GG writers
Moderator
தான் கொடுத்த வாக்கை நம்பி மகள் மகிழ்வோடு ஊர் சுற்ற கிளம்பி விட "எப்படி பசுமதியை ஒத்துக்கொள்ள செய்வது?" என்று அறியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தார் மகேஸ்வரன்.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த கணவருக்கு ராஜேஸ்வரி பூ போன்ற இட்லிகளை எடுத்து வைத்து சட்னி சாம்பாரைச் சிரத்தையாய் ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாமல் ஊற்றிக் கொண்டிருக்க "ராஜேஷ்..." என்று அழைத்து விட்டு தயங்கினார் மகேஸ்வரன்.
நெடுநாட்களுக்குப் பிறகு கணவனின் அன்பான அழைப்பு கேட்கையிலேயே தேன்மழையில் நனைவது போல்தான் தோன்றியது.
ஆனால் அடுத்த நிமிடமே "அவருக்கு நம்மளால என்ன வேலை ஆகணுமோ?" என்று யோசனையோடு கணவனைத் திரும்பிப் பார்த்தாள் ராஜேஸ்வரி. "என்ன?" என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கியிருந்தது.
"ஒன்னும் இல்ல... எனக்கு ஒரு சின்ன வேலை ஆகணும்..." என்றவருக்குள் மீண்டும் தயக்கம்.
"என்ன நம்ம கிட்ட பேசுறதுக்கு இவ்வளவு தயக்கமெல்லாம் வருது. ஏதாவது பெரிய விஷயமா கேட்க போறாரோ?" என்ற யோசனையோடு மனைவியவள் கணவனைதான் ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் சற்று கனைத்தபடி தன்னை சமாளித்துக் கொண்டு பேச துவங்க.. "சாப்பிட்டுட்டு பேசுங்க" என்றாள் மனைவி.
"சரிம்மா.. சரிம்மா.." என்ற கணவன் அவசரமாய் இட்லியைப் பிய்த்து சட்னியில் தோய்த்து வேகவேகமாய் சாப்பிட ஆரம்பித்தார்.
"நம்ம சொன்னத கேக்குற ரகம் இல்லையே இவரு. இது என்ன திடீர்னு நம்ம வார்த்தை எல்லாம் கேக்குறாரு. ஏதோ பெரிய வில்லங்கமா இருக்கும் போலையே" என்ற எண்ணத்தோடு மனைவி பரிமாறி கொண்டிருக்க பாதி சாப்பிட்டவர் வயிறு ஓரளவு நிரம்பி இருக்க பேச்சை ஆரம்பித்தார்.
"உன் பிரண்டு இருக்காங்களே.."என்று கூறியவரிடம் "யாரு? எனக்கு ஏது ஃப்ரெண்ட்" என்று இடைமறித்தாள் மனைவி.
"முன்னாடி நம்ம வீட்டு பக்கத்துல இருந்தாங்களே பசுமதி... அவங்க" என்று இழுக்க... மனைவியின் முகம் கறுத்தது.
"அவங்களுக்கு என்ன? ஏற்கனவே என்ன கஷ்டம் எல்லாம் கொடுக்கணுமோ எல்லாமே கொடுத்து அவங்களத்தான் ஊர விட்டே துரத்தியாச்சே?! பிறகு எதுக்கு இப்போ அவங்கள பத்தி பேசுறீங்க" என்று கடுகடுத்தாள் மனைவி.
"அவங்க ஊருக்கு வந்திருக்காங்க. நான் நேர்லயே பார்த்தேன்" என்றார் மகேஸ்வரன்.
விழிகள் விரிய "நெஜமாவா? பேசுனாங்களா உங்ககிட்ட?" என்று ஆர்வமாய் கேட்ட அவளிடம்
"பேசினாங்க. ஆனா ஒத்து வரல" என்று கூற..
"என்ன ஒத்து வரல?" என்றாள் புரியாமல்.
"இல்ல... நம்ம பொண்ணுக்கு அவங்க மகன பேசி முடிக்கலாம்ன்னு கேட்டேன். ஒத்துக்கல" என்று கூற அதிர்ந்து விழித்தாள் மனைவி.
