வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மயக்கிடும் அயலான் அவன் - கதை திரி

Status
Not open for further replies.
ஒரு சின்ன டீசர்....

கண் திறந்தால் , எங்கு காணினும் இருள் , கால்களுக்கு கீழே பூமி உருண்டை ,மேலே வானமா ? என்று கேட்டால் ....அதற்க்கும் மேல் .. ஆம் விண்வெளியியே தான்


நான்கு விண்வெளிவீரர்கள் ஆராய்ச்சிக்காக பூமியின் வளிமண்டலத்தில் மிதந்துகொண்டு இருந்தனர் , அந்த சமையத்தில் பூமியை நோக்கி ஒரு விண்கல் வேகமாக வந்ததுக்கொண்டு இருந்தது , அது பூமியில் விழுந்தால் நிச்சையமாக நம் பூமி வெடித்தி சிதறிவிடும் , வருகின்ற ஆபத்தைப் பார்த்து நால்வரில் மூவர் மிரள , ஒருவர் மட்டும் தன் உயிரைப் பற்றியும் கவலைக்கொள்ளாமல் பூமியைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற முடிவோடு தைரியமாக எரிந்து கொண்டு வரும் கல்லை எதிர் நோக்கி முன்னேறினார்... இதோ நெருங்கிவிட்டது ...நம்மோடு பூமியும் அழியப்போகுது என்ற பயத்தில் சிந்திக்க மறந்து மற்ற மூவரும் வேடிக்கை மட்டுமே பார்க்க , கண்மூடித்திறக்கும் வேளையில் அந்த அதிசயம் சம்பவம் நிகழ்ந்து விட்டது .

தைரியம் நிறைந்த அந்த ஒரு விண்வெளிவீரர் , ‘விண்கல்லை எப்படி வெடிக்க வைக்கலாம்’ , என யோசித்தார் , பின் ஒரு கூப்பியில் இதற்க்கு என்றே தயாரித்த அமிலத்தை துரிதமாக தன்னிடம் உள்ள சின்ன ராக்கெடில் வைத்துகொண்டு இருக்கையிலையே விண்கல் அவரிடம் நெருங்கிவிட்டது , அதன் வேகம் அப்படி , விண்கல் அவரை நெருங்க , கணநேரத்தில் விண்வெளிவீரர் தனக்கும் விண்கல்லுக்கும் இடையே ராக்கெட்டை வைத்தார் ,வேகமாக வந்த விண்கல் ராக்கெட்டில் மோதியதின் விளைவாக விண்வெளிவீர்ரருக்கும் விண்கல்லுக்கும் இடையே ஒரு பச்சை நிற ஒளி உண்டாகி , அது இருவரையும் விழுங்கியது ...

மற்ற மூவரும் இப்போது இங்க என நடந்தது என விளங்காமல் விழித்தனர் , ஒருவர் ஒருவரை பார்க்க , கண்மூடி திறப்பதற்க்குள்
பூமிக்கு வந்த ஆபத்து நீங்கியது ஆனால் ...
ஆனால் ...அந்த விண்வெளிவீரர் எங்கே ?
அந்த விண்கல் ஏன் வெடிக்க வில்லை ? அந்த கல் இப்போது எங்கே ?
அந்த பச்சை நிற ஒளி எப்படி வந்தது ? என குழப்பங்கள் நிறைந்த பல கேள்விகளோடு , தன் சகவீரரை இழந்த சோகந்தோடும் , மற்ற மூன்று வீரர்களும் பூமிக்கு திரும்பினார்கள்.
 
அத்தியாயம் 1
இருள் என்னும் அதிசயம்

நாம் வாழும் இந்த அண்டம் பல அதிசயங்களை தன்னுள் மறைத்து வைத்துள்ளது

வெளிச்சத்துக்கு சக்தி உண்டுயெனில் , இருளுக்கும் சக்தி உண்டு !

பகல் ஒரு வித அழகு என்றால்...

இரவு ஒரு வித அழகு...

வெளிச்சம் இருந்தால் சில பொருள்களை தான் பார்க்க முடியும் , ஆனால் வெளிச்சத்தால் காண முடியாத பல ரகசியங்களை இருள் நமக்கு காட்டும் .

அதுபோல...

இருந்தும் இல்லாத ஒன்றில் , இல்லாதவையே இல்லை அல்லது எல்லையே இல்லாத ஒன்றில் , இல்லாதவையே இல்லை என இப்படியும் கூறலாம் .

என்ன புரியலையா ?

நான் விண்வெளியாய் பற்றி தான் சொல்கிறேன்.... இதை ஆன்மீகத்தில் மாயா என்பார்...

உண்மையில் விண்வெளி என்றால் என்ன ? கிட்டதட்ட அது ஒரு வெற்றிடம் , பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதி . அந்த ஒண்ணும் இல்லாத இடத்தில் , அப்படி என்ன தான் இருக்கும் ? என பல விஞ்ஞானிகள் தலைக்கீழாக குட்டி கர்ணம் அடித்து பல ஆண்டுகளாக தேடிக்கொண்டு வருகின்றார்கள்...

பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பம் போன்று பல மில்லியன் கணக்கான குடும்பங்கள் உள்ளது. நம் சூரியக்குடும்பத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ தகுதியான வளிமண்டலம் அமைந்துள்ளது . பூமியைப்போல பல கோள்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது அதிலும் மனிதர்களைப்போல பல உயிர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

சரி இப்போ கதைக்கு வருவோமா ......

கண் திறந்தால் , எங்கு காணினும் இருள் , கால்களுக்கு கீழே பூமி உருண்டை ,மேலே வானமா ? என்று கேட்டால் ....அதற்க்கும் மேல் .. ஆம் விண்வெளியியே தான் !

நான்கு விண்வெளிவீரர்கள் ஆராய்ச்சிக்காக பூமியின் வளிமண்டலத்தில் மிதந்துகொண்டு இருந்தனர் , அந்த சமையத்தில் பூமியை நோக்கி ஒரு விண்கல் வேகமாக வந்துக்கொண்டு இருந்தது , அது பூமியில் விழுந்தால் நிச்சையமாக நம் பூமி வெடித்துச்சிதறிவிடும் , வருகின்ற ஆபத்தைப் பார்த்து நால்வரில் மூவர் மிரள , ஒருவர் மட்டும் தன் உயிரைப் பற்றியும் கவலைக்கொள்ளாமல் பூமியைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற முடிவோடு தைரியமாக எரிந்து கொண்டு வரும் கல்லை எதிர் நோக்கி முன்னேறினார்... இதோ நெருங்கிவிட்டது ...நம்மோடு பூமியும் அழியப்போகுது என்ற பயத்தில் சிந்திக்க மறந்து மற்ற மூவரும் வேடிக்கை மட்டுமே பார்க்க , கண்மூடித்திறக்கும் வேளையில் அந்த அதிசயம் சம்பவம் நிகழ்ந்து விட்டது .

தைரியம் நிறைந்த அந்த ஒரு விண்வெளிவீரர் , ‘விண்கல்லை எப்படி வெடிக்க வைக்கலாம்’ , என யோசித்தார் , பின் ஒரு கூப்பியில் இதற்க்கு என்றே தயாரித்த அமிலத்தை துரிதமாக தன்னிடம் உள்ள சின்ன ராக்கெடில் வைத்துகொண்டு இருக்கையிலையே விண்கல் அவரிடம் நெருங்கிவிட்டது , அதன் வேகம் அப்படி , விண்கல் அவரை நெருங்க , கணநேரத்தில் விண்வெளிவீரர் தனக்கும் விண்கல்லுக்கும் இடையே ராக்கெட்டை வைத்தார் ,வேகமாக வந்த விண்கல் ராக்கெட்டில் மோதியதின் விளைவாக விண்வெளிவீர்ரருக்கும் விண்கல்லுக்கும் இடையே ஒரு பச்சை நிற ஒளி உண்டாகி , அது இருவரையும் விழுங்கியது ...

மற்ற மூவருக்கும் அதிர்ச்சி ... இப்போது இங்க என்ன நடந்தது ? என விளங்காமல் விழித்தனர் , ஒருவரை ஒருவர் பார்க்க , கண்மூடி திறப்பதற்க்குள்

பூமிக்கு வந்த ஆபத்து நீங்கியது ஆனால் ...ஆனால் ...அந்த விண்வெளிவீரர் எங்க ? அந்த விண்கல் ஏன் வெடிக்க வில்லை ? அந்த பச்சை நிற ஒளி எப்படி வந்தது ? என குழப்பங்கள் நிறைந்த பல கேள்விகளோடு , தன் சகவீரரை இழந்த சோகந்தோடும் , மற்ற மூன்று வீரர்களும் பூமிக்கு திரும்பினார்கள்.


-------------------------------------------

இடம் : சென்னை

வசதிபடைதவர்கள் வாழும் காலனி , ராஜவேலு என்ற பெயர் பலகை கொண்ட நல்ல விசாலமான வீடு , வீட்டையோட்டி தோட்டம் , வீட்டின் உள்ளே சென்றால் , சமையலறையில் காப்பி வாசனை , பூஜையறையில் சாம்பிராணி வாசனை என காலை நேர பரபரப்போடு இருந்தது ,

பூஜையை முடித்துவிட்டு , நெற்றியில் பட்டையோடு வந்தார் ராஜவேலு இவர் ஒரு தொழிலதிபர், ரேவதி டெக்ஸ்டைல் ஒன்றை நடத்தி வருகிறார்.

“ பாக்கியம் காப்பிமா “ என முடிக்கவில்லை கையில் காபி இருந்தது , நிமிர்ந்தி பார்தார் , அவர் மனைவி பாக்கியம் குளித்து மங்களாகரமாக , இதழில்புன்னகையுமாக நிற்க்க , அவருக்கு பார்க்க பார்க்க திகட்டவில்லை , அவர் அழகை ரசித்தபடி ராஜவேலு,“இன்னும் சின்ன பெண்ணவே இருக்க பாக்கியம் “ என சொல்ல ,பாக்கியத்திற்க்கு ஒரே வெக்கமாக போய்விட்டது ,

இருவரும் காலையிலேயே காதல் அம்புகளை தொடுக்க , அதை தடுக்கவே “அம்மா காப்பி “ என கரடியாக ஒரு குரல் ஒலித்தது ,

காதலில் மிதந்து கொண்டு இருந்த ராஜவேலுக்கு , அந்த குரலைக் கேட்டதும் முகம் இறுகியது ,பற்க்களை கடித்தார் , கோவமாக பாக்கியத்தை பார்க்க , அவர் தலையை குனிந்து கொண்டார் .

மீண்டும் “அம்மா காப்பி மா “ ,குரல் வந்த திசையைப் பார்க்க , இரவு உடையில் கண்களில் தூக்கம் களையாமல் பரட்டை தலையோடும் உத்தப்பல்லோடும் , ஒரு உருவம் மாடியிலிருந்து இறங்கி வந்தது , இருவரையும் பார்த்து ஹி..ஹி.. என பல்லித்து “காலை வணக்கம் தந்தையே “என இடது கையால் ராஜவேலுவை பார்த்து சல்யூட் வைக்க கோவம் வந்து வேலு பல்லை கடித்தார் .

