வீட்டின் முன்னே ,பேந்த...பேந்த .. முழித்துக்கொண்டு நின்ற தான் நண்பர்களை,”ப்ச் உள்ள வங்க“என அழைத்து விட்டு லீலா விருவிருவேன உள்ளே சென்றுவிட்டாள்.
வீட்டை சுற்றிப் பார்த்த மாலதி,” டேய் சாண்டி எவ்ளோ பெரிய வீடு” என பிரம்மிப்பாக பார்க்க.. சாண்டியோ .”வா உள்ள போலாம் “என மாலதியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.
விசாலமான முன்னறையில் நடுநாயகமாக ஒரு வயதான பெண்மணி சோபாவில் உட்கார்ந்து இருக்க மற்ற குடும்ப உறுப்பினர் அனைவரும் அவரை சுற்றி நின்றிருந்தனர்.
சாண்டி,மாலதி மற்றும் கணேஷ் மூவரும் மட்டும் தனியாக நின்றக்க ...
சாண்டிக்கும் மலாதிக்கும் அங்கே இருந்தவர்களுள் பாக்கியம் மற்றும் லீவாவை தவிர யாரையும் தெரியவில்லை...ஏதோ குடும்ப பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது....அதனால் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தார்கள் ...
அப்பெண்மணி மற்றவர்களிடம் ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச மற்ற அனைவரும் பதில் இல்லாது தலை குனிந்தே இருக்க அப்பொழுது விக்ரம் முன்னேவும் லீலா பின்னேவும் வர இருவரையும் பார்த்து அர்த்தமாக முறைத்தவர்.
பின் லீலாவை பார்த்து “பெரிய மனுஷியா ஆயிட்டீங்களோ ?யார் பேச்சையும் கேட்கிறதா இல்ல.. அப்படித்தானே ..“என பாட்டி கேட்க, லீலா “அது இல்ல பாட்டி..” என தயங்கவும்,
“ என்ன இல்ல ஒரு கல்யாணமான பொண்ணு புருஷன் வீட்டில் இல்லாம அப்பா வீட்டிலேயே இருக்கிறது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா” என்றதும்,
அருகே நின்றிருந்த மாலதிக்கும் சாண்டிக்கும் அதிர்ச்சி...
ஒருவரை ஒருவர் பார்த்து ,”டேய் என்னடா சொல்றாங்க இவங்க“என மாலதி சாண்டி காதில் குசு குசுவேனா பேச, அருகில் இருந்த கணேஷ் இருவரையும் பார்த்து "உஸ்" என வாயில் கை வைத்து அமைதியாக இருக்குமறு சைகை செய்யவும் அமைதியானர்கள்....
பதில் சொல்லாது அமைதியாக இருந்த லீலாவை பார்த்து பாட்டி ,"சொல்லுடி கல்யாணமான பொண்ணு அப்பன் வீட்டுல இருக்கறது நல்லாவா இருக்கு" என்றதும் ,
லீலா கொஞ்சம் தைரியம் வர "என்னால இந்த கல்யாணத்த ஏத்துக்க முடியாது" என பட்டென சொல்லிவிட்டாள்.
விசாலாட்சி பாட்டி”அடி செருப்பால..."என எழவும் பதறிய லீலா கையை பிசைந்து கொண்டு நிற்க, அவளை மேலுருந்து கீழக அளந்தவர் ,"தாலி எங்க "என கேட்கவும்,
அந்த அறையில் இருந்த அனைவரும் லீலாவை பார்க்க...
அவளோ யாரையும் பார்க்காமல் தலை குனிந்துவிட்டாள்...
மாலதியோ அதிர்ச்சியில் வாயில் கை வைத்தபடி, சாண்டியின காதில் " டேய் முழு பூசணிக்காவை சோத்துல மறச்ச கதையா இருக்குகே... என்ன சொல்லுற இவுங்க... கல்யாணங்கிறாங்க... தாலிங்கறாங்க... ஒரே ட்விஸ்ட் ஆ இருக்கு "
சாண்டியும் “ஆமா மாலு, நம்மட்ட சொல்லாம மறைச்சுட்ட பாத்தியா ?” கொஞ்சம் கவலையாக சொல்ல அதற்க்கு மாலதி “ஆமா இதுக்கு தனிய ஒரு பஞ்சாயத்து கூட்டனும் டா” என ரகசியம் பேச...
கணேஷ் மறுபடியும "உஸ் " என்றதும் இருவரும் நல்லா பிள்ளைகளாக வாயை மூடிக்கொண்டானர்....
விசாலாட்சி,”கேரளாவுக்கு எதுக்கு போயிருக்கணு தெரியாத எனக்கு...சரியான ஜோசியம் பைத்தியம் பிடிச்ச பைய...எப்பிடிதான் எனக்கு மகனாபொறந்தனோ ...அவுக ஐயான சொல்லணும்..அவர பாத்து இவனும் இதுல விழுந்துட்டான் “என்றவருக்கு ஜோசியதின்மீது எல்லாம் ஒரு போதும் நம்பிக்கை இருந்தது இல்லை..கடவுளை நம்புவர் பூஜிப்பார் ஆனால் ஒருபோதும் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கமாட்டார்...
திரும்பி, யாருக்கு வந்த விருந்தோ என நின்றிருந்தா விக்ரமைப் பார்த்து “என்னடா போலீஸூ.. கட்டுனா பொண்டாட்டிக்கூட சேர்ந்து வாழ உத்தேசம் இருக்க இல்லையா?” என கேட்க,
அவன் பதில் சொல்வதற்க்குள், இடையில் புகுந்த மங்கை “ம்மா ..இந்த கல்யாணமே செல்லாது...ராசா மாதிரி இருக்க என் புள்ளைக்கு இந்த ராசி கெட்டவ சோடியா! இதுக்கு நான் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டேன்” என மங்கை பொரிய,
“மங்க...”என அவர் கணவர் குருமூர்த்தி அதட்டவும் அமைதியாகிவிட்டார்.
“இவுங்க யாரு சார் “என சாண்டி, கணேஷ் காதை கடிக்க,”விக்ரமொட அப்பா குருமூர்த்தி , அம்மா மங்கை..லீலாவுக்கு சொந்த அத்தை” என்றதும் , மாலதி “சரியான பஜாரிய இருக்கும் போல”என தன் தோழியை திட்டிய கோவத்தில் சொல்ல, கணேஷ் மலாதியை முறைக்கவும் அமைதியாகிவிட்டாள்.
சாண்டி “சார் சமர் அண்ணா தான அத்த பையனு லீ சொன்ன”என சந்தேகம் கேட்க, கணேஷ் “சமர் சாரும்..விக்ரமும் பிரதர்ஸ்...சமர் மூத்தவர்”என விளக்கினான்.
விசாலாட்சி”மங்க...நான் அவங்கிட பேசறேன் நீ இடையில வராத”என அதட்டியவர்...விக்ரமை பார்க்க, அவன் திரும்பி லீலாவை பார்த்து வெறுப்பை அள்ளி வீசியவன்,
“ஒரு கொலைக்காரியோட வாழ எனக்கு விருப்பம் இல்ல “ என்றதும்,
விக்ரம் ஆத்திரமாக,”பார்த்தால தன் பேசறேன் ..ப்பா” என்றவன்,
லீலாவிடம் வந்து “எப்பிடிடீ ஒரு உயிர துடிக்க துடிக்க கொன்னுட்டு ...கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லாம இருக்க முடியுது உன்னால? ..நீ எல்லாம் என்ன பிறவியோ ...என்னையே உலகம்னு சுத்தி வந்தவன் ...” என வார்த்தை தொண்டையில் சிக்கி , விக்ரம் கண் கலங்காவும்,
கூனிக்குறுகிவிட்டாள் லீலா...விக்ரமின் வார்த்தைகளின் தாக்கம் அப்படி…
லீலாவுக்கு பேச நா வரவில்லை...அவன் பேசிய வார்த்தையில் இருந்த உண்மை சுட்டது...
அவளால் ஒரு உயிர் போனது உண்மை தான் அதை அவளால் மறுக்க முடியாது ...தெரிந்து நடந்த்தோ ...தெரியாமல் நடந்ததோ ...போன உயிர் போனது தான் திருப்பி கொண்டு வரவா முடியும்.......
அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் அப்பிக்கிடந்த்த நினைவுகள் எழுந்து...
அவளை அழுத்தியது...நெஞ்சில் பாரம் கூடியது......
கலங்கலாக அவள் நினைவடுக்குகளில் ஒரு சிறுவன் கிணற்றுக்குள் இருக்க,‘ம்மா...கா..கா..காப்பது...ம்மா....காப்பது ..முயலா’ , என அவன் மேலே நின்ற லீலாவை பார்த்து அழைப்பது போல காட்சிகள் தோன்றவும், “அப்பு..அப்பு ..”என பிதற்றியவள்,
அந்த பிஞ்சு முகம் அவள் மனக்கண்ணில்...அவன் சிரித்தது, விளையாடியது.. வந்து..வந்து போக
கடைசியாக அவன் ‘ம்மா....காப்பது ..முயலா’ வர...காதை பொத்தியப்படி,
லீலாவின் மயக்கம் தெளிய தண்ணீரை முகத்தில் அடிக்கவும், சிறிது சிறிதாக மயக்கம் தெளிந்து லீலா கண்விழிக்க , அவளை சுற்றி சாண்டி, மாலதி,பாக்கியம் , விசாலாட்சி இருக்க...
சாண்டியும் மலாதியும் “லீ இப்ப ஒகே வா” என்றும்
பாக்கியம் “லீலா..லீலா...”என்றும்
விசாலாட்சி”கண்ணு “என்றும்
இப்படி அனைவரும்...அவளை பற்றி கவலையாக கேட்டக...
“கொலைக்காரிக்கு எங்க வீட்டுல இடம் இல்ல ...அவள எழுந்து போக சொல்லுங்க ....” மங்கை கசந்த வார்த்தைகளை கடித்து துப்ப...குருமூர்த்தி தான் அவரை அடக்கி, உள்ளே அனுப்பினார்.
