வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

'பிரம்மாஸ்திரம் 2023'

Priyanka Muthukumar

Administrator
வணக்கம் சகோதர சகோதரிகளே,

அம்பு விடும் வித்தகனான அர்ஜூனனுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் போல் எழுத்துக்களின் வித்தகர்களான எழுத்தாளர்களின் பிரம்மாஸ்திரமே நாவல்.

ஆம்,எழுத்தாளர்களே உங்கள் நாவல் திறமையை காட்ட வேண்டிய பந்தய களம் தயாராகிவிட்டது.

இது ஒரு நெடுந்தொடர் நாவல் போட்டி.

எழுத்தாளர்கள் தங்கள் கணை என்னும் எழுத்து திறமையின் மூலம் மற்றவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவதே இந்த 'பிரம்மாஸ்திரம் 2023' நாவல் போட்டியின் சூத்திரம்.

ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சளைத்தவரில்லை என்பதை எழுத்துக்களின் மூலம் நிரூபிப்பதற்காகவே இந்த போட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது‌.

அத்தோடு இதில் ஏன் ஒரு வெற்றியாளர் மட்டுமே இருக்க வேண்டும்.எல்லாருமே வெற்றியாளராகி பரிசுக்களை அள்ளி செல்ல வேண்டும் என்பதை என்னுடைய விருப்பம்.

மேலும் வாசகர்களின் ஆதரவின்றி எந்த ஒரு எழுத்தாளராலும் தனித்து முன்னேற இயலாது என்பதால் அவர்களுக்கும் பரிசுகள் வழங்க முடிவு செய்திருக்கிறேன்.

வாசகர்களே போட்டியில் கலந்துக்கொள்ளும் ஒவ்வொருவரின் வெற்றியும் உங்களில் மட்டுமே அடங்கியிருக்கிறது.

அதனால் கதைகளை வாசித்து எந்த வித வேறுப்பாடுமின்றி உங்களது விமர்சனத்தை தங்களது எழுத்துநடையின் மூலம் மட்டுமின்றி கவிதை அல்லது போன்மி(meme) வழியாகவும் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.

அதில் விமர்சனங்களை பதிவு செய்யும் வாசகர்களின் கருத்துக்களிலிருந்து முதல் மூன்று சிறந்த விமர்சனங்களை தெரிவு செய்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
 
Last edited:

Priyanka Muthukumar

Administrator
போட்டியின் விதிமுறைகள்:

1.இதுவரை நாவல் எழுதாமல் புதிதாக எழுத ஆசைப்படும் நபர்கள் முதற்கொண்டு அனைத்து எழுத்தாளர் பெருமக்களும் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்

2.போட்டியில் கலந்துக் கொள்ளும் எழுத்தாளர்கள் எந்த கதைக்களத்தை வேண்டுமானலும் தேர்ந்தெடுத்து எழுதலாம்.(அதிக வன்முறையை மட்டும் தவிர்த்துவிடவும்)

3.உங்களது நாவல் குறைந்தபட்சமாக 25000 வார்த்தைகள் இருக்கவேண்டும்.அதேசமயம் 35000 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

4.நாவலின் தலைப்பு மற்றும் எழுத்தாளர்களின் பெயர்/புனைப்பெயரோடு சேர்த்து எங்களது 'pmtamilnovels@gmail.com' என்னும் தள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.விபரங்களை எங்களது தளத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி:2.2.2023

5.இது எழுத்தாளரின்‌ பெயரை மறைத்து எழுதும் போட்டி என்பதால் போட்டியாளர்கள் தங்களின் பெயரையும் தங்களது கதை எது என்பதையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமானது.

6.போட்டி தொடங்கப்படும் தேதி:10.2.2023
போட்டி முடிவடையும் தேதி(நாவலின் இறுதி பதிவுகள் தளத்தில் போடப்பட்டிருக்க வேண்டும்) :14.4.2023
போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 5.5.2023

7.முதல் மூன்று இடங்களை பெறப்போகும் எழுத்தாளர்களின் நாவல்கள் 'மகதீரா பதிப்பகத்தின்' வழியாக வெளியிடப்படும்.

8.போட்டியின் முடிவுகள் அனைத்தும் நான்கு கட்டங்களாக நடைப்பெறும்.அதன் விபரங்கள் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அதற்கான இணைப்பு.

முதல் கட்டம்: வாசகர்களின் ஓட்டுகளை‌ வைத்து முதல் பதினைந்து இடங்களை பிடிக்கும் எழுத்தாளர்களின் கதைகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இரண்டாவது கட்டம்: வாசகர்களின் கதைக்கான விமர்சனத்தை கொண்டு அதில் சிறந்த மூன்று விமர்சகர்களை நடுவர்களாக தெரிவு செய்து அவர்களின் மதிப்பீடுகளை கொண்டு முதல் பத்து இடங்களை பெறும் நாவல்கள்‌ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.

மூன்றாவது கட்டம்: வாசகர்களின் கதைக்கான சுற்றுப்பார்வையை(views) வைத்து மீதிமிருக்கும் பத்து நாவல்களிலிருந்து முதல் ஐந்து நாவல்கள் இறுதிக்கட்டத்திற்கு நகரும்.

இறுதி கட்டம்: தேர்வான 5 நாவல்களில் நடுவர்களின் மதிப்பீட்டை வைத்து வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.

இறுதிப்போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர்கள் இதன் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுவார்கள்.

*தனித்துவமான கதைக்களம்
*எழுத்துப்பிழை
*எழுத்துநடை அழகு
*இலக்கணப்பிழை
*கதாப்பாத்திரத்தின் தனித்தன்மை

கதையில் எந்த வித தொய்வுமின்றி சிறப்பான முறையில் எழுத்தாளர்கள் தங்களது கதையின் போக்கை கொண்டு செல்ல வேண்டும்.
 
Last edited:

Priyanka Muthukumar

Administrator
'பிரம்மாஸ்திரம்' நாவல் போட்டிக்கான பரிசுத்தொகை

மொத்தம்:15000

முதல் பரிசு: 7500
இரண்டாம் பரிசு:3500
மூன்றாம் பரிசு:2000

இறுதி கட்டத்திற்கு தேர்வான மீதமிருக்கும் இருவருக்கும் ஆறுதல் பரிசாக தலா 1000 ரூபாயும் வழங்கப்படும்.

அத்தோடு அடுத்த ஐந்து இடங்களை பெற்றவர்களுக்கு எதிர்ப்பாராத வகையில் ஒரு சிறப்பு பரிசும் வழங்கப்படும்.

போட்டியின் வெற்றிவாகையை கொண்டு பரிசுத்தொகை அல்லது பரிசுகள் ஏற்றி கொடுக்கப்படலாம்.

எழுத்தாளர்களை போல் முதல் மூன்று சிறந்த விமர்சனம் கொடுக்கும் விமர்சகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

அம்மூவருக்கும் மகதீரா பதிப்பகத்தின் வழியாக வெளியாகும் சமீபத்திய நாவல்களும் தலா மூன்று பேருக்கும் 500 ரூபாயும் பரிசுகளாக வழங்கப்படும்.

இந்த போட்டிகள் நன்முறையில் தொடங்கி நடந்து முடியும் வரை அனைவரும் எனது தளத்திற்கு உறுதுணையாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
உங்கள் சகோதரி,
பிரியங்கா முத்துகுமார்
 
Last edited:
Top