GG writers
Moderator
"சரிம்மா அப்படி பேசுறதா இருந்தா நீங்க ஒரு சில கண்டிஷன்ஸ் நம்ம சைடுல இருந்து சொல்லணும்" என்று கூற.. அவனை ஏற இறங்க பார்த்த பசுமதி
"எதுக்குப்பா தேவையில்லாம?" என்று கேட்டவரிடம் காரணம் இருக்குமா. "நான் சொல்றத மட்டும் அந்த ஆளுகிட்ட சொல்லுங்க.." என்க "சரி" என்று சம்மதம் தெரிவித்தார்.
தாயார் குழப்பத்தோடு அலுவலகம் கிளம்பி சென்றார். பாக்கி இருந்த சமையல் வேலைகளை பிரதீஷ் முடித்துவிட்டு அக்கடாவென்று படுக்கலாம் என்று வந்த நேரம் காலிங் பெல் அழைத்தது.
கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச செவ்வண்ணம் பூண்டிருந்தன.
கண்களைக் கசக்கியபடியே கொட்டிவியைப் பறக்க விட்ட வண்ணம் கதவைத் திறந்தான்.
லக்ஷ்மன்தான் நின்றிருந்தான். ஆனால் என்ன? கவலையும், குழப்படும், பயமும் சூழ்ந்த கலவையான முகத்துடன்.
எப்பொழுதும் அவன் கண்களில் இருக்கும் தேடலும் ஆவலும் இன்று காணாமல் போயிருந்தது.
அவனைப் பார்த்த பிரகதீஸ்வரியின் முகம் பூரித்து போனது. பிரதீஷும் "வாங்க" என்று இன்முகமாகவே அழைத்தான். ஆனால் வந்த அமர்ந்தவன் முகமோ வாடிக்கிடந்தது.
வீட்டைச் சுற்றிலும் பார்த்தவன் என்ன நினைத்தானோ? ஏக்க பெருமூச்சுகள் அவனை மீறி வந்தன. அவனை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த பிரகதீஸ்வரியை நிமிர்ந்து பார்க்கக் கூட இயலாது குனிந்தே அமர்ந்திருந்தான்.
பிரதீஷின் முகத்தைப் பார்த்ததுமே அவன் சோர்வில் இருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது லக்ஷ்மனால். எனினும் "விஷயம் கை மீறி போவதற்குள் கூறியாக வேண்டும்" என்று முடிவு எடுத்தவன்..
"உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். கொஞ்சம் வெளியே வர முடியுமா?" என்று தயக்கத்தோடு அழைத்தான்.
"என்ன திடீர்னு?" என்று பிரதீஷ் கேட்க "கொஞ்சம் பர்சனல்" . அவன் கண்கள் எத்தனைதான் முயற்சித்தும் கள்ளத்தனமாக பிரகதீஸ்வரியின் மேல் சென்று படிந்து வந்தது.
அவன் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றம் பிரகதீஸ்வரியையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருந்தது.
அவன் பாராமுகம் உயிர் வரை சென்று வலித்தது. தெய்வத்தின் பார்வைக்காய் பல நாள் தவமிருக்கும் பக்தன் போல் அவன் விழிகளையே விழித்தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரகதீஸ்வரி.
பல்லைக் கடித்து பிடித்துக் கொண்டு எதிரில் அமர்ந்திருந்தவளைத் தேடிச்செல்லும் கண்களுக்கு கடிவாளம் இட்டுக்கொண்டு முள்ளின் மேல் அமர்ந்திருப்பவன் போல் இதயம் துளித்துளியாய் ரத்தம் வடிக்க... தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து துணிந்தே அமர்ந்திருந்தான் அவன்.
"நம்மகிட்ட சொல்ல முடியாத பர்சனல்ன்னா என்ன அர்த்தம்? ஒருவேளை அண்ணன்கிட்ட நம்மள பொண்ணு கேக்க போறாரோ? இல்ல அவருக்கு வேற யாராவது பொண்ணோட கல்யாணமா இருக்குமோ?
சே... சேச்சே.. அப்படி இருக்காது. காசு ஏதாவது கடன் கேட்பாரோ?
இதற்காக உடம்பு சரி இல்லாம போயிடுச்சோ?" என்று பிரகதீஸ்வரியின் மனம் வெல்வேறு விதவிதமாய் பாடம் கற்பித்து அது இல்லை என்று வாதிட்டுக் கொண்டிருந்தது.
