வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"மலராதோ மதி வதனம்!" கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம்: 5

சஞ்ஜனாவின் கேள்வியில் முகம் வெளுத்து அமர்ந்திருந்த வெண்ணிலாவின் மனதில் ஒரு ப்ரளயமே நடந்தது கொண்டிருந்தது . கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைத்தவளுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வர, மூச்சி விடுவதற்கு சிரமபட்டவள், அதற்கு மேல் அங்கே இருக்க முடியாதவளாய் எழுந்து செல்ல போக,

"நிலா இந்தா மா தண்ணீர்!" என்ற அரிச்சந்திரரும், அவள் நிலை அறிந்தது போல் தண்ணீருடன் வந்தார்.

அவர் கண்களில் இருந்த கண்டிப்பே 'நீ வெளியே செல்ல கூடாது. இந்த நிலையை கடந்து தான் ஆக வேண்டும்' என்று சொல்லாமல் சொல்ல,

அவர் பார்வையை தாண்டி செல்ல முடியாதா வெண்ணிலாவும் அமர்ந்து விட்டாள்.

அரிச்சந்திரரிடம் இருந்து தண்ணீரை வாங்கிய சஞ்சனா "சாரோட அம்மா இல்லையா சார்? நீங்களே தண்ணீர் கொண்டு வரிங்க!" என்று கேட்க,

"அவங்க சொந்தக்காரங்க கல்யாண வீட்டுக்கு போய் இருக்காங்க. அவங்க இருந்தாலும் நான் தண்ணீர் எடுத்து தருவேன். அதுல தப்பேதும் இல்லையே மா" என்றார்.

"ஆமா சார்..." என்ற சஞ்ஜனா சிறிது வியப்புடனே அவரை பார்த்தாள்.

"சரி மா. அவன் இப்போ வருவான். நீங்க பேசுங்க. எனக்கு வெளிய வேலை இருக்கு போய்ட்டு வரேன்..." என்றவர் கிளம்ப போக,

அதுவரை சற்றே திட்டமாய் இருந்த வெண்ணிலா, அவர் வெளியே செல்கிறார் என்றதும் சஞ்சலத்துடன் அவரை பார்த்தாள்.

அதில் "போகாதிங்க" என்ற கெஞ்சலும் கலந்தே இருக்க,

கண்ணில் கண்டிப்பை காட்டிய அரிச்சந்திரர் அவள் பறிதவிப்பதை பார்த்தும் அப்படியே சென்று விட தோன்றாமல் அவளை ஆறுதலாய் பார்த்தவர் அவர் அறைக்குள் சென்று விட வெண்ணிலாவிடம் சற்றே நிம்மதி.

சில நிமிடங்களில் அறையில் இருந்து வெளியே வந்த இளங்கதிரவனுக்கும் வெண்ணிலாவை அவன் வீட்டில் பார்த்தது சற்றே வியப்பு தான். ஆனால் அவள் அமர்ந்து இருந்த நிலையே அவள் பிடித்தமின்மையை காட்ட,

அவள் அவஸ்த்தையை வெகுவாய் ரசித்தபடி வந்தவன் வரவேற்பாய் சிறு தலை அசைப்புடன் அவர்கள் முன்னே அமர்ந்தான்.

அவன் தலை அசைப்பை பார்த்து புன்னகைத்த சஞ்ஜனா "வணக்கம் சார் நான் சஞ்ஜனா. இவ என் ப்ரெண்ட் வெண்ணிலா. நான் உங்களை பார்த்து நன்றி சொல்ல வந்தேன்" என்று சொல்ல,

"எதுக்கு நன்றினு தெரிஞ்சிகலாமா? இப்படி மொட்டையா நன்றினு சொன்னா... நான் எப்படி எடுத்துக்குறது?" என்ற இளங்கதிரவன் பார்வை வெண்ணிலாவிடம் நிலை கொண்டிருந்தது.

"நேற்று நீங்க தீர்ப்பு வாங்கி தந்த கேஸ் என் அக்காவோடது தான் சார். இவ்வளவு நாளும் என் அக்காவுக்கான நியாயம் எப்போ கிடைக்கும்னு ஏங்கிட்டும், கிடைக்காமலேயே போய்டுமோன்னு தவிச்சிட்டும் இருந்தேன். ஆனா... இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார். அதுக்கு காரணம் நீங்க தான். அதான் உங்களுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்" என்ற சஞ்ஜனா உணர்ச்சி பூர்வமாய் சொல்ல,

"இந்த கேஸூக்காக தான் நன்றி சொல்ல வந்திங்கனா! அது தேவை இல்லாதது. அது என்னோட வேலை. அதை சரியா செய்ய வேண்டியது என் கடமை" என்றான் இளங்கதிரவன்.

"எல்லா போலீஸூம் உங்களை மாதிரி இருந்துட்டா நாடு சீக்கிரம் நல்லாகிடும் சார். ஆனா... யாரும் அப்படி இருக்குறது இல்லை. உங்களுக்கே தெரியும்! உங்களுக்கு முன்னாடி இந்த கேஸை எத்தன பேர் எடுத்தாங்கனு. ஆனா... யார்கிட்டேயும் நேர்மை என்கிற ஒன்னு இல்லை. பணம் தான் பெரிசா இருக்குது. ஆனா நீங்க நேர்மையா இருந்து தீர்ப்பு வாங்கி தந்து இருக்கிங்க, உங்க நேர்மைக்கே உங்களுக்கு நன்றி சொல்லலாம் சார்" என்ற சஞ்சனா சின்ன சிரிப்புடன்‌ சொல்ல,

"நல்லா பேசுறிங்க. வெண்ணிலா ப்ரெண்டுக்கு பேசவா சொல்லி தரனும்! சரி என்ன குடிக்குறிங்க? டீ ஆர் காஃபி? இல்லை லஜ் னாலும் ஓகே" என்றான் சிரிப்புடன்.

அதுவரை அவன் பார்வையை தவிக்க வேறு பக்கம் பார்த்தபடி இருந்த வெண்ணிலா, அவன் உபசரிப்பில் சட்டென எழுந்து கொண்டவள் "எதுவும் வேண்டாம். நாங்க கிளம்புறோம்.சஞ்சு வா போலாம்..." என்று பல்லை கடித்துக்கொண்டு தோழியின் கை பற்ற,

"ஏய் இருடி. பேசிட்டு போலாம். சும்மா அவசரப்பட்டுக்கிட்டு" என்று வெண்ணிலாவை கடிந்த சஞ்ஜனா "ஏன் சார் கூல்டிரிங்ஸ் எல்லாம் தர மாட்டிங்களா? டீ காஃபி தானா! பாருங்க இவ இப்பவே சூடா தான் இருக்கா" என்று வெண்ணிலாவை காட்டி கிண்டலாய் சொல்ல,

"ம்... பார்த்தாலே தெரியுது. இருங்க எடுத்துட்டு வரேன் "என்று இளங்கதிரவன் எழுந்து சென்றான்.

அவன் ஹாலை தாண்டும் வரை பொறுமை காத்த வெண்ணிலா "சஞ்சு திஸ் இஸ் டூ மச்! தேங்க்ஸ் சொல்லனும்னு சொன்ன. அதான் சொல்லியாச்சி இல்ல! கிளம்பாம இது என்னடி இங்கேயே உக்கார்ந்து இருக்க? உனக்கு என்ன கூல் ட்ரிங் வேணும் அவ்வளவு தானே? வா... நான் வாங்கி தரேன்" என்று கோபத்தில் கத்தியபடி மீண்டும் சஞ்ஜனா கை படித்து இழுக்க,

"நீ தான் டூ மச் ஆ பண்ற நிலா. என்ன பிரச்சனை உனக்கு? உனக்கும் கதிரவன் சாருக்கும் ஏதும் சண்டையா?" என்று கேட்ட சஞ்ஜனா தோழியை நிதானமாய் பார்க்க

"அவனோட எனக்கு என்ன சண்டை? அதெல்லாம் இல்லை" என்றாள வெண்ணிலா தினறலுடன்.

