வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மாஸ்திரம் நாவல் போட்டி 2024- அறிவிப்பு

Priyanka Muthukumar

Administrator
வணக்கம் சகோதர சகோதரிகளே,

என்ன மக்களே?அதே நாள்…அதே நேரம்…ஆனால் வேற ஒரு புது வருடம்…
புதுசா புத்துணர்ச்சியா ஆரம்பிக்கலாமா?😉

போகி திருநாள் என்றாலே பழையன கழித்து புதியன புகுத்தும் ஒரு நன்னாள்…

அதனால் இந்த நாளில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன்…

‘பிரம்மாஸ்திரம் நாவல் போட்டி 2024’

அம்பு விடும் வித்தகனான அர்ஜூனனுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் போல் எழுத்துக்களின் வித்தகர்களான எழுத்தாளர்களின் பிரம்மாஸ்திரமே நாவல்.

ஆம்,எழுத்தாளர்களே உங்கள் நாவல் திறமையை காட்ட வேண்டிய பந்தய களம் தயாராகிவிட்டது.

இது ஒரு நெடுந்தொடர் நாவல் போட்டி.

எழுத்தாளர்கள் தங்கள் கணை என்னும் எழுத்து திறமையின் மூலம் மற்ற எழுத்தாளர்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவதே இந்த 'பிரம்மாஸ்திரம் 2024' நாவல் போட்டியின் சூத்திரம்.

ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சளைத்தவரில்லை என்பதை எழுத்துக்களின் மூலம் நிரூபிப்பதற்காகவே இந்த போட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது‌.

அத்தோடு இதில் ஏன் ஒரு வெற்றியாளர் மட்டுமே இருக்க வேண்டும்.எல்லாருமே வெற்றியாளராகி பரிசுக்களை அள்ளி செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

மேலும்,வாசகர்களின் ஆதரவின்றி எந்த ஒரு எழுத்தாளராலும் தனித்து முன்னேற இயலாது என்பதால் அவர்களுக்கும் பரிசுகள் வழங்க முடிவு செய்திருக்கிறேன்.

வாசகர்களே போட்டியில் கலந்துக்கொள்ளும் ஒவ்வொருவரின் வெற்றியும் உங்களில் மட்டுமே அடங்கியிருக்கிறது.

அதனால் கதைகளை வாசித்து எந்த வித தள வேறுப்பாடுமின்றி உங்களது விமர்சனத்தை தங்களது எழுத்துக்களின் மூலம் மட்டுமின்றி போன்மி(meme) பதிவுகளின் வழியாகவும் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.

விமர்சனங்கள் மற்றும் போன்மி பதிவுகளின் அடிப்படையில் வாசகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பப்படும் எழுத்தாளர்கள் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு தங்களது பெயரையும் கதையின் தலைப்பையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நேர்மையான முறையில் போட்டியின் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் எழுத்தாளரின் பெயரை மறைத்தே தளத்தில் அவர்களது கதைகள் பதிவிடப்படும்.

அன்புடன்,
உங்கள் சகோதரி,
பிரியங்கா முத்துகுமார்
 
போட்டியின் விதிமுறைகள்:

1.இதுவரை நாவல் எழுதாமல் புதிதாக எழுத ஆசைப்படும் நபர்கள் முதற்கொண்டு அனைத்து எழுத்தாளர் பெருமக்களும் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்

2.போட்டியில் கலந்துக் கொள்ளும் எழுத்தாளர்கள் எந்த கதைக்களத்தை வேண்டுமானலும் தேர்ந்தெடுத்து எழுதலாம்.(அதிக வன்முறையை மட்டும் தவிர்த்துவிடவும்)

3.உங்களது நாவல் குறைந்தபட்சமாக 25000 வார்த்தைகளும் 40000 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

4.நாவலின் தலைப்பு,எழுத்தாளரின் பெயர்/புனைப்பெயர்,வாட்ஸ் அப் எண்,முகநூல் ஐடி சேர்த்து எங்களது 'pmtamilnovels@gmail.com' என்னும் தள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.விபரங்களை எங்களது தளத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி:14.2.2024(தள வேறுப்பாடு இல்லை)

5.இது எழுத்தாளரின்‌ பெயரை மறைத்து எழுதும் போட்டி என்பதால் போட்டியாளர்கள் தங்களின் பெயரையும் தங்களது கதை எது என்பதையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமானது.மீறினால் தங்களது நாவல்கள் தளத்திலிருந்து நீக்கப்படும்.

