GG writers
Moderator
மதுரமே ஈஷணமே 1
அறிவுப்பு - முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பில் ஏற்கனவே வேறு ஒரு எழுத்தாளரின் கதை இருப்பதால் முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பு "மதுரமே ஈஷணமே" என்று விரைவில் மாற்றப்படும்.
Sorry for the inconevenience

சென்னையில் ராஜிவ் காந்தி சாலையில், பல நவீன கட்டிடங்களுக்கு மத்தியில் மிகவும் பிரம்பாண்டமாய் அமைந்திருக்கும் 'ஏவி மீடியா பிரைவேட் லிமிடெட்' இந்தியாவிலே தலை சிறந்த விளம்பரப்படங்களைத் தயாரிக்கும் முதல் ஐந்து நிறுவனங்களில், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்த நிறுவனமாகும்.அறிவுப்பு - முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பில் ஏற்கனவே வேறு ஒரு எழுத்தாளரின் கதை இருப்பதால் முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பு "மதுரமே ஈஷணமே" என்று விரைவில் மாற்றப்படும்.
Sorry for the inconevenience

மயக்கம் கொண்ட சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்த அந்த ரம்மியமான மாலை பொழுதிலும், ஏவி மீடியா பிரைவேட் லிமிடெட் மட்டும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.
குளிருட்டப்பட்டிருந்த பிரம்பாண்ட அறையில், பணியாளர்கள் சிலர் குழு குழுவாகப் பிரிந்து குறுக்கும் நெடுக்கும் நடந்த படியும், சிலர் மடிக்கணினியில் எதையோ ஆராய்ந்த படியும், தங்களின் பணியில் தீவிரமாய் மூழ்கிருந்தனர்.
அவர்களது சிந்தனையைக் கலைக்கும் விதமாய் கதவை திறந்துகொண்டு ஆறடி உயரத்தில், அகண்ட தோள்களுடன், அளவான மீசையும், நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் அழகு சேர்க்க ஆளுமையோடு கூடிய நடையோடு அனைவரையும் பார்த்தபடி உள்ளே நுழைந்தவனை கண்ட அனைவரும் எழுந்து நிற்க, அளவான புன்னகையோடு தன் விழிகளினாலே அவர்களை அமர சொன்னவன் அவர்களுக்கு நடுவே உள்ள இருக்கையில் தானும் வந்து அமர்ந்து,
"ஹவ் ஆர் யு கைஸ்" என்றான் புன்னகைத்தபடி.
"வீ ஆர் ஃபயின் சார்" சோர்வை மறைத்துக்கொண்டு அனைவரும் உற்சாகமாய் கூறினார்கள்.
தன் இதழ் ஓரம் புன்னகை சிந்த தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்,
"கைஸ் என்னால நல்லாவே புரிஞ்சிக்க முடியுது வீகெண்ட்ல ஆபிஸ் டைம் தாண்டி வேலை பார்க்கிறது ரொம்பக் கஷ்டம் தான் பட் நாம பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பெரிய பலன் வரப்போகுதுன்னு நினைச்சு பாருங்க கஷ்டம் கஷ்டமா இருக்காது
இன்னும் டூ வீக்ஸ் டைம் இருக்குன்னு நினைக்காதீங்க கம்மிங் சண்டே குள்ள ப்ரசெண்டேஷன் ரெடியா இருக்கணும் உங்களை நிரூபிக்கிறதுக்கான ஒரு நல்ல சந்தர்ப்பமா நினைச்சி பண்ணுங்க முழு உழைப்பையும் முழுத் திறமையையும் குடுங்க
இந்தக் காண்ட்ராக்ட் நமக்குக் கிடைச்சா அதுக்கான முழு க்ரிடிட்ஸ்சும் உங்களைத் தான் சேரும்
உங்களுடைய இத்தனை நாள் உழைப்பு வீணாகக் கூடாது, டூ யுவர் பெஸ்ட், திங்க் பெட்டர், உங்களால இன்னும் பெட்டரா பண்ண முடியும்." அனைவரையும் ஊக்கப்படுத்தினான்.
"கண்டிப்பா இந்தக் கான்ராக்ட் நமக்குத் தான் சார்" அனைவரும் நம்பிக்கையோடு உறுதி அளித்தனர்.
