வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன் - கதை திரி

Status
Not open for further replies.
மனம் 24

ருத்திரன் அப்படியே தாயை உரித்து வைத்திருந்தான். எந்தவித வம்பு தும்புக்கும் போகமாட்டான். யார் மனம் நோகும்படியும் பேசமாட்டான்.

ஆனால் இரணியன் அவனுக்கு அப்படியே நேர்எதிர். யாரிடமும் வம்பு இழுக்காமல் இருக்கமாட்டான். அதனால் நரசிம்மனுக்கு இரணியன் என்றால் உயிர்.

தனக்கு அடுத்து தன் பையன் இரணியன் தான் எல்லாம் என அவனுக்கே எல்லாவகையான வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார்.

சிலம்பம், வர்மக்கலை, தொடுக்கலை, துப்பாக்கி என அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் ஏராளம்.

ருத்திரனும் இவனுக்கு சளைத்தவனில்லை. புட்பால், டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல், கராத்தே இன்றைய நாகரீக விளையாட்டுகளில் புகுந்து விளையாடுவான்.

இருவருக்குமிடையில் இரண்டே விஷயங்களில் மட்டுமே ஒற்றுப்போகும். ஒன்று மொழி. இருவருக்குமே பல மொழிகள் தெரியும். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என மொழிகளில் வேறுபாடில்லாமல் அனைத்து மொழிகளையும் ஒன்றாகவே கற்றுக் கொண்டனர்.

இரண்டாவதாக மதியழகி. இருவருக்குமே மதியழகி என்றால் உயிர். அவரின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர்.

மதியழகியின் வாழ்க்கை தன் கணவன், குழந்தைகள் என நன்றாக போய்க்கொண்டிருந்த வேளையில் அவர்களின் குடும்பத்திற்குள் புயலாய் உள்ளே வந்தாள் மஞ்சரி.

தன் பையன்கள் வாலிப வயதை எட்டும் பருவத்தில் இருக்கும் பொழுது நரசிம்மன் மஞ்சரியையும், அஸ்வத்தாமனையும் அழைத்து வந்தார்.

மஞ்சரியை தன் மனைவி என் அறிமுகப்படுத்த மொத்தமாக உடைந்து விட்டார் மதியழகி. அதுநாள் வரை தன் கணவனின் அக்கிரமங்களை பொறுத்துக் கொள்ள முயன்றவரால், இன்னொரு பொண்ணை தனக்கு போட்டியாக அழைத்த வந்ததை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மஞ்சரி அவரின் பழைய காதலி. அவரை மறக்கமுடியாமல் மதியழகிக்கு தெரியாமல் அவருடனும் குடும்பம் நடத்தி, ஒரு பையனும் இருக்கிறான் என கேள்விப்பட்டதில் இருந்தே மதியழகியால் நரசிம்மனை மன்னிக்கவே முடியவில்லை.

தன்னுடன் குடும்பம் நடத்திக் கொண்டே இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதே அவருக்கு பேரிடி.

அவரால் நரசிம்மனுடன் இணைந்து வாழவும் முடியவில்லை. திருவனந்தபுரத்தில் இருக்கும் தன் சொந்தத்திடமும் சொல்லவும் முடியவில்லை.

அவர்களிடம் சொல்லிவிடலாம் அதன்பின் நரசிம்மனை விட்டு வைக்க மாட்டார்கள். தன்னால் ஒரு உயிர் பிரிவதை விரும்பாத மதியழகி தனக்கு சொந்தமான கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு கிராமத்தில் நிம்மதியை தேடி குடியேறினார்.

அந்த வீடு தான் அகமேந்தியின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் வீடு.

மதியழகி அந்த வீட்டிற்கு வரும் பொழுதே ருத்திரனையும் இரணியனையும் ஊட்டி கான்வென்ட்டில் சேர்த்து விட்டார். படிப்பில் எந்தவித காம்பிரமைஸும் செய்ய அவர் விரும்பவில்லை.

தன் பிள்ளைகளின் எதிர்காலம் தன்னால் பாதிக்கக்கூடாது என்றெண்ணியவர் அவர்களை ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதற்கான அத்தனை வேலையும் பார்த்துவிட்டு தான் இங்கு வந்து சேர்ந்தார்.

கோயம்புத்தூர் வீட்டில் இருப்பவருக்கு ஒரு வாரமாக மனம் மிகவும் உழன்று கொண்டிருந்தது. பணத்திற்கு பஞ்சமில்லை என்றாலும் மனம் என்ற ஒன்று இருக்கிறதே. அதில் நரசிம்மனின் ஏமாற்றமும் துரோகமும் வலித்துக் கொண்டேயிருந்தது.

அன்று பின்புற தோட்டத்தில் அமர்ந்திருந்தவருக்கு, இடதுபுற மார்பில் வலிக்க ஆரம்பிக்க, நெஞ்சில் தோன்றிய சுருக்கென்று வலியை குறைக்கப் பார்த்தவருக்கு பலன் என்னவோ பூஜ்ஜியமாக தான் இருந்தது.

நெஞ்சை பிடித்துக் கொண்டு தோட்டத்தின் பின்புறம் தொப்பென சரிந்து விழுந்தார்.

தொப்பென நிலத்தில் வீழ்ந்தவரின் சத்தத்தில் தான் அகமேந்தி. ஆம்‌ அவர் வீட்டிலிருக்கும் கொய்யாப்பழத்தை திருடி சாப்பிட தான் வந்திருந்தனர் அபியும் அகமேந்தியும்…

“ஏய் அபி அந்த ஆன்ட்டி கீழே விழுந்துட்டாங்க பாரு” என்ற குரலில் அபியும் திரும்பி அங்கு மண்ணில் விழுந்திருந்த மதியழகியை பார்த்தான்.

“அய்யோ இப்போ என்னக்கா பண்றது?” என அபி பதறியபடி கேட்க

“வாடா நாம போய் வாட்ச்மேன் ஆங்கிள் கிட்ட சொல்லுவோம்”

“அய்யோ அக்கா எனக்கு பயமா இருக்கு. நான் வரலை” என பயத்தில் நடுங்கிய அபியையும் இழுத்துக் கொண்டு நேராக முன்கேட்டிற்கு வந்து நின்றாள் அகி.

“அண்ணா அண்ணா. உங்க முதலாளி அம்மா அங்கே விழுந்து கிடக்காங்க” என மூச்சுவாங்க சொல்லியபடி வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியறிவிட்டாள்.

அவள் இங்கு வருவது தெரிந்தால் தன் தாயிடம் திட்டு வாங்குவோம் என்ற பயத்திலேயே வெளியே ஓடிச்சென்று விட்டாள்.

வாட்ச்மேன் வேகமாக மதியழகியை தேடி ஓடினான். வேகமாக மதியழகியை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணியவன் நரசிம்மன் முதற்கொண்டு அனைவருக்கும் தகவல் கூறினான்.

இரணியனும், ருத்திரனும் ஓடி வந்தனர் தன் தாயை பார்ப்பதற்கு… நரசிம்மனுக்கு பேரதிர்ச்சி தான் அவரால் மதியழகியை எப்படியோ போ என்று விட்டு விட முடியவில்லை.

மதியழகிக்கு ஹார்ட் அட்டாக் என சொல்லிலிட ருத்திரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ‌

“அம்மா நான் உன்கூடவே இருக்கிறேனே!” என அழுகையுடன் கேட்ட மகன்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக கான்வென்ட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

யார் பேச்சையும் கேட்காமல் அந்த வீட்டில் தான் வசிக்க வந்தார். ஆனால் தனியாக இல்லை ‌ இப்பொழுது அவரை கவனித்துக் கொள்ள கேர் டேக்கர் ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணியிருந்தார்.


மதியழகிக்கு ஹார்ட் அட்டாக் வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை கடந்தபின்பு தான் மறுபடியும் அகமேந்தியை சந்தித்தார் அதே தோட்டத்தில்.


அதுவும் மறக்கமுடியாத ஒரு சூழ்நிலையில். அறைக்குள் அடைந்தே இருக்க முடியாமல் ஒரு வித சோகத்துடன் சுற்றிக் கொண்டிருந்தவரின் காதில், “டேய்ய்ய.. அந்தப் பழம் பறிடா. அதுதான் டேஸ்ட் டா இருக்கும்” என்ற குரலில் வீட்டின் பின்புறம் சென்றார் மதியழகி.


“அக்கா அந்த பழம் வேண்டாம் இதுதான் பெருசா இருக்கு”


“அது காய் அபி. இப்போ சாப்பிட முடியாது. இதுதான் சின்னதா இருக்கும் ஆனா டேஸ்ட்டா இருக்கும்”


“ஆனா எனக்கு அதுதான் வேணும்_ என்ற அழுகுரலில் கூற,


“சரிடா. இரு பறிச்சு தர்றேன்” என்றவள் அங்கிருத்த ஒரு மரக்குச்சியை எடுத்து தனக்கு மேலிருந்த கொய்யாப்பழத்தை தட்ட ஆரம்பிப்பதற்குள் அதை கைக்கொண்டு பறித்தது ஒரு வலிய கரம்.


தன்னை மிஞ்சி யார் அதைப் பறித்தது என திரும்பி பார்க்க… அங்கு நின்றிருந்த மதியழகியை பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது…


“அய்யோ அபி மாட்டிக்கிட்டோம். ஓடி வா” என அபியின் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட தயராகிட,


“ஹேய்ய்.. ஓடாதே நில்லு.” என்றவரின் வார்த்தையில் சடன் பிரேக் அடித்தாற் போன்று நின்றாள்.


“நீதான அன்னைக்கு என்னை காப்பாத்துனது?”


“ஆமா” என்றவளின் கால்களோ, எப்பொழுதடா ஓடுவோம் என்பதைப் போல் தகதிமிதா என ஆடிக் கொண்டிருந்தது.


“உன் பேர் என்ன?”


“அகமேந்தி” என்றவளை நன்றாக உற்றுப் பார்த்தார்.


வயதிற்குரிய வளர்ச்சி இல்லாமல் சற்று குன்றியிருந்தாள்.


ஆம் தீபா எப்பொழுதும் திட்டிக் கொண்டே தான் சாப்பாடு போடுவார். சாப்பிடாவிட்டால் அதைக் கண்டுகொள்ளும் மாட்டார்.


“சாப்பிட்டால் சாப்பிடு இல்லையென்றால் போயிடு” என்ற குணத்தினால் அகமேந்தி சற்று ஒல்லியாக தான் இருப்பாள்...


அகமேந்தியின் மேல் பரிதாபம் தோன்றிட, “நீ இங்கே டெய்லி வருவீயா?” என தனிமையை விரும்பாமல் அகியிடம் கேட்க,


“அப்போ எனக்கு டெய்லி பழம் தருவீங்களா” என்றதுமே உடனே தலையாட்டினார் மதியழகி.


அகமேந்தி மதியழகி அபி என மூவரும் அந்த வீட்டினுள் உலாவர, அதே சமயம் கான்வென்ட்டில் படிக்கும் ருத்திரன் இரணியனுடன் கைகோர்த்தாள் சஞ்சனா… தன் அத்தை மஞ்சரியின் உதவியுடன்.


ஆம் சஞ்சனா வேறு யாருமில்லை மஞ்சரியின் அண்ணனின் மகள் தான். அவளை ருத்திரன் , இரணியன் படிக்கும் கான்வென்ட்டில் சேர்த்ததற்கு முதல் காரணம் இரணியனை இல்லை ருத்திரனை மடக்கிப் போடுவதற்காக தான்.


மதியழகி வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் தான் தெரிந்தது. பெரும்பாலான சொத்துக்கள் ருத்திரன், இரணியன் பெயரில் தான் இருக்கிறது என்று.


நரசிம்மனால் அவருக்கு எந்தவித பயனும் இல்லை என அறிந்தவர் தன் பையனுடன் வெளிநடப்பு செய்யவும் தோன்றவில்லை. இருந்தாவது சொத்துக்களை அனுபவிக்கலாம் என நினைத்துக் கொண்டே நரசிம்மனுடன் இருந்தார்.


அந்த சமயம் தான் மஞ்சரியின் அண்ணன் ஆக்சிடெண்டில் அவரின் மனைவியுடன் இறந்துவிட, தனித்து விடப்பட்ட அண்ணன் மகள் சஞ்சனாவை வளர்க்கும் பொறுப்பை தன் வசம் எடுத்துக் கொண்டார்…


கான்வென்ட்டில் சேர்ந்த அஞ்சனா ருத்திரன், இரணியன் இருவருடனும் நன்றாக பழக ஆரம்பித்தாள். இருவரிடமும் நட்புடன் பழகினாலும் அவளின் மனதில் நீங்கா இடம் பெற்றது ருத்திரன் தான்.


அவனின் அமைதியும், பொறுமையும் சஞ்சனாவிற்கு மிகவும் பிடித்தது. ஆனாலும் தன் காதலை சொல்லுவதில் ஒரு தயக்கமும் இருந்தது.


மஞ்சரி தான் தன் அத்தை என்கின்ற விஷயத்தையும் அவள் யாரிடமும் சொல்லவில்லை. மஞ்சரியின் அண்ணன் மகள் ருத்திரனும், இரணியனும் பேசாமல் சென்று விடுவார்கள் என மஞ்சரியின் அறிவுரையின் படி யாரிடமும் சொல்லாமலே நட்புடன் பழகினாள் சஞ்சனா.


மூவருமே இணை பிரியாமலே சுத்திக் கொண்டிருந்தனர். சஞ்சனா ருத்திரனிடம் காட்டும் அன்பும், பாசமும் இரணியனை இவள் புறம் திரும்பி பார்க்க வைத்தது.


ருத்திரனின் மேல் சஞ்சனா காதல் கொள்ள, சஞ்சனாவின் மேல் இரணியன் காதல் கொண்டான். வெளியே மூவரும் நட்புடன் பழகுவதை போல் காட்டிக் கொண்டாலும், ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.


அனைவரும் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து அடுத்தக்கட்ட தன் வாழ்க்கையை நோக்கி பயணிக்கும் காலத்தில் தான் ருத்திரன் உயிரை காப்பாற்றும் டாக்டர் பணியை எடுக்க, ருத்திரனுடன் படிக்க வேண்டுமென சஞ்சனாவும் அவன் விரும்பிய படிப்பை தனதாக்கிக் கொண்டாள்.


ஆனால் இரணியனின் வாழ்க்கையோ முற்றிலும் வேறாகிப் போனது நரசிம்மனின் உயிர் இழப்பாள்.


நரசிம்மன் இறந்ததுமே ஆந்திராவில் அவர் வகித்த பதவியை இவன் பார்க்கும்படியாகிப் போனது.


மதியழகியோ இப்பொழுது இரணியனுடன் தங்கும் நிலைமை வந்தது. ருத்திரன் ஹாஸ்டலில் தங்கி டாக்டருக்குப் படித்தான். விடுமுறைக் காலங்களில் அடிக்கடி சஞ்சனாவுடன் ஆந்திராவிற்கு வருவான்.

அவன் வரும் பொழுதெல்லாம் இரணியனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அவனால் தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

ஆனால் சஞ்சனாவோ இரணியனை இழிவாகத்தான் பார்த்தாள். படிக்காத முட்டாள் என்று நினைத்தவளுக்கு சிறு அகம்பாவமும் அவளை பிடித்துக் கொண்டது.
 
Last edited:
மனம் 25


ஆம். இரணியனால் பன்னிரெண்டு முடித்த கையோடு அதற்கு மேல் அவனால் படிக்க முடியவில்லை. அதற்கு முழுக்காரணம் நரசிம்மனின் எதிரிகள்.


ருத்திரனையும் மதியழகியையும் தீர்த்துக்கட்ட நினைத்த எதிரிகளை அழித்து, அவர்கள் இருவருக்கும் இவன் அரணாய் நின்றான். ஒரு முறை கத்திப் பிடித்த கைகள், அதன் பின் இறக்க முடியவில்லை.


தன் அன்னையை காப்பதற்காக, தன் அண்ணனின் உயிரை காப்பதற்காக கத்திப் பிடித்தான்.


ருத்திரனின் கைகளில் இருக்கும் கத்தி பிறரின் உயிரைக் காப்பாற்றியது. இரணியனின் கைகளில் இருந்த கத்தி எதிரிகளின் உயிரை காவு வாங்கியது.


இரணியனின் இளகிய முகம் கூட, எதிரிகளிடம் ஆடிய ஆட்டத்தில் இறுக ஆரம்பித்தது. ஆனாலும் அவன் சஞ்சனாவிடம் தன் இன்முகத்தை தான் காண்பித்தான்.


ருத்திரன் சஞ்சனாவிடம் நன்றாக பழகினாலும் நட்பு என்ற ரீதியிலேயே பழகினான். அதை மீறி அவனின் எண்ணத்தில் எதுவும் பதியவில்லை.


படிப்பு முடிக்கவும் ருத்திரனுக்கு தனியாக ஹைதரபாத்தில் புது ஹாஸ்பிடல் ஒன்றை கட்டிக்கொடுத்தான் இரணியன்.


ஏழைகளுக்கு உதவும் வகையில் பலவித சலுகைகளுடனே அந்த ஹாஸ்பிடல் கட்டப்பட்டது. சஞ்சனாவும் அதே ஹாஸ்பிடலில் தான் வேலை பார்த்தாள்.


அத்தோடு விடவில்லை இரணியன். ருத்திரன் பெயரில் பல ஹாஸ்பிடலை நிறுவினான். அனைத்து பொறுப்புகளையுமே ருத்திரனிடமே ஒப்படைத்து விட்டான்.


இரத்தக்கரை படிந்த கைகளின் மனமோ கரைபடியாமல் தூய்மையாக இருந்தது.


படிப்பு முடிந்து டாக்டராக பணிபுரிய ஆரம்பிக்கும் சஞ்சனா மெல்ல தன் காதலை எப்படியாவது ருத்திரனிடம் சொல்லிவிட வேண்டுமென்று ஹாஸ்பிடல் முழுவதும் தேடிக் கொண்டிருந்தாள்.


எப்பொழுதும் சஞ்சனாவுடன் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருப்பது ருத்திரனின் வழக்கம். அன்று அவனோ ஒரு திண்டில் சற்று கலங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தான்.


“என்னாச்சி ருத்திரா? இங்கே வந்து உட்கார்ந்திருக்க?”


“ஒன்னுமில்லை” என உதடுகள் சொன்னாலும், மனதில் ஏதோ ஒரு வித அழுத்தம் இருந்துக் கொண்டேயிருந்தது.


