வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மகதீரா - கதை திரி

Status
Not open for further replies.

Priyanka Muthukumar

Administrator
தீரன் 14
அவளது கெட்ட நேரத்துக்கு தீரனின் தாய் வேறு அன்று கோவிலுக்கு சென்று இருக்க, கரு கலைந்ததால் உண்டான உடல் வலியை விட, தன்னுயிர் தன்னை விட்டு சென்று விட்ட மன வலி அவளுக்கு அதிகமானது . வயிற்றை பொத்தியபடி கண்ணீர் விட்டு கதறி அழுதாள் உரு பெறாத தனது உயிருக்காக.. சிறிது நேரம் கழித்து எழுந்தவளுக்கு உதிர போக்கு அதிகமாக இருக்க குளியலறையை கண்ணீருடன் கழுவியவள் தன்னையும் சுத்தப்படுத்தி விட்டு வெளியே வந்து தீரனுக்கு அழைக்க அவனோ கோபத்தில் தொலைபேசியை கட் பண்ணி கொண்டே இருந்தான். அதுவும் அவளுக்கு அழுகையுடன் கூடிய மன வலியை அளிக்க "ஷீட்" என்றவள் கட்டிலில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதபடி தூங்கி போனாள்.
வயிற்றில் இருக்கும் சிசுவின் இழப்பு எப்படி இருக்கும் என்று அனுபவித்த தாய் மாரை கேட்டால் புரியும். பல வித கனவுகளுடன் கூடிய எதிர்பார்ப்பை சிதைத்த உணர்வு அது. அதே நேரம் கோபத்தில் வெளியே வந்த தீரன் நேரே சென்றது கடற்கரைக்கு தான். தன்னவளது மிருக தனமான முடிவு அவனையும் அந்த கணத்தில் மிருக்கமாக்கி இருந்தது. அவள் கருத்தடை மாத்திரையை பாவிக்க விடாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான். அதன் பலனை அவள் அழிக்க நினைத்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. "மனுஷியா அவள், ராட்சசி" என்று முணு முணுத்தவன் அவள் மீண்டும் மீண்டும் அழைத்தலால் போனை அணைத்து விட்டு பான்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டு கடலை வெறித்து பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான்.
அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் மனைவியாக இருந்தாலும் தனது சிசுவுக்கு ஆபத்து என்றதும் ஒரு தந்தையாகவே யோசித்தான். சிறிது நேரம் கழித்து பெருமூச்சு விட்டு நிதானமாக தனது மனைவியின் குணத்தை பற்றி அலசி ஆராய்ந்தவன் இறுதியாக "மகதி சொன்னா கேட்டுப்பா... கொஞ்சம் கோபம் வரும் பட் இப்படி கலைக்கிற அளவுக்கு போக மாட்டா " என்று தன் மனைவியை பற்றி சரியாக கணித்தபடி சற்று நேரத்தில் நடக்க இருக்கும் பிரளயம் பற்றி அறியாமல் வீட்டுக்கு புறப்பட்டான்.

அவன் தாய் கோவில் சென்று இருப்பதை அவன் ஏற்கனவே அறிந்ததால் வீட்டை அடைந்ததும் நேரே நேரே தனது அறைக்குள் சென்றான். அங்கு மகதி கட்டிலில் காலை ஒடுக்கி படுத்து இருக்க அவள் அருகே வந்து இருந்தவன் தூங்கி கொண்டு இருந்த அவள் பால் வண்ண முகத்தை கூர்ந்து பார்த்து ரசிக்க தொடங்கினான். "இந்த முகம் அப்படியான பாவ வேலையை கண்டிப்பாக செய்யாது, ஏதோ கோபத்தில் சொல்லி இருப்பா. " என்று நினைத்தவன் அவள் நெற்றியில் இருந்த முடியை ஒதுக்கி விட்டு அவள் நெற்றியில் தனது இதழ்களை பதித்தான்.
நெற்றியில் இருந்து இறங்கிய அவன் இதழ்கள் அவள் பட்டு கன்னத்தை தீண்டி அவள் இதழ்களில் தஞ்சமடைந்து இருந்தது. அவள் இதழ்களில் மூழ்கி போன அவன் ஈர இதழ்கள் அவள் துயிலை கலைக்க மெதுவாக கண் விழித்து பார்த்தாள். குழந்தையை இழந்த அவளால் அவன் இதழ் அணைப்பில் மூழ்க முடியவில்லை. அவள் மனம் பாரமாக இருக்க எந்த அசைவும் இல்லாமல் அவனை பார்த்தபடி படுத்து இருந்தாள்.
அவள் கண் விழித்தும் தனது முத்தத்தில் கிறங்காமல் இருக்க "இன்னும் கோபம் தீரலையா?" என்று நினைத்தபடி அவள் இதழ்களை விடுவித்தவன் மெதுவாக நிமிர்ந்து இருக்க அவளும் சோகமான முகத்துடன் மெதுவாக எழுந்து இருந்தாள்.
அவசரத்துக்கு தான் அழைத்த போதும் கூட அவன் போனை எடுக்காத கோபமும் குழந்தையை இழந்த வருத்தமும் அவள் முகத்தில் கலவையாக இருக்க . அதை எல்லாம் பற்றி அறியாத அவனோ அவள் கையை தனது கைக்குள் உள்ளடக்கியபடி "இங்க பாரு மகதி, நமக்கு கடவுள் தந்த கொடை , அத கலைக்க நினைக்கலாமா?' என்று கேட்டான். அதை கேட்டதும் அவள் முகம் மேலும் இறுகி போக மெதுவாக எழுந்து நிற்க அவனும் அவள் முன்னாடி எழுந்து நின்றான். அவனை கூர்ந்து பார்த்தவள் மெதுவாக வாய் திறந்து "தீரன், எனக்கு அபார்ட் ஆயிடுச்சு, பாத்ரூம் " என்று அடுத்த வசனம் ஆரம்பிக்க முதலே அவள் ரெண்டடி தூரத்தில் கீழே விழுந்து இருந்தாள். சற்று முன்னர் வரை தனது வாரிசுக்காக அவளிடம் மண்டி இட்டவன் அவள் சொன்ன சேதி கேட்டு ருத்ர மூர்த்தியாக மாறி இருந்தான். இப்படியான மிருகத்தனமான தாக்குதலை அவளும் எதிர்பார்க்கவில்லை.

ஏற்கனவே குழந்தையை இழந்து உடல்வலியுடனும் மன வலியுடனும் இருந்தவளுக்கு அவன் அறைந்தது எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல வலிக்க கன்னத்தை பொத்தியபடி நிமிர்த்து பார்த்தவள் "தீரன்" என்று நலிந்த குரலில் அழைத்தாள். "நீ பேசாதடி.. ராட்சசி... நம்ம குழந்தையை அழிக்க உனக்கு எப்படிடி மனசு வந்திச்சு?" என்று அடி குரலில் அவன் சீறியதில் மகதி பயத்தில் வெட வெடத்து தான் போனாள். மெதுவாக கஷ்டபட்டு எழுந்தவள் "தீரன், நான் சொல்றத"' என்று அவள் ஆரம்பிக்க அவளை கை நீட்டி தடுத்தவன். " என்னடி பெருசா சொல்ல போற? மூணு வருஷம் சந்தோஷமா இருக்கணும் , அத தானே சொல்ல போற? உனக்கு செ** தான் முக்கியம்,,, குழந்தை எல்லாம் உனக்கு டிஸ்டர்பன்ஸ்..நீயெல்லாம் பொண்ணா ? மனிதாபிமானம் இல்லாத ராட்சசி ,,, சிக்,,," என்று அருவருத்து பேச அவளோ மனதுக்குள் அடிபட்டு போனாள்,
அவளை பார்த்து அப்படி ஒரு வார்த்தை தீரன் வாயால் வந்ததை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. காலை இரவு என்று பாராமல் அவளை நாடுவது அவன் தானே, சில தடவைகள் அவன் வன்மைக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் தனது வலியை அவனுக்காக தாங்கி கொண்டு அவன் ஆசைகளை நிறைவேற்றி இருக்கிறாளே. அப்படி பட்ட அவளை பார்த்து அவன் கூறிய வார்த்தை அவன் மேல் உள்ள அவள் காதலை அந்த இடத்திலேயே குழி தோண்டி புதைத்தது. அவனை நிமிர்ந்து அடி பட்ட பார்வை பார்த்தவள் ஆக்ரோஷமாக "தீரன், மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என்று சீற அவளை அனல் தெறிக்க பார்த்தவன் வை ஷுட் ஐ? யு ஆர் செ** அடிக்ட்.. அதற்காக குழந்தையை அழிச்ச கொலைகாரி, உனக்கும் கள்ள காதலுக்காக பசங்களை சாகடிச்ச அந்த பொண்ணுக்கும் என்னடி வித்தியாசம் ? " என்று அண்மையில் நடைபெற்ற நாட்டை உலுக்கிய நிகழ்வை நிகழ்வை பற்றி கேட்க இரு கைகளாலும் காதை பொத்தியவள் "ஸ்டாப் இட் தீரன் " என்று கத்தினாள். அவனோ அவளை அழுத்தமாக பார்க்க நிமிர்ந்து அவனை எரித்து விடுவது போல பார்த்தவள் "நீ என்னை உன்னோட அடிமை என்று நினைச்சியா? என்ன வேணும்னாலும் பேசுற? நானா உன் கிட்ட வந்தேனா? நீ தானே எப்போ பார்த்தாலும் பின்னால பின்னால வர்ற? நான் செ ** அடிக்ட் இல்ல,, நீ தான்" என்று ஒருமையில் வார்த்தைகளை கடித்து துப்ப ஏற்கனவே கோபத்தின் உச்சாணி கொம்பில் இருந்தவனது கொஞ்ச நெஞ்ச பொறுமையும் காற்றில் பறந்து போனது. அவள் தலைமுடியை பிடித்து இழுத்து கொண்டு வந்தவன் "வெளிய போடி" என்றபடி வெளியே தள்ள அவள் தன்மானம் அவனிடத்தில் பெரிதும் அடி வாங்கியது. உள்ளே சென்றவன் அவள் உடுப்பு பெட்டியையும் தூக்கி வீசி எறிந்து "திரும்பி பார்க்காம வெளிய போ" என்று சொடக்கிட்டு சொன்னவன் கதவை அடித்து சாத்தினான்.
அவளோ தீரனின் நடவடிக்கையில் விக்கித்து நிற்க அந்த நேரம் கோவிலில் இருந்து வந்த தீரனின் தாய் " என்னம்மா இது?" என்றபடி அவளை எழுப்ப போக அவர் கையை தட்டி விட்டவள் "இப்படி ஒரு மகனை பெத்துக்கு நீங்க மலடியாவே இருந்திருக்கலாம்" என்று அவன் மேலுள்ள கோபத்தில் அவரை வார்த்தையால் வதைக்க அவரோ அதிர்ந்தபடி அவளை பார்த்தார். மகதியின் கண்ணில் இருந்து கண்ணீர் கட்டுப்பாடு இல்லாமல் தாரை தரையாக வடிய அதை துடைத்தவள் பெட்டியை தூக்கி கொண்டு போனாள். ,தீரனின் தாயாரால் மகதியின் வாயில் இருந்து வந்த அமில வார்த்தைகளை கேட்ட பின்னர் அவளை தடுக்கவே மனதுக்குள் பயந்து போனார்.
அவள் செல்வதை மன பாரத்துடன் பார்த்தவர், விறு விறுவென்று வீட்டுக்குள் சென்று கதவை திறந்து ஹாலில் பெருமூச்செடுத்து தனது கோபத்தை கட்டுப்படுத்தியபடி சோபாவில் அமர்ந்து இருந்த தீரனிடம் "தீரன் என்ன ஆச்சு?" என்று கலங்கிய கண்களுடன் கேட்க "நம்ம வீட்டு வாரிசை அழிச்ச கொலைகாரி பத்தி என் கிட்ட பேச வேணாம்" என்றவன் பாய்ந்து எழுந்து தனது அறைக்குள் புகுந்து கதவை அடித்து சாத்தினான்.
ஏற்கனவே மருமகள் வீட்டை விட்டு சென்றதில் விக்கித்து நின்றவருக்கு குழந்தை கலைந்த விடயம் இதயத்தை கத்தி கொண்டு கிழிக்க சாமி அறைக்குள் சென்றவர் தனது கணவன் படம் முன்னே அழுது தனது மன பாரத்தை கொட்டி தீர்த்தார். அவருக்கு தெரியும் இருவரும் கதைத்து பேசி சமாதானம் செய்யக்கூடியவர்கள் இல்லை என்ற விடயம்.
நேரே மகளிர் விடுதிக்கு வந்த மகதி நேரே தனது தந்தைக்கு அழைத்து "அப்பா, நான் டிவோர்ஸ் பண்ண போறேன், " என்று மட்டும் சொன்னவள் மேலும் எதுவும் சொல்லவும் இல்லை. என்ன விடயம் என்று தெரிந்தால் தானே சேர்த்து வைக்க முடியும். இருவரும் யாரிடமும் எதுவும் கூறவே இல்லையே, தீரனுக்கு அவள் மேல் எல்லை கடந்த கோபமும் ஆத்திரமும் இருந்தாலும் அவளை பிரிய யோசிக்கவில்லை. ஆனால் வீட்டை விட்டு இவ்வாறு தன்னை அவமான படுத்தி, தன்னை பேச விடாமல். புரிந்து கொள்ளாமல் இருந்த தீரனை ஏற்று கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. நாட்கள் நகர ஒரு நாள் வீட்டுக்கு வந்த தீரனை பார்க்க வந்தார் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் வார்டன். சற்று நாட்கள் முன்னர் அவர் குழந்தையின் ஆபெரேஷனுக்கு தனது சொந்த முயற்சியில் குறைந்த வட்டிக்கு பேங்க் லோனும் , தன்னால் முடிந்த பண உதவியும் செய்து கொடுத்தாள் மகதி. இதை அறிந்த தீரன் அன்று முழுதும் அவளை முத்தத்தால் குளிக்க வைத்தது வேறு கதை. ஆபரேஷன் முடிந்து மகனுடன் நன்றி சொல்ல வந்தவரை பார்த்த தீரன் "அவ இங்க இல்லை" என்று மட்டும் கூறினான். மேலும் அவனிடம் கேள்வி கேட்க முடியாததால் அமைதியாக அவரும் சென்று விட அவன் மனமோ "இப்படி உதவி செய்றவ , மென்மையான மனம் படைத்தவ கருவை கலைச்சு இருப்பாளா?" என்று யோசித்தவன் மனம் அவள் ராட்ஷசி போல பேசியதை மீண்டும் அசைபோட அவள் மேல் கோபம் மறுபடியும் வந்து இறங்கியது.
அன்றைய நாளை அவள் நினைவுடனேயே கழித்து விட்டு , அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றவனுக்கு அதிர்ச்சியாக அவன் மேசையில் வைக்கப்பட்டு இருந்தது விவாகரத்து பத்திரம், அதை பார்த்து அவன் கோபம் தாறு மாறாக எகிற "தப்பு செய்த உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும்ன்னா , எனக்கு எவ்வளவு இருக்கும்?" என்று நினைத்தவன் சற்றும் யோசிக்காமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டு அவளுக்கு அனுப்பினான்.
மகதி விவாகரத்து கோரி இருந்தாலும் அவள் காதல் கொண்ட மனம் மீண்டும் அவன் தன்னிடம் வருவான் , செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பாத்திருந்தது. ஆனால் அவன் கையெழுத்து இட்ட விவாகரத்து பத்திரம் அவளுக்கு கோபத்தை பெற்றோல் ஊற்றி எரிய வைத்தது. நாட்கள் மெதுவாக நகர இருவரையும் கோர்ட்டில் அழைத்து விசாரித்தவர்கள் அடுத்த ஆறு மாதங்கள் அளவிலேயே இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கினார்கள்.
அன்றைய நாள் இருவருக்கும் உண்ணா விரதமாகவே கழிய, இருவரையும் சுற்றி இருந்த அனைவரும் அவர்கள் பிரிவில் கவலை கொள்ள மோனிஷா மட்டும் சந்தோசம் கொண்டாள்.
இந்த சந்தர்ப்பத்தில் தான், மகதியை ரணதீரன் சிக்னல் லைட்டில் நீண்ட காலம் கழித்து கண்டு அவள் அழகில் தன்னை அறியாமல் மயங்கி போனதும், அவளை தீண்ட வந்தவனை தாக்கி அவன் கையை உடைத்தும் நடந்தது.
மேலும் பேங்க் கொலை கேஸ் அனைத்தும் அவளை சுற்றியே பின்னப்பட்டு அவள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதும் முதலில் துடித்து போனது அவன் தான், . தன்னவள் குற்றவாளி அல்ல என்று அவன் மனம் அடித்து கூறினாலும் சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் அவள் குற்றவாளியாக சுட்டிக்காட்ட பட்டாள். தீரனுக்கு அவள் மேல் இருந்த கோபம் மெதுவாக அகன்று காதல் பிறந்தாலும் மகதியின் புண் பட்ட மனம் ஆற மறுத்தது. காதல் கொண்ட மனம் தன்னவர்கள் தவறை மன்னிப்பது இயல்பு தானே, அதை தான் தீரன் செய்தான். ஆனால் மகதிக்கோ தான் செய்யாத தப்புக்கு அவன் அளித்த தண்டனைகளை ஏற்று கொள்ள முடியவில்லை. தன்னவன் நெருக்கத்தை மனம் விரும்பினாலும் கஷ்டப்பட்டு தனது மனதை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தாள். காதல் விடயத்தில் பெண்களுக்கு இருக்கும் மன கட்டுப்பாடு ஆண்களுக்கு எப்போதும் இருப்பதில்லை. அதற்கு தீரன் மட்டும் விதிவிலக்கா என்ன?
தத்தமது நினைவில் இருந்து மீண்ட இருவரினதும் மனம் கனத்து போக அடுத்து நடக்க இருப்பதை பற்றி தீரன் தீவிரமாக யோசிக்க தொடங்கினான்.
 

Priyanka Muthukumar

Administrator
தீரன் 15:
நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் சிறை சாலையில் உள்ள அனைத்து கைதிகளும் அவர்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தார்கள்.
சுற்றியுள்ள இடம் முழுவதும் இருள் கவிழ்ந்திருக்க,அதில் ஒரு கரும் உருவம் ஆள் அரவமில்லாத வராண்டாவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தது.
அந்த உருவத்தின் கைகளில் பளபளவென மின்னும் படியாக ஒரு பொருள் இருந்தது.


சுற்றிலும் தன் பார்வையை சுழற்றியப்படி சிறு அரவம் கூட எழாதவாறு அடி மேல் அடி வைத்து மெதுவாக நடந்த சென்ற அவ்வுருவம் சிறையில் கண்காணிக்கும் விளக்குகள் தன்னை நோக்கி திரும்பவும் அவசரமாக அருகில் இருந்த தூணின் பின்புறம் ஒளிந்துக்கொண்டது.
அவ்வுருத்தின் நெஞ்சம் ஏகத்திற்கு எகிற துடிக்க,தன் கையில் இருக்கும் பளபளக்கும் பொருளை தன் முதுகிற்கு பின்னால் வைத்து மறைத்துக்கொண்டு,புசுபுசுவென பொங்கிய மூச்சுகளை தன் கரங்களால் வாயைப் பொத்தி அடக்கிக்கொண்டது.
கண்காணிப்பு விளக்குகள் வேறுப்புறம் நகர்ந்த சில நொடிகளில் ஓசை எழாதவாறு அடி மேல் அடி எடுத்து வைத்து அருகிலிருந்த மற்றைய தூணின் பின்புறம் ஒளிந்துக்கொண்டது.
இப்படியாக ஒவ்வொரு தூணின் பின்புறம் ஒளிந்து சிறிது சிறிதாக நகர்ந்தப்படி,தான் தேடி வந்த இடத்தை இலக்கை வழியாக அடைந்துவிட்டது.
ஒரு நிம்மதி பெருமூச்சு ஒன்றை எழுப்பி தனக்கு எதிரில் இருக்கும் அறையின் இரும்பு கம்பிகள் பதித்த கதவை தன் சட்டை பையினுள் இருக்கும் சாவிக்கொண்டு திறந்து உள்ளே சென்றது.
உள்ளே அவ்வறையில் இலேசாக விழுந்திருந்த நிலா வெளிச்சத்தில் மகதியின் முகம் தெள்ள தெளிவாக பளிச்சென்று தெரிந்தது.
அம்முகத்தைப் பார்த்த அவ்வுருத்தின் விழிகளில் தான் எத்தனை பளபளப்பு…!!
ஒரு மானை வேட்டையாட துடிக்கும் சிங்கத்தின் பளப்பளப்போடு தன் கையில் மறைத்து வைத்திருந்த அந்த பொருளை எடுத்து ஒரு முறை கரங்களில் சுழற்றியது.
அந்த பளபளப்பு பொருந்திய அப்பொருளின் கைப்பிடியில் தன் விரல்களை பதித்து இறுக்கிய அவ்வுருவம்,அதன் கூரான பகுதியை ஒரு முறை நிலா வெளிச்சத்தில் திருப்பி பார்த்தது.

அதன் கையில் இருப்பதோ நன்கு கூரான பளபளக்கும் ஒரு ஆயுதம்,அந்த ஆயுதமான கத்தியின் நிழல் மகதியின் முகத்தில் விழுந்து,அவளது உறக்கத்தை தொந்தரவு செய்து விழிகளை உறுத்தி உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப, பட்டென்று தன் மான் விழிகளைத் திறந்தாள்.
தன் முன்னால் கையில் கத்தியுடன் ஒரு கருப்படர்ந்த உருவம் நின்றிருப்பது அறிந்து மிரட்சியுடன் கத்தப்போனவளின் செய்கையை அறிந்து அவ்வுருவம் சுதாரித்து தன் முரட்டு கரங்களால் அவளின் செவ்விதழை இறுகப்பொத்தியது.
மகதியின் தேகமோ பயத்தில் வெடவெடத்து வியர்வை வழிந்தாலும் இயற்கையாகவே அவளுக்கு இருக்கும் துணிச்சல் தலைத்தூக்க அவ்வுருவத்தை எதிர்க்க தன் கரங்களை உபயோகிக்க எண்ணி தூக்க,அதற்கு முன்னரே நடக்குப்போவதை அறிந்து,அவ்வுருவத்தின் கத்தி மகதியோ நோக்கி பாய்ந்திருக்க,தேகத்தில் இறங்கிய கத்தியின் பாதிப்பினால் இரத்தம் முழுவதும் அங்கிருந்த வெள்ளை நிற சுவற்றில் பாய்ச்சி அடித்திருந்தது.
மகதி “ஸ்ஆஆஆ” என வீறிட,அவளுடன் இணைந்தாற் போன்று இன்னொரு பெண்ணின் குரல் சிறையை அதிர வைக்கும் வகையில் வீறிட்டது.
ஏனெனில் மகதியை நோக்கி அவ்வுருவம் கத்தியைப் பாய்ச்சி இருந்த வேளையில்,அவ்வுருவத்தின் கரங்களை பின்னால் வளைத்து கையில் இருந்த கத்தியை தன் கைக்கு மாற்றியிருத்த மோனிஷா,அந்த கத்தியை மடக்கி,அவ்வுருவத்தின் குறுக்கெலும்பில் வைத்து சொருக,அந்த அழுத்தத்தினால் அவ்வுருவத்தின் குருதி சுவற்றில் பாய்ச்சி அடித்திருந்தது.
நடந்த விபரீதத்தில் அதிக பதட்டமடைந்த மகதி வீறிட,அவளை கொலை செய்ய முயற்சி செய்த அவ்வுருவத்திற்கு சொந்தகாரியான இன்னொரு பெண்ணும் தன் தேகத்தில் ஏற்பட்ட காயத்தினால் அலறி மயங்கி சரிந்தாள்.
பிறந்ததிலிருந்து இதுப்போன்ற சம்பவங்களை நேரில் பார்த்தறியாத மகதியின் தேகம் வியர்வையில் குளித்து வெடவெடத்தாலும், மூர்ச்சையாகும் படியாக எந்த வித அசம்பாவிதமும் நேராமல் இருந்ததினால் சற்று துணிச்சலை வரவழைத்து நின்றிருந்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்து கண்களால் எரித்த மோனிஷா, உடனடியாக சிறையின் காவலாளிக்கும் தீரனுக்கும் அழைத்து விஷயத்தைப் பகிர்ந்தாள்.
மகதியின் மீது எத்தனை கோபங்கள் ஆத்திரங்கள் இருந்தப்போதும்,அவளுக்கு ஒன்று என்றவுடன் ரணதீரன் துடித்துப்போனான்.
உடனடியாக அவளை பார்க்க அவனது நாடி நரம்புகள் அனைத்தும் துடிக்க,அந்த இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் கையில் கிடைத்த ஒரு டீ சர்ட்டை அணிந்துக்கொண்டு பதைபதைப்புடன் ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்தான்.
அவன் வருவதற்குள் குருதி வழிய இரத்தக்காயத்துடன் கீழே விழுந்து கிடந்த சிறைவாசியை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல பணித்த மோனிஷா,மகதியை விசாரணை அறைக்கு அழைத்துச்சென்றிருந்தாள்.
அவளிடம் “யார் அவள்…??எதுக்கு உன்னை கொலை செய்ய வந்தருக்கிறாள்…?இரண்டு பேரும் கூட்டா சேர்ந்து கொலை பண்ணீங்களா…??சொல்லுடி” என மேசையைத் தட்டி உறும,
இப்போது அதிர்ச்சியிலிருந்து சிறிது தெளிவடைந்திருந்த மகதி மோனிஷா தன்னை ‘டி’ என விளிக்கவும்,சற்று எரிச்சலடைந்து “மிஸ் மோனிஷா மைண்ட் யுவர் லாங்குவேஜ்…” என விரல் நீட்டி விழிகள் இடுங்க முறைக்க,
அதில் கடுப்பான மோனிஷா அவளின் நீட்டியிருந்த விரலைப் பிடித்து மடக்கி “என்னடி மைண்ட் யுவர் லாங்குவேஜ்...நீயே ஒரு கொலைக்காரி...உனக்கு எதுக்குடி மரியாதை...இன்னும் இரண்டே நாளில் நீ கொலையாளினு தீர்ப்பானவுடனே உனக்கு தூக்குதண்டனை கிடைக்கப்போகுது...செத்துப்போக போறவளுக்கு மரியாதை ஒரு கேடு…” என்றாள் நக்கல் தொணிக்கும் குரலில்.
அதில் எழுந்த ஆத்திரத்தில் அவளின் கன்னத்தை பதம் பார்க்க கரங்கள் துறுதுறுத்தாலும் ‘ஆமா கட்டிய புருஷனே நான் கொலைகாரி இல்லைனு நம்ப மாட்டிக்கிறான்...இவள் நம்பலைனு குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம்…?’ என விரக்தியாக நினைத்து அவளிடமிருந்து விரலை பிடுங்கிக்கொண்டவளின் மனதில் முணுக்கென்று வலி ஒன்று எழுந்தது.

தன் கணவனின் மீது எழுந்த கோபத்தினால் தன்னை அடக்கிக்கொண்டு கைக்கட்டி அமர்ந்திருந்தவளின் தாடையை கையிலிருக்கும் லத்தியைக் கொண்டு உயர்த்திய மோனிஷா “என்னடி திமிரா…?உன்னையெல்லாம் தேர்ட் டிகிரி பனிஷ்மெண்ட் கொடுத்து விசாரிக்காமல் சாதாரணமாக விசாரிச்சிட்டு இருக்கோம் பாரு...அந்த கொழுப்புடி...உன்னை குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம் குற்றவாளி உன் மேலே சிறு தூசி துரும்பு கூட படக்கூடாதுனு பொத்தி பொத்தி பாதுகாக்கிறாரே அவரை சொல்லணும்...எல்லாம் அவர் கொடுக்கற இடம்...இதில் உன்னை இந்த கொலைகேஸில் இருந்து காப்பாத்த வேற பெருமுயற்சி செய்திட்டு இருக்காரு...உன்னை மட்டும் முழுமையா என் கட்டுப்பாட்டில் விட்டிருந்தால் லத்தியாலே இரண்டு சாத்து சாத்தி உண்மையை வரவழைச்சிருப்பேன்...எல்லாம் வேஸ்ட்” சிறிது வன்மம் கலந்த எரிச்சலுடனே கூறியவளின் குரலில் இருந்த பொறாமையும் வன்மமும் எதனால் என்பதை மகதி நன்கு அறிவாள்.
தங்களது திருமண வரவேற்பிற்கு வந்த நாள் தொட்டு மோனிஷாவின் பார்வை தன் மீது பொறாமையுடன் படிவதையும் ரணதீரனின் மீது ஏக்கத்துடன் பதிவதையும் கவனித்திருந்தவள் தன் கணவனின் மீது முழு நம்பிக்கை இருந்ததினால் அவன் மீது சந்தேகம் கொண்டு இவ்விடயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தன் கணவனின் மீது சந்தேகம் என்ற சிறு கறைக்கூட படியாமல் அவன் மீது அதீத நம்பிக்கைக்கொண்டிருந்த மகதி,அதே நம்பிக்கை தன் மீது வைக்காமல் போன கணவனின் மீது இன்று வரை ஆதங்கமும் கோபமும் இருக்கிறது.
திருமண பந்தத்தின் நேர்மையான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது தத்தம் இணைகளின் மீது வைக்கும் பரஸ்பர நம்பிக்கையே.அந்த நம்பிக்கை மட்டுமே ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். ஆனால் இங்கோ அவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஆட்டம் கண்டதினாலும் தங்களது வாரிசை தானே கொலைச்செய்தது போல் தன்னை அவமதித்து பேசியதாலும் உடனடியாக கணவனின் மீதான அப்போதைய கோபத்தில் விவாகரத்து அளித்துவிட்டாள்.


ஆனால் அதுவரை அவனின் மீது இருந்த கோபமும் சில நாட்களுக்கு பிறகு ஒன்றுமில்லாமல் சிறு துகளாகிப்போனது.
விவாகரத்திற்கு பிறகு பொறுமையாக அவனது நிலையில் இருந்து சிந்தனை செய்யும் போது அவனது நியாயமான கோபம் புரிய ஆரம்பித்தது.
இருப்பினும் தானாக அவனிடம் செல்லவிடாமல் அவளது தன்முனைப்பு தடுத்துவிட,அவனை பிரிந்தே வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்.
நெடுநாட்கள் அவர்களுக்கிடையே இருந்த பிரிவு இருவருக்குமிடையே ஒரு மறை திரையை உருவாக்கியிருந்தது.அந்த திரை இருவரையும் அதை தாண்டி வரவிடாமல் செய்து மற்றவரை சந்திக்க விடாமல் செய்து விட,அத்தகைய சூழ்நிலையில் தான் இக்கொலைகள் நிகழ்ந்தது.இப்போதும் தன்னை நம்பாமல் குற்றவாளி என கைது செய்திருக்கும் கணவனின் மீது மறைந்திருந்த கோபம் வலுப்பெற ஆரம்பித்து அவன் தன்னை பழிவாங்குகிறான் என உறுதியாக நம்பினாள் மகதி.
ஆனால் இப்போதைய மோனிஷாவின் கூற்றில் இருவருக்குமிடையே இருந்த திரை சிறிது விலகியதினால்,அவளின் மனதில் இன்பச்சாரலடித்தது.
அச்சமயம் கர்ண கொடூரமாய் “என்னடி ரொம்ப சந்தோஷப்படறீயா…??இந்த மோனிஷா இருக்கும் வரை உன்னை இந்த கேஸில் இருந்து தப்பிக்க விடமாட்டேன்...நீ செய்த கொலைக்கான தண்டனை உனக்கு கண்டிப்பாக கிடைக்கணும்...கிடைக்க வைப்பேன்டி…” என கத்தினாள் மோனிஷா.
அவளது முரட்டு குரலில் தன்னிலை அடைந்த மகதி ‘ச்சை இவ ஒருத்தி எப்போ பாரு மேஜர் சுந்தராஜன் ஸ்டைலில் கத்திட்டு இருக்கா...இவளுக்கெல்லாம் யாரு போலீஸ் வேலைக்கொடுத்தா…’ என கேலி செய்து அவளை அலட்சியமாக புருவம் உயர்த்தி பார்த்தாள்.
மகதியின் அலட்சியப்பார்வை எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் மோனிஷாவின் கோபத்தை அதிகரிக்க அவளை உறுத்து விழித்தப்படி கையிலிருக்கும் லத்தி கொண்டு அவளை அடிக்க கை ஓங்கினாள்.

அச்சமயம் “வாட் நான்சென்ஸ் யூ ஆர் டூயிங் மோனிஷா…??” என முடியை சிலுப்பிக்கொண்டு வந்த சிங்கத்தின் கர்ஜனையில் திகைத்த மோனிஷா லத்தியை கீழிறக்கி அவசரமாக குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள்.
தனது பளபளப்பான கழுகு கண்கள் மின்ன தலை முடி கலைந்த நிலையில் அவளை கோபத்தில் உறுத்து விழித்து நரம்புகள் புடைக்க கைக்காப்பை பின்னால் தள்ளி முறுக்கிக்கொண்டு நின்றிருந்த ரணதீரனை கண்டவளின் முகம் பேயறைந்தது போலானது.
அவளது மிரட்சியே இந்த நேரத்தில் அவனை நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை என்பதை எடுத்துரைத்தது.
அவனிடம் விஷயத்தை தெரியப்படுத்திய மோனிஷா காலையில் வந்து இந்த சம்பவத்தைப் பற்றி விசாரிப்பான் என எதிர்ப்பார்த்திருக்க,அவன் இந்த நள்ளிரவு வேளையில் பாதி உறக்கத்தில் சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்குள் இங்கு வருவான் என்பதை எதிர்நோக்கிவில்லை.
அவளின் மீது கோபமாக ஊடுருவிய ரணதீரனின் பார்வை சில நிமிடங்களில் அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த மகதியின் தலை முதல் கால் வரை ஆராய்ச்சி பார்வைப்பார்த்தது.
முகம் இறுக்கமாக இருந்தப்போதிலும் அவனது விழிகள் ஒரு வித பதைபதைப்புடன் தன்னை ஆராய்ச்சி செய்ததை அறிந்து மகதி தேகம் கூசி சிலிர்த்தது.
வெகு நாட்களுக்கு பிறகு தனது கணவனின் அக்கறையான பார்வையில் உள்ளம் சிலிர்த்து அவனை பார்த்து இலேசாக இதழ்பிரித்து சிரித்தாள்.
அவனின் பார்வை ஒரு நொடிக்கு மேலாக அவளது இதழில் நிலைக்கவிட்ட ரணதீரனுக்கு அதன்பிறகே அவளுக்கு ஒன்றுமில்லை என மனம் நிம்மதியடைந்தது.


