GG writers
Moderator
தன்னை மரியாதை இன்றி சரமாரியாக திட்டிய முதியவரை அதிர்ந்து பார்த்த ஸ்ரீலதா "யார் இந்த கிழவன்? வேலைக்காரனா இருந்தா இவ்வளவு பேசுவானா? அதுவும் இவ்வளவு தைரியமா?" என்று யோசனையில் ஆழ்ந்தாள்.
அதே நேரம் அவளது அலைபேசி ஒலி எழுப்ப அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
மகேஸ்வரன்தான் அழைத்து இருக்க.. சற்று முன் நடந்த நிகழ்வை தந்தையிடம் விவரித்தாள் கோபமாக.
அதைக் கேட்ட மகேஸ்வரன் "அந்த ஆள்ட்ட வச்சுக்காதம்மா" என்று மகளுக்கு அறிவுரை கூற..
"ஏன்பா? அவர் அவ்வளவு பெரிய ஆளா?" என்று கேட்க
"அந்த ஆள உனக்கு அடையாளம் தெரியலையா?" என்று கேட்டார் தந்தை.
"இல்லை" என்று கூறிய அவள் உதடு பிதுக்கிய படியே வெளியில் வேலை செய்து கொண்டிருந்த கிழவரை கண்கள் இடுங்க பார்த்தாள்.
"அந்த ஆளு என்னோட அப்பன். நீ வீட்ல வைக்க கூடாதுன்னு சொன்னதுனால அவர நான் துரத்தி தள்ளுனேன். ஆனா உன் புருஷன் கூட்டிட்டு போய் வளத்துட்டு இருக்கான்" என்று கூற உச்சியில் ஆணி அடித்தது போல் இருந்தது ஸ்ரீலதாவிற்கு.
அவள் இதை எதிர்பார்த்து இருக்கவே இல்லை. தான் ஒருவரை வீட்டைவிட்டு வெளியேற்றி இருக்க அதே நபரை வீட்டிற்குள் வைத்து நன்றாக பார்த்துக் கொள்கிறான் அவன் என்று விறுவிறுவென்று கோபம் ஏற்பட்டது.
ஆனால் கிழவன் கூறியது போல் தன்னால் இங்கு எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டவள் "அப்பா உடனே நான் தனி வீட்டுக்கு போய் ஆகணும். என்னால இங்க இருக்க முடியாது" என்றாள்.
"அம்மாடி.. எதுனாலும் உன் புருஷன்கிட்ட பேசிக்க. ஏன்னா தனி வீட்டுக்கு போறதுன்னா அவன் வரமாட்டான். நீ மட்டும்தான் தனியா போற மாதிரி இருக்கும். அதனால அவன் சொன்ன பிறகுதான் இப்போ இருக்க சிட்டுவேஷன்ல நம்ம எதுனாலும் பண்ண முடியும்" என்க..
"அட போங்கப்பா. நீங்க வேற.. எப்ப பாத்தாலும் அவனைக் கேளு அவனைக் கேளுங்கறது" என்று எரிச்சலுடன் அழைப்பைத் துண்டித்தாள்.
"அவரு வரட்டும் வந்ததும் இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பேசிக்கிறேன்" என்றவள் வயிறு மீண்டும் குய்யோ முய்யோ என்று கூச்சலிட மீண்டும் தந்தைக்கு அழைக்க... அவரோ இதே கதையை பேசி நம்மைக் கடுப்பேற்றி விடுவாள் என்று நினைத்து அழைப்பை ஏற்கவில்லை.
ஆனால் அவளுக்கு பசி உயிர் போனது. இத்தனை நாள் பசி என்றால் என்னவென்று அறியாமல்.. கைக்கும் காலுக்கும் வேலை செய்ய ஆட்கள் இருந்திருக்க எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்று செய்தால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் கைகள் தன்னால் அலைபேசியின் யூடியுப் பக்கங்களை தேடி ஒரு வழியாய் உப்புமா செய்ய பார்த்தவள் கிச்சனை தீ வைக்காதது நல்ல வேளை.
அதற்குள் பிரதீஷ் வந்திருக்க அவள் செய்யும் செயலைப் பார்த்தவன் புரிந்து கொண்டான் பெண்ணவள் பசியை.
பிரிட்ஜில் வைத்திருந்த மாவை எடுத்து தோசை செய்து கொடுத்தவன் அவள் உண்ணும் அழகை விழி மூடாது பார்த்திருந்தான். அவளோ? தோசை பைத்தியம் போல் பத்து தின்றும் அவனை "இன்னொன்னு தாங்க" என்க.. முறைத்துவிட்டு சென்றான் அவன்.
எட்டிப் பார்த்து மாவு தீர்ந்து போனதைப் புரிந்து கொண்டவள் "மாவு தீந்து போச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே? அதுக்கு முறைக்கிறீங்க?" என்றாள் அதிகாரமாக.
அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் செல்ல... காலை உணவு சரிகட்டு கட்டிவிட்டு படுக்க சென்றவள் "மத்தியானம் சமைக்கணும். வந்து சமைச்சு வைங்க. எனக்கு அதெல்லாம் செய்ய தெரியாது" என்றாள் அவள்.
"தாத்தா.. சமைக்க நான் சொல்லி தரேன். இனிமே நீதான் செய்யணும்ணு சொல்லிடுங்க" என்று அவளிடம் பேசுவதற்கு கூட மூன்றாவது மனிதனை இடையில் வைத்து பேசினான் அவன்.
"எதுனாலும் என்கிட்ட டைரக்ட்டா சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு அந்த ஆள இடையில கூப்பிடுறீங்க?" என்று அவள் கடுகடுக்க...
"தாத்தா ... எனக்கு பேச விருப்பம் இல்லாதவங்ககிட்ட நான் நேரடியா பேசுறதில்ல. சொல்லிடுங்க" என்க தலையில் இடியே இறங்கியது போல் இருந்தது அவளுக்கு.
"என்ன என்னிடம் பேச விருப்பம் இல்லையா?" என்ற கேள்வி அவள் முன் விஸ்வரூபம் எடுக்க "அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணினாராம்? முதல்ல வேண்டாம்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே?" என்று கேள்வி கேட்டாள் லதா.
"தாத்தா .. நானா ஒன்னும் வேண்டி விரும்பி போய் தாலி கட்டல. இஷ்டம் இருந்தால் இருக்க சொல்லுங்க. இல்லாட்டி போக சொல்லுங்க. அவங்க அப்பன் வீட்டில ராணியாவே இருந்துக்க சொல்லுங்க. இல்ல.. இங்க இருந்தா இருக்குற வரைக்கும் எல்லா வேலையும் செஞ்சிதான் ஆகணும். கடையில இருந்தெல்லாம் ஆர்டர் பண்ணி தின்னுகிட்டு சொகுசா திரிய முடியாது" என்றவன் குரலில் கண்ணீர் எட்டிப் பார்த்திருந்தது அவள் கண்களில்.
ஆனால் அதை கண்டு கொள்ளாமல் அவன் ஒவ்வொரு வேலையாய் செய்ய அதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
அவன் நேர்த்தியாய் வேலை செய்வதைப் பார்த்தவள்
"இதெல்லாம் எங்க கத்துக்கிட்டீங்க?" என்று தனது அதி முக்கிய கேள்வியைக் கேட்க அவளை முறைத்து ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவுதான்.
"நான் என்ன உங்க சொத்தையா எழுதி கேட்டேன்? இப்படி பாக்குறீங்க.. ஐய...." என்று அவள் கேட்க "மரியாதையா போடி" என்று பல்லைக் கடித்தான் அவன் திட்டினால் கூட அவன் நேரடியாய் உரிமையாய் திட்டியது சந்தோஷத்தைக் கொடுத்தது அவளுக்கு.
