வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மாமனை மயக்குதே பஞ்சவர்ணம்- கதை திரி

Status
Not open for further replies.
08இரவு சாப்பாடு எல்லாம் முடிய அனைவருமே தூங்க போக முன். வேதவல்லி

ஐயா ராசா செழியா நீ இங்கன தங்க கூடாது பா பெண்ணும் மாப்பிள்ளையையும் ஒரேய வீட்டில் கல்யாணம் வரைக்கும் ஒன்றாக தங்க கூடாது. நீங்க இரண்டு பேருமே உறவு என்பதால் தான் இத்தனை நாள் இங்கே தங்க விட்டேன் நாளை கல்யாணம் ஊர் வேற மாதிரியாக பேச தொடங்கி விடும் அதனால் நீ நம்ம தோட்டத்து வீட்டில் தங்கு .காலையில் கோவிலுக்கு நேராக வந்து விடு நிலவன் மாப்பிள்ளையும் துணைக்கு அழைத்து போ என சொல்ல. செழியன்


அங்கே தங்குவதில் எனக்கு பிரச்சனை இல்லை அப்பத்தா அங்கே தான் கல்யாண விருந்து. சமைப்பதற்கான பொருட்கள் எல்லாம் கொண்டு வைத்து இருக்கிறோம் நான் நிலவன் வீட்டில் தங்கி கொள்கிறேன் என. வேதவல்லி


இல்ல ராசா அது சரியாக இருக்காது அது நம்ம பெண்ணு கொடுத்த இடம் குமரகுரு, கனகா நம்ம உறவு தான். அவங்க சந்தோஷமாக வரவேற்பு கொடுப்பாங்க தான் ஆனா முறை ஒன்று இருக்கே அது சரி வராது என. சந்தானம்

ஆத்தா செழியன் எங்கேயும் தங்க தேவையில்ல. நம்ம காவேரி வீட்டில் தங்கி கொள்ளட்டும் கூடவே நகுலன், கபிலன் துணைக்கு போகட்டும் என சொல்ல. செழியன்

என்னால் முடியாது அப்பு நான் நம்ம தோட்டத்து வீட்டுக்கு போகிறேன். பொருட்களை ஒரு புறமாக ஒதுங்க வைத்து விட்டு தங்கி கொள்கிறேன் என சொல்ல. காவேரி

ஏன் தம்பி இன்னுமா உன் மாமன் மேலே உள்ள கோபம் போகவில்லை அவர் ரொம்ப நல்லவரு டா. அது என் வீடும் கூட உன் அக்கா வீட்டில் வந்து தங்கி கொள்ள மாட்டாயா என கேட்க செழியன் ஏதோ பேச வர. சந்தானம்

செழியா நிறுத்து உன் கோபத்தை கொஞ்சம் மாற்ற பாரு உன்னை நம்பி என் பேத்தி கழுத்தை நீட்ட போகிறாள். அவள் கண் கசக்கினால் நான் மனுஷனாக இருக்க மாட்டேன் ஆத்தா காவேரி புவனா எங்கே என கேட்க. காவேரி

உள்ளே தான் இருக்கு அப்பு அதோட அக்காக்கள் கூட பேசி கொண்டு இருக்கு என சொல்ல. சந்தானம்

அரளியை விட்டு புள்ளையை வர சொல்லு என அவள் அரளி கிட்ட சொல்ல அவளும் சரி என போனவள் கையோடு புவனாவை அழைத்து கொண்டு வர. புவனா என்ன அப்புச்சி எதற்காக வர சொன்ன என வர. சந்தானம்

தாயி புவனா நீ உன் சின்ன அக்கா ரதியை அழைத்து கொண்டு உன் வீட்டுக்கு போ கூடவே துணைக்கு கபிலனை அழைத்து போங்க. அங்கே அசோக் மாப்பிள்ளை இருக்கிறார் தான் இருந்தாலும் துணைக்கு ஒரு இளந்தாரி வேணும் இல்லையா பெண்ணு மாப்பிள்ளை ஒரேய வீட்டில் தங்க கூடாது ஆத்தா காவேரி நீயும் போ என சொல்ல. அவர்களும் சரி என கூறி விட்டு நால்வரும் அந்த ஊரில் உள்ள காவேரி வீட்டுக்கு போனார்கள். அசோக் தன் சொந்த உழைப்பில் வாங்கி போட்ட வீடு சந்தானம் எவ்வளவு சொல்லியும் ஒரு ரூபாய் கூட சீராக வேணாம் என கூறி விட்டு இந்த வீட்டை கூட பேங்கில் லோன் எடுத்து தான் வாங்கி இருந்தார் .விசாலமான இரண்டு அறை, சின்னதாக உள்ள பூஜையறை கொண்ட வீடு முன்னுக்கும் கொல்லைபுறமாக இடம் இருக்க முன்புறத்தில் பூஜைக்கு ஏற்ற பூ செடிகள் என்றால் பின்னால் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் கூடவே பலா, வாழை, மா என நட்டு இருந்தார் கூடவே கொஞ்சம் சமையலுக்கு காய்கறி தோட்டம். கிணறு தான் பின்னால் தான் வாஷ்ரூம் கட்டி இருந்தார் கபிலன் ஊரில் இருக்கும் பாதி நேரம் இங்கே தான் இருப்பான் புவனாவின் அறையில் புவனா, ரதியை தூங்க சொல்லி விட்டு அசோக், கபிலன் நடு கூடத்தில் பாய் விரித்து படுக்க காவேரி தன் அறையில் படுத்தார்.


மறு நாள் காலை நான்கு மணி இருக்கும் காவேரி தான் முதலில் எழுந்தது அவர் எழுந்து வர நடு கூடத்தில் அசோக், கபிலன் தூங்கி கொண்டு இருக்க. காவேரி மெதுவாக அசோக் கால்லை சுரண்டி மாமா என அழைக்க அசோக் முதலில் எழவில்லை திரும்ப தட்ட தான் மெதுவாக கண் விழித்தவர் என்ன மா என காவேரியை கேட்க. காவேரி

மாமா மணி நான்காகி விட்டது முகூர்த்தம் எட்டு மணிக்கு சீக்கிரமாக எழுந்து தயாராகுங்க கபிலனையும் எழுப்பி விடுங்க நான் போய் முகம் கழுவி விட்டு வருகிறேன். முனுசாமி பால் கொண்டு வருவான் வாங்கி வைங்க என கூறி விட்டு கொல்லைபுறமாக போவதற்கு அங்கே உள்ள கதவை திறக்க போக கதவு தாழ் போடாமல் இருக்க. காவேரி

இந்த கபிலன் பையன் ராத்திரி கொல்லைக்கு போய் இருப்பான் கதவை தாழ் போட மறந்து விட்டான் போல என்ன தான் அலட்சியமே தெரியாது என சொல்லி கொண்டவர் போய் காலை கடன்களை செய்து குளித்து சாதாரண சேலை அணிந்து வர. அசோக் பால் வாங்கி வைத்து இருந்தார் கபிலனும் எழுந்து இருக்க அசோக் குளிக்க போக காவேரி காபி போட்டு கொண்டு வந்தவர். காவேரி


கபிலா பல் துலக்கி விட்டு வா காபி சாப்பிட என சொல்ல. கபிலன்

ஆத்தா சும்மா அதை கொடு மிருகம் எல்லாம் பல் துலக்கி விட்டா சாப்பிடுகிறது. நான் ஹாஸ்டலில் பல் துலக்காமல் தான் காபி சாப்பிடுவேன் அதற்கு பெயர் பெட் காபி என. காவேரி

சீ சீ கண்ட கருமாந்திர பழக்கம் எல்லாம் பழகி இருக்க. இதற்கு தான் தம்பி சொன்னான் பட்டணம் போனால் கெட்டு விடுவாங்க என கபிலன் ஏதோ சொல்ல வர குளித்து விட்டு வந்த. அசோக்


காவேரி இப்போ எதற்காக இந்த பேச்சு போய் புள்ளைங்களை எழுப்பி விடு ஒரு நாள் பல் துலங்காமல் சாப்பிடுவதால் ஒன்றும் ஆக போவது இல்லை. அதுவே தொடர்ந்தால் தான் ஆபத்து நெருப்பு சுடும் என்று நம்ம புள்ளைங்களுக்கு சொல்வதை விட அதை தொட்டு பட்டால் தான் அதன் வலி புரியும். இப்போ நீ கண்டிக்க அவன் திரும்ப இதை தான் செய்வான். முதலில் காபியை எங்களுக்கு தந்து விட்டு போ என சொல்ல .காவேரி

நல்ல சித்தப்பா மகன் என்னவோ செய்யுங்க என சொல்லி காபியை இருவருக்குமே கொடுத்து விட்டு புவனா, ரதியை எழுப்ப போக. கபிலன்