அதனால் கோபத்தோடு மோனிஷாவிடம் திரும்பியவன் “மிஸ் மோனிஷா கொஞ்சம் வெளிய வாங்க…” என சிடுசிடுத்து வெளியே அழைத்துவிட்டு முன்னால் நடந்தான்.
மோனிஷா மகதியின் முகத்தைப்பார்க்க,அவள் இதழை வளைத்து கேலி புன்னகை பூத்த விதத்தில் உள்ளுக்குள் நெருப்பு பற்றி இருந்தாலும் கை முஷ்டியை மடக்கி தொடையில் தட்டிவிட்டு கையிலிருந்து லத்தியை கோபத்தில் தூக்கி எறிந்தப்படி வெளியேறினாள்.
வெளியில் வந்தவுடன் அவளை சரமாரியாக பொறிந்து தள்ளியவன் “முதல்ல மகதி மேலே பார்வையை செலுத்துவதை விட்டுட்டு கொஞ்சம் சுத்தியும் என்ன நடக்குதுனு பாருங்க...போய் ஹாஸ்பிட்டலில் இருக்கும் அக்யூஸ்ட் கூட இருந்து கவனிச்சுக்கோங்க...அவங்க கண்முழித்த அடுத்த நொடி எனக்கு ரிப்போர்ட் பண்ணுங்க...அவள் எதுக்கு மகதியை கொல்ல முயற்சி செய்தானு எனக்கு இமிடியட்டா தெரியுணும்...அது சரி நீங்க எப்படி சரியான நேரத்திற்கு இங்கு வந்தீங்க…??” என சந்தேகமாக அவளை பார்த்தவாறு கேட்க,
அதுவரை அவன் திட்டுவதை தலைகுனிந்து நின்று கேட்டுக்கொண்டிருந்தவள் இப்போது ஒரு நொடி தடுமாறி நிமிர்ந்து “மகதி தான் கொலையாளினு உங்ககிட்ட நிரூபிக்கணும்னு அவளை இந்த ராத்திரியில் இன்வேஸ்ட்கேட் பண்ணலாம்னு வந்தேன்...அப்போ தான் யாரோ ஒரு கைது மறைந்து மறைந்து வருவதை பார்த்திட்டு சந்தேகமாக இருக்க ஒளிந்திருந்து அவள் என்ன பண்ணறானு கவனிச்சேன்...அப்போ தான் மகதியை அவள் கொலை பண்ண முயற்சி செய்யறதை பார்த்துட்டு பின்னால் வந்து அவளை மடக்கப்பிடிச்சிட்டேன்...” எனவும்,
அவளை விழிகளால் மேலும் எரித்தவன் “என்னோட அனுமதியில்லாமல் மகதியை விசாரிக்கக்கூடாதுனு உங்ககிட்ட ஏற்கனவே நான் வார்ன் பண்ணியிருக்கேன்...அதையும் மீறி அவங்களை அடித்து விசாரிக்க வந்திருக்கீங்க...முதல்ல ஜெயிலுக்குள் வர அனுமதி யாரு கொடுத்தது…அந்த ஜெயில் சூப்பரிடென்ட் யாரு...??” என உறுமலாய் வெளி வந்த குரலில் சற்று மிரண்டாலும் நெஞ்சிலிருக்கும் துணிவு அவளை நிமிர்ந்து நிற்க செய்திட,
“சார் நீங்க இந்த கேஸை நேர்மையான முறையில் விசாரிக்காத மாதிரி எனக்கு தோணுது...நீங்க மகதி ஃபேவரா ஐ மீன் அவங்களை வெளிய கொண்டுட்டு வருவதற்கு முயற்சி செய்வது போல் எனக்கு தெரியுது...சட்டத்திற்கு முன்னாடி எந்த குற்றவாளியும் தப்பிக்கக்கூடாது சார்...அதனால் கமிஷனரிடம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டு தான் நான் விசாரிக்க ஆரம்பித்தேன்...அதை உங்ககிட்ட தெரியப்படுத்த வேண்டாம்னு கேட்டுக்கிட்டேன்…” மிகவும் துணிச்சலாக அவனை குற்றம்சாட்டி பேசியவளைக் கண்டு நியாயமாக கோபம் வந்திருக்க வேண்டும்.
ஆனால் அவனுக்கோ அவளின் மீது அலட்சியம் கலந்து புன்னகையை தோற்றுவித்தது.
இரண்டு புருவத்தையும் உயர்த்தி அவளை கேலியாக பார்த்த ரணதீரன் கலைந்திருந்த அவனது கூந்தலை சரிச்செய்து இருபுறமும் தலையாட்டி சிரித்த ரணதீரன் “சோ...நான் இந்த கேஸிலிருந்து மகதியை தப்பிக்க வைக்க முயற்சி செய்யறேன்...அப்படிதானே??” என அழுத்தமான குரலில் வினவ, சிறிதும் அஞ்சாமல் “ஆமாம்” என தலையாட்டினாள்.
 

Priyanka Muthukumar

Administrator
தனது புன்னகையை நிறுத்துவிட்டு அவளது விழிகளுக்குள் ஊடுருவிய ரணதீரன் “எஸ் நீங்க சொன்னது சரி தான்...நான் மகதியை இந்த கேஸிலிருந்து காப்பாற்ற தான் முயற்சி செய்யறேன்...உங்களால் என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோங்க...யாருகிட்ட வேண்டுமானாலும் கம்பளையண்ட் பண்ணிக்கோங்க...கமிஷனர்,ஐஜி,டிஐஜி யாரா இருந்தாலும் சரி...ஐ டோன்ட் கேர்...நான் மகதியை நிச்சயம் வெளிய கொண்டு வருவேன்…” தீர்க்கமான அதேசமயம் உறுதியாக கூறிய ரணதீரனை வெறித்த மோனிஷாவைப் பார்த்து உறுத்து விழித்த ரணதீரன் “ஆல் தி பெஸ்ட் மோனிஷா...உங்களால் என்ன முடியுதோ செய்யுங்க...யாரு நினைச்சாலும் இந்த ரணதீரனோட” என்றவன் தன் தலைமுடியை இழுத்துக்காட்டி ‘இதை கூட ஒன்றும் செய்யமுடியாது’ என்பது போல் செய்கை செய்துவிட்டு தலைக்கோதி எட்டி நடைப்போட்டவன் ஒரு நொடி தாமதித்து பின்னால் திரும்பி மோனிஷாவின் முகத்தை கூர்ந்து நோக்கி “பர்ஷனல் வென்ஜன்ஸை விட்டுட்டு ஒரு உண்மையான போலீஸ் அதிகாரியாக இந்த கேஸை தீவர விசாரிங்க...மகதியை குற்றவாளினு நிரூபிக்க உங்களுக்கு ஏதாவது ஆதாரம் கிடைக்கலாம்” என போகிற போக்கில் உயிரை உருக்குலைய வைக்கும் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவனது அத்தகைய பார்வையின் தீட்சண்யம் ‘உன்னை நான்றிவேன்’ என வாய்விட்டு சொல்லாமல் சொல்லி சென்றது.
அது உள்ளத்தை பதறி வைத்தாலும் ‘அவர் கூறியதில் ஒரு உண்மை இருக்கிறது...மகதியை கொலையாளி என்று உறுதிப்படுத்த அந்த ஆதாரங்கள் அனைத்தையும் ஒரு முறை ஆராய்ந்தால் என்ன…?’ என மிக சரியான முறையில் சிந்திக்க ஆரம்பித்தாள்.
‘எஸ்...கண்டிப்பாக அதை ஆராய்ந்தால் குற்றவாளியை நிச்சயமாக கண்டறிய முடியும்...மகதிக்கு எதிராக மட்டும் ஏதேனும் ஆதாரம் கிடைக்கட்டும்...அதை வைத்து என்ன செய்கிறேன் பாருங்கள் ரணதீரன்...உங்க சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ அப்போதும் தன் பிடிவாதத்தை முழுவதும் விட்டுக்கொடுக்கவில்லை என்றாலும் முதல்படியாக இதுவரை அவர்களுக்கு கிடைத்த ஆதாரங்களை எடுத்து ஆராய ஆரம்பித்திருந்தாள்.
இவர்கள் இருவரும் பேசிய பேச்சுகள் அனைத்தும் மகதியின் செவியை நிறைத்து,அவளையும் யோசிக்க வைக்க ஆரம்பித்திருந்தது.
ஆரம்பத்தில் இருந்து என்னை குற்றவாளியாக்குவது போன்று அனைத்து ஆதாரங்களும் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால்,என்னை யாரோ ஒருவர் இந்த கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சிச்செய்திருக்கிறார்கள்.
‘இத்தகைய கொடூரமான முறையில் கொலைச்செய்து என்னை ஏன் சிக்க வைக்க வேண்டும்...அப்படியானால் அந்த கொலையாளிக்கும் எனக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது...ஆனால் எந்த வகையில்…??’ என குழப்பத்துடன் புருவம் நெறிய யோசனை செய்ய ஆரம்பித்தாள்.
‘தன்னை யாரும் பழிவாங்க நினைத்திருப்பார்களோ…?அப்படியானால் அவர்களுக்கும் எனக்கும் ஏதேனும் ஒரு சண்டை நிகழ்ந்திருக்க வேண்டும்...எல்லாரையும் சாதாரண திட்டறதோட சரி...அதை யாரும் சீரியசா எடுத்திட்டு பழிவாங்கறாங்களோ…?’ என இருக்கையிலிருந்து எழுந்து நின்று மெதுவாக நடந்தவாறு யோசித்த மகதியின் நினைவலையில் இதுவரை அவள் யாரிடமெல்லாம் சண்டையிட்டு இருந்தாளோ அவர்கள் அனைவரையும் நினைவில் கொண்டு வந்து இந்த கொலையுடன் ஒப்பிட்டு பார்த்தாள்.
அவளின் உருவகத்தில் இருந்த யாவரும் இந்த கொலையுடன் தொடர்பு படுத்த முடியவில்லை.ஏனெனில் அவளிடம் ஏச்சுகள் வாங்கிய யாவரும் இப்போது உயிருடன் இல்லை.
இப்போது அவளது சந்தேகங்கள் யாவும் வங்கியின் மேலாளரிடம் தாவி அவளின் குழப்பத்தை அதிகரிக்க செய்தது.
தன்னை அனைத்து வகையிலும் பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஒரே ஆள் அந்த மேலாளர் என்பதை யோசித்து அறிந்துக்கொண்டாள்.
அதை இப்போது தீரனிடம் கூறிவிட மனம் பரப்பரத்தாலும் அவன் இங்கிருந்து சென்றுவிட்டான் என்ற உண்மை புலப்பட,
‘சரி...அடுத்த முறை தீரனை பார்க்கும் போது அவரிடம் உண்மையை எடுத்துரைக்கலாம்’ என அமைதியடைந்தாள்.
அதேநேரத்தில் ரணதீரனும் மோனிஷாவும் இக்கொலையின் முக்கிய ஆதாரங்களை நினைவில் இருத்தி யோசனை செய்துக்கொண்டிருந்தார்கள்.
முதல் கொலையில் இருந்து இப்போதைய கொலைகள் வரை கிடைத்த சடலத்திற்கு அருகில் இறந்தவரின் இரத்தம் கொண்டு கிறக்கிவைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் அடங்கிய புகைப்படத்தை தங்களது மேசையில் வைத்து உற்று கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
மோனிஷா அதிலிருந்த அடையாளங்களை அப்படியே இன்னொரு காகிதத்தில் கிறுக்கி அவை என்ன என்பதை கண்டறிய முயன்றாள்.
சில மணி நேரங்கள் முயற்சி செய்தப்போதும்,அவளால் அவை என்ன என்பதை அறிய முடியவில்லை.
அதனால் எழுந்த எரிச்சலில் காகிதத்தைக் கசக்கி தூக்கி தூர வீசியெறிந்தாள்.
ரணதீரனோ மனக்கண்ணில் அவற்றை வெவ்வேறு விதமாக கிறுக்க முயற்சி செய்ய,அவனுக்கும் அந்த அடையாளத்தை சரியான முறையில் கண்டறிய முடியவில்லை.
அவனது மனசாட்சியிற்கோ இந்த புதிரை விடுவித்தால்,சர்வ நிச்சயமாக குற்றவாளி யார் என்பதை கண்டறிய முடியும் என உள்ளுணர்வு உரத்து கூறிக்கொண்டிருந்தது.
அவை என்ன என்பதை கண்டறிய முடியாத வகையில் யோசித்து களைத்துப்போனவர்கள் இறுதியில் உறக்கம் விழிகளைச் சுழற்ற உறக்கத்தை நாடி சென்றுவிட்டார்கள்.
ரணதீரன் உறக்கத்திலும் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க, அவனது தேடலுக்கான விடை அவனது நித்திரையின் வழியே கிடைத்திட,அதிகாலையில் கண்வழித்த ரணதீரன் முதல் பணியாக தனக்கு கிடைத்த பதிலை வைத்து ஒரு தேடலுக்கு தயாராகி கிளம்பினான்.
அமர்ந்திருந்த வாக்கிலே மேசையின் மீது தலைச்சாய்த்து நித்திரை கொண்டிருந்த மோனிஷா தன் அருகில் கேட்கப்பட்ட குரலில் மெதுவாக கண்விழித்தவள்,அங்கே ஒரு காவல் அதிகாரி அலைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை செவி மடுத்தவளுக்கு விழிகள் பளிச்சிட புதிருக்கான விடையை தன் கைவண்ணத்தில் கிறுக்கி கண்டறிந்தவளுக்கு ‘யாஹூ’ என கத்தவேண்டும் போல் தோன்றியது.
அதேநேரத்தில் மகதி பணிப்புரியும் ஆஸ்ஸிஷ் வங்கிக்கு சென்றிருந்த ரணதீரனுக்கு அவனது தேடுதலுக்கான மொத்த இரகசியமும் பொக்கிஷமாய் கைகளுக்கு கிடைத்திருந்தது.
அவர்களுக்கு கிடைத்த பதிலை வைத்து விசாரணையை மேற்கொள்ள இருந்த வேளையில் வங்கியில் அடுத்ததாக ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

 

