வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பொழுது புலரும் நேரம் - கதை திரி

Status
Not open for further replies.
நேரம் – 7

அகரத்தமிழனின் வினாவிற்கு பதில் சொல்ல அவர் முன்வரவில்லை. அவனின் கேள்விக்கு அமைதிக் காத்தவர், “இன்னும் என்னென்ன கேள்வி இருக்கோ, அத ஒன்னா கேட்டுட்டா பரவால்ல. எனக்கும் பதில் சொல்ல வசதியா இருக்கும்” என்றார்.

“ஒரு நிமிசம், நான் என்னோட பிரண்ட்டுக்கு கால் பண்ணி வர சொல்றேன். அவன் வந்தா இன்னும் இந்த பிரச்சனைக்கு யூஸ்சா இருக்கும்” என்ற அகரத்தமிழனை அடக்கிய இசை,

“நீ கொஞ்சம் சும்மா இரு.! என்ன விளையாடுறீங்களா? நீங்க இங்க மாட்டிக்கிட்டு இருக்கீங்க. அத மறந்துட்டு பேசுறீங்களா? நீங்க எல்லாத்தயும் தெளிவா சொன்னாதான் அடுத்து என்ன செய்ய முடியும்னு யோசிக்க முடியும்.” என்றவளை கேலியாகப் பார்த்தார் இன்பத்தமிழன்.

“என்ன இசை, நான் இங்க மாட்டி இருக்கேனா? நான் தெரிஞ்சு தான் இங்க வந்தேன். மாட்டிக்கிட்டு இருக்குறது நான் இல்ல, உன்னோட ப்ளட் ரிலேசன் அதாவது உன்னோட அப்பா வெற்றிவேல்.” என்றவரை மூவரும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.

“அப்போ உங்களுக்கு இங்க இருந்து போக வழித் தெரியும், அப்டித்தானே?” என்ற குணாவை மெச்சுதலோடு பார்த்தவர்,

“எக்ஸாட்லி குணா.! எனக்கு இங்க இருந்து எப்டி போகணும்னு தெரியும்.” என்றார்.

“அப்போ என் அப்பா?”

“அப்போ என்ற ஐயா?” என்று இசையும் குணாவும் ஒன்றாகக் கேட்க,

“மொத்தம் 24 மணி நேரம் தான் டைம். காலைல சரியா பதினொன்னு முப்பத்தைஞ்சுக்கு நானும் வெற்றிவேலும் இடம் மாறுனோம். நாளைக்கு காலைல அதே நேரத்துக்கு நான் டிவைஸ்ச ஆப்ரேட் பண்ணா தான் நாங்க பழையபடி இடம் மாறுவோம். இல்லன்னா…”

“இல்லைன்னா…?” என்று மூவரும் கேட்க,

“வெற்றிவேல் திரும்பவும் இங்க வர முடியாது.” என்றார் அசட்டையாக.

“அப்போ, நீங்களும் இங்க தான இருப்பீங்க? உங்காளலயும் போக முடியாதுல?” என்று கேட்ட அகரனிடம்,

“என்ன ரொம்ப அறிவா பேசுறதா நினைப்பா? நீங்கலாம் சொந்தமா யோசிப்பீங்கள? ஆனா, நாங்க எங்களுக்கு என்ன கமென்ட் ஆல்ரெடி இன்ஸ்டால்ட்டு ஆகி இருக்கோ அத தாண்டி யோசிக்க முடியாது. ஆனா, அந்த கமென்ட்ஸ் கூட, எனக்கு நான் ரொம்ப அட்வான்ஸ்சா இன்ஸ்டால்ட் பண்ணி வச்சி இருக்கேன். அங்க இருந்து இங்க வர தெரிஞ்சவனுக்கு எப்டி போகணும்னு தெரியாதா?” என்று கேட்டிட, அனைவரும் வாயடைத்துப் போயினர்.

“எதே? என்ன விளையாட்டு காட்டுறீகளா? வெட்டிப் பொலி போட்டுடுவேன். ஒழுங்கு மருவாதையா என்ற ஐயா இப்போ இங்க வந்தாகணும். இல்லன்னா திரும்பி போகவே முடியாது.” என்று கத்தினான் குணா.

“நீ என்னதான் மிரட்டுனாலும், நான் இங்க இருந்து போகத்தான் போறேன். நான் கேட்குறதுலாம் சரியா என்னோட கைக்கு வந்துட்டா வெற்றிவேல் திரும்பி வரதுக்கான வாய்ப்புகள் இருக்கு” என்றார்.

“நான் என்னோட பிரண்ட்டுக்கு கால் பன்றேன். அவன் வந்தா இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.” என்று மறுபடியும் கூறினான் அகரன்.

“இப்போ ஏன் நீ லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்க.? கொஞ்ச நேரம் சும்மா இரு. நீங்க சொல்லுங்க, உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள் இசை.

“என்ன தமிழு? இவுக கேட்குறதுலாம் கொடுத்துட்டா நம்ம ஐயா பத்திரமா வந்துடுவாகளா? என்ன நம்பிக்கைல நாம செய்ய முடியும்?” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினான் குணா.

“ஒரு நிமிசம்” என்றவள், குணாவையும் அகரனையும் தனியே அழைத்து சென்றாள்.

“என்னதான் தமிழு பண்ண போற? நம்ம ஐயா இப்போ எந்த நிலைமைல இருக்குறாருன்னு தெரியல. இதுல இவுகளுக்கு சவட்னை செய்யதான் நாம இருக்கோமா?”

“குணா, நீ முதல்ல கோவப்படுறத நிறுத்து. இப்போ நமக்கு அப்பா எந்த பிரச்சனையும் இல்லாம இங்க வரணும், அவ்ளோ தான்.” என்ற இசை,

“நீங்க என்ன அகரன் சொல்றீங்க?” என்றாள்.

“எனக்கும் நீ சொல்றதுதான் சரின்னு படுது இசை. ஆனா, நாம மூணு பேரும் சில நேரம் உணர்ச்சிவசப்படுறோம். இதுக்கு கண்டிப்பா நாலாவதா ஒரு ஆள் நமக்கு ஹெல்ப் பண்ண கிடச்சா நல்லா இருக்கும்.” என்றவன் “நான் என்னோட பிரண்ட்ட வர சொல்லவா?” என்றான்.

“அய்யய்ய, உங்க பிரண்ட் யாரு? என்ன பண்றாரு? அவரு எப்படி நமக்கு ஹெல்ப் பண்ண முடியும்?”

“நான் கூட காலைல சொன்னேன்ல, அவன் நல்லா கதை எழுதுவான், அதுவும் சயின்ஸ் சம்பந்தப்பட்ட நாவல்ஸ் நிறைய எழுதி இருக்கான்னு. அவன் பேர் தூயவன். பிசிக்ஸ்ல பி.எச்.டி வரைக்கும் பண்ணி இருக்கான். இப்போ வேலை எதுவும் இல்ல. சும்மா தான் இருக்கான். அவன் வந்தா கண்டிப்பா நமக்கு ஹெல்ப்பா இருக்கும்” என்றான்.

“நீங்க நிஜமாவே ஹெல்ப்புக்காக தான் கூப்டுறீங்களா? இல்ல நல்லா என்டர்டைன்மென்ட் ஆகுதுன்னு கம்பெனிக்கு உங்க பிரண்ட்டயும் கூப்டுறீங்களா?” என்று காய்ந்தாள் இசை.

“அய்யோ, இசை! நிஜமா நமக்கு ஹெல்ப் பண்ண தான் கூப்டுறேன்.”

“சரி, வர சொல்லுங்க.!”

அகரன் அவனின் நண்பனுக்கு அழைக்கச் சென்றான்.

இவர்கள் இன்பத்தமிழன் இருக்கும் பக்கம் சென்றிட, அவரோ அந்த வயல்வெளிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அரவம் உணர்ந்து திரும்பியவர், “என்ன ரெண்டு பேர் மட்டும் வரீங்க? எங்க அகரத்தமிழன்?”

“அவர் ஏதோ கால் வந்து இருக்குன்னு போய் இருக்காரு.” என்றாள் இசை.

அந்தப்பக்கம் சென்று அகரன் என்ன பேசுகிறான் என்று நாம் பார்த்துவிட்டு வரலாம்.

‘ராமன் ஆண்டாளும், ராவண ஆண்டாளும்

எனக்கொரு கவலையும் இல்ல.

நான் தான்டா என் மனசுக்கு ராஜா.

வாங்குங்கடா வெள்ளியில் கூஜா.

நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்.

கேட்குற வரத்தை கேட்டுக்கடா’ என்று அழைப்பாளர் இசை (Caller Tune) சென்றுக் கொண்டிருந்தது.

அங்கோ தூயவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, யாரோ எங்கோ தொலைவில் ‘நான் படிச்ச படிப்புக்கு இல்லாத வேலை. என் அப்பா பேருக்கு இல்லாத வேலை. என்னோட நாணயம் நேர்மையும் உழைப்புக்கு இல்லாத வேலை.’ என்ற வசனத்தை பேசுவது போல் அவனுக்குக் கேட்டது.

“இந்த எரும மாடு, நம்மளோட நேரத்துக்கு தகுந்த மாதிரி தான் போனயே எடுக்காது. அடேய், கக்கரவம்புடிச்சவனே! போன எடுத்துத் தொலடா” என்று இங்கு அகரன் கதறிக் கொண்டிருந்தான்.

மறுபடியும் அவனுக்கு அழைக்க, அரைத் தூக்கத்தில் தனது கைப்பேசியை எடுத்தவன் குழறலாக, “ஹலோ!” என்றான்.

“அடேய் எருமமாட்டுப் பயலே! வெளக்கெண்ணெ. போன் போட்டா எடுக்க மாட்டியா? ஒரு மனுசன் எவ்வளவு டென்சனா போன் பண்ணா ஆடி அசஞ்சு லவ்வர் கிட்ட பேசுற மாதிரி ஹலோன்னு ஹஸ்கி வாய்ஸ்ல பேசுற.? அறிவுகெட்ட நாயே!” என்று சரமாதிரியாக இவன் திட்ட,

அரைத் தூக்கத்தில் இருந்தவன் தெளிந்தான். “டேய்… டேய்… இரு! என்ன டா ஆச்சு? ஏன் காலைலயே இவ்ளோ சூடா இருக்க? பொண்ணு பாக்க தான போன நீ? என்ன ஆச்சு? பொண்ணு வேண்டாம்னு சொல்லிடுச்சா என்ன?”

“எடு அந்த செருப்ப! நீயே பிரிச்சு விட்டுடுவ போல. மணி மதியம் ஒன்னு. அப்போ, இன்னும் நீ அந்த இத்துப்போன பெட்ல இருந்து எழுந்திரிக்கல.? எனக்கு அசிங்கம் அசிங்கமா வாய்ல வருது. ஒழுங்கா கிளம்பி மணவழகனூருக்கு வா.!”

“என்னது மணி ஒன்னா? அய்யய்யோ! அம்மா கரண்டு பில் கட்ட சொன்னாங்கடா! இன்னைக்கு தான் கடைசி நாள் வேற. இந்நேரம் கரண்டு ஆஃபிஸ்ல அவன் லஞ்சுக்கு வேற போய் இருப்பானே. மச்சி, உன் பிரச்சனைய ஒரு அரை மணி நேரம் தள்ளி வச்சிக்கோடா. கரண்டு பில் கட்டிட்டு வந்துடுறேன்.” என்றவனை இன்னும் கேவலமாகத் திட்டித் தீர்த்தான் அகரன்.

“டேய், தூயவா! இங்க என்ன மாதிரி பிரச்சனை நடக்குதுன்னு தெரியாம நீ ஏன்டா என்னோட உசுர வாங்குற? இங்கப் பாரு, இப்போ நீ வந்தா உன்னோட நாவலுக்கு நல்ல கன்டன்ட் கிடைக்கும். எவ்ளோ சீக்கிரம் வரீயோ அவ்ளோ நல்லது” என்று அவனை எவ்வாறு வழிக்கு கொண்டு வர வேண்டுமோ அதைக் கூறினான்.

“இதத்தான் நீ முன்னாடியே சொல்லி இருக்கணும். ஒரு பைவ் மினிட்ஸ் ரெடியாகிட்டு உடனே கிளம்பி வரேன்” என்றவன் குதூகலித்தவாறு கிளம்பினான்.

அவனிடம் பேசிவிட்டு இன்பத்தமிழன் இருக்குமிடத்திற்கு விரைந்தான் அகரன்.

“நீங்க எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா? என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?” என்று கேட்டார் இன்பத்தமிழன்.

“உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க! நீங்க கேட்குறத கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். அதுக்கு முன்னாடி அங்க என்னோட அப்பா சேஃப்பா இருக்காரான்னு நான் தெரிஞ்சிக்கணும்.” என்றாள் இசை.

“குட்.! முதல்ல எனக்கு இப்போ என்னென்ன வேணும்னு சொல்லிடுறேன். நோட் பண்ணிக்கோங்க.”

அகரன் தனது கைப்பேசியில் குறிப்பினை குறிக்கத் தொடங்க, இன்பத்தமிழன் கூற ஆரம்பித்தார்.

“முதல்ல எனக்கு நல்லா விளையுற அஞ்சு வகையான மண்ணு சேம்பிள் தேவை. அப்ரோம், இதோ இங்க உருவாகி இருக்க செடி கொடி எல்லாம் சேம்பிள் வேணும். முக்கியமா அது எல்லாம் சாப்பிடக் கூடியதாவும் மருத்துவ குணம் இருக்குறதாவும் வேணும்.

அடுத்து, நல்ல சுத்தமான தண்ணீ சேம்பிள் வேணும். இந்தக் காலத்துல நிறய மலைகள் எல்லாம் இருக்கும்னு நான் படிச்சு இருக்கேன். சோ, இந்த இடத்துல இருக்குற மலைகள் எல்லாம் நான் பார்க்கணும். அதுல கொஞ்சம் ஆராய்ச்சி பண்ண வேண்டி இருக்கு. அங்கலாம் நீங்க என்ன கூட்டிட்டு போகணும். அடுத்து, நான் பாக்குற விலங்குகள் எல்லாம் ஒரு சேம்பிள்காக நான் எங்க காலத்துக்கு கொண்டு போவேன். அதுக்கும் நீங்க ஏற்பாடு பண்ணணும். அப்ரோம் ரொம்ப முக்கியமான விசயம், வெற்றிவேலோட டி.என்.ஏ வேணும்.” என்றவரை குணா மற்றும் அகரன் ‘அவ்ளோதான?’ என்று பார்த்திட, இசை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க கேட்குறது எல்லாம் சரி. ஆனா, இதுலாம் ரொம்ப கஷ்டம். உடனே இதயெல்லாம் செஞ்சிட முடியாது.”

“என்ன இசை, இவர் சொன்னது ரொம்ப கஷ்டம் மாதிரி பேசிக்கிட்டு இருக்க? மண்ணயும் செடியயும் தான கேட்குறாரு. கொடுக்குறதுல என்ன கஷ்டம் வந்துடப் போகுது.? அது மட்டும் இல்ல, சேலத்துல இல்லாத மலையா? சேலத்த சுத்தி எவ்ளோ மலை இருக்கு. சேம்பிளுக்குத் தான கேட்குறாரு. கூட்டிட்டு போய்ட்டா போது. அதுவும் இல்லாம, நாம என்ன காட்டுப் பக்கமா போகப் போறோம். இங்க உங்க பண்ணைல இருக்குற ஆடு, மாடுல ஒன்னு கொடுத்துவிட்டாப் போச்சு.” என்றான் அகரன்.

‘உங்களுக்கு தான் இது வெறும் மண்ணு, செடி, கொடியெல்லயம். ஆனா, எங்களுக்கு அது பொக்கிஷம். இது மட்டும் என்னோட கைக்கு கிடச்சா எந்த அளவுக்கு எங்களோட பிரச்சனை எல்லாம் தீர்க்க முடியும்னு இவங்ளுக்கு எங்க தெரியப் போகுது?’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார் இன்பத்தமிழன்.

“என்ன? ஆடு மாடுல ஒன்ன கொடுத்துவிட்டாப் போச்சா? இதுலாம் என்ன உன் வீட்டு சொத்தா? தமிழ கட்டிக்கப் போறவன்னு நானும் பொறுமையா இருந்தா, நீ உன் வாய்க்கு வந்தத எல்லாம் சொல்லுவீயா என்ன? அதுலாம் மனுசன் மக்காவோட ஒன்னுமண்ணா பழகிட்டு கிடக்குதுங்க. அத எப்டி அனுப்புறது? இந்தாரு தமிழு, நம்மளால என்ன முடியுமோ அத மட்டும் தான் செய்ய முடியும். இவரு என்னமோ மலைக்குலாம் போவணும்னு சொல்றாரு. நமக்கு இருக்குறதே கம்மியான நேரம்தான். அதுக்குள்ள எப்டி ஊர்ல இருக்குற மலைக்கு எல்லாம் கூட்டிட்டு போவ முடியும்?” என்று குழம்பினான் குணா.

“குணா சொல்றதும் சரிதான். கொஞ்ச நேரத்துல எல்லா மலைக்கும் போறது ரொம்ப சுலபம் கிடையாது. இதுலாம் இருக்கட்டும், என் அப்போவோட டி.என்.ஏ எதுக்கு கேட்குறீங்க?”

“அத இப்போ என்னால சொல்ல முடியாது. கைல கிடச்சா தான் சொல்லுவேன். அன்ட் நீங்க டைம்ம பத்தி கவலப்பட வேண்டாம். இங்க இருந்து கண்ண மூடி கண்ண திறந்தா நாம நினச்ச இடத்துக்கு போகக் கூடிய அட்வான்ஸ் மெசின்லாம் நான் வச்சி இருக்கேன்” என்றார்.

ஒரு நீண்ட பெருமூச்சு இசையிடமிருந்து. “எல்லாம் ஓகே! இப்போ என்னோட அப்பா சேஃப்பா இருக்காரான்னு நீங்க கன்ஃபார்ம் பண்ணா தான் நீங்க கேட்டதெல்லாம் எங்களால செய்ய முடியும்.” என்றாள் இசை.

“ஸ்மார்ட்தான். நான் இப்போவே செக் பண்ணிட்டு சொல்றேன்” என்றவர் தன் கையில் பொருத்தப்பட்டிருந்த சிப் போன்ற கருவியில் என்னென்னமோ அழுத்தினார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.

தொடர்ந்து அவர் அதனை அழுத்திக் கொண்டே இருக்க, “ஏன், என்ன ஆச்சு?” என்று கேட்டான் அகரன்.

“நான் அனுப்புற சிக்னல்ல ரிசிவ் பண்ண அங்க யாரும் இல்ல.”

“வாட்.?”

“ஆமா! இந்நேரம் உன்னை மாதிரியே இருக்க அமரவன் அங்க எல்லாத்தயும் ஆப்ரேட் பண்ணி இருக்கணும். அவன் இன்னும் பண்ணல போல. என்னோட சிக்னல அங்க யாராவது அக்சப்ட் பண்ணா தான் வெற்றிவேல் எந்த நிலமைல இருக்காருன்னு நமக்கு தெரியும்.”

“அப்போ இல்லன்னா..?”

“என்னாலயும் அங்க போக முடியாது. அவராலயும் இங்க வர முடியாது. அநேகமா வெற்றிவேல அரெஸ்ட் பண்ணி இருப்பாங்க அங்க.!” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை குணா பாய்ந்து அவரின் சட்டையைப் பிடித்தான்.

“என்ன செய்வீயோ, ஏது செய்வீயோ எங்களுக்கு தெரியாது. இப்போ எங்க ஐயா அங்க நல்லா இருக்கணும். இல்லையிண்டா… என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது” என்று சீறினான்.

“நான் மட்டும் என்ன பன்றது? நான் போட்ட பிளான்ல எங்கயோ தப்பாகிடுச்சு. என்னை கொஞ்ச நேரம் யோசிக்க விடுங்க” இவரும் பதிலுக்கு கத்தினார்.

அப்போது தூயவன், வழியில் அகரனின் மகிழுந்தைக் கண்டுக்கொண்டு, இந்த வயற்காட்டுப்பக்கம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை செலுத்தினான்.

சரியாக, அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்து சேர, இன்பத்தமிழன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

“அதிரன்…?”

புலரும்…
 
poluthu cover.jpg

நேரம் – 8

தன் இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திய தூயவன், அவர்களை நோக்கி வந்தான். இவனின் வருகையில் பெரிதும் அதிர்வுக்குள்ளாகியது இன்பத்தமிழன்தான்.

“அதிரவன்? நீ எப்படி இங்க? ஒருவேள நீயும் இந்த காலத்துல இவங்கள மாதிரி இருக்குற ஒரு ஆளா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

“யாரு மச்சி இது? பாக்கவே ரொம்ப வித்தியாசமா இருக்காரு?” என்று அகரனிடம் கேட்டான் தூயவன்.

“இவர் 1000 வருசத்துக்கு பின்னாடி இருந்து வந்து இருக்காரு. அதாவது, 3021ல இருந்து டைம் டிராவல் மூலமா வந்து இருக்காரு.” என்றான் அகரன்.

“என்னதுஊஊஊ? டைம் டிராவல்லா? இட்ஸ் இம்பாசிபல். எப்படி நீங்க வந்தீங்க என்ன மாதிரி மெசின் யூஸ் பண்ணி இருக்கீங்க? உங்க காலத்துல இத விட நிறைய அட்வான்ஸ்சான விசயங்கள் இருக்கும் இல்லயா?” என்று கேள்விகளை அடுக்கினான்.

“நீங்க இத நம்புறீங்களா? டைம் டிராவல் உண்மைதானா?” என்று கேட்டாள் இசை. இன்னமும் அவளுக்குள் ஒரு கேள்வி இருந்துக்கொண்டே இருந்தது. ‘ஒருவேளை தன் தந்தையை மறைத்து வைத்துவிட்டு, இவர்கள் நாடகம் ஆடுகிறார்களா?’ என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்தது.

“நீங்க இசைத்தமிழ் தான?”

“ம்ம்…”

“வாவ்.! ஆக்சுவலி நான் உங்களோட பெரிய விசிறிங்க சிஸ்டர். நீங்க எழுதி இருக்குற பல புக்ஸ் என்னோட ஃபேவரைட் லிஸ்ட்ல இருக்கு. அதுவும் உங்களோட சிறுகதைகள் எல்லாம் வேற லெவல்ல இருக்கும். யாரும் சொல்ல முடியாத, சொல்லத் தயங்குற விசயங்கள்ல சர்வசாதரணமா சொல்லிட்டு போய்டுறீங்க. எப்டிங்க, இப்டி?” என்று ஒரு புகழ்மாலையை தொடுத்துக் கொண்டிருந்தான்.

“நீ பொறுமையா பாராட்டு பத்திரம் வாசி. இப்போ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.! டைம் டிராவல் சாத்தியமா?” என்றுக் காய்ந்தான் அகரன்.

“நீ ஏன் மச்சி, காலைல இருந்தே ரொம்ப சூடா இருக்க? எந்த விசயத்தயும் பொறுமையா ஹேண்டில் பண்ணனும். அப்போதான் அதுக்கு சரியான தீர்வு கிடைக்கும். முதல்ல எனக்கு விவரமா சொல்லுங்க, என்ன நடந்துச்சு?” என்று கேட்டான் தூயவன்.

அகரன், காலையில் வெற்றிவேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றதிலிருந்து, தற்போது வரை என்ன நடந்ததோ அத்தனையும் கூற, தூயவனின் கண்கள் ஆச்சர்யத்தில் மின்னியது.

“வாவ்.! எவ்ளோ பெரிய விசயம் நடந்திருக்கு. என்னை நீ முன்னாடியே கூப்டு இருக்க வேண்டியது தான அகரா? சரி, பரவால்ல! இப்போ நெக்ஸ்ட் என்ன ப்ளான்?”

“இப்போ என்னோட சிக்னல்ல அங்க யாரும் ரிசிவ் பண்ணல. சோ, அங்க என்ன நடக்குது, நடந்து இருக்குதுன்னு எனக்கு தெரியல. இதுக்கு உன்னால ஏதாவது சொலுசன் சொல்ல முடியுமா?” என்று கேட்டார் இன்பத்தமிழன்.

“அதுக்கு முன்னாடி எனக்கு இந்த டைம் டிராவல்லாம் உண்மையான்னு சொல்லுங்க தூயவன். மண்டை காயுது.!” என்றாள் இசைத்தமிழ்.

“உண்மைதான் தமிழ். ஆனா, இப்போ இருக்குற ஜெனரேசன்ல சாத்தியம் இல்லாத ஒரு விசயம். டைம் டிராவல் பத்தி நிறைய பேர் நிறைய கருத்துக்கள் சொன்னாலும், இப்போ அது நடக்குமா, இல்ல சாத்தியப்படுமான்னு கேட்டா வாய்ப்புகள் ரொம்ப கம்மி தான். இத பத்தின ரிசர்ச் நிறைய பேர் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க. அப்போ இருந்த ஐன்ஸ்டீன்ல இருந்து இப்போ ஸ்டீவ் ஹாக்கின்ஸ் வரைக்கும் இத பத்தி ஒரு கருத்த சொல்லி இருக்காங்க.

அதாவது, டைம் டிராவல், கால பயணம் நிச்சயம் சாத்தியம் தான். ஆனா, அது நிகழ்காலத்துல இருந்து எதிர்காலத்துக்கு போகதான் சாத்தியம். கடந்த காலத்துக்கு போக முடியாது. இதுதான் இப்போ வரை சொல்லப்பட்டு இருக்குற விசயம். அதாவது, இத ரெண்டு விதமா சொல்லுவாங்க. ஒன்னு ஒளி காலம், லைட் டைம். ரெண்டாவது கருந்துளை, அதாவது ப்ளாக் ஹோல். இது ரெண்டும் யாராலயும் கன்ட்ரோல் செய்ய முடியாது. ஆனா, அப்டி அதுக்கு ஈக்குவல்லா ஒரு விசயத்த நம்மளால உருவாக்க முடியும் அப்டின்னா நம்மளாலயும் டைம் டிரவால் செய்ய முடியும். ஒரு ஒளி காலத்துல மனிதனால பயணிக்க முடிஞ்சா நிச்சயம் எதிர்காலத்துக்கு போகலாம்.

ஒரு ஒளி வேகத்தோட அளவு குறிப்பிட்டு இவ்ளோன்னு நம்மளால உறுதியா சொல்ல முடியாது. ஆனா, பிசிக்ஸ்படி ஒரு விநாடிக்கு ஒளியோட வேகம் மூனு லட்சம் கிலோ மீட்டர். இப்டி சொடக்கு போடுற செகன்ட்ல ஒருத்தரால மூனு லட்சம் கிலோ மீட்டர் டிராவல் பண்ண முடியும்னா அவங்களால நிச்சயம் டைம் டிராவல் செய்ய முடியும். இதுல ப்ராப்ளம் என்னதுன்னா, அப்டி டைம் டிராவல் செஞ்சா அவங்களோட வயசும் உடலும் எந்த மாற்றமும் இருக்காது. ஆனா, இந்த பூமி மாறி இருக்கும். இது தான் இப்போவரை இருக்க கருத்து.

அதுவும் அந்த ப்ளாக் ஹோல் லைட்ட ஃபுல்லா அப்சர்வ் பண்ணிக்கும். சோ, ப்ளாக் ஹோல் ஸ்டார்டிங்க் பாய்ண்ட்ல நம்மளால மெதுவா மூவ் ஆக முடிஞ்சா அப்போ நம்மளால எதிர்காலத்துக்கு போக முடியும்.” என்றான் தூயவன்.

அங்கிருந்தவர்களில் தெளிவாக இருந்தது இன்பத்தமிழன் மட்டும்தான். மற்ற அனைவருக்கும் மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போல்தான் இருந்தது.

“இந்த வெங்காயத்துக்குத்தான் நான் பிசிக்ஸ்சயே எடுக்கல. எப்டிடா அத படிச்சு அதுலயும் பி.எச்.டி வரைக்கும் வாங்கி இருக்க?” என்றுக் கேட்டான் அகரன்.

“நீங்க வேற, இதுக்குதான் நான் படிக்கவே இல்ல” என்றான் குணா.

“கொஞ்சம் ரெண்டு பேரும் சும்மா இருங்களேன். கொஞ்சமாவது சீரியஸ்னஸ் இருக்கா? அதெப்டி இருக்கும் மாட்டி இருக்குறது என்னோட அப்பா தான?” என்றுக் காய்ந்தவள், தூயவனிடம் “நீங்க சொல்றதுலாம் ஒத்துக்குறேன். நீங்க சொல்றத வச்சு பார்த்தா ப்யூச்சர்க்கு போகலாம். ஆனா, எப்டி பாஸ்ட்டுக்கு வர முடியும்?” என்று கேட்டாள்.

“கரெக்ட் சிஸ்டர். அது எப்டின்னு இவர்தான் சொல்லணும்” என்று இன்பத்தமிழனைக் கைக்காட்டினான்.

இதுவரை அவன் பேசியதைக் கூர்ந்து கவனித்தவர், அவனின் திறன் கண்டு வியந்துதான் போனார். “எப்டி நீ அதே டேலன்ட்டோட இருக்கன்னு எனக்கு இப்போதான் புரியுது. ஆக்சுவலி என்னோட இந்த டிவைஸ்ச கண்டுபிடிக்குறதுக்கு ப்யூச்சர்ல நீதான் உதவி செஞ்ச” என்றவரை வியந்து பார்த்தான் தூயவன்.

“அப்போ, நான் 3021ல இருக்கேனா? அது என்னோட மறு ஜென்மமா? வாரே வா!” என்று குதூகலித்தவனை அடக்கிய அகரன்,

“அப்ரோம் பாராட்டுடா நாயே! இப்போ மாமா அங்க எப்டி இருக்காருன்னு எப்டி தெரிஞ்சிக்க?”

“அதுக்கும் இவர்தான் மச்சி விடை சொல்லணும்” என்று இன்பத்தமிழனைக் கூர்ந்து நோக்கினான் தூயவன்.

“எனக்கு தான் என்னன்னு புரியலயே? அப்ரோம் எப்டி?”

“நீங்க இன்னும் உங்க டிவைஸ் பத்தி சொல்லல. அன்ட் அங்க நீங்க என்ன மாதிரியான டெக்னாலஜிலாம் யூஸ் பண்ணி இருக்கீங்கன்னும் சொல்லவே இல்லயே? அப்ரோம் எப்டி நான் இதுக்கான என்னோட எண்ணத்தை சொல்ல முடியும்?” என்று இன்னும் அவரை ஆழ்ந்து நோக்கினான் தூயவன்.

அதில் சற்றுத் தடுமாறியவர், “அது… அது கான்பிடன்சியல்.! அதெப்டி நான் சொல்ல முடியும்.? நான் சொன்னேன்னு மட்டும் தெரிஞ்சா அவங்க என்னோட மெமரி எல்லாம் அழிச்சுடுவாங்க.” என்றவருக்கு வியர்த்து ஊத்தியது.

“என் கெஸ்படி நடந்தது எல்லாம் வச்சு பார்த்தா, அவங்களால உங்கள இப்போ டிராக் பண்ண முடியாது. நாம எப்போ இந்த டிவைஸ்ச ஆக்டிவ் பன்றோமோ அப்போ தான் நீங்க என்ன பன்றீங்கன்னு அவங்களுக்கு தெரியும். ஆம் ஐ ரைட்?”

“என்ன தூயவா சொல்ற? இது எப்டி?”

“சிம்பிள்டா அகரா.! அவர் இங்க வந்த உடனே, அவரோட டிவைஸ் ஆக்டிவ்ல தான் இருந்து இருக்கும். ஆனா, மணவழகனூர்ல இப்போ நாம இருக்குற இந்த இடத்துல சிக்னல் சுத்தமா கிடைக்காது. அதுனால தான் அவர் அனுப்பின சிக்னல் ஸ்ட்ரக் ஆகி இருக்கும். சப்போஸ் அவர் இந்த இடத்த விட்டு நகர்ந்தா மே பீ சிக்னல் ரீச் ஆகலாம்.!” என்று தன் யூகத்தையும் சொன்னான்.

அதில் முகம் மலர்ந்தவர், நகர பார்க்க, “அப்போ உங்களுக்கு எங்கள மாதிரி சுயமா சிந்திச்சு செயல்படணும்னு ஆசையே இல்லயா இன்பன் சார்?” என்று அவரின் எண்ணமதை சரியாகப் படித்தவள்போல் கேட்டாள் இசைத்தமிழ்.

ஆம், அவர் என்று கடந்த காலத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாரோ, அன்றே தான் யாருக்கும் அடிமையாகாமல் சுயமாக செயல்பட வேண்டும் என்றும் நினைத்திருந்தார். ஆனால், அங்கிருந்தவரையிலும் அதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பும் சுத்தமாக அமையவில்லை என்பதை விட, அமைய எந்த வித வழியும் இல்லை என்பதே உண்மை.

அவள் கேட்ட வினாவில் சமைந்துபோய் நின்றவர், “உங்களயெல்லாம் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு.! என்னால, நீங்க உங்களுக்கு தோணுறத செய்ற மாதிரி செய்ய முடியல. இங்க இருக்குற அமைதியான வாழ்க்கை நான் வாழுற காலத்துல இல்ல. அங்க ஒருத்தருக்கு எவ்ளோ பாதுகாப்பு இருந்தாலும், ப்ளட் ரிலேசன், ஒரு பற்றுதல் நீங்க சொல்லுவீங்களே அன்பு, காதல் இப்டி எதுவும் கிடையாது. அதுவும் நான் இவ்ளோ தூரம் சிந்திச்சு பேசுறேன்னா அதுக்கு காரணம் அங்க இருக்கப்போவே ஹைனஸ்க்கு தெரியாம நான் என்னோட சிப்ல சில மாடிஃபை பன்னதுனாலதான். எனக்கு இங்க இருக்குற மாதிரியே என்னோட காலமும் இருக்கணும். அதுக்கு தேவையானத எடுத்துக்கிட்டு நான் போய்டுறேன். சட்டத்துக்கு மீறினதுதான். ஆனா, நான் இல்லன்னா இன்னொருத்தர் இந்த ஆராய்ச்சிய செய்வாங்க. அதுக்கு உன்னோட அப்பா வேணும். அங்க இருக்குற எனக்கு தெரிஞ்ச ஆளுங்க மாதிரியே நீங்களும் இருக்கீங்க. நீங்களும் இருக்கணும். அதுனால நான் சொல்றேன்” என்றார்.

தூயவனுக்கு மனதில் ஒரே குத்தாட்டம்தான். அவன் தற்போது கையில் எடுத்திருக்கும் ஆராய்ச்சியே இந்த கால பயணம் பற்றியதுதான். அது மட்டுமில்லாமல் இதைப் பற்றி தான் ஒரு நாவல் எழுதினால் வாசகர்கள் மத்தியில் நிச்சயம் இது பெரிய வரவேற்பை பெறும் என்றும், சட்டென பல பல மனக்கோட்டைகள் கட்டினான். அவனின் கோட்டையில், கீழே பல பத்திரிக்கைக்காரர்களும் மக்களும் அவனின் ஒற்றைக் கையசைப்பிற்குக் காத்துக் கிடப்பதுபோலும், தான் டைம் டிராவல் இயந்திரத்தில் ஏறி, எதிர்காலத்தில் இருக்கும் முகம் தெரியா அதிரனை சந்தித்து, நலம் விசாரிப்பது போலும், அந்த 3021 காலத்திலும் அவனுக்கு வெகு விமர்சையாக வரவேற்பு கிடைப்பதுபோலும் பெரிய பெரிய கற்பனை குதிரைகளை தட்டிவிட்டான்.

அதிரன் திடீரென்று தன்னை அறைவதுபோல் இருக்க, தன்னிலை அடைந்தவன் முன்னிலையில் அகரன்தான் நின்றுக்கொண்டிருந்தான்.

திருதிருவென விழித்தவன், “எங்கடா என்னோட பங்களா? இந்த இடத்துல அதிரன் தானே இருக்கணும். நீ என்ன பன்ற?” என்று கேள்விகளை அடுக்கியவனை இசையும் குணாவும் கேவலமாகப் பார்க்க, “நினச்சேன். ஒளியோட வேகத்த விட உன்னோட கற்பனை வேகம் ரொம்ப பாஸ்ட்டா இருக்குடா. நீ கொஞ்சம் தெளி. அவர் உன்னை ரொம்ப நேரமா கூப்டுட்டு இருக்காரு” என்றான் அகரன் இன்பத்தமிழனைக் கைக் காண்பித்து.

“ஹான், சொல்லுங்க!”

“மணி இப்போ ஒன்னு பதினைஞ்சு. கணக்குப்படி பார்த்தா இந்நேரம் நான் டேப்லட் போட்டு இருக்கணும். சோ, இப்போ எனக்கு தண்ணீ வேணும்.” என்றார் அவர்.

“அட, ஆமா! எனக்கும் பசிக்குது. சாப்ட அப்ரோம் இவர் சொல்றதுலாம் கேட்கலாம்பா” என்றான் அகரன்.

அவனைத் திட்ட வாயெடுத்த இசைக்கு அனைவர் முகத்திலும் இருந்த களைப்பு தெரிய, குணாவிடம் “நீ போய், அம்மாக்கிட்ட சொல்லி, இல்ல வேண்டாம். அன்னம் அத்தைக்கிட்ட சொல்லி அஞ்சு பேத்துக்கும் சாப்பாடு கொண்டு வா!” என்றவளிடம்,

“இல்ல இசைசத்தமிழ், எனக்கு டேப்லட் போதும். அதுலயே இன்னைக்கான எனர்ஜி எனக்கு கிடைக்கும்.” என்றார் இன்பத்தமிழன்.

“அப்போ சாப்பாடுலாம்?” என்ற கேள்விக்கு விரக்தியாய் பதிலளித்தவர்,

“அப்டி ஒன்னு இருக்குறதே எனக்கு என்னோட ரிசர்ச்ல தான் தெரியும்” என்றவரின் சொல்லில் அளவுகடந்த வலியும் ஏக்கமும் நிறைந்து இருந்தது.


புலரும்…
 
நேரம் 9

தன் இல்லத்திற்கு சென்ற குணா, அன்னையிடம் ஏதேதோ சொல்லி அவரை சமாளித்துவிட்டு, நால்வருக்கான உணவைக் கொண்டு வந்தான். அடிக்கடி அவன் உணவை எடுத்துச் செல்வதால் அன்னமும் வேறெதுவும் கேட்காமல் அமைதியாகி விட்டார்.

ஆனால், அவன் கிளம்பும் தருவாயில், “குணா, அண்ணே இன்னும் வூட்டுக்கு வரலன்டு மதினி போன் பண்ணி சொன்னாவ. இப்போ நீ அண்ணனுக்குத்தான சோறு கொண்டு போற, மதினிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு சாமி. அப்ரோம் மதினி சாப்டாம கொல்லாம கிடப்பாவ.” என்று அக்கறையோடு மொழியும் அன்னையிடம் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் தலையசைத்துவிட்டு புறப்பட்டான் குணா.

அவனின் நினைவெல்லாம் வெற்றிவேலைப் பற்றி மட்டும்தான் இருந்தது. விவரம் தெரிந்த நாள் முதல் அவரின் நிழலில்தான் அவனது வாழ்க்கை. அறியாத வயதில் தந்தை விட்டு சென்றவுடன், ஊரே ஒதுக்கி வைக்க முன் வந்த போது, தன் அன்னையை தங்கையாய் பாவித்து, அவனையும் இத்தனை தூரம் எந்த வித பிரதிபலனும் இன்றி வளர்த்து ஆளாக்குவதென்றால் சாதாரண காரியமா? அதற்கு ஒரு மனம் வேண்டும்.! அத்தகைய மனிதர் வெற்றிவேல்.

ஐந்து நிமிடத்தில் வேப்பமரத்தை அடைந்தான், குணா. அவன் வந்ததும், அனைவரின் கவனமும் அவன் பக்கம் திரும்ப, மற்ற மூவரும் ஒரு பக்கம் நிற்க, இன்பத்தமிழன் மட்டும் தான் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

“யேன், தமிழு, இவரு இங்கனயே நிக்கிறாரு?” என்றுக் கேட்க, மற்றவர்களின் பார்வை தூயவனின் பக்கம் செல்ல, குணாவும் அவனைத்தான் பார்த்தான்.

“ஹலோ, இப்போ என்ன என்னை எல்லாரும் லுக் விடுறீங்க? நான் அப்டி என்ன தப்பா சொல்லிட்டேன்? அவர் அந்த இடத்த விட்டு நகர்ந்து ஒருவேள சிக்னல் ஆக்டிவ் ஆகிடுச்சுன்னா என்ன பன்றதுன்னு தானே, அவர நகர வேண்டாம்னு சொன்னேன். அதுக்கு இந்த லுக்கா? ஒரு மனுசன் நல்லத சொல்லக் கூடாதே! பொறுக்காதே! என்னமோ பண்ணுங்க, எனக்கு பசிக்குது. நான் போய் சாப்டுறேன்” என்று சிலுப்பிக் கொண்டவன், குணாவின் கையில் இருந்த உணவு பையை வாங்கிக் கொண்டு, தான் ஏற்கனவே சுத்தம் செய்து வைத்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தான்.

பையிலிருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்தவன், “அட, அட.! குணா, உன் அம்மா கைப்பக்குவம் அருமையோ அருமை போ.” என்று புகழ்ந்தான்.

“இன்னும் நீங்க சாப்டவே இல்லையே? அதுக்குள்ள இந்த புகழு புலுவுறீங்க? ச்சீ புகழுறீங்க?” என்று நக்கலாகக் கேட்டான் குணா.

“என்ன நக்கலா? வாசனையே ஆளத் தூக்குது. அதனால சொன்னேன். தினமும் உனக்கு ஆக்கிப் போடுறாங்கள, அந்த மிதப்பு. என் வீட்டுக்கு வந்து பாரு, தினமும் உனக்கு பருப்பு குழம்புதான்.” என்றவன், “ஆமா, நீங்க யாரும் சாப்ட வரல?” என்று அனைவரையும் பார்த்துக் கேட்டான்.

“இல்ல எனக்கு பசிக்கல! நீங்க சாப்டுங்க” என்று இசைத்தமிழ் நகர, அகரனும் அவளோடு செல்ல எத்தனித்தான்.

“ஹலோ, ரெண்டு பேரும் ஒரு நிமிசம் நில்லுங்க. நீங்க வருத்தத்துல இருக்கீங்கன்னு எனக்கு புரியுது. ஆனா, பட்னியா கிடந்தா எல்லாம் சரியாகிடுமா என்ன?

ஒரு மனுசன் பதட்டமாவும் முடிவு எடுக்க முடியாமலும் இருந்தா அப்போ அவனோட மூளை நிஜமாவே ரொம்ப சோர்ந்து போய்டும். அப்போ எந்த வேலையும் செய்ய முடியாது. அதுக்கு தான், எவ்ளோ பிரச்சனை வந்தாலும், வயித்த மட்டும் காயப் போடக் கூடாதுன்னு என்னோட அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. சோ, எல்லாரும் முதல்ல வந்து சாப்டுங்க” என்றழைத்தான் தூயவன்.

அகரன், இசையை நோக்க “என்னோட அப்பா அங்க சாப்டாரா இல்லையான்னு கூட தெரியல. அப்டி இருக்குற இந்த மாதிரி சூழ்நிலைல உங்களால வேணா சாப்டாம இருக்க முடியாம இருக்கலாம். ஆனா, எனக்கு அப்டி கிடையாது.” என்றுக் காட்டமாய் மொழிந்தாள்.

அதற்கு இன்பத்தமிழன் “அப்டி கிடையாது இசை, தூயவன் சொல்றது சரி. எப்டியும் சாப்ட்டு நான் உங்களுக்கு விளக்கமா சொல்லப் போறேன். அது மட்டும் இல்லாம, அங்க உன்னோட அப்பாக்கு எந்த பிரச்சனையும் வராது. என்னோட கெஸ்படி பார்த்தா இந்நேரம் உன்னோட அப்பா யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். இங்க எப்டின்னு எனக்கு தெரியாது. ஆனா, என்னோட காலத்துல விவசாயிக்கு ரொம்ப மரியாதை. இத மட்டும் அமரோ இல்ல அதிரனோ கண்டுபிடிச்சி இருந்தா, இந்நேரம் கண்டிப்பா உன்னோட அப்பா ரொம்ப பாதுகாப்பா தான் இருப்பாரு. அதனால சாப்டு” என்றார்.

“ஒருவேள அவங்க கண்டுபிடிக்காம இருந்தா?” என்றவளின் பதட்டம் மேலும் அதிகரித்தது.

“நெகட்டிவ்வா யோசிக்காத இசை. முதல்ல சாப்டு வா.!” என்று அவளை அழைத்து சென்றான் அகரன்.

“சாருக்கும் தனியா சொல்லனுமோ? வா வந்து சாப்டுங்க மிஸ்டர் குணா” என்று தூயவன் நக்கலாக அழைக்க, அவனை முறைத்துக் கொண்டே வந்தமர்ந்தான் குணா.

அனைவருக்கும் முன், தூயவன் அந்த பாத்திரத்தின் மூடியை திறக்க, அதிலிருந்து வகைவகையான உணவு கண்முன்னே பளிச்சிட்டது.

“அட, அட, அட! இதல்லவா உணவு. செம போ.! மீன் குழம்பு, நாட்டுக்கோழி வறுவல், சோறு, ரசம் தோ பார்ரா முட்டை கூட இருக்கு” என்று ஒவ்வொன்றாக எடுத்து வைத்தவன், தனக்கு வேண்டுகிற அளவு போட்டுக் கொண்டான்.

“இதுக்கு முன்னாடி உங்க பிரண்ட் சாப்பாட்டயே பார்த்தது கிடையாதா?” என்று இசை அகரனை ஒரு மாதிரியாக நோக்க,

அவனோ அசடு வழிந்துக் கொண்டே, “அப்டியில்ல இசை, அவன் வீட்ல எல்லாரும் வெஜ். இவன் மட்டும் எங்க கூட ஹாஸ்ட்டல்ல இருந்தப்போ நான்வெஜ் பழகிட்டான். அதான் ரொம்ப நாள் கழிச்சு சாப்டுறதுனால...” என்று இழுக்க,

“திங்குறத பாரு, சோத்துக்கு செத்தவன் மாதிரி” என்று குணா வேறு ஒரு பக்கம் கரித்துக் கொட்டினான்.

இவர்கள் சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இன்பத்தமிழன். அதிலும், முக்கியமாக தூயவன் சாப்பிடும் விதத்தைத்தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவன் நெத்திலி மீனின் முட்களை எடுத்து சாப்பிடுவதையும், சாப்பாட்டின் நடுவில் அடிக்கடி சப்புக் கொட்டுவதையும் கண்டவருக்கு அந்த ருசியை அறிய வேண்டும் போலிருந்தது.

தான் இருக்குமிடத்தை விட்டு அவர்களை நோக்கி நகர்ந்தவர், “எனக்கும் கொஞ்சம் சொல்லித் தரீங்களா?” என்றுக் கேட்டார்.

நால்வரும் திடீரென்று அவரை நோக்க, “இல்ல, என்னோட காலத்துல விவசாயம் மறுபடியும் வரதுக்கான வாய்ப்ப என்னால உருவாக்க முடியும்னு எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. அப்டி உருவாக்கிட்டா அத எப்டி பயன்படுத்தி மக்கள சாப்ட வைக்கணும்னு நான்தான் சொல்லணும். அது என்னோட கடமை. சோ, கத்து தர முடியுமா?” என்று கேட்டவரை இசைதான் பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘எந்தளவுக்கு தன்னை இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், மக்களின் நலனையும் அவருக்குப் பிறகான சந்ததிகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுவார்’ என்று எண்ணி வியந்தவளுக்கு, அவளின் தந்தை வெற்றிவேலின் நினைவே பெரிதும் வாட்டியது.

‘என்னோட அப்பாவும் இப்டிதான், தான் நல்லத விட, மத்தவங்களோட நல்லத தான் ரொம்ப யோசிப்பாரு. நிச்சயம் அவருக்கு ஒன்னும் ஆகி இருக்காது. அவர் என்கிட்ட திரும்பி வந்துடுவாரு.’ என்று தனக்குத் தானே சமாதானம் கொண்டவள், இன்பத்தமிழன் அமருவதற்கு இடம் தந்து எப்படி உணவு உண்ண வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள்.

இன்பத்தமிழனின் உணர்வுகள் அவருக்கு எதையோ சொல்லத் தூண்டியது. ஆனால், இந்தத் தருணத்தை அவர் பெரிதும் ரசித்தார். ‘யான் என்ன பாக்கியம் செய்தேனோ, என் உயிரணுவில் பிறக்காவிடினும் அவளின் மகள் பாசத்தை உணரும் பெரும்பேற்றை காலம் கடந்து வந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் சொல்ல சொல்ல சரியாக உணவை முடித்தவர், இறுதியில் தூயவன் செய்தது போல் செய்தார். தூயவன் தன் தட்டில் இருப்பதை முழுவதுமாக உண்டு முடித்தவன், தன் விரல்களை வாயிற்குள் விட்டு விட்டு, அந்த உணவின் சுவையை இன்னும் தனக்குள் கொண்டு சென்றுக்கொண்டிருக்க இன்பத்தமிழனும் அதையே செய்தார். அவரின் செய்கையைப் பார்த்த இசைக்கு சிரிப்புத்தான் வந்தது. சிறுவயதில் தான் அவ்வாறு செய்யும்போது ‘தமிழு, என்ன பழக்கம் இது? சோறு சாப்ட்டு முடிச்ச அப்ரோம் இந்த மாதிரி விரல சப்பக் கூடாது தமிழு. அது தப்பு’ என்று தந்தை அதட்டுவதும், இன்று அவரே இப்படி சாப்பிடுகிறார் என்று நினைத்து சிரித்தவளுக்கு, இவர் தன் தந்தை இல்லை என்பதே தற்போது தான் உரைத்தது.

இன்பத்தமிழன் இன்று தான் ஏதோ புதுவித உணர்வால் ஆட்கொண்டிருப்பதாக உணர, அவரின் இதயம் அளவுக்கு மீறி துடித்தது. ஒரு பதட்டம் அவரை சூழ்ந்துக் கொள்ள, அவரைக் கவனித்துக் கொண்டிருந்த அகரன் “என்ன ஆச்சு உங்களுக்கு? இவ்ளோ நேரம் நல்லாதானே இருந்தீங்க?” என்று கேட்டான்.

“என்னன்னு தெரியல! எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஒரு மாதிரி எனக்குள்ள இருந்து சத்தம் வருது.” என்று பெருத்த ஏப்பம் விட்டவர், “இதோ, இந்த மாதிரிதான். இதுக்கு என்ன காரணமா இருக்கும்? ஒருவேள நான் திடீர்ன்னு சாப்பிட்டதால இருக்குமா? என் உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா? பேசாம நான் டேப்லட்டே சாப்ட்டு இருக்கணும். நான் செத்துடுவேனா?” என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கியவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

இசை நன்கு உணர்ந்துக் கொண்டாள். என்னதான் அவர் தன் தந்தையை ஒத்தது போல் இருந்தாலும், இந்த உலகமும் மக்களும் செயல்பாடுகளும் என அனைத்தும் புதிதுதான். ஆகவே, பிறந்த குழந்தை வளரும் தருவாயில் நாம் எவ்வாறு அவர்களை கையாளுவோமோ அப்படித்தான் இவரையும் கையாள வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டாள்.

இவரின் கேள்வியில் அகரனிற்கும் குணாவிற்கும் கூட சிரிப்புத்தான் வந்தது.

“நீங்க எதுக்கும் பயப்படத் தேவயில்ல. சாப்டா இப்டித்தான் ஏப்பம் வரும். இதுவும் இயற்கைதான். இத்தனை வருசமா நீங்க வெறும் மாத்திரை மட்டும்தானே சாப்டு இருக்கீங்க. இந்த சாப்பாடுலாம் உங்க உடம்புக்கு ஒத்து போகுமான்னு யோசிச்சேன். நல்ல வேள ஒத்துப் போயிடுச்சு. அதுனாலதான் இப்டி ஏப்பம் வருது. நீங்க பயப்பட வேண்டாம்” என்றாள் இசை.

அப்போது அங்கு வந்த தூயவன், தற்போதுதான் கவனித்தான் இன்பத்தமிழன் இடம்மாறி நிற்பதை. “யாரைக் கேட்டு நீங்க அங்க இருந்து இங்க வந்தீங்க? அந்த இடத்துலதான நிக்க சொன்னேன். இப்போ என்ன ஆச்சுன்னே தெரியலயே.! சப்போஸ் சிக்னல் போயிருந்தா?”

“போயிருந்தா????” என்று மூவரும் அதிர்ச்சி விலகாமல் கேட்டனர்.

அப்டி போயிருந்தா என்ன நடந்து இருக்கும்?

புலரும்...
 

1677979921742.jpeg




நேரம் - 10


இடம் 3021 – ஆய்வுக்கூடம்.

அந்த லைட் ரூம்மில் இருந்தவர்களை எப்படியோ ஏமாற்றிவிட்டு இவர் வெளியே வந்தார்.

எங்கு செல்வதென்று தெரியவில்லை. அந்த நீள் வராண்டாவை கண்டதும் அவருக்கு உள்ளே உதறல் எடுத்தது. அந்த இடம் முழுவதும் மெல்லிய வெளிச்சம் மட்டுமே பரவியிருந்த நிலையில், பொறுமையாக செயல்பட எண்ணினார். அந்த இடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தது. வரிசையாக ஒவ்வொன்றின் பக்கமும் சென்றவர், முதல் அறையிலேயே ஸ்தம்பித்து நின்று விட்டார். அங்கிருக்கும் அனைத்து கதவுகளும் கண்ணாடியால்தான் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நாம் நினைப்பது போல அதனை அத்தனை எளிதில் உடைத்திட முடியாது. வெளியே இருந்து பார்த்தால் உள்ளே நடக்கும் அனைத்தும் தெரியும். உள்ளே இருந்து பார்த்தால் வெளியே நடப்பது ஒன்றுமே தெரியாது. வெற்றிவேல் இருந்த அறையும் அவ்வாறுதான் அமைக்கப்பட்டிருந்தது.

“அட, கடவுளே! என்ன நடக்குது இங்க? என்ன பன்றாங்க?” என்று சற்று அந்த கண்ணாடி வழியாக உற்று நோக்கிட, ஒரு பிரம்மாண்ட அறையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொன்றாக வளர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதுவும் எந்த குழந்தைக்கும் நோய் தொற்று வராதபடி அனைத்தும் ஒரு கருவியின் மூலம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

“இவங்க குழந்தைகள தயாரிக்குறாங்களா? அப்போ எல்லாரும் ரோபாட்டா? ஆனா, பார்க்க எல்லாரும் நம்மள மாதிரி சாதாரண மனுசங்க மாதிரிதானே தெரிஞ்சாங்க. அறிவியல் வளர்ச்சி தேவைதான். ஆனா, ஆயிரம் வருசத்துக்குப் பின்னாடி இப்டித்தான் இருக்குமா?” என்று பெரிதும் தவித்துத்தான் போனார்.

தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, தான் தப்பிச் செல்ல வேறேதேனும் வழி கிடைக்குமா என்று யோசித்தவர், ஒவ்வொரு அறையையும் சோதனையிட முடிவு செய்தார்.

“இந்த மாதிரி நிலமையிலயா என்னோட வம்சமும் வளரப் போவுது? கடவுளே!” என்று புலம்பியவர் திரும்பிட, அங்கு அவரையேப் பார்த்த வண்ணம் சர்விகா நின்றுக் கொண்டிருந்தாள்.

அந்த நிமிடம் அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. “உங்கள நான் அந்த ரூம்ல தானே வெய்ட் பண்ண சொன்னேன், இங்க என்ன பன்றீங்க?” என்றுக் கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறித்தான் போனார்.

“தப்பிக்க டிரை பன்றீங்களா?” என்று அவளே அவரை அனுமாதித்து சொல்ல, அவசரமாக இல்லையென்பது போல் தலையாட்டினார்.

“இல்ல, இந்த இடம்லாம் ரொம்ப புதுசா பாக்கவே வித்தியாசமா இருக்கு. அதான் பா... பாக்கலாம்னு” என்று இழுத்தவரை சுவாரஸ்யமாகப் பார்த்தவள்,

“ஒ, அப்டியா! சரி, என் கூட வாங்க. நானே உங்களுக்கு எல்லாத்தயும் சுத்திக் காட்டுறேன். அதுக்கு முன்னாடி நான் இந்த உலகத்தோட அடிப்படை விதிமுறைகள சொல்லிடுறேன். அத கவனமா கேட்டுக்கோங்க.” என்றிட, அவரும் சற்று ஆசுவாசமடைந்தார்.

“நான் சொல்லப்போற விசயத்தயெல்லாம் கேட்குறதுக்கு முன்னாடி நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. சோ, முதல்ல சாப்டுங்க” என்று அவரிடம் ஒரு மாத்திரையை நீட்டினாள்.

“என்ன இது?”

“இதுதான் இங்க சாப்பாடு. உங்க காலத்துல நீங்க நிறய சாப்டுவீங்கன்னு இன்பத்தமிழன் சொல்லி இருக்காரு. ஆனா, இங்க இதுதான் சாப்பாடு. சாப்டுங்க”

“இத சாப்டா பசியெடுக்காதா என்ன?” என்றவரின் பார்வை அந்த மாத்திரையையும் சர்விகாவையும் நம்பாமல்தான் இருந்தது. ‘ஒருவேள மயக்க மருந்து, இல்லன்னா, ஏதாவது போதை மருந்த கொடுத்து நம்மள அவங்க கன்ட்ரோல்ல வச்சிப்பாங்களோ? அதெப்படி சாப்பாடு இல்லாம மனுசங்க வாழ முடியும். என்ன ஏமாத்ததான் இந்த மாதிரி ஏதோ புதுசா அவுத்து விடுறாங்க’ என்றுதான் அவரின் எண்ணம் முழுக்க இருந்தது.

அவரின் சந்தேகத்தைப் பார்த்து சர்விகாவிற்கு சிரிப்புத்தான் வந்தது. தன் கையில் வைத்திருந்த மாத்திரையை அவர் முன்னே விழுங்கியவள், “இப்போ சொன்னீங்களே, பசி.? அப்டின்னா என்னன்னு கூட இங்க இருக்குற மக்களுக்கு தெரியாது. நீங்க உங்க காலத்துல உணர்வுப்பூர்வமா பார்த்த விசயங்கள் அனுபவிச்ச விசயங்கள் எல்லாம் இப்போ இங்க வெறும் டெபனிசன் மட்டும் தான்.

இங்க இருக்குற மக்கள்கிட்ட பசின்னு சொன்னா என்னத் தெரியுமா சொல்லுவாங்க. ‘அது ஒருவகையான நோய். நம்ம உடம்புக்கு தேவையான பொருட்கள் எந்த விதத்துலயும் போய் சேராம இருந்தா இந்த நோய் வரும். அதாவது, வயிறுக்குள்ள இருந்து சத்தம் வரும், ஒரு மாதிரி மனசு நிம்மதியில்லாம இருக்கும். இதுதான் இதோட அறிகுறி.’ இதத்தான் அவங்க சொல்லுவாங்க. அவங்கள, ஏன் இங்க இருக்குற எல்லாரப் பொறுத்தவரைக்கும் பசின்னா அது உணர்வு கிடையாது அது ஒரு நோய். இங்க இருக்குற எல்லாரும் நோயில்லாமதான் இத்தனை வருசமா வாழ்ந்துக்கிட்டு வராங்க. அதுனாலயே நாங்க வாழுற ஆயுட்காலம் மனுசங்களுக்கு மனுசங்க ஈசியா மாடிஃபை பன்ற மாதிரி வச்சி இருக்கோம்.” என்றவளை பெரும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார் வெற்றிவேல்.

“என்ன...? பசி ஒரு நோயா? இங்க பாருமா, நீ முதல்ல இங்க என்ன நடக்குது? ஏன் இப்டி உலகம் மாறிப் போச்சு இதயெல்லாம் முழுசா சொல்லு. நான் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரேயடியா அதிர்ச்சியாகுறேன்” என்று கடுகடுத்தார்.

தலையசைத்தவள், “அதுக்கு முன்னாடி இத சாப்டுங்க. இல்லன்னா, நிச்சயம் நீங்க உங்க உலகத்துக்கு போற வரைக்கும் தாங்க மாட்டிங்க” என்றவளின் பேச்சில் என்ன கண்டாரோ, இல்லை தான் தான்வாழும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற வைராக்கியம் அதிகமானதோ என்னவோ அந்த மாத்திரையை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

“மாத்திரை மட்டும் கொடுத்தா எப்டி? தண்ணீ வேணும்ல மாத்திரை போட?” என்றவரின் ஒவ்வொரு கேள்வியும் சர்விகாவிற்கு தான் படித்த அனைத்தும் நிஜத்தில் நடப்பது போன்ற உணர்வுதான் எழுந்தது.

“தண்ணீ வாங்குற அளவுக்கு செல்வாக்கு இருந்தா நான் ஏன் இங்க வொர்க் பண்ண போறேன் வெற்றிவேல். தண்ணீயெல்லாம் நாம நினச்ச நேரத்துக்கு கிடைக்காது. எப்பவாவதுதான் கிடைக்கும். நீங்க இத வாய்ல போடுங்க. இது ஆட்டோமேட்டிக்கா கரைஞ்சுடும். தண்ணீ தேவையில்ல” என்றவளின் சொல்லிற்கு இந்த முறை அவர் கிஞ்சித்தும் அதிர்ச்சியாகவில்லை. இதனை அவர் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.

உணவுக்கு ஆதாரமே நீர்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அங்கு உணவே கிடைக்காது என்கிற பட்சத்தில் தண்ணீர் மட்டும் கிடைக்குமா? என்று அவர் யோசித்துதான் இருந்தார்.

உணவுக்கே இங்கு வழி இல்லாதபோது நீர் எங்கிருந்து கிடைக்கும்? என்று எண்ணி மனதிற்குள் குமைந்தார் வெற்றிவேல்.

சர்விகா சொன்னதுபோலவே அந்த மாத்திரையை வாயில் வைத்ததுமே கரைந்துபோனது. அதனை சாப்பிட்ட பிறகு சிறிது புத்துணர்வாக உணர்ந்தார் என்பதை மறுக்க முடியாது.

“நான் சொல்லப் போற விசயங்கள் உங்க காலத்துல சுத்தமா இருக்காது. சோ, சில இடங்கள் உங்களுக்கு புரியாமகூட இருக்கலாம். நடுவுல ஏதாவது சந்தேகம் இருந்தா தயவு செய்து கேளுங்க.” என்று அந்த காலத்தின் சாரம்சத்தையும் எப்படி பூமி அழிவுற்றதையும் மீண்டும் எவ்வாறு உருவாகியது என்பதையும் விளக்கலானாள்.

“கிட்டத்தட்ட கி.பி. 2500ஆவது வருசத்துலதான் இந்த பூமி பெரிய அழிவ சந்திச்சுது. அப்போ அத முன்னாடியே தெரிஞ்சிக்கிட்ட சில சைன்டிஸ்ட்ஸ் எல்லாம் ஒன்னா சேர்ந்து இந்த தகவல்ல ஏலியன்ஸ்க்கு அனுப்ப முடிவு செஞ்சாங்க.”

“என்னது ஏலியன்ஸ்சா? அப்போ ஏலியன்ஸ் இருக்குறதெல்லாம் உண்மையா?” என்று அதிர்ந்து வினவினார் வெற்றிவேல்.

1677979842768.png

“யெஸ், அதுவே 2450ல தான் ப்ரூவ் பண்ணாங்க. பூமில அழிவு ஏற்படுறதுக்கு முன்னாடி பிரபஞ்சம் முழுசும் பெரிய மாற்றத்த சந்திச்சுது. பிரபஞ்சம்ங்குறது நிறய பால்வெளி மண்டலங்கள் சேர்ந்ததுதான்.

அந்த பால்வளி மண்டலத்துலயும் நிறய விண்மீன்கள் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் கவுண்டிங்க்ல இருந்து நூறு டிரில்லியன் கவுண்டிங்க்கும் மேலயும் விண்மீன்கள் இருக்கும்.

அதுல பெரிய விண்மீன்களா நாம கண்டுபிடிச்சதுதான் சூரியன் அப்டின்னு உங்க காலத்துல இருந்த அந்த பெரிய விண்மீன். சில ஸ்டார்ஸ் ரொம்ப குளிர்ச்சியாவும் சிலது ரொம்ப ஹீட்டாவும் இருக்கும்.

சூரியன் இதுல ரெண்டாவது வகை. அப்டி ஹீட்டா இருக்குற நட்சத்திரங்கள் தன்னோட ஈர்ப்பு சக்திய வச்சு தன்னை சுத்தி இருக்குற எல்லா பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட காந்தவியல் அட்ராக்சன்ல அட்ராக்ட் பண்ணி மெய்ன்டைன் பண்ணும். அப்டிதான் பூமி உருவான நாள்ல இருந்து நீங்க கால்குலேட் பண்ண அந்த ஒன்பது கிரகங்கள் எல்லாம்.

இந்த ஹீட் சப்ஸ்டன்ஸ் இருக்குற சூரியன்னு சொல்லப்படுற பெரிய விண்மீன் மாதிரி ஒரு பால்வெளி மண்டலம் அதாவது கேலக்சில பல சூரியன் இருக்கும். கேலக்சிங்குறதே பிரபஞ்சத்துல ஒரு பகுதிதான். ஒரு பகுதின்னு கூட சொல்ல முடியாது. அத விட ரொம்ப கம்மி. அப்டி இருக்குற பட்சத்துல நாம இருக்குற இந்த கேலக்சில 2400ஆவது வருசத்துல பல முறை கருந்துளை அட்டாக் நடந்து இருக்கு. அதாவது, ப்ளாக் ஹோல் அட்டாக் அடிக்கடி கேலக்சிய தாக்கி இருக்கு.

ஒரு ஸ்டார் தன்னோட ஒரு நொடிக்கு 145 மைல் வேகத்துல டிராவல் பண்ணும். இன்னும் பெரிய அதே சமயம் வேகமான ஸ்டார்ஸ் எல்லாம் ஒரு நொடிக்கு 400 மைல் வேகத்துல போகும். அப்டி இருக்குறப்போ அந்த ஸ்டார்ஸ் எல்லாம் பிரபஞ்சத்த விட்டே போகுறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம்.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலைலதான், ப்ளாக் ஹோல் அட்டாக் நடந்து இருக்கு. அப்போ அதிர்ஷ்டவசமா நாம இருக்குற இந்த சூரிய மண்டலம் மட்டும் எந்த வித பாதிப்பும் இல்லாம தப்பிச்சுடுச்சு.

ஆனா, கேலக்சில பல விதமான சேன்ஜஸ் நடந்து இருக்கு. அந்த மாற்றங்கள்ல ஒன்னுதான் ஏலியன்ஸ் மனிதர்கள கான்டக்ட் பண்ணது.

ரொம்ப வருசமாவே ஏலியன்ஸ், அதாவது இன்னொரு கிரகத்துல இருக்குறவங்க நம்மள கான்டக்ட் பண்ண டிரை பண்ணப்போ அதுக்கான சரியான எக்கியூப்மென்ட் நம்ம கிட்ட இல்லாம போச்சு. சோ, அத சரியான ஆதாரமா யாரும் கன்சிடர் பன்னல. ஆனா, இந்த ப்ளாக் ஹோல் எஃபெக்ட்டுக்கு அப்ரோம் அப்போ ரொம்ப முக்கியமா இருந்த இடமான ISROல தான் ஏலியன்ஸ்க்கான சிக்னல் கிடச்சது. அப்போ அங்க இருந்த சீஃப் தாமஸ் பெர்னான்டோ ரிசர்ச் பண்ணி ஏலியன்ஸ்ச கான்டக்ட் பன்னாரு.

அவர்தான் தலைசிறந்த சயின்டிஸ்ட்டா இன்னைக்கு வரைக்கும் இருக்காரு.”

“2400ல இருந்தவரு இப்போ வரைக்கும் உயிரோட இருக்காரா?”

அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள், “உங்களுக்கு அத கடைசியா விளக்குறேன். அவர் ஏலியன்ஸ் கிட்ட பேச ரொம்ப டிரை பன்னாரு. ஆனா, அவங்க பேசுற மொழியும் நாம பேசுற மொழியும் ரொம்ப டிஃபர் ஆகி கம்யூனிகேசன் ப்ராப்ளம் வந்தது. அதுனால கோடிங்க் மூலமா பூமியப்பத்தி தகவல் அனுப்பினாரு.

அதுக்கு அப்ரோம்...?

புலரும்...
 
1678167205977.jpeg


நேரம் -11

இடம் – 3021- ஆய்வுக்கூடம்.
சர்விகா & வெற்றிவேல் உரையாடல்.

ஏலியன்ஸ்க்கு இது பூமின்னு தெரிஞ்ச உடனே, அவங்க அதுக்கு ஏத்த மாதிரி நம்ம லாங்குவேஜ் இன்டர்பிரட்டேசன் மூலமா நம்மள கான்டாக்ட் பண்ணாங்க.

அவங்க விருப்பம், பூமிக்கு வந்து அங்க வாழுற மக்களோட வாழ்க்கையப் பத்தி தெரிஞ்சிக்கவும் இன்னும் சில அட்வான்ஸ் எக்கியூப்மென்ட்டயும் நமக்கு கொடுக்குறதா இருக்காங்கன்னும் தெரிஞ்சது. தாமஸ் சார்ரும் நம்ம ப்ரசிடன்ட் அன்ட் நாசாகிட்டயும் இத பத்தி கன்வே பண்ணி பர்மிசன்காக வெய்ட் பண்ணாரு.

அவங்க சிக்னல் கிடச்ச இருபதாவது நாள், பர்மிசன் கிடச்சது.

சரியா ஜனவரி 1, 2401 அப்போ ஏலியன்ஸ் இங்க வந்தாங்க. நம்மள கான்டக்ட் பண்ண ஏலியன்ஸ் இன்னொரு கேலக்சிய சேர்ந்தவங்க.

அங்க இருந்த ஒட்டாமா குட்டாவோ அப்டிங்குற கிரகத்துல இருந்து வந்து இருக்காங்க. அவங்க சீஃப் 601 ஒட்டான் இங்குஸ்தி. அவர்தான் பர்ஸ்ட் பர்சன் கேலக்சி டிராவல் செய்தவரு.

அவர்கூட கிட்டத்தட்ட 10 பறக்கும் தட்டுகள் வந்தது. அதுல அவங்க சோல்ட்ஜர்ஸ் இருந்தாங்க. அவங்க அப்பியரன்ஸ் 7 அடிக்கும் மேலான உயரமும், ஒவ்வொருத்தரும் 150 கிலோக்கும் அதிகமான வெய்ட்டும் இருப்பாங்க. அவங்க தலை ஒரு பெரிய பாறாங்கல் மாதிரி இருக்கும். இதெல்லாம் கூட எனக்கு இன்பத்தமிழன் சொன்னதுனாலதான் தெரியும். அவங்களோட போட்டோகாப்பி அன்ட் ரெண்டு ஸ்பெசிமன் எல்லாம் தாமஸ் கன்ட்ரோல்ல தான் இருக்கு.

அந்த இன்சிடன்ட்டுக்கு அப்ரோம் அடிக்கடி ஏலியன்ஸ் இங்க வர ஆரம்பிச்சாங்க. இப்போ இங்க இருக்குற அட்வான்ஸ் சயின்ஸ் எல்லாம் அவங்க சொல்லிக் கொடுத்ததுதான்.

2500ல தான் ஒரு பெரிய பேரழிவு பூமிய மட்டும் இல்லாம ஒட்டுமொத்த கேலக்சியயும் மாத்தி போட்டுச்சு.

அப்டி ஒரு அழிவு வர போறத பத்தி தாமஸ் தலைமைல இருந்த சில சைன்டிஸ்ட் கண்டுபிடிச்சு தாமஸ்கிட்ட சொன்னாங்க. அப்போ தாமஸ் ஏலியன் சீஃப் இங்குஸ்திக்கிட்ட கன்வே பன்னப்போதான் ஒரு முக்கியமான விசயம் தெரிய வந்தது. அதாவது, அந்த பேரழிவுக்கு பின்னாடி பிரபஞ்சத்துல பெரிய மாற்றம் வரும். எப்போ வேணா ப்ளாக் ஹோல் அட்டாக் நடக்கும்.

அத விட முக்கியமான விசயம் எந்தவொரு உயிரனமும் உயிர்வாழ தகுதியற்ற இடமாதான் பூமி கன்சிடர் ஆகும். பூமிக்கு அடியில இருக்குற இன்னொரு பூமி உயிர்த்தெழும்.

அப்போ மேல இருக்குற பூமி மொத்தமா அழிஞ்சு போய், புதுசா உருவாக இன்னொரு யுகம் எடுக்கும். இதுதான் அந்த அழிவுக்கு அப்ரோம் நடக்கப் போதுன்னு தாமஸ் சொன்னாரு. இத எப்டி ஆதாரம் இல்லாம ஏத்துக்க முடியும்னு அப்போ இருந்த கவர்ன்மென்ட் இந்த ரிசர்ச்க்கு அடுத்தக்கட்ட லெவல்ல கேன்சல் பன்னிடுச்சு. பூமி அழியப்போதுன்னு சொன்னப்போ யாரும் நம்பல.

அப்போதான் தாமஸ் டீம் இங்குஸ்திக்கிட்ட எல்லாத்தயும் சொல்லி ஹெல்ப் கேட்டாரு. இதுக்கு பெரிய டிமான்ட் ஒன்ன ஒட்டாமா குட்டாவோ கிரகம் ஹைனஸ் வச்சாரு.

அது என்னன்னா…?" என்று நிறுத்தி வெற்றிவேலின் எண்ணங்களை அறிய முயன்றாள்.

பூமியின் மாற்றங்களை கூறிக்கொண்டிருந்தாள் சர்விகா. அவள் சொல்லச்சொல்ல வெற்றிவேலின் கால்கள் பூமியிலிருந்து நழுவதுபோல்தான் இருந்தது. இத்தனை அதிர்ச்சியும் அந்த விவசாய மனிதரால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தும், தன்னைத் திடப்படுத்திக் கொண்டவர், இதனை முழுவதுமாக அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து கேட்கலானார்.

“ஒட்டாமா குட்டாவோ கிரகத்தோட ஹைனஸ் அகண்டன் ஒட்டாமோ கிட்ட இங்குஸ்தி, தாமஸ்சோட ப்ரோட்டோக்கால்ல கொண்டுபோய் இருக்காரு.

அதுக்கு ஹைனஸ் அகண்டன் வச்ச டிமான்ட் என்னதுன்னா, என்னைக்கு பூமி அழிவ நோக்கி போதோ, அப்போல இருந்து முழுசா பாதிப்பு ஏற்பட்டதுக்கு அப்ரோம், ஒட்டாமா குட்டாவோ கிரகவாசிங்க இங்க வந்து சோதனை போடுவாங்க.

அப்பவும் பூமி உயிரினங்கள் வாழக்கூடிய இடமா இருந்துச்சுன்னா, அவங்க சொல்ற ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் எல்லாம் ஃபாலோ பண்ணனும் அப்டின்னு சில ரூல்ஸ் போட்டாங்க.

அவங்க சொன்ன ரூல்ஸ் லிஸ்ட்ல முதல்ல இருக்குறது, இயற்கை வளங்கள்ல இனிமே எந்த காரணத்துக்கும் அழிக்கக் கூடாது.

உயிரோட இருக்குறவங்களுக்கு தேவையான அடிப்படை வசதியெல்லாம் ஒட்டாமா குட்டாவோ கிரகத்து சீஃப் செஞ்சு கொடுப்பாரு. மறுபடியும் பூமி பழைய நிலமைக்கு வர வரைக்கும் இந்த ப்ரொசிஜர் இருக்கணும்.

பூமி என்னைக்கு எல்லா வளங்களும் இருக்க, மக்கள் வாழுறதுக்கு தகுதியான இடமா மாறுதோ அது வரைக்கும் அவங்க கன்ட்ரோலுக்கு கீழதான் இந்த பூமி இருக்கும்.

தென், எப்ப வேணா இந்த பூமில என்னென்ன ப்ரொசிஜர் நடக்குதுன்னு பார்க்க அவங்க வருவாங்கன்னு சொன்னாங்க. இதுதான் அவங்க வச்ச டிமான்ட்.”

“அவங்க வச்சது எல்லாம் பார்த்தா நம்ம பூமிக்கு நல்லதுதானே பண்ணியிருக்காங்க.? அப்ரோம் என்ன பிரச்சனை?”

“நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல வெற்றிவேல். நீங்களும் அமர் மாதிரி கேள்விக் கேட்குறீங்க!” என்று மென்னகை புரிந்தவள் மேலும் சொல்லத் தொடர்ந்தாள்.

“இந்த டிமான்ட்டுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டாதான், மக்கள காப்பாத்த தேவையான இன்ஸ்ட்ரூமென்ட் அன்ட் AFF ஏலியன்ஸ் ஃப்ளையிங்க் ஃப்ளைட்ட அனுப்புவோம்னு சொன்னாங்க.

முதல்ல தாமஸ் அன்ட் அவங்க டீம்ல இருக்குற யாரும் இதுக்கு சம்மதிக்கல. இத நீங்க மேலோட்டமா பார்த்தா நம்ம பூமிய பாதுகாக்கத்தான் இந்த மாதிரி டிமான்ட்ன்னு நமக்கு தோணும். ஆனா, டெஃபனெட்லி நாட்.!

அழிவுங்குறத எப்படி மனிதனால தடுக்க முடியாத ஒரு விசயமோ, ஆக்கமும் அப்டித்தான். ஆக்கம் மனிதர்களோட உதவி மூலமா சில விசயங்கள் தொடங்கப்படுமே தவிர, மனிதனே செய்ய முடியாது.

உங்களுக்கு சிம்பிள்லா புரியுற மாதிரி உதாரணம் சொல்லனும்னா, உங்க காலத்துல ஆண் உயிரும், பெண் உயிரும் சேர்ந்துதான் குழந்தைய உருவாக்கும். ஆனா, சேருற எல்லாருக்குமே குழந்தை உருவாகிடாது. இதுதான் நிதர்சனம்.

எந்தவொரு விசயத்துக்கும் ஒரு கால நேரம் இருக்கு. அது மாதிரிதான், இயற்கையும். அத உங்களோட தேவைக்கு, இல்ல தேவைக்கு மேலயே அழிச்சிட்டீங்க. ஆனா, அந்த இயற்கைய நினச்ச உடனே உருவாக்கிட முடியாது.

உங்க காலத்துல விலையுயர்ந்த பொருள் தங்கம், வைரம் இப்டி சொல்லுவீங்கன்னு இன்பத்தமிழன் சொன்னாரு. அந்த வைரமும் தங்கமும் நினச்ச உடனே மண்ணுல தோண்டுனா கிடச்சிடுமா?

அந்த வைரம் உருவாக எத்தனை வருசம் ஆகும்? எத்தனை இடிபாடுகளுக்கு மத்தியில அது நிலக்கரியா இருந்து அப்ரோம் ஸ்ட்ராங்கான வைரமா மாறுது.? அந்த மாதிரிதான் எல்லா இயற்கை வளங்களும்.

பூமிய அவ்வளவு சீக்கிரத்துல புதுப்பிக்க முடியாதுன்னு நமக்கும் தெரியும், ஒட்டாமா குட்டாவோ கிரகத்தோட ஹைனஸ்க்கும் தெரியும்.

அவங்களுக்கு தேவை நம்மளோட பூமிதான். இங்க இருக்குற வளங்கள் எல்லாம் எவ்ளோ பொக்கிசம்னு உங்களுக்கு தெரியுமா? பூமி உருவான காலத்துல இருந்த பல உயிரினங்கள் உங்க காலத்துலயே இருக்காது.

பூமிய அவங்க கன்ட்ரோலுக்கு கீழ கொண்டு போகனும்ங்குறதுதான் அவங்களோட எண்ணம். அப்போ அந்த அழிவுல இருந்து தப்பிக்க, எங்களுக்கு அந்த கிரகத்தோட சப்போர்ட் அவசியம் தேவைப்பட்டுச்சு. அதுனால வேற வழியும் இல்லாம தாமஸ்சே ஒத்துக்குற நிலைலதான் இருந்தாரு.

அப்போதான் அவங்கக் கிட்ட இருந்து இன்னொரு விசயமும் வந்துச்சு. அதாவது, அவங்க கணிப்புப்படி பூமியோட அழிவுக்கு அப்ரோம் பூமி அஞ்சு கான்டினன்ட்டா பிரிக்கப்படும். அப்போ 7 பெரிய கான்டினன்ட் இருந்தது இல்லயா? அதெல்லாம் எல்லாமே சமநிலையோட இருந்தது. ஆனா, இந்த அஞ்சு கான்டினன்ட்டும் ரொம்ப வித்தியாசமா இருக்கும்.

அதாவது, நீங்க பஞ்சபூதங்கள்னு சொல்லப்படுற நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் இதெல்லாம் பிரிஞ்சிடும். ஒரு இடத்துல நெருப்பு அதிகமா இருக்கும். ஒரு இடத்துல காத்து அதிகமா இருக்கும். ஒரு இடத்துல தண்ணீ மட்டும் இருக்கும். ஒரு இடத்துல வறட்சியும் பனிக்கட்டியும் கலந்து யாருமே வாழுறத்துக்கு தகுதியில்லாத இடமா இருக்கும். இதுல ஒரே ஒரு இடம் மட்டும்தான், மறுபடியும் எல்லாமே புதுப்பிக்க தகுந்த இடமா மாறும்னு சொன்னாங்க.
1678167164971.png


அப்போ அந்த அஞ்சு இடத்துல பூமியா கன்சிடர் ஆகுற இடத்துக்கு தாமஸ்ச ஹைனஸ்சா போடுறதாவும், மத்த நாலு இடத்துல தாமஸ் ரெஃபர் பன்ற பர்சன்ஸ்ச ஹைனஸ்சா போடுறதாவும் ஒப்பந்தம் போட்டுக்கலாம்னு சொன்னாங்க. இதுல முக்கியமான விசயம் என்னதுன்னா, என்னதான் பூமிக்கு அஞ்சு ஹைனஸ் இருந்தாலும், எல்லாத்தயும் கன்ட்ரோல் பன்ற பவர், அன்ட் முடிவு எடுக்குற பவர் எல்லாம் தாமஸ்கிட்ட மட்டும்தான் இருக்கும்னு சொல்லிட்டாங்க.

இந்த ஒரு காரணத்துக்காகவே தாமஸ் அவங்க சொன்ன எல்லா டிமான்ட்டுக்கும் ஒத்துக்கிட்டாரு.

இப்போ இன்னொரு சிக்கல் என்னதுன்னா 2500ஆவது காலக் கணக்குப்படி, அப்போ இருந்த மக்கள் தொகை, 50 பில்லியன். இதுல எல்லாத்தயும் நிச்சயமா காப்பாத்த முடியாது. இந்த சிக்கல் ஒன்னு இருந்தது. அதுனால தாமஸ் அன்அஃபிசியல்லா ஒரு சர்வே எடுத்தாரு.

அந்த சர்வேப்படி 2450ல இருந்து 2500 வரைக்கும் இந்த அம்பது வருசத்துல தனிப்பட்ட முறைலயோ இல்ல குழுவாவோ இயற்கைக்காக எவ்ளோ பேர் என்னென்ன செஞ்சு இருக்காங்களோ அவங்கள மட்டும் காப்பாத்தனும்னு முடிவு செய்யப்பட்டு சர்வே எடுத்தாங்க.

இந்த உலகத்துலயே 50 பில்லியன் மக்கள்ல வெறும் 10 லட்சம் பேர்தான் இயற்கைய மதிச்சு அதுக்கு தகுந்த விசயத்த செய்றாங்க. எல்லாரும் வெறும் வாய் வார்த்தைல ‘நான் இயற்கைக்கு கெடுதல் நினைக்குறது கிடையாது’ன்னு சொல்றது உண்டு. ஆனா, அவங்க மனசார ஒரு மரத்தையாவது விதச்சு இருக்காங்கன்னு கேட்டா பதில் இல்லன்னுதான் வரும்.

இதெயெல்லாம்தான் சர்வே லிஸ்ட்ல கொண்டு வந்து 10 லட்சம் பேர்ர காப்பாத்த முடிவு பன்னாரு தாமஸ். அந்த பேரழிவுக்கான நாளுக்கு ரெண்டு நாள் முன்னாடியே இந்த 10லட்சம் பேர்ர போலீஸ் வச்சு அரெஸ்ட் பண்ணாங்க. அப்ரோம் அவங்கள மட்டும் ஸ்பேஷ் ஷிப் மூலமா ஒட்டாமா குட்டாவோ கிரகத்துக்கு கொண்டு போய்ட்டாங்க.

அந்த அழிவுல சூரிய குடும்பமே சீர்குலஞ்சு போச்சுன்னு ஸ்பேஸ் ரிப்போர்ட் சொல்லுது. அதுக்கு அப்ரோம் எல்லாமே மாறிப்போச்சு. அந்த அழிவுல எந்த பாதிப்பும் இல்லாம தப்பிச்ச ஒரே ஒரு துணைக்கோள் சனிக் கிரகத்தோட டைட்டன் கோள்தான். ஆனா, அங்க மனிதர்கள் இருக்க முடியாதுன்னு ஒட்டாமா குட்டாவோ அவங்க கிரகத்துல ஒரு செயற்கை பூமிய உருவாக்கி அங்க அவங்கள கொண்டு போய்ட்டாங்க.

அழிவுல முடிஞ்சு கொஞ்சம் சமநிலைக்கு வரவே கிட்டத்தட்ட பத்து மாசத்துக்கு மேல ஆகிடுச்சு. அதுவரைக்கும் ஒட்டாமா கிரகத்துல இருக்குற சோல்ட்ஜர்ஸ்தான் எல்லாமே பாத்துக்கிட்டாங்க. ரிப்போர்ட் சொன்ன மாதிரி அழிஞ்ச பூமி, புதஞ்சு போய்டுச்சு. கீழ புதஞ்சு இருந்த பூமி இன்னொரு நிலநடுக்கம் அப்ரோம் நிலமட்டம் உயருதல் மூலமா மேல வந்துச்சு. இப்டி நடக்க கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆச்சு.

உங்களுக்கே புரிஞ்சு இருக்கும், அழிக்குறது ரொம்ப சுலபம், ஆனா ஆக்கம்ங்குறது இயற்கைக்கே எவ்ளோ கஷ்டம்னு. இந்த மாதிரி ஒரு நரகத்துலதான் இப்போவரைக்கும் நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம்.

இதுல கொடுமையான விசயம் என்னதுன்னா, பூமி மட்டம் மேல வந்தப்புறம் நடந்த விசயங்கள்தான்…

புலரும்...
 
நேரம் – 12

பூமி மட்டம் மேல வந்ததுக்கு அப்ரோம், பல தாவரங்கள் வளர்ந்தது. ஆனா, அத பயன்படுத்ததான் யாருக்கும் தெரியல. இன்னும் சொல்லப்போனா, 2500 அழிவுல அதிகமா காப்பாத்தப்பட்டது விவசாயிகள்தான்.

கிட்டத்தட்ட ரெண்டு வருசம் மக்கள் எல்லாரும் ஒட்டாமா குட்டாவோ கிரகத்தோட பாதுகாப்புலதான் இருந்தாங்க. பாதுகாப்புன்னு சொல்றத விட, கட்டுப்பாடுன்னு சொல்லலாம். அப்டி இருந்த சமயத்துலதான், தாமஸ் தனி ஒரு ஆளா பூமிக்கு வந்து அங்க இருக்குற தாவரங்கள் ஸ்பெசிமன்ன எடுக்கணும்னு இங்குஸ்திக்கிட்ட சொன்னாரு. அதுக்கும் அவங்க வச்ச டிமான்ட், தாமஸ்சோட ஸ்பெர்ம்ஸ். அவர் எந்தளவுக்கு ஸ்பெர்ம்ம அந்த கிரகத்துக்கு கொடுக்குறாரோ அத்தனை வருசத்துக்கு பூமில இருக்கலாம்னு சொன்னாங்க. அது ஒரு ஹார்மோன் தானே. அது கொடுக்குறதுனால எந்த பிரச்சனையும் இல்ல, அதுமட்டுமில்லாம நமக்கு அது ரீப்புரொடியூஸ் ஆகும்னு தாமஸ் தன்னோட உடம்புல இருந்து 1500 ஸ்பெர்ம்ஸ்ச கொடுத்தாரு.

அதுக்கு அப்ரோம் பூமிக்கு வந்த தாமஸ் பல வகையான எக்கியூப்மென்ட் அகண்டன் கிட்ட இருந்து கேட்டு வாங்கி தன்னோட ரிசர்ச்ச கன்டினியூ பன்னாரு.

அவரு நினச்ச மாதிரி ரிசர்ச்ச கன்டினியூ பன்றது ரொம்ப ஈசியா அமையல. பல பிரச்சனை வந்தது. நிறய முறை அவரோட ரிசர்ச் வெறும் தியரியா போய்டுச்சு. அத அவரால நிரூபிக்கவே முடியல. இங்க இப்டின்னா, ஒட்டாமா குட்டாவோ கிரகத்துல மக்களோட நிலமை இன்னும் மோசமா போய்டுச்சு. அங்க சாப்டுறதுக்கு மக்களுக்கு ஒரு வகையான எனர்ஜி மாத்திரை மட்டும்தான் கொடுத்து இருக்காங்க. அதயே சாப்டு பழகின மக்கள் கிட்டத்தட்ட அதுக்கு அடிக்ட் ஆகிட்டாங்க.

தாமஸ் தன்னோட டீம்ல இருக்குற சயின்டிஸ்ட் ஒரு 20 பேர்ர பூமிக்கு அனுப்ப சொல்லி கேட்டாரு. காரணம், அவருக்கு கிடச்ச பல மருத்துவ குணம்மிக்க மூலிகைகள்தான். அது மட்டும் இல்லாம கணக்குல அடங்காத பல வைரஸ் பாக்டீரியாலாம் உருவாகி இருக்குறதயும் கண்டுபிடிச்சிட்டாரு. இங்க இருக்குற நிலவரத்த அகண்டன் கிட்ட சொல்லி அதுக்கான நடவடிக்கைய எடுக்க முயற்சி செஞ்சாரு.

அப்போதான், இந்த பூமியோட மறுபிறப்புல எத்தனை எத்தனை பிரச்சனை உருவாகியிருக்குன்னு தாமஸ்சால புரிஞ்சிக்க முடிஞ்சது. அகண்டன் அவரோட சோல்ட்ஜர்ஸ் ஒரு பத்தாயிரம் பேத்த பூமிக்கு தாமஸ்க்கு உதவி செய்ய அனுப்பினாரு. அவங்களோட 20 சயின்டிஸ்ட்டும் வந்தாங்க. அதுல ஒருத்தர்தான் தாமஸ்க்கு அடுத்தப்படியா இருக்குற அனிச்சன். ஹியூமன் ரிசர்ச்ல அப்போ அவர அடிச்சிக்க ஆளே கிடையாது. இன்னும் சொல்லப்போனா இன்பத்தமிழனோட சீஃப் அவர்தான்.

அவர் வந்து மனிதர்களுக்கு உதவியா இருக்குற மூலிகைகள தனியாவும் ஆபத்து தரக் கூடிய செடிகள தனியாவும் பிரிச்சு வச்சதா ரிப்போர்ட் சொல்லுது.

இதுல தாமஸ்சால கண்டுபிடிக்க முடியாத பல விசயத்த அனிச்சன் கண்டுபிடிச்சாரு. எப்படி இந்த கான்டினன்ட் பிரிஞ்சதுன்னு தாமஸ்சால கண்டுபிடிக்க முடியல. ஆனா, அனிச்சன் சர்வசாதரணமா அத சொன்னாரு. பூமி முழுக்க நகரும் பாறைகளாலதான் உருவானது. இந்த அழிவுக்கு அப்ரோம் என்னதான் கீழ இருந்த பூமி மேல வந்தாலும், மறுபடியும் பூமி பாறைகள் உள்ளுக்குள்ளயே நகர்ந்ததாலதான், பஞ்சபூதங்கள் முழுக்க முழுக்க தனித்தனியா பிரிஞ்சு போய்டுச்சு.

இந்த மாதிரி பல தீர்வு காண முடியாத விசயத்த எல்லாம் கண் இமைக்குற நொடில அவர் பதில் சொல்லிட்டு போய்டுவாரு.

ஆனா, இவர் ஹைனஸ் ஆக விரும்பல. காரணம், அவர் தன்னோட வாழ்க்கை முழுக்க மனித இனத்தோட வளர்ச்சிக்காகவும் பூமியோட மறுஉருவாக்கத்துக்கு மட்டும் செலவு பண்ண போறதா தாமஸ்கிட்டயும் அகண்டன் கிட்டயும் சொல்லிட்டாரு.

பூமில எல்லாம் நடந்து ஒரளவு சமநிலைக்கு வர கிட்டத்தட்ட அம்பது வருசம் ஆச்சு.

அதுல ஒட்டாம குட்டாவோ கிரகத்துல இருந்து பத்து லட்சம் பேத்துல அஞ்சு லட்சம் பேர் இறந்துட்டாங்க. அழிவுங்குறது எல்லாருக்கும் எல்லாத்துக்கும் பொதுவானதுதானே. ஆனா, தாமசும் அனிச்சனும் தான் இதுல ரொம்ப உடஞ்சுபோய்ட்டாங்க. இப்டி இறப்பு கூடிக்கிட்டே போனா கடைசில மனித இனம்னு ஒன்னு இருக்கவே இருக்காது. அதுனால, மிச்சம் இருந்த அஞ்சு லட்சம் பேத்தயும் பூமிக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அஞ்சு கான்டினன்ட்ல எர்த் கான்டினன்ட்ல மட்டும்தான் மக்கள் வாழ முடியுங்குறதுனால எல்லாரும் இங்க வரதாதான் இருந்துச்சு. ஆனா, அப்போ எல்லாரும் இருக்கக் கூடிய சரியான வசதியும் உணவும் இங்க கிடையாது. அதுனால மத்த கான்டினன்ட்ல மக்கள பிரிச்சு வைக்கலாம்னு முடிவு பண்ணாங்க.

வால்கனோ கான்டினன்ட்ல யாரும் இருக்க முடியாது. சோ, அங்கயும் டெத் கான்டினன்ட்ன்னு சொல்லப்படுற வறட்சியும் பனிக்கட்டியும் நிறஞ்ச இடத்துலயும் யாரும் போகல.

வாட்டர் கான்டினன்ட்ல ஷிப் அரெஞ்ச் பண்ணி அதுல அவங்களுக்கான எனர்ஜி டேப்லட் அன்ட் அவங்கள கண்காணிக்குற டிவைஸ்ல வச்சு ஒரு இடத்த உருவாக்கி கொடுத்தாங்க அகண்டன்.

வின்ட் கான்டினன்ட்ல ஒரு லட்சம் பேருக்கும் அதுக்கு தகுந்த மாதிரி அரெஞ்ச்மென்ட் பண்ணிக்கொடுத்து அங்கயும் மக்கள தங்க வச்சாங்க. சோ, வின்ட் அன்ட் வாட்டர் கான்டினன்ட்ல மொத்தம் ரெண்டரை லட்சம் பேத்த பிரிச்சு தங்க வச்சாங்க. எர்த் கான்டினன்ட்ல ரெண்டரை லட்சம் பேத்த தங்க வச்சாங்க.

நாள் ஆக, ஆக வின்ட் கான்டினன்ட்ல இருந்த மக்கள் எல்லாம் அங்க இருக்குற பல வாயுக்கள்னால பாதிக்கப்பட்டு மூச்சு திணறி ரெண்டே மாசத்துல இறந்துட்டாங்க.

வாட்டர் கான்டினன்ட்ல அப்போதைக்கு எந்த பிரச்சனையும் வரல.

ஆனா, எர்த் கான்டினன்ட்லதான் நாளுக்கு நாள் மக்களோட உடல்ல மாற்றம் வர ஆரம்பிச்சுது. பழையபடி எந்த மெத்தட்டயும் அவங்களால ஏத்துக்க முடியல. ஒட்டாமா குட்டாவோ கிரகத்தோட அம்பது வருசம் இருந்துட்டு அகைன் பூமிக்கு வரப்போ அவங்களோட உடம்பு இந்த பூமி சூழ்நிலைக்கு ஒத்துக்கல. இயற்கையான உடம்பு என்னைக்கு செயற்கைக்கு அடிமையாகுதோ அப்போ முழுக்க உடம்பு செயற்கையதான் எதிர்ப்பார்க்கும். இயற்கைய அதோட உடம்புல செலுத்துன பாதிப்புகள் ஏற்படும்னு அனிச்சன் சொன்னாரு.

அதுவுமில்லாம…

இடம் 2021 மணவழகனூர் வேப்ப மரத்தடி.

தூயவனின் கேள்வியில் அனைவரும் இன்பத்தமிழனைத்தான் அதிர்ந்து பார்த்தனர்.

“ஒருவேள சிக்னல் போயிருந்தா என்ன ஆகும்?” என்ற அகரனின் கேள்விதான் அனைவரின் முகத்திலும் இருந்தது.

இன்பத்தமிழன் கூட சற்று அதிர்ச்சியில்தான் இருந்தார். இன்பத்தமிழன் பயத்தோடுதன் கையில் இருந்த அந்த சிப்பை பார்க்க அது அணைந்துதான் இருந்தது. ஒரு நிம்மதி பெருமூச்சைவிட்டவர், “சிக்னல் போகல, யாரும் டென்சன் ஆக வேண்டாம்.” என்றதில்தான் அனைவரும் சற்று ஆசுவாசமடைந்தனர்.

“அப்டி ஒருவேள சிக்னல் போயிருந்தா என்ன ஆகியிருக்கும் தூயவா?”

“என்ன ஆகியிருக்கும், இவர் இங்க வந்துட்டதா அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நம்மளோட இப்போ இருக்குற பூமியபத்தி லைவ்வா பாத்துட்டு இருப்பாங்க. அதானே இன்பத்தமிழன்.?” என்று தூயவன் கேட்டதில் ஆம் என்பதுபோல தலையசைத்தார்.

“சரி,சரி.! இப்போதான் சிக்னல் போகலன்னு தெரிஞ்சிடுச்சுல்ல. சோ, 3021ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. ஆல்ரெடி டைம் போய்ட்டு இருக்கு. சீக்கிரம் என் அப்பாவ இங்க கூட்டிட்டு வரணும்” என்று படப்படத்தாள் இசை.

அவளின் பதட்டத்தைப் புரிந்துக் கொண்ட இன்பத்தமிழன் சொல்லத்தொடங்கினார். “அந்த அழிவுக்கு அப்ரோம் பூமி சாதாரண நிலமைக்கு வர கிட்டத்தட்ட ரொம்ப வருசம் ஆச்சு. அப்போ ஆரம்பத்துல இருந்த மக்கள் தொகையே வெறும் அஞ்சு லட்சம் தான். அதுவும் நாள் ஆக, ஆக பூமில ஏற்பட்ட பல சேன்ஜஸ்னால பல வைரஸ் அட்டாக் ஏற்பட்டுச்சு. கொஞ்சம் கொஞ்சமா இருந்த மக்களும் அவதிப்பட்டு காப்பாத்த முடியாம போனாங்க.

அதுக்கான காரணத்த எல்லாம் பார்த்தா, மக்கள் தொடுறது மூலமாதான் அதிகமான வைரஸ் இன்ஃபெக்சன் ஆகுதுன்னு கண்டுபிடிக்கப்பட்டது. அதுவுமில்லயம பூமி அழிஞ்சதுக்கு அப்ரோம் கீழ இருந்த பூமி மேல வந்துடுச்சு. அதுல இருந்த பல பழைய தாவரங்கள் புதஞ்சு போன வைரஸ் இதுனாலதான் நோய் வருதுன்னும் இனிமே அந்த இடமெல்லாம் தடைசெய்யப்பட்ட இடமா இருக்கப்போகுதுன்னும் சொல்லிட்டாங்க. அப்போதான் ஹைனஸ் தாமஸ் பெர்னான்டோ பல ரூல்ஸ் கொண்டுவந்தாரு.

அதுப்படி, மக்கள் இனிமே யாரும் ஒருத்தர் ஒருத்தர் தொடக்கூடாதுன்னு சட்டம் கொண்டுவந்தாரு. அதுக்கப்புறம், மக்கள்ல பல பேர் வைரஸ் அட்டாக் இல்லாமதான் இருந்தாங்க. ஆனா, இருந்த மக்கள் தொகை இருந்த மாதிரியே தான் இருந்துச்சு.

அதுக்கும் சொலுசன்தான் பாப்புலேசன் டெவலப்பிங்க் ப்ளான். இதுப்படி நமக்கு என்ன மாதிரியான குழந்தை வேணும், அத எப்டிலாம் உருவாக்கணும்னு மானிட்டர் பண்ணி, அதுக்கு தகுதியான விந்தணுவயும் அண்டணுவயும் சேர்த்து, அதுல ஆயுள் கொடுக்குற டி.என்.ஏவயும் நோய் எதிர்ப்பு சக்தி தர டி.என்.ஏவயும் இன்னும் ஆற்றல் இருக்குறதா மாத்தி அதுக்கு தகுந்த மாதிரி மாடிஃபை பன்னோம்.

இதுல நாள் ஆக, ஆக ஒவ்வொரு திறன் இருக்குறவங்களா அரசாங்கத்துக்கு தகுந்த மாதிரி அரசாங்கத்த மீறி நடக்காதவங்க மாதிரி அவங்களோட மைன்ட் கன்ட்ரோல் பேட்டர்ன்னயும் கண்டுபிடிச்சு அதயும் உருவாக்குனோம்.

இதுலாம் வெறும் தியரியாதான் என்னோட ஹெட் அனிச்சன் கண்டுபிடிச்சாரு. அவர் குழந்தைகள உருவாக்க நினச்சப்போ இயற்கைக்கு எதிரா இந்த விசயம் இருக்குறதுனால அவ்ளோ சீக்கிரம் இது சாத்தியப்படல. நிறய பேரோட உயிரணுக்கள் வேஸ்ட்டாதான் போச்சு. அப்போதான் ஒரு இடத்துல பிரிசர்வ் பண்ணி வச்ச ஹைனஸ்சோட விந்தணுக்கள் கிடச்சது. அதுல இருந்துதான் என்னோட ரிசர்ச் ஸ்டார் ஆச்சு.

அப்டி நான் உருவாக்குன முதல் குழந்தைதான் சர்விகா. நம்ம பூமியோட சரியான வரலாற கண்டுபிடிக்க பல முயற்சி எடுத்தும் அதுக்கான சரியான தகவல் எங்களுக்கு எந்த ஆராய்ச்சிலயும் கிடைக்கல. அப்போதான், ஹைனஸ்சோட குணமும் அவருக்கு ஈக்குவலான அறிவும் இயற்கையாவே சர்விகாக்கு இருக்குறத நான் கண்டுபிடிச்சேன்.

எல்லாரும் அரசாங்கம் சொல்றபடிதான் நடக்கணும்னு ரூல் இருந்ததுனால எல்லாரையும் மானிட்டர் பண்ண அவங்களோட உடம்புல குழந்தைலயே சிப் இன்சர்ட் பண்ணிடுவோம். அதுல எந்தெந்த டைமுக்கு அவங்க என்னென்ன செய்யணும்னு அவங்களோட வாழ்நாள் காலத்தயும் சேர்த்துதான் முடிவு பண்ணி உருவாக்குவோம். இந்த ஆராய்ச்சி சக்சஸ் ஆகுறப்போ முதல்ல எல்லாருக்கும் முழுசா 500 வருசம் வாழுறதுக்கான ஆயுள கொடுக்கணும்னுதான் பிளான்.

ஆனா, அதுக்கான தேவையான இயற்கை வளம் கிடையாது. அதுனாலயே மக்களோட ஆயுள்ள அரசாங்கம் கன்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சுது. முதல்ல சின்ன வயசுலயே எல்லாருக்கும் பொதுவான வயசான 40 வயச இன்சர்ட் பண்ணிடுவோம். ஆனா, அவங்க வளர வளர எந்த மாதிரியான திறமைய எல்லாம் வளத்துக்குறாங்கன்னு பாத்து அதுக்கு தகுந்த மாதிரி அவங்களோட ஆயுள டெவலப் பண்ணுவோம்.

எல்லாரோட மைன்ட் கன்ட்ரோலும் என்கிட்டதான் இருக்கு. என்னோட மைன்ட் கன்ட்ரோல் சிப்ப நான் எப்போவோ டிஆக்டிவேட் பன்னிட்டேன். இதுக்கு பர்மிசன் கொடுத்தது ஹைனஸ்தான்.

அதுக்கு அப்ரோம் இன்னொரு முக்கியமான விசயம் என்னதுன்னா…

புலரும்.


உங்களின் கருத்துக்களை கீழ் திரியில் சொல்லிவிட்டு போங்கள்.


https://pmtamilnovels.com/index.php?threads/பொழுது-புலரும்-நேரம்-கருத்து-திரி.141/
 
Last edited:
நேரம் 13

இடம்- 2021 மணவழகனூர் அதே மரத்தடி.

இன்பத்தமிழன் 3021ல் நடந்துக்கொண்டிருக்கும் புது விதிகளைப் பற்றியும் அதற்கான காரணங்களைப் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார்.

“ஒருத்தர ஒருத்தர் தொடுறதே அங்க பெரிய க்ரைம். அதுமட்டுமில்ல இயற்கை சம்பந்தப்பட்ட எந்த பொருளும் தனி ஒரு மனுசனுக்கு சொந்தம் கிடையாது. அது ஹைனஸ்சோட கட்டுப்பாட்டுலதான் இருக்கும். அப்ரோம் அட்வான்ஸ் டெக்னாலஜினால சோல்ட்ஜர், சயின்டிஸ்ட், மேனேஜ்மென்ட், சூப்பர்வைசிங் இப்டி கிட்டத்தட்ட அம்பது டிபார்ட்மென்ட்ஸ்க்கு கீழ மக்கள ப்ரொடியூஸ் பண்ண ஆரம்பிச்சோம்.

அங்க இப்போ நீங்க பயன்படுத்துற எந்த பொருளும் இருக்காது. எல்லாமே அட்வான்ஸ் டெக்னாலஜிதான். இன்னும் சொல்லப்போனா, அங்க இருக்குற மனுசங்களுக்கு பசின்னா என்னன்னுக்கூட தெரியாது. ஒரு காலத்துல அதுவும் ஒரு நோயா மாற வாய்ப்பு இருக்குங்குறதுனால அதயும் நாங்க ஒரு நோயாதான் டிக்லர் பண்ணி வச்சி இருக்கோம்.

ஒரு மனிதனோட பிறப்புல இருந்து இறப்பு வரைக்கும் இன்னொருத்தரோட கட்டுப்பாட்டுலதான் இருக்கும். இங்க நீங்க உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறீங்க. ஆனா, அங்க உணர்வுகளுக்கும் சரி, எந்த உணர்ச்சிகளுக்கும் சரி எந்தவிதமான மதிப்பும் கிடையாது. அவங்களுக்குள்ள அதிகமா செலுத்தப்பட்ட ஒரு உணர்வு பயம், அதுவும் இயற்கை அப்ரோம் அரசாங்கத்து மேல. இயற்கைக்காகவும் அரசாங்கத்துக்காகவும் ஒருத்தன் என்னவேணா செய்யணும்னு நாங்க அதுக்கு தகுந்த மாதிரிதான் மானிட்டர் பண்ணி வச்சிருக்கோம்.

இங்க நீங்கலாம், இதுலாம் ஒரு விசயமான்னு யோசிக்குற விசயங்கள் எல்லாம், அங்க பெரிய விசயம். ரொம்ப அரிதான விசயம் அப்ரோம் அதிகமா பாதுகாக்கப்படுற விசயமாதான் இருக்குது.

சிலநேரம் ஹார்மோன்ஸ் இம்பேலன்ஸ்னால பல பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கும். அந்த சமயத்துல அவங்களுக்குள்ள இருக்குற சிப் எங்களுக்கு சிக்னல் கொடுத்திடும். அதவச்சு யாருக்கு என்ன மாதிரியான பிரச்சனைன்னு கண்டுபிடிச்சு, அவங்கள தனிமைப்படுத்திடுவோம். அதுக்கப்ரோம் அவங்களுக்கு சரியான முறைல டிரீட்மென்ட் கொடுத்து குணமானதுக்கு அப்ரோம்தான் வெளியே கொண்டு வருவோம்.

இங்க இருந்த மாதிரி இரத்த சொந்தம்லாம் அங்க கிடையாது. அப்பா, அம்மா, கணவன், மனைவி, அண்ணன், தங்கச்சி, காதல், அன்பு இந்த மாதிரி எந்த விசயமும் அங்க கிடையவே கிடையாது. எல்லாரும் அங்க சமம்தான். அங்க மக்கள கண்டுபிடிக்குற விதம் அனலைஸ் பன்ற மெத்தட் எல்லாம் அவங்க அவங்க பிறந்த பேட்ஜ் வச்சு மட்டும்தான்.

மக்களோட பாதுகாப்பும் இயற்கையோட பாதுகாப்பும்தான் அங்க ரொம்ப முக்கியமான விசயம். அததவிர வேறெதுவும் இப்போதைக்கு எங்களுக்கு முக்கியம் கிடையாது.

கொஞ்சநாள்ல எங்களுக்கு ஹைனஸ் கிட்ட இருந்து வந்த ஆர்டர் உடனே டைம் டிராவல் செஞ்சாகணும்னுதான். அதுக்கான வழிய சீக்கிரம் கண்டுபிடிச்சு, கடந்த காலத்துல இருக்குற இயற்கையோட ஸ்பெசிமன்லாம் கலெக்ட் பண்ணி இங்க அதே மாதிரி உருவாக்கணுங்குறதுதான் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டர்.

என்னோட ஜீனியர்தான் அதிரன். அவனோட ஆயுள்காலம் கிட்டத்தட்ட 250 வருசம். 3021ல வாழுற எல்லாத்துக்கும் பிரபஞ்ச சக்தி மேல ரொம்ப நம்பிக்க இருக்கு. பிரபஞ்சத்த நம்பி நாம எந்த விசயத்த செய்தாலும் நிச்சயம் அதுல நூறு சதவீதம் வெற்றிதான். அத ஆதாரத்தோட ப்ரூவ் பண்ணது அதிரன்தான்.

நானும் அதிரனும் இந்த ரிசர்ச்ச நடத்துறப்போ பல தகவல்கள் கிடச்சது. அதுப்படி பார்த்தா நம்ம பூமி முழுக்க ஏலியன்ஸ்னாலதான் காப்பாத்தப்பட்டுச்சு. சோ, அவங்க இதுக்கு முன்னாடி நடந்த எல்லா விசயத்தயும் டேட்டாவா சேவ் பண்ணி வச்சி இருந்தாங்க.

இந்த விசயத்தயும் யூனிவர்ஸ்ல அதிரன் டிராவல் பண்ணப்போதான் கண்டுபிடிச்சான். அந்த கிரகம் நம்ம பூமிய தான் இப்போ டார்கெட் பண்ணியிருக்கு. கிட்டத்தட்ட அவங்கக்கிட்ட இருந்து நம்ம பூமிய காப்பாத்தனும்னா பூமிய பழைய நிலமைக்கு கொண்டு வரணும். அதுல உற்பத்தியாகுற இயற்கை சம்பந்தப்பட்ட மூலிகைகள் புதுப்புது உயிரினங்கள் எல்லாமே ஏலியன்ஸ்க்கு ஆப்போசிட்டா மாத்தனும்னு முடிவு எடுத்தோம். அப்டி உருவாக்கப்பட்ட டீம்தான் ஆப்ரேசன் ஒ. இந்த ஒ ஒட்டாமா குட்டாவோ கிரகத்த மென்சன் பன்னுது. நமக்கு உதவி பண்ணவங்களே இப்போ நம்மளோட பூமிய கேட்குறாங்க. அதுனாலதான் டைம்டிராவல்ல பயணிக்க வேண்டிய கட்டாயம் வந்துச்சு.

ஆப்ரேசன் ஒ டீம்ல நான், சர்விகா, அதிரன் அன்ட் அமரவன் தான் மெய்ன் மெம்பர்ஸ்.

இந்த ஆப்ரேசன்ன சக்சஸ்சா பண்றதுக்கு கண்டிப்பா நாங்க சுயமாதான் யோசிக்கணும். சோ, எங்களுக்கு சிப் கன்ட்ரோல் தேவையில்லன்னு ஹைனஸ்கிட்ட சொன்னோம். ஆனா, அவர் அதுக்கு ஒத்துக்கல. எதுவா இருந்தாலும் அரசாங்கத்தோட கன்ட்ரோல்லதான் பன்னனும்னு சொல்லிட்டாரு.

அப்போதான் ஒரு விசயம் தெரிய வந்தது, சர்விகா எப்போவோ அதிரனோட உதவியால அவளோட சிப்ப டீஆக்டிவேட் பண்ணிட்டா. ஆனா, அத கன்ட்ரோல் பேனலுக்கு தெரியாதபடி வச்சியிருக்கா. அதாவது, அரசாங்கத்த பொறுத்தவரைக்கும் அவ அவங்களோட கன்ட்ரோல்ல இருக்க மாதிரி செட் பண்ணி வச்சிட்டு, அவ சுயமான சிந்தனையோட வாழ்ந்துட்டு இருக்கான்னு சொன்னா. அதுக்கு அதிரன்தான் உதவி செஞ்சான். அந்த டெக்னிக்க வச்சு, அதிரன் முதல்ல டீஆக்டிவேட் பண்ணான். அதுக்கு அப்ரோம் அமரவனுக்கு பன்னாங்க. லாஸ்ட்டா எனக்கு பன்னப்போ டைம்டிராவல் போயே ஆகணும்னு சிச்சுவேசன். சோ, நான் இங்க வந்ததுக்கு அப்ரோம் இந்த சிப் டீஆக்டிவேட் ஆகிடுச்சு.

எங்கள தவிர, ஹைனஸ் மட்டும்தான் சுயமா யோசிக்குறவரு. மத்த எல்லாரும் இந்த சிப் உதவியோடதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. என்னைக்கு இந்த சிப் ப்ராபர்ரா அரசாங்கத்துனால டீஆக்டிவேட் பன்றாங்களோ அன்னைக்கு அவங்க மயக்கநிலைக்கு போய்டுவாங்க. கிட்டத்தட்ட 2700 வோல்ட் கரண்ட் அவங்க உடம்புல செலுத்தப்படும். மயக்கமானதுக்கு அப்ரோம் அவங்கள டிஸ்போஸ் பண்ணிடுவாங்க. இதுதான் இப்போ இருக்குற 3021 பூமியோட நிலமை.” என்று முழுவதுமாக சொல்லி முடித்தார் இன்பத்தமிழன்.

அனைத்தையும் கேட்ட குணாவும் தூயவனும் வாயைப்பிளந்துக் கொண்டு நிற்க, அகரனும் இசையும் அவரை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். அவரின் கூற்றில் இசைக்கு சிறிது ஐயம் இருந்தது என்பது முற்றிலும் உண்மை.

“டேய், என்னை புட்றா புட்றா புட்றா… யாராவது 108க்கு கால் பண்ணுங்கப்பா. இவர் சொன்னதுலாம் கேட்ட உடனே என்னோட ஹார்ட்ட அட் அ டைம்ல மூணு நாலு அட்டாக் தாக்கிடுச்சுடா.” என்று அகரனின் மேல் சாய்ந்தான் தூயவன்.

“அடச்சீ, நடிக்குறத நிப்பாட்டு. இவர் சொன்னதுக்குலாம் சான்ஸ் இருக்கான்னு சொல்லுடா. உன்னை வேற எதுக்கு வரசொன்னேன்.”

“மச்சி, அப்போ என் மேல இருக்குற அக்கரைல வர சொல்லலயா நீ?”

“என்னடா சொல்ற? அக்கர சக்கரன்னு?”

“நீ தான, இங்க வந்தா என்னோட கதைக்கு நல்ல கன்டன்ட் கிடைக்கும்னு சொன்ன? இப்போ என்னடா என்கிட்ட கேள்வி கேட்குற?” என்று பாவமாகக் கேட்டு வைத்தான் தூயவன்.

அவ்வளவுதான், அதுவரை யோசனையில் இருந்த இசை அகரனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவசரமாக தூயவனின் வாயைப் பொத்தியவன், அசடு வழிந்தபடி இசையை நோக்க, அவளோ அவனைத்தான் அனல்பொங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரி, பூமி கீழ இருந்து மேல வந்துச்சுன்னு சொல்றீங்களே, உங்க ஆப்ரேசனுக்கு தேவையான பல செடி, உயிரினம் எல்லாமே வந்து இருக்கும்ல? அத நீங்க யூஸ் பண்ணிக்கலாமே, ஏன் இந்த டைம்டிராவல்?” என்று அனைவரின் கவனத்தையும் மீண்டும் இன்பத்தமிழன் பக்கம் திருப்பினான் அகரன்.

“உன் கெஸ் கரெக்ட்தான். பூமி அழிய ஆரம்பிச்சப்போ பூமி முழுக்கதானே பாதிக்கும். அப்போ கீழ இருந்த உயிரினங்கள்ல எல்லாமே மேல வரும்னு சொல்ல முடியாது. முன்ன சொன்ன கருத்துத்தான், எதுஎது தப்பிப் பிழச்சு இருக்கோ, அது மட்டும்தான் உயிர்வாழ சாத்தியமானது.

அப்போ பல உயிரினங்கள் மேல வந்ததுதான். ஆனா, அதுங்க எல்லாம் மனுசங்களுக்கு ஆபத்தா இருக்கக்கூடியதுன்னு அனிச்சன் சொன்னதுனால எல்லாத்தயும் ப்ரிசர்வ்ட்டு ஏரியால வச்சாச்சு. அதுலயும் ரிசர்ச் நடந்துட்டுதான் இருக்குது.” என்று விளக்கம் கொடுத்தார் இன்பத்தமிழன்.

“எல்லாம் சரி, இதுல என்னோட அப்பாவ ஏன் உள்ள இழுத்து விட்டீங்க? ஆப்ரேசன் ஒ-க்கும் என்னோட அப்பாக்கும் என்ன சம்பந்தம்?”

“அது… அந்த சிப் டீஆக்டிவ் பன்னதுக்கு அப்ரோம்தான் அதிரனும் அமரவனும் பல விசயத்தக் கண்டுபிடிச்சாங்க. அதாவது, ஏலியன்ஸ்சோட ஸ்பேஸ் ஷிப்ல பல தகவல்கள் பூமியப்பத்தி இருந்துச்சு. கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வருசத்துக்கான தகவல்கள் அங்க இருந்தது. அத எப்டியோ அமர் லேப்க்கு கொண்டு வந்துட்டான்.

அதுல கி.பி 1021ஆவது வருசத்துல இருந்து, 2450 வரைக்கும் பூமியப்பத்தின எல்லாத்தகவல்களும் இருந்தது. அத நாங்க ஸ்டடி பண்ணப்போதான், 2021 வருசத்தோட சிறந்த இயற்கை தன்னார்வலர் மற்றும் விவசாயின்னு வெற்றிவேலோ டீடையில்ஸ் இருந்துச்சு. சோ, அவர் எங்க டீம்ல இருந்தா நிச்சயம் புதுப்புது இயற்கை சம்பந்தப்பட்ட விசயம் கிடைக்கும்னு முடிவு பண்ணிதான் அவர டைம்டிராவல் பண்ண வச்சோம். அது மட்டுமில்லாம, அவரும்…” என்று அவர் பாதியில் நிறுத்த,

“அவரும்…?”

“அவரும் நானும் ஒரே உருவ ஒற்றுமை இருக்குறதுனால இடம்மாறுனா ஹைனஸ்க்கு சந்தேகம் வராதுன்னு முடிவு செஞ்சோம்”

“எதே, என்ன நெனப்புல இதயெல்லாம் செஞ்சியிருக்கீங்கன்னு தெரியுதா? இது முழுக்க முழுக்க சீட்டிங்க். சந்தேகம் வரக்கூடாதுன்னு செஞ்சீங்களா, இல்ல உங்களுக்கு பதில் என்ற ஐயா மாட்டிக்கிட்டாக் கூட பிரச்சனை இல்லன்னு நினச்சு இத செஞ்சீங்களா?” என்று கத்தினான் குணா.

அவர் அமைதியாய் தலைகுனிய, “அப்போ, என் அப்பாவ வேணும்னேதான் இதுல இழுத்துவிட்டு இருக்கீங்க. அங்க போன என் அப்பாவோட நிலமை என்னன்னு உங்களுக்கு தெரியும். உண்மைய சொல்லுங்க, இப்போ என்னோட அப்பா உயிரோடதான் இருக்காரா இல்ல?” என்று இறுதிச் சொற்களில் குரல் கமற கேட்டாள் இசை.

“இப்ப, நிஜமா என்னால எதுவுமே சொல்ல முடியாது. அங்க லேப்ல என்ன பிரச்சனைன்னு தெரியல. அமர் சிக்னல் ரிசிவ் பண்ணாதான் நான் அடுத்து என்ன நடந்துச்சுன்னு கெஸ் பண்ண முடியும்” அவரின் பார்வையில் இது நிஜம்தான் என்னை சற்று நம்பு என்ற உணர்வே மேலோங்கி இருந்தது.

“சரி, எப்டி அவர் கரெக்ட்டா கலெக்டர் ஆஃபிஸ்க்கு உள்ள நுழஞ்ச உடனே டைம் டிராவல் நடந்து இருக்கும்?” என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டான் தூயவன்.

“கிட்டத்தட்ட வெற்றிவேல ஒரு மாசமா நாங்க சாட்டிலைட் மூலமா கவனிச்சிட்டுதான் இருந்தோம். அப்போதான் வெற்றிவேல் தொடர்ந்து அந்த இடத்துக்கு வரத கவனிச்சோம். அதான், அவர் அங்க வரதுக்கு பத்து நிமிசம் முன்னாடி நான் இங்க வந்தேன். வந்த உடனே அதுல என்னோட புட் பிரிண்ட்ட வச்சு என்ட்ரன்ஸ்ல வச்சிட்டேன். அது ரொம்ப மைல்யூட்டான சிப்தான். சோ, அவ்ளோ சீக்கிரம் யார் கண்ணுக்கும் தெரியாது. அன்ட், அத வெற்றிவேல் அன்ட் என்னைத் தவிர வேற யார் தொட்டாலும் எந்த ரியாக்ட்டும் ஆகாது. ஆனா, நாங்கத் தொட்டா டைம் டிராவலுக்கான வேலையெல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும். இப்டி கண்ணிமைக்குற நொடில 1000 வருசத்த தாண்டி போய்டலாம். அப்டிதான் வெற்றிவேல் போனாரு.”

“அப்போ, எல்லாமே ப்ளான் பண்ணிதான் பண்ணீங்க இல்லயா? ஒரு மனுசனை அவனுக்கே தெரியாம காலமாற்றத்துக்கு கொண்டுபோய் இருக்கீங்க. இது எந்த காலத்துலயும் ஏத்துக்கவே முடியாத விசயம் இன்பத்தமிழன். இப்போ வெற்றிவேல் சார் இங்க வந்தாகணும். ஆல்ரெடி ரொம்ப நேரம் ஆச்சு. உடனே இந்த சிப்ப ஆக்டிவேட் பண்ணுங்க.” என்று அவரை குற்றம் சாட்டினான் தூயவன்.

“நான் போட்ட கன்டிசன்ல ஒன்னுக் கூட இன்னும் நடக்கலயே? அப்போ எப்டி நான் வெற்றிவேல் இங்க வரதுக்கான முயற்சிய செய்வேன்?” என்றதில் அனைவரும் மீண்டும் கடுப்பாகினர்.

“என்ன கன்டிசன்?” என்று தூயவன் வினைவியதில்,

“நான் சொன்ன மாதிரி இங்க இருக்குற மலை அன்ட் ப்ளான்ட்ஸ்சோட ஸ்பெசிமன் எனக்கு வேணும். இல்லன்னா, இங்க இருந்து ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன்.” என்று உறுதியாய் இருந்தார் அவர்.

ஆனால், இசைதான் மிகுந்த ஆத்திரத்தில் காணப்பட்டாள்.

புலரும்…
உங்களோட கருத்துக்கள சொல்லிட்டுப் போங்க...
 
நேரம் - 14

இடம்: 3021 ஆய்வுக்கூடம்.

“இயற்கைய உடம்புக்குள்ள செலுத்துனா பாதிப்பு வரும்னு அனிச்சன் சொன்னாருன்னு சொல்றீங்க. அப்போ அதுக்கு என்ன தீர்வு கண்டுபிடிச்சீங்க?” என்று தன் கேள்வியை முன் வைத்தார் வெற்றிவேல்.

“இது மட்டும் அப்போ பிரச்சனை கிடையாது. அளவுல பெருசா இருக்குற உயிரினம் எல்லாம் பூமியோட அழிவுல பாதி அழிஞ்சிடுச்சு. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிதான் அதிகமா புதுசு புதுசா உருவாகியிருந்துச்சு. இதுல என்ன கொடுமைன்னா, பூமிக்கு அடில இருந்த தாவரங்கள்ல பல வகையானது பயன்படுத்த முடியாத தாவரங்கள்தான். அப்போ இருந்த பசி நோய்க்கு எதுவுமே சாப்ட முடியாத மாதிரிதான் இருந்துச்சு. அதுனாலயே மறுபடியும் தாமஸ், இங்குஸ்தியோட ஹெல்ப்ப தான் கேட்டாரு. அவங்கதான் மக்களுக்கு அங்க என்ன மாத்திரை கொடுத்தாங்களோ, அதயும் இங்க கொடுத்தாங்க. கொஞ்ச நாள் அத வச்சு சமாளிக்கலாம்னு தைரியத்தோடதான் இருந்தோம்.

மக்கள் ஒருத்தர்ர ஒருத்தர் தொடுறதுனால பேரே கண்டுபிடிக்க முடியாத பல வைரஸ் அன்ட் பாக்டீரியா நோயை ஏற்படுத்துச்சு. கிட்டத்தட்ட ஒரு மாசத்துலயே நூறு வகையான நோய் ரிஜிஸ்டர் ஆச்சு. சோ, எல்லாத்தையும் தனித்தனியா தான் வச்சு டிரீட்மென்ட் கொடுத்தோம்.

மக்களோட எண்ணிக்கை குறயதான் ஆரம்பிச்சுதே தவிர, முன்னேற்றம் ஒன்னுமே இல்ல. ஏற்கனவே ஒரு இழப்ப தாங்குன எங்களுக்கு இன்னொரு இழப்ப தாங்குற சக்தி இல்ல.

அப்போ ஒட்டாமா குட்டாவோ கிரகத்தோட ஹைனஸ் அகண்டன் கொடுத்த யோசனைதான் மனிதர்கள உருவாக்குறது. இத இம்ப்ளிமென்ட் பண்ண அனிச்சன் பல தியரிய கொண்டு வந்தாரு. ஆனா, அத ப்ராக்டிக்கல்லா செய்யத்தான் சரியான மெத்தட் எதுவும் அமையல. தொடர்ந்து பல முயற்சி செஞ்சும் உயிரணுக்கள வச்சு குழந்தைய உருவாக்க முடிஞ்சதே தவிர, அதுல எந்த மாடிஃபையும் செய்ய முடியல.

அதுனால அனிச்சன் தானாவே தன்னோட சிப்ப கொடுத்துட்டு போய்ட்டாரு. ஆனா, அவரோட ஆயுட்காலம் ஹைனஸ் நிர்ணயம் பண்ணது, கிட்டத்தட்ட 500 வருசத்துக்கும் மேல. காரணம், இவரோட தேவை எப்பவும் மக்களுக்கும் அவங்கள இன்னும் மேம்படுத்தவும் தேவைன்னு ஹைனஸ் முடிவு பண்ணி, ஆயுள ரொம்ப நாள் இருக்க வச்சாரு. ஆனா, அனிச்சன் இப்போ எங்க இருக்காரு, உயிரோடத்தான் இருக்காரான்னு யாருக்கும் தெரியல.

அனிச்சனோட தியரிய வச்சு, அவரோட அசிஸ்ட்டன்ட் அதிரனும் இன்பத்தமிழனும் தான் இத ப்ராக்டிக்கல்லா மாத்தினாங்க.

ஒரு உயிர உருவாக்க முதல்ல ஃபாலோ பண்ண மெத்தட் குளோனிங்க் தான். இதோட முத ஸ்டெப் உங்க காலத்துக்கும் முன்னாடியே கொண்டு வரப்பட்டது தான். ஆனா, இந்த அழிவுக்கு பின்னாடி இத எங்களுக்கு இங்குஸ்தி சொல்லி தான் தெரியும். பூமி அழியப் போவுதுன்னு தெரிஞ்ச உடனே, பூமி ஆரம்பத்துல இருந்து, அழியுற நாளுக்கு முன்னாடி வரைக்கும் இருந்த எல்லா டேட்டாவயும் அவங்க தான் வச்சி இருந்தாங்க. இன்னமும் அது அவங்கக்கிட்டதான் இருக்கு.

அதுக்கு அப்ரோம் அதிரனும் இன்பத்தமிழனும் முதல்ல குளோனிங்க் முறைல இன்னும் கொஞ்சம் மாடிஃபை பண்ணாங்க. முதல்ல டி.என்.ஏல வயச குறிக்குற பார்ட்ட கண்டுபிடிச்சு, அதுல எத்தனை டி.என்.ஏ சேர்ந்து இருந்தா ஐநூறு, ஆயிரம்னு வயச டிக்லர் பண்ணலாம்னு கண்டுபிடிச்சாங்க. அத வச்சு தான் ஒரு மனுசன் எத்தன வயசு வரைக்கும் இருக்கணும்னு முடிவு செஞ்சாங்க. இதுல முக்கியமான விசயம் என்னதுன்னா, எல்லாமே மனிதனோட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கணும்னு அந்த அந்த பேட்ச்க்கு தகுந்த மாதிரி டீடைய்ல்ஸ், டெய்லி அவங்க செய்ய வேண்டிய வேலைகள். எதிராளி வந்தா எந்த மாதிரி அட்டாக் பண்ணணும். இப்டி எல்லா விசயத்தயும் அந்த ஒரு சிப்ல இன்புட் பண்ணி கழுத்துலயோ, இல்ல கைலயோ இன்ஜக்ட் பண்ணிடுவாங்க.

இப்டி தான், மக்கள் தொகை இங்க கன்ட்ரோல்லா இருக்கு. இப்போ இந்த பூமி இன்னும் சரியா இருக்கணும்னா, பழையபடி அதுல எல்லா வளமும் இருக்கணும். அது ஒரு குறிப்பிட்ட காலத்துல இருக்க ஸ்பெசிமன் மட்டும் தான் இந்த காலத்து மண்ணுல ஒத்துப்போகும். அதயும் அதிரன்தான் கண்டுபிடிச்சாங்க. இப்போ அது குறிப்பிட்ட காலம், நீங்க வாழ்ந்த காலம் 2021 தான். பிரபஞ்சத்தோட ஒத்துழைப்பால, அங்க இன்பத்தமிழன் மாதிரியே நீங்க இருக்குறத கண்டுபிடிச்சோம். அதுனாலதான், இன்பத்தமிழன் அங்க ஸ்பெசிமன் எடுக்க போய் இருக்காரு. இங்க, எந்த இடத்துல மண்வளம்லாம் சரியா இருக்கும்னு பாக்க உங்கள வரவச்சி இருக்கோம்.” என்று இதுவரை நடந்த அனைத்து விசயங்களையும் கூறி முடித்தாள் சர்விகா.

எதிர்காலத்தில் பூமியின் நிலை இப்படித்தான் இருக்குமா? என்று மனதுக்குள் வெம்பி தவித்தார் வெற்றிவேல். ஒரு விவசாயியாக இதனை அத்தனை சுலபமாக அவரால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

“இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்லுமா, நம்மளோட இயற்கைக்காக நான் நிச்சயம் எதுனாலும் செய்வேன்”

“ரொம்ப நன்றி வெற்றிவேல். உடனே நான் இதப்பத்தி ஹைனஸ்கிட்ட சொல்றேன். உங்கள உடனே நான் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு கூட்டிட்டு போறேன். நீங்க உங்களுக்கு தேவையான பொருள்லாம் என்ன வேணும்னு சொன்னீங்கனா, அதுக்கும் நான் ஏற்பாடு செஞ்சுடுறேன்” சர்விகாவின் குரலில் அத்தனை ஆனந்தம்.

“சர்விகா, ஒரு நிமிசம்.! அதிரன நான் பாக்கலாமா? வந்ததுல இருந்து அவர் ரொம்பவே பயந்து போய் இருந்தாரு”

“நிச்சயமா! நான் அதுக்கு ஏற்பாடு பன்றேன்” என்றவள், “எஸ்.3கே15. இவர உடனே அதிரன், அமரவன் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போங்க. அப்ரோம் மூணு பேரயும் காட்டேஜ் ஹவுஸ்ல தங்க வைங்க. அவங்களோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம். இந்த நியூஸ்ச அமர் கிட்ட கொடுத்துடுங்க” என்று உத்தரவிட்டவள், “நான் வர நேரம் ஆச்சுன்னா உடனே லேட் பண்ணாம தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அதிரனயும் அமரவனையும் கூட்டிட்டு போய்டுங்க வெற்றிவேல். அதுக்கு மேல என்ன செய்யணும்னு அமர் சொல்லுவாங்க.” என்றவள் சந்தோசமும், பயமும் கலந்த முகபாவத்தோட ஹைனஸ்சை காணச் சென்றாள்.

இடம் 2021, மணவழகனூர்.

இன்பத்தமிழன், தனக்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருந்தால் மட்டுமே வெற்றிவேல் இங்கு வருவதற்கான தீர்வை சொல்ல முடியும் என்று சொல்ல, இசைத்தமிழ்தான் மிகவும் ஆத்திரமடைந்தாள்.

“சரி, இப்போ உங்களுக்கு என்னென்ன ஸ்பெசிமன்ஸ் வேணும்.?” என்று அகரத்தமிழன் கேட்டான்.

“இங்க இருக்குற எல்லா தாவரங்களோட ஸ்பெசிமனும் வேணும். விதை, தண்டு, இலை, பூ, காய், பழம். அப்ரோம், மலைல இருக்குற மூலிகைகளோட கலெக்சன்ஸ் வேணும். அடுத்து, ஒவ்வொரு அனிமல்ஸ் அன்ட் பேர்ட்ஸ்சோட ப்ளட் சாம்பில்ஸ், அதோட ஸ்பெசிமன் டி.என்.ஏ வேணும். லாஸ்ட்டா ஒரு விசயம் இருக்கு. அத நான் அப்ரோம் சொல்றேன். முதல்ல எனக்கு இதுக்கு ஏற்பாடு செய்ங்க.”

“நோவே.! நீங்க இவ்ளோ அசால்ட்டா இதுலாம் வேணும்னு சொல்லிட்டீங்க. ஆனா இதுலாம் உடனே கிடைக்காது. அதுக்கு சாத்தியமே இல்ல” என்று கத்தினாள் இசை.

“போற போக்குல இவர் நம்மள ப்ளு க்ராஸ்ல மாட்டிவிட்டு போய்டுவாரு போலயே. மரம் செடி ஸ்பெசிமன் கூட ஏதோ ஏற்பாடு செய்யலாம். ஆனா, அனிமல்ஸ்லாம் வாய்ப்பே கிடையாது.” என்று தன்போக்கில் புலம்பினான் தூயவன். இந்த முறை அவனை அடக்காது, அவனை ஆமோதித்தாள் இசை.

“அதுவும் இன்னைக்கே எல்லாம் கிடைக்கணும்னா ரொம்ப கஷ்டம்.” என்று குணாவும் சொன்னான்.

“இதுதான் உங்க பிரச்சனையா? ஒன்னும் பயப்படத் தேவையில்ல. எதுஎது எந்த இடத்துல இருக்குன்னு சொல்லுங்க. டிராவலிங்க்தான் உங்களுக்கு ப்ராப்ளம்னா அதுக்கு ஒரு வழி இருக்கு” என்றார் இன்பத்தமிழன்.

“என்ன வழி?” மூவரும் ஒன்றுபோல் கேட்க, திடீரென்று தூயவனின் மண்டையில் ஒரு மின்னல் வெட்டியது. “டைம் டிராவல் மெசின் மூலமாவா போகப்போறோம்.?” என்று கண்கள் பளிச்சிட கேட்டான்.

“டைம் டிராவல் மெசின் கிடையாது. பட், கிட்டத்தட்ட அது மாதிரி தான். டிராவல் பேஸ்டு மெசின். இப்டி சொடக்கு போடுற செகண்ட்ல நாம எங்க போகணுமோ அங்க போய்டலாம்.”

இதைக் கேட்ட நால்வருக்கும் இன்னும் என்னவெல்லாம் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறதோ என்றுதான் தோன்றியது. அகரத்தமிழன் ஒருபடி மேலே சென்று, “யாராவது 108க்கு போன் பண்ண ரெடியா இருங்க. எப்பவேணா எனக்கு அட்டாக் வரும் போல.” என்று நெஞ்சைப்பிடித்தபடி இசையின் மேல் சாய்ந்தான்.

“தயவுசெஞ்சு அட்டாக் வந்தா போய்டு. கொஞ்ச நேரம் உன்னை வச்சு என்னால சமாளிக்க முடியல. இதுல கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்டிதான் குப்பை கொட்ட போறேனோ?” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

“நீயா பேசியது, என் அன்பே! நீயா பேசியது?”

“இப்போ ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா, நேரம் காலம் தெரியாம கடுப்பேத்திக்கிட்டு.” இந்த முறை சீரியஸ் ஆனது என்னவோ நம் தூயவன்தான்.

“நீங்க சொல்ற மாதிரி பாத்தா, நாம எந்த இடத்துக்கு போகணும்னு நினைக்குறோமோ உடனே அந்த இடத்துக்கு போய்டலாமா?” என்று மறுபடியும் கேட்டான் குணா.

அவனின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவர், “இப்போ நீங்கதான் சொல்லணும், என்ன பன்னலாம்.” என்று கேட்டார்.

“முதல்ல, அத்தைக்கு போன் பண்ணனும் தமிழு. ரொம்ப பயந்து போய் இருப்பாங்க” என்றவனின் சொல்லில்தான் இத்தனை நேரமாக இதனை மறந்து விட்டோமே என்று தலையில் அடித்துக்கொண்டாள் இசை.

“ஆமா, குணா. இன்பன் நீங்க முதல்ல நான் சொல்றத செய்ங்க. இப்போ நான் என் அம்மாவுக்கு போன் பன்றேன். நான் சொல்ற மாதிரி பேசுங்க” என்றாள்.

இன்பத்தமிழனும் அதற்கு சம்மதித்தார். தன் அன்னைக்கு அழைத்தாள் இசை. இரண்டாவது மணியழைப்பிலேயே எடுத்தார் லட்சுமி. “தமிழு, அப்பா வந்துட்டாரா? எதுவும் பிரச்சனை இல்லயே?” என்றவரின் குரல் கிட்டத்தட்ட அழும் நிலைக்கே சென்றது.

“இந்தா லட்சுமி, நான்தான் பேசுறேன்.” என்றவரின் குரலில்தான் தன்னிலை அடைந்தார்.

“ஏன்ங்க இம்புட்டு நேரம்?”

“அது போன இடத்துல கொஞ்சம் தாமசம் ஆகிடுச்சு லட்சுமி. நான் அன்னம் வீட்ல சாப்டேன். புள்ளயும் மாப்பிள்ளையும் என்ற கூடத்தான் இருக்காவ. நீ பதட்டப்படாம சாப்ட்டு படு. நானும் பிள்ளையும் நிலம் விசயமா வெளியூர் போறோம். வரதுக்கு ரெண்டு நாள் பக்கம் ஆகும். குணாவும் என்கூடத்தான் வரியான். நீ அன்னம் வூட்ல போய் இரு என்ன?” என்றவரின் சொல்லுக்கு மந்திரம்போல் கட்டுண்டார் லட்சுமி. இதுதான் கிராமியத்துக் காதல் போல.

இத்தனை நேரம் இருந்த துயர் நொடியில் விலகி, எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் தன்னையும் எண்ணும் கணவரை எண்ணி உள்ளம் மகிழ்ந்தார் லட்சுமி. ஆனால், உண்மையான விசயம் தெரிந்தால் இவரின் செயல் என்னவாக இருக்கும் என்று தமிழாலும் யூகிக்க இயலவில்லை.

“வூட்டுக்கு வந்து ஒரு வா, தண்ணீ குடிச்சுப்புட்டு போங்களேன்.” என்றவரின் அழைப்பில் ஒருமுறையேனும் தன்னை வந்து சந்தித்துவிட்டு செல்லலாமே என்ற ஏக்கம்தான் மிதமிஞ்சி இருந்தது.

இதனை இசை உணர்ந்தாலும், தற்போது இருக்கும் நிலையில் நிச்சயம் அம்மா அனைத்தையும் தோண்டி துருவி கேட்பார் என்பதை உணர்ந்தவள், அலைபேசியை வாங்கி, “அம்மா, இப்போ நேரம் இல்லம்மா. உடனே போனாத்தான், அவர பாத்து பேசி நில பிரச்சனைய தீர்க்க முடியும். அப்ரோம் தண்ணீ வரதுக்கும் லேட் ஆகிடும்மா. நம்ம நிலம் மட்டும் இல்ல, சுத்துப்பட்டு நிலமும் இருக்குள்ள. ரெண்டு நாள்ல வந்துடுவோம்மா. நீங்க அன்னம் அத்த வீட்ல இருங்க. நம்ம வீட்ல வேண்டாம். தோட்டக்கணக்கக் கூட பழனி அண்ணன பாத்துக்க சொல்லிடுங்க. நான் வச்சிடுறேன்மா” என்றவள் அவரின் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தாள்.

“இனிமே லேட் பண்ண வேண்டாம், கிளம்பலாம்” என்றவளின் சொல்லில் என்ன இருந்ததோ, ஆனால் அகரனுக்கும் தூயவனுக்கும் அடிவயிற்றில் பயபந்து உருண்டது.

புலரும்.
 
Status
Not open for further replies.
Top