வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிறைநுதலே என்னில் தொலைவாயோ..!! - கதைத் திரி

அத்தியாயம் -17

மறுநாள் துவாவின் தாயார் வந்து விட... இருவரும் அவரின் நலன் விசாரித்து அவருடன் நேரம் செலவிட்டனர். வசுந்தராவும் மகன் மற்றும் மருமகள் இருவரிடையே இருக்கும் இணக்கத்தையும் நெருக்கத்தையும் கண்டு மகிழ்ந்து போனார். மாலை வரை அவருடன் இருந்து விட்டு இரவு கவிழும் நேரம் இருவரும் கிளம்பி விட்டனர். எப்பொழுதும் அவருக்கு துணையாக சந்தோஷை விட்டு தான் செல்வான் துவாரகேஷ். ஒரு பொழுதும் அவரை தனித்து விடவே மாட்டான். தாய் மீதான இவனின் இந்த எல்லையில்லா அன்பு தான் அதே போல் கனியின் மீதும் காதலை பொழிகிறதோ..! கனிக்கு இது மாதிரி கணவன் கிடைத்தது வரமே..!

இருவரும் ஊட்டியில் இருந்து கோயம்புத்தூர் வந்து பிறகு ஷிம்லா சென்றனர்.செல்லும் வழியில் ஓரளவுக்கு கனிஷ்கா கண்டுக் கொண்டாள்.

ஹோட்டலுக்கு செல்ல காரில் வந்துக் கொண்டு இருக்கும் போதே அவளுக்கு குளிர ஆரம்பிக்க, 'நல்ல வேளை ஸ்வெட்டர் எடுத்து வைத்தோம் இல்லனா இந்த குளிருக்கு அவ்வளவு தான்...' தன்னுடைய புத்திசாலி தனத்தை எண்ணி சந்தோசப்பட்டுக் கொண்டாள். (ரொம்ப சந்தோசப்படாத கனி உன் திருடன் அதை எடுத்து வீட்ல வைச்சுட்டு வந்துட்டான் உன் நிலைமை ஹா... ஹா…)

குளிருக்கு இதமாக தன்னவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் கனி. அந்த கேடியும் தான் நினைத்ததில் கொஞ்சம் நிறைவேறியது நினைத்து மகிழ்ந்து அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். இருவரும் ஒரு வழியாக ஹோட்டல் அறைக்கு வந்து தங்களின் பயண பொதிகளை எடுத்து வைத்து விட்டு... பிரெஷ் ஆகி காலை உணவை உண்டு விட்டு களைப்பு தீர்வதற்கு உறங்கினர். நல்ல உறக்கத்தில் இருந்த கனிக்கு குளிரவும் எழுந்தவள் சஸ்வெட்டர் அணிய செல்ல பார்க்க... தன் கை வளைவில் உறங்கிக் கொண்டு இருந்தவள் எழும்பவும்... துவாவும் உறக்கம் கலைந்து எழுந்து,

"என்ன டி, எழுந்துட்ட... என்னாச்சு இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு டி டையர்ட் இருக்குமே..!" என்று சொல்ல...

"இல்ல மாமூ, ரொம்ப குளிருது இருங்க ஸ்வெட்டர் போட்டுட்டு வந்து தூங்குறேன்..." சொல்லிக்கொண்டே தேட... காணவில்லை அவளின் பையில், 'எங்க போய் இருக்கும்..? எடுத்து வைச்சேனே நல்லா ஞாபகம் இருக்கு' என்று நினைத்துக் கொண்டே அவனிடம் கேட்டாள் கனிஷ்கா.

"ஏன் டி, தேனிலவுக்கு வந்துட்டு யாராவது குளிருக்கு ஸ்வெட்டர் போடுவாங்களா..? மாமா நான் எதுக்குடி இருக்கேன். என்னை எடுத்து குளிருக்கு போத்திக்கோ..." என்றவாறே எழுந்து வந்து அவளை தூக்கி கொண்டு போய் மெத்தையில் போட்டான்.

"அடப்பாவி மாமூ..! என்ன பண்ணி இருக்கீங்க..." என்று அவனை கடிந்துக்கொண்டே அவனின் கை வளைவில் படுத்தவள், அவன் முகம் பார்த்துக்கொண்டே உறங்கி போனாள். அவனும் அவளுடன் சேர்ந்து உறங்கி போனான்.

இருவரும் அசந்து உறங்கிக் கொண்டு இருக்க... துவாவின் போன் இசைக்கவும்... உறக்கம் கலைந்து எழுந்தவன், 'யார்' என பார்க்க வசுந்தரா தான் அழைத்துக்கொண்டு இருந்தார். வந்த உடன் அவருக்கு போன் செய்யாத தன் மடத்தனத்தை எண்ணி தலையில் லேசாக அடித்துக் கொண்டவன், போனை அட்டென்ட் செய்தான்.

"சொல்லுங்க மா... சாரி மா, வந்த களைப்பில் தூங்கிட்டேன்."

"இருக்கட்டும் தம்பி பரவாயில்ல... பிராயண களைப்பு இருப்பது தானே. அதான் நானே போன் பண்ணிட்டேனே விடு பா. அங்கு எல்லாம் சரியா இருக்கா..? கனி எப்படி இருக்கா..? "

"எல்லாம் சரியா தான் இருக்கு மா. அவளும் நல்லா தான் இருக்கா. தூங்கிட்டு இருக்கா. நீங்க நல்லா இருக்கீங்களா சந்தோஷ் வந்துட்டான் தானே..!" என்று கேட்டான் துவாரகேஷ்.

"சந்தோஷ் வந்துட்டான் பா. இங்கு எல்லாம் சரியா தான் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் பத்திரமாக இருங்க. முதலில் போய் சாப்பிடுங்க பா மணியாச்சு..." என்று கூறி விட்டு வைத்து விட்டார்.

"சரிங்க மா..." என்று சொன்னவன் மணி பார்க்க அது மாலையை நெருங்கிக்கொண்டு இருந்தது. கனியை எழுப்ப அவள் எழும்பவே இல்லை. குளிருக்கு இதமாக வந்த களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எழுப்பி எழுப்பி பார்த்தவன் அவள் எழாத காரணத்தால் அவள் அருகே படுத்து, அவளின் இதழில் தன் இதழை புதைத்து ஆழமாக முத்தமிட... தன்னவனின் இந்த முத்த தாக்குதலில் மூச்சு திணறி எழுந்தாள் கனி.

அவள் எழுந்து அவனை முறைக்கவும், "மணி ரொம்ப ஆச்சு டி. பிரெஷ் ஆகிட்டு வா ஏதாவது குடிச்சிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிட போவோம்." என்று கூறினான்.

'சரி' என்று தலை அசைத்தவள், எழுந்து பிரெஷ் ஆகி வர துவா, அவர்களுக்கு குடிக்க ஆர்டர் செய்தான். அவள் பிரெஷ் ஆகி வரவும், "குடிக்க ஆர்டர் பண்ணி இருக்கேன் டி. வந்தா வாங்கு. நான் பிரெஷ் ஆகிட்டு வரேன்." என்று சொல்லிக்கொண்டே... பிரெஷ் ஆகி வந்ததால் புத்துணர்ச்சியாக இருந்த அவளின் முகம் பார்த்தவன், அருகே இழுத்து, அவளின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு, இதழ் நோக்கிச் செல்ல... அவனின் நோக்கம் புரிந்தவள், "போங்க மாமூ...போய் பிரெஷ் ஆகுங்க." என்று தள்ளி விட்டாள்.

அவளை பார்த்து முறைத்துக்கொண்டே, சென்று பிரெஷ் ஆகி வந்தவன், இருவருக்கும் சூடான பானம் வந்து இருக்க... அதை எடுத்து அருந்த ஆரம்பித்தார்கள். தேநீரை அருந்திக் கொண்டே அவளிடம் சிறு சிறு சில்மிஷம் செய்துக்கொண்டே இருந்தான். இருவரும் குடித்து முடித்த பின், அவளிடம் அனைவருக்கும் வந்து சேர்ந்து விட்டதை சொல்ல சொன்னான்.