“என்னடா ஏதாவது பிரச்சினையா? உன் தம்பி ஏதாவது பண்ணினானா? சொல்லு அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,


“ப்ச்ச். அவனால எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இப்போ என் கவலையெல்லாம் அந்தக் குழந்தையை பற்றி தான்”


“குழந்தையா? எந்தக் குழந்தை டா?”


“இன்னைக்கு காலையில் அட்மிட் ஆன கேஸ்”


“ஓஹ். அந்த கேஸா?” என சற்று அலட்சியமாக தான் கேட்டாள்.


காலையில் ரோடு ஆக்சிடெண்டில் இரண்டு பெண்ணும் இரண்டு ஆண்களும் ரோட்டில் மிக மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக ருத்திரன் ஹாஸ்பிடலில் வந்து அட்மிட் பண்ணியிருந்தனர்.


அதில் ஒரு பெண்மணி நிறைமாத கர்ப்பமாக இருந்தாள். நால்வரும் தீவிர சிகிச்சையில் பலனின்றி இறந்துவிட, அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தது.


“அதுக்கு என்ன ருத்திரா?”


“இல்லை சஞ்சு என்னால அந்தக் குழந்தையை விட்டு வெளியே வரமுடியலை. அந்தக் குழந்தையோட அழுகை சத்தம் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு”


“லூசு மாதிரி பேசாதே ருத்திரா. நாம டாக்டர் தான். உயிரை காப்பாத்த தான் முடியும். இந்த ஹாஸ்பிடல்ல இருக்கிற வரைக்கும் தான் நாம கேர் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் ஒவ்வொரு பேஷன்ட் பின்னாடியும் நாம போக முடியாது.


“அந்தக் குழந்தையோட பேமிலி இறந்துடுச்சி. அந்தக் குழந்தை மட்டும் பிழைச்சிருக்கு. அந்தக் குழந்தையை தான் ஆசிரமத்துல ஒப்படைச்சாச்சுல்ல… அப்புறம் என்ன? இதுக்கு மேல நீயும் நானும் பண்ண முடியும் தத்து எடுத்தா வளர்க்க முடியும்?” என்றவளின் வார்த்தையில் சட்டென திரும்பி பார்த்தான் ருத்திரன்.


“இப்போ நீ என்ன சொன்ன?”


“நான் என்ன சொன்னேன்?.. அந்தக் குழந்தையை தத்தெடுத்துக்கவா முடியும்னு கேட்டேன்?”


“எஸ்ஸ்ஸ்.. யாஹூஊஊ” என கத்தியபடி எழுந்தவனை சற்று விசித்திரமாக பார்த்தாள் சஞ்சனா.


“என்னடா?” என்ற சஞ்சனாவை இறுக்கி அணைத்தவன், “நான் அந்தக் குழந்தையை தத்தெடுத்துக்கப் போறேன்” என்றவனை அதிர்ந்த விழிகளால் பார்க்க,


“ஆமா சஞ்சு. இதுதான் சரி” என்றவன் அத்தோடு விடவில்லை. அதற்கான அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினான்…


தத்தெடுப்பதற்கு உண்டான வழிமுறைகளை கேட்டு தலைதான் சுற்றியது. தம்பதிகளா இருந்தால் மட்டுமே தத்தெடுக்க முடியும் என்றதுமே அப்படியே முகம் விழுந்து விட்டது.


அந்தக் குழந்தையை நினைத்தே இரவெல்லாம் தூங்காமல் தவித்தான் ருத்திரன். அன்றும் உறங்காமல் நடந்து கொண்டிருந்தவனின் விழிகளில் விழுந்தான் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த இரணியன்.


அதைப் பார்த்ததுமே ருத்திரன் விழிகள் இடுங்கியது. இவன் ஏன் இன்னும் உறங்காமல் இருக்கின்றான்? என நினைத்துக் கொண்டே கீழே , அங்கு இரணியனோ தன் போனில் இருந்த சஞ்சனாவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தான்.


அதைப் பார்த்ததுமே ருத்திரன் சற்று அதிர்ந்து தான் போனான்…


“இரணியா” என்ற குரலில் சட்டென்று திரும்பி பார்த்த இரணியனும் அங்கு ருத்திரனை எதிர்பார்க்கவில்லை.


“நீ ஏன் சஞ்சுவோட போட்டோவை போன்ல வச்சிருக்க?. முதல்ல அதையெல்லாம் டெலீட் பண்ணு”


“இல்லடா‌. நான் சொல்லுறதை முதல்ல கேளு”


“என்ன கேட்கணும்?. ஹான் நீ ஏன் டா அவ போட்டோவை வச்சிருக்க?”


“நான் சஞ்சனாவை காதலிக்கிறேன்” என்றவனை அதிர்ந்து பார்த்தான் ருத்திரன்.


“என்னடா சொல்லுற சஞ்சுவை காதலிக்கிறீயா?”


“ஆமா சின்ன வயசுல இருந்தே நான் அவளை விரும்புறேன். எனக்கு சஞ்சு வேணும்” என உறுதியான குரலில் சொன்ன இரணியன் ருத்திரன் கண்களுக்கு சற்று புதிதாக தெரிந்தான்…


இரணியன் எதற்குமே அவ்வளவு சிக்கீரம் விரும்ப மாட்டான்.


“ஆனா அவ” என இழுக்க,


“அவ என்னைக் காதலிக்கலை எனக்குத் தெரியும். ஆனா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்தத் தடையும் இருக்காதுன்னு நம்புறேன். ”


இத்தனை நாள் ஏன்டா அவக்கிட்ட உன் காதலை சொல்லலை?..


“பயம் தான்டா காரணம். எங்கே என்னை மறுத்துருவாளோங்கிற பயம்தான் காரணம்..”


“சரி. நான் அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஆனா எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்ற ருத்திரனை புருவம் சுருக்கி பார்த்தான் இரணியன்..


“என்னால உனக்கென்ன ஹெல்ப்?. நீதான் டாக்டர். மத்தவங்க உயிரை காப்பாத்துற. நானே ஒரு ரவுடி” நலிந்த குரலில் சொன்ன இரணியனை பார்த்து புன்னகைத்தவாறே,


“எனக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்கணும். நீ அந்தக் குழந்தைக்கு லீகல் ஃபாதரா இருக்கணும். ஆனா நான் அந்தக் குழந்தையை வளர்த்துப்பேன்” என்ற ருத்திரனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.


அடுத்த நாளே சஞ்சனாவின் முன்பாக வந்து நின்றான் ருத்திரன் அழகிய புன்னகையுடன். அவனின் புன்னகையை வித்தியாசமாக பார்த்தாள் சஞ்சனா.


“என்ன ருத்திரா ஸ்மைல் எல்லாம் பலமா இருக்கு?”


“ஆமா சஞ்சு. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்?”.


ஓஹ்‌. பெர்மிசன் கேட்டுத்தான் இப்போ எல்லாம் பேசணுமா?. சொல்லு என்ன பேசணும்..


“எங்க வீட்டுக்கு மருமகளா வர்றீயா?” என்ற வார்த்தையில் முழுதாக அதிர்ந்து நின்றாள் சஞ்சனா. இத்தகைய தருணத்திற்காக தானே காத்திருந்தாள்.


பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல். தான் சொல்ல வந்ததை ருத்திரன் வாயால் கேட்டதும் அப்படியொரு சந்தோஷம் சஞ்சனாவிற்கு.


ருத்திரனைப் பொறுத்தவரை நட்பாக பழகுபவர்களுக்கிடையில் காதல் வராது என்று உறுதியாக நம்பினான். தன்னை நட்பாக தான் சஞ்சனா நினைத்திருப்பாள் என்று நினைத்தே அவளிடம் அப்படி கேட்டான்.


நட்புக்கிடையில் காதல், கல்யாணம் வராது என்று நினைத்தான்.


“எனக்குச் சம்மதம்” என்ற ஒற்றை வார்த்தையில் தன் சம்மதத்தை தெரிவித்து விட்டாள் சஞ்சனா.


ருத்திரனுக்கு அவ்வளவு சந்தோஷம்.


மதியழகிக்கு சஞ்சனாவை மருமகளாக ஏற்றுக் கொள்வதில் எந்தவித தயக்கமும் இல்லை என்பதால் மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதித்து விட்டார்.


முதலில் ருத்திரனுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்ற மதியழகியின் எண்ணத்தையும் சற்று ஒதுக்கிப் போட்டார் இரணியனுக்காக.


தங்கள் இருவருக்கும் அவன் படிப்பைக் கூட விட்டுவிட்டான் என்பதை உணர்ந்தவருக்கு, அவனின் ஆசையை நிறைவேற்றவே ஆவல் கொண்டார்.


இரணியனும் ருத்திரனும் அருகில் இருந்து பார்த்தால் மட்டுமே அவர்களுக்கிடையே வித்தியாசம் தெரியும். தனித்தனியாக இருந்தால் யாராலும் கண்டுபிடிப்பது என்பது சுலபமில்லாத காரியமே..


ருத்திரன் எப்பொழுதும் ட்ரிம் பண்ணி க்ளீன் ஷேவிங்குடன் இருப்பான். இரணியனோ சற்று கரடுமுரடான அடர்ந்த தாடியுடன் உலா வருவான்.


கல்யாணத்திற்காக தன் தாடியை க்ளீன் ஷேவ் பண்ணியிருந்ததால் இருவருக்கும் உருவ ஒற்றுமை சற்று அதிகமாக இருந்தது.


சில நேரம் மதியழகியோ குழம்பிவிடுவார். அந்தளவிற்கு இவர்களின் உருவம் இருக்கும். மஞ்சரிக்கு இந்தக் கல்யாணத்தில் முழுச்சம்மதம் என்பதால் கல்யாண வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.


முதலில் நரசிம்மனின் குலதெய்வக் கோயிலில் வைத்து திருமணம் அதன் பின் ரிசப்ஷன் என ஏற்பாடு செய்திருந்தனர்.


இரணியன் கல்யாணம் அன்று ருத்திரனுக்கு தீடிரென்று ஒரு சிறுவனுக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது‌.


அதனால் யாரிடமும் சொல்லாமல் கோயம்புத்தூருக்கு சென்று விட்டான். சஞ்சனாவிடம் சொல்லலாம் என ஒரு நிமிடம் நினைத்தான். ஆனால் தான் சென்று விட்டால் மணப்பெண்ணின் முகம் வாடிவிடும் என யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டான்.


கோயம்புத்தூரில் வந்து இறங்கியவன் தங்கியது அகமேந்தியின் பக்கத்து வீட்டிற்கு தான்.


நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த வீட்டில் ருத்திரன் வந்திருப்பதால் வீட்டில் வேலைக்காரர்களின் நடமாட்டம் தெரிய, அகமேந்தி சற்று தைரியமாக உள்ளே நுழைந்தாள்..


“அண்ணா..” என்ற குரலில் வேகமாக திரும்பி பார்த்தார் அந்த வாட்ச்மேன்.


“ஓஹ். நீயாம்மா வாம்மா?..”


“ஆன்ட்டி வந்திருக்காங்களா..?”


“இல்லையே ம்மா. அவர் பையன் தான் வந்திருக்கார்” என்றதுமே முகம் வாடிப் போனது அகமேந்திக்கு.


ஓஓ என ஒற்றை வார்த்தையில் வாடிப்போன முகத்துடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றவளுக்கு நீண்ட பெருமூச்சு எழுந்தது.


“சரி அண்ணா. அவுங்க வந்தா நான் வந்தேன்னு சொல்லுங்க”


“சரிம்மா. நான் கடைத்தெருவுக்கு போயிட்டு வர்றேன்” என்றவர் வேகமாக கடைத்தெருவை நோக்கிச் சென்றார். அகமேந்தியோ வீட்டையே திரும்ப திரும்ப பார்த்தபடி சென்றாள்.


அவளால் சட்டென்று அந்த வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அதற்கு முழுக்காரணம் அங்கு அவள் மதியழகியுடன் இருந்த கணங்கள்..


அதை மீண்டும் பார்க்க வேண்டுமென்ற ஆசையும், பேராவலும் தோன்றிய கணம், எதைப் பற்றியும் யோசிக்கத் தோன்றாமல், பின்னால் இருக்கும் தோட்டத்தை நோக்கி ஓடினாள்.


அவள் தோட்டத்தை அடைந்த அடுத்த கணமே, “அம்மாஆஆ” என்ற அலறலுடன் ஒரு உருவம் அவள் முன்னே கீழே விழுவதை உணர்ந்தவள் அப்படியே திகைத்து நின்று விட்டாள்…


தன் முன்னால் கீழே விழுந்து கிடந்தவனை அப்பொழுதுதான் பார்த்தாள். உயிரற்ற உடலைப் போல் அப்படியே கிடந்தது. பேச்சுமூச்சின்றி கிடந்தது வேறு யாருமல்ல ருத்திரன் தான்…


“அய்ய்ய்யோ அன்னைக்கு அவுங்க அம்மா மயங்கினாங்க. இன்னைக்கு இவரா? யாருன்னு கூட தெரியலையே” என புலம்பியபடி எட்டிப் பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை.


“அண்ணா அண்ணா எழுந்திருங்க” என்றவள் வேகமாக அவனை தட்டியெழுப்ப முயன்றிட, சற்றும் அசைந்தானில்லை.


“அய்யோ.. இப்போ என்ன பண்ணுவேன். அண்ணா அண்ணா வாட்ச்மென் அண்ணா” என கேட்கும் திசையெங்கும் வேகமாக அலறினாள்…


“என்னம்மா அகி என்னாச்சு?”..‌ என வெளிகேட்டிலிருந்து வேகமாக ஓடிவந்தார் வாட்ச்மென்.


“அய்யோ அண்ணா இவர் மயக்கம் போட்டு விழுந்துட்டார் போல. எந்திரிக்கவே மாட்டேங்குறார்” என பதட்டமான குரலில் கூறியவளின் கண்களோ பரிதவிப்புடன் ருத்திரனின் மேல் படிந்தது…


“இரும்மா. நான் வர்றேன்” என்றவர் ருத்திரனின் இதயத்தை நன்றாக அழுத்தி இதயத்துடிப்பை நன்றாக ஆராய்ந்தார். சற்று விட்டுவிட்டு தான் துடித்தது.


“யம்மாடி துடிப்பு மெல்ல தான் துடிக்குது. இவரை கொஞ்சம் பார்த்துக்கோ நான் டாக்டரை கூப்பிட்டு வந்திடுறேன்” என்ற வாட்ச்மேனின் கையைப் பிடித்தவள்,“அண்ணா பக்கத்து தெருவுல எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க. நான் கூப்பிட்டு வர்றேன். நீங்க இவரை பார்த்துக்கோங்க” என்றவள் வேகமாக ஓடினாள்..


பி‌.டி.உஷாவினை தோற்கடிப்பதை ஓடினாள். அவள் ஓடிய வேகத்திற்கு ஓட்டப்பந்தயத்தில் ஓடினாள் நிச்சயம் அவளுக்குப் பரிசே கிடைத்திருக்கும் அந்தளவிற்கு ஓடினாள்…


பத்தே நிமிடத்தில் டாக்டரை அழைத்துக் கொண்டு ஓடி வந்தாள் அகி.


உள்ளே நுழைந்த டாக்டர் ருத்திரனை செக் பண்ணி ருத்திரனுக்கு மூச்சையும் அளித்தார். சில நிமிடங்களில் எழுந்து அமர்ந்தவனின் விழிகளில் பட்டது அகமேந்தி தான்…


பட்டுப் பாவடையில் கண்கள் கலங்கி கைகளை பிசைந்தபடி நின்றிருந்த அகமேந்தியை அன்று தான் முதலில் பார்த்தாள்.


“தம்பி இப்போ எப்படி இருக்கு?” என கைத்தாங்கலாக ருத்திரனை அமர வைத்தார் வாட்ச்மேன் முருகன்.


“இப்போ பரவாயில்லை அண்ணா. இது யாரு உங்க பொண்ணா?” என அகமேந்தியை நோக்கி கைகளை நீட்டிட,


“அய்யோ இல்லை தம்பி. இது பக்கத்து வீட்டு பொண்ணு. இந்தப் பொண்ணு தான் தம்பி அம்மா உயிரையும் காப்பாத்திச்சு” என்ற வார்த்தையில் ஆழ்ந்து பார்த்தான் ருத்திரன்…


அவனின் கூர்பார்வையில் தானாக தலைகவிழ்ந்தபடி நின்றாள் அகி. ஏனோ அங்கு நிற்பதே ஒரு வித அசூசையாக இருந்தது.


“நான் போறேன் அண்ணா” என முருகனிடம் விடைபெற்று, வேகமாக வெளியேற முயன்றிட,


“தாங்க்ஸ்” என்ற கணீர்க்குரலில் சட்டென்று நின்று விட்டாள். திரும்பி ருத்திரனை பார்க்க அவனோ மென்புன்னகையுடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் குறுகுறு பார்வையில் வேகமாக வெளியே ஓடிவிட்டாள்…


“ரொம்ப நல்ல பொண்ணு தம்பி”..


“ம்ம்ம்.. ஆமா”


“எப்படி தம்பி மயக்கம் போட்டு விழுந்தீங்க?”


“அய்யோ அண்ணா. நான் மயக்கம் போடலை‌. குளிக்கலாம்னு போனேன் தண்ணீ வரலை. அதான் மோட்டார் போடலாம்னு இங்கே வந்தேன். ரொம்ப நாள் யூஸ் பண்ணாம இருந்ததால ஷாக் அடிச்சிருச்சு அண்ணா” என்ற ருத்திரனின் வார்த்தையில் சட்டென்று புருவம் சுருக்கினார்..


“தம்பி வாரத்துல ரெண்டு நாள் தோட்டத்தை க்ளீன் பண்ணி தண்ணீ ஊத்துறதுக்கு ஆள் வருவாங்க தம்பி” என்றவரின் வார்த்தையை சரியாக வாங்கியிருந்தால் பின்வரும் பல அசம்பாவிதங்களை தவிர்த்திருப்பானோ?.. என்னவோ? அவனை சுற்றிப் போடப்படும் வியூகத்தை அறியாமல் விட்டது யார் பிழையோ?”
 
Last edited:
மனம் 26


சஞ்சனாவோ தன் கழுத்தில் ஏறிய தாலியை வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் நடந்த எதையும் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


அங்குமிங்கும் ஹாலில் நடமாடிக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றனர் மஞ்சரியும் அஸ்வத்தும்..