யோசனையோடு பிரதீசும் கிளம்பி செல்ல.. பார்க்கில் அன்றே அமர்ந்திருந்த அதே பெஞ்சில் சென்று அமர்ந்திருந்தனர் இருவரும். வந்து பத்து நிமிடங்கள் ஆகியும் பேச முயன்று மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருந்தான் லக்ஷ்மன்.
அவன் கண்ணில் இருந்து இப்பவோ? அப்பவோ? விழுந்து விடுவேன் என்று கண்ணீர் தேங்கியிருக்க "என்ன ஆச்சி? ஏதும் பிரச்சனையா மாப்ள?" என்றான் பிரதீஷ்.
அவன் மாப்பிள்ளை என்று பிரதீஷின் வாயால் கேட்ட மறுநொடி கண்ணில் இதுவரை அவன் அணை கட்டி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்திருந்தது.
"ஆமா" என்றவன் குரல் கரகரத்து வெளிவந்தது.
"என்ன ஆச்சி? என்ன பிரச்சனைனாலும் சொல்லுங்க எதுனாலும் பாத்துக்கலாம். என் தங்கச்சியை பிடிக்காட்டி கூட சொல்லுங்க. எதுவும் பிரச்சனை இல்லை" என்று பிரதீஷ் எடுத்துக் கூற...
"உங்க தங்கச்சியைப் பிடிக்கலைன்னு நான் எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன் இது வேற..." என்று விட்டு சிறிது தயங்கியவன் "எங்க அம்மாவ நேத்து இருந்து காணோம்" என்க.. அதிர்வுடன் பார்த்தான் பிரதிஷ்.
"என்ன சொல்றீங்க? தேடாமல் இங்க உக்காந்துட்டு இருக்குறீங்க. கம்ப்ளைன்ட்டாவது பண்ணீங்களா?" என்று பதறியபடி கேட்க...
"அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை. முடிஞ்சா செய்திருக்க மாட்டேனா? நைட்டு ஃபுல்லா அவங்கள தேடி அலைஞ்சதுதான் மிச்சம். கண்டுபிடிக்க முடியல. அவங்கள பிடிச்சி வச்சிருக்கிறவன் பெரிய ஆளு. இந்த ஊரையே தன் கைக்குள்ள வச்சிருக்கவன்" என்க... எரிச்சலில் மின்னின அவன் கண்கள்.
"அம்மாவ எதுக்கு கடத்தினானாம்? ஏதாவது டிமாண்ட் பண்ணானா?" என்று பிரதீஷ் லக்ஷ்மனின் கையை ஆறுதலாக பிடித்தபடி கேட்டான்.
"அவன் சொல்ற பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் அம்மாவ விடுவானாம். நாளைக்கு நிச்சயதார்த்தம்ணு சொல்லி இருக்கான்" என்று கூற... தலையில் இடி விழுந்தது போல் இருந்தது பிரதீஷுக்கு.
எனினும் தாயைப் பிரிந்து அழும் இந்த குழந்தையின் அழுகையும் பொய் இல்லை. காதலையும் விட்டுக் கொடுக்க முடியாமல், தாயையும் விட்டுக் கொடுக்க முடியாமல் அவன் படும்பாடு லக்ஷ்மனின் முகத்திலேயே தெரிந்தது.
எனினும்.. "நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்க...
"எனக்கு என்ன முடிவு பண்றதுன்னு தெரியல. என்னால என் லைஃபையும் விட்டுக் கொடுக்க முடியல. எங்க அம்மாவையும் விட்டுக் கொடுக்க முடியல. அவங்கள புடிச்சு வச்சிருக்க சைக்கோ அவன் நெனச்சத செய்யாட்டி அவங்கள கொன்னு போடவும் தயங்கமாட்டான்" என்று குழப்பத்தோடு கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டிருக்க கண்களை மூடி ஆழ மூச்சு எடுத்தான் பிரதீஷ்.
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க உங்க அம்மாவ பாருங்க. என் தங்கச்சிக்கு உங்களை விட நல்ல வரன் கிடைக்கும்" என்று கூறிவிட இதயத்தை பிடுங்கி வேறு எங்கோ வைத்து தைத்தார் போல் வலியை உணர்ந்தான் லக்ஷ்மன்.
