முத்து மணி சுடரே வா (இது மகளதிகாரம்)
கதை கவிதையாய் ஓர் அறிமுகம்
கவிதை பேசும் விழி காதலுக்கு மட்டும் தானா....
இல்லை இல்லை
உயிர் நீரில் உருவான
மகளுக்கும் தானே.
மஞ்சளை சிவப்பு என்பாள்..
மன்னிப்பு கேட்க மாட்டாள்...
குழம்பு கிண்ணம் கொட்டி விடுவாள்...
கேட்டால் சமைத்து தருவேன் என்பாள்.
சாலையில் புரண்டு அடம் பிடிப்பாள்...
வீடு திரும்ப வேண்டாம் என்பாள்...
அவள் விரும்பும் ஆடை மட்டும் அணிவாள்...
அழகு முகத்திற்கு ஒப்பனை செய்வாள் ...
அவ்வப்போது ஆசிரியையும் ஆவாள்...
அனைத்திற்கும் அப்பா வேண்டும் என்பாள்...
அடிபட்டால் மட்டும் அம்மா என்று அணைப்பாள்.
கண்ணியின் காதலில் விழாத உண்டு...
மகளின் காலை தொடாதவர்கள் இல்லை.
வான் உயர நிற்கும்
அதிகாரத்திற்கு அடங்காதவர்களும் அடங்குவது
மகளதிகாரத்தின் முன்பு தானே.
மகளதிகாரம் இது மகளை பெற்றவர்களின் தொடர் கதை...