விக்ரம் எப்போதோ அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான் ...அவனை பொருந்தவரை வந்த வேலை முடிந்தது .. யாருக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லை ..யார் மீதும் அவனுக்கு அக்கறை இல்லை அக்கரைப்பட விருப்பமும் இல்லை...
லீ..லீ .. என கூப்பிட்டது எல்லாம் காற்றில் கரைந்து போனது, வேகமாக ஷிகூட்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவள் வேகத்தை பார்த்து பதறிய பாக்கியம் , சாண்டியிடம்”டேய்..சந்தோஷு அவ இவளோ வேகமா போறாளே...எனக்கு பயமா இருக்கு”என்றதும்
மாலதி “ஆண்ட்டி நீங்க பயப்படாதீங்க நம்ம லீலா தப்பான முடிவு எல்லாம் எடுக்க மாட்ட “ என பாக்கியத்துக்கு தேம்பூதிட்டுவது போல பேச ,
மாலதியின் தலையில் தட்டிய விசாலாட்சி “ என்ன கூட்டாலிங்க நீங்க .... இதுவர 2 தடவ சகாப்பாத்தது இந்த நாயி ...நாங்க தான் கஷ்டப்பட்டு காப்பத்துனோம்”...சொல்லவும்
மலாதிக்கு ‘திக்’ என்றது ....சாண்டிக்கும் அப்படியே ....ஒரே நாளில் தங்கள் தோழியின் மறுபக்கத்தை தெரிந்ததில் இருந்து...லீலாவை பற்றிய பெருங்கவலை அவர்களிடம் ஒட்டிக்கொண்டது.
உடனே...சாண்டி பரபரப்பாக ”ஆண்ட்டி நீங்க என்கூட வாங்க அவ எப்பிடியும் வீடுக்கு தான் போயிருப்பா...அங்க இல்லனா பீச் க்கு போலாம் ...மாலதி நீ பாத்திரமா ஹோஸ்டளுக்கு போ” என பாக்கியத்தை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
போகும் அவர்களை கவலையுடன் பார்த்துக்கொண்டு இருந்த மாலதியிடம் “உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா நா உங்கள ஹோஸ்டல விடவா “ என அவள் இடது காது பக்கத்தில் கேட்ட குரலில் திரும்பி பார்க்க அங்கே கணேஷ் நின்று இருந்தான்.
லீலா நேராக வீட்டுக்கு தான் சென்றாள். அவள் பின்னாடியே பாக்கியமும் சந்தோஷ் பைக்குகில் வந்துவிட்டார்... சந்தோஷும் இனி பாக்கியம் பாட்டுப் பார் என்ற நம்பிக்கையில் தன் வீட்டுக்கு சென்றுவிட்டான்..
அவளிடம் கெஞ்சுவது வேலைக்கு ஆகாது என தெரிந்தவர்...கடுமையை கையில் எடுத்தார் ...
லீலா அழுதுக்கொண்டே தன் அறைக்குள் வந்த கவை சாற்ற போகும் நேரத்தில் கதவுக்கும், அவளுக்கும் நடுவில் நுழைந்த பாக்கியம் "இங்க பாருடி கதவ சாத்திட்டு அழுத உன்ன கொன்னே போட்டுருவேன் ஒழுங்க கதவ தாழ்போடாம இரு" என்று விட்டு அவர் விருவிருவேன சென்றுவிட்டார்.
கண்ணை துடைத்துக்கொண்டே அவர் போன திசையை பார்த்த லீலாவுக்கு தெரியாது அம்மா எதற்கு சொல்கிறார் என்று , மகள் சோகமாக இருக்கிறாள் வருத்ததில் தப்பான முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதற்க்காக தான் கோவத்திலும் அக்கறையாக மொழிந்தார்...
"ஏய்" என அவரின் குரலில் இவள் " சும்மா தான்ம்மா சத்திருக்கேன் என அழுகையுடன்கூடிய கோவத்தில் கத்தினாள்..
பாக்கியத்திடம் இருந்து பதில் வரவில்லை...
லீலாவுக்கு கோவம் அதிகரிக்க அருகே இருந்த சிறிய கண்ணாடி பாட்டிலை கண்களை மூடி கோவத்தின் உச்சியில் உடைத்தாள் அது சில்லு சில்லாக நொருங்கியது.... உடைந்ததில் உண்டான சத்தில் அவள் கோவமும் நொறுங்கி காணாமல் போனது போலஉணர்ந்தாள் , நிதானத்துக்குவந்தாள்
அதன் பிறகு தான் , செய்த முட்டாள்தனத்தின் விளைவு நெற்றிப்பொட்டில் அறைந்தது...
ச்ச.., ஓடி வந்து கதவை திறந்து " அம்மாவுக்கு இந்த சத்தம் கேட்டுருக்குமா?" ..என எட்டிப்பார்த்தாள்...
"முண்டம் முண்டம்..அறிவில்லை உனக்கு" என திடீரென கேட்ட குரலில் , பயந்து கண்க்களைமூடிய லீலா "அம்மா சாரிம்மா இனி இப்படி நடக்காது தெரியாம பண்ணிடேன் மன்னிச்சுடும்மா ஆஆ..." என கத்த ,
மீண்டும் அந்த குரல் " அடிங்கு.. பொய்ய சொல்லுற " லீலாவோ," அய்யோ! இல்லம்மா நா...." என சொல்ல வரும் போது தான் அவளுக்கு விளங்கியது இவ்வளவு நேரம் தான் கேட்ட குரல் தன் அன்னையுடையது அல்ல என்று.
ஏதோ அவளுக்கு வித்தியாசமாகபட....
சொல்ல முடியாத பயம் வந்து அவள் தொண்டை குழியில் சிக்க, எச்சில்லைக்கூடி விழுங்கியபடி "யாரு" என நடுக்கத்துடன் கேட்டாள்.
அக்குரல் " நான் தான்" என்றது, லீலாவுக்கு இப்போழுது இதயம் தாறுமாறக துடித்தது " ஒருவேலை பேய்யா இருக்குமோ என அஞ்சியவள் தன் நெற்றியில் வேர்வை பூக்க அதை துடைத்தபடி ""நான் தானா யாரு" என கேட்க.
"சொல்லுறேன் முதல்ல என்ன பாரு" என்றது இம்முறை தான் குரலின் வித்தியாசத்தை உணர்ந்தாள் பேய் குரலா இருந்த கொற கொறனு தான இருக்கும் இது என்ன "கீச்சு..கீச்சுனு" கேட்குது என யோசித்த லீலா "யாரு நீ..எங்க இருக்க" அதற்கு அக்குரல் " நீ எங்க தூக்கிப்போட்டியோ அங்கதான்டி இருக்கேன் " என்றது
லீலா யோசனையாக " என்ன..ஏதை..எங்க போட்டேன் " என தலையை சொறிய...
காண்டான அக்குரல் " அடியேய் லூசு..அரைமென்டல் கொஞ்ம் கீழ பாருடி எரும" என்றது இம்முறை லீலாவுக்கு பயத்துக்கு பதிலாக கோவம் வந்தது "அடிங்கு..ஏய்! எவடி அவ ..என்ன பாத்த எல்லாருக்கும் எப்படி தெரியுது ஆளாளுக்கு திட்டுறிங்க.." என கொதிக்க
"பின்ன உன்னோட காலுக்கடியில இருக்க என்ன பாக்காம மேல தேடினா நீ லூசுதான" என்றது அந்த கீச்சு குரல்.
குழப்பமாக லீலா" காலுக்கடியிலையா" என்று பார்க்க அங்கு அவள் உடைத்த பாட்டில்..அதனுள் இருந்த பொம்மை குப்பற கவிழ்ந்து இருந்தது..ஆனால் அது இட வலமாக ஆடிக்கொண்டிருந்தது.
அந்த பொம்மை பார்க்க, ஒரு மனிதன் ஸ்விம் சூட்டில் ..தலை தெரியாதபடி ஒரு சதுர வடிவ தலைக்கவசம் (square shape helmet) அணிந்தது இருந்தது.. முகம் தெரியவில்லை பார்ப்பதற்க்கு தலையில் அண்டாவை அவுத்தியது போல இருந்தது .
அதை லீலா மெதுவா திருப்பி பார்க்க..கண்களை திறந்து, வாயை அசைத்த அந்த பொம்மை " என்ன திருப்ப இவ்வளவு நேரமாடி குந்தாணி" என திட்டியது
லீலா திடுக்கிட்டு பயந்து ஆஆஆ...என அலறி அதை தூக்கி வீசிவிட்டாள்..
அந்த பொம்மையோ..." ஐய்யோ....என்ன கொன்னுட்டாடஆஆஆ......என ஸ்லோ மோஷனில் பறந்து சென்று அவள் படுக்கையில் விழுந்தது.
லீலாவுக்கு கை எல்லாம் நடுங்கியது இதயதுடிப்பு அதிகமாகி இப்போழுதே வெடித்துவிடும் போல இருந்தது. வேர்வை ஆறாக ஓட கண்கள் இரண்டும் தெறித்துவிடும் அளவுக்கு விரித்து அதிர்ச்சியில் உறைந்தாள் .
சிறிது நேரம் கழித்து, மெல்லமாக நிதானதுக்கு வந்தாள்,
மெதுவாக தன் மெத்தையைப் பார்த்தாள் அங்கே அந்த பொம்மை இல்லை,
அதிர்ச்சியும் குழப்பமும் சேர " இங்க தான விழுந்துச்சு...இல்ல, நான கனவு ஏதும் கண்டனா?" என அவள் அறையில் அங்கும் இங்கும் தேடும் நேரத்தில்...
அந்த கீச்சு குரல் விசில் அடிச்சு " ஓய் குண்டு" என கூவியது
லீலா நிமிர்ந்து குரல் வந்த திசையில் பார்க்க போன் ஸ்டேன்டுல் கால் மேல் கால் போட்டு ஒய்யாறமாக அமர்நது அவளை பார்த்து கண்ணாடித்தது.
