GG writers
Moderator
மகேஸ்வரன் அலுவலகத்தில் இல்லை என்றதும் ராஜேஸ்வரியின் எண்ணுக்கு அழைக்க அழைப்பை ஏற்றார் மகேஸ்வரன்.
"அங்கிள் ... நாங்க உங்களைத் தேடிட்டு இருக்கோம். எங்க இருக்கீங்க?" என்று தீபக் கேட்க...
"யார் நீ?" என்றார் அவர்.
"நான் லக்ஷ்மனோட பிரண்டு" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவன் மீண்டும் கேட்டதையே கேட்க...
"அவன முதல்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லு. அதுக்கு பிறகு உள்ளத அதுக்கு அப்புறம் பார்க்கலாம்" என்று வீராப்பாய் பிசினஸ் பேசினார் தந்தை. எனினும் அழைப்பைத் துண்டிக்கவில்லை.
சற்று நேரம் என்னவோ யோசித்த லக்ஷ்மன் "சரி விடுடா. அவர் பொண்டாட்டி. அவர் என்ன வேணாலும் செய்யறாரு. நம்ம என்ன செய்ய முடியும்? அவர் பொண்டாட்டியைக் கொன்னாலும் எனக்கு அத பத்தி கேக்க என்ன ரைட்ஸ் இருக்கு சொல்லு? எப்படியும் போகட்டும். அவராச்சி அவர் பொண்டாட்டி ஆச்சி" என்று கூற...
அந்தப்புறம் ராஜேஸ்வரியின் அலறல் குரல் அலைபேசியின் ஒலி அளவைத் தாண்டி லக்ஷ்மனின் காதில் விழ இதயம் கனத்தது.
அவர் அலறும் சத்தத்தைப் பொறுக்க முடியாமல் லக்ஷ்மன் கஷ்டப்படுவதைப் பார்த்த தீபக் காலைக் கட் செய்ய ... "இந்த சைக்கோ அம்மாவைக் கொன்னு போடுவான் போலயே?" என்று தலையில் அடித்துக் கொண்டவன்...
"எல்லாம் என்னால வந்ததுதான். முதல்ல அம்மாவைக் கூட்டிட்டு அந்த ஆளு கண்ணுல படாம எங்கேயாவது போய் இருக்கணும்" என்று எரிச்சலோடு அங்குமிங்கும் நடந்தான்.
அவன் கண்கள் அடர் சிவப்பு நிறம் பெற்றிருக்க... சிவந்திருந்த கண்களுடன் அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது தீபக்கிற்கு.
"அம்மாவைக் காப்பாத்துறதுக்கு இப்போதைக்கு நம்ம ஒத்துக்கிட்டுதான் ஆகணும். இப்போதைக்கு வேணா கூட நீ ஓகே சொல்லு மச்சான். அப்புறமா கூட ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கலாம். பொண்ணு வீட்டிலேயே போய் பேசிக்கலாம். அம்மாவை முதல்ல நம்ம காப்பாத்துவோம்" என்றான் தீபக்.
"எப்படியாவது அந்த கால் ஊனமுற்ற பெண்ணிடம் இருந்து இவனைத் தப்பிக்க வைத்து விடலாம். அவங்க அப்பா சொன்ன பொண்ண கல்யாணம் பண்ணியாச்சுன்னா இவன் அதுக்கப்புறம் வாழ்ந்துதான் ஆகணும். அந்த பொண்ண மறந்துதான் ஆகணும்.." என நினைத்து அவன் ஐடியா சொல்லியிருக்க... "முடியாதுடா" என்று மறுத்து விட்டான் லக்ஷ்மன்.
"உன்னை என்ன அந்த பொண்ண கல்யாணமா பண்ண சொன்னேன்? ஜஸ்ட் நம்ம அங்க போனாலே அம்மாவும் அங்க வந்துருவாங்க. அம்மா இல்லாம நிச்சயதார்த்தம் நடக்குமா? சோ.. அவங்க வந்ததும் நம்ம அவங்கள கூட்டிட்டு எஸ்கேப் ஆயிடலாம்டா"
"பொண்ணு புடிக்கலன்னு கல்யாண மேடையில வச்சு சொல்லி கூட எத்தனையோ கல்யாணங்கள் நின்னு போயிருக்குடா" என்று தீபக் கூற..
"இல்லடா. அப்படி பண்றது யாரோ ஒரு முகம் தெரியாத பொண்ணுக்கு செய்கிற பாவம். அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்" என்று மறுத்தான் அவன்.
"நீ என்ன கல்யாணமா பண்ணிக்க போற? நிச்சயதார்த்தம் அன்னைக்கே உனக்கு பிடிக்கலங்குற மேட்டர பொண்ணுகிட்ட தனியா போய் சொல்லிடு.." என்று ஏதேதோ அந்த இரவு முழுவதும் பேசிப்பேசியே லக்ஷ்மனின் மண்டையை கழுவினான் தீபக்.
"சரி... அந்த ஆளுகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம்ணு சொல்லு. இப்பவே அம்மா இங்க வந்து இருக்கணும்னு சொல்லு" என்று கடுகடுத்த முகத்துடன் லக்ஷ்மன் சொல்ல... தீபக் மீண்டும் ராஜேஸ்வரியின் எண்ணுக்கு அழைத்து மகேஸ்வரனிடம் அவன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக கூறினான்.
"என்னையே ஏமாத்த பார்க்கிறானா? சரி. இருக்கட்டும். முதல்ல நிச்சயதார்த்த முடியட்டும். அதுக்கப்புறம் அவங்க அம்மாவைப் பார்க்கலாம்" என்று கூறினார் மகேஸ்வரன்.
"டேய்... இந்த ஆளு ஏன்டா இப்படி இருக்காரு. ச்சேய்.... இவனெல்லாம் நல்ல அப்பனா இருக்குறதுக்கும் லாயக்கு இல்ல. நல்ல புருஷனா இருக்கிறதுக்கும் தகுதி இல்ல. கேட்டா... ஊர்ல பெரிய மனுஷனாம். நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகும் இவன் அம்மாவை ஒழிச்சுதான் வைப்பான். வேணும்னா பாரேன்" என்று பல்லைக் கடித்த படி லக்ஷ்மன் கூற... பதில் கூற முடியாமல் விழித்தான் தீபக்.
எனினும் முயற்சி செய்யாமல் தோல்வியை ஒப்புக்கொள்ள எண்ணாதவன்.. தந்தையின் ஒவ்வொரு அலுவலகமாக சென்று தாயைத் தேட துவங்கினான்.
ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.
மறுநாள் காலை தந்தை மட்டும் திரும்பி வர.. ஆத்திரத்துடன் அவர் சங்கைப் பிடித்தான் லக்ஷ்மன்.
"என்னைக் கொன்னுட்டேனா உன் அம்மாவும் அங்க சோறு தண்ணி இல்லாம செத்து போயிடுவா. அதுக்கு பிறகு நீதான் முடிவு பண்ணனும்" என்று திமிராக பதில் உரைக்க கையை உதறி கொண்டு தகப்பனைத் தள்ளி விட்டவன் தன் கோபம் தீரும் வரை சுவற்றில் ஓங்கி ஓங்கி தன் முட்டியால் குத்த ரத்தம் கொப்பளித்தது.
ஆனாலும் தந்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
"இந்தா அந்தப் பொண்ணோட போட்டோ. ஆசை தீர பார்த்துக்கோ" என்று கடமைக்கு செல்லிய படி அங்கிருந்த மேஜையில் கவர் ஒன்றைத் தூக்கி எறிந்தார்.
அதை எடுத்து சுக்குநூறாக கிழித்து தந்தையின் முகத்திலேயே விட்டெறிந்தான் மகன்.
....
சற்று நேரமாகி தூங்கியதால் லேட்டாய் எழுந்த பசுமதி "அலுவலகத்திற்கு செல்வதற்குள் சமையலை முடிக்க வேண்டுமே" என்று அவசர அவசரமாய் சமையலைச் செய்து கொண்டிருந்தார்.
அந்நேரம் வீட்டிற்கு வந்த பிரதீஷ் தாயை அழைத்து அமர வைக்க.. "டேய் கண்ணா... எனக்கு நிறைய ஒர்க் இருக்கு. முடிச்சிட்டு அப்புறமா உன்கிட்ட பேசுறேன்" என்று படபடத்தார் பசுமதி.
"அம்மா இது அதைவிட முக்கியமான விஷயம். நீங்க இப்பவே லேட் பண்ணாம கேட்டுதான் ஆகணும். வந்து உட்காருங்க. சமையல நான் அப்புறமா கூட முடிச்சுக்கிறேன். நீங்க சாப்பிட்டு மட்டும் போங்க. உங்களுக்கு லஞ்ச் நானே எடுத்துட்டு வரேன்" என்று கூற ஆழ்ந்த மூச்சை இழுந்து விட்டவர்..
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் வெளியே பார்த்துகிறேன். சரி நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு" என்று கூறி அமர்ந்தார்.
நிதானமாக நேற்று நடந்தவற்றையும் லக்ஷ்மன் யார்? என்ன? என்ற உண்மைகளையும் எடுத்து உரைக்க... அதிர்ந்து எழுந்தார் பசுமதி.
"அந்த கொலைகாரன் குடும்பத்துல சம்பந்தமா? வாய்ப்பே கிடையாது. நீ என்ன வேணாலும் சொல்லு. என் புள்ள கடைசி வரைக்கும் இப்படி வீல்சேரில் முதிர் கன்னியாக கூட இருந்துட்டு போகட்டும். ஆனா அவனோட குடும்பத்துல இருந்து ஒரு சம்பந்தம் இந்த வீட்டுக்கு தேவையில்லை" என்று பசுமதி கராராக பேச..
"அம்மா... நான் உங்ககிட்ட சொன்னேனே? சின்ன வயசுல என் பிரண்டு ஒருத்தி இருந்தா. அந்த பொண்ண நான் விரும்புறேன்னு. அந்த பொண்ணு வேற யாரும் இல்ல. மகேஸ்வரனோட பொண்ணுதான்" என்று மகன் கூற தலையில் இடியே வந்து இறங்கியது போல் இருந்தது பசுமதிக்கு.
அதிர்ந்து விழித்தவர் "என்னப்பா சொல்ற?" என்றார். அவர் குரல் தாழ்ந்து கம்மி ஒலித்தது.
"சின்ன வயசுல இருந்து நான் விரும்புற பொண்ணு மகேஸ்வரனோட மகதான்ம்மா. ஆனால் முதல்ல அவ நல்லாதான் இருந்தா. பாதியில பணத்திமிர்னால கண்ணு தெரியாம புத்தி கெட்டுப் போயிடிச்சி. ஆனால் உண்மையில அவ நல்ல பிள்ளதான்ம்மா. அவ அப்பங்காரன் செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வெச்சி இருக்காரு. நான் அவள மாத்திடுவேம்மா" என்று கூற... தலையைப் பிடித்துக் கொண்டு ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் பசுமதி.
"என்னப்பா சொல்ற? போயும் போயும் ஊர் உலகத்துல வேற பொண்ணு இல்லன்னா... அவன் பொண்ண போய்?" என்றவர் வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை.
தாயவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
"சாரிம்மா. இத நான் உங்களைக் கஷ்டப் படுத்துறதுக்காக சொல்லல்ல. உங்களுக்கு வேண்டான்னா விட்ருங்க. ஆனா தங்கச்சிக்கு அவ தம்பிய பிடிக்க போய்தான் இத உங்ககிட்ட சொல்றேன். இல்ல அவளுக்கு பாக்குற பையனோட சகோதரத்தைதான் கட்டி இருப்பேன். ஆனா அவ ஆசப்பட்ட வாழ்க்கைய குடுக்குறதவிட நம்ம பெருசா என்ன சாதிச்சிர முடியும்ணு தோணிச்சிம்மா. அதனாலதான் கேட்டேன்" என்று மகன் தன்னிலை விளக்கம் கூற...
"என்னப்பா பேசுற நீ? அவ ஆசப்பட்டாண்ணு பாழும் குழியில் கொண்டு என் புள்ளைய தள்ள சொல்லுறியா?" என்று ஆத்திரத்தோடு கேட்க...
"எனக்கு லக்ஷ்மன் மேல நம்பிக்கை இருக்கும்மா. அவன் நம்ம தங்கச்சியைச் சும்மா விட்டுற மாட்டான்" என்று நம்பிக்கையோடு கூற...
"அவன் பெத்த மகன்தானே இவன வேற எப்படி இருப்பான். அவனை போலத்தான் இருப்பான். ராஜேஸ்வரிய ஒரு பொருட்டா கூட அவன் எல்லாம் மதிக்க மாட்டான் தெரியுமா?" என்று நடந்தவற்றை கண்ணில் நிழல் படமாய் பார்த்தபடி தாய் கூற..
"மன்னிச்சிடுங்க அம்மா. நீங்களும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்கதானே? அதோட வலி என்னன்னு உங்களுக்கு தெரியும். தங்கச்சிக்கு அந்த வலியைக் கொடுக்க வேண்டாம்ணு நான் நினைச்சேன். அப்புறம் உங்க இஷ்டம். நீங்கதான் எனக்கு முடிவு சொல்லனும். அந்த ஆளு கண்டிப்பா இன்னைக்கு வருவான். உங்ககிட்ட வந்து பேசுவான். நீங்க உங்க முடிவைச் சொல்லுங்க. எதுனாலும் நான் ஏத்துக்குறேன்" என்று கூற.. எதுவும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தார் பசுமதி.
பிரகதீஸ்வரி இன்னும் தூங்கி விழித்திருக்கவில்லை. தங்கையின் அறைக்கு சென்றவன் "கன்னுக்குட்டி..." என்று அழைத்தபடி அவள் தலையைக் கோதி விட.. "பைவ் மினிட்ஸ் அண்ணா.." என்று போர்வைக்குள் நன்றாய் புகுந்த படி மீண்டும் விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள் பிரகதீஸ்வரி.
தங்கையைப் பார்த்து விட்டு நேராக தனது அறைக்கு சென்று பிரஸ் ஆகி வெளியே வருகையிலும் தாய் அதே இடத்தில் அமர்ந்து இருக்க...
"அம்மா உங்களை கஷ்டப் படுத்துறதுக்காக நான் இதை சொல்லல. உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி லீவ் இட்..ம்மா. ஒன்னும் பிரச்சனை இல்ல. வீ வில் டேக் கேர்" என்றான் சிறு வருத்தத்தோடு.
"இல்லடா நான் உயிர் வாழ்றதே உங்க சந்தோஷத்துக்காகதான். உங்க சந்தேஷத்தை அழிச்சிட்டு நான் என்ன பண்ண போறேன்? உங்க சந்தோஷத்தை விட ஏன் வரட்டு பிடிவாதம் ஒன்னும் பெருசு இல்லை. நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்" என்ற தாயவள் முகத்தில் கசந்த புன்னகை சிந்தினார்.
"சரிம்மா அப்படி பேசுறதா இருந்தா நீங்க ஒரு சில கண்டிஷன்ஸ் நம்ம சைடுல இருந்து சொல்லணும்" என்று கூற..
"இது எதுக்குடா? முழுசா நனஞ்ச பிறகு முக்காடு?" என்று கேட்க "ப்ளீஸ்ம்மா ... நான் சொன்னத செய்யுங்க" என்றான் அவன்.
"சரிப்பா. என்னமோ சொல்ற கேட்டு பார்க்கிறேன்" என்ற தாயும் சம்மதம் தெரிவித்தார்.