பாக்கியமோ “ எங்க கோவபடாதீங்க ....ஏன்டி அறிவு இல்ல உனக்கு காலையில எழுந்ததும் இப்பிடிய பப்பரபேணு ...வருவா...போ ..போயி..பல்லாவிளக்கு “ என கணவரிடம் ஆரம்பித்து மகளிடம் முடித்தார் ..கணவனின் திட்டிலிருந்து மகளை காப்பாற்ற முயன்றார்... ஆனால் முடியவில்லை.

“சனியன் ..சனியன்...காலங்காத்தல இது மூஞ்சீல முழிச்ச வெளங்குமா...அவ என் கண்ணு முன்னால வரக்கூடாது போக சொல்லு “ என டென்ஷனில் காட்டு கத்திவிட்டு டைன்னிங் டேபிள சாப்பிட உக்கார, அவரின் டென்ஷனை கூலாக ரசித்தபடியே தெனாவெட்டக அவருக்கு எதிராக அவளும் சாப்பிட அமர , அடுத்தநொடியே ,கோவமாக எழுந்த ராஜ்வேலு பாக்கியதை முறைத்தபடியே தன் அறைக்குள் சென்று கதவை படீரென அடித்தி சாத்தினார் .

இங்கே அவளுக்கோ பரமதிருப்பதி ... நிமிர்த்து பார்க்க , தாய் முகத்தில் சோகம் வழிந்தோடியது , அவளை பார்த்து “இந்த நிலைமை எப்போடி மாறும் அந்த மனுஷதன் இப்பிடினா...நீயும் ஏன்டி இப்பிடி சரிக்கு சரியா நிற்க்கர” சொல்லிக்கொண்டே முந்தானையில் கண்ணீரை துடைக்க , அவளுக்கு பாவமாகிபோச்சு ..அவரை சரியாக்கும் பொருட்டு “ ஆமா இன்னைக்கு என்ன சமையல் ராஜமாதா “ என கேட்டுக்கொண்டே பந்திரத்தில் கை வைக்க ...வைத்த கை மீது கரண்டியால் ஒரு அடி போட்ட பாக்கியம் “அடிக் கழுத போ..பல்லுவேலக்கி குளிச்சுட்டுவா “ என்க

அதற்க்கு அவள் “அது எல்லாம் குளிச்சு முடிச்சு நான் எப்வோ ரெடி“என அவள் கண்ணடிக்க , அவளை முறைத்த பாக்கியம் , “பின் ஏன்டி அந்த மனுஷனை போட்டு அந்த பாடுபடுத்தார “ என பேசிக்கொண்டே...

தன் மகளுக்கு இட்லி, சட்டினி எல்லாம் அவள் தட்டில் வைத்து பரிமாற , இட்லியை புட்டு வாயில் போட்டு கொண்டே “ அவரை டென்ஷன் பண்ணாம எனக்கு நாளே ஓடாது மாதா அவர்களே ” என துடுக்காக பேசியதின் பலனாக பாக்கியதிடம் ஒரு கொட்டும் வாங்கி கொண்டாள் பின் மேசைமீது இருந்த உணவுகளை அளந்தபடி”என்ன உன்னோட பெரிய பொண்ணு வரா போல “ என சாப்பிடுகொண்டே கேட்க , முகம்முழுவதும் புன்னைகை பொங்க “ ஆமாடி உனக்கு எப்பிடி தெரிஞ்சது” என்று அவ பக்கத்தில் அமர்ந்து கொண்டே கேட்க அதற்க்கு அவள் “ அதுதான் அவளுக்கு புடிச்ச அயிட்டமாவே செஞ்சு வச்சுருக்கியே அத பாத்துதான்” என பேசிக்கொண்டு இருக்கையிலையே காலிங் பெல் அடிக்க ,

பாக்கியம் கதவை திறந்ததும் ஒரு குட்டி வாண்டு “ பாட்டீ “ என அவர் மேல தாவி குதிக்க, “வாடி என் ராசாத்தி “ என அவளை தூக்க பார்க்க , “அம்மா அவள தொடாதீங்க “என வீட்டின் உள்ளே நூலைந்து கொண்டே ரேவதி சொல்ல , “ என்னாச்சி டீ “என பாக்கியம் கேக்க ,”உங்க பேத்தி குப்பையில போரண்டுட்ட” என தான் மகள் ஸ்ரீ வேதிக்காவை கோவமாக பார்த்த படியே உள்ளே செல்ல ,பாக்கியம் ஸ்ரீயை பார்த்து என்னாச்சு என புருவத்தை உயர்த்தி கேக்க , ஸ்ரீ பாவமாக முகத்தை வைத்து தான் மறைத்து வைத்திருந்த கண்ணாடி குடுவையை காட்ட , பாக்கியம் “ ஸ்ரீ குட்டி என்னடா இது உங்க அம்மாவை பத்தி தெரிஞ்சும் இப்பிடி குப்பக்குள்ள இருந்து எடுப்ப , பாட்டிகிட்ட கேட்டா வாங்கி தந்து இருப்பேன்ல” என ஸ்ரீயை அழைத்து குளிக்க வைத்து கொண்டே கேக்க , “அதுக்குள்ள இருக்க பொம்ம என் ஃப்ரெண்ட் கூடுத பாட்டீ“ ஸ்ரீ பாவமாக சொல்ல , “உங்க அம்மா இனி பத்திரக்காளியா மாறப்போறாடி” என்றவரை பார்த்து “அம்மா பத்திரகாளியா...”என கிலுக்கி சிரித்த ஸ்ரீயை கொஞ்சிக்கொண்டார் பாக்கியம் .

இங்கே சாப்பிட்டுகொண்டு இருந்த லீலாவை பார்த்து ரேவதி “ என்னடி காலேஜ் போகலையா ? என கேட்டுக்கொண்டே அவள் அருகில் உக்கார ,” ம்ம மதியம் போகனும் இன்னைக்கு ஹாஃப் டே டாக்டர் அம்மாக்கு தான் ஹாஸ்பிடல் இல்ல போல காலையிலையே வந்து இருக்க என மேட்டர் ? என பதில் கேள்வி கேக்க,

“ மாமனாருக்கு கல்யாண நாள் வருதுடீ அதுக்கு அழைக்க வந்தேன்...உங்க மாமா தான் ஹாஸ்பிடல முக்கியமான வேல இருக்கு .. நீ மட்டும் போயிட்டுவானு சொன்னாரு “ என லீலாவிடம் சொல்ல , “சரி..சரி உங்க அப்பா உனக்காக வெயிட்டிங் போயி பாரு “ என சாப்பாடை வாயில் வைத்துக்கொண்டே சொல்ல , “ஏன் அவரு உனக்கு அப்பா இல்லையா “ என அவளை முறைத்தபடியே ராஜாவேலுவை பார்க்க போக , “அவர் ஒண்ணும் என்னோட அப்பா இல்ல “ என முணுமுணுத்துக்கொண்டே கைகழுவ சென்றுவிட்டாள் லீலா.


-----------------------------------------------------------------------------

சென்னையில் ஒதுக்குபுறமான பகுதி அமைதியான காடு என்றுகூட சொல்லலாம் , அங்கே பழைய பாழடைந்த ஃபேக்டரியில், “டமால்” என்று ஒரு சத்தம் , அந்த அமைதியை குழைத்தது , அந்த இடமே அதிர்ந்தது .

ஒருவன் பழைய இயந்திரதில் கட்டிபோட்டு வைத்திருக்க , அவன் “சார் ,சார், சார்ர், விட்டுருங்க சார் “ என உயிர் பயத்தில் எதிரில் இருந்தவனை பார்த்து கெஞ்சிகிக்கொண்டிருந்தான்.

அவன் எதிரில் , தோரணையாக கால் மேல் கால் போட்டு உக்கார்ந்ததுபடியே தன் நாடிய தேய்த்து , அவனை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தான் , முகத்தில் ஒரு அலச்சியம் , கண்ணில் ஒரு அழுத்தம் அதை மறைக்க கண்ணாடி ,

அவன் விக்ரம் ஐ‌பி‌எஸ். அழுத்தம் நிறைந்தவன், ஆனால் வெளியே தெரியாது , நினைத்ததை நடத்த எந்த எல்லைக்கும் போவான் , நெடுநெடுவென உயரம் , அவன் தோற்றமே பிறரை அச்சுறுதும் .

கையில் உள்ள துப்பாக்கியால் அவன் தலையை குறிவைக்க , அவன் அளறி” சார் நான் புள்ளக்குட்டிகாரன் சார் “ உடனே தலையில் வைத்த குறி கீழே இறங்கியது “ஐய்யோ, சார் நான் எல்லாத்தையுமே சொல்லிட்டேன் இதுக்கு மேல எனக்கு ஒண்ணும் தெரியாது“ அந்த ஏரியா ரௌடி ரங்கன் கதறினான்.

விக்ரம் ஒன்றும் சொல்லாமல் தன் அருகில் இருக்கும் கணேஷிடம் கண்காட்ட அவன் ஷாக் கொடுக்கும் மெஷீசினை எடுத்துவர அதை பார்த்து அவன் எச்சில் விழுங்கினான் .

ஷாக் வைக்க கணேஷ் அவனின் தலையில் வியரை வைக்க ,”கணேஷ்” என அழைத்த விக்ரம்,”கீழ” என்ற ஒற்றை சொல் போதும் அவன் என்ன சொல்லவருகிறான் என்று புரிய... கணேஷ் ரங்கனின் அன்டர்வெயரில் அந்த வயரை சொருக , ரங்கனுக்கு தான் எதிரில் உள்ள விக்ரமை பார்க்க எமனாகவே காட்ச்சியாளித்தன் .

விக்ரம் ,வாயில் ஸ்டைலாக சீவிங்கமை மென்றக்கொண்டே “என ரங்கா ...புள்ளக்குட்டி இனிவராது சந்தோஷம்தானா” என சோம்பலை முறிதபடி அவனை பார்த்து கண்ணடிதான்.

அவ்வளவுதான், ரங்கனுக்கு பயபந்து தொண்டையில் உருள“சார்ர்...சார்...சார்....விட்டுடிங்க...சார்”என உயிரை கையில் பிடித்துக்கொண்டு அழறினான்.

அவனோ “அது என்கையில இல்லையே ரங்கா “ என்றான் கூலாக, மறுபடியும் கணேஷ்க்கு கண்ணைக்காட்ட

அதற்க்குள் ரங்கன் “நான் சொல்லிடுறேன் சார்” என கத்த , அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே கணேஷிடம் கை காட்ட அவன் அந்த வயரை அவன் கையில் இடம் மாற்றி பட்டனை அழுத்தினான் , “ஆஆஆ...என ரங்கன் உயிர் துடித்து கதறி மயங்கிவிட்டான்...விக்ரம் ,சிரித்து சிரித்து போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருக்க இடையில் கேட்ட ரங்கனின் கதறளை அவன் துளியும் சட்டை செய்யவில்லை....

இப்போது விக்ரம் , தான் இருக்கையை அவனிடம் தள்ளிபோட்டு அமர்ந்து , ரங்கனின் கன்னத்தை லத்தியால் தூக்கி ஆராயிந்து திருப்தியாகமல் ஒரு அறையை விட்டான் , மயக்க நிலையில் இருந்த ரங்கன் கொஞ்சமாக தெளிந்தான்.

