வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவுற்ற கதைகள்

Status
Not open for further replies.

GG writers

Moderator
1.#கல்லில்_பூக்கும்_மலர்க்கொடி
#மறுமணம்
#மெல்லிய_காதல்_கதை


நெஞ்சில் தவழ்ந்த காதல், வார்த்தை கொண்டு உருவகம் பெரும் முன் உறவுகள் செய்த துரோகத்தில் மடிந்து வீழ்ந்திட... தவித்து துடித்து ரணமாய் நாட்கள் நகர, இறுகிய பாறைக்குள் சுரக்கும் மென் ஈரமாய் அவனின் காதலான மலரவளின் மென் தடம். அவனுக்கு அவள் இதம் இடமாக இருப்பினும், அவனுக்கு இணையாய் அவளுள்ளும் பெரும் பாரம். வலியோடு கடந்த நாட்கள் யாவும் இருவரிடமும் ஒருவருள் ஒருவராக இளைப்பாறல் கொள்ள... பல எதிர்பாராத முடிச்சுக்கள் தரும்கூடிய மென்மையான மறுமண கதை. கல்லில் பூக்கும் மலர்க்கொடி.

கதை திரி👇

 
Last edited:
2.#ரேணுகாவேலன்
#மென்மையும் -அதிரடியுமான காதல் கதை

கணவன் மனைவி இடையேயான சொல்லாத காதலும் அதிரடியான உறவுகளுடன் இணைந்த பின் அவர்களின் வாழ்வும் வாழையடி வாழையாய் வளர்ந்து இல்வாழ்வு மற்றும் உறவுகளின் மேன்மை சொல்லும் படைப்பு


கதை திரி,

 
3.#மழலை_மாறா_மென்மொழியே
#Feel_good_story


மகாதேவன் - மென்மொழி
மெல்லிய அன்பு இழைக் கதை. பதினெட்டு வருடங்களாக வீட்டுச்சிறையில் இருக்கும் மென்மொழி, உள்துறை அமைச்சர் வர்ண மகாதேவனின் பொறுப்பில் வந்த பின்பு அவளுக்கும் அவனுக்கும் இருந்த பதினான்கு வயது வித்தியாசத்தை தாண்டி இருவரின் அன்பு பரிமாறப்பட்ட விதம் எப்படி? அவளின் காதலை அவனுக்கும் பரிமாற்றம் செய்து திருமணமே வேண்டாம் என்று இருந்தவன் மனநிலையை மாற்றி அவனுக்குள் காதலை வரவழைத்தவள். அவளுக்கு பல எதிரிகள் இருக்க அவர்களை சமாளித்தார்களா? பள்ளிக்கூடத்தை எட்டி கூட பார்க்காத மென்மொழிக்கு அவள் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை ஏற்படுத்தி சாதிக்கவைத்த மகாதேவன் அவளின் தாயுமானவனாய் மாறிய நேசக்கதை தான் இது. மழலை மாறா மென்மொழியே.


கதை திரி👇

 
Last edited:
4.#ஏய்_மெக்கானிக்_காதல்_சொல்லவா

அப்பாவி மெக்கானிக் ரூபன் வாழ்க்கையில அதிரடியா நுழையுற நம்ம பார்லர்காரி தேவி. அதிரடியான கல்யாணம்... அழகான வாழ்க்கை... மென்மையான காதல்.
துன்பத்துல தோள் கொடுக்கிற உறவுகளும், நல்ல நட்பும் இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு என்னோட சின்ன கற்பனை தான் இந்த கதை. இடையில கொஞ்சம் சிரிப்புக்கு காமெடியும், ஒப்புக்கு ஒரு வில்லனும் வருவாங்க. ஹேப்பி எண்டிங் தான்.


கதை திரி👇

 
Last edited:
5.#ஜென்ம_பந்தமடி_இது

இருவரும் ஜென்ம ஜென்மங்களான காதலர்கள்..இந்த ஜென்மத்திலோ எதிரிகள்...!இயற்கையை அழித்து கட்டிடம் கட்டியே தீருவேன் என்று அவன்..மலையரசியை காப்பாற்றாமல் விடமாட்டேன் என்று அவள்...இருவருக்கும் இடையில் மோதல்களுக்கும் பஞ்சமில்லை..அதே சமயம் மனதை கொள்ளை கொள்ளும் காதலுக்கும் பஞ்சமில்லை...!
சாம்ராஜ்ஜியபதியான சிம்ம விஷ்ணுவுக்கும் மலை கிராமத்து நாயகியான மதுர யாழினிக்கும் இடையேயான மோதல் கலந்த மென்மையான காதல் கதை...!


