வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! 27

GG writers

Moderator
புகைப்படத்தில் இருந்தது அவர்கள் தான் என்று தெரிந்த பின் ஏதோ சந்தேகம் ஏற்பட்டது ஸ்ரீலதாவிற்கு.

தனியே வந்து தந்தைக்கு கால் செய்தவள் "அப்பா தயவு செஞ்சு நான் கேக்குறதுக்கு உண்மையை மட்டும் சொல்லுங்க. நமக்கும் என் புருஷன் ஃபேமிலிக்கு இடையில என்ன பிரச்சனை? இப்ப நீங்க சொல்லுறதுலதான் என் வாழ்க்கையே அடங்கி இருக்கு. இல்ல இந்த நிமிஷமே நான் என்னோட வாழ்க்கையை முடிச்சுக்குவேன்" என்ன பதறி துடித்தார் மகேஸ்வரன்.


அவள் பேச்சைக் கேட்டவர் "என்னம்மா இப்படி எல்லாம் பேசுற?" என்று கேட்ட தந்தையிடம்

"நீங்க இப்போ உண்மையா சொன்னிங்கனா மட்டும்தான் இதுக்கு மேல நான் வாழ்றத பத்தி யோசிப்பேன். இத்தனை நாள் ஆன பிறகும் என்னை என் புருஷன் ஏத்துக்கவே இல்ல. அதுக்கு காரணம் என்ன? எனக்கு என்னவோ நீங்கதாண்ணு தோணுது. உங்கள பாக்கும்போது மட்டும் அவர் ஏன் முகத்தைத் திருப்பிக்கிறாரு? உண்மைய சொல்லுங்க. அவங்க ஏற்கனவே நம்ம இருந்த பழைய வீட்டுக்கு பக்கத்துல இருந்தவங்கதானே? உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை? உண்மைய சொல்லுங்க பா இல்ல என்ன உயிரோடவே நீங்க பார்க்க மாட்டீங்க" என்று கேட்க... வேறு வழியின்றி சொல்ல ஆரம்பித்தார் மகேஸ்வரன்.


ஏழு வருடங்களுக்கு முன்பு... ஸ்ரீலதா அப்பொழுதுதான் முதன் முதலாக கார் ஓட்ட கற்றுக் கொண்டிருந்தாள். சற்று தடுமாறிதான் ஓட்டினாள். எனினும் தோழிகளிடம் பந்தா போடுவதற்காக அவர்களையும் காரில் அழைத்து வந்து தனது பெருமையை பீத்திக்கொள்ள அவர்களும் அவளை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினர்.

புகழ் போதையில் மிதந்தவள் அவர்களை வழியில் இறக்கி விட்டு வந்து கொண்டிருக்கும் வேளை இருட்ட துவங்கியிருந்ததால் பனிமூட்டம் சற்று அதிகமாகத்தான் இருந்தது.

அப்போது ஓரமாய் வந்து கொண்டிருந்த எதன் மீது மோதியது போல் உணர்ந்தாள் ஸ்ரீ லதா.

ஏத்தி கீழே பார்த்தவள் அங்கு ஒரு பெண்ணும் பெரியவர் ஒருவரும் விழுந்துகிடப்பதைப் பார்த்ததும் பயத்தில் காரை நிறுத்தாமல் வேகமாய் ஓட்டிச் சென்று விட்டாள்.

வீட்டிற்கு சென்றவள் தந்தையிடம் விஷயத்தைச் சொல்ல.. அவரோ? "அதெல்லாம் ஒன்னும் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் பாத்துக்குறேன்" என்று அப்பொழுதும் அவளுக்கு பக்கபலமாய் நிற்க இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தாள் ஸ்ரீ லதா.

காலையில் எழுந்தவுடன் ஆக்சிடென்ட் பற்றி அவரிடம் விசாரிக்க "அது ஒன்னும் இல்லம்மா. அவன் ஏதோ ஒரு குடிகாரனாம். முட்டுல லேசா அடி பட்டு இருக்கு. அவ்வளவுதான்" என்று கூற "ஓ" அப்படியா என்று நிம்மதி பெருமூச்சு விட்டு சென்று விட்டாள் ஸ்ரீ லதா.
அதன்பிறகு அதைப் பற்றி யோசிக்கவே நேரமில்லை அவளுக்கு.

ஆனால் உண்மையில் அதனால் பாதிக்கப்பட்டது என்னவோ பிரகதீஷின் குடும்பமதான். மலை வேளையில் பார்ட்டி ஒன்றுக்கு ஆளுக்கு முன்பாக தயாராகி நின்றனர் கருணாகரனும் பிரகதீஸ்வரியும்.

அப்போது அருகில் இருந்த மலைச்சரிவில் நின்ற பூவே கேட்டு மகள் அடம்பிடித்ததும்.. அதை பறிக்க மகளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் பிரதீஷின் தந்தை கருணாகரன்.


அப்பொழுது தள்ளாடி கொண்டு வந்த ஸ்ரீலதா பிரகதீஸ்வரியின் மீது மோதியிருக்க தூக்கி வீசப்பட்டாள் அவள்.

ஆனால் அவள் கையைப் பிடித்திருந்த தந்தை மகளை விடாமல் பற்றி இருக்க அவள் சரிவில் தொங்கிக் கொண்டிருக்க... அவளைப் பிடித்துக் கொண்டிருந்த தந்தை விழுந்தது என்னவோ அங்கிருந்த பாறையில்.

அவர் உயிர் அவ்விடத்திலேயே சென்று இருக்க.. வெகு நேரம் கழித்து வெளியில் நின்றவர்களைக் காணவில்லையே என்று தேடி வந்த பசுமதி அவர்கள் இருந்த கோலத்தை பார்த்து விதிர்விதிர்த்து போனார்.

"என்ன ஆயிற்று" என்று எதுவும் தெரியாமல் கண்ணீரில் கரைந்தவர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கணவன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. மகளோ உடல் முழுதும் ஏற்பட்ட அதிர்ச்சியினால் உடல் முழுவதும் அசைவின்றி ஜடம் போல் இருந்தாள்.

அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. துக்கம் விசாரிக்க சென்று விட்டு வந்த மகேஸ்வரன் மறுநாளே பசுமதியிடம் சென்று பணம் கொடுத்து கேசை வாபஸ் வாங்கும்படி பேச பெண் சிங்கம் என கொதித்து எழுந்தார் பசுமதி.

அதுவரை தன் கணவனை இடித்தது யார் என்று தெரியாதவள்... தெரிந்த பின் அவர்களை ஒன்றில் இரண்டு பார்ப்பது என்று போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் கொடுக்க எரிச்சலுற்ற மகேஸ்வரன் தனது டிரைவர் ஒருவரை சென்று சரண்டர் ஆகும்படி கூறிவிட்டார்.

அதனால் கேஷ் நிற்காமல் அவர்கள் எந்த பாதிப்பும் அடையாமல் போய்விட.. அத்தோடு நில்லாமல் மகேஷ்வரன் பசுமதியின் வீட்டிற்கு வரும் பால் முதல் கரண்டு வரை கட் செய்து அவர்களைத் தன்னால் முடிந்த அளவு கொடுமைப்படுத்தினார் மகேஸ்வரன்.

அத்தோடு நில்லாமல் அவர்கள் இருந்த வீட்டை கருணாகரனின் அண்ணன் தம்பிகளை அனுப்பி அடித்து பிடுங்கிக் கொண்டதோடு அவர்களை வீட்டை விட்டு விரட்டும்படி செய்தார்.

கல்லூரி செல்லும் மகனுடனும் உடலில் அசைவில்லாத மகளுடனும் தெருவில் நின்றார் பசுமதி.

கையில் இருந்த தனது பர்சை மட்டுமே நம்பி பயணத்தை துவங்கினார். அப்போது பேருந்தில் ஏறி வந்த மகேஸ்வரன் "என்னைய பகச்சிக்கிட்டா இப்படித்தான் ஆகும். முதலிலேயே நான் கொடுத்த காசை வாங்கிட்டு போயிருந்தேண்ணா உன் குடும்பம் நிம்மதியா இருந்திருக்கும்ல்ல?" என்று ஏளனமாய் கூறி சிரித்து விட்டு செல்ல... அவரை அடிக்க பாய்ந்தான் பிரதீஷ்.


மகனை அடக்கிப் பிடித்து தன் தாயின் வீட்டை நோக்கி சென்றார் பசுமதி. கணவன் இன்றி வந்த மகளுக்கு அங்கு ஒன்றும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துவிடவில்லை.

நாயாய் பேயாய் வேலை செய்தும் ஒதுக்கியே வைக்கப்பட்டார் அவர்.

தன் குழந்தைகளின் நலன் கருதி அனைத்தையும் கடித்து பிடித்துக் கொண்டிருந்தவர் ஒரு புறம் படித்து விஏஓ - வாக முன்னேறி விட அதன் பின் மதிப்பும் மரியாதையும் தன்னால் வந்தது.

ஆனால் முழு நேரமும் தங்கையை பார்ப்பதையே வேலையாய் கொண்டிருந்த பிரதீஷோ பகுதி நேர வேலையாய் ஒரு தாதாவிடம் அடியாளாய் சேர்ந்திருந்தான்.

வலிமை மட்டுமே தன் குடும்பத்தை ப பாதுகாக்க ஒரே வழி என்று நம்பியவன் மார்சல் ஆர்ட்ஸ்ஸையும் கற்றுக் கொண்டான்.

வலிமை இருந்தால் மட்டுமே தன் குடும்பத்தை பாதுகாக்க முடியும் என்று நம்பினான். எத்தனை கூறியும் பசுமதியின் வார்த்தைகளை இந்த விஷயத்தில் அவன் கேட்காமல் போக... கோபமடைந்த அவர் மகளை தன்னோடு அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு மாற்றல் கேட்டு செல்ல... தங்கையின் மீது இருந்த அன்பால் வேறு வழியின்றி பின்னாலேயே சென்றான் பிரதீஷ்.


அவர் நேர்மையாய் இருந்த காரணத்தால் பல்வேறு ஊர்களுக்கு மாற்றம் கிடைத்தது. கடைசியில் ஊட்டியில் வந்து சேர்ந்திருந்தனர்.

வந்ததும் முதல் பணியாக தனது கணவனின் பேரில் இருந்த வீட்டை தன் மகனுக்கும் தனக்கும் உரிமை என்று கோர்ட்டில் கேஸ் போட்டு பெற்றுக் கொண்டார்.

மாற்றம் பெற்று பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அவன் உள்ள கிடக்கையை மாற்ற முடியவில்லை தாயால். தங்களுக்கு தீங்கு வரும் என்று அவன் நினைத்து விட்டாலே எதிரில் இருப்பவர்களை அடித்து துவம்சம் செய்யும் குணம் பெற்றிருந்தான் பிரதீஷ்.


அதேவேளை பல வருடங்களுக்குப் பின்பு தான் காதலித்த பெண்ணை அதே திமிருடனும், அகம்பாவத்துடனும் பார்க்க... பார்த்தவனுக்கு நீரு பூத்த நெருப்பாக மனதில் ஒளிந்திருந்த எண்ணம் பொங்கியெழ அவள் கூறியது போல் அவளைக் கண்டு கொள்ளாமல் அவள் கண்களில் பட்டு அவளை நிராகரிக்க அவன் விரித்த வலையில் அவளாகவே வந்து விழுந்திருந்தாள்.

அவளைத் திருமணம் செய்யும் நிலைக்கும் சென்றிருந்தான் அவன்.

உண்மையில் அவளைக் கொடுமை படுத்த வேண்டும் என்று எண்ணியே திருமணம் புரிந்தான்.

ஆனால் உண்மையில் காதல் கொண்ட மனது அவளை காயப்படுத்த முடியாமல் தவித்தது.

வேறு வழியின்றி அவளிடம் பேசாமல் அகிம்சை முறையில் வலியைக் கொடுத்திருந்தான் அவன்.


தான்தான் தனது கணவனின் குடும்பம் துன்ப பட்டத்தற்கு காரணம் என்று உணர்ந்த ஸ்ரீலதாவிற்கு நெஞ்சில் தீயை அள்ளி கொட்டியது போல இருந்தது.

வீட்டிற்கு வருகையில் பசுமதி வந்திருக்க.. அவளைக் கண்டதும் என்றும் போல் தனது அறைக்குள் நுழைய சென்றவரைத் தடுத்த ஸ்ரீலதா "அத்தை... என் மேல உங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்ன்னு புரியுது. எனக்கு தெரியும் உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு அருகதையே இல்லன்னு. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. நான் அன்னைக்கு பம்மாத்தா நினைச்சு பண்ணது மாமாவோட உசுரையே பறிக்கும்னு எதிர்பார்க்கல... போன உசுர என்னால திருப்பி கொண்டு வர முடியாது. ஆனால் இனிமேல் நான் அந்த மாதிரி என்னைக்குமே நடந்துக்க மாட்டேன்" என்று மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட... இதுவரை அவள் முகம் பார்த்து பேசாத பசுமதி மகனின் முகத்தைக் கேள்வியாய் நோக்கினார்.

அவன் "என்னவோ?" என்பது போல் தோள்களைக் குலுக்க...
"இனி பீல் பண்ணி ஆகப்போறது எதுவும் இல்ல. முடிஞ்சது முடிஞ்சதுதான். ஆனால் நீங்க நெனச்சா என் புருஷன மீண்டும் உசுரோட கொண்டு வரலாம். முடிஞ்சா அத செய்ங்க" என்று கணவனுக்கும் மனைவிக்கும் பொதுவாக கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் பசுமதி.

அவர் கேட்ட கேள்விக்கு "சரி" என்று கூறி விட முடியவில்லை அவளால். நெடுமூச்சு விடத்தான் முடிந்தது.

பின்பு? பல வருடங்களுக்கு முன்பு செய்த கெடுதலுக்காக தவமிருந்து தன்னைத் திருமணம் செய்து இருப்பான் என்று அவள் என்ன கனவா கண்டாள்? ஆனால் செய்திருக்கிறானே?! செய்தது மட்டுமின்றி தன்னைப் பழிவாங்கவும் செய்து விட்டான் என்று உணர்ந்தவளுக்கு கண்ணீர்தான் வந்தது.

அவன் நினைத்திருந்தால் தன்னை நிராகரித்தே தோற்கடித்திருக்க முடியும். ஆனால்.. அவ்வாறு செய்யாமல் ஏன் தன்னை ஏற்றுக் கொண்டான் என்பதே இப்பொழுது மனதில் தோன்றிய ஒரே கேள்வியாக இருந்தது.

"ஒரு வேளை அன்று உரைத்த காதல் இன்றும் அவன் நெஞ்சில் இருக்கிறதோ? அதனால்தான் பேசாமல் இருந்து தன்னைக் கொல்கிறானோ?" என்று தோன்றியது.

ஆனால்... மறு நிமிடமே "அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. லவ் இருந்திருந்தா இப்படியா இருந்திருப்பாரு? ஒரே ரூமுக்குள்ள இருந்து பிரம்மச்சாரியா இருக்கிறதுக்கு அவர் என்ன ரிஷியா?" என்று அவள் மனமே மாறி பதில் அளிக்க மாற்றி மாற்றி யோசித்தே சோர்ந்து போனாள்.

ஆனால் அவன் கண்ணில் வலியும் காதலைப் பல நாள் பார்த்திருக்கிறாளே? அதை யோசித்தவள் மீண்டும் "இல்ல அவர் நம்மளை விருப்பப்பட்டுதான் கல்யாணம் பண்ணி இருக்காரு " என்று முடிவிற்கு வர.. மற்றொரு மனமோ "அப்படி விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணி இருந்தா இத்தனை மாசம் ஆகியும் உன்னால அவர் பக்கத்தில் கூட ஏன் நெருங்க முடியல? " கேள்வி கேட்டது.

மனம் சோர்வாக இருக்க எங்காவது வெளியில் சென்று வரலாம் என்று தோன்றியது. கணவன் வேலைக்கு கிளம்பி விட... மாமியாரிடம் கோயிலுக்கு செல்வதாய் கூறிவிட்டு; கூடவே வருவதாய் கூறிய தாத்தாவையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு தனியே கிளம்பினாள் ஸ்ரீலதா.

நேரம் சென்று கொண்டிருந்தது. சென்றவள் திரும்பி வர காணோம். காத்திருந்து பார்த்த பசுமதிக்கு "ஒருவேளை அவங்க அப்பா வீட்டுக்கு போயிட்டாளோ?" என்று எண்ணம் தோன்றியது.

எனினும் "அப்படி எல்லாம் செய்ய மாட்டாளே?!" என்ற யோசனையும் தாத்தாவைச் சென்று கோயிலில் பார்த்துவிட்டு வருமாறு கூறியவர் மகனுக்கு அழைத்து விஷயத்தைக் கூறினார்.

"வந்துருவாம்மா" என்று கூறி அழைப்பைத் துண்டித்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவள் எண்ணுக்கு அழைத்து பார்க்க அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் என்றது. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தவன் லட்சுமணனுக்கு அழைத்தான்.

"அங்கு ஏதாவது சென்று விட்டாளா?" என்று கேட்பதற்காக.

அவனும் "இல்லை" என்று கூற...
தாத்தாவும் பேத்தியைத் தேடி சென்று விட்டு அவளைக் காணவில்லை என்று பதறியபடி வந்து கூறினார்.

ஹோட்டலில் அவசரமாய் விடுமுறை கேட்டு வெளியேறியவன் மாமனார், மாமியார், அவர் தோழிகள் என்று ஒரு இடம் விடாமல் கால் செய்து விசாரித்தபடியே பனிவிழும் அந்த இரவில் ஊட்டி முழுதும் தேடி அலைந்தான்.

தனது எதிரிகள் யாரேனும் அவளைக் கடத்தி விட்டார்களா? என்று நினைத்தான்.

இதுவரை அவள் அருகில் இருக்கையில் எல்லாம் எதுவும் பேசாமல் அவளை வேதனைப் படுத்தியவனுக்கு அவளைக் காணாத இந்த நொடி உயிர் வலியைக் கொடுத்தது.

கையிலிருந்த விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தைத் தொலைத்துவிட்ட குருடனின் நிலையில் தத்தளித்தான்.

விஷயம் அறிந்து மகேஸ்வரனும் லட்சுமணன் அவர்கள் வீட்டுக்கு வந்து விட... கிறுக்கன் போல் தேடி அலைந்தவன் கண்ணீருடன் வீடு திரும்ப... தன் மகளைக் கேட்டு அவன் சட்டையைப் பற்றினார் மகேஸ்வரன்.

அவனை அடித்துக் கொல்லும் அளவிற்கு அவர் கண்களில் வெறி இருந்தது.

அதே வேளை அவர் அலைபேசி சிணுங்க... "ஏதாவது நல்ல செய்தி கிடைத்து விடாதா?" என்று ஆவலுடன் காதில் வைக்க "என்ன மகேஸ்வரா.. ரொம்ப தேடிட்ட போல இருக்கு? உன் பொண்ணு என்கிட்டதான் இருக்கா. ஐம்பது லட்ச ரூபா குடுத்துகிட்டு பொண்ண கூட்டிட்டு போ. போலீசுக்கு போகணும்னு நினைச்சேன்னா பொண்ணு உசுரோட கிடைக்க மாட்டா" என்றது ஒரு குரல் நிதானமாக.

"யார்ரா நீ? எதுக்குடா என் பொண்ண கடத்துன?" என்று தொண்டை கிழிய கத்த... மறுபுறம் "பணத்த குடுத்துட்டு பெண்ண அழச்சிட்டு போ.." என்றது.


"டேய்... அம்பது லட்சம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்ல. என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி? உன்ன உசுரோடவே விடமாட்டேன்" என்று உறும எதிர்முனை சிரித்து அடங்கியது.

உடைப்பெடுத்த வெள்ளம் போல் கண்களில் கண்ணீர் வடிய நின்ற பிரதீஸிடம் "நான் எம்பொண்ணோட வரேன்" என்று மகேஸ்வரன் கிளம்ப... "நாங்களும் வருகிறோம்" என்று அவருடன் இணைந்து சென்றனர் லக்ஷ்மனும் பிரதீசும்.

பாழும் மண்டபம் ஒன்றில் கை கால்களும், வாயும் கட்டப்பட்டு தரையில் போடப்பட்டிருந்தாள் ஸ்ரீலதா.

வெளவால்களின் கழிவுகள் ஆங்காங்கு இறைந்து கிடக்க அதன் நாற்றம் குடலைப் புரட்டியது. தன் கையில் இருந்த கைகட்டை அவிழ்க்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் அவள்.

அப்போது அவள் எதிரில் வந்து நின்றவனை இமை சுருக்கி பார்த்தவளுக்கு சர்வமும் நடுங்கியது.

அன்று அவளிடம் வந்து பிரப்போஸ் செய்து அவள் அசிங்கப்படுத்தி விரட்டியடித்த வாலிபன்தான் நின்றிருந்தான்.

"நான் கூட உன்னைக் கல்யாணம் பண்ணி கண்கலங்காம வச்சு காப்பாத்தலாம்ணுதான் பார்த்தேன். ஆனா பாரு... என் நேரம் உன் அப்பன் எனக்கு கட்டித் தர மாட்டேன்னு சொல்லிட்டான். பாத்தா பிச்சைக்காரனுக்கு கட்டி கொடுத்திருக்கான். அவனே உன் மேல கை வைக்கும் போது நான் வைக்க கூடாதா? அதான் இந்த ஏற்பாடு. செட்டப் எப்படி? உங்க அப்பனும் புருஷனும் தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் கண்டுபிடிக்க முடியாத இடம்" என்றவன் பெண்ணவளிடம் அத்து மீற முயல... கட்டப்பட்டிருந்த வாய்க்குள்ளேயே கதறி அழுதாள் ஸ்ரீலதா.

"தன்னவன் வந்து விடமாட்டானா?" என்று ஒவ்வொரு நொடியும் ஏங்கித் தவித்தாள்.

அவள் அழுகை அவளைக் கடத்தி சென்றவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது போலும்.

அவளை ஆங்காங்கு தொட்டு அழ வைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தான்.


அதற்குள் அவனை அலைபேசியில் அழைத்த அடியாள் ஒருவன் "அண்ணே அவனுங்க காசோட வந்துட்டானுங்களாம். நான் என்ன பண்ண?" என்று கேட்க..
"காபி ஷாப்புக்கு போய் காச வங்கிட்டு நீ கிளம்பு. நான் இருக்குற இடத்த மட்டும் சொல்லிடாத" என்று கூற "சரி" என்று கூறியவன் தவறுதலாக அடியாட்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

மண்டையிலிருக்கும் கொண்டையை மறந்தது போல் தன் அலைபேசியை அணைத்து வைக்க மறந்திருந்தான் அவன்.

அவனது சிக்னலைப் பின்பற்றி லக்ஷ்மனும், பிரதீசும் அவ்விடத்திற்கே வந்திருக்க.. பெரிதாக பாதுகாவல் இல்லாமல் இருந்த இடத்திற்குள் நுழைய கஷ்டபட வேண்டி இருக்கவில்லை.

ஏற்கனவே பல நாட்களாய் யாரையும் அடிக்காமல் கை வேறு நமநம என்றது பிரதீஷுக்கு.

இப்பொழுது ஒருவன் வாலண்டியராய் வந்து சிக்கி இருக்க... கடத்தியவனைப் பிடித்து அடித்து நெறுக்க காலிலேயே விழுந்து விட்டான் அவன்.

அவனைப் போலிஸில் ஒப்படைக்க .. அவனுக்கு முன்பாக பணம் வாங்க வந்த குண்டர்கள் ஏற்கனவே உள்ளே இருந்தனர்.

மப்ட்டியில் வந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்திருந்தனர்.

தனக்கு ஆபத்து என்று தெரிந்ததும் ஓடோடி வந்த தம்பியின் அன்பையும் புரிந்து கொண்ட ஸ்ரீலதா லக்ஷ்மனிடம் தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க அவள் நெற்றி முட்டி சிரித்தான் லக்ஷ்மன்.

ஒரு வழியாக தப்பி பிழைத்து வீட்டிற்கு வந்தவளை ஆளாளுக்கு நலம் விசாரித்துவிட்டு கடைசியில் தன் அறைக்கு வந்தாள்.

வந்தவள் விழி அகலாமல் கணவனைப் பார்க்க கேள்வியாக நோக்கினான் அவன்.

"இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கிறதா?" என்று கேள்வி கேட்டன அந்த விழிகள்.

"அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ எனக்கு எதுமே தெரியல. பனி மூட்டத்துல எது மேலையோ மோது மாதிரி இருந்துச்சி. ஆனா நான் இறங்கி பார்த்தப்போ யாரையும் காணல. அப்போ நான் பிரமையா இருக்கும்ன்னு நினைச்சிட்டு போயிட்டேன். இப்படி உங்க தங்கச்சி மேல இடிச்சிருப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கண்ணீர் வடித்தாள் ஸ்ரீலதா.

"இப்ப மட்டும் எப்படி தெரிஞ்சுகிட்ட " என்று கேட்க... "மாமாவோட டெத் கேஸ் ஹிஸ்டரி ரீட் பண்ணி பார்த்தேன். அதோட பிரகதீஸ்வரியோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்ஸீம் பார்த்து அவங்களுக்கு ஏதோ ஆக்சிடென்ட் ஆகி இருக்குன்னு புரிஞ்சிகிட்டேன். ஆனா அதை நான்தான் செய்தேன்னு எதிர்பார்க்கவே இல்லை. அதனால அப்பாவோட ஹெல்ப் கேட்டேன். ஆனா அவரு தட்டி கழிச்சு கிட்டே இருந்தாரு.

அப்பதான் நீங்களும் அவரும் எலியும் பூனையுமா முட்டிக்கிறத பார்த்தேன். உங்களுக்குள்ள ஏதோ இருக்குன்னு அவரை மிரட்டி கேட்டப்பதான் அவரு என்னக்காக உங்களுக்கு என்னென்ன கொடுமை செய்தார்ன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் எதுவும் வேணும்னு பண்ணல" என்று கூறி அழ... ஏங்கி ஏங்கி அழுதவளை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள கைகள் பரபரத்தது.

"பரவால்ல விடு. நீதான் வேணும்னு பண்ணலையே" என்றான்.

"நிஜமாகவே நான் வேணும்னு பண்ணல. மாமா போட்டோ பாத்தப்போ கூட எங்கேயோ பாத்த மாதிரி இருந்தது. ஆனா சரியா ஞாபகம் வரல" என்று அழுதபடி கூறிய மனைவியின் முன் சிறு பேழை ஒன்றைத் தயங்கி தயங்கி நீட்டினான் பிரதீஷ்.

அவள் முன் சிறிய மோதிரம் ஒன்று கண் சிமிட்டியது.

சிறுவயதில் அவன் ப்ரொபோஸ் செய்த போது நீட்டிய அதே மோதிரம் அவள் விழிகள் விரிய பார்க்க "ஐ லவ் யூ ஸ்ரீ. டு யு லவ் மீ" என்றான்.

"அட கிறுக்கா?!" என்பது போல் பார்த்தாள் அவள்.

"ஆல்ரெடி நான் உங்களைதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே" என்று அவள் கேள்வி கேட்க...

"அது வேற. இது வேற. என்னை ஏத்துக்கிறியா தங்கம்?" என்று கேட்க கணவனைத் தாவி கட்டி அணைத்துக் கொண்டு முத்தமழை பொழிந்தாள் பாவை.

இதுவரை இருவருக்குள்ளும் இருந்த தொலைவு இல்லாமல் போயிருக்க... " ஐ லவ் யூங்க" என்றவள் தயக்கமும் காணாமல் போயிருந்தது.

தாரம் அவள் மீது உரிமையான பார்வையை முதன்முறையாக பதித்தான் அவன்.

"எப்படி? உன்னை ஏங்க வச்சு உனக்கு புருஷன்னு காட்டிட்டேனா?" என்று அவள் கேட்க அவன் மார்பிலேயே இரண்டு அடி போட்டாள் அவள்.

"ஏன்டா என்னை இப்படி அலைய வச்ச? என்று கோவமாய் கேட்க..

"உன் புருஷன் பின்னாடி நீ அலையனும்னு சொன்னியே செல்லம்மா... அலைஞ்சது போதுமா இல்ல இன்னும் அலைய விடணுமா?" என்று கேட்க கண்களைச் சுருக்கி கோபமாய் பார்த்தாள்.

எனினும் காதல் வழிந்த அவன் கண்களைப் பார்க்கையில் கோபம் பகலவனைக் கண்ட பனியாய் உருகி போயிருக்க.. இறுக்கமாய் கட்டித் தழுவினாள் கணவனவனை.

கன்னியவள் அணைத்து கணவன் அவனுக்கு மனைவியாக சேவை புரிய தயாராக இருப்பதைச் சொல்லாமல் சொல்ல.. தன் முதல் முத்தத்தைத் தாரமாவள் வகிட்டில் பதித்தவன் தன்னவளுடன் இன்பமாய் இழைந்து பரிமாற பகலும் இரவாய் மாறி இருந்தது.

பல நாள் காத்திருப்பிற்கு பின் இன்பம் கொடுத்து இன்பம் துய்த்தது அந்த ஜோடி.

இதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து பெண்பனியில் உருகிய பகலவனாய் மாறி போயிருந்தான் பிரதீஷ்.

அவர்கள் வாழ்வு ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் நல்லறமாகிய இல்லறம் ஆகி என்றும் இன்பமுடன் வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.
நன்றி! வணக்கம்...!

- சுபம் -
 
Last edited:
Извиняюсь, что ничем не могу помочь. Надеюсь, Вам здесь помогут. Не отчаивайтесь.
если человек хочет применить в интернете свои пароли, сведения о дебетовых и кредитных карточках а также актуальные данные, https://news.sarbc.ru/main/2023/01/25/282483.html то такой прокси будет весьма полезен.
 
Top