விக்ரம் ,கணேஷை பார்க்க , அவன் ரங்கனிடம் அனைத்து வாக்குமுலத்தையும் வாங்கிக்கொண்டான்.

விக்ரம் ,வந்தவேலை முடிந்ததும் இருக்கையைவிட்டு எழுந்தவன் , விசில் அடித்தபடியே வேகமா சென்று ஜீப்பில் ஏறிக்கொண்டு திரும்பி கணேஷை பார்த்து கண்ணாசைக்க ,அவனும் அர்த்தமாக தலையாட்டினான்.

அவன் வண்டி சிறிது தூரம் சென்றிருக்கும் ... அவன் செவியில் , “டமால் “ என்றும் அதை தொடர்ந்து “ஆ ஆஆ ஆஆ “என ரங்கனின் அலறல் சத்தமும் கேட்க, அலச்சியமாக உதட்டை வளைத்து , ஸ்டைலாக கூலார்ஸஐ அணிந்தான் விக்ரம் .
 
Last edited:
அத்தியாயம் 2

குடும்பம் என்னும் கூடு

ராஜவேலுக்கும் பாக்கியத்திக்கும் ரெண்டு மகள்கள், மூத்தவள் ரேவதி , இளையவள் லீலாவதி , இருவருக்கு மூன்று வருடம் தான் வித்தியாசம்.

ரேவதி குழந்தைகள் நல மருத்துவர் ,கணவர் சமர் வேந்தன் மருத்துவம் படித்த ஒரு காவல் அதிகாரி , ஒரே மகள் ஸ்ரீவேதிக்கா , இருவரும் சேர்ந்து மருத்துவமனை நடத்துகிறார்கள் , ஆனால் முழு பொறுப்பும் ரேவதியே , சமர் வேந்தன் காவல் அதிகாரி என்பதால் மருத்துவமனையின் முக்கியமான ஆலோசனையிக்கு மட்டுமே வருவார் .

லீலாவதி தன் பதினாறு வயது வரை , ராஜவேலுவின் தாய் அன்னம்மாவிடம் தன் வளர்ந்தாள்,பின் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் லீலாவை சென்னை அழைத்து வந்தார்கள், "அக்கா டாக்டர் ,அதனால நீயும் டாக்டர்க்கு படி"என ராஜவேலு மெடிக்கலில் சேர்த்து விட்டார்

ஆனால் லீலாவுக்கு அதில் கொஞ்சமும் ஆர்வம் இல்லை அதனால் மண்டையில் படிப்பும் ஏறவில்லை விளைவு, அனைத்து பாடங்களிலும் முட்டை ,லீலாவுக்கு வானவியல் மீது ஆலாதியான ஆர்வம் இருந்தது , இதை ராஜவேலுவிடம் சொல்ல, அவளுக்கு பிடித்த படிப்பு என்பதாலேயே அது அவருக்கு பிடிக்கவில்லை “நீ டாக்டர் தான் ஆகனும் இல்லைனா உயிரியல் அல்லது தாவரவியல டாக்டர் பட்டம் வாங்கு ..அதுக்கு மட்டும் தான் பணம் கொடுக்க முடியும் “ என்று கட்டளையாக சொல்ல , லீலாவும் முரண்டு பிடிக்காமல் சரி சொல்லிவிட்டாள், காரணம் அவளிடம் பணம் இல்லை

ராஜவேலுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம் , அதில் ரேவதி ராசியான பெண் எனவும் லீலாவதி ராசி இல்லாதவள், அவளால் தந்தையின் உயிருக்கு ஆபத்து , மேலும் அவளால் உனக்கு பெயர் கெடும் என்று ஜோசியர் கணித்து கூற , லீலாவை விட்டு விலகினார் , இருப்பினும் லீலா மீது பாசமாகதான் இருந்தார் .

ஆனால் லீலா பிறந்த சில நாட்களிலே தொழிலில் சரிவை சந்தித்தார் ராஜு , ஒரு பெரிய விபத்து ராஜுக்கு நேர , அதிலிருந்து ராஜு தப்பியதே ஏதோ அவன் பண்ண புண்ணியம் என்றானது , அன்றிலிருந்து "தன் உயிரை எடுக்க வந்த எமன்" என லீலாவை ஒதுக்க ஆரம்பித்தார் நாள் ஆக நாள் ஆக அது வெறுப்பாக மாறியது

லீலாவுக்கு சிறுவயதிலிருந்து, தந்தைக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தெரியும் , பாவம் சிறு பெண் தானே ரேவதியை கொஞ்சும் போது எல்லாம் ஏக்கமாக பார்ப்பாள் , பாக்கியம் கணவனிடம் அவரின் தாப்பை எடுத்துக்காட்டி சொல்லியும் , தன்னை மாற்றிகொள்ள முடியாமல் லீலாவை பொள்ளாச்சியில் உள்ள தன் அன்னை வீட்டில் விட்டுவிட்டார்

அடிக்கடி பாக்கியமும் ரேவதியும் லீலாவை பார்த்து செல்வவர் , ரேவதிக்கும் லீலாவுக்கும் நல்ல பாசப்பிணைப்பு உண்டானது.

தந்தை பாசம் என்பது லீலாவுக்கு சிறுவயதிலிருந்து எட்டதாகனி தான் , அவரை பார்க்கும் பொது எல்லாம் ஏக்கமாக இருக்கும் நெருங்க நினைப்பாள் ஆனால் முடியாது ,வளர வளர அவரின் அதீத வெறுப்புக்கு காரணம் தெரியாமல் குழம்பினாள், காரணம் தெரிந்த பின் , உங்க பாசமே எனக்கு தேவையில்லை என்று அவளே ஒதுங்கிக்கொண்டாள்

பாட்டியின் வார்த்தைக்காக மட்டுமே சென்னை வந்து தங்கிக்கொண்டாள் .

மதியம் தன் அறையில் காலேஜுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தாள் லீலா அப்போது அறை வாசலில் நின்ற ஸ்ரீ “ ஒய் சித்தி ‘ என அழைத்து கதவின் பின்னால் ஒளிந்துகொள்ள , “அட யாரு அது “ என லீலாவும் அவள் வந்தது தெரிந்தும் விளையாட்டு காட்ட , “ நான் வந்துட்டேன் “என அழகாக கதவிபின்னிலிருந்து இரட்டை குடுமியோடு ஸ்ரீ எட்டி பாக்க ,

லீலாவுக்கு அவளை அள்ளி கொஞ்ச கைகள் பரபரத்தது ,அதை அடக்கிகிக்கொண்டு ”ஸ்ரீ குட்டி க்கு இப்போ தான் சித்தி கண்ணுக்கு தெரிஞ்சனா “ வாய சுருக்கி அவளிடம் கோவிப்பது போல நடித்தாள்.

ஸ்ரீகுட்டி அறை உள்ளே வந்து லீலாவின் டாபை பிடித்து இலுத்து , “என் செல்ல சித்திக்கு கோவமா , தாத்தா தான் என்ன விடல ” அவள் பாவமாக சொல்ல , லீலா மறுபக்கம் திரும்பி “ என் கிட்ட பேசாதடீ , உனக்கு உன்னோட தாத்தா தான புடிக்கும் போ..போ...” என விளையாட்டாக சினுங்கினாள்

அவள் பக்கம் வந்த ஸ்ரீ, லீலாவை பார்த்து கண்களை சிமிட்டி , “ எனக்கு எப்போமே நீ தான ஸ்பெஷல் “ என லீலாவின் இடுப்பை கட்டிக்கொண்டுஅணைத்து அண்ணார்த்து பார்க்க , சட்டென குனிந்து அவளை தூக்கி கொண்ட லீலா , ஸ்ரீயின் முகமெங்கும் முத்தமிட்டு , மூக்கை பிடித்து ஆட்டி “ நல்லா மயக்க கத்துகிட்ட டீ” என கொஞ்சிய லீலா , ஸ்ரீயிடம் “ஏன்டி உங்க அப்பா வரல ? டாக்டர் அம்மா வேற கோவமா இருக்கா...என விஷயம் “ என ரகசியமாக கேட்க

ஸ்ரீ யாரும் வராங்கலா என பார்த்து விட்டு பின் ரகசிய குரலில் “ அதுவா ..காலையிலையே அப்பாக்கும் அம்மாக்கும் சண்ட” என்க, லீலா “ ஓ அது தான் உங்க அம்மா வந்ததிலிருந்து சூடா இருக்களா ?” என நெற்றியை சுருக்க , ஆம் என்பது போல ஸ்ரீயும் தலையாட்டினாள்.

பின் லீலாவின் தோலை சுரண்டி கையில் வைத்திருந்த குட்டி கண்ணாடி குடுவையை காட்டி” இது என்னோட ஃப்ரெண்ட் கொடுத கிஃப்ட் இத அம்மா துக்கி போட்டுடாங்க தெரியுமா “ என பாவம் போல சொல்ல

அதற்க்கு லீலா “ அவ சொன்னத நானும் கேட்டேன் குப்பையில போட்டத எடுதா உன்னை கொஞ்சுவங்களா ? புருஞ்சுக்கோடா அதுல நிறைய கிருமி இருக்கும் , அம்மா சொல்லுறது நாம நல்லதுக்கு தானா “ என சொல்லவும் ஸ்ரீயின் முகம் வாடியது , லீலா தலை சாய்த்து பார்த்து “உனக்கு இப்போ என்னடி பண்ணனும்” லீலாவின் கன்னத்தை பிடித்து ஸ்ரீ “சித்தி நீ சமத்துதனா , அதனால இந்த கிஃப்ட் கொஞ்ச நாள் நீ பத்திரமா வச்சு இரு , இல்லனா அம்மா தூக்கி போட்டுருவா“ கொஞ்சுவது போல கேட்டாள்

“சரி கொடு “ அதை வாங்கி ஒரு டேபிள் மீது வைத்து விட்டு ...இருவரும் கீழே சென்றுவிட்டார்கள்

யாரும் இல்லாத அவள் அறையில் , லீலா வைத்து விட்டு போன குடுவை மட்டும் அந்த டேபிள் மீது இருக்க ,சன்னல் வழியே வந்த சூரிய கதிர்கள் குடுவைமேலே பட , பக்கத்தில் இருந்த சிறு துணியால் அது தன்னை தானே சுற்றி வெயில்படாதவறு மூடிக்கொண்டது ….

ஒரு வேல அது உயிருள்ள குடுவையோ ? பார்ப்போம்!!