"அப்பறம் ஏன் இவ்வளவு கோபம்? பதட்டம்? ‌மரியாதை இல்லாத பேச்சு?" என்ற சஞ்ஜனா இன்னும் வெண்ணிலாவை சந்தேகமாய் பார்த்து வைக்க,

"அதான் முதல்லயே சொன்னேனே! ஊர் பேச்சு சின்ன வயசுல இருந்தே அவன் இவன்னு பேசி பழகிட்டு. வேற எதுவும் இல்லை" என்ற வெண்ணிலா எரிச்சலும் கோபமுமாய் கூற,

"என்ன நிலா அதுக்குள்ள கிளம்பியாச்சா? ஜூஸ் குடிச்சிட்டு போ.." என்ற கதிரவன் நக்கலுடன் இயல்பு போல் வெண்ணிலாவிடம் கூற

அவனை திரும்பி பார்த்த வெண்ணிலாவின் கண்களில் அனல் பறந்தது ஆனால் அதை அலச்சியம் செய்த இளங்கதிரவன் இருவருக்கும் ஜூசை ஊற்றி கொடுத்தவன் அவனுக்கு ஊற்றி கொண்டு அமர,
வெண்ணிலாவிற்கு நெருப்பில் நிற்பது போல் இருந்தது.

"நிலா என்னடி?" என்ற சஞ்ஜனா கதிரவன் அறியாமல் வெண்ணிலாவை முறைக்க,

"எனக்கு ஜூஸ் குடிக்க மூட் இல்லை சஞ்சு. ப்ளீஸ் கிளம்பலாம் வா" என்றாள் ஒரு வித பிடிவாதத்துடன்.

அவள் அவஸ்தையையும் கெஞ்சலையும் மிகவும் ரசித்த இளங்கிதிரவன் வெண்ணிலாவை இன்னும் தவிக்க விட நினைத்து "அப்பறம் சொல்லுங்க சஞ்ஜனா என்ன படிக்குறிங்க? படிப்பெல்லாம் எப்படி போகுது?* என்று சஞ்ஜனாவிடம் பேச்சை வளர்க்க,

"நல்லா போகுது சார். நானும் பிஎஸ்சி மேக்ஸ் தான் படிக்குறேன். வெண்ணிலாவும் நானும் கிளாஸ் மேட் அன்ட் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்" என்றாள் சஞ்ஜனா.

"ஹோ... சூப்பர். ஆனா நிலா காலேஜ் ரொம்ப ஸ்ரிக்ட் ஆச்சே! எப்படி காலேஜ் கட் அடிச்சிட்டு வந்திங்க?" என்று கதிரவன் புருவம் சுருக்கி கேட்க,

"அச்சோ சார்! காலேஜ் கட் அடிக்குற அளவுக்கு நாங்க வோர்த் இல்லை. ஹெச்ஓடி கிட்ட பெர்மிஷன் கேட்டேன் அவங்க லீவே தந்துட்டாங்க. அதுவும் இல்லாம அவங்க சார்பாகவும் உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க" என்ற சஞ்ஜனா அவசரமாய் சொல்ல,

"எத்தனை நன்றி? உங்க மேம் கிட்ட நன்றிக்கு அவசியம் இல்லைனு சொல்லிடுங்க. அப்பறம் ஒரு சந்தேகம்! உங்க அக்கா தீர்ப்புக்கு இவ்வளவு ஆவலா இருக்கவங்க முன்னாடியே இதுக்கு காரணம் என் அப்பா அண்ணா தான்னு சொல்லி கேஸ் பைல் பண்ணி இருக்கலாமே? ஏன் அப்படி செய்யலை?" என்று விசாரிக்கும் பாவத்தில் கேட்க,

வெண்ணிலாவிடம் சலிப்பான உச்சிக்கொட்டல். அதை கதிரவன் கவனித்தான் தான் ஆனால் கண்டு கொள்ளவில்லை. அவளை கடுப்பேற்ற தானே இந்த பேச்சு வார்த்தையே, ஆனால் அதை உணராத சஞ்சனா

"அப்பா தான் இதெல்லாம் பண்ணதுனு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா பண்ணி இருப்பேன் சார். ஆனா எனக்கு தெரியாது. எல்லாரும் நம்புன மாதிரி அக்கா தற்கொலை பண்ணுனததா தான் நினைச்சேன். அக்கா இறந்த அன்னைக்கு அப்பாவும் அண்ணனும் அப்படி அழுதாங்க. 'இதுக்கா பெத்து வளர்த்தேன்! என்னோட பேச்சை கேட்டு இருந்தா என் பொண்ணு இப்போ உயிரோட இருந்து இருப்பாளேன்னு' அழவும் எனக்கு அப்பா மேல சந்தேகமே வரலை. அக்கா மாதிரி நாமும் பண்ண கூடாதுனு தான் நினைப்பு இருந்திச்சி"

"ஆனா அக்காவை கூட்டிட்டு போனவரோட அம்மா கேஸ் போடவும் தான் அது கொலையோனு சந்தேகம் வந்திச்சி. அப்பவும் அப்பா பண்ணி இருப்பாங்கன்னு எல்லாம் நினைக்கவே இல்லை. ஆனா நீங்க மாமாவை அரஸ்ட் பண்ணவும் தான் அப்பா அண்ணா மேல சந்தேகம் வந்தது. அது உண்மையானு தெரிஞ்சிக்க அவங்களை வாட்ச் பண்ண தொடங்க முன்னாடி நீங்க கைது பண்ணி தீர்ப்பு வாங்கி தந்துட்டிங்க" என்று கூறியவளின் பேச்சு திடமாய் ஆரம்பித்து முடிவில் கரகரத்து இருந்தது.

அவளின் நிலை புரிந்த கதிரவனும் பேச்சை மாற்ற நினைத்து "நீங்க கொஞ்சம் லேட் தான். அடுத்து என்ன காலேஜ் லீவ் சோ இனி வீட்டுக்கு தானே!" என்று கேட்க,

"ஆமா சார். நிலா வீட்டுக்கும் இதுக்கு முன்னாடி வந்தது இல்லை. இது தான்
முதல் முறை உங்க ஊர் வந்து இருக்கேன். அதனால இன்னைக்கு ஃபுல்லா நிலாவோட சேர்ந்து இந்த ஊரை சுத்தி பார்க்க போறேன். இங்க என்ன எல்லாம் ஸ்பெஷல் சார்?" என்ற சஞ்ஜனாவும் தன் சோகம் விடுத்து உற்சாகமாய் கதிரவனிடமே ஐடியா கேட்டாள்.

"ஒரு பத்து வருஷம் முன்னாடி வந்துருந்தா... ஏறி கரை காற்றும் ஏலேலோலங்கடி பாட்டும்னு நாத்தாங்காலையாவது சுத்தி வந்து இருக்கலாம். இப்போ அதுக்கும் வழி இல்லை. எல்லாம் வெறும் மனையாவும் வீடாவும் தான் இருக்கு. வேணும்னா வாய்கால்ல போய் காலை தண்ணில விட்டுட்டு ஃப்ரெண்ட் ரெண்டு பேரும் இருந்து கதை பேசுங்க. மீனுங்க புட் மசாஜ் பண்ணி விடும்" என்ற இளங்கதிரவன் கிண்டலாய் சொல்ல,

"அப்படியா?" என்பது போல் வெண்ணிலாவை பார்த்தாள் சஞ்சனா. ஆனால் வெண்ணிலா முகம் ஏகத்திற்கும் கோபத்தில் சுருங்கி இருந்தது.

"என்ன நிலா? என்ன ஆச்சி?" என்ற சஞ்ஜனா அவள் கை பற்ற,

"தலை வலிக்குது சஞ்சு. கிளம்பலாம் ப்ளீஸ்..." என்று கோபமும் கெஞ்சலுமாய் கூற,

"தலை வலிக்குதா? டீ போட்டு தரவா நிலா? சரி ஆகிடும். தலைக்கனம் இருந்தா வலிக்க தான் செய்யும்" என்று இளங்கதிரவன் நக்கலாய் சொல்ல,

"எனக்கு டீயும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம். சஞ்சு நீ வரியா? இல்லையா?" என்ற வெண்ணிலா தோழியை கடுங்கோபத்துடன் பார்த்தாள்.

அவளால் இளங்கதிரவனின் இந்த அப்பாவி தனமான நடிப்பு பேச்சை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. எங்கே தோழியின் முன்பு கட்டுப்பாட்டை இழந்து அவனிடம் கத்தி விடுவோமோ என்று பயமாக இருக்க அங்கிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்ப நினைத்தாள் ஆனால் அதற்கும் கதிரவன் விடுவேனா என்று நிற்க இன்னும் இன்னும் கோபம் வந்தது.

அதை எதையும் அறியாத சஞ்ஜனா கதிரவன் பேச்சில் திகைத்தவளாய் "என்ன சார்!" என்றவள் அவன் சொன்னதை சரியாகத்தான் கேட்டதா என்று சந்தேகமாய் அவன் பார்க்க,

"இங்க எல்லாரும் நாத்தாங்கால்ல குளிக்குறதுனால தலையில தண்ணீர் சேந்துரும். அதை தலைகனம் னு சொல்லுவாங்க. அதை தான் சொன்னேன்" என்று இளங்கதிரவன் விளக்க,

ஏனோ அவன் சமாதானம் சஞ்ஜனாவிற்கு ஏற்ப்புடையதாய் இல்லை. வெண்ணிலா மற்றும் இளங்கிதிரவன் இடையில் ஏதோ பிரச்சனை என்று புரிந்தது. அதிலும் கதிரவன் அவளை மறைமுகமாய் தாக்குவது போல் இருந்தது சஞ்ஜனாவிற்கு.

அதில் அவள் வெண்ணிலாவை திரும்பி பார்க்க அவள் முகம் மிகவும் சோர்ந்து இருந்தது. அதற்கு மேலும் அவளை சங்கடப்படுத்த நினைக்காதவள் கிளம்ப நினைக்க, மீண்டும் அவள் பார்வையில் பட்டது அந்த போட்டோ.

இப்போது அந்த போட்டோவில் இருக்கும் பெண் வெண்ணிலா போன்று தோன்ற வெண்ணிலாவையும் இளங்கதிரவனையும் சில நொடிகள் மாறி மாறி பார்த்தவள்

"சார் நீங்க தப்பா எடுத்துக்க மாட்டிங்கனா? உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?" என்ற சஞ்சனா தயக்கத்துடனே கேட்க

அவள் பார்வை தன் திருமண போட்டோவில் பதிவதை பார்த்த இளங்கதிரவனும் "கேளுங்க..." என்றான் அசட்டையாய் தோள் குழுக்கி.

"இல்லை... உங்க கல்யாணம் சைல்ட் மேரேஜா? உங்க வைஃப் எங்க? வந்ததுல இருந்து வெளியவே வரலை. உங்களோட... இல்லையா?" என்று தயங்கி தயங்கி கேட்டு முடிக்க

"ஆமா கட்டாய கல்யாணம். இப்போ அவ ஓடி போய்ட்டா..." என்று இளங்கரவன் சாதாரணமாய் சொல்லி முடிக்கவும்

வெண்ணிலா கட்டுக்கடங்கா கோபத்தில் டிபாயில் இருந்த டீயை எடுத்து அவன் முகத்தில் வீசி இருந்தவள் "சீ பொறுக்கி. நீ எல்லாம் என்னடா ஆள்? வெட்கமே இல்லாம ஓடி போய்ட்டானு சொல்ற? சொல்ல வேண்டியது தானே உன் பொறுக்கி தனம் பிடிக்காம உன்னை வேண்டாம்னு போய்ட்டானு?" என்று கத்தியவள் அவன் வீட்டை விட்டு வெளியேற,

"நிலா... ஏய் நிலா... நில்லுடி!" என்ற சஞ்ஜனாவும் அவள் பின்னே ஓட, அவர்கள் சத்தத்தில் அரிச்சந்திரரும் வெளியே வந்து விட்டார்.

வெண்ணிலாவின் கோபத்தையும் இளங்கதிரவன் அசையாமல் நிற்ப்பதையும் பார்த்தவருக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து விட "நிலா நில்லுமா" என்றபடி அவரும் அவள் பின்னே சென்றார்.

வெண்ணிலா கேட்டை திறந்து வெளியேர போகவும், போஸ்ட் மேன் கேட்டை திறந்து உள்ளே வந்தவர் வெண்ணிலாவை பார்த்து விட்டு "நீயும் இங்க தான் இருக்கியா மா? உனக்கு வக்கில் நோட்டிஸ் வந்து இருக்கு" என்று சொல்ல, வெண்ணிலாவிடம் சிறிதாய் நடுக்கம்.

ஆனால் அதே நேரம் இளங்கதிரவன் மேல் அதீத கோபமும் வர, அவனை முறைத்தபடி கோர்ட் ஆர்டரை அவள் வாங்க,

"ஐயா உங்களுக்கும் கோர்ட்ல இருந்து ஆர்டர் வந்திருக்கு" என்ற போஸ்ட் மேன் அடுத்து அரிச்சந்திரரிடமும் ஒரு வக்கீல் நோட்டிஸை கொடுத்தார்.

"அவருக்கு ஏன்?" என்று யோசித்த வெண்ணிலா அதுவும் கதிரவன் வேலையாக தான் இருக்கும் என்று புரிந்து அவனை அற்ப்பமாய் பார்த்து வைக்க,

*நிலா என்ன டி கோர்ட் ஆர்டர்? நீ என்ன பண்ண? குடு பார்க்கலாம்?" என்ற சஞ்ஜனா படபடப்புடன் அந்த மனுவை வாங்கி பார்த்தவள் டிவோர்ஸ் நோட்டிஸ் என்று இருந்ததையும் அதன் கிழே முகவரியில் "மிஸஸ் வெண்ணிலா இளங்கதிரவன்" என்று இருந்த பெயரை பார்த்து அதிர்ந்தவளாய்,

"நிலா.... கதிரவன் சார் உன் ஹஸ்பெண்டா? என்று கேட்டாள். அவளால் வெண்ணிலா திருமணம் ஆனவள் என்று நம்ப முடியவில்லை.

அதை கேட்ட வெண்ணிலாவின் உடல் இறுகி போனது. அன்று பஸ்ஸில் நடந்த பிரச்சனைக்கான நோட்டிஸ் என்று நினைத்து இருந்தவள் இதை எதிர் பார்க்காமல் அதிர்ந்து சஞ்ஜனாவிடம் இருந்து அந்த நோட்டிசை வாங்க போக,

அவளுக்கு முன்பு அதை சஞ்ஜனாவிடம் இருந்து புடுங்கி கொண்ட கதிரவன் "இவ்வளவு நாளும் நீ எனக்கு வேண்டாம்னு... உன்னை என் வாழ்க்கையில இருந்து விலக்க மட்டும் தான் யோசிச்சேன். ஆனா இன்னைக்கு இவ்வளவு நேரம் என் முன்னாடி இருந்து நீ பட்ட அவஸ்த்தையை பார்த்த அப்பறம் இந்த டைவர்ஸ் எல்லாம் வேஸ்ட்னு புரிஞ்சிட்டு. உனக்கு தண்டனை என்னோட சேர்ந்து வாழுறது தான் டி இது தேவை இல்லை" என்றவன் அந்த டிவோர்ஸ் நோட்டிசை கிழித்து எரிந்து விட

"நீ நினைக்குறது கனவுலையும் நடக்காது" என்ற வெண்ணிலா அங்கிருந்து சென்று விட்டிருந்தாள்.

அவள் கோபமாய் செல்வதை பார்த்த சஞ்ஜனாவும் கதிரவனை அதிர்ச்சியாய் பார்த்தபடி வெண்ணிலா பின்னே செல்ல

"நடத்தி காட்டுறேன் டி..." என்ற இளங்கதிரவனும் திமிராய் கூறி செல்ல அவர்கள் இருவர் சண்டையையும் வேதனையுடன் பார்த்து நின்றிருந்த அரிச்சந்திரரிடம் தப்பு செய்து விட்ட பாவனை.

வெண்ணிலா விஷயத்தில் மகனை முழுமையாக நம்பினார். சரி ஆகி விடும். மகன் எல்லாம் சரி ஆக்கி விடுவான் என்று நினைத்து தைரியமாய் இருந்தது இன்று தவறாகி போனதை நினைத்து மறுகி நின்றார்.

மலரும்...

ஹாய்... மக்களே

கதையின் நிறை மற்றும் குறையை கருத்து திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍

கருத்து திரி லிங் 👇


நன்றி.... ❤️
 
Status
Not open for further replies.
Top