GG writers
Moderator
பெரிதாக ஆளரவம் இல்லாத மதிய வேளையில் தோழிகளுடன் என்றும் வருவது போல் ஹாயாக வந்த ஶ்ரீலதாவிற்கு எதிரில் இருந்த ஆண்களின் இச்சையான பார்வை பயத்தைக் கொடுத்தது.
சுற்றிலும் பார்த்தவள் கண்களுக்கு அங்கு யாரோ ஒருவன் குனிந்து அமர்ந்திருப்பது கண்ணில் பட.. தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வேகவேகமாய் அவனை நோக்கி முன்னேறினாள் ஸ்ரீலதா.
அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் மெதுவாய் பின் தொடர்ந்து செல்ல.. இதயம் அதிவேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.
பயத்தில் வேர்த்து கொட்ட ஆரம்பித்தது. வேகமாய் தரையைப் பார்க்காமல் நடந்ததில் தரையில் இருந்த கல் ஒன்று தட்டி கீழே விழுந்து வாரினாள்.
செருப்பு அறுந்து எங்கோ விழுந்து இருக்க.. கால் பிடித்துக் கொண்டதோடு கல் கட்டியதில் நகம் வேறு பாதி பெயர்ந்து காலில் ரத்தம் வழிந்தது.
அதை ஒரு பொருட்டாய் எண்ணாதவள் போல் வேகமாய் எழுந்து அவனை நோக்கி இழுத்து இழுத்து நடந்தாள்.
சற்று தொலைவில் வருகையிலேயே "எக்ஸ்க்யூஸ் மீ.. ப்ளீஸ் ... ஹெல்ப் பண்ணுங்க" என்றவள் வார்த்தையில் நிமிர்ந்து பார்த்தான் அந்த பெஞ்சில் இருந்தவன்.
அவனைப் பார்த்தவளுக்கு ஷாக் அடித்தது போல் தூக்கி வாரி போட நிம்மதி பெருமூச்சு விட்டவறே திருட்டு விழி விழித்து நின்றாள் ஸ்ரீலதா.
கண்களில் நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட தோன்றாமல்.. முகத்தை மூடியபடி புண்பட்ட மனதை அழுது ஆற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான் லக்ஷ்மன்.
இவளது அழைப்பு காதில் விழ கையை எடுத்துவிட்டு அவசரமாய் கண்களைத் துடைத்தபடி திரும்பி பார்த்தவன் முகத்தை பார்த்தவளுக்கு யாரோ இதயத்தை இறுக்கி பிழிவது போல் இருந்தது.
என்னதான் அவனுடன் சண்டையிட்டாலும் அவளை வெறுத்ததில்லை ஸ்ரீலதா . ஆனால் அவளது அடம் பிடிப்புகளும், சேட்டைகளும் அவனைத் காயப்படுத்த அவனே அவளை வெறுத்திருந்தான்.
அவன் அருகில் நெருங்கி வந்துவிட்டவள் "ஏன் அழுற?" என்றாள் உண்மையான அக்கறையுடன். எனினும் வார்த்தைகள் என்னவோ? தயங்கியபடியே வந்தன.
"உன் வேலைய பாத்துட்டு போ" என்றவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள "சொன்னேண்ணா என்னால முடிஞ்ச உதவிய பண்ணுவேன்ல்ல" என்றாள் வந்த வேலையை மறந்து.
"நீ உதவி செஞ்ச லட்சணத்துலதான் என் வாழ்க்கையே அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு. பேசாம போயிடு" என்று பல்லைக் கடித்தவன் கோபமாக எழுந்து செல்ல..
"ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு. என்னால நடக்க முடியல. என்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ. எதுனாலும் அப்பாகிட்ட பேசி நான் சரி பண்றேன்" என்றாள் அவள்.
அவளை கர்ண கொடூரமாய் முறைத்தவன்.. திரும்பிப் பார்க்கையில் அவளைப் பாலோ செய்து கொண்டிருந்தவர்களையும் பார்த்து இருந்தான்.
ஆனால் கண்டு கொள்ளாமல் பார்க்கிற்கு வெளியே செல்ல ... உயிரையே பிடிங்கியது போல் இருந்தது அவன் செயல்.