சித்தப்பா என்றால் சித்தப்பு தான் நான் ஆத்தாவை வெறுப்பேற்ற அப்படி சொன்னேன் இரு சித்தப்பு பல் துலக்கி முகம் கழுவி விட்டு வருகிறேன் என கொல்லைக்கு போக .அசோக் அவன் சேட்டையை எண்ணி சிரித்தவாறே காபி சாப்பிட ஆரம்பித்தார் காவேரி புவனா அறைக்கு வர புவனா தான் நேற்றைய பயண களைப்பில் தூங்கி கொண்டு இருக்க ரதியை காணவில்லை. காவேரி புவனா ஏய் புவனா என அவளை தட்டி எழுப்ப புவனா தூக்க கலக்கில் கண்கள் கசக்கி கொண்டு எழுந்தவள் என்ன ஆத்தா என கேட்க. காவேரி

அக்கா எங்கே டி காணோம் வீட்டுக்கு போய் விட்டாளா சொல்லாமல் தனியாக போக மாட்டாளே. வாசல் கதவு வேற சாத்தி இருந்தது என புவனா தலையை செறிந்து கொண்டு. புவனா


அக்கா கொல்லைக்கு போய் இருக்கு ஆத்தா போய் பாரு எனக்கு களைப்பாக இருக்கு நான் தூங்க போகிறேன் என சொன்னவள். திரும்ப தூங்க தொடங்க காவேரி கொல்லைக்காக என யோசனையாக நினைத்தவர் கொல்லைபுறத்துக்கு போனார்.


பஞ்சவர்ணம் வரும்…🦜 
09காவேரி புவனாவிடம் ரதி எங்கே என கேட்க அவள் அக்கா கொல்லைக்கு போய் இருக்கிறாள் என சொல்லி விட்டு திரும்ப இழுத்து போர்த்தி கொண்டு தூங்க தொடங்கினாள். காவேரி சரி அவசரமாக இருக்கும் போல என நினைத்து ரதி மா என அழைத்து கொண்டு கொல்லைக்கு போக கபிலன் தான் பல் துலக்கி முகம் கழுவி கொண்டு தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்து கொண்டு வர ரதி பாப்பா என அழைத்து கொண்டு வரும் காவேரியை பார்த்தவன். கபிலன்

என்ன ஆத்தா உனக்கு இன்னும் தூக்க கலக்கம் போகவில்லை போல ரதி புவனா கூட தானே தூங்குது என. காவேரி

டேய் விளையாடாதே பாப்பா அறையில் இல்லை .புவனா தான் கொல்லைக்கு போய் இருப்பதாக சொன்னாள் அங்கே ரதி இருக்கிறாளா டா என கேட்க. கபிலன்


என்ன ஆத்தா சொல்கிற கருக்கலில் அவளுக்கு எழுந்து பழக்கம் இல்லை. நான் கொல்லையில் இருந்து தானே வருகிறேன் அங்கே யாருமே இல்லையே என பதட்டமாக. காவேரி

என்ன டா சொல்கிற புள்ளை அங்கே இல்லையா வேற எங்கே போய் இருப்பாள் ஒரு வேளை வீட்டுக்கு போய் இருப்பாளோ. கபிலா சீக்கிரமாக போய் வீட்டில் பார்த்து விட்டு வா டா யாரும் கேட்டால் சொல்லாதே உன் சித்தப்பு எங்கே மாமா என அழைத்து கொண்டு வர அசோக் காபி சாப்பிட்டு கொண்டு இருந்தவர். காவேரி மாமா என பதட்டமாக வர அவர் பாதி சாப்பிட்ட காபி தம்ளரை கீழே வைத்தவர் .அசோக்

என்ன என்னமா பதட்டமாக வருகிற கபிலா என்ன விஷயம் என கேட்க. கபிலன்

சித்தப்பு ரதியை காணவில்லை வீடு முழுவதுமாக தேடி விட்டோம் என இப்போ அசோக் யோசனையாக பார்த்தவர். அசோக்

புள்ள வேற எங்கே டா போய் இருக்க போகிறது கொல்லைக்கு போய் இருக்கும் இல்லை என்றால் மாமா வீட்டுக்கு. ஆனா நானும் நீயும் தானே கூடத்தில் தூங்கி கொண்டு இருந்தோம்தாழ்ப்பாள் திறந்த சத்தம் கூட கேட்கவில்லையே என. காவேரி

மாமா முன் வாசல் கதவு திறக்கவில்லை ஆனா கொல்லை கதவு திறந்து இருந்தது .அது உள்பக்கமாக தாழ் போடுவது அது தான் எனக்கு பயமாக இருக்கு இது வீட்டுக்கு தெரிந்தால் என . அசோக்

காவேரி கொஞ்சம் பெறுமையாக இரு மா சில வேளை புள்ள நம்ம தூக்கத்தை கெடுக்க கூடாது என சத்தம் போடாமல் போய் இருக்கும். கபிலா நீ என் வண்டியை எடுத்து கொண்டு உங்க தாத்தா வீட்டில் பார்த்து விட்டு வா யாரும் கேட்டால் உன் டிரஸ் எடுக்க வந்ததாக சொல்லு என கபிலனும் சரி என போக. அசோக் மீண்டும் ஒரு தடவை வீட்டில் தேடி பார்க்க போக காவேரி புவனா அறைக்கு போனவர் புவனா ஏய் புவனா எழுந்திரு டி என சத்தமாக சொல்ல புவனா கண்களை கசக்கி கொண்டு எழுந்தவள் .புவனா
என்ன ஆத்தா எதற்காக இப்போ கருக்கலில் எழுப்பின ஆமா அக்கா எங்கே என கேட்க. காவேரி பதட்டமாக


ஏய் உங்க அக்காவை காணோம் டி வீடு, கொல்லைபுறம் இரண்டு இடமும் தேடி பார்த்து விட்டோம் அவளை காணோம் .உன் கூட தானே தூங்கினாள் அவள் எழுந்து போகும் அளவு உனக்கு தெரியாமல் தூங்கி இருக்க நீ எல்லாம் எப்படி தான் கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டில் குப்பை கொட்ட போகிறாயோ தெரியாது. இப்படி தூங்கி கொண்டு இருந்தால் வீடு விளங்கி விடும் சீக்கிரமாக வா எழுந்து வந்து நீயும் தேடு உன் ஐயன் தேடி கொண்டு இருக்கிறார் நீயும் தேடு என சொல்ல. புவனாவுக்கு அதற்கு பிறகு எங்கே தூக்கம் வரும் எழுந்தவள் முடியை கோதி கொண்டை போட்டு விட்டு அசோக் கூட சேர்ந்து தேட தொடங்கினாள் கபிலன் வீட்டுக்கு வர வாசலில் வேதவல்லி தான் இருந்தார். வேதவல்லி

என்ன பேராண்டி நீ மட்டும் வருகிற எங்கே உன் சின்ன ஆத்தா தங்கச்சிங்க இரண்டு பேரும். அந்த சின்ன சிறுக்கி இந்த நேரத்திற்கு எழுந்து இருக்க மாட்டாளே என் ராசாத்தி ரதிதேவி கருங்கலில் எழுந்து விடுவாள். இந்த கல்யாணம் முடியட்டும் அடுத்த முகூர்த்தில் நம்ம சொந்த பந்ததில் ஒருவனை பார்த்து அந்த சின்ன சிறுக்கியையும் கரை ஏற்ற வேணும் அப்போ தான் இவள் சரியாக இருப்பாள் என சொல்ல. கபிலனுக்கு புரிந்தது ரதி இங்கும் வரவில்லை என்று பின் எங்கே போய் இருப்பாள் என யோசித்தவன். கபிலன்


ஏய் கிழவி உனக்கு என்னை புவனாவை வையாமல் இருக்க முடியாதா எப்போ பாரு பிலாக்கணம் வைத்து கொண்டு. முதலில் உன்னை தான் முதியோர் இல்லத்தில் கொண்டு விட வேணும் கல்யாண வீடு என்று பார்க்கிறேன் இல்ல இருக்கும் கோபத்திற்கு உன்னை வாங்கு வாங்கு என வாங்கி விடுவேன் என. யாரை வாங்க போகிற கபிலா என கேட்டு கொண்டு செழியன் வந்தான் அவனுக்கு தான் கல்யாணம் என்றாலும் கூட அந்த வீட்டுக்கு ஓத்த ஆண்பிள்ளை அவன் தானே எல்லா வேலைகளையும் பார்க்க வேணும். நிலவன் நண்பன் என்றால் கூட வீட்டு மாப்பிள்ளை அது போல தான் அக்காக்கள் புருஷன்கள் அவனின் உதவிக்கு அங்காளி பங்காளிகள் தான் இருந்தனர் .செழியன்

கபிலா இப்போ எதற்காக அப்பத்தா கூட ஒரண்டை இழுத்து கொண்டு இருக்க தனியாகவா வந்த. அப்பத்தா வயதுக்கு மரியாதை கொடு முதலில் பெரிய படிப்பு படித்தால் மட்டும் போதாது பெரியவங்களை மதிக்க தெரிய வேணும் என .வேதவல்லி

ராசா நீ கோபடாதே பொடி பயல் ஏதோ பேசி விட்டு போகிறான் விடு என. செழியன்
உனக்கும் அவன் கூட வம்பு வளர்க்காமல் தூக்கம் வராது அவனுக்கு உன்னை திட்டாமல் தூக்கம் வராது. சரி கபிலா எங்கே காவேரி அக்கா ரதி, புவனா எல்லாம் என கேட்க கபிலன் தடுமாறினான் அவனுக்கு தெரியும் உண்மையை மறைத்தால் செழியன் தன்னை பிளந்து கட்டி விடுவான் என்று. ஆனால் ரதி கிடைத்து விட்டால் பிறகு எல்லாம் மாறி போய் விடும் உண்மை தெரியாமல் எப்படி பேசுவது என நினைத்து கொண்டு இருக்க செழியனுக்கு எப்படி பதில் சொல்வது என நினைத்து கொண்டு இருக்க சின்ன பண்ணை என அழைத்து கொண்டு ஒருவன் ஓடி வந்தான்.


பஞ்சவர்ணம் தொடரும்….🦜
 
10கபிலனிடம் செழியன் எங்கே எல்லோரும் என கேட்ட கேள்விக்கு தடுமாறி கொண்டு இருக்க. அவனை காக்க என்று அவர்கள் பண்ணையில் வேலை செய்யும் முனியன் ஓடி வந்தான். செழியன்

என்ன முனியா காலங்காத்தால இப்படி பதறி அடித்து கொண்டு ஓடி வருகிற. உன்னை கோவிலை மற்ற ஆளுங்க கூட சேர்ந்து அலங்கரிக்க சொன்னதாக எனக்கு நினைவு என முனியன் பதட்டமாக சின்ன பண்ணை என. வேதவல்லி


ஏய் கூறு கெட்ட முனியா சொல்ல வந்த விஷயத்தை முக்காமல் சொல்லி விட்டு போ. கல்யாண வேலைகள் தலைக்கு மேலே கிடக்கு என சொல்ல. முனியன்

சின்ன பண்ணை நம்ம சின்னம்மா என கோவிலில் என சொல்ல தொடங்க செழியா என காவேரி ஓடி வர அவர் பின்னால் அசோக் இரவு போட்ட பாவாடை தாவணியோடு புவனா ஓடி வந்தாள். பொதுவாக ஏதும் விஷேசங்களை தவிர அசோக் உள்ளூரில் மாமனார் வீடு இருந்தால் கூட வர மாட்டார் இப்போ வர. வேதவல்லி மரியாதை நிமித்தமாக வாங்க மாப்பிள்ளை என அழைத்தவர் உள்ளே திரும்பி ஐயா சந்தானம் என குரல் கொடுக்க கொஞ்ச நேரத்தில் என்ன ஆத்தா என வந்தவர் அசோக்கை காண.அவர்

வாங்க மாப்பிள்ளை ஆத்தா புவனா உன் ஐயனுக்கு அந்த நாற்காலியை எடுத்து போடு என சொல்ல. அசோக்


ரொம்ப நன்றி மாமா நான் என்ன அன்னியனா இந்த வீட்டு மாப்பிள்ளை தானே எனக்கு எதற்காக இந்த மரியாதை. மாமா நான் இப்போ சொல்ல வந்தது என சொல்ல தொடங்கும் போதே அப்பு என் பெண்ணை காணவில்லை என கண்களை காவேரி கசக்க இவர்கள் சத்தம் கேட்டு வந்த கங்கா, யமுனா என்ன புள்ளையை காணவில்லையா என கேட்டவர்கள். யமுனா

காவேரி உனக்கு கண்ணு அவிந்து விட்டதா பக்கத்தில் பாப்பாவை வைத்து கொண்டு என்ன பேச்சு பேசுகிற என. காவேரி

சின்ன அக்கா இவள் மட்டும் தான் என் பெண்ணா என் ரதி குட்டியை காணோம் என சொல்லி அழ. கங்கா

ஏய் உன் வீட்டில் தானே நேற்று ராத்திரி இருந்தாள் அப்படி தொலைந்து போக அவள் என்ன சின்ன பெண்ணா. ஆ அவளுக்கு அம்மன் மேலே பக்தி ஜாஸ்தி ஏதும் விஷேசம் என்றால் முதலில் அங்கே போய் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து. அம்மனுக்கு அபிஷேகம் செய்து விட்டு தான் வருவாள் இது உனக்கு நல்லா தெரியும் தானே பிறகு எதற்காக ஊரை கூட்டி ஓப்பாரி வைக்கிற என. அசோக்

இதை தான் மதனி சொன்னேன் புள்ள எங்கேயும் போய் இருக்காது கோவிலுக்கு தான் போய் இருக்கும் வா போய் பார்க்கலாம் என்றால் கேட்டால் தானே. இல்ல நான் என் ஐயன், தம்பி கிட்ட முதலில் சொல்ல வேணும் என புவனாவையும் இழுத்து கொண்டு வந்து விட்டாள் சரி நான் போய் கோவிலில் தானே புள்ள இருக்கும் அழைத்து வருகிறேன் என கிளம்ப போக ஐயா தேவையில்ல அவங்களே வருவாங்க என முனியன் சொல்ல அனைவருமே புரியாமல் பார்க்க. செழியன்

முனியா இப்போ எதற்காக இங்கே நீ வந்த எதற்காக துப்பு கெட்ட தனமாக பேசி கொண்டு இருக்க என்ன விஷயம் சொல்லு என கேட்க. முனியன்

சின்ன பண்ணை நம்ம ரதி சின்னம்மா நம்ம ஸ்கூல் கணக்கு வாத்தி கூட கோவிலில் பேசி கொண்டு நின்றாங்க கையில் மாலை கூட வைத்து இருந்தாங்க என. செழியன் என்ன டா சொன்ன என அவன் சட்டையை பிடிக்க அவனை கபிலன், நகுலன் தான் விலக்கு பிடிக்க. செழியன்


நன்றி கெட்ட நாயே உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய நினைக்கிறாயா. என் தேவி பற்றி இல்லாத பொல்லாத கதை சொல்கிறாயா என முனியன் சட்டென செழியன் காலில் விழுந்தவன். முனியன்

சின்ன பண்ணை என்ன வார்த்தை சொல்லி புட்டிங்க இந்த ஊருக்கே நீங்களும் பெரிய பண்ணையும் தான் குல சாமிங்க அப்படிப்பட்ட குடும்பத்து பெண்ணை நான் அசிங்கபடுத்துவேனா. என் ஆத்தா இருளாயி மேலே சத்தியமாக நான் கண்ணால் கண்டது உண்மை சாமி நீங்க ஒரு தடவை வந்து பாருங்க .அங்கே அவங்க இல்லை என்றால் என்னை அந்த இடத்திலே வெட்டி பொலி போட்டு நம்ம ஊர் ஐயனாருக்கு படையல் போடுங்க என சொல்ல. செழியன்

நீ சொன்னதற்காக இல்லை உன் நொள்ளை கண்ணை பிடுங்க வேணும் அதற்காக தான் வருகிறேன். நகுலா புல்லட்டை கிளப்பு கோவிலுக்கு போக என சொல்லி கொண்டு இருக்க சந்தானம் வீட்டுக்கு ஒரு பைக் வந்தது அதில் இருந்து இறங்கியது ரதிதேவி கூடவே அந்த ஊர் பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் மகிழன். அதுவும் ரதியின் கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் தாலி தொங்க உச்சி வகிட்டில் நெற்றியில் குங்கும் துலங்க இருவர் கையிலும் மண மாலை இருந்தது சந்தானத்தின் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றது.


பஞ்சவர்ணம் வரும்….🦜
 
11சந்தானத்தின் வீட்டுக்கு ரதியும், மகிழனும் கையில் மாலையும் கழுத்துமாக வந்து நிற்க அவர் குடும்பம் மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றது. முதலில் நிலைக்கு வந்தது அசோக் மகிழா என அழைத்து கொண்டு அவன் அருகே போனார் அவனும் மாமா என்றவன் தலையை குனிய. அசோக்

வாட் திஸ் மகிழா நீயா இப்படி நான் சத்தியமாக இதை எதிர்பார்க்கவே இல்லை காதல் தப்பு இல்லை ஆனா அதை முறையோடு செய்ய வேணும். நீ என் கிட்ட ஓத்த வார்த்தை சொல்லி இருக்க நான் மாமா கிட்ட பேசி இருப்பேன் இல்லையா இப்போ உன்னால் இந்த மொத்த குடும்பமும் அவமானப்பட்டு நிற்கிறது அதுவும் நீ கற்று கொடுக்கும் இடத்தில் இருப்பவன் இப்படியா நடப்பது. உன் அம்மா எவ்வளவு எதிர்பார்ப்பு உன் மேலே வைத்து இருந்தாள் அதை சுக்குநூறாக உடைத்து விட்ட என்னை நம்பி என் வார்த்தையை நம்பி தானே மாமா உனக்கு நம்மூர் பள்ளிகூடத்தில் வேலை போட்டு கொடுத்தார் அதற்கு நீ செய்யும் நன்றிகடனா இது.அவர் மகன் கல்யாணம் இன்று அவன் கட்டிக்க போகிற பெண்ணை நீ இப்படி கல்யாணம் பண்ணி கொண்டு வந்து இருக்க நீ இப்படிப்பட்ட ஆள் இல்லையே பா.


என்ன மா ரதி சித்தப்பு கிட்ட வேணாம் சித்திக்கு நீ உயிர் அவளிடமாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்லையா. இன்று கல்யாணத்தை வைத்து கொண்டு என்ன வேலை மா பார்த்து இருக்க என கேட்க கை தட்டும் ஒலி கேட்டது அசோக் திரும்பி பார்க்க செழியன் தான் கை தட்டி கொண்டு இருந்தான். அவன் முகம் இறுகி போய் கண்கள் சிவந்து காணபட்டது அவன் கை தட்டும் ஒலியில் அனைவருமே நிலைக்கு வர. செழியன்


நான் எத்தனையே தடவை நம்மூர் டூரிங் டாக்கீஸ்ல் படம் பார்த்து இருக்கிறேன் ஏன் அதை இப்போ தியேட்டராக புதுப்பித்து கூட இருக்கிறேன் .ஆனா இப்போ நீங்க மூன்று பேருமே காட்டுறீங்க பாருங்க படம் நான் எங்குமே பார்த்தது இல்லை காவேரி அக்கா உன் புருஷனுக்கு படிப்பு சொல்லி கொடுப்பதை விட நடிப்பது சொல்லி கொடுப்பது நன்றாகவே வருகிறது என. அசோக்

செழியா என்ன பேசுகிற நான் எதற்காக நடிக்க வேணும் எனக்கு உன் வருத்தம் புரிகிறது. இவங்க செய்தது தப்பு தான் காதல் நிதானத்தை இழக்க சொல்லி விட்டது செழியா என. செழியன்


காதல் ஆமாம் இவன் உங்க ஒன்று விட்ட அக்கா மகன் தானே அப்போ உங்க ரத்தம் தானே அவன் உடம்பிலும் ஓடும். அது எப்படி மாமனும் மருமகனும் ஒன்று போல நினைக்கிறீங்க நீங்களும் இவனை போல தான் என் காவேரி அக்காவை காதல் என்ற பெயரால் நெருங்கி என் வீட்டுக்கு மாப்பிள்ளையாக வந்தீங்க இப்போ இவன் அது எப்படி சொல்லி வைத்தால் போல நடக்கிறது. பண்ணை குடும்பத்து பெண்களை வைத்து உள்ளே வரலாம் ஏகப்பட்ட சொத்து பத்து என திட்டம் போட்டு காய் நகர்த்தி இருக்கிறீங்க இல்லையா என அசோக் பேச முன்னே மாமா வாயை மூடு என சத்தம் போட்டு கொண்டு வந்தது புவனா தான். புவனா

உனக்கு கொஞ்சம் கூட உண்மையான அன்பை புரிந்து கொள்ள முடியாதா நீ எப்போ தான் என் அப்பாவுக்கு மரியாதை கொடுத்து இருக்க இப்போ கொடுக்க. நீ யார் அவரை கேள்வி கேட்க அக்கா செய்தது தவறு தான் அவளை முதலில் நீங்க கேட்டு இருக்க வேணும் அவளுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமா இல்லையா என்று அதை விட்டு என் அப்பாவை குற்றம் சொல்ல நீ யாரு. எங்க அப்பா என் ஆத்தாவை பணத்திற்காக காதலிக்கவில்லை இந்த குடும்ப உறவுகளுக்காக தான் காதலித்தார் உறவு இல்லாத அவருக்கு இந்த குடும்பத்தில் வாழ பிடித்து இருந்தது முதலில் என் அப்பா கிட்ட காதலை சொன்னது என் ஆத்தா தான் என் அப்பா இல்ல. காதலை பற்றி மட்டுமல்ல அன்பை பற்றியும் உனக்கு எங்கே தெரிய போகிறது என சொல்ல என்ன டி சொன்ன பொட்ட கழுதை என புவனாவை அடிக்க கை ஓங்க சட்டென அவள் முன்னே மறைத்தாற் போல வந்து நின்ற அசோக் செழியன் கையை பற்றி. அசோக்

இங்க பாரு மச்சான் என் பெண்ணு மேலே கை பட்டது நான் மனுஷனாக இருக்க மாட்டேன் மாமா முகத்திற்காக தான் பேச்சோடு விடுகிறேன் .பெண்ணுங்களை கை நீட்டுகிறவன் ஆம்பள இல்லை என்பது என் எண்ணம் கல்யாணமான நாள் முதல் விளையாட்டுக்கு கூட உங்க அக்காவை அடிக்க நான் கை ஓங்கியது இல்லை என் கண் முன்னாடியே என் பெண்ணை அடிக்க கை ஓங்கியது மட்டுமல்ல அவளை பொட்ட கழுதை என அழைக்கிற. என்ன வார்த்தை இது இப்படி உன் அக்காக்களை நாங்க இல்ல வேற யாரும் அழைத்தால் நீ பார்த்து கொண்டு இருப்பாயா நான் உன்னை ரொம்ப மதிக்கிறேன் சரியாக புரிந்தும் கொண்டு இருக்கிறேன். ஆனா நீ தான் இன்னும் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை இன்று உனக்கு நடந்தது பெரிய தவறு தான் முதலில் பேசலாம் அதற்கு பிறகு என்ன என தீர்மானிக்கலாம் அதை விட்டு போட்டு நான் பெத்த பெண்ணை மட்டுமல்ல பெறாத என் பெண்ணுங்க கெளரி, ரதியை கூட உனக்கு கை நீட்ட உரிமை இல்லை என சொல்ல. சந்தானம்

செழியா முதலில் கையை கீழே இறக்கு மாப்பிள்ளை சொன்னது அனைத்தும் சரி தான் முதலில் விசாரிக்கலாம். ஆத்தா ரதி என்ன மா இது என கேட்டு கொண்டு இருக்கும் போதே கங்கா ஓடி வந்து அவள் கன்னத்தில் அறைந்து முதுகில் அடிக்க அவளை யமுனா, காவேரி ஓடி வந்து பிடிக்க கெளரி, புவனா ரதியை அணைத்து கொண்டனர். கங்கா

பாவி பாவி என் ஆசையில் மண்ணை வாரி போட்டு விட்டாயே டி மூதேவி சொல்லி தொலைத்து இருக்க வேண்டியது தானே டி இவனை தான் பிடித்து இருக்கு என. என் ராசாவுக்கு நாங்க வேற நல்ல பெண்ணை பார்த்து இருப்போம் நம்ப வைத்து கடைசியில் கழுத்தை அறுத்து விட்டியே டி உன் ஐயனை சொல்ல வேணும் என் பெண்ணு என தலையில் தூக்கி வைத்து ஆடினார் இப்போ அவர் மானத்தையும் சேர்ந்து தெருவில் இழுத்து விட்டு இருக்க. இப்போ அவர் சொந்த பந்தங்க கூட வந்து கொண்டு இருக்கிறார் நான் என்னத்த சொல்ல என தலையில் அடித்து கொண்டு அழ. வேதவல்லி

கடன்காரி என் ராசா என் தேவி தேவி என உனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தானே டி .அவனுக்கு நீ கொடுத்த பரிசா இது என சத்தம் போட நிறுத்து ஆச்சி என இப்போ சத்தம் போட்டது ரதி. அவள்

எல்லோருமே என்னை மட்டுமே தப்பு சொல்கிறீங்களே ஏன் நீங்க யாருமே தப்பு செய்யவில்லையா என கேட்டாள்.

பஞ்சவர்ணம் வரும்….🦜
 
12ரதி நான் மட்டுமா தப்பு செய்தவள் என கேட்க அங்கே ஒரு கணம் அமைதி நிலவியது மறுகணம். காவேரி

ஏய் என்ன டி தப்பும் செய்து விட்டு சத்தமாக பேசி எகிறி கொண்டு வருகிற அப்படி நாங்க என்ன தப்பு செய்தோம். உனக்கு கல்யாணம் பண்ண நினைத்தது தப்பா டி அதுவும் யாரை மகராசா கணக்காக இருக்கும் என் தம்பியை என. ரதி


அங்கே தான் ஆத்தா நீ மட்டுமல்ல எல்லோருமே தப்பு செய்தீங்க. மாமனை கட்டிக்க எனக்கு இஷ்டமா என ஒரு வார்த்தை கேட்டீங்களா என. வேதவல்லி

ஏய் கூறு கெட்ட சிறுக்கி என் பேரனை கட்டிக்க நீ நான் என .போட்டி போட்டு கொண்டு வருவாள்கள் டி உனக்கு அவனை கட்டிக்க கசக்கிறதா என. ரதி


ஆச்சி நீ பேசாதே இது எல்லாம் உன்னால் தான் நான் மட்டுமல்ல கெளரியும் கூட மேலே படிக்க ஆசைபட்டோம். ஆனா நீ பொம்பள புள்ளைங்க படித்தது போதும் இனி வீட்டு வேலையை பழகட்டும் என எங்களை படிக்க விடாமல் செய்த சித்தப்பு எவ்வளவு எடுத்து சொன்னார் அப்பு கிட்ட ஆனா நீ மட்டுமல்ல மாமன் சேர்ந்து எங்களை படிக்கவே விடவில்லை. சித்தப்பு எங்களுக்காக எங்க ஐயங்க கிட்ட கூட போராடினார் ஆனா எங்கே எங்க ஆத்தாக்கள் அவங்களை கரையா கரைத்து அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டனர். புவனா, சிண்ணன் விஷயத்தில் சித்தப்பு அசையவே இல்லை அதனால் தான் அவங்க இரண்டு பேருமே இப்போ நல்ல நிலையில் இருக்கிறாங்க அதில் எனக்கு துளி கூட பொறாமை இல்லை.


ஏன் அப்பு கூட எங்களுக்காக எத்தனை தடவை எடுத்து சொன்னார் உன் மர மண்டைக்கு புரிந்தால் தானே. இப்போ காலம் மாறி விட்டது நம்மூர் சைக்கிள் கடைக்காரன் மகள் கூட காலேஜ் போகிறாள் ஆனா பண்ணை வீட்டு பெண்ணுங்க வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறோம் எங்க சுயத்தை அழித்தது நீங்க. அது தான் எனக்கு படித்தவங்க மேலே ஒரு மரியாதை ஏற்பட்டது அதை விட இவங்க பொறுமை தான் எனக்கு பிடித்தது இத்தனைக்கும் பெரிய படிப்பு படித்தவர் ஆனா மாமாவுக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லை பெண்களை அடிமையாக நினைக்கும் மனப்பான்மை .நிலவன் மாமா இவர் நண்பர் தானே அக்கா கூட எப்படி அமைதியாக பேசுகிறார் நடக்கிறார் மாமா நல்லவர் தான் உழைப்பாளி உத்தமர் தான் ஆனா ஒரு பெண்ணின் மனதை அவரால் ஜெயிக்க முடியாது .நான் என்று இல்லை எந்த பெண்ணும் தனக்கு வரும் கணவன் தன்னை மகாராணியாக வைத்து இருக்க வேணும் என ஆசைபடுவது இல்லை ஒரு சக மனுஷியாக அவள் விருப்பு வெறுப்புகளை கேட்டு நடக்க வேணும் என ஆசைபடுகிறாள் அந்த விதத்தில் மாமா பூஜ்ஜியம் தான்.


எனக்கு தேவை பணக்காரன் அழகன் இல்லை என்னை சக மனுஷியாக மதிக்க தெரிந்த ஒருவர் அது இவர் தான் இவரை விரும்ப இன்னொரு காரணம். இவர் அசோக் சித்தப்பா போல பொண்டாட்டியை சரி பாதியாக மட்டுமல்ல ஒரு தோழியாக நினைக்க தெரிந்தவர் சித்தப்பா சொந்தம் வேற படித்தவர் .என்னை போல என் பெண்ணுங்க படிக்காத கூமுட்டைங்களா இருக்க கூடாது நான்கு எழுத்து படித்து உலகத்தை தெரிந்து கொள்ள வேணும் இதை எல்லாம் நான் இந்த வீட்டில் இருந்து கொண்டு சொல்ல முடியுமா முடியாது. நாங்க காதல் என்று ஊர் சுற்றி திரியவில்லை மனசை மட்டும் பரிமாறி கொண்டோம் எனக்கு மாமனை என் ஆத்தாவின் கூட பிறந்த பிறப்பாக தான் பார்க்க தோன்றியதே தவிர புருஷனாக இல்ல இவங்களை தான் என் புருஷனாக நினைக்கிறேன் .இப்போ கூட இவர் காலையில் ஊரை விட்டு கிளம்பி கொண்டு இருக்க நான் தான் என் உயிரை காரணம் காட்டி கல்யாணம் பண்ணி கொண்டேன்.


மாமா என்னை தவறாக நினைக்காதே எனக்கு உன்னை மாமனாக பிடிக்கும் ஆனா புருஷனாக நினைத்த தோன்றவில்லை உன் எண்ணங்கள் வேற என் எண்ணங்கள் வேறு. நான் செய்தது தப்பு தான் உன் கிட்ட என் காதலை சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்ப வயசு கோளாறு என்று இவரை ஊரை விட்டு அடித்து விரட்டி இருப்ப ஏன் என்றால் நீ ஆண் என்ற நிலையில் நிற்கிற உனக்கு மற்றவங்க எண்ணம் புரியாது. இருப்பது ஒரு வாழ்க்கை அதில் நான் உன்னை ஏமாற்றி பொய்யாக வாழ விரும்பவில்லை என செழியன் இது என் தேவியா இவளுக்கு இவ்வளவு நீளமாக பேச தெரியுமா என பார்த்தான். அவன் மனதில்

சொல்லால் அடிச்ச சுந்தரி

மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி

பட்டக் காயத்துக்கு மருந்தென்னடி என்ற பாடல் ஓடியது .
அப்போது நான்கு ஐந்து காருக்கு மேலே பண்ணை வீட்டுக்கு முன் வந்து நிற்க அதில் இருந்து இறங்கியது வேற யாருமல்ல கங்காவின் புருஷன் தர்மன் யமுனாவின் புருஷன் தமிழ் கூடவே இருவரின் நெருங்கிய சொந்த பந்தங்களும் சந்தோஷமாக வந்து இறங்க. பண்ணை வீட்டுக்கு முன்னே கூட்டமாக நிற்க தர்மன், தமிழ் அவசரமாக ஓடி வந்தவர்கள் கண்டது கழுத்தில் தாலி கையில் மாலையோடு நிற்கும் மகிழன் ரதியை தான் அவர்கள் அதிர்ச்சியாக நிற்க கங்கா மச்சான் என தர்மன் அருகில் அழுதவாறே ஓடி வந்தவர். கங்கா

மச்சான் இந்த ஓடுகாலி கழுதை செய்த வேலையை பாருங்க என் தம்பியை ஏமாற்றி விட்டு ஓடி போய் இந்த வாத்தியை கல்யாணம் பண்ணி கொண்டு வந்து இருக்கிறாள். அதுவும் நம்மூர் கோவிலில் இவளால் என் ஐயன், தம்பி மானம் மட்டுமல்ல நம்ம குடும்ப மானமே போய் விட்டது பாவி பாவி ஏன் டி என் வயிற்றில் வந்து பிறந்த என ரதியை அடிக்க கை ஓங்க சட்டென மகிழன் அவள் முன் வந்து நின்றவன். மகிழன்

அத்தை என்னை என்ன வேணும் என்றாலும் திட்டுங்க ஆனா என் பொண்டாட்டி மேலே யார் கையும் பட விட மாட்டேன். அவளை கண் கலங்காமல் காப்பாற்ற வேணும் என நினைக்கிறேன் என. செழியன்

டேய் அதை சொல்ல நீ யாரு டா பரதேசி பயலே உன்னை எல்லாம் இந்த ஊருக்கு விட்டது தான் தப்பு .ஏய் முனியா என்ன பார்த்து கொண்டு நிற்கிற நம்ம ஆளுங்களை அழைத்து இவனை அடித்து ஊருக்கு வெளியே தள்ளி விடு என முனியன் தயங்க. செழியன்

என்ன டா சொல்லி கொண்டு இருக்கிறேன் பார்த்து கொண்டு இருக்க இவனை முதலில் நானே கழுத்து பிடித்து வெளியே தள்ளுகிறேன் என மகிழன் கழுத்தில் கை வைக்க போக. கையை எடு மாமா என சொல்லி கொண்டு மகிழனை பின்னால் தள்ளி விட்டு ரதி முன்னால் வந்தாள்.


பஞ்சவர்ணம் தொடரும்…🦜
 
13அவர் மேலே இருந்து கையை எடு மாமா என ரதி சத்தம் போட செழியன் அதிர்ச்சியாக பின்னால் நகர. ரதி

இது தான் நீ இதற்காக தான் நான் பயந்தேன் எனக்கு பிடிக்காத விஷயமும் இது தான் நாங்க என்ன சொல்ல வருகிறோம் என கேட்காமல் கை வைப்பது அடித்து விட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா. இவரை ஊரை விட்டு விரட்டி விட்டால் நான் இவரை மறந்து இவர் கட்டிய தாலியை கழட்டி போட்டு உன்னை கட்டி கொள்வேன் என எப்படி நீ நினைத்த காதல் என்றால் என்ன என உனக்கு தெரியுமா அது மனசு சம்பந்தப்பட்ட விஷயம். உனக்கு எங்கே புரிய போகிறது எல்லா விஷயத்திலும் நல்லவனாக நடந்து கொள்ளும் நீ சில விஷயங்களில் ஆதிக்க மனப்பான்மை உள்ளவனாக நடந்து கொள்கிற மாமா நான் இவர் கூட தான் வாழ்வேன் என சொல்ல. செழியன்

என்ன புள்ள என்னை யார் என்று நினைத்த சின்ன பண்ணை நான் மற்றவன் பொண்டாட்டியை கட்டிக்க நினைப்பேனா எப்போ நீ இவன் கையாலே தாலி வாங்கி கொண்டாயோ அப்பவே நீ எனக்கு அக்கா மக மட்டும் தான் .என் அக்கா மக நல்லா இருக்க வேணும் என்று தான் இந்த நொடி வரைக்கும் நினைக்கிறேன் நான் அவ்வளவு கேவலமானவன் இல்ல புள்ள அப்படி இருந்து இருக்க எனக்கு ஊர் எல்லாம் வைப்பாட்டி இருந்து இருக்கும். நீ நான் பார்க்க வளர்ந்த புள்ள நல்லா இருக்க வேணும் என்று தான் நினைக்கிறேன் என. வேதவல்லி

நீ ஏன் ராசா விசனப்படுகிற இந்த சிறுக்கி உன்னை கட்டிக்க கொடுத்து வைக்கவில்லை உனக்கு என்ன. ராசா கணக்கான இருக்க சின்ன பண்ணை வேற சொத்து பத்துக்கு குறைவே இல்லை உன்னை கட்டிக்க நீ நான் என போட்டி போட்டு கொண்டு வருவாள்கள் இவளை தண்ணீர் தெளித்து விடு ராசா எப்படியே போய் நாசமாகட்டும் என ஆச்சி என கெளரி, புவனா சத்தம் போட. நகுலன்


ஆச்சி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ஆயிரம் தான் தப்பு செய்தாலும் ரதி நம்ம வீட்டு பெண்ணு. அவளுக்கு போய் சாபம் கொடுக்கிற கொஞ்சம் நீ உன் திருவாயை மூடி கொண்டு சும்மா இரு என. கங்கா


மச்சான் இனி இவள் நம்ம புள்ளையே இல்ல நமக்கு இனி இருப்பது இரண்டு மக தான் கெளரி, புவனா. இவளை அடித்து துரத்தி விடுங்க என சொல்ல தர்மன் ரதியை பார்க்க அவள் கண்கள் கலங்க தந்தையை பார்க்க. அசோக்


சகலை இப்போ நான் பேசலாமா எனக்கு புவனா மட்டும் பெண்ணு இல்ல கெளரி, ரதி கூட பெண்ணுங்க தான் புள்ளைங்க தவறு செய்வது இயற்கை அதை பெற்றவங்க நம்ம கூட மன்னிக்காமல் விட்டால் எப்படி.ரதி செய்தது தவறு தான் அவள் ஒன்று கங்கா, யமுனா மதனிங்க கிட்ட சொல்லி இருக்க வேணும் இல்ல காவேரி கிட்ட சொல்லி இருக்கலாம் அவள் என் காதில் விஷயத்தை போட்டு இருக்க நான் உங்க கிட்ட சொல்லி மாமா கிட்ட பேச சொல்லி இருப்பேன். அதை விட்டு அவளை நம்பி திருமண ஏற்பாடுகளை செய்து விட்டு காத்து இருக்க இப்படி மாலையும், கையுமாக வந்து நின்றால் எப்படி இருக்கும் இதை யாராலும் சட்டென ஏற்று கொள்ள முடியாது அதுவும் செழியனுக்கு தான் அவளால் அதிக பாதிப்பு.

நானும் காவேரியை காதலித்தவன் தான் ஆனா ஓடி போகவில்லை முறையாக மாமா கிட்ட சம்மதம் பெற்று இந்த ஊரறிய அவள் கழுத்தில் தாலி கட்டினேன். மகிழன் என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் அவனும் மெளனமாக இருந்து விட்டான் காதலிக்கும் போது இருக்கும் தைரியம் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்கும் போது மட்டும் இக்கால புள்ளைகளுக்கு இருப்பது இல்லை. சகலை நானும் ஒரு பெண்ணை பெத்தவன் தான் உங்க வேதனை புரிகிறது சொந்தபந்தம் முன்னாடி நம்ம பெண்ணே நம்மை தலை குனிய வைத்து விட்டாள் என்று முடிவு உங்க கையில் . அதற்கு முன் ஒன்று சொல்ல வேணும் மகிழன் எனக்கு தூரத்து உறவு தான் என் ஒன்று விட்ட அக்கா சுமதியின் ஒரேய பையன் படித்த பையன் அப்பா இல்லை அவன் காலேஜ் லெக்சர் போஸ்ட்க்கு இண்டர்வியூ போய் அட்டன் பண்ணி செலக்ட் கூட ஆகி விட்டான் இன்னும் மூன்று மாதத்தில் வேலை கிடைத்து விடும். நாங்க உங்களை போல பெரிய பணக்காரங்க இல்லை தான் ஆனா எங்களை நம்பி வந்தவங்களை நன்றாக வாழ வைக்க தெரியும் முடிவு உங்க கையில் என தர்மன் ரதி இங்கே வா என அழைக்க ரதி தயங்கியவாறே தந்தை அருகே வர. தர்மன்


என் கிட்ட எல்லாம் கேட்கும் நீ இதை மட்டும் ஏன் மா கேட்க தோன்றவில்லை நான் பெரிதாக படிக்காதவன் தான் ஆனா நீ, கெளரி படிக்க கூடாது என நினைக்கவில்லை. என் பெண்ணுங்க மகாராணிங்க அவங்களுக்காக தானே இத்தனை சொத்தும் சேர்த்து வைத்து இருக்கிறேன் பிறகு எதற்காக அவங்க படித்து வேலைக்கு போய் கஷ்டப்பட வேணும் என்ற எண்ணம் அது தான் உன் ஆத்தா சொல்ல சரி என சொன்னேன் இப்போ தான் அசோக் சகலை சொன்னதன் அர்த்தம் புரிகிறது. நல்ல வேளை தமிழ் சகலை கபிலனை அசோக் சகலை பேச்சை கேட்டு படிக்க வைத்தார் ஒரு மனிதனுக்கு படிப்பு முக்கியம். எனக்கு நிம்மதியாக இருந்தது என் பெண்ணுங்க இரண்டு பேருமே ஒரேய ஊரில் உறவில் வாழ்க்கைபட போகிறாங்க என்று நிலவன் மாப்பிள்ளை போல செழியன் மச்சான் என் பெண்டாட்டியோட கூட பிறந்த உறவு எனக்கு மாப்பிள்ளையாக வர கசக்குமா. அதற்காக தான் ஆத்தா உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்கவில்லை உனக்கும் உன் மாமனை பிடிக்கும் என தப்பு கணக்கு போட்டு விட்டேன் பாசம் வேற காதல் வேற என இந்த படிக்காதவனுக்கு புரியவில்லை ஆத்தா.


எனக்கு என் பெண்ணுங்க தான் உசிரு என் சாமிங்க அவங்க சந்தோஷமாக வாழ வேணும் நீ ஆசைபட்டவன் கூட வாழு ஆத்தா. இந்த ஐயன் சொல்கிறேன் என சொல்ல ரதி அப்பு என அவர் மார்பிலே சாய அவர் அவளை அணைத்து கொண்டார். கங்கா


அப்போ என் தம்பிக்கு என்ன பதில் மச்சான் ஊரை கூட்டி உங்க பெண்ணு அவளை அசிங்கபடுத்தி விட்டாள். இதற்கு பதில் தெரியவில்லை என்றால் இந்த இடத்திலே என் பிணம் விழும் என அக்கா என செழியன் சத்தம் போட்டான்.


பஞ்சவர்ணம் வரும்….🦜
 
14
கங்கா செழியன் திருமண விஷயத்திற்க்கு ஒரு பதில் தெரியவில்லை என்றால் தன் பிணம் தான் இந்த இடத்தில் விழும் என சொல்ல. செழியன் அக்கா என சத்தம் போட்டவன் கங்காவை அணைத்து கொண்டு. செழியன்

அக்கா என்ன வார்த்தை சொல்லிபுட்ட நீங்க மூன்று பேருமே எனக்கு அக்காக்கள் இல்ல ஆத்தா என் உசிரு உங்களை உசிரோடு பறி கொடுக்க பார்த்து கொண்டு இருக்க நான் என்ன கையாலாகாதவனா. அக்கா இப்போ என்ன எனக்கு கல்யாணம் நடக்க வேணும் சரி நீங்க மூன்று பேருமே வேற பெண்ணை பார்த்து கட்டி வைங்க அது யாராக இருந்தாலும் கூட பரவாயில்ல. ஆனா இனி இப்படி ஒரு வார்த்தை இனி பேசாதே என கங்கா என்ற ஐயா என அவன் கன்னத்தை தடவி விட்டவன் ரதியை பார்த்து. கங்கா

பாரு டி எப்படிப்பட்டவன் என் தம்பி உனக்கு தான் அவன் கூட வாழ கொடுத்தது வைக்கவில்லை. உன்னை அவனுக்கு கட்டி கொடுக்க நினைத்தேன் பாரு என் புத்தியை செருப்பால் அடிக்க வேணும் என. வேதவல்லி

அப்படி சொல்லி டி இனி இவளுக்கு இந்த வீட்டில் இடம் இல்லை ஏன்யா சந்தானம் என்ன ராசா பேசாமல் இருக்க உன் முகமே சரியில்ல இந்த சிறுக்கி செய்ததை நினைத்து விசனபடாதே சாமி. இந்த ஊருக்கே தீர்ப்பு சொல்பவன் நீ நல்ல காலம் இதுவே கல்யாணத்திற்கு பிறகு இவள் ஓடி போய் இருக்க நம்ம குடும்ப மானமே சந்தி சிரித்து இருக்கும் என. சந்தானம்


எனக்கு வலி தான் ஆத்தா மூன்று பெண்ணுங்களுக்கு பிறகு என் பொண்டாட்டி உசிரை கொடுத்து பெத்து தந்தவன் என் மகன் என் வாரிசு. நான் இல்லை என்றால் கூட இந்த ஊரை, குடும்பத்தை அவன் அக்காக்களை பார்த்து கொள்வான் என்ற நினைப்பு அதற்கு அவன் குணம் தெரிந்த பாசமான பெண்ணு வேணும் என நினைத்தேன் என்ன அது என் பேத்தியாக இருந்தால் சந்தோஷம் என நினைத்தேன். அதற்காக அவளை இந்த வீட்டோடு முடக்க நினைக்கவில்லை அவள் என் கிட்ட ஒத்த வார்த்தை சொல்லி இருக்கலாம் இந்த அப்பு வயதானவன் பழங்கால ஆள் என நினைத்து விட்டாள் போல அவள் சந்தோஷமும் எனக்கு முக்கியம் என அவளுக்கு தெரியவில்லை போல. சரி நடந்தது நடந்து விட்டது இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம் பெரிய மாப்பிள்ளை என்ன செய்யலாம் என நினைக்கிறீங்க என கேட்க. தர்மன்

மாமா என் மகள் சந்தோஷம் முக்கியம் தான் அதற்காக அவள் மச்சானுக்கு செய்ததை ஏற்று கொள்ள முடியாது .அவர் கிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றவர் என்னை மன்னித்து விடுங்க மச்சான் என கை எடுத்து கும்பிட. செழியன் பதறி போய்

என்ன மாமா இது என்னை சங்கடத்திற்கு ஆளாக்க வேணாம் ரதி செய்ததை என்னால் மன்னிக்க முடியாது தான். அதற்காக அவளை வெறுக்கவும் முடியாது அவள் என் அக்கா மக நீங்க என் மாமன் என் அப்பா நிலையில் இருப்பவர் நீங்க போய் கை எடுத்து என் கிட்ட மன்னிப்பு கேட்பதா என தர்மன் அவன் தோளை தட்டி விட்டு. தர்மன்


மாமா நான் முறைபடியாக இன்றே ரதி கல்யாணத்தை நடத்த நினைக்கிறேன் சொந்தபந்தம் கூட என் வார்த்தை நம்பி அசல் ஊரில் இருந்து வந்து இருக்கிறாங்க. என் பெண்ணு வாழ்க்கை யாருக்குமே பேசும் பொருளாகி விட கூடாது போட்ட பந்தலை பிரிக்க வேணாம் தம்பி அசோக் நீ உன் அக்கா கிட்ட பேசி இப்போ வரவழைக்க முடியுமா என கேட்க. அசோக்

அக்கா ரதியின் கல்யாணத்திற்கு காலையில் வருவதாக சொல்லி இருந்தாங்க கூடவே என் சித்தப்பா, சித்தி அண்ணன் ,தங்கச்சி எல்லாம். மாமா அவங்களுக்கு முறையாக பத்திரிகை வைத்ததால் நிச்சயமாக வருவாங்க சகலை அதனால் பிரச்சனை இல்லை என. சந்தானம்


அப்போ சரி பெரிய மாப்பிள்ளை சொன்னது போல போட்ட பந்தலை பிரிக்காமல் நல்ல காரியத்தை செய்யலாம் என. கங்கா

அப்பு நான் சொன்னது உங்க காதில் விழவில்லையா இல்ல இந்த பைத்தியக்காரி சத்தம் போட்டு கொண்டு இருக்கட்டும் என நினைக்கிறீங்களா .எனக்கு என் பெண்ணுங்க எப்படி முக்கியமோ அது போல என் தம்பி முக்கியம் நாங்க மூன்று பேருமே அவனை தூக்கி வளர்த்து இருக்கிறோம் அவனை இப்படி தனி மரமாக நிற்க வைத்து விட்டு அதை பார்த்து கொண்டு இருக்க எங்களால் முடியாது என. யமுனா

அப்பு அக்கா சொல்வது தான் சரி நம்ம ரதி பாப்பா கல்யாணத்தோடு சேர்த்து இவன் கல்யாணத்தையும் வைக்கலாம் என. காவேரி

அக்காக்கள் சொல்வது சரி எங்க தம்பியை இப்படி ஓத்தையில் பார்க்க எங்களால் முடியாது அப்பு தம்பி கல்யாணம் இன்று நடக்க வேணும் என. சந்தானம்


என்ன மா நீங்க மூன்று பேருமே விபரம் புரியாத புள்ளைங்க போல பேசி கொண்டு இருக்கிறீங்க உங்களுக்கு தம்பி என்றால் எனக்கு செழியன் மகன் ஓத்த புள்ள வேற எனக்கு மட்டும் ஆசை இருக்காதா அவன் கல்யாணத்தை நடத்தி பார்க்க .இன்றே கல்யாணம் நடக்க வேணும் வேணும் என்றால் நான் தீடீரென பெண்ணுக்கு எங்கே போவது இது என்ன சந்தையில் போய் காய்கறி வாங்குவது போலவா ஆயிரங்காலத்துப் பயிர் முதலில் தரகர் கிட்ட சொல்ல வேணும் பிறகு பெண்ணு நமக்கு பிடித்து இருக்க வேணும் பெண்ணு பார்க்க வேணும் செழியனுக்கு பிடித்து இருக்க வேணும் இப்படி எவ்வளவு இருக்கு நம்ம குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக பார்க்க வேணாமா மா என்ன மா நீங்க என கோபமாக தொடங்கி ஆதங்கத்தில் முடிக்க. வேதவல்லி


சந்தானம் நீ எங்கேயும் போய் பெண்ணு பார்க்க வேணாம் அதற்கு தான் நம்ம காவேரி பெண்ணு ஈஸ்வரி இருக்கிறாள் இல்லையா செழியனுக்கு அவளும் அக்கா மகள் தானே என சொல்ல.புவனேஸ்வரி மட்டுமல்ல செழியன் உட்பட அங்கே இருந்த அனைவருமே அதிர்ச்சியாக வேதவல்லியை தான் பார்த்தனர்.

பஞ்சவர்ணம் வரும்…🦜
 
15வேதவல்லி செழியனுக்கு பெண்ணு பார்க்க வேணாம் புவனேஸ்வரி இருக்கிறாள் என சொல்ல அனைவருமே அதிர்ச்சியாக நிற்க முதலில் பேசியது. சந்தானம்

என்ன ஆத்தா பேசுகிற அது சின்ன பெண்ணு அது மட்டுமல்ல செழியனுக்கும் அதற்கும் ஆகாது என. நம்ம எல்லோருக்குமே தெரியும் பிறகு எதற்காக இப்போ சபையில் இப்படி பேசி கொண்டு இருக்க என கேட்க. வேதவல்லி

அட சும்மா இரு டா இவனே இவள் என்ன எட்டு வயது பெண்ணா வயது வந்த பத்தொன்பது வயது பெண்ணு தானே இப்போ கல்யாணம் பண்ணும் வயது தானே. ஆம்பளைக்கு எதற்கு டா வயது அவன் நல்லவனாக உழைப்பவனாக இருந்தால் போதாது என் பேரன் சின்ன பண்ணை மட்டுமல்ல உழைப்பாளி, அழகன் வயது இந்த வருடம் முப்பது தான் பிறகு என்ன. இரண்டு பேருக்குமே ஆகாது என்ற பேச்சு என் பேரனின் சொந்த அக்கா மகள் ஈஸ்வரி அவள் நல்லா இருக்க வேணும் என சிலதை கொஞ்சம் கண்டிப்பாக சொல்வான் இதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்வதா. ஆத்தா காவேரி என்ன ஆத்தா நீயும் மலைத்து போய் நிற்கிற உன் பெண்ணை நீ தூக்கி வளர்த்தவனுக்கு கட்டி கொடுக்க உனக்கு இஷ்டம் இல்லையா என கேட்க அழுத காவேரி கண்களை துடைத்து கொண்டு. காவேரி

என்ன அப்பத்தா இப்படி சொல்லி விட்ட எனக்கு இந்த யோசனை தோணவில்லை பாரு என் பெண்ணை என் தம்பிக்கு கட்டி கொடுக்க கசக்குமா. நான் தாராளமாக கட்டி கொடுக்கிறேன் என காவேரி என சத்தமாக அழைத்தார். அசோக்


காவேரி நீ முடிவு எடுக்க முன் புவனாவின் அப்பா நான் என்னை ஒரு வார்த்தை கேட்டு இருக்க வேணும். அதை விட புவனா கிட்ட ரதி விஷயத்தில் நீங்க எல்லாம் செய்த தவறு தான் இவ்வளவு தூரம் நிறுத்தி இருக்கு அதைய தப்பை திரும்ப செய்கிற அவளை பெத்தவள் தானே நீ அவள் மனசை பார்க்க மாட்டாயா என கேட்க. கங்கா

என்ன தம்பி நீங்க எங்க பெண்ணை பற்றி எங்களுக்கு தெரியாது அவள் எங்க வீட்டு கடைக்குட்டி. படித்து இருந்தால் கூட அவளுக்கு உலகம் தெரியாது எங்க பெண்ணு எங்க வீட்டுக்கு மருமகளாக வருவது எங்க அதிர்ஷ்டம் என சொல்ல அசோக் எப்படி கங்காவுக்கு மறுப்பு சொல்வது என தயங்க அதை உணர்ந்த. தர்மன்


கங்கா சகலை உன்னை எதிர்த்து பேச மாட்டார் உன்னை,யமுனாவை மதனி நிலையில் வைத்து பார்க்கிறார். ஆனா இப்போ என் பெண்ணு புவனாவுக்காக நான் பேச வேணும் அவர் சொன்னது சரி தான் ரதி விஷயத்தில் செய்த தவறை நம்ம திரும்ப செய்ய கூடாது செழியன் மச்சான், புவனாவுக்கு இதில் சம்மதமா என கேட்க வேணும் என. ரதி

ஆத்தா உனக்கும் காவேரி ஆத்தாவுக்கும் மறை கழன்று விட்டதா கொஞ்சம் கூடவா யோசிக்க மாட்டீங்க மாமனுக்கும் பாப்பாவுக்கு எதிலுமே பொருத்தம் கிடையாது ஏன் மனசு பொருத்தம் கூட இல்லை. இதில் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிற யாரு சம்மதித்தாலும் இந்த கல்யாணத்தை நான் நடக்க விட மாட்டேன் என. கங்கா

ஏய் யாரு டி நீ என் குடும்ப விஷயத்தில் தலையிட இது என் தம்பி என் பெண்ணு சம்பந்தப்பட்ட விஷயம். இதில் தெருவில் போற உன் சம்மதம் எங்களுக்கு எதற்கு ஓடுகாலி எல்லாம் இந்த சபையில் பேச தகுதி இல்லை என. வேதவல்லி

அப்படி சொல்லு டி என் பேத்தியா கெக்கா இந்த சிறுக்கி தான் இதற்கு எல்லாம் காரணம் கடைசி நிமிடத்தில் நம்ம வைத்து கழுத்தை அறுத்து விட்டாள். என் ராசா தலை நிமிர்ந்து நடந்தவனை ஊருக்குள்ளே தலை குனிய வைத்து விட்டாள் படுபாவி மகள் இதில் இப்போ வியாக்கியானம் பேச வந்து விட்டாள்

ஆத்தா கங்கா இனி இவள் வாய் திறந்தால் என்றால் வாயிலே நான்கு குத்து விடு என. கபிலன்


ஆச்சி முதலில் உன் வாயில் தான் வசம்பை வைத்து தேய்க்க வேணும் கேவலமான திட்டம் எல்லாம் நீ தான் போட்டு கொடுக்கிற. இதற்கு தான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு யோசித்து கொண்டு இருக்க நீ சீரியல் வில்லியை விட பலே கிழவி என் தங்கச்சி உன் பேரனை கட்டிக்க மாட்டாள் என. தமிழ்


கபிலா வாயை மூடு பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவ ஆத்தா தன் எண்ணத்தை சொல்லிற்று. நம்ம பக்க எண்ணத்தை நம்ம சொல்லலாம் அதற்காக இப்படியா பேசுவது அவங்க இந்த குடும்பத்து பெரியவங்க உன் ஆத்தாவோட ஐயனை பெத்தவங்க. பட்டணத்தில் படித்தால் மட்டும் போதாது மகனே நம்ம கிராமத்து பண்பாடும் தெரிந்து இருக்க வேணும் அவங்களுக்கு பேசி புரிய வைக்கலாம் என்றார். செழியன்


கொஞ்சம் எல்லோருமே நிறுத்துறீங்களா என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ஏமாந்த சோணகிரி போலவா. அக்காக்காரி கல்யாணத்து அன்று ஓடி போனாள் தங்கச்சி கல்யாணம் பண்ணிய அன்றே ஓடி போகவா. போதும் இந்த வீட்டு பெண்ணுங்களால் நான் பட்ட அவமானம் அப்பத்தா உன் ஏக்கம் புரிகிறது ஆனா இந்த வீட்டு பெண்ணுங்க வேணாம் என்னை நடு தெருவில் நிற்க வைத்து செருப்பால் அடித்தது போதும். நீ நம்ம சொந்தத்தில் ஒரு பெண்ணை பாரு அவள் ஏழையாக, படிக்காதவளா ஏன் அழகியாக இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்ல. இந்த வீட்டுக்கேற்ற பெண்ணாக பாரு என காவேரி சட்டென அசோக் காலில் விழுந்து அதை பற்றி கொண்டவர். காவேரி

மாமா நான் இது வரைக்கும் உங்க கிட்ட வாய் திறந்து எதுவுமே கேட்டது இல்லை நீங்க அப்படி கேட்க விட்டதும் இல்லை. என்னை மகாராணி தான் இந்த நொடி வரைக்கும் வைத்து இருக்கிறீங்க இப்போ முதல் தடவையாக உங்க கிட்ட உங்க காவேரி ஒன்று கேட்கிறாள் நீங்க சொன்னா நம்ம பெண்ணு கேட்பாள். என் தம்பிக்கு அவளை கட்டி கொடுக்க சம்மதம் சொல்லுங்க மாமா நீங்க சரி என்றால் அவளும் சரி என சொல்வாள் உங்க எந்த கருத்துக்களும் நான் மறுப்பு சொன்னது இல்லை இப்போ நம்ம காதலின் மேலே நம்பிக்கை வைத்து கேட்கிறேன். என் தம்பிக்கு நம்ம பெண்ணை கட்டி கொடுக்க சம்மதம் சொல்லுங்க அவன் நான் தூக்கி வளர்த்தவன் இப்படி சபையில் அவமானபட்டு நிற்பதை என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியாது அதற்கு பிறகு இந்த காவேரி ஐடமாக தான் வாழுவாள் என அழ. அசோக் தன் கால்களை பற்றி கொண்டு அழும் மனைவியை பார்த்தவர் பிறகு நிமிர்ந்து தன் எதிரே நிற்கும் மகளை பார்த்தார்.


பஞ்சவர்ணம் வரும்…🦜 
Status
Not open for further replies.
Top