GG writers
Moderator
அவனது தகவல்களைச் சேகரித்து வந்த தோழிகளின் செயல் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது ஸ்ரீலதாவிற்கு.
அவன் மனதை அறியாமல் தன்னை நிமிர்ந்து பார்க்காதவனைக் காலம் முழுவதும் தன்னை மட்டுமே பார்க்க வைக்க வேண்டும் என்ற தவறான முடிவை எடுத்திருந்தாள் அவள்.
தோழிகளை டிராப் செய்துவிட்டு... வீட்டிற்குச் சென்றவள் வாயிலில் நின்ற வாட்ச்மேன் கதவைத் திறக்க லேட்டாகவும் சிறிதாய் அவர் திறந்திருந்த கதவை.. அதிவேகத்தில் இடித்துக் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள்.
கேட் காம்பவுண்டு சுவற்றில் முட்டி விட்டு மீண்டும் மறுபுறம் வந்தது.
அதை பார்த்த வாட்ச்மேனனுக்கு உயிர் போய் உயிர் வந்தது போல் இருந்தது. கேட் உடைந்து இருந்தால் இன்றும் தன் முதலாளி தனது சம்பள பணத்திலிருந்து பிடித்தம் செய்து விடுவாரே என்ற பயத்தில் கேட்டைப் பார்த்தவர் அது உடையாமல் இருக்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
போர்டிகோவில் வண்டியை நிறுத்தியவர் தன் விரிந்திருந்த கூந்தலைச் சரி செய்தபடி வீட்டிற்குள் செல்ல... சோபா செட்டில் அமர்ந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான் அவளுடன் ஒரே கருவில் உருவான தம்பி ஶ்ரீலக்ஷ்மன்.
லேசாய் கண்களைத் திருப்பி பார்த்தவன் பார்வையில் அவள் விழுந்துவிட... முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.
அதை பார்த்தாலும் "என்றும் உள்ளதுதானே" என்று எண்ணியவள் அவனைக் கண்டு கொள்ளாமல் கிடைத்தவரை லாபம் என்பது போல் ஹாயாக சோபாவில் சாய்ந்து படுத்தாள்.
டிவியில் ஓடிக் கொண்டிருந்த டிஸ்கவரி சேனலை மாற்றி ஏதோ ஒரு காதல் பாடலை ஒலிக்க விட்டு பாடலைச் செவிமடுத்த வண்ணம் படுத்திருந்தவள்... கால்கள் அதற்கு ஏற்றவாறு தாளம் போட்டன.
தனது அலைபேசியை உயிர்பித்து அவனது தகவல்களை எடுத்து மூன்றாவது முறையாய் வாசித்து பார்த்தாள்.
அவன் பெயர் பிரதீஷ் குமார். வயது 25. பி காம் படித்திருக்கிறான். உயரம் 5 அடி 8 அங்குலம். பைவ் ஸ்டார் ஹோட்டலில் பகுதிநேர கணக்கராக பணிபுரிகிறான்.
தாயார் பசுமதி தந்தை இறைவனடி சேர்ந்த கருணாகரன். ஒரு தங்கை இருக்கிறாள். முகவரி மற்றும் எந்த ஜாதி மதத்தைச் சேர்ந்தவன் என்பன போன்ற தகவல்கள் இருக்க... அதை வாசித்து பார்த்துவிட்டு அவன் புகைப்படத்தை விரல்களால் வருடியவளுக்கு அவனையே தொட்ட உணர்வு.
கண்கள் வெட்கச் சாயல் பூசிக்கொள்ள... தனது அலைபேசியை நெஞ்சில் வைத்து கண் மூடினாள் லதா.
இன்பமான கனவு கனவில் டூயட் பாட சென்றவளை "லதா கண்ணு... பூஸ்ட் எடுத்துட்டு வரட்டா? இல்ல சாப்பிடுறியா? என்ன செஞ்சி தரட்டும்?" என்று கேட்டபடி வந்த அவளது தாயார் ராஜேஸ்வரியின் குரல் இடையூறு செய்தது.
"இல்ல இல்ல.... இப்ப எதுவும் வேண்டாம் நான் வெளியிலேயே சாப்பிட்டேன்" என்று மகள் கடமையாய் கூறிவிட்டு கனவைத் தொடர முயல...