"ப்ளீஸ் கேரி ஆன்" என்றவன் அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் நேரம் அங்கிருந்த ஒரு பணியாளரை தனியே அழைத்து,
"மிஸ்டர் விஷ்ணு எங்க?? KR கம்பெனியோட ப்ரசெண்டேஷன் ரெடியாகிட்டா இல்லையா???" மெதுவான குரலில் மிதமான கோபத்தோடு கேட்டான்.
"சார் அது"
"கம் ஆன் சூர்யா, விஷ்ணு உங்க டீம் தானே KR கம்பெனியோட ப்ரசெண்டேஷன் உங்க டீமுக்கு தானே அசையின் பண்ணிருந்தேன். ஒரு டீம் லீடரா ப்ரசெண்டேஷன் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூடவா தெரிஞ்சிக்காம இருப்பீங்க" புருவம் உயர்த்தினான்.
"புது ப்ரசெண்டேஷன்ல வொர்க் பண்ணிட்டு இருந்தனால"
"பழசை மறந்துடீங்க" கோபத்தை உள்ளடக்கி அசட்டையாகப் புன்னகைத்தான் அவன்.
"---------------------" இவனோ தலைகவிழ்ந்து நின்றான்.
"சாரி ஏதாவது சொன்னீங்களா? எனக்குக் கேக்கலை" வேண்டுமென்றே கேட்டான்.
"சாரி சார்" என்று தயங்கியபடி நின்றவனின் முகத்தை ஆழ்ந்து ஆராய்ந்தவன்.
"போங்க சூர்யா வேலைய பாருங்க, இனிமேல் இப்படி நடக்கக் கூடாது" என்று சற்று கடினமாகவே கூறிவிட்டு,
"விஷ்ணு எங்க இருந்தாலும் அவரை உடனே வந்து என்னை பார்க்க சொல்லுங்க" என்றவன், தன் அறைக்குள் நுழையும் நேரம் பார்த்து காரிடாருக்கு அருகே இருக்கும் ஸ்டோர் ரூமில் இருந்து யாரோ சிரிக்கும் சப்தம் கேட்கவும் தன் மணி கடிகாரத்தைப் பார்த்தவன்,
'வொர்க் டைம்ல யாரது வேலை பார்க்காம பேசிட்டு இருக்கிறது?? அதுவும் ஸ்டோர் ரூம்ல' என்கிற சிந்தனையோடு தாளிடபடாத ஸ்டோர் ரூமின் கதவை திறந்தவனின் பார்வை நொடிப்பொழுதில் உக்கிரமாய் மாறியது.
"என்ன விஷ்ணு ரொம்பப் பிசியா இருக்கீங்க போல" ரூமிற்குள் இருந்த விஷ்ணுவை பார்த்து நக்கலாகக் கேட்டான்.
அதுவரை ரீமாவின் கரங்களைப் பிடித்தபடி சிரித்துச் சிரித்துக் குலைந்து கொண்டிருந்த விஷ்ணு, அவனது குரல் கேட்டதும் வெடுக்கென்று ரீமாவை விட்டு தள்ளி நின்றவன்,
"சார் அது வந்து சும்மா பேசிட்டு இருந்தோம்" குரல் நடுங்கியது.
"லெட்டர்ல சையின் பண்ணிட்டு, ஐடிய குடுத்துட்டு வெளிய போங்க" இறுகிய குரலில் கூறியவன் அதே
இறுகிய முகத்துடன் அவர்களைப் பார்த்தபடியே, அவர்கள் மீதுள்ள தன் பார்வையை அகற்றாது அலைபேசியை எடுத்து தன் காதுக்குக் கொடுத்து,
"மாறன் அங்கிள், காரிடருக்கு வாங்க" என்றான் பணிவுடன்.
அவன் அழைத்த ஒரு சில நிமிடங்களில் கம்பெனியின் சீஃப் மனேஜர் வெற்றிமாறன், "சார்" என்றபடி அவனது எதிரே வந்து நிற்க,
அவரிடம், "இவங்க அக்கௌன்ட்ஸை செட்டில் பண்ணி அனுப்பிருங்க" அவரிடம் உறுதியாகக் கூறினான், அவரும் காரணம் ஏதும் அறியாவிட்டாலும் உடனே, "யஸ் சார்" என்றார்.
"சார் ப்ளீஸ் இந்த ஒருதடவை மட்டும்" கிட்டத்தட்ட கெஞ்சினான் விஷ்ணு.
"அவுட்" குரலை உயர்த்தாமல் அழுத்தமாகக் கூறினான் அவன்.
"ப்ளீஸ் சார்" மீண்டும் அவன் கெஞ்சினான்.
"நேரம் காலம் பார்க்காம அங்க எம்பலாயிஸ் வேலைபார்த்துட்டு இருக்காங்க, இங்க நீ நான் குடுத்த வொர்க்கை முடிக்காம, என் கிட்ட சம்பளம் வாங்கிகிட்டு என் கம்பெனியில ஜாலியா ரோமன்ஸ் பண்ணிட்டு இருக்கியா? என் கம்பெனி என்ன உங்களுக்குப் பார்க் மாதிரி இருக்கா??" கோபமாகக் கேட்டான் அவன்.
"சார் நான் வந்து"
"யு போத் ஜஸ்ட் கெட் அவுட் ஃப்ரம் ஹியர். யூஸ்லெஸ் இடியட்ஸ். கெட் லாஸ்ட், யு லூஸர்ஸ்" கிட்டத்தட்ட கத்த, விஷ்ணு அவமானத்தில் குன்றிப்போனான்.
"சார் ப்ளீஸ் ரீமா மேல எந்தத் தப்பும் இல்லை, அட்லீஸ்ட் ரீமாவை விட்ருங்க, நான் போறேன்" கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தான் வரவில்லை, அவ்வளவு கெஞ்சினான்.
'ரீமாவை விட்ருங்க, நான் போறேன்' என்று விஷ்ணு கூறியதையே தனக்குள் முணுமுணுத்தவன் விஷ்ணுவை ஏளனமாய்ப் பார்த்து புன்னகைத்து, வெற்றி மாறனுடன் தன் அறைக்குள் நுழைந்தான்.
பின்பு சில மணிநேரம் கடந்த பிறகு ரீமாவை தன் அறைக்கு வருமாறு கூற, அவளோ தயங்கியபடி உள்ளே நுழைந்தவள்,
"சார் ஐயம் ரியலி சாரி நான்." என்று தொடரவும், தன் கரம் உயர்த்தி போதும் என்பது போல அவளைத் தடுத்தவன், இருக்கையைக் காட்டி அமருமாறு தன் விழிகளினாலே பணித்தான்.
"தங்க் யு சார்" என்றபடி அமர்ந்தவளிடம்,
"மிஸ் ரீமா ஐ டோன்'ட் ஹவ் மச் டைம், சோ லெட் மி மேக் மை பாயிண்ட் க்ளீயர், உங்களுக்கு நான் இரெண்டு ஆப்ஷன் தரேன்.
உங்க முன்னாடி இரெண்டு ஃபையில் இருக்கு. லெஃப்ட் சைட் ஃபையில்ல உங்களோட ப்ரோமோஷன் லெட்டர் இருக்கு. ரைட் சைட் உள்ள ஃபையில்ல உங்க டெர்மினேஷன் லெட்டர் இருக்கு.
யாரவது ஒருத்தர் தான் கம்பெனியில கன்டினியூ பண்ண முடியும். விஷ்ணு அவருடைய முடிவை சொல்லிட்டாரு. இப்போ ஜாய்ஸ் உங்களுடையது. ஐ வில் கிவ் யு ஒன் மினிட். யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ். திங்க் வைஸ்லி 'அறிவோடு யோசிங்க'" முகத்தில் புன்னகை மாறாமல் கூறியவன், அந்தப் பெண்ணின் மீதுள்ள தன் பார்வையை அகற்றாமல் தன் விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
விரிந்த விழிகள் சிந்திய அலட்சிய பார்வையின் அர்த்தத்தை அவனைத் தவிர யாராலும் அறிய முடியாது. ஏன் அவன் கூடவே இருக்கும் வெற்றி மாறன் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நொடிகள் கடந்து இன்னும் முப்பது நொடிகள் மீதம் இருக்கும் நிலையில், முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாது, தன் இடது பக்கத்தில் இருக்கும் ஃபயிலை தேர்வு செய்த ரீமா, தன்னையே கூர்மையாகப் பார்த்து கொண்டிருந்தவனைப் பார்த்து,
"விஷ்ணு மாதிரி நானும் முட்டாளா இருக்க விரும்பலை சார். ஐ வாண்ட் டூ ஸ்டே பேக்" என்றாள்.