"சரி... எனக்கு ஒரு கேள்வி கேட்கணும். தப்பா எடுத்துக்க மாட்டீங்களா?" என்று கேட்க..
"இப்போ என்ன?" என்பது போல் பார்த்து வைத்தான் அவன்.
"ஒன்னும் இல்ல.. நம்ம யாரு? புருஷன் பொண்டாட்டிதானே? அப்புறம் ஏன் நீங்க எனக்கு புருஷனா நடந்துக்கல?" என்று கேட்க... அவள் அருகில் நெருங்கி வந்தவன்
"நீ முதல்ல பொண்ணா நடந்துக்க. அதுக்கப்புறம் எனக்கு பொண்டாட்டியா நடந்துக்கலாம். அதுக்கப்புறம் நான் உனக்கு புருஷனா நடந்துக்கிறேன்" என்று கூறிவிட்டு செல்ல..
"இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்லிட்டு போறான்? என்ன பாத்தா ஆம்பள மாதிரியா இருக்கு இவனுக்கு? என்னைய பார்த்தா பொம்பள மாதிரி தோணலையா?" என்று தோன்றியது.
"பொண்ணா எப்படி நடந்துக்கணும்?" என்று யோசித்தவள் தாயிடம் கேட்கலாம் என்றால் காதில் ரத்தம் வரும் வரை பேச்சை விட மாட்டாளே என்று யோசித்தவள் சண்டையிட்ட தோழிகளுக்கு மீண்டும் அழைத்தாள்.
திருமணத்தன்று வந்து தலையைக் காட்டி சென்றதோடு சரி. அதன் பிறகு இன்று வரை எப்படி இருக்கிறாய் என்று கூட கால் செய்து கேட்டிருக்கவில்லை தோழிகள்.
ஆனால் அவளே மீண்டும் அழைக்கவும் அழைப்பை ஏற்ற அமலா "என்ன? சொல்லுங்க மேடம்" என்று கேட்க..
"ஏய்... கடுப்பேத்தாதடி. நானே டென்ஷன்ல இருக்கேன்" என்று இதுவரை நடந்தவற்றை அவளிடம் ஒப்புவிக்க..
"அப்படி எந்த ஆம்பளையும் இருக்க மாட்டான். இருக்கானா ஏதாவது காரணம் இருக்கும்டி. நீ தேடி கண்டுபிடி. ஒருவேளை அவனுக்கு லவ் பெயிலியர் எதுவும் இருக்கலாம். இல்ல வேற யாரையாவது லவ் பண்றானோ? என்னவோ?" என்று அமலா கிளப்பி விட இருந்த நிம்மதியும் பறிபோயிற்று.
அவன் இன்னொருத்தியைப் பார்ப்பதையே தாங்க முடியாதவளுக்கு அவன் மனதில் இன்னொருத்தி இருக்கிறாள் என்று அமலா கூறவும் வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
"அப்படி எல்லாம் இருக்காது. போன வைடி" என்று அழைப்பைத் துண்டித்தவள் அவன் அறைக்கு சென்று அவனது பொருட்களை ஆராய ஆரம்பித்தாள்.
அவள் தேடியதற்கு ஏற்றார் போல் ஒன்றும் கிடைத்த பாடில்லை. ஆனால் அவன் பார்வையும் தன் மீது விழவில்லை.
எத்தனை அழகாக சீவி சிங்காரித்து நின்றாலும் அவன் தன்னை ஒரு உருவமாக கூட மதிக்காமல் தாண்டி சென்று விட... அவள் உள்ளம் அவனுக்காய் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது.
அவன் வருகைக்கு தவம் இருப்பவள்.. அவன் செல்லும்போது பிரியா விடை கொடுக்கவும் தவறுவதில்லை. ஆனால் எதையுமே அவன் கண்டு கொள்ளாமல் நகர்ந்து சென்றுவிட.. நெருப்பின் மேல் நிற்பது போல் இருந்தது.
விழலுக்கு இறைத்த நீர் போல் அவள் காதல் கேட்பாரற்று கிடக்க... அவளுக்கு தன் மனம் விரும்பியவன் மனதில் தான் இல்லையென்றால் கூட தன்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கூட அவன் ஏன் இல்லை என்ற கேள்வி நினைவில் எழுந்து பாடாய்படுத்தியது.
நாட்களும் சென்று கொண்டிருந்தது. அவள் நடைமுறை வாழ்க்கையும் சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருந்தது.
கிச்சன் வேலைகளைச் செய்ய கற்றுக் கொண்டு ஓயாமல் ஓடியாட கற்றுக் கொண்டவள் போல் வேலைகள் எல்லாம் செய்தாலும் அவன் பார்வை அவள்புறம் திரும்பவே இல்லை.
தோழிகளுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் திருமணம் நடைபெற நல்ல காரியங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.
வெளியில் மகிழ்ச்சியாக இருப்பது போல் அனைவரும் முன்பும் நடித்துக் கொண்டாலும் தாம்பத்தியம் என்ற ஒன்று கேள்விக்குறியாகவே நின்றது இருவரிடமும்.
அவளாக வலிய விரும்பி அவன் அருகில் சென்றாலும் தவிர்த்து விடுபவனை என்னவென்று சொல்வதென தெரியாமல் தவித்துப் போனாள் பாவை அவள்.
ஓரளவுக்கு மேல் நெருங்க போய் தன் கேரக்டரையே தவறாக எண்ணி விடக்கூடாது என்ற பயம் வேறு மனதில் எழ... நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் திண்டாடினாள் அவள்.
வேலைக்கு சென்று வருபவன் பகலில் படுத்து தூங்கிய பின் அவன் அருகில் படுக்கும் இன்பமே பெரிதென எண்ணி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தாள்.
அவன் விலகிச் செல்லச் செல்ல அவன் மீது இருந்த ஆர்வமும், ஈர்ப்பும் அவளுக்கு அலாதியாய் பெருகிவிட்டது.
கிடைக்காத பொருளுக்கு ஆசைப்படும் மனம் கொண்ட பெண் அவள் அவனை வன்மையாய் காதலிக்க துவங்கியிருந்தாள். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல் அவன் அருகாமைக்கு ஒவ்வொரு நொடியும் ஏங்க துவங்கியவளை வேண்டுமென்றே அலை கழித்தான் பிரதீஷ்.
அவன் கடைக்கண் பார்வை பட்டாலே அன்றும் முழுவதும் களைப்பின்றி ஓடியாடும் அளவிற்கு அவன் பார்வைக்கு வீரியம் இருந்தது அவளிடம்.
அவன் கட்டளைக்கு அடிபணிந்து காத்தி நிற்கும் நாய் போல் அவனை ஆவலுடன் பார்த்திருந்தாலும் அவன் கண்டு கொள்வதே இல்லை.
தனது வீட்டிற்கு ஷிப்ட் ஆகிவிட்ட லக்ஷ்மன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க... பூரித்து நின்ற பிரகதீஸ்வரியைப் பார்த்து பொறாமையே பொங்கியது ஸ்ரீலதாவிற்கு.
ஆளாளுக்கு அவளை தலையில் வைத்துக் கொண்டு ஆட... ராஜேஸ்வரி வேறு போனைப் போட்டு கடுப்பேற்றினார்.
அது பத்தாது என்று தோழிகள் வேறு அவ்வப்போது தங்கள் கணவருடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று இன்பமாய் பொழுதை கழிப்பதை செல்பிகளும் சாட்ஸ்களுமாய் அனுப்பி வைக்க கிறுக்கு பிடித்தது போல் ஆனாள் ஸ்ரீலதா.
திருமணம் ஆகி நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் கணவனுடன் இதுவரை ஒரு செல்பி கூட எடுக்க முடியவில்லை அவளால்.
அவ்வளவு ஏன்? அவன் விழித்திருக்கும் வேளையில் இதுவரை அவனை நெருங்கி நின்றது கூட இல்லை.