"என்ன கண்ணு.. டெய்லி வெளியில சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகுறது? ஒரு நாளாவது வீட்டில் சாப்பிடலாம்ல?" என்று தாய் ஆற்றாமையோடு கேட்டாள்.
"தயவு செஞ்சு கொஞ்ச நேரம் பேசாம போறீங்களா? எப்ப பாரு ஏதாவது சொல்லிக்கிட்டு. என்னை கொஞ்ச நேரமாவது தனியா விடுங்க" என்று கூற...
"ஏம்மா? இவ்வளவு நேரம் தனியா வெளியில போய் சுத்திட்டு இப்பதானே வீட்டுக்கே வந்த? இப்ப பேசாம பிறகு உன்கிட்ட எப்ப நான் பேசுறது?" என்று தாயார் கேள்வி கேட்க...
"இங்க பாருங்க தேவையில்லாம ஓவரா அக்கறை எல்லாம் காட்ட வேண்டாம். என்னை அப்பா பாத்துக்குவாங்க. நீங்க உங்க மகன போய் கொஞ்சுங்க" என்று கூற...
"நீயும் எனக்கு புள்ளதான். நீ சாப்டியா குடுத்தியானு எனக்கும் அக்கறை இருக்கதான் செய்யும். மத்தியானம் போன புள்ள ராத்திரி பத்து மணிக்கு பிறகு வீடு வந்து சேர்ந்துருக்க. அதுவரைக்கும் நீ எங்க போன ஏதுப்போனன்னு நான் எவ்வளவு பயந்து போனேன்னு தெரியுமா? இதுல சாப்பிட்டியானு கேட்டது ஒரு குத்தமா?" என்று தாய் கோபமாக கூற...
"எனக்கு பிடிச்சததான் சாப்பிட முடியும். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால தின்ன முடியாது. எதுக்கு இப்படி தேவை இல்லாம என்கிட்ட ஆர்கியூ பண்றீங்க? இன்னொரு தடவை இப்படி ஏதாவது சொன்னீங்கன்னா அவ்ளோதான். அப்பாகிட்ட சொல்ல வேண்டி இருக்கும் மரியாதையா போயிடுங்க" என்று ஒரு மாதிரியாக முகத்தைச் சுழித்துக் கொண்டு தாயை மிரட்ட சூம்பி போனது ராஜேஸ்வரியின் முகம்.
அவள் தாயைக் கண்டு கொள்ளாமல் அலைபேசியில் கவனத்தை வைத்திருக்க.. "பெத்த பிள்ளைக்க மேல இந்த அளவு கூட உரிமை இல்லையா எனக்கு?" என்ற எண்ணத்தோடு கண்களில் கட்டிய கண்ணீரை முந்தானையில் துடைத்தபடி மகனின் அறைக்கு சென்றார் ராஜேஸ்வரி.
மகனிடம் நடந்ததைக் கூறி புலம்ப "அவளுக்கு திமிரும்மா. இதெல்லாம் அப்பா குடுக்கிற செல்லம். இது எங்க போய் நிக்கப் போகுதுன்னு எனக்கு தெரியல. நீங்களும்தானே முதல்ல அவளுக்கு சப்போர்ட் பண்ணீங்க? அதனால வந்த வினை தான் இது" என்றான் லக்ஷ்மன் கோபமாக.
"அறியாத வயசுல சின்ன புள்ளதானேண்ணு செல்லம் கொடுத்தேன்தான். அதுக்காக இப்பவும் இவ தரிகட்டு அலையுறத ஏன்னு கூட கேட்க முடியாத நிலைமையில இருக்கேனே?!" என்று தாய் புலம்ப...
"அம்மா தயவு செஞ்சு புலம்பாதீங்க. எனக்கு டென்ஷன் ஆகுது. உங்களால முடிஞ்சா அப்பாட்ட சொல்லியோ? இல்ல அவகிட்ட டைரக்ட்டாவோ கேளுங்க. எனக்கு அவ முகத்துல பாக்க கூட விருப்பம் இல்ல. நான் தூங்குறேன். ப்ளீஸ் நான் ஒருத்தனும்தான் உங்க புள்ளன்னு நினைச்சுக்கோங்க" என்றவன் தாயின் மடியிலேயே படுத்துக் கொள்ள.. கண்ணீர் வடிந்த முகத்தோடு மகனை ஆதரவாய் தடவி கொடுத்தார் ராஜேஸ்வரி.
