அக்னிபுரீஸ்வரம் நகர் சிவனின் பெயரை கொண்டது இங்கே வாசம் செய்வதும் அவர் தான் ஆம் இந்த நகரின் இஷ்ட தெய்வம் காவல் தெய்வம் எல்லாம் அவர் தான் மூவேந்தர்களின் ஒரு குலத்தவரான சோழர்களின் வழிதோன்றல்கள் வாழும் நகர். வீரத்திற்கு குறைவு இல்லாதது காலம் மாறும் போது சில முறைகள் மாறினாலும் இன்னும் அவர்கள் வீரம் மாறவில்லை மறைவும் மாட்டாது இப்போது இந்த நாட்டை மட்டுமல்ல இதை சுற்றி உள்ள நாட்டை ஆட்சி செய்வது ஒரு வேங்கை அதன் வேகத்திற்கும் வீரத்தின் பசிக்கும் இரையாகி கொண்டு இருப்பது பல சிற்றரசு நாடுகள். அதன் லட்சியம் சோழர்கள் தான் எல்லா ஊர்களையும் ஒரு குடையின் கீழே ஆள வேணும் தன் முன்னோர்கள் சென்ற பாதையை அந்த வேங்கையும் பின்பற்றி பல சிற்றரசு நாடுகள் மட்டுமல்ல பெரிய அரசுகள் கூட அவன் தங்களிடம் நெருங்காமல் இருக்க என்ன செய்ய வேணும் என ஆலோசித்து கொண்டு இருக்கிறது.
அக்னிபுரீஸ்வரத்தில் உள்ள பிரமாண்டமான சிவன் கோவிலில் முன்னே தங்க நிற பல்லாக்கு ஒன்று வந்து நின்றது அந்த பல்லாக்கு வரும் போதே அங்கே வசிக்கும் நகரவாசிகளுக்கு புரிந்தது இன்று ஏதோ சம்பவம் நடக்க போகிறது என்று. அதைய நேரம் கோவிலில் அருகே யாசகம் எடுத்து கொண்டு இருக்கும் யாசக கூட்டத்திற்கு இன்று தங்களுக்கு நல்ல துணி மணிகள், ஆகாரம் தாராளமாக கிடைக்கும் என மகிழ்ந்தனர் பல்லாக்கு கோவில் வாயிலில் இறக்கப்பட்டது. பல்லாக்கின் மூடு திரை விலக இரண்டு அழகிய பாதங்கள் பூமியில் பட முன்னே அங்கே நின்ற பணிப்பெண்களால் சிவப்பு கம்பளம் விரிக்க பட அந்த பாதம் தரையை முத்தமிட்டது. அந்த பாதத்திற்குரிய நபர் ஒரு மாது ஆனா அந்த அது சிறு குழந்தையும் இல்லை கன்னி பெண்ணும் அல்ல அனுபவங்கள் பல கண்டு கொண்ட பாதம் முதுமை பருவம் அது முழுமையாக வெளியே வர .பல்லாக்கில் இருந்து எழுந்த நபரை கண்ட அனைவருமே கை கூப்பி சிரம் தாழ்த்த கட்டியம் கூறுபவன். அக்னிபுரீஸ்வரத்தின் அரன் நலங்கிள்ளியின் அரசியும் எங்க பேரசனை ஈன்றவரும் இந்த தலைநகரின் முதல் பெண்ணும் சோழகுலம் காக்க வந்த எங்க ராஜ மாதாவுமான மணிமேகலை வரார் வரார் என கூறினான் .
அவர் தன் இரு கைகளை எடுத்து முதல் வணக்கத்தை சிரம் தாழ்த்தி சிவன் கோவிலை நோக்கி தலை வணங்கி விட்டு .பிறகு தன் வலது கையை உயர்த்தி அங்கே நின்றவர்களுக்கு ஆசி வழங்கினார் அவர் தான் இந்த நாட்டின் அரசனை ஈன்றவர் ராஜமாதா மணிமேகலை பல போர்களம் கண்ட வீர பெண்மணி. அவர் கணவர் நலங்கிள்ளி வீரத்திற்கு குறைவு இல்லாதவர் நேர்மையான ஆட்சியாளர் ஒரு போரில் எதிரி புற முதுகில் குத்தியதால் போர்களத்திலே மரணத்தை தழுவினார் அப்போது மணிமேகலைக்கு வயது இருபத்தைந்து. அவர்களின் வாரிசுக்கு வயது ஐந்து பல வருடம் குழந்தை செல்வம் கிடைக்காமல் சிவனை வரம் இருந்து ஈன்றவன் அவன் மணிமேகலை தன் மனதை கல்லாக்கி கொண்டு கணவனுக்கு செய்ய வேண்டிய ஈமகாரியங்களை தன் மந்திரி மற்ற அமைச்சர்களின் துணையோடு சேர்ந்து நன்றாக செய்தார். பெண் தானே வாரிசும் சின்ன வயது என நினைத்து அண்டை நாடுகள் படையெடுக்க வர தன் மகனுக்காக தன் வாளை கையில் ஏந்தி தன் நாட்டை காத்தார் அவனுக்கு சரியாக பத்து வயது இருக்கும் அப்போது தான் தீடீரென எதிர்பாராத திருப்பம் அவர் வாழ்வில் ஏற்பட்டது.