"ஏங்க உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? செய்ய கூடாத கொடுமை எல்லாம் செஞ்சி அவங்கள ஊரைவிட்டே துரத்திகிட்டு; இப்ப பொண்ணு தரேன்னு சொன்னா யார் ஏத்துக்குவா?" என்று கணவனை ஏற்ற இறக்கமாய் பார்த்தபடி கேட்டாள் ராஜேஸ்வரி.
"அதுதான்... நீ அவங்க பிரண்டுதானே? அதனால நீ கொஞ்சம் பேசி பாத்தா என்ன?" என்று கேட்க...
"வாயில ஏதாவது வந்துர போவுது. பேசாம போயிடுங்க" என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைய... "ராஜேஸ்வரி" என்று கத்தினார் மகேஸ்வரன்.
"என்ன?" என்பது போல் தலையை மட்டும் திருப்பி அவள் பார்க்க... எச்சில் கையுடன் எழுந்து வந்தவர் "என் புள்ள ஆசைப்படுறா. அத எப்படியும் செஞ்சாகணும். அந்த பொம்பளகிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வை" என்று கூற...
"நீ எல்லாம் என்ன ஜென்மம் டா" என்பது போல் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றவரின் கையைப் பிடித்து நிறுத்தினான் கணவன்.
"அவங்களுக்கு செய்யக்கூடாத அநியாயத்தை எல்லாம் செஞ்சிட்டு இப்ப கல்யாணம் பண்ணுண்னா நான் என்ன பண்ண முடியும்?" என்று மகேஸ்வரி வீராப்பாய் கூறி கையை உதறிவிட்டு சென்றுவிட... வழி தெரியாமல் தத்தளித்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.
அதற்குள் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வர அங்கே ஓட வேண்டியது இருந்தது.
அலுவலகத்திற்கு சென்ற பின்பும் மனம் ஒரு நிலையில் நிற்க மறுத்தது. தந்தையை நம்பி கேட்ட மகளின் ஆசையை நிறைவேற்றாமல் தண்ணீர் கூட "இறங்குவேனா?" என்று அடம் பிடித்தது மகேஷ்வரனுக்கு.
.....
வேலைக்கு சென்று வந்த குமார் சிறிதாய் எக்ஸர்ஸைஸ் செய்து விட்டு ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்தவன்.. ஒரே தட்டில் ஆறெழு தோசைகளை அடிக்கிய படி சோபாவில் வந்து அமர்ந்தான்.
அதற்கு அருகிலேயே பிரகதீஸ்வரியும் அமர்ந்திருக்க தங்கைக்கு ஒரு வாய் ஊட்டுவதும், மறுவாய் தான் உண்பதுமாய் இருந்தான் அவன்.
"குமாரு... இன்னைக்கு காலைல ஒருத்தர் உன்னை மாப்பிள்ளை கேட்டு வந்துட்டு போனாரு" என்க ... வாயிலிருந்த ஒரு கவளம் உணவும் புரை ஏறியது.
அவசரமாய் தங்கை தண்ணீரை எடுத்து அவனுக்கு கொடுக்க தாய் அவன் தலையை மெதுவாய் தட்டினார்.
"போதும்" என்பது போல் தலையை ஆட்டி கையால் சேகை செய்தவன் சற்று கனைத்து தன்னைச் சரி செய்து கொண்டான்.
"என்னடா மாப்பிள்ளை கேட்டு வந்தாங்கன்னு சொன்னதுக்கே இப்படி ஆயிட்ட " என்று தாய் குறும்பு மின்னிய முகத்தோடு கேட்க..
"அம்மா... நான்தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்ல?" என்று அவன் யோசனையோடு கேட்க...
"இன்னைக்கு வந்துட்டு போனது மகேஸ்வர்" என்கவும்
"என்னம்மா சொல்றீங்க?" என்றான் விழிகளை விரித்து.
"ஆமாப்பா. உன்னோட முடிவை நீதான் சொல்லணும். எதுவா இருந்தாலும் எனக்கு தெரிஞ்சி எப்படியும் ரெண்டு நாளுக்குள்ள திரும்பவும் வருவாருன்னு தோணுது" என்று கூற...
