Priyanka Muthukumar
Administrator
இலக்கணம் 7:
சீரழிந்த கோலத்தின் வர்ணங்கள் மீண்டும் சீர் திருத்தப்பட்டு அழகானது போல் விஜய்யின் வருகை அவளது வாழ்வில் வண்ணத்தை கொண்டு வரத்தொடங்கியது.
ரணமாய் இருந்த மனங்களின் காயத்தை ஆற்றும் அரும் மருந்தாய் அவனது கள்ளமில்லா புன்னகை அமைந்தது.
ஆனால் தன்னுள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணராத பேதையவளின் உள்ளமோ கடந்த கால சுவடுகள் கொடுத்த வலியால் மீண்டும் ஒரு புது உறவை ஏற்க அஞ்சி மருகியது.
அதன்பொருட்டு இந்த சிறு மன பிசகு கூட,அந்த நாளில் அவனை சற்று அதிகப்படியாக பேசியதால் வந்த இரக்கம் என்றே தன்னை தானே சமாளித்து பழைய விறைப்புடனே சுற்றித்திரிய வைத்தது.
சலனத்தை விதைத்தவனை தன்னிடமிருந்து விலக்கி வைக்கும் விதமாக அவனிடம் பழைய திமிருடனே நடந்துக்கொள்ள ஆரம்பித்தாள்.
அடுத்த நாளிலிருந்து அவள் விஜய்யை பார்க்கும் வேளையெங்கும் அவனை முறைத்துக்கொண்டே இருந்தாள்.
அவனோ ‘இவங்க எதுக்கு இப்போ முகத்தில் சுடுத்தண்ணீய ஊத்தின மாதிரி விறைப்பா பார்க்கறாங்க?அடேய் விஜய்…நீ என்னத்தடா பண்ணி தொலைச்ச?’ என உள்ளுக்குள் புலம்பி அவளை விழி பிதுங்கி பார்த்தான்.
அவனில்லாத பொழுதுகளில் சாதாரணமாக இருப்பவள்,அவனை தப்பி தவறி கண் முன்னால் கண்டுவிட்டால் சிடுசிடுக்க தொடங்கிவிடுவாள்.
‘அப்போ கேஸு உன் மேல் தான்டா விஜய்…கன்பார்ம்’ என தன் மீதான ஏதோவொரு கோபம் அவளை இவ்வாறு நடக்க வைக்கிறது என்பதை யூகித்தவன் ‘முடியல’ என ஆதங்க பெருமூச்சை வெளியேற்றினான்.
நேற்று அவளின் அனுமதியின்றி அவன் தீண்டிய கரங்களின் ஸ்பரிசத்தால் அவளுக்குள் பல்வேறு உணர்ச்சி பிரவேகங்கள்!!
அத்தோடு ஒவ்வொரு முறையும் அவனது பேச்சும் சிரிப்பும் அவளை பாதித்துக்கொண்டே இருந்தன.
அவனை பார்த்து ஒரு நாளாகினும் தன்னை அவன் பார்க்கும் பார்வையில் ஒரு உரிமையும்,அதையும் தாண்டி அவனது கண்களில் உருவமில்லா ஒரு உணர்வும் தென்படுவதை அவளால் அறிய முடிந்தது.
அந்த விம்பமில்லாத உணர்வின் பெயர் அவள் அறியாவிடிலும்,அது அவளின் இதயத்திற்குள் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.
அந்த பகுத்தறிய முடியாத உணர்ச்சிகளின் உச்சத்தில் அவள் தவித்து தடுமாறி நின்றிருக்கையில் அவளது கடந்த காலத்தின் துரோகம் முகத்திலறைய பட்டென்று சுதாரித்த பெண்ணவளிற்குள் அவனுள் உருகிய தன்னை நினைத்தே பெரும் கோபம் ஒன்று கிளர்ந்தெழுந்தது.
‘ஏற்கனவே ஒரு முறை பட்ட காயத்தின் வடுவே ஆறவில்லை…அதற்குள் அந்த காயத்தை ரணமாக்க முனைக்கிறீயா?’ என அவளின் மனசாட்சியே காறி உமிழ்ந்தது.
இதற்கு மேலும் அவன் தன்னருகே இருந்தால் சரிவராது என்று திடமான முடிவெடுத்தவள்,விரைவில் இங்கிருந்து செல்வதற்கான சாத்தியங்களிற்கு முயல வேண்டும் என்று சிந்தித்து முடிவெடுத்தாள்.
