வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்.! - 23

GG writers

Moderator
உறவுகளின் வருகையால் அல்லோகலப்பட்டது திருமண வீடு.

ஒரு வழியாய் மணமகன் அழைப்பு முடிந்து மணமகன்கள் இருவரும் மணமேடையில் காத்திருக்க.. பெண்களை அழைத்துக் கொண்டு சில பெண்கள் வர... ஏதேதோ சம்பிரதாயங்கள் நடந்தேறின.


கோல்டு நிற புடவையில் தேவதை போல் பெண்கள் இருவரும் மின்னினர்.

ஊரார் வாய்க்கு வந்தபடியும், தங்கள் யோசனையில் வந்தபடியும், ஆளாளுக்கு ஏதேதோ கண், மூக்கு, காது, வாய் வைத்து பேசிக் கொண்டிருக்க.. திருமண வைபவம் இனிதே அரங்கேறிக் கொண்டிருந்தது.

தங்கள் இணைகளின் அருகில் அமர வைக்கப்பட்டு... ஐயர் சொல்லும் மந்திரங்களைக் கேட்டு கூறிக் கொண்டிருந்தவர்கள் பார்வை என்னவோ தங்கள் இணையிடம்தான் இருந்தது.

பிரதீஷ் கூட ஒரு சில நொடிகளில் தன் முகத்தைத் தன்னவளிடம் இடமிருந்து திருப்பிக் கொண்டான்.

ஆனால் லக்ஷ்மனோ? பெண் அவளைப் பிடித்திருந்தவர்களின் கையைத் தட்டி விட்டு விட்டு அவளைத் தன் கைவளைவிலேயே அமர வைத்திருந்தான்.

"மாப்பிள்ளே.. கல்யாணம் இன்னும் முடியலே. கையெடுங்கோ" என்று ஐயர் கூற

"ஐயா சாமி... எங்களையே பார்த்துக்கிட்டு இருக்காம சீக்கிரம் உங்க வேலைய பாருங்க. டைம் ஆயிருச்சி. சீக்கிரம் தாலி எடுத்து குடுங்க" என்றான் லக்ஷ்மன்.

அவன் வேகம் உணர்ந்து மற்றவர்கள் சிரிக்க வெட்கத்தில் சிவந்தாள் பிரகதீஸ்வரி.

முதலில் மூத்தவர்களுக்கு திருமணம் நடந்தேற அதன் பின்பே இளையவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

தங்கள் இணையின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து தங்கள் மனம் கவர்ந்த மங்கையையே மனைவியாக்கி கொண்டனர் இருவரும்.

திருமணம் முடியும் வரை மகேஸ்வரனின் உயிர் கையில் இல்லை.
"எங்கே? மகள் எந்த நிமிடத்தில் என்ன கூற போகிறாளோ?" என்று பயத்தோடு நின்றார் அவர்.

ஆனால் அவர் பயப்படும் அளவிற்கு எதுவும் நடக்காமல் நல்லபடியாகவே இரண்டு திருமணங்களும் நடைபெற.. அப்பொழுதுதான் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டார் மகேஸ்வரன்.

திருமணத்திற்கு பின்னான சம்பிரதாயங்கள் முடிந்து விருந்து உபச்சாரங்கள் நடைபெற்றன. இரண்டு மணி அளவில் நல்ல நேரம் பார்த்து சந்தோஷமாய் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மணப்பெண்கள்.

கணவன் வீட்டிற்கு கிளம்பிய பிரகதீஸ்வரி அண்ணனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஸ்ரீலதாவோ
"இவ எதுக்கு இப்படி கட்டிப் பிடிச்சி அழுது ஓவரா சீன் போடுறா?" என்று எண்ணி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால் அவள் கணவனோ தங்கையைப் பிரிய மனம் இன்றி அழுது கொண்டிருந்தான். அத்தோடு இல்லாமல் அவளை எப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மனுக்கு பாடம் நடத்த...
அதைப் பார்த்த லக்ஷ்மன் "என்ன மச்சான்? என் வீட்டுக்கு வர்ற நேரம் பார்த்து என் பொண்டாட்டிய அழ வைக்கிறீங்க? இதெல்லாம் சரியில்ல பாத்துக்கோங்க. வா ... பொண்டாட்டி. நம்ம கோவமா போவோம்" என்று மனைவியை அழைக்க அவன் குறும்பு பேச்சில் வெட்கத்துடன் இதழ் வளைத்தாள் பிரகதீஸ்வரி.