அவன் இனி தான் நாட்டை காக்க போகிறேன் தாயே நீங்கள் ஓய்வெடுங்கள் என கூறி விளையாட வேண்டிய வயதில் வாள் ஏந்தினான். அன்று தொடங்கிய வெறி அவனுக்குள்ளே இப்போ ஒரு தீ பிழம்பாக மாறி இருக்கிறது மணிமேகலை கூட பயந்து அவன் நிலையை மாற்ற முயற்ச்சி செய்தும் முடியவில்லை என்பதை விட அவரை தவிர அவனை யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்பது தான் உண்மை. இப்போது கூட இங்கே பரமேஸ்வரனிடம் அவர் கோரிக்கை வைக்க வந்து இருப்பது தன் ஒற்றை வாரிசுக்காக தான் தூய வெள்ளை நிற உயர் பட்டு புடவை முந்தானை தோளை மூடி இருந்தது. கழுத்தில் கைகளில் காதுகளில் தங்க ருத்திராட்ச பதிக்கப்பட்ட ஆபரணங்கள். நெற்றியில் பட்டை திருநீறு சாந்தம் பொங்கும் முகம் நடு வகிடு எடுத்து கொண்டை போட்டு இருந்தார் அவர் மெதுவாக உள்ளே போக அவருக்கு முன் பின் காவலர்கள், பணிபெண்கள் போனார்கள்.
அங்கே சிவன் பெரிய தங்க நிற லிங்க வடிவில் காட்சியளித்தார் அத்தனையும் சொக்க தங்கம் அவர் மேலே அத்தனை விலையுயர்ந்த கற்களும் அலங்கரித்து கொண்டு இருந்தது. மேலே இருந்து கங்கை நீர் அவர் மேலே துளி துளியாக கொட்டி அவரை குளிர்வித்து கொண்டு இருந்தது லிங்கேஸ்வரன் ஒளி வெள்ளத்தில் கருணை பாலித்து கொண்டு இருந்தார். சந்தனம், பன்னீர், கலவை மலர்கள் என அந்த இடமே நறுமணம் வீசி மனதை சாந்தபடுத்தி கொண்டு இருந்தது. மணிமேகலை வர தாயே வணக்குகிறேன் என சொல்லி கொண்டு சிவாச்சாரியார் காசிநாதன் வந்தார் அவர் தான் இந்த கோவிலின் தலைமை குருக்கள். காசிநாதன்
தாயே தாங்கள் இன்று இங்கே வந்தது நான் செய்த பிறவி பலன். தாங்கள் இங்கே வருவதை முன்னே தகவல் அனுப்பி இருந்தால் நான் விஷேச பூஜைக்கு ஏற்பாடு பண்ணி இருப்பேன் என சொல்ல. மணிமேகலை
குருக்களே நான் இங்கே வந்தது இந்த நாட்டின் ராஜமாதவாக அல்ல ஒரு பக்தையாக. இந்த பரமேஸ்வரிடம் யாசகம் கேட்டு வந்து இருக்கிறேன் என. காசிநாதன் பதறி போய்
என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள் தாயே தாங்கள் யாசகம் கேட்பதா அபச்சாரம் அபச்சாரம் எங்கள் குலம் காத்தவர் நீங்க. எங்க அரசருக்கு வாரிசை கொடுத்தவர் தாங்கள் அதை விட எங்க பேரசரை ஈன்றவர் எங்களை காக்கும் தேவி தாங்கள் இப்படி பேசுவது. என் இதயத்தை ரணமாக்கிறது தாயே என சொல்ல மணிமேகலை சின்ன சிரிப்போடு
இத்தனை பட்டங்கள் இருந்தும் என் பலன் எனக்கு குருக்களே நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு அளவுக்கதிகமாக இந்த பரமேஸ்வரன் கொடுத்து உள்ளான் .ஆனா மனிதருக்கு முக்கியமான ஒன்று மன நிம்மதி அது என்னிடம் இல்லை குருக்களே காரணம் தாங்கள் மட்டுமல்ல இந்த அவனியும் அறியும். இந்த அரசை கட்டி காக்க என் மகனுக்கு பின் வாரிசு இல்லை நான் வேண்டாத தெய்வமும் இல்லை செய்யாத பூஜை, தானமும் இல்லை பலன் தான் பூஜ்ஜியம் குருக்களே இது சாபத்தின் அறிகுறி போல எனக்கு தெரிகிறது. ஆம் போரில் எதிரிகள் இறப்பது சகஜம் தான் ஆனா அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் என் அரசை அசைத்து பார்க்கிறது அவர்களின் பெத்தவங்க சாபம் என் மகனின் வம்சத்தை கருவறுக்கிறது குருக்களே. அது தான் இவரிடம் நான் யாசகம் கேட்க வந்து இருக்கிறேன் என கண்கள் கலங்க சொல்ல. காசிநாதன்
தாயே தாங்கள் அறியாதது இல்லை இதை தாங்கள் ஆஸ்தான ஜோதிடர் பரணர் கூறியது அவரின் சிஷ்யன் நான் .எனக்கும் இந்த உண்மை தெரியும் இந்த உண்மை நான் என் குரு பரணர், தாங்கள் முதல் மந்திரி அச்சுதருக்கும் மட்டும் தெரிந்த உண்மை. காலமும் நேரமும் கூடி வரும் போது அனைத்தும் தாங்கள் எதிர்பார்த்தபடியே நடக்கும் தேவி தங்கள் கண்ணீர் விலைமதிப்பற்ற ஒன்று அது இந்த பூமியில் சிந்த கூடாது .அப்படி சிந்தியது தெரிந்தார் வேந்தன் இந்த பூமியை கூட பிளந்து விடுவார் அவர் உங்க மேலே வைத்த அன்பு அப்படிப்பட்ட ஒன்று வேணாம் தேவி இந்த நாட்டிற்கு உங்க கண்ணீர் சாபமாக மாற வேண்டாம். நம்மை ஆளும் இந்த பரமேஸ்வரன் அனைத்தும் அறிந்தவன் அவனுக்கு தெரியும் எதை எப்போ கொடுக்க வேணும் என்று வேணாம் தேவி வாருங்கள் பூஜைக்கு நேரமாகி விட்டது என கூறி பூஜை செய்ய தொடங்க .மணிமேகலை தன் இரு கை கூப்பி கண்கள், மனசு கலங்க எதிரே இருக்கும் உலகை ஆளும் நாயகனிடம் வேண்டி கொள்ள ஆரம்பித்தார்.
