#பிரம்மாஸ்திரம்2023
#அஸ்திரம்58
#பொழுதுபுலரும்நேரம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. இயற்கையை நேசிப்பதோடு அதை பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் பின்வரும் சந்ததியர்களுக்கு நாம் விட்டுச் செல்லும் ஒரு அற்புத பொக்கிஷமும் பாதுகாக்கப்படவில்லை என்றால் பூமியின் நிலை என்னவாகும் என்பதை சுவாரசியத்தோடு கூறி இருக்கிறார் எழுத்தாளர் வாழ்த்துக்கள் 👏👏
2021...3021..இருவேறு காலங்கட்டங்களில் பயணமாகிறது கதை.. வெற்றிவேல் விவசாயி தன்மகள் இசை தமிழுக்கு அகர தமிழனை மாப்பிள்ளையாக பார்த்து இருவரையும் சந்தித்து பேசுவதற்கு செய்த நிலையில் இவர் காணாமல் போகிறார் பின்பு இவரை காவல் நிலையத்தில் கண்டெடுக்கிறார்கள் ஆனால் இசை தமிழுக்கு உருவத்தில் தன் தந்தையை போல் இருக்கும் அவர் தன் தந்தை இல்லை என்பதை தெரிந்து கொள்கிறாள்... 2021 ல் வெற்றிவேல் இசைத்தமிழ் அகரத் தமிழன் தூயவன் குணா என வாழும் இவர்கள் மூவாயிரத்தி இருவத்தி ஒன்றிலும் இன்பத் தமிழன் சர்விகா அகரவன் அதிரன் என அதே உருவ ஒற்றுமையோடு வாழ்கிறார்கள்...இவர்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டால் என்ன ஆனது என்பதே கதை.. கருத்துளை ஏலியன்ஸ் கால இயந்திரம் ரோபோட்ஸ் டைம் ட்ராவல் என விறுவிறுப்பாக பயணமாகிறது கதை... நீர் நெருப்பு காற்று என அனைத்து தட்பவெட்ப நிலைகளோடு இருக்கும் பூமி உடைந்து ஒவ்வொன்றும் வெவ்வேறு காண்டினென்ட் ஆக மாறிவிட்டால் என்ன ஆகும் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதை சுவாரசியத்தோடு கூறியிருக்கிறார் எழுத்தாளர் 👏 உணவிற்கு பதிலாக மாத்திரையும் தண்ணீர் என்பதே என்னவென்று தெரியாத நிலையும் குழந்தைகளை பெற்றெடுக்காமல் தங்களுக்கு வேண்டியவாறு செய்து கொள்வதும் என நினைத்து பார்க்காத நிலைக்கு உலகம் மாறினாள் என்னவாகும் என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமும் கூறியிருக்கிறார் 👏👏 கதை முழுவதும் இப்பொழுது இருக்கும் பேச்சு தமிழில் ஆங்கிலமும் கலந்து வருகிறது அதை பிழை என்று நான் கூறவில்லை ஆனால் ஆங்கிலம் புரியாத சிலருக்கு கதையை படிக்க சிரமமாக இருக்கும் என்பது என் கருத்து. . நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰💐❤️