"சாரி மச்... சாரி... நான் அவ மனசுல ஆசையை வளர்த்து மோசம் பண்ணனும்னு நினைக்கல. ஆனா என் அம்மாவோட உயிரை விட என் காதல் பெருசா எனக்கு தெரியல. ஆனா.. அவளை விட்டு என்னால" என்று ஏதோ கூற வர...
"உங்க நிலைமையில நான் இருந்துருந்தாலும் இந்த முடிவைதான் எடுத்து இருப்பேன். உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு. அவ ஆசைப்பட்டா பட்டுகிட்டு இருக்கட்டும். நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பாப்போம்ன்னு நினைக்காம என்கிட்ட வந்து சொல்லணும்னு நினைச்சீங்களே? அதுலயே உங்க நல்ல குணம் தெரியுது. நீங்க எனக்கு மாப்பிள்ளையா வரலையேன்னு வருத்தமாவும் இருக்கு. எனி வே டச்லையே இருங்க. பட் ஒன் திங் சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. இனிமே எங்க வீட்டுக்கு வராதீங்க. ப்ளீஸ்..." என்க புரிந்து கொண்டு தலையாட்டினான் லக்ஷ்மன்.
"ஹேப்பி மேரீட் லைஃப்" என்று கைக்குலுக்க எண்ணி கையை நீட்ட அதை பிடிக்கவே இல்லை லக்ஷ்மன்.
அவன் கண்ணில் இருந்து உடைபடுத்த வெள்ளம் போல் கண்ணீர் வழிந்து, அழுது அழுது சிவந்த அவன் கண்கள் அவன் காதலின் வலி எத்தகையது என்று பிரதீஷுக்கு உணர்த்தியது.
"உங்க அம்மாவை காப்பாத்த ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டா கேளுங்க. நானும் என்னால முடிஞ்ச உதவியைச் செய்யுறேன்" என்று பிரதீஷ் கூற...
"இல்ல . அவங்களுக்கு ஏதும் ஆகாது. அவனுக்கு தேவை அவன் நினைச்சது நடக்கணும். அது மட்டும்தான்" என்று கண்ணீர் வடிக்க..
"ஓகே" என்று கூறிய பிரதீஷ் "அப்ப நான் கிளம்பட்டுமா?" என்றான்.
"உங்க தங்கச்சிகிட்ட நீங்க நான் அவங்கள விரும்பினதைச் சொல்லிட்டீங்களா?" என்று கேட்க... "இல்லை" என்று தலையாட்டினான் .
"நல்லது அவங்களாவது ஏதோ கோடை கால பனி மாதிரி அவங்க லைஃப்ல வந்துட்டு போன ஒரு பாஸிங் கிளவுடா என்னை நினைச்சுக்கட்டும்" என்ற லக்ஷ்மன் உடைந்து அழ... அவனை அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தவாறு ஆறுதல் படுத்தினான் பிரதீஷ்.
.....
பைல்களை செக் செய்து ஆன்லைனில் தன் சிக்னேச்சரைப் பதிவேற்றிக் கொண்டிருந்தார் பசுமதி.
அப்பொழுது அங்கு மகேஸ்வரன் விஜயன் புரிந்திருக்க நிதானமாக "என்ன?" என்பது போல் ஏறிட்டார் அவர்.
"நான் சொன்ன விஷயத்தை பத்தி நீங்க என்ன முடிவு எடுத்துருக்கீங்க?" என்று கேட்க...
"உக்காருங்க முதல்ல" என்றார் பசுமதி.
அந்த மரியாதையே அவர் முடிவை மகேஸ்வரனுக்கு எடுத்துரைக்க சிரித்த முகத்தோடு அமர்ந்தார் அவர்.
"இது ஆபிஸ் இங்க என்னோட அபிஷியல் ஒர்க் மட்டும்தான் பார்க்க முடியும். பர்சனல் வொர்க் பாக்கணும்னா இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு வாங்க . பேசுவோம்" என்றார் பசுமதி.
"அதெல்லாம் ஓகேதான். உங்களுக்கு சம்மதம்தானே?" என்று தெளிவுபடுத்திக் கொள்ள பரிதவிப்புடன் கேட்க.. "என்பிள்ளைங்க சம்மதம்தான் என் சம்மதம். ஆனா எனக்கு ஒரு சில கண்டிஷன்ஸ் இருக்கு. ஈவினிங் வீட்டுக்கு வாங்க. பேசுவோம்" என்று கூறி அனுப்பி விட.. "எப்பொழுது மாலை ஆகும்?" என்று காத்திருக்கத் துவங்கினார் மகேஸ்வரன்.