கீழே வந்த லீலா பாக்கியவிடம் “ம்மா..மாலு வந்துட்டாளா , அவ தான் என்ன பிக் அப் பண்ணறதா சொன்ன “ என தான் புத்தக பையை எடுத்துக்கொண்டே கேட்க , பாக்கியம் கையை பிசைந்துகொண்டே அருகே இருக்கையில் அமர்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டு இருந்த ராஜவேலுவை பார்க்க , அவர் தொண்டைய சரி செய்து கொண்டே மீண்டும் பேப்பர் படித்தார் , அதை பார்த்த லீலா ,சந்தேகமாக பாக்கியவை பார்த்து “ உன் புருஷனை ஏன் பாக்கற ...அவ வந்தளா? இல்லையா ? என்று கேட்டாள் , பாக்கியம் தயக்கதோடு “ வந்தாடி ஆனா ...” என பாக்கியம் இழுத்தார்

ராஜவேலு “ எதுக்குடி இழுக்கற ..கண்ட கண்ட அநாதை எல்லாம் உள்ள விட இது ஒண்ணும் சத்திரம் இல்லனு சொல்லு அவ கிட்ட “ என லீலாவை பார்த்து திமிராக சொல்ல , லீலாவுக்கு சுள் என வந்து “ச்சீ...மனித்தவிமானமே இல்லாத குடும்பத்தில மாட்டிகிட்டேன் “என ராஜு காதில் விழுவது போல பாக்கியத்திடம் சொல்லியவள் யாரையும் பார்க்காமல் வேகமாக வீடு வாசலுக்கு வார அங்கே , வீட்டின் காம்பவுண்டுக்கு வெளியே , தான் ஸ்‌கூட்டியில் காத்திருந்தாள் ஒருத்தி .

அவள் மாலதி லீலாவின் உயிர் தோழி அவளுக்கு யாரும் இல்லை ஒரு ஆசாரமத்தில் தான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ..கல்லூரியின் முதல் நாளே இருவருக்கும் நட்பு மலர்ந்து விட்டது ...லீலா வீட்டில் யாரும் மாலதியின் மனதை புண்படும்படி பேசமாட்டார்கள் ராஜூவை தவிர ,எனவே மாலதி எப்போதும் ராஜு இல்லாத நேரத்தில தான் வீட்டுக்கு வருவாள்.

லீலாவினால் மலாதியை பார்க்கவே முடியவில்லை, ரோடைப்பார்த்துக்கொண்டு இருந்த மலாதி , லீலா வந்ததை பார்த்து புன்னகைத்துக்கொண்டே “ஹேய் லீ கிளம்பலாமா “ என கேட்டதும் லீலா சங்கடத்துடன் “சாரி டி !,அந்த ஆளு பேசுனதுக்கு” என சொல்லவும் , அவளை முறைத்த மாலதி “ பெரியாவுங்க லீ ..மரியாதை இல்லாம பேசாத , எனக்கு இந்த மாதிரி வார்த்தை எல்லாம் பழகுனது தான் “ என கண்டிக்கவும் , “மாலு உன்னால மட்டும் எப்பிடி தான் அல் டைம் அன்னை தெரசா மூட்லே இருக்க முடியுதோ , நான் அப்பிடி இல்ல பா” என பெரும் மூச்சு விட்டு “அந்த ஆளு ..”என லீலா சொல்ல வர , மாலதி “ மூடு “ என்பது போல சைகையி செய்து “வாடி டைம் ஆச்சு “ என அவளை வண்டியில் ஏற்றிகிக்கொண்டு , இருவரும் கல்லூரிக்கு கிளம்பினார்கள் .

போகும் இருவரையும் புன்னகையுடன் பார்த்தாள் ரேவதி.
 
Last edited:
அத்தியாயம் 3

எரிமலையும் சிறு பனித்துளியும் சந்தித்தால் !

லீலாவதியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தாவரவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள் , வெகுளி , மனதில் பட்டத்தை பேசிவிடுபவாள் , பேசியது தப்பு என்றால் சிறிதும் யோசிக்காமல் மன்னிப்பும் கேட்டுவிடுவாள் , குழந்தை மனம் ஆனால் இது எல்லாம் அவளிடம் பாசமா இருப்பவகளிடம் மட்டுமே , மற்றவகளிடம் அடாவடி சண்டிராணி தான், கிராமத்தில் வளர்ந்ததால் இந்த சிட்டி வாழ்க்கை முறை அவளுக்கு பிடிக்கவில்லை பிடிப்படவுமில்லை, உதனார்த்துக்கு , அவளுக்கு வண்டி ஓட்ட தெரியும் ஆனால் இந்த மாநகர கூட்டநெறிச்சலில் வண்டி ஓட்ட தடுமாறி பலதடவை சேதாரமானது எனவோ மாலதி தான் ஆகவே “நீ வண்டி ஓட்டவே வேண்டாம் தாயே “ உன்ன நான் பாத்துக்கறேன் “ என மாலதி அந்த பொறுப்பை வாங்கி தன்னை காத்துக்கொண்டாள் என்பது வேறு கதை . அதே போல் கல்லூரிக்கு வந்த புதியதில் லீலா வெகுளியாக அனைவரிடமும் பேச , சிலர் அவளை கேலி செய்தனர், சிலர் அவளை தப்பாக வழி நடத்த முயல மாலதி இடையில் வந்து அவளை காத்துக்கொண்டாள்.

மாலதி சிறுவயது முதலே ஆசரமத்தில் தனியாக வாழ்ந்தவள் அதனாலயே அவளுக்கு இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் , யாரை நம்பனும் யாரை நம்பக்கூடாது என அனைத்தும் இந்த சிறு வயதிலேயே அவளுக்கு கற்றுக்கொடுத்துவிட்டது , நாம் சமூகம் .

மனதளவில் லீலாவைவிட மாலதி முதிர்ச்சிச்சியானவள் , சொல்ல போனால் இருவரின் வாழ்க்கையுமே ஒண்ணு தான் , மலாதிக்கு யாரும் இல்லை , லீலாவுக்கு இருந்தும் அவளே தன்னை தனிமை படுத்திக்கொண்டாள் , அவ்வளவு தான் வித்தியாசம்.

மாலதி எப்போதுமே லீலாவுக்கு உறுதுணையாக இருப்பாள் லீலாவும் அப்படியே...

என்னதான் முதிர்ச்சியான பெண்கள் என்றாலும் ..காலேஜ் கட் அடிப்பது , வம்பு, கலாட்டா என அந்த வயதுற்க்கேத்த விளையாட்டுதனமும் துடுக்குதனமும் இருக்கதான் செய்தது...

கேட்டால் இது வாலிபவயது என்பார்கள் !!!!

இந்த வானர கூட்டத்தில் இன்னும் ஒருவனும் அடக்கம்... அவன் யார் என்றால்....

“அந்த பன்னாட ஸண்டி (sandy) எங்க போயி தொலைஞ்சானே தெரியலடி போனுல ரிங்கு போகுது ஆனா எடுக்கமாட்டிங்கறான்” என ஸ்கூட்டியின் பின்சிட்டில் உக்கார்ந்து மாலதியின் காதில் கத்திக்கொண்டே வந்தாள் லீலா, “அடியேய்!! இப்படியே கொஞ்ச நேரம் நீ என் காதுல கத்துனா நான் செவிடு ஆயிடுவேன்டி , அந்த நாயி எங்க பொருக்க போச்சோ விடு காலேஜ் வருவான்ல பாத்துக்கலாம் “ என சொல்லிவிட்டு மாலதி வண்டி ஓட்டுவதில் கவனமானாள்.

சாலையில் ரெட் சிக்னல விழ வண்டிய நிறுந்தி, கிரீன் சிக்னலுக்கு காத்திருந்த சமையம் லீலா போன் அலறியது , எடுத்து ஸ்பீக்கரில் போட்டு பேசினாள் “டேய்...” என இவள் ஆரம்பிப்பதற்குள்

மறுமுனையில் ஸண்டி தான் பேசினான் “ வணக்கம்டா மாப்பிள , இளநீர் கடையில் இருந்து... உங்க சந்தோஷ் , இன்னைக்கு நான் காலேஜ் வரல , அதனால் எனக்கும் சேர்த்து அட்டெண்டன்ஸ் போடுங்க “ என கட்டளையாக சொல்ல ,

லீலாவும் மாலதியும் ஒருவரை ஒருவர் பார்த்து ‘இது சரியில்லையே ‘என்பது போல நினைக்க , லீலாவோ “டேய் எங்க இருக்க நீ “ என கேட்க , மறுமுலையில் இருந்த ஸண்டியோ “ஒரு பர்சனல் வேலைய வந்து இருக்கேன் லீ டோன்ட் டிஸ்டப் மீ “என காலை கட் பண்ணிவிட்டான் , மாலதி “ என்ன திமிரு இருந்தா பேசும்போது கட் பண்ணுவான்? நீ மறுபடியும் கால் பண்ணு லீ “ என லீலாவிடம் சொல்ல அவளும் ஸண்டிக்குகால் பண்ண அது பிஸி என கூவியது , “அடிங்கு “ என இருவரும் ஒரே நேரத்தில் வண்டியவிட்டு இறங்கிக்கொண்டார்கள்.

அதே சமையம் கிரீன் சிக்னல் விழுவதை பாத்துவிட்டு வண்டியை சாலையின் ஓரத்தில் கஷ்டப்பட்டு பார்க் செய்துவிட்டு ஸண்டிக்கு மறுபடியும் போன் அடிக்க... ஸண்டி போனை எடுக்க , அவனை முந்திக்கொண்டு “டேய் நாயே எங்கள விட்டு அப்பிடி என்ன பர்சனல் வேலை உனக்கு.. அதுவும் எங்களுக்கு தெரியாம..” என லீலா கேட்க, பேச்சின் இடையே மாலதி “டேய் பிராடு சொல்லுடா “ என இருவரும் போனில் மிரட்ட...

அதற்க்கு ஸண்டி “ இன்னைக்கு என்ன நாள் தெரியுமா “ என புதிர் போட , லீலாவும் மாலதியும் ஒருவர் ஒருவரை பார்த்துக்கொண்டு ‘உனக்கு தெரியுமா‘ என்பது போல பார்க்க , பின்பு தெரியாது என்பது போல தோளை குலுகிக்கொண்டு “ தெரியல முண்டம் நீயே சொல்லு “ என இருவரும் கடுப்பாக சொல்ல ,

ஸண்டியோ “ இன்னைக்கு காதலர்கள் தினம்டி பிசாசுங்களா...ப்ச் மறந்துட்டேன் பாருங்க.. நீங்க தான் முரட்டு சிங்கிள் ஆச்சே “ என சொல்லிவிட்டு சத்தம் போட்டு சிரிக்க , இங்கு லீலா போனை முறைத்தபடி “ இவனை கொன்னுடலாமா “என விவேக்கை போல மாலதியிடம் கேட்க , “பொறு டீ ஆடு ..தன்னால தலைய கொடுக்குது என்னனு கேட்கலாம் “ மாலதி கையை முறுக்கிக்கொண்டு , போனில் “ ஆமா ஸண்டி, இப்போ யாருக்கூட இருக்க “ என அவனிடம் பல்லைக்கடித்தபடி கேட்க , அதற்க்கு அவன் “ அதுவா...அதுவா.. “என இழுத்துக்கொண்டே “என ஆளுக்கூட” வெக்கத்தோடு சொல்ல , லீலாவோ “கேக்கரவன் கேனையனா இருந்தா வாரணம் ஆயிரம் படத்துல சூரியாக்கு ஜோடி முனியம்மானு சொல்லுவானாம்... காதுல பூசுத்தாதடா “என வறுஞ்சுகட்டிக்கிட்டு பேச , ஸண்டி ,”போடி.. நான் கமிட் ஆயிட்டேன்னு உனக்கு பொறாம... நானும் என் டார்லிங்கும் இருக்க போட்டோ அனுப்பறேன் பொறாமையில பொசுங்குங்க “ என கெத்தாக பேசிவிட

அவன் அனுப்பிய ‘அந்த போட்டோவை‘ லீலாவும் மாலதியும் திறந்து பார்த்தால்... அதில் ‘ஒரு இளநீரில் இரு ஸ்ட்ரா ,ஒன்றில் அவன் , மற்றோன்றில் கீரை விற்க்கும் பாட்டி!!

