வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதே!!! மறவாதே!!! - கதைத் திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் - 01
IMG_20230216_232145.jpg
சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது அந்த காவல் வண்டி.

வண்டியின் ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் தன் திமிர் பார்வையை சாலையில் பதித்து வாயில் சுவிங்கத்தைப் போட்டு மென்று கொண்டிருந்தாள் ஏ.சி.பி. ஆத்மிகா.

திமிரின் மறு உருவம் எனப் பெயர் பெற்றவள்.

திடீரென வண்டியின் பின்னிருந்து துப்பாக்கி சுடும் சத்தமும் கண்ணாடி உடையும் சத்தமும் கேட்கவும் மறு நொடியே ஓட்டுனர் வண்டியை நிறுத்த, உடனே வண்டியை விட்டு இறங்கிய ஆத்மிகா போலீஸிடமிருந்து தப்பி ஓட முயன்ற குற்றவாளியின் நடு மண்டையில் குறி வைத்து சுட, அங்கேயே மாண்டு விழுந்தான் அந்தக் குற்றவாளி.

இறந்து கிடந்தவனின் அருகில் சென்றவள் அவனின் மூக்கில் விரல் வைத்து உயிர் இருக்கிறதா எனப் பரிசோதித்து விட்டு, "ச்சே... இந்த வாரத்துல ரெண்டாவது என்கவுன்டர்..." என்றாள் வாயில் இருந்த சுவிங்கத்தை அவன் முகத்திலேயே துப்பி விட்டு சலிப்பாக.

அதே நேரம் ஆத்மிகாவின் அருகில் வந்த சக காவல் அதிகாரியான அபிஷேக், "என்ன காரியம் பண்ணிட்டீங்க மேடம்? இவன் யாருன்னு தெரியும்ல... இவன வெச்சி தான் ஒரு நெட்வொர்க்கையே பிடிக்கணும்... கோர்ட்ல வேற இன்னைக்கு இவன ஆஜர் பண்ணி ஆகணும்..." என்றான் ஆற்றாமையுடன்.

"அதான் பாடி இருக்கே... பாடிய தூக்கி வண்டில ஏத்திட்டு வண்டிய நேரா கோர்ட்டுக்கு விடு..." என எந்தக் கவலையும் இன்றி திமிருடன் கூறிய ஆத்மிகா பாக்கெட்டில் இருந்த இன்னொரு சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

'இந்தப் பொம்பளைக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? சரியான பொம்பளை ரூபத்துல இருக்குற இராட்சசி...' எனத் தன் மேலதிகாரியை மனதுக்குள் வறுத்தெடுத்தவாறே தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றத் தொடங்கினான்.

###############

"சாரி டு சே மிஸ் ஆத்மிகா... யூ ஆர் சஸ்பன்டட் ஃபார் அ மந்த்..." என்று ஒரு கவரை அவள் முன் நீட்டினார் கமிஷ்னர் பிரகாஷ்.

அதனை வாங்கிப் படித்தவளின் இதழ்கள் கேலியாக வளைந்தன.

"மிஸ் ஆத்மிகா... இந்த வாரத்துல இது ரெண்டாவது என்கவுன்டர்... மேலிடத்துல இருந்து பர்மிஷன் வராம உங்க இஷ்டத்துக்கு இது வரைக்கும் ஐந்து என்கவுன்டர் பண்ணி இருக்கீங்க... இதுக்கு முன்னாடி பண்ண என்கவுன்டர்ஸ் எல்லாம் குற்றவாளின்னு நிரூபிக்கப்பட்டவங்க... பட் இந்த தடவை எந்தவொரு சரியான ஆதாரமும் இல்லாம விசாரணைக்காக கூட்டிட்டு வந்த ஒருத்தரை கோர்ட்டுல கூட ஆஜர்ப்படுத்தாம என்கவுன்டர் பண்ணி இருக்கீங்க... அதனால ஹியுமன் ரைட்ஸ் டிபார்ட்மெண்ட் உங்க மேல வழக்கு பதிவு பண்ணி இருக்காங்க... சோ டுமோரோ நீங்க கோர்ட்டுல ஆஜராக வேண்டி வரும்... நவ் யூ மே கோ..." என கமிஷ்னர் கூறவும்,

"யெஸ் சார்..." என அவருக்கு சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள் ஆத்மிகா.

ஆத்மிகா காவல் நிலையத்தில் இருந்து வெளியேறவும் அவளைத் தாண்டி வெள்ளை டீ ஷர்ட், கறுப்பு ஜீன்ஸ் போட்ட ஒருவன் வேகமாக உள்ளே செல்லவும் சரியாக இருந்தது.

ஆத்மிகா தன் வண்டியை நோக்கி நடக்க, அவளின் பின்னிருந்து யாரோ விசில் அடிக்கும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்க்காமலே யார் என்று புரிந்து கொண்டவள் கண்களில் டொன் கணக்கில் திமிருடன் அவனை நோக்கி திரும்பினாள்.

அங்கு வெள்ளை டீ ஷர்ட், கறுப்பு ஜீன்ஸ், லேசாக முறுக்கி விட்ட மீசை, கண்களில் சன் கிளாஸ் அணிந்து ஆத்மிகாவுக்கு குறையாத திமிருடன் நின்றிருந்தான் அட்வகேட் தன்விக்.

வலிய வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் ஆத்மிகாவை நெருங்கிய தன்விக், "இட்ஸ் ஜஸ்ட் தி பிகினிங்..." என்றவனின் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த புன்னகை மறைந்து அங்கு கோபமும் வெறுப்பும் ஆட்சி புரிந்தது.

மறு நொடியே ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் ஆத்மிகா சிரிக்க, தன்விக்கின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

பின் தன் சன் கிளாஸை எடுத்து கண்களில் மாட்டிய ஆத்மிகா தன்விக்கை இளக்காரத்துடன் பார்த்து, "ஐம் வெய்ட்டிங்..." எனத் திமிருடன் கூறி விட்டு தன் வண்டியில் ஏறி அங்கிருந்து புறப்பட்டாள்.

ஆத்மிகா அங்கிருந்து சென்று விடவும் ஆத்திரத்தில் பல்லைக் கடித்த தன்விக், "உன்னை ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டேன் டி..." என்றான் கோபமாக.

###############

ஒரு மாதத்திற்கு பிறகு,

"இன்றைய பிரதான செய்தி. முதலமைச்சர் சங்கர நாராயணனின் மகன் சுந்தர நாராயணன் மர்மமான முறையில் கொலை. இவர் இம் மாதம் நடைபெற இருந்த மாவட்டத் தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன."

கோபத்தில் லேப்டாப்பை 'படீர்...' என மூடி வைத்தாள் ஆத்மிகா.

அதே நேரம் அவளின் கைப்பேசி ஒலி எழுப்ப, ஆத்மிகா அழைப்பை ஏற்கவும், "ஆத்மிகா... என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? கொல்லப்பட்டு இருக்கிறது ஒரு அரசியல்வாதியோட பையன்... சீ.எம் வேற கொலையாளிய சீக்கிரம் கண்டு பிடிக்க சொல்லி பிரஷர் பண்ணிட்டு இருக்கார்... எல்லா பக்கத்துல இருந்தும் கால் மேல கால் வருது... ஒரு வாரம் ஆகியும் இன்னும் உங்களால எதையும் கண்டு பிடிக்க முடியலயா? உங்கள போல ஆளுங்க எல்லாம் எதுக்கு தான் டிபார்ட்மெண்ட்ல இருக்காங்களோ? ஒரு வேலை உருப்படியா செய்றது இல்ல... எல்லாரும் வந்து என் தலைய தான் அறுக்குறாங்க... நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது... சீக்கிரம் குற்றவாளிய கண்டுபிடிங்க..." என ஆத்மிகாவிற்கு பதிலளிக்கக் கூட இடமின்றி கண்டமேனிக்கு திட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் கமிஷ்னர்.

நீண்ட பெருமூச்சை வெளியிட்டவாறு கைப்பேசியைக் கீழே வைத்தவள், "அபிஷேக்..." எனக் கத்தினாள்.

மறு நொடியே ஓடி வந்து, "யேஸ் மேடம்..." என சல்யூட் அடித்து விட்டு மூச்சிறைக்க நின்றவனை ஏகத்துக்கும் முறைத்த ஆத்மிகா, "எங்க நான் கேட்ட டீட்டெய்ல்ஸ்? எனக்கு இன்னைக்கே வேணும்னு சொன்னேன்ல... என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" எனக் கேட்டாள் கோபமாக.

தன் மேலதிகாரி தன்னிடம் காட்டிய கோபத்தை விட அதிகமாகவே தனக்கு கீழ் வேலை செய்பவனிடம் காட்டி இருந்தாள்.

"மேடம் அது..." என அபிஷேக் ஏதோ கூற வர, "என்ன மேடம் அது இதுன்னு? என்ன ரீசன் சொல்லலாம்னு யோசிக்கிறீங்களா?" எனக் கேட்டாள் ஆத்மிகா கடுப்பாக.

அவளின் கேள்விக்கு பதிலளிக்காத அபிஷேக் மேசையின் ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை எடுத்து அவள் முன் வைத்து விட்டு, "காலைலயே கொண்டு வந்து வெச்சிட்டேன் மேடம்... நீங்க தான் கவனிக்கல..." என்றான் பவ்யமாக.

"கொண்டு வந்து வெச்சா போதுமா? என் கிட்ட சொல்ல மாட்டீங்களா? நான் என்ன வெட்டியாவா இருக்கேன்?" என அதற்கும் திட்டு விழுந்தது அபிஷேக்கிற்கு.

தான் என்ன கூறினாலும் பதிலுக்கு திட்டு நிச்சயம் என்பதை உணர்ந்த அபிஷேக், "சாரி மேடம்..." என மன்னிப்பு கேட்க, "கெட் அவுட்..." என்றாள் ஆத்மிகா கோபமாக.

மீண்டும் அவளுக்கு சல்யூட் அடித்த அபிஷேக், 'கண்ணு முன்னாடி இருக்குற ஃபைல சரியா பார்க்காதது அவங்க தப்பு... இதுல என்னைக் குறை சொல்ல வேண்டியது...' என மனதுக்குள் முணுமுணுத்தபடி அங்கிருந்து கிளம்பினான்.

அபிஷேக் தந்த ஃபைல்களை படித்துப் பார்த்த ஆத்மிகாவின் முகத்தில் ஒரு வெற்றிச் சிரிப்பு தோன்றியது.

உடனே தன் தொப்பியை மாட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய ஆத்மிகா, "அபிஷேக்... வண்டிய எடுங்க..." என உத்தரவிட்டாள்.

###############

முன்னால் அமைச்சர் குமரன் வீட்டின் முன்னால் சீறிப் பாய்ந்து வந்து நின்றது காவல் வண்டி.

வண்டியில் இருந்து இறங்கிய ஆத்மிகா இடையில் தடுக்க வந்த வாயில் காப்போனையும் தள்ளி விட்டு உள்ளே சென்றாள்.

ஆத்மிகாவை அங்கே கண்டதும் ஒரு நொடி அதிர்ந்த குமரன் உடனே அதனை மறைத்து, "என்ன ஆத்மிகா மேடம்? நம்ம வீட்டு பக்கம்லாம் வந்து இருக்கீங்க..‌" என்றார் நக்கலாக.

"திருடன், கொலைகாரன் போல அக்கியூஸ்ட் இருக்குற இடத்துல தானே போலீஸுக்கு வேலை..." என்றாள் ஆத்மிகா பதிலுக்கு நக்கலாக.

தன்னுள் எழுந்த பதட்டத்தை முகத்தில் வெளிக்காட்டாது மறைத்த குமரன், "ஆஹா... அப்போ ஏ.சி.பி மேடமுக்கு இப்போ இங்க என்ன வேலைன்னு தெரிஞ்சிக்கலாமா?" எனக் கேட்கவும், "சீ.எம் பையன் கொலை வழக்குல உங்க பையன அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்..." என்றாள் ஆத்மிகா.

உடனே தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு வேகமாக எழுந்த குமரன், "எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என் பையனையே அரெஸ்ட் பண்ண போறேன்னு சொல்லுவ?" எனக் கேட்டார் கோபமாக.

"உங்க பையனுக்கு எதிரா அத்தனை சாட்சியும் பலமா இருக்கு... அவன் தான் உண்மையான கொலைகாரன்னு தெரியட்டும்... அன்னைக்கு இருக்கு அவனுக்கு கச்சேரி..." என ஆத்மிகா கூறவும்,

"யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? நான் நினைச்சா உன்ன வேலைய விட்டே தூக்க முடியும்... முதல்ல என் பையன அரெஸ்ட் பண்ண வாரன்ட் இருக்கா?" என்றார் குமரன் திமிராக.

"நான் எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்... நீ தான் போலீஸ் கிட்ட பேசுறன்னு தெரியாம பேசிட்டு இருக்க... நான் மட்டும் வாய திறந்தன்னு வை... உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும் பார்த்துக்க... அப்புறம் என்ன கேட்ட? வாரன்ட் டா?" என கிண்டல் தொனியில் கூறிய ஆத்மிகா, "அபிஷேக்..." எனக் குரல் கொடுக்கவும் அவளின் கையில் ஒரு கவரைக் கொடுத்தான் அபிஷேக்.

அதனைப் பிரித்து குமரனுக்கு காட்டிய ஆத்மிகா, "எல்லாம் தரவா ப்ளேன் பண்ணி தான் வந்திருக்கோம்... மரியாதையா உன் பையனுக்கு இன்வஸ்டிகேஷன்ல காப்பரேட் பண்ண சொல்லு... இல்ல கைல விலங்கு மாட்டி முட்டிக்கு முட்டி தட்டி அத்தனை பேரும் பார்க்கும் விதமா நடுரோட்டுல தர தரன்னு இழுத்துட்டு போக வேண்டி வரும்..." என்றவளின் பேச்சிலே புரிந்தது அவள் சொல்வதை செய்து காட்டுபவள் என்று.

ஆத்மிகாவின் பேச்சில் கோபத்தில் பல்லைக் கடித்த குமரன் சில நொடிகளில் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, "அப்போ என் கம்ப்ளைனையும் எழுதிக்கோங்க ஏ.சி.பி மேடம்... என் பையன ஒரு வாரமா காணோம்... இதுவரைக்கும் எந்தத் தகவலும் இல்ல... எனக்கு சீ.எம் மேலயும் போலீஸ் டிப்பார்ட்மென்ட் மேலயும் தான் சந்தேகமா இருக்கு... பொய்யான சாட்சிகளை வெச்சி என் பையனை நீங்க தான் ஏதோ பண்ணிட்டீங்க..." என்றார்.

"போலீஸ் காதுலயே பூ சுத்த பார்க்குறீங்களா?" எனக் கோபமாகக் கேட்ட ஆத்மிகா, "சர்ச்..." என்றாள் சத்தமாக.

உடனே வந்திருந்த மொத்த காவல் படையும் குமரனின் வீட்டை சோதனை செய்ய ஆரம்பித்தது.

ஆனால் எங்கு தேடியுமே குமரனின் மகன் கௌஷிக் கிடைக்கவில்லை.

"நோ மேம்... எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டேன்... ஹீ எஸ்கேப்ட்..." என்றான் அபிஷேக்.

அதனைக் கேட்டு குமரனின் முகத்தில் இகழ்ச்சி நகை ஓடியது.

கோபத்தில் பல்லைக் கடித்த ஆத்மிகா குமரனிடம் திரும்பி, "உன் பையன் இந்தத் தடவை தப்பிச்சிட்டான்னு சந்தோஷப்படாதே... அவன் என் கண்ணுல மாட்டுற அன்னைக்கு கண்டிப்பா என்கவுன்டர் தான்..." என மிரட்டி விட்டு கிளம்பினாள்.

வண்டியில் செல்லும் போது கூட ஆத்மிகாவிற்கு கோபம் குறையவில்லை.

"அபிஷேக்... நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது... அந்தக் கௌஷிக் எங்க இருக்கான்னு கண்டு பிடிங்க... அவன் டெய்லி என்ன பண்ணுறான்? எங்க போறான்? யாரை எல்லாம் சந்திச்சி இருக்கான்? சுந்தர் கொலை நடந்தப்போ எங்க இருந்தான்? எல்லா டீட்டெய்ல்ஸும் எனக்கு இமீடியட்டா வேணும்... குமரன் மொபைல ஹேக் பண்ணுங்க... அந்த ஆள் மேலயும் ஒரு கண்ணு இருக்கட்டும்..." என உத்தரவிட்டாள் ஆத்மிகா.

###############

மறுநாள் காலையில் ஆத்மிகாவைத் தேடி வந்தான் தன்விக்.

அவனைப் பார்த்து போலிப் புன்னகையை உதிர்த்த ஆத்மிகா, "என்ன வக்கீல் சார்? என்னை எல்லாம் பார்க்க வந்திருக்கீங்க நீங்க... எவ்வளவு பெரிய வக்கீல் நீங்க..." என்றாள் கேலியாக.

ஆனால் தன்விக்கோ ஆத்மிகாவிற்கு பதிலளிக்காது அவள் முன் ஒரு கவரைத் தூக்கிப் போட்டான்.

அதனைப் பிரித்து படித்தவளின் கண்களில் இருந்து கோபத் தீ பறந்தது.

ஆத்மிகா தன்விக்கை முறைத்தவாறு, "என்ன இது?" எனக் கேட்டாள் கோபமாக.

"இது கூட தெரியாம தான் ஏ.சி.பி ஆகினீங்களா மேடம்?" என நக்கல் குரலில் கேட்ட தன்விக், "பெய்ல் லெட்டர்... என் கட்சிக்காரர் கௌஷிக்குக்கு முன்ஜாமீன் கிடைச்ச கோர்ட் ஆர்டர்..." என்றான் திமிருடன்.

தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு வேகமாக எழுந்த ஆத்மிகா, "நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரிஞ்சு தான் பண்ணுறியா? ஒரு கொலைகாரனுக்கு முன்ஜாமீன் வாங்க வந்திருக்க... குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தான் நீ சட்டம் படிச்சியா?" எனக் கேட்டாள் கோபமாக.

"ஏய்.." எனக் கத்திய தன்விக், "நான் என்ன செய்யணும்னு சொல்ற உரிமை உனக்கு இல்ல... என் கட்சிக்காரர் தான் குற்றவாளின்னு ப்ரூஃப் ஆகாம அவர் மேல தகாத வார்த்தைகள் பிரயோகிச்சா சட்டப்படி உங்க மேல வழக்கு பதிவு செய்யலாம்..." என்க,

"ம****** வழக்கு... எனக்கு எதிரா நடக்கணும்னு சொல்லி அநாவசியமா ஒரு கொலைகாரனை தப்பிக்க வைக்க ட்ரை பண்ணாதே... உனக்கு அவன பத்தி இன்னும் சரியா தெரியல..." என்றாள் ஆத்மிகா.

தன்விக், "நான் ஒன்னும் நீ தூக்கிப் போடுற பிஸ்கட்டை சாப்பிடுற நாய்க்குட்டி இல்ல உன் இஷ்டத்துக்கு மரியாதை இல்லாம பேச... ஐம் அன் அட்வகேட்... அந்த மரியாதைய கொடுத்தா நல்லது... இல்ல நானும் ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன்..." என்றான் பதிலுக்கு கோபமாக.

பெருமூச்சை வெளி விட்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்ட ஆத்மிகா வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், "அந்த கௌஷிக்க வெளிய விட்டா ஆபத்து சார்... புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க..." என்றவளுக்கு தன் கோபத்தை அடக்குவது பெரும் சவாலாக இருந்தது.

அதை அவளின் முகமே எடுத்துக் காட்டியது.

அதனைக் கண்டு தன்விக்கிற்கு உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

"முதல்ல கௌஷிக் தான் சுந்தரைக் கொலை பண்ணான்னு ப்ரூவ் பண்ணுங்க மேடம்... அப்புறம் அவரை அரெஸ்ட் பண்ண முடியும்... அதுக்கு முன்னாடி கௌஷிக்கிற்கு ஏதாவது ஆபத்து வந்தா அதுக்கு நீங்க தான் காரணம்னு அவங்க அப்பா கம்ப்ளைன் தந்து இருக்கார்..." என்ற தன்விக் இன்னொரு கவரை எடுத்து அவள் முன் போட்டான்.

ஆத்மிகா கைகளை அழுத்த மூடி தன் ஆத்திரத்தை அடக்க முயன்றாள்.

தன்னை எதுவும் செய்ய இயலாத நிலைக்கு தள்ளியவன் மீது ஆத்மிகாவிற்கு ஏற்கனவே இருந்த வெறுப்பு பல மடங்கு அதிகரித்தது.

###############

"மேடம்... நீங்க கேட்ட டீட்டைல்ஸ்..." என ஒரு ஃபைலை ஆத்மிகாவிடம் வழங்கிய அபிஷேக், "மேடம்... எனக்கு என்னவோ நாங்க எதையோ மிஸ் பண்ணுறோம்னு தோணுது... கொலையாளி கௌஷிக் மூலமா நம்மள திசை திருப்ப பார்க்குறான்னு நினைக்கிறேன்... கிட்டத்தட்ட ரெண்டு மாசமா கௌஷிக் அவனோட வீட்டுக்கு வந்ததே இல்ல... அவன் வீட்டுல வேலை செய்ற ஒருத்தன் மூலமா தான் இதை தெரிஞ்சிக்கிட்டேன்... எக்ஸ் சீ.எம் ஒரு வாரமா கௌஷிக்க காணம்னு சொன்னார்ல... அதுக்கு முன்னாடி நாள் வர வீட்டுல இருக்குறவங்க கூட கௌஷிக் பேசி இருக்கான்... அப்புறம் அவன் நம்பர்ல இருந்து எந்தக் காலும் வந்தது இல்ல... அவன் வீட்டுல இருந்த எல்லாரோட கால்ஸையும் ட்ரேஸ் பண்ணி இருக்கோம்... இதுவரைக்கும் சந்தேகப்படும் படியா எந்தக் காலும் வரல... சுந்தர் கொலை நடந்த அன்னைக்கே தான் கௌஷிக்கும் காணாம போய் இருக்கான்... ஆனா இதுல பிரச்சினை என்னன்னா ரெண்டு மாசமா கௌஷிக் எங்க இருந்தான்னு தேடினதுல கோயம்புத்தூர்ல ஒரு பொண்ணு கூட தங்கி இருந்தது தெரிய வந்திருக்கு... அந்தப் பொண்ணும் கௌஷிக்கும் லவ்வர்ஸ்... சுந்தர் கொலை நடந்தது சென்னைல... ஆனா அந்த நேரம் கௌஷிக் கோயம்புத்தூர்ல தன் லவ்வர் கூட ஷாப்பிங் பண்ணிட்டு இருந்து இருக்கான்... அதுக்கான எல்லா ஆதாரமும் இருக்கு..." என்றான்.

மறுப்பாகத் தலையசைத்த ஆத்மிகா, "இல்ல... ஒரு வாரமா அவன காணம்னா ஏன் யாருமே கம்ப்ளைன் தரல? அப்போ ஏதோ ஒரு வழில அவன் தன்னோட வீட்டை கான்டேக்ட் பண்ணிட்டு தான் இருப்பான்... இப்போ தான் அதுக்கு பல வழிகள் இருக்கே... இன்னும் டீப்பா கண்காணிங்க... நீங்க சொன்னது போலவும் இருக்கலாம்... அதனால ஆரம்பத்துல இருந்து இந்த கேஸை விசாரிக்கணும்..." என்றாள்.

அப்போது ஆத்மிகாவிற்கு ஒரு அழைப்பு வர, மறு முனையில் கூறப்பட்ட செய்தியில் ஏகத்துக்கும் அதிர்ந்தாள் ஆத்மிகா.

###############

கருத்து திரி 👇🏻

 
Last edited:
Status
Not open for further replies.
Top