அவர் எண்ணங்கள் பணம் இல்லை என்றாலும் குழந்தை கணவனுடன் சந்தோஷமாய் வாழ்ந்த நாட்களை எண்ணி பெருமூச்செறிந்தது.
சற்று நேரத்தில் மகேஷ்வரன் வந்தார். அசதியாய் வந்தவரின் முகம் சோபாவில் படுத்த படி செல்போனை நோண்டிக் கொண்டிருந்த மகளின் முகத்தைப் பார்த்ததும் பூவாய் மலர்ந்தது.
தந்தையைக் கண்டதும் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு தந்தையைப் பார்த்து சிரித்தாள் அவளும்.
"என்ன கண்ணு... என்ன பண்ணிட்டு இருக்க?" என்று வாஞ்சையாய் மகளின் அருகில் இருந்த சோபா செட்டில் அமர்ந்து பெண் அவள் தலையைக் கோதி விட்டபடியே கேட்டார் மகேஸ்வரன்.
"அப்பா நான் என்ன ஆசைப்பட்டாலும் எனக்கு வாங்கி தருவீங்களா?" என்றாள் மகள்.
"ஏன் கண்ணு இப்படி கேட்டுட்ட? இதுவரைக்கும் நீ ஆசைப்பட்டு நான் ஏதாவது இல்லைன்னு சொல்லி இருக்கேனா? உன் தம்பி ஆசையா வச்சிருக்கிற பொருளைக் கூட உனக்காக பிடுங்கி தந்து இருக்கேனே?" என்றார் அவர் பெருமையாக.
அந்த அளவு மகளின் மீது பாசம் வைத்தவர் மகனை யோசிக்க கூட தவறிவிட்டோம் என்பதை நினைக்கக்கூட நேரமில்லை அவருக்கு.
"அப்பா இப்பவும் எனக்கு ஒண்ணு பிடிச்சிருக்கு. ஆனா நீங்க வேண்டாம்னு சொல்லிடுவீங்களோன்னு எனக்கு பயமா இருக்கு" என்றாள் ஒரு மாதிரியாய் முகத்தை வைத்துக் கொண்டு.
"நீ கேட்டு இல்லன்னு நான் எதை சொல்ல போறேன் கண்ணு? எது வேணாலும் கேளு. உன் இஷ்டத்துக்கு மாறா இந்த வீட்ல எதுவுமே நடக்காது" என்றார் தந்தை.
"சத்தியமா?" என்று மகள் கையை நீட்டி சத்தியம் கேட்க "சத்தியமா" என்று தந்தையும் வாக்கு கொடுத்தார்.
"அப்போ அன்னைக்கு ஏதோ ஒரு எஸ்டேட் முதலாளியோட பையன் பேரு சொன்னீங்களே? அது.." என்று இழுத்தாள்.
"அந்தப் பையன உனக்கு பிடிச்சிருக்குன்னா அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்துக்கு பேசி முடிச்சிடலாம். பிடிக்கலன்னா வேற வரன் பார்ப்போம் கண்ணு. எதுனாலும் உனக்க விருப்பம்தான் எனக்கு முக்கியம். ஆனா யாருனாலும் வீட்டோட மாப்பிள்ளையா வரணும். உன்ன என்னால பிரிஞ்சு இருக்க முடியாதும்மா..." என்றார் மகேஷ்வரன்.
சிறிது நேரம் கண்ணை உருட்டி ஏதோ யோசித்தாள் அவள்.
"நீ யோசிக்கிறதைப் பார்த்தா மாப்பிள்ளையே ஏற்கனவே பார்த்துட்ட போல இருக்கு. யாரும்மா அந்த லக்கி பாய்" என்று அவர் ராகம் பாட...
"ம்ம்..." என்று சில நொடிகள் யோசித்தவள் தனது அலைபேசியை உயிர்பித்து அவரின் முன் நீட்டினாள்.
அவர் புகைப்படத்தைச் சிறு அதிர்வோடு பார்த்திருக்க... "அப்பா இவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கட்டிக்கணும்னு ஆசைப்படுறேன்" என்று கூற...
