GG writers
Moderator
மதுரமே ஈஷணமே 2
அறிவுப்பு
முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பில் ஏற்கனவே வேறு ஒரு எழுத்தாளரின் கதை இருப்பதால்.
முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பு "மதுரமே ஈஷணமே" என்று விரைவில் மாற்றபடும்.
Sorry for the in convenience

புயலை மிஞ்சிய வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவிரனின் சிவந்த முகம், அவனுக்குள் கனன்று கொண்டிருக்கும் கோபத்தை அனிருத்திற்கு தெளிவாய் காட்டியது.அறிவுப்பு
முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பில் ஏற்கனவே வேறு ஒரு எழுத்தாளரின் கதை இருப்பதால்.
முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பு "மதுரமே ஈஷணமே" என்று விரைவில் மாற்றபடும்.
Sorry for the in convenience

அவர்கள் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாவது இருக்கும், இருந்தும் அவிரன் மற்றும் அனிருத் இருவரும் இந்த நிமிடம் வரை ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ளவில்லை. அவிரனுக்கு அனிருத் மீது கோபம் என்றால், அனிருத்திற்கு அவிரன் மீது கொஞ்சம் அதிகமாகவே வருத்தம் இருக்க, அவனது கோபம் தணிந்து விட்டதா என்பதை ஆராய, ஒரு கணம் திரும்பி ஓரக்கண்ணால் அவிரனை பார்த்தான்.
அவனது இறுகிய முகம் அவனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை என்பதை சொல்லாமல் சொல்ல, அவிரனின் கோபத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் அனிருத்திற்கு சற்று உதறலாக தான் இருந்தது.
எனினும் தன் அன்பான தமயன் தன்னுடன் பேசாமல் இருப்பது அனிருத்திற்கு என்னவோ போல இருக்க, அவிரனின் கோபத்தை குறைக்கும் பொருட்டு, ம்யூசிக் பிளேயரை ஆன் செய்து, 'வந்துச்சே பீலிங்ஸ்ஸு' என்னும் பாடலை ஓலிக்க செய்தான்.
பின்பு சில நொடிகள் கழித்து தானும் விசில் அடித்தப்படியே அந்த பாடலை பாடியவன், அப்படியே அவிரனை பார்த்து,
"ரஷ்மிக்கா ரஷ்மிக்கா தான்ல" என்று சிலாகித்து கூறியபடி, அவிரனின் தோளில் தன் கரத்தை போட, அடுத்த நொடி, அவிரன் மியூசிக் ப்ளேயரில் பாட்டை மாற்றியதில் ஹை வால்யுமில் 'சப்புன்னு அறைவேண்டா' என்னும் பாடல் இப்பொழுது காரையும் சேர்த்து அனிருதின் காதையும் அதிர செய்தது.
அவிரனின் செய்கையில் அனிருத் மிரட்சியுடன் அவனை பார்க்க, திரும்பி தன் தமையனை அவிரன் ஒரு பார்வை தான் பார்த்தான், உடனே அசடு வழிந்த அனிருத்,
"பாட்டுல கொஞ்சம் வன்முறை அதிகமா இருக்கிறது போலே இருக்கே" என்றவன் ம்யூசிக் பிளேயரை ஆஃப் செய்து விட்டு அமைதியாக சற்று நேரம் அமர்ந்திருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் முடியாதவனாய்,
"அவி.. அவி.. அவி.." என முடிந்தவரை கத்தி பார்த்தான். ஆனால் எதையுமே காதில் வாங்காத அவிரன் காரை ஓட்டுவதில் குறியாய் இருந்தான்.
"டேய் அண்ணா என்னைப் பாருடா"
"------------"
"ப்ளீஸ் டா, பேசுடா, சைலன்ட் ட்ரீட்மெண்ட் வேண்டாம்"
"--------------"
"அவி இப்போ நீ பேசலை நான், அதோ அந்தப் பாலத்துல இருந்து குதிச்சிருவேன்" என்றதும் அவிரன் அனிருத்தை அமைதியாகப் பார்க்க,
"--------------"
"சத்தியமா குதிச்சிருவேன் டா" என்றான் அனிருத்.
உடனே பதில் ஏதும் பேசாமல் வண்டியைத் திருப்பிய அவிரன் தாங்கள் கடந்து சென்ற பாலத்தின் அருகே மீண்டும் காரைக் கொண்டு வந்து நிப்பாட்டி, காரை விட்டுக் கீழே இறங்கி, அனிருத் அமர்ந்திருக்கும் பக்கம் சென்று கதவை திறந்து விட்டவன், கதவிற்கு அருகே தன் இரு கரங்களையும் குறுக்கே கெட்டிக்கொண்டு நின்றவன், தன்னை கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்த அனிருத்தை, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல்,
'இதோ நீ சொன்ன பாலம் வந்துருச்சு' என்று செய்கையால் சொல்லாமல் சொன்னான்.
அதில் அதிர்ச்சி அடைந்த அனிருத்,
"என்ன டா டெஸ்ட் வைக்கிறியா? சொன்னா செஞ்சுருவேன்டா, உன்னுடைய ஆப்பிள் லேப்டாப் கூட ரிப்பேர் ஆகும், ஏன் இந்த ஆடி கார் கூட ரிப்பேர் ஆகும் ஆனா இந்த அனிருத் சொன்ன சொல்ல ஒருநாளும்… நல்லா கேட்டுக்கோ டா ஒருநாளும் மாத்திக்க மாட்டான்" என்ற அனிருத் அவிரனின் உறுதியை கண்டு தடுமாறவும், வந்த சிரிப்பைத் தன் மீசைக்குள் அடக்கிக்கொண்ட அவிரன் 'ஐ டோன்'ட் ஹவ் மச் டைம் ட்யுட் சீக்கிரம் குதி' என்பது போலத் தன் கைக்கடிகாரத்தை பார்க்க, அவனை முறைத்து பார்த்த அனிருத்,
"குதிக்க போறேன் டா, குதிக்க போறேன், போறேன் போறேன் போறேன்" என்று சொல்ல அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் ஸ்ருதி குறைந்து கொண்டே போனது.
"குதிக்க போறேன் டா" இப்பொழுது அனிருத்தின் குரல் காற்றில் கரைந்து போக, தன் அமைதியை கலைத்த அவிரன்,
"இன்னுமா குதிக்காம இருக்க" என்றான் மிக இயல்பாக.
"மன்னிக்க மாட்டியாடா" அனிருத் பாவமாய் கேட்க,
"மன்னிக்க நான் யாரு சார்"
"அவி"
"ஷட் அப்"
"ஓகே ஓகே வெறி சாரி டா உன்கிட்ட சொல்லாம அவ்வளவு பெரிய விஷயம் பண்ணது தப்புதான், ஆனா சொன்னா நீ சப்போர்ட் பண்ண மாட்டன்னு தான் நான் சொல்லல, பட் நீ நினைக்கிறது போல அவங்க கிடையாது டா, அவங்க ரெண்டு பேரும் உண்மையாவே ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க"
"நீ பார்த்தியா ஹான், லவ் மை ஃபுட்" என்று சீறிய அவிரன் அனிருத்தை பார்த்து,
"அந்தப் பொண்ணு உண்மையாவே அந்த பையன லவ் பண்ணி இருந்தா, நான் என்ன சொல்லிருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் வந்திருக்கவே கூடாது. இதே அந்த பொண்ணு இடத்துல நான் இருந்திருந்தா அவனை விட்டு வர மாட்டேன்னு உறுதியா இருந்திருப்பேன். என்ன ஆனாலும் யார் சொன்னாலும் கடைசி வரைக்கும் நிக்கணும் டா அது தான் லவ்." என்றான்.
"டேய் அப்படியெல்லாம் இல்லடா அந்த பொண்ணு உண்மையா தான் அவனை லவ் பண்றா, நீ தான் தப்பா புரிஞ்சிகிட்டு பேசிட்டு இருக்க"
"நான் தப்பா புரிஞ்சிருக்கேனா? அது சரி ஏன் சொல்ல மாட்ட" என்று தன் சிகையை கோதி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவிரன் அனிருத்திடம்,
"இப்படி அப்பா அம்மாக்கு துரோகம் பண்ணலாமா, இதெல்லாம் சரியா? அங்க உன் அப்பா ரொம்ப கவலையா இருக்காரு, சரி அதெல்லாம் விடுங்க தங்குறதுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன பண்ண போறீங்கன்னு தான் கேட்டேன், அடுத்த நிமிஷம் அந்த பொண்ணு என் அப்பா அம்மாவ பார்த்தே ஆகணும்னு ஒரே அழுகை, அந்தப் பையன் கூட நான் ஏதாவது வேலை பார்த்து அவளை பத்திரமா பாத்துக்குவேன்னு சொல்றான், ஆனா அவ நான் அப்படி பண்ணி இருக்க கூடாது என் அப்பா அம்மாவ பாக்கணும்ன்னு அழுதுட்டா, அந்த பையனுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஒரு மாதிரி ஆகிட்டான். இதெல்லாம் ஒரு லவ், இவங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காக நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல போய் இவங்கள தங்க வச்சது மட்டும் இல்லாம, போலீஸ் ஸ்டேஷன் வர போயிருக்க"
"டேய் அவி பொண்ணுங்க பசங்க மாதிரி கிடையாதுடா அவங்களால டக்குனு எல்லாம் ஃபேமிலிய விட்டுட்டு வர முடியாது. அதுக்காக லவ் இல்லன்னு எல்லாம் சொல்லாத, லவ் இல்லாமல அந்த பொண்ணு அவனுக்காக வந்தா"
அதைக் கேட்டு விரக்தியாக சிரித்த அவிரன், "அதெல்லாம் வருவாங்க நல்லாவே லவ் பண்ணுவாங்க, ஆனா குடும்பமா காதலானு வந்தா பொண்ணுங்க குடும்பத்தை தான் செலக்ட் பண்ணுவாங்க, கடைசில அவங்கள நம்பின நம்மள பாதியிலேயே விட்டுட்டு போயிட்டே இருப்பாங்க, வலியும் வேதனையும் நமக்கு தான். காதல்னு வரும் பொழுது பொண்ணுங்களால என்னைக்குமே லாயலா இருக்க முடியாது. தே ஆர் சீட்டர்ஸ்" தொண்டை கரகரக்க வலியுடன் கூறினான்.
"---------" அவிரனின் மன வலியை நன்கு அறிந்து வைத்திருக்கும் அனிருத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
சில நொடிகள் அமைதியாக இருந்த அனிருத் அவிரனின் தோள் மீது கரம் வைத்து, "ஒன்னு ரெண்டு பேரை வச்சு, எல்லா பொண்ணுங்களையும் ஜட்ஜ் பண்ணாத அவி எல்லாரும் அப்டி இல்லை டா."
"எல்லாரும் அப்டி இல்லாம இருக்கலாம், அதே நேரம் எல்லா பெண்களும் லாயலா இருக்கிறதில்ல, எப்படி ஒரு பொண்ணை வச்சி எல்லாரையும் தப்பா பேச கூடாதோ, அது போல எங்கையோ நடக்குற ஒரு நல்லதை வச்சி என்னால மறுபடியும் ஏமாந்து போக முடியாது"
"அதெல்லாம் நீ ஏமாந்து போக மாட்ட இனிமே உன் வாழ்க்கை நல்லா இருக்கும் அதுமட்டும் இல்லை, நீ வேணும்ன்னா பாரு இவங்க ரெண்டு பேரும் சேர தான் போறாங்க. நீயும் மாற தான் போற அதுவும் சீக்கிரமே"
"ஆஹான் பார்க்கலாம்" என்று அவிரன் கேலியாக இதழுக்கு வலிக்காது சன்னமாய் சிரித்தான்.
"பாக்கலாம் எல்லாம் இல்ல, போலீஸ் ஸ்டேஷன்ல நீ அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்திருக்க மறந்துறாத"
"அது உனக்காக உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு சொன்னேன்"
"அது புரிஞ்சிது, ஆனா நீ சொன்னது சொன்னதுதான் மாறக்கூடாது அவி"
"நீ சொல்ற மாதிரி அவங்க காதல் உண்மையானதா இருந்தா, நான் சொன்னது போல அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன். ஆனா என்ன தெரியுமா அந்த பொண்ணும் வர போறதில்ல அவங்களும் சேர போறது இல்ல. நீ சொல்ற எதுவும் நடக்க போறது இல்ல"
"அவி"
"நான் இன்னும் பேசி முடிக்கல அனி" என்று தன் கரங்களை உயர்த்தி தடுத்தபடி தொடர்ந்த அவிரன்,
"அதனால இனிமே இந்த லவ்வுக்கு சப்போர்ட் பண்றது, தியாகச் செம்மல் மாதிரி ஸ்டேஷன் போறது எல்லாம் இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்." என்று கோபத்துடன் ஆரம்பித்தவன்,
"ஏற்கனவே இதுல சிக்கி நான் கஷ்டப்படுறது போதாதா, உனக்கு எதுக்கு டா இது" இறுதியில் ஆற்றாமையுடன் கேட்டான்.
"ஆனா அவி" ஏதோ பேச வந்த அனிருத்தை தடுத்த அவிரன்,
"பொண்ணுங்க, காதல், காதலிக்கிறவங்க இந்த மூணு விஷயத்தை மட்டும் என்னைக்கும் நம்பாத, என் தம்பி நீ, நான் பட்ட கஷ்டம் உனக்கு வரக்கூடாதுன்னு சொல்றேன். நம்பிக்கை துரோகம் ரொம்பவே கொடூரமானது, அதோட வலி ரொம்பவே ஜாஸ்தியா இருக்கும்" என்று சொல்ல அவனது விழிகள் சட்டன கசிந்துவிட அப்பொழுது,
"சாரி அவி" என்றபடி அவனை இறுக்கி அணைத்துக்கொண்டான் அனிருத்.
"போலீஸ் ஸ்டேஷன் வரப் போய், வீட்ல தெரிஞ்சா என்ன ஆகும், எல்லாரும் எவ்வளவு வருத்தப்படுவாங்கனு கொஞ்சம் யோசிச்சு பாரு, இனிமேலாவது கொஞ்சம் ரெஸ்பான்ஸிபிளா பிஹேவ் பண்ணு"
"ஓகே ஓகே ரிலாக்ஸ் ப்ராமிஸ் பண்றேன், இனிமே இப்படி நடக்காது ட்ரஸ்ட் மீ, ஐ ரியலி மீன் இட். அதான் சாரி சொல்லிட்டேன்ல கொஞ்சம் சிரி டா, சிரிக்கிறதுக்கு கூடச் சொல்லித்தான் தரணுமா டா உனக்கு"
"எனக்கு அவ்வளவு தான் வரும்" என்ற அவிரன், "நீ பண்ண வேண்டாத வேலையால மீட்டிங் பாதியிலே விட்டுட்டு வந்துட்டேன்" என்று கோபத்துடன் கூறும்பொழுதே ஆபீஸில் இருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்று பேசியவன் அடுத்த நொடி அனிருத்துடன் ஆபீசுக்கு கிளம்பினான்.
பாதியிலே விட்டு சென்ற மீட்டிங்கை முடித்துவிட்டு வந்த அவிரன் தன் அறையில் அனிருத்தை தேடினான். ஆனால் அவன் அங்கே இல்லாமல் போகவும்,
"அனி எங்க போனான்? ஒருவேளை உள்ள இருப்பானா" என்றபடி உள்ளே சென்று பார்த்தபொழுது, உள்ளே இருக்கும் ஒய்வெடுக்கும் அறையில் அனிருத் அவிரன் வந்ததை கூடக் கவனிக்காது தொலைக்காட்சியில் மூழ்கிருந்தான்.
இதைக் கண்ட அவிரன்,
'நைட் டைம்ல டிவில அப்படி என்னத்தை ஆர்வமா பார்க்குறான்.' என்று ஒரு நொடி எண்ணியவன் பின்பு அடுத்த கணமே,
'அனிருத் என்ன பஜனையா பார்க்கப் போறான்' என்று தனது கேள்விக்குத் தானே பதிலைக் கூறிக்கொண்டு, வேகமாகச் சென்று பார்த்தபொழுது, அங்கே ஃபேஷன் சேனலில் பெண்கள் வண்ணமையமான ஆடை அணிந்து நடந்து வரும் ரம்ப் வாக் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்க, அனிருத்தோ அதை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அவிரனோ சிரித்துக்கொண்டே,
"டேய் அனி" என்று அழைத்தபடி தொலைக்காட்சியின் திரையை மறைத்தபடி வந்து நிற்க, அவிரனை பார்த்து முறைத்த அனிருத்,
"என்னடா? தள்ளு முதல்ல இப்போ நான் உன் கூடப் பேசுற மூட்ல இல்லடா. அங்க பாரு டா இதைப் பார்க்கறதுக்கு ரெண்டு கண்ணு போதாது" எனத் தொலைக்காட்சியின் திரையைப் பார்த்துச் சிலாகித்து கூறினான்.
"ஆமா டா நான் கூட இப்போ வேற மூட்ல தான் இருக்கேன்" என்ற அவிரனிடம்,
"டேய் ப்ச் தள்ளிப் போ அவி டிஸ்டர்ப் பண்ணாத" என்றான் அனிருத்.
"மீட்டிங்ல கலந்துக்கோன்னு சொன்னா இங்க வந்து இதைப் போய் பார்த்துட்டு இருக்க"
"டேய் நீதான் இந்த வயசுல கெட்டுப் போய் இருக்கன்னா என்னையும் ஏன் டா கெடுக்க பாக்குற. எப்ப பாரு ஆஃபீஸ், இல்லனா படிப்புன்னு ரொம்ப போரிங் டா நீ. கிழட்டு பையன் மாதிரி ஏன்டா இப்படி இருக்க கொஞ்சம் யூத்புல்லா இருடா.
மீட்டிங்காடா அது ஒரு பொண்ணு கூட இல்ல டா, இதுல நீங்க என்ன பேசினீங்கன்னு வேற புரியல, அதான் என் காதுல ரத்தம் வந்துருமோன்னு இங்க ஓடி வந்துட்டேன்" என அனிருத் கேலியாக பேச,
"எதே நான் கழட்டு பையனா, இதுக்கு கண்டிப்பா பணிஷ்மன்ட் குடுத்தே ஆகணும்" என்றான் அவிரன்.
"டேய் எதுவா இருந்தாலும் தள்ளி இருந்தே பண்ணு" என தன் அண்ணனின் விஷமம் அறிதவனாய் அனிருத் தள்ளிச் சென்றான்.
ஆனால் அவனோ,
"அது எப்படி பனிஷ்மென்ட் கொடுக்காம விட முடியும் மிஸ்டர் ரோமியோ" என்று கூறி அவிரன் அனிருத்தின் அருகே வர, தன் தமயனின் எண்ணம் புரிந்து அனிருத் ஓட, அவிரன் துரத்த அவன் ஓட எனக் கடைசியாக அனிருத்தை அவிரன் மடக்கி பிடித்திருந்தான்.
"ப்ளீஸ் டா, சாரி டா, வேண்டாம் டா, என் கன்னம் ஆப்பிள் மாதிரி டா அது அழகான ஏஞ்சல்ஸ்க்கு டா, உன்னை மாதிரியான டெவிளுக்கு இல்லடா." என்று கூற,
"நான் டெவிலா இதுக்கு கண்டிப்பா பப்பி குடுத்தே ஆகணும், ஆமா டா நான் டெவில் தான், டேர் டெவில்" என்று கூறி அவிரன் அனிருத்தின் கன்னத்தைப் பதம் பார்த்தான்.
அவிரனை முறைத்து பார்த்த அனிருத், "ச்சீ ஃபினாயில் ஊத்தி தான்டா கழுவனும்." என்று கூறி தன் கன்னத்தைப் போட்டுத் தேய் தேயென்று தேய்க்க, அவனது செய்கையைக் கண்ட அவிரனோ தன் மனம் விட்டுச் சிரித்தான்.
அதைக் கண்ட அனிருத்துக்கோ மகிழ்ச்சியாக இருக்க, அதே நேரம் அங்கே வந்த மாறனுக்கும் அவிரனின் சிரித்த முகத்தை பார்த்த பொழுது மனம் மிகவும் நிறைந்து விட்டது.
அவிரனுக்குள் இருக்கும் மன போராட்டத்தையும், அதில் இருந்து அவன் மீள முடியாது பட்டுக் கொண்டிருக்கும் துயரத்தையும், அவிரன் இங்கே வந்த இத்தனை வருடத்தில் அனிருத்தும் மாறனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
அதுவும் அவிரன் மாறனுடன் அதிக நேரம் செலவிடுவதாலோ என்னவோ, மாறனுக்கு அவிரன் மீது எப்பொழுதுமே ஒரு தனி பிரியம் உண்டு, என்னதான் அவிரன் கண்டிப்புடனும் கோபத்துடனும் எப்பொழுதும் இறுக்கமாகவே இருந்தாலும், ஒரு நாளும் அவனிடம் பணக்கார திமிர் இருந்ததே கிடையாது.
இந்த இளம் வயதில் அத்தனை இழப்புகளையும் சந்தித்த பிறகும், உள்ளத்தில் அவ்வளவு வலி இருந்த பிறகும், தன் கடின முயற்சியால் நஷ்டத்தில் இருந்த கம்பெனியை தூக்கி நிறுத்தியது அவிரன் தானே. அந்த பிரமிப்பு எப்பொழுதுமே அவன் மீது அவருக்கு உண்டு, அவிரனின் நலனை குறித்து கவலைப்படும் ஒரு சிலருள் இவரும் உண்டு என்பதாலோ என்னவோ எப்பொழுதுமே இறுக்கமாக இருக்கும் அவிரன் இன்று சிரித்ததும் அதை பார்த்து மாறனின் கண்களலெல்லாம் கலங்கிவிட, அதைக்கண்ட அனிருத்,
"அங்கிள் நான் இருக்குற வரைக்கும் அவிரனுக்கு எதுவும் ஆகாது, அவன எப்பவும் இப்படி சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு." என்ற அனிருத் நம்பிக்கையோடு கூற,
"தெரியும்பா, அண்ணன் தம்பி உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்கு, நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படியே இருக்கணும்." என்று மனதார வாழ்த்திவிட்டு அங்கிருந்து சென்றார்.
"டேய் அவிரன் ரிமோட்டை குடுடா ரெம்ப் வாக் முடிஞ்சிர போகுது."
"இதெல்லாம் ஒரு ப்ரோக்ரம்னு பார்த்துட்டு இருக்க, நியூஸ் வைடா." என்ற அவிரனின் கரத்தில் இருந்த ரிமோட்டை வாங்கிய அனிருத்,
"கிட்ட வந்திராத, ராம்ப் வாக் முடிஞ்சதும் ஸ்டார் மூவிஸ்ல செம படம் போடுறான், இன்னைக்கு நாம அது தான் பார்க்குறோம்"
"அப்படி என்ன படம் டா." என்று சலித்துக்கொண்ட அவிரன், சோஃபா மீது சாய்ந்துகொள்ள,
"டைட்டானிக் டா, செம லவ் ஸ்டோரி டா." என்று அனிருத் ஆர்வத்துடன் கூறிக் கொண்டிருக்க, அவிரனின் மனமோ பழைய நினைவுகளில் மூழ்கியது.
"அவங்கள பாக்கவே ரொம்ப க்யூட்டா இருந்துச்சுல அவி, ஆனா ஏன் மேயின் சீனை கட் பண்ணிட்டாங்க" என்று சோகமாக கேட்டவளின் தலையில் நங்கென்று கொட்டியவன்,
"அடிங் சேட்டை" என்றான் பொய்யான கோபத்துடன்.
"ஆ வலிக்குது" என்று அவள் தலையை தடவவும், "ஏய் பொய் மூட்டை லைட்டா தாண்டி தட்னேன்" என்றான் அவன், அதற்கு, "சும்மா" என்று அசடு வழிந்தவளோ,
"நான் கூட நீ டைட்டானிக் படம் பாக்கலாம்ன்னு சொன்னதும், எதையெல்லாமோ எதிர்பார்த்து அவ்ளோ ஆசையா வந்தா நீ பேசிட்டே இருக்க" என்று கண்ணடித்தவளை பார்த்து தன் வாயில் கை வைத்தவன்,
"மாமி சரியான கேடி டி நீ. அப்பாவி மாதிரி இருந்துட்டு பேச்ச பாரு, நீ இன்னும் சின்ன பொண்ணு தான் டி, எதையெல்லாமோ எதிர்பார்தியா, பார்ப்ப டி பார்ப்ப. நானே நம்ம விஷயம் வெளியே தெரிஞ்சா என்ன நடக்கும்னு பயந்து போய் இருக்கேன். ஆனா உனக்கு பயமே இல்லை டி."
"ஏன் பயப்படணும் அதான் நீ இருக்கியே"
"அது சரி பிரச்சனை வந்தா மைனர் பொண்ண ஏமாத்திட்டேன்னு என்னதான உள்ள தூக்கி வைப்பாங்க"
"அதெல்லாம் நான் ஒன்னும் வைக்க விட மாட்டேன்"
"ஆஹான்"
"என் அவி மேல யாராவது கையை வச்சீங்க, சும்மா விடமாட்டேன் தொலைச்சிடுவேன்னு சொல்லி எல்லாரையும் மிரட்டிருவேன்"
"ஒ அப்டியா" என்றவன், சட்டென்று தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து, "ராஜா அங்கிள் நீங்களா" என்று சொன்னது தான் தாமதம், "ஐயோ அப்பா நான் இல்லை சும்மா தான்" என்று அவள் பயத்தில் உளற துவங்கிவிட, அவிரன் சத்தமாக சிரித்து விட்டான்.
அவிரன் சிரிக்கவும், அவன் தன்னை ஏமாற்றியது அவளுக்கு புரிய, "என்ன அவி நீ போ" என்ற பெண்ணவள் எழுந்து கொள்ளவும் அவள் கரம் பற்றி தடுத்து, அப்படியே அவளை தன் தோள் மீது சாய்த்து அணைத்து கொண்டவன்,
"ஏய் பயந்தாங்கோழி ஏதோ எல்லாரையும் மிரட்டிடுவேன்னு சொன்ன என்ன இது ஹான், இந்த வாய் அடிக்கிறது, வீர வசனம் பேசுறதெல்லாம் என்கிட்ட மட்டும் தான்ல" அவளது நெற்றியோரம் வழிந்த வியர்வையை தன் கைக்குட்டையால் துடைத்து விட்டபடி கேட்டான்.
அவன் என்னவோ விளையாட்டாய் தான் கேட்டான், ஆனால் அவளுக்குத்தான் என்னவோ போல் ஆகி விட்டது.
"நான் எல்லாத்துக்கும் பயப்படுவேன் தான், ஆனா நீன்னு வந்தா பயத்தெல்லாம் தூக்கி வீசிடுவேன். எப்படி உன்னை காதலிக்க நான் பயப்படலையோ, அதே போல தான் நம்ம விஷயம் அப்பாக்கு தெரிஞ்சாலும் நான் பயப்பட மாட்டேன். எல்லாத்துக்கும் மேல என் சைடு நம்ம லவ்க்கு எந்த பிரச்சனையும் வராது. அதெல்லாம் என் அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார். எனக்கு சீதா மேம் பத்தி நினைச்சா தான் பயமா இருக்கு" முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கூறியவளின், நெற்றி முட்டிய அவிரன்,
"எனக்கு ஒன்னுனா என் அம்மு புலியா மாறிடுவான்னு நல்லா தெரியும். அப்புறம் என் அம்மாவ பத்தி எல்லாம் நீ கவலையே பட வேண்டாம். யார் என்ன சொன்னாலும் நான் உன்னை விடமாட்டேன். சோ மேடம் நிம்மதியா படிங்க, நீ டிகிரி முடிச்ச அடுத்த செகண்ட் உன் அப்பா கிட்ட என் அம்மாவோட வந்து பேசுறேன் சரியா"
"ம்ம் ஆனா அதுக்கு இன்னும் வருஷம் ஆகுமே, அதுவரை ஒரு சின்ன கிஸி கூட கிடையாதா" ஏக்கமாக வினவினாள்.
"அடியே சட்டப்படி நீ இன்னும் குழந்தை டி, அதை மனசுல வச்சுட்டு பேசு"
"நான் ஒன்னும் குழந்தை இல்லை" என்று ரோஷமாக கூறியவள், "இன்னும் ஒரு மாசம் தான் அப்புறம் எப்படி நீ என்ன குழந்தைன்னு சொல்றேன்னு நானும் பாக்குறேன் ." என்றாள் வீராப்பாக.
"பேசுவடி பேசுவ, உன் கிட்ட இப்படி உக்காந்து பேசுறதுக்கே யாரும் பார்த்திருவாங்களோன்னு நான் பயந்து போய் இருந்தா. நீ என்னன்னா கிஸ் எல்லாம் கேக்குற, இன்னைக்கு லவ்வர்ஸ் டேவே கேட்டுட்டே இருந்தியேன்னு சார்ப்ரைசா வெளிய கூட்டிட்டு வந்தா உனக்கு கிஸ் வேணுமா. முதல்ல நீ கிளம்பி வீட்டுக்கு போ."
"ஆளு தான் பல்க்கா இருக்க ஆனா சரியான பயந்தாங்கோழி நீ, உனக்கு லவ் பண்ணவே தெரியல" என்று சலித்துகொண்டாள்.
"ஆமாமா நான் பயந்தாங்க்கோழி தான், எனக்கு தெரிஞ்சது போலவே நான் லவ் பண்ணிக்கிறேன் நீ முதல்ல இடத்தை காலி பண்ணு தாயே" என்று கையெடுத்து கும்பிட்டவனை பார்த்து முறைத்தவள், "போறேன்" என்றுவிட்டு கிளம்பி பின்பு சட்டென்று திரும்பி, அவிரன் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் கன்னத்தை நெருங்கியவள், அவன் சுதாரித்து திரும்பியதும் தவறுதலாய் அவன் இதழில் தன் இதழை பதித்து விட, இருவருமே அதிர்ந்துவிட்டனர்.
"ஏய் என்னடி இது" என்ற அவிரனிடம்,
"சாரி நான் கன்னத்துல தான் கொடுக்க வந்தேன் நீ தான் திரும்பிட்ட" என்ற பெண்ணவளோ பயம் கலந்த வெட்கத்தில் ஓடி விட, பருவ வயதில் இருந்த அவிரனோ தன்னவள் கொடுத்த முதல் முத்ததால் அடங்காமல் துடித்த தன் இதயத்தையும் தன் உணர்வுகளையும் அடக்க முடியாது பெரும் பாடு பட்டு போனான்.
பின்பு சில நொடிகள் அப்படியே கண்களை மூடி அமர்ந்திருந்தவன், மெதுவாய் தன் இதழை வருடி பார்க்க, அதில் தேங்கி இருந்த தன்னவளின் இதழ் ஈரத்தை உணர்ந்து முதன் முறை வெட்கம் கொண்டான்.
சோபாவில் கண்களை மூடி தலை சாய்த்து அமர்ந்திருந்த அவிரனின் விரல்கள் இப்பொழுது அனிச்சையாக தன் இதழை வருட, அவிரனின் இதயம் அவனை மீறி படபடத்தது.
"டேய் அவி டேய்" அனிருத் பல முறை அழைத்த பிறகு பழைய சிந்தனைகளிலிருந்து விழித்துக் கொண்டவன், "என்ன" என்றான்.
"எவ்வளவு தடவை கூப்பிடுறது பாரு படம் ஸ்டார்ட் ஆயிட்டு" என்றான் அனிருத்.
"வேலை இருக்கு அனி" அவிரன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, "வேலை தான் எப்பவும் பாக்குறியே கொஞ்சம் படம் பாருடா மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்"
"வேண்டாம் ஏற்கனவே பார்த்தது தானடா."
"அதெல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் பார்த்துகிட்டே இருக்கலாம்" என்று அனிருத் சிலாகித்து கூற,
"ஆமா டா உன்னை மாதிரி ஆளுங்க பார்க்க வேண்டிய படம் தான். அநியாயமா காதல் என்கிற பேர்ல ஜேக்கை கொன்னுட்டாங்க, ஜேக் மட்டும் லவ் பண்ணாம இருந்திருந்தா, அவன் செத்துருக்க மாட்டான், ஸோ லவ் பண்ணினா கடைசியில கஷ்டப்பட போறது ஆம்பளைங்க தான் என்பதுக்கு நல்ல எடுத்துக்காட்டு இந்தப் படம் தான் டா, நீ கண்டிப்பா பார்த்தே ஆகணும்." என உலகமே போற்றிய காதல் காவியத்திற்கு புது விளக்கம் கொடுத்த அவிரனை இயலாமையோடு பார்த்த அனிருத்,
"டேய் அவி சத்தியமா முடியலை டா எப்படி டா உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது, சரியான சாமியார் டா நீ, இப்படியே எத்தனை நாளைக்கு தான் சொல்லிட்டு இருக்க போறன்னு நானும் பார்க்கிறேன், அப்புறம் இன்னைக்கு நீ என்கூட இந்தப் படத்தைப் பார்த்தே ஆகணும்." என்று கூறினான்.
அதற்கு, "போ டா வேலை நிறையா இருக்கு ." என்று அவிரன் சொல்லவும்,
"போடாப் போ எத்தனை நாளைக்குனு நானும் பாக்குறேன் ஒரு நாள் இல்லை ஒருநாள் மறுபடியும் நீ காதல்ல விழ தான்டா போற" என்ற அனிருத்திடம்,
"நடந்தா பார்க்கலாம்" என்று பேருக்கு புன்னகைத்த அவிரன், சமீபமாக தான் டிப்ரசன்காக பயன்படுத்தும் மாத்திரை ஒன்றை எடுத்து தன் வாயில் போட்டுவிட்டு, பால்கனியில் உள்ள கோச்சில் தன் கால்களை நீட்டியபடி, வசதியாகத் தன் தலையை நன்கு சாய்த்துக்கொண்டு, தன் முகத்தில் பட்ட தென்றலின் குளிர்மையை ரசித்தபடி தன் மடிக்கணினியில் மூழ்கினான்.
Last edited: