வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 15

GG writers

Moderator
கோபமாக தனது அறைக்குள் சென்ற ஶ்ரீலதா கதவைச் சாத்திக் கொள்ள.. வெளியில் நின்று கதவைத் தட்டிய படியே கத்திக் கொண்டிருந்தார் மகேஸ்வரன்.

"தந்தையும் மகளும் எப்படி வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள்" என்பது போல் ஒதுங்கி நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மகேஸ்வரி.

கதவை தட்டி தட்டியே ஓய்ந்தவன் "ஏய் எருமை... புள்ளைய சமாதானம் படுத்தனும்னே தெரியாதா உனக்கு? வந்து கூப்பிடுடி" என்று கத்த மறுபேச்சின்றி கதவில் தட்டி மகளைக் கூப்பிட்டார் ராஜேஸ்வரி.

இங்கு அப்படித்தான். தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கணவன் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். பணம் வந்த பிறகு கணவனைக் கையில் பிடிக்க இயலவில்லை. அவன் சொல்வதே சட்டம். நினைப்பதே விதி என்று ஆகிவிட்டது. ஆனால் அவனும் மகளின் கைப்பாவையாகி இருந்தான். பணம் இல்லாத காலத்தில் தனக்கு சமமாய் நடத்திய கணவனை இன்று வரை மிகவும் மிஸ் செய்தார் ராஜேஸ்வரி.

"சரிம்மா. நான் அவன்கிட்ட பேசுறேன். அவன் கால்ல விழுந்தாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன். நீ எதுவும் பேச வேண்டாம். சரியா?" என்று மகளிடம் கேட்க... ஒரு வழியாய் கதவைத் திறந்தாள் அவள்.

அவள் தன்னை எதுவும் செய்து கொண்டிருக்க கூடும் என்று பயந்தவர் மகளைப் பரிசோதனை செய்துவிட்டு சந்தோஷமாக வெளியில் அழைத்து வந்தவர் உணவை அள்ளிக் கொடுக்க... ஒருவாய் வாங்கியவள் "எனக்கு இதெல்லாம் பிடிக்கல டாட். வேண்டாம்" என்றாள்.

"சரிம்மா. அப்ப நீ போய் ரெஸ்ட் எடு. நான் பேசிக்கிறேன்" என்றவர்
"என்ன செய்வது என்று மண்டையைக் குழப்பி யோசித்தார்.

யாருக்கோ கால் செய்தவர் "அந்த பயலுக்க தங்கச்சிக்க போட்டோவ ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்க. ஆப் சைஸ் போதும்.. " என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.
.....
லக்ஷ்மனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்த பிரதீஸ் "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ டைம் இருக்குமா? பேசலாமா" என்று கேட்க..

"எனக்கும் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்" என்றான் லக்ஷ்மன்.

மீண்டும் அதே பார்க்குக்கு அவன் காரிலும் பிரதிஷ் தன் பைக்கிலும் வர... இருவரும் பனி பொழியும் மலர்வனத்தில் குடையின்றி அமர்ந்திருந்தனர்.

"சொல்லுங்க" என்றவன் மனத்திற்குள் அதற்குள் பல கேள்விகள் வந்து சென்றிருந்தன.

"எதற்காக என்னிடம் பேச வேண்டும்?"
"ஒருவேளை தன் தங்கையை பார்க்க கூடாது என்று சொல்லப் போகிறாரோ?"
"பிரகதியிடம் பேசுவது பிடிக்காமல் தன்னை மிரட்டுவதற்காக தனியே அழைத்து வந்திருக்கிறாரோ?"
"நம்மை அவர் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டால் என்ன செய்வது?"
"பிரகதி இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? வேறொருத்தியை ஏற்றுக்கொள்ள முடியுமா?" என்று பலவாறாக லக்ஷ்மன் எண்ணிக் கொண்டிருக்க...

அவன் மனநிலை புரியாமல் எப்படி கேட்பது என்று புரியாமல் ஒரு நொடி திணறிய பிரதீஷ் "நீங்க ஏதாே சொல்லனும்னு சொன்னிங்களே? நீங்க முதல்ல சொல்லுங்க" என்று கூற...

"அது வந்து.. அது நீங்க.. எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல" என்று தயங்கியவன் தடுமாற...

"என் தங்கச்சி விஷயத்துல இனிமே தலையிடா" என்ற பிரதீஷின் வார்த்தையை முடிக்கும் முன்னமே..

"ஏங்க... அப்படி மட்டும் சொல்லிடாதீங்க. எனக்கு உங்க தங்கச்சிய ரொம்ப புடிச்சிருக்கு. அவங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க. வீட்ல இருந்து வந்து பேச சொல்றேன். இல்லாட்டி பிரகதிகிட்ட சம்மதம் கேட்டு நானே தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன். எப்படினாலும் நீங்க அவள எனக்கு கட்டி வச்சிதான் ஆகணும். வேற வழியே இல்ல. நீங்க எனக்கு தெரியாம வேற யாருக்கும் அவள கல்யாணம் பண்ணி கொடுக்கவும் விட மாட்டேன். ரொம்ப டார்ச்சர் பண்ணுவேன்" என்று கடகடவென்று ஒப்பித்தான் லக்ஷ்மன்.

"எங்கே எதிரில் அமர்ந்திருக்கும் பயில்வான் முழுதாய் தன்னை மிரட்டி தன்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போகுமோ" என்ற பதட்டத்தில் மனதில் இருந்த அனைத்தையும் உளறி கொட்டி இருந்தான் அவன்.

அவனை அழுத்தமான பார்வை ஒன்றைப் பார்த்தான் பிரதீஷ்.

"அப்படியெல்லாம் பாக்காதீங்க எனக்கு பயமா இருக்கு" என்று கூறியவன் பிரதிஷையும் தரையையும் மாத்தி மாத்தி பார்க்க... பிரதீஷின் கண்களில் பல நூறு கேள்விகள். ஏன்? எப்படி? எதற்கு? என்ன ஆகும்? என்பன போன்ற.

அதை புரிந்து கொண்டவன் போல் "எனக்கு இதுல எந்த கெட்ட எண்ணமும் இல்ல. என் பிரகதிய இண்ணைக்கு காலையில்தான் பார்த்தேன். பார்க்குறப்போ சாதாரணமாத்தான் தெரிஞ்சிது. ஆனா அவள உங்க வீட்ல விட்டு விலகி போன பிறகுதான் அவள ஒரு நிமிஷம் கூட என்னால மறக்க முடியல. வாழ்ந்தால் அவளோடதான்னு முடிவு பண்ணிட்டேன். திரும்பி நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ... நீங்க யாரும் வீட்ல இல்ல. வேலை கிடைச்ச சந்தோஷத்தை விட அந்த கொஞ்ச நேரம் அவள காணாம நான் தவிச்ச தவிப்பு அவ எனக்கு எவ்வளவு முக்கியம்ண்ணு எனக்கு புரிய வச்சிது. இனி நீங்கதான் சொல்லணும்" என்று அணை திறந்த வெள்ளம் போல் மடமடவென்று கூறியவன் "மச்சான் என்ன சொல்ல போகிறானோ?" என்று பயத்தோடு பிரதீஷின் முகத்தை ப பார்க்க... சிரித்தான் அவன்.

பிரதீஷின் சிரித்த முகத்தைப் பார்த்த பிறகே "அப்பாடா" என்று மூச்சு வந்தது லக்ஷ்மனுக்கு.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனால் என் தங்கச்சியால நடக்க முடியாது. உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்" என்று பிரதிஷ் கூற...

"ஏன் மச்சான்? நான் என்ன உங்க தங்கச்சியைப் பார்க்காமலா கட்டி கேட்கிறேன்? எல்லாம் தெரிஞ்சு, புரிஞ்சுதான் கேக்குறேன்" என்றான் அவன்.

"ஓகே. ஆனா இப்போ ஒரு வேகத்துல.. அவ மேல ஏற்பட்ட இன்பாக்டிவேசனால கூட அந்த பீல் வந்துருக்கலாம். கல்யாணம் பண்ணிட்டு பின்னாடி வருத்தப்படக்கூடாதுல்ல" என்று தமையனவன் தங்கையின் எதிர்காலம் கருதி கேட்க..

"அதெல்லாம் இல்ல. நான் என்ன பதினாறு வயசு பையனா? எதிர் பாலினத்தைப் பார்த்தவுடனே ஈர்க்குறதுக்கு. அதெல்லாம் இல்ல. இத்தனை வருஷமா எந்த பொண்ணு மேலயும் வராத ஃபீலிங் அது. என் உயிர் இருக்கிற வரைக்கும் என் பொண்டாட்டி ஒரு நாளும் அழுதுட்டு உங்க வீட்டு வாசலுக்கு வரமாட்டா. அது என் மேல சத்தியம்" என்றான் லஷ்மன்.

"ஆக்சுவலி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பதாகதான் எங்க வீட்ல முடிவு பண்ணி இருந்தோம். ஆனா இப்போ அது செட்டாகாதுன்னு நினைக்கிறேன்" என்று கூற..

"ஆமாம்மா. அது உண்மைதான். எனக்கும் ஒரு அக்கா இருக்கா. ஆனா என்ன? அவ உங்களுக்கு எல்லாம் செட்டாக மாட்டா. கட்டினீங்கன்னா நீங்கதான் பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க. உங்க நல்ல மனசுக்கு நல்லதா ஒரு பொண்ண கட்டி நல்லா இருங்க" என்றான் லஷ்மன் படபடப்பாய்.

"என்ன? கூட பிறந்த அக்காவையே இப்படி பேசுறீங்க" என்று சந்தேகமாய் அவனைப் பார்க்க...

"சார்... இன்னைக்கு வரைக்கும் அக்கான்னுதான் பேரு. அதுக்கு சூட்டாகுற மாதிரி ஒரு விஷயத்துல கூட அவ நடந்துகிட்டது இல்ல. நீங்க என்னைக்கா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வரத்தானே செய்வீங்க? அப்ப பார்த்தாலே .. புரிஞ்சிக்குவீங்க. பணம் இருக்குற திமிரு. தலை நிறைய கனத்த சேத்து வச்சுருக்கு. பணத்தால எதையும் வாங்கலாம்னு நினைச்சுகிட்டு இருக்கா. அடுத்தவங்களுக்கு கெடுதல் செஞ்சாலும் எங்க அப்பா அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு நிப்பாங்க. அதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல" என்று வெறுப்புடன் கூற... இருவரது கண்ணிலும் ஸ்ரீலதா ஒரு நிமிடம் வந்து போனாள்.

"நல்லது. நீங்க உங்க அட்ரஸ் தரீங்களா? நான் உங்க வீட்ல போய் பேசுறேன்" என்று பிரதீஷ் கேட்க...

"அட்ரஸ் தரேன். என்னை பற்றி அக்கம் பக்கத்துல நல்லா விசாரிச்சுக்கோங்க. பட்... ஃபர்ஸ்ட் நான் அப்பாட்ட பேசிட்டு உங்களுக்கு இன்டிமேஷன் பண்றேன். அதுக்கு அப்புறமா நீங்க வந்து பேசுறீங்களா? அப்பதான் சரியா இருக்கும்" என்றான் லக்ஷ்மன்.

"சரி" என்று பிரதீஷும் ஒப்புக்கொள்ள தனது முகவரியை அவனிடம் கொடுத்தான் லஷ்மன்.

அந்த முகவரியைப் பார்த்த பிரதீஷின் புருவங்கள் முடிச்சிட்டன. உங்க அப்பா பேரு மகேஸ்வரனா?" என்ற கேள்வியுடன் அவன் முகத்தைப் பார்க்க...

"ஆமா நீங்க கூட கேள்விப்பட்டு இருப்பீங்களே.. ஸ்ரீலதா இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்? அதோட ஓனர் மகேஸ்வரன்தான் எங்க அப்பா" என்றான் லஷ்மன்.

அடுத்த நொடி முகமங்கும் அதிர்வு பரவ.. "வாட்" என்று கேட்டவன்.. லக்ஷ்மனின் சட்டையைக் கொத்தாக பிடித்திருந்தான்.