இதை பார்த்து மிககேவலமாக லீலாவும் மாலதியும் லூக்கு விட்ட

லைனில் இருந்த ,ஸண்டி “ எப்பூடி” என பெருமையாக சிரிக்க , லீலாவும் மாலதியும் ஒன்றாக பார்த்து ரெடியா என்பது போல சைகை செய்து , “தூஉ....” என இருவரும் சேர்ந்து அவனை காரிதூப்பினார்கள்.

“துப்புனா துடைச்சுக்குவேன் “ என்று போனை வைத்துவிட்டான் ஸண்டி.

பின் சிரிப்பை அடக்க முடியாமல் இருவரும் கை அடித்துக்கொண்டு வயிறு வலிக்க சிரித்த பிறகு , லீலா “இவனால எக்ஸாம்க்கு லேட் இனி போனாலும் அந்த ராட்சசி விடமாட்ட என்னாடி பண்ணலாம் “என மாலதியிடம் கேட்க “விடுடி மொக் எக்ஸாம் தான பாத்துக்கலாம்.. செம்ம வெயிலுல” என நெற்றி வேர்வையை துடைத்தபடி சொன்னாள்.

லீலா “சரி வா இளநீர் குடிக்கலாம் “என மாலதியுடன் சாலையின் ஓரத்தில் மரநிழலில் இருக்கும் இளநீர் கடைக்கு சென்று “அண்ணா ரெண்டு இளநீர் வழுக்கையா” என கடைக்காரிடம் கேட்க, “சரி பாப்பா “ என அவரும் இளநீரை சீவ ஆரம்பித்தார் , திடீரென லீலா மாலதியின் தோளை சுரண்ட “என்னாடி “ மாலதி கேட்க ,

முன்னால இருந்த காரை கைகாட்டிய லீலா “அங்க ஒருத்தன் என்னைவே ரொம்ப நேரமா பாக்கறான்டீ...ஒருவேல எனக்கு ப்ரபோஸ் பண்ண வந்துருப்பனோ ..இன்னைக்கு தான் காதலர் தினம் ல“ என கண்களை விரித்து ஆர்வமாக சந்தேகம் கேட்க , அவளை ஒரு மாதிரியாக பார்த்த மாலதி பின் , லீலா காட்டிய திசையில் கூர்ந்து பார்த்தாள்.

அங்கே , ஒயிட் ஷர்ட் , பிளாக் பேன்ட் அணிந்து , சட்டையின் நடுவே கூலாரை மாட்டி , வாயில் சுவிங்கமை மென்றபடி , தன் காரில் ஸ்டைலாக சாயிந்து , லீலாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்ட இருந்தான் இல்லை...இல்லை முறைத்துக்கொண்டு இருந்தான்...விக்ரம் !

விக்ரம் , பக்கத்தில் இருந்த கணேஷிடம் லீலாவை கைகாட்டி ஏதோ கோவமாக பேச , அவனும் லீலாவையும் மலாதியையும் பார்த்து தலையை சொறிந்துக்கொண்டே ஏதோ சமாளிப்பது அவர்களுக்கு தெரிய , பின் விக்ரம் இவர்கள் நோக்க,

மாலதி , லீலாவிடம் “நல்லா கண்ணாடிய துடைச்சுட்டு பாருடி , அவன் பாக்கல முறைக்கறான் “ என சொல்ல ,

“ என்னது ! நம்மால முறைக்கறானா “ என லீலா சிறிது டென்ஷனாக கேட்க ,

அதற்க்கு மாலதி “ நம்மால இல்லாடீ உன்ன “ என லீலாவை விட்டு ரெண்டு அடி பின்னே செல்ல ,

லீலா “ என்ன நடந்தாலும் ஓடப்படாது பங்கு , “ என சொல்லிக்கொண்டே மலாதியின் கையை பிடித்துகொள்ள ,

“யு கோ மேன் வொய் மீ” என பாவம் போல மாலதி கேட்க , அவளின் தாடையை தன்பக்கம் திருப்பிய லீலா “ ஏனா நீ என் தேவா ..நான் உன்னோட சூர்யா “ , கையை மார்பில் தட்டி சொன்னாள்.

“அடியேய் ..அப்போ என்ன காவு குடுக்க போறது உறுதி அப்பிடிதனா.. “ என மாலதி புலம்பிக்கொண்டு இருக்க ,

அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான் விக்ரம் , அவன் தோற்றமே சொல்லியது , அவன் போலீஸ் என்று, இருவருக்குமே ஒருவித பயம் ஒட்டிக்கொண்டது.

விக்ரம் வந்துகொண்டு இருந்தான் ... வரான் ..வரான் ..இதோ லீலாவிடம் நெருங்விட்டான்.. பயத்தில் லீலா கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள் ...விக்ரம் லீலாவை தாண்டி சென்று இளநீர் கடையில் “ஒரு இளநீர் “என்க அப்போது தான் லீலா கண்திறந்தாள், திரும்பி விக்ரமை பார்க்க , அவன் கூலாக இளநீர் குடித்துக்கொண்டு இருந்தான் , “ச்ச..அசிங்கமா போச்சே “ என திரும்பி மலாதியை பார்க்க , அவன் “ தூஉ..’ என காரிதுப்ப, துப்புனா தொடைச்சுப்பேன் என்ற ராஞ்சில் செய்கை செய்து, பின்

“ மாலு நாம் அசிங்கபட்டத அந்த தடியன்கிட்ட மட்டும் சொல்லாதடீ”

“ நாம் இல்லாடீ நீ” என மாலதி திருத்தினாள், லீலாவோ ஒரு கும்புடு போட்டு “ சரிமா தாயே நான் தான் அசிங்கபட்டேன் போதுமா ?” என்க போதும் என்பது போல சிரிப்பை தலையாட்டினாள் மாலு.

“ஹாஹாஹா...”என ஒரு கேவலமான சிரிப்பு சத்தம் கேட்க , இருவரும் ஒன்றாக திரும்பி பார்க்க , அங்கே வயிற்றை பிடித்துக்கொண்டு “தொப்பி...தொப்பி...”என சிரித்துக்கொண்டு இருந்தான் சந்தோஷ். பொசு பொசுவேன லீலாவுக்கு கோவம் வந்து அவனை அடிக்க ஆரம்பிக்க ஸண்டியோ “என சோடபூட்டி பல்பு வாங்குனியா ? அவள் அடிகளிருந்து தப்பிதுக்கொண்டே நக்கல் பண்ணினான் , மாலதி தான் இருவரையும் தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றாள்...

அதுவரை அவர்களின் செயல்களை அவதனித்துக்கொண்டு இருந்த விக்ரம் , லீலாவின் சிரிப்பை பார்த்து ‘இனி இவ சிரிக்கவே கூடாது ‘ என வன்மம் கொண்டான் , கணேஷ் “ என்ன சொன்னிங்க சார்” , விக்ரம் “ நாத்திங்க் “ என வண்டியை நோக்கி சென்று விட்டான.
 
Last edited:
அத்தியாயம் 4

சமர் வேந்தன்

மாலையில் மலாதியுடன் வீடு வந்து சேர்ந்தாள் லீலா , “ வாடி உள்ள வந்து டீ குடிச்சுட்டு போ” என கட்டளையாக சொல்ல , அதை மறுத்த மாலதி “டைம் ஆச்சுடீ , நான் கிளம்பறேன் “, என்றவள், லீலா எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் மாலதி கிளம்பிவிட்டாள் , போகும் அவளை பெரும் மூச்சி விட்டு பார்த்தவள் , வீட்டிற்க்குள் சென்று விட்டாள்.

தன் பையை ஆடிக்கொண்டே வந்தவள் அதை ஒரு பக்காக சோபாவில் வீசிவிட்டு “ அப்பாடா” என அமர்ந்த லீலாவின் காதை பிடித்து திருக்கிய பாக்கியம்,“ எரும போயி ஒழுங்கா பையா எடுத்து ரூமல வைச்சிட்டு கைகால் அலம்பிட்டு வா” என கண்டித்தார்.

எதிர் சோபாவில் அமர்ந்து ஸ்ரீக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ரேவதி லீலாவை பார்த்து, “சரியான அழுக்கு மூட்ட டீ நீ “என அவளும் தன் பங்குக்கு திட்ட , ஸ்ரீ குட்டியும் வாய் பொத்திக்கொண்டு சிரித்து லீலாவை பார்த்து பலிப்பு காட்டினாள் .

லீலா முகத்தை திருப்பிக் கொண்டாள் .

யாரோ வரும் சந்தம் கேட்க , திரும்பி பார்த்தாள் .

கை நிறைய ஸ்நாக்ஸ் வாங்கிக்கொண்டு ஆறடி உயரத்தில் ஒருவன் வந்தான்.

அவன் சமர் வேந்தன் . ரேவதியின் காதல் கணவன் , அவனை பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்துவிடும் மாயக்கண்ணன் அவன் ,தந்தைக்காக மருத்துவம் படித்தான் , தனக்காக காவலனான் , நீதி நியாயத்திற்க்கு கட்டுபட்டவன் , அனைவரும் சமம் என்ற கொள்கை கொண்டவன், பகைவருக்கு புலி, அந்த புலியை அன்பால் மட்டுமே வெல்ல முடியும், அவன் அடங்குவது ரேவதியிடம் மட்டுமே.

துரு துரு என்றிருக்கும் லீலாவை அவனுக்கு மிகவும் புடிக்கும், கிட்டதட்ட ஸ்ரீயும் லீலாவும் ஒன்று தன் அவனுக்கு.

லீலாவுக்கும் சமரை புடிக்கும் அது சமருக்கும் தெரியும் இருந்து வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள்.

அவள் அன்பு எப்போதுமே சண்டையினுடே வெளிப்படும்.அதை அறிந்தவன் சமர் ஒருவனே.

“யாரு என் மச்சினிச்சிய திட்றது “என கேட்டுக்கொண்டு உள்ளே வர இப்பொழுது ரேவதி முகத்தை சுருக்கிக்கொண்டாள்.

சமர் வேந்தனை பார்த்த லீலா உள்ளே போக எழுந்தாள் ,”மேடம் எங்க போறீங்க உங்க கிட்ட நிறைய பேச வேண்டியது இருக்கு உட்காரு” என லீலாவை பார்த்து சமர் சொல்ல , லீலா முறைத்து விட்டு அடுத்த இருக்கையில் அமர்ந்துகொள்ளடாள்.

சமரோ மனசுக்குள் ‘அக்காளும் தங்கச்சுயும் இதுல மட்டும் கரெக்டா இருப்பாளுங்க ’என்று நினைத்துக் கொண்டான்.