அத்தோடு மகனின் நினைவை நெஞ்சில் இருத்தி வேறு எந்த விதமான எண்ணங்களும் எழக்கூடாது என்ற திரத்தோடு,அவனை தன்னிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டாள்.
அதன்படி,நேற்று மழையின் காரணமாக அவனை இல்லத்தினுள்ளே அனுமதித்தவளோ இன்று முதல் அவளிருந்த இடத்திற்கு அவன் வருவதற்கு தடை விதிக்க தொடங்கினாள்.
அன்று மாலை அவளோடு இல்லத்திற்குள் நுழைய முற்பட்டவனை வாசலோடு இடையிட்டு நிறுத்தி,வேண்டுமென்றே அவனை விரல் சொடக்கிட்டு அழைத்தாள்.
அவள் அவ்வாறு தன்னை அழைத்தது ஆண்மகனாகிய அவனிற்கு பெரும் அவமதிப்பாக இருந்தாலும்,அவனோ தன்னை அடக்கி சட்டையை இழுத்துவிட்டு ‘என்ன’ என்பது போல் அவளை ஏறிட,
ஒற்றை புருவம் உயர்த்தி “ஆமா மிஸ்டர் விஜய்…” என இழுத்தவள்,
கண்ணாலே உள்ளே சுட்டிக்காட்டி”நீங்க எங்க உள்ள வரீங்க?” என இதழை வளைத்து தெனாவட்டாக கேட்கவும்,
அவளின் முகத்தை உற்று நோக்கியவன் “மேடம் இது என்ன கேள்வி?நான் உங்ககூட தான ஸ்டே பண்ணியிருக்கேன்” என வெகு சாதாரணமாக விளக்கம் அளித்தவன் ‘இதெல்லாம் ஒரு கேள்வியா?’ என்பது போல் தாடையை நீவினான்.
அதில் “ஓ” என இதழை பிதுக்கிய பெண்ணவளோ ‘அது சரி’ என தலையசைத்து எகத்தாளமாக புன்னகைத்தாள்.
பின்பு தனக்கு முன்பே நின்றிருந்தவனை ஆழ்ந்து பார்த்தவாறு மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி “மிஸ்டர் விஜய்…நேத்து மழை வந்ததால் பாவம் பார்த்து உள்ள விட்டேன்…இன்னைக்கு தான் மழை வரலையே…சோ உங்களுக்கு பாவமெல்லாம் பார்க்கமுடியாது…முதல்ல நீங்க இங்கிருந்து கிளம்புங்க” என குரலில் ஏற்ற இறக்கத்துடன் தயவுத்தாட்சண்யம் சிறிதுமின்றி அவனை வெளியேற பணித்தாள் சமந்தா.
அதில் ஒட்டுமொத்தமாய் திகைத்தவன் “மேடம் இதெல்லாம் அநியாயம் அக்கிரமம்…நான் நேத்து உங்களை ஏதாவது தொந்தரவு பண்ணனா…நான் பாட்டுக்கு சிவனேனு ஒரு ஓரமா தான இருந்தேன்…அப்புறம் எதுக்கு என்னை போக சொல்லறீங்க?” என குரல் உயர்த்த,
அவளோ அதற்கெல்லாம் சிறிதும் அசராமல் “நான் முன்னாடி சொன்னது தான் இப்பவும் சொல்லறேன்…முன்ன பின்ன தெரியாத ஆளுங்களோடு என்னால் தங்கமுடியாது…சோ யூ ஷுட் ஸ்டே அவுட் சைடு” என்றாள் அழுத்தம்திருத்தமாக.
விஜயோ நெற்றியை நீவி “ஷப்பா முடியல” என வெளிப்படையாக புலம்பியவன் ‘இவங்களோட முடியலைடா சாமி’ என மானசீகமாக தலையில் கைவைத்தான்.
அத்தோடு மனதிற்குள் ‘நேத்து வான்னு சொல்லறாங்க இன்னைக்கு போன்னு சொல்லறாங்க…இவங்க நல்லவங்களா கெட்டவங்களா?’ என ஆற்றாமையோடு எண்ணியவன் அவளை ஏறிட்டு “இப்போ என்ன மேடம்?உங்களுக்கு என்னை பத்தி முன்ன பின்ன தெரியணும்…அவ்வளவு தான…சோ சிம்பிள்…தெரிய வைச்சிடுவோம்” என அசால்ட்டாக கூறியவன் “இதை பிடிங்க” என அவளின் கையில் வாகனத்தின் சாவியை திணித்தான்.
அவளோ இமைகள் இடுங்க ஒரு கணம் சாவியை நோக்கி விட்டு மீண்டும் தலையை உயர்த்தி ‘என்ன செய்யப்போறான் இவன்’ என்பது போல் அவனை ஆராய்ச்சியாய் பார்த்திருந்தாள்.
ஆடவனோ சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்து புஜங்களை மடக்கி கைசட்டையை முட்டிக்கு மேலே மடக்கிவிட்டான்.
‘இவன் என்ன லூசா?’ என அவள் எரிச்சலாக பார்த்திருக்கும் போதே,
களைந்த சிகையை பக்கவாட்டில் இருந்த கண்ணாடி சன்னலை பார்த்து அழுந்த வாரி சரிசெய்து இவளிடம் திரும்பியவன் “ரெடி” என்றான் கேள்வியாக.
‘என்ன ரெடி’ என அவள் இமைகள் இடுக்க குழப்பமாய் நோக்கும் போதே,
தன்னை மேலிருந்து கீழாக சுட்டிக்காட்டியவன் “நல்லா பார்த்துக்கோங்க மேடம்…இது முன்ன” என்றவன் அப்படியே முதுகுப்புறமாக திரும்பி நின்று “இது பின்ன…இதையும் நல்லா பார்த்துக்கோங்க மேடம்…அப்புறம் அது குறை இது குறைன்னு சொல்லக்கூடாது” என சிரியாமல் கூறிவிட்டு திரும்பியவனின் கண்ணோரம் குறும்பு சிரிப்பில் சுருங்கியிருந்தது.
அதுவரை அவனின் செயல்களை விழிகளில் கேள்வி தொக்கி நிற்க பார்த்திருந்த பெண்ணவளோ இறுதியில் அவன் உரைத்ததை கேட்டதற்கு பிறகே விஷயமறிந்தவளிற்கு ‘ஐய்யோ மொக்கை பீஸ்’ என வஞ்சியவளிற்கு உள்ளுக்குள் சினத்தை மீறி சிரிப்பாக வந்தாலும்,
வெளியே அவனை விழிகளால் சுட்டெரித்தவள் இதழ்கடித்து “என்ன இது விஜய்?” என நாசி விடைக்க சூடான குரலில் வினவினாள்.
அவனோ தீவிரமான முகப்பாவனையுடன் “ஒரு நாள் முழுசா என் கூடவே இருந்திருக்கீங்க…அப்பவும் என்னை முன்ன பின்ன பார்க்கலைனு ஃபீல் பண்ணிங்க…அதான் முன்ன பின்ன என்னைய காட்டினேன்” என்றவன்,
அவளின் முகத்தையே ஆழ்ந்து நோக்கி “முன்ன பின்ன எல்லாம் கரெக்ட்டா இருக்கா மேடம்?” என அவன் ஒரு மாதிரி குரலில் கேட்கவும்,
“என்ன” என அவளின் குரலில் காரம் ஏறியது.
அதில் சுதாரித்த விஜயோ ‘அடேய்…அடக்கிவாசி மவனே’ என சிகையை அழுந்தக்கோதி “இல்ல மேடம்…இப்போ தான் முன்ன பின்ன என்னைய பார்த்திட்டிங்களே இனிமேல் உங்களோடு தங்கலாமா?” என்றான் நமுட்டு சிரிப்போடு.
சமந்தாவோ அவனை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்து “முன்ன பின்ன பார்த்தும் எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கலை…அதனால் முதல்ல இடத்தை காலிப்பண்ணுங்க” என அழுத்தமான குரலில் கூறி சாவியை அவனிடம் தூக்கியெறிந்தாள்.
‘நீ விடாக்கண்டன் என்றால் நான் விடாக்கண்டி’ என அவனது வழியிலே சென்று அவனை மடக்கிவிட்டாள் நமது வித்தகி.
அவனோ அவள் எறிந்த சாவியை கப்பென்று தாவிப்பிடித்த வேளையில் கதவிடுக்கின் வழியே “நாளைக்கு எட்டு மணிக்கு நீங்க வந்தால் போதும்” என்றவளின் குரல் கேட்டு அவன் சுதாரிப்பதற்குள் இல்லத்தின் கதவுகள் படக்கென்று மூடப்பட்டது.
அதில் பதறிப்போன விஜய்யோ “மேடம் இதெல்லாம் போங்கு” என அவசரமாக ஓடி வந்து கதவை தட்ட,
அவளோ உள்ளிருந்து “இன்னும் நீங்க இங்கிருந்து போகலையா?” என அதிகாரமாய் வினவவும்,
இவனோ முகத்தை அஷ்டக்கோணலாக சுழித்து “போறேன்…போறேன்” என உரத்தக்குரலில் பதிலளித்தவன்,
முன்னால் திரும்பி “வேற வழி…ம்” என தலையை சிலுப்பி சலித்துக்கொண்டான்.
அந்த ராட்சத படிக்கட்டின் வழியே கீழிறங்கியவாறு “உன் குத்தமா?என் குத்தமா?யாரை நானும் குத்தம் சொல்ல…” என அவனையும் மூடியிருந்த கதவிற்கு பின்பிருந்தவளையும் சுட்டிக்காட்டி சோகப்பாவனையுடன் பாடிக்கொண்டே நெஞ்சில் குத்தி நடந்து வந்தவனை பார்த்து முத்து பக்கென்று சிரித்துவிட்டார்.
அவன் வெளியே துரத்தப்பட்ட விதத்தையும் அவனது முகப்பாவனையும் அவருக்கு சிரிப்பை வரவழைத்தது.
அவரது சிரிப்பை கண்டு கடுப்பானவன் “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அந்த ஆணவச்சிரிப்பு” என அவரை முறைத்தப்படி பாட,
அதில் “ஹாஹாஹா” என வாய்விட்டு சிரித்தவரோ “வாங்க தம்பி…இருக்கவே இருக்கு நம்ப இடம்” என அவனை சமாதானம் செய்து அவரோடு அழைத்து சென்றார்.
அவனை வெளியே தள்ளியது அவளிற்கு வருத்தமாக இருந்தாலும்,அவன் அந்த சூழ்நிலையை கூட வெகு சாதாரணமாக விளையாட்டாக எடுத்துக்கொண்ட விதம் அவளை மிகவும் ஈர்த்தது.
அதனால் அவளின் இதழில் முறுவல் ஒன்று தோன்றி மறைந்தது.
‘வெளிய தள்ளியும் திருந்தறானா பாரு’ என திட்டியவளிற்கு ஏனோ அவனின் செயலை ரசிக்கும் பாவனையே உள்ளூன்றியது.
*****
அடுத்த நாள் மாலை அலுவலகத்தில் விசாலமாக இருந்த தாழ்வாரத்தில் சமந்தாவிற்காக விஜய் காத்திருந்த நேரத்தில் அவனது அலைப்பேசி கிணுகிணுத்தது.
‘யாருடா இது’ என கால்சட்டை பையிலிருந்து அவன் அலைப்பேசியை எடுத்து பார்த்தவன்,அதில் ஒளிர்ந்த நண்பனின் பெயரை கண்டவுடன் முகம் பரவசமடைந்தது.
உடனடியாக அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் “ஹலோ மச்சி…என்னடா காத்து இந்தப்பக்கம் வீசுது” என உற்சாகத்துடன் பேச்சை ஆரம்பிக்க,
எதிர்ப்புறம் இருந்தவனோ “வாடா நல்லவனே…உன் ஆளு கூட இருந்தா எங்களையெல்லாம் கண்ணு தெரியுதா?” என சலிப்பது போல் கேட்டான்.
“அடேய் ஆளு கிளுன்னு சொன்ன சாவடிச்சிடுவேன் மவனே” என சிடுசிடுப்புடன் எச்சரிக்க,
“ஓ…அப்போ என்ன சார் சொல்லணும்…லவ்வர்…பொண்டாட்டின்னு சொன்னால் ஓகே வா?” என்றான் பவ்யம் கலந்த போலி மரியாதையுடன்.
அவனின் அந்த வார்த்தை ஆடவனின் நெஞ்சில் பனிச்சாரலை வீச வைத்தது.
ஆயினும்,எதையோ நினைத்து நெற்றியை நீவி “நீ வேற ஏன்டா என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கிற?அவங்ககிட்ட பேச போனாலே கண்ணாலே ஃப்யர் விடறாங்க…ஒரு லோட் நெருப்பை கண்ணுக்குள்ள ஸ்டோர் பண்ணி வைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என இதழை சுழித்து அலுத்துக்கொண்டான்.
விஜய்யின் நண்பன் அமரோ “ஹாஹாஹா” என வாய்விட்டு சிரிக்க,
அதில் கடுப்பான விஜய் “என் பொழப்பு சிரிப்பா சிரிக்கிறது எனக்கே தெரியுது…இதில் நீ வேற ஏன்டா எக்ஸ்ட்ராவா சிரிச்சு கடுப்பேத்தற” என சீற,
“மச்சி ஒய் டென்ஷன்டா…கூல்…கூல் பட்டி” என நண்பனை சமாதானம் செய்தவன்,
இப்போது கேலியை கைவிட்டு “விஜய் எதுக்குடா இப்படி தயங்கற?நேரடியா போய் அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட வேண்டியது தான?” என தீவிரமான குரலில் வினவ,
அவனோ உள்ளிருந்து ஆழ்ந்ததொரு மூச்சை வெளியிட்டு “நானாடா சொல்லமாட்டிக்கிறான்…அவங்களை யாரும் நெருங்கக்கூடாதுன்னு அவங்களை சுத்தி அவங்களே ஒரு வட்டத்தை போட்டு வைச்சிருக்காங்க…அந்த வட்டத்தை யாராவது தொட நினைச்சால் கண்ணாலே அவங்களை பொசுக்கிடறாங்க…எனக்கு அந்த வட்டத்தை தொடணும்னு நினைக்கவே பயமிருக்குன்னா பார்த்துக்கோ…அந்த அளவு தீயா இருக்காங்கடா” என இத்தனை நாட்களாய் மனதிலிருந்த அனைத்தையும் ஆற்றாமையுடன் தோழனிடம் கொட்டினான் அவன்.
நண்பனின் பேச்சு அவனிற்கே வருத்தமளிக்க “நம்ப செட்டிலே மனசுல நினைச்சதை பேசக்கூடிய ஒரே ஆள் நீ தான்டா…நீயே இவ்வளவு தயங்கறன்னா சமந்தா எப்படிப்பட்டவங்கன்னு என்னால் புரிஞ்சுக்க முடியாது” என தணிந்த குரலில் உரைத்தவனாலும் அதற்கு மேல் எதுவும் பேசமுடியவில்லை.
சில நொடிகள் இருப்புறமும் அமைதி நிலவ,அதனை முதலில் கலைக்கும் விதமாக “ஏன்டா டாட் என்ன சொன்னார்?” என தீடிரென்று வினவ,
இவனோ பெருமூச்சுடன் “அவர் என்ன சொல்வார்?உனக்கு வாழைப்பழத்தை உரிச்சு மட்டும் தான் கொடுக்கமுடியும்…நீ அதை சாப்பிடுவியோ இல்லை தூக்கிப்போடுவியோ அது உன் பாடுன்னு சொல்லி கழண்டுக்கிட்டார்டா” என தந்தையானவரின் எண்ணத்தை பூடகமாக உரைத்தான்.
“ஏன்டா?அவருக்கு உன்னோட லவ் விஷயத்தில் விருப்பமில்லையா?” என சந்தேகத்துடன் கேட்க,
“சேச்சே…அப்படியில்லைடா…அவருக்கும் இது நடந்தால் சந்தோஷம் தான்…ஆனால்…” என இழுத்து ஒரு நொடி தாமதித்தவன்,
சிகையை அழுந்தக்கோதி “சமந்தா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்கமாட்டாங்கன்னு அவருக்கு உறுதியா தெரியுமாம்…அதனால் என்னை தேவையில்லாமல் ஆசையை வளர்த்துக்க வேணாம்னு சொன்னார்” என்றான் கவலை மிகுந்த குரலில்.
அவரது தாமரை இலை தண்ணீர் நிலை எதனால் என்பதை ஓரளவு அமரால் கணிக்க முடிந்தது.
அதனால் அமர் சிறிது தயக்கத்துடன் “நான் ஒண்ணு சொன்னால் நீ கோவிச்சுக்கமாட்டியேடா?” என பிடீகையுடன் ஆரம்பிக்கவும்,
“என்னடா சொல்லு” என விஜய் புருவம் உயர்த்த,
“இல்லைடா” என தயங்கியவன் “ஐ நோ யூ லவ் சமந்தா…பட் அவங்களோட பாஸ்ட் லைஃப்…” என அவன் தொடங்கும் போதே அவன் கூற வருவதை யூகித்த விஜய்யோ கோபத்தோடு இடைமறித்தான்.
“அமர் அவங்களோட கடந்த கால வாழ்க்கையில் நடந்த எந்த விஷயமும் எனக்கு தெரிய வேணாம்னு உன்கிட்ட நான் சொன்னதா ஞாபகம்” என்றான் அதீத உஷ்ணத்துடன்.
அதில் சட்டென்று மௌனமாகியவனோ “சரிடா…உன் லவ் உன் ஃலைப்…இதில் நான் ஒரு நாளும் தலையிடலை…ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்லிடறேன்…அவங்களோட ஃபாஸ்ட் லைப் கூட உன்னை அவங்க மறுக்க காரணமா இருக்கலாம்…அதுக்காகவது அவங்களோட கடந்த காலத்தை நீ தெரிஞ்சுக்கலாமேடா” என கிடைத்த இடைவெளியில் தோழனிற்கு அறிவுரை கூறினான்.
விஜய்யிடம் சட்டென்று ஒரு மௌனம்!!
அவன் சமந்தாவை கடந்த இரண்டு வருடங்களாக அவளிற்கே தெரியாமல் நேசித்தாலும்,அவளை அவளிற்காக மட்டுமே விரும்பும் ஒரு ஆண்மகன் இவன்!!
அவளின் பின்னணியில் ஒரு கொடூரமான முன் காலம் இருப்பதை அறிந்தாலும்,ஏனோ அதனை பற்றி அவன் தெரிந்துக்கொள்ள தயாராகயில்லை.
அவள் மட்டுமே தன் வருங்காலம்,நிகழ்காலம் என்பதில் முடிவாய் இருப்பவன்,அவளின் கடந்த காலத்தை மட்டும் அறிய தயங்குகிறான்.
‘ஏன்?எதற்கு?’ என்பது அவனின் ஆழ்மனம் மட்டுமே அறிந்த ரகசியம்!
அதனால் இப்போதும் “ஐயம் ஷ்யூர் அமர்…எனக்கு அவங்களோட கடந்த காலத்தை பற்றிய உண்மை தெரிய வேண்டாம்” என உறுதியுடன் மறுப்பு தெரிவித்தவன்,
“அவங்களை அவங்களாகவே எனக்கு பிடித்த மாதிரி…அவங்களும் என்னை எனக்காகவே நேசிக்கணும்னு நான் விரும்பறேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
விஜய் ஒன்றை எண்ணினால் அதை அடையும் வரை ஓயமாட்டான்.
நண்பனின் அத்தகைய பிடிவாதத்தையும் வேட்கையையும் அறிந்த அமருக்கு ‘என்ன நடக்கப்போகுதோ?’ என உள்ளுக்குள் அச்சமாக இருந்தாலும் “சரிடா…உன்னிஷ்டம்…நல்லாதே நடக்கட்டும்” என இறுதியில் அவனாகவே இறங்கி வந்துவிட்டான்.
அவனிற்கு விஜய்யின் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதே திண்ணம்.
அதனால் ‘அனைத்தும் நன்மையில் முடியவேண்டும்’ என விதியின் கையில் அவன் வாழ்வை ஒப்படைத்தான்,பேச்சை வேறுப்புறம் திசைமாற்றினான்.
“டேய் மச்சி…இன்னும் என்னடா சமந்தாவை அவங்க இவங்கன்னு கூப்பிட்டு இருக்க…உரிமையா பேர் சொல்லி கூப்பிடலாமில்ல…” என,
அதில் நாணத்தோடு மென்மையாய் புன்னகைத்த விஜயோ “மச்சி எனக்கும் அவங்களை பேர் சொல்லி கூப்பிடணும்…செல்லப்பெயர் வைச்சு கூப்பிடணும்னு ஆசை தான்…பட் அவங்களோட அனுமதி இல்லாமல் அப்படி கூப்பிடறது எனக்கு ஏதோ திருட்டுத்தனம் பண்ணற மாதிரி தோணுதுடா…என்னைக்கு அவங்க கண்ணுல என் மேலான காதல் தெரியுதோ…அன்னைக்கு முழுசா அவங்க எனக்கே உடைமையாகிடுவாங்க…அதுக்கு மேல அவங்களை பேர் சொல்லி அழைக்க எனக்கு தடங்கலும் இருக்காதுடா” என தனது நேசத்தை எல்லாம் ஒன்று திரட்டி உணர்ச்சிகரமாக பேசிய தோழனின் நற்குணத்தை எண்ணி வியந்துப்போனான் அமர்.
‘காளையவன் காதலில் கசிந்துருக..
நேசமென்னும் சொல்லையே வெறுக்கும் கயலவளின் அந்தம் என்னவோ?’