"என்ன திட்டம் போட்டுதான் என் தங்கச்சியை மீட் பண்ணியா நீ?" என்று சட்டையைப் பிடித்தபடியே கேட்க அதிர்ந்து விழித்தான் லஷ்மன்.

பதட்டத்தில் அவன் கண்கள் கலங்கின. "என்ன சொல்றீங்க? நீங்க ஃபர்ஸ்ட் என்ன பண்றீங்க?" என்று அவசரமாய் கேட்டவன்..
"உங்க தங்கச்சியை நான் ஆக்சிடென்ட்டலாதான் பார்த்தேன். நான் எந்த மாதிரியும் பிளான் பண்ணல. உங்க தங்கச்சி அந்த நேரம் வெளியே வருவாங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்?" என்று கேட்க...
அவன் சட்டைக்காரரை விடுத்தவன் தன் புருவத்தை நீவியவரே குனிந்து அமர்ந்தான்.

"எங்க அப்பாவ உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? என்றான் லஷ்மன்.

அதற்கு பதில் கூறாமல் லஷ்மனை ஆழ்ந்த பார்வை பார்த்தான் பிரதீஷ்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவனை புரியாமல் அவன் பார்த்துக் கொண்டிருக்க... அந்த அமைதி தன்னைக் கொள்வது போல் உணர்ந்தால் லக்ஷ்மன்.

"என்ன ஆச்சி? தயவு செஞ்சு சொல்றீங்களா? நீங்க சொன்னாதான் நான் ஏதாவது ஒரு சொலுஷன் சொல்ல முடியும்" என்று படபடப்புடன் கூற...

"என் தங்கச்சி இன்னைக்கு வீல்சேரில் இருக்கான்னா அதுக்கு காரணமே உன்னோட அக்காதான்" என்றான் பிரதீஷ்.

அதைக்கேட்டு அதிர்ந்தவன் வாயிலிருந்து பேச்சே வரவில்லை.

"அது... அ.... அப்போ ... அந்த கருணாகரன்றது உங்க அப்பாவா? என்று நிறுத்தினான் லக்ஷ்மன்.

பிரதீஷ் "ஆம்" என்பது போல் தலையசைக்க "சாரி சார்.. நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணல. எனக்கு முழுசா தெரியல. ஆனா கேள்வி பட்டு இருக்கேன். என்ன மன்னிச்சிடுங்க" என்றவன் இயலாமையோடு பார்க்க...
"இட்ஸ் ஓகே. விடுங்க" என்ற பிரதீஷ் குனிந்தே அமர்ந்திருந்தான்.

"பட்.. ஒன் திங்க். அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" என்று தன் நிலையில் விளக்கம் கொடுத்தான் லஷ்மன்.

"உனக்கு சம்பந்தம் இல்லாட்டாலும் அவனோட புள்ளதானே நீ? அத மாத்த முடியாது இல்லையா?" என்று பிரதீஷ் கண்களை உருட்டியபடி கேட்க...

"அவரோட பிள்ளையா இருந்தாலும் இன்னைக்கு வரைக்கும் நான் அவங்களோட காசுல உக்காந்து திங்கல. என் படிப்பு செலவு முதற் கொண்டு என்னோட சாப்பாடு வரைக்கும் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலதான் குடுத்துகிட்டு இருக்கேன்.

"நான் இன்னைக்கு வரைக்கும் அந்த வீட்ல இருந்தாலும் நான் தனி ஆளு. எங்க அம்மாவுக்காக மட்டும்தான் அங்க இருக்குறேன். இப்போ நான் கஷ்டப்பட்டு எழுதி எனக்கு வேலை கிடைச்சிருக்கு. இனிமே நானும் சரி; என்னைக் கட்டிக்க போறவளும் சரி.. அதுல வர வருமானத்துலதான் சாப்பிடுவோமே தவிர... எங்க அப்பன் காசுல இல்ல" என்று சடசடவென பொழியும் மழைத்துளியைப் போல் என் கொண்ட பார்வையோடு தன்னிலை விளக்கம் கொடுத்தான் லக்ஷ்மன்.
 
Top