6.போட்டி தொடங்கப்படும் தேதி:1.2.2024
போட்டி முடிவடையும் தேதி(நாவலின் இறுதி பதிவுகள் தளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும்) :15.5.2024
போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 11.6.2024.

7.முதல் ஐந்து இடங்களை பெறப்போகும் எழுத்தாளர்களின் நாவல்கள் 'மகதீரா பதிப்பகத்தின்' வழியாக வெளியிடப்படும்.

8.வாசகர்களின் வாக்கெடுப்பின் கீழும்,கதைக்களுக்கான வாசகர்களின் சுற்றுப்பார்வையையும் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஐந்து நாவல்களிலிருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தெரிவு செய்யப்பட்ட ஐந்து போட்டியாளர்களின் நாவல்கள் கீழே உள்ள தகுதிகளின் அடிப்படையிலே மதிப்பிடப்படும்.

*தனித்துவமான கதைக்களம்
*எழுத்துப்பிழை
*இலக்கணப்பிழை
*கதாப்பாத்திரத்தின் தனித்தன்மை

கதையில் எந்த வித தொய்வுமின்றி சிறப்பான முறையில் எழுத்தாளர்கள் தங்களது கதையின் போக்கை கொண்டு செல்ல வேண்டும்.

கட்டாய விதிமுறைகள்:

****எக்காரணம் கொண்டும் போட்டி காலம் நீடிக்கப்படாது.கொடுக்கப்பட்ட மூன்றரை மாதத்திற்குள் கதையை முடித்திருக்க வேண்டும்.(No extension strictly)

****வாசகர்களின் வாக்குகளை பெற்றிருந்தாலும் எழுத்துப்பிழை அதிகமிருந்தால் அந்த நாவலை போட்டியிலிருந்து நீக்கிவிடுவோம்.

****போட்டி நடந்துக்கொண்டிருக்கும் கால இடைவெளியில் எழுத்தாளர்கள் தங்களது பெயரை வெளியிட்டால் அவர்களது கதைகள் போட்டியிலிருந்து நீக்கப்படும்.

****40000 வார்த்தைகளுக்கு மேல் தாண்டினால் அந்த நாவல் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
 
Last edited:
'பிரம்மாஸ்திரம்' நாவல் போட்டிக்கான பரிசுத்தொகை:

முதல் மூன்று இடத்தை பிடிக்கும் நாவல்களுக்கு ரூபாய் 2000 பரிசுத்தொகையும்,நான்காம் ஐந்தாம் இடத்தை பிடிக்கும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 1000 பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

முதல் பரிசு: 2000
இரண்டாம் பரிசு:2000
மூன்றாம் பரிசு:2000
நான்காம் பரிசு: 1000
ஐந்தாம் பரிசு: 1000

அத்தோடு முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்களை சிறப்பிக்கும் விதமாக மகதீரா பதிப்பகத்தின் சார்பாக கேடயம் வழங்கப்படும்.

அதேப்போல் போட்டியில் கலந்துக்கொண்டு நாவலை வெற்றிகரமாக முடித்தவர்கள் அனைவருக்கும் இணைய சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியின் வெற்றிவாகையை கொண்டு பரிசுத்தொகை அல்லது பரிசுகள் ஏற்றி கொடுக்கப்படலாம்.

எழுத்தாளர்களை போல் முதல் ஐந்து சிறந்த விமர்சனம் கொடுக்கும் விமர்சகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.(விமர்சனம்,போன்மி பதிவுகளின் அடிப்படையில்)

மகதீரா பதிப்பகத்தின் வழியாக வெளியாகும் சமீபத்திய நாவல்களும் 500 ரூபாயும் பரிசுகளாக வழங்கப்படும்.
 
Last edited:
Top