வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மாஸ்திரம் நாவல் போட்டி 2025 - அறிவிப்பு

Priyanka Muthukumar Admin

Administrator
Staff member
வணக்கம் சகோதர சகோதரிகளே,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்😍

ஜனவரி ஆரம்பிச்சிடுச்சு இல்லையா?

அதனால் இந்த புத்தம் புது ஆண்டில் ஒரு முக்கியமான அறிவிப்போடு உங்கள் அனைவரையும் சந்திக்க வந்திருக்கிறேன் டியர்ஸ்...

வேறென்ன 'பிரம்மாஸ்திரம் நாவல் போட்டி 2025' தான்.

இம்முறை புத்தம் புது பொலிவுடன்,

'Gossip Glories' என்ற தலைப்பின் கீழ் போட்டி நடக்கவிருக்கின்றது.

காஸிப் என்பது கெட்ட விடயத்தை பரப்புவது மட்டுமல்ல.

நல்ல விடயங்களை பரப்ப உதவும் ஒரு ஊடகமும் கூட!

இங்கு வாசகர்களுக்கு பிடித்தமான சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அக்கதைகளை பற்றி கிசுகிசுத்து எழுத்தாளர்களின் படைப்புகளை சிறப்புக்கும் நோக்கமே,இப்போட்டியின் சாராம்சம்!

'பழையன கழித்து புதியன புகுத்தலாகும்'

இதுவரை பல விதமான கதைக்களங்களை கொண்டு போட்டி நடந்து பார்த்திருப்பீங்க...

இது சற்றே வித்தியாசமான முறையில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது....


சமீபத்தில் வாசகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற குறிப்பிட்ட கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தலைப்புகளாக கொடுத்திருக்கிறேன்.

அந்த தலைப்பின் கீழ் எழுத்தாளர்கள் தங்களது கதைகளை எழுதி முடிக்க வேண்டும்.

அவைகள்,

1.லாஜிக் இல்லா மேஜிக்(no logic only magic)
2.கற்பனை கதைகள்(Fantasy)
3.மறுமணம்(Remarriage)
4.தாய்மாமன் காதல் கதைகள்(முறை மாமன்)
5 ஒருதலை காதல்(one side love)
6.த்ரில்லர் கதைகள்(Thriller,Horror)
7.மென்மையான காதல்(Feel good)
8.ஆன்டி ஹீரோ(Anti hero)


மேற்கண்ட ஏதேனும் ஒரு தலைப்பின் கருவினை மையமாக கொண்டு கதைகள் அமைந்திருத்தல் வேண்டியது,அவசியமானது.

போட்டியின் விதிமுறைகள்,

1.ஆன்டி ஹீரோ மற்றும் த்ரில்லர் கதைகளை தேர்ந்தெடுத்து எழுதும் எழுத்தாளர்களுக்கு மட்டும் இரண்டு நிபந்தனைகள்,

~1.அதிக வன்முறை

~‌2.முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள்

இவை இரண்டையும் தவிர்த்துவிடவும்.(ரொமென்ஸ் தாராளமாக எழுதலாம்)

2.இது நெடுந்தொடர் நாவல் போட்டி என்பதால்,

நாவலின் சொற்கள் குறைந்தபட்சமாக 25000லிருந்து 50000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3.இது எழுத்தாளரின்‌ பெயரை மறைத்து எழுதும் போட்டி என்பதால் போட்டியாளர்கள் தங்களின் பெயரையும் தங்களது கதை எது என்பதையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.மீறினால் தங்களது நாவல்கள் தளத்திலிருந்து நீக்கப்படும்.

4.போட்டி தொடங்கப்படும் தேதி:1.2.2025
போட்டி முடிவடையும் தேதி:30.4.2025(அன்றைய தேதிக்குள் நாவலின் இறுதி பதிவுகள் தளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும்)

போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 15.6.2025.

5.முதல் ஐந்து இடங்களை பெறப்போகும் எழுத்தாளர்களுக்கு ஒரு பெரிய பரிசுத்தொகை கொடுக்கப்படுவதோடு, அவர்களது நாவல்கள் மகதீரா பதிப்பகத்தினால் புத்தகமாக வெளியிடப்படப்படும்.

6.வாசகர்களின் வாக்கெடுப்பின் கீழும்,கதைகளுக்கான வாசகர்களின் சுற்றுப்பார்வையையும் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பத்து நாவல்கள் இரண்டாம் கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.

தெரிவு செய்யப்பட்ட நாவல்களில் கீழே உள்ள தகுதிகளின் அடிப்படையிலே முதல் ஐந்து வெற்றியாளர்கள் நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

*எழுத்துப்பிழை
*எழுத்துநடை அழகு
*இலக்கணப்பிழை
*கதாப்பாத்திரத்தின் தனித்தன்மை
*கற்பனைவளம்


கதையில் எந்த வித தொய்வுமின்றி சிறப்பான முறையில் எழுத்தாளர்கள் தங்களது கதையின் போக்கை கொண்டு செல்ல வேண்டும்.

அதிகப்படியான எழுத்துப்பிழை இருந்தால் அந்த நாவல்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

பரிசுத்தொகை பற்றிய விபரங்கள்,

முதல் பரிசு: 7500
இரண்டாம் பரிசு:5000
மூன்றாம் பரிசு:3000
நான்காம் பரிசு: 1000
ஐந்தாம் பரிசு:1000

அத்தோடு முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்களை சிறப்பிக்கும் விதமாக மகதீரா பதிப்பகத்தின் சார்பாக கேடயம் வழங்கப்படும்.

அதேப்போல் போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் இணையதள சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியின் வெற்றித்தன்மையை கொண்டு பரிசுத்தொகை அல்லது பரிசுகள் ஏற்றி கொடுக்கப்படலாம்.

எழுத்தாளர்களை போல் முதல் ஐந்து சிறந்த விமர்சனம் கொடுக்கும் விமர்சகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.(விமர்சனம்,போன்மி பதிவுகளின் அடிப்படையில்)

மகதீரா பதிப்பகத்தின் வழியாக வெளியாகிய சமீபத்திய நாவல்களும் ரூபாய் 500 பரிசுத்தொகையும் வழங்கப்படும்.


போட்டியில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர்கள்,

'Gossip Glories' Competition

தங்களது பெயர்:
புனைப்பெயர்:
கதையின் தலைப்பு:
தொலைப்பேசி எண்:
எந்த குறிப்பிட்ட கதைக்களத்தின் கீழ் எழுத விருக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட்டு,

pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு மேற்கண்ட விபரங்களை அனுப்பி வையுங்கள்.

பெயர் பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் 14.2.2025


பின் குறிப்பு:

***தள வேறுப்பாடு இல்லை...

***வெற்றிப்பெற்ற எழுத்தாளர்கள் விரும்பினால் மட்டுமே அந்நாவல் மகதீரா பதிப்பகத்தினால் வெளியிடப்படும்.

***இதுவரை புத்தகம் வெளிவராத எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

***விருப்பமிருந்தால் கெஸ்ட் ரைட்டராகவும்(Guest writer) போட்டியில் பங்கு பெறலாம்.

***ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

***புதிய எழுத்தாளர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
PM tamil novels
(மகதீரா பதிப்பகம்)

அப்புறம் என்ன மக்களே நம்ப எழுத்தாளர்களோட கதையை கிசுகிசுக்க ஆரம்பிக்கலாமா?


 
Top