வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன் - கதை திரி

Status
Not open for further replies.
மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன்


மனம் 1,


அழகிய எழில் கொஞ்சும் கேரளத்தில் கொஞ்சி விளையாடும் பறவைகளின் ‘கீச். கீச்’ சத்தத்தில் மெல்ல விழிகளை திறந்தாள் அகமேந்தி.

(அகமேந்தி - அன்பு (காதல்) ஏந்தி நிற்பவள் என்று பொருள்)


தமிழ்நாட்டு ஆண்களுக்கு மட்டுமில்லை பெண்களுக்கும் கருப்பு நிறம் ஓர் அழகே என்பதற்கு அவள் தான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.


தமிழ்நாட்டைச் சேர்ந்த பேரழகி தான் அகமேந்தி. மாநிறத்தை விட சற்று குறைவான நிறம் அவளுடையது. பத்தொன்பது வயது நிரம்பிய பதுமையவள். காலேஜ் முதலாம் ஆண்டு அடியெடுத்து பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவளின் சிறகினை ஒடித்து விட்டனர் அவளின் குடும்பத்தினர்…


இன்று அவளின் அவலநிலை சொல்வதற்கே நா கூசும் அளவிற்கு இருந்தது. இதுவரை எந்தப் பெண்ணிற்கும் கிடைக்காத பெயர் அவளுக்குக் கிடைத்து விட்டது.


அதில் பெரும்பங்கு அவளுடைய குடும்பத்தினரால் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.


அரண்மனை போன்ற மிகப்பெரிய வீட்டில் அவள் ஒருத்தி மட்டுமே இருக்கிறாள். கண்களில் ஒரு வித வெறுமை குடியேறியிருந்தது.


ஒரு மாத காலமாக அவள் அனுபவித்து வரும் தனிமை என்னும் சிறை விலங்கு எப்பொழுது அவளை விட்டு அகலும் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை.


அந்தச் சங்கிலியின் நுனியோ மிகப்பெரிய அரக்கன் ஒருவன் கையில் இருக்கிறது. அவன் நினைத்தால் மட்டுமே இவளுக்கு விடுதலை என்பது கிடைக்கும்.


படுக்கையை விட்டு மெல்ல எழுந்தவள், ஜன்னல் வழியாக தெரிந்த இயற்கை காட்சியினை மெல்ல எட்டிப் பார்த்தாள்.


காலை புலரும் வேளை என்பதால் பனிபடர்ந்து, பச்சைப் பசலென்று காணும் இடங்களில் எல்லாம் புத்துணர்ச்சியையும் கண்களுக்கு குளுமையையும் அளிக்கும் விதமாக இருந்தது அவ்விடத்தின் இயற்கை காட்சி.


அகமேந்தியின் இடத்தில் வேறொருவர் இருந்தால் இப்பொழுது இந்நொடி இந்த எழில் கொஞ்சும் அழகினை ரசித்துப் பார்த்திருப்பார்கள்.


ஆனால் அகமேந்தியால் அது முடியவில்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு மூச்சு முட்டுவதைப் போல் இருந்தது. யாரோ தன் கழுத்தினை நெறித்தாற் போன்று உணர்வினை கொடுத்தது அவளுக்கு.


எப்பொழுதடா இந்த இடத்தை விட்டு வெளியேறுவோம்? என தவிப்புடனும், பயத்துடன் ஒவ்வொரு நொடியும் கழிக்க ஆரம்பித்தாள்.


இவ்வளவு பெரிய வீட்டில் அவள் ஒருத்தி தனியாக இருக்கிறாள் என்பதற்காக அடைத்து எல்லாம் வைக்கவில்லை. கை கால்களை கட்டிப்போட்டும் வைக்கவில்லை. சர்வ சுதந்திரமாக அந்த அரண்மனையை சுற்றி வலம் வந்துக் கொண்டிருந்தாள்.


அவள் நினைத்தால் கூட இவ்விடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகரமுடியாது. இன்னும் பத்து மாதம் அவள் இந்த அரண்மனையில் இருந்தாக வேண்டிய தருணம்.


வேறு வழியில்லாமல் சகிப்புத்தன்மை என்ற ஒற்றை வார்த்தையில் தன் வாழ்க்கையினை துணிந்து அடகு வைத்தாள் அந்த பிரம்ம ராட்சஷனிடம்…


அவளின் குடும்பத்திற்காக தன் பெண்மையை, சுயமரியாதை, சந்தோஷத்தை எல்லாத்தையும் ஈடு வைத்து இன்று உயிரற்ற ஜீவனாய் நடமாடிக் கொண்டிருக்கிறாள்.


கண்களில் கண்ணீர் வற்றிப்போனதோ? என்னவோ? கண்ணீர் கூட அவளின் துயரத்தைத் துடைக்க அருகில் வரவில்லை.


நேற்றிரவில் சரியாக சாப்பிடாத வயிறு அதன் இருப்பைக் காட்டிட, மெல்ல கிச்சனை நோக்கி நடந்தாள் அகமேந்தி.


அவள் இருக்கும் நிலையில் ஒரு வாய் தண்ணீர் கூட தொண்டைக்குழியில் இருந்து இறங்காது. ஆனாலும் அவள் நேரத்திற்கு சாப்பிட வேண்டிய கட்டாயம். கோழிக் கொறித்தாற் போன்று எதையாவது வாயில் போட்டு அடைத்துக் கொள்வாள்…


இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்த அவளின் செல்போன் அலறும். அது கூப்பிடும் நேரத்தில் அவள் எடுத்துப் பேசியே ஆகவேண்டும்.


அவள் ஒரு நிமிடம் தாமதித்தாலும், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் சிசிடிவி கேமரா, அரக்கன் ஒருவனால் கண்காணிக்கப்படும் என்பதையும் அவள் அறிவாள்…


நேராக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த பால் பாட்டிலை எடுத்தாள். அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்ச்ச ஆரம்பித்தாள்.


சிறிது நேரத்தில் பால் பொங்கி வந்தது அவளின் மனதின் துயரத்தைப் போன்று. மெல்ல அடுப்பை அணைத்தவள் காய்ச்சின பாலை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்…


தொண்டைக்குழியை தாண்டி விக்கிக்கொண்டு உள்ளே சென்றது. அவள் குடித்து முடிப்பதற்கும், அவளின் செல்போன் அலறுவதற்கும் சரியாக இருந்தது.


அதை எடுத்தவள் ஸ்கீரினில் தெரிந்த நம்பரை கூட பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அவளுக்கு போன் பண்ணும் ஒரே ஆள் அவன் மட்டுமே.


ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் இவளை ஆட்டுவிப்பவன். அவன் விழிப்பார்வை மட்டுமல்ல அவளின் குரலுக்கே இங்கே ஒருத்தியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் என்பதை அவனும் அறிவான்.


‘ஹலோ’ என ஒரு சம்பிராதயத்திற்காக அழைக்கப் பிடிக்காதவன் போன்று “பால் குடிச்சிட்டீயா?” என உறுமலாக கேட்ட கேள்வியில் பெண்ணவளின் உள்ளத்தோடு வதனமும் வாடிப் போனது…


“ம்ம்”...


“குட். அப்புறம் என்னோட ரூம்க்கு போ” என்ற கர்ஜனைக்குரலில் கால்கள் தானாக அவனின் அறையை நோக்கி சென்றது…


இரண்டாம் தளத்தில் இருந்த அவனின் அறைக்கு மெல்ல மரப்படிக்கட்டில் ஏறிச் சென்றாள். அவள் செல்லும் பொழுது அவளின் காலில் போட்டிருந்த கொலுசொலி போனில் இருந்தவனின் காதிற்கு கேட்கும் பொழுது ஏனோ அவனையும் அறியாமல் முகம் இளக ஆரம்பித்தது.


மெல்ல அவனின் அறைக்குச் சென்றவளின் நடை சற்று தயக்கத்தோடு வாயிலின் முன்பே நின்றது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்ற கட்டளைக்கு காத்திருந்தது அவளின் கால்கள்…


“உன்னை வெத்தலை பாக்கு வச்சி ஒருத்தர் அழைக்கணுமா? உள்ளே போ” என மறுபடியும் உறுமலாக கேட்ட குரலில் சட்டென்று உள்ளே நுழைந்தாள்.


அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று அறியாத பேதையாக முழித்தபடி நின்று கொண்டிருந்தாள். அவளின் கவிபாடும் விழிகளோ, சோழியை சுழற்றி விட்டாற் போன்று ஓரிடத்தில் நில்லாமல் அவ்வறையை சுற்றி சுற்றி வந்தது.


“இப்படியே எவ்வளவு நேரம் நிக்குறதா உத்தேசம்.. ம்ம்ம்” என எரிச்சல் கலந்த கேட்டவனின் குரலில், அறியாத சிறு பிள்ளையாக முழிக்க ஆரம்பித்தாள்.


அவன் சொல்லும் கட்டளையை நிறைவேற்றுவது தானே அவளின் கடமை. அவளாக ஏதாவது செய்தால் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நன்கு அறிந்தவள் அல்லவா!. அதனாலேயே திருதிருவென்று முழித்தபடி நின்று கொண்டிருந்தாள்…


“லெப்ட் சைடுல இருக்கிற போட்டோவை எடு” என்றவனின் கட்டளைக்கு அடிபடியும் ரோபாவினை போன்று மெல்ல கால்கள் அந்த போட்டோவினை நோக்கிச் சென்றது...


“அதை எடு” என சொல்லி முடித்தது தான் தாமதம் அந்த போட்டோ பிரேம் அவள் கையில் இருந்தது.


“அதுக்கு பின்னாடி இருக்கிற சாவியை எடுத்துட்டு கீழே இருக்கிற சாமி ரூம்க்குப் போ” என்றதுமே, அவளின் கருமைநிற பாதங்கள் மெல்ல கீழே நோக்கி செல்ல ஆரம்பித்தது.


மெதுவாக இரண்டு மாடி கீழிறங்கி சாமிரூமின் முன்னால் வந்து நின்றாள்.


“அங்கிருக்கிற இரும்பு லாக்கரை திறந்து அதுல ஒரு பர்பிள் கலர் பெட்டி இருக்கும். அதை உன் ரூமுக்கு கொண்டு போ” என்றவனின் கட்டளைக்கு செவிமடுத்து, அவன் சொன்னதை அப்படியே செய்தாள் மதிமயங்கிய மாது அவள்…


அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்ததுமே, அதுவரை பேசிக் கொண்டிருந்த போன் கட்டாகி போனது.


“சிக்னல் ப்ராப்ளமாக இருக்குமோ?” என சிந்திக்கும் பொழுதே போன் மறுபடியும் சிணுங்கியது.


அதுவரை பேசிக்கொண்டிருந்த வாய்ஸ் கால் மறைந்து, வீடியோ காலில் வந்து நின்றான் தலைவன். விதிர்விதிர்த்துப் போனாள் அகி.


போனை எடுப்பதற்காக விரலை போனின் அருகில் கொண்டு போகும்போதே கை நடுங்க ஆரம்பித்தது. எடுப்பதா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே போன் கட்டாகி விட, போனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளோ அச்சத்தில் விரிந்தது.


அடுத்த முறை போன் அவளுடைய போனிற்கு வரவில்லை. யாருமில்லாத அந்த வீட்டில் நடுநாயகமாக இருந்த ஹாலின் மேல் இருந்த டேபிள் மேல் வைத்திருந்த போன் அலறியது.


அதன் சத்தத்தில் அடித்துப் பிடித்து வேகமாக ஓடிவந்து எடுத்தாள் அகி.


“ஹலோ. ஹலோ. நான்.. ந்ந்நான்ன்ன்” என ஏதோ சொல்வதற்கு முற்படும் பொழுதே,


“ஷட்ட்ட்டட்… அப்ப்ப்ப்ப” என சீற்றமாக வந்து விழுந்த வார்த்தையில் இதழ்கள் தன் வாயை பூட்டிக் கொண்டது…


இன்னும் ஒரு வார்த்தை பேசினால், அடுத்து என்ன நிகழும் என்பதை அறியாத மங்கை இல்லையே அவள்…


“நான் போன் போட்டா எடுக்க உனக்கு கசக்குது தானே. இதுக்கான தண்டனையை அனுபவி” என்பதற்குள் அவளின் கையில் வைத்திருந்த போன் மறுபடியும் சிணுங்க ஆரம்பித்தது.


அச்சத்துடன் அந்த போனை எடுத்து வைத்தவள், தான் காதில் விழுந்த செய்தியில் தொப்பென அங்கேயே நிலத்தில் அமர்ந்தாள்…


“ மார்க்கெட்டிற்கு சென்றிருந்த அவளின் தந்தையை ஒரு கார் இடித்துவிட்டு சென்று விட்டது” என்ற செய்தியை அவளின் தாய் சொல்லும் பொழுதே தன் வாழ்க்கையினை பற்றிய பயம் அவளை கவ்விக் கொண்டது…


“ஒவ்வொரு நிமிடமும் தன்னை மரணத்தின் வாயிலில் நிற்க வைக்க அவன் ஒருவனால் மட்டுமே முடியும்” என்பதை அறிந்த அவளின் உள்ளமோ கனத்து வலிக்க ஆரம்பித்தது.


“ஆஆஆஆஆஆ” என அவ்வறையே அதிர கத்தி அழ வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அவளின் பலீவனமான உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.


அவள் அழுதால் மட்டும் அவளின் இன்னல்களும், துன்பங்களும் மறைந்து போகுமா என்ன? கண்டிப்பாக இல்லை.


விழிகளில் ஒரு வித வெறுமையுடன் அங்கிருந்த டீபாயில் சரிந்து அமர்ந்தாள். அவளின் கண்களோ போனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.


“இனி எப்பொழுது போன் வருகிறதோ?. அப்பொழுது தான் இவளால் பேச முடியும். அவளாக அந்தப் போனில் இருந்து யாருக்கும் போன் பண்ண முடியாது. அப்படி செய்தால் அதன் பின் விளைவுகள் என்ன நிகழும்? என்பதை அவள் அறிவாள்”...


டீபாயில் சரிந்து படுத்திருந்தவளின் தோளின் மேல் ஒரு கரம் விழ, சட்டென பயத்தில் எழ முயற்சி செய்தால் அகி.


எதிரில் இருந்த நபரை பார்த்த பின்பு தான் அவளின் மனம் சற்று ஆசுவாசமடைந்தது…


“சஞ்சு” என இடுப்போடு சேர்த்து அணைத்தபடி அமர்ந்தவளின் தலையை அழகாக கோதிவிட்டாள் சஞ்சு என்கின்ற சஞ்சனா…


ஆஸ்திரேலியாவில் இருப்பவனின் உயிர்த்தோழி தான் இந்த சஞ்சனா. திருவனந்தபுரத்தில் பிரபலமான கைனகாலஜிஸ்ட். இப்பொழுதைக்கு அகமேந்திக்கு இருக்கும் மிகப்பெரிய ஆறுதல்.


அவளின் வாடிய முகத்தைப் பார்த்த சஞ்சனா ஏதோ நடந்திருக்கிறது என்பதை யூகித்தவளாய், “என்னாச்சி அகி?”


“சஞ்சு. ப்ளீஸ் சஞ்சு என்னை எதுவும் கேட்காதே!. என்னால எதையும் வாய்விட்டு சொல்ல முடியலை. என் அப்பா எப்படி இருக்கார்னு மட்டும் கேட்டுச் சொல்லு சஞ்சு” என அழுதுகொண்டே கண்ணீருடன் சொல்வதற்கும் அவளின் போன் சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது.


போன் அடித்த சில வினாடிகளில் அவளின் கை போனை ஆன் பண்ணியது…


“ஹலோ. ஹலோ ந்நான்.. நான் லைன்ல இருக்கேன்.‌ கேட்குதா??? ஹல்லோஓஓஓஓ” என இங்கிருந்தே கத்தி கதற ஆரம்பித்து விட்டாள்.


அவளின் கதறலை கேட்டுக் கொண்டிருந்தவனின் இதழோரம் சிறு கர்வப்புன்னகை மிளிர்ந்தது. இதைத்தானே அவன் கேட்க விரும்புவது.