விழிகளை உயர்த்தி பார்த்தவன் "சரிம்மா. நான் பாத்துக்கிறேன்" என்றான் மகன்.
"எதுனாலும் உன்னோட சந்தோஷம் எங்களுக்கு முக்கியம்ப்பா. பாத்து பேசு. உனக்கு விருப்பம் இல்லாத எதையும் நான் செய்ய சொல்ல மாட்டேன். எதுவா இருந்தாலும் உன்னுடைய சந்தோசம்தான் எங்களுக்கு முக்கியம். நீ தங்கச்சியைப் பற்றியோ என்னைய பற்றியோ யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல" என்று கூற...
"சரிம்மா நான் பாத்துக்கிறேன்" என்று சுருக்கமாய் பதில் அளித்தான் குமார்.
உணவை தங்கைக்கும் ஊட்டி, தானும் உண்டு முடித்தவன் பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு... பிரகதீஸ்வரியின் கையில் இருந்த துடைப்பத்தைப் பிடுங்கி வீட்டைச் சுத்தம் செய்தான்.
ஹீட்டரை ஆன் செய்து வைத்து விட்டு, பாக்ஸில் போட்டு வைத்திருந்த அழுக்குத் துணிகளை ஒவ்வொரு அறையிலும் இருந்து எடுத்து வந்து ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷினில் போட்டு லிக்யூடையும், வாசனை திரவியத்தையும் ஊற்றி ஆன் செய்து விட்டான்.
தங்கையைக் குளிப்பதற்கு அழைத்து சென்றவன்... அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்து குளிக்கவைத்து உடைகளையும் அணிந்து அழைத்து வந்தவன்... தலைமுடியில் சிறிதாய் அரிபின்னலிட்டு அவள் நீண்ட கூந்தலைக் காய்வதற்காக விரித்து விட்டான்.
மாடியில் காய போட்டிருந்த ஆடைகளை எடுத்து வந்து சோபாவில் போட்டுவிட்டு துவைத்த துணிகளை உலர போட்டு விட்டு குளித்து வந்தான்.
தலையைத் துவட்டியபடியே வந்தவன் மதிய சாப்பாடு என்ன இருக்கிறது என்று பார்க்க.. சாதம், முள்ளங்கி சாம்பார், கேரட் பொரியல் என்று அவன் தாய் செய்து வைத்து விட்டு சென்றிருந்தார்.
"எக்ஸ்ட்ராவாய் முட்டை ஆம்லெட் செய்யலாம்" என்று எண்ணியவன் இரு பல்லாரிகளை அதை கட் செய்வதற்கு தேவையான பொருட்களுடன் எடுத்து வந்தான்.
அவன் சோபாவில் போட்டு சென்ற துணிகளை மடித்துக் கொண்டிருந்த தங்கையின் அருகில் வைத்து
"கட் பண்ணி வைடா கண்ணு குட்டி. அண்ணனுக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் போய் கொஞ்ச நேரம் தூங்குறேன். நீ இந்த வேலை எல்லாம் முடிச்சிட்டு ரெஸ்ட் எடு" என்றான்.
"சரிண்ணா. நீ போய் தூங்கு கண்ணெல்லாம் சிவந்து போயிடுச்சு" என்று தங்கையும் கூற... டிவியை ஆன் செய்து ஏதோ ப்ரோக்ராமை ஓட விட்டான்.
பின் வாசல் கதவைப் பூட்டிவிட்டு தன் அறையில் சென்று படுத்தான் பிரதீஷ்.
துணியை மடித்து வைத்துவிட்டு வெங்காயம் நறுக்கி வைக்க சொன்னால்.. அவளோ? அண்ணனுக்காக முட்டை ஆம்லெட்டையே தயார் செய்து வைத்தாள்.
அவர்களது வீட்டு கட்டில் முதல் செல்ஃப் வரை அவள் வீல் சேரில் இருந்து கொண்டே படுப்பதற்கும், எடுப்பதற்கு ஏற்றார் போல் பிரத்தியேகமாகவும் தாழ்வாகவுமே வடிவமைக்கப் பட்டிருந்தது.