சமரை பார்த்த ஸ்ரீ தாவி வந்து” அப்பா” என அனைத்துக் கொண்டாள். அவனும் ஸ்ரீயை அனைத்து முத்தமிட்டு விளையாண்டுக்கொண்டே “ஆமா இப்ப எதுக்கு நீ லீலாவ திட்டிகிட்டு இருந்த “என சமர் ரேவதியிடம் கேட்க,

“ஆமா ஒரு அழுக்கு மூட்டைய திட்டுன இன்னொரு அலுக்குமூட்டைக்கு கோவம் வந்துருமே“ என ஜாடையாக ,இருவரையும் சேர்த்து டேமேஜ் செய்தாள் ரேவதி.

“அடடே !மாப்பிள ...எப்போ வந்திங்க என்னங்கடி சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க வந்த மாப்பிள்ளைக்கு சாப்பிட கொடுக்கமா என அரட்டை “ என பாக்கியம் இருவரிடமும் வேலை ஏவ,

சமரோ “ எனக்கு எதுவும் வேண்டாம் அத்தை பரவாயில்ல “

“அதெல்லாம் சொல்லாதீங்க மாப்பிள்ள சாப்பிடணும் , இருங்க வந்துடறேன் என ஸ்ரீ குட்டி அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.

அடுத்த திட்டு விழுவதற்க்குள் லீலாவும் ரூமுக்குள் ஓடிவிட்டாள்.

சமர் “அம்மு...” என ஆரம்பிக்க , ரேவதி சமரை முறைத்துவிட்டு கிச்சனுக்குள் போயிவிட்டாள்.

‘டேய் சமர் இன்னைக்கு நீ செத்தடா ..செம்ம கோவதுல இருக்க போல ‘ என தனக்கு தானே புலம்பிக்கொண்டான் .

சிறிது நேரம் கழித்து,

லீலா கை கால்களை அலம்பி விட்டு வரவும் ரேவதி அனைவருக்கும் காபி போட்டு வரவும் சரியாக இருந்தது. லீலாவுக்கு காபி கப்பை தந்தவள் , சமரிடம் கப்பை தராமல் டேபிள் மீது வைத்து விட்டு, அவன் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

சமரோ நீட்டிய கையை மடக்கிக்கொள்ள , அருகில் இருந்த லீலா சமர் காதில் “ அசிங்கபட்டான் போலீஸ்காரன்..ஹா..ஹா..ஹா “என காலைவாரிவிட , பாவமாக சமர் பார்த்தான் ,பாவம் போல இருக்கவும் லீலா கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் மோடுக்கு வந்தவள், “என்னாச்சு மாம்ஸ் ” என வினாவ, சமரோ குழந்தை போல உதட்டை பிதுக்க, அவன் மூஞ்சீமேலே பொம்மை வந்து விழுந்தது, ரேவதி தன் அடித்தாள்.

அடுத்த நிமிடம்,லீலா கண்ணும் கருத்துமாக காப்பிக்குடித்தாள்,

ரேவதி சமரை முறைத்தாள்,

சமர் பம்மிக்கொண்டே காப்பி குடித்தான் . லீலா சமர் காதில் “நீயெல்லாம் பெரிய போலீஸ்னு வெளிய சொல்லாத சிரிப்பாங்க.. அவளுக்கு போயி பயப்படற எனக,

சமர் “இது பயம் இல்ல மரியாத “ என வழிய ,லீலா “ம்கும்...சொல்லிக்கிட்டாங்க”என அவனை மீண்டும் வாரிவிட , கடுப்பான சமர் “அவ்வளோ பெரிய தைரிய தக்காளியா இருந்தா நீயே கேளு தாயே “ என சொல்ல, லீலாவோ “ அப்போ உங்களுக்கு அவ கோவம் எதுக்குனு தெரியாதா?”என வினவ , சமரோ “ அது தெரிஞ்சா நான் ஏன் தாயே.. இப்படி முழிக்க போறேன் “ என்றதும் , லீலா சமரிடம் ஏதோ கேவலமாக சொல்லவற , சமர் உடனே “நோ...நோ...பேட் வோர்ட்ஸ்” என தன் மரியாதையை காத்துக்கொண்டான் .

இப்பிடி குசுகுசுவென தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், ரேவதி தொண்டையை சரி செய்யவும் நிமிர்ந்து பார்க்க , ரேவதி முறைத்துக்கொண்டு இருந்தாள்.

லீலா இப்பொழுது சத்தமாக “அப்பிடி என்ன தன் பிரச்சனை சொல்லி தொலைங்க “ எனவும் , சரியாக அந்த நேரத்தில் பாக்கியம் “மாப்பிளா இந்தாங்க தோசை ...எப்பிடி சரியா கொண்டு வந்தேன் பாத்தீங்களா “என்றதும் லீலாவுக்கு ஐயோ என்று இருந்தது. சமர் “ தாங்க்ஸ் அத்த” என சிரித்தபடி தட்டை வாங்கவும் , ரேவதிக்கு சுறு சுறுவென கோவம் வந்து “ஆமாடா இப்போ தோசை தான் ரொம்ப முக்கியம்...நல்லா கொட்டிக்கோ” என்றுவிட்டு வேகமா அறைக்குள் சென்றுவிட்டாள்.

சமரோ தட்டை வைத்து வேகமாக எழுந்து “ அம்முமா...அம்மு...டேய்...”என கெஞ்சிக்கொண்டே அவனும் அவளை தொடர்ந்து அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டான்.

அனைத்தையும் பார்த்த பாக்கியமோ அதிர்ச்சியாக “ஏன்டீ இப்போ இங்க என்ன நடந்தது “ என வாயில் கைவைத்து கேட்டார்.

லீலாவிடம் இருந்து பதில் இல்ல, திரும்பி பார்த்தால் , சமர் வைத்த தோசையை பியித்து வாயில் போட்டு கொண்டே பாக்கியத்தை பார்த்தவள் “ஹி..ஹி..”என இழித்து வைத்தாள்.

பின் “ பாவம் அவுங்க குடும்பத்துல ஏதோ பிரச்சனா போல ...அடுத்த வீட்டு பிரச்சனை எல்லாம் உனக்கு எதுக்கும்மா ...நீ போயி முறுவள ஒரு நெய் தோசை சுட்டுவா “ என ஆர்வமாக அவர்கள் அறையை பார்த்துக்கொண்டே சொல்ல,

பாக்கியமோ “ எனவோபோ இந்த காலத்து புள்ளைங்கள புரிஞ்சுக்கவே முடியல “ என புலம்பிக்கொண்டே சென்று விட்டார்.

சாப்பிட்டு முடித்தவள் ஸ்ரீயை அழைத்துக்கொண்டு தூங்க சென்று விட்டாள்.

இங்கு அறையில் , சமர் “ அம்மு என்னமா நான் தப்பு பண்ணென் சொல்லுடா..சொன்னதான சரி பண்ண முடியும்”,என கட்டிலில் குப்புற படுத்து அழுகும் ரேவதியை சமர் சமாதானம் செய்ய முயற்ச்சித்துக்கொண்டு இருந்தான்.

இவ்வாறு சமர் சொன்னதும் சட்டென எழுந்து உக்கார்ந்தவள் அவனை ஏறிட்டுப்பார்க்க, சமரோ குனிந்து “பாரு என் தங்கம்மாவுக்கு அழுது அழுது கண்ணு எல்லாம் சிவந்து போச்சு பாரு” என அவள் கண்களை தொடைத்தபடி கூற , சமரின் கையை தட்டி விட்ட ரேவதி “சோனா விஷியத்த ஏன் சொல்லல”என வினவவும் தான் சமர்க்கு பிரச்சனையின் வேறே புரிந்தது .

கண்களை சுருக்கி அவளை பார்த்தவனின் கண்களில் முன்பு இருந்த கனிவு இல்லை மாறாக , கடுமை இருந்தது , அவளை ஒட்டி இருந்தவன் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தான் .

“சோ, என்ன நீ சந்தேகபடுற ரைட் “ என அவளை பார்த்து கேட்க , அவன் விலகளில் சிறிது தடுமாறியவள் “இல்ல “ என்றதும் “அப்போ நீ பன்னறதுக்கு பேரு என்ன ?” சமர் கேட்கவும் “கோவம் “ என்றாள் .அவன் புரியாமல் “எதுக்கு கோவம் “ ரேவதி தன் மொபிளில் இருந்த செய்தியை காட்டினாள்.

அதில் “ அடிக்கடி ரகசியமாக சந்திக்கும் சினிமா நடிகை சோனா மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி சமர் வேந்தன் , இருவர்க்குள்ளும் காதல் மலர்ந்தது எப்பிடி “ என ஒரு பெரிய காணொளி இருபது நிமிரங்களுக்கு மேல் இருந்தது .

அதை பார்த்ததும் அவளை முறைத சம்ர “ஏன்டீ இது ஒரு காரணம்னு சண்ட போடுவியா “ என சலிப்பாக கேட்க, ரேவதி கோவமாக “உங்களுக்கு எல்லாமே சாதாரணம் விஷியாம் தன்ல, ஆனா எனக்கு அப்பிடி இல்ல , நீங்க கல்யாணம் ஆனவருனு தெரிஞ்சு எப்பிடி இது போல எழுதலாம் , எல்லாம் நீங்க தர இடம் தான் , அவளோட கேஸ்ஐ ஆஃபிஸ்ல வச்சு சொல்ல முடியாதா.. அப்பிடி என்ன அவ ஸ்பெஷல் “ என ரேவதி பட படவென கேட்டுவிட்டுப் பலமாக மூச்சுவாங்க , சமர் “ ஏய் , எதுக்கு இப்பிடி டென்ஷன் ஆகுற , தண்ணிய குடி” என அவளுக்கு தண்ணீர் புகட்டினான். தண்ணீர் குடித்ததும் சிறிது கோவம் மட்டுப்பட்டது.

சில நிமிடங்கள் கழித்து, ரேவதியே ஆரம்பித்தாள் “எனக்கு உங்கமேல சந்தேகம் எல்லாம் இல்ல சமூ “ என அவன் சட்டை பட்டனை திருகிக்கொண்டே அவள் கொஞ்சவும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

தன் மனைவி தன்னை சந்தேப்படமாட்டாள் என்று அவனுக்கும் நன்றாகவே தெரியும் இருந்து அவளிடம் சிறிது நேரம் விளையாடினான்.

சமர் “அந்த நடிகைக்கு நிறைய பிலோக்க்மைல்ஸ், கொலை மிரட்டல்கள் வருது ..அத சீக்ரடா இன்வேஷ்டிகேட் பண்ணதான் மீட் பண்ணோம், இதுக்கு போயி ஏன் நீ ஓவர் ரீயாக்ட் பண்ணாற அம்மு...பாரு உன் கன்னம் எப்பிடி சிவந்து போச்சுனு ”என விளக்கம் சொல்ல ஆரம்பவித்தவனின் வார்த்தைகள் மோகத்தில் முடித்தது .

இது தெரியாத ரேவதியோ அவனிடம் மல்லுக்கட்ட “யாரு நான் ஓவர் ரியாக் பண்றேனா” என ஆரம்பித்தவளின் இதழ்களை சமர் தன் இதழ்ங்களுடன் இணைத்துக் கொண்டான் சிறிது நேரம் கழித்தே விட்டவனின் இதழ்களில் இப்போது குறும்பு புன்னகை , ரேவதியின் முகத்திலோ கோபம் மறைந்து வெட்கம் மின்னியது .