Priyanka Muthukumar

Administrator
தீரன் 16
அன்று காலை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த தீரனுக்கு முதன் முதலாக கிடைத்த செய்தி வங்கிக்கு அருகே மீண்டும் ஒரு சடலம் கண்டுபிடிக்கப் பட்டு இருக்கின்றது என்கின்ற விடயமே. போன் மூலம் அந்த விஷயத்தை கேட்டு மெல்லிய புன்னகையை சிந்தியவன் "ஐ வில் பி தெயார் சூன்" என்று சொல்லி விட்டு மேசையில் இருந்த துப்பாக்கியை எடுத்து இடுப்பில் சொருகியபடி எழுந்தவன் கையில் இருந்த காப்பை பின்னால் தள்ளியபடி வெளியேற முற்படும் போது அவன் முன்னால் வந்து நின்றாள் மோனிஷா. அவளை நிமிர்ந்து பார்த்தவன் "யெஸ் மிஸ், மோனிஷா" என்று கேட்க அவனுக்கு சலியுட் அடித்தவள் "நேற்று மகதியை கொலை பண்ண வந்த பொண்ணு எழுந்துட்டா சார்" என்றான். "ம்ம், " என்றவன் மேலே சொல்லும்படி கண்களை காட்ட "அவ மகதியை கொலை பண்ண அவ கிட்ட பேரம் பேசினது அந்த பேங்க் மனேஜர் ரமணன் " என்று சொல்லி முடிக்க முதல் "ஹி இஸ் நோ மோர், ஜஸ்ட் டெட்" " என்றவன் கண நேரத்தில் வெளியேறி இருந்தான். அவன் முதுகை வெறித்து பார்த்த மோனிஷாவுக்கு ஏதோ பொறி தட்டிய உணர்வு. பேங்க் முன்னே சடலம் கிடக்கின்றது என்ற விடயம் அவளுக்கும் தெரியும். இதுவரை அந்த சடலம் யாருடையது என்று அடையாளம் காணப்படவில்லை. இப்போது எப்படி இவருக்கு மட்டும் அது பேங்க் மேனேஜர் என்று தெரியும்? " என்று நினைத்தவள் மேலும் மேலும் குழம்பி போனாள். இந்த குழப்பத்தில் நேற்று அவள் கண்டுபிடித்த அந்த கிறுக்கலை பற்றியும் மறந்து போனாள்.
அவளுக்கு ஏதோ தவறாக தோன்ற விறு விறுவென தனது ஜீப்பை எடுத்து கொண்டு ஆசிஸில் பேங்க் வளாகத்தை நோக்கி விரைந்தாள். அங்கே ஏற்கனவே வந்த தீரன் சடலத்தை ஒரு கணம் ஆராய்ச்சியாக பார்க்க அதே முறையில் அந்த சடலம் கொலை செய்யப்பட்டு இருந்தது. அங்கு நின்ற போலீஸ் அதிகாரியை அழுத்தமாக பார்த்தவன் "இது யார்னு அடையாளம் கண்டு பிடிச்சுட்டாங்களா?" என்று கேட்க "இல்ல சார், பேங்க் மூடி இருக்கிறதால யாரும் இந்த இடத்துல இருக்கல்ல, இப்போ தான் பேங்க் ஸ்டாப் எல்லாரையும் வர சொல்லி இருக்கோம்" என்று சொல்ல தலையை ஆட்டியபடி யோசித்தவன் கண்ணில் அந்த வழமையான கிறுக்கலுக்கு பக்கத்தில் "target achieved " என்று ரத்தத்தில் எழுதப்பட்டு இருந்தது.
அதையே அவன் அழுத்தமாக பார்த்து கொண்டு நிற்க அப்போது ஜீப்பில் இருந்து இறங்கிய மோனிஷாவுக்கும் அது தான் கண்ணில் தெரிந்தது. உடனே தீரன் அருகே வந்தவள் அந்த வசனத்தை சுட்டி காட்டி "அப்போ இனி கொலை எதுவும் நடக்காதா சார், இல்ல இது நம்மள டைவர்ட் பண்ண எழுதி இருக்காங்களா " என்று கேட்க அவளை திரும்பி பார்த்து இளக்காரமாக சிரித்தவன் கையில் இருந்த சன் கிளாசை கண்ணில் அணிந்து கொண்டு " டூ மோர்" என்றவன் அங்கிருந்து வெளியேறி தனது ஜீப்பில் ஏறி கொண்டான். ஜீப்பில் ஏற போனவன் அங்கு அவன் ஜீப் அருகே நின்ற போலீஸ்காரனின் தோளில் தட்டி "பத்திரமா இருந்துக்கோ" என்று கூறிவிட்டு ஜீப்பில் ஏறி கொண்டான். அவன் கூறியதில் அந்த போலீஸ்காரன் குழம்பி நிற்க அதை பார்த்த மோனிஷாவின் கண்களோ யோசனையில் சுருங்கியது.
அந்த நேரம் பார்த்து ஏட்டு ஒருத்தர் மோனிஷாவிடம் வந்து "மேடம், இது ஆஸிஸிஸ் பேங்க் மேனேஜர் ரமணனின் சடலம் என்று அவங்க பாமிலி மெம்பர்ஸ் இப்போ தான் கன்பார்ம் பண்ணினாங்க. " என்று கூற அதனை கேட்டு ஒரு கணம் அதிர்ந்தவள் "இது ரணதீரன் சாருக்கு தெரியுமா?" என்று கேட்டாள். உடனே அவர் "இல்ல மேடம், சார் போன பிறகு தான் ஐடென்டிபிகேஷன் நடந்திச்சு, இனி நான் தான் எடுத்து இன்போர்ம் பண்ணனும்" என்று கூறியதும் அவள் தலையில் இடி விழாத குறையாக மேலும் அதிர்ந்து நின்றாள்.
உடனே தன்னை தானே சுதாகரித்தவள் "ஓகே இன்போர்ம் பண்ணிடுங்க" என்றவளுக்கு "எப்படி ரணதீரனுக்கு இந்த விடயம் தெரியும்?" என்று குழப்பமாகவே இருந்தது. அவ்விடத்தில் நின்று இடுப்பில் கை வைத்தபடி யோசிக்க தொடங்கினாள். "ரணதீரன் கொலைகாரனை கண்டு பிடித்து இருக்க வேண்டும், அப்படின்னா ஏன் இன்னும் அர்ரெஸ்ட் பண்ணல? இது மகதி பண்ணலன்னு இப்போ கன்பெர்ம் ஆகுது, ஒரு வேளை அவளை காப்பாத்த இந்த கொலையை மட்டும் தீரன் " என்று யோசித்தவளுக்கு ஏதோ பொறி தட்ட தலையை உலுக்கிவிட்டு சடலத்தின் அருகே எழுதப்பட்ட எழுத்தை கூர்ந்து கவனித்தாள். "அதே எழுத்து, கொஞ்சமும் வித்தியாசம் இல்ல, சோ அதே கொலைகாரன்" என்று நினைத்தவள் மேலும் "அப்போ எல்லா கொலையும் தீரன் தான்" என்று ஆரம்பித்தவளுக்கு மேலும் யோசனை வர மறுக்க அடுத்த கேள்வி 'பட் வை ?" என்று தன்னை தானே கேட்டாள்.
அனைத்து கேஸ் களையும் கண நேரத்தில் கண்டு பிடிப்பவனுக்கு தொடர்ச்சியாக இவ்வளவு கொலைகள் நடந்தும் குற்றவாளியை கண்டுபிடிக்காமல் அவன் இழுத்தடிப்பது முதல் முறை. இதுவே ரணதீரன் மேல் அவளுக்கு சந்தேகத்தை உருவாக்கியது. "மகதியை அப்போ ஏன் மாட்டிவிடனும்? ஒரு வேளை பழைய கோபமா இருக்குமா? அப்போ ஏன் இப்போ காப்பாத்த நினைக்கணும்?" என்று தன்னை தானே கேள்வி கேட்டவளுக்கு தலை வெடிப்பது போன்ற உணர்வு. தலையை தனது இரு கைகளாலும் அழுத்தி விட்டவள் மேலும் அங்கு நிற்கமுடியாமல் அலுவலகத்தை நோக்கி விரைந்தாள். அதே சந்தர்ப்பத்தில் ரணதீரனின் கட்டளைக்கு அமைய அனைத்து வாங்கி ஊழியர்களும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப் பட்டனர்.
மோனிஷா அங்கு வந்து இறங்கிய சமயம், வங்கி ஊழியர்களும் அங்கு வந்து சேர நேரம் சரியாக இருந்தது. அப்போது அவர்களை அழைத்து வந்த போலீசிடம் "எதுக்கு இவங்க?" என்று கேட்க "ரணதீரன் சார் தான், கூட்டி வர சொன்னார்" என்று அவன் பதிலளிக்க கேலியாக சிரித்தவள் "கேஸ் க்ளோஸ் பண்ண ஆள் தேடுறீங்களா?நான் விட மாட்டேன் " என்று மனதுக்குள் நினைத்தபடி அவர்களுடன் விசாரிக்கும் இடத்துக்கு அவளும் சென்றாள். இருட்டான அடைக்கப்ட்ட அறையில் இருக்கும் பெரிய மேசையில் ஏறி அமர்ந்து இருந்தவன் வங்கி ஊழியர்களின் பின்னால் வந்த மோனிஷாவை பார்த்து புருவம் உயர்த்த அவளோ "ஐ வாண்ட் டு வாட்ச் சார்," என்றாள் கொஞ்சமும் பயம் இன்றி. அவன் நினைத்து இருந்தால் அவளை ஒரே வார்த்தையில் வெளியேற்றி இருக்க முடியும். ஆனால் அவன் அவ்வாறு செய்யாமல் "ஓகே கம் ஹியர்" என்றவன் அங்கிருந்த இருக்கையை காட்டி மோனிஷாவை இருக்க சொன்னான்.
அவளோ "இல்ல சார் நிற்கிறேன்" என்று சொல்ல "யுவர் விஷ் " என்றவன் அவன் முன்னே வந்து அணிவரிசையில் நின்ற ஊழியர்கள் அனைவரையும் கூர்ந்து பார்த்தான். முதலில் நின்ற மாலதியிடம் "இப்போ என்ன பண்ணுறீங்க?" என்று கேட்க அவளோ "வீட்ட தான் சார்" என்றாள். "ம்ம்" என்றவன் அடுத்ததாக நின்ற சித்ராவிடம் "ஆர் யு மர்ரீட் ?" " என்று கேட்க அவளோ இல்லை என்று தலை ஆட்டினாள். உடனே மோனிஷா "கேட்கிற கேள்வியை பாரு, ஏன் அந்த பொண்ணையும் கல்யாணம் முடிக்கிற ஐடியாவா?" என்று மனதுக்குள் தீரனுக்கு திட்டினாள். "ஓகே" என்றபடி அடுத்த பெண் காஞ்சனாவை பார்த்தவன் "குழந்தைங்க இல்லன்னு இருந்தீங்களே, ட்ரீட்மெண்ட் போறீங்களா?" என்று கேட்க மோனிஷாவுக்கு ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது. "ரொம்ப முக்கியம்" என்று மனதுக்குள் அவனுக்கு திட்டியவள் முகத்தை கடைக்கண்ணால் பார்த்தே அவள் மனதை கணித்தவன் "ரொம்ப முக்கியம் தான்" என்று மோனிஷாவை பார்த்து சொல்ல அவள் இதயம் நின்று துடித்தது.
"நான் நினைக்கிறது எப்படி இவருக்கு தெரிஞ்சிச்சு?" என்று நினைக்கும் போதே மாலனிடம் திரும்பியவ தீரன் "மகதி போட்டோவை செத்து போன ரஞ்சனிடம் கேட்டது நீ தானே" என்று அவனை எரித்து விடுவது போல பார்த்து கொண்டே கேட்க அவன் தொண்டைக்குழியில் நீர் இறங்க மறுத்தது. "இல்ல சார், அது அன்னைக்கு" என்று அவன் தொடங்க "உயிரோட இருக்கிறன்னு நினச்சு சந்தோஷப்பட்டுக்கொ " என்று கடினமான குரலில் அவன் எச்சரித்தில் அவன் பயம் எகிறி மயங்காமல் இருந்தது பெரிய விஷயம் தான்.
இதை கேட்ட மோனிஷாவின் மனதில் அடுத்த க்ளூ தட்டுப்பட "தீரன் ஏன் மகதி மேல் உள்ள பைத்தியக்கார தனமான காதலால், அவ கூட பிரச்சனை பண்ணின எல்லாரையும் கொலை பண்ணி இருக்க கூடாது?" என்ற கோணத்தில் யோசிக்க தொடங்கினாள். அனைவரிடமும் தனிப்பட்ட கேள்வியை மட்டுமே கேட்டவன் அவர்களை அனுப்பி வைத்ததும் மோனிஷாவும் யோசனையுடன் கிளம்பி அவர்கள் பின்னால் போக வாசல் வரை சென்றவளிடம் "மோனிஷா ஆல் தெ பெஸ்ட்" என்றவன் மேசையில் இருந்து பாய்ந்து இறங்கி அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டு நின்றவளை தாண்டி ஒற்றை கண்ணை அடித்துவிட்டு கண நேரத்தில் வெளியேறினான்.
இவ்வளவு நாளும் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் இன்று அவனிடம் இல்லை. ஒரு வேளை அவன் நினைத்த அனைவரையும் கொன்ற திருப்தியாக இருக்குமோ? என்று நினைத்தவளுக்கு நேற்று கண்டு பிடித்த கிறுக்கலின் எண்ணம் வந்து சேர்ந்தது. அவள் அலசி ஆராய்ந்ததில் "AMT , AT , ATM , MT, AT, AUT, AM, AVT" என்று பல கணிப்புகளை மேற்கொண்டவள் அது வங்கி சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் "ATM " ஆக இருக்க வாய்ப்புள்ளதாக முடிவெடுத்து கொண்டாள்.



அதே நேரம் தனது அறைக்குள் வந்த தீரனோ நாடியில் கை குற்றி பல விடயங்களை யோசித்து கொண்டு இருந்தான். நாளைக்கு மகதியை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நாள். அதே சமயம் இன்றைய கொலையை வைத்து அது மகதி செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும். என்று யோசிக்க தொடங்கியவன் தொடர்ந்து நாளைக்கு அவன் செய்யவேண்டிய முக்கியமான விடயங்களை யோசிக்க யோசிக்க அவன் முகம் மெலிதாக மலர்ந்தது.
உடனே சில விடயங்களை உறுதி செய்யும் பொருட்டு அந்த வங்கியின் உரிமையாளர் "உதய் ஷர்மாவுக்கு" அழைத்து பேச தொடங்கினான்.
அதே நேரம் அங்கு வந்த வங்கி ஊழியர்களுக்கு மகதி கொலை செய்யவில்லை என்கின்ற உண்மை இன்று தெரிந்ததால் அவளை சந்திக்க யோசித்தனர். ஜெயிலரிடம் அனுமதி வாங்கியவர்கள் அவளுக்காக காத்திருக்க காலையிலேயே பேங்க் மானேஜர் இறந்ததை கேள்விப்பட்டவள் கனத்த மனதுடன் நண்பர்களை சந்திக்க விரைந்தாள். அப்போது அங்கு நின்றவர்கள் "மகதி " என்று அழைக்க மெலிதாக சிரித்தவள் "எப்படி இருக்கீங்க?" என்று வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி கேட்டாள். உடனே மாலதி "சாரி மகதி , நீ தான் நிஜ கொலைகாரின்னு நினச்சு உன்னை சந்திக்காம இருந்துட்டோம்" என்று சொல்ல "விடு மாலதி, நானும் உன் நிலமைல அப்படி தான் இருந்திருப்பேன்" என்று கூறியவள் மற்ற அனைவரையும் பார்த்து விரக்தியாக புன்னகைத்தாள். உடனே மாலன் "நாளைக்கு கோர்ட்டுக்கு கொண்டு போவார்களா?" என்று கேட்க ஆம் என்று தலையாட்டியவள் "எப்படியும் தீரன் குற்றவாளியை கண்டுபிடிச்சிருவார் " என்று சொல்ல "எப்படியும் கண்டு பிடிச்சுருவாரா? " என்று காஞ்சனா கேட்டாள். "கண்டிப்பா " என்று அதற்கு பதிலளித்தாள் மகதி. அதற்கு சித்ரா "அப்படின்னா இப்போ வரைக்கும் ஏன் அர்ரெஸ்ட் பண்ணல" என்று கேட்க அதற்கு மகதி "கண்டிப்பாக ஏதும் காரணம் இருக்கும்" என்று கூறினாள் . மகதிக்கு தன்னவன் மேல் எல்லையில்லாத நம்பிக்கை இருந்தது.


இப்படியே பேசி விட்டு அவர்களும் புறப்பட மகதியும் கனத்த மனதுடன் தனது அறைக்குள் சென்றடைந்தாள். அதுவரை உதய் ஷர்மாவுடன் பேசி கொண்டிருந்த தீரனுக்கு வங்கி ஊழியர்கள் மகதியை சந்தித்து விட்டு போன விடயம் தெரியாமல் இருந்தது.

உதய் ஷர்மாவுடன் பேசி விட்டு போனை அணைத்தவன் மனமோ மகதியிடம் பல கேள்விகள் கேட்க வேண்டுமென கட்டளையிட அங்கிருந்த போலீசிடம் சொல்லி அவளை அடைக்கப்பட்ட அறைக்கு கொண்டுவர உத்தரவிட்டான்.
அவளும் உத்தரவிற்கு ஏற்ப அந்த அறைக்குள் வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க வெண்ணிற ஷர்ட்டும் காக்கி நிற பேண்டும் அணிந்து முறுக்கேறிய புஜங்களுடன் அந்த அறைக்கு வீறு கொண்டு நடந்தான் ரணதீரன்.
அறைக்குள் குனிந்தபடி இருந்தவள் முன்னே இருந்த மேசையில் தாவி ஏறியவன் தனது சுட்டு விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான். அவளும் மெதுவாக நிமிர்ந்து தன்னவனை பார்க்க அவள் விழிகளுடன் தனது விழிகளை கலக்கவிட்டவன் அவள் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி சற்று குனிந்து அவள் இதழ்களுக்குள் தனது இதழ்களை ஆழ புதைத்து கொண்டான் . அவன் இதழ் தீண்டினால் திமிறுபவள் இன்று அவன் இதழ்களுக்குள் அடங்கி போனாள். இருவர் மனதிலும் இருக்கும் காயத்துக்கு அந்த இதழ் தீண்டல் மருந்தாக அமைய அவனுக்கு ஈடு கொடுத்து அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் இதழ்களை விடுவித்து அவள் கண்களை நிமிர்ந்து பார்த்தவன் "ஏண்டி கொலை பண்ணின?" என்று கலங்கிய கண்களுடன் கேட்ட போது அவன் குரலில் அவ்வளவு வலி.
 

Priyanka Muthukumar

Administrator
தீரன் 17:
தன்னவளின் முன்பு அமர்ந்து விழிகளில் வலியோடு “ஏன்டி கொலைப் பண்ணே…??” என ரணதீரன் கேட்க,
அதில் அடிப்பட்ட பார்வையோடு கணவனை நோக்கிய மகதி ‘நீங்க எப்போதும் என்னை நம்பமாட்டீங்களா தீரன்...??’ என அவனின் வலியை விட பல மடங்கு உயர்ந்த வலியை விழிகளில் தேக்கி கேட்க,
அவளின் வலியை உணர்ந்த ரணதீரனின் நெஞ்சை யாரோ ஊசியில் குத்துவது போல் வலிக்க நரம்புகள் புடைத்த முறுக்கேறிய கரங்களை ஒரு முறை இறுக்கி மூடி திறந்தவன் உணர்வுகள் மரத்த குரலில் “சொல்லுடி எதுக்காக நம் குழந்தையை கொன்னாய்...இரண்டு உயிரும் ஒன்றோடு ஒன்று கலந்து நம் காதலின் அடையாளமாய் கருவாய் உயிர்த்தறித்த அந்த ஜீவனை உன்னால் எப்படிடி கொல்ல முடிந்தது...அது நம் வாழ்க்கையின் ஆணிவேர் என தெரிந்தும் அதை நீ கொன்னுட்டே...ஏன்டி...??” நிதானமாக ஆரம்பித்த தீரன் கடைசியில் முடிக்கையில் வெறித்தனமாக அவளின் தோளை பிடித்து உலுக்க,
அதில் வலி உயிர்ப்போனாலும் அதை விட அதிகமாய் தன்னை நம்பாமல் கேட்ட கணவனின் கேள்வி அவளை அடியோடு சாய்த்திட ‘நம்மோடு வாரிசை நான் கொல்லலை தீரன்...நான் கொல்லலை’ என மனதிற்குள் அரற்றியவள் இதழ்பிரித்து உண்மையை கூறியிருக்கலாமோ…??
அவள் வாயடைத்து போய் அமர்ந்திருந்த விதம் அவனுள் கோபத்தைத் தூண்டி விட “மகதி ஐ வான்ட் ஆன்சர்…” என அழுத்தமான குரலில் வினவ,
அந்த அழுத்தத்திலே அவனது கோபத்தின் அளவு புரிந்தாலும் இப்போதும் தன்னை நம்பாமல் அவன் கேள்வி எழுப்பிய விதம் அவளது தன்மானத்தை சீண்டி விட தேகம் விறைத்து அவனடமிருந்து விலகி நிமிர்ந்து அமர்ந்தவள் வேறுப்புறம் திரும்பிக்கொண்டாள்.
அதில் மேலும் ஆத்திரமானவன் அவளை உதறி மேசையிலிருந்து கீழே குதித்திறங்கி “ச்சை திமிரு...திமிரு உடம்பு முழுக்க திமிரு…” என உறுமி பின்னங்கழுத்தை தன் இடது கையால் தடவியவன்,
தனது நீண்ட காலால் ஒரு முறை அறையை அளந்தவனின் விழிகள் தனது மனைவியை ஆராய்ந்திட,தன்னை காணாமல் வேறு எங்கோ வெறித்துக்கொண்டிருந்த மனைவியைக் கண்டு மேலும் சீற்றம் அதிகரிக்க வேகமாக அவளை நெருங்கி அவளின் தாடையை இறுக்கிப்பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் பற்களை கடித்து “என் குழந்தையை உயிரோடு கொன்றதுக்கு நான் தான்டி உன் மேலே கோபமா இருக்கணும்...ஆனால் நானே உன்கிட்ட வழிய வந்த பேசறேன்...நீ என்னவோ முறுக்கிக்கிட்டு திரும்பிக்கிறே...என்ன உன்னோட ஆட்டிடூயுடை என்கிட்டயே காட்டிறீயா…??” என புருவம் உயர்த்தி கர்ஜிக்க,
அவன் இறுக்கிப்பிடித்ததில் வலி உயிர் போக “தீரன் விடுங்க…” என முகத்தை சுருக்கி எரிச்சலோடு தன் தாடையைப் பிடித்திருந்த அவனது கரத்தைத் தன் மலர் கரங்களால் தள்ளிவிடப் பார்க்க,
அதில் மேலும் கடுப்பான ரணதீரன் அவளது தாடையை இன்னும் அதிகமாக இறுக்கி “ஜெயில்ல தள்ளியும் உன்னோடு ஈகோ மட்டும் குறையவில்லைடி...அதே திமிரு...அதே கர்வம்...அதே ஆணவம்...அதே அழகு” என்னும் போது அவளது செழிப்பான உடல் அங்கங்களை அவனது கழுகு விழிகள் கொண்டு பார்வையால் மேய விட,அவனது விதிகளின் தீட்சணியத்தில் அவளது தேகமெல்லாம் மயிர்கூச்சரிந்து சிலிர்த்து நிற்க,
அவனது கூர் விழிகளோ அவள் தேகத்தின் சிலிர்ப்பை அழகாக படம்பிடித்திட,இப்போது இன்னும் அதிகமான உரிமையுடன் விழிகளை மேயவிட்டான்.
தனது கணவனின் கரங்களில் உருகி குலைய அறிவுறுத்திய மனதின் கூக்குரிலில் தன்னிலை மீண்ட மகதி அவனை விழிகளால் எரித்து அவனை அடிக்க கை ஓங்கிட,அந்த நிலையிலும் அவளது தாக்குதலை முன்பே அறிந்து மற்றொரு கையால் தடுத்த ரணதீரன் தாடையை இறுக்கிய கைகள் இப்போது அவளது கூந்தலை இறுக்கிப்பிடித்திருக்க,
அவளது கூந்தலைப்பற்றி தன்னை நோக்கி இழுக்க அவனது முகத்தனருகே வந்த அவளது முகத்தை கோபத்தோடு உறுத்து விழித்த ரணதீரன் ஒற்றை புருவத்தை உயர்த்தி “இந்த கை ஓங்குற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காதே...அந்த வேலையில்லாமல் எவனாவது முட்டாள் இருப்பான் பாரு,..அவன்கிட்ட வைச்சுக்கோ மைண்ட் இட்…” என பெரும் சீற்றத்தோடு நெருப்பாய் தகித்தவன் மிக அருகினில் துடித்துக்கொண்டிருத்த அவளது இதழைக் கண்டு சிறைப்பிடிக்க உள்ளமும் உடலும் தூண்டினாலும் தன்னை கட்டுப்படுத்தி அவளை உதறி அறையிலிருந்து வெளியேற வேக எட்டுகள் வைத்து முன்னேறியவன்,தீடிரென்று திரும்பி நின்று “நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது...நீ ரிலீஸான அடுத்த நிமிடம் நம்ப வீட்டில் இருக்கிறாய்…” என கட்டளையிட,
‘முடியாது’ என மகதி மறுப்பு தெரிவிப்பது போல் முகத்தை சுழிக்க,அதை உணர்ந்தவனின் பார்வையில் ஒரு இளக்காரம் குடிக்கொள்ள “நீ வரீயா இல்லையானு நான் பர்மிஷன் கேட்கலை...நீ வரலைனாலும் உன்னை தூக்கிட்டு போயிடுவேன்...அதை விட ஒரு முக்கியமான விஷயம் நீ அழிச்ச அந்த குழந்தையை நீயே எனக்கு பெத்து தரணும்…” எனவும்,
அவனை முறைத்தவளைக் கண்டு கோபம் குறைய நமுட்டு சிரிப்புடன் “பேபி அதுக்கான ஏற்பாட்டை நீ தனியா செய்து ரொம்ப கஷ்டப்படவேண்டாம்...உனக்கு வேண்டிய எல்லா உதவியும் மறுக்காமல் நான் செய்கிறேன்…” என்றவன் அத்தோடு நிறுத்தாமல்,
“அதுக்கு நீ ஒண்ணே ஒண்ணு மட்டும் இல்லாமல் செய்யணும்…” என்றவன் குறிப்பாய் அவளது உடைகளின் மீது பார்வையைப் பதிக்க,
முதலில் புரியாமல் விழித்த மகதி அறிந்தவுடன் “டேய்” என பல்லைக்கடித்து அவசரமாக உடையை இழுத்து மூடி அவனை விழிகளால் எரித்து பல்லை நறநறவென கடிக்க,அதைக்கண்டு இதழ்ப்பிரித்து சிரித்த ரணதீரன் “யூ கேட்ச்டு மை பாயிண்ட்...கெட் ரெடி பேபி” தலைக்கோதி கண்சிமிட்டி வெளியேறினான்.
போகும் அவனை ஒன்றும் செய்யமுடியாத இயலாமையில் வெளியில் எரிச்சலடைந்தாலும்,அவளது உள்ளமோ அன்றைய நாளை எதிர்ப்பார்த்து மகிழ்ச்சியில் குறுகுறுத்தது என்னவோ உண்மை…!!

ஆஸிசிஸ் வங்கி மேலாளரின் கொலைவழக்கில் கிடைத்த முக்கிய ஆவணங்களை வைத்து மோனிஷா மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டாள்.
சடலத்தின் முன்னிலையில் நின்றிருந்த மோனிஷா நாசியை முகமூடியால் மூடி,தன்னிடமுள்ள ஒரு பேனாவை கொண்டு சடலத்தை முழுமையாக ஆராய்ந்தாள்.
உடல் முழுவதும் நீல நிறம் பூத்து நரம்புகள் புடைத்த நிலையில் விறைத்துக்கிடந்த சடலத்தை பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருப்பினும்,வேறுவழியின்றி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அருவருப்பான உணர்வை கட்டுப்படுத்தினாள்.
மருத்துவர் உதவிக்கொண்டு தேகம் முழுவதையும் ஆராய்ச்சி செய்திருந்த மோனிஷா அவரிடம் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டாள்.
மற்ற கொலைகளை போன்று இந்த கொலையிலும் கொலைக்காரன் அதே செயல்முறையைப் பின்பற்றி உயிரை பறித்திருக்கிறான் என்பதை அறிந்துக்கொண்டாள் மோனிஷா.
தீடிரென்று மோனிஷாவின் மூளையில் சந்தேகங்கள் பளிச்சிட மருத்துவரிடம் “டாக்டர் உடலிலுள்ள மத்த அடையாளங்களை வைத்து அந்த கொலையை எப்படி செய்திருக்கிறான் என்பது புரிந்தது...ஆனால் கொலைக்காரன் எதற்காக அந்த காகிதத்தை உபயோகித்து கொலைச்செய்ய வேண்டும் டாக்டர்…??” என புருவ சுழிப்புடன் கேட்க,
மருத்துவர் இருக்கையில் நன்றாக சார்ந்து அமர்ந்து இதழ்பிரித்து சிரித்து “அதை நீங்க தான் கண்டுப்பிடிக்கணும் மிஸ் மோனிஷா…” என தோளைக் குலுக்க,
அவரை ஒரு மாதிரி பார்த்த மோனிஷா இமைகள் இடுங்க “அதை சரி டாக்டர்...இது எங்களோட வேலை தான்...நான் மறுக்கவில்லை...ஆனால் நான்கு கொலைகளை நடந்தப்பிறகும் நீங்க அந்த காகிதம் என்னவாக இருக்கும் என கண்டுப்பிடிக்காமல் இருப்பது எனக்கு அதிசயமாக இருக்கிறது டாக்டர்…” என அவரை போலவே தோளைக் குலுக்கி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய மோனிஷா கீழே குனிந்து தனக்கு கிடைத்த ஆதாரங்களை ஒரு முறை காகிதத்தில் எழுதி பார்க்க ஆரம்பித்தாள்.
அவளை ஒரு மாதிரி பார்த்த மருத்துவர் சுழல் நாற்காலியை சுழற்றியப்படி “மிஸ் மோனிஷா உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்...அதுக்கு நீங்க தெளிவான பதில் கொடுக்க முடியுமா…??” என ஆழ்ந்த குரலில் கேட்க,

மோனிஷா எழுதுவதை நிறுத்திவிட்டு புருவத்தை உயர்த்தி இரண்டு கைகளை கோர்த்து நெட்டி முறித்து உதட்டை பிதுக்கி ‘கேளுங்க’ என்பது போல் கையசைத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திட,
அதைப்பார்த்து மேலும் இதழ்பிரித்து சிரித்த மருத்துவர் “உங்ககிட்ட இருக்கும் நோட்பேடில் இருந்து ஒரு பேப்பர் கிழித்து என்கிட்ட தாங்க” என்றவுடன்,
‘இதுவா கேள்வி’ என்பது போல் பார்த்த மோனிஷா அவர் கேட்டதை போல் காகிதத்தைக் கொடுக்க,அதை வாங்கிய மருத்துவர் மேசையின் மீதிருந்த ஒரு பிளாஸ்டிக் டிரேயை எடுத்து அதில் அவள் கொடுத்த காகித்தை வைத்து,புட்டியில் இருந்த நீரை டிரே நிரம்பும் வரை ஊற்றிவிட்டு மூடி கொண்டு புட்டியை மூடி வைத்தார்.
‘இவர் என்ன லூசா…??’ என்பது போல் முகத்தை சுருக்கி மோனிஷா பார்க்க,
ஐந்து நிமிடங்கள் கடந்த நிலையில் மருத்துவர் மோனிஷாவிடம் “மிஸ் மோனிஷா அந்த பேப்பரை தண்ணீரில் இருந்து எடுங்க…” எனவும்,
மோனிஷா தன்னிடம் இருந்த பேனா கொண்டு அந்த காகிதத்தை எடுக்க முயற்சிச்செய்ய அதுவோ தண்ணீரில் நெகிழ்ந்து இருந்ததினால் நைந்து கிழிந்து நீரிலே விழுந்தது.
மோனிஷா சிறிது எரிச்சலுடன் “டாக்டர் இது என்ன சின்னப்புள்ளைத்தனமான விளையாட்டு...நீங்க என்கிட்ட கேள்வி கேட்கிறேன் என்று சொன்னதற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்…??” என பேனாவை மேசையின் மீது தூக்கியெறிந்துவிட்டு கேட்க,
இப்போது வெளிப்படையாக வாய்விட்டுச் சிரித்த மருத்துவர் “இப்போது இது தான் என்னோட கேள்வி…??உங்களால் ஏன் அந்த பேப்பரை முழுமையாக எடுக்க முடியலை…??” என கேலியாக கேட்க,
“இது என்ன கேள்வி டாக்டர்...தண்ணீரில் ஊறிப்போன பேப்பரை எப்படி எடுக்கமுடியும்…முட்டாள் தனமான கேள்வியா இருக்கு” எனவும்,

“எஸ் யூ காட் மை பாயிண்ட்...சும்மா ஒரு ஐந்து நிமிஷம் ஊறிப்போனதுக்கே உங்களால் அந்த பேப்பரை எடுக்க முடியலையே...ஒரு இறந்துப்போன சடலத்தின் இரண்டு நாட்கள் முழுவதும் வயிற்றிற்கு செல்லும் உணவு குழாய் முழுமையாக அடைக்கப்பட்டு,நம் உடலில் சுரக்கும் உமிழ் நீரிலும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் வீரியத்தினால் அந்த காகிதத்தின் நிலை என்னவாக இருக்கும்…??” என பந்தை அவளை நோக்கி திருப்பி விட,
இப்போது அவளுக்கும் அவரது காரணி தெள்ள தெளிவாக புரிந்திட
“வெல் நீங்க சொல்லறது எனக்கு புரியது டாக்டர்...சாரி உங்களை அவசரப்பட்டு திட்டியிருக்கக்கூடாது” என மன்னிப்பை வேண்டியவள்,
குனிந்து தான் எழுதிய காகிதத்தில் இருந்தவைகளை ஒரு முறை வாசித்த மோனிஷாவின் மூளையில் ஏதோ பளிச்சிட மருத்துவரிடம் நிமிர்ந்து “டாக்டர் அந்த சடலத்தின் அருகில் எப்போதும் ‘ATM’ என்ற சிம்பிள் எழுதியிருக்கும்...ஆனால் இந்த முறை ‘target achieved’ என எழுதியிருந்தது...வங்கி,ஏ.டி.எம் இதெல்லாம் வைத்து பார்க்கப்போகும் போது,ஒரு வேளை அந்த காகிதம் ஏன் ரூபாய் நோட்டுகளாக இருக்கக்கூடாது டாக்டர்…??” என மிகுந்த ஆர்வத்துடன் புருவம் உயர்த்திட,
மருத்துவரோ சிறு தோள் குலுக்கலுடன் “அப்படியும் இருக்கலாம்…” என அலட்சியமாக கூறிட,
அவளோ “டாக்டர் நீங்க ஒரு முறை அதை செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட் கொடுத்தீங்கனா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்…” என அவசரப்படுத்த,
அவரோ மிகவும் நிதானமாக அவளை பார்த்து “மிஸ் மோனிஷா நீங்க ரொம்பவும் தாமதம்...அவர்களின் வயிற்றில் இருந்தது ரூபாய் நோட்டுகள் தான் என்பதை நான் எப்போது கண்டறிந்துவிட்டேன்…” என வெகு சாதாரணமாக குறிப்பிட,
அதில் திகைத்துப்போட மோனிஷா இருக்கையிலிருந்து எழுந்து “டாக்டர் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அப்புறம் ஏன் எங்ககிட்ட ரிப்போர்ட் கொடுக்கலை...??” என சிறு கோபத்துடன் கேள்வி எழுப்பிட,

அதற்கு அவர் கூறிய பதிலில் அவள் விழிகள் இடுங்கியது
********************************
இரண்டு நாட்கள் கழித்து வந்த இரவில்,
கைகள் பின்னால் கட்டிய நிலையில் இருக்கையில் சுய நினைவை இழந்து ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மகதி மெதுவாக தனது மலர் போன்ற மெல்லிய இமைகளைப் பிரித்தாள்.
ஆள் அரவம் ஏதுமின்றி சுற்றிலும் இருள் கவிழ்ந்திருக்க சுற்றியிருக்கும் இடம் முழுவதும் கருமை படர்ந்திருந்ததால் அவளால் வேறு எதையும் அங்கு கண்டுக்கொள்ள முடியவில்லை.
தனக்கு இட்டிருந்த மயக்க மருந்தின் நெடியினால் இப்போது அவளது தலை கிறுகிறுத்தது.
‘இது என்ன இடம்…??இங்கு எப்படி வந்தேன்…??’ எப்படி யோசித்து பார்த்தாலும் அதற்கான விடை பூஜ்யமாக மட்டுமே இருந்தது.
பின்னால் இழுத்துக்கட்டப்பட்டிருந்த கைகளில் வலி வேறு பின்னியெடுக்க,கரங்களும் கால்களும் இரத்தம் ஓட்டம் செல்ல முடியாத வகையில் விருத்துப்போய் இருந்தது.
அவளுக்கு அவ்விடத்தில் மூச்சடைப்பது போல் இருக்க இதழை திறந்தாவது சுவாசத்தை உள்ளிழுக்கலாம் என நினைத்தாலும் முடியாத வகையில் அவளின் வாய்கள் ஒட்டும் நாடாவை கொண்டு அடைக்கப்பட்டிருந்தது.
அதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான மகதியின் தேகம் வியர்வையில் குளிக்க அவ்விடத்தில் இருக்க முடியாமல் கட்டுகளை கவிழ்க்க முயற்சி செய்தாள்.
எவ்வளவு தூரம் முயற்சி செய்தப்போதும் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் சுருண்டுப்போன மகதி விழிகளை மூடி தொய்ந்து போக,அச்சமயம் இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒரு காலடி ஓசை அவளருகே வருவது போல் தோன்றியது.

அதை அறிந்து விழிகளை படீரென்று திறந்த மகதி அவர்கள் யார் என்று அறிய வேண்டி விழி விரித்தாள்.
அந்த கருமை நிற இருளில் ஒரு கருப்பு உருவம் தன்னை நோக்கி வருவது மட்டும் அவளது கூர்மையான விழிகளுக்கு தெரிந்தது.
அவ்வுருவம் தனக்கு மிக அருகே வந்தவுடன் அதன் கையில் இருந்த டார்ச் லைட் ஒளிர்ந்து மகதியின் முகத்தை கூசச்செய்தது.
அதனால் மயிர் கூச்சத்தில் இமைகளை மூடி தன்னை சமாளித்து விழிகளை திறந்த மகதி,ஒளிர்ந்திருந்த வெளிச்சத்தை தாண்டி அந்த உருவத்தின் முகத்தை காண விளைந்தாள்.
உடல் முழுவதும் கருப்பு நிற உடைகள் கொண்டு தன் உருவத்தை மறைந்திருந்த அவ்வுருவம் இப்போது விளக்கை மேல் நோக்கி அடித்து,மகதியின் வாயில் இருந்த ஒட்டும் நாடாவை பிரித்தெடுத்தெடுத்தது.
இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த மூச்சுகள் அனைத்தும் இருமலாக வெளியேற்ற மகதி அவ்வுருவத்தை நிமிர்ந்து பார்த்து “யார் நீ…??எதுக்காக என்னை கடத்தியிருக்கே…??” என துணிச்சலை வரவழைத்தப்படி கேட்க,
தலையில் முக்காட்டை போட்டிருந்த அவ்வுருவத்தின் இதழோரம் ஒரு கேலி புன்னகை நெளிந்தது.
இதழோரம் அலட்சிய புன்னகை பூத்தப்படி விழிகள் இரண்டும் கொலைவெறியில் சிவந்திருக்க தனது முக்காட்டை மெதுவாக அகற்றியது.
டார்ச் விளக்கின் உபயத்தில் அவ்வுருத்தின் முகம் மகதியின் கூர் விழிகளில் பளீச்சிட,அந்த நொடி அவளது தேகம் முழுவதும் பல ஆயிரம் மின்சாரம் தாக்கிய உணர்வில் “நீ...நீ...நீயா…எப்படி...?” குரலில் நடுக்கத்துடன் கேட்டவளுக்கு பேரதிர்ச்சி உண்டாக்கியது.


 

Priyanka Muthukumar

Administrator
தீரன் 18
அவள் கேட்டதும் விஷமமாக புன்னகைத்த அந்த உருவம் "நானே தாண்டி" என்று அவளிடம் கூறிவிட்டு அவள் அருகே கட்டப்பட்டு இருந்த காக்கி சட்டை அணிந்தவனை பார்த்து "செய்த பாவத்துக்கு அனுபவிக்க வேண்டாமா?" என்று கேட்க அதில் இருந்தவனோ "ப்ளீஸ் என்னை ஒண்ணும் பண்ணிராத" என்று கெஞ்ச தொடங்கினான். அவன் வேறு யாரும் அல்ல மேனேஜர் கொலை நடந்த அன்று கவனமாக இருக்க சொல்லி தீரன் வார்னிங் கொடுத்த போலீஸ்காரனே ஆவான். அவன் கெஞ்சுவதை பார்த்து எரிச்சலடைந்து "சீ, போலீஸ் ஆஹ் இருந்திட்டு கெஞ்சாத சகிக்கல " என்று கூறி விட்டு அந்த போலீஸ் காரன் இருந்த நாற்காலி கைப்பிடியில் இரு கைகளையும் வைத்து சற்று குனிந்து அவனை உற்று பார்த்தது அந்த உருவம். அதன் விழிகளில் இருந்த கொலைவெறியை கண்டவன் இதயம் நின்று துடிக்க "என்னை எதுக்கு கொல்ல போற?" என்று நலிந்த குரலில் கேட்டான்.
அதை கேட்டு "ஹா ஹா " என்று சத்தமாக சிரித்துவிட்டு "ரீசன் தெரியாம செத்து போக மாட்டா" என்று கூறியபடி அடுத்ததாக அது உச்சரித்த "விஜய் " என்ற பெயரில் அவனது சர்வ நாடியும் ஒடுங்கியது. உடனே அவன் " நீ... நீ" என்று தடுமாற "நானே தான் " என்று ஆரம்பித்து தன்னை அறிமுகப்படுத்தியபடி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட அவன் முரசு வெடித்து ரத்தம் பீறிட்டது. நடப்பதை மகதி விழி விரித்து அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்து கையில் இருந்த வெள்ளை துணியை அவன் வாயில் கட்டிவிட்டு மீண்டும் அவன் முகத்தை தாக்க அவன் மயங்கி சரிந்தான்.
உடனே கையில் இருந்த தொலைபேசியில் இருந்து இன்னும் ஒருவருக்கு அழைத்த அந்த உருவம் "மூணு பேரையும் கொன்னுடவா?" என்று கேட்க மறு முனையில் இருந்து "உன் இஷ்டம்" என்று வந்த பதிலில் அந்த உருவத்தின் கண்ணில் இருந்து வலியுடன் கூட இரு சொட்டு கண்ணீர் விழ " ம்ம்" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு மர நாற்காலியில் கை கால்கள் கட்டப்பட்டு தலை கவிழ்ந்து தொங்க பாதி மயங்கிய நிலையில் உணர்வுகளின்றி அமர்ந்திருந்த போலீஸ்காரனை அந்த உருவம் நெருங்கியது.

அங்கிருந்த மேசையில் இருந்த ஒரு கூரான கத்தி அதன் கைகளுக்கு இடம் மாறி இருக்க,மெதுவாக அடியெடுத்து வைத்து இருக்கையில் மயங்கி இருந்தவனை நெருங்கி,அவனது தலை முடியைப் பிடித்து நிமிர்த்தி அவனது கன்னத்தில் பலமான ஒரு அறை விட்டது.
அதில் இலேசாக குலுங்கிய அந்த நாற்காலியின் அசைவிலும் கன்னத்தில் விழுந்த கைகளின் அழுத்தத்தினாலும் தசை பற்றி எறிய “ஹூம்…” என முனங்கலோடு மெதுவாக விழிகளைத் திறந்தான்.
இமைகளை மெல்ல பிரிக்க,அனைத்தும் கலங்கலாக தெளிவின்றி தெரிந்தது. அதனால் மீண்டும் இமைகளை மூடி ஆசுவாசப்படுத்திக்கொண்டு திறக்க முயல,அதற்குள் அவனது கன்னத்தில் சுருக்கென்று ஒரு வலி பரவ “ஸ்ஆஆ” என மெல்லிய முனங்கலோடு இமைகளைப் பிரித்தான்.
அதற்குள் தன்னை நோக்கி ஒரு கூரான ஆயுதம் பாய்ந்து வருவதை அறிந்து,அது என்னவென்று அறிந்துக்கொள்ள போராடி இமைகளை நன்றாக பிரிக்க முயற்சி செய்ய,அதற்குள் அந்த கூரான ஆயுதம் அவனது மற்றொரு கன்னத்தை பதம் பார்த்து சூடான குருதியை வெளியேற்றியிருந்தது.
இப்போது வலி உயிர்ப்போக “ஆஆஆ” என வலியில் கத்த முடியாத வகையில் அவனது வாய் துணி கொண்டு இறுக பொத்தி,கரங்கள் இரண்டும் இறுக்கிக்கட்டப்பட்டிருக்க, அவனது விழியில் பயம் உச்சத்தை தொட,அவனது தேகம் நடுங்கியது.
அவனுக்கு எதிரில் நின்றிருந்த அந்த உருவத்தின் விழிகள் கொலை வெறியுடன் சிவந்திருக்க,அதன் விழிகளில் தெரிந்த வன்மம் ‘எனக்கு இது போதாது’ என்பது போல் மேலும் பளபளக்க,
தன் கையில் உள்ள கத்தியால் ஆவேசமாக அவனது உடலை பல கீறல்களாக சரசரவென குத்தி கிழிக்க,அவனது உடம்பிலிருந்து குருதி பிறீட்டு வெளியேறியது.
அவனது தேகத்தில் ஒவ்வொரு அணுவும் பெரும் வலியில் துடிக்க,அவனது கைகால்கள் உடலை விட்டு உயிர் பிரிந்து செல்வதற்கு முன்பு பலிக்கொடுத்த வெட்டப்பட்ட ஆடு துடிப்பது போல் துடிக்க ஆரம்பிக்க,அதை கண்டு ஒரு குரூர திருப்தியுடன் புன்னகைத்த அந்த உருவத்திற்கு அவ்வளவு சீக்கிரம் அவன் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்து செல்வது பிடிக்கவில்லை போலும்,அதனால் அவனின் உயிர் உடலை பிரிவதற்கு முன்பாக தன் கையில் உள்ள கூரான கத்திக்கொண்டு அவனது விழிகளை பறிப்பதற்காக வேண்டி தனது கத்தியை அதி வேகத்தில் பாய்ச்சியது.
அது பாய்ச்சிய வேகத்தில் அவனது விழிகள் தோண்டி எடுக்கப்பட்டு அதிலிருந்த இரத்தம் பீய்ச்சி அடித்தது. இந்த கொடூர கொலையை பார்த்து கொண்டிருந்த மகதி அவ்விடத்திலேயே மூர்ச்சையானாள். அந்த இடத்தில் இந்த கொடூரத்தை பார்த்து மூர்ச்சையானது மகதி மட்டுமல்ல அங்கு நாற்காலியில் கட்டப்பட்டு இருந்த இன்னொரு உருவமும் தான்.
******************************************************************************
அதே சமயம் "ஷீட் ஷீட் ஷீட் " என்று திட்டியபடி வண்டியை ஓட்டி கொண்டிருந்த ரணதீரன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் வட்டமிட்டு சுழன்றன. "யு ஆர் பிரில்லியண்ட்" என்று வலியுடன் முணு முணுத்த அவனோ தான் தோற்றுவிட்ட உணர்வை பெற்றான். வண்டியை ஓட்டி கொண்டே நடந்த சம்பவங்களை அசை போட தொடங்கினான்.
இரு நாட்கள் முன்பு,
மருத்துவரிடம் இருந்து வந்த மோனிஷாவுக்கோ ஆயிரம் குழப்பங்கள். மருத்துவர் கூறிய பதில் "மிஸ்டர் ரணதீரன் இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று என்கிட்டே சொன்னார்" என்று இருக்க அவளுக்கோ தீரன் மேல் சந்தேகம் ஆழமாக வலுப்பெற தொடங்கியது. அதே நேரம் தீரேனோ "வன் டே மோர்" என்று சொல்லி விட்டு தன்னிடமுள்ள ஆதாரங்களை மீண்டும் பரிசீலிக்க தொடங்கினான். மகதி மனதில் தீரன் தன்னை காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவன் தன்னை நம்பாத வலியும் சேர்ந்து இருக்க தான் செய்தது.
இப்படியே அந்த நாள் நகர , அடுத்த நாள் காலையில் மகதியை கோட்டுக்கு கொண்டு போக ஆயத்தமான போது ஜீப் அருகே நின்ற மோனிஷாவிடம் வந்த தீரன் "மிஸ். மோனிஷா , மகதியை பத்திரமா கோர்ட்டுக்கு கொண்டு போகணும். அவ மேல ஒரு சின்ன கீறல் கூட விழாம பார்த்துக்கணும், எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. டைரக்ட் ஆஹ் கோர்ட்டுக்கு வரேன் " என்று கூறிய தொனியில் அதிகாரத்தையும் மீறி மகதி மேல் அவன் அக்கறை வெளிப்பட மோனிஷாவுக்கோ அது எரிச்சலாக இருந்தது. தனது முகபாவனையை கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவள் "எஸ் சார்" என்று சலியுட் அடிக்க அவளை அழுத்தமாக பார்த்தவன் தனது ஜீப்புக்குள் சென்று ஏறினான்.
மோனிஷாவும் மகதியின் அறைக்குள் சென்றவள் அவளிடம் "வா" என்று கடினமாக தொனியில் அழைக்க பெருமூச்சோடு மோனிஷாவை பின் தொடர்ந்தாள் மகதி.
தீரனுக்கோ இன்றே மகதியை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற வெறி எழ தான் செய்ய வேண்டிய வேலையை விரைந்து செயல்படுத்த தொடங்கினான். அதே நேரம் மகதியும் மோனிஷாவும் மற்றும் ஒரு பெண் போலீஸ் உட்பட மூன்று போலீஸ்காரர்களும் நீதி மன்றத்தை நோக்கி செல்ல தொடங்கினார்கள். போகும் வழியில் திடீரென சடன் பிரேக் அடித்த சாரதி "மேடம், வண்டியில காத்து பொய்ட்டு என்று நினைக்கிறேன்" என்றவன் ஜீப்பில் இருந்து இறங்கிய சமயம் அந்த பாதையின் சிறிய அளவு தூரத்துக்கு கண்ணாடி துண்டுகள், முட்கள் என டயரை பஞ்சர் ஆக்க கூடிய பொருட்கள் பரவி வைக்கப்பட்டிருந்தன. அதை புருவம் சுருக்கி பார்த்தவனுக்கு அது எதார்த்தமாக பரவிய பொருட்கள் போல தோற்றவில்லை. யாரோ திட்டமிட்டு பரவி வைத்த போல தோன்ற நாடியை தடவியவாறு "மேடம்" என்று அவன் அழைத்த அதே கணத்தில் அவன் கையில் துப்பாக்கி குண்டு ஆழமாக இறங்கியது. உடனே அவன் "ஐயோ" என்று அலறியபடி கீழே விழ ஜீப்பில் இருந்த போலீஸ்காரர்களும் மோனிஷாவும் பதறி கீழே இறங்கினார்கள். இறங்கும் போது மகதியின் கையுடன் சேர்த்து போடப்பட்டு இருந்த விலங்கை கழட்டி விட்டு அந்த பெண் போலீசும் அவர்களுடன் கீழே இறங்கிய சமயம் அதை கவனித்த மோனிஷா "இடியட்" என்று திட்டி கொண்டு இருக்கும் போதே பக்கத்தில் இருந்த அடுத்த போலீஸ்க்காரன் காலில் குண்டடிபட கீழே விழுந்தான்.
அருகில் கண்ணுக்கு எட்டிய வரையில் எந்த வாகனமும் நிற்கவில்லை. எங்கிருந்து துப்பாக்கியால் சுடுகிறார்கள் என்று கண்டு பிடிக்க மோனிஷா இரு கைகளிலும் பிடித்த வாறு அக்கம் பக்கம் பார்த்த வேளை அங்கிருந்த புதர் மறைவில் இருந்து ஜீப்பை நோக்கி மயக்க மருந்து கலந்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அந்த குண்டின் வீரியத்தில் கண நேரத்தில் மகதி உட்பட அனைவரும் மயங்கி சரிந்தனர்.
சற்று நேரம் கழித்து எழுந்த ஒரு போலீஸ்க்காரன் அங்கு மகதியும் மோனிஷாவும் காணாமல் போய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தான். உடனே வாகனத்தில் இருக்கும் வாக்கி டாக்கி மூலம் எமெர்ஜென்சிக்கு அழைத்து அவன் விபரத்தை தெரிவிக்க அது ரணதீரன் காதை கண நேரத்தில் அடைந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு குற்றவாளியை விட தன்னவள் உயிர் பெறுமதியாக இருக்க நேரே சம்பவ இடத்தை நோக்கி தனது வண்டியை செலுத்தினான். இதற்கிடையில் மகதியின் கூட்டு களவாணிகளே அவளை காப்பாற்றி சென்றதாக வேறு செய்தி ஊரெல்லாம் பரவி அவனது ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் உயர்த்தியது.
சம்பவ இடத்துக்கு அவன் வந்து சேர்ந்த நேரம் அங்கிருந்த போலீஸ் காரர்கள் அம்பியூலன்சில் மருத்துவ மனைக்கு ஏற்றப்பட்டு கொண்டு இருந்தார்கள். ஆனால் ரணதீரனுக்கோ எவ்வாறு தன்னவளை அந்த கொடூர கொலையாளியிடம் இருந்து காக்க போகிறோம் என்ற எண்ணம் மட்டுமே ஓட எந்த வித ஆதாரமும் இல்லாமல் செயலிழந்து நின்றான். தன்னவள் உயிருக்கு ஆபத்து என்றதும் அவன் மூளை வேலை நிறுத்தம் செய்தது. "டாம் இட்" என்று ஜீப்பில் உதைத்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க "கம் ஓன் தீரன், டூ சம்திங்" என்று தனக்குள் சொல்லி கொண்டவனுக்கு ஒரு எண்ணம் உதிக்க நேரே ஜீப்பில் பாய்ந்து ஏறியவன் ட்ரைவரை வர வேண்டாம் என்று கூறிவிட்டு தானே ஜீப்பை ஓட்டி கொண்டு அவன் அறிந்த குற்றவாளியின் வீட்டுக்கு விரைந்தான்.
அவன் வருவான் என்று அறிந்த குற்றவாளி ஏற்கனவே அங்கிருந்து தப்பி இருக்க வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தவன் வீட்டை முழுமையாக அலச தொடங்கினான். அதே சமயம் போலீஸ் தலைமையகத்துக்கு அழைத்து ஒரு தொலைபேசி இலக்கத்தை கூறி அதற்கு வந்த அனைத்து தொலைபேசி இலக்கங்களையும் கண்டு பிடிக்க சொன்னவன் எதாவது தடயம் கிடைக்குமா என்று தேட தொடங்கினான். அவன் கையில் கிடைத்த புகைப்படத்தை பார்த்தவன் "நினச்சேன்" என்று முணு முணுத்த சமயம் அவன் தொலைபேசி அலறியது. உடனே அதை எடுத்து காதில் வைத்த சமயம் மறு முனையில் இருந்து. "அந்த நம்பருக்கு ஒரே நம்பர் ல இருந்து வன் ஹவர் முன்னாடி கால் போய் இருக்கு சார் " என்று கூற "இப்போ ரெண்டு நம்பரும் ஆப் ல இருக்குமே" என்றான் குற்றவாளிகளின் மன நிலையை சரியாக கணித்தபடி.
"ஆமா சார்" என்று அவன் கூறியதும் "ஓகே, லாஸ்ட் ஆஹ் ட்ரெஸ் பண்ணின அட்ரஸ் சொல்லுங்க" என்றவன் அதை குறித்து எடுத்து கொண்டு அந்த இடத்தை நோக்கி புறப்பட்டான்.
************************************************************************
இதே சமயம் மயக்கத்தில் இருந்து தெளிந்த மகதி தன் முன்னால் நின்ற கொலையாளியை பார்த்து மிரண்டபடி "எதுக்காக இப்படி?" என்று நலிந்த குரலில் கேட்க அவளை அழுத்தமாக பார்த்த அந்த பெண் அடிமேல் அடி வைத்து அவள் முன்னே வந்து நின்று "எல்லாம் உன்னால தாண்டி" என்று கூற அவளுக்கோ தூக்கி வாரி போட்டது.
அவளை நிமிர்ந்து பார்த்தவள் "நானா?" என்று கேட்டாலும் அவள் கொலை செய்ததை பார்த்ததில் இருந்து மகதியின் மனதிலே பயம் வேரூன்றி இருந்தது.
"ஆமா நீ தான்" என்றவள் அவளை அழுத்தமாக பார்த்து "இப்போ நான் கொன்ன போல உன் புருஷனை கொன்னு உன் பிள்ளயையும் துடிக்க துடிக்க கொன்னா எப்படி இருக்கும்?" என்று கேட்க மகதியின் உடல் விறைக்க ரணதீரனுக்கு இப்படி நடந்தால் என்று நினைத்து பார்க்க கூட அவளால் முடியவில்லை. நிமிர்ந்து அவளை அதிர்ச்சியும் கண்ணீருமாக பார்த்தவள் "நீ?" என்று கேட்க "மிஸஸ். விஜய் , தெ பேமஸ் ரிப்போர்ட்டர் ஒப் இந்தியா, " என்று சொல்ல அவளுக்கு மேலும் தூக்கி வாரி போட்டது.
"மிஸிஸ் விஜயா?" என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்க ஆம் என்றவள் கண்ணில் இருந்து தன்னையும் மீறி இரு சொட்டு கண்ணீர் உருண்டு விழுந்தது.
பெருமூச்சோடு அங்கிருந்த கட்டில் இருந்தவள் தனது வாழ்க்கை கதையை கண்ணீருடன் சொல்ல தொடங்கினாள் . "உங்க எல்லோர் முன்னாடியும் தான் நான் இந்த அடையாளத்தோடு இருக்கிறேன். என்னோட உண்மையான பெயர் சந்தியா " என்று ஆரம்பமே அதிர்ச்சியாக ஆரம்பித்தாள்.

********************************************************************
 

Priyanka Muthukumar

Administrator
விஜய் , மிக சிறந்த ரிப்போர்ட்டர் என்று பெயர் எடுத்தவன், மிகவும் திறமையானவன். அவன் மனைவி சந்தியா மற்றும் ஆறு வயது பெண் குழந்தையின் தந்தை. அவன் செய்தியே அனைத்து நியூஸ் சேனல்களிலும் வந்தாலும் அவன் குடும்பம் பற்றி யாருக்குமே தெரியாது. விஜய் தனது தனிப்பட்ட விடயங்கள் வெளியே கசியாமல் வைத்திருக்க ஒரே காரணம் அவன் சேகரிக்கும் செய்திகள் எப்போதும் மக்களின் பணத்தை விழுங்கும் பண முதலைகளை பற்றியே ஆகும். தனது வேலையால் தனது குடும்பத்தினருக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்று விரும்பியவன் தனி அடையாளமாகவே சமூகத்தில் வலம் வந்தான்.
சந்தியா மும்பையில் ஒரு பாடசாலையின் ஆசிரியையாக பணி புரிபவள், அவள் மகளும் அதே பாடசாலையில் கல்வி கற்பவள். விஜயின் பூர்வீகம் சென்னை தான். அவன் தந்தை சென்னையில் அனைவருக்கும் பரீட்சியமான ஒருவர். ஆனால் யாருக்கும் அவர் பையன் தான் விஜய் என்று தெரியாது. அதற்கு அடுத்த காரணம் தன் இஷ்டமில்லாமல் திருமணம் செய்ததால் அவனுடன் பேசுவதை நிறுத்தி இருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் தான் விஜய்க்கு சென்னைக்கு மாறுதல் கிடைக்க அவனும் இங்கே வந்து செட்டில் ஆக தீர்மானித்தான். சந்தியாவுக்கு அதில் விருப்பம் இருந்தாலும், பாடசாலையில் மாற்றல் கிடைக்க மூன்று மாசம் கழிய வேண்டி இருப்பதால் அவள் அங்கேயே மகளுடன் தங்கி கொள்ள அவன் தனது தந்தையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வந்தவனை முறைத்த அவன் தந்தை பலவாறான கெஞ்சல்களுக்கு பிறகு அவனை வீட்டுக்குள் சேர்த்து கொண்டார். அதே வேகத்தில் மருமகள் பேத்தி என அனைவரிடமும் பேச வைத்து விட்டான் விஜய். அடுத்த நாளே தனது வேலையில் சேர்ந்து ஒரு மாதம் சுமூகமாக சென்ற போது தான் அவர்களின் குடும்பம் என்னும் அழகான குருவி கூட்டை கலைக்க வந்து சேர்ந்தது ஆஸிஸிஸ் வங்கியின் பிரச்சனை.

அப்போது தான் சென்னையில் உள்ள அஸிஸிஸ் வங்கி புதிதாக ATM சம்பந்தமான ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தி இருந்தது. விஜய்க்கோ அதில் பலவாறான மோசடி விடயங்கள் காதை எட்ட அதில் இறங்கி வேலை பார்க்க தொடங்கினான் அவன். அந்த ATM நடைமுறையை அறிமுகப்படுத்தியது வேறு யாருமல்ல நம்ம மகதி தான்.
 

Priyanka Muthukumar

Administrator
தீரன் 19:
ஆஸிஸிஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நிர்வாகம் ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்துவதை பற்றிய ஒரு பொது கூட்டத்தை மும்பையில் கூட்டி,இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த வங்கி கிளைகளின் மேலாளரும் ஒரு இடத்தில் கூட முடிவு செய்தனர்.
அதற்காக சென்னை கிளைகளில் ஐவர் அடங்கிய குழுக்களால் ஆராய்ந்து கண்டறியப்பட்டு புதிதாக அமுல்படுத்திய திட்டம் தான் ATMயில் நடக்கும் பணம் திருட்டுகளை குறைப்பதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரட்டை பாதுகாப்பு கொண்ட ATM திப்ட் கன்ரோல் திட்டம்.
இதன்படி வங்கியில் முதலீடு செய்யும் பங்குதாரர்கள் ஏடிஎமிலிருந்து பணம் எடுக்கவேண்டுமானால் அட்டையை ஏடிஎம்மினுள் அனுப்பியவுடன்,ஏடிஎம் கேட்கும் உங்களது சேமிப்பு கணக்கின் குறியீட்டு எண்ணை கொடுத்ததற்கு பிறகு,உடனடியாக அவர்களின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த அலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் அனுப்பப்படும்.
அந்த தகவல் பெட்டியை திறந்து அதில் பணத்தை எடுப்பதற்கு உங்களுக்கு சம்மதமா என்றும்,அப்படி விரும்பினால் எவ்வளவு தொகையை எடுக்க விரும்புகிறீர்கள் என்றும் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்,அதற்கான பதிலை சேமிப்பு கணக்கர்கள் அலைப்பேசி வழியாக பதிலை திருப்பி அனுப்ப வேண்டும்,
அதில் குறிப்பிட்டுள்ள தொகையையும் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் அனுமதி கிடைத்ததற்கு பிறகே அவர்களால் பணத்தை ஏடிஎம்மிலிருந்து எடுக்கமுடியும்.
இந்த இரண்டு பாதுகாப்பு நடைமுறைகளை செயல்ப்படுத்துவதால் இதற்கு இரட்டை பாதுகாப்பு கொண்ட ஏடிஎம் திருட்டு தடுப்பு திட்டம் என்று பெயர் வந்தது.

அந்த சேமிப்பு கணக்கை வைத்திருப்பவர் அந்த தகவலை நிராகரித்து விட்டால்,நேரடியாக வங்கியிற்கு ஒரு எச்சரிக்கை சென்றுவிட,உடனடியாக ஏடிஎம்மினுள் செலுத்தப்பட்ட அவர்களது ஏடிஎம் அட்டையின் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டு,அந்த அட்டை இயந்திரத்தின் உள்ளே சிக்கிவிடும்,அந்த சிக்கிய அட்டைகள் அதற்கென புதிதாக உள்ள பெட்டியில் சென்று சேர்க்கப்பட்டுவிடும், அதன்பிறகு அந்த அட்டை ஒரு போதும் வெளியில் எடுக்க முடியாது.
இதனால் ஏடிஎம்மில் போலியான அட்டை தயாரித்து திருடும் திருடர்களிடமிருந்து உங்களது பணம் காக்கப்படுவதாகவும்,அதற்கு தேவையான பாதுகாப்பு சரியான முறையில் எங்கள் வங்கிக்கொடுக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கும் இத்திட்டத்தை முதலில் நிர்வாகத்திற்கு அறிமுகப்படுத்தியது மகதி தான்.
சென்னை குழுவை சேர்ந்த மேலாளர்,மகதி அவளுக்கு கீழே பணிப்புரியும் மற்ற ஆண்களான ரஞ்சன்,ஹரி கிருஷ்ணன் மற்றும் மோகன் ஆகியவர்கள் கொண்ட ஐவர் குழுக்களை சேர்ந்தவர்களே இந்த இத்திட்டம் அமுல்படுத்தியதற்கு முக்கியக்காரணம்.
இதில் பெரும்பான்மையான பங்கு வகிப்பது மகிதியே…!!
இக்குழுவை சிறப்பாக வழிநடத்தி வெற்றிக்கண்டதற்கு பரிசளிக்கும் விதமாக அனைவருக்கும் நிர்வாகத்தினிடமிருந்து பதவி உயர்வும் சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள அவர்களது மற்ற கிளைகளில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இந்த திட்டத்தை சென்னை கிளையில் அறிமுகப்படுத்தி ஒரு பின்னூட்டம் பார்த்துவிடலாம் என முடிவு செய்து சென்னையில் மட்டும் முதன்முதலாக இத்திட்டத்தை அமுல்படுத்தினார்கள்.
அவர்கள் நினைத்ததை விட இத்திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற,இதில் பெரும்பாலும் பயன்பெற்றது முதியவர்களே…!!
வயதின் முதிர்ச்சிக்காரணமாக ஏடிஎம்மிற்கு சென்று காசுகளை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் நேரடியாக வங்கியிற்கு சென்று மொத்தமாக காசை எடுத்துவைக்க வேண்டிய அவசியமும் இல்லை,அத்தோடு தன்னுடைய அட்டையை யாரை நம்பி வேண்டுமானாலும் கொடுத்து பணம் எடுத்து வர செய்யலாம் என்ற நம்பிக்கை எழுந்ததால் இத்திட்டம் பொது மக்களிடமிருந்து மிகுந்த வரவேற்பை பெற்றது.
அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி அனைத்து சரியாக சென்று வெற்றிப்பெற்றிருக்க,அதில் குளிர் காய்ந்த வங்கியின் நிர்வாக உறுப்பினர் உதய் இதனை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தினார்.
ஒரு வருடங்கள் எந்த வித பிரச்சனையும் இன்றி சரியாக சென்றுக்கொண்டிருந்த சமயத்தில் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் முதியவர்கள் ஒவ்வொருவராக திடிரென்று இயற்கை மரணம் எய்துவது ஊடகவியலாளனான விஜயிற்கு தெரிய வந்தது.
அதுவும் ஆதரவற்ற முதியவர்கள் தான் பெரும் பாலும் இறப்பதாக, அவனுக்கு ஒரு வயதானவரின் மூலம் தெரிய வந்தது.
அனைவரும் இயற்கையான முறையில் இறந்திருந்தாலும்,அவர்களது இறப்பில் ஒரு மர்மம் இருப்பதாக விஜய்க்கு தோன்றியது.
அதனால் அதைப்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தாமல் அவன் ஒரு இரகசிய ஆராய்ச்சியை மேற்கொண்டான்.அதில் அவனிற்கு ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அது இறந்தப்போன வயதானவர்கள் அனைவரும் சென்னையில் பிரபலமான ஆஸிசிஸ் வங்கியில் முதலீடு செய்திருப்பதாகவும்,அவர்கள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அவர்களது கணக்கில் உள்ள அனைத்து காசுகளும் ஏடிஎம்மின் வழியாக முழுமையாக துடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்தது.
அதில் அவனது சந்தேகம் முழுவதும் வங்கியின் மீது திரும்பிட,இதை எப்படியாவது கண்டறிய வேண்டும் என உறுதியாக முடிவெடுத்த விஜய்,வங்கியைப் பற்றி அலசி ஆராய ஆரம்பித்தான்.
அப்போது தான் வங்கி புதிதாக ஒரு திட்டம் அறிமுகப்படுத்தியிருந்ததை அறிந்துக்கொண்டு,அந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை பற்றி முழுமையான வரலாற்றை பற்றி தெரிந்துக்கொண்டான்.
அவனுக்கு கிடைத்த ஒவ்வொரு தகவலையும் வீட்டில் தனக்கென ஒதுக்கப்பட்ட ஒரு அறையில் சுவற்றில் காகிதத்தில் எழுதி ஒட்ட வைத்து அதனோடு தொடர்புடைய இன்னொரு காகித்த்தோடு நூல் கொண்டு இணைத்திருந்தான்.
அறை முழுவதும் காகிதத்தாலும் நூல்களாலும் சூழப்பட்டிருந்த அறையைக் கண்ட சந்தியா முகத்தை சுழித்து “விஜய் இதெல்லாம் என்ன இது…?” என அவனை முறைக்க,
அதுவரை கைக்கட்டி சுவற்றில் இருந்தவற்றின் மீது ஆராய்ச்சி பார்வைப் பார்த்துக்கொண்டிருந்த விஜய் மனைவியின் குரல் கேட்டு சிரித்தப்படி திரும்பி “ஏய் சந்தும்மா...நீ இன்னும் தூங்கலையா…?” என ஆச்சரியமாக கேட்க,
அவனருகே வந்த சந்தியா அவனை மேலும் முறைத்து “விஜய் உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க…?நீங்க சரியா சாப்பிட்டு தூங்கி எத்தனை நாளாச்சு தெரியுமா…?இப்படியே தூங்காமல் உடம்பை கெடுத்துக்கிட்டால் அதனால் ஏதாவது வந்தால் என்னால் தாங்கமுடியாது விஜய்…” கோபமாக ஆரம்பித்து இறுதியில் முடிக்கும்போது அழுகையோடு முடிக்க,
“ச்சு” என சலித்து தன் மனைவியை இறுக்கியணைத்த விஜய் “சந்து எதுக்காக அழுகிறாய்…?நீ இருக்கும் போது எனக்கு ஒண்ணுமாகாதுடா...இது ஒரு முக்கியமான கேஸ்...இந்த க்ரைம் மட்டும் நான் கண்டுப்பிடிச்சிட்டால் இது தான் இந்தியாவிலே டாப் நியூஸ்...அப்புறம் நம்பளோட நிலைமை எங்கியோ போயிடும்மா...அது மட்டுமில்லாமல் இதில் பாதிக்கப்பட்டு இறந்துப்போன முதியவர்களுக்கு அவர்களுக்கான நியாயம் கண்டிப்பாக கிடைக்கணும் சந்து” என்றவுடன்,
தன் அழுகையை நிறுத்திவிட்டு தலையை நிமிர்ந்திய சந்தியா “என்ன விஷயம் விஜய்…??என்ன என்னவோ சொல்லுறீங்க…?” என குழப்பத்துடன் கேட்க,
அவளது நெற்றியில் முட்டி “உன்னோட சின்ன மூளையின் கவனத்தை இதில் செலுத்தி நீ எதுக்கு கஷ்டப்படறே குட்டிம்மா...நான் கேஸை முடிச்சிட்டு கண்டிப்பாக உனக்கு சொல்லுறேன்...அதுவரைக்கும் நீயும் பாப்பாவும் நிம்மதியா இருங்க...இது முடிஞ்சப்பிறகு நாம் கோவாவிற்கு ஜாலியா ஒரு ட்ரிப் போகிறோம்...அதுவரை இந்த விஜயை நீ டிஸ்டர்ப் பண்ணக்கூடாது...சரியா” எனவும்,
அவள் அரைமனதாக “சரி” என்று தலையாட்டிய சந்தியாவிற்கு உள்ளுக்குள் ஏதோ நெருடலாக இருந்தது.
அதனால் “விஜய் பெரிய இடத்து விவகாரமாக இருந்தால் பார்த்து பல தடவை யோசித்து எதுவாக இருந்தாலும் செய்யுங்க...எனக்கு நீங்க ரொம்ப முக்கியம்…” என ஆழ்ந்த குரலில் கூற,
விஜய் “அதெல்லாம் ஒண்ணும் நடக்காதுடா...நீ என்னை நம்பலாம்” என நம்பிக்கையளித்தான்.
ஆனால் அந்த நம்பிக்கை தவிடுபடியாக போவதை அந்நொடி அவன் அறியவில்லை.
அதன்பலனாய் இரண்டு நாட்கள் கழித்து அவனிடம் வந்து நின்ற சந்தியா “விஜய் நான் நாளைக்கு டிரான்ஸ்பர் விஷயமா ஒரு வாரம் மும்பை போகணும்...நான் திரும்பி வரும் வரை பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்க...நேரத்துக்கு வீட்டுக்கு வந்திடுங்க…” என கூற,
அதில் அதிர்ச்சியான விஜய் “என்னது ஒரு வாரமா…??இப்போ உனக்கு ஸ்கூல் லீவு தானே” என அலற,
புன்னகைத்த சந்தியா “ஆமாம் லீவு தான்...ஆனால் பிரின்சி நேத்து போன் பண்ணி கராஸ்கிட்ட பேச வரச்சொன்னாங்க… சொல்லப்போனால் எனக்கு இந்த இயர் டிரான்ஸ்பர் கிடைச்சிடும்னு நினைக்கிறேன்...நீங்க என்னை பிரிஞ்சு எத்தனை வருஷம் தனியா இருந்தீங்க...அதுக்கு பனிஷ்மெண்ட்...அதனால் இன்னும் ஒரு வாரம் ஜாலியா தனிமையை என்ஜாய் பண்ணுங்க...” என பழிப்புக்காட்ட,
அதில் போலியாக கோபம் கொண்ட விஜய் அவளை முறைத்து “ஏய் சந்து...இரண்டு மாசம் லீவுனு வந்து இப்படி பாதியிலே போறீயே நியாயமாடி...ஒரு வாரமெல்லாம் வேலைக்குக்காகாது...உன்னை விட்டுட்டு என்னால் இருக்கமுடியாதுடி...ஒழுங்கா சீக்கிரம் அந்த வேலையை முடிச்சிட்டு வாடி” என சிறுப்பிள்ளையென அடம்பிடிக்க,
அதைப்பார்த்து பாவமாக இருந்தாலும் வெளியில் அவனை முறைத்து “முடியாது போடா...இங்கிருந்தா மட்டும் என் கூட டூயட்டா பாடப்போறே...உன் வேலையை தானே கட்டிக்கிட்டு அழுகப்போறே...அதை மாதிரி இந்த ஒரு வாரமும் வேலையை கட்டிக்கிட்டு அழு…” என கூறி உதட்டை சுழிக்கவும்,
அவளை நெருங்கிய விஜய் “ஏய் சந்து பிளீஸ்… பிளீஸ்டி… போகாதடி…” என கைப்பிடித்து கெஞ்ச,
அதைத்தட்டிவிட்டு “நோ வே...டெபன்ட்லி ஐ வில் கோ மும்பை…” என தோளை குலுக்கிவிட்டு செல்ல,
“சரி தான் போடி...நீ திரும்பி வரும்போது நான் இங்க இருக்கமாட்டேன்…” என முணுமுணுக்க அதைக்கேட்டு சிரித்த சந்தியா அவனை பார்த்து நக்கலாக “கோவிச்சுக்கிட்டு உங்க அப்பா வீட்டுக்கு தான் போவே...ஒண்ணும் பிரச்சனையில்லை...உன் பின்னாடியே நானும் என் மாமனார் வீட்டுக்கு வந்தறேன்…” என கண்சிமிட்டிவிட்டு செல்ல,
மனைவியின் சிறுப்பிள்ளை செயலை ரசித்த விஜய் அவளுக்கு விடைக்கொடுக்கும் விதமாக “ஓகே சந்து...டேக் கேர்...சீக்கிரம் திரும்பி வந்திடு…லவ் யூ”என கூறி பறக்கும் முத்தம் ஒன்றை கொடுக்க,அதை வாங்கி தன் நெஞ்சின் மீது வைத்த சந்தியா “மீ டூ லவ் யூ விஜி...மிஸ் யூ...நான் திரும்பி வருவதற்குள் எல்லா வேலையையும் முடிச்சு வைச்சிருடா...அப்புறம் உடம்பு பார்த்துக்கோ...உனக்கு வேலை இருந்தால் பாப்பாவை மாமாக்கிட்ட விட்டுட்டு போ…” என்று விடைப்பெற்றவள் திடிரென்று என்ன நினைத்தாளோ பொது மக்கள் கூடியிருக்கும் விமான நிலையம் என்றும் பாராமல் ஓடி வந்து அவனது இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு விலகி வெட்கத்தோடு ஓடி விட்டாள்.
அவள் சென்றப்பிறகு சுற்றியிருக்கும் அனைவரும் தன்னையே பார்ப்பதறிந்து வெட்கத்தோடு சிகைக்கோதி சிரித்தப்படி ‘சரியான அராத்து’ என மனதில் போலியாக வஞ்சுக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினான்.
இது தான் அவர்களது வாழ்வின் இறுதி முத்தம்,சந்திப்பு என்பதை அறியாமல் அன்றைய நொடிகளை பொக்கிஷங்களாய் மனதில் சேமித்து இருவரும் மகிழ்ந்துக்கொண்டிருந்தனர்.

சந்தியா ஊருக்கு சென்ற மறுநாள் தன் ஆறு வயது மகளை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு அன்றைய இரவு யாருக்கும் தெரியாமல் வாயிற்காவலனின் உதவியோடு ஆஸிசிஸ் வங்கியினுள் திருட்டுத்தனமாக நுழைந்தான்.
வங்கியை சுற்றியிருக்கும் கண்காணிப்பு புகைப்படகருவியை தன்னிடம் உள்ள ஜாமர் கருவிக்கொண்டு செயலிழக்க செய்த விஜய் உள்ளே நுழைந்து மேலாளரின் அறையில் தனக்கு தேவையான ஆதாரம் எதுவும் கிடைக்குமா என குடைய ஆரம்பித்தான்.
மேலாளரின் கணிணியை ஒளிர செய்து அதையும் ஆராய்ச்சிச்செய்தவனுக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது.அதில் அவரது வங்கி கணக்கில் சமீபத்தில் போடப்பட்டிருந்த பத்துக்கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பற்றி தெரிந்துக்கொண்டவன்,அது எங்கிருந்து இவரது பெயருக்கு வந்திருக்கிறது என்பதை தேட,அதற்கான பதில் அவனிடம் சிக்கவில்லை
இருப்பினும் மனம் தளராமல் மேலாளரின் வங்கி கணக்கை தன்னிடம் உள்ள விரலியில்(pen drive) சேகரித்த விஜயிற்கு அடுத்ததாக மகதியின் மீது சந்தேகம் இருக்க,அவளது அறையையும் முழுவதுமாக ஆராய்ந்தவன்,அத்தோடு அவளது கணிணியையும் முழுவதை குடைய அவனிற்கு வேற எதுவும் சிக்கவில்லை.அதனால் அளவுக்கும் இந்த மோசடிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்ற முடிவிற்கு வந்தான்.
ஆனால் மகதியின் இடத்தில் அவனுக்கு தேவையான ஒரு ஆதாரம் சிக்கியது.அது அவர்கள் கொண்டு வந்த திட்டத்தைப் பற்றி முழுமையான விவரம் அடங்கிய கோப்பை,அதை திறந்துப்பார்த்து “எஸ்…” மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவன்,ஏனைய குழுவினரைப் பற்றிய விவரத்தைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள ஆரம்பித்தான்.
அன்றைய இரவிற்கு பிறகு மேலாளரைப் பின்தொடர்ந்து விசாரித்தவனுக்கு இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிப்பட்டார்கள்.
அத்தோடு மகதி குறிப்பிட்டிருந்த கோப்பை முழுமையாக வாசித்து அறிந்தவனுக்கு அத்தகைய எவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்பதை அறிய எளிதாக இருந்தது.

பணம் திருடப்பட்டதற்கான சாராஹம்சம் இது தான்,வங்கியில் சேமிப்பு கணக்குகள் வைத்திருக்கும் நபர்களைப் பற்றிய சொந்த தகவல்களை பெற்றுக்கொண்ட வங்கி நிர்வாகம்,அவர்களில் சொந்தபந்தங்கள் யாருமின்றி தனித்து விடப்பட்டிருந்த முதியவர்களை மட்டுமே அவர்களது பணத்திருட்டிற்கு ஏற்ற நபர்களாக தேர்ந்தெடுத்தார்கள்.
அதன்படி அவர்களது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும்
ஆதரவற்ற முதியவர்களைத் தேர்ந்தெடுத்த நிர்வாகம்,வங்கியோடு இணைக்கப்பட்டிருக்கும் அவர்களது அலைப்பேசி எண்ணை ஊடுருவி,அவர்களது கணக்கிலிருந்து சிறிது சிறிதாக பணத்தை களவாட,ஒரு கட்டத்தில் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் குறைந்து போவது அறிந்து நேரடியாக வங்கிக்கு வந்து புகார் அளிப்பார்கள்.
அவர்களது புகாரை ஏற்றுக்கொண்டு நய வஞ்சகமாக பேசி திருப்பி அனுப்பிவிட்டு,மீண்டும் இதேப்போல் களவாடல் செய்யும் போது அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வங்கிக்கு வந்து புகார் தெரிவிப்பார்கள்.ஆனால் அதில் பெரும்பாலானோர் எத்தனை முறை இவர்களிடம் புகார் தெரிவிப்பது என சலித்துக்கொண்டு,உடனடியாக அங்கிருந்த சேமிப்பு கணக்கை வேறொரு வங்கி மாறலாம் என நினைத்து வங்கியை அணுகும் முதியவர்களே அவர்களது முக்கிய குறி.
ஏனெனில் அவர்கள் வங்கியின் மேலாளரிடம் பேசி சேமிப்பு கணக்கை வேறொரு வங்கி மாற்றுவது பற்றி பேச,மேலாளரோ பணத்தை பெற்றுக்கொள்ள மறுநாள் வருமாறு நயவஞ்சகமாக பேசி அவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பிவிடுவார்கள்.
ஆனால் நாளை வருவதாக கூறிச்சென்ற அந்த முதியவர்கள் யாரும் உயிரோடு இருப்பதில்லை,அத்தோடு முதியவர்களிடம் வாங்கிய கையொப்பத்தைக் கொண்டு அவர்களது கணக்கில் இருந்த பணம் முழுவதும் அவர்களே இங்கிருந்து எடுத்துக்கொண்டது போல் ஒரு ஆவணம் தயார்செய்து இந்த கொடூரமான கொலைகளையும் களவாடலையும் கவனமாக செய்துவந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் திருட்டிற்கும் கொலைகளுக்கும் மேலாளரோடு இவையெல்லாம் உடன் இருந்து உதவிச்செய்வது வங்கியில் பணிப்புரியும் ரஞ்சன்.மேலாளர் களவாடிய பணம் முழுவதையும் வேறொரு ஆளுக்கு மாற்றிவிடுகிறார் என்றும்,இந்த வேலைக்கான அவர்களது பங்கு சரிசமமாக இருவரது வங்கி கணக்கிற்கு வருகிறது என்பதையும் மேலாளரை பின் தொடர்ந்த விஜய் தெரிந்துக்கொண்டான்.

ஆனால் இவர்கள் இருவரும் யாருடைய கையாள் என்பது மட்டும் விஜயிற்கு புரியாத புதிராக இருந்தது.
யாருக்கும் சந்தேகம் வராமல் திட்டமிட்டு இவர்கள் நடத்திய கொலை கொள்ளைக்கான நேரடி ஆதாரத்தைத் தேடி ரஞ்சனின் வீட்டிற்கு சென்றான் விஜய்.
அது தான் அவன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்பதை வெகு தாமதமாக உணர்ந்தான்.
ஏனெனில் அந்த இரவு ரஞ்சனின் வீட்டிற்கு சென்ற விஜய் அவனுக்கு தேவையான ஆதாரத்தை தேட,அவனுக்கான ஆதாரம் ஒரு விரலியின் வழியாக அவனிற்கு கிடைத்தது.
இருளடைந்து இருந்த அவ்வீட்டில் யாரும் இல்லாத இருப்பதால் தன்னிடம் உள்ள ஆதாரத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என நினைக்கும் போது ரஞ்சன் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வருவதை கண்டு அதிர்ச்சியோடு அவசரமாக சமையலறை சென்று ஒளிந்துக்கொண்டான்.
பதட்டத்தில் அவனது இதயம் தாறுமாறாக துடிக்க மூச்சு சத்தம் வெளியில் கேட்கக்கூடாது என்பதால் வாயைப் பொத்தி அடக்கிக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான்.
இலேசாக தலையை மட்டும் நீட்டி வெளியில் எட்டிப்பார்க்க ரஞ்சன் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு அறைக்குள் செல்லும் காட்சியை விழிகள் விரிய பார்த்தவனுக்கு எதுவோ தவறாக தோன்றியது.
அதற்குள் ரஞ்சன் அப்புறம் திரும்புவது அறிந்து அவசரமாக சமையலறை கதவின் பின் ஒளிந்துக்கொள்ள,அழுத்தமான காலடியோசையோடு ரஞ்சன் சமையலறை நோக்கி வருவது தெரிய,அவனுக்குள் இருந்த இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
குதிரை ஓட்டப்பந்தயத்தில் ஓடி கொண்டிருக்கும் அசுர வேகத்தில் முடித்துக்கொண்டிருந்த இதயத்தை அடக்கும் வகையறியாமல் முகத்தில் வியர்வை முத்துக்கள் படிய நின்றிருந்த விஜயை காக்கவென அவன் அழைத்து வந்த பெண் “ரஞ்சன் எனக்கு பயமா இருக்கு...பேசாமல் நான் வீட்டிற்கு போய்விடுவா” என மிரட்சியுடன் வந்த குரலில்,சமையலறை வாசல் வரை வந்திருந்த ரஞ்சன் திரும்பி அப்பெண்ணிடம் “ஏய் எதுக்கு பயப்படறே...முதல் தடவை அப்படி தான் இருக்கும்...எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் வா…” என குடிப்போதையில் குழைந்த குரலில் குழறியப்படியே அப்பெண்ணை அழைத்துக்கொண்டு அறையினுள் நுழைந்து கதவை சாற்றிக்கொள்ள,

விஜய்யோ ‘கருமம்...இவனுக்கு இந்த கெடுக்கெட்ட பழக்கம் வேற இருக்க...இருடா உன்னை கூடிய சீக்கிரம் கம்பி எண்ண வைக்கிறேன்…’ என கறுவிக்கொண்டு,இச்சந்தர்ப்பதை பயன்படுத்தி வெளியேறிடலாம் என எண்ணி மெதுவாக அடியெடுத்து வாசற்கதவை நோக்கி சென்றான்.


 
Status
Not open for further replies.
Top