GG writers
Moderator
அறிவுப்பு
முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பில் ஏற்கனவே வேறு ஒரு எழுத்தாளரின் கதை இருப்பதால்.
முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பு "மதுரமே ஈஷணமே" என்று விரைவில் மாற்றபடும்.
Sorry for the in convenience
இனி..முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பில் ஏற்கனவே வேறு ஒரு எழுத்தாளரின் கதை இருப்பதால்.
முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பு "மதுரமே ஈஷணமே" என்று விரைவில் மாற்றபடும்.
Sorry for the in convenience
இதற்குமேல் பொறுக்க முடியாது தன் நாற்காலியில் இருந்து விருட்டென்று எழுந்த பவித்ரா,
"ஏன் கேட்கணுமா?? நான் கம்பெனியோட தர்ட்டி ப்ரெசென்ட் ஷேர் ஹோல்டர், மேனேஜிங் டைரக்டர். என்கிட்ட கேக்கணும் "
"யஸ் பட், கம்பெனி என்னுடையது" விழிகளை கணினியில் பதித்த படி கர்வத்தோடு நிதானமாய் கூறினான் அவிரன்.
அவமானத்தில் பவித்ராவின் விழிகள் ரெத்தமென சிவக்க, கோபத்தோடு அடுத்து பேச வாயெடுத்த பவித்ராவை அமைதியாய் இருக்கும் படி தன் பார்வையாலே கட்டளையிட்ட ராஜேஸ்வரி பேரனிடம்,
"அவிரன் நீ என்ன பேசுறன்னு தெரிஞ்சி தான் பேசுறியா இது சரி இல்லை பா, பெரியவங்க கிட்ட பேசுறதுக்குன்னு ஒரு முறை இருக்கு" வருத்தத்துடன் கூற, அவரை கேள்வியோடு எதிர்நோக்கியவன்,
"நான் என்ன தப்பா பேசிட்டேன்" இயல்பாக வினவினான்.
"பவித்ரா கிட்ட நீ இப்போ பேசுனது சரியில்ல பா"
"அவங்க கேட்டாங்க, நான் பதில் சொன்னேன், பாட்டி நீங்க கம்பெனியை டேக் ஓவர் பண்ண சொன்னப்போ, எனக்கு முழு அதிகாரம் குடுத்தா தான் பார்த்துக்குவேன்னு சொன்னேனா இல்லையா"
"நானும் குடுத்துட்டனே"
"ஒரு நிமிஷம் அவிரன் இப்போ நீ என்ன சொல்லவர, உன்கிட்ட அதிகாரம் இருந்தா நாங்க யாரும் கேள்வி கேட்க கூடாதா" என்றாள் பவித்ரா.
"நான் எப்போ அப்படி சொன்னேன்."
"ஏன் அவங்களை வேலைய விட்டு நிப்பாட்டுனா??" பவித்ரா கோபமாக வினவினார்.
"புடிக்கல" இலகுவாக கூறினான்.
"இதெல்லாம் ஒரு பதிலா"
"இது தான் என் பதில்." தன்னமையாகத் தான் கூறினான். ஆனால் அவன் பார்வையில் இருந்த நக்கல் பவித்ராவுக்கு எரிச்சலூட்டியது.
சிரிக்கும் பேரன் ஒரு புறம் முறைக்கும் மருமகள் மறுபுறம் என தர்மசங்கடத்தில் ராஜேஸ்வரி இருவருக்கும் நடுவில் நின்றிருந்தார்.
"இங்க பாருங்க சித்தி லெட் மீ க்ளீயர் இட், கம்பெனிய நான் பார்த்துக்கணும்ன்னா என் முடிவுல யாரும் தலையிட கூடாது. இல்லைன்னா நான் விலகிக்கிறேன். நீங்களே பார்த்துக்கங்க ஐ டோன்'ட் ஹவ் எனி ப்ராப்லம்" சலனமில்லா முகத்துடன், பவித்ராவின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்து கூறினான்.
"அப்படி இல்லை அவி" உடனே ராஜேஸ்வரி மறுத்தார்.
"அத்தை ஒரு நிமிஷம்" என்று தன் கரங்களை உயர்த்திய பவித்ரா அவிரனை பார்த்து,
"மிரட்டுரியா? அதிகாரம் உன்கிட்ட இருந்தா பெரியவங்க நாங்க யாரும் சஜஷன் கூட சொல்ல கூடாதா?" என்று தன் அதரங்கள் நடுங்க ஆவேசத்துடன் வினவ அதற்கு புன்னகைத்தவன்,
"ஒண்ணு இல்லை நூறு சொல்லலாம். யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்"அதே புன்னகையுடன் இயல்பாய் தொடங்கி, நொடி இடைவெளிக்கு பின்,
"பட் நான் கேட்டா" புருவம் உயர்த்தி அழுத்தமாய் கூறினான்.
இந்த இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும், உன்கிட்ட உதவி கேட்டா செய் இல்லைன்னா வேலைய பாரு என்பதுதான் அவிரனின் பதிலாக இருந்திருக்கும். ஆனால் அந்த இடத்தில் ராஜேஸ்வரிக்காகவும், அனிருத்துக்காகவும், 'பட் நான் கேட்டா' என்று மூன்று வார்த்தையில் தன்மையாக கூறினான்.
"சஜஷன் சொல்ல கூட எனக்கு தகுதி இல்லைன்னு சொல்ற"
"சஜஷன் இப்போதைக்கு தேவை படலைன்னு சொல்றேன்" என்று சொல்லும் பொழுதே அவனது அலைபேசி தன் இருப்பிடத்தை தெரியப்படுத்த,
"அவிரன் ஃபோன் அடிக்குது" என்றார் ராஜேஸ்வரி.
"ஆஃபிஸ்ல இருந்து மாறன் அங்கிள்" என்றான் அவிரன்.
"தென் அட்டென்ட் இட்"
"நான் பிஸ்னஸை பார்த்துக்கணுமா வேணாமா" தன் பார்வையை பவித்ரா மீதிருந்து விலக்காமல் ராஜேஸ்வரியிடம் கேட்டான்.
"இது என்ன கேள்விப்பா நீ தான் பார்த்துக்கணும்" பதில் பேசாமல் அப்படியே நின்றான் அவிரன்.
ஆனால் ராஜேஸ்வரியோ அவனது பதிலை அவன் சொல்லாமலே புரிந்து கொண்டவர்,
"யாருடைய குறுக்கீடும் இருக்காது" என்றபடி பவித்ராவை பார்க்க,
"கம்பெனிக்கு நல்லதுன்னா, எனக்கு உன் முடிவுல எந்த ப்ராப்லமும் இல்லை" என்றார் பல்லைக்கடித்தபடி.
"தென் ஓகே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறமா பாக்கலாம் பாட்டி" என்றவன் அலைபேசியுடன் அங்கிருந்து செல்ல,
"ஹவ் டேர் ஹீ இஸ்?? அவனுக்கு எவ்வளவு தயிரியம்??" பவித்ராவின் விழிகள் சிவந்தன.
"அவனை பத்தி தான் தெரியும்ல"
"எல்லாம் நீங்க குடுக்குற இடம், அப்படியே அவன் அம்மா புத்தி திமிரு புடிச்சவன்"
"ஷட் அப் பவி, சீதா பத்தி பேசுற அதிகாரம் இங்க யாருக்கும் கிடையாது"
"அதான்ன மருமகளை சொன்னா உங்களுக்கு பொருக்காதே, மெரட்டிட்டு போறான், நான் வாய மூடணுமா,அவன் இல்லைன்னா கம்பெனிய நடத்த முடியாதா என்ன ?? குடிகாரன்" அனைத்தையும் கத்தி சொன்னவர், குடிகாரன் என்னும் சொல்லை மட்டும் தன் வாய்க்குள் முணுமுணுத்தார்.
"அப்போ அவன் கேட்கும் பொழுது, நீயே பார்த்துக்குவன்னு சொல்லிருக்கலாமே"
"குத்தி காட்டுறீங்களா" தன் மாமியாரின் முகத்தை ஏறிட்டு தீவிரமாய் முறைத்தாள்.
"உண்மைய சொல்றேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கம்பெனிய நீ பார்த்துக்கிட்டாலும் சரி, அனிருத் பார்த்துக்கிட்டாலும் சரி, அவிரன் பார்த்துக்கிட்டாலும் சரி, இது என் புருஷன் ஆரம்பிச்ச கம்பெனி எப்போதும் நம்பர் ஒண்ணா இருக்கணும் அவ்வளவு தான்"
" ----------------------- " பவித்ராவால் பேச முடியவில்லை.
"பவி அவிரன் இல்லைன்னா சாரி சாரி உன் பாஷையில என் குடிகார பேரன் மட்டும் இல்லைனா இந்த கம்பெனி என்னைக்கோ அடையாளம் தெரியாம போயிருக்கும். அதை நான் உனக்கு சொல்லணும்ன்னு அவசியம் இல்லை."
"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். அவனை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுறீங்கல்ல எத்தனை நாளைக்குனு நானும் பார்க்கிறேன்."
"ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க நீ அவனை ரொம்ப தப்பா புரிஞ்சு வச்சிருக்க பவி"
" 'இது என் கம்பெனி'ன்னு அழுத்தி சொன்னானே அதுக்கு என்ன அர்த்தம்? எனக்கும் என் பையனுக்கும் உரிமை இல்லைன்னு தானே அர்த்தம்"
"கம்பெனியில எடுக்குற முடிவுகள்ல தான் சம்பந்தம் இல்லைன்னு சொல்றான். கம்பெனியில சம்பந்தம் இல்லைன்னு அவன் ஒருநாளும் சொல்லல. என்னதான் பிஸ்னஸ பார்த்துக்கிட்டாலும் அவிரன் சின்ன பையன், அனிருத்தை விட ஒரு வயசு தான் பெரியவன், அவன் கிட்ட போய் சண்டை போட்டுட்டு இருக்க"
"அதை தான் நானும் சொல்றேன், சின்ன பையன் என்னை அசிங்க படுத்திட்டு போறான், அவனை கேள்வி கேட்க்காம என்னை சமாதானம் பண்ணிட்டு இருக்கீங்க"
"ஏன் அப்படி சொல்ற, ஒருசில கசப்பான விஷயத்தால உன் மேல அவன் கோபத்துல இருந்தாலும், என்னைக்கும் அவன் உன்னை தப்பா பேசினது கிடையாது. அனிருத்த தன் சொந்த தம்பி மாதிரி பார்த்துக்கிறான். அவனை அப்டி பேசாத. பிஸ்னஸ்ல முழு சுகந்திரத்தையும் எதிர்பார்க்குறான், அதுல தப்பு இருக்கிற மாதிரி எனக்கு தெரியல"
"தெரியாதே உங்களுக்கு தான் அவிரன்னு வந்துட்டா எதுவுமே தெரியாதே. அவனை விட்டு கொடுக்காம பேசுறீங்க, பேசுங்க எத்தனை நாளைக்கு அவிரனுடைய திமிரெல்லாம் செல்லுபடியாகுதுன்னு நானும் பார்க்குறேன். அவன் திமிர அடக்க என் பையன் வருவான். அவன் பதில் சொல்லுவான். அப்போ என்ன பண்றீங்கன்னு நான் பார்க்குறேன்" என்று ஆணவத்தோடு பவித்ரா கூறிய மறுநொடி,
"என்ன பதில் சொல்லணும்? யார் சொல்லணும்? யாருக்கு சொல்லணும்" என்றபடி உள்ளே நுழைந்த அனிருத்,
"ஹாய் மா", "ஹாய் டார்லிங்" என்று தன் பாட்டியின் கன்னத்தில் இதழ் பதித்து இறுக்கமாக அணைத்துக்கொண்டவன், தன் தாயை பார்த்து,
"என்ன மா பாட்டிகிட்ட கோபமா ஏதோ பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு" என்று கேட்க, அதிர்ச்சியுற்ற பவித்ரா பதில் பேசமுடியாமல் நின்றார்.
சுதாரித்து கொண்ட ராஜேஸ்வரி, "மாமியார் மருமகளுக்கு இடையில ஆயிரம் இருக்கும், அது எதுக்கு டா உனக்கு" என்றார்.
"அடேங்கப்பா, என்னால முடியலடா சாமி, நீங்க ரெண்டுபேரும் இருக்கீங்களே, ஆளவிடுங்க நான் வரலப்பா" என்றவன் சிரித்தபடி அங்கிருந்து செல்ல,
முறைத்தபடி நின்றுகொண்டிருந்த பவித்ராவின் அருகே வந்த ராஜேஸ்வரி,
"ஒரு நல்ல அண்ணன் தம்பிக்கு இடையில உன்னுடைய பாலிட்டிக்ஸ கொண்டுவராத பவி, குடும்பம் உடைஞ்சிடும்"
"உங்க அவிரன் தோத்து போயிருவான்னு பயப்படுறீங்களா"
"நீ தோத்து போயிட கூடாதுன்னு பரிதாபப்படுறேன்" என்ற ராஜேஸ்வரி ஒரு வித வருத்தத்துடன் அங்கிருந்து செல்ல, பவித்ராவின் கோபம் மட்டும் தணிந்தபாடில்லை.
@@@@@@@@
மறுநாள் காலை தாராவின் இல்லத்தில் அவளது பாட்டி விசாலாட்சி,
"ஏய் நீ ஏன் அரசி பருப்பெல்லாம் கொண்டு போய் அங்கையே சமைச்சு சாப்பிட கூடாது" விவரம் புரியாமல் கேட்டார்.
"அதெல்லாம் வேண்டாம் பாட்டி அவங்களே தருவாங்க"
"என்னது அவங்க தருவாங்களா, அவங்க எல்லாம் என்ன கோத்ரமோ சமையல் எல்லாம் ஆச்சாரமா செய்வாங்களோ என்னவோ" என்று முகத்தை சுளித்த தன் தாயிடம் ராஜா,
"என்னமா நீங்க அது ரொம்ப பெரிய காலேஜ் அங்க எல்லாமே ஹைஜினிக்கா தான் இருக்கும்" என்றார்.
"என்னத்த ஹைஜீனிக்கோ, என்ன மோ போ பா, நீ இந்த காலத்து ஆளு, நாலு எழுத்து படிச்சிருக்க, நான் அந்த காலத்து மனுஷி என்னால சட்டுன்னு மாறமுடியாது, என்னதான் மிருகங்கன்னு மொத்தமா சொன்னாலும் பூனை தனி புலி தனி தானே" என்றவர் மேலும் தொடர்ந்து தாராவுக்கு பக்கம் பக்கமாக அறிவுரை கூறி இருமனதுடன் வழியனுப்பி வைக்க, தன் தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா, வைஷு என்று தன் மொத்த குடும்பத்தினரிடமும் விடைபெற்றுக்கொண்டவள் தன் தாய் தந்தையரோடு, ஏர்போர்டை நோக்கி விரைந்தாள்.
சென்னை ஏர்போர்ட்டை அடைந்த பிறகு டாக்சியில், ஜானகி கல்லூரியின் பெயரை சொல்ல வருவதற்குள் ராஜா,
"வேளச்சேரி போங்க" என்றார்.
ஜானகியும், தாராவும், குழப்பத்தில் பார்க்க ராஜா,
"என்ன ரெண்டு பேரும் அப்படி பார்க்குறீங்க"
"காலேஜ் போகாம எங்க போறீங்க நீங்க" என்ற தன் மனைவியிடம்,
"ஹான் உன் சொந்தக்காரங்களை பார்க்க போறோம்" என்றார் விளையாட்டாக.
"என் சொந்தக்காரங்களா, இங்கையா" என்று ஜானகி கேள்வியாய் பார்க்க,
"அப்பா அதுக்கு நாம வண்டலூர்ல போகணும்" என்று தாரா விஷமமாய் புன்னகைக்க, ராஜாவும் உடன் சேர்ந்து சிரித்தார்.
அவர்கள் சிரிப்பதற்கான காரணத்தை புரிந்து கொண்ட ஜானகியோ, "அப்பாக்கும் பொண்ணுக்கும் என் சொந்தக்காரங்கன்னா இளக்காரமா இருக்குமே " என்று செல்லமாய் முறைத்த ஜானகி தன் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொள்ள,
"ஜானுமா உன் சித்தப்பா ஒருத்தர் வண்டலூர்ல கண்டிகை பக்கத்துல இருக்கிறதா சொன்னியே" என்று ராஜா இழுக்க,
"அதெல்லாம் ஒன்னும் இல்ல" ஜானகி முறைத்துப் பார்த்தபடி கூறினார்.
"சொன்ன மாதிரி இருந்துச்சு"
"இருக்கும் இருக்கும், ஏன் இருக்காது" என்று மீண்டும் ஜானகி முறைக்க,
"நோ வையலன்ஸ் மா" என்று ராஜா பாவம் போல் பார்க்கவும், தாராவும் சிரிக்க, ஜானகியும் அவர்களுடன் இணைந்து சந்தோஷமாக சிரித்தார்.
@@@@
சிலமணிநேர பயணத்திற்கு பிறகு வேளச்சேரியில் உள்ள ப்ரபலமான மாலிற்கு மூவரும் வந்தடைய, டாக்சியை காத்திருக்கும்படி கூறிய ராஜா தன் மனைவி மகளுடன், மாலிற்குள் நுழைந்தார்.
"பழைய மால விட இது நல்ல பெருசா இருக்கு இல்லங்க" என்ற மனைவியிடம்,
"ஆமா கொஞ்ச வருஷத்துலயே நிறைய சேஞ்சஸ் வந்துருச்சு" என்றார் ராஜா.
"சரி தாரா உனக்கு ஹாஸ்டலுக்கு என்னலாம் தேவையோ அதெல்லாத்தையும் வாங்கிக்கோ, நானும் அம்மாவும் ஒரு காஃபி சாப்டுட்டு வரோம்" என்று சொல்லவும், சரி என்பதாய் தலையசைத்தவள் தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்குள்ள கடைகளுக்குள் நுழைந்தாள்.
அப்பொழுது அதே கடையில் உள்ள ஆண்கள் பிரிவில் அவிரனும் அனிருதும் தங்களுக்கு தேவையான ஆடைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஜானகி ,
"என்னங்க ஏன் இப்போ கீழ கூட்டிட்டு வர்றீங்க, அவளுக்கு என்ன தெரியும் நாம தான் செலக்ட் பண்ணனும்"
"எத்தனை நாளைக்கு நீயே பண்ணி கொடுப்ப, அவளுக்கு வேண்டியத அவளே பண்ணிக்குவா விட"
"அதில்லங்க"
"ஜானு அவ ஒண்ணும் குழந்தை இல்லை அவளுக்கு வேண்டியத அவளே வங்கிக்குவா, எல்லா விஷயத்துலேயும் இறுக்கி பிடிச்சா, பிள்ளைங்க ஒருகட்டத்துல திமிர ஆரம்பிச்சிடுவாங்க ஜானு. சின்ன சின்ன விஷயத்துல அவங்க விருப்பம் போல விட்டாதான், முக்கியமான முடிவு நாம எடுக்கும்போது நம்ம பேச்சை கேப்பாங்க. நம்ம காலத்துலதான் இதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லாம போச்சு. நம்ம புள்ள அனுபவிச்சிட்டு போகட்டுமே, அவ யூஸ் பண்ண போற பொருள் அது அவ விருப்பப்படி இருக்கட்டுமே.
நாம இருந்தா அவளுக்கு புடிச்சத எடுக்க மாட்டா, அதான் உன்னை கூப்ட்டுட்டு இங்க வந்தேன். அவ எடுக்கட்டும், நாமே கொஞ்ச நேரம் காஃபி சாப்பிடலாம், நாம இதுபோல தனியா காஃபி சாப்பிட்டு பல நாள் ஆச்சு" என்றவர் தன் மனைவியுடன் அங்கிருந்த காஃபி ஷாப்புக்குள் நுழைந்தார்.
அதேநேரம் ட்ரையல் ரூமில் இருந்து வெளியே வந்த அவிரன் தனது தம்பியிடம்,
"பேண்ட் ஷர்ட் ரெண்டுமே நல்லா ஃபிட்டா இருக்கு டா" என்றான்.
"இந்த டிரெஸ்ஸ கலட்டுடா, வேற ஏதாவது போடுடா" என்று அனிருத் கிட்டத்தட்ட கண்ணை கசக்க,
"ஏன் டா இது நல்லாதானே இருக்கு" என்று அவிரன் குழப்பதுடன் வினவினான்.
"சும்மாவே காலேஜ்ல பாதி பொண்ணுங்க அவிரன் அவிரன்னு உன் பேரை தான் சொல்றாங்க, இதுல நீ வேற உன் சிக்ஸ் பேக் தெரியற மாதிரி இப்படி டைட்டான ஷர்ட்லாம் போட்டா அவ்வளவு தான், அப்புறம் மொத்த பொண்ணுங்களும் உன் பின்னாடி தான் சுத்துவாங்க, என்னையும் கொஞ்சம் பாருடா காஞ்சி போய் இருக்கேன்"
அதைக் கேட்ட அவிரன் அனிருத்தை பார்த்து சிரிக்க,
"என்ன இளிப்பு" என்றான் அனிருத்.
"டேய் எதோ உன் பின்னாடி பொண்ணுங்களே சுத்தாத மாதிரி பேசுற"
"இருக்காங்க, ஆனா உன் பின்னாடி வெறித்தனமா சுத்துற போல என் பின்னாடி யாரும் சுத்தலையே" என்று அனிருத் கண்ணடிக்க,
"டேய் நீ யாரை சொல்றன்னு புரியுது, ஆனா என் மனசுல அப்படி எந்த எண்ணமும் இல்ல, அவ என் க்ளாஸ் மேட், அவளோட அப்பா நம்ம கம்பனியோட க்ளயின்ட் அவ்வளவு தான்"
"சரி ஆனா அவ மனசுல நீ இல்லன்னு சொல்ல முடியாதுல"
"அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது டா"
"அதையும் பார்ப்போம்" என்று அனிருத் விஷமமாய் புன்னகைக்க,
"இதுல பார்க்க என்ன இருக்கு, அவ கூடன்னு இல்லை யார் கூடயும் எனக்கு ஒண்ணும் இல்லை" என்று அவிரன் முறைக்க, ஆனால் அனிருத்தோ,
"இப்படி வசனம் பேசிட்டு கடைசில லவ்ல விழுந்த பல பேரை நான் பாத்துட்டேன், போ போ" என்க அவன் முதுகில் ஒரு அடி போட்ட அவிரனோ,
"உன் கூட வந்தேன் பாத்தியா என்னை சொல்லணும்" என்றவன், மீண்டும் ட்ரையல் ரூம் சென்று தனது ஆடையை மாற்றிவிட்டு வர, இருவரும் பில் கவுண்டருக்கு சென்றனர்
அதே நேரம் தான் தேர்வு செய்த ஆடையை அணிந்து பார்ப்பதற்காக ட்ரையல் ரூமிற்குள் நுழைந்தாள் தாரா.
தான் தேர்வு செய்த ஆடை அனைத்தும் சரியாக இருக்கவும் ஆடைகளுடன் அறையில் இருந்து தாரா வெளியே வரவும், அலைபேசி ஒன்று சத்தமிடவும் தாரா சுற்றும் முற்றும் தேட இறுதியில் அறையின் ஓரமாக கிடந்த ஒரு அலைபேசி விடாமல் ரிங்காவதை கவனித்தவள் பல யோசனைக்கு பிறகு அதை தன் கையில் எடுத்தாள்.
"காஸ்ட்லியான ஃபோன் மாதிரி இருக்கு இப்படி விட்டுட்டு போயிருக்காங்க, ஃபோன் வேற அடிச்சிட்டே இருக்கே என்ன பண்றது. ஆன் பண்ணுவோமா வேணாமா. வேண்டாம் வேண்டாம் யாருதுன்னு பார்த்து குடுத்திருவோம்." என்று ஒருமானதாய் அறையில் இருந்து அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
பில் போட்டு முடித்துவிட்டு கொஞ்ச தூரம் சென்ற பிறகு,
"நில்லு டா அனி" என்றான் அவிரன்.
"என்னாச்சு" என்று அனிருத் கேட்க்க
"என் ஃபோன ட்ரயல் ரூம்ல விட்டுட்டு வந்துட்டேன், யாரும் எடுத்திருக்க கூடாது"
"என்கிட்ட கொடுத்துட்டு போய் இருக்கலாம்ல சரி வா, கொஞ்ச நேரம் தானே ஆகுது யாரும் எடுத்திருக்க மாட்டாங்க" என்றான் அனிருத்.
"அதுல நிறையா பைல்ஸ் இருக்கு அனி" என்ற அவிரன் விரைவாய் கடைக்குள் நுழைய, அந்த நேரம் வாங்கிய பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தவாறே தாரா வெளியேற, வேகமாக உள்ளே நுழைந்த அவிரன் தவறுதலாய் தாராவை இடித்துவிட்டு கடைக்குள் நுழைந்தான்.
பாறையோடு மோதினால் அனிச்சம் மலரின் நிலை என்னாகும் நசுங்க வில்லை,அவ்வளவு தான் அவன் இடித்த வேகத்தில் தன் பொருட்களுடன் கீழே விழுந்தாள் தாரா.
Last edited: