GG writers
Moderator
சோகமாய் தொடங்கிய நிகழ்வு மகிழ்ச்சியாய் முடிந்ததில் பலருக்கு சந்தோஷமே. சிலருக்கு மனவருத்தம் இருக்கத்தான் செய்தது.
நிச்சயதார்த்தம் நல்லபடியாய் நடந்து முடிந்து விட்டாலும் பசுமதிக்குள் சிறு நெருடல் இருந்து கொண்டேதான் இருந்தது.
"என்னதான் பெண் கொடுத்து பெண் எடுத்தாலும் வருபவள் எப்படி தன் மகனுடன் மனமொத்து வாழ போகிறாளோ? இதில் இந்த பையன் வேற கண்டிஷன் அது இதுன்னு நிறைய போட்டு இருக்கானே?" என்ற பயம் அவர் நெஞ்சில் நெருஞ்சில் விதையாய் விழுந்திருந்தது.
முதல் பணியாக லக்ஷ்மன் தனது அலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு பிரகதீஸ்வரியின் எண்ணை வாங்கிக் கொண்டான்.
"ரதி... செமையா இருக்கடி. இதுக்கு மேல நம்மளால முடியாது சாமி. ஆளாளுக்கு என் லைஃப்ல விளையாடுறாங்க. எப்பா... நீதான் பொண்ணுனு தெரியிறது வரைக்கும் என் உசுரே என்கிட்ட இல்ல தெரியுமா?" என்று அவள் காதில் கூற...
"எனக்கும்தான். செம சர்ப்ரைஸ் தெரியுமா? நான் எதிர்பார்க்கவே இல்லை. பையன்கிட்ட பேசி எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திரனும்னுதான் வந்தேன்" என்றாள் பிரகதீஸ்வரி.
"சேம் பிஞ்ச் டியர். நானும் அப்படித்தான் நினைச்சேன். உங்க அண்ணனாவது சொல்லி இருக்கலாம். ரொம்பதான் ஏங்க வச்சிட்டாரு" என்று கூறியபடி மச்சானைத் திரும்பிப் பார்த்தான் லக்ஷ்மன்.
அவன் பார்வை முழுக்க தங்களிடமே இருப்பதைப் பார்த்து சிரித்தவன் "மாட்டிக்கிட்டீங்க மச்சான். அவ உங்கள வச்சு செய்ய போறா பாருங்க" என்றான் ஸ்ரீலதாவைக் கண்காட்டி.
"பார்க்கலாம்" என்றான் பிரதீஷ் மர்மமாய் புன்னகைத்து.
"நம்மூரு ஆப்பிள் பழம் மாதிரியே இருக்கடி. அப்படியே கடிச்சி தின்னலாம் போல இருக்கு" என்று கஸ்க்கி வாய்ஸில் லக்ஷ்மன் பிரகதீஸ்வரியின் காதில் கூற
"சும்மா இருங்க" என்று கூறினாலும் வெட்கத்தில் செவ்வானம் போல் சிவந்தாள் அவள்.
ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாது அவளிடம் ஏதேதோ பிதற்றி கொண்டிருந்தான் லக்ஷ்மன்.
கைவிட்டுப் போனதாய் நினைத்த உறவு மீண்டும் கைகூடியதால் வந்த விளைவு அது. அவள் கையோடு தன் கரத்தைக் கோர்த்துக் கொண்டான்.
சாங்கியங்கள் அனைத்தும் முழு மனதோடு செய்து முடித்தான்.
"கடவுளே நான் வேண்டுன மாதிரி இந்த கல்யாணம் பாதையில நின்னுட கூடாது" என்று இப்போது வேண்டுதலுக்கே மேல்முறையீடு செய்து கொண்டான்.
"மச்சான்... கைய கொஞ்சம் விட்டுத்தான் பிடியேன். உன்னை விட்டுட்டு ஒண்ணும் போயிட மாட்டாங்க" என்று நண்பர்கள் கிண்டல் செய்த போதும் "போங்கடா.." என்றானே ஒழிய கையை விடவில்லை.
அது பிரகதீஸ்வரிக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறரிடம் தன்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையைப் பெற்றுக் கொடுத்தது அந்த கைப்பிடி.
இடையிடையே தன் உறவுகளையும் நட்புகளையும் அவளுக்கு அறிமுகப்படுத்தவும் தவறவில்லை அவன்.
அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்னியோன்யமும் காதலும் ஸ்ரீலதாவின் கண்ணிலும் படத்தான் செய்தது.