“என்ன சஞ்சனா நாம நினைச்சது எல்லாம் ஒரு வழியா நடந்திருச்சு?. இனி என்ன அடுத்த கட்டம் தானே.. அந்த மதியழகியையும் இரணியனையும் ஒழிச்சுக் கட்டிட்டு நாம சுகபோக வாழ்க்கை வாழ வேண்டியது தானே”


“மண்ணாங்கட்டி… அத்தை நீ கொஞ்சம் வாயை மூடுறீயா?”


“என்னடி வாய் ரொம்ப அதிகமாகுது” என மஞ்சரி பதிலுக்கு எகிற,


“அத்தை ப்ளீஸ் வாயை மூடு. இங்கே என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத”


“இங்கே என்னடி நடந்திச்சு. உனக்கும் ருத்திரனுக்கும் கோயில்ல கல்யாணம் நடந்திருக்கு. நம்ம ஆசைப்பட்டபடி”


“அதுதான் இல்லை அத்தை. என் கழுத்துல தாலி கட்டுனது ருத்திரன் இல்லை இரணியன்” என்ற வார்த்தையில் மஞ்சரி அதிர்ந்து நிற்க,


“என்னடி சொல்ற?”


“ஆமா. அத்தை தாலி கட்டி முடிச்சதுக்கப்புறம் தான் எனக்கேத் தெரிஞ்சது ருத்திரன் இல்லை இரணியன்னு. இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம நானே முழிச்சிட்டு இருக்கேன்”...


“ருத்திரன் ஒரு வாயில்லாப்பூச்சி. நாம என்ன சொன்னாலும் எதிர்த்து பேசமாட்டான். ஆனா இரணியன் அப்படியில்லைடி. அவன் பேய் மாதிரி ஆடுவானேடி.. சும்மாவே அவனை பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கும் இப்போ என்ன பண்றது?”


“இரணியனை கொன்னுடலாம்” என்ற சஞ்சனாவை மஞ்சரி அதிர்ந்து பார்க்க,


“ஆமா அத்தை. வேற வழியில்லை இரணியனை கொன்னுடலாம்”


“அவனை எப்படிடி கொல்ல முடியும். அவன்கிட்ட போகவே பயமா இருக்கு?” என்ற மஞ்சரியை பார்த்து உதட்டை சுழித்தவள்,


“அதான் இருக்கே அத்தை பர்ஸ்ட் நைட். அது ஒன்னு போதாதா?‌ அவன் என்னை நெருங்கி வரணும். அப்போ அவனை கொன்னுட வேண்டியதுதான்”


“அவன் பார்க்கிறதுக்கு கடோத்கஜன் மாதிரி இருக்கான். நீ கதவுல மாட்டின எலி மாதிரி இருக்க?. நீ எப்படிடி அவனை கொல்லப் போற?”


“அத்தை அவனோட நேருக்கு நேர் மோதினா தான் நமக்கு தான் சேதாரம்… நான் டாக்டர் அத்தை ஒரு ஊசி போதும். அவனைக் கொல்லுறதுக்கு”


“அப்போ ஊர்ல அவன் எப்படி இறந்தான்னு கேட்டா? என்னடி சொல்லுவ?”


“அவனுக்கு ஆண்மையில்லைன்னு சொல்லிடலாம். ஒரு பொண்ணை திருப்திபடுத்த முடியலைன்னு அவன் மேல பழி போட்டுடலாம்” என்ற வார்த்தையில் அதிர்ந்து நின்றது மஞ்சரி மட்டுமல்ல. அப்பொழுதுதான் சஞ்சனாவை தேடி வந்த இரணியனும்.


சஞ்சனா சொன்ன வார்த்தைகளை கேட்ட பின் ஓரடி எடுத்து முன்னால் வைக்க முடியாமல் தடுமாறி நின்றான்.


கேட்கும் விஷயத்தை நாம் அரைகுறையாக கேட்டால் அதன் விளைவு நமக்கு எதிராகத்தான் முடியும்.. இரணியனின் நிலைமையும் அதுவே. முன்பாதியை கேட்டவன் பின்பாதியை மறந்துவிட்டான்…


“இதெல்லாம் நடக்குமா சஞ்சனா?”


“கண்டிப்பா நடக்கும் அத்தை.. நடத்திக் காட்டுறேன்” என்றவள் அங்கிருந்து அகன்று விட, மஞ்சரியும் நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே தன்னறைக்கு சென்று விட, அவரின் பின்னால் சென்றான் அஸ்வத்தும்..


அதுவரை அவர்கள் பேசியதை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்த இரணியன் தூணிற்கு பின்னால் இருந்து வந்து நின்றான்.


சஞ்சனாவின் வார்த்தைகளை கேட்டவனுக்கு இதயத்தில் அப்படியொரு வலி. ஏன் ஏன்? எதில் தவறினான்?


ஒரு பெண்ணின் மனதை அறிந்து விட தவறிவிட்டானா? என தனக்குள் மருகி நின்றவனுக்கு, சஞ்சனா சொன்ன ஆண்மை இல்லை என்ற வார்த்தை காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.


முகம் இறுக நின்றிருந்தவனின் அருகில் வந்து நின்றான் மாணிக்கம். அவனின் வலது கை.


“என்னாச்சி பெத்தண்ணா?”


“ஒன்னுமில்லை” என உடைந்து போன குரலில் கூறினான்.


அதன் பின் அவனால் அங்கு நிற்கவே முடியவில்லை. தான் இங்கிருந்தால் ஏதாவது பிரச்சினையாகி விடுமோ என நினைத்தே தனக்கு சொந்தமான தோட்ட வீட்டிற்கு சென்று விட்டான்.


அவனால் சஞ்சனாவின் பேச்சுக்களை நினைத்துப் பார்க்க பார்க்க அப்படியொரு கோபம் வந்தது. அவளை கண்டந்துண்டமாக வெட்டி புதைத்து விடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.


ஏன் ஏன் தன்னைப் பார்த்து அப்படி ஒரு வார்த்தை கூறினாள்? என நினைக்கும் பொழுதே ஏமாற்றத்தின் வலி அவனின் முகத்தில் தெரிந்தது.


எதில் நான் தவறினேன்?. காதல் என்ற ஒற்றை வார்த்தையிலா?.. நீ எப்பொழுதடா அவளிடம் தன் காதலை சொன்னாய்? என மனசாட்சி எடுத்துரைக்க, அதற்கு அடுத்த கணமே அவனால் அங்கு இருக்க முடியவில்லை.


இல்லை சஞ்சனா அப்படிப்பட்டவளில்லை. அவளிடம் இதற்கான நியாயமான காரணம் ஏதாவது இருக்கும் என நினைத்து மறுபடியும் வீட்டை நோக்கி நடந்தான்.


சஞ்சனா ஒரு வேளை தன் எதிரிகளின் மகளா? என ஒரு மனம் சிந்திக்கவும் தவறவில்லை… பல வித குழப்பங்களுக்கிடையில் மீண்டும் வீட்டை நோக்கி நடந்தான்..


99 சதவீதம் சஞ்சனாவின் மேல் நம்பிக்கை இல்லை என்றாலும், 1 சதவீத நம்பிக்கையில் மீண்டும் ஓடினான். பாதி விஷயங்களை மட்டுமே கேட்டதால் அவனால் பல முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறி நின்றான்…


வீட்டிற்குள் நுழையும் பொழுது எதிர்கொண்டது மதியழகியை தான்.


“எங்கேப்பா போன? இந்த ருத்திரனையும் காணும் அவனும் எங்கே போனான்னு சொல்லவே இல்லை. காலையில் இருந்து ஆளையே காணும்” என்றவரின் வார்த்தையில் புருவம் சுருக்கினான் இரணியன்.


“ஏன் ருத்திரன் எங்கே போனான்னு உங்ககிட்ட சொல்லவே இல்லையா?”


“இல்லை இரணியா. எனக்கு பயமா இருக்கு” என்றவரின் வார்த்தையில் சற்று நடுக்கமும் இருந்தது. இரணியனை போல் இரும்பு இதயம் கொண்டவனில்லையே ருத்திரன்.


இளகிய மனம் கொண்ட மன்னவன் அல்லவா. யாராவது அவனின் முன்னால் கண்களை கசக்கி நின்றாள் கூட அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.


“சரிம்மா. நான் ஆட்களை வச்சிப் பார்க்கிறேன்” என்றவனின் கைகளை பிடித்தவர்,


“இப்போ தேட வேண்டாம்பா. உனக்கு இன்னைக்கு முக்கியமான நாள். நீ மேலே போ. நான் மாணிக்கத்துக்கிட்ட சொல்லியிருக்கேன். அவன் தகவல் ஏதாவது சொல்லிடுவான் பா”


“சரிம்மா. ருத்திரன் கண்டிப்பா ஏதாவது உயிரை காப்பாத்த தான் போயிருப்பான்” என்றவன் வேகமாக மேலே சென்றான்.


“அம்மா. இவளை இன்னுமா நம்புற?”


“வேற என்னடா பண்ண சொல்லுற?” இப்போதைக்கு இவளை நம்புற தாண்டி எதுவும் பண்ண முடியல”


“என்னால முடியும்மா” என்ற அஸ்வத்தை திரும்பி பார்த்தார் மஞ்சரி.


“உன்னால என்னடா பண்ண முடியும்? இரணியனை கொல்லப் போறீயா?. அவன் ஓரடி அடிச்சா நீ அப்படியே பூமிக்குள்ள புதைய வேண்டியது தான்” என்ற மஞ்சரியை கோபத்துடன் முறைத்துப் பார்த்தவன்…


“அம்மா எதிரி தான் நேருக்கு நேரா மோதி தன்னோட பலத்தை இழப்பான். ஆனா நான் அப்படிப்பட்டவனில்லை. கூடவே இருந்து குழி பறிக்கப் போறேன். ருத்திரன் கோயம்புத்தூர் போயிருக்கான்‌. அங்கேயே அவனைக் கொல்லுறதுக்கு ஆள் செட் பண்ணிட்டேன்” என்ற அஸ்வத்தை அதிர்ந்து பார்க்க,


“என்னடா சொல்லுற? கொல்றதுக்கு ட்ரை பண்றீயா?...”


“ஆமாம்மா. ருத்திரன் கோயம்புத்தூருக்கு அர்ஜென்ட்னு போயிருக்கான். எப்படியும் கோயம்புத்தூர்ல இருக்கிற வீட்டுல தான் தங்குவான்.. அங்கே அவனைக் கொல்லுறதுக்கு ஆள் அனுப்பியிருக்கேன்” என்ற அஸ்வத்தை சற்று அதிர்ந்து பார்த்தார்..


ஆம். ருத்திரன் மண்டபத்தை விட்டு வெளியேறும் வேளையே பின்னால் தொடர்ந்து சென்றான் அஸ்வத். ருத்திரன் போனில் பேசுவதை கேட்டபின்பு, தனக்கு தெரிந்த ரவுடிகளை வைத்து ருத்திரனை கொல்வதற்கு அவனின் காரை பாலோ பண்ணுவதற்காக ஆட்களை அனுப்பி வைத்தான்.


அவர்கள் தான் ருத்திரனை கொல்வதற்காக மோட்டாரை கரண்ட் வயருடன் கனெக்ட் பண்ணியது. அஸ்வத் சொல்வதை கேட்ட மஞ்சரிக்கு தூக்கிவாரிப் போட்டது.


சொத்துக்கள் வேண்டுமென்று விரும்புகிறார் தான்? ஆனால் தன் மகன் கொலைகாரன் ஆக வேண்டுமென்று மஞ்சரி என்றுமே விரும்பவில்லை.


“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அஸ்வத்?. நீ எந்த பிளானும் பண்ண வேண்டாம். நாளைக்கு நீ கொலைகாரனா நிக்குற நிலைமை தான் வரும்”


“ம்ம்மா இந்த சொத்தெல்லாம் நமக்கு வரணும்னு நீதான் ஆசைப்படுற?”


ஆமாண்டா ஆசைப்பட்டேன். சின்ன வயசுல இருந்து காசுக்காக இன்னொருத்தர் கிட்ட கையேந்தி நிற்கும் போதுதான்டா தெரியும் காசோட அருமை. அந்த நிலைமை என் புள்ளைக்கு வரக்கூடாதுன்னு தான் இவ்வளவு போராடுறேன்.


கல்யாணம் முடிஞ்சு இரண்டு பையன் இருக்கார்னு தெரிஞ்சதுக்கப்புறமும் உங்கப்பாவை தேடி வந்தேன். அவரை காதல்ங்கிற பேர்ல விழ வச்சதெல்லாம் எதுக்கு நீ நல்லா இருக்கணும்னு தான்டா.. நீ இப்படி கொலைகாரனா மாறி நிக்கணும்னு இல்லை?. புரிஞ்சுக்கோ”


“இல்லைம்மா. நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்காதும்மா. நான் கொலைகாரனா ஆக மாட்டேன்.. ஆனா எல்லாருடைய நிம்மதியையும் பறிக்கிறேன்” என்றவனை சற்று தவிப்பாக பார்த்தார் மஞ்சரி.


எங்கே தன் மகன் ஏதாவது அவசரப்பட்டு செய்து மாட்டிக் கொள்வானே? என்கின்ற பயம்தான் அது.


ஆனால் அஷ்வத் ஆடிய ஆட்டத்தில் அகமேந்தி என்ற அப்பாவி ஜீவன் தான் பலிகடா வாகி போனது.
 
Last edited:
மனம் 28


அறைக்குள் நுழைந்த இரணியன் விழிகளால் சஞ்சனாவை தான் தேடினான். அவள் எங்குமில்லாதது வேறு சற்று பயத்தைக் கொடுத்தது.


சட்டென்று தன் வயிற்றில் ஏதோ ஊர்வதைப் போன்று தோன்றிட, மெதுவாக விழிகளை கீழே இறக்கிப் பார்த்தான்.


வளையல் அணிந்த கரம் ஒன்று அவன் வயிற்றை தழுவியபடி அணைக்க, அதைப் பார்த்ததுமே புரிந்தது அது சஞ்சனாவுடைய கைகள் என்று.


அதைப் பார்த்தவனின் உடலோடு முகமும் சேர்ந்து இறுகியது. வயிற்றில் ஊர்ந்த கைகள் மெல்ல மேலே நோக்கி பயணிக்க, சட்டென்று அந்த கைகளை பிடித்துக் கொண்டான் இரணியன்.


“நீ ரொம்ப டயர்டா இருப்ப சஞ்சனா. போய் ரெஸ்ட் எடு” என்றதும் சஞ்சனாவின் முகம் கருத்து விட்டது.


அவன் தன்னை மறந்த நிலையில் இருக்கும் பொழுது தான் அவனை கொல்ல வேண்டும் என சஞ்சனா ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.


“அதெல்லாம் எனக்கு டையர்டா இல்லை இரணியா . ஐயம் ஓகே” என்றவள் மறுபடியும் இரணியனை அணைக்க முயன்றிட, சட்டென்று அவளை விட்டு இரண்டடி பின்னால் வைத்தான்.


சஞ்சனா சொல்லிய வார்த்தைகள் இன்னமும் அவன் செவியில் மோதிக் கொண்டே தானிருந்தது.


“எதுக்கு விலகிப் போறீங்க இரணியா? என்னைப் பிடிக்கலையா? நீங்கதானே என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னீங்க?”


“இல்லை.. நான்.. நான்ன்” என்றவனின் தடுமாற்றத்தை வித்தியாசமாக பார்த்தாள்.


நாமே வற்புறுத்தினால் தன்னை தானே அசிங்கப்படுத்துவது என நினைத்தவள், “சரி இரணியா. நான் படுக்கிறேன்” என்றவள் ஏசியை ஆன் பண்ணிவிட்டு உறங்க சென்றிட, அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் இரணியன்.‌


அவளின் நடிப்பை பார்த்தவனுக்கு சற்று கோபம் கூட வந்தது. முன்பு தன்னைப் பற்றி சொன்னது என்ன?. இப்பொழுது அவள் நடந்து கொள்ளும் முறை என்ன? என நினைத்தபடி அவளின் அருகில் சென்று படுத்தான்.


இந்நேரம் வெளியில் செல்ல முடியாதே அதனால் அவளுடன் தங்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.


இரணியன் நன்றாக உறங்கும் நேரம் சட்டென்று கண்களை திறந்தாள் சஞ்சனா. தன்னருகில் படுத்திருந்தவனை பார்க்கும் பொழுதே ஆத்திரமும், கோபமும் சேர்ந்தே வந்தது.


“என் பக்கத்துல படுக்கிறதுக்கு உனக்கென்ன தகுதி இருக்கு?” என மனதுக்குள் நினைத்தவள், அவன் தூக்கத்தினை கண்காணிக்க ஆரம்பித்தாள். நன்றாக ஆழ்ந்து உறங்குபவனை பார்த்தவளின் இதழோரம் சிறு வன்ம புன்னகை தோன்றியது.


“உன்னோட சேப்டர் இன்னையோட முடிஞ்சிடும் இரணியன்” என நினைத்துக் கொண்டே, தான் கொண்டு வந்திருந்த இன்ஜெக்சனை கையில் எடுத்தாள்.


வெற்று ஆக்சிஜனை ஊசிக்குழாயினுள் நிரப்பியவள், இரணியன் அருகில் சென்றாள்.. இரணியன் எப்பொழுதும் சுதாரிப்பாக இருப்பான். தன் வீட்டில் மட்டுமே மூச்சுக்காற்றை கூட சந்தேகப்பட மாட்டான்.


அப்பேற்பட்டவனா தான் தாலி கட்டிய மனைவியை சந்தேகப்பட போகின்றான்?. சஞ்சனாவின் மேல் இருந்த சிறு நம்பிக்கையில் ஆழ்ந்து உறங்கியவனின் அருகில் சென்றவள், தன் கைகளில் வைத்திருந்த ஊசியை அவன் கைகளில் செலுத்த முயன்ற அடுத்த நொடியே, படபடவென கதவு தட்டும் சத்தத்தில் சட்டென்று தன் கைகளில் இருந்த ஊசியை தூர தூக்கிப் போட்டாள்.


கதவு தட்டும் சத்தத்தில் பட்டென்று கண்களை திறந்த இரணியனுக்கு தன்னருகில் நெருங்கி அமர்ந்த சஞ்சனாவைப் பார்த்து புருவம் இடுங்கியது.


சஞ்சனாவிற்கோ பயத்தில் வேர்க்க ஆரம்பித்து விட்டது . இரணியனின் தீர்க்கமான பார்வையில் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது.