லீலாவுக்கு மயக்கமே வந்துவிட்டது அவள் தள்ளாட, "அடியேய்...மயக்கம் கியக்கம் போட்டு தொலைச்சுடாதடி என்னால உன்ன தூக்க முடியது" என பொம்மை அலறுவது மெலிதாக அவள் செவியில் அடைய தலையை உழுக்கிக் கொண்டு தள்ளாடியபடியே டேபில் அருகே வந்து தண்ணீர் பாட்டிலை வாயில் சரித்தாள்...தண்ணீர் குடித்த பின், நிதானமானாள் ஆனாலும் அதிர்ச்சியும் பயமும் குறையவில்லை ..தெறித்த விழிதழுடன் பொம்மைய பார்த்து " யாரு நீ" என்றாள்.
அதற்கு பொம்மை " நான் unimax13694 , xiomie planetல இருந்து வரேன்..உன்னோட மொழியில உனக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா "வேற்றுகிரகவாசி" என கையை விரித்தது.
அதை பார்த்த லீலா " என்னது எலியன் ஆ..." என பயந்து சொல்ல, அவளை கூர்ந்து பார்த்த பொம்மை " ஏன் உனக்கு தமிழ் தெரியாதா?... ஆங்கிலத்துல சொல்லுற ..அதுசரி, தமிழ் நாடுல தமிழ பேசாத தமிழர்கள்!! " என உச்சுக்கெட்டி நக்கலடித்தது.
‘அடியேய்..லீலா பயத்தை ஓரமா வச்சுட்டு இது என்னானு பாரு’என அவள் மூளை கட்டளையிட...அந்த எலியன் அருகே வந்து அதை ஆராய்ந்து பார்த்தாள் ..தொடவில்லை...
"என்ன அப்படி பாக்குற " என கீச்சியது குரல் , இப்போழுது கொஞ்சம் தையிறியம் வந்தது.
ஒரு ஆர்வத்துடன் எலியனை கையில் தூக்கிவைத்து பார்த்தாள் " பேட்டரி ஏதாவது இருக்குமோ" என ஆராய, அதற்கு எலியன் " ஏய் லூசு அங்க எல்லாம் தொடாதடி கூசுது " என சிரிப்புடன் சொல்ல,
லீலாவோ " எதே...கூசுத" என இன்னும் அழுத்தமாக அதை சுற்றி சுற்றி திருப்பி பார்த்தாள்.
எலியனோ " ஏம்மா..இது என தாஜமஹாலா? சுத்தி பார்க்க..எவ்வளவு நேரம் தான் பார்ப்ப கெஞ்சம் என்ன கீழ இறக்கிவிடேன் " என கெஞ்சியது.
அதை பத்திரமாக தன் மெத்தையில் வைத்து உத்து உத்து பார்த்து " நிஜமாவே நீ எலியன் ஆ.." என லீலா கேட்க ,
இதை கேட்டு காண்டான எலியன் "அடிங்..கொய்யால நானும் அப்பால இருந்து பாக்குறேன் திரும்ப திரும்ப பேசற நீ…. இரு உங்க அம்மாட்ட சொல்லடா " என மிரட்ட ,
பயந்த லீலா " ஐய்யோ..வேணா..வேணா நா நம்புறேன் நீ எலியனு" ஆனாலும் அவள் ஆராய்ச்சி பார்வையை நிறுத்தவில்லை பார்த்துக்கொண்டே இருந்தாள்...
ஒரு கட்டத்தில் "அட போமா" என எலியன் டையர்டு ஆகி தூங்கியே விட்டது.....
இரவு இரண்டு மணி,
லீலா ஜன்னலில் சாய்ந்து ழுலங்காலிட்டு அமந்து நகத்தை கடித்துக்கொண்டு தூங்கும் எலியனை பார்த்துக்கொண்டு இருந்தாள்....”நிஜமாவே ஏலியன் தானா..இது நமல மாரிதியே பேசுது ..எலியனா ரோபோ மாதிரி தானா பேசும் ..ஒரு வேல இப்பிடி இருக்குமோ ...இல்ல அப்பிடி இருக்குமோ ...என இரவு எல்லாம் யோசிச்சு யோசிச்சு ....அதிகாலை தான் தூங்கினாள்...
உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு ..ஆனால் நம்ம லீலாவுக்கு தீர்வு வேற்று கிரகத்திலிருந்து வரும்....
காலையில் கண்விழித்த லீலா தன் கண் கண்ணாடியை தேடி எடுத்து மாட்டிக்கொண்டு தூக்க கலக்கத்தோடு எழுந்து , சோம்பலை முறிக்க ,அப்போதுதான் நேற்று நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது.
நினைவு வந்ததும் தூக்கம் பறந்து ஓடியது.. அவளுக்கு சட்டென ஒருவித படபடப்பு தொற்றிக் கொண்டது அந்த பொம்ம எங்க என அறையை தலைகீழாக போட்டு ..ரொம்ப நேரமாக தேடினாள் கிடைக்கவில்லை...
லீலா மனதில் ஒருவித அமைதி பரவ...” அப்பாடா அது கனவு தான் போல தேவையில்லாமல் பயந்துட்டோம்” என தன்னைத்தானே சமாதானம் படுத்திக்கொண்டு குளிக்க பாத்ரூமுக்குள் போக கால் வைத்த சமயம்...
அவள் காலடியில் ஒரு ஆப்பிள் உருண்டு வந்தது.
எதார்த்தமாக அதை எடுத்துப் பார்த்தபோது..
பாதி ஆப்பிள் கடிக்கப்பட்ட இடத்தில் ‘பொம்மையின் தலை’ மட்டும் இருந்தது அது அவளை பார்த்து தலையசைத்து” ஹாய் குண்டு, குட் மார்னிங் “என கீச்சு குரலில் கூறியது.
அதைப் பார்த்து லீலாஅதிர்ச்சியில் சிலையாக....
அதற்குள், ஏலியன் அவளை பார்த்து...
மிகசாதாரணமாக உரையாடியது...
“காலையில செம பசி அதான் ஆப்பிள் சாப்பிட போனேன்.. ஆனா பாரு மாட்டிக்கிட்டேன்.. என்ன வெளியே எடுத்து விடு” என பழக்கப்பட்ட நபரிடம் உரிமையாக கேட்பது போல லீலாவிடம் கேட்கவும் ,
லீலா சொல்லயிலாத ஒருவித குழப்ப நிலையில் யோசனையுடன் ... அந்த பொம்மையை முழுதாக வெளியே எடுக்க...” அப்பாடா ரொம்ப நேரமா உள்ளே இருந்தனா அதான் மூச்சு வாங்குது” பலமாக மூச்சு விட ,
இப்போது லீலா தெளிவான மனநிலையுடன் ‘இத பத்தி தெரிஞ்சே ஆகணும்’ என முடிவுயெடுத்தாள்.
பிறகு ,நிதானமாக அந்த பொம்மையை பார்த்து,
”யாரு நீ ?”, “எப்படி இங்க வந்த ?”அந்த குடுவையில எப்பிடி உள்ள போன ?” என லீலா ஏலியனிடம் சீரியஸ் ஆக கேட்க,
அவளை நக்கலாக பார்த்து,”நேத்து என்ன குடிச்சிருந்தியா?” என கேட்க.
லீலா தன் தலையை சொரிந்து கொண்டே ,”இல்ல..அது..” என தயக்கமாக சொன்னவள்..” சரி நீ ஏலியன் தான் ஒத்துக்கிறேன்,
”ஆஹான்...பூமிக்கு டூர் வந்தேன் “என நக்கல் அடித்தபடிய...’ ஒரு சொடக்கு’ போட... அவள் அறையில் கலைந்து கிடந்த பொருட்கள் ...அந்தனையும் அது அது இருந்த இடத்தில் தானே சென்று அடுக்கப்பட்டது.
சிறிது நேரத்திலே...
கலைந்த அறை, அழகாக அடுக்கப்பட்டது ...
அறையில் இருந்து குப்பையை துடப்பம் தானாகவே அள்ளி குப்பை கூடைக்குள் போட்டது...
இப்பொழுது அவள் அறை பார்க்கவே பல பலவென மின்னியது.. லீலா முகத்தில் ஆச்சரியமொ ஆச்சிரியம் ...கண்களை துடைத்து மீண்டும் மீண்டும் பார்த்தவளுக்கு , தன் கவலைகள் அனைத்தும் மறந்து ...குழந்தையின் குதூகலம் ஒட்டிக்கொண்டது.
லீலா சந்தோஷத்தில் சிறியதாக பொம்மை போல இருந்த ஏலியனை..உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உருவத்தை அமுக்கி “வாவ்...செம்ம ...ஹையோ ....மேஜிக் போல இருக்கு “என துள்ளி குத்தபடி ஏலியனை இன்னும் அமுக்க..
மூச்சு மூட்டிய ஏலியானோ,”அடியே ..பாதகத்தி ரொம்ப அமுக்காத புள்ள ...நாக்கு தள்ளுது” என சொன்னது ...எல்லாம் லீலா காதில் விழாமல் போக ...
”ஏய் ..அங்க எல்லாம் தொடாத...” என ஏலியன் சொல்ல்வதற்க்குள், எதையோ ஒரு பட்டனை அமிக்கிவிட்டாள் லீலா…
திரு திருவென முழித்த ஏலியன் பின் தலையில் அடித்துக் கொண்டு ,”இம்சை டா இவ” என அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் மீது தெளித்தான்.
மயக்கம் தெரியவில்லை... இவளுக்கு இந்த வைத்தியம் எல்லாம் சரிபட்டுவராது.... என பின் மண்டையில் ’நங்’ ஒரு கொட்டு விட மயக்கம் தெளிந்த லீலா ஏலியனை பார்த்து பயப்பட ...அவனும் “இப்போ என்ன ஆச்சு எதுக்கு இப்படி நடந்துக்கிற “என கேட்க . லீலா, ஏலியனை சுட்டிக்காட்டி “எப்பிடி..எப்பிடி...” என பிதற்றினாள்.
பாவம் ,லீலா எவ்வளவு அதிர்ச்சியைதான் தாங்குவது... குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளின் பாதிப்பே இன்னும் அவள் மன தில் மறையாதிற்க்க...இப்பொழுது அங்கு இருந்த ஏலியன் அவளுக்கு புதிய பிரச்சனையாக தெரிந்தது...கொஞ்ச கொஞ்சமாக...தன் முன்னே இருப்பது,நடப்பது எல்லாமே ...
கர்ப்பனையல்ல... உண்மை!! என்பதை மூளை உணர்த்தியது ... கண்முன்னே இருப்பது ஏலியன்..என முழுசாக நம்பினாள்...சகஜமானாள்.
லீலா,”பட்டனை தொட்டா ..பெருசாவிய...”என ஏலியனை சுற்றி வந்து..முன்னாடியே சொல்லாம ஏன் மறச்சுட” என கேள்வி கேட்க.
அதற்க்கு , ஏலியன் “நான் மறைக்கில... பட்டன் ஒர்க் ஆகல...நீ அமுக்குன அமுக்குல தான் ஒர்க் ஆச்சு... அதனாலதான் என் சுயரூபம் உனக்கு தெரிஞ்சது இத நான் மறைக்கணும்னு நினைச்சிருந்தா என் உருவம் எப்பவுமே உனக்கு தெரிஞ்சி இருக்காது பாட்டில்க்குள்ள இருந்தப்பவே இந்த பட்டன் வொர்க் ஆகல இப்போ நீ அமுக்குதால பட்டன் ஒர்க் ஆயிருக்கு” என்க
லீலா “ நீ என்ன சொன்னாலும் என் மனசு கேட்க மாட்டேங்குது எப்படி உன்னால ஒரு பொம்பள புள்ள ரூம்ல இருக்க முடிஞ்சது இதை நினைச்சாவே என் மனசெல்லாம் பதறுது என லீலா அழுக.. அவளை எப்படி..தேற்றியும் அவள் சமாதானமாகவில்லை.
பின்பு தன் கிரகத்தில் உள்ள ஆண் பெண் நிலையைப் பற்றி அவளுக்கு விளக்க நினைத்தான். இங்க பாரு லீலா எங்களுக்கு ஆண் பெண் உடம்பை எல்லாம் ஒன்னு தான் நாங்க ஆண் பெண் என்னைக்கும் பிரிச்சு பார்த்ததில்லை என்றதும்,
அழுத விழிகளுடன் அவனைபார்க்க ..மேலும் தொடந்த ஏலியன் ,”எங்க பார்வையில தப்பு இருக்காது ...அதனால ஆண் பெண் உடலுக்கு வித்தியாசம் தெரியாது எங்களைப் பொறுத்தவரை அது ஒரு உடல் அவ்வளவுதான் என்றான்.
லீலாவோ தலையை சொரிந்து கொண்டு “புரியலை” என்றாள்.
இப்பொழுது, அவளுக்கு ஏலியனின் கிரகத்தை பற்றி கேட்க ஆர்வம் வர...அழுகைவிடுத்து அவன் சொல்வதை ஆர்வமாக கவனித்தாள் ஒரு குழ்ந்தையைப்போல...
ஏலியன் ,அவளுக்கு விளக்க ஆரம்பித்தான் ஒரு மெல்லிய சிரிப்புடன் ,
“எங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் உடுப்பு இருக்கும் லீலா” என்றதும்
லீலா “என் பேரு எப்பிடி உனக்கு தெரியும் ?”என கேட்க ,
லீலா,”சரி..சரி..இத சொல்லு ..உங்க கிரகத்தில லவ் இருக்குமா ...இங்க சில விஷியங்கள் இல்லன பிரிச்சுருவங்க “என்றதும்
ஏலியன் பெருமையாக “எங்க கிரகத்துல காதலை பிரிக்க மாட்டாங்க பிடிக்கலைன்னா உடல் அளவுல கூட சேர மாட்டாங்க... பிடித்ததற்கு மட்டுமே முதல் உரிமை குடும்பத்துக்காக சேர்ந்து வாழ்வது குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்வது இதுபோன்ற கட்டுப்பாடுகள் எங்க கிரகத்துல இல்ல... சொல்லப்போனா குழந்தை இல்லன்னா நாங்க பேபி பேங்க்ல போய் வாங்கிபோம் .
இதைக் கேட்டதும் லீலா வாயை பிளந்து,” என்னது பேபி பேங்கா “என கேட்கவும்.
ஏலியன் ,”ஆமா” என சொன்னவன் .
அவள் புரியாத பார்வை வீசவும்...” சரி உன் மரமண்டைக்கு ஏற்ற மாதிரி... உன் மொழில சொல்றேன் கேட்டுக்கோ … எங்க கிரகத்திலும் ஆண் இனமும் இருக்கும் பெண் இனமும் இருக்கும் “என்றதும்
லீலா குறுக்கிட்டு,” குடும்பமா இருப்பிங்கலா ..இல்ல படத்துல வர போல தனிய இருப்பிங்கலா?” என சந்தேகம் கேட்க.
ஏலியன் ,”எங்க கிரகத்துல குடும்ப என்றஒரு கட்டமைப்பு இல்ல ...அது இந்த தமிழ்நாட்டுல தான் இருக்கு ... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...அதனால தான் நானும் என் குடும்பமும் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து தங்கிக்குவோம்”. என்றதும்
லீலா “என்னது நீ தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கியா?...அதுவும் குடும்பமாவா?” என ஆச்சிரியமாக கேட்க.
ஏலியன்,”ரொம்ப வாய போளாக்காத...இது எல்லாம் சாதாரணம் ..பூமில எங்கள போல வேற்றுகிரகவாசிகள நிறைய இருக்காங்க...சில ஏலியன் , பூமியா புடிச்சுபோயி..பல வார்சமா..மக்களோட மக்களா இங்கயே வாழுறங்க” என்றதும்
லீலா,”உங்கள யாரும் கண்டுபுடிச்சுர மாட்டாங்களா”என கேட்க.
அதற்க்கு, ஏலியன்,” எங்களை யாராலுமே அடையாளம் கண்டு பிடிக்க முடியாது...சரி உனக்கு என்னோரு விஷியம் சொல்லவா , எங்க கிரகத்துல குழந்தை பெத்துக்கறதும் பெத்துக்காம இருக்கறதும் அவங்க அவங்க விருப்பம் அதுல யாரும் தலையிட மாட்டோம்”
லீலா”அரேஞ்ச் மேரேஜ் உண்டா ?”
ஏலியன்,” எங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ் எல்லாம் கிடையாது” என்க
கதை சுவாரசியமாக போகவும் கன்னத்தில் கைவைத்து லீலா,” அப்ப எப்படி உங்க மேரேஜ் நடக்கும்” என கேட்கவும் .
ஏலியன் “எங்க கிரகத்துல கல்யாணம் கிடையாது குறிப்பிட்ட வயசு வந்ததும் ஒரு துணையைத் தேடிக்குவோம் அது ஆண் பெண் மட்டும் இல்ல பொண்ணும் பொண்ணும் இணைந்தாலும் ஏத்துப்பாங்க... ஆணும் ஆணும் இணைஞ்சாலும் ஏத்துப்பாங்க எங்கள பொறுத்தவரை மனசு தான் முக்கியம்” என்றதும்
லீலா ,” ஒருத்தருக்கு காதலே வரலைனா என்ன பண்ணுவாங்க “ என கேட்கவும்
ஏலியன் ,”உனக்கு ஏன் இந்த கொலைவெறி “ என முறைக்க
லீலாவோ ,”கோச்சுக்கமா சொல்லு “என்றதும்
ஏலியன் ,”ஒருவேளை ஒருத்தருக்கு தன் துணையைத் தேடி கண்டுபிடிக்க முடியலன்னா அவங்க தன்னோட நரம்பு மண்டலத்துக்கு ஏத்த மாதிரி(match) ஒரு துணைய அவங்களுக்கு எங்க அரசாங்கம் சிபாரிசு பண்ணும் , குழந்தை வேணும்னா பேபி பேங்க்ல குழந்தையோட சைஸை பொறுத்து வாங்கிக்கலாம் என தன் கிரகத்தின் பெருமைகளை ஏலியன் லீலாவிடம் சொல்ல...
லீலாவுக்கு ஆச்சரியமொ ஆச்சரியம் தான் வாழும் பூமியை விட அவர்களின் கிரகம் மிகவும் மேலாக அவளுக்கு தெரிந்தது. ‘குடுத்துவச்சாவுங்க ‘ என் நினைத்துக்கொண்டாள்.
பின் “எவ்வளவு நாளா இந்த குடுவைகுள்ள நீ அடைஞ்சு கிடக்க“என லீலா ஏலியனிடம் கேட்க ,
அதற்கு, ஏலியன் “என் கணக்குப்படி ஒரு வாரம் முடிந்திருக்கும் “என்று சொன்னான்
தன் கிரகத்தைப் பற்றி பேசியதும் தன் பெற்றோர்களின் நினைவு ஏலியனை தாக்கியதும்,” என் குடும்பத்தை பிரிந்து முதல் தடவையா ரொம்ப நாள் இருக்கேன்” என ஏலியன் வருத்தப்படவும்.
லீலா ,” உங்க அம்மா அப்பா ஞாபகம் வந்துருச்சா” என பரிவாக கேட்க.
லீலாவை பார்த்து சிரித்த ஏலியன் தன் இரு விரல் காட்டி ,”அம்மாஅப்பா இல்ல.. அப்பா 1 அப்பா 2 “என்றான்.
பின் அவளும் சிரித்துக் கொண்டாள்.
லீலா, ஏலியனிடம் “உன்ன அது இதுன்னு சொல்ல ஒரு மாதிரி இருக்கு அதனால உனக்கு ஒரு பெயர் வைக்கலாம்னு இருக்கேன் “என்றதும்.
ஏலியன்,”அதான் எனக்கு ஏற்கனவே பேர் இருக்குல்ல அதையே சொல்லி கூப்பிடு” என்றதும்.
“அதெல்லாம் ஒரு பேரா.. என் வாயிலேயே நுழையல நான் உனக்கு வேற பெயர் வைக்கிறேன் “என்றதும்,
ஏலியன் தோலை குலுக்கி” சரி ..உன் இஷ்டம் “என்றது.
ரொம்ப நேரமாக யோசித்த லீலா,” எந்தப் பேரும் என் மண்டைக்குள் வரவே இல்லையே”
“எவ்ளோ பேரு இருக்கு எதுவுமே உன் மண்டையில வரலைன்னா எப்படி”என ஏலியன் கேட்கவும்.
லீலா,”சும்மா ஒரு பேர வைக்க முடியாது இல்ல அது உனக்கு பொருத்தமாகவும் இருக்கணும் க்யூட்டாவும் இருக்குனும்” என்றதும்,
ஏலியன் ,”சரி ஒரு முடிவுக்கு வந்து என்னை எழுப்பு நான் அது வர தூங்குறகறேன் “என்று தூங்கி விட்டது.
லீலா தூங்கும் ஏலியன் பார்த்து, ‘இவன் ஏலியன் தானா இல்ல கும்பகர்ணனோட மறுபிறவியா எப்ப பாத்தாலும் தூங்கிக்கிட்டே இருக்கானே’ என யோசித்துக் கொண்டே அவன் முகம் பார்க்க....
அந்த முகம் ஏற்கனவே அவளுக்கு பரிச்சியமான முகம் போல இருந்தது இன்னும் நெருங்கி அவன் முகத்தை ஆராயவும் தான் தெரிந்தது அவன் முகமும் ஒரு பிரபலத்தின் முகமும் ஒன்று போல இருக்கிறதென்று...
கண்ணில் ஒளி மின்ன ஏலியனை ,”ஏய் எந்திரி.. எந்திரி...” எனக் எழுப்பவும்.
ஏலியனை அழைத்துக் கொண்டு கண்ணாடி முன்பு நிறுத்தியவள் அவனைப் பார்த்துக் கொண்டே “சித்தார்த் “என்றாள்.
இந்தப் பெயரைக் கேட்டு முகம் சுளித்த ஏலியன் ,”உனக்கு வேற பேரு கிடைக்கலையா ‘வ்வேக்’ நல்லாவே இல்ல”
உடனே லீலா,” அதெல்லாம் நல்லா தான் இருக்கு நீயும் நடிகர் சித்தார்த் போல தான் இருக்க.. இனிமே நான் உன்னை சித்தார்த்தன்னு தான் கூப்பிடுவேன்.... அது கூட வேண்டாம் ஷார்டா “சித்து” கூப்பிடுறேன் நல்லா இருக்குல்ல என்று அவள் குதூகலமாக சொல்லவும்,
ஏலியன் சலித்துக் கொண்டே “போடீ.. பைத்தியம்”என மறுபடியும் தூங்கி விட்டது.
ஏலியனை உலுக்கியவள் “எந்திரி “என்க
ஏலியன்,”ஏய்..குண்டு ... எனக்கு ரொம்ப தூக்கம் தூக்கமா வருது என்ன தொந்தரவு பண்ணாத "என்றது
உடனே லீலா,”அதெல்லாம் முடியாது ....தூங்கினது போதும் எழுந்து வா என் பிரண்ட்ஸ்க்கு உன்னை அறிமுகப்படுத்துறேன்”என்றாள் அடமாக
ஏலியன் ,”அதெல்லாம் முடியாது நான் தூங்குவேன் “என்று மீண்டும் தூங்கப்போனவனை சட்டையை பிடித்து இழுத்து “ஒழுங்கா என் கூட என் பிரண்ட்ஸ மீட் பண்ணவா” சாட்டமாக சொல்லிவிட்டு அவள் கீழே செல்ல கதவு வரை சென்றவளை அழைத்த, ஏலியன் “சரி வரேன் “என்றான்.
லீலா,” மறுபடியும் பொம்மையா மாறு “என்று சொல்லவும்.
ஏலியனுக்கு கடுப்பாக இருந்தது “ப்ச் முடியாது போ” என்றான்.
“இப்படியே உன்ன கூட்டிட்டு போக முடியாது நீ சின்னதானா உன்னை ஹேண்ட் பேக்ல போட்டுட்டு போவேன் “என்றதும்
ஏலியன் ,”ஏய் நான் என்ன ..நீ வாங்குன பொம்மனு நினைச்சியா...போடீ.. குண்டு” என தூங்க போக...
வயிற்றைப்பிடித்து சிரித்துக் கொண்டிருந்த சாண்டியை பார்த்து ,”டேய் இப்போ சிரிப்ப நிறுத்த போறியா இல்லையா ?”எனக் கேட்டாள் லீலா.
மாலதியோ ,”நீ சொன்னதெல்லாம் கேட்டு சிரிக்காம இருந்தா தான்டீ தப்பு.. எப்படி... எப்படி... பாட்டில்குள்ள பொம்மை இருந்துச்சாம்...இவள பாத்து ..நான் தான் ஏலியன்னு சொல்லுச்சாம் அடி போடீ... என்ன மாலதியும் சிரித்தாள்.
சாண்டியோ “நீ டிப்ரஷன்ல இருப்ப உன்னை சமாதானப்படுத்தலாம் தான் வந்தோம்.. ஆனா நீ என்னன்னா ஏலியன், பிளானட்னு கதை சொல்லிட்டு இருக்க நீ.. ஓவரா விண்வெளியை பத்தி ஆராய்ச்சி பண்ணி லூசு ஆயிட்ட போல ..என சிரிப்பினுடே கஷ்டப்பட்டு சொன்னான்.
பின், லீலாவின் கையில் இருந்த ஏலியனை வாங்கி பார்த்து “பார்க்க அப்படியே வெள்ள பவர் ரேஞ்சர் போல இருக்கு எந்த கடையில வாங்குன.. நான் தேடுனப்ப எல்லாம் கிடைக்கவே இல்ல.. என்றதும் அவனிடம் இருந்த ஏலியனை பறித்து லீலா தன் கைப் பையனுள் போட்டுக்கொண்டு இருவரிடம் பேசாமல் எழுந்து வண்டியை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள்.
மாலதி,”டேய் லூசு...அவ போற பாரு எல்லாம் உன்னால”என்றதும் அவளை முறைத்தவன் “ஏன் நீயும் தானா அவள வம்பு இழுத்த”என்றதும்.
மாலதி “வாய் பேசாம வண்டிய எடுடா “ என இருவரும் கோவித்துக்கொண்டு போன லீலாவை பின் தொடர்ந்து செல்ல,
லீலா வண்டியோட்டியபடியே திரும்பி “என் பின்னாடி வந்தீங்க உங்க சாவடுச்சுடுவேன்”என வண்டியின் வேகத்தைக்கூடி முன்னே செல்ல ,மலாதியும் சாண்டியும் தலையில் அடித்துக்கொண்டு அவளை பின் தொடர்தனர்.
இதே சமயம் போலீஸ் ஸ்டேஷனில் விக்ரம் பைலை பார்த்துக் கொண்டிருக்க..
அவன் எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த கணேஷ் விக்ரமை பார்த்து “துரோகம் பண்ணிட்ட இல்ல நட்புக்கு துரோகம் பண்ணிட்ட இல்ல “ எனக் கேட்கவும்..
நிமிர்ந்து கணேஷை பார்த்த விக்ரம் “நான் என்ன உனக்கு துரோகம் பண்ணிட்டேன் சொல்லு” என பைலை டேபிள் மீது வைத்தான்.
“இன்னும் என்னடா பண்ணும் காதலிச்சத சொன்ன.. கல்யாணம் பண்ணது சொன்னியா? எனக் கேட்கவும்,
விக்ரம் “தோணல “என இருக்கை விட்டு எழுந்து விட்டான்.
“அத்தாண்ட நானும் சொல்றேன்.. என்ன நீ பிரெண்டா நினைச்சுருந்தா.. எல்லாத்தையும் சொல்லி இருப்ப..ஆனா நீ அப்படி நினைக்கலா போல... நான்தான் முட்டாள் மாதிரி என் லைஃப்ல உனக்கு முக்கியமான இடம் கொடுத்து இருக்கேன்.. ஆனா நான் ஒப்புக்கு சப்பாணி தான் இல்ல” எனக் ஆதங்கமாக கேட்கவும்,
“ப்ச், என்ன சலித்த விக்ரம் “நீயா ஒன்ன நினைச்சிட்டு பேசாத ..சொல்ற அளவுக்கு அது ஒன்னும்..”என அவன் ஏதோ சொல்ல வர விக்ரம் ஃபோன் அலறியது..எடுத்து “ஹலோ”என்றான்.
மாலதி “டேய் முண்டம் அங்க பாரு “என அவன் தலையை திருப்பவும், சாண்டி கண்ட காட்சியில் அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டான்.
மாலதி காட்டிய திசையில் ...லீலா ஒரு குப்பை மேட்டில் விழுந்து கிடக்க ..வண்டி ஒரு புறம் இருந்தது ...தான் நண்பர்களை பார்த்ததும் ஹி..ஹி...ஹி என இளித்துவைக்க..மலாதி சிரித்துக்கொண்டே “சொல்லுற பேச்சு கேட்காம வந்த இப்பிடி தான் “என்றாள்.
கையை தட்டிவிடு எழுந்த லீலாவுக்கு ஏதோ தன்னிடம் குறைவது போல இருக்கவும்..தன்னை சுற்றி சுற்றி ஆராயிந்தாள்.. திரும்பி சாயிந்துகிடந்த வண்டியை தூக்கி எதையோ தேடினாள்...கிடைக்கவில்லை
மாலதி “என்னாச்சு லீ” என கேட்கவும்.
லீலா “என்னோட பேக் காணாம் ..எல்லாதுக்கும் அந்த வண்டிக்காரன் காரணம்“என கலக்கமாக சொல்ல,
சாண்டி”வண்டிக்காரன ..என சொல்லற நீ” என கேட்க, லீலா “ஆமா சாண்டி ..நான் வண்டியில வரும்போது ... ஒரு ஆம்புலன்ஸ் வேகமா என் வண்டிய தட்டிவிடு போச்சு...ஒருவேல பேக் அந்த வண்டியில மாட்டிக்கிச்சோ...”என அவனிடம் பேசிக்கொண்டே யோசித்தவள்...
தீடீரென பைத்தியம் போல “ஐயோ...சித்து” என கத்தியவள் கீழே விழுந்த வண்டியை எடுத்து உயிர்பித்து...யாரைபற்றியும் கவலை படாமல் ...வண்டியில் பறந்துவிட்டாள்...”லீ...லீ..லீ என்ன பண்ற ?..எங்க போற?..என அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் காற்றோடு போனது.
“இவளுக்கு என்னாச்சு சாண்டி” மாலதி கேட்க, “தெரியல மாலு...திருப்பி எங்கயாவது மாட்டிக்க போகற..வா அவள புடிக்கலாம் “என இருவரும் வண்டியில் அவளை பின் தொடர்ந்து செல்ல.. லீலாவோ புயல் வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு போக ...தன்னை சுற்றி என நடக்கிறது என்பதை அவதானிக்க மறந்துபோயிவிட்டாள். மனமுழுக்க “சித்து...சித்து...தான்” இதை பற்றி நண்பர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்..விளக்கம் சொல்ல நேரமில்லை என்பதால் யோசிக்காமல் கிளம்பிவிட்டாள்..சிறிது தூரத்திலேயே அந்த ஆம்புலன்ஸை பார்த்துவிட்டாள்.
சாண்டி கண்ணில் அவள் வண்டி தென்படவில்லை ..எங்கயோ முட்டுசந்தில் மூட்டிய உணர்வு ..மனதை தளர விடாமல் வேகமாக ...வண்டியை செழுத்த...
சிறிது தூரத்தில் லீயின் வண்டி தென்பட்டது...அந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சண்டை போட இறங்கி போனாள் ...
அவள் அருகே வந்தவன் “லீ ..என்னாச்சு “என கேட்கவும்
மாலதி இறங்கி போயி லீயின் கன்னத்தில் விட்டால் ஒரு அறை!!
லீலாவுக்கு எதுவும் உரைத்த மாதிரி இல்லை அவள் இலக்கு ‘சித்து தான்’
அந்த ஊர்திக்கு முன்னால் நின்ற லீலா ,”டேய் எவன்டா டிரைவர் இறங்குடா கீழே இது என்ன உங்க அப்பன் போட்ட ரோடா..”என இவள் பாட்டுக்கு பொரிய..
வண்டியில் இருந்து ஒரு சத்தம் கூட வரவில்லை ...குறைந்தபச்சம் வண்டியில் இருந்து வரும் இஞ்ஜின் சத்தம் கூட வரவில்லை ... அந்த வண்டியை பார்க்கவே மர்மமாக இருந்தது..
அங்கு நின்ற மூவருக்கும் ஒரு சத்தமும் கேட்க்கவில்லை..நிசப்த்தமாக இருந்தது.. கத்துவதை நிறுத்திவிட்டு மலாதிக்கூட... மொவுனமாக சுற்றி ஆராயிந்தாள்.. மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி... சிட்டியை விட்டு ரொம்ப தூரம் வந்ததை இப்போது தான் உணர்ந்தார்கள்..மத்திய நேரம் தான் இருந்தாலும்..மேகங்கள் சூழ்ந்து.. அந்த இடத்தையை காரிருள் கவ்விக்கொண்டது...ஒருவித அமனிஷியம் தங்களை சுற்றுவதை போல பிரம்மை...
லீலாவுக்கு தன்னை சுற்றி நடக்கும் விஷியங்கள் பயம்புருத்தினாலும்.. சித்து வேணுமே என மன சொல்ல .. தைரியத்தை வரவைத்து...வண்டியில் ஏற முற்பட... மலாதியும் சாண்டியும் லீலாவை பிடித்துக்கொண்டு “வா லீ இங்க இருந்து போலாம்” என்க அதை மறுத்த லீலா “இல்ல என்னோட சித்து இங்க தான் இருக்கான்.. அவன் இல்லாம வரமாட்டேன் “என அடம்பிடிக்கவும்,
மாலதி”லீ பயமா இருக்கு வா”என அழுதுவிடுவதைப் போல சொல்லவும், லீலா “சரி போலாம் அதுக்கு முன்ன வண்டியில ஒரு தடவ பார்க்கவா”என்றதும் மாலதி கொதித்துவிட்டாள்.. இருவருக்கும் சண்டை வர ...சாண்டி தான் ஒரு வழியாகிவிட்டான் .
இவர்கள் சண்டை போட்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தார்கள் விக்ரமும் கணேஷும்.
‘இந்த வனரா கூட்டம் இங்க என பண்ணுது ‘என கணேஷ் யோசிக்க, அதற்க்குள் விக்ரம் சாண்டியிடம் “நீங்க மூனுபேரும் இங்க என்ன பண்ணறீங்க” என கம்பீரமக போலீஸ் தோரணையோடு கேட்கவும் மலாதிக்கும் சாண்டிக்கும் பயம் தான் இருப்பினும் ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தது.
“சொல்லுங்க..இங்க என்ன வேல உங்களுக்கு”கேள்வி அனைவருக்காங்க இருந்தாலும்..
பார்வை என்னவோ லீலாவிடம்.. யாரும் பேசவில்லை ...
லீலாவே ஆரம்பித்தாள்..”விக்...” என்றவள் விக்ரமின் அனல்தகிக்கும் பார்வையில்....”சார் “என மாற்றி, நான் வண்டியில வரும்போது இந்த ஆம்புலன்ஸ் என்னோட வண்டியை இடுச்சுட்டு..போயிடுச்சு ...என்னோட பேக் வேற காணாம்.. இங்க தான் வண்டியில இருக்கும் ...அதன் வண்டிய ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டோம் ...என்றதும் கண்களை சுருக்கி லீலாவை பார்த்து “மூளை இருக்கடீ உனக்கு..வண்டி இடுச்சா.. பேக் கீழ தான் விழுகும் ..எப்பிடி இந்த வண்டியில இருக்கும்” என லீலாவை முட்டாள் போல பேசவும் அம்முணிக்கு கோவம் வந்து விட்டது ..”இல்ல சார் .. பேக் வண்டியில மாட்டுனத கவனிச்சேன்”..
“இல்லனா...என்னடீ பண்ணுவ..”அவளை மேலும் கீழும் பார்த்தவன் “டப்பா சைஸ்ல இருந்துகிட்டு ஓவரா ஆடுற” என இருவருக்கு சண்டை வர ...
மர்மம் நிறைந்த அடர்ந்த காட்டில் ,இலைகளின் இடையே இரு சிகப்புநிற விழிகள்.. அவர்களை தீண்டியது..
விக்ரம் லீலா சண்டையிட ...மாலதியும் சாண்டியும் தலையில் கை வைத்துக் கொண்டார்கள்..
கணேஷ் ‘ரெண்டு பெரும் சண்டயா போடுறங்க என சந்தேகமாக பார்க்க, லீலாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்த விக்ரம் டென்ஷன் தலைக்கு ஏற, “ஷுட் அப்.....”என காடே அதிர கத்தினான்.
கணேஷ் "சார் ... "என பதட்டமாக கேட்கவும், "வண்டிய செக் பண்ணு"என்றவன் லீலாவை முறைத்தபடி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
வண்டியை முழுவதும் சுற்றி ஆராயிந்தவன்..சைடு கம்பியில் மாட்டியிருந்த லீலாவின் பேக்கை எடுத்து வந்து "சார் "என விக்ரமிடம் நீட்ட ...பாய்ந்து வந்து ..பையை பிடுங்கிக்கொண்டாள் லீலா...
கைப்பையை செக் பண்ண லீலா தன் பையை கொடுக்க மறுத்தாள் பிடுங்கி வாங்கிய விக்ரம் கைப்பையில் உள்ளே தேட ...ஏலியன் பொம்மை கையில் சிக்கியது ..அதைப் பார்த்து லீலாவை முறைத்து மனசுல 'சின்ன குழந்தைனு நினைப்பு' என திரும்பவும் அதை பையில் போட்டு அவளிடம் நீட்டினான். எதிர்த்து எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டாள்.
விக்ரம் லீலாவை முறைத்து " இது ரெஸ்ட்ரிக் ஏரியா இங்க எல்லாம் வரக்கூடாது... நீங்க சிட்டிய தாண்டி ஒரு காட்டுப்பகுதிகுள்ள வண்டி விட்டு இருக்கீங்க இப்ப நினைச்சா கூட உங்க மூணு பேரையும் அரெஸ்ட் பண்ண முடியும் ...விக்ரம் சொன்னதும் ..சாண்டிக்கும் மலாதிக்கும் கைகால் நடுங்கியது .. லீலா அவன் பேச்சை அலச்சியம் செய்ய,விக்ரம் கை முஷ்டியை முறுக்கினான்.
அவர்கள் போவதை பார்த்துக்கொண்டு இருந்தான் விக்ரம் , "ஓ மை காட்" என கணேஷ் அதிர்ச்சியில் உறையவும்..
சத்தம் கேட்டு திரும்பியவனின் கண்களிலும் அதிர்ச்சி...பேரதிர்ச்சி!!
இவ்வளவு நேரமும் அங்கு நின்று இருந்த அந்த ஆம்புலன்ஸ் இப்பொழுது அங்கு இல்லை .. சந்தேகமாக வண்டி நின்ற இடத்தில் வந்து பார்க்கவும் வண்டி அந்த இடத்தை விட்டு போனதுக்கான சக்கரத்தின் அச்சு ..வண்டி நின்ற இடத்தோடு முடிந்து விட்டது...சொல்ல போனால் வண்டி மறைந்து போனது போல இருந்தது...
வண்டி நகர்தற்க்கான ..அடையாளம் இல்லை ..வண்டியும் இல்லை ..இருவருக்கும் இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.. திகைத்து விழித்தனர் ..அதுவரை அமைதியாக இருந்த காடு..இப்பொழுது பயபுருத்தியது...
கணேஷ்க்கு பயத்தில் நெஞ்சன்கூட்டு ஏறி ஏறி இறங்கியது..விக்ரமுக்கு பயம் இல்லை என்றாலும் எப்படி சாத்தியம்..என யோசனையில் ஆழ்ந்தான்..காட்டுக்குள் முன்னேறினான் ..அவன் கையை பிடித்து தடுத்த கணேஷ் "போலாம் விக்ரம் "என நடுங்க ..."ப்ச்..வெக்கமா இல்ல போலீஸா இருந்துகிட்டு பயப்படுற"என பேச்சு அவனிடம் இருந்தாலும் பார்வை காட்டை அளந்தது..
