லை. ஆனா இன்னொரு விஷயம் நீ செய்யணும்" என்று கூறி நிறுத்த... என்ன என்பது போல் இமைகளைத் தூக்கி தகப்பனைப் பார்த்தாள் மகள்.
"உன் தம்பிகிட்ட நீ பேசணும்" என்று கூற...
முகத்தை அஷ்ட கோணலாய் சுருக்கியவள் "அவங்கிட்ட எல்லாம் நான் எதுக்கு பேசணும்? அவனே மூஞ்ச திருப்பிக்கிட்டு போறான். அப்புறம் எனக்கு என்ன வந்துச்சி?" என்றாள் அவள். முகத்தில் அவன் மீதான வெறுப்பு அப்பட்டமாய் தெரிந்தது.
"அவங்க பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குறதா இருந்தாதான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லியிருக்காங்க. அப்படிண்ணா.. உன் தம்பிய முதல்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும். அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவள உன் தம்பி கல்யாணம் பண்ணுனாதான் உன்னை அவன் கட்டிக்குவேன் சொல்லிட்டான். உன்னால உன் தம்பியா சம்மதிக்க வைக்க முடியுமா? அதனாலதான் சொல்றேன். அவன்கிட்ட போய் ஜஸ்ட் பேசு. அதுக்கப்புறம் உள்ளத நான் பார்த்துக்கிறேன்" என்று கூற...
"இதுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? இதுல எதுக்கு அவனை இழுக்குறாங்க? எனக்கு அந்த குடும்பத்தையே பிடிக்கல" என்றாள் கோபமாக.
"அப்படி பண்ணுறதா இருந்தா மட்டும்தான் கல்யாணம். இல்லாட்டி முடியாதுன்னு சொல்லிட்டாங்க" என்று கூற எரிச்சல் வந்தது அவளுக்கு.
கோபமாக தனது அறைக்குள் சென்றவள் கதவைச் சாத்திக் கொள்ள.. வெளியில் நின்று கதவைத் தட்டிய படியே கத்திக் கொண்டிருந்தார் மகேஸ்வரன்.