ஒரு சின்ன டீசர்....
கண் திறந்தால் , எங்கு காணினும் இருள் , கால்களுக்கு கீழே பூமி உருண்டை ,மேலே வானமா ? என்று கேட்டால் ....அதற்க்கும் மேல் .. ஆம் விண்வெளியியே தான்
நான்கு விண்வெளிவீரர்கள் ஆராய்ச்சிக்காக பூமியின் வளிமண்டலத்தில் மிதந்துகொண்டு இருந்தனர் , அந்த சமையத்தில் பூமியை நோக்கி ஒரு விண்கல் வேகமாக வந்ததுக்கொண்டு இருந்தது , அது பூமியில் விழுந்தால் நிச்சையமாக நம் பூமி வெடித்தி சிதறிவிடும் , வருகின்ற ஆபத்தைப் பார்த்து நால்வரில் மூவர் மிரள , ஒருவர் மட்டும் தன் உயிரைப் பற்றியும் கவலைக்கொள்ளாமல் பூமியைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற முடிவோடு தைரியமாக எரிந்து கொண்டு வரும் கல்லை எதிர் நோக்கி முன்னேறினார்... இதோ நெருங்கிவிட்டது ...நம்மோடு பூமியும் அழியப்போகுது என்ற பயத்தில் சிந்திக்க மறந்து மற்ற மூவரும் வேடிக்கை மட்டுமே பார்க்க , கண்மூடித்திறக்கும் வேளையில் அந்த அதிசயம் சம்பவம் நிகழ்ந்து விட்டது .
தைரியம் நிறைந்த அந்த ஒரு விண்வெளிவீரர் , ‘விண்கல்லை எப்படி வெடிக்க வைக்கலாம்’ , என யோசித்தார் , பின் ஒரு கூப்பியில் இதற்க்கு என்றே தயாரித்த அமிலத்தை துரிதமாக தன்னிடம் உள்ள சின்ன ராக்கெடில் வைத்துகொண்டு இருக்கையிலையே விண்கல் அவரிடம் நெருங்கிவிட்டது , அதன் வேகம் அப்படி , விண்கல் அவரை நெருங்க , கணநேரத்தில் விண்வெளிவீரர் தனக்கும் விண்கல்லுக்கும் இடையே ராக்கெட்டை வைத்தார் ,வேகமாக வந்த விண்கல் ராக்கெட்டில் மோதியதின் விளைவாக விண்வெளிவீர்ரருக்கும் விண்கல்லுக்கும் இடையே ஒரு பச்சை நிற ஒளி உண்டாகி , அது இருவரையும் விழுங்கியது ...
மற்ற மூவரும் இப்போது இங்க என நடந்தது என விளங்காமல் விழித்தனர் , ஒருவர் ஒருவரை பார்க்க , கண்மூடி திறப்பதற்க்குள் பூமிக்கு வந்த ஆபத்து நீங்கியது ஆனால் ...
ஆனால் ...அந்த விண்வெளிவீரர் எங்கே ?
அந்த விண்கல் ஏன் வெடிக்க வில்லை ? அந்த கல் இப்போது எங்கே ?
அந்த பச்சை நிற ஒளி எப்படி வந்தது ? என குழப்பங்கள் நிறைந்த பல கேள்விகளோடு , தன் சகவீரரை இழந்த சோகந்தோடும் , மற்ற மூன்று வீரர்களும் பூமிக்கு திரும்பினார்கள்.