கணேஷிடம் இருந்து மொவுனம் , திரும்பி பார்க்கையில் கணேஷ் மயங்கிய நிலையில் இருக்க , பதறிப்போனவன் "கணேஷ் ...டேய் கணேஷ் "..என அழைத்தும் அவனிடம் ஒரு அசைவும் இல்லை... சற்றும் தாமதிக்காமல்.. கணேஷை தூக்கி காரில் போட்டு கிளம்பிவிட்டான்.
மரக்கிளைகளில் , இலையின் மறைவில் இருந்த உருவம் ... தன் சிவப்பேறிய கண்களால் போகும் அவர்கள் பார்த்து விட்டு ..கைகளில் வழிந்த ரத்த துளிகளை .. நாவை சுழற்றி ருசிபார்த்தது ...
அடுத்தநாள் காலை,
ஹாஸ்பிடலில் , பெட்டில் அமர்ந்து ஆப்பிளை கடித்துக்கொண்டு இருந்த கணேஷை ,எதிரில் அமர்ந்து முறைத்து தள்ளினான் விக்ரம்.
அதே சமையம் பார்க்கில் , லீலாவை குற்றவாளி போல நிற்கவைத்து ..எதிரில் சாண்டியும் மலாதியும் அமர்ந்து கேள்விகளால் துளைத்தார்கள்.
"நீயெல்லாம் ஆம்பிள்ளையா ?" என விக்ரம் கேட்க ,நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தனே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை .."இங்க பாரு நாம புடிக்க போனது கடத்தல் வண்டி ..இப்போ காணாம்" குறுக்கிட்ட கணேஷ் "காணாம போகல ...மறைஞ்சு போச்சு .."என்றதும்
தலையை பிடித்துக்கொண்ட கணேஷ் "எனக்கு நியாபகம் இல்லடா..கடைசியா ...நீயும் லீலாவும் போட்ட சண்டை தான் நியாபகம் இருக்கு "என சொல்லவும் . நெற்றியை தேயித்த விக்ரம்.. பெரும் மூச்சுவிட்டு எழுந்து ,ஜன்னல் அருகே போயி நிற்க்க, அவனை திரும்பி பார்த்த கணேஷ் "நான் கடைசியா ...உன் கண்ணுல லீலாவுக்கான காதல பார்த்தேன் ... உதடு திட்டுது..கண்ணு ரசிக்குது "என்றதும் விக்ரம் உடம்பில் கொஞ்ச கொஞ்சமாக..உஷ்ணமேறியது...உடல் கொதிக்க ஜன்னல் கம்பிகளை இறுக்கி பிடித்தான் ..கொஞ்சம் விட்டால் இரும்பு கம்பிகளும் உருகி இருக்கும் அப்படி ஒரு கொதிப்பு அவன் நெஞ்சினுள்.....
மாலதியும் சாண்டியும் வந்து ரொம்ப நேரமாகியும் லீலா பேசாமல் இருக்கவும் , அவளை முறைத்துக் பார்க்க ,
லீலாவதியோ ,"இப்ப என்ன நடந்து போச்சுன்னு நீங்க ரெண்டு பேரும் இப்படி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கீங்க எனக் கேட்க, மாலதி கொதித்து விட்டாள் " எது ..என்ன நடந்து போச்சுன்னு வேற கேக்குறியா நீ .. உனக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்குடி... ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லி இருக்கியா?" எனக் கேட்கவும் லீலா தலை குனிந்து விட்டாள். சாண்டியோ ,"பேசுடி வாயை திறந்து பேசு "என இருவரும் அவளை மாறி மாறி கேள்விகளால் துளைக்க எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தால் லீலாவதி.
இங்கு ,விக்ரம் "நீயா ஒன்ன நெனச்சிட்டு பேசாத ..சொல்ற அளவுக்கு அது ஒன்னும் பெரிய விஷயமும் இல்லை.."
கணேஷ் ,"ஏண்டா கல்யாணம் உனக்கு சாதாரண விஷயமா போச்சா" என கேட்டான்.
இப்படி ..ஒரே சமயத்தில் ..
இருவரின் நண்பர்களும் அவர்களை கேள்விகளால் கட்டம் கட்டவும்
இருவரும் ஒரு சேர ...
"நடந்தது ஒரு மருத்துவ கல்யாணம்" என என சொல்லவும்,
மாலதியும் சாண்டியும்" இப்படி ஒரு கல்யாணமா" என வாயை பிளக்க ..
அங்கு, கணேஷ் "இப்படி ஒரு கல்யாணமா நான் கேள்விப்பட்டது இல்லையே" குதரக்கமாக அவனைப் பார்த்து கேட்டான்.
விக்ரமோ அவனைப் பார்த்து," நம்புடா சத்தியமா அது மருத்துவ கல்யாணம்தான் " என்றான். கணேஷ் அவனை நம்பாமல் பார்த்தான் என்றால்..
இங்கு மாலதியும் சாண்டியும் லீலாவை அதிர்ச்சியாக பார்த்தார்கள்.
"சரி சொல்றேன் கேட்டுக்கோங்க " என லீலாவும் விக்ரமும் ஒன்று போல சொல்லி தங்கள் கடந்த நினைவலைகளுக்குள் ஒன்றாக அடி எடுத்து வைத்தார்கள்..
காலத்தின் சுழற்ச்சியில் நல்லவை ,கெட்டதாக தெரியும்..கெட்டது என நினைத்தது ஒதுக்கியவை அனைத்தும் நல்லவையாக மாறும் ..தர்மம் மட்டுமே நிலையானது..
அகலபாதாளத்தில் தள்ளி அடைத்தாலும்.. சரியான நேரத்தில்.. தடைகளை வெடித்து சிதறி .. மேலே வந்து தன்னை நிலைநாட்டிக்கொள்ளும் தர்மம்.
பைக்குள் இருந்த ஏலியன் ஓட்டை வழியாக லீலா சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான் ,”ஓ.. இந்த மூஞ்சிக்கு ஃபிளாஷ்பேக் எல்லாம் வேற இருக்கா” என நக்கல் அடித்தபடியே ஓட்டை வெளியாக கையை விட்டு லீலாவின் முடியை பிடித்துக் கொண்டான்.
சித்து முடியை பிடித்ததும்...லீலாவின் நினைவலைகள் மூளையிலிருந்து அவள் முடி வழியாக..சித்துவிடம் சேர்ந்தது...
இங்கே லீலா சொல்ல சொல்ல அது நம் சித்துவுக்கு காட்சியாக தெரிந்தது.. ஏதோ டிவியை பார்ப்பது போல கால் மேல் கால் போட்டு ஹேண்ட் பேக்கினுள் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தான் சித்து.
இனி நாம் ஏலியனை ‘சித்து ‘என்றே அழைப்போம்...
சில வருடங்களுக்கு முன் ....
பொள்ளாச்சியில் பிறந்து வளந்த ராஜவேலுக்கு ஜாதகத்தின் மீது நம்பிக்கை அதிகம், பாக்கியத்திற்கு கணவனின் மீது நம்பிக்கை அதிகம்.. இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் இருவருக்குள்ளும் அப்படி ஒரு பிடிப்பு இருந்தது.. கணவன் என்ன செய்தாலும் நன்மை மட்டுமே இருக்கும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்திருந்தார் பாக்கியம்.
அவர்களின் காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக முதலில் ரேவதி பிறந்தாள்.. இருவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம்.. ராஜவேலு தன் ஆஸ்தான ஜோதிடர் சேதுராமனிடம் ரேவதியின் பிறந்த தேதியை காட்ட... அவர் நல்ல ராசியான குழந்தை.. படிப்பு, வேலை , விளையாட்டு என அனைத்திலும் முதலாவதாக வருவாள்..இவள் பிறந்த இடம் செழிக்கும் .. புகுந்த வீடு பணத்தால் உயரும் .. இவளால் குடும்பத்துக்கே பெருமை சேரும்.. என்று சொல்ல ராஜவேலுக்கு பொருமை பிடிபடவில்லை.. ராஜவேலு பாக்கியம் இருவரும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தனர்.
மாதங்கள் செல்ல பாக்கியலட்சுமி இரண்டாம் முறை கர்ப்பம் தரித்தார்.. நன்றாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் முதல் இடியாக ராஜவேலுவிற்கு வேலை போனது.. மனம் தளராமல்.. ஆடைகளை தயாரிப்பு தொழிலை ஆரம்பித்தார்.. சேதுராமனின் சொல்படி .. தன் செல்ல மகள் ரேவதியின் பெயரை அதற்கு வைத்தார் .. ஆரம்பித்தில் நன்றாக வளர்ந்து சென்றது.. பின் வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது.. ஊரிலும் மரியாதை குறைந்தது.. வீட்டிலும் பாக்கியத்துடன் சண்டை என பெரிய மன உளைச்சதிற்கு ஆளானார் ராஜவேலு.
ஒரு நாள் ராஜவேலு போன கார் விபத்துக்குள்ளானது.. இதைச்செய்தியை கேட்ட பாக்கியத்திற்கு அதிர்ச்சியில் பிரசவ வலி ஏற்பட்டது.. கணவனின் விபத்து.. உடல் வலியுடன் சேர்ந்து மன வலியுடன் தன் இரண்டாவது மகள் லீலாவதியை ஈன்றெடுத்தார்.
பிறந்த பிஞ்சு குழந்தையை பார்க்க மறுத்தார் .. முதலில் தன் கணவனிடம் அழைத்துப் போங்கள் என ஆர்ப்பாட்டம் செய்தார்.. ராஜவேலு உடல்நிலை தேர தேர சிறிது ஆசுவாசம் அடைந்தார் பாக்கியம்.
இருப்பினும் மகளைக் கண்டு கொள்ளவில்லை.. ராஜவேலுவின் தாய் விசாலாட்சி தான் பார்த்துக் கொண்டார்.. உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்த ராஜவேலு பிறந்த குழந்தையை பார்க்க மறுத்தார்.. தன் உயிரை எடுக்க வந்த எமன் என நாக்கில் நரம்பில்லாமல் அந்த பிஞ்சு மீது பலியை சுமத்தி வெறுத்தார்.
ராஜவேலு குழந்தையை கண்டுகொள்ளவில்லை.. இந்த நேரத்தில் தான் எவ்வளவு பெரிய தவறு செய்தோம் என்று உணர ஆரம்பித்தார் பாக்கியம் . பிரசவ நேரத்தில்.. மனம் தடுமாறி செய்த ஒரு விடையம் ..பின் நாட்களில் பூதாகரமாக தெரிய ஆரம்பித்தது .. பச்ச குழந்தை தாயை தேடாமல்..பாட்டியிடம் ஒட்டிக்கொண்டது .. மனம் நொந்துப்போனார் பாக்கியம்.
ராஜவேலு உடல் தேறி முதல் வேலையாக சேதுராமன் இடம் லீலாவதியின் ஜாதகத்தை பார்க்கச் சொன்னார்.. அவருக்கு நம் லீலாவின் மீது என கோவமோ .. வாழ்க்கையில் லீலாவுக்கு.. தகப்பன் பாசமே கிடைக்காதவாரு செய்துவிட்டார்..
சின்ன மகளால் தகப்பனுக்கு ஆபத்து வரும்.. அவள் கால்வைத்த இடம் விளங்காது .. அவள் பார்வை பட்டால் ..பச்ச மரம் பட்டு போகும் ..ஏன் உயிர் பலிகூட நேரலாம் ..மேலும் படிப்பு வராது .. இவள் உனக்கு பெருமையை தேடி தரமாட்டாள் .. இவளால் எப்பொழுதும் உனக்கு அவமானம் தான் ..என கணித்து கூறி ..சிறியதாக இருந்த வெறுப்பை .. பெரியதாகிவிட்டார் ..
இப்பொழுது , ராஜவேலு முற்றிலுமாக லீலாவை வெறுத்து ஒதுக்கிவிட்டார் ..அவரை பொறுத்தவரை ரேவதி மட்டுமே அவரின் மகள் ...
எனவே ,லீலாவை தன் தாயுடன் கிராமத்தில் விட்டுவிட்டார் .. பாக்கியவுக்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை என்றாலும் சம்மதித்தார் .. அருகில் லீலாவை வைத்துக்கொண்டு ரேவதியை ராஜவேலு கொஞ்சுவார் ..விளையாடுவார் .. லீலாவின் பார்வை அவர்களின் மீது ஏக்கமாக படியும்.. பிஞ்சு உள்ளம் அதை ஏற்க்காமல்..கதறும், பாக்கியம் குழந்தையை தூக்கினாலும் விடமாட்டார் ராஜவேலு...வேலைகார்களிடம் லீலாவை பாத்துக்கொள்ள சொல்லிவிடுவார் ...
பாக்கியம் அவரின் தாப்பை சுட்டிக்காட்டியும் அவர் திருந்தவில்லை .. பாசம் காட்டிய பாக்கியத்திடம் “உனக்கு புருஷன் முக்கியமா..இல்ல அவளா?”என பெத்த குழந்தையை எதிரி போல பார்க்கவும் ...இங்கே லீலா இருந்தால் ..அவளுக்கு நிம்மதி இருக்காது ..அவர் விடமாட்டார் என்பதால் ...லீலாவை விசாலசியுடன் அனுப்ப சம்மதித்தார் ...
லீலாவதி தன் பாட்டியுடன் கிராமத்தில் செல்லபேத்தியாக சந்தோஷமாக வளர்ந்தாள்.. ஊரில் உள்ளவர்கள் அவளின் ஜாதகத்தை வைத்து தூற்றி..ஒதுக்கிவைத்தாலும் .. அவள் அதையெல்லாம் அலச்சியமாக புறக்கணித்துவிட்டு சந்தோஷமாகவே சுற்றி வந்தாள்.. இதற்க்கு காரணம் விசாலாட்சியின் வளர்ப்பு தான்...
விசாலாட்சி அந்த காலத்திலேயே .. மூடநம்பிக்கைகளை உடைத்தவர்.. கணவன் இறந்தபின் தாலியை தவிர எதையும் மாற்றிக்கொள்ளவில்லை.. கலர் புடவை உடுத்துவார் ...நல்ல பெரிய பொட்டாகவே வைப்பார் .. இப்படி வைக்கக்கூடாது என சொல்லுபவர்களுக்கு ... “இந்த புடவை ..பொட்டு.. எல்லாம் என்னோட உரிமை .. பிறந்தது முதல் என்கூடவே இருக்கு .. நடுவுல வந்தவர்க்காக ..இத என்னால விட முடியாது .. அவரோட அடையலாமா இருக்கிறது தாலி மட்டும் தான.. என தாலியை துறந்தவர் .. அவர் உரிமையை தரவில்லை .. பல ஆண்களின் இச்சை பார்வையை ..தன் நேர்கொண்ட பார்வையால் பொசுக்கியவர்.. இருப்பு மனுஷியாக தன் இரு பிள்ளைகளை வளத்தவர் ..இந்த விசாலாட்சி!! அவரின் வளர்ப்பு பொய்யாகுமா .. அவரைப் போலவே வளர்த்தாள் லீலாவதி...
அடிக்கடி பாக்கியம் ரேவதியுடன் லீலாவை பார்த்து செல்வார்.. ரேவதிக்கும் லீலாவுக்கும் நல்ல பாசபிணைப்பு உண்டானது ..இருப்பினும் அவர்களிடம் இருந்து தன்னைத் தானே ஒதுக்கிக்கொண்டாள் லீலா..
ராஜவேலு மட்டும் லீலாவை பார்ப்பதை தவிர்த்தார் ...
விசாலாட்சிக்கு இரண்டு பிள்ளைகள் ..மூத்தவன் ராஜவேலு, இளையவள் மங்கை .. அண்ணன் தங்கை இருவரும் பாசமாலர்கள் .. தங்கச்சிக்கு ஒன்று என்றால் ராஜவேலு தங்கமாட்டார் ... நல்ல வசதியான குடும்பம் என்றாலும்..உலகத்தை அறிய .. மகனை வெளியுருக்கு வேலைக்கு அனுப்பினார் .. மகளை நர்சிங்குக்கு படிக்க வைத்தார் .. பெண்களுக்கு கல்வி அவசியம் என்று சொல்லி சொல்லி வளர்த்தார் ...
என்ன சொல்லி வளர்த்தாலும் சில நேரங்களில் .. விதி வென்றுவிடுகிறது ..
வயதுகோளறு காரணமாக படிப்பைவிடுத்து காதலில் விழுந்தார் மங்கை ..அவர் வேலை செய்யும் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்த குருமூர்த்தி மீது காதலில் கரைந்து.. மூன்று மாத கரு .. மங்கை வயிற்றில் வளர ..வேறு வழி இல்லாமல் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்...
விஷியம் அறிந்த விசாலாட்சி கொதித்துவிட்டார்..காதலுக்கு என்றும் அவர் எதிரி இல்லை ...ஆனால் எதிர் காலத்தை சூனியமாக்கிக்கொண்டு காதலிப்பதை அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் .. ராஜவேலுக்கு தங்கைமீது வருத்தம் இருந்தாலும்.. மங்கைமீது கொண்ட பாசத்தால் ..தாயிடம் பேசிப்பார்த்தார் ..விசாலாட்சி அசையவில்லை... மங்கையையும் குருமூர்த்தியையும் வேணும் என்றே அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார் .
குருமூர்த்திக்கு கோவம் வந்து ..மங்கையை அழைத்துக்கொண்டு சென்னை சென்றுவிட்டார்..குருமூர்த்திக்கு சொந்தம் என்று யாரும் இல்லை ..ஒரு ஆசிரமத்தில் தான் வளர்ந்தார்.. மங்கையின் காதலால் ..ஒரு குடும்பம் தனக்கு கிடைக்க போகிறது என சந்தோஷபட்டார்.. ஆனால் விசாலாட்சி அவமானப்படுத்தவும் .. இரவு பகல் பாராது உழைத்து..ஒரு மருத்துவமனை காட்டினார் ..பின் ஒண்ணு ..இரண்டு ஆனது.. இப்பொழுது பல கிளைகளாக பிரிந்து மங்கை மருத்துவமனை , மங்கை டிரஸ்ட் , மங்கை ஃபவுண்டேஷன் ...என ஒரு சாம்ராஜியமாகவே உருவாகிவிட்டது ..
இதற்க்கு நடுவில் பலமுறை தூது அனுப்பியும் வர மறுத்துவிட்டார்கள் ..மங்கயும் குருமூர்த்தியும் ...
தன்னை அவமதித்த இடதுக்கு மறுபடியும் போக குருமூர்த்திக்கு மனமில்லை ..இருப்பினும் குருமூர்த்தியோ, குடும்பத்தின் அருமை பெருமைகளை பற்றி சொல்லி மங்கையை போக சொன்னாலும் ...உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்துல நான் இருக்கமாட்டேன் என்றார் மங்கை ..
இப்பிடி கண்ணம்பூச்சி ஆடிக்கொண்டு நாட்கள் பறந்தோட .. தீடீரென்று விசாலாட்சிக்கு உடம்பு முடியாமல் போனது ..ராஜவேலு துடித்து போய்விட்டார்... அனைத்துக்கும் காரணம் லீலா தான் என்று அவளை திட்டி தீர்த்துவிட்டார் .. வீட்டை விட்டு வெளியே அனுப்ப முனைந்தபோது .. உடல் பலவீனத்திலும் விசாலாட்சி, பேத்திக்காக பேசி தன்னுடன் வைத்துக்கொண்டார்.
ராஜவேலு தன் தொழில்களை பார்க்க ஆட்களை நியமித்து வைத்துவிட்டு .. குடும்பத்துடன் பொள்ளாச்சியில் தங்கிவிட்டார் ..அவர் வந்ததில் இருந்து ..லீலாவின் நிம்மதி பின் வாசல் வழியாக சென்று விட்டது .. ஒரு மகளா அல்லாமல் ...வேலைக்காரியை போன்று நடத்தினர் ..ஏற்க்கனவே லீலாவை பார்த்தால் மற்றவேலையாட்கள் இளக்காரம் பண்ணுவார்கள்.. இப்பொழுது ராஜாவேலுவின் நடவடிக்கையால்..லீலாவின் மரியாதை அகல பாதாளத்தில் போனது...
இந்த நேரத்தில் தான் மங்கை தன் மகன்களை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி வந்து சேந்தார்..