அவர்களைப் பார்க்கையில் பொறாமையாகவும், தன்னவன் தன்னிடம் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பது சற்று வலிக்கவும் செய்தது.
திருவிழா கூட்டத்தில் ஒதுக்கி கட்டப்பட்ட வாழை மரம் போல் தன்னை உணர்ந்தாள் அவள்.
அவள் பேச முயன்றாலும் திரும்பி கூட பார்க்காமல் "யாருக்கு வந்த விருந்தோ?" என்று அமர்ந்திருந்தான் பிரதீஷ்.
ஒரு சில தோழிகள் கிண்டல் செய்த போது பேருக்கு சிரித்தான்.
பார்த்துப் பார்த்து போட்ட கோலத்தைக் கடைசி நிமிடத்தில் மழை வந்து அழித்தது போல விடியற்காலையிலேயே எழுந்து செய்த மேக்கப் முழுதும் வீணாய் போனது போன்ற பிரமை ஏற்பட்டது ஸ்ரீலதாவிற்கு.
தந்தையை ஒரு ஓரமாகப் பிடித்து இழுத்து அழைத்து சென்றார் மகேஸ்வரன்.
"யோவ்... யார்ட்ட கேட்டுய்யா அவங்க கூட நீ வந்த?" என்று கேட்க..
அவர் கையில் இருந்து தன் கையை உதறி கொண்ட தாத்தா "கைய விடுடா. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் என் பேரம்பேத்தி நிச்சயத்துக்கு வந்து இருக்கேன். அதைக் கேட்க உனக்கு எந்த அருகதையும் கிடையாது. உன் பிள்ளையையும் பையனையும் பார்க்கிறதுக்காக நான் வரல. என் பேரன் பேத்திக்காக வந்து இருக்கேன்" என்ற சொல் இடியாய் இறங்கியது மகேஸ்வரனுக்குள்.
"பெத்த புள்ள நான் குத்துக்கல்லா இருக்கையில.. யாரோ பெத்த பிள்ளைங்களைப் போய் பேரன் பேத்திங்குறீங்க" என்று தந்தையிடம் சாட...
"பெத்த பிள்ளையே உரிமை இல்லைனு ஆன பிறகு பேரனாவது? பேத்தியாவது? போடா. பிச்சைக்காரனுக்கும் சுயமரியாதை உண்டுன்னு சரிக்கு சமமா மதிச்சவன்டா என் பேரன். மகளோட பேச்சைக் கேட்டுகிட்டு பெத்தவன்னுக் கூட பார்க்காம தெருவுல தள்ளுன நீ எல்லாம் என்கிட்ட பேசுறதுக்கு அருகதை இல்லாதவன். முடிஞ்சா உன் மாப்பிள்ளையா வர்றவனோட கால கழுவி குடி. அப்பவாது நீ எல்லாம் திருந்துதியான்னு பார்க்கலாம். விடுடா" என்ற தந்தை அவர் பிடியில் இருந்து விலகி பசுமதியிடம் சென்று நிற்க... அவர் கூறியது போல் மரியாதையாய் அவரை நடத்தினார் பசுமதி.
அதை பார்த்த மகேஸ்வரனுக்கு மூஞ்சில் கரியைப் பூசியது போல் இருந்தது.
நிச்சயதார்த்தம் முடித்து விருந்து உண்டு அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
வந்தவர் போனவர் பலரும் "இவளுக்கு வந்த வாழ்க்கையை பார்த்தியா?
அந்தப் பய என்னா நிலை நிக்கிறான்? இப்படியும் காதல் இருக்கதான் செய்யுது. அதனாலதான் மகேஸ்வரன் வேற வழியில்லாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரா இருக்கும் போல.
பொண்ணு முகத்துல பெரிய அளவுல கலை இல்லையே?
கட்டாய கல்யாணமா இருக்குமோ?
அப்படி ஒன்னும் தெரியலயே?!
பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு?
ஆளு... நிச்சயதார்த்தத்தையே இம்புட்டு தடபுடலா நடத்திபுட்டானே?
கல்யாணம் இத விட பயங்கரமா இருக்கும் போல. நிம்மதியா வந்து சாப்பிட்டு போயிடனும்" என்று ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றியதைப் பேசிக் கொண்டே சென்றனர்.
பிரகதீஸ்வரியின் முகமோ முழு நிலவாய் பளபளத்தது. தங்கையின் சந்தோஷத்தை பார்த்து பூரண சந்திரன் போல் ஜொலித்தான் பிரதீஷ்.
நிச்சயதார்த்தம் முடிந்து வீட்டிற்கு கிளம்பினர் அனைவரும். பாதி வழியில் செல்கையிலேயே பிரகதீஸ்வரியின் அலைபேசி கிணு கிணுத்தது.
வேறு யார்? அவள் மனம் கவர்ந்த கள்வன்தான். வீட்டுக்கு செல்வது வரை பொறுமையின்றி அழைத்திருந்தான்.
வெட்கத்தோடு அழைப்பை ஏற்றவள் பக்கத்தில் இருந்த அண்ணனையும் தாயையும் பார்த்து தயக்கத்தோடு "ஹலோ" என்க...
"ரதி குட்டி.. வீட்டுக்கு போயிட்டியா?" என்று தொடங்கியவன்தான். அதன் பிறகான நேரம் முழுதும் அவர்களது அலைபேசி எப்பொழுதும் பிஸியாகவே இருந்தது.
"போண வச்சுட்டு சாப்பிட வா.. கண்ணு குட்டி" என்று பிரதீசும், பசுமதியும் கடிந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் பேச்சி சுவாரஸ்யத்தில் மூழ்கி இருந்தனர்.
இருவரும் முந்தைய நாள் நடந்த தங்களது அனுபவத்தையே முதலில் பகிர்ந்து கொண்டனர்.
திருமணத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்க ஆயத்த பணிகள் தடபுடலாக நடந்தேறின.
மண்டபம் ஏற்கனவே தயார் நிலையில் இருக்க டெக்கரேஷன், கார்டு பிரிண்ட் செய்வது, உறவுகளுக்கு அழைப்பது, உணவுக்கு ஆர்டர் கொடுப்பது போன்ற பணிகளில் மும்முரமாய் ஈடுபட்டனர் பசுமதியும் மகேஸ்வரனும்.
பசுமதி விடுமுறை எடுத்துக் கொண்டு மகளின் திருமண வேலைகளில் ஓடியாடி வேலை செய்ய... தாத்தாவும் அவர் சுமைகளை சற்று ஏற்று கொண்டு தன்னால் ஆன உதவிகளைச் செய்தார்.
நிச்சயதார்த்த புகைப்படம் வந்திருந்தது. ஆவலோடு ஆல்பத்தைப் பார்த்தாாள் ஸ்ரீ லதா.
ஆனால் அதில் பிரகதீஷ்வரியும் லக்ஷ்மனுமே ஹைலைட்டாக தெரிய... பிரதீஷ் ஸ்ரீலதா ஜோடி பெரிய அளவில் தெரியாததைப் பார்த்த ஸ்ரீ லதாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
ஆல்பத்தைக் கிழித்து எறிய முற்பட அவள் முன் வந்து நின்ற லக்ஷ்மன் சட்டென்று அவள் கையில் இருந்து அதை பிடிங்கி சென்றான்.
"அப்பா" என்று அவள் அலற...
"சூ... மூச்.. சத்தம் வெளியில கேட்க கூடாது. கேட்டுச்சு? வாயை அடிச்சு ஒடச்சிடுவேன். போடி.." என்றான் கோபமாக.
"பார்க்கில் அமர்ந்து அன்று அழுது கொண்டிருந்தவனா இவன்?" என்று யோசிக்கும்படி இருந்தது அவன் நடைமுறை.
ஆல்பம் எங்கு பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது? என்ற தகவலைச் சேகரித்து விட்டு அவள் முன் ஆல்பத்தை எறிந்து விட்டு சென்று விட்டான்.
சற்று நேரத்தில் அதே போட்டோ ஸ்டுடியோவிற்கு கால் செய்து மற்றொரு பிரிண்ட் கேட்டவன் கிடைக்கும் நேரத்தை பற்றிய தகவல்களையும் கேட்டு அறிந்து கொண்டதோடு அதை காண்பிக்கவும் சாக்கில் வருங்கால மனைவியையும் பார்த்து வந்து விட்டான்.
இதழில் மின்னும் சிரிப்புடனும், கண்களில் முன்னிய காந்த பார்வையுடனும், காதில் வைத்த ஹெட்செட்டுடனும் சந்தோஷமாக வலம் வந்தவனைப் பார்க்க பார்க்க அடிவயிற்றில் ஏனோ பத்தி கொண்டு வந்தது ஸ்ரீ லதாவிற்கு.
உறவுகளுக்கு பத்திரிக்கை அளித்து விட்டு நள்ளிரவில் மனைவியுடன் திரும்பி வந்த தகப்பனை அழைத்து "அப்பா... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்றாள் ஸ்ரீலதா உதடு பிதுக்கிய வண்ணம்.
"என்னம்மா சொல்ற? இந்த கல்யாணம் நடக்கணும்ங்கறதுக்காக நான் என்ன எல்லாம் பண்ணி இருக்கேன் தெரியுமா?" என்று மகேஸ்வரன் அதிர்வுடனும் ஆத்திரத்துடனும் கேட்க...
"அவன் எவ்வளவு சந்தோஷமா இருக்கான் பாருங்க? ஆனா எனக்கு எந்த கேப்பியுமே இல்ல" என்றாள் பொறுக்க மாட்டாமல்.
"நீயும் சந்தோசமா இருப்ப செல்லம். நீ விரும்புனவனைக் கட்டிக்கிட்டாதானே நீயும் சந்தோஷமா இருப்ப? ஒருவேளை அந்த நொண்டி பொண்ணை இவனுக்கு பிடிக்காமல் போயிருந்தா இப்ப என்ன ஆயிருக்கும் யோசிச்சு பாரு? உனக்கு கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்க கூட மாட்டாங்க. அவனுக்கு பிடிச்சு போனது நமக்குதான் நல்லது" என்று கூற நிதர்சனம் உணர்ந்தவள் "ஆம்" என்று தலையாட்டினாள்.
"தெளிவா புரிஞ்சுக்கம்மா. இந்த கல்யாணம் எந்த தடையும் இல்லாமல் நல்லபடியா நடந்து நீ சந்தோஷமா வாழ்றதுலதான் அப்பாவோட மானம் மரியாதையே அடங்கி இருக்கு. உரார் முன்னாடி அப்பாவ தலை குனிய வச்சுடாத" என்று கூற...
"இதுவரை தான் கூறியதற்கு மறுபேச்சு பேசாத தந்தை" இவ்வாறு எடுத்து கூறவும் "சரி" என்று தலையாட்டினாள் ஸ்ரீ.
ஆனால் மனம் முழுதும் "தான் எடுத்த முடிவு தவறோ?" என்ற வினா எழாமல் இல்லை. அனைத்தும் கைநழுவி போவது போல் தோன்றியது.
ஒருபுறம் பிரதீஷ் தன்னைச் சுற்றிச்சுற்றி வர வேண்டும் என்ற அவள் ஆவல் பொய்த்திருக்க.. அவன் தங்கையை சுற்றி வந்தான்.
பற்றாக்குறைக்கு மற்றொருபுறமோ? கட்டிக் கொள்வதற்கு முன்பே மனைவியைச் சுற்றி சுற்றி வந்த தம்பியின் செயல்பாடுகள் முள் கிரிடம் சூட்டியது போல் வலித்தது.
இதுவரை தன்னை மட்டுமே இளவரசியாக பார்த்தவள் மற்றொரு பெண்ணை சுற்றத்தார் இளவரசிக்கு மேலாக தாங்குவதைப் பார்க்கையில் அதை ஏற்றுக் கொள்ள இயலாமல் பொறாமையில் பொங்கினாள்.
தன்னை விட அவள் எந்த விதத்தில் சிறந்தவள் என்று ஒவ்வொன்றிலும் ஒப்புமை செய்து பார்த்தாள்.
அவள் உடுத்தியிருந்த ஆடை முதல் கொண்டு அனைத்துமே தன்னைவிட தரம் தாழ்ந்தவை என்பதை கண்டு கொண்டவளுக்கு உண்மை புலப்படாமல் தத்தளித்தாள்.
"மூன்று வருடம் டிவர்ஸ் கேட்க மாட்டேன்" என்று சயின் செய்து கொடுத்தவள் திருமணத்திற்கு முன்பே திருமணம் வேண்டாம் என்று நின்றதைப் பார்த்த தகப்பனுக்கு பசுமதி ஏன் அக்ரீமெண்ட் போட்டார் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது.
"தன் மகளைத் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ?" என்ற சந்தேகமும் முதல் முறையாக ஏற்பட்டது.
ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. வீடு முழுதும் உறவினர்களும் விருந்தினர்களாலும் கலகலக்க... மண்டபம் முழுதும் இளசுகளும் பெருசுகளுமாய் நிரம்பி வழிந்தது.
ஆர்கெஸ்ட்ரா, கச்சேரி என்று ஒருபுறம் ஆட்டம் பாட்டத்தால் குதுகலிக்க.. மற்றொருபுறம் உணவு பிரியர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமான உணவுகள் வரிசை கட்டி நின்றன.
சற்று ஒதுக்குப்புறமாக மது பிரியர்களுக்காக தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க திருமண வைபவம் கலைக்கட்டியது.