ரேவதி சமரிடம் ” இப்படியே என் வாயை அடைச்சுறு ..உன்ன..” என மேலும் செல்லமாக அவன் சட்டையை பிடித்து இழுக்க , “நீ என்னை என்ன வேணா செஞ்சுக்கோ அம்முமா .. நோ அப்ஜக்சன்...” என ஹஸ்கி வாய்ஸ்யில் , மோகம் ததும்பும் குரலில் அவளைப் பார்த்து மயக்கத்துடன் சொல்லி அவள் முகத்தை சிவக்க வைத்தவன் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி அவளை முழுவதுமாக சிவக்க வைத்த பின்னே அவளை விட்டான் .

அவர்கள் அறையில் இப்போது சிரிப்பும் சிணுங்களும் மட்டுமே நிறைந்து இருந்தது .

சிறிது நேரத்திற்குப் பின் , சமரின் மார்பில் தலையை வைத்திருந்த ரேவதி அண்ணார்ந்து பார்த்து “நீ சரியான கேடி டா..” என்று அவனின் மார்பில் கடித்து வைக்க , “ஹேய் ...விடுடீ... ராட்சசி..” என சிரிப்பினுடே சொல்ல , அதற்க்கும் அவனுக்கு சில பல கடிகள் விழுந்தது ...சமர் குனிந்து அவளின் முகத்தை மறைத்த முடியை காதோடு ஒதுக்கியவன் “ அம்முமா ...இனி என்னனாலும் என்கிட்ட சொல்லுடா ... இனி விளையாட்டுக்கூட இப்பிடி என்ன தனியா விட்டு போகாத “ இதை சொல்லும்போது சமரின் முகத்தில் சோக ரேகை படர , ரேவதிக்கு எனவோ போல ஆகிவிட்டது , சமரை நெருங்கி காற்றுபுகாதவறு அணைத்தவள், ‘உன்னை நான் என்றும் பிரியமாட்டேன் ‘ என்பது போல அவன் நெற்றியில் உணர்ச்சிபொங்க முத்தமிட்டாள்.

விதியோ, அவர்களை வைத்து விளையாட ,நேரம் பார்த்துக்கொண்டு இருந்தது
.
 
அத்தியாயம் 5

விதியா ! சதியா !

காலையில் காலேஜ்க்கு அவசரமாக கிளம்பி கீழே வந்த லீலா பார்த்த காட்சி இது தான் ,

ரேவதி உணவு பரிமாற , அவளை சீண்டி கொண்டே சாப்பிட்டான் சமர் , ரேவதியோ “சமர்ர்...சாப்புடுங்க “ என வெக்கத்தை அடக்க பல்லை கடித்து சொல்ல , எங்கே அவன் கேட்டான்.. சீண்டல்கள் மேலும் அதிகம் தான் ஆனது. அவர்களையே ஆவென பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்ரீகுட்டி .

லீலா “கடவுளே...கடவுளே....”என ரஜினி போல கண்களை மூடி சொல்லியபடியே டைனிங் டேபிளில் வந்து உக்கார்ந்துதாவளை பார்த்து ரேவதி சமரிடம் “ ஐயோ சமர் லீலா “என்றதும் சமர் “ சரியான கரடி “ என்றதும் , லீலா கைகளை மேலே நீட்டி ,

“ ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி...”என ஸ்ரீயை அனைத்து பாடியவள்,

சமரை கைகாட்டி “
பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…“
என போலியாக சோகத்தை வண்டி வண்டியாக கொட்ட,

எங்கிருந்தோ வந்த பாக்கியம் “எரும..எரும..என்னடி காலையிலேயே கூத்தடிக்கார “ என லீலாவின் காதை பிடித்து திருக , “ஐயோம்மாஆஆஆ...” என அலறினாள்.

இதை பார்த்து பலமாக சிரித்த சமர் “ பாவம் அத்த விட்டுடுங்க “என்றதும் தான் விட்டார்.

காதை தேயித்துக்கொண்டு இருந்த லீலாவை பார்த்து சமர் “ஆமா இன்னைக்கு மத்தியம் தான் எக்ஸாம் இருக்குனு சொன்ன! ..ஏன் எப்பவே கிளம்பிட்ட ?” என கேட்டான்.

லீலா சாப்பிட்டுகொண்டே “சீக்கரமா கிளம்பி போனாதான் , படிச்சுட்டு நிம்மதியா ரிலாக்ஸ்ஆ..எக்ஸாம் எழுதலாம் மாம்ஸ்...படிச்சதும் மறக்காது பாருங்க....இல்லைனா அலைச்சல்ல டென்ஷன் ஆகி மறந்துருவேன்” என்றாள்.

வாசலில் மாலதி வண்டி சத்தம் கேட்டதும் ,வேகமாக சாப்பிடவும் புரையேறிவிட்டது, உடனே சமர் “மெதுவாடா...பொறுமையா சாப்பிடு “ என அவளுக்கு தண்ணீரை புகட்ட , இந்த காட்சி பூஜை முடித்து வந்த ராஜவேலுவின் கண்ணில் பட , “ விடுங்க செத்து தொலையட்டும் “ என வெறுப்பு நிறைந்த வார்த்தைகளை அள்ளி வீசினார் .

அவ்வளவு நேரமும் சிரித்த லீலாவின் முகம் இறுகியது , அடுத்த நிமிடம் “போதும் “ என ஒட்டாத தன்மையுடன் சொன்னவள். யாரையும் பார்க்காமல் விறு விறுவென தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள். சமர் “லீலாமா...நில்லு” என கூப்பிட்டது எல்லாம் காற்றில் கரைந்து போனது.

கோவமாக ராஜவேலுவை பார்த்தவன் “நீங்க எல்லாம் மனுஷன் தானா, அது நாக்க இல்ல..தேள்கொடுக்க .. சின்ன பொண்ணு மாமா...அவள போயி கஷ்டபடுத்திக்கிட்டு” என்றதும்,

கோவம் தலைக்கு ஏற,ராஜவேலு “இது எங்க வீட்டு விஷயம்..தலையிடாதீங்க!!” என்றதும் , சமரின் மரியாதை அந்த இடத்தில் அடிபட்டு போனது...அவன் மவுனம் ஆனதும்,

பாக்கியம் “என்னங்க அவரு நம்ம மாப்பிள” என தவிப்பாக சொல்ல ,

“நீ பேசாத “ என்றார்.

“அப்போ நான் பேசட்டுமா பா”, என ரேவதி கோவம் போங்க ஏதோ கேட்க வர ,

“ரேவதி போலாம் “ என அவளை சொல்லவிடாமல் அடக்கி , ஸ்ரீயை தூக்கிக்கொண்டு ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் நில்லாமல் ரேவதியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

சமருக்கு லீலாவை திட்டினால் பிடிக்காது , எப்போதுமே அவன் முன்னே வெறுப்பை அடக்குபவர் , இன்று அவள் சிரிப்பு அவரின் நிம்மதியை துடைக்க ,கோவம் கண்ணை மறைக்கவும் பேசிவிட்டார், பேசியபின்னே வார்த்தையின் வீரியத்தை அறிந்தவர் , என பேசுவது என்று தடுமாறி விட்டார்

பாக்கியம் “என்னங்க கூப்புடுங்க “ என்றதும் தெளிந்தவர் , “மாப்பிள...மாப்பிள..” என அவனை அழைக்க ...அவன் திரும்பியும் பாராமல், மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான் .

போகும் அவனின் காரையே கவலையாக பாத்த பாக்கியம் அருகே வந்தவர் “இது எல்லாத்துக்கும் அவ தன் காரணம் ..அவ கிரகம் எப்பிடி எல்லாம் நம்மள ஆட்டுது பாருடீ“ என்றவர் “அவள...”என்றவர் ஆத்திரத்துடன் பூ ஜாதியை உடைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். பாக்கியம் தான் அனைவருக்கும் நடுவில் செய்வது அறியாமல் தவித்தார்.

அவளின் சிரிப்பு இங்கு ஒருவரின் நிம்மதியைத் துடைக்கிறது என்றால்,

அவளின் சிரிப்பு அங்கு ஒருவனுக்கு வன்மத்தை விதைக்கிறது,

மொத்தத்தில் அவளின் சிரிப்பு இருவருக்குமே அமிலத்தை அள்ளி பூசியது போல இருந்தது.

இங்கு,வண்டியில் சோகமே உருவாக அமைதியா எதையோ வெறித்து பார்த்துக்கொண்டு இருந்த லீலாவை பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது மலாதிக்கு அதை சரியாக்கும் பொருட்டு அவளிடம் எதையெதையோ பேசிப்பார்த்தும் அவளிடம் பதில் இல்லை கடைசியாக , அவளை நிகல்காலத்துக்கு அழைத்து வர ,

“லீ ..லீ..லீ..வண்டி நின்னு போச்சுடீ”என பதட்டமாக அழைத்து, வண்டியை நிறுத்தினாள்

அது சரியாக வேலை செய்தது,

லீலாவதியும் தன் எண்ணங்களை கலைத்து “என்னாச்சு மாலு” என வண்டியிலிருந்த்து இறங்க, அவளை பார்த்து சிரித்தாள் மாலதி.

லீலாவோ “ஏய்..பைத்தியம்...வண்டி நின்னு போச்சு..நீ இப்படி கேக்க..பேக்கணு..சிரிக்கற இப்போ எப்பிடி காலேஜ் போறது ”என்றதும்

மாலதி “ஹேலோ ..மேடம், இப்பிடி அழுமூச்சியா இருந்தா, வண்டிய எடுக்க முடியாது..சிரிச்சா தன் வண்டிய எடுக்க முடியும் ” என எங்கோ பார்த்தபடி சொல்ல ..

லீலா “ப்ச..காலையிலேயே செம்ம டென்ஷன் டீ ...” என சொல்வதற்க்குள் ,கைநீட்டி தடுத்து லீலாவின் தோளில் கை போட்டவள் “இங்க பாரு லீ இன்னைக்கு நமக்கு ரொம்ப முக்கியமான எக்ஸாம் ஸோ,அத பத்தி மட்டும் யோசி...நாம நல்ல எக்ஸாம் எழுதி முடிசிசுட்டு இத பத்தி பேசலாம் ..இப்போ வேண்டாம் மைண்ட் டிஸ்டர்ப் ஆகும் புரிஞ்சதா, என்ன சொல்லற ? “என மாலதி கேட்கவும், சிறிது யோசித்த லீலா ‘மாலு சொல்லுறதும் சரிதான் ..இதையே நினைச்சுட்டு இருந்தா.. எக்ஸாம் எழுத முடியாது...நமக்கு இந்த டிகிரி ரொம்ப முக்கியம், அப்போதான் வேலை கிடைக்கும், இங்க இருந்து போகவும் முடியும் ’ என நினைத்தவள். திரும்பி மலாதியை பார்த்து, மாலதியின் மூக்கை பிடித்து ஆட்டி “மாலு சொன்ன அதுக்கு எதிர் பேச்சுயேது” என சிரித்தாள்.