“என்னாச்சி?” என்றவனை பார்த்து எச்சில் முழுங்கியவள், “ஏசி.. ஏசி ரிமோட்ட்” என அடுத்த வார்த்தை பேச திணறிட, அப்பொழுது தான் உணர்ந்தான். அறையில் ஏசியின் குளுமை அதிகமாக இருந்தது. அவன் அருகில் தான் ஏசியின் ரிமோட் இருந்தது.


ஏசியினை முழுதாக ஆப் பண்ணிவிட்டு பேனின் சுவீட்சை தட்டிவிட்டு வேகமாக கதவை திறந்தான்.


அங்கு நிச்சயமாக மாணிக்கத்தை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது. “என்னாச்சி மாணிக்கம் ஏதாவது பிரச்சினையா?” என்றவனின் முன்பாக தலைகுனிந்து நின்றான்.


அவனுக்கு நன்றாக தெரியும் இன்றைக்கு முதல் இரவு என்பது. ஆனால் அதை விட முக்கியமான விஷயம் என்பதால் தான் கதவையே தட்டினான்… மாணிக்கத்தை பற்றி இரணியனுக்கும் நன்றாக தெரியும் என்பதால் அவன் மீது சிறிது கோபம் கூட ஏற்படவில்லை.


“என்னாச்சி மாணிக்கம்?”


“ருத்திரன் அண்ணாவை கொல்லுறதுக்கு யாரோ சதி பண்ணியிருக்காங்க” என்ற வார்த்தையில் முழுதாக அதிர்ந்தான் இரணியன். இரணியன் மட்டுமல்ல சஞ்சனாவும் தான்.


“என்ன சொல்லுற மாணிக்கம்? ருத்திரனை கொல்ல ட்ரை பண்றாங்களா?”


“ஆமா அண்ணி”


“எல்லாம் உன்னாலதான்டா. நீ பண்ண தப்புனால தான் என் ருத்திரனை கொல்ல ட்ரை பண்ணியிருக்காங்க” என்றவளின் வார்த்தையில் திகைத்து நின்றனர் இரணியனும், மாணிக்கமும்..‌


“என் ருத்திரனாஆஆஆ” என இரணியன் அதிர்ந்து கேட்க,


“இல்லை.. இல்லை அது என் ப்ரண்ட்.. ப்ரண்ட்னு சொல்ல வந்தேன்” என்றவளின் கண்களோ அலைபாய்ந்தது.


“ம்ம்ம்” என இறுகிய குரலில் சொன்னவன் அடுத்த நிமிடமே கோயம்புத்தூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தான்.


அவனுக்கு என்ன ஒன்றிரண்டு எதிரிகளா? யார் என்று கண்காணிக்க. ஆனாலும் ஏனோ மனம் நிலையில்லாமல் தவித்தது.


எதிரி வெளியில் இருப்பது போன்று அவனுக்கு தோன்றவில்லை. தன் கூடவே இருந்து யாரோ குழி பறிக்கிறார்களோ? என்ற சிந்தனை தான் அதிகமாக தோன்றியது.


அங்கு சஞ்சனாவோ நிலையில்லாமல் இருந்தாள் அவளால் நிலைகொள்ளவே முடியவில்லை. யார் ருத்திரனை கொல்ல நினைக்கிறார்கள்? என நினைத்தவளுக்கு மேன் மேலும் இரணியனின் மேல் தான் கோபம் வந்தது.


இரணியனின் எதிரிகள் தான் ருத்திரனை கொல்ல நினைக்கிறார்கள் என்று நினைத்தாள்.


இரணியனை எவ்வளவு சிக்கீரமாக கொல்ல முடியுமோ? அவ்வளவு விரைவாக கொல்ல வேண்டுமென்று நினைத்தாள்..


காரில் பயணித்துக் கொண்டிருந்த இரணியனோ தன் அண்ணனை நினைத்து கவலை மேலிட அமர்ந்திருந்தான்…


இவர்களுக்கு நேர்மாறாக ருத்திரனோ தன் வீட்டின் வாசலில் வழிமேல் விழி வைத்து காத்திருந்தான் அகமேந்திக்காக.


அகமேந்தி பள்ளிக்கு செல்ல ருத்திரனின் வீட்டை தாண்டி தான் செல்ல வேண்டுமென்பதால் இந்த வழியிலேயே வந்து நின்றான்.


அகமேந்திக்காக காத்திருந்தவன் முன்பாக வழுக்கிக் கொண்டு வந்து நின்றது இரணியனின் கார்.


இரணியனின் கார் திடுதிப்பென்று தன் முன்னால் வந்து நிற்கும் என அவனே எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் அதிர்ந்த விழிகள் காட்டிக் கொடுத்தது.


வந்த அடுத்த கணமே வாசல்கேட்டில் நின்றவனை புருவம் சுருக்கி பார்த்தான்.


“நீ இங்கே என்ன பண்ற?” என கணீர்க்குரலில் கர்ஜிக்க,


“அது. நான் சும்மா தான் நிற்கிறேன்” என சற்று தடுமாற்றத்துடன் பதில் கூறினான் ருத்திரன்.


“சரி. ஆப்ரேஷன் முடிஞ்சுதா?”


“ஹான் முடிஞ்சுது டா. சாரிடா கல்யாணத்துல என்னால கலந்துக்க முடியலை. ஒரு உயிரை காப்பத்தணும்னு” என்றவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் இரணியன்…


அவனுக்குமே தெரியும். தன் கல்யாணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை என்றால் ஒரு உயிரை காப்பாற்ற தான் ஓடியிருப்பான் என்று…‌


“சரிடா. நான் எதுவும் நினைக்கலை. உன் வேலையை பத்திதான் தெரியுமே!.. நீ சிக்கீரமா கிளம்பு ஹைதராபாத் போகலாம்”


“இப்பவே என்னடா அவசரம்?. ஆமா நீ எப்படி இங்கே வந்தே?”


“ஆமா நீ பெரிய இவன் பாரு. இவனை கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம். பேசாம வாடா” என்றவன் வேகமாக வீட்டிற்குள் நுழைய.. ருத்திரனின் விழிகளோ அகமேந்தி வருகிறாளா என ரோட்டையே வெறித்துப் பார்த்தது.


உள்ளே நுழைந்தவன் ருத்திரனை நிற்கக்கூட நேரம் கொடுக்காமல் அனைத்தையும் பெட்டிக்குள் திணித்தான்…


“மாணிக்கம் நீ ருத்திரா காரை ஓட்டு. ருத்திரன் என் கார்ல வரட்டும்” என ருத்திரனை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தான்.


“இல்லைடா.. நான்” என்ற ருத்திரனை தீப்பார்வை பார்க்க, அவன் பார்வையில் தெரிந்த அனலில் ருத்திரன் தான் வாயை மூடிக் கொண்டான்…


ருத்திரனோ மனமோ நிலையில்லாமல் தவித்தது. இரணியன் இவ்வளவு அவசரப்படுகிறான் என்றால் கண்டிப்பாக ஏதோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன் நேராக வந்து நின்றது வாட்ச்மேன் முன்பு தான்…


“வாங்க தம்பி. இப்போ தான் இரணியன் தம்பி சொன்னாக. நீங்க கிளம்புறீங்கன்னு”


“ஆமா அண்ணா. கொஞ்சம் அர்ஜென்ட் அதான் போறேன்.. ஆமா என்னைக் காப்பாத்திச்சே ஒரு பொண்ணு யாருன்னு தெரியுமா அண்ணா”


“ஹான் தெரியும் தம்பி. பக்கத்து வீட்டுப் பொண்ணுதான் பேரு அகி”


“ஓஹ்ஹ் சரி அண்ணா. அந்தப் பொண்ணுக்கிட்ட என்னையும், எங்க அம்மாவையும் காப்பாத்துனதுக்கு தாங்க்ஸ் சொல்லிடுங்கண்ணா” என்றவன் இரண்டெட்டு முன்வைத்தவன், சட்டென்று கால்களை பின்னால் வைத்து, தன் கைகளில் மாட்டியிருந்த வாட்சை கழட்டினான்…


“இதை அந்தப் பொண்ணுக்கிட்ட கொடுத்துடுங்க அண்ணா” என வாட்சை கழட்டி நீட்டினான்..


“தம்பி என்னதிது” என இழுத்தவரின் கையில் திணித்தவன்,


“அண்ணா கண்டிப்பா இதை அந்தப் பொண்ணுக்கிட்ட கொடுத்திடுங்க” என்றவன் வேகமாக காரில் ஏறியமர்ந்தான்..


ருத்திரன் கார் அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்ல, அதன் பின்னால் இரட்டைஜடை பின்னலுடன், தன் தம்பியுடன் கைக்கோர்த்தபடி நடந்து வந்துக் கொண்டிருந்தாள் அகமேந்தி.


காரை வழியனுப்பி விட்டு திரும்பி வாட்ச்மேனின் கண்களில் விழுந்தாள் அகி.


“ஏய்ய்ய்.. பாப்பா” என்ற குரலில் சட்டென்று திரும்பி பார்த்தாள்..


“என்ன அண்ணா கூப்பிட்டீங்களா?”


“இந்தாம்மா இந்த கிஃப்டை பெரிய தம்பி கொடுத்து விட்டாரு”


“பெரிய தம்பியா யாரு அது?”


“அன்னைக்கு ஒருத்தரோட உயிரை காப்பாத்துனீயே அவர் தான்”..


“ஓஹ்ஹ்ஹ்.. அதுக்கு எதுக்குண்ணா கிப்ட்டு. அதை நீங்களே வச்சிக்கோங்க”


“அய்ய்ய்யோ பெரிய தம்பி கண்டிப்பா உன் கையில கொடுக்க சொல்லியிருக்காங்கம்மா. இந்தா புடி” என அகியின் கைகளில் கொடுத்தார்…


அகியோ திருதிருவென முழித்தபடி நின்றிருந்தாள். அகியின் கைகளில் இருந்த கிப்ட்டை வாங்கிப் பார்த்த அபியோ நடுரோடு என்று பார்க்காமல் குதித்து கொண்டிருந்தான்…


“அக்கா வாட்ச் அக்கா.. வாவ்வ்வ் செம்ம சூப்பரா இருக்கு” என அபியின் கைகளில் இருந்த வாட்சை வேகமாக பிடுங்கியவள், “அபி இது நம்மளோடது இல்லை. வேற ஒருத்தரோடது” என்றவள் வேக வேகமாக வாட்ச்மேனின் கைகளில் திணிக்க, அவரோ அகியின் கையில் திணித்துவிட்டு வேகமாக சென்று விட்டார்..


“என்னடா இப்படி சொல்லிட்டுப் போயிட்டாரு.. இதை வச்சி என்ன பண்றது?”


“பத்திரமா வச்சிக்கோ க்கா. பின்னாடி நானே யூஸ் பண்ணிக்கிறேன்”


“ஏன்டா இது எவ்வளவு விலை இருக்கும்?” என தன் கைகளில் இருந்த வாட்சை உருட்டிக் கொண்டே நடந்தாள்..


“இரண்டாயிரம் ரூபா இருக்கும் க்கா. பார்த்தாலே பளிச்சின்னு புதுசு போல இருக்குல்ல”


“ஆமா டா. இருக்கும் இருக்கும்.. நான் பத்திரமா வச்சிருந்து அவர்கிட்டே கண்டிப்பா கொடுத்துடுவேன்” என்றவள் அறியவில்லை. அதன் விலை எழுபத்தைந்தாயிரம் என்று..


இரணியனும், ருத்திரனும் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே, சஞ்சனா வேகமாக ஓடிவந்தாள்.


“ருத்திரா நீ நல்லா இருக்கல்ல. உன் தம்பி உன்னைக் கொல்லுறதுக்கு ஏதோ சதித்திட்டம் நடக்குதுன்னு சொன்னதுல இருந்து என் மனசே எங்கிட்ட இல்லை” என்றவளின் கண்ணீரை பார்த்த மதியழகிக்கு ஏதோ ஒன்று இடறியது.


சஞ்சனா ருத்திரனுடன் பழகிய நட்பு பற்றி தெரியும்தான் என்றாலும் இவ்வளவு பதட்டமும் அவரை சற்று யோசிக்க வைத்தது.


“சரி சஞ்சனா அதான் ருத்திரன் நல்லா வந்துட்டானே.. நீ இரணியனை கவனிம்மா. நான் ருத்திரனை பார்த்துக்கிறேன்”


“இரணியா நான் சொன்னது என்னாச்சி?. அந்தக் குழந்தையை தத்தெடுக்குற வேலையை தொடங்கிட்டீயா?” என ருத்திரன் கேட்க,


“ஆமாடா. நாளைக்கு ஆசிரமத்துக்கு போய் அந்தக் குழந்தையை தத்தெடுக்கலாம்”...


“ம்ம்ம்.. அப்புறம் சொல்ல மறந்துட்டேன். அந்தக் குழந்தையை பற்றி விசாரிக்க சொன்னேன் டா”


“ஓஹ். ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?”


“ஆமாடா. தெரிஞ்சுது. அந்தக் குழந்தையோட அப்பா ராஜஸ்தான்ல பெரிய வைர வியாபாரி. வைரம் கைமாத்துறதுக்காக ஹைதராபாத்துக்கு வந்திருக்கார். ஆனா அவரோட எதிரிங்க கார்லேயே அவரை கொல்ல ட்ரை பண்ணியிருக்காங்க”


“ஓஹ்… சரி டா நாளைக்கு காலையில் அந்தக் குழந்தையை தத்தெடுத்துட்டு வந்துடலாம்” என தன்னறைக்கு சென்று விட்டான்…


மதியழகியும் தன்னறைக்கு சென்று விட, தனித்து நின்றது என்னவோ இரணியனும், சஞ்சனாவும் தான்…


“இரணியன் சாப்பிடுறீங்களா?”


“இல்லை எனக்கு வேண்டாம்”


“இல்லை. உங்களுக்காக நானே சமைச்சேன்..” என்றவளின் கெஞ்சும் குரலில், மெதுவாக கைகளை கழுவிக் கொண்டு டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தான்.


சப்பாத்தியை எடுத்து தட்டில் வைத்தவன் பன்னீர் குருமாவை ஊத்துவதற்காக பாத்திரத்தை திறக்க, அதில் பல்லி ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்தது.


அதைப் பார்த்ததுமே முகம் சுழித்து சட்டென்று எழுந்தவன், “சஞ்சனா பல்லி செத்துக்கிடக்கு பாரு”


“அய்ய்ய்யோ. சாரி இரணியா நான் கவனிக்கலை” என்றவளின் முகமோ கோபத்தில் அனலை கக்கியது.


“பரவாயில்லை நான் ட்ராவல் பண்ணும் போதே சாப்பிட்டேன் சஞ்சனா” என்றவன் வேகமாக தன்னறைக்கு செல்ல, மாடிப்படி ஏறுபவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா..


அவள் பன்னீர் குருமாவில் தான் பாய்சனை கலந்திருந்தாள். ஆனால் கடைசி நேரத்தில் இந்த பல்லி வந்து கெடுத்து விட்டதே? என கோபத்துடன் தன்னறைக்கு செல்ல முயன்றவளை வழிமறித்தாற் போன்று நின்றான் அஸ்வத்.


அவனை கண்டும் காணாமல் தாண்டிச் செல்ல முயன்றவளின் நடை சட்டென்று தடைப்பட்டது அஸ்வத் சொன்ன வார்த்தையில்.


“என்ன சொன்ன இப்போ?”


“சொத்து எல்லாம் உன் பேருக்கு மாத்திட்டு அப்புறம் கொல்லலாமே ன்னு சொன்னேன்” என்றவனின் வார்த்தையில் சஞ்சனா சற்று சிந்திக்க ஆரம்பித்தாள்.


பேசாமல் தன்னறைக்குள் நுழைந்தவள் அங்குமிங்கும் உறக்கமின்றி நடமாட ஆரம்பித்தாள். அவளுக்கு அஸ்வின் சொன்ன வார்த்தை தான் மீண்டும் மீண்டும் காதினுள் ஒலித்தது.


அவள் இரணியனை கொன்றால் கூட சுற்றியிருக்கும் சொந்தங்கள் சொத்துக்களை பறித்து விட்டால். இனி தன் காலம் என்னவாகும் என நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இரணியனின் சொத்துக்களை வாங்கிய பின்பே அவனை கொல்வது என முடிவெடுத்தாள்.


இரணியனிடம் சொத்துக்களை எழுதித்தா என கேட்கவா முடியும்?. கண்டிப்பாக எழுதி தரமாட்டான்.. அவனை ஏமாற்றி போதை மயக்கத்தில் தான் எழுதி தர வைக்கவேண்டும் என முடிவெடுத்தாள்.


இருவருக்கும் ஹனிமூன் டிக்கெட் சிம்லாவில் எடுத்திருந்தாள். இரணியனுக்கு சஞ்சனாவின் செய்கை சற்று அதிர்ச்சி தான். ஆனாலும் ஏனோ மறுக்கத் தோன்றவில்லை.


உரிமையானவளிடத்தில் தோன்றும் காதலைப் போன்று, காமமும் பேரழகே என நினைத்தவன் அவளுடன் சிம்லாவிற்கு புறப்பட்டான்..


பத்து நாட்கள் சிம்லாவில் ஈரூடல் ஓரூயிராய் ஒன்றி விட்டனர். சஞ்சனாவும் மனதில் ருத்திரனை வைத்துக் கொண்டு எந்தவித சலனமும் இன்றி இரணியனுடன் ஒன்றி விட்டாள்…


இரணியனும் தனக்குள் உதித்த சந்தேகத்தை தன்னுள்ளேயே போட்டு புதைத்து விட்டான்.


ருத்திரனும் குழந்தையை தத்தெடுத்து ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டது. குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்ய கற்றுக் கொண்டான்.


குழந்தையை பூவாய் தாங்கினான் என்றே சொல்லலாம். ஆனால் யாருமே எதிர்பாராதது மதியழகியின் மரணமும் ருத்திரன், இரணியனுக்கிடையில் ஏற்பட்ட பிரிவும்…

 
மனம் 28


ஒன்றரை மாதங்கள் இரணியனுடன் வாழ ஆரம்பித்தாலும் அவனை எதிலும் அசைக்க முடியாமல் போராடித்தான் போனாள் சஞ்சனா.