"அடுத்தவனாக இருந்திருந்தால் கூட இந்த இடத்தில் தனக்கு உதவி செய்திருப்பானே? கூட பிறந்த தம்பியா இருந்து விட்டு தன்னை இப்படி இக்கட்டில் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டானே" என்று எண்ணியவள் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் பாய்ந்தது.
இரத்தம் ஒருபுறம் நிற்காமல் வழிந்து கொண்டிருக்க பிரண்டு இருந்த கால் வேறு வலியைக் கொடுக்க உயிர் போனது போல் இருந்தது.
அவன் அமர்ந்திருந்த இடத்தில் காலைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவள் தகப்பனுக்கு அழைத்தாள்.
ஆனால் அந்த நேரம் அவர் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை.
சுற்றிலும் நின்ற காமுகர்கள் வேறு ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தபடி அவளை நெருங்க... காலை இழுத்து இழுத்து வைத்து நடந்தபடி வாசல் அருகே நின்ற தன் காரை நோக்கிச் செல்ல முயன்றாள் ஸ்ரீலதா.
அதேவேளை பிரதீப் பார்க்குக்குள் நுழைய அவனைக் கண்டதும்தான் உயிரே வந்தது போல் இருந்தது அவளுக்கு.
அவள் கஷ்டப்பட்டு நடப்பதைப் பார்த்தும் கண்டு கொள்ளாதவன் என்றும் போல் அவளைத் தாண்டிச் செல்ல.. அவனைக் கண்டதுமே முகம் ஆயிரம் தாமரைகளின் வண்ணத்தில் ஜொலிக்க... வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தவள் அவனைத் தடுத்தாள் "எஸ்கியூஸ் மீ.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று.
நிமிர்ந்து அவளை என்ன? என்பது போல் பார்த்தான் அவன்.
எதுவும் பேசாமல் கேள்வியாய் நோக்கியவனிடம் "கால்ல அடிபட்டுருச்சு. என்னை கார் வரைக்கும் கொண்டு விட முடியுமா? கொஞ்சம் பயமா இருக்கு" என்று கேட்க.. அவளைப் பட்டென்று கைகளில் ஏந்தினான் அவன்.
விழி விரித்து பார்த்தாள் ஸ்ரீலதா . இதை அவள் எள்ளளவும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவள் விரிந்த விழிகளே கூறிற்று. சிறிது தோள் கொடுத்து உதவி புரிவான் என்று அவள் நினைத்திருக்க அவன் சர்வ சாதாரணமாக பூனை குட்டியைத் தூக்குவது போல் தன் கைகளில் ஏந்தி இருந்தான் அவளை.
இதுவரை இருந்த வலி அனைத்தும் எங்கோ பஞ்சாய் பறந்து சென்றது போல் இருந்தது அவளுக்கு.
அவன் தொடுகை மெல்லிய மலரால் வருடுவது போல் இருக்க.. கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் மிக அருகாமையில் தெரிந்த அவனை.
தனக்குள் பூக்கள் பூக்கும் தருணத்தை அவள் ரசித்து கொண்டிருக்க... அவனோ? ஏதோ ரோபோட் போல்.. நேரே அவள் காருக்கு அழைத்து சென்று அவளை டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் அமர வைத்துவிட்டு டிரைவர் சீட்டில் ஏறி கொண்டான்.
அவள் பார்வையை முழுக்க அவனே குத்தகைக்கு எடுத்து கொண்டிருக்க... அவன் பார்வையோ சாலையை விட்டு இம்மி அளவும் அசையவில்லை.
அருகில் அழகான பெண் ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைப்பே இல்லாதது போல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.
வண்டி வேகம் எடுத்து மருத்துவமனை ஒன்றின் முன் சென்று நிற்க.. அவன் அலைபேசி அலறியது.
அவன் தாய்தான் அழைத்திருந்தார். மகேஸ்வரன் வந்து சென்ற கதையைக் கூற குழப்பத்தில் ஆழ்ந்தவன் "சரிம்மா. பைவ் மினிட்ஸ்ல நான் கூப்பிடுறேன்" என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்..
"அப்ப.. பைவ் மினிட்ஸ்ல என்னை விட்டு போயிடுவியா?" என்று அவள் உள்ளம் அலறியது.
அதேவேளை ஸ்ரீலதாவிற்கும் அழைப்பு வர... "அப்பா... நான் ஜெசா ஹாஸ்பிடல் வந்து இருக்கேன். வாங்க.." என்று அழைக்க "என்னம்மா? என்னாச்சு?" என்று பதறினார் அவர்.
"ஒன்னுமில்லப்பா. கால்ல லேசா கல்லு தட்டிரிச்சி" என்று கூற..
"சரி இப்பவே வரேன்" என்று பரபரத்தார் தந்தை. கையெழுத்து போட்டுக் கொண்டிருந்த கோப்புகளை அப்படியே போட்டுவிட்டு அவர் விறுவிறுவென்று கிளம்பிவிட்டார் மருத்துவமனை நோக்கி.
அவள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து அலைபேசியை கீழே வைக்கவும் காரை விட்டு இறங்கி வந்த பிரதீஷ்.. அவளைத் தூக்கிக் கொண்டு சென்றான் மருத்துவமனைக்குள்.
அவன் கையில் இருந்தவள் கைகள் அவன் தோளிலும் அவன் இடுப்பைச் சுற்றியும் படர.. கண்களை இடுக்கி முறைத்து ஒரு பார்வை பார்த்தான் அவன்.
"சாரி.. விழுந்திடுவேன்னு பயமா இருந்தது. அதான் புடிச்சுகிட்டேன். ஒரு கிரிப்புக்கு" என்று உதட்டைப் பிதுக்கியவாறு முனங்க எதுவும் கூறாமல் நடந்தான்.
"ஒருவேளை சிலைக்குதான் உயிர் வந்து இருக்குமோ? இவன் உண்மையாவே மனுஷன்தானா? இவ்ளோ அழகான ஒரு பொண்ண கையில வச்சுக்கிட்டு எந்த சில்மிஷமும் பண்ணாம மிஷின் மாதிரி கொண்டு போறான்" என்று பலவித யோசனையுடன் அவள் மூளையில் ஓடிக் கொண்டிருக்க அவன் நெஞ்சில் சாய்ந்தவள் "ஐ லவ் யூடா ரோபோட்" என்றாள்.
"வாட்" என்றான் அவன் குனிந்து அவளைப் பார்த்தபடி. மிக அருகாமையில் அவனைப் பார்த்தவள் கண்கள் அலைபாய உதடுகள் துடிக்க... "தேங்க்ஸ்" என்றாள்.
அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன் "உன் தம்பிக்கு சொல்லு" என்று விட்டு கடகடவென்று நடந்து சென்று அட்மிட் செய்தான்.
ரிசெப்ஷனில் "ஆள் வருவாங்க" என்று விட்டு நிற்காமல் சென்று விட்டான்.
அவளிடம் சென்று வருகிறேன் என்று கூட கூறவில்லை. ஏன்? உன் பெயர் என்ன? எப்படி அடிபட்டது? என்ன? எது? எதுவும் கேட்காமல் சென்றவனை எண்ணி மனம் ஏங்கியது.
"வட போச்சே" என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தவள் மூளையில் அவன் கூறிய "உன் தம்பிக்குச் சொல்லு" என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.
"அப்படின்னா தம்பிதான் இவரை வர வச்சிருக்கானா? இவர எப்படி அவனுக்கு தெரியும்? ஒருவேளை பிரண்ட்ஸா இருக்குமோ? இல்லையே வயசு வித்தியாசம் அதிகமான இருக்கும் போலையே!? ஒருவேளை அவர் கூட வேலை பார்க்கிறானோ? இல்லையே அவரு ஹோட்டல்லல வேலை பாக்குறாரு. இவன் ஆபீஸ்லல்ல வேலை பார்க்கிறான்? அப்புறம் எப்படி தெரியும்?" என்று ஏராளமான கேள்விகள் அவள் மூளையில் வரிசை கட்டி நின்றன.