கதை திரி👇

 
Last edited:
6.#கிள்ளை_மொழி_கவிதையிவள்
#GG_25
#ஆன்டி_ஹீரோ


பதினாறு வயது பெண்ணின் கர்ப்பம்...
அவளது கர்ப்பத்தின் பின்னணியில் இருக்கும் நாயகன்...தடம்மாறிப்போனவளின் வாழ்வு மண்ணில் புதையுண்டுப்போக,இறுகிய பாறையானவனின் உள்ளத்தில் பூக்கள் பூக்க செய்யும் கிள்ளை மொழியாள் யார்?

எதிர்பாராத பல திருப்பங்களுடன் காதல்,காமெடி,ரொமென்ஸ்,எமோஷனல் எல்லாம் கலந்த ஒரு நிறைவான படைப்பு இது!

‘கூண்டிற்குள் சிறையுண்ட அரிமாவின் செருக்கு மரகத மஞ்ஞையின் பீலியினுள் தஞ்சம் கொள்ளும்’
-ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா


கதை திரி👇

 
Last edited:
7.#இக்கணம் முதல் இலக்கணம் மீறுகிறேன்

காணும் யாவிலும் அவள் உணர்வது ஒருவனை மட்டுமே.. ஆனால் அவனுக்காக அவளுக்குக் கிடைத்தது பையித்தியம் என்னும் பட்டம். அவனைத் தேடி அவள் சுற்றித் திரிகிறாள்.

ஒரு நாள் அவள் இருக்கும் ஊருக்கு அடுத்த ஊரில் இருப்பவனுக்கு கனவு வருகிறது. அதில் வருவது சாட்சாத் இவளே..

அவர்கள் இருவரும் சந்திக்கும் தருணம்.. அவளுக்கும் மற்றொருவனுக்கும் இருக்கும் பந்தம் இன்னதென்று அவனுக்குத் தெரிய வருகிறது.

அதுமட்டுமா? இன்னொருவனுக்கும் கனவு அதில் வருவதும் இவளே. அவனும் அவளைத் தேடியே வருகிறான்.

பந்தத்துக்குச் சொந்தக்காரனும் இப்போது அவளைத் தேடி வருகிறான்..

ஒருத்தியை மட்டுமே மையப்புள்ளியாக நினைத்துக் கொண்டு அம்மூவரும் அவர்களுக்கென வட்டப்பாதைப் போட்டுக் கொண்டு சுற்றித் திரிய.. அவளோ அந்த ஒருவனை மட்டுமே எல்லாமாக எண்ணிக் கொண்டு சுற்றித் திரிகிறாள்.

எவரின் எண்ணம் பலிக்கப் போகிறது? யாருக்காக அவள் இலக்கணம் மீறுவாள்? என்பதனை கதை முடிவில் தெரிந்து கொள்ளுங்கள்.


கதை திரி👇

 
8.#பனியில் உருகும் பகலவன்

கவலை இன்றி ஊர் வம்பு இழுத்தபடி சுற்றி வரும் கதாநாயகி ஸ்ரீலதா. எதையும் பணத்தால் சாதித்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவள். பிரதீஷைப் பார்த்த மாத்திரத்திலேயே காதலில் விழுகிறாள். ஆனால் அவனோ? அவளைக் கண்டு கொள்ளாமல் செல்ல.. அவள் எண்ணம் முழுதும் அவன் ஆகிறான்.

தந்தை மகேஸ்வரனிடம் தனக்கு அவனை திருமணம் முடித்து வைக்குமாறு கேட்க... மகள் கேட்ட அனைத்தையும் செய்யும் தந்தையும் திருமணம் பேச செல்ல.. நாயகன் தன்னால் வஞ்சிக்கப்பட்டவன் என்று தெரிகிறது.

பிரதீஸின் தங்கை பிரகதீஸ்வரி ஊனமுற்றவளாய் இருக்க பெண்ணெடுத்து, பெண் கொடுப்பதென்றால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்றனர்.

ஸ்ரீலதாவின் தம்பியைத் தந்தை மிரட்டியே திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.

ஆனால்.. பணவளத்தையும் தம்பியின் காதலையும் பகடையாய் பயன்படுத்தி பிரதீசை மணந்து கொண்ட ஸ்ரீ லதாவைத் திருமணம் முடித்த பின்பும் கணவன் கண்டு கொள்ளாமல் பழி வாங்க.. நாயகி தன் தவறை உணர்ந்தாளா? இருவரும் சேர்ந்தார்களா? என்
பதே கதை.


கதை திரி👇

 
Status
Not open for further replies.
Top