யார் பேச்சுக்கும் காத்திராமல் பெண்ணவளைத் தன் கைகளில் ஏந்தியவன் தன் காரில் சென்று மனைவியை அமர வைத்து சீட் பெல்ட் போட்டு தானும் அமர அனைவரும் அவனை ஆவென பார்த்தனர்.

ஒரு வழியாக அழுது முடித்து மணப்பெண்கள் இருவரும் தங்கள் கணவன்மார்களின் வீட்டிற்கு சீரும் சிறப்போடு வந்து சேர்ந்தனர்.

நிறைநாழி மிதித்து வலது கால் வைத்து வீட்டிற்குள் வந்த ஶ்ரீலதாவிடம் பூஜையறையில் விளக்கேற்றி இறைவனை வழிபடக் கூற.. விழித்தாள் அவள்.

தீப்பெட்டி கூட பற்ற வைக்க தெரியாமல் விழித்தவளைப் புரிந்து கொண்ட கணவன் அவன் தானே விளக்கேற்ற கைக்கூப்பி பெயருக்கு கும்பிட்டுக் கொண்டாள் அவள். மிரண்டு விழித்தார் பசுமதி.

பால், பழம் கொடுத்து வீட்டு வாயிலில் பொங்கலிட்டு முடித்த பின் கணவனையும் மனைவியையும் வெவ்வேறு அறையில் தங்க வைத்தவர்கள் மாலை ரிசப்ஷனுக்கு தயாராகும்படி கூறி சென்றனர்.

அவர்களோடு பல விருந்தினர்கள் கூடி இருக்க கசகசவென்று இருந்தது ஸ்ரீலதாவிற்கு.

அங்கு வந்தவர்கள் பலரும் அங்கிருந்த பொருட்களை பொதுவாய் எடுத்து பயன்படுத்த எரிச்சல் மண்டியது அவளுக்கு.

தனக்கான பொருட்களை யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை இதுவரை. ஆனால் இன்று ஆளாளுக்கு சீப்பு முதல் டவல் வரை அவளது பொருட்களை எடுத்து பயன்படுத்த பத்தி கொண்டு வந்தது.
எனினும் வாய் திறக்க வழியின்றி கடித்து பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரீலதா.

இந்த கச்சடைக் கூட்டத்திலிருந்து எப்பொழுது விடிவுகாலம் பிறக்குமோ என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
......
லக்ஷ்மனோ திருமணமாகி வீட்டுக்கு வருகையிலேயே தன்னவளைத் தன் கைகளில் ஏந்தி கொண்டான்.
நிறை நாழியை அவள் காலால் தட்ட செய்தவன் அவள் விளக்கேற்றும் வரை அவளைக் குனிந்த வண்ணமே பிடித்துக் கொண்டான்.

அவர்கள் கண்ணில் வழிந்த காதல் அந்த வீட்டையும் நிறைத்தது.

அந்த பெரிய வீட்டைப் பார்த்த பிரகதீஸ்வரி மிரண்டுவிக்க விழிக்க...
"நம்ம இங்க தங்க போறது இல்லடா. சோ... பயப்படாத. இது உன் மாமனார் வீடு. உனக்காக பார்த்து பார்த்து நம்ம வீடு தயாராகிகிட்டு இருக்கு" என்றான் லக்ஷ்மன்.
அதைக் கேட்ட பின்பே நிம்மதி பிறந்தது பிரகதீஸ்வரிக்கு.

தன்னவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றவன் நிறைவாய் கட்டி தழுவி கொள்ள... வெட்கத்தில் சிவந்த பெண் அவளோ? அவனைக் காதலுடன் தழுவிக் கொண்டாள்.

தன் காதலையும் ஏக்கத்தையும் அந்த அணைப்பு அவனுக்கு கூற விலகாத மேகம் போல் முத்தமழை பொழிந்தான் அவன்.

மழையில் நனைந்த மங்கை அவள் தேகம் செந்தூரம் அள்ளி இட்டு செவ்வல்லி பூவில் செய்த வண்ணம் போல் சிவக்க..
அவள் சிவப்பு அவனை இன்னும் சூடேற்றியது.

தாபத்துடன் தாரம் அவளை நெருங்கிய வேளை கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கண்ணை மூடி எரிச்சலுடன் "ஹான்... வரேன்" என்று சத்தமிட்டவன் அவளைக் கட்டிலில் அமர வைத்து விட்டு கதவைத் திறந்து "யார் அந்தக் கரடி?" என்பது போல் பார்க்க...