"என்ன கண்டிஷன் சொல்லுவாங்களோ? சொத்து முழுக்க எழுதி வச்சாதான் கல்யாணமே சொல்ல போறாங்களோ? இல்ல ஆக்சிடென்ட் பண்ணதுக்கு ஜெயிலுக்கு போக சொல்ல போறாங்களா? பொண்ணு தான் ஆக்சிடென்ட் பண்ணதுன்னு தெரிஞ்சிருச்சோ?" என்று ஏதேதோ உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்க அலுவலகப் பணிகள் எதுவும் ஓடவில்லை.
மேனேஜர் அரவிந்த் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார் அவர்.
மேனேஜரோ? இதுதான் வாய்ப்பு என்று... ஒரு சில அக்ரிமெண்டுகளிலும், லெட்டர் பேடிலும், செக் புக்கிலும் கோப்புகளுக்கு இடையே கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார்.
.......
தோழிகள் யாரும் இன்றி பார்க்கில் விட்டத்தியாய் அமர்ந்திருந்தாள் ஸ்ரீலதா.
தோழிகளை தான் ஒவ்வொருவராய் சண்டையிட்டு அனுப்பி விட்டாகி விட்டதே!? அவள் யோசனை முழுவதும் பிரதீஷிடமே இருந்தது. "அவன் ஏன் அப்படி பண்ணினான்? அவளுங்கள மட்டும் எதுக்கு பாத்தான்?
நம்மள ஏன் பாக்கல?
நம்ம அழகா இல்லையா? அவளுங்கள விட நான் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கேன்?" என்பன போன்ற கேள்விகள் இடைவிடாது எழும்ப..
"ஒரு வேலை நம்ம சண்டை போடணும் என்பதற்காகவே செஞ்சானோ?" என்று அறிவு கேள்வி எழுப்ப... இப்பொழுதுதான் உண்மையை உணர்ந்து கொண்டாள்.
அவளைப் பார்ப்பதை தவிர்த்து அவளுடன் இருந்த ஒவ்வொரு தோழியையும் அவன் ரசனையாய் பார்க்க பொறாமையிலும், கோபத்திலும் வெடித்த ஸ்ரீலதா ஒவ்வொருத்தியையும் பழி சுமத்தியும், குறை சொல்லியுமே விரட்டி அடித்திருந்தாள்.
போட்ட சண்டையின் பலனாய் இனி ஒருபோதும் அவர்கள் தன்னைத் தேடி வர போவதில்லை என்பது அவள் நன்றாக உணர்ந்ததே. ஏனெனில் தோழிகளைப் பார்த்து அவள் கேட்ட கேள்விகள் அத்தகையது.
அனைவரையும் அடித்து விரட்டாத குறையாக விரட்டி விட்டு தற்போது யாருமே இன்றி அனாதை போல் அமர்ந்திருந்தாள்.
அவளை எப்பொழுதும் மொய்க்கும் ரசிகர் பட்டாளத்தை வேறு இப்பொழுது காணவில்லை.
அன்று ப்ரபோஸ் செய்ய வந்தவனிடம் பேசிய பேச்சிலேயே பலரும் தெறித்து ஓடியிருக்க.. ஒரு சிலர் அவள் தோழிகளிடம் உதவி கோரினர். ஆனால் தோழிகள் அவள் தங்களிடம் நடந்து கொண்ட விதத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள... தன்னால் பலர் பின்வாங்கி இருந்தனர். மேலும் சிலர் முயற்சி செய்யத்தான் செய்தனர். எனினும் அவர்களது பார்வை அவளது உடலை மேய்வதை கண்டவளுக்கு அவர்கள் மேல் வெறுப்பே மிஞ்சியது.
ஆனால் அவர்களின் பார்வையைக் கண்டவளுக்கு சற்று பயம் எடுக்கவும் துவங்கியது.
மதிய வேளை பெரிதாக ஆளரவம் இன்றி பார்க் இருக்க தொலைவில் யாரோ ஒரு ஆண்மகன் குனிந்து அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.
இதயத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள்... தனது பொருட்களை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்தாள் அவனை நோக்கி.

Last edited: