GG writers
Moderator
பெரிதாக பணிகள் எதுவும் இல்லை என்றாலும் மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டு நிச்சயதார்த்த வீட்டுக்காரர்களைத் தூங்க விடாமல் செய்தது.
லக்ஷ்மன் - பிரகதீஸ்வரி ஜோடி அழுகையில் இரவை கழிக்க மற்றவர்கள் குழப்பத்திலும் ஸ்ரீலதாவோ காதல் மயக்கத்திலும் தூக்கத்தைத் தொலைத்தனர்.
விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து ஸ்ரீலதா தயாராக.. பியூட்டி பார்லரிலிருந்து வந்த பணியாளர்கள் காத்திருந்து அவளைத் தயார் செய்தனர்.
மகேஸ்வரன் மூன்று மணிக்கே பணிகளைச் சரி பார்க்க சென்று விட்டார்.
லக்ஷ்மன் பூட்டிய அறைக்குள் இரவில் உணவு கூட உண்ணாமல் முடங்கியவன் ஏழு மணி ஆகியும் வெளியில் வரவே இல்லை.
ஆறு மணி அளவில் எழுந்த பிரகதீஸ்வரியின் வீட்டார் மண்டபத்திற்கு செல்ல தயாராக பெண் அவள் முகம் வாடிக்கிடந்தது.
அவள் உள்ளமோ ஒவ்வொரு நொடியும் தலைவனுக்காக ஏங்கி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது.
"இந்த நொண்டிய யாருக்குத்தான் பிடிக்கும்? அவரு இருக்குற அழகுக்கு போட்டி போட்டுட்டு அவரைக் கட்டிக்க பொண்ணுங்க வருவாங்க. அவருக்கு மட்டும் என்னைப் பிடிக்குமா என்ன? அவரோட எண்ணத்தோடைய வாழ்ந்திடனும்னுதானே முடிவு பண்ணுனோம். அப்படியே இருந்துடலாமா? வர்ர மாப்பிள்ளைகிட்ட பக்குவமா விஷயத்தை சொல்லி புரிய வைப்போம்" என்று தன்னைத்தானே தாழ்வு மனப்பான்மைக்குள் புகுத்திக் கொள்ள முயன்றவளை யோசிக்க விடாது தயார் செய்ய அழைத்து சென்று விட்டான் பிரதீஷ்.
பத்து மணி அளவில் மகேஸ்வரன் பிரதீஷின் வீட்டாரின் வருகைக்காக வாயிலுக்கும் மண்டபத்துக்குமாய் மாறி மாறி டென்ஷனுடன் நடந்து கொண்டிருந்தார்.
நிச்சயதார்த்தத்திற்கு "சரி" என்று ஒப்புக் கொண்டு விட்டு உற்றார் உறவினர்களின் குடும்பங்களையும், பெரிய மனிதர்களையும் சபையில் கூட்டி வைத்த பின்னால் வராமல் இருந்து கழுத்தறுத்து விடக் கூடாதே என்ற பயம் அவர் நெஞ்சைக் கவ்வ அதீத டென்ஷனுடன் காணப்பட்டார்.
வருபவர்களை ஒரு புறம் வரவேற்றபடியே மாப்பிள்ளை வீட்டாரைத் தேடிக் கொண்டிருந்தார்.
மகளையும் மகனையும் வேறு ஏற்கனவே மேடைக்கு அழைத்து வந்தாக்கி விட்டது.
ஒருவேளை பிரதீஷின் வீட்டிலிருந்து வராவிட்டால் மானமே போய்விடும்.
இதில் மகளுக்கு கொடுத்த வாக்கு வேறு பயமுறுத்தியது. ஒருவேளை பிரதீஸ் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் போனால் என்ன ஆகும்? என்று அவர் கலங்கி நின்ற வேளை கொடுத்த சொல் தவறாமல் மாப்பிள்ளை வீட்டார் சொந்த பந்தங்களுடன் வந்திறங்க... அப்பொழுதுதான் நிம்மதியாக மூச்சு வந்தது மகேஸ்வரனுக்கு.
அவர்களை வரவேற்று உபசரித்து உள்ளே அழைத்து வந்தார். அதேவேளை ராஜேஸ்வரியும் காரில் வந்திறங்க மனைவியையும் அவர்களுடன் அழைத்து வந்தார் அவர்.
ஏற்கனவே ஸ்ரீலதாவும் லக்ஷ்மனும் அவர்கள் தோழமைகள் மற்றும் அவர்கள் வயது உறவுகள் புடை சூழ மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
நண்பர்கள் ஏதேதோ சொல்லி கலாய்த்த போதும் லக்ஷ்மனின் முகம் மாறவே இல்லை. எத்தனை முயன்றும் சோகத்தையே தத்தெடுத்துக் கொண்டிருந்தது.
ஶ்ரீலதாவின் முகமோ அன்று மலர்ந்த ஊட்டி மலர் போல் பிரகாசமாய் இருந்தது.
வாயிலிருந்து வந்து கொண்டிருந்த மனம் கவர்ந்த மணாளனைப் பார்த்த ஸ்ரீலதா கண்ணைப் பிரதீஷை விட்டு விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால்.. தங்கையை அழைத்து வருவதிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.
மருந்துக்கும் நிமிர்ந்து மனையாளை பார்த்தான் இல்லை.
உறக்கமற்று சோர்ந்து இருந்த முகத்தை மேக்கப் மூலம் ஈடு செய்திருந்தனர் இருவரும்.
எனினும் பிரகதீஸ்வரியின் முகம் இருண்டு இருக்க... அவளை வீல்சேரில் தள்ளிக் கொண்டு வருவதை பார்த்த அங்கு கூடியிருந்தோர் குசுகுசுவென்று என்று தங்களுக்குள் ஏதேதோ பேசி விவாதித்துக் கொண்டனர்.
"ஆனாலும் மகேஸ்வரனுக்கு ரொம்ப பெரிய மனசுதான்.
இப்படி ஒரு நொண்டிப் பிள்ளையை மகனுக்கு செலக்ட் பண்ணி இருக்காரே?
அவருக்கு இருக்கிற பணத்துக்கும் செல்வாக்குக்கும் எப்படிப்பட்ட பிள்ளைகளை எல்லாம் எடுக்கலாம்.
ஏன் இப்படி போய் விழுந்துட்டாரு?
ஏதாவது டீலிங் இருக்கும்.
என் மகளைக் கூட தரேன்னு பேசி பார்த்தேன். அந்த ஆளு அசரல. நீ எல்லாம் எனக்கு நிகராங்குற மாதிரி பார்த்தாரு. பாத்தா இப்ப ஒண்ணுக்கும் அத்த குடும்பத்துல இருந்து பொண்ணு எடுத்த மாதிரில்ல இருக்கு" என்று இருவர் பேசிக் கொண்டது.. அரங்கை நிறைத்த நாதஸ்வர கச்சேரி ஒலியையும் மீறி பிரகதீஸ்வரியின் காதில் தெள்ளத் தெளிவாக கேட்டது.
அவளுக்குள்ளும் இந்த கேள்வி எழாமல் இல்லை. எனினும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் வாடிய முகத்தோடு அதை கடந்து சென்றாள் அவள்.
கடைசி நிமிடத்திலாவது தனது திருமணம் நின்று விட்டால் நிம்மதியாக இருக்கும் என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள்.
தங்கையை மேடையில் அமர வைத்துவிட்டு.. எதேச்சையாக நிமிர்ந்த போது மகேஸ்வரனின் அருகில் லக்ஷ்மனின் தாயைப் பார்த்த பிரதிஷுக்கு ஏதோ சிறு நெருடல் ஏற்பட்டது.
"அப்படியானால் லக்ஷ்மன் கூறியது பொய்யோ?" என்று தோன்றியது.
ஆனால் மேடையில் நின்ற லக்ஷ்மனை ஏறெடுத்து பார்க்க... அவன் முகம் நெருப்பில் வாட்டிய மலர் போல் வாடி கிடந்தது.
நண்பர்களுக்கு இடையே அமர்ந்திருந்தாலும் அவன் பார்வை முன் இருந்த மலரில் நிலை குத்தி நின்றது.
கண்களில் அப்பவோ இப்பவோ விழுந்து விடுவேன் என்று கண்ணீர் தேங்கியிருக்க ஏதோ சரியில்லை என்று உணர்ந்த பிரதீஷ் நகர்ந்து சென்று தங்கையைப் பார்த்துக் கொள்ளுமாறு தாயிடம் கண்காட்டி விட்டு லக்ஷ்மனின் தோளைத் தொட்டான்.
தேங்கி இருந்த கண்ணீர் பட்டென்று கன்னத்தில் வழிய அவசரமாய் கண்களை துடைத்து விட்டு திரும்பி பார்த்தான் லக்ஷ்மன்.
பிரதீஷை அங்கு கண்டதும் "நீங்க இங்க?" என்றவன் கண்கள் விரிந்தது.
அவன் பிரதீஷை இங்கு எதிர் பார்க்கவில்லை என்று அவன் கண்கள் அப்பட்டமாய் கூறியது.
"நான் மட்டும் இல்லை... கல்யாண பொண்ணு" என்றவன் விலகி நின்று தங்கையைக் காண்பிக்க... சீட்டில் சூடு வைத்தார் போல் வேகமாய் எழுந்த லக்ஷ்மன் பட்டென்று பிரதீஷைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
அவன் அணைப்புடன் சேர்ந்த அழுகை கூறியது இதுவரை அவன் அடைந்த வேதனையை.
"மச்சான்?" என்று தலையாட்டி கேட்க.. "ஆம்" என்பது போல் தலையசைத்தான் பிரதீஷ்.
மீண்டும் இறுக அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட... நடப்பதை அனைவரும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நண்பர்களோ கூச்சலிட்டு ஆரவாரித்து கொண்டிருந்தனர்.
பிரதிஷை விட்டவன் பிரகதீஸ்வதியின் முன் சென்று முட்டியிட அதுவரை "யாருக்கு வந்த விருந்தோ?" என்று அக்கம் பக்கம் திரும்பாமல் குனிந்தே குழப்பத்துடன் அமர்ந்து இருந்தவள் அவனைப் பார்த்ததும் விழிகள் விரிய "லச்சு" என்றவாறு அவனைக் கட்டி அணைத்து இருந்தாள்.
நடப்பதை ஊரே வேடிக்கை பார்க்கிறது என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
அவளது தாயார்தான் "பிரகதீஸ்வரி என்ன செஞ்சுட்டு இருக்க?" என்று கத்த... எதுவும் அவள் காதில் விழவில்லை.
நிமிர்ந்து அவனைப் பார்த்த பிரகதீஸ்வரியின் கண்களில் மின்னல் வெட்டியது.
அவள் கண்களிலும் கண்ணீர் ஊற்றெடுக்க அவள் கன்னங்களைக் கையில் ஏந்தி "ஐ லவ் யூ சோ மச் ரதி" என்றவன் அவளைக் கட்டியணைத்து தூக்கியிருக்க.. வாயை கைகளால் மூடி கத்தினாள் பிரகதீஸ்வரி.
அவள் கண்கள் அழுது கொண்டிருந்தாலும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது.
அதிர்ந்து விழித்தனர் சுற்றி நின்றவர்கள். என்னடா நடக்குது இங்க? எல்லாம் கலிகாலம் என்று ஒரு சிலர் அங்கலாய்க்க...
நண்பர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூச்சலிட்டு ஆராவாரம் செய்ததோடு அலைபேசியில் நடக்கும் நிகழ்வைச் சூட் செய்து கொண்டிருக்க... தீபக்கின் முகத்தில் மட்டும் ஈயாடவில்லை..
பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த கதையாய் தோன்றியது அவனுக்கு. எனினும் நண்பன் வெளிப்படுத்திய உணர்வுகளில் அவன் மனத்தில் அவள் பிடித்து இருக்கும் இடம் எத்தகையது என புரிந்து கொண்டவன் அவன் காதலை எண்ணி பூரித்துப் போனான்.
நடந்த கலவரத்தில் ஸ்ரீலதா ஓரம் கட்டி நிறுத்தப்பட்டிருக்க என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தாள் அவள்.
திடீரென்று வந்த இந்த அழுகைக்கும் அணைப்புக்கும் காரணம் என்ன என்று யாருக்கும் விளங்கவில்லை. ஆனால் பிரதீஷ்க்கு விளங்கியது.
தீபக் தன் நண்பர்களிடம் "டேய் அவன் லவ் பண்ணின பொண்ணுடா. அவனுக்கே தெரியாம அந்த பொண்ணையே அவங்க அப்பா கல்யாண பொண்ணா பேசி முடிச்சு இருக்காரு. அவன்கிட்ட இப்ப வரைக்கும் விஷயத்தையே சொல்லலடா" என்று தனக்குத் தெரிந்ததைக் கூற விஷயம் காட்டுத்தீ போல் பரவியது.
முத்தமிட்டு தன்னவளை தனது அருகில் போடப்பட்டிருந்த சேரில் அமர்த்தியவன் அதன் பின்பே தாயைத் தேடினான்.
மகனின் மகிழ்ச்சியைப் பார்த்து பூரித்து நின்றார் ராஜேஸ்வரி.
இதுவரையிலும் மகன் திருமணத்தில் ஏதாவது இடையூறு செய்து விடுவான் என்று பயந்து கொண்டு இருந்தவருக்கு இப்பொழுதுதான் மன நிறைவே வந்தது.
மகனின் தோளில் கை போட்டு அணைத்துக் கொள்ள தாயையும் கட்டிப் பிடித்துக் கொண்டவன்.
"அம்மா... நீங்க எங்க கூட வந்துருங்க" என்றான் முதல் வார்த்தையாக.
"சரிடா" என்று தாயும் அவன் நெற்றியில் முத்தமிட்டு சம்மதம் கூற... இப்போது அதிர்வது மகேஸ்வரனின் முறை ஆயிற்று.
அதோடு சேர்த்து அவருக்கு மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது.
பசுமதியின் அருகில் வந்து நின்ற மனிதரை பார்த்ததும் கண்கள் இடுங்க முறைத்து பார்த்தார்.
"சோறு போடுறாங்கன்னு சொன்னா உடனே வந்துருவாரு" என்று மனதுக்குள் திட்டிக் கொண்டார் அவரது தந்தையைப் பார்த்து.
ஆனால் அவரோ மகனைக் கண்டு கொள்ளாமல் பசுமதியின் தகப்பன் ஸ்தானத்தில் நடந்து கொள்ள.. ராஜேஸ்வரி கணவனைக் கேவலமாய் ஒரு பார்வை பார்த்தார்.
அதிலேயே நொறுங்கிப் போனவர் தலை கவிழ்ந்து நின்றார்.
"இந்த பிரச்சனையைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், என்று மனதில் எண்ணியவர் எப்படியோ மகன் இனி இந்த ஊனமுற்ற பெண்ணை வேண்டாம் என்று சொல்ல மாட்டான் என்று ஓரளவு நிம்மதி பரவியது.
அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் தடபுடலாய் நடைபெற இரு வீட்டினரும் திருமண ஒப்பந்தம் பேசி தம்புல தட்டை மாற்றிக் கொண்டனர்.
பெண்கள் இருவரும் மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலியும், மாப்பிள்ளைகள் இருவரும் பெண்ணுக்கு தங்க வளையலும் அணிந்தனர்.
"லக்ஷ்மனோ எங்கே கண் சிமிட்டினால் மறைந்து விடுவாளோ?" என்று நினைத்தவன் போல் அருகில் இருந்த பிரகதீஸ்வரியின் முகத்தில் இருந்து கண்களை அங்கு இங்கு நகட்டவே இல்லை.
பெண்ணவள் வெட்கத்தில் சிவந்து தலை குனிய
"மாப்பிள்ளை பொண்ணு உங்களுக்குத்தான். யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க" என்று கேலி பேசினர் சுற்றி நின்றவர்கள் .
"அவனவனுக்கு வந்தாதான்டா தெரியும் காய்ச்சலும் பல்லு வலியும்" என்று பதில் அளித்தான் லக்ஷ்மன்.
இந்த திருமண பேச்சு தொடங்கிய நேரம் முதல் சற்று முன்பு வரை வாடி வதங்கிய பூ போல் கிடந்த பிரகதீஸ்வரியின் முகத்தில் கோடி நட்சத்திரங்களின் ஜொலிஜொலிப்பு ஜொலித்துக் கொண்டிருந்தது.
பிரதிஷோ தங்கையையும், தங்கையின் வருங்கால கணவனையும் பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய தன்னருகில் ஒரு ஜீவன் தன்னையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மறந்தும் திரும்பி பார்க்கவில்லை.
அவளும் அவன் தன்னைப் பார்ப்பான் பார்ப்பான் என்று உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்ததுதான் மிச்சம்.
அவன் ஏறெடுத்தும் பார்க்காமல் போக மிகுந்த மன வருத்தமாய் இருந்தது.
ஆனால் செயின் அணிவிக்க வளையல் அணிவிக்க என்று ஒருவரை ஒருவர் பார்த்தபடி அணிந்த நேரங்களில் இருவர் கண்களும் காந்தம் போல் ஈர்க்க தவறவில்லை.
"எப்பா... என்ன பார்வேடா சாமி " என்று அவனும்...
"ஐயோ.. கண்ணாலேயே கொள்ளை அடிச்சுருவாரு போலையே" என்று அவளும் எண்ணிக் கொண்டனர்
இருவர் முகமும் மந்தகாச புன்னகையே தத்தெடுத்த போதிலும் லக்ஷ்மன் மற்றும் பிரகதீஸ்வியின் முகத்தில் இருந்த பிரகாசத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
நல்லபடியாய் நிச்சயதார்த்த வைபவம் முடிவுக்கு வந்தது. நிச்சயதார்த்த ஓலையைப் படித்து வரும் புதன்கிழமை திருமணத்தை உறுதி செய்தவர்கள்.. வந்தவர்களுக்கு தடபுடல் விருந்தை ஆரம்பித்தனர்.