"ஈவினிங் ரிசப்ஷன் இருக்கு சீக்கிரம் ரெடி ஆகு. அவள நான் ரெடி பண்றேன்" என்று ராஜேஸ்வரி கூறியதோடு நில்லாமல் வீல்செயரை எடுத்து வந்து பிரகதீஸ்வரியை அமர கூறி அழைத்து செல்ல..

"எம்மா... ஏம்மா...? இதெல்லாம் அநியாயம். கல்யாணம்தான் முடிஞ்சிட்டே!?" என்றவன் ஏக்கமாய் தன்னவளைப் பார்த்தான்.

கணவன் அவன் நிலை உணர்ந்து கள்ளச் சிரிப்பு சிரித்தாள் அழகி அவள்.

இருவர் கண்களிலும் விளைந்த காதலையும் தாபத்தையும் பார்த்த மகேஸ்வரிக்கு மனம் பூரித்துப் போயிருந்தது.

அடுத்த பத்து நிமிடத்தில் தயாராகி ராஜேஸ்வரியின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டே நின்றான் லக்ஷ்மன்.

"என்னடா?" என்று ராஜேஸ்வரி எரிச்சலுடன் கேட்க
"நான் ரெடி ஆயிட்டேன்ம்மா. அவ எங்க?" என்று கேட்க..

"அடேய்... அவ என்ன உன்ன மாதிரி ஆம்பள பையனா? போடா அங்குட்டு. அவ இன்னும் ரெப்பிரஷ் கூட ஆகல்ல" என்று கதவை மூட செல்ல..
"அம்மா... நான் வேணா ஹெல்ப் பண்ண வரவா?" என்றான் அவன்.

"ஒரு ஹெல்ப்பும் தேவையில்லை. நீ வராமல் இருக்கறதே ஹெல்ப்தான். வெளிய போடா" என்று கதவிடுக்கில் கால் வைத்து கதவைப் பூட்ட முடியாமல் செய்து கொண்டிருந்தவனைத் துரத்தினார் ராஜேஸ்வரி.

சென்றவன் மீண்டும் ஐந்து நிமிடத்தில் வந்து கதவைத் தட்ட...
"உன்னை என்ன செய்யப் போறேன் பாரு. இப்பதான் கூட்டிட்டு வந்து இருக்கேன். அதுக்குள்ள எங்கேயும் போய்ட மாட்டா. மரியாதையா நீ போய் ரெஸ்ட் எடு" என்று தாயவள் மீண்டும் துரத்த...
"அம்மா... அந்த ரூம்ல ஏசி ஒழுங்கா ஒர்க் ஆகல. நான் வேணா இங்க கொஞ்ச நேரம் ஸ்டே பண்ணிக்கட்டுமா?" என்று கேட்க..
இடுப்பில் கைவைத்து அவனை முறைத்து பார்த்தவர்... "போ ராசா.. உங்க அப்பாவுக்கு உன்னோட ஹெல்ப் ரொம்ப தேவைப்படுதாம்" என்று அனுப்பினார்.

"அம்மா ப்ளீஸ்மா..." என்று அவன் மீண்டும் வந்து கெஞ்ச... அறையில் இருந்த மனைவியோ 'கிளிக்'கென்று சிரித்து வைத்தாள்.

"டேய் உதை வாங்க போற" என்று மிரட்ட... "அம்மா" என்று சிணுங்கினான் அவன்.

இத்தனை நாள் மகனிடம் காணாத மகனின் முகம் இது.

புதிதாய் பிறந்த செல்லமும் கெஞ்சலும் கொஞ்சலும் தாய்க்கு மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அள்ளி வழங்கியது. எனினும் செல்லமாய் அவன் காதைப் பிடித்து வெளியே தள்ளியவர்
"உன் ரூம்ல போய் வெயிட் பண்ணு. அவ ரெடி ஆன பிறகு சொல்றேன். தூக்கிட்டு போ. இல்ல நைட்லதான் உன் ரூமுக்கு அனுப்புவேன். உனக்கு எப்படி வசதி?" என்று கேட்க...
"அம்மா... உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நான் வேணா உங்க ரூம்ல வெயிட் பண்ணவா? ரெடியானதும் அவளைக் கூட்டிட்டு போறேன்?" என்று கேட்டான் அவன்.

"சொன்னா கேளுடா" என்று அவனைத் துரத்தி விடுவதற்குள் ஒரு வழியாகிப் போனார் ராஜேஸ்வரி.

ஊனமுற்ற ஒரு பெண்ணின் மீது தன்மகன் இத்தனை அன்பும் அக்கறையும் வைத்திருப்பான் என்று எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை ராஜேஸ்வரி.

ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் பொறாமையாக கூட இருந்தது அந்த அன்பை பார்க்கையில்.
ஏனெனில்.. இத்தனை வருட இல்வாழ்க்கையில் தன் கணவனிடம் காணாத அன்பு அல்லவா அது?

ஒரு வழியாய் பெண்ணவளைத் தயார் செய்தவர் அவன் கூறிய படியே அவனிடம் கொண்டு விட.. அதே நேரம் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுகள் வந்து நின்றனர்.

அவர்கள் தங்கள் பணியை முடிக்கவும் ரிசப்ஷனுக்கு கிளம்புவதற்கும் சரியாய் இருந்தது.

தாயைப் பார்த்து முகத்தைக் கோணியவன் தன்னவளுடன் மண்டபம் கிளம்பினான்.

பிரதீசும் தன் குடும்பத்தாரோடு மண்டபத்திற்கு வந்து சேர.. இரவு விருந்து தடபுடலாய் பரிமாறப்பட்டது.
உற்றார் உறவினர்கள் குடும்பத்தினர் என்று குதூகலமாய் புகைப்படம் எடுத்தும் உண்டு கழித்தும் நேரத்தைச் செலவழிக்க.. செல்வது தெரியாமல் நேரம் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.

ஒரு வழியாய் திருமணம் முடிந்து அனைவரும் வீடு திரும்புகையில் மணி பன்னிரெண்டைக் கடந்திருந்தது.

இரு தம்பதியினரும் தங்கள் தங்கள் வீடுகளில்... முதலிரவு அறைக்குள் கொண்டு விடப்பட்டிருக்க... லக்ஷ்மனின் வேகத்தைப் பார்த்த ராஜேஸ்வரி "டேய்... சின்ன புள்ளடா அவ. பாத்து பக்குவமா நடந்துக்க. பயந்துட போறா" என்று கூற "போங்கம்மா.. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று வெட்கப்பட்டான் அவன்.

தாய்க் கூறியது போல் அவன் தன் இல்லறத்தை நல்லறமாய் துவங்க... இன்பம் கொடுத்து இன்பம் கண்டது அந்த ஜோடி.

பிரதீஷின் வீட்டிலோ பேச்சிக்கே இடம் இன்றி ஆளுக்கு முன்பாக அவன் அறையில் சென்று காத்திருந்தாள் ஸ்ரீலதா.

நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர அவன் வந்த பாடுதான் இல்லை.

இருந்து இருந்து பார்த்தவள் சாய்ந்து அமர்ந்தபடியே தூங்கி போக... எப்பொழுது வந்தான் என்றே தெரியவில்லை.

தன் வேலைகளை முடித்துவிட்டு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து, வந்தவர்களைப் படுக்க வைத்து விட்டு கடைசியாக தன் அறைக்கு வந்து சேர்ந்தான் அவன்.

தயாராகி இருந்த புத்தாடையுடன் புத்தம் புது பூவாய் அவள் தூங்கி வழிந்து கொண்டிருக்க... அறைக்குள் வந்தவன் அவளை எவ்வித தொந்தரவும் செய்யாமல் தரையில் பாய் விரித்து லைட்டை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான்.

காலையிலிருந்து ஓய்வின்றி இருந்தவள் தன்னை மீறி தூங்கி இருக்க.. அவனும் சிறிது நேரத்திலேயே தூங்கி போனான்.

அமர்ந்தே தூங்கியவளுக்கு முதுகு வலி எடுக்க... புரண்டவள் கீழே விழுவது போல் இருக்க... நிதானிக்க சற்று நேரம் பிடித்தது.

தான் எங்கு இருக்கிறோம் என்ன ஏது என்று மீண்டும் ஞாபகப்படுத்தி பார்த்தவளுக்கு தனக்கு இன்று முதல் இரவு என்பது ஞாபகம் வர... விடி விளக்கின் வெளிச்சத்தில் கட்டிலைப் பார்த்தாள்.

ஆனால் கட்டியவனைக் காணவில்லை.
திரும்பியவள் முன் தரையில் பாய் விரித்து யாரோ படுத்து இருப்பதை உணர்ந்தவள் "அவனாகத்தான் இருக்கும்" என்று யூகித்து விளக்கை ஒளிர செய்ய... நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான் அவன்.

ஐந்தடி அர்னால்டு போல் வாட்ட சாட்டமாக முறுக்கி விடப்பட்ட கம்பீரமான மீசையுடன் படுத்திருந்தவனை அருகில் அமர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
 
Top