"சரி... கொஞ்ச நேரம் போய் படுப்போம். அண்ணன் எழும்புறதுக்கு டைம் ஆகுமே" என்று எண்ணியவள் டிவியை ஆப் செய்துவிட்டு படுக்க சென்ற நேரம் காலிங் பெல் அழைத்தது.
"இந்த நேரத்துல யாரு? அம்மா வந்துட்டாங்களோ? இல்லையே அம்மாவா இருந்தா நம்ம மொபைலுக்கு கால் பண்ணி இருப்பாங்களே?" என்று எண்ணியவள் வேகமாய்ச் சென்று சகோதரனை எழுப்பினாள்.
"என்ன கண்ணு குட்டி? ஏதாவது வேணுமா" என்று அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தான் அவன்.
அதன் பிறகே அவன் காதில் அழைப்பு மணியின் ஓசை கேட்க... "ஓ..." என்றவன் "சரிடாம்மா. நீ போய் தூங்கு. நான் பாத்துக்குறேன்" என்றபடி ... பாதி தூக்கத்தில் சிவந்த கண்களைக் கசக்கிய படியே கொட்டாவியைப் பறக்க விட்டுக் கொண்டு எழுந்து வந்து கதவைத் திறந்தான்.
வாயிலில் அவன் தாயின் சகோதரன் நின்றிருக்க "வாங்க மாமா" என்று வழிவிட்டு நின்றவனுக்கு அவரோடு வந்தவரைப் பார்த்ததும் இமைகள் தன்னால் முடிச்சிட்டன.
நட்பு வட்டாரங்களில் எல்லாம் விசாரித்து பார்த்த மகேஸ்வரன் முடிவாக பசுமதியின் அண்ணன் பரசுராமனை உதவிக்கு அழைத்திருந்தார்.
அவரைக் கண்டு பேச சென்ற பரசுராமனுக்கு அதீத வரவேற்பும் பணத்தினாலேயே அங்கீகாரமும் வழங்க... பணத்தைக் கண்டு மயங்கிய பரசுராமனும்
"தங்கை கஷ்டப்பட்டபோது நாம் சிறு உதவி கரம் கூட நீட்டவில்லையே" என்ற கூச்ச நாச்சம் எதுவும் இன்றி கிளம்பி வந்தார் மகேஸ்வரனுக்கு வக்காலத்து வாங்க.
மீண்டும் அவர்கள் வீட்டுக்கு மகேஸ்வரன் விஜயம் புரிய இப்பொழுது அந்த வீட்டில் தாய் வேலைக்கு சென்றிருக்க மகனும் மகளுமே இருந்தனர்.
உள்ளே வந்தவரைப் பார்த்த பிரகதீஷ் தனது முகத்தில் எந்த மாற்றத்தையும் காண்பிக்கவில்லை.
"வாங்க மாமா"
"வாங்க" என்று இருவரையும் அழைத்து அமர வைக்க...
"எப்பா... அம்மாவை போல இல்ல போல பையன். இங்கீதமா நடந்துக்குறான். அதுதான் நம்ம பிள்ளைக்கு பிடிச்சு போச்சு போல" என்று எண்ணிக் கொண்டான் மகேஸ்வரன்.
" குமாரு... உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயமா பேசணும். அதுக்காகதான் வந்தோம்" என்று பரசுராமன் ஆரம்பிக்க..
"சொல்லுங்க மாமா" என்றான் அவன் அருகில் இருந்தவரை நினைவே இல்லாதது போல்.
"ஒண்ணும் இல்ல இவர உனக்கு தெரிஞ்சிருக்கும்ணு நினைக்கிறேன்" என்று ஆரம்பிக்க "இல்ல மாமா.. எனக்கு தெரியல" என்று தொடக்கத்தையே முடித்து வைத்தான் அவன்.