"என்னம்மா சொல்ற? இந்த பையனும் நீயும் விரும்புகிறீர்களா?" என்று அதிர்வோடு கேட்டார் தந்தை.
"இல்லப்பா நான் மட்டும்தான் விரும்புறேன். அவர்கிட்ட இன்னும் நான் சொல்லவே இல்ல. அவருக்கு என்னை யாருண்ணே தெரியாது. எனக்கு புடிச்சிருக்கு. சோ... நீங்களா பார்த்து பேசுவீங்கண்ணுதான் உங்ககிட்ட சொல்லுறேன். நான் அவர்கிட்ட வலிய போறதுலல்லாம் எனக்கு இஷ்டம் இல்ல" என்றாள் அவள்.
"அவர பத்தி வேற ஏதாவது டீடைல் தெரியுமாம்மா?" என்று கேட்க "ஆமா அப்பா.." என்று மொபைலை ஸ்குரோல் செய்து மறு பக்கத்தை எடுத்து காண்பிக்க அவனைக் குறித்த தகவல்கள் இருந்தன.
அதை வாசித்து பார்த்தவர் முகத்தில் சிறு கலவரம்.
தந்தையின் முக மாற்றத்தைக் கண்டவள் "என்னப்பா? என்ன ஆச்சி?" என்றாள்.
"ஒன்னும் இல்லம்மா. உனக்கு பிடிச்சிருக்குல்ல? நான் பாத்து பேசிக்கிறேன். நீ ரெஸ்ட் எடு" என்று விட்டு தனது அறைக்கு சென்று விட்டார் மகேஸ்வரன்.
அவளும் குதூகலமாக தனது அறைக்கு சென்று நைட் டிரெஸ்ஸுக்கு மாறிக்கொண்டாள்.
அவள் மனமோ? வெற்றிக் கழிப்பில் கூத்தாடியது.
இதுவரை தந்தை "சரி" என்று சொல்லி நடக்காதது எதுவும் இல்லை. எனவே எப்படியும் அவனைத் தனக்கு மணமுடித்து வைத்து விடுவார்" என்று பரிபூரணமாக நம்பினாள் அவள்.
"என்னையா திரும்பி பாக்காம இன்சல்ட் பண்ண? இனி எப்பவுமே என்னதான் பார்க்க வேண்டியது இருக்கும். பாரு உன்னை என்ன செய்யுறேன்னு" என்று எண்ணியவள் அவன் புகைப்படத்தை பார்த்தபடியே தூக்கிப் போனாள்.
ஆனால் அவள் அறியவில்லை. அவன் இவள் எதிர்பார்த்த மாதிரியான ஆள் இல்லை என்று.
அவள் தந்தைக்குதான் தூக்கம் இன்றி போனது. இரவென்றும் பாராமல் தனக்கு தெரிந்த சிலரிடம் அவனது தகவல்களைக் கொடுத்து விசாரிக்க கூறினார்.
மகனைத் தூங்க வைத்துவிட்டு அறைக்கு வந்த ராஜேஸ்வரி "என்னங்க என்ன ஆச்சி? எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்கீங்க? யார் இந்த பையன்?" என்று கேட்ட வண்ணம் கணவனின் அலைபேசியில் இருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்து ... "ஏங்க... இது அந்த பையன்ல்ல?" என்று கேட்க..
"உன்கிட்ட எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது. வாய மூடிட்டு கொஞ்ச நேரம் பேசாம போ.." என்று எரிந்து விழுந்தார் மகேஸ்வரன்.
தான் நினைத்த நபராக மட்டும் அவன் இருக்கக் கூடாது என்று அவர் மனம் பலமுறை தந்தி அடித்தது. ஆனால் அந்தோ பரிதாபம். மனைவியே 'அவன்' என்று கூற எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது.
அதற்கேற்றார் போல் விசாரித்த இடத்திலும் 'அவன்' அவர் கூறிய பையன்தான் என்று பதில் வர.. மிகவும் உடைந்து போனார் தந்தை.
மகளிடம் "இல்லை" என்ற வார்த்தையைச் சொல்ல முடியாமல் அவன் வீட்டாரைச் சந்தித்து பேசுவதென முடிவு செய்து கொண்டு படுத்தார்.
ஆனால் தூக்கம் கண்களை எட்டவில்லை. எவ்வாறு எட்டும் அவனுக்கு இழைத்த அநீதி அத்தகையதல்லவா?
ஒரு வழியாய் காலை விடிந்ததுமே எழுந்து கிளம்பி விட்டார் மகளின் நல்வாழ்விற்காக.
நடுத்தர வர்க்கங்கள் வாழும் குடியிருப்பு பகுதி அது. கையில் இருந்த முகவரியை வைத்து அவர்கள் வீட்டு எண்ணைத் தேடிக் கண்டறிந்து அந்த வீட்டின் முன் காரைப் பார்க் செய்தவர் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார்.
நடைபாதைக்கு அடியிலேயே நீரோடை போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருக்க மீன்கள் ஓடிக்கொண்டிருந்தன.
வாயிலின் இருபுறமும் படர விடப்பட்டிருந்த முல்லைக் கொடிகள் அதுவே நுழைவாயில் போல் வளைந்து ஒன்றிணைந்து அழகாய் காட்சி அளித்தது.
அதைத் தொடர்ந்து நடப்பதற்கு நிழலாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் தோரணம் போல் திராட்சைக் கொத்துக்கள் தலைக்கு மேல் தொங்கும் வகையில் திராட்சைக் கொடிகள் பந்தலிடப்பட்டிருந்தது.
பந்தலுக்கு கீழே ஸ்கூட்டி ஒன்று பார்க் செய்யப்பட்டிருக்க.. மற்றொரு டூவீலரும் பார்க் செய்வதற்கு போதுமான இடம் வெற்றிடமாக இருந்தது.
பந்தலுக்கும் செடிகளுக்கும் இடையே இருவர் நடப்பதற்கான இடைவெளி விடப்பட்டு காம்பவுண்டின் சுற்றுச் சுவரை ஒட்டினார் போல் முழுதும் பல்வேறு வண்ண ரோஜா பூக்களும், ஜெரிபரா மலர்களும், ஊட்டி மலர்களும் பூத்துக் குலுங்கின.
அந்தச் செடிகளுக்கு வீல் செயரில் அமர்ந்து நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்.
கேட் திறந்த சத்தம் கேட்டு உள்ளே வந்தவரைத் திரும்பிப் பார்த்து "யார் நீங்க?" என்றாள்.
"அம்மா இருக்காங்களாமா? உங்க அம்மாவை மீட் பண்ண வந்து இருக்கேன்" என்று அவர் கூற...
"உள்ளதான் இருக்காங்க. வாங்க அங்கிள்" என்று வண்டியைக் கைகளால் தள்ளிக் கொண்டே அவரை உள்ளே அழைத்துச் சென்றாள் அவள்.
"உட்காருங்க" என்று முதல் அறையிலிருந்த சோபா செட்டைக் காண்பித்தவள்.. "அம்மா... அம்மா ... உங்களை யாரோ ஒரு அங்கிள் பாக்க வந்துருக்காங்க" என்று கூறியபடி... வண்டியைத் தள்ளி கொண்டே சமையல் கட்டிற்கு விரைந்தாள்.
அவள் வீடு முழுவதுமே அவள் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த மகேஸ்வருக்கு ஒரு மாதிரியாக இருந்தது
வீடு பெரிதாக ஆடம்பரம் எதுவும் செய்யப்படாமல் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் அத்யாவசிய பொருட்களுடனும் காட்சியளித்தது.
கையைச் சேலை தலைப்பில் துடைத்தவாறு வெளியே வந்த பெண்மணி ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்தார்.
"வாங்க... யார் நீங்க?" என்று கேட்டபடி அமர்ந்து இருந்தவரின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றார் பசுமதி.
மறு நிமிடமே "நீ எதுக்கு இங்க வந்து இருக்க? உன்னால நாங்க பட்ட கஷ்டம் போதாதா? வெளியே போ. இன்னும் என்கிட்ட இருந்து எதை கொள்ளையடிக்கணும்னு இங்க வந்து சேர்ந்து இருக்க? மரியாதையா வெளியே போ" என்றார் ஆவேசமாக.