பஞ்சவர்ணம்….04
அசோக் மகளை ஏற்றி கொண்டு வர. புவனா
அப்பா அக்கா, மாமா நிச்சயதார்த்தம் நல்லா நடந்ததா நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் பா என சொல்ல. அசோக்
ரொம்ப நல்லா நடந்தது மா என்ன ஒன்று உங்க அம்மா வீட்டு ஆளுங்களுக்கு நீயும் கபிலனும் வராதது தான் கொஞ்சம் கோபம் சொன்னால் அவங்களுக்கு புரியாது. மாமா தான் கடைசியில் சொல்ல அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை என. புவனா
ஏன் பா இவங்க இப்படி இருக்கிறாங்க அப்பு கூட பெரிதாக படிக்காதவர் தான் அவர் புரிந்து கொள்கிறார் தானே. இதில் ஆத்தா வேற அவங்களுக்கு மாமா சொல்வது தான் வேதவாக்கு என. அசோக்
புவனா மா ஐந்து விரலும் ஒன்று இல்லை இவங்க கிராமத்து மனிதர்கள் என்ன ஒன்று சூதுவாது தெரியாது வெளிப்படையாக பேசி விடுவாங்க அது தான் மனக்கசப்பு ஏற்படுத்தும். சரி விடு மா நம்ம ரதி தானே உன் மாமனை கட்டிக்க போகிறாள் பார்த்து கொள்வாள் சரி வா உன் ஆத்தா அங்கே தான் நிற்கிறாள் என அழைத்து போக. நிலவனும் அப்போது தான் கபிலனை அழைத்து கொண்டு வந்து இருந்தான் இவர்கள் பைக் சத்தம் கேட்க யமுனா.
அக்கா, காவேரி புள்ளைங்க வந்து விட்டாங்க ஏய் அரளி ஆரத்தியை கொண்டு வா என சொல்லி கொண்டு வாசலுக்கு வர. கபிலன் சின்ன ஆத்தா என ஓடி வர யமுனா ஓடி வந்து என் ராசா என அவன் முகத்தை தடவி நெட்டி முறித்தவர் அவனை தள்ளி வைத்து பார்த்து. யமுனா
என் ராசா எம்புட்டு உசரமாக கதாநாயகன் கணக்கான இருக்கு என் கண்ணே பட்டு விடும் போல சாமி. என் பெண்ணு எங்கே பா என கேட்க ஆத்தா என சத்தம் கேட்க யமுனா திரும்பி பார்க்க புவனா ஓடி வந்து ஆத்தா என யமுனாவை கட்டி அணைக்க யமுனா கண்கள் கலங்க அவளை கட்டியணைத்தவர் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு. அவர்
என் ஆத்தாவா இது ராஜகுமாரி போல இருக்க படித்த களை முகத்தில் தெரிகிறது ஆத்தா என சொல்ல முகத்தில் மட்டும் களை தெரிந்தால் போதும் சின்ன அக்கா வேற எதிலும் தெரியாமல் இருந்தால் போதும் என சொல்லி கொண்டு இவர்கள் வந்ததை தெரிந்து கொண்ட செழியன் வர. அவன் பின்னால் கங்கா ஆரத்தி தட்டோடு வர அவர் பின்னால் காவேரி வந்தார் நல்ல காலம் வேதவல்லி சாப்பிட்டு விட்டு அசதியாக இருக்கு என தூங்க போய் இருந்தார். கங்கா
செழியா புள்ளைங்க இப்போ தான் வந்து இருக்கு தொடங்கி விடாதே கபிலா, ஆத்தா வாங்க ஆரத்தி எடுக்க. காவேரி வா என்ன பார்த்து கொண்டு இருக்க உன் பையன், பெண்ணு அழகை ரசித்தது போதும் வா என சொல்ல காவேரியும் ஆனந்தத்தில் கண்கள் கலங்க ஆரத்தி எடுக்க கபிலன், புவனா இருவருமே அவர் காலில் விழ அவர்களை கட்டியணைத்தவர். காவேரி
என்ன கபிலா இப்படி இரண்டு பேருமே எலும்பும் தோலுமாக இருக்கிறீங்க நல்லா சாப்பிடுவது இல்லையா. பணத்தை மட்டும் வாங்கி புட்டு பாவிங்க புள்ளைங்களுக்கு ஒழுங்காக சோறு போடாமல் விட்டு இருக்கிறாங்க என சொல்ல. நிலவன்
காவேரி அத்தை நீங்க வேற இப்போ பட்டணத்தில் புள்ளைங்க இப்படி இருப்பது தான் நாகரீகம் என சொல்வாங்க என. செழியன்
தேவையில்ல நிலவா இந்த வீட்டுக்கு என ஒரு மரியாதை இருக்கு பெரிய அக்கா இவங்க கிட்ட நம்ம குடும்ப பழக்கத்து நினைவுபடுத்து இந்த கன்றாவி துணி எல்லாம் பட்டணத்தோடு நிற்க வேணும் என. கபிலா, ஆத்தா புவனா என அழைத்து கொண்டு வெளியே போன சந்தானம் வர அப்புச்சி என அழைத்து கொண்டு முதலில் போனது புவனா தான் அவரும் சந்தோஷமாக பேத்தியின் தலையை தடவி விட புவனா அவர் காலில் விழ அது போல கபிலனும் விழ இருவரையுமே ஒன்றாக தூக்கி ஆசி வழங்கியவர். சந்தானம்
எப்படி ராசா, ஆத்தா இருக்கிறீங்க இந்த அப்புச்சிக்கு தினமும் உங்க நினைப்பு தான். பிரயாணம் செளகரியமாக இருந்ததா சரி எங்கே அசோக் மாப்பிள்ளையை எங்கே காணோம் என கேட்க. புவனா
அப்பாவுக்கு பள்ளிக்கூடத்தில் வேலை இருக்கு என சொல்லி விட்டு போனார் என. கங்கா
சரி இரண்டு பேருமே உள்ளே வாங்க வென்னீர் விளாவி வைத்து இருக்கிறேன் பிரயாண களைப்பு போக குளித்து விட்டு வாங்க சாப்பிட .ஐயா செழியா உனக்கும் தட்டு வைக்கவா நாங்க எல்லோருமே சாப்பிட்டு விட்டோம் நீ மட்டும் தான் சாப்பிட வேணும் என. செழியன்
சரி அக்கா எடுத்து வை வியர்வை கச கசப்பு போக குளித்து வி்ட்டு வருகிறேன் என உள்ளே போக கபிலன்,புவனா உள்ளே வந்தவர்கள். புவனா
பெரிய ஆத்தா பெரிய அக்கா சின்ன அக்கா எங்கே காணோம் என கேட்க. கங்கா
கெளரி அவள் மாமியார் கூட கோவிலுக்கு போய் இருக்கு ரதி கல்யாண பெண்ணு இல்லையா உள்ளே தான் இருக்கு தங்கம் உள்ளே போய் பாரு என சொல்ல. புவனா சரி என சென்னவள் ரதி அறைக்கு கதவை தட்டி விட்டு போக அங்கே ரதி யன்னல் அருகே நின்று வெளியே யோசனையாக பார்த்து கொண்டு இருக்க சின்ன அக்கா என சத்தம் கேட்க ரதி திரும்பியவள் முகம் மலர பாப்பா என ஓடி வந்து அவளை அணைத்து கொண்டாள். ரதி
எப்போ பாப்பா வந்த நீ வர மாட்டாயோ என பயந்து கொண்டு இருந்தேன் காவேரி ஆத்தா தான் நீ இன்று கட்டாயமாக வருவதாக சித்தப்பு கிட்ட சொன்னதாக சொல்லிற்று. ரொம்ப அழகாக இருக்க பாப்பா இந்த உடை உனக்கு ரொம்ப அழகாக இருக்கு என சொல்ல புவனா அவள் கழுத்தை கட்டி கொண்டவள். புவனா
போ அக்கா நானும் பெரிய அக்காவும் சுமார் தான் ஆனா நீ தான் எங்களை விட ரொம்ப அழகு இப்போ கல்யாண களை வேற முகத்தில் ஜொலிக்கிறது. அக்கா இரு உனக்காக என்ன வாங்கி வந்தேன் பாரு என சொன்னவள் தன் டிராலி பேக்கையை திறந்து அவளுக்கு மேக்கப் செட் அழகான டிசைன் போட்ட பன்னிரெண்டு நிறங்களில் உள்ள நகச்சாயம் பாட்டீல், குட்டி சென்ட் பாட்டீல், என கொடுக்க ரதி அதை ஆசையாக வாங்கி கொண்டவள் முகம் மலர்ந்து பின் வாட அதை கண்டு கொண்ட. புவனா
என்ன அக்கா முகம் வாடி இருக்கு உடம்புக்கு முடியவில்லையா என கேட்க. ரதி
உடம்புக்கு ஒன்றுமில்ல பாப்பா நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல வேணும் என. புவனா
என்ன விஷயம் அக்கா சொல்லு என சொல்ல ரதி ஏதோ சொல்ல வாய் எடுக்க. பாப்பா சீக்கிரமாக குளித்து விட்டு சாப்பிட வா வென்னீர்,சாப்பாடு இரண்டுமே ஆறி விடும் என யமுனா சத்தமாக சொல்ல. புவனா
சரி அக்கா இங்கே தானே இருக்க போகிறேன் நீ ஆறுதலாக விஷயத்தை சொல்லு என சொல்லி போகும் தங்கையை ரதி யோசனையாக பார்த்தாள். கபிலன், ரதி குளித்து விட்டு வர சாப்பாட்டு கூடத்தில் இலை போட்டு இருந்தது அவர்கள் எவ்வளவு வசதியாக இருந்தாலும் கூட சோற்றை தரையில் இருந்து அதற்கு மதிப்பு கொடுத்து தான் சாப்பிட வேணும் என்ற பழக்கம். அதனால் அங்கே மேஜை, நாற்காலி இல்லை அறையில் மட்டும் தான் படிக்க, எழுத மேஜை இருக்கும் புவனாவும் கபிலனும் வர செழியன் தரையில் இருக்க. அவன் முன்னே காவேரி இலை விரித்து பரிமாறி கொண்டு இருக்க இவர்கள் வர யமுனா தான் இலை பரிமாறி உப்பு வைக்க ஆரம்பித்தார் கபிலன், புவனா சாப்பிட ஆரம்பிக்க. செழியன்
கபிலா, புவனா படிப்பு எல்லாம் முடிந்தது தானே இனி பட்டணத்திற்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்றான்.
பஞ்சவர்ணம் வரும்….