வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

'பிரம்மாஸ்திரம் 2023'

Priyanka Muthukumar

Administrator
எழுத்துகளின் மூலமாகவோ அல்லது கவிதைகளின் மூலமாகவோ விமர்சனம் கொடுக்கும் வாசகர்களிலிருந்து மூன்று சிறந்த விமர்சனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்!!

அவர்களுக்கு முன்பு கூறியது போல் 500 ரூபாய் பரிசுத்தொகையும் மகதீரா பதிப்பகத்தின் அப்போதைய வெளியீடும் பரிசுகளாக வழங்கப்படும்.

அத்தோடு போன்மி மூலம் தங்களது கருத்துக்களை பதிவு செய்யும் போன்மி படைப்பாளர்களிலும் சிறந்த மூன்று படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு : 500 ரூபாய் பரிசு தொகையோடு மகதீரா பதிப்பகத்தின் புத்தகம் வழங்கப்படும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு மகதீரா பதிப்பகத்தின் வெளியீடுகள் அன்பளிப்பாக கொடுக்கப்படும்.

மொத்தம் ஆறு பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை கொடுத்த ஆதரவையும் அன்பையும் இந்த போட்டி நன்முறையில் நடந்து முடியும் வரையும் குறையாமல் தந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர்களே!அனைவரும் கதைகளை படிக்க தயாரா?

அன்புடன்,
உங்கள் சகோதரி,
பிரியங்கா முத்துகுமார்
 
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நட்புகளே❤️❤️🌹🌹
 

Sangeetha raja

New member
வணக்கம் சகோதர சகோதரிகளே,

அம்பு விடும் வித்தகனான அர்ஜூனனுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் போல் எழுத்துக்களின் வித்தகர்களான எழுத்தாளர்களின் பிரம்மாஸ்திரமே நாவல்.

ஆம்,எழுத்தாளர்களே உங்கள் நாவல் திறமையை காட்ட வேண்டிய பந்தய களம் தயாராகிவிட்டது.

இது ஒரு நெடுந்தொடர் நாவல் போட்டி.

எழுத்தாளர்கள் தங்கள் கணை என்னும் எழுத்து திறமையின் மூலம் மற்றவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவதே இந்த 'பிரம்மாஸ்திரம் 2023' நாவல் போட்டியின் சூத்திரம்.

ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சளைத்தவரில்லை என்பதை எழுத்துக்களின் மூலம் நிரூபிப்பதற்காகவே இந்த போட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது‌.

அத்தோடு இதில் ஏன் ஒரு வெற்றியாளர் மட்டுமே இருக்க வேண்டும்.எல்லாருமே வெற்றியாளராகி பரிசுக்களை அள்ளி செல்ல வேண்டும் என்பதை என்னுடைய விருப்பம்.

மேலும் வாசகர்களின் ஆதரவின்றி எந்த ஒரு எழுத்தாளராலும் தனித்து முன்னேற இயலாது என்பதால் அவர்களுக்கும் பரிசுகள் வழங்க முடிவு செய்திருக்கிறேன்.

வாசகர்களே போட்டியில் கலந்துக்கொள்ளும் ஒவ்வொருவரின் வெற்றியும் உங்களில் மட்டுமே அடங்கியிருக்கிறது.

அதனால் கதைகளை வாசித்து எந்த வித வேறுப்பாடுமின்றி உங்களது விமர்சனத்தை தங்களது எழுத்துநடையின் மூலம் மட்டுமின்றி கவிதை அல்லது போன்மி(meme) வழியாகவும் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.

அதில் விமர்சனங்களை பதிவு செய்யும் வாசகர்களின் கருத்துக்களிலிருந்து முதல் மூன்று சிறந்த விமர்சனங்களை தெரிவு செய்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
மெயில் அனுப்பி உள்ளேன்.. ரிப்ளே செய்யவும்..
 

Shali Gara

New member
அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
 

Sriraj

New member
அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
 
Top