மாலதி “அம்மாடி சிரிச்சிட்டிய ..இனி உன்னோட வாழ்க்க ,எப்பிடி போகுது பாரு “ என அவள் சொல்லி முடிக்கவில்லை, ஒருவன் லீலாவின் பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான்.

இருவருக்கும் அதிர்ச்சி ,

லீலாவோ மலாதியை முறைத்து ,“நாரா வாய்டீ ..உனக்கு” என அவளை திட்டி விட்டு ,

“ஐயோ.. என்னோட பேக்” என லீலாவும் ,

“திருடன் ..திருடன் பிடிங்க ..பிடிங்க என மலாதியும் , அவனை துரத்திக்கொண்டு இருவரும் ஓட ,

அவனின் வேகத்திற்க்கு இருவராலும் ஈடுகொடுக்க முடியவில்லை , மாலதி லீலாவிடன் , “என்னடி இவன் கலுண்ட டயர் போல ஓடுறான்“ என ஓடிக்கொண்டே மூச்சிறைக்க சொல்ல , லீலாவோ,” எல்லாம் உன்னால தான்டீ, உன்னா யாரு இங்க வண்டிய நிறுந்த சொன்னது” என்றதும்

மாலதி “உன்ன மோடிவட்டே பண்ணடீ “ என மூச்சிறைக்க சொல்ல ,

லீலாவோ “மண்ணாங்கட்டி “ என சொல்லிவிடு ஓட , “அடிப்பாவி என்ன இப்பிடி சொல்லிட்ட “என மலாதியும் அவனை துரத்திச்செல்ல...

சிறிது துரத்திலேயே, அவன் யாரோ இருவரிடம் சிக்கி, அடிவாங்கிக்கொண்டு இருந்ததை பார்த்துவிட்டாள் லீலா, “மாலு யாரோ அவன் புடிச்சுட்டாங்க வா “ என இருவரும் அவர்களை நெருங்க... நெருங்க தான் தெரிந்தது அது யார் என்று ....

அது வேறு யாருமில்லை .... விக்ரம் மற்றும் கணேஷ் தான் , பார்த்ததுமே மாலதி அன்று ஒரு நாள் பார்த்ததை வைத்து , கண்டுவிட்டாள் யார் என்று,

லீலா முகத்திலோ எதிர்பாரா அதிர்ச்சி !!

கணேஷ் “எவ்வளோ தைரியம் இருந்தா...போலீஸ் இருக்கும் போதே திருடுவ...ராஸ்கல்...” என அடிக்க , விக்ரம் லீலாவை பார்த்துக்கொண்டே திருடனை அடிக்க , ஒவ்வொரு அடியும் , இடியாக விழுந்தது, இந்த அடிக்கே அவன் துவண்டு விட்டான் .

இதில் லீலா விக்ரமை பார்த்து “சார் ...” என்றதும் , சட்டென விக்ரம் அவன் விரலை முறுக்கி முதுகு பக்கமாக திருங்க,, “ஆஆஆஆஆ ஐயோ சார்..,இனி தி...திரு..திருடமாட்டேன்,.....” என்று அலறவும், லீலா பயத்தில் எச்சிலைக்கூட்டி விழுங்கி , விக்ரம் அடியையும் , அந்த சிவந்த கண்களை பார்த்ததும் பயந்துவிட்டாள்.

இதை எதையும் அறியாத மலாதியோ “அப்பிடி தான் நல்லா ..அடிங்க சார்“என சைகை செய்தாள்.

விக்ரம் , திருடனிடம் இருந்த பையை வங்கி லீலாவிடம் நீட்டியவன் “ ஜாக்கறதை....”என்றதும் லீலா போய் அறைந்தது போல பார்த்தாள், பின் அவனே மீண்டும் “ஐ மீன் பேக்.. ஜாக்கறத “என சொல்லவும் தான் லீலா கொஞ்சமே கொஞ்சம் தெளிந்தாள்.

மாலதி தான் “தங்க் யு ஸார்..ரொம்ப பெரிய உதவி பண்ணிடிங்க “ என சந்தோஷமாக சொல்ல , விக்ரமோ “உங்க ஃப்ரெண்ட் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா” என நக்கலாக கேட்க , அதற்க்கும் மலாதியே பதில் சொன்னாள் “ அவ சந்தோஷதுல வாயடைச்சு போயிட்டா ..நாங்க வரோம் ஸார் ..டைம் ஆச்சு” என கிட்ட தட்ட லீலாவை இழுத்து சென்றாள் மாலதி . சிறிது நேரம் அவர்கள் போவதையே பார்த்தவன், “கணேஷ் வண்டிய எடு” என்று கிளம்பி விட்டான்.

விக்ரமை பார்த்த பிறகு , பிரம்மபிடித்தவள் போல நடந்துக்கொண்டாள் லீலா, வண்டியில் ஏறியது, மாலதி அவளிடம் பேசியது , எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை..அவள் மூளையில் உதித்த ஒரே சொல் ‘விக்ரம் வந்துட்டான்’ என்பது தான், எப்படியோ கல்லூரி வந்து சேர்ந்துவிட்டாள், வண்டியில் இருந்து இறங்கவில்லை , மாலதி “லீ இருங்கு காலேஜ் வந்துருச்சு” என்றதும் தான் “ஆஹான்.. “ என இறங்கினாள்.

“ஹாய்..லீ “என எதிர்திசையில் வந்த சண்டியை கண்டுக்கொள்ளாமல், வழக்கமாக அவர்கள் அவரும் கல்பெஞ்சீல் அமைதியாக அமர்ந்தாள் .

சண்டி , மாலதியிடம் “என்ன ஆச்சு” என்று கேட்க,

மலாதிக்கு வீட்டில் நடந்தது தெரியாது அல்லவா , அதனால் பேக் திருடு போனதும், அதை திருப்பி வாங்கியது மட்டுமே சொன்னாள்.அதை கேட்ட சண்டி “நீ எதுக்கு வண்டிய நிறுத்துன “ அவளை திட்டவும் ,மாலதி “என்னடா நீயும் என்னையவே திட்டுற”என்று கேட்டதும் , சண்டி “சரிவிடு வா “ என்று இருவரும் கல்பெஞ்சைப் பார்க்க அங்கே லீலா இல்லை ,

‘திக்’ என்று இருந்தது இருவருக்கும் ...சண்டியும் மால்தியும் கண்களை சுற்றி அலைய விட ,

தூரத்தில் ...பாத்ரூம்க்கு சென்றுக்கொண்டு இருந்த லீலா தென்பட்டாள்,பிறகு தான் இருவருக்கும் மூச்சே வந்தது....மாலதி “சரி வா ..அவ வந்துருவ” என இருவரும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தாள் லீலாவின் மனதில் ‘மீண்டும் விக்ரம்’ என்ற நினைப்பே அவள் நிம்மதியை அரித்தது.

விளைவு , கண்களில் இருந்து நிற்க்காமல் கண்ணீர் வழிந்துக்கொண்டு இருந்தது , எவ்வளவு கட்டுப்படுத்தியும் நிற்க்கவில்லை, “நீயாவது என் பேச்சை கேளு “என கண்ணீரிடம் சொல்ல , அது கேட்கவில்லை அவள் துடைக்க..துடைக்க...வந்துக்கொண்டே இருந்தது ...ஆற்றாமையில் இன்னும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள் தன் நிலையை எண்ணி...

சிறிது நேரம் கழித்து , தன் பிம்பத்தை பார்த்தவள் , ஒரு ஆழ்ந்த மூச்சுசை எடுத்து தன்னை நிதானப்படுத்தியவள் , ஒரு போலியான சிரிப்பை ஓட்டிக்கொண்டு , நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று விட்டாள்.

மாலதி லீலாவின் சிவந்த விழிகளை பார்த்து பதறி “லீ அழுதையா?”என விசாரிக்கவும் , இந்த நேரத்தில் யாருக்கும் கவனம் சிதறிவிடக்கூடாது என கருதிய சண்டி,” இங்க பாருங்கபா ..எக்ஸாம்க்கு டைம் ஆச்சு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு சோ, படிங்க எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம் “என சொல்லவும் , மற்ற இருவருக்குமே அது சரியாக பட , படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் .

லீலாவதியால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, மனதில் ‘ எனக்கு இந்த டிகிரி ரொம்ப அவசியம் …அப்பா தான் நான் இங்க இருந்து போக முடியும்...நான் போகனும்..!நான் போகனும்..! என்ற தீப்பொறியை மனதில் வைத்து , படிப்பில் கவனம் செலுத்தினாள்.

"உன்ன அவ்வளோ சீக்கரம் எங்கயும் போக விடமாட்டேன் “ என போலீஸ் ஸ்டேஷனில் இருந்த விக்ரம் கண்ணில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

கல்லூரியில் எக்ஸாம்க்கு பெல் அடித்ததும் , அனைவரும் ‘ஹல் டிக்கெட்’ எடுத்துக்கொண்டு பரீச்சை அறைக்குள் சென்றுக்கொண்டு இருக்க ,லீலாவும் பரீச்சைக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு, ‘ஹல் டிக்கெட்’ வைத்த இடத்தில் பார்க்க ..அது காணவில்லை.

மலாதியும் ,சண்டியும் “வா லீ டைம் ஆச்சு” என லீலாவதியைகூப்பிட , அவளோ பதட்டமாக தனது பையில் ‘ஹல் டிக்கெட்’ தேட அது கிடைக்கவில்லை... மலாதிக்கும் சண்டிக்குமே இது அதிர்ச்சி தான்...சண்டி “இங்க தான் இருக்கும் ..நீ எங்க எல்லாம் போனியோ அங்க போயி தேடு லீ இங்க தான் இருக்கும் டென்ஷன் ஆகாத“ என்றான் மாலதி “சரி நானும் வரேன் வா “
என இருவரும் கல்லூரி முழுக்க தேடியும் கிடைக்கவில்லை, லீலாவுக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

சண்டி அவசரமாக லீலாவிடம் “என்ன லீ கிடைச்சதா” என கேட்கவும் ,

லீலா தவிப்பும் அழுகையுமாக “கிடைக்குல “என்றாள்.

இங்கு ஸ்டேஷனில் விக்ரமொ, “கிடைக்காதுடீ... நீ எங்க தேடுனாலும் கிடைக்காது “ என்றவன் கையில் லீலாவதியின் ‘ஹல் டிக்கெட்’ !

அதிலிருந்த லீலாவின் சிரித்த புகைபடத்தை பார்க்க ...பார்க்க ...விக்ரம் கண்ணில் தீபறக்க ,”இனி இந்த சிரிப்பு உனக்கு சொந்தம் இல்லடீ “ , என அதை நாராக கிழித்து , தூக்கி குப்பையில் வீசிவிட்டான் .

சில வருடங்களுக்கு முன், அவள் அத்தியாயத்தை பூக்களால் எழுதி மலரச்செய்தவன், அதை அவனே கருக்கினான் .

இப்பொழுது மீண்டும் வருகிறான்... அவள் அத்தியாயத்தை எழுத, இம்முறை பூக்களால் அல்ல முட்களைக்கொண்டு கிழிக்க வருகிறான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top