"அடடே அப்படியா? சரி சரி... தெரியாட்டி ஒன்னும் பிரச்சனை இல்ல. அதனால் என்ன இனி தெரிஞ்சுகிட்டா போச்சி? என்ன நான் சொல்றது? சரிதானுங்களே?" என்று மகேஸ்வரனைப் பார்த்து கேட்டவர்... தொடங்கும் முன் இரு கோப்பைகளில் டீயைத் தயார் செய்து கொண்டு கொடுத்தாள் பிரகதீஸ்வரி.
டீயைக் கொண்டு கொடுத்தவளிடம் "ஏங்கண்ணு? உள்ளே இருந்தே கூப்பிட்டிருக்கலாமே? உனக்குதான் நடக்க முடியாதுல்ல? எதுக்கு சிரமப்படுற? நானே வந்து எடுத்து இருப்பேனே?" என்று மாமனார் அவளுக்காக பரிந்து பேசுவது போல் அவள் ஊனத்தை உணர்த்தி நோகடிக்க..
"ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா. வீட்டுல உள்ள எல்லா வேலையையுமே அவளால் செய்ய முடியும்" என்றான் பிரகதீஷ்.
"அப்படியா.. அடடே.. அது தெரியாம போச்சே. பலே.. பலே.." என்று பாராட்ட
"தேவைக்கு மட்டும் இல்லாம அப்பப்ப... தங்கச்சி இருக்காளேன்னு வந்து பாத்து இருந்தா தெரிஞ்சிருக்கும் மாமா" என்று பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கூறினான் குமார்.
அதை கேட்ட பரசுராமன் "ஆமாப்பா நீ சொல்றதும் சரிதான். எனக்குதான் அப்புறம் இப்புறம் நகர கூட நேரம் கிடையாது. ஒரே வேல. உங்க அத்தைக்கு வேற உடம்பு சரி இல்லையா? ஆஸ்பத்திரிக்கு போறது வர்றதுன்னு ஒரு நேரம் ஓய்வே இல்ல" என்று நீட்டி முழக்க..
"எப்படியோ இன்னைக்கு டைம் கிடைச்சிருக்கே மாமா? அப்போ உங்க வேலையை விட நீங்க வந்த விஷயம் முக்கியமான விஷயமா இருக்கும் போலையே" என்றான் அவன்.
டீயைக் குடித்துவிட்டு "சூப்பரா இருக்குமா" என்று பாராட்டினார் மகேஸ்வரன்.
சிறு புன்னகையோடு தலையை ஆட்டிய பிரகதீஸ்வரி டீ கோப்பைகளை வாங்கி விட்டு உள்ளே சென்றாள்.
"சரிப்பா. வளவளா கொழகொழான்னு பேசாம வந்த விஷயத்தைச் சொல்லிடுறேன். இவரு ஸ்ரீ லதா இண்டஸ்ட்ரீஸ் அண்ட் பிரைவேட் லிமிடெட்டோட சிஇஓ. நிறைய தேயிலை தோட்டம், எஸ்டேட், எக்ஸ்போர்ட் கம்பெனி, ஹோட்டல்ஸ் எல்லாம் சொந்தமா வச்சி நடத்திக்கிட்டு இருக்காரு.
அதனால நிறைய ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி குடுத்துக்கிட்டு இருக்காரு.
கம்பெனியைத் திறம்பட நடத்திட்டு இருக்குறதுனால நல்லா வருமானம். ஒத்த பொட்ட புள்ள. ஒரு ஆம்பள புள்ள.
பொண்ணு.. பிஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிருக்கா. நல்ல அழகு. ரதி கணக்கா இருப்பா. அவளுக்கு நீயா? நானா?ன்னு போட்டி போட்டுட்டு மாப்பிள்ளைக் கேட்டு வாறாங்களாம்" என்று மாமனார் பெருமையாய் கூற...
"அப்படியா மாமா? அதுல ஒரு நல்ல வரணா பார்த்துக் கட்டி கொடுக்க சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு அத வந்து இங்க சொல்றீங்க? ஓ... உங்க மகனுக்கு பாத்த பொண்ணா?" என்றான் அவன்.
இப்பொழுது "இவன் அவன் அம்மாவுக்கு மேல இருப்பான் போலையே" என்றும் மனதில் நொந்து கொண்டான். மகேஸ்வரன்.

Last edited: