வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மதுரமே ஈஷணமே 5

GG writers

Moderator
அறிவுப்பு

முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பில் ஏற்கனவே வேறு ஒரு எழுத்தாளரின் கதை இருப்பதால்.

முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பு
"மதுரமே ஈஷணமே" என்று விரைவில் மாற்றபடும்.


Sorry for the in convenience
தாரா "அம்மா" என்றபடி கீழே விழவும், தன் செவியில் கேட்ட குரலில் வேகமாய் நடந்தவனின் கால்கள் நிலத்தில் வேருன்றி விட, அவனுக்குள் சொல்ல முடியாத ஏதோ ஓர் உணர்வு அவனது இதயத்தை வெகுவாய் அழுத்தவும், நீண்ட பெருமூச்சை வெளியிட்ட அவிரன், கீழே விழுந்து கிடப்பது தாரா என்று அறியாது அவள் பக்கம் திரும்பியவன் அவளுக்கு உதவி செய்வதற்காக நெருங்குவதற்குள் அக்கம் பக்கத்தினர் அவளை சூழ்ந்து கொண்டனர்.

'ச்ச இப்ச் மெதுவா வந்திருக்கலாமோ' என்று தன் நெற்றியை நீவியவன், பின்பு அடுத்த நொடியே,
'அவளுக்கு கண்ணில்லையா என்ன ?? ஒழுங்கா பார்த்து வரவேண்டியது தானே' என்று எண்ணியபடி மீண்டும் அதே வேகத்துடன் ட்ரயல் ரூமிற்குள் நுழைந்தான்.

அப்பொழுது, "ஹாய் அனிருத்" என்றபடி இன்முகத்தோடு அங்கே வந்தனாவுடன் வந்த அஞ்சலி,

"ஹாய் அனி சாரிடா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்று கூறி புன்னகைக்க, அவர்களை அங்கே வர சொன்னதையே மறந்திருந்த அனிருத்தோ பெண்களை பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்தான்.

அப்பொழுது, "டேய் அனிருத் எங்கள வர சொல்லிட்டு நீ ஏன் இப்போ திருட்டு முழி முழிச்சிட்டு இருக்க?என்னாச்சு? எங்க நம்ம ஹண்ட்ஸம்? ஆள காணும் அவிரன் வந்திருக்கான்ல" ஆர்வத்துடன் வினவினாள் வந்தனா.

"வந்திருக்கான் ஃபோன் எடுக்க ட்ரையல் ரூம் போயிருக்கான்"
"ஒ சரி என்ன பிளான் ஷாபிங் பண்ண போறோமா இல்லை மூவி ஏதும் பிளான் இருக்கா" என்று வினவிய வந்தனாவிடம்,

"அவ்வளவு கற்பனை எல்லாம் வளர்த்துக்காதடி, அவிரன் மட்டும் நம்மள பார்த்தான், அடுத்த நிமிஷம் வேலை இருக்குன்னு ஓடிருவான், அதுலயும் உன்னை பார்த்தான் அவ்வளவு தான், அதனால மூவி அளவு எல்லாம் யோசிக்காத, வேணும்னா இங்கேயே கொஞ்ச நேரம் ஷாப்பிங் பண்ணிட்டு ஏதாவது சாப்பிட்டு அப்படியே கிளம்பலாம், இதுக்கே அவிரன் ஒத்துக்குவானானு தெரியல" என்று சிரித்தபடி கூறினாள் அஞ்சலி.

"அதெல்லாம் ஒத்துக்குவான் இல்லனாலும் நீயும் அனிருத்தும் இருக்கீங்கள்ல அவனை ஒத்துக்க வைங்க. எனக்கு அவிரனை கரெக்ட் பண்ணித்தர போற மிஷன்ல நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு ஹெல்ப் பண்ண போறீங்க. அதானல அஞ்சலி நீதான் நீதான் அவனை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி என் கூட மூவி அனுப்பி வைக்கணும். அப்புறம் அனிருத் டைம் கிடைக்கும்போதெல்லாம் என்ன பத்தி நல்ல விதமா அவன் கிட்ட சொல்லிட்டே இரு சரியா" என்ற வந்தனாவிடம்,

"என் அண்ணனை கமிட்டட் ஆக்குறது தானே என்னோட முழு நேர வேலையும், கவலையே படாத, மிஷனை சீக்கிரம் சக்ஸஸ் பண்ணிடலாம்" என்ற அனிருத்தோ,
'அப்பவே வர சொன்னா கிளம்புற நேரத்துல வந்துட்டு, இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இவளை நாம தான் வர சொன்னோம்ன்னு தெரிஞ்சா இவன் வேற நம்மளை தாளிச்சிருவானே' என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டவன் வெளியே சிரித்த முகமாகவே நின்றிருந்தான்.


அப்பொழுது ட்ரையல் ரூமில் தான் வைத்துவிட்டு சென்றிருந்த இடத்தில் அலைபேசி இல்லாமல் போகவும், ஆத்திரமடைந்த அவிரன் கடுகடுத்த படி வெளியே வந்து,
"இங்க மேனஜர் யாரு??" என்று அங்கு பணிபுரியும் சிப்பந்தியிடம் கோபமாக கேட்டான்.

அவிரனின் குரலை கேட்டு அவன் அருகே மூவரும் வந்துவிட,

"அவி பொறுமை டா" என்று சமாதானம் செய்தான் அனிருத்.

"ஃபோனை காணும் டா, எப்படி பொறுமையா இருக்கிறது?" என்றான் அவிரன்.

அப்பொழுது, "என்னாச்சு அவிரன் ஏன் கோபமா இருக்க" என்ற வந்தனாவை அப்பொழுது தான் கவனித்த அவிரனின் கோபம் மேலும் அதிகப்படுவதை அறிந்து கொண்ட அஞ்சலி, அவிரனை அமைதி படுத்தி கண்டிருக்க, அனிருத்தோ ஃபோனை பற்றி வந்தனாவிடம் கூறினான்.

அதை கேட்ட வந்தனாவோ, "அவிரன் ரிலாக்ஸ் இங்க தான் இருக்கும் கிடைச்சிரும்" என்று சமாதானம் செய்ய, "ம்ம்" என்று மரியாதை நிமித்தமாக லேசாக தலையசைத்த அவிரனோ கோபத்தில் பல்லை கடித்தபடி நின்றிருக்க,
அப்பொழுது, "யஸ் சார், ஹவ் கேன் ஐ ஹெல்ப் யு" என்றபடி அவ்விடம் வந்து நின்றார் மேனஜர்.

மேனஜரை கண்டதுமே, "என்ன செக்யூரிட்டி வச்சிருகீங்க உங்க கடையில வெளிய போயிட்டு வர்ற அஞ்சு நிமிஷ கேப்ல ட்ரயல் ரூம்ல இருந்த என் மொபைல காணும்.
இங்க பாருங்க அதே அஞ்சு நிமிஷத்தை நான் உங்களுக்கு தரேன் எனக்கு என் ஃபோன் வேணும் இல்லை" என்று அவிரன் எகிறினான்.

அவிரனின் குரல் ஓங்கி ஒலிக்கவும், "சார் ப்ளீஸ், சாரி ஃபார் தீ இன்கன்வீனியன்ஸ், இஃப் யு டோன்'ட் மைண்ட் உங்க ஃபோன் மாடல் சொல்ல முடியுமா" நிதானத்துடன் பணிவாக வினவினார் மேனஜர்.

"ஐ ஃபோன்.." அலைபேசியின் மாடலை அழுத்தமாய் கூறினான் அவிரன்.

"ஒரு நிமிஷம்" என்ற மேனஜரோ கடையில் பணிபுரியும் பெண்ணை அழைத்து விசாரிக்க அந்த பெண்,

"இந்த சாருக்கு அப்புறம் ட்ரையல் ரூம்க்கு ஒரு பொண்ணு தான் போனாங்க, அதோ அந்த பொண்ணு தான் சார்" என்றவள் கடையின் வாசலில் நின்றிருந்த தாராவை கைகாட்டி அவிரனை பார்த்து,

"நீங்க வர்ற வழியில ஒரு பொண்ணு மேல தவறுதலா இடிச்சிடீங்கள்ல, அந்த பொண்ணு கூட கீழே விழுந்துட்டாங்களே, அந்த பொண்ணு தான், உங்களுக்கு அப்புறம் ட்ரையல் ரூம் யூஸ் பண்ணினாங்க" என்று கூறினார். உடனே அவிரன் அவர் சொன்ன திசையில் பார்த்தான். ஆனால் தாரா திரும்பி இருந்ததால் அவிரனால் அவளது முகத்தை பார்க்க முடியாமல் போக,

அதேநேரம், "சீக்கிரம் அந்த பொண்ணை கூட்டிட்டு வாங்க" என்று மேனஜர் கட்டளையிட, தாரா அங்கே அழைத்து வரப்பட்டாள்.

கீழே விழுந்ததில் நெற்றியில் ஏற்பட்ட காயத்தை தொட்டு பார்த்தபடி வந்தவள், "என்னாச்சு" என்று மேனஜரிடம் வினவ, அங்கே வந்து நின்றிருந்த தாராவையே வெறித்து பார்த்து கொண்டிருந்த அவிரனின் விழிகளில் கனல் தெறித்தது.

அவனால் நிலைக்கொள்ளவே முடியவில்லை.

"மேடம் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, ஒரு கஸ்டமரோட மொபைல் உங்க பேக்ல இருக்குதுதான்னு செக் பண்ணனும், எங்களுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு குடுங்க" என்றார் மேனஜர்.

மேனஜர் என்னவோ தன்மையாகத்தான் கூறினார். ஆனால் அதைக் கேட்ட தாராவுக்கு தான் ஒரு மாதிரியாகிவிட,

"என்ன சொல்றீங்க, என்னுடைய பேக்லையா! அதுக்கு சான்ஸே இல்லைங்க, நீங்க என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல, எல்லாத்துக்கும் மேல நான் அதை ஏற்கனவே.." என்று தன் தரப்பில் உள்ள முழு விவரத்தையும் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே,

"அந்த மாதிரி இல்லனா வேற எந்த மாதிரி" என்று தனக்கு மிக அருகே கேட்ட அழுத்தமான குரலில், இதயம் வேகமாக துடிக்க துவங்க, குரல் வந்த திசை நோக்கி திரும்பிய பெண்ணவளுக்கோ, தன் முன்னே மார்புக்கு குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு தன்னை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருக்கும் தன்னவனை பார்த்ததும் இதயம் வெளியே வந்துவிடும் அளவிற்கு இன்னும் வேகமாக துடிக்கத்துவங்க, அவளது இரு விழிகளும் நிறைந்துவிட்டது.

"அந்த மாதிரி இல்லனா வேற எந்த மாதிரி" அவள் மீது இருந்த தன் பார்வையை அகற்றாதது இன்னும் அழுத்தமாய் வினவினான் அவிரன்.

'அந்த மாதிரி இல்லனா வேற எந்த மாதிரி' எத்தனை கடுமையான சொற்கள், அதுவும் அத்தனை ஏளனமாக அவன் கேட்கும் பொழுது இன்னுமே வலித்தது.

வார்த்தைகள் தொண்டையில் சூழ் கொள்ள தாராவால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் அவன் விழிகளை கூட நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை, ஆனால் அவிரன் அவளைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அப்பொழுது, "ஏய் காஸ்ட்லீ மொபைல திருடிட்டு, என்ன விளக்கம் குடுத்துட்டு இருக்க, பேகை குடு" என்று தாராவை அதட்டியபடி வலுக்கட்டாயமாக தாராவின் கரத்தில் இருந்த பேகை பறித்த வந்தனா, தாரா கூறவரும் எதையும் காதில் வாங்காமல்,
"வேண்டாம்" என்று தடுத்த அனிருத்தின் பேச்சையும் தன் காதில் வாங்காது, சோதனையை நடத்தினாள்.

வந்தனா செய்த ஆர்ப்பாட்டத்தில் கடையில் உள்ள ஜனங்கள் எல்லாம் அவர்களை சுற்றி கூட்டம் கூட, தாராவுக்கு மிகவும் அவமானமாக, அதிலும் அவிரன் நடக்கும் எதையும் தடுக்காமல் கரங்களை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த விதம் இன்னும் வேதனையாக இருந்தது.

நீ அவனுக்கு செய்த துரோகத்துக்கு அவன் உனக்காக பேசுவான் என்று எப்படி நினைத்தாய்?
மனசாட்சி கேள்வி கேட்டாலும், எல்லாம் புரிந்தாலும், ஒரு காலத்தில் தன்னை குழந்தையாய் தாங்கிய தன்னவனின் ஆதரவுக்காகவும் கனிவுக்காகவும் பெண்ணின மனம் இப்பொழுதும் ஏங்கியது.

கலங்கிய கண்களுடன் வந்தனாவை தடுத்த தாரா,

"நான் என்ன சொல்லவரேன்னு கொஞ்சம் பொறுமையா கேளுங்க, நீங்க எவ்வளவு தேடுனாலும் உங்களுக்கு கிடைக்காது" என்றதும் கோபம் கொண்ட வந்தனா,

"பார்க்குறது திருட்டு வேலை, நீ சொல்றதை நான் கேட்க்கணுமா, மொபைல எங்கடி" என்ற வந்தனா, தாராவின் கன்னத்தில் அறைய தன் கைகளை ஒங்க, அப்பொழுது அவிரன்,
"ஸ்டாப் இட் வந்தனா" என்றான்.

அவிரன் தடுக்கவும், "ஆனா அவி இவள" என்று ஆரம்பித்த வந்தனாவோ அவிரனின் தீ பார்வையில் அமைதியாகிவிட,
தாராவை முறைத்து பார்த்தபடி அவளை நெருங்கி வந்தான் அவிரன்.

கொஞ்ச வருடத்திற்குள் தான் எத்தனை மாற்றம் அவனிடம், இதற்கு முன்பு இருந்த அவிரினுக்கும் இப்பொழுது அவள் பார்க்கும் அவிரனுக்கும் தான் எத்தனை வித்தியாசம், அதிலும் சிவந்த விழிகளுடன் தன்னை வெறித்து பார்த்தபடி நெருங்கி வந்தவனை கண்டு நிஜமாகவே வெடவெடத்து போன தாரா தன் கரங்கள் நடுங்க நின்றாள்.

"மொபைல் எங்க" நெருங்கி வந்து கோபத்தை மறைத்தபடி கேட்டான். தாரா எடுத்திருக்க மாட்டாள் என்று உறுதியாக தெரிந்தும், அவளை சங்கடப்படுத்த வேண்டும் என்றே அவ்வாறு கேட்க்க,
தாராவுக்கு தூக்கி வாரி போட்டது, என்ன கேட்டுக்கொண்டிருக்கிறான், அலைபேசியை திருடும் அளவுக்கு நான் மோசமானவளா, இவனும் தன்னை திருடி என்றா நினைக்கிறான்.


"நா.. ன் அதை ரிசெப்.." வார்த்தைகள் தடுமாற அவள் சொல்லி முடிப்பதற்குள், தன் பொறுமையை இழந்தவன்,

"ஸ்டாப் ஆக்டிங் லைக் இன்னோசென்ட், அப்பாவி மாதிரி நடிக்கிறத நிறுத்து" கோபத்தில் உச்சஸ்தாதியில் கத்தினான்.

தாராவுக்கு கைகளுடன் சேர்த்து உடலும் நடுங்கியது, ஒரு காலத்தில் எவ்வளவு மென்மையானவன் ஆனால் இன்று அவன் நடந்து கொள்ளும் விதத்தை நினைக்கும் பொழுதே பெண்ணவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் அனுமதி இன்று தாரை தாரையாய் இறங்க, அழுதபடி நின்றுகொண்டிருந்தாள் தாரா.

தேம்பி தேம்பி அவள் அழும் விதமும், தன் மருண்ட விழிகளை உருட்டியவாறு மிரட்சியுடன் தன்னை அவள் பார்க்கும் பார்வையையும் பார்க்க பார்க்க உறுதியான அவிரனின் மனம் தன்னையும் மீறி தளர்ந்து போவதை உணர்ந்தவனுக்கு, தன்னை நினைத்தே அதிர்ச்சியாக இருந்தது.

'வேண்டாம் அவி ஒரு தடவை ஏமாந்தது போதும் மறுபடியும் நம்பி ஏமாந்துறாத அவ உன்னை வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சிட்டு போனவ மறந்துறாத' என்று தனக்குள்ளே பலமுறை கூறிக் கொண்டவன், தன் மனதிற்குள் ஏற்பட்ட தடுமாற்றத்தை மிகவும் சிரமப்பட்டு ஒதுக்கிவைத்தான்.

பின்பு தாராவை இன்னும் நெருங்கி வந்து அவளது விழிகளை பார்த்தபடி,
"இதை தான் உன் அப்பா உனக்கு சொல்லி கொடுத்தாரா ஹான்" என்று நக்கலாக கேட்க, தாராவுக்கு அவிரன் தன் தந்தையை பற்றி கூறியதும் கோபம் வந்துவிட்டது.

உடனே, "என் அப்பா பத்தி பேச வேண்டாம்" என்று தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கையாய் கூறவும், பொறுமையை முழுதாய் இழந்த அவிரன்,

"ஷட் அப்" என்று கர்ஜிக்கவும், அவிரனின் சட்டையை ராஜா பற்றிக்கொள்ளவும் சரியாக இருந்தது.


 
Last edited:
Top