அவளும் அதன்பின் அவன் சொன்னதை செய்துக் கொண்டு இருக்க... அவனும் தனக்கு வந்த சில மெயில்களை பார்த்தவன், சந்தோஷ் அனுப்பிய மெசேஜ்க்கு எல்லாம் ரிப்ளை செய்து விட்டு பார்க்க... கனிஷ்கா இன்னும் பேசிக்கொண்டு இருந்தாள். அவளின் தோழிகள் அவளை ஓட்டிக்கொண்டு இருந்தனர்.

"கனி, சாப்பிட போலாமா டைம் ஆச்சு..?" இவன் குரல் கொடுக்க... தோழிகளிடம் சொல்லி விட்டு போனை கட் செய்தவள், அவனிடம் வந்தாள்.

அவள் வரவும், தோள் மீது கை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், சாப்பிட அழைத்துச் சென்று உணவு மேஜையில் அமர வைத்தான்.

"நீ ஆர்டர் பண்ணு டி. நான் இதோ வந்துடறேன்." என்று கூறி விட்டு அவள் எதுவும் கேட்கும் முன் சென்று விட்டான்.

கனிஷ்கா உணவை ஆர்டர் செய்து கொண்டு இருக்க... துவாரகேஷ் ரிசப்ஷனில் சென்று ஏதோ கூறி விட்டு வந்தான்.

அவன் வந்து அமரவும், "என்ன மாமூ, எங்க போனீங்க..?" என்று கனி கேட்க, "ஒண்ணும் இல்ல டி சும்மா தான்." என்று துவா கூறிக் கொண்டு இருக்கும் போதே ஆர்டர் செய்த உணவு வகைகள் வந்து சேர... இருவரும் உண்ண ஆரம்பித்தனர்.

துவாரகேஷ் தன் வழக்கம் போல் தன் முதல் வாய் உணவை கனிக்கு கொடுக்க அவளிடம் நீட்ட, அவளோ பொது இடம் என்று வாங்க மறுத்து விட்டாள். அவன் எப்பொழுதும் அப்படித்தான் தங்களின் தனிமை பொழுதுகளில் முதல் வாய் உணவை தன்னவளுக்கு கொடுத்து விட்டு தான் உண்ணுவான். அவ்வாறே இப்பொழுதும் கொடுக்க அவள் மறுக்கவும், இவன் லேசாக முறைக்கவே, வாங்கிக் கொண்டாள்.

"சரியான அடம்... நினைத்ததை சாதித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்." தன்னவனை செல்லமாக திட்டிக் கொண்டே உண்ண ஆரம்பித்தாள். இருவரும் உண்டு முடிக்க... துவா கிளம்ப அவசரம் காட்டவில்லை. அவளிடம் பேசிக்கொண்டு இருக்க... அவள் கேள்வியாக அவன் முகம் நோக்கினாலும் கண்டும் காணாதவாறு இருந்துக்கொண்டான். இருவரும் பேசிக்கொண்டு இருக்க... ரிசப்ஷனில் இருந்து சிக்னல் வரவே அதன் பின்பே கிளம்பினான்.

இருவரும் அறைக்கு வர... அது வரை பேசிக்கொண்டு இருந்த கனிக்கு அறை பக்கத்தில் நெருங்கவே ஏதோ இனம் புரியாத படபடப்பும், அவஸ்த்தையும், தவிப்பும் ஒருங்கே தோன்ற, துவா அறையை திறந்து முதலில் உள்ளேச் செல்ல... இவளும் பின்னோடு செல்ல... அறை இருட்டாக இருந்தது. இவனையும் காணாமல், "என்னங்க எங்க இருக்கீங்க..? எனக்கு பயமா இருக்கு." என்று சொல்ல...

அறையின் விளக்குகள் போடப்பட்டு வெளிச்சமாக, "ஹேய் கனி, இங்க தான் டி இருக்கேன்." என்று துவா கூறவும்... கண்ணை மூடிக் கொண்டு இருந்தவள், தன்னவன் குரல் கேட்டு கண்களை திறந்து பார்த்தவள், துவா தன் முன்னே இருக்கவும் ஓடிச் சென்று இறுக அணைத்துக் கொண்டாள்.

கனி வந்து அணைக்கவும், அவள் பயந்து விட்டாள் என்று உணர்ந்து, அவளை அணைத்து அவளின் முதுகை தடவி ஆசுவாசப் படுத்தினான். துவாவின் தடவலில் பயம் விலகியவள், அவனிடம் இருந்து சற்றே விலகி நிமிர்ந்து தங்கள் அறையைப் பார்த்தவளின் கண்கள் திகைப்பில் விரிந்துக் கொண்டது.

அவளின் அந்த திகைப்புக்கு காரணம், அறை முழுவதும் சிகப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. அவர்களின் படுக்கையில் இதய வடிவில் ரோஜாக்கள் போடப்பட்டு இருந்தது. காதலின் சின்னமான சிகப்பு நிற பலூன் அறை முழுவதும் இருந்தது. ஏற்கனவே தவிப்பும் படப்படப்புமாய் இருந்தவளுக்கு இதை எல்லாம் பார்த்து தாபமும், மோகமும், காதலும், பெருக்கெடுத்து ஓட... தன்னவனை பார்த்தவள், அவன் முகத்தில் கண்ட ஆசை மற்றும் வேட்கையில் ஓடிச் சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.

துவாவும் தன்னை வந்து அணைத்தவளை, காற்று கூட புகாதவாறு இறுக்கிக்கொண்டு அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டான். தன்னவனின் முத்த தாக்குதலை அனுபவித்துக் கொண்டு இருந்தவள், அவன் தீடீரென தன்னை விலக்கவும், கேள்வியாக அவனை நோக்க... கனி அறையை சுற்றி பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தன் பேகில் இருந்து கனிக்கு கொண்டு வந்த ஒரு பரிசை கையில் எடுத்துக் கொண்டு இன்னொன்றை கட்டிலில் மறைத்து வைத்து விட்டான்.

கனிஷ்கா அவனை பார்க்கவும், அவளிடம் அதை கொடுக்க... தன்னவனின் முதல் பரிசை ஆசையாக வாங்கி பிரித்து பார்த்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

ஆம்..! துவா கனிக்கு வாங்கி கொடுத்து இருந்தது. அவளின் தோழிகள் வாங்கியது மாதிரியே மேக்ஸி அவர்கள் வாங்கியதை விட இவனின் பரிசு இன்னும் படு கவர்ச்சியாக இருந்தது. கனிக்கு இவற்றை பார்த்த உடனே வெட்கமும், கூச்சமும், நாணமும் வந்தது.

அதில் இருந்து சிகப்பு நிற மேக்ஸி எடுத்து அவளிடம் கொடுத்தவன், அதை அணிந்து வர சொல்ல... அவளும் தயக்கத்துடனே அதை வாங்கிக்கொண்டு குளியலறைக்குச் செல்ல பார்க்க... அவளை தடுத்து இங்கேயே அணியச் சொல்ல... மறுத்து விட்டுச் சென்றாள்.

அவள் அணிந்து வர செல்ல... துவாவும் இரவு உடைக்கு மாறி, அவளுக்காக காத்திருக்க, அவள் வரவும் நிமிர்ந்து பார்த்தவன், அவளின் எழில் கோலம் கண்டு எழுந்து நின்று விட்டான். அவளுக்கு நன்றாக இருக்கும் என்று தான் வாங்கி இருந்தான். அவன் நினைத்ததை விடவே இன்னும் கவர்ச்சியாக இருக்கவே...அவள் கூச்ச மிகுதியில் நிமிரவே இல்லை. அவள் நிமிராத காரணத்தால் இவனே சென்று அவளை இன்னும் அருகில் பார்க்க... பார்த்தவன் பொறுக்க முடியாமல் இறுக அணைத்துக்கொண்டான்.

தன்னவனின் அணைப்பில் அடங்கி நின்றவள், அவன் தீடீரென தூக்கவும், பதறி அவனின் கழுத்தில் தன் கைகளை கோர்த்துக் கொண்டாள். அவளை படுக்கையில் கொண்டு வந்து இறக்கி விட்டவன், அவள் அருகே அமர்ந்து அவள் முகம் நிமிர்த்தி அவளின் கன்னங்களை தாங்கி முத்தமிட பார்க்க... அவனின் விழியில் இருந்த வேட்கையில் முகம் பார்க்க முடியாமல் திரும்ப... அப்பொழுது அவனின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை பார்த்தவள், அதன்பின்பே ஞாபகம் வந்து அவனிடம் இருந்து விலகிச் செல்ல பார்க்க... இவன் விடவில்லை... கண்ணாலே அவனிடம் கெஞ்சி அனுமதி வாங்கியவள், தன் பெட்டியில் இருந்து அவனின் கை செயினை எடுத்து வந்து, அவன் அணிந்து இருப்பதை அவிழ்த்து விட்டு, தங்களின் முதல் சந்திப்பின் போது அவன் விட்டுச் சென்ற கை செயினை அவனுக்கு அணுவித்து விட்டு, அவன் முகம் பார்த்து,

"மாமூ, உங்களுக்கு நம் முதல் சந்திப்பு நினைவில் இல்லை. ஆனால் எனக்கு உங்களின் முகம் தான் நினைவில் இல்லை. உங்களின் ஸ்பரிசமும், உங்களின் இந்த செயினும் தான் என்னிடம் இருந்தது. என் மனதை எடுத்துக் கொண்டு உங்களோட பொருளை எனக்காக விட்டுச் சென்று உள்ளீர்கள் போல..! அன்றிலிருந்து உங்களை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். முகம் தெரியாத உங்களை நேசிப்பது சரியா தவறா என்று எல்லாம் தெரியவில்லை. என் தோழிகள் கூட திட்டினார்கள். ஆனாலும் உங்களையும் உங்களின் ஸ்பரிசத்தையும் நினைத்துக் கொண்டே தான் இருந்தேன். கடவுளுக்கு என் மீது ஏதோ கருணை இருந்து இருக்கும் போல... என் தேடலை உங்களை அவராகவே என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டார். வருவீங்களா..? இல்லையா..? சேருவோமா..? இல்லையானு தெரியாமல் நரகம் மாமூ அந்த நாட்கள்... என்னை ரொம்பவும் தவிக்க விடாமல் என் உயிரை என் பொக்கிஷத்தை நான் அடைந்து விட்டேன். எதிர் பாராத நேரத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நுழைந்து இன்று என் வாழ்க்கையாகவே மாறிட்டீங்க..! ஐ லவ் யூ மாமூ..." என்று தன் ஒட்டு மொத்த காதலையும் தவிப்பையும் அவனிடம் இறக்கி வைத்தாள்.

தன்னவனிடம் காதலை சொல்லி விட்டு, "உங்களுக்கு என் நினைவு இல்லனாலும் பரவாயில்ல இப்போ உங்களுக்கு என் மீது காதல் இல்லனாலும் இனி வரும் காலத்தில் என்னை விரும்புவீங்க. அது வரைக்கும் உங்களுக்கும் சேர்த்து நானே உங்களை விரும்புறேன்..." என்று கூறி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவளின் காதலில் திகைத்து சிலையாக அமர்ந்து விட்டான் துவாரகேஷ். தன்னவளுக்குள் இவ்வளவு காதலும் வலியும் இருந்ததா..! முதலில் கஷ்டமாக இருந்தாலும் தன்னை போலவே அவளும் தன் மீது கொண்டு இருக்கும் உயிர் காதலை நினைத்து சிலிர்த்துக் கொண்டவன், அவளின் கண்ணீர் தன் மீது விழவும், சுயநினைவுக்கு வந்து, அவள் முகம் பார்க்க அவள் அழுதுக் கொண்டு இருப்பதை பார்த்து அவளின் அழுகையை நிறுத்த பார்க்க முடியவில்லை. இவ்வளவு நாள் அவளுக்குள் இருந்த தவிப்பும், ஏக்கமும் கண்ணீராக வெளியேறிக் கொண்டு இருந்தன...

கனியின் அழுகை நிற்பது போல் தெரியவில்லை. எனவே அவளின் முகம் நிமிர்த்தி அவளின் இதழில் தன் இதழ் புதைக்க... அவளின் அழுகை நின்று அவளின் காதல் வெளிவந்தது. அவளும் அவனுக்கு ஈடு கொடுத்து முத்தமிட... தன்னவளின் சரணடைதலில் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவளை படுக்கையில் விட்டு, அவள் மேல் படர்ந்தவன், அவனுக்கு இடையூறாக இருந்த இருவரின் ஆடையையும் களைந்து விட்டு அவளின் நெற்றியில் ஆரம்பித்து அவளின் மேனி முழுவதும் தன் இதழ்களையும், விரல்களையும் விளையாட விட்டான். அதுவும் அவனின் விருப்ப இடமான அவளின் இடையிலும், மச்சத்திலும் அவனின் இதழ்களும் சற்று அதிகமாகவே அத்து மீறிக் கொண்டு இருந்தன. அவன் செய்யும் சில்மிஷத்தில் கனியின் உணர்வுகளும் வெடித்து கிளம்ப, அதுவும் அவன் மீசை செய்யும் மாயத்தில் அவளின் அவஸ்தை பெருகிக்கொண்டே செல்ல... தன்னவனின் முடியை பற்றி மேலே இழுத்தவள், அவனின் இதழில் தன் இதழை புதைத்து, உணர்வு மிகுதியால் கடித்தும் வைத்தாள்.

அவளின் செல்ல காயத்தால் உண்டான சிலிர்ப்பை அவளிடமே காட்ட நினைத்து அவளின் மேனியில் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்டியவன், அவளை முழுவதும் கொள்ளை கொண்டு விட்டே விலகினான். அவன் விலகியது தெரியாமல் அந்த சுக நிமிடங்களை நினைத்துக் கொண்டே சுக அயர்வில் கண் மூடி இருந்தவள், தன் இடையில் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் என்னவென்று பார்த்தவள் ஸ்தம்பித்தாள்.

அவனை கண்ட அன்று காணாமல் போன அவளின் ஹிப் செயின் தான் அது... அவனின் நினைவாலும், அது சிறியதாக இருந்ததாலும் தங்கம் இல்லாமல் சாதாரண டிசைனர் செயின் தான் அதனால் எங்காவது கழண்டு விழுந்து இருக்கும் என்று அதை அவள் தேடவே இல்லை... அது இப்பொழுது தன்னவன் கைகளில்...

அதுவும் இப்பொழுது அவள் மேனியில் அது மட்டுமே ஆடையாக இருந்தது..!

சில நிமிடம் கழித்தே தன் நிலைமை உணர்ந்தவள் போர்வையை எடுக்க பார்க்க, இந்த கள்வன் அவளை தடுக்க... போர்வை இல்லையென்றால் என்ன..! தனக்கு போர்வையாக அவனை எடுத்து அணைத்துக் கொண்டாள்.

அவளின் அணைப்பில் அடங்கியவன், இருவருக்கும் சேர்த்தே போர்வையை போர்த்தியவன், கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தன்னவளையும் தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.

கனி ஆசையாகவும் கேள்வியாகவும் அவன் முகம் பார்த்து, "என்ன மாமூ, இதெல்லாம்…!" என்று கேட்க...

துவா, "நானும் உன்னை விரும்பினேன் டி, முதன் முதலில் மரத்தில் நீ சிறுவர்களுடன் மாங்காய் பறித்துக் கொண்டு இருந்ததிலிருந்து காபி கொடுத்து சென்றது, என் கையில் வந்து விழுந்தது வரை என் நெஞ்சில் சுமந்துக் கொண்டு உன்னை தேடியும் பிடித்து கண்டும் பிடித்து விட்டேன். அம்மாவிடம் சொல்ல தயங்கிக் கொண்டு இருந்தேன். நீ சொன்ன மாதிரி இது கடவுளின் எண்ணம் போல... என் அம்மா பார்த்த பெண்ணே நீயாக தான் இருந்த... என் மனதில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி... ரொம்ப ஆசையாக உன்னை பெண் பார்க்க வந்தேன். நீயோ வேறு ஒருவனை விரும்புவதாக சொல்லவும் அவ்வளவு வலி… மறைத்துக் கொண்டு தான் உன்னிடம் கேட்டேன் அது யார் என்று... நீ என்னையே சொல்லவும்... வானளவு சந்தோசம் எனக்கு வார்த்தையால் விவரிக்க முடியல டி. சரி கொஞ்சம் உன்னை சுத்தலில் விட்டு, உன்னோட காதலை அனுபவிக்க முடிவு செய்து சிறிது விளையாட ஆசைப்பட்டேன். அதான் டி இதெல்லாம்..." என்று அவன் கூறி முடிக்கவும்...

அது வரை அவன் சொன்னதை அவன் மார்பில் சாய்ந்து கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி... தன்னவனும் தன்னை போலவே தன்னை விரும்பி தன்னை தேடி வந்ததில்..!

கடைசியில் அவன் சொன்ன உன்னை சுத்தலில் விட்டேன் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல்... தலையணை எடுத்து அவனை மொத்த ஆரம்பித்து விட்டாள்.

கனியின் அடிகளை வாங்கிக் கொண்டு இருந்தவன், அவள் நிறுத்தாமல் அடித்துக் கொண்டே இருக்கவும், "ஹேய் ஃப்ரூட்டி போதும் டி..." என்று அவளை அடக்கினான்.

அவள் கோபமாக அவனை முறைத்து கொண்டே, "என்னை எப்படி எல்லாம் வைத்து விளையாடி இருக்கீங்க... நானும் அப்போ அப்போ உங்களின் இந்த செல்ல அழைப்பையும், கண்களில் தெரியும் காதலை வைத்தும் உங்களுக்கு நினைவு வந்து விட்டதா நினைச்சுப்பேன். ஆசையா உங்க முகம் பார்த்தால் அப்படி ஒன்னு நடக்காத மாதிரியே இருப்பீங்க. சரி இது நம்ம ஆசை கொண்ட மனதின் கற்பனையோனு மனசை தேத்திப்பேன். ஆனால் நீ என்ன டா பண்ணி வைச்சு இருக்க...!" என்று கொஞ்சம் கோபமாக தான் கேட்டாள்.

"என்ன டி மரியாதை எல்லாம் தேயுது..." என்று அவன் கேட்க...

"நீ செய்ததுக்கு உனக்கு மரியாதை வேற கொடுக்கணுமா டா ராஸ்கல்..." அவனை திட்டிக் கொண்டே அவன் மீது விழுந்து அவனின் முகம் முழுவதும் முத்தமிட்டாள். சொல் ஒன்று செயல் வேறாக இருந்தது அவளோடது...

அவன் முகம் முழுவதும் முத்தமிட்டவள், அவனின் காதல் தெரிய வந்ததால் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவன் இவ்வளவு நாள் இவளுக்கு கற்று தந்ததை எல்லாம் திருப்பி அவனுக்கு கொடுத்தாள்.

தன்னவளின் செயலால் உள்ளுக்குள் எழுந்த உவகையும், உல்லாசத்தையும் அனுபவித்துக் கொண்டே, அவளுக்கு முழுவதுமாக ஒப்புக் கொடுத்து அவளிடம் சரணடைந்தான்.

கனிஷ்கா தன் காதலை செயலில் காட்டிய பின், மூச்சு வாங்க அவன் மார்பில் படுத்து இளைப்பாறினாள். இருவரும் தங்கள் மனதை வெளிப்படுத்திய பின் நடந்த இந்த இணைவு இருவருக்கும் அவ்வளவு திருப்தியும், மனதின் ஆழம் வரையும் சென்று தித்தித்தது.

கனிஷ்கா தன் நெஞ்சில் படுத்து இளைப்பாறவும், சிறிது நேரம் கழித்து, அவளின் முகம் நிமிர்த்தியவன், தன்னவளின் கண்களில் தெரிந்த கரை காணாத காதலில் விரும்பியே தொலைந்தவன், கனியின் பிறைநுதலில் முத்தமிட்டு,

"ஐ லவ் யூ டி ஃப்ரூட்டி..." என்று கூறி அவளை அணைத்துக்கொண்டான்.

துவாரகேஷின்ன் பிறைநிலா அவனுள்ளே தொலைந்து கனியமுதமாகியதே..!

இன்று போல் என்றும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி விடைபெறுவோம்..!

நன்றி..!
 

santhinagaraj

Well-known member
ரெண்டு பேரோட காதலும் அருமை 👌👌👌செம்ம ஸ்டோரி ரோமன்ஸ் அள்ளுது 💞💞💞
 
Top