Writers of Brammastram
Moderator
மனம் -17
எவ்வளவு சீக்கிரம் வேலையை முடித்து விட்டு வர நினைத்தாலும் மேலும் இரண்டு நாள் பிடிக்க நான்கு நாள் கழித்து ஊரில் காலடி எடுத்து வைத்தான் விஷ்வா. அவனது முகம் ஒரு வித சோர்வு , ஆயாசம், ஏமாற்றம் , பிடிப்பின்மை அனைத்தையும் கலவையாக காட்ட வீட்டுக்கு செல்ல மனமில்லாமல் தன் பிரத்யேக தோட்டத்துக்கு சென்று அவனது வரவுக்காக காத்திருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்து விட்டான்.
பார்வியுடனான பஞ்சாயத்துக்கு பிறகு இப்போது தான் வருகிறான். கொஞ்ச நேரம் விழிகளை மூடிக் கிடந்தவனுக்கு உறக்கம் வரும் போலில்லை. மனம் முழுவதும் இந்த நான்கு நாட்களில் நடந்த எதிர்பாராத விசயங்களில் தேங்கி விட அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் அருகில் ஆள் வரும் அரவம் கேட்க நிமிர்ந்து பார்க்கவில்லை. சில நிமிடங்களுக்கு அவனிடம் பதில் வராததில் அந்த ஆளே பேச்சுக் கொடுத்தது.
"விசு மாமா.. எப்படி இருக்கீய.. நல்லா இருக்கிதீயளா.." என்று கேட்க படாரென்று விழிகளைத் திறந்து எழுந்து அமர்ந்தான். அங்கு அவனைப் பொய்க்காமல் வைசாலி தான் நின்றுக் கொண்டு இருந்தாள்.
'தன்னிடமா வந்து பேசுகிறாள்.. தான் அவளுக்கு இவ்வளவு பெரிய துரோகம் செய்தும் (அவனுக்கு தெரியும் எந்த தப்பும் செய்யவில்லை என்று ஆனால் மற்றவர் பார்வையில் அவன் தானே குற்றவாளி) கல்யாணம் கட்டிக் கொள்ள போவதாய் ஆசைக் காட்டி ஏமாற்றியவன் மீதா கருணைக் கொண்டு சுகச் செய்தி கேட்கிறாள்..?'
என்று அவன் நம்ப முடியாமல் பார்த்தான்.
அவனது பார்வையை உணர்ந்து அவனின் மனதை அறிந்தவள் ஒரு புன் முறுவலை சிந்தியவாரு ,
"என்ன மாமா அப்படி பாக்குதீய.. என்னடா நம்ம செஞ்ச காரியத்துக்கு நம்ம மூஞ்சிலேயே முழிக்க விரும்பாதவ வந்து நலம் விசாரிக்காளேன்னா..? ஹிம்.. தப்பு செஞ்சா தான மாமா அப்படி பண்ணனும்.. நீக தாம் எந்த தப்புஞ்செய்யலயே.. பொறவு என்னத்துக்கு நான் அதை செய்ய போறேன்.." என்றுக் கேட்க அவனுக்கு பெரும் அதிர்வு.
'தான் குற்றமற்றவன்' என்று 'இவளுக்கு எப்படி தெரியும்' என்று யோசிக்க "சித்ரா தாம் மாமா சொன்னா.." என்றவள் அவன் யோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
அதில் "ஓஓ..." என்றவன் "சித்ரா என் தங்கச்சி.. அவளுக்கு அவ கூடப் பொறந்தவன் மேல அம்புட்டு நம்பிக்கை இருக்கு.. உனக்கு அப்படி இல்லயேத்தா.. நீம் எப்படி நம்புனவ..?" என்று கேட்டான்.
"நானும் மொதல்ல நம்பல்ல மாமா.." என்று தலைக் குனிந்தவாறு சொன்னவள் பின் நிமிர்ந்து ,
"என் மாமா எப்படி இப்படி ஒரு பொண்ணுக்கு மோசம் பண்ணுச்சுன்னு எனக்கு மனசே ஆறலை.. அதான் அங்கன நிக்க முடியாம வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்.. அதுக்கு பொறவு என் அப்பாரு குடும்ப கவுரவம் அது இதுன்னு என்ன யோசிக்கவே விடாம இன்னொருத்தருக்கு என்ன கட்டி வச்சுட்டு..
இதனால எனக்கு அங்கையும் யோசிக்க முடியாம இங்கேயும் புது வாழ்க்கையை ஏத்துக்க முடியாம தவிச்சுட்டு இருக்கும் போது தான் சித்து வந்து எல்லாம் சொல்லிச்சு மாமா..
உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுனு தெரியலன்னாலும் நீங்க எந்த தப்பும் பண்ணலன்னு சொன்னா.. அதும் இல்லாம அந்த பார்விக்கு உங்க மேல விருப்பம் இருக்குன்னு எனக்கு முன்னமே தெரியும் நம்ம கண்ணாலத்தை நிறுத்தி உங்களைக் கட்டிக்கணும்ன்னு இப்படி அவ பண்ணிருப்பான்னு அப்புறம் தான் தோணிச்சு மாமா.. உங்களை பத்தி தெரிஞ்சும் அந்த நேரம் மடச்சி மாறி உங்களுக்கு ஆதரவா நிக்க வேண்டிய நேரத்துல நானும் எல்லாரு மாறி சந்தேகப் பட்டு போயிட்டேன்.. என்ன மன்னிச்சுருங்க மாமா.." என்று கைக் கூப்பியவளின் கைகளை பிடித்து இறக்கியவன் ,
"போதும்த்தா.. நீ என்ன புரிஞ்சிக்கிட்டதே போதும்.. சொல்ல போனா என்னால பாதிக்க பட்ட உன்
மொகத்துல எப்படி விழிக்கன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்.. இப்ப நீயே என் பக்க நியாயத்தை உணர்ந்து பேசுறப்ப எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு .. என் ஆத்தா கூட என்ன நம்பலத்தா.. அப்புறம் எங்கிட்டு வெளியாலு நம்புறது .. அதாம் எந்த வெளக்கமும் குடுக்க நான் முன் வரலை.." என்று தன் அன்னை தன்னை நம்பவில்லையே என்ற விரக்தியில் பேசிக் கொண்டு இருந்தவனை பார்க்க அவளுக்கும் பாவமாக தான் இருந்தது.
இதில் அவள் ஒன்றும் செய்ய இயலாது அல்லவா. அவரே தன் மகனின் நல்லொழுக்கத்தை உணர்ந்தால் மட்டுமே அது முடியும்.
கசப்பான சம்பவங்களை விரட்டும் பொருட்டு பேச்சை மாற்றியவன் ,
"அப்புறம் வைசு புள்ள.. உன்ன கட்டிகிட்ட அன்பன் எப்படி இருகாக.?. உன்ன சுகமா வச்சிருக்காகளா..?" என்று கேட்கவும் அதில் அவள் முகத்தில் வந்துப் போன வெட்கச் சிரிப்பே அவனுக்கான பதிலைக் கொடுத்து விட அவனுக்கு பரம திருப்தி..
எங்கு தன்னால் ஆன குழப்பத்தால் அவசர அவசரமாக நடந்த அவள் கல்யாணத்தில் எதேனும் பிரச்சினை வருமோ என்று நிதம் நினைத்துக் கவலைக் கொண்டவனின் மனம் அவளின் செய்கையில் அமைதியானது.
"ம்ம் மாமா.. அவரு ரொம்பவே நல்லவரு.. திடீர்னு நடந்த கல்யாணம் எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாம தவிச்சுட்டு இருந்த நேரம் அவரு வந்து 'நமக்கான காலம் இன்னும் இருக்கு .. அதனால் எதையும் ரோசிச்சு மனசைக் கொழப்பாம இருன்னு' சொன்னாரு.. 'அதுவரை நான் காத்துட்டு இருப்பேன்னு' சொன்னாரு மாமா.. இத விட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்..
அப்பவே அவரு மேல ஒரு நல்ல மதிப்பு மருவாதி வந்துட்டு.. இன்னும் எங்களுக்குள்ள எந்த சடங்கும் ஆகலை தாம்.. ஆனா இன்னும் கொஞ்ச நாளிலே எல்லாம் மாறும்ன்னு நம்பிக்கை இருக்கு மாமா.." என்று உறுதியாக சொன்னவளின் வாழ்வு சிறக்க விஷ்வா மனதார வாழ்த்தினான்.
பிறகு அவனது வாழ்க்கை பற்றி கேட்க கசந்த முறுவலயே தந்தவனை யோசைனையாக பார்த்தவள் "ஏன் மாமா அவுக உன்ன விரும்பி தானே அப்படி ஒரு காரியம் செஞ்சுக் கட்டிக்கிட்டாக பொறவு என்னதுக்கு இப்படி இருக்கீக.. ?" என்று கேட்க
'விருப்பப்பட்டா.. பழி வாங்க கட்டிருக்கா அதும் செய்யாத தப்புக்கு' என்று மனதில் நினைத்தவன் அவளிடம் ஒன்றும் கூறவில்லை.
அவன் தன்னிடம் சொல்ல விரும்பவில்லை என்று புரிந்து கொண்டவள் மேலும் அதை பற்றி பேசிக் கிளராமல் நேரம் ஆவதை உணர்ந்து தன் கணவர் அங்கு தனக்காக காத்திருப்பதாக சிரிப்புடன் கூறியவள் அவனிடம் விடைப் பெற்று சென்றாள்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா திரும்ப அங்கு இவ்வளவு நேரம் தூரத்தில் இவர்களின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வி அவள் போனதும் அவன் கிட்ட வந்து உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றாள்.
அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்காதவன் திடுக்கிட்டு பின் தோள்களை குலுக்கியவாரு அவளைக் கடந்து செல்ல அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
"என்ன நாலு நாள் ஊருல இல்லாம எங்கையோ போயி சுத்திட்டு இப்ப வந்தும் வீட்டுக்கு வராம இவளோட நின்னு இங்க என்னப் பண்ணிட்டு இருக்கீங்க.. அவக்கூட நல்லா சிரிச்சு பேசிட்டு என்ன கண்டா மட்டும் கசக்குதோ பார்த்தும் பாக்காம போறீங்க.. என்ன பாத்தா எப்படி தெரியுது.." என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.
அவன் ஊருக்கு வந்ததை பார்த்த அவளின் வேலையாள் ஒருவன் சொல்லியிருக்க நேராக வீட்டுக்குள் வராமல் தோட்டத்து வீட்டுக்கு செல்வதையும் சொல்லியிருக்க அங்கே வந்து நின்றவளுக்கு அவனும் வைசுவும் பேசி நின்றது எரிச்சலையே தந்தது.
இதில் அவளிடம் மட்டும் நல்லா பேசிவிட்டு அவளைக் கண்டதும் பேசாமல் சென்றவனைக் கண்டவளுக்கு தான் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா என்றே தோன்றி மனதை கலங்க செய்தது.
தான் மட்டுமே அன்று முதல் இன்று வரை அவனுக்காக துடித்துக் கொண்டிருப்பதும் அவனிடம் இருந்து ஒரு சதவீதம் கூட எந்த எதிர்வினையும் இல்லாமல் போவதும் பார்க்க பார்க்க அவளின் காதல் கொண்ட மனம் தாளவில்லை.
இதில் அவள் ஒன்றை அறியவில்லை. அவளது காதலை அவனிடம் ஒழுங்காக சொல்லியிருந்தால் அதை அவன் புரிந்துக் கொண்டிருப்பது உறுதி. அன்று அவனிடம் காதல் வசனம் பேசியது உண்மையாக அவனுக்கு தோன்றவில்லை. அதுனாலயே அவளது சொல்லுக்கு அவன் மதிப்பளிக்கவில்லை. மேலும் வைசுக்கு தன்னை பரிசம் போட்டதும் ஒரு காரணமாக இருப்பின் அவன் அவளது காதலை ஏற்க வில்லை.
திருமணத்திற்கு பிறகும் தன் காதலையும் பூஜா பற்றி தான் தெரிந்தவற்றை சொல்லி விட்டிருந்தாலும் அவளின் மனதை அவன் மதிப்புக் கொடுத்து தன் பக்க நிலையையும் விளக்கிருப்பான்.
ஆனால் இவளோ 'பழிவாங்கல்' என்ற வார்த்தைக்குள் அத்தனையையும் அடக்கி வைத்ததால் அவனால் அவளின் காதலை அறிய முடியாமல் போனது.
இப்போதும் அவளின் மனதை மட்டுமே முன்னிறுத்தி அவள் பேச அவளை உறுத்து விழித்தவன் "எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. அவ என் அத்த மவ சிரிச்சு பேசதாம் செய்வேன்.. நமக்குள்ள அப்படி என்ன உறவு இருந்துச்சு கலகலன்னு பேச.. என்னய பழிவாங்க தானே கட்டிக்கிட்ட அப்போ நான் யாருக்கூட பேசுனா உனக்கு என்ன .? எதுக்கு கோவம் வரண்ணும்.. விருப்பப்பட்டா கட்டிக்கிட்ட இல்லேலா அப்ப உன் வேலையை மட்டும் பாரு.." என்றவன் அவளின் கையை எடுத்து விட்டான்.
அவன் கைகளை அழுத்தத்துடன் பிடித்து வைத்தவள் , "நான் விருப்பம் இல்லாமதான் உங்களை கட்டிக்கிட்டேனா..? நான் உங்களை விரும்பி தான் கட்டிக்கிட்டேன் இப்போன்னு இல்ல அப்போவே.. புரியல காலேஜ் டைம்ல தெளிவா சொல்ல போனா நீங்க பூஜாவ லவ் பண்ண முன்னாடியே நான் உங்களை லவ் பண்றேன் .. இது உண்மை .. நான் பொய் சொல்லல.. என் கண்ணுல காதல் தெரியலையா..?" என்று தன் ஒட்டு மொத்த காதலையும் தேக்கி வைத்துக் கேட்க அவள் சொன்ன செய்தியில் ஆடிப் போனவன் அவள் கண்ணில் தெரிந்த உண்மையில் அதிர்ந்துதான் நின்றான்.
தன்னை மீட்டுக் கொண்டு இதுவும் அவளின் திட்டமாக இருக்குமோ எங்கு சந்தேகித்து , "என்ன..திருப்பி எந்த திட்டம் போட்டு என்னை பழிவாங்க நெனைச்சுருக்க..?" என்று கேட்க தான் செய்த செயலால் தான் உண்மை கூறியும் அதையும் திட்டம் என்று சொல்பவனின் வார்த்தையில் மரித்தவள், அடிபட்ட பார்வையுடன் கண்ணீர் வழிய அவனை ஏறிட்டு பார்க்க அந்த பார்வை அவனை எதோ செய்ய திரும்பிக் கொண்டான்.
அந்த நேரம் சூர்யா பார்வியை அழைத்தவாறு அங்கு வந்தான். அவனது பதற்றமான குரல் இருவரையும் பதற்றமுற செய்ய 'என்ன ? ஏதென்று' விசாரிக்க அவன் சொன்ன செய்தியில் விஷ்வாக்கு சகலமும் நடுங்கியது.
"என்னடா சொல்ற ..??" என்று பார்வி கர்ஜிக்க , "ஆமா.. க்கா சித்..சித்துவ யாரோ ரெண்டு பேரு கார்ல கடத்திட்டு போயிட்டாங்க கா.. உன்ன பார்த்தா நீ வீட்ல இல்ல அப்பா தான் நீ இங்க இருக்கன்னு சொல்லி உன்கிட்ட சொல்ல ஓடி வந்தேன்.. " என்று திக்கியவாரு சொன்னான்.
"டேய் அறிவிருக்கா.. என்கிட்ட சொல்ல வந்ததுக்கு கார் பின்னாடி போயிருந்தா பிடிச்சுருக்கலாமே.. இப்போ எங்கன்னு போயி பாக்க.." என்று தலையில் கைவைத்தவாரு புலம்பினாள்.
"நான் போனேன் கா.. ஆனா அதுக்குள்ள கார் எந்த திசை பக்கம் போச்சுன்னு தெரியல.."
"என்னாச்சுன்னு முதல்ல இருந்து சொல்லு.. எப்படி என் சித்ரா காணாம போனா.." என்று விஷ்வா அழுத்தமாக கேட்க , ஒரு நிமிடம் தயங்கியவன் பின் சொல்ல ஆரம்பித்தான்.
காலையில் எப்போதும் போல வாசல் தெளிச்சு கோலம் போட்டு வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு செத்த நேரம் வாசல் படியில் உட்காருவது சித்ரா வழக்கம். அப்படி உட்கார்ந்து இருக்கும் போது தான் அவர்கள் வீட்டு பெரிய கேட்டூக்கு முன்னாடி ஒரு சிறுமி நின்றுக் கொண்டு இவளை அழைக்க அருகில் சென்று பார்க்கும் போது தான் சிறுமிக்கு பின்னால் நின்ற இருவர் அவளின் கையைப் பிடித்துக் காருக்குள் தள்ள முயன்றனர்.
அந்த நேரம் அவளுக்கு சூர்யா நினைப்பே வர "சூர்யா... ஆஆ.." என்று கத்தி அழைத்தாள். அவனுக்கு அவள் அழைப்பு வெளியில் இருந்து கேட்பது தெரிந்தும் அலட்சியப் படுத்தினான்.
இவள் பலமுறைக் கத்தியும் அவன் பார்க்காமல் போக காருக்குள் தள்ளும் ஒரு வினாடியில் "என்னை காப்பாத்துங்க .." என்று கத்தவும் அவளது வாயில் துணியை வைத்து அடைத்தவாரு கூட்டி சென்றனர்.
அப்போதே விபரீதம் புரிந்து பால்கனி வழியே எட்டிப் பார்த்தவன் இருவர் அவளை உள்ளே ஏற்றும் காட்சியை தான். அவன் பதறிக் கீழே வருவதற்குள் காரும் போன சுவடு தெரியாமல் மறைந்து விட்டது.
அந்த நேரம் பரிமளமும் வீட்டில் இல்லை. விஸ்வநாதனும் எதோ வேலையாக வெளியில் சென்று அப்போதே வர அவன் அவரிடம் விசயத்தை சொல்ல கடிந்துக் கொண்டார்.
'கோபத்தைக் காட்ட இதுவா நேரம் ..'என்று திட்டி தீர்த்தவர் பார்வி இருக்கும் இடத்தைக் கூறி சீக்கிரம் சித்ராவை கண்டுபிடிக்க சொல்லி அனுப்பி வைத்தார்.
அனைத்தையும் அவன் சொல்லி முடிக்க கோபத்தில் கண்மண் தெரியாமல் ஆத்திரம் வந்தது பார்விக்கு. இருந்தும் அடக்கிக் கொண்டாள். அவள் தான் அவர்களின் காதலையும் தன் கல்யாணத்திற்கு பின் அவர்களின் மோதலையும் தெருந்தவளாயிற்றே..
ஆனால் விஷ்வாக்கு அது எதுவும் தெரியாததால் சூர்யாவிடம் எகிறினான்.
"ஏய்.. ஏன்டா இப்படி பண்ண..? என் மேல உள்ள கோபத்துல ஆபத்துல இருக்க என் தங்கச்சியை எப்படியோ போட்டும்னு விட்டுருவியா.. உனக்குலாம் ஈவு எரக்கமே கிடையாதா.." என்று கடுமையாக சாடினான்.
தன் மேல் தவறு இருந்ததால் அமைதியாக இருந்த சூர்யாவுக்கு பாழாப்போன வீண் பிடிவாதத்தால் தன்னவளை இப்படி நிற்கதியில் விட்டு விட்டோமே என்று உள்ளம் குமைந்து நின்றான்.
அவனை அமைதியாக இருக்க சொன்ன பார்வி அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது அவளுக்கு அந்த ஊரின் ஸ்பை யிடம் இருந்து அழைப்பு வர யோசனையுடன் எடுத்து பேசியவள் அங்கு என்ன சொல்லப் பட்டதோ உடனே வருவதாக மகிழ்ச்சியுடன் சொன்னவள் அழைப்பை துண்டித்தாள்.
அவளின் பேச்சிலும் முகப் பிரகாசத்திலும் கேள்வியாக பார்த்தவர்களிடம் ஒரு இடத்தின் பெயரை சொல்லி அங்கு தான் சித்ராவை கடத்தி வைத்திருப்பதாக சொல்ல அந்த இடம் ஊருக்கு எல்லைத் தாண்டி இருக்கும் ஒரு பாழடைந்த இடம் என்று விஷ்வா சொன்னான்.
"ஆனா அங்க யாரு சித்ராவை கடத்தி வச்சுருக்காங்க" என்று விஷ்வா கேட்க
"யாரோ பாலா ன்னு சொன்னாங்க.." என்று பார்வி தெரியாமல் தோள்களை குலுக்கவும் அந்த பெயரைக் கேட்டு அதிர்ந்த விஷ்வா கண்ணில் வெறிக் கொண்டு அங்கு இருவரையும் கூட்டிக் கொண்டு சென்றான்.
போகும் முன் பரிதிக்கும் தகவலை சொல்லிவிட்டு சென்றான். 'ஏன்' என்று கேட்ட பார்விக்கும் 'அங்கு போனால் உனக்கே எல்லாத்துக்கும் விடை தெரியும் ' என்று கூறியவன் தன் ஜீப்பில் ஏறி அமர்ந்து அவர்களையும் உடன் அழைத்து சென்றான்.
அங்கு தான் இத்தனை காலமாக நினைத்து செய்த ஒன்று வேறாகி போவதையும் தன்னுடைய முட்டாள் தனத்தால் எவ்வளவு பெரிய காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் என்று அறியும் போது என்ன ஆவாளோ...?
நிறைவாள்..❤️❤️❤️