அவர் வேண்டி கொள்ள ஆரம்பித்த அதைய நேரம் திரிபுரசுந்தரம் சிற்றரசு சேர்களின் வழித்தோன்றல்கள் இவர்களின் குல தெய்வம் மலைமகள். ஈசனின் பாதியானவள் திரிபுரசுந்தரி இவளின் பெயரை தாங்கிய இந்த சிற்றரசு இருக்கிறது அங்கே உள்ளது ஒரு மலை கோவில் அது கிட்ட தட்ட காட்டு பகுதியை சேர்ந்தது. பெரிய மலையை குடைந்து சேரர்கள் அமைத்த கோவிலில் அங்கே மிக பிரமாண்டமாக ஈசனின் பாதி உலகுக்கே அன்னையானவள் பார்வதியின் ஒரு ரூபம் மகாகாளியாக வீற்று இருந்தாள். அவளுக்கு எதிரே ஒரு பெண் அவளை பெண் என்று சொல்வதை விட தேவகன்னிகை என சொல்வது பொறுத்தும் அவள் ஒற்றை காலில் கண்களை மூடி கைகளை தலைக்கு மேலே குவித்து இருக்க வாய் ஏதோ மந்திரங்களை சொல்லி கொண்டு இருக்க அவளை சுற்றி அக்னி வளையமாக எரிந்து கொண்டு இருக்க அவள் தவம் செய்து கொண்டு இருந்தாள். அவள் தவத்தை கலைக்க பயந்து வாயு தேவன் மட்டுமல்ல ஐம்பூதங்களும் வர பயந்து தள்ளி நின்றனர் அப்போது காற்றை விட வேகமாக ஒரு வீரன் வந்து ஒற்றை காலில் பணிந்து. வீரன்
திரிபுரசுந்தரத்தின் பேரரசிக்கு இந்த தலைமை ஒற்றனின் பணிவான வணக்கம் தேவி மீண்டும் அவர் நம்ம நட்பு நாட்டை வெற்றி கொண்டு விட்டார் .அவர்களும் எதிர்த்து போராடாமல் உயிருக்கு பயந்து அவரிடம் சரணடைந்து விட்டனர் தேவி என கூற அவள் சட்டென தன் கண்களை திறக்க அது தீ பிழம்பாக இருக்க. அவள்
வெற்றி அவன் நினைத்ததை எல்லாம் அடையட்டும் மருதா அவன் வாழ்வில் தொட்டது எல்லாம் வெற்றி இல்லையா .இனி அவனுக்கு நான் தோல்வியை பரிசளிக்க போகிறேன் அதற்கான வேலைகளை விரைவாக தொடங்க போகிறேன் மருதா சேனாதிபதியாரை என்னை வந்து சந்திக்க சொல்லு என சொல்லியவள் கண்களை மூடி மீண்டும் தவம் செய்ய தொடங்கினாள். அதைய நேரம் போர்களத்தில் பிணங்களின் நடுவே நின்று தன் வீர வாளை முத்தமிட்டவன் சொன்னான் நீ இருக்கும் வரைக்கும் வெற்றி தேவதை என் அடிமை என்று.
காதல் தீ எரியும்....
இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்க பொன்னான கருத்தை தெரிவித்து கொள்ளுங்கள்.
அக்னிபுரீஸ்வரம் அன்று கோலமாக இருந்தது காரணம் இன்று தங்கள் அரசன் ஒரு போரில் வெற்றி பெற்று நாட்டுக்கு திரும்புகிறான் என்று. வீதி எங்கும் தோரணம் கட்டி வீதியை கூட்டி பெருக்கி மஞ்சள் நீர் கொண்டு கழுவி கோலம் போட்டு இருந்தனர் அது போல தங்கள் வீடுகளையும் அலங்கரித்து இருந்தனர் .மக்களும் அது போல அரசனை வரவேற்க தாங்களும் குளித்து துவைத்த உடைகளை அணிந்து இருந்தனர் கன்னி பெண்கள் அரசனை காண தங்களை விஷேசமாக அலங்கரித்து கொண்டு இருந்தனர் காரணம் அரசனின் கடை கண் பார்வை தாங்கள் மேலே படாதா என்று தவம் இருந்தனர்.
அப்படி மக்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டு இருந்தவன் வருகை தந்தான் ஆதவன் மேற்கே மறையும் வேளை இருளை விரட்டி கொண்டு. அக்னிபுரீஸ்வரத்தின் படைகள் மொத்தமும் வந்தது முன்னால் அரசனின் மெய்காவல் படை வருகை புரிய கொஞ்ச நேரத்தில் சோழ புலிகொடி ஒரு பக்கமும் அக்னிபுரீஸ்வரத்தின் கொடியான சூரிய கொடியும் காற்றில் பறக்க புழுதியை கிளப்பி கொண்டு ஒரு தங்க ரதம் வந்தது அதை அரசனின் விசுவாசியான சாரதி ஓட்டி வர பின்னால் அரசன் இருந்து வந்தான் அவன் பின்னே மொத்த படையும் அலைகடல் என திரண்டு ஊருக்குள்ளே வந்தது. அந்த தங்க ரதம் நேராக எங்கும் நிற்காமல் சென்று அடைந்த இடம் அந்தபுரம் அதுவும் ராஜமாதவான மணிமேகலை வசிக்கும் அந்தபுரம் மாலை அரண்மனை முழுவதுமாக பணிப்பெண்கள் விளகேற்றி இருக்க அரண்மை தங்கம் என ஜொலித்து கொண்டு இருந்தது .அது அரசர் நலங்கிள்ளி அரசி மணிமேகலை வசித்த பகுதி அங்கே இலகுவாக யாருக்குமே உட்பிரவேசிக்க அனுமதி இல்லை மணிமேகலை அனுமதி அளித்தால் மட்டும் தான் வர முடியும் அந்த அனுமதி தன் மகனுக்கும் மட்டும் விதிவிலக்கு. மணிமேகலை மாலை பூஜைக்கு பூஜையறையில் கண்களை மூடி கொண்டு எதிரே இருந்த சிவனை வேண்டி கொண்டு இருக்க தாயே என குரல் கேட்டது மணிமேகலைக்கு புரிந்தது அவரின் செல்வ மகன் வந்து விட்டான் தன்னை காண என. மணிமேகலை தன் இடது கரத்தை உயர்த்தி கொஞ்சம் இருக்க சொல்லி சொன்னவர் பூஜையை முடித்து இறைவனுக்கு ஆரத்தி காட்டி விட்டு ஆரத்தி தட்டோடு எழுந்தவர் திரும்பி வா தனஞ்ஜெயா என்றார்.
அவர் எதிரே நின்று இருந்தவன் அக்னிபுரீஸ்வரத்தின் அரசனும் நலங்கிள்ளி மணிமேகலையின் தவ புதல்வனும் பிற நாட்டு அரசர்கள் அஞ்சும் எதிரியுமான சோழர்களின் வழிதோன்றல் தனஞ்ஜெயன் .சோழ மன்னர்களின் ஒருவரான தனஞ்செய மன்னின் பெயரையே நலங்கிள்ளி தன் மகனுக்கு வைத்து இருந்தார் கூடவே அவனுக்கு எதிலும் வெற்றி கிட்ட வேணும் ஜெயம் கிடைக்க வேணும் என்று என்பதால் தனஞ்ஜெயன் என வைத்து இருந்தார். அவனின் வயது முப்பது அவன் தோற்றத்தை வைத்து வயதை கணிக்கவே முடியாது அப்படிப்பட்ட மாவீரன் அவன் ஆரிய நிறம், ஆறடி உயரம், பரந்த நெற்றி அதில் திருநீறு வைத்து சூரிய சின்னம் வரைந்து இருந்தான். தோள் வரை புரண்ட சுருள் முடியை எடுத்து குடுமி போட்டு இருந்தான் கரிய புருவம் எதிரி மனதை ஊடுருவும் கண்கள், தடித்த உதடுகள் தெனவெடுத்த தோள்கள், பரந்து விரிந்த மார்பு குறுகிய இடை, யானை பலத்தை ஓத்த கால்கள் என பெண்கள் ஏக்கம் கொள்ள வைக்கும் வேந்தன் அவன் .மணிமேகலைக்கு அவனை கண்டதும் முகம் மாறியது காரணம் போர்களத்தில் இருந்து நேராக இங்கே வந்து இருக்கிறான் என அவனின் போர் உடை காட்டியது எதிரிகளின் ரத்த்தை குடித்து ருசி பார்த்து விட்டு அவன் வாள் அவன் இடையில் உறக்கி கொண்டு இருந்தது. அவன் உடை முழுவதுமாக ரத்தம் கைகளில் கூட அவன் தாயே என மணிமேகலையின் பாதம் பணிய வர அவர் சற்று பின்னால் நகர்ந்தவர். மணிமேகலை
தனஜெயா வேணாம் உன் கைகள் இப்போ பல உயிர்களை கொன்று குவித்து விட்டு வந்து இருக்கிறது இந்த பாவ கைகளோடு என் பாதத்தை தொடாதே. இது பரமேஸ்வரர் வாசம் செய்யும் இடம் . அவர் படைத்த உயிர்களை, அவர் குழந்தைகளை நீ காவு வாங்கி வந்து இருக்க இப்போ வேணாம் இது பூஜை நேரம் உன் நலத்தை கண்களால் கண்டு விட்டேன் இது போதும் .நீ முதலில் போய் நீராடி உணவு அருந்தி ஒய்வெடு நாளை சந்திக்கலாம் என சொல்ல அன்னையின் குணம் அறிந்த தனஞ்ஜெயன் எதுவுமே பேசாமல் திரும்ப போனவன் நின்று மணிமேகலையை பார்த்தவன். தனஞ்ஜெயன்
தாயே எனக்கு ஒரு சந்தேகம் அதற்கு உங்களிடம் விடை எதிர்பார்க்கிறேன் கேட்கலாமா என கேட்க. மகனை கூர்ந்து பார்த்தவர் கேளு என சொல்ல. தனஞ்ஜெயன்
நான் இப்போ இருக்கும் நிலையில் தானே தாயே என் தந்தை இறந்து நீங்கள் அரச பொறுப்பை ஏற்ற பின்பு இருந்தீர்கள். அப்போ அதை தாங்கள் ஆராதிக்கும் ஈஸ்வரன் ஏற்று கொண்டார் அது எப்படி அப்போ அவரும் தான் படைத்த உயிர்கள் ,பக்தர்கள் மேலே பாரபட்சம் காட்டுகிறாரா தாயே என கேட்க. மணிமேகலை
இதற்காக பதிலை நாளை உனக்கு சொல்கிறேன் நீ இப்போ போகலாம் என சொல்ல. இதற்கு மேலே அன்னையிடம் இருந்து பதில் வராது என தெரிந்து கொண்ட தனஞ்ஜெயன் மணிமேகலையின் மாளிகையை விட்டு கிளம்பி தன் தனிபட்ட மாளிகைக்கு போக வந்தான். அங்கே அவன் வலது கையான மெய்காப்பாளன் சேனாவை தவிர அன்னியர்கள் வர முடியாது தனஞ்ஜெயன் வர. சேனா தலை தாழ்த்தி வணங்கியவன்
வேந்தே இப்போது தங்கள் மாளிகைக்கு தானே போக வேணும் ஏன் கேட்கிறேன் என்றால். இன்று தங்கள் வரவை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள் என சொல்ல. தனஞ்ஜெயன்
எதிர்பார்ப்பு இப்போ எனக்கு தேவை மன அமைதி அதை யாராலும் தர முடியாது சேனா நாளை பார்க்கலாம். நீ என் மாளிகைக்கு ரதத்தை விடு. எங்கே ரத்தன் என கேட்டான். ரத்தன் தனஞ்ஜெயனின் இடது கை மட்டுமல்ல சேனாதிபதி கூட சேனா, ரத்தன் இருவருமே தனஞ்ஜெயனின் விசுவாசிகள் உயிரை விடு என்றால் அடுத்த நிமிடம் காரணம் கேட்காமல் உயிரை விடும் விசுவாசிகள். சேனா
சேனாதிபதி போரில் காயப்பட்ட நம் வீர்களை நலன் விசாரித்து விட்டு நாளை உங்களை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார் அரசே என தனஞ்ஜெயன் சரி என்றவன். தன் ரதத்தில் ஏற ரதம் அவனின் மாளிகைக்கு கிளம்பியது அவன் மாளிகை வாயிலில் இறங்கி உள்ளே போனான் அது அவனின் தனிபட்ட ஒய்வு அறை கிட்ட தட்ட ஒரு மைதானம் போல இருந்தது. அங்கே சகல வசதிகளும் இருந்தது அவன் தன் இடையில் தங்க உறையில் உறங்கி கொண்டு இருந்த வாளை எடுத்து அதற்கு என தனியாக அமைக்கப்பட்ட பீடத்தில் வைத்தவன் தன் போர் உடைகளை அவனே கழட்ட தொடங்கினான். பல பணிபெண்கள் இருந்தால் கூட வாள், போர் உடை இரண்டையுமே அவன் யாரையுமே தொட விட மாட்டான் இது நாடு அறிந்த உண்மை அதனால் அவன் போர் உடைகளை கலைய மட்டும் பணிபெண்கள் வர மாட்டார்கள் அவன் போர் உடைகளை கழட்டி அதை அவனே சுத்தம் செய்து வைத்து விட்டு .ஒரு மெல்லிய பட்டு கால் சராய் அணிந்தவன் மேலே பட்டு அங்கவஸ்திரம் போட்டவன் அவன் குளிப்பதற்கு என உருவாகியுள்ள நீச்சல் தடாகத்திற்கு போனான்.
அந்த இடமே ஒரு சொர்க்கம் போல இருந்தது தனஞ்ஜெயனுக்கு மனதில் ஏதோ ஒரு வெறுமை தோன்றும் போது அவன் முதலில் தலை சாயும் இடம் அன்னையின் மடி அடுத்து இங்கே தான். அந்த நீச்சல் தடாகத்தை சுற்றி ஒரு சோலை ஒன்றை பல மலர்கள் கொண்டு உருவாக்கி இருந்தான். சோலை மலர்கள் தான் அந்த நீச்சல் தடாகத்தை பிறர் கண்ணுக்கு தெரியாமல் மறைப்பது .மேலே பவனி வரும் பால் நிலா கீழே பளிங்கு போல நீர் தனஞ்ஜெயன் தன் அங்கவஸ்திரத்தை அங்கே இருந்த ஒரு கல் மேடையில் கழட்டி வைத்தவன் மெதுவாக நீச்சல் தடாக படிகளை கடந்து உள்ளே இறங்கினான். அவன் இறங்கிய பிறகு தன் கை அருகே உள்ள இரு குழாய்களில் ஒன்றை திறக்க முதலில் பால் கொட்டியது அதில் சிறிது குளித்தவன் பிறகு அதை மூடி விட்டு வர வேந்தே என ஒரு பணி பெண் குரல் கேட்க வரலாம் என தனஞ்ஜெயன் சொன்ன மறுகணம். இரண்டு பணிப்பெண்கள் சந்தனம், நறுமண, தைலம் ,கொண்டு வந்தனர் தனஞ்ஜெயன் எழுந்து அங்கே இருந்த கல் மேடையில் இருக்க அதில் ஒரு பணிப்பெண் அவனுக்கு நறுமண தைலம் தலைக்கு தேய்த்து தலையை பிடித்து விட மற்ற பெண் சந்தனம், வாசனை தைலம் கொண்டு அவனின் உடலுக்கு தேய்த்து விட்டாள். தனஞ்ஜெயன் போதும் நீங்கள் போகலாம் என அவர்கள் இருவருமே அவனுக்கு தலை தாழ்த்தி விட்டு போக தனஞ்ஜெயன் எழுந்தவன் தன் தலையை கோதி விட்டு உடலை தேய்த்து விட்டு அங்கே இருந்த மற்ற குழாய் திறக்க அதில் வெது வெதுப்பான பன்னீர் கலந்த நீர் வர கொஞ்ச நேரம் நீச்சல் தடாகத்தில் கண்களை மூடி ஓய்வெடுத்தான்.
பிறகு எழுந்து பணிபெண்கள் வைத்து விட்டு போன துண்டை கொண்டு துடைத்தவன் இரவில் அணியும் இலகு உடையான பஞ்சு போல உள்ள உயர துணியலான கால் சராயை அணிந்தவன் மேலே மெல்லிய பட்டு துணியை போர்தியவன் தன் பிரமாண்டமாக படுக்கையறைக்குள்ளே போனான் .அவன் போன சிறிது நேரத்திற்கு பிறகு அவன் அறை கதவை வேந்தே உள்ளே வரலாம் என சேனா தட்ட .வா சேனா என குரல் கொடுத்தான் சேனா வர அவன் பின்னால் இருவர் தங்க தட்டோடு நின்று இருந்தனர். சேனா
அரசே அதிக நேரமாகி விட்டது ராஜ மாதா எனக்கு தகவல் அனுப்பி இருந்தார் தாங்கள் உணவருந்த வேணும் என்று .அது தான் தாங்களை தொந்தரவு பண்ண வேண்டி இருந்தது என சொல்ல. தனஞ்ஜெயன்
அன்னை என்றால் அன்னை தான் அவருக்கு நான் இன்னும் சிறு குழந்தை தான் நான் உணவருந்திய பிறகு தான் அவர் உறக்க செல்வார் .சேனா அதனால் முதலில் தாய்க்கு தகவல் அனுப்பி விடு நான் உணவருந்தி விட்டேன் என சேனா சரி என்றவன் பணியாளர்களை உணவு பரிமாற சொன்னான். முதலில் அதில் உள்ள உணவுகளை ஒரு சிறிய கிண்ணம் ஒன்றில் எடுத்து இருவருமே சாப்பிட்ட பிறகு தான் தனஞ்ஜெயனுக்கு பரிமாறினார்கள். மணிமேகலை சைவம் தான் ஆனா நலங்கிள்ளி, தனஞ்ஜெயன் அசைவம் உண்ணுபவர்கள் அதனால் அசைவ சாப்பாடு பரிமாற தனஞ்ஜெயன் வயிறார உணவருந்திய பிறகு சேனா விடை பெற்றான். தனஞ்ஜெயன் அங்கே இருந்த உயரக மதுவை ஒரு கிண்ணத்தை ஊற்றி எடுத்து கொண்டு அங்கே ஒரு பீடத்தில் இருந்த தங்க நிற புல்லாங்குழலை எடுத்து கொண்டு அவனுக்கு பிடித்த சாளரத்தின் அருகே போடபட்டு இருந்து நீண்ட திவானில் இருந்தவன். மதுவை ஒரு வாய் அருந்தி விட்டு புல்லாங்குழலை வாசிக்க தொடங்கினான் அந்த ஏகாந்த இரவில் அவன் இசை கேட்டு அவனியே மயங்கியது.
காதல் தீ எரியும்...
இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்க பொன்னான கருத்தை தெரிவித்து கொள்ளுங்கள் போன எபிகள் லைக், கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
திரிபுரசுந்தரபுரம் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது இன்றைய தமிழ் நாட்டின் கொங்கு நாட்டு பகுதி இவர்கள் மூவேந்தர்களில் ஒருவரான சேரர் வம்சத்தை சேர்ந்த வழி தோன்றல்கள். சேரர் வைணவம், சைவ சமயம் இரண்டையும் பின்பற்றுவர்கள் வீரம் மட்டுமல்ல இவர்களிடம் அழகு, கலை இரண்டும் கொட்டி கிடக்கின்றது சேர்களின் அரணாக இருப்பது மலை, காடுகள், நீர்வீழ்ச்சி தான் இவர்களின் மொழி தமிழ், மலையாளம். திரிபுரசுந்தபுரத்தில் காலை வேளையில் மக்கள் தம் அன்றாட பணிகளை செய்து கொண்டு இருந்தனர் அவர்களின் பிரதான தொழில் விவசாயம், மருத்துவம் அதை விட கலைகள், ஓவியம், நடனம் ,இசை, வாள் பயிற்ச்சி அனைத்து கற்று கொள்ள வேணும் அங்கே குறிப்பாக இருக்கும் பருவ பெண்கள் அதுவும் வாள் பயிற்ச்சி கட்டாயம் கற்று கொள்ள வேணும். எதிரிகளிடம் இருந்து தங்கள் உயிரை மட்டுமல்ல மானத்தை காக்க ஆண்களை எதிர்பார்க்காமல் தன் கையே தனக்கு உதவி என்று செயற்பட வேண்டும் என்பது அங்கே எழுதப்பட்டுள்ள பொது விதி.
மக்கள் நம் அன்றாட நிகழ்வில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது தூரத்தில் புழுதி கிளம்பி கண்களை மறைக்க குதிரை குளம்பொலி கேட்டது அவர்களுக்கு தெரியும் இந்த காலை வேளையில் யார் எங்கே போய் விட்டு வருகிறார்கள் என்று. சட்டென ராணுவ கட்டுபாட்டு விதிகளை போல தாறுமாறாக நடந்து கொண்டு இருந்தவர்கள் இரு பக்கமாக ஒதுங்கி வழி விட்டு நிற்க சூரியன் உதயமாகும் வேளை சூரியதேவனின் வாகனம் குதிரைகள் அவரை ஏற்றி கொண்டு வருவது போல இங்கே ஒற்றை வெள்ளை உயரக குதிரை அதற்கு பட்டயம் கட்டி இருக்க வந்தது. அதில் இருந்து வந்த நபர் ஆண் உடை தரித்து கண்களை விட்டு மற்ற இடங்களை தங்க நிற பட்டு துணியால் கட்டி இருக்க அந்த நபர் இடையில் சேர லட்சணமான விற்கொடி கூடவே திரிபுரசுந்தரபுரத்தின் கொடியான அம்மனின் திரிசூலம் பதித்த வீர வாள் உறங்கி கொண்டு இருந்தது.அந்த நகரவாசிகளுக்கு தெரியும் அந்த வாள் உறையில் இருந்து எழுந்தால் எதிரியின் ரத்தை ருசி பார்க்காமல் தூங்காது என்று அந்த வெண்ணிற குதிரை காற்றை விட வேகமாக அரண்மனையை நோக்கி போக. அதன் பின்னால் அதைய போல வேகத்தில் மண்நிற புரவி தொடர்ந்தது அந்த குதிரை வர அரண்மனை வாயில் கதவுகள் சட்டென திறக்க சங்கு ஒலி ஒலிக்க தொடங்க அங்கே வீர பட்டயம் கூறுபவன் .
சேர வம்ச வழி தோன்றல் திரிபுரசுந்தரபுரத்தின் அரசன் இமயவரம்பனின் மூத்த புத்தரி எதிரிகளுக்கு அஞ்சா நெஞ்சம் கொண்ட வீர மகள். அம்மனின் பரிபூரண அருள் பெற்ற எங்க குலம் காக்க உதித்த எங்க அரசி அவனிதேவி வரார் வரார் என கூற அரண்மனை வாயிலில் குதிரையில் இருந்து தாவி இறங்கியவள் முகத்தை மறைத்த பட்டு திரை விழ அவள் முகத்தை காண ஆசை கொண்ட சூரிய தேவன் தன் ஒளிக்கற்றையை அவள் மேலே வீசினான். அவள் அழகை எப்பவும் போல இப்பவும் அங்கே உள்ள பணிப்பெண்கள் காண கிடைக்காத தெய்வீக அழகு என பார்த்தனர் அவள் தான் திரிபுரசுந்தரின் அரசி அவனி தேவி அவள் தந்தை இமயவரம்பனுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு பிள்ளைகளில் இல்லை என்பதை திரிபுரசுந்தரபுரமே அறியும் அதற்கு சாட்சி அவனிக்கு அவன் முடி சூடியது.
இமயவரம்பன் அரசி அம்பைக்கு பிறந்து மூன்று குழந்தைகளும் பெண்கள் தான் அதில் அவர்களுக்கு துளி கூட வருத்தம் இருந்தது இல்லை. காரணம் அம்மன் அருள் பரிபூரணமாக இருந்தால் மாத்திரமே தன் அம்சமாக உள்ள பெண்களை தங்களுக்கு தந்து இருக்கிறாள் என்று மூத்தவள் அவனி தேவி இரண்டாவது பெண் சுவாகை மூன்றாவது வாமி எல்லாம் அம்மனின் திருநாமத்தை தான் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றவர்கள் சூட்டி இருந்தார்கள். வாமியை பெத்து விட்டு அம்பை நோய் காரணமாக கண்களை மூட இமயவரம்பன் பாதி உடைந்து போனார் அவர் அளவுக்கதிகமாக அம்பையை காதலித்தவர் மந்திரி அரச நன்மைக்காகவும் இந்த அரசை கட்டி காக்க வேணும் என்ற நல்ல எண்ணத்தில் அரசருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க நினைக்க. ஒரேயடியாக அவர் மறுத்து விட்டார் என் அம்பையை தவிர இந்த மனசும் உடலும் யாரையும் நினைக்காது தீண்டாது என்று மந்திரிக்கு இது எப்படி இருந்தால் சரி வராது என நினைத்தவர் மனதில் சட்டென ஒரு எண்ணம் உதயமானது. இந்த அரசை காக்க சிறந்த வழி இளவரசிகளில் ஒருவரை நாடாளு வைக்க வேணும் அதற்கு தகுதியான பெண் யாரென நினைத்தவர் மனதில் அவனி தான் வந்தாள் அவளுக்கு சிறு வயது முதலே போர்கலைகள் பிடிக்கும் தந்தையை வற்புறுத்தி கற்று கொள்கிறாள் சிறந்த அறிவாளி வேற. சுவாகை பயந்த சுபாவம் கொண்டவள் வாமி சிறு குழந்தை அதனால் இவளுக்கு தான் முடிக்குரிய இளவரசியாக பட்டம் கட்ட வேணும் என நினைத்தவர். அரசர் உட்பட மற்ற அமைச்சர்களின் கருத்தை காதில் ஏற்காது அரசரை சமாளித்து அவளுக்கு பட்டம் கட்டினார் அவருக்கு தெரியும் போரில் மரணம் என்பது இயற்கை அரசர் இல்லாமல் போனால் நாடு எதிரிகள் வசம் போய் விடும் .அது மட்டுமல்ல இந்த மூன்று பெண் குழந்தைகளையும் காக்கும் கடமை தனக்கு இருக்கிறது கூடவே நாட்டு மக்களையும் தான் அதனால் அவனிக்கு அவரே எட்டு கல்வியையும் போர்கலைகளை குரு கிருண்ஷராயர்ரை கொண்டு போதித்தார் மற்ற கலைகள் எல்லாம் அதற்குரிய ஆளுங்களை கொண்டு கற்பித்தார் . அவனியும் அவர் நினைத்ததை விட வீர மங்கையாக வளர்ந்தாள் அவளின் பத்தாவது பிராயத்தில் இமயவரம்பன் போர் ஒன்றில் வீர தழும்பு பெற்று வந்தவர் அதன் பிறகு நோய்யில் விழுந்தார் நாட்டில் உள்ள சிறந்த வைத்தியர்களை கொண்டும் ஏன் பிற நாட்டு வைத்தியர்களை வரவழைத்தும் அவரை குணப்படுத்த முடியாமல் போனது. அவர் தன் மூத்த மகளை நம்பி அரசை தன் மற்ற மகள்களையும் விட்டு கண்களை மூடியவருக்கு நம்பிக்கை இருந்தது அவனி அவருக்கு பெண் மட்டுமல்ல ஆண் மகவு கூட என்று அவனி கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. சுவாகைக்கு அப்போது வயது எட்டு வாமி கடைசி மகவு வயது மூன்று ஆண் பிள்ளை ஆசையால் அம்பை தவம் இருந்தும் பிறந்தது பெண் மகவு. அதனால் தான் அவள் உடளவில் மட்டுமல்ல மனதளவில் கூட நோய்வாய்பட்டு இறந்து போனாள் மந்திரி இளங்கோவேல் அவள் முன்னே வந்து நின்றவர். இளங்கோவேல்
இளவரசி அவனி தேவி தாங்களா இது இந்த நாட்டை மட்டுமல்ல தங்கள் தங்கைகளை கூட காக்க வேண்டிய தங்கள் கண்களில் இருந்து கண்ணீரா தேவி. இந்த கண்ணீர் தான் மனிதனை பலவீனபடுத்தும் பயங்கர ஆயுதம் தேவி ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள் தங்கள் கண்களில் உணர்ச்சி எப்போது பேச வேணும் தெரியுமா உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே தான். தாங்கள் எதிகளின் முன் தங்கள் கண்ணீர் எக் காரணம் கொண்டும் வெளிவர கூடாது அப்படி வந்தால் தேவி நீங்கள் தோற்று விட்டீர்கள் என்ற அர்த்தம் இப்போது அழும் நேரம் இல்லை தேவி. நான் சாஸ்திர சம்பிரதாயங்களை மீறி வாதாடி தங்கள் தந்தைக்கு கொள்ளி வைக்க அனுமதி வாங்கி உள்ளேன் தங்கள் பெண் என்ற காரணம் காட்டி தங்கள் உறவுகள் கொள்ளி வைத்து விட்டால் அரசில் பாதி அவர்களுக்கு உரிமையாகி விடும் .அதனால் தான் என் அரசருக்கு நான் செய்யும் கடமையாக இதை செய்தேன் தேவி எழுந்து வாருங்கள் என கூறியவர் அவளை அழைத்து கொண்டு போக அவனி ராஜ மரியாதையுடன் அரசன் இமயவரம்பனுக்கு கொள்ளி வைத்தாள் அதுவும் அவள் பெண், மொட்டை போட வேணும் என்ற கருத்துகளை அவள் ஒற்றை அக்னி பார்வை அடக்கியது.
அதன் பிறகு அவனி மனதால் பேசி சிரிப்பது என்றால் தன் தங்கைகள் இருவரிடம் தான் அதுவும் இருவருக்குமே ராத்திரியில் தூங்க கதை கேட்க அக்கா வேணும். அதற்காக எங்கே இருந்தாலும் கூட அவனி ராத்திரியில் அவர்களை தேடி வருவாள் அரண்மனையில் எத்தனை அறைகள் பிரமாண்டமாக இருந்தாலும் கூட அவர்கள் தூங்குவது அவனி கூட தான் அவளுக்கு உலகமே அவர்கள் தான் தன் கண்ணுக்குள்ளே அவர்களை வைத்து பார்த்து கொண்டாள் .மந்திரி இளங்கோவேல் அவளுக்கு இன்னோரு தந்தையானார் திருமணம் செய்யாமல் இந்த அரசுக்கு அரச குடும்பத்திற்காக வாழும் அவருக்கு அவனி மகளை விட மேலானவள் தன் மொத்த வித்தைகளையும் அவளுக்கு கற்று கொடுத்தார். அவர் இல்லை என்றால் கூட அவள் தன்னை இந்த நாட்டை தனியாக காக்க வேணும் என்ற எண்ணம் அவளுக்காக அவள் கூடவே ஒரு பெண் மெய்காவலாளியை வைத்தார் அவள் பெயர் ஈஷா. காற்று கூட அவளை தாண்டி தான் அவனியை தீண்ட வேணும் என்ற கொள்கை உடையவள் அவனி மேலே பக்தி மட்டுமல்ல அன்பு வைத்து உள்ளவள்.
அவனி பெயரை போலவே ஆண்களை ஆட்டி படைக்க பிறந்தவள் ஐந்தரையடி உயரம் சிற்பி செதுக்கிய உடல்வாகு, கடல் என உள்ளே இழுக்கும் பச்சை விழிகள், கூர் மூக்கு, பிறை போல நுதல், சிவந்த இதழ்கள் மலர் போல கன்னங்கள் இடை தாண்டி பிட்டம் வரை தொங்கும் கார்குழல்,மொத்தத்தில் பிரம்மன் படைத்த சிலை அவள் .அவனி கீழே இறங்க அவள் பின்னால் வந்த ஈஷாவும் துள்ளி இறங்கினாள் அவனி உள்ளே வர வாயில் இருந்த பணிபெண்கள் அவளுக்கு தலையை வணங்கி விட்டு மலர்களை தூவ வர அவனி ஒரு கையை உயர்த்தி அதை தடுத்தவள். அவனி
வேண்டாம் இந்த மலர்கள் அர்ச்சனைக்குரியது பெண்களின் கார் குழலை அலங்கரிக்க தகுதியானது .இது மண்ணில் விழ கூடாது பெண்கள் போல இதுவும் ஆராதனைகுரியது இது சேர வேண்டிய இடம் என் மலைமகளின் பாதத்தில் தான் இதை அவள் காலடியில் சேர்த்து விடுங்கள். யார் அங்கே என கை தட்ட ஒரு வீரன் வேகமாக வந்து அவளுக்கு பணிந்து வணக்கத்தை தெரிவிக்க. அவனி
மந்திரி இளங்கோவேல் எங்கே இருக்கிறார் வந்து விட்டாரா என அவர் அரண்மனைக்கு போய் பார்த்து வா என சொல்ல. அவனும் அவளை வணங்கி விட்டு செல்ல போக இன்னொரு வீரன் அவசரமாக வந்தவர் அவளுக்கு வணக்கத்தை தெரிவித்து விட்டு. வீரன்
திரிபுரசுந்தரபுர அரசி அவனிதேவிக்கு வணக்கம். தேவி தாங்கள் வந்தவுடனே மந்திரி தங்களை சந்திக்க முடியுமா என அனுமதி கேட்டு வர சொன்னார் என. அவனி
யார் யாரிடம் அனுமதி கேட்பது மந்தரி எங்கே இருக்கிறார் வீரனே என கேட்க. வீரன்
மந்திரி ஆலோசனை மண்டபத்தில் இருக்கிறார் தேவி என சொல்ல அவனி சரி என சொல்லி விட்டு ஆலோசனை மண்டபத்திற்கு ஈஷா பின் தொடர சென்றாள்.
காதல் தீ எரியும்....
இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்க பொன்னான கருத்தை தெரிவித்து கொள்ளுங்கள் போன எபிக்கு லைக், கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.