சிறு பின் குத்தினாலே வீட்டை இரண்டாகும் மகள் காலில் அடிபட்டு இருக்கிறது என்றிருக்க... "என்ன பாடுபட்டாளோ எம் பொண்ணு" என்று பரபரத்த நெஞ்சுடன் மகேஸ்வரன் மருத்துவமனைக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு வந்து சேர... அவரது உதவியாளர்கள் சிலரும் வந்து சேர்ந்தனர்.
பெருவிரல் நகம் முழுதாய் பேர்ந்து போயிருக்க அமைதியாய் அமர்ந்திருந்த மகளைப் பார்த்ததும் ஹார்ட் அட்டாக் வராத குறைதான் அவருக்கு.
"என்னம்மா இவ்வளவு பெரிய அடிபட்டு இருக்கு. நீ அசால்டா இருக்க" என்று கண்ணில் தேங்கிய நீருடன் கேட்க..
"எனக்கு ஒன்னும் இல்லப்பா. கால் லைட்டா புடிச்சிருக்கு. நகம் தானாவே முளைச்சிடும்" என்றாள் அவள்.
இந்த பேச்சு அவரைப் பொறுத்தவரையில் அதிசயம்தான். "தன் மகளா இப்படி அடிபட்ட பின்பும் அமைதியாக பேசுவது?" என்று பார்த்தவர் "ரொம்ப வலிச்சுதா செல்லம்?" என்று கேட்க...
"இல்லப்பா அதெல்லாம் ஒன்னும் இல்ல" என்றாள் மகள்.
"சரி நீ இங்க எப்படி தனியாவே வந்து அட்மிட் ஆனியா?" என்று கேட்டபடி யாராவது நிற்கிறார்களா என்று சுற்றிலும் கண்களால் துலாவ...
"இல்லப்பா. அவருதான் கொண்டு அட்மிட் பண்ணாரு " என்று கூற..
கண்களை இடுக்கியபடி "அவரா? யார் அவரு? என்று கேட்டவர் இமைகள் முடிச்சிட்டு உயர்ந்தன.
"அதான்பா.. அவரு.." என்று மகள் வெட்கப்பட...
"ஓ... மருமகப் பிள்ளையா?" என்றார் தந்தை.
வெட்கத்துடன் "ஆமாம்" என்று தலை அசைக்க... "ஓ.. அதானே பார்த்தேன் என்னடா கத்தி கலாட்டா பண்ணலன்னு" என்று கேட்டபடி மகளின் தலையைக் கோதிக் கொண்டு மகேஸ்வரன் அமர்ந்திருக்க... அவர் மடியில் தலை வைத்து தூங்க ஆரம்பித்தாள் ஸ்ரீலதா.
அவளுக்கான மருந்து மாத்திரைகளை உதவியாளர்கள் வாங்கிக் கொண்டு வர.. அவளை அழைத்து வந்தனர் வீட்டிற்கு.
அங்கிருந்த சூழலைப் பார்த்ததும் லக்ஷ்மனுக்கு புரிந்து விட்டது. ஆனால் நேரடியாக அவளுக்கு உதவி செய்ய மனம் இல்லாதவன் எழுந்து வெளியேறியும் விட்டான்.
அந்த குறிப்பிட்ட நேரத்தில் அவள் பயந்த பயமே அவளுக்கான தண்டனையாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் வெளியே வந்தவன் தீபக்கிற்கு கால் செய்ய.. அவன் பணியில் இருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை.
மற்ற நண்பர்களுக்கு நம்பி கால் செய்ய துணியாதவன் நினைவில் பிரதீஷே வந்து நிற்க அவன் எண்ணுக்கு அழைத்தவன் "சாரி... நீங்க டயர்டா இருக்கீங்கன்னு தெரியும். தப்பா எடுத்துக்காதீங்க. ஒரு எமர்ஜென்சி. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றான்.
அவனும் என்னவென்று கேட்க... தன் சகோதரி இப்படி ஒரு இக்கட்டில் மாட்டியிருப்பதாகவும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறி இருந்தான் அவன்.
அதனாலேயே மீண்டும் பார்க்கிற்கு வந்திருந்தான் பிரதீஷ்.