தெளிவாக வந்த அவளது வார்த்தைகளை கேட்டு, தன் கரங்களைத் தட்டியபடி வாய்விட்டுச் சிரித்தான் அவன்.
"பிரில்லியண்ட்" சாதாரண வார்த்தைதான் ஆனால், அதை தன் புருவம் உயர்த்தி, நிறுத்தி நிதானமாய் ஏற்ற தாழ்வோடு அவன் கூறிய பொழுது அவ்வளவு அழகாக இருந்தது. ரீமாவின் முகம் வெட்கத்தில் சிவந்த நொடி, "விஷ்ணு கம் இன்" என்று அவன் அழைத்த மறுநொடி விஷ்ணு, உள்ளே இருந்த அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
ரீமாவோ குற்ற உணர்வால் விஷ்ணுவின் விழிகளை நேருக்கு நேராகச் சந்திக்க முடியாமல் தன் தலையைத் தாழ்த்திக்கொள்ள,
"கேடீங்களா விஷ்ணு 'விஷ்ணு மாதிரி நானும் முட்டாளா இருக்க விரும்பலை' அர்த்தம் புரியுதா இன்னும் எளிமையா சொல்லணும்ன்னா யு ஆர் அ லூஸர்ன்னு அர்த்தம்.
இது தான் பொண்ணுங்க, இந்தப் பெண்ணுக்காகத் தான் என்கிட்ட கெஞ்சினீங்களா விஷ்ணு.
பொண்ணுங்க காலம் காலமா நம்மளை முட்டாள் ஆக்கிட்டே இருக்காங்க, நாமளும் முட்டாள் ஆகிட்டே இருக்கோம்" என்றபடி சலித்துக்கொண்டவன் பெருமூச்சு விட்டவாறு,
"ஓகே தீ கேம் இஸ் ஓவர் நவ், விஷ்ணு அண்ட் ரீமா யு போத் ஆர் ஃபயர்ட். அங்கிள் இரெண்டு பேருடைய கணக்கையும் செட்டில் பண்ணிருங்க" என்று உறுதியாய் கூறியவன், கணினியில் தன் விழிகளைப் புதைத்துக் கொள்ள,
"சார் ப்ளீஸ்" என்று ரீமா கெஞ்ச,
"ஐ செட் லீவ்" குரலை உயர்த்தாமல் அழுத்தமாய்க் கூற, இருவரும் வெளியேறினர்.
"விஷ்ணு ஐயம் சாரி, உனக்குத் தெரியும்ல எனக்கு இந்த ஜாப் எவ்வளவு முக்கியம்ன்னு அதான் அப்படிப் பண்ணிட்டேன் ஐயம் ரியலி சாரி" மனதார மன்னிப்பு கேட்டாள் ரீமா.
"ஷட் அப், ஜஸ்ட் ஷட் அப். ஒருவார்த்தை பேசாதா, யு ச்சீட்டர், கெட் லாஸ்ட் உன்னை பார்க்கவே புடிக்கலை" என்று சிடுசிடுத்துவிட்டு விஷ்ணு அங்கிருந்து செல்ல, ரீமாவின் கண்கள் கலங்கின.
அறையினுள், "என்ன அங்கிள் அப்படிப் பாக்குறீங்க."
"உங்களை" என்று அவர் தொடரும் முன்பே அவரை தடுத்தவன்,
" உன்னை" என்றான் கண்டிப்புடன்.
"நீங்க இந்தக் கம்பெனியோட பாஸ்"
"அது மத்தவங்களுக்கு உங்களுக்கு இல்லை" என்றான் கணினியில் இருந்த தன் விழிகளை அகற்றாது.