“ம்ம். காது எனக்கு திவ்வியமா கேட்கும். சோ உனக்கு சொல்லிப் புரிய வைக்கிறதை விட, செயல் மூலமா தான் புரிய வைக்கணும். உன் அப்பாவை ஹாஸ்பிடல்ல சேர்த்தாச்சி. உயிர் இன்னும் உடம்புல இருக்கு. இவ்வளவு டீடெய்ல் போதும் தானே” என எஃகு போன்ற இரும்பின் குரலில் கேட்டவனுக்கு, இதயம் என்ற ஒன்று இருக்கிறதா? என்பதே சந்தேகம் தான்…


“சஞ்சுக்கிட்ட போன் கொடு” என்ற எரிச்சல் கலந்த குரலில் சொன்னவனின் வார்த்தையில் சட்டென்று போனை சஞ்சு புறம் நீட்டினாள்…


“அவர் உன்கிட்ட பேசணுமாம்” என்றவளின் வார்த்தையில் போனை நிதானமாக வாங்கினாள் சஞ்சு.


அவள் வாங்கும் வரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அகமேந்தி.


“சஞ்சு அவளுக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்தீயா?” என சுள்ளென்று எரிந்து விழ


“நான் ஒன்னும் அகி இல்லை. உன்னோட உருட்டல், மிரட்டல்க்கு எல்லாம் பயப்படுறதுக்கு. நான் சஞ்சு” என அகியினை அழுத்தமாக பார்த்துக் கொண்டே சொன்னாள்…


“நீ சஞ்சுன்னு எனக்குத் தெரியாதா? நான் சொன்னதை செய்யுறதுக்குத்தான் இங்கே வர சொன்னேன்?. நீ போய் அவளுக்கு டெஸ்ட் எடுத்துட்டு வந்து சொல்லு. நான் இன்னும் பத்து நிமிஷத்துல கூப்பிடுவேன்” என போனை கட் பண்ணி விட்டான்… .


“ரொம்ப அநியாயம் பண்றடா நீ” என ஆஃப் பண்ணி வைத்திருந்த போனை பார்த்துக் கொண்டே பேசினாள்…


“நீ வா அகி. உனக்கு சில டெஸ்ட் எடுக்கணும்” என்றவள் அவளை அறைக்குள் அழைத்துச் சென்றாள். அவளின் பின்னால் பேசா மடந்தையாய் சென்று கொண்டிருந்தாள் அகமேந்தி…


தன் கைப்பையினுள் கொண்டு வந்திருந்த ஸ்டிக்கை அவள் புறம் நீட்டியவள், “போய் செக் பண்ணிட்டு வந்திடு” என்றதும் தலை தானாக ஆடியது அகிக்கு…


குளியலறைக்குள் நுழைந்தவளின் கையில் இருந்த ஸ்டிக்கை பார்த்துக் கொண்டே, அங்கு சுவரில் மாட்டி வைத்திருந்த நிலைக்கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தாள் அகமேந்தி…


கண்களை சுற்றி கருவளையம் விழுந்திருந்தது. அவளின் முகமோ எந்த வித மலர்ச்சியும் இன்றி வாட்டத்துடனே காணப்பட்டது. அவளுக்கே அவளை பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.


நீண்ட பெருமூச்சு தான் வந்தது. ஆழ்ந்து பெருமூச்சொன்று விட்டவள், தன் கையில் இருந்த ஸ்டிக்கை வைத்து சஞ்சனா சொல்லியதை அப்படியே செய்தவள் சில நிமிடங்களில் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்…


“வா அகி. ரிசல்ட் என்ன பாஸிட்டிவ்வா? நெகட்டிவ்வா?” என ஆர்வத்துடன் கேட்ட சஞ்சனாவின் விழிகளை கலங்கிய கண்களுடன் ஏறிட்டுப் பார்த்தவள், தன் கைகளில் இருந்த ப்ரெக்னன்சி ஸ்டிக்கை நீட்டினாள். அதில் இரட்டை கோடுகள் தோன்றி மிளிர்ந்தது..


“ஹேய்ய் காங்கிராட்ஸ் டி. நீ ப்ரெக்னன்டா இருக்க. அம்மாவாக போற?” என சந்தோஷத்தில் கூவிக் கொண்டே தன் போனை எடுத்து ஆஸ்திரேலியாவில் இருப்பவனுக்கு தகவல் சொல்லிட போனவளின் கைகள் அப்படியே நின்று போனது அகி கேட்ட ஒற்றை கேள்வியில்…
 
மனம் 2


“என்ன சொன்ன அகி?” என தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்பாமல், மறுபடியும் கேட்டாள் சஞ்சனா…


“குழந்தையோட அப்பா பேர் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என மெல்லிய குரலில் சிறிது தடுமாற்றத்துடன் கேட்ட வார்த்தையில், அதிர்ந்த விழிகளுடன் அகியை பார்த்துக் கொண்டு நின்றாள் சஞ்சு…


“என்ன அகி சொல்லுற? உனக்கு அவன் பேர் தெரியாதா?” என சந்தேகம் நிறைந்த கண்களுடன் அகியைப் பார்க்க, அவளோ ‘இல்லை’ எனும் விதமாய் தலையாட்டினாள்…


“இல்லை நீ பொய் சொல்லுற. இத்தனை நாள் நீ இந்த வீட்டுல இருக்க? உனக்கு அவன் பேர் கூட தெரியாதா?” என்றவளின் அவல நிலையை என்னவென்று சொல்ல? என நினைத்த சஞ்சுவின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது…


“அவரை பார்த்துருக்கேன். அவர் தாலியை சுமக்கிறேன் தான். மற்றபடி அவரைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது” என்றவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் சஞ்சு.


தன்னை வாரியணைத்துக் கொண்ட சஞ்சுவினை ஆறுதலாக பற்றிக் கொண்டாள் அகமேந்தி…


அவளின் துயரத்தை பங்கு போடுவதற்கு ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறது என அந்த நொடி நினைத்தாள்…


ஆனால் அவளின் மனவோட்டம் அந்த அரக்கன் செவியில் விழுந்ததோ? என்னவோ? அடுத்த நொடியே சஞ்சுவின் போன் அலறியது…


“அவன்தான் கூப்பிடுறான். இரு பேசிட்டு வர்றேன்” என அகியை விட்டு சற்று விலகி நின்றவள் “சொல்லுடா” என பயம் என்பது சிறிதும் இன்றி பேசினாள்…


“நீதான்டி சொல்லணும்? ரிசல்ட் என்ன பாஸிட்டிவ்வா? நெகட்டிவ்வா?” என தவிப்புடன் கேட்டான்…


“பாஸிட்டிவ் தான்” என வேண்டா வெறுப்பாக பதில் உரைத்தாள் சஞ்சனா…


எதிரில் கேட்டுக் கொண்டிருந்தவனின் பட்டை உதடுகள் கர்வத்துடன் சிரித்தது.


“அவகிட்ட போனை கொடு சஞ்சு” என்றதும், போனை அகியின் புறமாக நீட்டினாள் சஞ்சனா…


சஞ்சனா எப்படியும் தன்னிடம் போன் தருவாள் என எதிர்பார்த்து காத்திருந்தாற் போன்று அவள் கொடுத்த போனை உடனே வாங்கியவள், தன் காதுமடலின் மேல் வைத்தாள்…


“இங்கே பாரு ரிசல்ட் பாசிட்டிவ்னு வந்திருச்சி. இன்னும் பத்து மாசம் தான் இந்த நரகத்துல இருந்து மீண்டு போயிடலாம்னு நினைக்காதே. நான் நினைச்சா மட்டும் தான் உனக்கு சொர்க்கமும்!. நரகமும்!. இல்லை ஆயுஷ் பூரா நீ இங்கேயே தங்குற மாதிரியாகிடும்” என எச்சரிக்கும் குரலில் சொல்லி முடித்து விட்டு கட் பண்ணிவிட்டான்…


அகி தான் போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். “இன்னும் எவ்வளவு நாள் இந்த சித்திரவதையை அனுபவிக்க போகிறேன்” என நினைத்துப் பார்த்தவளுக்கு நீண்ட பெருமூச்சொன்று எழுந்தது.


அவளின் வாடிய முகத்தைப் பார்த்த சஞ்சு, அவளின் மனதினை மாற்ற எண்ணி, “அகி அவன் பேர் தெரிய வேண்டாமா உனக்கு?” என்ற சஞ்சுவினை வெற்றுப் பார்வையுடன் ஏறிட்டுப் பார்த்தாள்…


“என் குழந்தையோட அப்பா பேர் ஒன்னு நான் சொல்லணும். இல்லை என் கழுத்துல இருக்கிற மாங்கல்யம் சொல்லணும்”


“அதுவும் இல்லைன்னா ரெண்டுக்கும் சொந்தக்காரர் சொல்லணும். அவருக்கு என்னைக்கு தோணுதோ? அப்போ வந்து சொல்லச் சொல்லுங்க. என் குழந்தையோட அப்பா பேர் என்னன்னு!.. அதுவரைக்கும் இந்தக்குழந்தை அப்பன் பேர் தெரியாத குழந்தையாவே இருக்கட்டும்” என தீர்க்கமாக சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் நுழைந்து விட்டாள்…


“இனி சஞ்சனா மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் இருப்பவனே நேரில் வந்து தட்டினாலும் அந்த அறையின் கதவு திறப்பதற்கு இல்லை” என அறிந்த சஞ்சனா ஆழ்ந்த மூச்சினை விடுத்துக் கொண்டே அந்த வீட்டினை விட்டு வெளியேறினாள்…


அதே சமயம் தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் எல்லையில் இருக்கும் அழகிய கிராமத்தில் ஒரு வீட்டில் மட்டும் புலம்பல் சத்தம் வீட்டின் வெளியே வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தது…


“அம்மா இன்னும் எவ்வளவு நேரம் நீ புலம்பிட்டு இருக்கப் போற?” என கத்திக் கொண்டிருந்தாள் ஆதிரா.


இருபத்தி மூன்று வயது பருவ மங்கையவள், அந்தக் கிராமத்திலேயே பியூட்டி பார்லர் வைத்திருக்கும் ஒரே பெண் இவள் தான். வாழ்க்கைக்கு தேவையானவது அழகு, பணம் என்று மட்டுமே நினைப்பவள்…


“உனக்கென்னடி தெரியும். இப்படி உழைக்கிற மனுஷன் கால் ஒடைஞ்சு வீட்டுல இருந்தா?. அடுத்து வேளை சோத்துக்கு நாம என்னத்தை திங்கணும்னு நினைச்சிப் பார்த்தீயா?” என சுள்ளென்று எரிந்து விழுந்த தீபாவினை எரிப்பது போல் பார்த்தாள் ஆதிரா.


“அம்மா. அப்பாவுக்கு சின்ன அடிதான் பெருசா எதுவும் இல்லை. ரெண்டு நாள் ரெஸ்ட்டா எடுத்தா சரியாகிடும்னு டாக்டரே சொல்லிட்டாங்க. அப்புறமும் ஏன்மா நீ இப்படி புலம்பிட்டு இருக்க” என சலிப்பாக சொல்லிக் கொண்டே தன் கையில் இருந்த போனை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தாள்…


“ஆமா தீபா. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த பைக்காரன் லேசா தான் இடிச்சான். காலையில் சாப்பிடாம இருந்ததால சட்டுன்னு மயங்கி கீழே விழுந்துட்டேன். இன்னைக்கு சனிக்கிழமை, நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு திங்கள்கிழமை வேலைக்குப் போயிடலாம் தீபா” என்ற சண்முகத்தை வெட்டவா? குத்தவா? என்பது போல் முறைத்துக் கொண்டு நின்றாள் தீபா…


“யோவ்வ். கூறுகெட்ட மனுஷா? பொழைக்கத் தெரிஞ்ச ஆளா இருந்தா பரவாயில்லை. இப்படி ஒன்னத்துக்கும் உதவாத மனுஷனை இருந்து என் உயிரை எடுக்காதே!. நீர் கொண்டு வர்ற அஞ்சுக்கும், பத்துக்கும் நான் வடிச்சிப் போட்டதெல்லாம் போதும். போரூம். போய் வேலையைப் பாரூம். நான் இதை எங்கே எப்படி சொல்லணும்னு பார்த்துக்கிறேன்” என்றவர் போன் பண்ணியது நேராக அகமேந்திக்கு தான்…


அப்பொழுதுதான் சஞ்சனாவிடம் பேசிவிட்டு அறைக்குள் இருந்து அழுது கொண்டிருந்த அகி, போன் அடிக்கும் சத்தத்தில் தான் மெல்ல களைந்தாள்.


தன் தாயின் எண்ணை பார்த்ததும் காதில் எடுத்து வைத்ததும் தான் தாமதம், “ஏன்டி நீயெல்லாம் மனுஷியா?” என கடுமையான சொற்களை கேட்டவளுக்கு கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.


“அம்ம்மாஆஆஆஆ” என அழுகுரலில் கூப்பிட்டவளின் கண்ணீர் எதிரில் இருப்பவரை சிறிதும் அசைத்துப் பார்க்கவில்லை.


“என்னடி அம்மாஆஆ? ஹான் என்ன அம்மான்னு கேட்குறேன். நல்லா இருந்த மனுஷன் காலை ஒடைச்சிப் போட்டாச்சி. இதுவும் உன் புருஷன் வேலை தானே!” என்ற வார்த்தையில் அனலில் இட்ட புழுவினை போல் துடிக்க ஆரம்பித்தாள்…


“இல்லை” என மறுத்துப் பேசமுடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் அகி.


“இங்கே பாருடி. உன் புருஷன் பண்ணுன ஆக்சிடெண்ட்னாலே உங்க அப்பன் கால் ஒடைஞ்சி, கிட்டத்தட்ட ரெண்டு மாசம் வேலைக்கே போக முடியாத நிலையில இருக்காரு. அதுக்கு முதல்ல பதில் சொல்லு” என அழுகை கலந்த குரலில் கேட்டவரை கண்டு பாவமாகிப் போனது அகிக்கு…


“இப்போ அப்பாவுக்கு எப்படி இருக்கும்மா?” என கண்ணீருடன் கேட்டாள் அகி.


“ஏன் நீ அங்கிருந்து இங்கே வந்து, உன் புருஷன் கோபத்துல என் புருஷனை கொல்லுறதுக்கா? எதுவும் தேவையில்லை. நீ அங்கேயே இரு” என இரக்கம் என்பது மனதில் இல்லாததை போல் பேசிய தீபாவின் வார்த்தையில் மனதளவில் மிகவும் அடிபட்டு போனாள் அகி.


“தன் அப்பாவை பார்க்க போக வேண்டும் என்று மனம் துடித்தாலும், இந்த அரக்கன் விடமாட்டான்” என அறிந்தவளுக்கு கண்ணீரோடு துக்கமும் பொங்கியது…


“நான் அவர்கிட்ட பேசுறேன் ம்மா” என்றவள் போனை உடனே கட் பண்ணிவிட்டாள்…


“ஏனோ மேற்கொண்டு ஒரு வார்த்தை பேச முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தொண்டைக்குழியில் வார்த்தைகள் சிக்கித் தவிக்க, கண்ணீருடனும் துக்கத்துடனும் தன் காலம் முழுவதும் கழிந்து விடுமோ” என அச்சமும் சேர்ந்து அவளை பாடாய்ப்படுத்த ஆரம்பித்தது…


போன் பேசிவிட்டு திரும்பிய தீபாவை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தாள் ஆதிரா…


“என்னம்மா? என்ன சொல்லுறா அந்த அம்மாஞ்சி” என வெறுப்பும், வன்மமும் கலந்த குரலில் கேட்டாள் ஆதிரா...


“அப்பனுக்கு ஒன்னுன்னா எந்தப் பொண்ணுக்கும் மனசு துடிக்காம இருக்குமா?. இவளுக்கும் துடிக்கும் டி. இன்னும் ரெண்டே நாளுல ஏதாவது வழி செய்வா. அதுவரைக்கும் நாம ஜாலியா இருப்போம் வா” என்ற ஆதிராவையும், தீபாவையும் இயலாமையுடன் சண்முகம் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் மூவரையுமே மிதமிஞ்சிய வெறுப்புடன் பார்த்தான் அபிமன்யு…


“ஏன்ப்பா. அம்மாவும் அக்காவும் அகிக்கு எவ்வளவு பெரிய கொடுமை பண்ணிட்டு இருக்காங்க. அதைப் பத்திக் கொஞ்சம் கூட தட்டிக் கேட்காம. அவுங்க இஷ்டத்துக்கு ஆட விட்ருக்கீங்களே!. இதெல்லாம் நல்லாவா இருக்கு”


“என்னை என்னடா பண்ண சொல்லுற?” என்ற சண்முகத்தை முறைத்துக் கொண்டு நின்றான் அபிமன்யு…


“ஆமா. உங்களால எதுவும் பண்ண முடியாது. ஆனா நான் பண்ணுவேன். என் அக்காவை அந்த ஆள்கிட்ட இருந்து மீட்டெடுத்துட்டு வருவேன்” என சூளுரைத்தவனின் வயதோ பதினைந்தை தாண்டவில்லை…


பத்தாம் வகுப்பு படிக்கும் சிறு பாலகன் தான் அவன். அகமேந்தியின் கனவு கலைந்ததை கண்கூடாக இருந்து பார்த்தவன். அவள் கண்ணீருடன் இந்த வீட்டில் இருந்து வெளியேறுவதை பார்த்தவனுக்கு அப்பொழுதே அகியினை சிறைபிடித்தவன் மேல், வெஞ்சினமும் வெறுப்பும் உண்டாகி விட்டது.


ஏனோ இவர்களின் சுயநலமான எண்ணத்திற்கு அவனால் தலையாட்ட முடியவில்லை. ஓர் உயிரின் ஆசைகளை கொன்று அதில் சந்தோஷத்தை காணும் தன் தாயையும், தமக்கையையும் நினைத்தாலே வெறுப்பு தான் தோன்றியது…


அங்கு அகியின் நிலைமையோ வேறு விதமாக இருந்தது. தன் தாயிடம் ஆறுதலுக்காக ‘தான் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லிவிட்டாலும், அவளால் என்ன செய்ய முடியும்? என நினைக்கும் போதே உள்ளம் கனத்து வலிக்க ஆரம்பிந்தது.


அவனிடம் சென்று மறுபடியும் நிற்க வேண்டுமா? என நினைக்கும் போதே உடலெல்லாம் தகிக்க ஆரம்பித்தது.


“இப்பொழுது என்ன செய்வது?” என யோசித்துக் கொண்டே அறைக்குள்ளேயே உலாத்த ஆரம்பித்து விட்டாள்.


அறைக்குள்ளேயே குட்டிப் போட்ட பூனையாய் நடந்தவளுக்கு கால்கள் வலித்ததே தவிர, மனமோ அடுத்த என்னவென்று? தவிக்க ஆரம்பித்தது.


“மதிய சாப்பாடு நெருங்கும் வேளை என்பதால், இன்னும் சிறிது நேரத்தில் கண்டிப்பாக போன் வரும். அதற்குள் எதையாவது யோசிக்க வேண்டும்” என சிந்திப்பதற்கும், போன் அடிப்பதற்கும் சரியாக இருந்தது.


“இன்னும் சாப்பிடலையா?” என உறுமலாக வந்த குரலில் கண்ணீர் தான் வழிந்தது.


“சாப்பாடு. சாப்பாடு மூன்று வேளையும் சாப்பாடு. சாப்பாடு மட்டும் தான் வாழ்க்கையா?” என மனதிற்குள் ஒரு அழுகுரல் கேட்டாலும், அதை தன் மனதிலேயே போட்டு புதைத்து வைத்தாள்.


“சாப்பிடணும்” என மெல்லிய குரலில் கூறிட,


“நீ எப்போ சமைச்சி எப்போ சாப்பிடுவ?. இப்போவே மணி ரெண்டாகுது. நீ சாப்பிடு சாப்பிடாம போ. எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையில்லை. என் குழந்தையை பட்டினி போடுற உரிமையை உனக்கு யார் கொடுத்தா?” என சுள்ளென்று எரிந்து விழுந்தான்…


இன்னும் கருவில் உரு பெறாத ஜீவனுக்காக தவிப்பவன், ஒரு நிமிடம் அதை சுமப்பவளின் மீது அந்த அக்கறையை காட்டினால். அவளின் இன்னல்கள் அனைத்தும் ஒரு நொடியில் கரைந்து விடும்…


ஆனால் அவனோ அவளின் மனதினை பற்றிய கவலை சிறிதும் இல்லாமல். தான், தன் குழந்தை என்று பேசிக் கொண்டிருப்பவனின் மேல் முதல் முறையாக கோபமும் வந்தது…


காலையில் இருந்தே மனஉளைச்சலில் தவித்தவளுக்கு என்ன பேசுகிறோம் என்று அறியாமல் வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்…


“என்னால சாப்பிட முடியாது. உங்களால என்னை பண்ண முடியுமோ? அதை பண்ணிக்கோங்க. என் குடும்பத்தையும், என்னையும் சித்திரவதை பண்ணி கொல்லுவீங்க. அப்படித்தானே. இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகுறதுக்கு மொத்தமா போய்த் தொலைஞ்சிடுறேன். என்னால முடியலை. எங்க அப்பாவை மனசாட்சியே இல்லாம இப்படி பண்ணிட்டீங்களே” என அழுது கொண்டே முதல் முறையாக போனை கட் பண்ணாமலே தூக்கிப் போட்டு உடைத்து விட்டாள் அகி…


அவளின் மனதினை போன்று போனும் சில்லு சில்லாய் உடைந்து கிடந்தது. உடைந்தது அவளின் போன் மட்டுமல்ல, அவளின் காதல் கொண்ட மனதும் தான்…


அழுதுகொண்டே தலையணைக்குள் ஒளித்து வைத்திருந்த போட்டோவினை எடுத்துப் பார்த்தாள்… அங்கு நிழற்படமாய் சிரித்துக் கொண்டிருந்தான் அவளின் ஆரூயிர் கணவனும், அவளின் மனதை திருடிய கள்வனுமாகிய உருத்திர சிம்மரெட்டி…


பெயர் அறியாமலே அவனின் ஜீவனை தனக்குள் சுமக்கும் பூம்பாவை தான் அகமேந்தி
 
மனம் 3


“கோபத்தில் ஒரு செயலை செய்து முடித்த பின் அதை நினைத்து வருந்திப் பயனில்லை” என்பதற்கேற்ப, அகி போனை உடைத்த பின்பு தான். தான் செய்த செயலை நினைத்து வருந்தினாள்…


‘எத்தகைய பெரிய பிழை செய்து விட்டோம்’ என நினைத்தவளுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது…


“தான் போன் எடுக்காததற்கே தன் தந்தையினை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன், இப்பொழுது தான் செய்த செயலை கண்டிப்பாக சிசிடிவி கேமராவின் உதவியுடன் பார்த்துக் கொண்டிருப்பான்” என நினைத்துப் பார்த்தவளுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம் தன்னிச்சையாக நடுங்க ஆரம்பித்தது.


அடுத்து என்ன செய்வது? அவனை எப்படி தொடர்பு கொள்வது? என சிந்தித்தவளுக்கு, சட்டென்று சஞ்சுவின் நியாபகம் தான் வந்தது.


“அவள் மட்டும் தான் தன்னை இவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற முடியும்” என உறுதியாக நம்பியவள், வேகமாக தன்னறையில் இருந்து கீழே இறங்கி ஓடினாள்…


இந்த நிமிடம் அவளுக்கு இருக்கும் ஒரே வழி, லேன்ட்லைன் போன் மூலமாக சஞ்சுவை தொடர்பு கொள்வது மட்டும் தான் என நினைத்து கீழே இறங்கி ஓடியவள் , ஹாலில் இருந்த போனின் ரீசிவரை எடுத்து காதில் வைத்து அடுத்த நொடி அப்படியே உறைந்து விட்டாள்…


“போன் அவுட் ஆஃப் சர்வீஸ்” என கம்ப்யூட்டர் வாய்ஸ் வந்ததுமே உடல் தூக்கிவாரிப் போட்டது அகிக்கு.


“காலையில் வேலை செய்த போன் இப்பொழுது வேலை செய்யவில்லை” என நினைக்கும் பொழுதே அங்கிருப்பவனின் சர்வதிகாரம் என்னவென்று புரிந்தது.


“கடவுளே” என தொய்ந்து அமர்ந்தவளின் விழிகளில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்தது…


“சஞ்சனா எப்படியும் தன்னைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வருவாள். அவளிடம் தன் நிலைமையை சொல்லி விடலாம்” என காத்திருந்தாள்.


ஆனால் இரண்டு நாட்களாகியும் சஞ்சனாவும் வரவில்லை. எந்தவித போனும் வரவில்லை. தனிமையோடு பயமும் கலந்து, கிட்டத்தட்ட பித்துப் பிடிக்கும் நிலையில் போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அகி.


இரண்டு நாட்களாக தூக்கம் என்பது சிறிதும் இன்றி, இருந்தவளின் ஒரே ஆகாரம் தண்ணீர் மட்டுமே. அதுவும் பசியில் உள்ளே இருக்கும் ஜீவன் கத்தும் பொழுது மட்டுமே அந்த தண்ணீரையும் குடித்தாள்…


“தன் பிறந்த வீட்டின் நிலை என்னவென்று தெரியாமல் இரண்டு நாட்களாக நீரை மட்டும் அருந்திக் கொண்டு கவலையோடு ஹாலிலேயே தஞ்சமென்று அடைந்தாள் அகி.


தான் ஒரு ஜீவனை சுமக்கிறோம் என ஒரு நொடி கூட அவளுக்குத் தோன்றவில்லை. அன்றும் சிறிதளவு தண்ணீரை படித்துவிட்டு, பசியின் மயக்கத்திலா? இல்லை பயத்தின் மயக்கத்திலா? என்று அறியாமல் தரையில் அமர்ந்து டீபாயின் மேல் தலையை கவிழ்த்து படுத்திருந்தாள் அகி.


இரண்டு நாட்களுக்குப் பின், “அகி” என்ற சஞ்சனாவின் குரலில் மெல்ல விழிகளை திறந்தவள், ஓடிச்சென்று சஞ்சனாவை அணைத்துக் கொண்டாள்…


“சஞ்சு. சஞ்சு ப்ளீஸ் சஞ்சு அவருக்குப் போன் பண்ணு சஞ்சு. அந்த பிரம்மராட்சஷன் போன் பேசிட்டு இருக்கும் போது தெரியாம போனை நானே உடைச்சிட்டேன் சஞ்சு. அந்த அரக்கன் என் குடும்பத்தை என்ன செஞ்சான்னு எனக்குத் தெரியலை. ப்ளீஸ் சஞ்சு உன்னைத் தவிர யாராலையும் என்னைக் காப்பாத்த முடியாது” என அழுதுக் கொண்டே சஞ்சுவின் கைகளை பிடித்து கொண்டு, தன் மனதில் உள்ள பாரத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் அகி…


நீண்ட நேரம் அழுதவள், சஞ்சனாவின் மௌனத்தில் தான் சற்று நிதானமானாள்… எப்பொழுதும் தான் அழுதாளே தன்னை சமாதானப்படுத்தும் சஞ்சனா இன்று மௌனமாக இருப்பது ஏனோ அவளுக்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது…


அப்பொழுது தான் சஞ்சனாவின் பார்வை தன் மேல் இல்லாததை கவனித்தாள். அவளின் பார்வை தன் மேல் இல்லாமல் பக்கவாட்டில் இருந்த சோபாவில் இருப்பதை பார்த்தவளுக்கு, அவளையும் அறியாமல் இதயம் படபடக்க ஆரம்பித்தது..‌.


தன் விழிகளின் கருவிழிகளை மட்டும் பக்கவாட்டாக திருப்பி மெல்ல திரும்பி பார்த்தாள். பார்த்தவளின் விழிகள் விரிந்து, அச்சத்தில் உறைந்து நின்றவளின், பிரிந்த இதழ்கள் அப்படியே உறைந்து நின்றது…


அகி இவ்வளவு அதிர்ச்சிக்கு காரணம் அவள் யாரை இவ்வளவு நேரம் ராட்சஷன், அரக்கன் என திட்டினாளோ அவனே அவளின் கண் முன்னால் அமர்ந்திருந்தது தான்…


“எங்கோ இருப்பவனுக்கு தான் திட்டுவது கேட்கவா போகிறது?” என நினைத்துக் கொண்டே மானாவாரியாக திட்டி முடித்து விட்டாள்…


அவளால் பிரம்ம ராட்சஷன் என அழைக்கப்படுபவனோ, ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் காலின் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.


கண்களில் அனலுடன், எதிரில் இருப்பவளை சுட்டுப் பொசுக்கிடும் கோபத்தில் இருந்தவனின் முகமோ கரும்பாறையென இறுகியிருந்தது…


இவனா? என அதிர்ச்சியில் உறைந்து இருந்தவளின் இதயத்தில் ஏனோ அவளையும் அறியாமல் ஒரு இதம் பரவுவதையும் தடுக்க முடியவில்லை. அவளின் பார்வை முழுவதும் ஒட்டுமொத்தமாக அவனின் மேல் தான் விழுந்திருந்தது.


அவன் பார்வையோ அவளை விட்டு எங்கும் செல்லவில்லை. அவன் அணிந்திருந்த கூலிங்கிளாஸின் மூலம் அவன் யாரைப் பார்க்கிறான் என்பது அவளுக்குத்தான் புரியாமல் இருந்தது. அருகில் இருந்த சஞ்சுவிற்கு அவன் பார்வை அகியின் மேல் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.


இருவரின் மௌனத்தை கலைக்கும் விதமாக, சஞ்சுவே பேச ஆரம்பித்தாள்.


“இப்போ தான் ஆஸ்திரேலியாவுல இருந்து வந்தீயா ருத்திரா?”


“ம்ம் ஆமா‌. நான் இல்லைங்கிற திமிர்ல தானே நிறைய பேர் போனை எல்லாம் போட்டு உடைக்கிறாங்க” என அழுத்தமாக சொன்னவனின் பார்வையோ அங்கிருந்த அகியின் மேல் தான் விழுந்தது.


அவன் சொன்ன வார்த்தையில் தானாக தலை கவிழ்ந்தவாறு நின்றிருந்தாள் அகி. அகியின் நிலையை பார்த்த சஞ்சனாவிற்கு ‘அகி ஏதோ தவறு செய்திருக்கிறாள்’ என்பது புரிந்தாலும், இப்பொழுது அகிக்கு சாதகமாக பேசினால்.. கண்டிப்பா ருத்திரா தன்னை இந்த வீட்டிற்குள்ளேயே விடமாட்டான்” என்பது நன்றாக புரிந்தது.


“ருத்திரா. அகி ஏதோ தெரியாம பண்ணியிருப்பா” என ருத்திரனின் கோபத்தை குறைக்க முயற்சி செய்தாள்.


“நீ பேசாதே!. உனக்கு இங்கே என்ன நடந்ததுன்னு எதுவும் தெரியாம அவளுக்காக சப்போர்ட் பண்ணி என்கிட்ட வாங்கிக் கட்டிக்காதே!” என்றவனின் வார்த்தையில் அவ்வளவு அழுத்தமும், கோபமும் தெறித்தது.


“நான் அவளுக்காக சப்போர்ட் பண்ணலை ருத்திரா. அவ வயித்துல வளர்ற குழந்தைக்காக தான் சப்போர்ட் பண்றேன். அவளை நல்லா பாருடா. அவ முகத்தைப் பாரு. ரெண்டு நாளா சாப்பிடாம பட்டினியாவே இருந்திருப்பா போல. எழுந்து நிக்கிறதுக்கே தெம்பு இல்லாம இருக்காடா. விட்டுருடா அவளை” என தன் நண்பனிடம் அகியின் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைக்க,


“யாரை விட்றணும் சஞ்சு. இவளையாஆஆ. இவ பண்ண தப்பு என்னன்னு தெரிஞ்சும் இப்படி பேசுற சஞ்சு. உனக்கென்ன பைத்தியமாஆஆ” என ரௌத்திரத்துடன் கத்தியவனின் வார்த்தைகளில் அப்படியே மயங்கி விழுந்தாள் அகி.


அகி மயங்கி விழப்போவதை உணர்ந்த சஞ்சு தான் வேகமாக அவளை அணைத்துக் கொண்டாள். அப்பொழுதும் இருவரையும் வெற்றுப் பார்வை தான் பார்த்தான் ருத்திரன்.


“இனிமேல் தான் என்ன பேசினாலும் அது அவனிடத்தில் எடுபடாது” என நினைத்தவள், அகியை மெல்ல அணைத்தவாறே அருகிலிருந்த சோபாவில் சாய்த்து அமர வைத்தாள்…


அவளை அமர வைத்ததுமே கிச்சனை தான் நோக்கி ஓடினாள் சஞ்சு. சிறிதளவு தண்ணீரை கொண்டு வந்தவள் அகியின் முகத்தில் ஊற்றி எழுப்பி அமர வைத்தாள்.


“சஞ்சு” என மெல்லிய குரலில் அழைத்தவளின் கண்களில் ஒரு வித இயலாமை தான் தோன்றியது.


“ப்ச்ச். டைம் வேஸ்ட்” என இருவரின் காதுபட உரைக்க சொல்லிவிட்டு தன்னறையை நோக்கி சென்று விட்டான் ருத்திரன்.


கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அகியின் அருகில் அமர்ந்தாள் சஞ்சு. “என்னாச்சி அகி” என்றதுமே, அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கத்தை ஒன்று விடாமல் கொட்ட ஆரம்பித்தாள். ஏதோ ஒரு ஆத்திரத்திலும், கோபத்திலும் தான் போனை உடைத்ததை சொல்லி முடித்தவளின் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது.


“ப்ச்ச். அகி பர்ஸ்ட் ஒரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்கோ. அவனுக்கு கோபம் கண்மண் தெரியாம வருதுன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் ஏன் அவன் கோபப்படுற மாதிரி நீ நடந்துக்கிற டா” என்றவளை சிறு கோபத்துடன் பார்த்தாள் அகி.


“அப்போ அவருக்காக நான் எல்லா விஷயத்திலும் இறங்கிப் போகணும். அவர் எனக்காக எதுவுமே செய்ய மாட்டாரா?” என்றவளின் அழுகுரலே சொல்லியது. அவன் மீது வைத்திருக்கும் காதலை.


“அகி. நான் அப்படி சொல்லலை. எல்லாத்துக்குமே அழுகை தீர்வாகாது. முதல்ல நீ யோசி. அவன் ஏன் உன்மேலே இவ்வளவு கோபப்படுறான்னு?”


“அதான் எனக்கே தெரியுமே?. அவரோட தம்பியை நான்தான் கொன்னுட்டேன்னு நினைக்கிறாரு. இது அவர் தம்பியோட குழந்தைன்னு அவர் நம்புறாரு” என்றவளை அழுத்தமாக பார்த்தாள் சஞ்சு.


“அப்போ இதுதான் ரீசன்னு நீ நினைக்குறீயா?”


“ஆமா. இதைத்தவிர்த்து வேற என்ன இருக்கு? அவரோட தம்பி குழந்தை அனாதையா வளரக்கூடாதுன்னு என் கழுத்துல தாலியை கட்டி பொண்டாட்டிங்கிற அந்தஸ்தை அவர் கொடுத்துட்டார்னு நினைக்கலாம்”


ஆனா ஊர் என்னை எப்படி சொல்லுது தெரியுமா?. தம்பி கூட பழகிட்டு அண்ணன் கையால தாலி வாங்கின ஜெகஜாலக் கில்லாடின்னு சொல்லுது”


“இப்போ சொல்லு சஞ்சு. இவ்வளவு அவப்பெயர் எனக்குத் தேவையா?. நான் எந்த தப்புமே பண்ணலையே” என கண்ணீருடன் கூறியவளை தோளோடு அணைத்துக் கொண்டாள்.


“எல்லாப் பொண்ணுங்க மாதிரியும் நானும் படிக்கணும், வேலைக்கு போகணும், அப்பா அம்மாவை வச்சி காப்பாத்தணும்னு தானே நினைச்சேன்” என்றவள் உடைந்து அழ ஆரம்பித்து விட்டாள்…


அவள் அழுத கொண்டிருக்கும் பொழுதே அவளின் முதுகை நீவிவிட்டவாறே, தான் கொண்டு வந்த லெமன் ஜுஸை அவளிடம் நீட்டினாள்.


தன் மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்ததாலோ? என்னவோ? வறண்ட நாவிற்கு இதமாக ஜுஸை வாங்கிப் பருகினாள் அகி.


அவளிடம் டம்ளரை வாங்கிய சஞ்சுவின் விழிகள் எதேச்சையாக மேலே இருந்த மாடியை நோக்கி திரும்பிட, அங்கு அவர்கள் இருவரையும் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தான் ருத்திரன்…


“எல்லாம் உன்னால் தான்” என குற்றஞ்சாட்டும் பார்வையுடன் சஞ்சு அவனை முறைத்துப் பார்க்க,


“அவள் செய்த தவறுக்கான தண்டனை இதுதான்” என அலட்சியமாக முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு சென்றான் ருத்திரன்.


அன்று மாலை வரை அகியுடன் துணைக்கு இருந்து அவளை தேற்றியது சஞ்சு தான். அவள் இருந்ததால் மட்டுமே சிறிதளவு நிம்மதியான மூச்சு விட முடிந்தது அகியால்.


எத்தனை நேரம் அவளால் காப்பாற்ற முடியும்? எப்படியும் அந்த அரக்கனின் கோபத்திற்கு தான் பலியாகப் போகிறோம் என்பது அகிக்கு நன்றாக புரிந்தது.


இரவு வேளையில் சஞ்சு செய்து வைத்த சமையலை சாப்பிட்டு விட்டு தன்னறைக்குள் அடங்கிக் கொண்டாள் அகி. அவனுக்கும் சற்று சோர்வாக இருந்ததாலோ? என்னவோ அவனும் சாப்பிட்டு விட்டு அறைக்குள் இருந்துக் கொண்டான்…


அடுத்த நாள் காலை வேளையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அகி மெல்ல எழுந்து அமர, அவளுக்கு நேர் எதிராக சாய்வு நாற்காலியில் அமர்ந்து, காபியை ரசித்து ருசித்துப் பருகிக் கொண்டிருந்தான் ருத்திரன்.


அவனைப் பார்த்ததுமே வார்த்தைகள் தடுமாறிட, “நீங்க இங்கே” என்றவளை முறைத்துப் பார்த்தான்


“இது என் வீடு. இங்கே நான் எங்கே வேணும்னாலும் இருப்பேன். அதுக்கு உன்னோட பெர்மிசன் எனக்கு தேவையில்லை. எனக்கு சேர்ல இருக்கவும் உரிமையிருக்கு. உன் கூட ஒரே பெட்ல இருக்கிறதுக்கும் உரிமை இருக்கு” என அழுத்தமாக சொன்னவனின் வார்த்தையில் சட்டென்று தன் வாயை மூடிக் கொண்டாள் அகி


அவளின் செய்கையை பார்த்தவன், “இப்படியே எல்லா நேரமும் நீ இருந்தா உனக்கு நல்லது. அதை விட்டுட்டு சஞ்சு பேச்சை கேட்டுட்டு ஏதாவது பண்ணுன அப்புறம் நடக்ககற எதுக்கும் நான் பொறுப்பில்லை” என எச்சரிக்கும் குரலில் மிரட்டிவிட்டு அவன் வெளியே சென்று விட்டான்…


எழுந்து எப்பொழுதும் போல் குளித்து முடித்து வெளியே வர அவளின் அருகில் வந்து நின்றான் ருத்திரன்…


தன்னருகில் வந்து நின்றிருந்தவனை பார்க்கும் பொழுதே நெஞ்சில் நீர் வற்றிப் போனதைப் போல் உணர்ந்தாள் அகி.‌


ஏனோ அவனின் அருகாமை பயத்தையும், பதட்டத்தையும் ஒரு சேர கொடுத்தது..‌.


‘என்னருகில் வராதே’ என உள்ளம் கூக்குரலிட, மௌனமாக நின்றிருந்தவளின் விழிகளில் தேக்கி வைத்திருந்த காதலை கண்டு கொண்டவனின் முகமோ இறுகிப் போயிருந்தது…


அவனின் இறுகிய தோற்றமே அவளுக்கு மேலும் மேலும் பயத்தைக் கொடுத்தது.


“உனக்கு ஒரு விருந்தாளியை அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன். வா அவனை வரவேற்க போகலாமா?” என அகியின் தோளில் தன் வலிமையான கரங்களால் சுற்றி வளைத்து வெளியே வாசல் வரை அழைத்துக் கொண்டு வந்தான்…


தன் தோளில் விழுந்த கரங்களை பார்த்தவளுக்கு ஏனோ தன்னையும் அறியாமல் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது…


வாசல் வரை அகியை அழைத்து வந்தவன், தோட்டத்தை நோக்கி கையை நீட்டினான். அவன் கை நீட்டிய திசையில் பார்த்த அகிக்கு அங்கு நின்றிருந்தவனைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது…


அதிர்ச்சியில் உறைந்து நின்றவளின் காதோரம் தன் அடர்ந்த தாடியினை கொண்டு உரசியவாறே, “இவன் தான் இனி என்னோட ட்ரம்ப் கார்டு. இவனை வச்சி நான் ஆடப்போற ஆட்டத்துக்கு பிள்ளையார் சுழி போடலாமா பேபி?” என்றவனின் பட்டை உதடுகள் அவளின் காதோரம் தென்றலாய் தீண்டி சிலிர்ப்பை உண்டாக்கினாலும், அவனின் அழுத்தமான சிவந்த உதடுகளின் மூலம் உதிர்த்த வார்த்தைகளோ அச்சத்தில் அவளை உறைய வைத்தது… 
மனம் 4


“அக்கா” என ஓடி வந்த அபியை பார்த்தவளுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது. ருத்திரனின் கைச்சிறைக்குள் இருந்தாலும் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது அகிக்கு.


“எப்படியிருக்க க்கா?” என்ற அபியின் குரல் எங்கோ தொலைவில் இருந்து கேட்பதை போல் உணர்ந்தாள் அகி.


அவள் எங்கே அபியை பார்த்தாள்? பக்கவாட்டாக திரும்பி ருத்திரனை தான் பார்த்தாள். அவளின் பேயறைந்தாற் போன்ற முகத்தைப் பார்த்த அபிக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.


“இந்த அரக்கன் தன் அக்காவை நன்றாக மிரட்டி வைத்திருக்கிறான்” என்பது புரிந்தவனுக்கு, கோபத்தில் அரும்பு மீசை துடிக்க, அதே வேகத்துடன் ருத்திரனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.


அவனின் முறைப்பை பார்த்த ருத்திரனுக்கு சிரிப்பு தான் வந்தது. சிறு பாலகன் என்று அவனை எண்ணி எள்ளி நகையாடத்தான் தோன்றியது.


“என்ன அபிமன்யு அக்காவை பிரிஞ்சு ஒரு மாசம் கூட இருக்க முடியலையா?” எகத்தாளமாய் கேட்டவனின் முகத்தை அப்படியே அக்குவேறாய் ஆணிவேறாய் பிரித்து போடும் வேகம் அபிக்கு வந்தது.


ஆனாலும் இருக்கும் சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தவன், “இங்கே எனக்குத் தெரிஞ்சவங்க பேக்கரி வச்சிருக்காங்க. அங்கே ரெண்டு மாசம் வேலை பார்க்கலாம்னு வந்திருக்கேன்” என பல்லைக் கடித்துக் கொண்டு பதில் கூறினான்.


அபியின் முகத்தில் தோன்றிய ஒவ்வொரு உணர்வுகளையும் கூர்ந்து கவனித்த அகிக்கு அவனின் கோபமும் புரிந்தது. எதிரில் இருப்பவனின் வன்மமும் புரிந்தது.


இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்க ஆரம்பித்து விட்டாள். இருவரும் மோதிக் கொண்டால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது அகி தானே. தன் தம்பியை எப்படியாவது ஊருக்கு போக செல்லவேண்டுமென்று நினைத்தாள்…


“என்ன அபி வேலைக்கு போகப்போறீயா? உனக்கு என்னடா வயசாகுது?. இந்த வயசுல எதுக்கு வேலைக்குப் போற? நீ நிறைய படிக்கணும்னு சொல்லிட்டு இருந்தீயே.!” என தம்பியின் வாழ்க்கையை பற்றிய கவலையில் ருத்திரனை மறந்து அபியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.


“அக்கா இப்போ அன்வெல் எக்ஸாம் லீவுக்கா. ரெண்டு மாசம் வேலை பார்த்தா கணிசமா ஒரு தொகை கிடைக்கும். நம்மளுக்கு நல்லதுன்னு தான் இங்கே வந்தேன்” என அழுத்தமாக ருத்திரனை பார்த்துக் கொண்டே கூறினான்.


“அப்படியே உன்னையும் தினமும் வந்து பார்க்கலாம்னு இங்கேயே வந்துட்டேன்” என்றவனின் அன்பில் நெக்குருகி போனாள் அகி.


அவளுக்கு நன்றாக தெரியும் அவன் தனக்காக தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்று. அவன் உழைத்து தான் சம்பாதிக்க வேண்டுமென்று அவனுக்கு எந்த அவசியமும் இல்லை.


“சரி அபி. நீ வேலை இங்கே தான் செய்யணுமா? ஊர்ல எவ்வளவோ வேலை இருக்கே” என்றவளின் குரலில் தம்பியின் மேல் அவள் வைத்திருந்த அக்கறையும், அன்பும் தெரிந்தது.


“இல்லை அக்கா. அங்கே வேலை பார்க்கிறதை விட இங்கே பார்த்தா தான் நமக்கு நல்லது. நான் அடுத்த தெருவுல தான் ஒரு ரூம்ல தங்குறதுக்கு ரெடி பண்ணியிருக்கேன். உனக்கு ஏதாவது உதவி தேவைன்னா என்னை கண்டிப்பா கூப்பிடு. நான் ஓடி வந்திடுவேன்” என பொறுப்பான ஆண்மகனாய் சொன்னவனை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்த ருத்திரன்,


“உங்கக்காவுக்கு நீ உதவி பண்ணப் போறீயா?. முதல்ல உனக்கு இந்த வேலை கிடைக்குதான்னு பாரு” என்றவனின் வார்த்தையில். இருவரும் ஒன்று போல் ருத்திரனை தான் புரியா பார்வை பார்த்தனர்.


“ஏன் என் தம்பிக்கு வேலை கிடைக்காது. அவன் டேஸ்ட்டா கேக் எல்லாம் செய்வான். சூப்பரா சமைப்பான்” என்ற அகியை, ‘ஆஹான்’ எனும் விதமாய் பார்த்தான் ருத்திரன்…


“நல்லா சமைச்சா நம்ம வீட்டுலேயே சமையல்காரனா இருக்கச் சொல்லு” என்றவனின் வார்த்தையில் விதிர்விதிர்த்துப் போனாள் அகி.


“இங்கே சமையல்காரனாக தன் தம்பி கஷ்டப்பட வேண்டுமா? தான் ஒருத்தி மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை போதாதா?” என்றவளுக்கு உள்ளம் பதறிட,


“இல்லை. இல்லை அவன் வெளியில வேலை பார்த்துப்பான்” என அவசரமாக அகி மறுத்து சொல்வதற்குள்.. “சரி மாமா” என அபி சொல்வதற்கும் சரியாக இருந்தது.


‘மாமா’ என்றவனின் அழைப்பில் புருவம் சுருக்கிப் பார்த்தான் ருத்திரன்.


“மாமாவா? யாருக்கு யார் மாமா?” என்றவனின் முகம் கரும்பாறையென மாற ஆரம்பித்தது. அபியின் ‘மாமா’ என்ற அழைப்பை சட்டென்று அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


“கால் மீ சார்” என ஆளுமை கலந்த குரலில் கூறினான் ருத்திரன்.


அவன் அழுத்தமாக கூறியதை பார்த்த அபிமன்யுவின் இதழோரம் சிறு கர்வப்புன்னகை தோன்றிட, “அதெப்படி மாமாவை சார்னு கூப்பிட முடியும். இதென்ன சீரியலா? புருஷனை சார், மோர்னு பேஷனா கூப்பிடுறதுக்கு. இது வாழ்க்கை மாமா. எங்க அக்காவோட ஹஸ்பெண்ட் எனக்கு மாமா தானே” என அழுத்தமாக கூறினான்.


எதிரில் இருப்பவன் சிறு பையன் தானே என்று ருத்திரன் நினைக்க, அவனோ மிக தெளிவாக இருந்ததை கண்கள் இடுங்க பார்த்தான்.


“ம்ம்ம். அக்காவோட புருஷனை மாமான்னு கூப்பிடுறது தப்பில்லை தான். ஆனா என் வீட்டு சமையல்காரன் என்னை மாமான்னு கூப்பிடுறது என்னோட ஈகோ தடுக்குதே மிஸ்டர்…” என இழுத்தவாறே பார்த்தவனின் கண்களோ கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.


“அபிமன்யு” என்றவனின் தாடை இறுக ஆரம்பித்தது. ருத்திரனின் அவமான வார்த்தைகளால். இருந்தாலும் தன் அக்காவிற்காக அவன் சொல்லும் வார்த்தையை அடக்கிக் கொண்டவன் இதழ்களில் சிறு புன்னகையை தவழ விட்டான்…


“ஓகே சார். இனி நான் உங்களை சார்னே கூப்பிடுறேன். ஆனா எக்காலமும் என் அக்காவை மேடம்னு கூப்பிட மாட்டேன். யார் நினைச்சாலும் எங்களோட பந்தத்தை எதுவும் பண்ண முடியாது” என்றவன் தான் கொண்டு வந்த தோள்பையினுடன் உள்ளே நுழைந்தான்.


அவன் உள்ளே நுழைவதை பயம் நிறைந்த பார்வையுடன் பார்த்தாள் அகி. தன்னையே வார்த்தைகளாலும், செயல்களினாலும் மிரட்டி வைத்திருக்கும் ருத்திரன்.. சிறு பையனான அபியினை என்ன பாடு படுத்துவான்? என நினைக்கும் பொழுதே பயம் வந்து தானாக தொற்றிக் கொண்டது.


மான் போன்ற மிரண்ட விழிகளுடன் ருத்திரனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வையோ? அவனிடம் கண்களாலேயே கெஞ்சியது ‘எங்களை விட்டுவிடு என்று’.


“என்ன உன் தம்பியை ஏதாவது பண்ணிருவேன்னு பயமா இருக்கா பேபி?” என்றவனின் வார்த்தையில் தானாக தலைகவிழ்ந்து நின்றாள்.


அவள் நினைத்ததும் அதுவே தான். தன் தந்தையையே விட்டு வைக்காதவன், சிறு வயது பாலகனை விட்டு வைப்பானா? என மனதோடு போராடிக் கொண்டிருந்தாள்.


“எப்படியாவது அபிமன்யுவை இந்த வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்?” என உள்ளம் தவியாய் தவிக்க ஆரம்பித்தது.


“என்ன பேபி? அவ்வளவு பயமா என் மேலே?ப்ச். சின்னப் பையன் மேலே கை வைக்கிற அளவுக்கு நான் தாழ்ந்து போகமாட்டேன் பேபி” என்றவனின் விழிகளோ, அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தது‌.


“என் தம்பி கொஞ்சம் துடுக்கா பேசுவானே தவிர. ரொம்ப நல்லவன். என் மேலே உள்ள பாசத்துல தான் இங்கே வந்துட்டான். ப்ளீஸ் அவனை ஒன்னும் பண்ணிடாதிங்க” என்றவளின் மெல்லிய குரலில் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான் ருத்திரன்.


முதல் முறையாக அவன் சிரித்து இப்பொழுது தான் பார்க்கிறாள். அவன் சிரிக்கும் பொழுது விழுந்த கன்னக்குழியில் பேதை மனம் விழுந்து தவித்தாலும். அடுத்த கணமே அவனின் சிரிப்பு அவளை பயமுறுத்தியது…


இதழ்களில் சிரிப்பும், கண்களில் வன்மத்துடன் ஒருவனால் இப்படி அரக்கத்தனமாக சிரிக்க முடியுமா? என நினைத்தவளுக்கு, அரக்கத்தனத்தின் மொத்த உருவமாய் நின்றிருந்த ருத்திரனை பார்க்கும் பொழுதே பயம் தானாக வந்து தொற்றிக் கொண்டது.


அவளின் மருண்ட விழிகளை பார்த்தவன் சட்டென்று தன் சிரிப்பை நிறுத்திக் கொண்டான். அவளின் தோளினை அழுத்தமாக பற்றியவன், “உன் தம்பியை ஒன்னும் செய்யக்கூடாதுன்னா நான் சொல்றதை நீ செய்யணும்” என்றவனின் விழிகளோ அவளின் விழிகளை தான் பார்த்துக் கொண்டிருந்தது அழுத்தமாக அதே சமயம் பழிவெறியுடன்…


“என்..ன பண்ணனும்?” என திக்கித் திணறியவாறே கேட்டவள், அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் உயிரற்ற சிலையாய் உறைந்து விட்டாள்…


அவளின் உறைந்த நிலையை பார்த்து வன்மத்துடன் சிரித்தவாறே வீட்டிற்குள் நுழைந்தான் ருத்திரன்.


வீட்டிற்குள் நுழைந்த அபிமன்யு அந்த வீட்டை தான் சுற்றிப் பார்த்தான். வீட்டின் வெளிப்புறங்களில் இருந்த பசுமையை காட்டிலும், உள்புறம் தேக்குமரத்தினால் எங்கும் இழைத்து வைத்திருந்தது.


வீட்டையே சுற்றிப் பார்த்தவனின் அருகில் வந்து நின்றான் ருத்திரன்.


“என் வீட்டு சமையல்காரனுக்கு தனியா ரூம் எல்லாம் கொடுக்க முடியாது. அந்த ஸ்டோர் ரூம்ல தங்கிக்கோ” என்ற ருத்திரனை பார்த்து முறைத்துவிட்டு அவன் கைகாட்டிய அறைக்கு சென்று விட்டான்.


முறைத்துக் கொண்டு செல்பவனை பார்த்து நமட்டுச் சிரிப்புடன் தன்னறைக்கு சென்று விட, அங்கு தனியாய் நின்றது அகி மட்டுமே!.


அந்த ஸ்டோர் ரூமிற்கு உள்ளே சென்ற அபிமன்யு அந்த அறையை சுற்றிப் பார்த்தான். ஆங்காங்கு ருத்திரனின் புகைப்படம் இருந்தது, அவனுடன் இன்னொரு ஆண்மகன் சிரித்தாற் போன்று இருந்த போட்டோவினை உற்றுப் பார்த்தான்.


இருவரின் முகஜாடையையும் பார்த்த அபிமன்யுவிற்கு யாரும் சொல்லாமலே புரிந்தது. ருத்திரனுடன் இருப்பது அவனின் உடன்பிறந்த தம்பி என்று.


அடுத்ததாக இருந்த போட்டோவினை உற்றுப் பார்த்தான் அதில் ஒரு பெண்மணி சிரித்த முகத்துடன் இருந்தார்.


அந்தப் பெண்மணியை பார்த்தவனுக்கு விழிகள் இடுங்கியது. “எங்கேயோ இவரை பார்த்திருக்கிறேனே!” என சிந்தித்துக் கொண்டிருந்தான்.


ஏனோ அந்தப் பெண்மணியின் போட்டோவினை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை.


அடுத்ததாக இருந்த போட்டோவினை பார்த்தவனின் விழிகள் உயர்ந்து சற்று ஆச்சர்யத்தை காட்டியது. அவனால் நம்பவே முடியவில்லை. அந்தப் போட்டோவினையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தன் தோளில் ஒரு கரம் விழும் வரை…


சட்டென்று தன் தோளில் விழுந்த கரத்தில் திரும்பி பார்த்தவனுக்கு அங்கிருந்த இளம் வயது பெண்ணை சட்டென்று இனம் காண முடியவில்லை…


“நீதான் அகி தம்பியா?”


“ம்ம். ஆமா நான் தான் அபிமன்யு.. ந்நீங்க.. யாரு?”‌‌ என்றவனின் விழிகளோ மறுபடியும் அந்தப் புகைப்படத்தினை நோக்கிச் சென்றது.


“என்ன அந்தப் போட்டோவையே உத்துப் பார்த்துட்டு இருக்க?”


“இந்தப் போட்டோ?” என்றவன் கைகாட்டிய திசையில் இருந்த புகைப்படத்தை பார்த்த சஞ்சனாவின் விழிகள் சட்டென்று கலங்கி விட்டது.


சஞ்சுவின் கலங்கிய கண்களை பார்த்துக் கொண்டே, “மாமா டாக்டராஆஆ” என கேட்டவனின் பார்வை அந்த புகைப்படத்திலேயே பதிந்திருந்தது.


“ம்ம்ம்‌ எம்.பி.பி.எஸ் டாக்டர் அவன். நான் கைனகாலஜிஸ்ட் படிக்கும் போது அவன் ஜென்ரல் படிச்சான். ரொம்ப ஆசைப்பட்டு இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தான்.


அவனால் முடிந்த அளவுக்கு ஒரு உயிரை காப்பாத்தணும்னு தான் இந்த படிப்பையே தேர்ந்தெடுத்தான்.. அவன் ஸ்டதெஸ்கோப்ப கழுத்துல மாட்டும் போது அவ்வளவு கம்பீரமா இருக்கும்.


“இப்போ அந்த கம்பீரத்தை தொலைச்சிட்டு, அவனோட உறவுகளை பிரிஞ்சு வாழுறதுக்கு ஒட்டுமொத்த காரணமும் உன் அக்கா தான்.


“உன் அக்கா பண்ண தப்பால அவனோட குழந்தையை கண்ணு முன்னாடி இழந்துட்டான். உங்கக்காவை அவன் உயிரோட அவன் வச்சிருக்கிறதே பெரிய விஷயம்.


“என்னைக்கு அவனோட கண்ட்ரோல் அவன் இழக்குறானோ? அன்னைக்கு உன் அக்கா உயிரோடு இருக்கமாட்டா” என அபியின் தலையில் இடியை இறக்கி விட்டு சென்றாள் சஞ்சு.
 
Last edited:
மனம் 5


சஞ்சு சொன்ன வார்த்தை மீண்டும் மீண்டும் அபியின் காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.


“குழந்தையா?” என நினைக்கும் பொழுதே பல வித குழப்பங்கள் அவன் முகத்தில் படர ஆரம்பித்தது.


சட்டென்று குழந்தை என்பதை அவனின் உள்மனம் ஏற்க மறுத்தது. ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது என்றால் தன் தமக்கை அவருக்கு இரண்டாந்தாரமா? என்ற நினைப்பே அவனுக்கு வேப்பாங்காயை விழுங்கியது போன்று கசக்க ஆரம்பித்தது.


சஞ்சு அறையை விட்டு வெளியே செல்வதற்குள், “என்ன சொல்றீங்க? அவருக்கு குழந்தை இருக்கா? அப்போ என் அக்காவை ஏமாத்தி தான் ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணியிருக்காரா?அந்த பிராடு” என கோபத்தில் சீறினான்.


அபியின் முறையற்ற வார்த்தைகளில் சட்டென்று கோபம் வந்தது சஞ்சுவிற்கு.


“ஏய்ய்ய்.. இதுக்கு மேலே ஒரு வார்த்தை ஃபிராடு அப்படின்னு பேசுன. சின்னப் பையன்னு கூட பார்க்க மாட்டேன். அப்படியே அறைஞ்சுருவேன் பார்த்துக்கோ” என கோபத்தில் சற்று கடினமான குரலில் பேசிய சஞ்சுவை முறைத்துப் பார்த்தான் அபி.


“எங்கக்காவை வலுக்கட்டாயமா ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ண அவரை ஃபிராடுன்னு சொல்லாம வேற எப்படி கூப்பிட சொல்லுறீங்க?. எங்கக்கா வாழ்க்கையை இப்படி அடியோடு அழிச்சிட்டு அவர் வெளியே நல்லவன் வேஷம் போட்டுட்டு இருக்காரா?” என கோபத்தில் முறைத்தபடி கேட்டவனை எரிக்கும் பார்வை பார்த்தாள் சஞ்சு...


“சும்மா உங்கக்காவை ஏமாத்துனா, ஏமாத்துனான்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு இருக்காதே அபி. உனக்கு ருத்திரனை பத்தி என்ன தெரியும்? அவனைப் பத்தி தெரியாம ஒரு வார்த்தை தப்பா பேசுனா? அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”


“ச்சீ. வாயை மூடுங்க. நீங்க யாரு? என்னை மிரட்டுறதுக்கு. இப்போவே எங்கக்காவை கஷ்டப்படுத்துறவனை கொன்னா தான் என் ஆத்திரமே அடங்கும்” என கோபத்தில் வேகமாக சஞ்சுவை தாண்டி ருத்திரனின் அறையை நோக்கிச் சென்றான்.


அவனால் இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன் தமக்கையின் எதிர்காலத்தை இப்படி ஒருவன் கேள்விக்குறியாக்குவான்? என கனவில் கூட அவன் நினைத்துப் பார்த்ததில்லை.


இரண்டாம் மாடியில் இருக்கும் அறைக்கு எவ்வளவு வேகமாக படியேற முடியுமோ? அவ்வளவு வேகமாக படியேறிச் சென்றான் அபி. ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதைப் போல் ஓடிய அபியை பிடிக்க முடியாமல், மூச்சு வாங்க இரண்டாம் மாடிக்கு சென்றது சஞ்சனா தான்…


“அபி எங்கே போற? நில்லு. ஸ்டாப் இட் மேன்” என்ற சஞ்சனாவின் குரல், வேகமாக ஓடிக்கொண்டிருந்தவனின் காதில் விழுந்தாலும், அதை அவன் கண்டுகொள்ளவில்லை.


வேகமாக ருத்திரனின் அறைக்கு முன்னால் நின்று கதவை உடைக்காத குறையாக தட்ட ஆரம்பித்தான்…


“டேய்ய். வெளியே வ்வவாடா… வெளியே வ்வாய்ய்யாஆஆ முதல்ல” என கணீரென்று ஒலித்த குரல் அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது.


“அபி. ஸ்டாப் இட். பீகைவ் யுவர் செல்ஃப். ஏன் இப்படி அன்டீசெண்டா பீகேவ் பண்ற” என்ற சஞ்சுவை திரும்பி உக்கிரமான ஒரு பார்வை பார்த்தான் அபி.


அப்பார்வையை கண்டு பட்டென வாயை மூடிக் கொண்டு நின்றாள் சஞ்சு.


பார்வையா அது? சுடர் விட்டு எரியும் எரிதழலாய் எதிரில் இருப்பவரை சிதைக்க வல்லது. அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சுவிற்கே சற்று பயம் கொடுத்தது அவனின் பார்வையின் வீச்சை கண்டு.


“நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” என்றவன் மறுபடியும் அந்தக் கதவை உடைத்து விடும் வேகத்தில் கதவை தட்ட ஆரம்பிப்பதற்குள் சட்டென்று கதவு திறந்து கொண்டது.


“என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்படி கதவை போட்டு உடைக்கிற? கதவு உடைஞ்சா திரும்பி வாங்கித்தர உன்னால முடியுமா?”


“எங்கக்காவை இப்படி ஏமாத்துறீங்களே! உங்களுக்கு வெட்கமாயில்லை” என்ற அபியை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, அவன் பக்கத்தில் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்த சஞ்சுவை அழுத்தமாக பார்த்தான் ருத்திரன்.


சஞ்சுவின் பதட்டமான முகமும், படபடப்பான சூழ்நிலையும் அபியின் கோபமும் அவனுக்கு சூழ்நிலை சரியில்லை என்பதை உரைத்தாலும், அதை நினைத்து கவலைப்பட தான் அவனுக்கு நேரமில்லையே…


“உங்கக்காவை ஏமாத்தி எனக்கு என்ன லாபம்? அவ பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் பண்றா அவ்வளவுதான்” என்றவனின் சட்டையை சட்டென்று கொத்தாக பிடித்திருந்தான் அபி.


அபியின் செய்கையை பார்த்த சஞ்சுவிற்கே கிலி பிடித்துக் கொண்டது. “அபி என்ன பண்ற? விடு அவனை” என அபியின் கையை எடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் பொழுதே,


தன் சட்டையை பிடித்திருந்த அபியின் வலதுகையின் மணிக்கட்டினை அழுத்தமாக பற்றி ஒரு திருப்பி திருப்பிட வலியில் ஆவென்று அலற ஆரம்பித்தான் அபி…


வர்மக்கலை அறிந்தவனுக்கு அபி ஒரு விஷயமே இல்லை. தூசு தட்டுவதை போல் சாதாரணமாக தட்டிவிட்டு சென்று விடுவான்…


ஏனோ சஞ்சுவிற்கு தான் அபியை பார்க்க பாவமாக இருந்தது. “ருத்திரா அவனை விட்டுடு. பாவம் தெரியாம பண்ணிட்டேன். சின்னப் பையன் ப்ளீஸ் டா”


“என் மேலே கை வைக்கிற அளவுக்கு இவனெல்லாம் ஒரு ஆளா சஞ்சு” என சீறியபடி கேட்க,


“ப்ளீஸ் ருத்திரா. பாவம் சின்னப் பையன். விட்டுரு” என்ற சஞ்சனாவின் கெஞ்சல் குரலில் மனம் இறங்கியவன் சட்டென்று அவன் கையை விட்டு விட…


‘ருத்திரன் பிடித்த பிடி இன்னும் உயிர் போகும் வலியை கொடுத்தது அபிக்கு. இவனிடம் தன் வலிமையை காட்டினால் அது சரியாகாது’ என தீர்க்கமாக யோசித்தவன், “எங்கக்காவை என் கூட அனுப்பி வச்சிடுங்க?” என கைகளை முறுக்கி, தாடை இறுக ருத்திரனை நேருக்கு நேராக பார்த்துக் கேட்டான்…


அவனின் பதிலில் இளக்காரமான புன்னகை ஒன்றை உதட்டோரம் தவழவிட்டவன், “என்ன உங்கக்கா வேணுமா? அவ என்ன மார்க்கெட்ல விக்கிற வெங்காயமா?, தக்காளியா? கேட்டவுடனே தூக்கிக் கொடுக்கிறதுக்கு” என நக்கலுடன் கேட்க,


“இந்த நக்கல் பண்ற வேலையெல்லாம் இங்கே வேண்டாம். என் அக்காவை என்கூட அனுப்பி வைங்க? அவளுக்கு என்ன தலையெழுத்தா ரெண்டாந்தாரமா வாழ்றதுக்கு” என கோபத்தில் கேட்க,


“உங்கக்கா உன்கூட வந்தா கண்டிப்பா நீ அழைச்சிட்டுப் போகலாம். ஆனா பத்து மாசத்துக்கு அப்புறம் தான்?”


“ஏன் பத்து மாசத்துக்கு அப்புறம் அழைச்சிட்டுப் போகணும். இப்போ என்ன ஆச்சி எங்கக்காவுக்கு” என புருவம் சுருக்கிக் கேட்டான்…


“ஏன்னா ஷீ இஸ் ப்ரெக்னன்ட். என் குழந்தையை பெத்துக் கொடுத்துட்டு அவ வாழ்ந்தாலும் சரி. செத்தாலும் சரி. ஐ டோண்ட் கேர்” என்றவனின் வார்த்தையில் அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் மீண்டும் தலைதூக்கிட, மீண்டும் அவன் சட்டையை பிடிக்கப் போனான் அபி.


சஞ்சு சட்டென்று அபியின் கையைப் பிடித்துக் கொண்டாள். “மீண்டும் ஒரு முறை கை வைத்தால், ருத்திரன் கண்டிப்பாக அபியை சும்மா விடமாட்டான்” என அறிந்தவள் சட்டென்று இருவருக்கும் இடையில் நடக்கும் களேபரத்தை தன்னால் முயன்ற அளவு தடுக்க நினைத்தாள்…


“சஞ்சு இவனை எங்கேயாவது கூப்பிட்டு போ. இவனைப் பார்த்தாலே இர்ரிட்டெட்டிங் ஆகுது”


“சரி ருத்திரா நீ போ” என்றவள் அபியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே செல்வதற்கு முயற்சி செய்ய அபியோ நிற்கும் இடத்தில் அப்படியே நின்றிருந்தாள்…


“ஒரு நிமிஷம்” என்ற குரலில் ருத்திரன் கோபத்துடன் அபியை பார்க்க, அவனுக்கு சிறிதளவும் கோபம் குறையாமல் அபியும் பார்த்தான்.


“நீங்க பண்ற தப்பு என்னன்னு உங்களுக்குப் புரியலை. ஒரு பொண்ணோட உடலை மனசு ரொம்ப பலம்னு எல்லாரும் சொல்லுவாங்க. உண்மைதான். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் தாங்குற அந்த மனசை நீங்க ரொம்ப ஈசியா கொன்னுட்டீங்க. எங்கக்கா காதலோட நீங்க விளையாடிட்டீங்க. அவளோட காதலை வச்சே அவளை கொன்னுட்டீங்க. எங்கக்கா ஒரு கொலைகாரின்னு இவுங்க சொல்றாங்க. ஆனா அவ எப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியும்” என கோபத்துடன் பேசிவிட்டு வேகமாக கீழே இறங்கி சென்று விட்டான்…


அறைக்குள் வந்தவனுக்கு ஆயிரம் கேள்விகள் அவனின் மண்டையை உருப்போட்டுக் கொண்டிருந்தது.


தன் அக்கா ஒரு குழந்தையை கொன்றாளா? என்ற கேள்வியே அவனுக்குள் பூதாகரமாக எழுந்து அவனை பல வழிகளில் யோசிக்க வைத்தது.


“ஒரு ஈ எறும்பை நசுக்கிக் கொல் என்றாலே, அதுவும் உயிர் தானே” என வாதிடுபவள். அவளா? ஒரு உயிரை கொன்றாள். நிச்சயமாக இருக்காது? என யோசித்துக் கொண்டிருந்தவனின் காதில் சொடக்கிடும் ஓசை கேட்டு மெல்ல திரும்பி பார்த்தான்.


அங்கு நின்றிருந்தது ருத்திரன் தான். இவனின் முகத்தில் தோன்றிய ஒவ்வொரு உணர்வுகளையும் அவதானித்துக் கொண்டிருந்தான்.


“என்ன ட்ரீம் ல முழிச்சாச்சா? எதுக்கு வந்தீயோ அந்த வேலையை போய் பாரு. சமையல் காரனுக்கு வேலை சமையல் அறையில் தான் வேலை. இந்தா பிடி” என ஒரு சாட் அடங்கிய புத்தகத்தை அவனிடம் நீட்டினான்.


அதை வாங்கிப் பார்த்த அபியின் கண்கள் இடுங்கியது. யாருக்கு இந்த அட்டவணை சாப்பாடு? என சிந்திப்பதற்குள்ளாகவே,


“இது உன் அக்காவோட ஹெல்தி புட்டோட சார்ட் தான். அவ எந்த நேரத்துல என்ன சாப்பிடணும்? எவ்வளவு சாப்பிடணும்ங்கிறது இந்த சார்ட் ல இருக்கு. அதை அப்படியே பண்ணிக் கொடுத்திடு” என உறுமலாக சொல்லிவிட்டு செல்பவனின் முதுகை தான் பார்த்துக் கொண்டிருந்தான்…


“எங்கக்காவுக்கு எதுக்கு இந்த சார்ட். அவ என்ன நோயாளியா? அவ ப்ரெக்னன்டா இருக்கா அவ்வளவுதான். அவளுக்கு என்னப் பிடிக்குதோ? அதைத்தான் நான் சமைச்சு கொடுப்பேன். அவ மனசை நீங்க கொல்லலாம். ஆனா நான் அதை ஒரு காலமும் செய்யமாட்டேன்” என்றவனின் வார்த்தையை கேட்டு சத்தமாக சிரித்தான்.


சில வினாடிகள் சிரித்து முடித்தவன், “அகிஈஈஈஈஈ” என அந்த வீடே அதிரும்படி சத்தம் போட்டு அழைத்தான்.


அவன் போட்ட சத்தத்தில் அகி என்ற சிலை அப்பொழுதுதான் உயிர் பெற்றது. ருத்திரனின் சத்தம் கேட்டு, வேகமாக அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள் அகி.


அகி நுழைந்த அடுத்த கணமே ருத்திரன் அகியின் தோளில் கைப்போட, அகியோ தவிப்புடன் அபியை பார்த்தாள்…


“அவ நோயாளி இல்லை தான். ஆனா அவளோட வயித்துல வளர்றது என்னோட குழந்தை. அதனோட ஹெல்த் எனக்கு ரொம்ப முக்கியம்”


“ஒரு குழந்தையோட ஹெல்த் எவ்வளவு முக்கியமோ? அதை விட அதை சுமக்கிற எங்கக்காவோட மனசு எனக்கு ரொம்ப முக்கியம். அவ மனசை கொன்னுட்டு நீங்க உங்க குழந்தையை மட்டும் காப்பாத்திக்கலாம்னு நினைக்காதீங்க” என முகத்தில் அடித்தாற் போன்று உரைத்தவன் ரூமிற்கு வேகமாக வெளியே சென்றவன் கதவை அறைந்து மூடினான்.


அவன் அறைந்த வேகத்தில் அகியின் உடல் தூக்கிவாரிப்போட்டது. பரிதவிப்பாய் ருத்திரனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்…


 
மனம் 6


அவனருகில் நின்று கொண்டிருந்த அகி, தன் தம்பியின் கோபத்தில் மெல்ல ருத்திரனை விட்டு விலகி பிரிந்து செல்ல முயன்றாள்.


அவள் தன்னை விட்டு விலகுவதை உணர்ந்தவன், “அப்புறம் நான் சொன்னது நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்” என்றவனின் வார்த்தையில் சட்டென்று அவ்விடத்திலேயே நின்று விட்டாள்.


அவளால் எப்படி மறக்க முடியும்? அவன் சொல்லியதை கேட்கும் பொழுதே அறுவெறுப்பாக இருந்தது. அதை இன்றைய இரவே செயல்படுத்தப் போகிறான் என நினைக்கும் போதே உள்ளம் வெகுவாக கலங்கி நின்றது.


“என்கிட்ட இப்படி கேட்குறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வருது?” என உள்ளம் வெதும்ப, கண்களில் கண்ணீர் தளும்ப அவனைப் பார்த்து கேட்டாள்.


“ஏன் உன்கிட்ட கேட்காம வேற யார்க்கிட்ட கேட்கணும்?” என சுள்ளென்று எரிந்து விழ,


“ந்ந்நான்… ந்நான்ன்.. எப்படி சொல்லுவாள் அந்த வார்த்தையை?. சொல்லிவிட்டால் அவளின் நடத்தையை, அவளே தவறாக பேசுவது போல் ஆகாதா?”


“என்ன தடுமாறிட்டு இருக்க? உண்மையை சொல்ல கசக்குதா?” என்றவனை நிமிர்ந்து பார்க்கவே உள்ளம் அறுவெறுத்துப் போனது.


“எனக்குப் பிடிக்கலை” என தன் மனதில் இருந்ததை மெல்லிய குரலில் முணுமுணுத்தவாறே சொல்லி முடித்து விட்டாள்…


‘சத்தமாக சொன்னால் குரல்வளையே நெறித்துவிடுவான்’ என அறிந்தவள் மெல்லிய குரலிலேயே சொன்னாள்.


அவள் முணுமுணுத்தது அவன் காதில் தெளிவாக விழுந்தது. அதைக் கேட்டவனின் தாடை இறுக, அதுவரை குனிந்து நின்று கொண்டிருந்தவளின் கன்னங்களை தன் கைகளால் அழுத்தமாக பற்றி தன்னை நோக்கிப் பார்க்க வைத்தான்…


பார்வையா அது? ஆழகால விஷமாய் அவளை உள்ளிழுத்துக் கொல்ல பார்த்தது.


“ஏன் பிடிக்கலை?. நான் உன் புருஷன் தானே. நான் கட்டுன தாலியை தானே நீ சுமந்துட்டு இருக்க?. அப்புறம் ஏன்டி உனக்குப் பிடிக்கலை” என்றவனிடம் என்னவென்று சொல்வது?.


‘தான் ஏற்கனவே அணில் சாப்பிட்ட பழம் என்பதை’… அவன் விழிகளை பார்க்கவும் முடியாமல், அவனிடம் உண்மையை உரைக்கவும் முடியாமல் தடுமாறி நின்றாள்…


அவளின் அமைதியே அவனின் சினத்தை மேலும் மேலும் கூட்டிட, “ஏன் நீ தயங்கி நிக்கிறேன்னு நான் சொல்லட்டுமா?” என எஃகு போன்று இறுகிய குரலில் கேட்டவனின் வார்த்தையில் சகலமும் நடுங்க ஆரம்பித்தது…


“ஏன்னா நீ என் தம்பிக்கூட பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்க. ஐயம் ரைட்ட்ட்… இப்போ உன் வயித்துல வளர்றது என் தம்பியோட குழந்தை அப்படித்தானே” என்றவனின் வார்த்தையில்.. விழிகள் விரிய, கண்கள் கண்ணீரை சொரிந்து தன் பெண்மையின் அவல நிலையை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது…


அவன் சொல்லிய வார்த்தை ஒவ்வொன்றும் உண்மை என்பதால் அவளால் மறுத்துப் பேச முடியவில்லை…


“இத்தனை நாள் அவள் மறைத்து வைத்ததாக நினைத்த உண்மையை இப்படி பட்டென்று போட்டு உடைப்பான்” என அறியாத பேதையவள் மனமோ ஊமையாய் அழ ஆரம்பித்தது.


அவனே எதிர்பாராத விதமாக அவன் காலில் சட்டென்று விழுந்தவளை கண்டு அவனின் முகம் கற்பாறையென இறுக ஆரம்பித்தது. அவனின் ஒவ்வொரு உணர்வுகளையும் அடுத்ததாக அவள் சொல்லிய வார்த்தை துடைத்தெறிந்தது.


“நான் பண்ணது தப்பு தான். உங்க தம்பியை காதலிச்சது, அவரை நம்பி என்னையே நான் கொடுத்தது எல்லாமே தப்பு தான். நீங்க தாலி கட்டின நாள்ல இருந்து ஒவ்வொரு நிமிஷமும் இதையே நினைச்சு நான் உள்ளுக்குள்ளேயே செத்துட்டு இருக்கேன். இந்த சித்திரவதையை என்னால தாங்கிக்க முடியலை. ப்ளீஸ் நீங்களே என்னைக் கொன்னுடுங்க. என்னோட குற்றவுணர்ச்சியாவது குறையும்” என்றவளின் கண்ணீர் பளிங்கு தரையில் சட்டென்று விழ ஆரம்பித்தது.


மடிந்து அமர்ந்திருந்தவளின் அருகில் ஒற்றைக்காலில் குத்துக்காலிட்டு அமர்ந்தவன், அங்கு கண்ணீருடன் இருந்தவளின் நாடியை ஒற்றை விரலால் நிமிர்த்தினான்…


அவன் விழிகளோ கோபத்தில் சிவந்திருக்க, இவள் விழிகளோ அழுகையில் சிவந்திருந்தது. ஆனால் இருவரின் இதயத்தாலும் அளவு கடந்த காதல் இருந்தது.


அவன் விழிகளை பார்த்த ஊமைப்பெண்ணவளின் உள்ளம் தகிக்க, “நான் பண்ணது தப்பு தான். என்னை மன்னிச்சிடுங்க” என்றவளின் கையெடுத்து கும்பிட்டவளின், கண்ணீரை கண்டவனின் பெருவிரல் தானாக அந்த கண்ணீரை துடைத்தது..


முகம் இறுகி அமர்ந்திருந்தவனின் இத்தகைய செய்கையை பெண்ணவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் அதிர்ந்த விழிகள் காட்டிக் கொடுத்தது.


“இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு நீ என் ரூம்க்கு வந்தாகணும். நான் உனக்காக காத்திருப்பேன்” என்றவன் சட்டென்று எழுந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்…


அவளை விட்டு பிரிந்து வேகமாக மாடியேறியவனின் உள்ளமோ, அவள் சொல்லிய வார்த்தைகளின் கணம் தாங்காது வெகுவாக கலங்கியது.


“தன் தம்பியுடன் அவள் உடல்ரீதியாக பழகியிருப்பதை அவளே ஒப்புக் கொள்ளும் போது இதயத்தை யாரோ இரண்டாக பிளப்பது போன்ற வலியை கொடுத்தது.


ஏனோ அந்த வார்த்தைகளின் தாக்கம் தாங்காமல் தன்னறைக்குள் நுழைந்தவன், கண்ணில் கண்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்தான்…


“ஏன்டி. ஏன் அப்படி பண்ணின? உன்னை காதலிச்சது நான்.. நான்… நான் மட்டுந்தான்.. நீ காதலிச்சதும் என்னைத்தான்டி. இந்த ருத்திர சிம்மரெட்டியைத்தான்ன்ன்” என ஆத்திரத்திலும், கோபத்திலும் அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தியவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.


தன் காதலை எண்ணி அழுதான், தான் இழந்து போன உறவுகளை நினைத்து அழுதான். இழந்தது திரும்ப வந்துவிடாதா? என நினைத்து அழ ஆரம்பித்தான்…


அப்படியே படுக்கையில் சரிந்தவனின் கண்ணுக்குள் வந்து சிரித்தாள் அவனின் நான்கு வயதான மகள் உத்திரா.


அவள் இன்று உயிரோடு இல்லாததற்கு காரணம், அகிதான் என்பதை நினைத்துப் பார்த்தவனின் காதல் உள்ளம் மறைந்து பகை உணர்வு மட்டுமே மேலோங்கியது…


“ஒரு குழந்தையை கொன்ற அவளுக்காக தான் பாவம் பார்ப்பதா? என் பெண் இறக்கும் பொழுது எவ்வளவு துடித்தாலோ? அதைத் துடிப்பினை அவளும் உணர வேண்டும். உடலாலும் மனதாலும்” என வன்மத்துடன் வேகமாக தன்னறையில் இருந்த அலமாரியில் ஏதோதோ தேடினான்…


அவன் தேடிய பொருள் கிடைத்தது. அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனின் காதல் உள்ளம் அவனை விட்டு எப்பொழுதோ அகன்று விட்டது.


இப்பொழுது இருக்கும் ருத்திரனின் ஒரே குறிக்கோள் அகியின் ஒவ்வொரு உணர்வுகளையும் தொலைக்க வேண்டும் என்பது மட்டுமே.


அவளை மனரீதியாக கொல்ல வேண்டும் என்று மட்டுமே முதலில் நினைத்தான். ஆனால் இப்பொழுது பெண்ணின் மனம் மட்டுமல்ல தேகத்தையும் சிதைக்கும் ராட்சஷனாக மாறிப் போனான்…


அவளின் முகத்தில் சிரிப்பு என்ற உணர்வே வரக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தான்…


அவன் விட்டுச் சென்ற இடத்தில் அப்படியே அமர்ந்திருந்த அகியின் தோளில் ஒரு கரம் பட, திரும்பி பார்க்காமலே அந்த கரங்களுக்கு சொந்தக்காரர் யார் என்பது புரிந்தது.


“அக்கா” என்றவனின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் அகி..


ஏனோ ஆறுதலாக சொல்லும் ஆயிரம் வார்த்தைகளை விட, அன்புடன் செய்யும் சிறு செயல் போதும் என்பதை அபி அந்த நிமிடம் நிரூபித்திருந்தான்…


“நீ பேசுனது எல்லாம் நான் கேட்டேன்க்கா” என்ற தம்பியின் முன்பு தலைகுனிந்து நின்றாள் அகி. தன் தம்பியினை திரும்பி பார்ப்பதற்கே அவமானமாக எண்ணினாள்…


“நீ தப்பு பண்ணியிருக்க மாட்டேன்னு இப்பவும் நான் நம்புறேன் க்கா ப்ளீஸ் கண்ணை துடைச்சிட்டு எழுந்திரு. அழுகை மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது”


“ம்ம்ம். க்கா நீ ரொம்ப டயர்டா இருக்கிற‌ இந்த சூப்பை குடி” என்றவனின் வலுக்கட்டாயத்தின் பேரில் அந்த சூப்பை குடித்து முடித்தாள்…


ருத்திரன் மேலே சென்று கதவை சாத்தியவன் தான் அதன் பின் அவன் வெளியே வரவேயில்லை.


மதியம் உணவையும் சாப்பிடுவதற்கு கீழே இறங்கி வரவில்லை. அகிக்கு மதிய உணவை அபியே ஊட்டி முடித்து விட்டான். அவனும் சாப்பிட்டு முடித்து ருத்திரனின் கதவை தட்டி சாப்பிட அழைக்க, அறைக்குள் இருந்து எந்த பதிலும் வராததால் அப்படியே விட்டு விட்டான்…


அவனுக்கு அந்த வீட்டில் ஏகப்பட்ட வேலைகள் இருந்தது. “எப்படியாவது தன் அக்காவை காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்ல வேண்டுமென்று எண்ணினான்”.


“அக்கா நீ தூங்கி ரெஸ்ட் எடு” என்றவளுக்கு கண்ணில் ஒரு பொட்டுத் தூக்கமில்லை. நேரங்களும், நிமிடங்களும் போட்டிப் போட்டு கடந்து சென்று கொண்டிருக்க.. அதைப் பார்த்தவளின் நெஞ்சமோ பதட்டத்துடன் பய உணர்வையும் ஆட்கொள்ள ஆரம்பித்தது.


மாலை மங்கும் நேரத்திலும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அங்குமிங்கும் கால் கடுக்க உலாவ ஆரம்பித்தாள்…


‘நேரமும், காலமும் யாருக்காகவும் நிற்காது’ என்பதற்கேற்ப இரவு நேரம் நெருங்கியது. அகியின் இதயமோ ரயிலின் ஓட்டத்தை போன்று தடதடவென ஓட ஆரம்பித்தது…


இன்னும் சில நிமிடங்களில் அவள் எதிர்பார்க்காத நேரம் வந்துவிடும். அதனை கடந்து செல்ல முடியாமல் தவித்தபடி இருந்தவளின் அருகில் யாரோ ஒருவரின் நிழலை உணர்ந்தவள் சட்டென்று திரும்பி பார்த்தாள்…


ருத்திரன் தான் அவளின் அருகில் நின்றிருந்தான். இவ்வளவு நேரம் அறையை விட்டு வெளியே வருவேனா? என சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்தவன் சரியாக இரவு எட்டு மணிக்கு அறையை விட்டு வெளியே வந்திருந்தான்…


அவன் அறையை விட்டு வெளியே வரும் நேரம், அபி எல்லாவற்றையும் சமைத்து எடுத்து வந்து டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்தான்..


அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அகியின் அருகில் வந்து நின்றிருந்தான்.


“சார் சாப்பிட வாங்க” என்ற அபியின் குரலில் அகியின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து பின்னிப் பிணைந்தவன், அவளையும் இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர வைத்திருந்தான்.


அவர்கள் இருவரும் அமர்ந்ததும், அவர்களுக்கு பரிமாறப் போன அபியின் கரங்களை பிடித்து தடுத்து நிறுத்தியவன், “எங்களுக்கு நாங்களே பரிமாறிக்கிறோம். நீ உனக்கான சாப்பாடை எடுத்துட்டு உன் ரூமுக்குப் போ” என்றவனின் கடினமான வார்த்தைகளில், தன் தமக்கையை அழுத்தமாக பார்த்துக் கொண்டே தன்னறைக்கு வேகமாக சென்றான் அபி.


என்னதான் தம்பியாக இருந்தாலும் ஓரளவிற்கு மேல் கணவன் மனைவி உறவில் தலையிடுவது அதிகப்பிரசங்கித்தனம் என்பதை உணர்ந்தவன் தன்னறைக்கு சென்று விட்டான்…


“சாப்பிடு பேபி” என சப்பாத்தியை பிட்டு ஒவ்வொரு வாயாக அகிக்கு ஊட்ட ஆரம்பித்தான்.


அவன் மேல் இருந்த பயத்திலா? இல்லை இனி நடக்கப் போகும் சம்பவத்தின் மேல் இருந்த பயத்திலா? அவளால் இரண்டு வாய் சப்பாத்தியை கூட சரியாக விழுங்க முடியவில்லை. தொண்டைக்குள் சிக்கி விக்கல் வர ஆரம்பித்தது…


“ப்ச்ச். என்ன பேபி நீ? சரியா சாப்பிட மாட்ட?” என் அதட்டியவாறே தண்ணீரை புகட்டி விட, மெல்ல அவனின் விழிகளை பார்த்துக் கொண்டே தண்ணீரை பருகினாள்…


முழுதாக ஒன்றரை சப்பாத்தி மட்டுமே அவனால் ஊட்டிவிட முடிந்தது. அதற்குள் ஒரு வித ஒவ்வாமையில் வாந்தி வருவதைப் போல் இருந்தது அகிக்கு.


“எங்கே அவன் மேல் வாந்தி எடுத்து விடுவோமோ?” என அஞ்சி அங்கிருந்த வாஸ்பேஷனை நோக்கி ஓடினாள்.


சில நிமிடங்களில் சாப்பிட்ட அத்தனையும் வாந்தி எடுத்தவள், பரிதாபமாக அவனை பார்க்க.. அவனோ இதெல்லாம் கர்ப்ப காலத்தில் சாதாரணம் என்பதை போல் தான் அவளை பார்த்தான்…


“ட்ரெஸ் வாமிட் ஆகிருச்சி. வா ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிக்கோ” என்றவனின் வார்த்தையில் சட்டென்று தன்னை குனிந்து பார்த்தாள் அகி.


அவன் சொல்வதை போல் வாந்தி எடுத்திருந்ததில் சில துளிகள் சட்டையிலும் பட்டிருந்தது.


“ம்ம்.. சரி நான் பண்ணிக்கிறேன்” என்றவள் மெல்ல அவளின் அறைக்குச் செல்ல முயன்றிடும் நேரத்தில் காற்றில் அந்தரத்தில் பறக்க ஆரம்பித்தாள்…


“யார் தன்னை குழந்தை போல் ஏந்திக் கொண்டது?” என சந்தேகத்தில் பக்கவாட்டில் திரும்பி பார்த்தவளின் அருகில் ருத்திரனின் இதயத்துடிப்பின் சத்தம் தான் கேட்டது.


ஏனோ அவனின் இதயத்துடிப்பின் சத்தத்தை கேட்ட பின்பு தன்னிலை மறந்த பெண்மை, அவனின் இதயக்கூட்டில் இளைப்பாற இடம் தேடியது.


மெல்ல விழிகளை மூடியவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, அவனோ ஐம்பது கிலோ எடையை மிக சாதாரணமாக தூக்கிக் கொண்டு இரண்டாம் மாடியில் இருக்கும் அவனின் அறைக்கு சென்றான்…


அறையை திறந்ததுமே அதிலிருந்து வீசிய நறுமண காற்றில் மெல்ல தலையை திருப்பி பார்த்த அகியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.


இவன் அறையா? என்றவளின் விழிகள் தன் மணாளனை தான் நோக்கியது…


“இது நம்மளோட ஸ்பெஷலான ராத்திரியான இருக்கணும் பேபி” என்றவனின் குரல் தாபத்தோடு மோகமும் கலந்து ஒலிக்க ஆரம்பித்தது.


ஏனோ அந்தக்குரலில் இருந்த தாபமும், மோகமும் பெண்ணவளின் ஒவ்வொரு உள் உணர்வுகளையும் தட்டி எழுப்ப ஆரம்பித்தது…


“ந்ந்நான்ன்” என ஏதோ சொல்ல வந்தவளின் இதழ்களை தன் ஒற்றை விரலை வைத்து மூடியவன், “ஸ்ஸ்ஸ். நான் சொன்னேன்ல இது நமக்கான நேரம். இங்கே பேச வேண்டியது வார்த்தைகள் அல்ல மௌனங்களும், மோகனமான சிணுங்கலும் தான்” என்றவனின் விழிகளோ அவளின் விழிகளை மெல்ல களவாட ஆரம்பித்தது.


அவனின் விழிகளை பார்க்கவே முடியாமல் கீழே குனிய ஆரம்பித்தவளின்

நாடியை நிமிர்த்தியவன், “ஐ வோண்ட் டைட் ஹக் அன்ட் கிஸ்” என்றவனின் இதழ்கள் அவளின் மெல்லிய சிவப்பு நிற இதழ்களோடு அழுத்தமாக பொருத்திருந்தது…


நீண்ட நெடிய முத்தமதில் மூச்சுக்காற்றுக்கு தடுமாறி நின்றவளின் கரங்களோ அவனின் பின் சிகையை அழுத்தமாக பற்றிக் கொண்டது…


இருவரின் இதழோடு உமிழ்நீரும் சங்கமிக்கும் நேரமதில் அகியின் தன்னிலை மயக்கம் ருத்திரனின் பின்னால் இருந்த போட்டோவினை பார்த்ததுமே. அதுவரை இருந்த மாயவலை அறுந்துப் போனது.


சட்டென்று அவனை விட்டு விலகி நின்றவளின் விழிகளில் ருத்திரனும் அவனின் தம்பியும் இணைந்திருந்த போட்டோ சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது தான் கண்ணுக்கு தெரிந்தது.


அதைப் பார்த்தவளுக்கு பழைய நினைவுகள் ஆக்கிரமிக்க, ருத்திரனின் முத்தத்தை தான் ஏற்றதை நினைத்துப் பார்த்தவளுக்கு அறுவெறுப்பில் உடல் கூசிப் போனது…


“எத்தகைய பெரிய இழிவு செயலை செய்ய துணிந்து விட்டேன்?. நானா அது?” என தனக்குத்தானே சிந்தித்த பெண்மை… எதிரில் இருந்தவனை பற்றி அறிய மறுத்தது…


“என்னாச்சி அகி? தம்பி போட்டோ பார்த்ததும் பழசெல்லாம் நியாபகம் வந்திருச்சா?” என்றவனின் அழுத்தமான குரலில் சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள் அகி…


“ப்ச்ச். இதுக்கெல்லாம் முகத்தை திருப்பலாமா?” என்றவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன்,


“என்ன பேபி? பர்ஸ்ட் டைம் என் தம்பி கிஸ் பண்ணது நியாபகம் வந்திருச்சா?. பின்னே நியாபகத்து வராம இருக்குமா?... சரி. என் தம்பி உன்னை பர்ஸ்ட் டைம் எங்கே கிஸ் பண்ணினான்னு சொல்லு. உன்னை விட்டுடுறேன்”. என்றவனின் வார்த்தையில் உடல் கூசிப் போனது அகிக்கு. அப்படியே எங்கேயாவது புதைந்து கொள்ளலாமா? என்று தான் தோன்றியது.


“ப்ளீஸ்ஸ்… என்னை வார்த்தையாலே வதைக்காதிங்க” என அழுகுரலில் அவனிடம் கெஞ்சிட,


“பரவாயில்லை பேபி. நான் ஒரு ஆஃபர் கொடுத்தேன் உனக்கு. உன்னால பதில் சொல்ல முடியலை. ஆனா அதுக்காக என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தணும்னு அவசியம் இல்லையே” என்றவனின் வார்த்தையில் அதிர்ந்து நின்ற அகியை உணர்வுகளை பற்றிக் கவலைப்படாமல் மஞ்சத்தில் அவளோடு இணைந்து சரிந்தான்…


தன் மேல் விழுந்தவனை தள்ளிவிட முயன்றவளின் பலன் என்னவோ பூஜ்ஜியமாகிப் போனது…


“ப்ளீஸ் விடுங்க” என்றவளின் மென் இதழோடு வன்மையாக தன்னிதழை பொருத்தியவன், அவளை முத்தத்தால் திணறடித்தவனின் கைகளோ, அடுத்து துச்சாதனனாய் மாறிப் போனது..


அவளின் ஒவ்வொரு வஸ்திரங்களுக்கும் விடுதலை அளிக்க, பெண்ணவளோ ஒரு கட்டத்தில் அவனையே ஆடையாக போர்த்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்…


விழிகளில் மோகமும், கண்களில் வன்மத்துடன் அவளை மெதுவாக ஆட்கொள்ள ஆரம்பித்தவனின் கைகளோ மெல்லிய உணர்வுகளை அவளிடம் காட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தது…


கருமை நிற தேகத்தோடு வெண்நிற தேகமாய் சிவந்திருப்பவனின் தேகம் ஈரூடல் ஓரூயிராய் கலக்க ஆரம்பித்தது.


அவளின் இதழ்களிலும், கைகளிலும் அழுத்தம் கொடுத்து அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தவன் இறுதியாக சங்கமிக்கும் தருணத்தில் மென்மையை மட்டுமே கடைபிடித்தான்…


அகிக்கோ ஏதோதோ பழைய நினைவுகள் அவளின் நினைவுகளில் நிழலாய் சுழன்றிட ஆரம்பித்தவளின் கணம், அவனை தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்…


இருவருமே உணர்வுகளின் சங்கமத்தில் தங்களுக்குள் இருக்கும் கசப்பான பக்கங்களை மறக்க ஆரம்பித்தனர்..


அவனின் அசைவிற்கெல்லாம் இசைந்து கொடுக்க ஆரம்பித்தது பெண்மை. மோகம் மட்டுமல்ல அவனின் தாபத்தையும் தனக்குள் தாங்கி, மோகத்தில் சிணுங்கிய கொலுசின் மணிகள் சொல்லியது அவன் கொண்ட தாபத்தின் அளவினை…


அவனின் அழுத்தமான சிகையினை பிடித்திருந்த மெல்ல விடுவித்தவளின் விழிகளோ அவன் மேல் கொண்ட காதலின் அளவை சொல்லியது.


அவளை விட்டுப் பிரிந்தவன் திரும்பி அவளைப் பார்க்க, நேராக படுத்திருந்தவளின் விழிகளில் இருந்த கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது.


அவளின் கண்ணீரை பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அவளின் இடையோடு அணைத்தவாறு படுத்துக் கொண்டான் ருத்திரன்..


நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருந்தவளின் விழிகளோ அசதியில் உறங்கிவிட்டனர்.


அடுத்த நாள் காலை வீட்டு வாசலில் வந்து இறங்கினான் ருத்திரனின் உடன்பிறந்த தம்பியும் அகியின் முன்னால் காதலனுமான அஸ்வத்தாம சிம்மரெட்டி… 
மனம் 7


அடுத்த நாள் காலை முதலில் கண் விழித்தது என்னவோ அகி தான். விழித்திருந்தாலும் கட்டிலை விட்டு வெளியேறி செல்ல முடியாதபடி இரும்புக்கரம் ஒன்று அவளை சிறைபிடித்து வைத்திருந்தது.


அந்தக் கரங்களை விலக்கிவிட்டு செல்ல முயன்றவளின் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.


“ப்ச்” என ஒரு வித சலிப்புடன் திரும்பி ருத்திரனின் புறமாக திரும்பி படுத்தாள். அவனோ நீண்ட நாளைக்கு பிறகு நல்ல நித்திரையில் இருப்பதை போன்று கண்களை மூடி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.


தன் தூக்கத்தை கெடுத்து விட்டு இப்படி நிம்மதியாக உறங்குபவனை பார்க்கும் பொழுதே அடிவயிறு பற்றிக் கொண்டு வந்தது அகிக்கு.


“தலையணையை அவன் முகத்தில் வைத்து அழுத்தி அவனின் மூச்சை ஒரே நிமிடத்தில் வாங்கி விடலாமா?” என்று கூட ஒரு நொடி யோசித்துப் பார்த்தாள்.


ஆனால் அவளுக்குள் இருக்கும் நற்குணமோ உடனே அதற்கு தடை விதித்தது. “ச்சே. அப்படியெல்லாம் பண்ணக்கூடாது தப்பு” என்றவள் அருகில் படுத்திருந்தவனை அப்பொழுது தான் உற்றுப் பார்த்தாள்.


அலையலையாய் கற்றை சிகை காற்றில் பரவி அங்குமிங்கும் பறந்துக் கொண்டிருந்தது. நீண்ட நெற்றியும், அவளை அச்சுறுத்தி பார்க்கும் விழிகள்.. இன்று நன்கு நித்திரையில் இருக்க, மூக்கோ சற்று நீளமாக இருந்தது. அழுத்தமான பட்டை சிவப்பு நிற உதடுகள் அவனுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை என்று அடித்துக் கூறியது.


மேலாடையின்றி படுத்திருப்பவனின் இறுகிய தேகம் அவனின் சீரான உடற்பயிற்சியினை எடுத்துக் காட்டியது.


ஒவ்வொரு அங்குலமாக அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவள் அவனின் இடப்பக்க மார்பில் போட்டிருந்த டாட்டூவில் சட்டென்று தன் விழிகளை சுருக்கி பார்த்தாள்…


“அம்மு” என்ற பெயரை டாட்டூ குத்தி வைத்திருந்தான்.


யார் இந்த அம்மு? என நினைத்தவாறே அந்த டாட்டூவை மெல்ல நீவிவிட, அதுவரை தூக்கத்தில் இருந்தவனின் விழிகள் சட்டென்று திறந்து கொண்டது…


அவன் இப்படி சட்டென்று விழிகளை திறப்பான் என கனவில் கூட அவள் நினைக்கவில்லை. தன்னருகில் படுத்திருந்தவளையும், அவளின் கை தன் நெஞ்சின் மேல் பதிந்திருந்ததையும் தான் உற்றுப் பார்த்தான்…


சட்டென்று அவள் கைகளை தட்டிவிட்டு அவளை விட்டு எழுந்தமர்ந்தான். அதுவரை அடைப்பட்டிருந்த சிறை அவளை விட்டு விலகினாலும், அவளோ ஒரு வித மௌனத்தால் அமைதியாக எழுந்து அமர்ந்தாள்…


“என்ன டச் பண்ற உரிமையை உனக்கு யார் கொடுத்தா?” என சீறியபடி கூறியவனை கண்கள் இடுங்க பார்த்தாள்…


“நேற்று இதைக் கேள்வியே நான் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான்?” என நினைக்கும் பொழுதே.. அவளின் எண்ணவோட்டத்தை புரிந்தாற் போன்று,


“நேத்து நீ கேட்டிருந்தா, கேட்டதுக்கும் சேர்த்து உனக்கு தண்டனை தான் கிடைக்கும். உன்னைத் தொடுறதுக்கான முழு உரிமை எனக்கிருக்கு” என்றவனின் பார்வையோ அவள் நெஞ்சில் சரசமிடும் தாலிக்கொடியை தான் பார்த்தது…


அவனின் பார்வை போன திசையிலேயே புரிந்து கொண்டாள் தன் அவல நிலை என்னவென்று. அவனுடன் எதிரில் நின்று தர்க்கம் புரிந்து தான் வெற்றி பெற போவதில்லை என்பது மட்டும் நன்றாக அகிக்கு புரிந்தது.


அதனாலேயே மௌனம் என்னும் பனிப்போர்வையை ஆயுதமாய் கையில் எடுத்தவள், அவனை விட்டு விலகி பாத்ரூமிற்குள் சென்றாள்…


அவள் செல்வதை பார்த்தவனுக்கு எந்த வித உணர்வும் தோன்றவில்லை. நேற்றைய மோக உணர்வுகள் துடைக்கப்பட்டு இன்று சாதாரணமாக அமர்ந்திருந்தான்…


உள்ளே நுழைந்தவள் குளித்து முடித்து வெளியே வந்த பின்பு ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே சென்ற பின்பு தான் அவன் பாத்ரூமிற்குள் சென்றான்…


உள்ளே நுழைந்தவனுக்கு முகத்தில் ஒருவித பொலிவு தோன்றிட, சட்டென்று என்னவென்று தன் முகத்தினை கண்ணாடியில் உற்றுப் பார்த்தான்.


அகியின் நெற்றியில் இருக்கும் கருப்பு நிற பொட்டு அவனின் கழுத்தோரம் ஒட்டியிருந்தது. அதைப் பார்த்தவனின் இதழில் சிறு புன்னகை தோன்றிட மெல்ல குளித்து முடித்து வெளியே வருவதற்கும், அபி வெளிக்கதவை தட்டிக் கொண்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது.


ருத்திரன் கதவை திறந்ததும், ட்ரேயில் வைத்திருந்த காஃபியை அவன் புறம் நீட்டினான்…


அதை எடுத்தவனின் விழிகள் இப்பொழுது அபியை தான் ஆராய்ச்சியாய் பார்த்தது. கிட்டத்தட்ட பதினைந்து வயது தான் இருக்கும்.


ஆனால் பொறுப்பாய் நடந்து கொள்கின்றான். தன் தமக்கையினை விட்டுக் கொடுக்காமல் தன்னிடமே வாதாடுகின்றான்” என நினைத்துக் கொண்டே அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்…


எதிரில் இருப்பவனும் ருத்திரனை தான் தன் கூரிய கண்களால் எடை போட்டுக் கொண்டிருந்தான்…


குளித்து முடித்து விட்டு கதவை திறந்ததால் இடுப்பில் டர்க்கி டவல் மட்டுமே அணிந்திருந்தான். முப்பதை தாண்டிய ஆண்மகன் என்று யாரும் கூறமுடியாதபடி, கடுமையான உடற்பயிற்சி செய்து தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்மகன்…


படித்த படிப்போ சொல்ல வேண்டியதே இல்லை. ஓர் உயிரை காப்பாற்றும் டாக்டர் தொழில் என்பது அவனை பொறுத்தவரைக்கும் கடவுளுக்கு நிகர் என்று நினைப்பவன்…


அவனின் சொத்துக்களை பற்றியும், செல்வாக்கை பற்றியும் இந்த ஒற்றை வீட்டை வைத்து கணித்து விடலாம். அந்தளவிற்கு இந்த அரண்மனையில் வசித்து வருபவன், எந்தவித குறையுமில்லா ஆண்மகன்..


தன் அக்காவினை வலுக்கட்டாயமாக மணமுடித்து அவளை சிறை வாசம் செய்து வாழ்கிறது? ஏன் என்ற கேள்விக்கு விடையறியாமல் பரிதவித்து நின்றான்…


இருவரும் ஒரே நேர்க்கோட்டில் ஒருவரை பற்றி மற்றவர் சிந்தித்துக் கொண்டிருந்தனர்…


அவன் தன்னைப் பற்றிய சிந்தனையில் தான் இருக்கிறான் என்பதை உணர்ந்த ருத்திரன், “என்ன? என்னை சைட் அடிக்கிறீயா?” என ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டவனை பார்த்து கோணலாக சிரித்தான் அபி.


அவன் நக்கல் சிரிப்பில் சட்டென்று கோபம் வந்திட, “காபி போடுறதும், கரண்டி புடிக்கிறதும் தான் உன் வேலை. அதை விட்டுட்டு வேண்டாத வேலை பார்த்த தொலைச்சிடுவேன்” என எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு திரும்பிட,


“அது மட்டும் என் வேலையில்லை. இன்னொரு முக்கியமான வேலைக்காக தான் நான் இங்கே வந்திருக்கேன்” என்றவனின் குரலில் இருந்த இறுக்கத்தில், சட்டென்று திரும்பி அபியை எரிக்கும் கண்களால் முறைத்துப் பார்த்தான் ருத்திரன்…


“என்ன வேலைன்னு கேட்க மாட்டீங்களா சார்?”


“ப்ச்ச்” என சலிப்புடன் திரும்பிட,


“என் அக்காவை உங்ககிட்ட இருந்து மீட்டு கொண்டு வர்றது தான். என் முதல் வேலை. அது முடிஞ்சதுமே உங்க கண்ணு முன்னாடி நானும் என் அக்காவும் படமாட்டோம்” என்றவன் அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்…


வெளியே சென்ற அபியின் பார்வையில் விழுந்தது என்னவோ அகி தான். சோபாவில் அமர்ந்திருந்தவாறே சரிந்து படுத்திருந்தாள்…


நேற்றைய கூடலின் அசதியில் அப்படியே சாய்ந்து அமர்ந்தவளின் அருகில் வந்து நின்றான் அபி. ‘அக்கா’ என்ற அழைப்புடன்…


சோபாவில் அமர்ந்தவாறே அபியை ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகள் மட்டுமல்ல மனமும் வெகுவாக கலங்கித் தவித்தது.


அவளின் கலங்கிய விழிகளை பார்த்த அபிக்கு சொல்லொண்ணா கோபம் ருத்திரனின் மேல் வந்தது. “என்னக்கா அவர் ஏதாவது சொன்னாரா?” என்றவனின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.


“இல்லை அபி. நீ எப்போ ஊருக்குப் போற?” என்ற அகியை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான்.


“அக்கா நான் இப்போதைக்கு ஊருக்குப் போற மாதிரியில்லை. அப்படி போகணும்னு நீ ஆசைப்பட்டா நீயும் வா” என அவளின் கையைப் பிடித்து இழுக்க முயன்றான்…


“இல்லை அபி. நான் வரலை” என அகி சொல்லி முடிப்பதற்குள்,


“காலையிலேயே பாசமலர் படத்தை ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்களா?” என்ற ருத்திரனின் குரலில் இருவரும் ஒரு சேர மேலே நோக்கி பார்த்தனர்…


அதற்குள்ளாகவே பார்மல் டிரஸ்ஸில் ரெடியாகியிருந்தான். சந்தன நிற கால் சராயும், அரக்கு நிற சட்டையும் அணிந்திருந்தவனின் தேகமோ, கட்டுக்கடங்கா காளையைப் போன்று தசைக்கோளங்கள் வெளியே தெரியும்படி இறுக்கிப் பிடித்திருந்தது.


எங்கேயோ செல்வதற்கு தயாராகி இருக்கிறான் என்பது புரிந்தது.


“எங்கே செல்கிறான்? இந்த காலை நேரத்தில்?” என மனதிற்குள் நினைத்தாலும், வெளியே கேட்டுக் கொள்ள தைரியமில்லாமல் அமைதியாக நின்றிருந்தாள்..‌.


அபியும் ருத்திரனை சிறு யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன ரெண்டு பேரும் இப்படி முழிச்சிட்டு இருக்கீங்க?”


“இல்லை நீங்க” என அபி ஏதோ சொல்ல முற்படுவதற்கும், போர்டிகோவில் கார் ஒன்று வழுக்கி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது…


அகி, அபி இருவரின் பார்வையும், வாசலில் வந்து நின்ற காரில் நிலைத்து நிற்க.. அதிலிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்து இறங்கினார்…


அந்தப் பெண்மணி இறங்கிய சில கணங்களில் காரில் இடது பக்கத்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவனைப் பார்த்த அகிக்கு சகலமும் நடுங்க ஆரம்பித்தது.


கைகள் தன் நடுக்கத்தை உணர்ந்த அடுத்த நொடியே அருகில் நின்றிருந்த அபியின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.


தன் கைகளில் உணர்ந்த பிஞ்சுக்கரங்களின் அழுத்தத்தை உணர்ந்த அபியின் திரும்பி தன் தமக்கையை தான் பார்த்தான். அவளின் பார்வையோ முழுதாக நின்றது ருத்திரனின் மேல் தான்…


அவன் பார்வை வாசலில் வந்து நின்றவனின் மேல் தான் இருந்தது. பல வித உணர்வுகளின் கலவையுடன் நின்றிருந்தவனின் முகமோ எந்த வித உணர்வையும் வெளிக்காட்ட முடியாமல் திணற ஆரம்பித்து, இறுதியில் கோபத்தை தத்தெடுத்தது.


“எப்படி இருக்க அகிம்மா” என்ற அஸ்வத்தாமனின் குரலில் அப்படியே மயங்கி சரிந்து விட்டாள்…


 
Status
Not open for further replies.
Top