அடிக்கடி இரணியன் வெளியூருக்கு செல்வதால் அவளுக்கு ருத்திரனுடன் பழக எளிதாக இருந்தது. ஆம் அவளின் எண்ணம் முழுவதிலும் ருத்திரன் தான் இருந்தான்.


அவனை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க அவள் தயாராகவில்லை. குழந்தை வந்ததில் இருந்து ருத்திரனின் முழுக்கவனமும் குழந்தை மேல் சென்றதை சஞ்சனாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


குழந்தைக்கு உத்திரா என பெயர் சூட்டியது மதியழகி தான். பெண் பிள்ளைகள் இல்லை என்று அவர் வருந்திய நாட்கள் உண்டு. உத்திராவை பார்த்ததில் இருந்தே அவரின் வருத்தங்கள் அவரை விட்டு நீங்கியதை போல் உணர்ந்தார்.


சஞ்சனாவோ குழந்தையை ருத்திரனிடமிருந்து பிரித்தாக வேண்டுமென்றே நினைத்தாள்.. அஸ்வத் ருத்திரனை கொல்ல வேண்டுமென்று நினைத்தான். மஞ்சரியோ சொத்துக்கள் தனக்கு வந்தால் போதும் என்றே நினைத்தார்.


மூவரின் சூழ்ச்சி வலையை பற்றி மற்ற மூவர்கள் அறியாதது தான் மதியழகியின் மரணத்திற்கு காரணமாகி விட்டது.


இரணியனுடன் என்னதான் உடலளவில் ஒன்று சேர்ந்தால், சஞ்சனா குழந்தை உண்டாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்..


கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதை பற்றிக்கூட இரணியன் அறியவில்லை. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதைப் போல், சஞ்சனாவின் சூழ்ச்சியை பற்றி அறியும் நாளும் வந்தது.


அன்று இரண்டு ஆப்ரேஷன்களை முடித்துவிட்டு வந்த ருத்திரனுக்கு உத்திராவின் அழுகைச் சத்தம் தான் கேட்டது. மதியழகியிடம் இருந்து குழந்தையை வாங்கியவன் தன்னறைக்குள் நுழைந்தான்…


ஏனோ விடாமல் அழுது கொண்டிருந்தவளை தன் நெஞ்சில் சாய்த்து உறங்க வைத்து போராடிக் கொண்டிருந்தான்..


நீண்ட நேரம் குழந்தை அழுதழுதே ஒரு வழியாக தூங்கிட, அப்படியே ருத்திரனும் தூங்கி விட்டான் அறைக் கதவினை மூடாமலே…


இரணியனுக்காக காத்திருந்த சஞ்சனாவின் விழிகளில் ருத்திரனின் அறையில் தெரிந்த வெளிச்சத்தில் புருவம் இடுங்கியது.


சஞ்சனா தினமும் ஹாஸ்பிடல் சென்றாலும், அவளால் ருத்திரனை பார்க்க முடியவில்லை. ருத்திரனும் சஞ்சனாவுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை.


அவனின் முழு நேரத்தையும் குத்தகைக்கு எடுத்து விட்டாள் அல்லவா உத்திரா…


நேராக மாடியேறி ருத்திரனின் அறைக்கதவின் மேல் கை வைக்க, அதுதானாக திறந்து கொண்டது. உள்ளே நுழைந்தவளின் பார்வையில் விழுந்தது குழந்தையின்றி பெட்டில் மல்லாக்க படுத்திருந்த ருத்திரன் தான்..


நீண்ட களைப்பில் சட்டையை கழற்றி போட்டு, கீழ்சராய் மட்டும் அணிந்திருந்தான்… குழந்தை எங்கே? என தேடிப் பார்த்தவளுக்கு குழந்தை கட்டிலின் அருகில் இருந்த தொட்டிலில் சமத்தாக தூங்கிக் கொண்டிருந்தது.


வெற்று மேனியில் படுத்திருந்தவனை பார்த்து எச்சில் முழுங்கியவள், மெல்ல அவனருகில் சென்றாள்…


இரணியனைப் போன்று கட்டுங்கடங்கா தேகம் இல்லையென்றாலும், ருத்திரனும் சிக்ஸ் பேக் வைத்திருந்தான்.. உரமேறிய புஜங்களின் வலிமை அதன் தசைக்கோளங்களை எடுத்துக் காட்டியது.


அவளின் கண்களில் ஒரு வித மையல் குடியேற ருத்திரனின் வெற்று மேனியைப் பார்த்து எச்சில் முழுங்கினாள்.


இரணியனுடன் மட்டும் திருமணம் நடைபெறாவிட்டால் இந்த படுக்கையறையும், ருத்திரனின் பரந்த மார்பும் தனக்கு சொந்தமாகியிருக்கும் என ஏக்கப் பெருமூச்சு விட்டவாறே, தன் கைகளால் படுக்கையினை வருடிவிட்டவளின் கைகளில் ருத்திரனின் தலையும் தட்டுப்பட்டது.


தான் இன்னொருவனின் மனைவி என்பதை முழுதாய் மறந்தவள், ருத்திரனின் நெற்றியில் இதழ் பதிக்க, அதிர்ச்சியில் உறைந்து நின்றான் இரணியன்…


தன் மனைவி இப்படியொரு இழுக்கான செயலை செய்வாள் என கனவில் கூட எதிர்பார்த்ததில்லை.


அன்று அவள் கூறிய வார்த்தைக்கு இன்று பொருள் விளங்கியது. தன்னை ஆண்மையில்லாதவன் என்று சொல்லி தன்னை பிரிய வேண்டுமென்று விரும்பினாளா? இல்லை தன் உடன்பிறந்தவனுடன் வாழ வேண்டுமென்று விரும்பினாளா? என மனம் ஒரு புறம் தகிக்க, மெல்ல அறையை விட்டு வெளியேறினான்..


அவனால் சத்தமாக கூட இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் நிறுத்தி விட்டாளே சஞ்சனா.. எப்படி மற்றவரிடம் கூற முடியும்?. தன் மனைவி தன்னுடன் வாழ்ந்த பின்பும் இன்னொருவன் அதுவும் தன் உடன் பிறந்த சகோதரனின் மேல் ஆசை கொள்வாள் என கனவில் கூட எதிர்பார்த்ததில்லையே!... பேரதிர்ச்சி தான் இரணியனுக்கு…


இறுகிய முகத்துடன் தன் அறைக்குள்ளேயே அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தான்.. குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்ததாக வாட்ச்மேன் சொன்னதை வைத்து தான் ருத்திரனின் அறைக்குள் நுழைந்தான் இரணியன் குழந்தையை பற்றி விசாரிப்பதற்காகவே…


ஆனால் அங்கு தன் மனைவி செய்த காரியம் தூக்கிவாரிப் போட்டது…


ருத்திரனின் அறையில் இருந்து வெளிவந்த சஞ்சனாவிற்கு ஹாலின் வெளிச்சமில்லாதது கண்கள் இடுங்கியது.


யார் லைட்டை அணைத்தார்கள்? என சிந்தித்தபடி இருந்தவளின் கண்களுக்கு தன்னறையின் கதவு திறந்திருந்ததை பார்த்து தூக்கிவாரிப் போட்டது…


சற்று பதட்டத்துடன் தன்னறைக்குள் நுழைந்தவள் அடுத்த கணமே நிலை தடுமாறி தொப்பென்று கீழே விழுந்தாள்…


தன் கன்னத்தில் எரிந்த எரிச்சலில் தான் தெரிந்தது இரணியன் தன்னை அடித்திருக்கிறான் என்பது…


“யூ இடியட்” என சட்டென்று எழுந்தவள், இரணியன் அருகில் செல்ல.. அடுத்த அடியில் தொப்பென்று படுக்கையின் மேல் விழுந்தாள்..


“ஷ்ஷ்.. சத்தம் வெளியே வந்தது கொன்னுடுவேன். எதுக்கு ருத்திரன் ரூமுக்கு போன?” என்றவனின் கேள்வியில் திகைத்து நின்றாள்…


இரணியன் சற்று முன்பு நடந்ததை பார்த்திருப்பானா? இல்லை சாதாரணமாக கேட்கிறானா? என இரு வேறு தவிப்புகளுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…


அவன் கண்களில் அப்படியொரு அனல் தெறித்தது. கனலாய் தகித்தான். தன்னை முத்தாடும் வேளையில் தோன்றும் மோகப் பார்வையல்ல இது. தன் எதிராளிகளை பந்தாடும் வேளையில் தோன்றிடும் உக்கிரப் பார்வை இது என அறிந்தவளின் இதயத்தில் நீர்வற்றிப் போன உணர்வு…


“இரணியா?” என இழுத்தவளின் அடுத்த கன்னம் தீயாய் எரிந்தது… ஏனோ அவள் பேச பேச இரணியன் தன் நிதானத்தை இழந்து கொண்டிருந்தான்..


அவனால் சஞ்சனாவின் இப்படியொரு துரோகத்தை எதிர்பார்க்கவேயில்லை.


“ஏன் இப்படியொரு துரோகத்தை எனக்கு பண்ணின?” என கலங்கிய குரலில் கேட்டு, மொத்த உண்மையையும் உடைத்தெறிந்தான்…


“ப்ச்ச்.. பார்த்துட்டீயா?.. இங்கே பாரு நான் ஒன்னும் உன்னைக் காதலிக்கலை” என்றவளின் வார்த்தையில் இடிந்து போய் அமர்ந்தான்…


“நான் ஆரம்பத்துல இருந்தே காதலிச்சது ருத்திரனை தான்… டாக்டர் படிச்சிருக்கிற ருத்திரன் எங்கே?.. பெத்த ரவுடின்னு பேர் எடுத்த நீ எங்கே?”


“அப்போ கல்யாணம் பண்ணாமலே இருந்துருக்கலாமே!!” என்றவனை பார்த்து முறைத்தாள்…


“நீ என் கழுத்துல தாலி கட்டுனதுக்கப்புறம் தான் தெரியும். நீ இரணியன்னு.. அப்பவே உன்னைக் கொன்னுட்டாவது ருத்திரன் கூட வாழலாம்னு நினைச்சேன்” என்றவளின் வார்த்தையில் சுக்குநூறாய் உடைந்தது இரணியனின் இதயம்…


இதைவிட அவன் ஆண்மைக்கு வேறு என்ன இழுக்கு வேண்டும்?”..


“அப்புறமும் ஏன் என்னைக் காதலிக்கிற மாதிரி நடிச்ச? என் கூட வாழ்ந்த”


“ஆமா வாழ்ந்தேன்.‌ ஏன் வாழ்ந்தேன்?. ஏன்னா சொத்தெல்லாம் உன் பேர்ல இருக்கே?”


“சொத்துக்காகவா?”


“ஆமா”


“வேற என்ன நினைச்ச? நான் உன்னைக் காதலிக்கிறேன்னா?. உன்னை மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாதவனை எவடா காதலிப்பா?” என்றவளின் வார்த்தையில் கண்களை இறுக்க மூடினான்..


அவள் தரும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகள் அவனை உயிர் வரை சென்று தாக்கியது…


“ஒரு வேளை நாம வாழ்ந்திருந்த காலத்துல குழந்தை உண்டாகியிருந்தா என்ன பண்ணியிருப்ப?” என கம்மிய குரலில் கேட்டான்.


“எங்கே அப்படியொரு குழந்தை என் வயித்துல உண்டாகியிடுமோங்கிற பயத்துல தான் நான் ** மாத்திரை சாப்பிட்டு வர்றேன்” என்றவளை வெறுப்பாக ஒரு பார்த்தவன், இறுக்கமாக கண்களை மூடித் திறந்தான்…


“நான் கண்ணை திறக்குறதுக்குள்ள ஓடிப்போயிடு” என்றவனின் குரலே இறுகி ஒலித்தது.


சில நிமிடங்கள் கழித்து கண்களை திறந்தவனுக்கு அறையின் வெற்றிடமே காட்சியளித்தது. நல்லவேளையாக சென்று விட்டாள் என நினைத்தவன் அறியவில்லல. அவள் சென்ற பின்பு தான் பூதமே கிளம்பப் போகிறது என்று..


அதன் பின் இரணியனுக்கு தூக்கம் என்பதே வரவில்லை. இதை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கம் நிறையவே இருந்தது. மதியழகியிடமும், ருத்திரனிடமும் இதை சொன்னால் தாங்குவார்களா? என்ற தயக்கம் அதிகமாகவே இருந்தது.


நீண்ட நேரம் உறங்காததால் உறக்கமின்றி காலையில் சற்று நேரமான பின்பு தான் எழுந்தான்.


எழுந்தவன் காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே வர, ஹாலில் இருந்த அமர்ந்திருந்தவர்களை பார்த்து புருவம் சுருக்கினான்…


ருத்திரன் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான். அவனின் அருகில் கைகளை பிசைந்தபடி சற்று கலக்கத்துடன் அமர்ந்திருந்தார் மதியழகி. மஞ்சரியும் அஸ்வத்தும் உடன் தானிருந்தனர். சஞ்சனாவோ அழுது கொண்டிருந்தாள்…


அவர்கள் மூவரையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தான் இரணியன். அவனின் பார்வை மொத்தமும் சஞ்சனா மீதுதான். அவளின் கன்னங்களோ நேற்று இரணியன் அடித்த அடியால் கோவைப்பழமென சிவந்து இருந்தது.


கண்களோ அழுதழுது சற்று வீக்கத்துடன் தான் காணப்பட்டது. இறங்கி வந்தது தான் தாமதம் அதுவரை அமர்ந்திருந்த ருத்திரன் வேகமாக இரணியனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்து விட்டான்…


இரணியனுக்கு திருப்பி அடிக்க ஒரு கணம் போதும். ஆனால் சஞ்சனா என்ன திட்டமிட்டிருக்கிறாள் என்பதை அறிவதற்காகவே அமைதியாக இருந்தான்.


ஒரு கட்டத்தில் ருத்திரனின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான்…


“நீ இப்படியொரு சந்தேகப்பிராணியா இருப்பன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை இரணியா” என முகம் சுழிக்க,


“நான் சந்தேகப் பிராணியா? என்னடா உளறுற?” என கேட்ட இரணியனுக்கே ஒன்றும் புரியவில்லை..


“நடிக்காதேடா… நேத்து நைட் குழந்தை எப்படியிருக்குன்னு பார்க்க, சஞ்சனா என் ரூமுக்கு வந்திருக்கா.. அதுக்கு நீ அவளை அடிச்சீயா?”


“ஆமா அடிச்சேன். அதுக்கென்ன இப்போ?” என்ற வார்த்தையில் அங்கு நின்றிருந்த அனைவருக்கும் சற்று திகைப்பு தான்.


“என்ன இரணியா சொல்லுற ஒரு பொண்ணை கைநீட்டி அடிச்சிருக்க?” என்று கேட்ட மதியழகியை பார்த்து புருவம் இடுங்கியது.


“என்னம்மா கேட்குறீங்க எனக்குப் புரியலை? அவ பண்ண காரியத்துக்கு வேறு யாருன்னா கண்டிப்பா இவளையே வெட்டிப் போட்டுடுவாங்க?”


“என்னப் புரியலை. ஹான் என்னடா புரியலை. குழந்தை ரொம்ப நேரம் அழுதுருக்கு. அதுனால குழந்தை எப்படி இருக்குன்னு பார்க்க சஞ்சனா என் ரூமுக்கு வந்த நேரம்.. என்னையும் சஞ்சனாவையும் சந்தேகப்பட்டுருக்க” என்ற ருத்திரனின் வார்த்தையில் சட்டென்று அத்தனை பேர் இருக்கும் பொழுதும் சஞ்சனாவை மறுபடியும் அடித்து விட்டான்…


“ஏன்டி நாயே!.. நீ பண்ண தப்பை மறைச்சு.. என்னைக் குற்றவாளியாக்கப் பார்க்குறீயா?” என்றவன் மீண்டும் அறைய முற்படும் வேளை, இரணியனின் கையை அழுத்தமாக பற்றியிருந்தான் ருத்திரன்..


“இன்னொரு அடி அவ மேல விழுந்தது நான் மனுஷனா இருக்க மாட்டேன்… இப்பவே அவளுக்கும் உனக்கும் டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்றேன்”


“ஏன் இருக்கிற சொத்தெல்லாம் அவ பேர்ல மாத்தி எழுதி வாங்குறதுக்கா.. இவ உயிரோட இருந்தா தானே டிவோர்ஸ் கேட்ப” என மிரட்டும் குரலில் எச்சரிக்கை விட்டான்…


“அவ மேல இன்னும் ஒரு அடி விழுந்தது அப்புறம் ஜென்மத்துக்கும் அண்ணன் தம்பி உறவு முறிஞ்சிடும்” என்ற ருத்திரனை அடிபட்ட பார்வை பார்த்தான்..


நீ பாம்பை விழுதுன்னு நினைக்கி ருத்திரா.. கண்டிப்பா அது ஒரு நாள் விஷத்தை உன் முன்னாடியே கக்கும்” என்றவன் அங்கிருந்த சஞ்சனாவை முறைத்து விட்டு அங்கிருந்து அகன்றான்…


அதன் பின் வீட்டில் எல்லாரிடத்திலும் ஒரு அமைதிதான். மஞ்சரிக்கோ கொண்டாட்டம் தான். அண்ணன் தம்பி பிரிந்தால் தான் சொத்துக்கள் பிரியும்.


நரசிம்மனின் வாரிசு என்ற பெயரில் அஸ்வத்துக்குய் சொத்து வரும் என்றே நினைத்தார். மதியழகியிடம் அஸ்வத்தாமனை நெருங்கிப் பழக வைக்க வேண்டுமென்று நினைத்தார்..


அதற்கு முதல்படி ருத்திரனுடன் அஸ்வத் நெருங்கி பழகினான். இரணியன் அந்த வீட்டில் இருந்தாலும் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்…


ருத்திரனுக்கு தெரியாமலே பலத்த பாதுகாப்பை ஏற்பாடு பண்ணியிருந்தான் இரணியன். ஏனோ சஞ்சனாவை அவனால் நம்ப முடியாதது தான் முதல் காரணம்..


அன்றைய பிரச்சினைகள் நடந்து ஒரு மாதகாலமிருக்கும்… சஞ்சனாவோ இரணியனை கண்டு கொள்ளாமல் முப்பொழுதும் ருத்திரனுடன் ஒட்டிக் கொண்டு தான் திரிந்தாள்…


இரணியன் கண்டு கொண்டாலும், சஞ்சனாவை ஏதாவது செய்தால், ருத்திரன் தன்மீது பகையை மேலும் தூண்டுவதை போல் ஏதாவது செய்து கொண்டிருந்தாள்..


மதியழகி முதலில் இரணியனை சந்தேகப்பட்டது என்னவோ உண்மை தான் ஆனால் நாளாக நாளாக சஞ்சனாவின் நடவடிக்கை எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை.


ருத்திரனின் அறைக்கு இரவு நேரத்தில் செல்வதும் வருவதும் போவதும் அவருக்கு முகத்தை சுழிக்க வைத்தது. நட்புறவாகவே இருந்தாலும் இவ்வளவு நெருக்கம் தேவையில்லை என்றிருந்தது..


சஞ்சனாவின் பார்வை அடிக்கடி ருத்திரனை வட்டமிடுவதும், ருத்திரன் சாப்பிட வந்தால் அவளே பரிமாறுவதுமாக இருந்தாள்.


இரணியன் அருகிலேயே இருந்தாலும் அவளின் பார்வை ருத்திரனின் மேல்தான் இருந்தது.. அன்றும் துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார் மதியழகி.


அங்கு போனில் பேசியபடி உலாவிக் கொண்டிருந்த சஞ்சனாவின் விழிகள் அங்கு நீச்சல் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்த ருத்திரனின் மேல் தான் விழுந்தது.


இவ்வளவு தீர்க்கமாக யாரைப் பார்க்கிறாள்? என எட்டிப் பார்த்த மதியழகிக்கு தூக்கிவாரிப் போட்டது.
 
Last edited:
மனம் 29


அங்கு நீச்சலடித்துக் கொண்டிருந்த ருத்திரனை தான் அங்குல அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா…


“சஞ்சு…” என்ற கர்ஜனைக்குரலில் சட்டென்று திரும்பி பார்த்தாள் சஞ்சனா…


நிச்சயமாக அங்கு மதியழகியை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் அதிர்ந்த முகமே காட்டியது ‌..


“அத்தை”என்றவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தார்.


“ச்சீய்ய்ய.. நீயெல்லாம் என்ன பொண்ணுடி.. இப்பவே என் பையன் கிட்ட உன்னைப் பத்தின உண்மையை சொல்லுறேன்” என்றவர் வேகமாக அங்கிருந்து செல்ல முயன்றிட,


“அத்தை.. அத்தை என்னை மன்னிச்சிடுங்க அத்தை. ருத்திரன் கிட்ட எதுவும் சொல்லாதிங்க” என காலில் விழுவதைப் போல் விழுந்தவள்.. சட்டென்று காலை வாரிவிட இரண்டாம் மாடியில் இருந்து தொப்பென்று கீழே விழுந்தார் மதியழகி…


நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தவனின் காதில் தொப்பென்று விழும் சத்தத்தில் திரும்பி பார்க்க தரையில் ரத்தம் தோய விழுந்துக் கிடந்த மதியழகியை பார்த்ததுமே இதயமே ஒரு நிமடம் தன் துடிப்பை நிறுத்தி விட்டது.


“அம்மாஆஆஆஆஆ” என அலறியபடி நீச்சல் குளத்தில் இருந்து வெளிவந்தவன் வேகமாக தன் தாயை நோக்கி ஓடினான்..


“அம்மாஆஆஆ.. அம்மாஆஆஆஆ” என அலறியபடி நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் இரண்டாம் மாடியில் நின்று கொண்டிருந்த இரணியன் தான் கண்ணில் பட்டான்…


அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த இரணியன் வேலைக்காரர்களிடம் தன் தாயை பற்றி விசாரிக்க, மேலே மாடிக்குச் செல்வதை சொன்ன அடுத்த கணமே மாடிக்கு சென்றான்…


அவன் மேலே ஏறி வருவதற்கும் சஞ்சனா மதியழகி காலை வாரிவிடுவதற்கும் சரியாக இருந்தது.


அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல், ஏற்கனவே இரணியன் மேல் கோபத்தில் இருந்தவனுக்கு, தன் தாயை கொன்றதும் இரணியன் என்றே நம்பினான்…


“அத்தை… அத்தை” என ஓடி வந்தவள், ருத்திரனை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்…


இரணியக்கோ ஒன்றுமே புரியவில்லை. தான் வரும் பொழுது இங்கிருந்தவள், அடுத்த நொடியே புயலென ஓடிச்சென்று ருத்திரனை அணைத்துக் கொண்டதை நம்பவே முடியவில்லை.


ஒவ்வொரு நொடியும் அவனுக்கு எதிராக ருத்திரனை திருப்புவதை அவனும் உணர்ந்து தானிருந்தான்.‌ ஆனாலும் ருத்திரன் இந்த விஷயத்தில் தன்னை தான் நம்புவான் என்று மிகவும் எதிர்பார்த்தபடிதான் கீழிறங்கி வந்தான்…


“அம்மாவை நான் ஒன்னும்” என்பதற்குள்,


“ஏன்டா அம்மாவை கொன்ன?” என்ற வார்த்தையில் அவனை ஒரேடியாக அடித்து வீழ்த்தி விட்டான்…


அடுத்த வார்த்தைக் கூட ருத்திரனிடம் பேசவில்லை. பேசவும் விரும்பவில்லை. மதியழகியின் இறுதி காரியத்தை இருவரும் சேர்ந்தே ஒன்றாக முடித்தனர்.


மதியழகியை அடக்கம் பண்ணிய அடுத்த நாளே இரணியன் அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அவனால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


தன்னை சந்தேகப்பட்ட ருத்திரனின் மேல் அப்படியொரு கோபம் எழுந்தது. அன்றோடு இவர்களின் பயணமும் வேறானது…


ருத்திரனின் உலகமோ உத்திரா என்றானது. குழந்தையோடு தான் திரிந்தான். சிரித்தான்… பேசினான்… ஒவ்வொரு நொடியும் குழந்தையுடனே கழித்தான்…

குழந்தை குழந்தை வளர வளர மனமும் கொஞ்சம் தளர ஆரம்பித்தது…


ருத்திரனை சுற்றி நச்சுப் பாம்புகள் மட்டுமே உலவிக் கொண்டிருந்தது. அஷ்வத் அவனுக்கு பணத்தேவை என்றால் ருத்திரனிடம் கேட்கும் அளவிற்கு ருத்திரனுடான நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டான்…


சஞ்சனாவோ கேட்கவே வேண்டாம். அவனுடனே எப்பொழுதும் இருந்தாள்.. மஞ்சரியோ தன் ஆடம்பர செலவுக்கு ருத்திரனை ட்ரெம்ப் கார்டாக யூஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்..


ஏனோ அத்தனை பேர்கள் அவனின் அருகில் இருந்தும் ருத்திரன் அடிக்கடி தனிமையை தான் உணர்ந்தான். இன்றோடு இரணியனும், ருத்திரனும் பிரிந்து நான்கு வருடங்களை பிரிந்து விட்டனர்…


ருத்திரன் எங்கு செல்கின்றான் என்பது கூட இரணியனுக்கு தெரியும். ஆனால் இரணியனை பற்றி ருத்திரனுக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை.


அஷ்வத் படிப்பதற்காக தேர்ந்தெடுத்த இடம் கோயம்புத்தூர் அருகாமையில் உள்ள காலேஜ் தான். அவனுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்ற வேண்டும். பணத்தை தண்ணியாக செலவழிக்க வேண்டும். ஆனால் மஞ்சரி அதற்கெல்லாம் உடன்படவில்லை…


அதனாலேயே தொலைவில் இருக்கும் காலேஜை தேர்ந்தெடுத்தான்… அதே காலேஜில் மெரிட் கோட்டாவில் உள்ளே நுழைந்தாள் அகமேந்தி.


பார்த்த முதல் கணமே அஷ்வத்திடம் ஈர்த்தது அந்த முகம் தான். ருத்திரனின் பால்ய முகம் அஷ்வத்திடம் இருந்ததால் ஏதோ ஒரு வகை ஈர்ப்பு தோன்றிட, அதை காதல் என்று எண்ணினாள் அகமேந்தி…


அவனிடம் தன்னிடம் இருக்கும் வாட்சை கொடுக்க வேண்டுமென்று விரும்பினாள். ஆம். நீண்ட நாட்களாக தன்னிடம் இருக்கும் வாட்சை கொடுக்க வேண்டுமென்று ருத்திரன் வீட்டிற்குள் நுழைந்தாள்…


அஸ்வின் சோபாவில் அமர்ந்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.


“சார்..” என்ற குரலில் சட்டென்று திரும்பினான் அஷ்வத்.


“யார் நீ?”


என்னை உங்கம்மாவுக்கு நல்லா தெரியும். என்றவளை ஆழ்ந்து பார்த்தான் அஸ்வத்.


இப்போ எப்படி இருக்காங்க சார்?


யாரை நீ கேட்குற? என எரிச்சலுடன் கேட்டான்…


அதான் சார் மதியழகி மேடம்”


“ஓஹ். அவுங்களா அவுங்க இறந்துட்டாங்க” என சாதாரணமாக சொல்லிவிட, இவளுக்கு அழுகையே வந்துவிட்டது.


ஏனோ மதியழகியின் பிரிவு இவளுக்கு மிகுந்த வலியை தான் கொடுத்தது. என்றாவது ஒரு நாள் அவர் வருவார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு என்றுமே அவர் வரமாட்டார் என்பதை அறிந்து மனம் மிகவும் வலிக்க அந்த இடத்தை அகல முயன்றாள்…


கையிலிருக்கும் வாட்சை கொடுக்க வேண்டும் என்பது கூட அவளுக்கு தோன்றவில்லை.


யாருடா இவ? என்றவனின் பார்வை அவள் மீதுதான் அப்பட்டமாக விழுந்தது.


எதிரில் இருப்பவர்களை சுண்டி இழுக்கும் அழகு. பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் ஒரு வித கவர்ச்சி அவள் கண்களில் தெரிந்தது.


அஷ்வத்திற்கு அவனையும் அறியாமல் அவள் மீது சிறு ஈர்ப்பு தோன்றியது. ஆனால் அது காதல் வகையில் எல்லாம் அவள் சேர்க்கவில்லை…


அதன்பின் காலேஜிலையும் அகியை பார்த்ததுமே அவன் மனம் அவளையே நினைத்தது. அவளிடம் நல்லவனாக தான் பழகினான்.


அவனின் அருகாமையும், பேச்சுக்களிலும் அஸ்வத்தை காதலிக்க ஆரம்பித்தாள் அகி…


ருத்திருக்கு முதலில் சஞ்சனாவின் அருகாமை தோழமையை கொடுத்தாலும், மனதில் உள்ள வெற்றிடம் அவளை நெருங்கவிடவில்லை..


மனதில் இருக்கும் தனிமை அவனை மெல்ல மெல்ல கொன்றிட, உத்திராவை அழைத்துக் கொண்டு கோயம்புத்தூரை வந்தடைந்தான். சஞ்சனாவும் உடன் வருவேன் என்று அடம் பிடித்து வந்துவிட்டாள்…


அவள் உடன் வருவது சிறு சலிப்பு தான் தோன்றியது. இருந்தாலும் உத்திராவை அழைத்துக் கொண்டு வந்தது இரண்டு நாட்களில் ஒரு சிறுவனுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணுவதற்காக தான் வந்தான்.


அன்று அஷ்வத் தன் பிறந்தநாள் என்று ருத்திரனிடம் தான் விரும்பிய பைக் ஒன்றை கேட்டான். அதைக் கொடுப்பதற்காக சஞ்சனாவிடம் உத்திராவை ஒப்படைத்து விட்டு, வேகமாக கோயம்புத்தூருக்கு புறப்பட்டு வந்தான்.


அவன் நுழைந்த நேரம் உத்திரா அழுதுக் கொண்டிருக்க அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவனிடம் அகமேந்தி அணைத்து தன் காதலை உரைத்தது.‌


அவள் யாரென்று அறிந்து கொள்வதற்காக, ருத்திரன் உள்ளே வரும் சமயம் தான் அஷ்வத்தின் நண்பர்கள் அகமேந்தியை கடத்தி வைத்திருந்ததும், இவன் அறியாமல் அந்த ஜுஸை பருகியதும் நடந்தது.


தலை சுற்றி அமர்ந்த ருத்திரனின் அறைக்கதவை மெல்ல திறந்தான் அஸ்வத்… அவனை அழைத்து வந்ததும் அவர்களின் கேடுகெட்ட நண்பர்கள் தான்…


ஆமாடா அஸ்வத். நாங்க உனக்கு பர்த்டே பார்ட்டி செலிபிரேட் பண்ணலாம்னு ஏற்பாடு பண்ணியிருந்தோம். உன் அண்ணன் தெரியாம இந்த ஜுஸை குடிச்சிட்டாருடா.. இப்போ என்ன பண்ணலாம்..


ம்ம்ம.. இதுவும் நல்லதுக்குத் தான் ரொம்ப நாள் இவனை கொல்லணும்னு ட்ரை பண்ணேன்.. அப்புறம் பணம் காய்க்கிற மரமாச்சேன்னு விட்டுட்டேன்.. இன்னைக்கு போட்டுத் தள்ளிடலாம்” என்ற அஸ்வத் ருத்திரனிடம் பொய் சொல்லி அவனை காருக்குள் அழைத்துச் சென்றான்.


அஸ்வத் அந்தப்பக்கம் ருத்திரனை அழைத்துச் சென்றதும், இக்கயவர்கள் ருத்திரனின் அறைக்குள் நுழைந்து விட்டனர்…


அகமேந்தியோ இக்கயவர்களின் கையில் போராட, அஷ்வத் கார் அந்த தெருவை விட்டு தாண்டுவதற்கு முன்பாக வந்து நின்றது இரணியனின் கார்..


அஷ்வத்திற்கு இரணியனை பார்த்ததுமே அள்ளு கிளம்பியது. அவனிடம் தன் பொய்யை சொல்லி மாட்டிக் கொள்ள முடியாமல், ஏதோதோ சொல்லிவிட்டு வேகமாக ஓடிவிட்டான்..


காருக்குள் போதைக்குள் உளறிக் கொண்டிருந்த ருத்திரனை பார்த்ததுமே அவனையும் அறியாமல் கண்கள் பனித்தது இரணியனுக்கு.


“ஏன்டா நீ இப்படி இருக்க?. உன்னை எத்தனை பேர் ஏமாத்துறாங்க பாரு. வலிக்குது டா எனக்கு” என்றவன் ருத்திரனை தோளில் அணைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்..


“நீ பேசாதே.. நீ என்னை விட்டுப் போனதுனால தான்டா என் வாழ்க்கையில் எல்லாமே போச்சு.. ஏன் இரணியா என்னை விட்டுப் போன? என்னைப் பிடிக்கலையா?” என போதையில் உளறுபவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..


“உன்னை ரொம்ப புடிக்கும் டா.. அதுனால தான் அவ உன்னை ஏதோ பண்ணப் போறான்னு எனக்கு தகவல் கிடைச்சுதான் இங்கே வந்திருக்கேன்.. அவளை நம்பாதே” என்ற இரணியனின் தோளை தட்டிவிட்டவள்,


“எவளை நம்பாதே சொல்லுற?.. ம்ம்ம.. யாரை நம்பக்கூடாதுன்னு சொல்லுற… அவதான்டா என்கிட்ட காதலை சொன்னா.. க்யூட்டா இருந்தா.. அப்புறம் இப்படி ஓடிட்டாஆஆஆஆஆ” என வளைந்து நெளிந்து போதையில் உளறியவனை கீழிறக்கும் அறையில் படுக்க வைத்தான்..


கிச்சனில் சென்று ஏதாவது சாப்பிட கிடைக்குமா? என இரணியன் கிச்சனுக்குள் சென்ற சமயம் தான், அகமேந்தி அக்கயவர்களிடம் இருந்து தப்பித்து வந்து போதை மயக்கத்தில் ருத்திரனின் அறைக்குள் சென்றது…


அகமேந்தியை துரத்தி வந்தவர்கள் இரணியனின் தலை தெரியவும், பின்னால் பால்கனி பைப்பில் இறங்கி தப்பித்து ஓடி விட்டனர்…


இரணியன் கிச்சனில் இருந்ததை சாப்பிட்டு விட்டு தன்னறையில் சென்று படுத்து விட்டான்…


ருத்திரனும், அகியும் போதை மயக்கத்தில் இருந்ததால் இருவருமே தன்னிலை மறந்து ஒன்றுடன் ஒன்று கூடிவிட அதிகாலை முதலில் கண்விழித்தது என்னவோ ருத்திரன் தான்..


காலையில் எழுந்த ருத்திரனின் விழிகளில் விழுந்தது களைந்திருந்த தன் ஆடைகளும், அவன் மேல் போர்த்தப்பட்டிருந்த போர்வையும் தான்…


தான் இங்கு? என யோசித்தவன் சட்டென்று திரும்பி பார்க்க, அங்கு குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் அகமேந்தி..


“ஏய்ய்ய்.. யார் நீ” என்றவன் மெல்ல புரட்டிப் போட, பதினைந்து வயதில் பாவடை தாவணியில் பார்த்த அதே உருவம்..


இப்பொழுது பத்தொன்பது வயது பேரிளம் பெண்ணாக இருந்தாள்.


“இவள் இங்கே எப்படி?” என நினைத்தவன் அவளை எழுப்ப முயன்றவனுக்கு, அப்பொழுது தான் இருவரும் இருக்கும் நிலையே உரைத்தது…


அவனால் சட்டென்று தன்னை நிதானப்படுத்திக்கவே முடியவில்லை.. அகமேந்தியும் அப்பொழுது தான் மயக்கத்தில் மெல்ல எழுந்து அமர்ந்தாள்…


தன்னெதிரில் இருந்த ருத்திரனை பார்த்ததும் போதை மயக்கத்தில் அஸ்வத் என்றழைக்க, ருத்திரனுக்கோ முகம் இறுகிப் போனது.


தன் தம்பியின் காதலியா இவள்? என நினைக்கும் பொழுதே இதயத்தில் சொல்லொண்ணொ வலி தோன்றியது…


தன்னால் வாழ்க்கை இழந்து விட்டாளே! என நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே வெளியே கூப்பாடு போடும் சத்தம் கேட்டது..


அந்த சத்தத்தில் சட்டென்று விழிகளை திறந்தாள் அகமேந்தி. வெளியில் கேட்கும் சத்தத்தை வைத்தே தன் தாய் என்பதை அறிந்து கொண்டாள் அகமேந்தி…


அய்யோஓஓ அம்மா என்றழைக்க


“உன் அம்மாவா


ஆமா என்னோட அம்மா தான்.


ஓஹ்… இங்கே பாரு. நான் சொல்லுறபடி தான் கேட்கணும். புரியுதா… இப்போ வெளியே போய் என்னைக் காதலிச்சேன்னு சொல்லுற.. இல்லை உன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊசி போட்டு கொன்னுடுவேன் என மிரட்டிதான் வெளியே அழைத்து வந்தான்..


இருவரும் வெளியே வந்த நிலையை பார்த்த ஊர்மக்கள் அனைவரும் வாய்க்கு வந்ததை தூற்ற, ஒரு சிலரோ அவனை அஷ்வத்துடன் பார்த்ததை சொல்ல.. அவ்வளவுதான்.. ஊரார்களின் வாய்க்கு இவள் அவலாகி விட, அகமேந்திக்கு கண்ணீர் மட்டும்தான் துணையாக இருந்தது..


மேலும் மேலும் அவளை தூற்றிக் கொண்டே சென்று தீபாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்..


அவருக்கு அகியின் மேல் இருந்த ஒட்டு மொத்த வன்மத்தையும் அகியை அடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தார்.. ஒரு கட்டத்தில் மூலையில் கிடந்த துடைப்பத்தை எடுத்து அடியில் சாத்த ஆரம்பித்தார்…


அவள் இரண்டு அடி அடிப்பதற்கு முன்பாகவே அவரின் கையை பிடித்துக் கொண்டான் ருத்திரன்..“நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றவன் அகியை எழுப்பி மறுபடியும் அறைக்குள் அழைத்துச் சென்றான்…


அங்கு நடந்த ஒவ்வொன்றையும் மேல் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இரணியனின் இதழ்களில் மென் புன்னகை.


காலையில் வேலை செய்யும் வேலைக்காரி எழுந்து அறையை ஒதுக்கச் சென்றவளின் கண்ணில் இருவரும் இருக்கும் கோலத்தை பார்த்தவள், இரணியனிடம் சொல்லிவிட்டனர்…


அகியை பற்றி அவரிடம் விசாரிக்க, அவள் சிறு வயதில் இருந்து படும் கஷ்டத்தையும், நன்றாக படிக்கும் பெண் என்பதையும் சேர்த்து சொல்ல, வாட்ச்மேனிடம் அகியை பற்றி விசாரிக்க, மதியழகியையும், ருத்திரனையும் காப்பாற்றியது அவள் தான் என்று சொல்ல… அடுத்த கணமே எதைப் பற்றியும் யோசிக்காமல் இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றி விட்டான்…


“இங்கே பாரு அம்மு . என்னை நம்பிஎன்கூட வா.. இங்கே நீயிருந்தா உன் மேல பழி போட்டே கொன்னுடுவாங்கன்னு தோணுது?” என்றவன் அவனைப் பற்றி பாதி தான் கூறினான்…


“ம்ம்ம்” என்றவளுக்கு வேறு வழியில்லாமல் போக, வாட்ச்மேனிடம் சொல்லி இவளுக்கு சேலை வாங்கிக் கொண்டு வர சொன்னான்.. தனக்குவேஷ்டி சட்டை வாங்கி வர வைத்தான்…


இருவருமே புறப்பட்டு அருகிலிருக்கும் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்..


தனக்கு திருமணம் தன்னை வாழ்த்தக்கூட யாருமில்லையா? என நினைத்துக் கொண்டிருந்தவன் அறியவில்லை. அவன் கல்யாணத்தை இரணியன் பார்த்துக் கொண்டிருந்தான் என்று..


அவர்கள் இருவருக்குமான ஆடையை வாங்கிக் கொண்டு வந்ததும் அவன்தான் என்று..


ருத்திரன் திடீரென்று திருமணம் செய்வான் என்று தீபாவின் வீட்டினர் எதிர்பார்க்கவில்லை… அகமேந்தியை அவனுடன் அனுப்ப மறுக்க… அவர்களின் கையில் கட்டு நோட்டுக்களை திணித்தபடி நடக்க ஆரம்பித்தான்…


அப்பொழுதுதான் தன் தமக்கையின் கல்யாணம் விஷயம் அறிந்து ஓடி வந்த அபிமன்யுவிற்கு, ருத்திரனுடன் அழுது கொண்டே சென்ற அகமேந்தி தான் கண்ணில் பட்டாள்..


இரணியனை பார்த்த அஷ்வத் அங்கு இல்லையென்றாலும், வாட்ச்மேன் மூலமாக ருத்திரனுக்கு திருமணம் நடந்ததை சொல்லிவிட, அடுத்த நிமிடமே சஞ்சனாவிற்கு அந்த செய்தி சென்று விட்டது..


சஞ்சனாவினால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை… ருத்திரனுக்கு கல்யாணம் முடிந்தது அவளுக்கு பேரிடி…
 
Last edited:
மனம் 30


இரணியன் தான் இப்படியொரு கல்யாணத்தை நடத்தி வைத்தான் என்பதை அறிந்ததும் அப்படியொரு வன்மம் இரணியன் மேல் எழுந்தது..


இரணியனை பழிவாங்க வேண்டுமென்று நினைத்தவள் அடுத்து அழைத்தது உத்திராவின் பெற்றோர்கள் இருக்கும் ஊர் ராஜஸ்தானிற்கு தான்..


அவர்கள் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு வருகிறார்கள் என்பது சஞ்சனாவிற்கு ருத்திரன் மூலமாக தெரியும்.. எதற்கும் இருக்கட்டும் என்று அறிந்து வைத்திருந்த நம்பரின் மூலம் தொடர்பு கொண்டு உத்திரா இருக்கும் இடத்தை பற்றி சொல்லிவிட, ருத்திரன் பிரச்சினைகளை முடித்துவிட்டு கேரளாவில் உள்ள மதியழகியின் பிறந்தவீட்டில் விட்டு வருவதற்குள், உத்திராவை அவள் பெற்றோரின் சொந்தத்திடம் ஒப்படைத்து விட்டாள் சஞ்சனா…


ருத்திரனை நினைத்து நினைத்து ஏங்கி ஏங்கி அழுதே குழந்தை ஒரு கட்டத்தில் மயங்கிவிட்டது .


கோயம்புத்தூரில் வந்திறங்கிய ருத்திரனுக்கு பேரதிர்ச்சி உத்திரா காணாமல் போனது. அவன் தேடாத இடமில்லை. கோயம்புத்தூரையே அலசி ஆராய்ந்தான்..


ஒரு இடம் விடாமல் அத்தனை இடத்திலும் தேடினான்…‌ இரவெல்லாம் உறங்காமல் தேடியவன் அடுத்த நாள் ஆப்ரேஷன் பண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.‌.


முந்தைய நாள் போதை மயக்கம், நேற்றைய இரவு தூங்காத மயக்கம் என அனைத்தும் சேர்ந்து ருத்திரனை பாடாய்ப்படுத்த அவன் ஆப்ரேஷன் செய்த சிறுவன் இறந்துவிட்டான்… ருத்திரனால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..


அந்தச்சிறுவனின் இறப்புக்கு தான் தான் காரணம் என்று நினைத்தான். அச்சிறுவனுக்கு ஆப்ரேஷனை தாங்கக்கூடிய சக்தி இல்லை என்பதை ஒரு டாக்டராய் அறிய மறுத்தான்…


தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையில் ஒரு சிறுவனின் உயிரை தான் எடுத்து விட்டோம் என்ற குற்றவுணர்ச்சி அவனை வெகுவாக தாக்கிட, ருத்திரனால் அடுத்ததாக ஸ்டெதஸ்கோப்பை மாட்ட முடியாமல் போய்விட்டது…


அவனால் ஹைதரபாத்திற்கும் செல்ல முடியவில்லை.. திருவனந்தபுரத்திற்கு சென்றான்…


அதற்கு பிறகும் அவனால் சரியான நிலைக்கு வரமுடியாத நிலையில் தான், ஏற்கனவே புக் பண்ணி வைத்திருந்த ஆஸ்திரேலியாவிற்கு சஞ்சனாவின் வற்புறுத்தலின் படி சென்றான்..


அகமேந்தியை தனியாக விட்டுச் செல்கின்றோம் என்ற தயக்கம் வெகுவாக இருந்தது. அவளிடம் தன் நிலையை எடுத்துரைக்க முயன்றிட, அவளோ அழுகையிலேயே தன் காலத்தை கரைத்துக் கொண்டிருந்தாள்…அகமேந்தியிடம் தன் கடந்த கால வாழ்க்கையை பற்றி மறைத்தவன், அவள் நன்றாக இருக்கிறாளா? சாப்பிடுகிறாளா? என்பதை கண்காணிக்கவே வீடெங்கும் சிசிடிவி கேமராவை பொறுத்தி வைத்திருந்தான்…


அவள் இரண்டு நாட்கள் முதலில் சாப்பிடாமல் இருக்க, ருத்திரனின் அதட்டல் குரலில் தான் சாப்பிடவே ஆரம்பித்தாள்…


அவளின் பயத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவன் அவளுக்கு நல்லதை தான் பண்ணினான். ஆனால் அதை புரிந்து கொள்ள அவளால் முடியவில்லை…


வீடெங்கும் சிசிடிவி கேமரா இருப்பதினால் சஞ்சனாவினால் அகமேந்தியை ஒன்றும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் என்றோ அகமேந்தியை சஞ்சனா கொன்றிருப்பாள்…


ஆனாலும் அவளை பிரிக்க வேண்டுமென்றே விரும்பினாள். ருத்திரன் போன் பண்ணி அகமேந்தியை டெஸ்ட் பண்ண சொல்லிய பின்புதான். ருத்திரனின் குழந்தை அகமேந்தியின் வயிற்றில் வளர்வதை தாங்கிக் கொள்ள முடியவில்லை சஞ்சனாவினால்.


தான் விரும்பிய ஒருவனின் கருவை சுமக்கிறாள் என்ற கோபத்தில் தான் அவளை காரோடு தள்ளி சாகடிக்கப் பார்த்தது.. ஆனால் காருக்குள் ருத்திரன் இருப்பதை அவள் எதிர்பார்க்கவில்லை…


டிரைவர் தான் வண்டி ஓட்டுவார் என சஞ்சனா நினைத்திருந்தாள்.. ஆனாலும் அகமேந்தியின் மீதிருக்கும் வன்மம் மட்டும் தீரவில்லை.


அவளை ஏதாவது செய்ய வேண்டுமென்று தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவளுக்கு எடுத்த ப்ளட் டெஸ்ட் தான் நியாபகத்திற்கு வந்தது.


முதலில் அவள் கருவில் வளர்வது யார் குழந்தை? என அறிய விரும்பினாள். அது ருத்திரனுடையது இல்லை என்றால் அவளிடமிருந்து ருத்திரனை பிரிப்பது எளிதாகிவிடும் என்றே நம்பி அவள் கருவில் இருக்கும் குழந்தைக்கு டெஸ்ட் எடுத்தாள்..


ருத்திரனின் ரத்தமாதிரி ஹாஸ்பிடலில் ஏற்கனவே இருப்பதால், அதையே பயன்படுத்திக் கொண்டாள்…


ருத்திரன் எந்நிலையிலும் திருமணம் ஆகுமுன்பே இன்னொரு பெண்ணுடன் இணைய மாட்டான் என நினைத்தே அவள் டெஸ்ட்டை எடுத்தது…


டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவாக வரவேண்டும் அகமேந்தியை வீட்டை விட்டு அடித்து துரத்த வேண்டுமென்று நினைத்தாள்..


ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவாக வந்து அகமேந்தியின் கருவில் வளரும் குழந்தைக்கு ருத்திரன் தான் தகப்பன் என்று காட்டிக் கொடுத்தது..


சஞ்சனாவிற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியே. அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எத்தனையோ தடவை ருத்திரனை நெருங்க முயலும் போதெல்லாம் தன்னை விட்டு தள்ளி தள்ளி சென்றவன் அகமேந்தியுடன் வாழ்ந்திருக்கிறான் என்பதை நினைக்கும் பொழுதே ஆத்திரம் மேலோங்கியது…


இவர்களை பிரிக்க வேண்டுமே என நினைத்து தான். டெஸ்ட் ரிப்போர்ட்டை டேபிளில் வைத்தாள். ஆனால் அகமேந்தியின் கெட்ட நேரமா? சஞ்சனாவின் நல்ல நேரமா? அவளே ரிப்போட்டை பார்த்து ருத்திரனுடன் சண்டையிட்டு புறப்பட்டு விட்டாள்…


அவள் சென்றதை அறிந்த சஞ்சனாவோ கண்ணீர் விடுவதைப் போல் நடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் உள்ளுக்குள் அவளின் சந்தோஷத்தை மறைத்துக் கொண்டிருந்தாள்…


பார்க்கிற்கு தனியாக சென்றது தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளத்தான். ஆனால் அங்கு அவளை சில பேர் கடத்திக் கொண்டு செல்ல, முதலில் யார் என்று திகைத்தவளுக்கு இரணியனை பார்த்ததுமே சிறு கர்வ புன்னகை தான் தோன்றியது.


ருத்திரனின் வாழ்க்கையை தான் சிதைத்து விட்டாளே!. இனி யார் நினைத்தாலும் அகமேந்தியை ருத்திரனுடன் ஒன்று சேர்க்க முடியாது என திமிரும், கர்வமும் கலந்து பார்க்க, இரணியனோ அவளின் கழுத்தை நெறித்துக் கொல்லும் அளவிற்கு சென்று விட்டான்…


ஆனாலும் சஞ்சனா தப்பிவிட்டாள். ருத்திரனுடனான நெருக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் போனது.


அவனுக்கோ அகியை பிரிந்த ஏக்கம் அவனை தவியாய் தவிக்க வைத்தது. அகமேந்தி லாரி மூலமாக சென்னைக்கு புறப்பட்டதை அறிந்தவன், அவனும் சென்னைக்கே வந்து விட்டான்.


ப்ளாட்பார்மில் படுத்திருந்த அகியை பார்த்ததும் அப்படியொரு வலி ருத்திரனுக்கு.


அவளை அந்த நிலைமையில் பார்த்த பின்பு அவளை விட்டுப் போக வேண்டுமென்று தோன்றவில்லை.


அவள் தூங்கி விழிக்கும் வரை அவளின் அருகில் தான் அவன் இருந்தான். அபிக்கு ருத்திரன் இருப்பது தெரிந்தாலும் கண்டு கொள்ளவில்லை.


தன் அக்கா நன்றாக வாழ வேண்டுமென கண்டும் காணாமல் இருக்க ஆரம்பித்தான். இருவரும் வீடு பார்த்தது, அட்வான்ஸ் கொடுத்தது அனைத்துக்கும் பின்னாலும் அவன் இருந்தான்.


ஏனோ அகமேந்தி கஷ்டப்படும் வேளையில் தான் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழ முடியுமா? என நினைத்தவன்.. அவளைப் போலவே பத்துக்கு பத்து அடி கொண்ட வீட்டில் தான் தங்கினான்.


தான் படித்த டாக்டர் தொழிலை மறந்துவிட்டு சாதாரணமான வேலை தான் பார்த்தான். கண்ணில் படும் வேலையை பார்த்து தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவனின் முன்னால் வந்து நின்றான் அபிமன்யு… கிட்டத்தட்ட மூன்று வருடங்களை கடந்துவிட்டது.


அப்பொழுது தான் வேலை முடித்து அக்கடா என படுத்துக் கொண்டிருந்த ருத்திரன் சர்வ நிச்சயமாக அங்கு அபிமன்யுவை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் அதிர்ந்த முகமே வெளிக்காட்டியது…


“நீ இங்கே எதுக்கு வந்திருக்க?”


“எத்தனை நாளைக்கு இப்படி கண்ணாமூச்சி ஆடப்போறீங்க?. என் அக்கா வீட்டை விட்டு வந்த ரெண்டாவது நாளே நான் உங்களை பார்த்துட்டேன்.. அதுக்கப்புறமும் எங்கேயாவது உங்களை பார்த்துட்டே தான் இருக்கேன்.. நீங்க ஒரு டாக்டர்ங்கிறதே உங்களுக்கு மறந்துப் போச்சா?”


“நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லத் தேவையில்லை. உன் வேலையை பாரு” என்றவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் அபிமன்யு..


“நீங்க உண்மையாவே எங்கக்காவை காதலிக்கிறீங்களா?”


“இங்கே பாரு இதுக்கான பதில் உன்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை”


“எங்கக்காவை யாரோ கொல்லப் பார்க்குறாங்க” என்ற வார்த்தையில் அதிர்ச்சியுடன் திரும்பினான் ருத்திரன்


அபிமன்யு சொன்ன வார்த்தையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


கொலையாஆஆ.. அவளையாஆஆஆ???


ஆமா மா‌மா.. எங்கக்காவை தான் இதுவரைக்கும் மூணு தடவை நடந்திருக்கு. ஒரு தடவை அக்கா யாரோ பாலோ பண்ற மாதிரி தெரியுதுன்னு சொன்னா? நான் நீங்க தான்னு நினைச்சிட்டு அப்படியே விட்டுட்டேன்..


ஆனா இரண்டு தடவை ஒரே கார் அவளை இடிக்க ட்ரை பண்ணிச்சு. அதுனால தான் உங்ககிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்ற அபிமன்யுவின் வார்த்தையில் ருத்திரனுக்கோ நெஞ்சில் சுருக்கென்று வலி தோன்றி மறைத்தது.


“நான் போயிட்டு வர்றேன் சார்”


“மாமாஆஆஆஆ” என அழுத்தமாக திருத்தினான் ருத்திரன்…‌


அகமேந்தியை பாலோ பண்ணிய காரை பிடித்து விட்டான்… அந்த டிரைவரிடம் விசாரித்த பொழுது கொலையாளியை பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.


ஆனாலும் ருத்திரனால் அப்படியே விட்டுவிட முடியவில்லை. அவளை பாதுகாக்க வேண்டும். என்னவென்று யோசித்தவன் கண்ணில் சிக்கியது அந்தப் பேப்பர்.. அதைப் பார்த்தவனின் இதழோரம் சிறு கர்வப்புன்னகை தோன்றியது…


அபிமன்யுவை கைது பண்ணினான். அதன் மூலம் அகியை தன்னுடன் தங்க வைத்தான். அவன் உண்மையை சொல்லியிருந்தால் அகி ருத்திரனுடன் வரமாட்டாள் என்றறிந்தே அபிமன்யுவிடம் தன் திட்டம் எல்லாம் சொல்லியே அழைத்து வந்தான்…


அடுத்த நாள் வந்த போன் கால் கூட சஞ்சனா தான் அழைத்திருந்தாள்… அனைத்தும் முடிய, சஞ்சனா கத்தியால் குத்த சொன்னது அகமேந்தியை.. ஆனால் அவர்கள் குத்தியது ருத்திரனை..


இரணியன் அன்று வராவிட்டால் கண்டிப்பாக ருத்திரன் பிழைத்திருக்க மாட்டான். ருத்திரன் அகி வாழ்க்கையை காப்பாற்றியதில் இரணியனின் பங்கு பெரிது தான்…
 
Last edited:

இறுதி அத்தியாயம்


ருத்திரனின் கடந்த காலத்தை அறிந்தவள் அப்படியே அமைதியாக நின்றிருந்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை ‌ ஏனோ அவளின் மௌனமே கொல்லாமல் கொன்றது ருத்திரனை…


“நாம போகலாம்” என்ற ஒற்றை வார்த்தையில் காரினுள் ஏறியமர்ந்தாள்.


மெதுவாக காரினுள் ஏறியமர்ந்தவளுக்கு இன்னும் பல கேள்விகள் அவளுக்குள் உறுத்திக் கொண்டேயிருந்தது.


அவனின் டாக்டர் தொழிலை ஏன் பாதியில் விட்டுவிட்டான்?. காணாமல் போன உத்திரா எப்படி திரும்பி வந்தாள்? அபிமன்யுவை கடத்தி வைத்தவன் எப்படி அவனை விட்டுவிட்டான்? என பல கேள்விகள் அவளுக்குள் தோன்றிக் கொண்டே இருந்தது.


இதை விட பெரிய கேள்வி அவன் தன்னைக் காதலிக்கிறானா? என்பது தான்.


ஒரு பெண்ணை இழிவாக யாரும் பேசிடக்கூடாது என்பதற்காக தன் கழுத்தில் கட்டிய தாலியில் எப்படி காதல் வரும்? என நினைத்துக் கொண்டே இருந்தவளுக்கு கார் நிற்கும் சத்தத்தில் மெல்ல தன் தவம் களைந்தாள்…


காரை விட்டு மெல்ல இறங்கியவள் நிமிர்ந்து பார்க்க, அவள் வீட்டிற்கு வராமல் வேறு ஒரு அப்பார்ட்மெண்டிற்கு அழைத்து வந்திருந்தான்..


இது யாரோடது?


“இது நம்மளோடது தான். நீ நான் அபிமன்யு, உத்திரா எல்லாரும் தங்குற மாதிரி நான் வாங்குனது . நீ எந்த தயக்கமும் இல்லாமல் வரலாம்” என்றவனின் பேச்சில் மெல்ல அடியெடுத்து வைத்தாள் புது வாழ்க்கையில்…


இரண்டெட்டு வைத்தவளின் மெல்லிய கரங்களோடு உரமேறிய கரம் ஒன்று பின்னிப் பிணைந்தது.


தன் கரங்களோடு சேர்ந்த கைகளை அதிர்ச்சியில் திரும்பி பார்க்க, அங்கு புன்னகை முகமாக முன்னே நடக்க ஆரம்பித்தான்…


இருவரும் உள்ளே சேர்ந்தவாறு நுழைய அங்கு சோபாவில் அமர்ந்திருந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தனர் அபியும், உத்திராவும்…


ருத்திரன் அறைக்குள் நுழைய, அகி நேராக சென்றது அபியின் முன்பு தான்…


“நீயும் என்கிட்ட உண்மையை மறைச்சிட்டல்ல” என ஆதங்கமாக கேட்க,


“நீ நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டேன் க்கா” என்றவன் சோபாவில் சென்று அமர்ந்து விட்டான்…


இரண்டு நாட்களாகியும் அகி அவளின் திருவாயை திறக்கவில்லை. அமைதியாக உலா வந்துக் கொண்டிருந்தவளை தான் மற்ற மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்…


“ஏன் மாம்ஸே.. உங்க அக்காவுக்கு என்னவாம்?. ரொம்பத்தான் பிகு பண்ணுது?”


“அவ ரொம்ப அமைதிடா” என்ற அபியை திரும்பி பார்த்து முறைத்த உத்திரா, “மாம்ஸுன்னு கூட பார்க்க மாட்டேன். மண்டையை உடைச்சிடுவேன் ஜாக்கிரதை” என்றவள் நேராக கிச்சனுக்குள் நுழைய, அங்கு பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தாள் அகி..


“ம்க்க்கும்” என கணைக்கும் குரல் கேட்டவளின் முகம் சட்டென்று இறுகியது..


“என்ன வேணும் உனக்கு?.. அம்மான்னு கூப்பிட்டா உன் வாய்ல இருக்கிற முத்து கீழே விழுந்துடுமா.?” என்றவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் உத்திரா.


இந்த வார்த்தையை கேட்கத்தானே அவள் தவமிருந்தது… “நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் மா” என்றவள் மீண்டும் மீண்டும் ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.


என்னதான் ருத்திரன் அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டாலும், ஒரு தாயிற்காக உத்திரா ஏங்கினாள் என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் அடிக்கடி அகியை வம்பிழுத்தாள்.


“உன்னைக் கடத்திட்டு போனப்போ நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா?” என கேட்கும் பொழுதே அகிக்கு அழுகை வந்து விட்டது.


“அய்யோ நீங்க நினைக்கிற மாதிரி என்னைக் கடத்திட்டுப் போனது என்னைப் பெத்தவங்களோட அப்பாவும் அம்மா தான்.. அப்போ நான் சின்ன பொண்ணுல்ல. நேரத்துக்கு நேரம் சாப்பாடு போட்டு சூப்பரா பார்த்துப்பாங்க. ஆனா அப்பா நியாபகம் அடிக்கடி வரும். அப்போ எல்லாம் அழுவேன். அப்போ தான் எனக்கேத் தெரியும்.. நான் இப்போ நல்லபடியா இருக்கிறதுக்கு காரணம் ருத்திரன் அப்பாவும், இரணியன் சித்தப்பாவும் தான்” என்ற உத்திராவை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு எழ, அவர்கள் இருவரையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டு நின்றான் ருத்திரன்…


அந்தக் கூட்டிற்குள் அவனும் வேண்டும் என்பது தான் அவனின் விருப்பமே!. ஆனால் அதற்குத்தான் தடை விதித்திருந்தாளே! அகி.


இந்த வீட்டில் வந்ததில் இருந்தே அகி உத்திராவின் அறையில் சென்று தூங்கிவிட, அபிமன்யு ஒரு அறையில் உறங்கிட, ருத்திரன் தான் அங்குமிங்கும் தவழ்ந்து கொண்டிருந்தான்…


அன்றிரவும் உறக்கம் வராமல் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தவனின் முன்பாக வந்து நின்றாள் அகி..


“இன்னும் எத்தனை நாள் இப்படியே உலாவிட்டு இருக்கப் போறீங்க?”


“ப்ச்ச்.. எனக்கு தூக்கம் வந்தா நானே தூங்குவேன். நீ போ”


ஓஹ்.. அப்போ நான் போனா எல்லாம் சரியாகிடும் அப்படித்தானே!” என்றவள் அடுத்த நாளே வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.


அவளுடன் உத்திராவையும் அழைத்துக் கொண்டு சென்றாள்… நேராக சென்றது இரணியனை தேடிதான்…


தன் வீட்டின் முன்பாக வந்து நின்ற அகியை சிநேகமாக பார்த்து புன்னகைத்தாள் சரண்யா..


“உள்ளே வா அகி”


“வாழ்த்துக்கள்.. இப்போ குழந்தை எப்படியிருக்கு?”


“ம்ம்ம்.. நல்லா இருக்கு.. என்ன சாப்பிடுற?”


“நான் அவரோட தம்பியை பார்க்கணும்.. கொஞ்சம் பேசணும்” என்றதும், படிக்கட்டில் இறங்கி வந்தவனை எழுந்து நின்றாள்…


அவன் மேல் இருக்கும் பயம் ஏனோ அவளை விட்டு அகல மறுத்தது..


“என்ன பேசணும்?” என கர்ஜிக்க,


அகி மெல்ல தன் திட்டத்தை சொல்லி முடிக்க, இரணியன் புருவத்தை ஏற்றி இறக்கினான்…


“இந்தளவுக்கு அவனை நீ காதலிக்கிறீயா?”


தெரியலை.. ஆனா அவர் கலங்குனா எனக்கு வலிக்குது. அவர் கண்ணுல கண்ணீர் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்” என்ற அகியின் வார்த்தையில் இரணியனுக்கு ருத்திரனின் வாழ்க்கையை பற்றிய பயம் மெல்ல நீங்கியது..


“சரி வா போகலாம்.. உத்திரா சரண்யா கிட்ட இருக்கட்டும்”...


“அது” என இழுத்த அகியை பார்த்து சிரித்தவன், “அவ எங்களுக்கும் பொண்ணுதான்” என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு முன்னால் சென்றான்..


கருப்பு நிற ஜீப்பில் இரணியன் ஏறியமர, அவன் அருகில் இருந்த சீட்டில் தான் அமர்ந்தாள் அகி.


அவளின் எண்ணம் முழுவதிலும் ருத்திரன் மட்டுமே!. இருவரும் நேராக வந்து நின்றது புழல் ஜெயிலுக்குதான்..


அங்குதான் சஞ்சனாவை வைத்திருந்தனர். தன் முன்னால் நின்ற அகியை பார்க்க பார்க்க பற்றிக் கொண்டு வந்தது சஞ்சனாவிற்கு.. நேராக ஜெயிலுக்குள்ளேயே நுழைந்தனர் இருவரும்…


“ஏன் இப்படி பண்ண?” என உடைந்து போன குரலில் கேட்ட அகியை இளக்காரமாக பார்த்தவள்,


“நான் காதலிச்ச ருத்திரனை நீ ஏன்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட?. அதுனால தான் இப்படி பண்ணேன்.. நான் ஜெயில்ல இருந்து வெளியில் வந்தாலும் கண்டிப்பா உன்னைக் கொல்லாம விடமாட்டேன்” என்றவள் அகியின் கழுத்தைப் பிடித்து நெறிக்க, இரணியன் சட்டென்று சஞ்சனாவை பிடித்து தள்ளி விட்டான்..


“நீ இன்னும் திருந்தவேயில்லை அப்படித்தான”


“ஆமாடா. அதுக்கென்ன இப்போ? நான் வெளியே வந்ததும் உங்க எல்லாரையும் கொன்னு என் ருத்திரனை நான் அடைஞ்சே தீருவேன்” என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள் அகி…


தன்னை அறைந்த அகமேந்தியை இமைக்காமல் பார்த்தாள் சஞ்சனா..


“இது அவரை அடைஞ்சுடுவேன்னு சொன்னதுக்கு” என்றவள் மீண்டும் ஒரு அறை அறைந்தாள்…


“ஏய்ய்ய்” என சீறிக் கொண்டு வந்த சஞ்சனாவை இரண்டு பெண் காவலாளிகள் பிடித்துக் கொண்டனர்.


“இது என் பொண்ணு உத்திராவை பிரிச்சதுக்கு” என்றவள் மீண்டும் அறைந்தாள்..


“இது என் குழந்தைங்களை கருவிலேயே அழிச்சதுக்கு” என்றவள் வேகமாக வெளியே ஓடிச் சென்றாள்..


அவளின் அழுகையை ஒரு வலிமையான கரம் துடிக்க, நிமிர்ந்து பார்த்தவளுக்கு மேலும் கண்ணீர் தான் வந்தது. தன்னெதிரில் நின்றிருந்த ருத்திரனை அழுத்தமாக அணைத்துக் கொண்டாள்..


நான் உங்களை விட்டு வந்தது ரொம்ப தப்பு தான்.. உங்ககிட்ட மனசு விட்டுப் பேசியிருக்கணும்”


“அம்மு. அழாதே!. நீ வா முதல்ல” என்றவன் வீட்டிற்கே அழைத்துச் சென்று விட்டான்.. அபி காலையில் ரெஸ்டாரண்டிற்கு சென்றுவிட்டான்..


உள்ளே நுழைந்த அகி பட்டென்று திரும்பி , “ஆமா நீங்க எப்படி அங்கே வந்தீங்க?”


“ம்ம்ம்.. நீ இரணியன் வீட்டுக்கு போனதும் எனக்கு தகவல் வந்திருச்சு. அப்புறம் தான் நான் உன்னை பாலோ பண்ணினேன்… நீங்க ரெண்டு பேரும் ஜெயிலுக்குள்ள போறதை பார்த்தேன். அதான் நானும் வந்தேன்”


“ஓஹ். ஒரு நிமிஷம் இருங்க” என்றவன் முன்பாக ஒரு பைலை நீட்டினான்.. அதை வாங்கிப் படித்தவனின் முகம் சற்று நேரத்தில் மாற ஆரம்பித்து விட்டது.


“அம்முஉஉ” என்றவனின் குரல் கம்ம,


“இது நீங்க ஆப்ரேஷன் பண்ண பையன் தான். அவனோட இறப்புக்கு நீங்க காரணமில்லை. அவனுக்கு ஏற்கனவே பிட்ஸ் ப்ராப்ளம் இருந்திருக்கு. அதை அவுங்க அப்பா அம்மா மறைச்சிருக்காங்க. அதுனால தான் நீங்க ஆப்ரேஷன் பண்ணும் போது திடீர்னு பிட்ஸ் வந்து அந்தப் பையனை காப்பாத்த முடியாம போயிடுச்சு.. உங்க மேல எந்தத் தப்பும் இல்லை.


அதுனால தான் உங்க மேல மெடிக்கல் டிபார்ட்மெண்ட் ல இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கலை.. ஆனா நீங்க தான் கில்ட் பிலீங்கல. இத்தனை நாள் டாக்டர் கோட்டை தொடாம இருக்கீங்க… உங்களை டாக்டரா பார்க்கணும்” என்றவள் இன்னொரு போட்டோவை அவனிடம் நீட்டினான்…


இதுல இருக்கிற போட்டோவை பார்த்து தான் நான் காதலிச்சேன்.. இது நான் அஸ்வத்தை பார்க்குறதுக்கு முன்னாடி ஒரு நாள் உங்க வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்தது. இதை யாருக்கும் தெரியாம பத்திரமாக வச்சிருந்தேன். அபிக்கு கூட தெரியாது.


அஸ்வத்தும் கிட்டத்தட்ட உங்களை மாதிரி இருந்ததால தான் அவனை எனக்குப் புடிச்சது.


அவன்கிட்ட எனக்குப் புடிச்சதே உங்களை மாதிரி இருக்கிற கண்ணு தான்.. அடிக்கடி பார்ப்பேன்.. நீங்க இல்லைன்னு எனக்குத் தெரியும்.. அவனை பார்க்கும் போதே ஒரு தடுமாற்றம் இருந்துக்கிட்டே இருந்தது.


இப்போ தான் புரியுது என் மனசுல இருந்தது நீங்க தான். அதான் நான் தடுமாறியிருக்கேன்..


“ஐ லவ் யூ” என்றவளின் இதழோடு இதழ் பொருத்தியிருந்தான் ருத்திரன்…


“ஏன்டி என்கிட்ட இந்த உண்மையை எல்லாம் சொல்லலை. இதை சொல்லியிருந்தா நமக்கு இவ்வளவு பிரிவும் வேதனையும் வந்திருக்குமா?”...


“ஐயம் சாரி.. என் தப்பு தான்” என்றவளின் நெற்றியில் இதழ் பதித்தவன், ஐ லவ் யூ டி” என்றவன் முத்தத்தால் குளிப்பாட்ட ஆரம்பித்தான்…‌


கலங்கிய குட்டையாய் இருந்த இருவரின் மனமும் இப்பொழுது ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்தது..


அவளின் மனதினை கொன்ற வேந்தன் அவனே, அவளின் மனதினையும் வென்று விட்டான். அவளின் காதலையும் பெற்று விட்டான்.


அடுத்த நாள் காலை எழுந்த அகி டிவியில் ஓடிக் கொண்டிருந்த ப்ரேக் நியூஸை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்…


ருத்திரன் என அவனை பார்க்க, அவனோ மிகவும் கேஸுயூவலாக அமர்ந்திருந்தான்.‌


இரண்டாம் மாடியில் இருந்து சஞ்சனா என்ற பெண் கைதி விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் என்ற நியூஸ் தான் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது.


அகிக்கு நிச்சயமாக தெரியும். இதில் இரணியன் தலையீடு நிச்சயம் இருக்கும் என்று. ஆனாலும் அமைதியாக இருந்தாள்…


கலக்கத்துடன் பின்னால் திரும்பியவளின் விழிகளில் நீண்ட நாளைக்கு பிறகு, தன் தோளில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டியடபடி தன்னருகில் வந்துக் கொண்டிருந்த ருத்திரனை பார்த்ததும் மூச்சடைத்தது.


அவளின் அதிர்ச்சியில் லேசாக புன்னகைத்தவன், “நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வர்றேன்” என நெற்றியில் முத்தமிட்டு கிளம்பிட, திடீரென்று முழித்தவள், “அப்போ உங்க போலீஸ் வேலை” என்றவளை பார்த்து வாய் விட்டு சிரித்தவன், “நியூஸை ஒழுங்கா பாரு” என்றபடி வெளியேறி விட்டான்..


“என்ன இருக்கு நியூஸ்ல” என்றவள் அங்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவனை பார்த்து திகைத்து நின்றாள்..


அங்கு கம்பீர மாறா முகத்துடன் நின்று கொண்டிருந்தது இரணியன் தான்.. ஐபிஎஸ் ஆபீசராக வேடமிட்டு வந்தவன் நான் ருத்திரன். அன்று அவன் பேப்பரில் கண்டதும் இரணியனின் என்கவுண்டரை பற்றிதான்.


அகமேந்தியை காப்பாற்றவே போலீஸ் வேடமிட்டிருந்தான்..“நான் உயிரைக் காப்பத்தணும்னு நினைக்கிறவன்டி. என் கையால ஒரு உயிரை போக நினைப்பேனா” என காதுக்குள் கேட்ட குரலில் திரும்பி பார்க்க, “ஐ லவ் யூ அம்மு” என அவள் நெற்றியில் முத்தமிட்டு இதழ் பிரியா புன்னகையுடன் வெளியேறினான்.


இவர்களின் புன்னகை இன்றல்ல என்றும் தொடரும்…


 
Status
Not open for further replies.
Top