"அதுவந்து" என்று தயங்கியவரை அவன் ஒரு பார்வை பார்க்க,
"ஒர்கெர்ஸ் முன்னாடி வேண்டாம், தனியா இருக்கும் பொழுது என் மகனை கூப்பிடுறது போல தம்பின்னு கூப்பிடுறேன்"
"இது ஓகே, சரி இப்போ சொல்லுங்க என்னை ஏன் அப்படி பாக்குறீங்க"
"அது வந்து தம்பி, உங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியலை, அவங்களை வேலைய விட்டு நிப்பாட்டுறதுக்கு ஏன் தேவையில்லாம இப்படிப் பண்ணனும், நீங்க ரீமாகிட்ட பேசுனதை வச்சி, மறுபடியும் அவங்களை வேலைக்குச் சேர்த்துக்குவீங்கன்னு நினைச்சேன்"
"அப்படியே அனுப்பனும்ன்னு தான் நினைச்சேன், விஷ்ணு கண்மூடித்தனமான ரீமாவை நம்புனதை பார்த்தப்போ பரிதாபமா இருந்துச்சு, அதான் அவனுக்கு உண்மைய புரியவைக்கிறதுக்காக அப்படிப் பண்ணினேன்.
விஷ்ணு புரிஞ்சிகிட்டான் இனிமே காதல் வலையில சிக்கி, ஒரு பொண்ணுகிட்ட ஏமாற மாட்டான்.
ரீமாவும் இனிமே எந்த ஆம்பளையையும் ஏமாத்த மாட்டா. நான் அவங்களுக்கு சக மனுஷனா உதவி பண்ணினேன் அவ்வளவு தான். அதுக்காக அவங்களை மறுபடியும் வேலைக்குச் சேர்த்து ரிஸ்க் எடுக்க முடியாது.
பிஸ்னஸ்ல ப்ராபிட் ரொம்ப முக்கியம் ஐயம் பேயிங் தெம். ஐ நீட் மை அவுட்புட், ப்ரசெண்டேஷனை முடிக்கச் சொல்லி டூ வீக்ஸ் ஆகுது, அந்த விஷ்ணு இதுவரைக்கும் எனக்கு அப்டேட் பண்ணலை. ரீமா டூட்டி டைம்ல ரிசெப்ஷன்ல இல்லாம சிரிச்சு பேசிட்டு இருக்காங்க, ஆக இரெண்டு பேருமே இர்ரெஸ்பான்ஸிபில் இடியட்ஸ் லவ்ங்கிற பேர்ல டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. அதான் அனுப்பிட்டேன். இனிமே எல்லாருக்கும் இது ஒரு பாடமா இருக்கும்.
சரி என் சைட்ல உள்ள ஒர்க் எல்லாம் மெயில் பண்ணிருக்கேன் செக் பண்ணிருங்க" என்றபடி நிமிர்ந்தவன், ஏதோ ஒரு யோசனையில் இருந்த வெற்றிமாறனிடம்,
"அங்கிள் மெயில் பண்ணிருக்கேன்னு சொன்னேன்" என்றான்.
"ஹான் செக் பண்றேன் தம்பி" என்றபடி தன் நினைவில் இருந்து வெளியே வந்தவரிடம்,
"நீங்க எதுவும் சொல்ல நினைக்கிறீங்களா" என்று கேட்டான்.
"அதுவந்து இந்த விஷயம் பவித்ரா மேடம்க்குத் தெரிஞ்சா வருத்தப்பாடுவாங்க தம்பி" தயக்கத்துடன் கூறினார்.
"வருத்தமா?? இல்லை கோபமா ??"
"அதுவந்து பா" என்று அவர் சங்கடத்துடன் அவனை பார்க்க, அவரது சங்கடத்தை உணர்ந்து கொண்டவனோ,
"விடுங்க அங்கிள் நான் பார்த்துக்கறேன்" என்றான்.
"சரி பா"
"மீட்டிங்க்கான அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணியாச்சா"
"ஆமா பா"
"சரி அங்கிள்"
"நான் வரேன் பா" என்றபடி அவர் அவனது அறையில் இருந்து செல்ல, தன் இமைகளை மூடியபடி கடந்த கால நினைவுகளில் மூழ்கிருந்தான் அவன் அவிரன் விஜயகுமார்.
********
இன்னும் நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் நிலையில் மைதானத்தில் குழுமி இருந்த இளம் பட்டாளங்களுள் சிலர், இன்றைய போட்டியில் பல விக்கெட்டுகளை குவித்து விட்டு கடைசி பன்தை எதிர்பார்த்து பவுண்டரியில் நின்றிருந்த ஒரு ஆடவனை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர்.
அதே நேரம் மீதம் இருந்த அனைவரும், தன்னை நோக்கி வரும் பந்தை அடிப்பதற்காக பேட்டை உயர்த்தியபடி தயாராக இருந்த ஆணவனின் பெயரைக் ஆரவாரத்துடன் கத்தியபடி ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்க, அவனோ அரை நொடி பொழுதில் நான்கு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் ஆறு ரன்னை மிக சுலபமாக தன் வசமாக்கிருந்தான்.
வெற்றியை தன் வசம் ஆக்கிய மகிழ்ச்சியில் தனது தலை கவசத்தை கழற்றியவன், தன் அலைபாயும் கேசத்தைச் சரி செய்தபடி இதழ் இசைக்க, அங்கிருந்த அனைவரும்,
"அனிருத்.. அனிருத் " என்று வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கத்த துவங்கிய
ஒரு சில நொடிகளே கடந்திருந்த நிலையில், அனிருத்தை நோக்கி போலீஸ் ஜீப் ஒன்று நெருங்கியது.
**********
அவிரன் தனது ஆபிஸ் கான்பரென்ஸ்
ரூமில், வீடியோ காலில் பாரீன் டெலிகேட்ஸுடன் மீட்டிங்கில் இருந்த பொழுது, தன் அலைபேசி விடாமல் ஒழிக்கவும் அதை அட்டெண்ட் செய்தவன், அவசர அவசரமாக மீட்டிங்கில் இருந்து கருப்பு நிற ஆடி காரில் கிளம்பினான்.
*****
போலிஸ் ஸ்டேஷனில் அனிருத்,
"சார் எத்தனை தடவை சொல்றது எனக்கு எதுவும் தெரியாது. முதல்ல என்னை விடுங்க" என்று வந்தது முதல் இதையே கூறிக் கொண்டு இருக்க, அதைக் கேட்டு இன்னும் எரிச்சல் அடைந்த இன்ஸ்பெக்டர் திலீப்,
"டேய் ஸ்டூடன்ட்ன்னு பாக்குறேன். இதே வேற ஒருத்தன்னா இந்நேரம் தோல உரிச்சி இருப்பேன். என் பொண்ணும் அந்த பையனும் எங்கடா. இப்ப மட்டும் அவங்க இங்க வரல நீ இந்த ஸ்டேஷனை விட்டு வெளிய போக முடியாது பாத்துகோ, நீ எவ்வளவு பெரிய குடும்பத்தை சேர்ந்தவனா இருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை, எனக்கு என் பொண்ணு இப்போ இங்க வந்தாகணும்."
"வந்தாகணும்னா எப்படி சார் அதான் எனக்கு தெரியாதுன்னு சொல்றேன்ல" என்ற அனிருத்தை இன்ஸ்பெக்டர் திலீப் கோபத்தில் அடிக்க பாய, ஓடி வந்து தடுத்த ஏட்டு பிரசாத்,
"சார் சார் பெரிய இடத்து பையன் சார், ஸ்டுடென்ட் வேற கை வச்சா நமக்கு தான் பிரச்சனை, கொஞ்சம் பொறுமையா இருங்க, உங்க பொண்ணும் மேஜர் அவங்களா தான் போயிருக்காங்க. கேசும் போட முடியாது எஸ்பி லெவல்ல ஏதும் கம்ப்ளைன்ட் போச்சுன்னா நமக்கு தான் தேவை இல்லாத பிரச்சனை சார். கொஞ்சம் பொறுமையா இருங்க நான் பேசுறேன்" என்றார்.
அப்பொழுது அனிருத்,
"யார் பேசினாலும் இதுதான் என்னோட பதில் எனக்கு எதுவும் தெரியாது ஒழுங்கா என்னை விடுங்க" இன்ஸ்பெக்டரை பார்த்து பல்லை கடித்த படி கூற, ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டரோ,
"செய்யறதையும் செஞ்சுட்டு திமிராவா பேசிட்டு இருக்க எல்லாம் பணக்கார கொழுப்பு, ஒரே அடியில மொத்த கொழுப்பையும் கரைக்கிறேன் டா" என்றவர் அனிருத்தை அறைய தன் கரத்தை ஓங்கிய நொடி அவரது கையை அவிரன் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
"என் ஸ்டேஷனுக்கே வந்து ஏன் கையவே புடிக்கிறியா, என் கைய விடுடா" என்று கர்ஜித்த இன்ஸ்பெக்டரிடம், ஒருவார்த்தை கூட பேசாதவன், அனிருத்தை அடிக்க உயர்ந்திருந்த அவரது கையை மட்டும் அழுத்தமாக பார்த்தான்.
அதாவது முதலில் ஓங்கிய உன் கரத்தை இறக்கு, பின்பு நான் உனது மற்றொரு கையை விடுகிறேன், அவனது பார்வை சொல்லாமல் சொல்ல, தன் விழிகளில் கனல் தெறிக்க அவிரனை முறைத்து பார்த்தவரோ, அதே முறைப்புடன் அனிருத் மீது தான் ஓங்கி இருந்த கரத்தை கீழே இறக்கிய மறுநிமிடம் அவிரன் தனது வசம் இருந்த இன்ஸ்பெக்டரின் கரத்தை விடுவித்தான்.
பின்பு தன் அலைபேசி மூலம் யாருக்கோ அழைத்து,
"உள்ள கூட்டிட்டு வாங்க" என்றவன், ஸ்டேஷனுகுள் தயங்கியபடி பயத்துடன் வந்த இன்ஸ்பெக்டரின் மகளை அழைத்து வந்து அவரின் முன்னே நிப்பாட்டி,
"இதோ உங்க பொண்ணு" என்றான்.
அப்பொழுது,
"அவி ஏன் கூட்டிட்டு வந்த, இந்த பெண்ணும் என் ஃப்ரெண்டும் உயிருக்கு உயிரா காதலிக்கிறாங்க இதோ இவரு என் ஃப்ரெண்ட் இவர் ஜாதி இல்லைன்னு பிரிக்க பார்க்கிறாரு. இந்த பொண்ணும் என் ஃப்ரெண்டும் சட்டப்படி மேஜர் டா, இவர் எப்படி பிரிக்க பார்க்கலாம் தயவு செஞ்சு இந்த பொண்ண கூட்டிட்டு போடா" என்ற அனிருத்தை அவிரன் ஒரு பார்வை பார்க்க, அனிருத் அதன் பிறகு ஒரு வார்த்தை பேசவில்லை, அவிரன் தனது விழிகளாலே அவனை தன்னுடன் வருமாறு செய்கை செய்துவிட்டு, வேகமாக வாசலை நோக்கி சென்றவன், ஒரு கணம் நின்று திரும்பி அந்தப் பெண்ணை நோக்கி வந்து,
"முதல்ல டிகிரி முடி, டிகிரி முடிச்சதும் ஒரு மூணு வருஷம் எதைப் பத்தியும் யோசிக்காம வேலைக்கு போ,
அப்பவும் உனக்கு அவனை தான் புடிச்சிருக்குன்னா, இது என் கார்ட்" என்று தனது விசிட்டிங் கார்டை கொடுத்தவன், "என்கிட்ட சொல்லு, அவனுக்கும் இதே தான் சொல்லி இருக்கேன் அப்பவும் உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்துச்சுன்னா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இந்த லவ் எல்லாம் தூக்கி போட்டுட்டு முதல்ல உங்க அப்பா அம்மாக்கு நேர்மையா இருங்க" என்றான்.
பின்பு இன்ஸ்பெக்டரை பார்த்து,
"ஆட்களோட போய் அந்தப் பையனோட அப்பா அம்மாவ மிரட்டுறது, அவனை கொன்னுடுவேன்னு பயமுறுத்துறதெல்லாம் இனி இருக்க கூடாது. மீறி ஏதாவது பண்ணுனீங்கன்னா நான் உங்க மேல கேஸ் கொடுக்க வேண்டியது இருக்கும்.
இன்னொரு விஷயம், உங்களுக்கு ஏதாவது விசாரிக்கணும்னா முதல்ல என்கிட்ட பேசுங்க அத விட்டுட்டு என் வீட்டில உள்ளவங்களை ஸ்டேஷன் கூட்டிட்டு வர்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க" என்று கண்டிப்புடன் கூறிய அவிரன், வந்த வேகத்தில் அனிருத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.
Last edited: